21.02.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, உறங்கு நிலையில் இருந்த, உங்கள் பாக்கியத்தை விழிப்படையச் செய்வதற்காகவே நீங்கள் தந்தையிடம் வந்திருக்கிறீர்கள். உலக அதிபதிகள் ஆகுவதே உங்கள் பாக்கியத்தை விழிப்படையச் செய்வது என்பதன் அர்த்தம் ஆகும்.
கேள்வி:
எந்தப் போஷாக்கு குழந்தைகளாகிய உங்களைத் தந்தையைப் போன்று விவேகமானவர்கள் ஆக்குகின்றது?பதில்:
இக்கல்வியே குழந்தைகளாகிய உங்கள் புத்திக்குப் போஷாக்;காகும். இக் கல்வியைத் தினமும் கற்பவர்களினது, அதாவது இப்போஷாக்கைத் தினமும் உட்கொள்பவர்களின் புத்தி தெய்வீகம் ஆகுகின்றது. விவேகிகளின் புத்தியாகவும், தெய்வீகத்தின் பிரபுவுமான தந்தை, குழந்தைகளாகிய உங்களது புத்தியையும் தன்னுடையது போன்றே விவேகமாகவும் தெய்வீகமாகவும் ஆக்குகிறார்.பாடல்:
எனது பாக்கியத்தை விழிப்படையச் செய்துவிட்டு, நான் வந்துள்ளேன்......ஓம் சாந்தி.
இந்தப் பாடலின் வரியைக் கேட்பதன் மூலம் குழந்தைகளாகிய உங்களுக்குப் புல்லரிக்கும் சந்தோஷம் இருக்க வேண்டும். இது ஓரு பொதுவான பாடல் ஆகும். ஆனால் வேறு யாருக்குமே இதனது சாராம்சம் தெரியாது. தந்தை மாத்திரமே வந்து பாடல்கள், சமயநூல்கள் போன்றவற்றின் அர்த்தத்தை விளங்கப்படுத்துகிறார். கலியுகத்தில் அனைவரது பாக்கியமும் உறங்குநிலையில் உள்ளது என்பதை இனிமையான குழந்தைகளாகிய நீங்கள் மட்டுமே புரிந்து கொண்டிருக்கிறீர்கள். சத்தியயுகத்தில் அனைவரது பாக்கியமும் விழிப்படைந்த நிலையில் இருக்கிறது. உறங்கு நிலையில் உள்ள உங்கள் பாக்கியத்தை ஒரு தந்தையே விழிப்படையச் செய்து, உங்களுக்கு ஸ்ரீமத்தைத் தந்து உங்கள் பாக்கியத்தை உருவாக்குகிறார். அவரே இங்கே அமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களது பாக்கியத்தை விழிப்படையச் செய்கிறார். குழந்தைகள் பிறந்த உடனேயே அவர்களது பாக்கியமும் விழிப்படைகிறது. குழந்தை பிறந்ததும் தான் ஒரு வாரிசு என்பதை அந்தக் குழந்தை உணர்கிறார். இதுவும் அப்படியே, ஆனாலும் இது ஓர் எல்லையற்ற விடயம். உங்களது பாக்கியம் ஒவ்வொரு கல்பத்திலும் விழிப்படைந்து பின்னர் அது உறங்கு நிலையை அடைகிறது என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். நீங்கள் தூய்மையாகும் போது, உங்கள் பாக்கியமும் விழிப்படைகிறது. அங்கே தூய இல்லற ஆச்சிரமம் இருக்கிறது எனக் கூறப்படுகிறது. 'ஆச்சிரமம்" என்னும் வார்த்தை தூய்மையானது. தூய இல்லற ஆச்சிரமம் அங்கே இருக்கிறது. அதற்கு மாறாக தூய்மையற்ற இல்லற தர்மமும் உள்ளது. நீங்கள் தூய்மையற்ற எதனையும் ஆச்சிரமம் எனக் கூறமாட்டீர்கள். இல்லற தர்மம் அனைவருக்கும் உரியது. அது விலங்குகளுக்கு இடையேயும் இருக்கிறது. அவை அனைத்தும் குழந்தைகளை உருவாக்குகின்றன. விலங்குகளும் இல்லற தர்மத்தைச் சேர்ந்தவை எனக் கூறப்படுகிறது. சத்திய யுகத்தில் நீங்கள் தூய இல்லற ஆச்சிரமத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அறிந்து கொள்கிறீர்கள். நீங்கள் அப்பொழுது தேவர்களாக இருந்தீர்கள். 'சகல தெய்வீகக் குணங்களும் நிரம்பியவர்கள், 16 சுவர்க்கக் கலைகளும் நிரம்பியவர்கள்........." என அவர்களின் புகழ் பாடப்படுகிறது. நீங்களே இதைப் பாடினீர்கள். நீங்கள் இப்பொழுது மீண்டும் ஒருமுறை மனிதர்களில் இருந்து தேவர்களாக மாறிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் இப்போது புரிந்து கொள்கிறீர்கள். மனிதர்களைத் தேவர்களாக மாற்றுவதற்குக் கடவுளுக்கு அதிகக் காலம் எடுக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது. பிரம்மா, விஷ்ணு, சங்கரர் தேவர்கள் எனப்படுகிறார்கள். 'பிரம்ம தேவனுக்கு வந்தனங்கள்" எனக் கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் 'பரமாத்மா சிவனுக்கு வந்தனங்கள்" எனக் கூறுகிறார்கள். நீங்கள் இப்பொழுது இதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்கிறீர்கள். அவர்கள் இதனைக் குருட்டு நம்பிக்கையுடன் கூறுகிறார்கள். 'சங்கரர் தேவனுக்கு வந்தனங்கள்" என்றும் அவர்கள் கூறுகிறார்கள். 'பரமாத்மா சிவனுக்கு வந்தனங்கள்" என அவர்கள் சிவனுக்குக் கூறுவதால் இதில் வித்தியாசம் உள்ளது! அவர் ஒரு தேவர். இந்த ஒருவரோ பரமாத்மா. சிவனும் சங்கரரும் ஒரே ஒருவரே என நீங்கள் கூற முடியாது. உண்மையில் நீங்கள் கல்லுப்புத்தி உடைய ஒருவராக இருந்தீர்கள் என்பதையும் இப்பொழுது தெய்வீகப் புத்தியைக் கொண்டவர்களாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். தேவர்களைக் கல்லுப்புத்தி உடையவர்கள் என்று அழைக்க முடியாது. நாடகத் திட்டப்படி இராவண இராச்சியத்தில் ஏணியில் இறங்கி வரவேண்டி இருந்தது. இப்பொழுது நீங்கள் கல்லுப்புத்தி உடையவர்களில் இருந்து தெய்வீகப்புத்தி உடையவர்கள் ஆக வேண்டும். ஒரு தந்தையே அனைவரிலும் விவேகமானவர். உங்கள் புத்தி இப்பொழுது சற்றேனும் சக்தியற்று இருக்கிறது. தந்தை இங்கே அமர்ந்திருந்து அத்தகையவர்களின் புத்தியைத் தெய்வீகமானதாக ஆக்குகிறார். நீங்கள் உங்களது புத்தியைத் தெய்வீகமானதாக ஆக்கவே இங்கே வருகிறீர்கள். தெய்வீகப் பிரபுவிற்கும் ஆலயம் ஒன்றுள்ளது. அவர்கள் ஒன்று கூடுகின்றார்கள். எவ்வாறாயினும் தெய்வீகப் பிரபு யார் என்பது எவருக்குமே தெரியாது. உண்மையில் ஒரு தந்தையே அனைவரையும் தெய்வீகமானவர் ஆக்குகிறார். அவரே விவேகிகளின் புத்தி என அழைக்கப்படுகிறார். இந்த ஞானமே குழந்தைகளின் புத்திக்கான போஷாக்காகும். புத்தி பெரிதும் மாற்றப்படுகிறது. இவ்வுலகம் முட்காடு எனப்படுகிறது. அவர்கள் ஒருவருக்கொருவர் எவ்வளவு துன்பம் விளைவிக்கிறார்கள்! இதுவே ஆழ் நரகமாகிய தமோபிரதான் உலகம். கருட புராணத்தில் அச்சத்தை ஏற்படுத்தும் பல கதைகள் உள்ளன. குழந்தைகளாகிய உங்களது புத்தி இப்பொழுது போஷாக்குப் பெறுகிறது. எல்லையற்ற தந்தையே உங்களுக்குப் போஷாக்கைக் கொடுக்கின்றார். இது ஒரு கல்வி. இதனை ஞானாமிர்தம் எனவும் அழைக்கலாம். தண்ணீர் போன்ற எதுவும் இல்லை. இந்நாட்களில் அவர்கள் அனைத்தையுமே அமிர்தம் எனக் கூறுகிறார்கள். அவர்கள் கங்கை நீரையும் அமிர்தம் எனக் கூறுகிறார்கள். அவர்கள் தேவ விக்கிரகங்களின் பாதங்களை நீரினால் கழுவி அந்தத் தண்ணீரை அமிர்தம் எனக் கூறி தம்முடன் வைத்துக் கொள்கிறார்கள். இதுவும் உங்கள் புத்தியின் மூலம் புரிந்துக் கொள்ளப்பட வேண்டிய ஒரு விடயம். அந்தக் கையளவு நீரா அல்லது தூய்மையாக்குபவராகிய கங்கையின் நீரா அமிர்தம்? அந்தக் கையளவு நீரைத் தருபவர்கள் 'இது தூய்மை அற்றவர்களை தூய்மையாக்கும்" எனக் கூறமாட்டார்கள். அவர்கள் கங்கை நீரையே தூய்மையாக்குபவர் எனக் கூறுகிறார்கள். ஒருவர் இறக்கும் போது அவரது வாயில் கங்கை நீர் ஊற்ற வேண்டும் எனக் கூறுகிறார்கள். அர்ஜுனன் அம்பு எய்து (அம்பு பட்ட இடத்தில் அமிர்தம் வெளிப்பட்;டது) அமிர்தத்தை வழங்கியதாக அவர்கள் கூறுகிறார்கள். குழந்தைகளாகிய நீங்கள் அம்புகள் எதனையும் எய்யவில்லை. அம்பையும் வில்லையும் பயன்படுத்திச் சண்டை செய்யும் ஒரு கிராமம் உள்ளது. அவ்விடத்தைச் சேர்ந்த அரசனைக் கடவுளின் அவதாரம் என அவர்கள் கூறுகிறார்கள். எவ்வாறாயினும், எவருமே கடவுளின் அவதாரமாக இருக்க முடியாது. உண்மையில் அனைவருக்கும் சற்கதியை அருள்கின்றவர் ஒரே ஒரு சற்குருவே. அவர் இப்பொழுது ஆத்மாக்கள் அனைவரையும் தன்னுடன் அழைத்துச் செல்கிறார். தந்தையைத் தவிர வேறு எவராலும் உங்களை வீட்டுக்கு அழைத்துச் செல்ல முடியாது. பிரம்ம தத்துவத்துடன் இரண்டறக் கலத்தல் என்னும் பேச்சுக்கே இடமில்லை. இந்த நாடகம் ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்டது. உலகச்சக்கரம் என்றென்றும் தொடர்ந்து சுழலுகிறது. நீங்கள் இப்பொழுது எவ்வாறு உலக வரலாறும், புவியியலும் மீண்டும் இடம்பெறுகிறது என்பதைப் புரிந்து கொள்கிறீர்கள். வேறு எவருமே இதனைப் புரிந்து கொள்வதில்லை. மனிதர்கள், அதாவது, ஆத்மாக்கள் 'ஓ தந்தையாகிய கடவுளே!" எனத் தந்தையாகிய படைப்பவரை நினைத்துக் கூறியபோதிலும் அவர்களுக்கு அவரைத் தெரியாது. அவர்கள் ஒருபோதுமே அவர்களுடைய லௌகீகத் தந்தையை ‘தந்தையாகிய கடவுள்’ என்று அழைக்க மாட்டார்கள். அவர்கள் ‘தந்தையாகிய கடவுள்’ என்னும் வார்த்தைகளை மிகுந்த மரியாதையுடன் கூறுகிறார்கள். ‘ஓ தூய்மையாக்குபவரே! துன்பத்தை நீக்கிச் சந்தோஷத்தை அருள்பவரே!’ என அவரை நோக்கிப் பாடுகிறார்கள். அவரே துன்பத்தை அகற்றிச் சந்தோஷத்தை அருள்பவர் என அவர்கள் ஒருபுறம் கூறுகிறார்கள். மறுபுறம், அவர்கள் துன்பத்தை அனுபவிக்கும் பொழுது அல்லது அவர்களின் குழந்தை இறக்கும் பொழுது, கடவுளே துன்பத்தையும் சந்தோஷத்தையும் தருகிறார், அதாவது, கடவுள் அவர்களது குழந்தையை எடுத்துவிட்டார் எனக் கூறுகிறார்கள். அவர் என்ன செய்தார்? அவர்கள் கடவுளைப் புகழ்ந்து பாடுகிறார்கள். பின்னர் ஏதேனும் ஒன்று நடந்தால் அவரை அவதூறு செய்ய ஆரம்பிக்கிறார்கள். கடவுளே அந்தக் குழந்தையைக் கொடுத்ததாக அவர்கள் கூறுகிறார்கள். அப்படியாயின், அவர் அக்குழந்தையைத் திரும்ப எடுத்துக் கொண்டால் அவர்கள் ஏன் அழவேண்டும்? குழந்தை கடவுளிடம் சென்றுவிட்டார். அவ்வளவுதான்! சத்திய யுகத்தில் எவரும் அழுவதில்லை. தந்தை விளங்கப்படுத்துகிறார்: எவருமே அழவேண்டிய அவசியமில்லை. ஆத்மா சென்று தனது கர்மக் கணக்குகளுக்கு ஏற்ப இன்னொரு பாகத்தை நடிக்க வேண்டும். மக்களிடம் இந்த ஞானம் இல்லாததாலேயே அவர்கள் பித்துப் பிடித்தவர்போல் அழுகிறார்கள். இங்கே தந்தை விளங்கப்படுத்துகிறார்: உங்கள் தாய் இறந்தாலும் நீங்கள் அல்வா சாப்பிட வேண்டும். நீங்கள் பற்றை அழிப்பவராக வேண்டும். என்னுடையவர் எல்லையற்ற தந்தை ஒருவரே அன்றி வேறு எவரும் அல்ல. குழந்தைகளாகிய நீங்கள் அத்தகைய ஸ்திதியைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும். பற்றை வென்ற அரசனின் கதையைச் செவிமடுத்து இருப்பீர்கள், இல்லையா? அவை எல்லாம் கட்டுக்கதைகள். சத்திய யுகத்தில் துன்பம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அங்கு ஒருபொழுதும் அகாலமரணம் ஏற்படுவதில்லை. நீங்கள் மரணத்தை வெல்லுகிறீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். தந்தையே மகாகாலன் எனப்படுகிறார். மரணங்களுக்கு எல்லாம் மரணமானவர், உங்களை மரணத்தை வெல்லச் செய்கிறார். நீங்கள் ஒருபோதும் அகாலமரணம் அடைய மாட்டீர்கள் என்பதே இதன் அர்த்தம். ஆத்மாக்கள் மரணம்; அடைய முடியாது. ஆத்மா ஒரு சரீரத்தைத் துறந்து இன்னொன்று எடுக்கிறார். இதுவே மரணம் எனப்படுகிறது. மரணம் என்பது வேறு எதுவுமல்ல. மக்கள் புகழ் பாடுகின்ற பொழுதிலும் அவர்கள் எதனையும் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் புகழ்ந்து பாடுகின்ற போதிலும் அப்பாடல்களின் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. இப்பொழுது அனைத்தும் மனிதனின் விளக்கத்துக்கு அப்பாற்பட்டு உள்ளது.தந்தை விளங்கப்படுத்துகிறார்: இந்த ஐந்து விகாரங்களும் உங்கள் புத்தியை மிகவும் கெடுத்து விட்டன. பத்திரிநாத் முதலியவற்றிற்கு பல மக்கள் செல்கிறார்கள். இன்று 2 இலட்சம் முதல் 4 இலட்சம் வரை மக்கள் செல்கின்றனர். முக்கிய உத்தியோகஸ்தர்களும் அங்கு யாத்திரை செல்கிறார்கள். நீங்கள் அங்கு செல்வதில்லை. ஆகையால் அவர்கள், பிரம்மாகுமாரிகள் நாஸ்திகர்கள் ஆகிவிட்டார்கள், ஏனெனில் அவர்கள் வழிபாடு செய்வதில்லை எனக் கூறுகிறார்கள். கடவுளை அறியாதவர்களே நாஸ்திகர்கள் என நீங்கள் அவர்களுக்குக் கூறுகிறீர்கள். எவருமே தந்தையை அறியாதவர்களாக இருப்பதாலேயே இது அநாதைகளின் உலகம் எனப்படுகிறது. அவர்கள் தொடர்ந்தும் தங்களிடையே பெருமளவு சண்டை சச்சரவுகளில் ஈடுபடுகிறார்கள். இவ்வுலகம் முழுவதும் பாபாவின் வீடாகும், இல்லையா? உலகம் முழுவதிலும் உள்ள குழந்தைகளைத் தூய்மையாக்கவே தந்தை வருகிறார். அரைக்கல்பத்துக்கு உண்மையிலேயே தூய்மையான உலகம் இருந்தது. அவர்கள் பாடுகிறார்கள்: அரசன் இராமர்; எப்படியோ, அவ்வாறே இராமரது பிரஜைகளும் இருப்பார்கள். இராமர் செல்வந்தராக இருப்பதைப் போலவே அவர்களது பிரஜைகளும் செல்வந்தர்களாக இருக்கிறார்கள். எவ்வாறு அங்கே அதர்மம் ஏதும் நிகழ முடியும்? அங்கே சி;ங்கமும் ஆடும் ஒன்றாக நீர் அருந்துகின்றன என்றும் அவர்கள் கூறுகிறார்கள். எனவே இராவணன் போன்றோர் எங்கிருந்து வரமுடியும்? அவர்கள் எதையும் புரிந்து கொள்வதில்லை. ஏனையவர்கள் இவற்றைச் செவிமடுக்கும் பொழுது வியப்படைகிறார்கள். ஞானக்கடலாகிய தந்தை வந்துவிட்டார் என்பதும், அவர் இப்பொழுது உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார் என்பதும் குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். இவ்வுலகம் தூய்மையற்றது. அவர் தூய்மை அற்றவர்களைத் தூண்டுதல் மூலம் தூய்மை ஆக்குவாரா? மக்கள் அழைக்கிறார்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! வந்து எங்களைத் தூய்மை ஆக்குங்கள்! அதனால் அவர் நிச்சயமாகப் பாரதத்துக்கே வந்திருக்க வேண்டும். இன்றும், அவர் கூறுகிறார்: ஞானக் கடலாகிய நான் வந்து விட்டேன். சிவபாபாவிடம் மாத்திரமே இந்த ஞானம் அனைத்தும் உள்ளது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிகிறீர்கள். தந்தை இங்கு அமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். சமயநூல்களில் உள்ளவை எல்லாம் கட்டுக் கதைகளே. அவர்கள் கடவுளின் பெயர் வியாசர் எனக் குறிப்பிடுகிறார்கள். வியாசரே சமயநூல்களை எழுதியதாக அவர்கள் கூறுகிறார்கள். வியாசர் பக்தி மார்க்கத்தைச் சேர்ந்தவர். இவரோ வியாசதேவர். குழந்தைகளாகிய நீங்கள் ‘சுகதேவர்கள்’ (சந்தோஷத்தை அருள்பவர்கள்). நீங்கள் இப்பொழுது சந்தோஷ தேவர்களாக (அதாவது சந்தோஷத்தை அருளும் தேவர்களாக) ஆகுகின்றீர்கள். நீங்கள் இப்பொழுது உங்கள் சந்தோஷ ஆஸ்தியை வியாசராகிய, ஆசிரியராகிய சிவனிடம் இருந்து (சிவச்சாரியார்) பெறுகிறீர்கள். நீங்கள் வியாசரின் குழந்தைகள். மக்கள் குழப்பம் அடையாமல் இருப்பதற்காகாகவே நீங்கள் சிவனது குழந்தைகள் என அழைக்கப்படுகிறீர்கள். அவருடைய உண்மையான பெயர் சிவன். தந்தை இப்பொழுது கூறுகிறார்: சிவபாபா உங்கள் முன்னிலையில் அமர்ந்து இருப்பதால் சரீரம் உடையவர்களைப் பார்ப்பதை நிறுத்துங்கள். ஆத்மா புரிந்துணரப்படலாம். பரமாத்மாவும் புரிந்துணரப்படலாம். அவரே பரமதந்தை பரமாத்மாவாகிய சிவன். அவர் வந்து தூய்மை அற்றவர்களில் இருந்து தூய்மையானவர்கள் ஆகுவதற்கான வழியை உங்களுக்குக் காட்டுகிறார். அவர் கூறுகிறார்: நானே ஆத்மாக்களாகிய உங்கள் தந்தை. ஆத்மா புரிந்துணரப்படலாம். ஆத்மாவைக் கண்களால் பார்க்க முடியாது. தந்தை கூறுகிறார்: நீங்கள் ஓர் ஆத்மா என்பதைப் புரிந்துணர்ந்துள்ளீர்களா? இத்தனை சிறியதோர் ஆத்மாவில் அழியாத பாகம் பதியப்பட்டுள்ளது. இது ஒரு பதிவு நாடாவைப் போன்றது. ஆத்மாக்களாகிய நீங்கள் ஒரு சரீரத்தை எடுக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். முதலில் ஆத்ம உணர்வு உடையவர்களாக இருந்தீர்கள். பின்னர் நீங்கள் சரீர உணர்வு உடையவர்களாக ஆகினீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் 84 பிறவிகள் எடுக்கிறீர்கள். இதற்கு முடிவில்லை. எப்பொழுது இந்த நாடகம் உருவாக்கப்பட்டது எனச் சிலர் கேட்கிறார்கள். எவ்வாறாயினும் இந்த நாடகம் அநாதியானது. இது ஒருபொழுதும் அழிக்கப்படுவதில்லை. இது ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட அழியாத உலக நாடகம். கல்வியறிவற்ற குழந்தைகளுக்குக் கற்பிக்கப்படுவதைப் போலவே, தந்தையும் இங்கே இருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். ஒவ்வோர் ஆத்மாவும் ஒரு சரீரத்தில் வசிக்கிறார். இது கல்லுப் புத்திகளுக்கு உணவாகும். புத்தி புரிந்துணர்வைப் பெறுகிறது. பாபா குழந்தைகளாகிய உங்களுக்காகவே படங்களைச் செய்வித்துள்ளார். இது மிகவும் இலகுவானது. இதுவே திரிமூர்த்தி பிரம்மா, விஷ்ணு, சங்கரர். பிரம்மா ஏன் திரிமூர்த்தி எனப்படுகிறார்? அவர்கள் 'தேவ், தேவ், மகாதேவ்" எனக் கூறுகிறார்கள். அவர்கள் ஒருவரிலும் பார்க்க இன்னொருவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்ற போதிலும் அதன் அர்த்தத்தை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. பிரம்மா எவ்வாறு ஒரு தேவராக இருக்க முடியும்? பிரஜாபிதா பிரம்மா இங்கேயே இருக்க வேண்டும். இவ்விடயங்கள் சமயநூல்களில் குறிப்பிடப்படவில்லை. தந்தை கூறுகிறார்: நான் இச்சரீரத்தினுள் பிரவேசித்து இவர் மூலம் உங்களுக்கு விளங்கப்படுத்துகிறேன். நான் இவரை எனக்குரியவர் ஆக்குகிறேன். நான் இவரது பிறப்புகளில் கடைசிப் பிறப்பில் வருகிறேன். இவரும் ஐந்து விகாரங்களையும் துறக்கிறார். துறவறத்தை ஏற்பவர்களே யோகிகள், ரிஷிகள் எனப்படுகிறார்கள். நீங்கள் இப்பொழுது இராஜரிஷிகள் ஆகிவிட்டீர்கள். நீங்கள் இப்பொழுது ஐந்து விகாரங்களையும் துறந்து விட்டீர்கள். இதனாலேயே உங்கள் பெயர் மாற்றப்பட்டுள்ளது. நீங்கள் இராஜயோகிகள் ஆகுகின்றீர்கள். நீங்கள் ஒரு சத்தியம் செய்கிறீர்கள். சந்நியாசிகள் வீட்டையும் குடும்பத்தையும் துறந்து சென்று விடுகிறார்கள். இங்கே கணவனும், மனைவியும் சேர்ந்து வாழ்ந்து கொண்டே தாங்கள் விகாரத்தில் ஈடுபட மாட்டார்கள் எனச் சத்தியம் செய்கிறார்கள். விகாரமே பிரதான விடயம். சிவபாபாவே படைப்பவர் எனக் குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். அவர் புதிய உலகைப் படைக்கிறார். அவரே விதையும், சத்தியமும், உயிர் வாழ்பவரும், பேரானந்தக் கடலும், ஞானக் கடலும் ஆவார். எவ்வாறு படைத்தல், அழித்தல், காத்தல் இடம் பெறுகின்றன என்பது தந்தைக்கு மாத்திரமே தெரியும். மனிதர்களுக்கு இது தெரியாது. அவர்கள் மிக விரைவாகக் கூறுகிறார்கள்: பிரம்மா குமாரிகளாகிய நீங்கள் உலக அழிவை ஏற்படுத்துகிறீர்கள். அச்சா. ரோஜா மலர் உங்கள் வாயில் இருக்கட்டும் (நீங்கள் கூறியது உண்மை ஆகட்டும்)! நீங்களே விநாசத்தை ஏற்படுத்துவதற்கான கருவிகள் என அவர்கள் கூறுகிறார்கள். நீங்கள் சமயநூல்களையோ, பக்தியையோ அல்லது உங்கள் குருமார்களையோ நம்பாமல் உங்கள் தாதா கூறுவதை மாத்திரம் செவிமடுக்கிறீர்கள். எவ்வாறாயினும் தந்தையே கூறுகிறார்: இது ஒரு தூய்மையற்ற சரீரம். இதனுள்ளேயே நான் பிரவேசிக்கிறேன். தூய்மையற்ற உலகில் தூய்மையான எவரும் இருக்க முடியாது. மக்கள் தாங்கள் மற்றவர்களிடம் இருந்து செவிமடுத்த விடயங்களைத் திரும்பக் கூறுகிறார்கள். இத்தகைய வதந்திகளாலேயே பாரதம் மிகவும் சீரழிந்து விட்டது. பின்னர் தந்தை வந்தே உங்களுக்கு உண்மையைக் கூறி அனைவருக்கும் சற்கதியை அருள்கிறார். நல்லது.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தையிடம் இருந்து உங்கள் சந்தோஷ ஆஸ்தியைப் பெற்று சந்தோஷ தேவராக (அருள்பவர்) அனைவருக்கும் சந்தோஷத்தை கொடுங்கள். ராஜரிஷி ஆகுவதற்கு விகாரங்கள் அனைத்தையும் துறவுங்கள்.2. இக்கல்வியே உண்மையான போஷாக்காகும். சற்கதியை அடைவதற்கு வதந்திகளைச் செவிமடுப்பதை நிறுத்தி, ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள். தந்தை ஒருவர் கூறுவதையே செவிமடுங்கள். பற்றை வென்றவர் ஆகுங்கள்.
ஆசீர்வாதம்:
உங்களுடைய ஆதி சம்ஸ்காரங்களை வெளிப்படுத்துவதனால், சதா முகமலர்ச்சியுடன் இருப்பதன் மூலம், இந்த ஞானத்தின் சொரூபம் ஆகுவீர்களாக.இந்த ஞானத்தை கடைந்து, அதன் சொரூபம் ஆகின்ற குழந்தைகள் சதா முகமலர்ச்சியுடன் இருக்கிறார்கள். சதா முகமலர்ச்சியுடன் இருப்பதே பிராமண வாழ்வின் ஆதி சம்ஸ்காரம் ஆகும். தெய்வீகக் குணங்கள், உங்களுடைய சொந்த சொத்து. குறைபாடுகள், மாயையின் சொத்து. தீய சகவாசத்தின் ஆதிக்கத்திற்கு உட்பட்டதாலேயே நீங்கள் அவற்றைச் சேர்த்துக் கொண்டீர்கள். இப்பொழுது, உங்கள் முதுகை அவற்றிலிருந்து திருப்பிக் கொள்ளுங்கள். நீங்கள் சர்வசக்திவான் என்ற ஸ்தானத்தில் நிலைத்திருங்கள். அப்பொழுது நீங்கள் சதா முக மலர்ச்சியுடன் இருப்பீர்கள். எந்தவொரு அசுரத்தனமான அல்லது வீணான சம்ஸ்காரங்களுக்கும் உங்கள் முன்னால் வருவதற்கு தைரியம் இருக்க மாட்டாது.
சுலோகம்:
சம்பூர்ணம் என்ற உங்கள் இலக்கை உங்கள் முன்னால் வைத்திருந்தால் எந்தவொரு கவர்ச்சியாலும் உங்கள் எண்ணத்திலும் கூட உங்களை ஈர்க்க முடியாது.அவ்யக்த சமிக்ஞை: ஒற்றுமை மற்றும் நம்பிக்கை என்ற சிறப்பியல்புடன், வெற்றி நிறைந்தவர் ஆகுங்கள்.
ஒற்றுமைக்காக, ஓர் ஆன்மிக, அதிர்ஷ்டத் தாயத்தை உங்களுடன் வைத்திருங்கள்: நான் மரியாதையை கொடுத்து மரியாதையை வாங்க வேண்டும். இந்த மரியாதையின் பதிவு, வெற்றிக்கான அழியாத பதிவு ஆகுகின்றது. உங்கள் உதடுகளில், வெற்றிக்கான ஒரேயொரு மந்திரமே இருக்க வேண்டும்: நீங்கள் முதலில். இந்த மகாமந்திரத்தை உங்கள் மனதில் உறுதியாக்கிக் கொள்ளுங்கள். சரியான முறையில், முதலாவதாக நான் என்பதைத் தவிர்த்து, மற்றவர்களை முன்னேற்றுவது என்றால், நீங்கள் முன்னேறுகிறீர்கள் என்று அர்த்தம். இந்த மகாமந்திரத்தினால் தொடர்ந்தும் முன்னேறிச் சென்று தொடர்ந்தும் வெற்றி ஈட்டுங்கள். இந்த மந்திரமும், இந்த அதிர்ஷ்டத் தாயத்தும் சதா உங்களுடன் இருக்கட்டும். அப்பொழுது வெளிப்பாட்டின் முரசு கொட்டும்.