21.01.26        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் தந்தை ஒருவரை நினைவு செய்வதன் மூலம் அதியுயர்ந்தவர்கள் (சுப்ரீம்) ஆகவேண்டும். எனவே, தவறாகவேனும் வேறு எவரையும் நினைவு செய்யாதீர்கள்.

கேள்வி:
எதை நீங்கள் தந்தையிடம் இருந்து எதிர்பார்க்காமல், கருணையை வேண்டுவதற்குப் பதிலாக, உங்களுக்காக முயற்சி செய்ய வேண்டும்?

பதில்:
உங்களின் பழைய சரீரத்தினூடாக கர்ம வேதனை ஏதாவது இருந்தால் அல்லது நீங்கள் கடனாளி ஆகினால் அல்லது நோயுற்றால் தந்தை கூறுவார்: இவை உங்களின் சொந்தக் கர்மக் கணக்குகள். இதற்காக பாபா உங்களின் மீது கருணை காட்ட வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். உங்களின் சொந்த முயற்சியைச் செய்யுங்கள், யோக சக்தியுடன் அனைத்தையும் செய்யுங்கள். நினைவைக் கொண்டிருப்பதன் மூலம் மட்டுமே உங்களின் ஆயுட்காலம் அதிகரிக்கும். அத்துடன் உங்களின் கர்மக்கணக்குகளும் தீர்க்கப்படும். எந்தளவிற்கு அதிகமாக உங்களுக்கு, உயிரைவிட மேலாக நேசிக்கப்படும் தந்தையின் மீது அன்பு உள்ளதோ, அந்தளவிற்கு அதிகமான நினைவை நீங்கள் கொண்டிருப்பீர்கள். அத்துடன் தொடர்ந்து நன்மை ஏற்படும்.

ஓம் சாந்தி.
எல்லையற்ற தந்தை இங்கே அமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார்: இனிய குழந்தைகளே, உங்களை ஆத்மாக்களாகக் கருதி, உங்களுடைய தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள், அத்துடன் உங்களுடைய வீட்டையும் நினைவு செய்யுங்கள். அது மௌனக் கோபுரம் என்றும், சந்தோஷக் கோபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. ஒரு கோபுரம் மிக உயர்வாகவே இருக்கும். நீங்கள் அங்கு செல்வதற்கு முயற்சி செய்கிறீர்கள். கோபுரத்தில் வசிக்கின்ற தந்தை எவ்வாறு நீங்கள் அதியுயர்வான மௌனக் கோபுரத்திற்குச் செல்லலாம் என்று உங்களுக்குக் கற்பிக்கின்றார். குழந்தைகளே, உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள். இந்த ஆத்மாவாகிய நான் அமைதிதாமவாசி ஆவேன். அது தந்தையின் வீடாகும். நீங்கள் நடக்கும் போதும், உலாவித் திரியும்போதும் இப்பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களை ஆத்மாக்களாகக் கருதி, அமைதி தாமத்தையும், சந்தோஷ தாமத்தையும் நினைவு செய்யுங்கள். இதற்கு முயற்சி தேவை என்பதைத் தந்தை அறிவார். ஆத்ம உணர்வில் நிலைத்திருப்பவர்கள் மகாவீரர்கள் என அழைக்கப்படுகின்றனர். நினைவின் மூலமாக மாத்திரமே நீங்கள் ஒரு மகாவீரராக, அதியுயர்ந்தவராக ஆகுகின்றீர்கள். சுப்ரீம் என்றால் சக்திசாலி என்று அர்த்தம். உங்களைச் சுவர்க்கத்தின் அதிபதிகளாகவும், உலகின் அதிபதிகளாகவும் ஆக்குகின்ற பாபாவே உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதையிட்டுக் குழந்தைகளாகிய நீங்கள் சந்தோஷப்பட வேண்டும். ஆத்மாக்களின் புத்தி தந்தையிடம் செல்கின்றது. இதுவே ஆத்மாக்கள் தந்தைமீது கொண்டிருக்கும் அன்பாகும். அதிகாலையில் எழுந்திருந்து, தந்தையுடன் இனிய உரையாடலை மேற்கொள்ளுங்கள். பாபா, இது உங்களுடைய அற்புதமே! நீங்கள் என்னைச் சுவர்க்கத்தின் அதிபதியாக ஆக்குவீர்கள் என நான் ஒருபோதும் கனவுகூடக் கண்டிருக்கவில்லை! பாபா, நான் நிச்சயமாக உங்களுடைய கற்பித்தல்களைப் பின்பற்றுவேன். நான் பாவச் செயல்கள் எதனையும் செய்யமாட்டேன். பாபா என்ன முயற்சிகளைச் செய்கின்றாரோ, அவர் அதைக் குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்கிறார். சிவபாபாவிற்குப் பல குழந்தைகள் உள்ளனர். எனவே, அவர் நிச்சயமாக அக்கறை கொண்டிருப்பார், அல்லவா? பல குழந்தைகள் பராமரிக்கப்படுகின்றனர். இங்கே, நீங்கள் இறை குடும்பத்தில் அமர்ந்திருக்கின்றீர்கள். தந்தை தனிப்பட்ட முறையில் நேரடியாக உங்கள் முன்னிலையில் அமர்ந்திருக்கின்றார். நான் உங்களுடனேயே உண்பேன், நான் உங்களுடனேயே அமர்ந்து கொள்வேன்… சிவபாபா இவரில் வந்து கூறுவது உங்களுக்குத் தெரியும்: இனிய குழந்தைகளே, சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள்! உங்களுடைய சொந்தச் சரீரம் உட்பட, உங்களுடைய உறவுகள் அனைத்தையும் மறந்து விடுங்கள். இது உங்களுடைய இறுதிப் பிறவி ஆகும். இந்தப் பழைய உலகமும், பழைய சரீரமும் முடிவடைய வேண்டும். ஒரு கூற்று உள்ளது: நீங்கள் மரணிக்கும்போது, உலகமே உங்களுக்கு மரணித்து விடுகிறது. நீங்கள் முயற்சி செய்வதற்கு இந்தக் குறுகிய சங்கம யுக காலப்பகுதி மாத்திரமே உள்ளது. குழந்தைகள் கேட்கின்றனர்: பாபா, எப்பொழுது வரைக்கும் இக்கல்வி தொடரும்? தேவ இராச்சியம் ஸ்தாபிக்கப்படும் வரைக்கும் பாபா தொடர்ந்தும் எங்களுடன் ஞானத்தைப் பகிர்ந்து கொள்வார். அதன்பின்னர் நீங்கள் புதிய உலகிற்கு மாற்றப்படுவீர்கள். இது ஒரு பழைய சரீரம், நிச்சயமாக கர்மவேதனை ஏதாவது தொடர்ந்தும் இருக்கவே செய்யும். இதில் பாபா உங்களுக்கு உதவி செய்வார் என நீங்கள் எவ்விதமான நம்பிக்கையும் வைத்திருக்கக் கூடாது. நீங்கள் கடனாளி ஆகினாலோ அல்லது நோய்வாய்ப்பட்டாலோ, தந்தை கூறுவார்: இது உங்களுடைய கர்மக் கணக்காகும். எவ்வாறாயினும், ஆம், யோகத்தினால் உங்களுடைய ஆயுட்காலம் அதிகரிக்கும். உங்களுடைய சொந்த முயற்சியைச் செய்யுங்கள். கருணை கொள்ளுமாறு கேட்காதீர்கள். நீங்கள் எந்தளவுக்கு அதிகமாகத் தந்தையை நினைவு செய்கிறீர்களோ, அந்தளவுக்கு நன்மை கிடைக்கும். இயன்றவரை, அனைத்தையும் யோக சக்தி மூலம் செய்யுங்கள். ‘உங்களுடைய கண் இமைகளுக்குள் என்னை மறைத்து வைத்திருங்கள்’ என்றும் பாடப்படுகிறது. நேசிக்கப்படும் ஒருவரை, “கண்களின் ஒளி” அல்லது “உயிரிலும் மேலான அன்பே உருவானவர்” என்றெல்லாம் கூறப்படுகிறது. அந்தத் தந்தை மிகவும் பிரியமானவர், ஆனால் மறைமுகமானவர். நீங்கள் அவர்மீது கொண்டிருக்கும் அன்பு அந்தளவிற்கு இருக்க வேண்டும், கேட்கவே வேண்டாம்! குழந்தைகளாகிய நீங்கள் தந்தையை உங்களுடைய கண் இமைகளுக்குள் மறைத்து வைத்திருக்க வேண்டும். “கண் இமைகள்” என்றால் பௌதீகமான கண் இமைகள் என்பதல்ல. இது புத்தியால் நினைவு செய்வதற்கான விடயமாகும். அதியன்பிற்கினிய அசரீரியான தந்தையே எங்களுக்குக் கற்பிக்கின்றார். அவர் ஞானக் கடலும், சந்தோஷக் கடலும், அன்புக் கடலும் ஆவார். அத்தகைய அதியன்பிற்கினிய தந்தை மீது அதிக அன்பு இருக்க வேண்டும். அவர் குழந்தைகளாகிய உங்களுக்கு தன்னலமின்றி அதிக சேவை செய்கின்றார். அவர் ஒரு தூய்மையற்ற சரீரத்தினுள் பிரவேசித்து, குழந்தைகளாகிய உங்களை வைரங்களைப் போன்று ஆகச் செய்கின்றார். பாபா மிக இனிமையானவர்! எனவே, குழந்தைகளாகிய நீங்களும் அவ்வாறு ஆகவேண்டும். பாபா மிகவும் அகங்காரம் அற்றவராக இருந்து குழந்தைகளாகிய உங்களுக்குச் சேவை செய்கின்றார். எனவே, குழந்தைகளாகிய நீங்களும் அந்தளவிற்குச் சேவை செய்யவேண்டும். நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும். நீங்கள் உங்களுடைய சொந்தக் கட்டளைகளைக் காண்பித்தால், உங்களுடைய பாக்கியத்தைத் தவற விட்டுவிடுவீர்கள். பிராமணர்களாகிய நீங்கள் கடவுளின் குழந்தைகள் ஆவீர்கள். பிரம்மாவின் குழந்தைகள் சகோதர, சகோதரிகள் ஆவர். நீங்கள் இறை பேரக் குழந்தைகள் ஆவீர்கள். நீங்கள் உங்களுடைய ஆஸ்தியை அவரிடமிருந்தே கோரிக் கொள்கின்றீர்கள். நீங்கள் எந்தளவிற்கு முயற்சி செய்கின்றீர்களோ, அதற்கேற்ப உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறுவீர்கள். இதற்கு, ஒரு பற்றற்ற பார்வையாளராக இருப்பதை அதிகளவில் நீங்கள் பயிற்சி செய்யவேண்டும். பாபா கூறுகிறார்: இனிய குழந்தைகளே, ஓ ஆத்மாக்களே, சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். தவறுதலாகவேனும், தந்தையைத் தவிர வேறு எவரையும் நினைவு செய்யாதீர்கள். நீங்கள் சத்தியம் செய்துள்ளீர்கள்: நீங்கள் மாத்திரமே என்னுடையவர்! நான் ஓர் ஆத்மா, நீங்கள் பரமாத்மா. நான் எனது ஆஸ்தியை உங்களிடம் இருந்து கோரவேண்டும். நான் உங்களிடம் இருந்து இராஜ யோகம் கற்கின்றேன், அதிலிருந்து நான் இராச்சிய பாக்கியத்தைக் கோரிக்கொள்வேன். இனிய குழந்தைகளே, இது அநாதியான நாடகம் என்பதை நீங்கள் அறிவீர்கள். இதில் வெற்றி - தோல்வியின் விளையாட்டு தொடர்கின்றது. எது நிகழ்ந்தாலும் நல்லதே. படைப்பவர் நிச்சயமாகத் தனது நாடகத்தை விரும்புவார், இல்லையா? எனவே, படைப்பவரின் குழந்தைகளும் அதை விரும்புவார்கள். இந்த நாடகத்தில், தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குத் தனது இதயத்தின் ஆழத்திலிருந்து மிகுந்த அன்புடன் சேவை செய்வதற்காக, உங்களிடம் மாத்திரமே, அதுவும் ஒரு தடவையே வருகின்றார். தந்தை தனது குழந்தைகள் அனைவரையும் நேசிக்கின்றார். சத்திய யுகத்தில் அனைவரும் ஒருவரையொருவர் மிகவும் நேசிக்கின்றனர் என்பதை நீங்கள் அறிவீர்கள். விலங்குகளுக்கு மத்தியிலும் அன்பு உள்ளது. அன்பில்லாத எந்தவொரு விலங்கும் அங்கே இருக்கமாட்டாது. எனவே, குழந்தைகளாகிய நீங்கள் இங்கே மாஸ்டர் அன்புக்கடல்கள் ஆகவேண்டும். நீங்கள் இங்கே அவ்வாறு ஆகினால், அந்த சம்ஸ்காரம் அழிவற்றதாகிவிடும். தந்தை கூறுகிறார்: நான் சரியாக ஒரு கல்பத்திற்கு முன்னர் செய்தது போன்றே உங்களை மீண்டும் ஒரு தடவை அன்பானவர்கள் ஆக்குவதற்காகவே வந்திருக்கின்றேன். எந்தக் குழந்தையிடம் இருந்தாவது கோபத்தின் ஓசையைச் செவிமடுக்கும் போதெல்லாம், அவர் கற்பித்தல்களைக் கொடுக்கின்றார்: குழந்தைகளே, கோபப்படுவது நல்லதல்ல. ஏனெனில், நீங்களும் துன்பத்தை அனுபவம் செய்வதுடன், மற்றவர்களும் துன்பத்தைப் பெறுவார்கள். தந்தை உங்களுக்கு சதா காலமும் சந்தோஷத்தையே கொடுக்கின்றார். எனவே, குழந்தைகளாகிய நீங்களும் தந்தையைப் போன்று ஆகவேண்டும். நீங்கள் ஒருவருக்கொருவர் துன்பத்தை விளைவிக்கக் கூடாது. சிவபாபா காலையின் பிரபு ஆவார், அதாவது, இரவைப் பகலாக, அதாவது காலையாக மாற்றுபவர் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். எல்லையற்ற தந்தையே பிரபு ஆவார். அவர் ஒருவரே காலையின் பிரபுவான சாயி பாபா, கள்ளங்கபடமற்ற சிவபாபா ஆவார். அவருடைய பெயரே கள்ளங்கபடமற்றவர் (போலாநாத்) என்பதாகும். அவர் ஞானக் கலசத்தைக் கள்ளங்கபடமற்ற குமாரிகள் மீதும், தாய்மார் மீதும் வைக்கின்றார். அவர்களை அவர் உலகின் அதிபதிகள் ஆக்குகின்றார். அவர் அத்தகையதோர் இலகுவான வழியைக் காட்டுகிறார். அவர் உங்களை மிகுந்த அன்புடன், இந்த ஞானத்தினால் பராமரிக்கின்றார். ஆத்மாக்களாகிய உங்களைத் தூய்மை ஆக்குவதற்கு, நினைவு யாத்திரையில் இருங்கள். நீங்கள் யோகத்தில் நீராடவேண்டும். இந்த ஞானம் என்பது உங்களின் கல்வியாகும். யோகத்தில் நீராடுவதன் மூலமாகவே பாவங்கள் எரிக்கப்படும். உங்களை ஆத்மாக்களாகக் கருதுவதைத் தொடர்ந்தும் பயிற்சி செய்யுங்கள், அதனால் சரீரங்களின் அகங்காரம் முற்றாகவே துண்டிக்கப்படும். யோகத்தைக் கொண்டிருப்பதால் மாத்திரமே நீங்கள் தூய்மையாகவும், சதோபிரதானாகவும் ஆகி, பாபாவிடம் செல்லமுடியும். சில குழந்தைகள் இவ்விடயங்களை நன்றாகப் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் தமது அட்டவணையை நேர்மையாகக் காட்டுவதில்லை. அவர்கள் அரைக் கல்பமாகப் பொய்யான உலகில் வசித்துள்ளனர். எனவே, பொய்மை அவர்களினுள் நிலைத்து விட்டதைப் போன்றுள்ளது. நீங்கள் தந்தைக்கு உங்களுடைய அட்டவணையை நேர்மையாகக் காண்பிக்க வேண்டும். சோதித்துப் பாருங்கள்: நான் 45 நிமிடங்கள் அமர்ந்திருந்தேன். அதில் எவ்வளவு நேரம் என்னை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவு செய்தேன்? சிலர் உண்மையைக் கூறுவதற்கு வெட்கப்படுகிறார்கள். தாங்கள் எவ்வளவு சேவை செய்தார்கள், எத்தனை பேருக்கு விளங்கப்படுத்தினார்கள் என்பதை அவர்கள் மிக விரைவாகவே கூறிவிடுவார்கள். ஆனால் அவர்களின் நினைவு அட்டவணையைப் பற்றி உண்மையைக் கூறமாட்டார்கள். நினைவில் இருக்காததால் உங்களுடைய அம்பினால் எவரையும் தாக்க முடியாமல் உள்ளது, உங்களின் ஞான வாளில் சக்தியும் இல்லை. சிலர் தாங்கள் எப்பொழுதும் நினைவில் இருப்பதாகக் கூறுகின்றனர். பாபா கூறுகிறார்: நீங்கள் இதுவரைக்கும் அந்த ஸ்திதியைக் கொண்டிருக்கவில்லை. நீங்கள் எப்பொழுதும் நினைவில் இருந்திருந்தால், கர்மாதீத நிலையை அடைந்திருப்பீர்கள். இந்த ஞானோதயம் புலப்படுவதற்கு அதிக முயற்சி தேவைப்படுகிறது. நீங்கள் அவ்வளவு சுலபமாக உலகின் அதிபதி ஆகிவிட மாட்டீர்கள். தந்தை ஒருவரைத் தவிர வேறு எவரையும் நினைவு செய்யாதீர்கள். இந்தச் சரீரம்கூட நினைவு செய்யப்படக் கூடாது. நீங்கள் இறுதியிலேயே இந்த ஸ்திதியைக் கொண்டிருப்பீர்கள். நீங்கள் நினைவு யாத்திரை மூலம் தொடர்ந்தும் ஒரு வருமானத்தைச் சம்பாதிப்பீர்கள். நீங்கள் உங்களுடைய சரீரத்தை நீக்கிவிட்டால், உங்களால் எதையும் சம்பாதிக்க முடியாமல் போய்விடும். ஆத்மாவாகிய நீங்கள் அந்த சம்ஸ்காரங்களை உங்களுடன் கொண்டு சென்றாலும், உங்களுக்கு ஞாபகப்படுத்துவதற்கு ஓர் ஆசிரியர் எப்படியும் தேவைப்படுவார். தந்தை மீண்டும் மீண்டும் தொடர்ந்தும் உங்களுக்கு ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கிறார். பல குழந்தைகள் வீட்டில் வசித்தவாறு, வேலைக்குச் செல்கின்றனர். அவர்கள் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோருவதற்காக ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதுடன், தொடர்ந்தும் தமது எதிர்காலத்திற்காகச் சேமித்துக் கொள்கின்றனர். அவர்கள் தொடர்ந்தும் தந்தையிடம் இருந்து ஆலோசனையைப் பெறுகின்றனர். உங்களிடம் பணம் இருந்தால், எவ்வாறு உங்களால் அதைத் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்தலாம்? பாபா கூறுகிறார்: ஒரு நிலையத்தைத் திறவுங்கள், அதன் மூலமாகப் பலரும் நன்மை பெறலாம். மக்கள் தான தர்மங்களைச் செய்து, அதற்கான பலனைத் தமது அடுத்த பிறவியில் பெற்றுக் கொள்கின்றனர். நீங்களும் உங்களுடைய எதிர்கால 21 பிறவிகளுக்கான இராச்சிய பாக்கியத்தைப் பெறுகின்றீர்கள். இது உங்களுடைய முதலாம் இலக்க வங்கி ஆகும். நீங்கள் அதில் நான்கு அணாக்களை (25 சதம்) உங்களுடைய கணக்கில் வரவு வையுங்கள், நீங்கள் எதிர்காலத்தில் ஆயிரத்தைப் பெறுவீர்கள். கல்லானது தங்கமாகிவிடும். உங்களுடைய அனைத்தும் தெய்வீகமானதாக ஆகும். பாபா கூறுகிறார்: இனிய குழந்தைகளே, நீங்கள் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோர விரும்பினால், தாயையும், தந்தையையும் முழுமையாகப் பின்பற்றுங்கள், அத்துடன் உங்களுடைய பௌதீகப் புலன்களைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருங்கள். நீங்கள் உங்களுடைய பௌதீகப் புலன்களைக் கட்டுப்படுத்தா விட்டால், அத்துடன் உங்களுடைய செயற்பாடுகளும் நன்றாக இல்லாவிட்டால், உயர்ந்ததோர் அந்தஸ்தை இழந்து விடுவீர்கள். நீங்கள் உங்களுடைய செயற்பாடுகளைச் சீர்திருத்த வேண்டும். பல ஆசைகளைக் கொண்டிராதீர்கள். பாபா உங்களை இந்த ஞானத்தினால் அதிகளவு அலங்கரித்து, சத்திய யுகத்தின் சக்கரவர்த்தியாகவும், சக்கரவர்த்தினியாகவும் ஆக்குகிறார். இதற்கு, சகிப்புத்தன்மை என்ற நற்குணம் அதிகளவில் தேவைப்படுகிறது. சரீரங்கள்மீது அதிகளவு பற்றைக் கொண்டிராதீர்கள். அனைத்தையும் யோக சக்தியால் செய்யுங்கள். பாபா அதிகளவில் இருமிக் கொண்டிருக்கின்றார், அவ்வாறிருந்தும் அவர் சேவை செய்வதில் சதா ஈடுபட்டிருக்கின்றார். அவர் குழந்தைகளாகிய உங்களை இந்த ஞானத்தினாலும், யோகத்தினாலும் அலங்கரித்து, உங்களைத் தகுதியானவர்கள் ஆக்குகிறார். நீங்கள் இப்பொழுது கடவுளின் மடியில், அதாவது, தாயினதும் தந்தையினதும் மடியில் அமர்ந்திருக்கின்றீர்கள். தந்தை உங்களுக்கு பிரம்மாவின் வாய் மூலமாகப் பிறப்புக் கொடுக்கின்றார், எனவே அவர் தாயாக ஆகுகிறார். எவ்வாறாயினும், உங்களுடைய புத்தி சிவபாபாவிடமே செல்கிறது: நீங்களே தாயும், தந்தையும் ஆவீர்கள், நாங்கள் உங்களுடைய குழந்தைகள் ஆவோம். நீங்கள் இங்கேயே சகல நற்குணங்களும் நிறைந்தவர்கள் ஆகவேண்டும். மீண்டும் மீண்டும் மாயையினால் தோற்கடிக்கப்படாதீர்கள். தந்தை விளங்கப்படுத்துகிறார்: குழந்தைகளே, உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள். ஒருவரை இவ்வாறு கருதுவது, மிகவும் இனிமையானதாக உணரப்படுகிறது. நாங்கள் எப்படி இருந்தோம், இப்போது நாங்கள் என்னவாக ஆகுகிறோம்? இந்த நாடகம் மிகவும் அற்புதமாக உருவாக்கப்பட்டுள்ளது: நீங்கள் இப்போது இதைப் புரிந்து கொள்கிறீர்கள். இதுவே அதி புண்ணிய சங்கமயுகம் ஆகும். நீங்கள் இந்தளவையேனும் நினைவு செய்தால், நீங்கள் சத்திய யுகத்திற்குச் செல்கிறீர்கள் என்றும் இப்போது நீங்கள் சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள் என்றும் உங்களுக்கு நம்பிக்கை ஏற்படும். பின்னர் நீங்கள் உங்களின் வீட்டுக்குச் செல்ல வேண்டும். அதனால் நீங்கள் நிச்சயமாகத் தூய்மை ஆகவேண்டும். அகத்தே, அதிகளவு சந்தோஷம் இருக்க வேண்டும். ஓஹோ! எல்லையற்ற தந்தை கூறுகிறார்: இனிமையான குழந்தைகளே, என்னை நினைவு செய்யுங்கள், நீங்கள் சதோபிரதான் ஆகுவீர்கள். நீங்கள் உலகின் அதிபதிகள் ஆகுவீர்கள். தந்தை குழந்தைகளான உங்களை அதிகளவில் நேசிக்கிறார். அவர் உங்களை ஆசிரியரின் ரூபத்தில் கற்பித்து விட்டு வீட்டுக்குத் திரும்பிச் செல்வார் என்பதல்ல. இவர் தந்தையும், அத்துடன் ஆசிரியரும் ஆவார். அவர் உங்களுக்குக் கற்பிக்கிறார். அத்துடன் உங்களுக்கு நினைவு யாத்திரையையும் கற்பிக்கிறார். உங்களை உலகின் அதிபதிகள் ஆக்குவதுடன் தூய்மை அற்றவர்களில் இருந்து தூய்மை ஆக்குகின்ற இத்தகைய தந்தையின் மீது நீங்கள் அதிகளவு அன்பு வைத்திருக்க வேண்டும். நீங்கள் அதிகாலையில் விழித்து எழுந்தவுடன், அனைத்திற்கும் முதலில் சிவபாபாவிற்கு காலை வணக்கம் சொல்லுங்கள். நீங்கள் காலை வணக்கம் சொல்லும்போது, அதாவது, நீங்கள் அவரை நினைவு செய்யும்போது, உங்களுக்குள் அதிகளவு சந்தோஷம் ஏற்படும். குழந்தைகளே, நீங்கள் உங்களின் இதயங்களைக் கேட்க வேண்டும்: காலையில் எழுந்த பின்னர், நான் எல்லையற்ற தந்தையை எந்தளவிற்கு நினைவு செய்கிறேன்? மக்கள் காலையில் பக்தி செய்கிறார்கள். அவர்கள் மிகுந்த அன்புடன் பக்தி செய்கிறார்கள். எவ்வாறாயினும், சில குழந்தைகள் பாபாவைத் தமது இதயத்தின் ஆழத்தில் இருந்தும் ஆழ்ந்த அன்புடனும் நினைப்பதில்லை என்பதை பாபா அறிவார். நீங்கள் காலையில் எழுந்திருந்து, காலை வணக்கம் கூறி, இந்த ஞானத்தைக் கடையும்போது, உங்களின் சந்தோஷப் பாதரசம் அதிகரிக்கும். நீங்கள் தந்தைக்கு காலை வணக்கம் சொல்லா விட்டால், பாவச்சுமை எப்படி நீக்கப்படும்? நினைவே பிரதானமான விடயம் ஆகும். இதுவே உங்களின் எதிர்காலத்திற்கான மிகப்பெரிய வருமானம் ஆகும். இந்த வருமானம் உங்களுக்கு கல்பம் கல்பமாகப் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் அதிகளவு பொறுமையாகவும் முதிர்ச்சியுடனும் புரிந்துணர்வுடனும் நினைவைக் கொண்டிருக்க வேண்டும். புற நிலையில், நீங்கள் பாபாவை அதிகளவில் நினைவு செய்கிறீர்கள் என்று நினைவைப் பற்றிப் பேசக்கூடும். ஆனால், மிகச்சரியான நினைவிற்கு, அதிகளவு முயற்சி தேவை. தந்தையை அதிகளவில் நினைவு செய்பவர்கள், அதிகளவு மின்னோட்டத்தைப் பெறுகிறார்கள். ஏனெனில், நினைவு, நினைவை ஏற்படுத்துகிறது. யோகமும் ஞானமும் இரண்டு விடயங்கள். யோகம் என்ற பாடம் வேறுபட்டது. இது மிகவும் முக்கியமான பாடம் ஆகும். யோகம் செய்வதனால் மட்டுமே, ஆத்மாக்களான நீங்கள் சதோபிரதான் ஆகுவீர்கள். நினைவு இல்லாமல் சதோபிரதான் ஆகுவது அசாத்தியம் ஆகும். நீங்கள் அன்புடன் தந்தையை மிக நன்றாக நினைவு செய்யும்போது, இயல்பாகவே ஒரு மின்னோட்டத்தைப் பெறுவதுடன் நீங்கள் ஆரோக்கியமாகவும் ஆகுகிறீர்கள். உங்களின் ஆயுட்காலமும் இந்த மின்னோட்டத்தினால் அதிகரிக்கும். குழந்தைகளான உங்களுக்கு நினைவு இருக்கும்போது, பாபா உங்களுக்கு ஒரு தேடும் விளக்கை வழங்குகிறார். குழந்தைகளான உங்களுக்குத் தந்தை இத்தகைய மகத்தான பொக்கிஷத்தை வழங்குகிறார். அச்சா.

கண்மணிகளான, இனிமையிலும் இனிமையான, அன்பிற்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு, உங்களுடைய தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் இதயத்தின் ஆழத்தில் இருந்தும் ஆழ்ந்த அன்புடனும் அன்பும், நினைவுகளும், காலை வணக்கமும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தையை மிகுந்த பொறுமையுடனும் முதிர்ச்சியுடனும் புரிந்துணர்வுடனும் நினைவு செய்யுங்கள். உங்களுக்குள் மிகச்சரியான நினைவு இருக்கும்போது, தந்தையிடம் இருந்து ஒரு மின்னோட்டத்தை நீங்கள் பெறுவதுடன் உங்களின் ஆயுட்காலமும் அதிகரிக்கிறது, நீங்களும் ஆரோக்கியமானவர்கள் ஆகுகிறீர்கள்.

2. உயர்ந்ததோர் அந்தஸ்தை அடைவதற்கு, உங்களின் நடத்தையைச் சீர்திருத்துங்கள். அதிகமான ஆசைகளைக் கொண்டிராதீர்கள். உங்களின் பௌதீகப் புலன்களின் மீது முழுமையான கட்டுப்பாட்டை வைத்திருங்கள். தாயையும் தந்தையையும் முழுமையாகப் பின்பற்றுங்கள்.

ஆசீர்வாதம்:
‘தந்தையைப் பார்த்து தந்தையைப் பின்பற்றுங்கள்’ என்ற மகாமந்திரத்தினால் நீங்கள் ஒரு மேன்மையான முயற்சியாளராகி, உங்களின் ஸ்திதியை நிலையானதாகவும் ஸ்திரமானதாகவும் ஆக்குவீர்களாக.

சதா ‘தந்தையைப் பார்த்து, தந்தையைப் பின்பற்றுங்கள்’ என்ற மகா மந்திரத்தை வைத்திருந்த வண்ணம், தொடர்ந்து மேலே ஏறுகின்ற மற்றும் பறக்கும் ஸ்திதிகளுடன் முன்னேறுங்கள். ஒருபோதும் மற்றவர்களைப் பார்க்காதீர்கள். ஏனென்றால், அனைவருமே முயற்சியாளர்களே. முயற்சியாளர்களிடம் சில நல்லதும் இருக்கும், சில குறைகளும் இருக்கும். அவர்கள் முழுமை அடையவில்லை. ஆகவே, தந்தையைப் பின்பற்றுங்கள். ஒரு சகோதரனையோ அல்லது சகோதரியையோ அல்ல. எப்படித் தந்தை நிலையாகவும் ஸ்திரமாகவும் இருக்கிறாரோ, அவ்வாறே அவரைப் பின்பற்றுபவர்களும் நிலையாகவும் ஸ்திரமாகவும் ஆகுவார்கள்.

சுலோகம்:
மற்றவர்களைப் பற்றிய எண்ணங்களின் ஆதிக்கத்திற்கு உட்படாதீர்கள். மற்றவர்களின் நலன்விரும்பியாகவும் மற்றவர்களுக்காகத் தூய, சாதகமான எண்ணங்களையும் கொண்டுள்ள ஓர் இரத்தினம் ஆகுங்கள்.

அவ்யக்த சமிக்ஞை: இந்த அவ்யக்த மாதத்தில், பந்தனத்திலிருந்து விடுபட்டிருந்து, ஜீவன் முக்தி ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள்.

நீங்கள் விரும்பும்போது பௌதீகமான பொருட்களை எடுக்கிறீர்கள், நீங்கள் விரும்பும்போது அவற்றை வைத்துவிடுகிறீர்கள். அதேபோல், உங்களின் சரீரத்தின் உணர்வையும் நீங்கள் விரும்பும்போது கைவிட்டு, ஆத்ம உணர்வு உடையவர் ஆகுங்கள். பௌதீகமான எதனுடனும் அது இலகுவாக இருப்பதைப் போல், இந்தப் பயிற்சியும் மிக இலகுவாக இருக்க வேண்டும். ஒரு படைப்பவரால் தான் விரும்பும்போது தனது படைப்பின் உதவியைப் பெற்றுக் கொள்ள முடியும் அல்லது அந்த ஆதாரத்தை விட்டுவிட முடியும். அவரால் தான் விரும்பியபோது பற்றற்று அல்லது அன்பாக இருக்க முடியும். இது உங்களைப் பந்தனத்தில் இருந்து விடுவிக்கும்.