21.05.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, ஆத்மாக்களாகிய நீங்கள் ஒரேயொரு தந்தையின் மீது அன்பைக் கொண்டுள்ளீர்கள். தந்தை சரீரங்களுடன் அன்றி, ஆத்மாக்களின் மீது அன்பைக் கொண்டிருப்பதற்கு உங்களுக்குக் கற்பித்துள்ளார்.
கேள்வி:
எந்த முயற்சியை நீங்கள் செய்யும்போது, மாயை தடைகளை உருவாக்குகின்றாள்? மாயையை வெற்றி கொள்பவர் ஆகுவதற்கான வழிமுறை என்ன?பதில்:
நீங்கள் தந்தையை நினைவு செய்வதற்கு முயற்சி செய்கிறீர்கள். அதனால் உங்கள் பாவங்கள் எரிக்கப்படுகின்றன. எனவே இந்த நினைவு செய்வதிலேயே, மாயை உங்களுக்குத் தடைகளை உருவாக்குகின்றாள். அதிபதியாகிய தந்தை உங்களுக்கு மாயையை வெற்றி கொள்வதற்கான வழிகளைக் காட்டுகிறார். அந்த இனங்காணுதலுடன் அதிபதியை நினைவு செய்யும் போது நீங்கள் சந்தோஷமாக இருப்பீர்கள். நீங்கள் தொடர்ந்தும் முயற்சி செய்வதுடன் அதிகளவு சேவையும் செய்வீர்கள், அப்பொழுது நீங்கள் மாயையை வெற்றி கொண்டவர்கள் ஆகுவீர்கள்.பாடல்:
எங்களை இந்தப் பாவ உலகிலிருந்து அகற்றி, ஓய்வும் சௌகரியமும் நிறைந்த இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்.ஓம் சாந்தி.
ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் பாடலைச் செவிமடுத்ததுடன் அதன் அர்த்தத்தையும் புரிந்து கொண்டுள்ளீர்கள். வெளி உலகில் உள்ள எவருக்கும் இதன் அர்த்தம் தெரியாது. ஆத்மாக்களாகிய நீங்கள் பரமாத்மாவான பரமதந்தையின் மீது அன்பு கொண்டுள்ளீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். தமது தந்தையாகிய பரமாத்மா பரமதந்தையை ஆத்மாக்கள் அழைக்கின்றார்கள். உங்கள் அன்பு ஆத்மாக்களின் மீதா அல்லது சரீரங்களின் மீதா உள்ளது? ஆத்மாக்களின் மீதே அன்பு கொண்டிருக்க வேண்டும் எனத் தந்தை இப்பொழுது உங்களுக்குக் கற்பிக்கின்றார். சரீரங்கள் அழியக் கூடியவை. அன்பு ஆத்மாவிலேயே உள்ளது. இப்பொழுது உங்கள் அன்பானது பரமாத்மாவாகிய தந்தையுடன் இருக்க வேண்டுமே அன்றி, சரீரங்களுடன் அல்ல என பாபா உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். தர்மாத்மாக்கள் வாழும் உலகிற்குத் தம்மை வந்து அழைத்துச் செல்லுமாறு ஆத்மாக்கள் தங்கள் தந்தையை அழைக்கின்றனர். நீங்கள் பாவாத்மாவாக இருந்தீர்கள் என்பதையும் இப்பொழுது தர்மாத்மாக்கள் ஆகுகின்றீர்கள் என்பதையும் புரிந்து கொள்கின்றீர்கள். தந்தை உங்களை விவேகமான முறையில் (யுக்தியுடன்) தர்மாத்மாக்கள் ஆக்குகிறார். தந்தை தானே வந்து குழந்தைகளாகிய உங்களுக்கு இவற்றைக் கூறும் போதே நீங்கள் தந்தையை நினைவு செய்வதன் மூலம் தூய, தர்மாத்மாக்கள் ஆகுகிறீர்கள் என்பதைப் புரிந்துகொண்டு, அனுபவமும் செய்கிறீர்கள். யோக சக்தியின் மூலம் உங்கள் பாவங்கள் அழிக்கப்படுகின்றன. கங்கைகளில் நீராடுவதன் மூலம் பாவங்கள் கழுவப்பட மாட்டாது. மக்கள் நீராடுவதற்காகக் கங்கைகளுக்குச் சென்று தங்கள் சரீரத்தில் அந்தச் சேற்றை பூசிக் கொள்கிறார்கள். ஆனால் அவர்களின் பாவங்கள் அவ்வாறு செய்வதனால் கழுவப்பட மாட்டாது. யோக சக்தியின் மூலம் மட்டுமே ஆத்மாவின் பாவம் அகற்றப்படும். கலப்படம் அகற்றப்படுகிறது. தந்தையை நினைவுசெய்வதன் மூலம் பாவங்கள் எரிக்கப்படும் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் மட்டுமே அறிவீர்கள். அத்துடன் அந்த நம்பிக்கையையும் கொண்டுள்ளீர்கள். உங்களிடம் நம்பிக்கை இருக்குமானால், நீங்கள் நினைவைக் கொண்டிருப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் இந்த முயற்சியை செய்யும் போதே மாயை தடைகளை உருவாக்குகின்றாள். மாயை சக்திவாய்ந்தவளாகிச் சக்தி வாய்ந்தவர்களுடன் மிக நன்றாகப் போராடுகிறாள். அவள் பலவீனமானவர்களுடன் ஏன் போராட வேண்டும்? நீங்கள் மாயையை வென்றவர்களாகவும் உலகை வென்றவர்களாகவும் ஆக வேண்டும் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் எப்பொழுதும் விழிப்புணர்வில் கொண்டிருக்க வேண்டும். மாயையை வெற்றி கொள்வதன் மூலம் உலகை வெற்றி கொள்ளுதல் என்பதன் உண்மையான அர்த்தத்தை வேறு எவரும் அறியமாட்டார்கள். மாயையை எவ்வாறு வெற்றி கொள்வது என்பது இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. மாயையும் சக்திவாய்ந்தவள் ஆவாள். குழந்தைகளாகிய நீங்கள் அதிபதியைக் கண்டுகொண்டுள்ளீர்கள். அரிதாகவே அந்த அதிபதியை எவரும் அறிந்து கொள்வதுடன் அதுவும் வரிசைக்கிரமமாகவே இடம்பெறுகின்றது. அவரை அறிந்தவர்களிடம் அந்தச் சந்தோஷம் உள்ளது. அவர்கள் தாமாகவே முயற்சி செய்வதுடன் அதிகளவு சேவையும் செய்கின்றனர். அநேக மக்கள் அமர்நாத்திற்குச் செல்கிறார்கள். இப்பொழுது மனிதர்கள் அனைவரும் எப்படி உலகில் அமைதி நிலவ முடியும் எனக் கேட்கின்றனர். சத்தியயுகத்தில் எவ்வாறு அமைதியும் சந்தோஷமும் இருந்தன என்பதை இப்பொழுது நீங்கள் அனைவருக்கும் காட்டுகிறீர்கள். அங்கு முழு உலகிலும் அமைதி நிலவியது. அந்த நேரத்தில் அது இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியமாக இருந்தது. அப்பொழுது அங்கு வேறெந்தச் சமயமும் இருக்கவில்லை. இற்றைக்கு 5000 வருடங்களுக்கு முன்னர் சத்தியயுகம் இருந்தது. உலகம் நிச்சயமாகச் சக்கரத்தைச் சுற்றிச் செல்ல வேண்டும். அது மிகத்தெளிவாகப் படங்களில் காட்டப்பட்டுள்ளது. முன்னைய சக்கரத்திலும் படங்கள் உருவாக்கப்பட்டன. இவை நாளுக்கு நாள் தொடர்ந்தும் சீரமைக்கப்படும். சில வேளைகளில் குழந்தைகள் படங்களுக்கு மேல் திகதிகள் போன்றவற்றைக் குறிப்பிட மறந்து விடுகின்றனர். இலக்ஷ்மி நாராயணனின் படங்களின் மேல் நிச்சயம் திகதிகள் போன்றவை குறிப்பிடப்பட வேண்டும். நீங்கள் சுவர்க்கவாசிகளாக இருந்தீர்கள் என்பதும் இப்பொழுது மீண்டும் அவ்வாறு ஆகுவீர்கள் என்பதும் குழந்தைகளாகிய உங்கள் புத்திகளில் உள்ளது. நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப அந்தஸ்தைக் கோரிக் கொள்வீர்கள். நீங்கள் இப்பொழுது தந்தையினால் ஞானத்தின் அதிகாரிகள் ஆக்கப்பட்டுள்ளீர்கள். பக்தி இப்பொழுது முடிவடைய உள்ளது. சத்திய, திரேதா யுகங்களில் பக்தி இருக்கமாட்டாது. அதன் பின்னர் ஒவ்வொரு கல்பத்தின் அரைவாசிக்கும் பக்தி தொடர்கிறது. அதனைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது மட்டுமே புரிந்து கொள்கிறீர்கள். அரைக்கல்பத்திற்குப் பின்னர் இராவண இராச்சியம் ஆரம்பம் ஆகுகின்றது. முழு நாடகமும் பாரத மக்களாகிய உங்களைப் பற்றியதாகும். 84 பிறவிச் சக்கரம் பாரதத்திற்கே உரியது. பாரதம் அநாதியான பூமி என்பதை முன்னர் நீங்கள் அறிந்திருக்கவில்லை. இலக்ஷ்மியும் நாராயணனும் தேவ தேவியர்கள் என அழைக்கப்பட்டனர். நீங்கள் கோரிக் கொள்கின்ற அந்தஸ்து மிக மேன்மையாக இருந்த போதிலும் இந்தக் கல்வி மிக இலகுவானது! நாங்கள் 84 பிறவிச் சக்கரத்தை முடித்த பின்னர் வீட்டிற்குச் செல்வோம். நீங்கள் 84 பிறவிச் சக்கரத்தைப் பற்றி பேசும் போது உங்கள் புத்தி மேல் நோக்கிச் செல்கிறது. நீங்கள் இப்பொழுது அசரீரி உலகையும் சூட்சும உலகையும் பௌதீக உலகையும் நினைவு செய்கின்றீர்கள். முன்னர் சூட்சும உலகம் என்றால் என்ன என்பதை நீங்கள் அறிந்திருக்கவில்லை. அசைவுகளின் மூலம் அசையும் உலகில் எவ்வாறு ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்வது என்பதை நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். முன்னர் அசையும் படங்கள் எடுக்கப்பட்டன. ‘மௌனம்’, ‘அசைவு’, ‘சப்தம்’ போன்றவற்றை விளங்கப்படுத்துவதை இது இலகுவாக ஆக்குகின்றது. இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியத்தில் இருந்து தற்போதைய காலம் வரை முழுச் சக்கரத்தையும் உங்கள் புத்திகள் இப்பொழுது விழிப்புணர்வில் கொண்டுள்ளன. குடும்பத்துடன் வீட்டில் வசிக்கும் போதும் நீங்கள் தூய்மையாக இருக்க வேண்டும் என்ற அக்கறையை மட்டுமே நீங்கள் கொண்டிருக்க வேண்டும். உங்கள் குடும்பத்தினருடன் வீட்டில் வசிக்கும் போது, பழைய உலகிற்கான அனைத்துப் பற்றுக்களையும் முடித்து விடுமாறு தந்தை விளங்கப்படுத்துகிறார். உங்கள் குழந்தைகள் போன்றோரை நீங்கள் பராமரிக்க வேண்டும். ஆனால் உங்கள் புத்தி தந்தையை நோக்கியே இருக்க வேண்டும். கைகளால் வேலை செய்யும் போது உங்கள் புத்தி தந்தையுடன் இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. உங்கள் குழந்தைகளுக்கு உணவூட்டும் போதும் நீராட்டும் போதும் உங்கள் புத்தியில் தந்தையின் நினைவு மட்டுமே இருக்க வேண்டும். ஏனெனில் பெரியதொரு பாவச்சுமை சேர்க்கப்பட்டுள்ளது என்பது உங்களுக்குத் தெரியும். இதனாலேயே உங்கள் புத்தி தந்தையிடம் செல்ல வேண்டும். அந்த அன்பிற்கினியவரை அதிகளவு நினைவு செய்யுங்கள். ஆத்மாக்களாகிய உங்கள் அனைவருக்கும் தந்தையாகிய அன்பிற்கினியவர் கூறுகின்றார்: என்னை நினைவு செய்யுங்கள்! இப்பொழுது இந்தப் பாகம் மீண்டும் ஒருமுறை நடிக்கப்படுவதுடன், 5000 வருடங்களுக்குப் பின்னர் அது மீண்டும் தொடரும். தந்தை அத்தகைய இலகுவான வழிமுறையை உங்களுக்குக் காட்டுகிறார். அங்கு வேறெந்தக் கஷ்டமும் இல்லை. சிலர் அவர்களால் இதை செய்ய முடியவில்லை என்றும், அவர்களுக்கு இது மிகக் கடினமாக இருப்பதாகவும் அத்துடன் நினைவு யாத்திரை மிகக் கடினம் என்றும் கூறுகின்றனர். ஓ! ஆனால் தந்தையை உங்களால் நினைவுசெய்ய முடியாதா? நீங்கள் தந்தையை மறக்கக்கூடாது. தந்தை நன்றாக நினைவு செய்யப்பட வேண்டும், ஏனெனில் இதன் மூலம் மட்டுமே உங்கள் பாவங்கள் அழிக்கப்படுவதுடன், நீங்கள் என்றும் ஆரோக்கியமாகவும் ஆகுகின்றீர்கள். இல்லாவிடில் உங்களால் அவ்வாறு ஆக முடியாது. நீங்கள் மிகவும் சிறந்த ஆலோசனையைப் பெறுகிறீர்கள். இது முழுமையாக சுகப்படுத்தும் ஒரு மருந்தும் ஆகும். இந்த யோக சக்தியின் மூலம் நீங்கள் 21 பிறவிகளுக்கு எந்தவொரு நோயையும் ஒருபோதும் கொண்டிருக்க மாட்டீர்கள் என நான் உத்தரவாதம் அளிக்கிறேன். தந்தையை நினைவு செய்யுங்கள்! அது அத்தகைய இலகுவான வழிமுறையாகும். பக்திமார்க்கத்தில் மக்கள் அறியாமையுடன் கடவுளை நினைவுசெய்தனர். தந்தை இப்பொழுது இங்கே அமர்ந்திருந்து உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். நீங்கள் பாபாவிடம் முன்னைய கல்பத்திலும் வந்தீர்கள், பின்னர் முயற்சியும் செய்தீர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொண்டுள்ளீர்கள். நீங்கள் இராச்சியத்தை ஆட்சிபுரிபவர்களாக இருந்து பின்னர் அதனை இழந்துவிட்டீர்கள் என்பதில் இப்போது உங்களுக்குத் திடமான நம்பிக்கை உள்ளது. இப்பொழுது பாபா மீண்டும் வந்துள்ளார், உங்கள் இராச்சியப் பாக்கியத்தை நீங்கள் மீண்டும் அவரிடமிருந்து கோரிக்கொள்ள வேண்டும். தந்தை கூறுகிறார்: என்னையும் இராச்சியத்தையும் நினைவு செய்யுங்கள்! மன்மனாபவ! உங்கள் இறுதி எண்ணங்கள் உங்கள் இலக்கிற்கு உங்களை இட்டுச் செல்லும். நாடகம் இப்பொழுது முடிவுக்கு வருகிறது. நாங்கள் வீடு செல்ல உள்ளோம். மணவாளன் வந்து மணவாட்டியை வீட்டிற்கு அழைத்துச் செல்வதைப் போன்று, பாபா அனைவரையும் அழைத்துச் செல்வதற்காக வந்துள்ளார். மணவாட்டிகள் தாம் தமது புகுந்த வீட்டிற்குச் செல்ல இருப்பதையிட்டு மிகச் சந்தோஷம் அடைகின்றனர். நீங்கள் அனைவரும் ஓர் இராமருக்குச் சொந்தமான சீதைகள் ஆவீர்கள். இராமரினால் மட்டுமே உங்களை இராவணனின் சிறையிலிருந்து விடுவித்து வீட்டிற்கு அழைத்துச் செல்ல முடியும். விடுதலை அளிப்பவர் அவர் ஒருவரே, அவர் உங்களை இராவண இராச்சியத்தில் இருந்து விடுவிக்கின்றார். இது இராவண இராச்சியம் என மக்கள் கூறிய போதிலும் இதனை அவர்கள் சரியாகப் புரிந்து கொள்வதில்லை. இது இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. ஏனையவர்களுக்கு விளங்கப்படுத்துவதற்காக உங்களுக்கு மிகச்சிறந்த கருத்துக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ‘முன்னைய கல்பத்தினைப் போன்றே உலகில் தந்தையினால் அமைதி ஸ்தாபிக்கப்படுகிறது’ என பாபா உங்களை எழுதுமாறு கூறியிருக்கிறார். பிரம்மாவின் மூலம் ஸ்தாபனை இடம்பெறுகிறது. விஷ்ணுவின் இராச்சியம் இருந்தபோது, உலகில் அமைதி நிலவியது. அரிதாகவே சிலர் இலக்ஷ்மியும் நாராயணனுமே, விஷ்ணு என்பதனைப் புரிந்து கொள்கின்றனர். அவர்கள் விஷ்ணுவாகிய இலக்ஷ்மி நாராயணனையும் இராதை கிருஷ்ணரையும் வெவ்வேறானவர்களாகவே கருதுகிறார்கள். நீங்கள் இப்பொழுது இதனைப் புரிந்து கொள்கிறீர்கள். நீங்களே சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுபவர்கள் ஆவீர்கள். சிவபாபா வந்து உங்களுக்கு உலகச் சக்கரத்தின் இந்த ஞானத்தைக் கொடுக்கிறார். நாங்கள் இப்பொழுது அவரால் மாஸ்டர் ஞானக்கடல்களாக ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம். நீங்களே இந்த ஞான நதிகள் ஆவீர்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. பக்தி மார்க்கத்து மக்கள் நீராடச் செல்வதற்கு அதிகளவு அலைந்து திரிகிறார்கள். அவர்கள் அதிகளவு தான தர்மங்களையும் செய்கிறார்கள். செல்வந்தர்கள் அதிகளவு தானம் செய்கிறார்கள். அவர்கள் தங்கத்தைக் கூடத் தானம் செய்கிறார்கள். நீங்கள் எவ்வளவுக்கு அலைந்து திரிந்தீர்கள் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். நீங்கள் ஹத்தயோகிகள் அல்லர். நீங்கள் இராஜயோகிகள் ஆவீர்கள். நீங்கள் தூய இல்லறப் பாதையை சேர்ந்தவர்களாக இருந்தீர்கள், பின்னர் இராவண இராச்சியத்தில் தூய்மை அற்றவர்கள் ஆகினீர்கள். நாடகத்துக்கேற்ப, தந்தை இப்பொழுது இல்லற தர்மத்தை ஸ்தாபித்துக் கொண்டிருக்கிறார். வேறு எவராலும் இந்தத் தூய பாதையை உருவாக்க முடியாது. மக்கள் உங்களிடம் கேட்கிறார்கள்: நீங்கள் அனைவரும் தூய்மையாகவே இருந்தால், எவ்வாறு உலகம் தொடர முடியும்? அவர்களிடம் கூறுங்கள்: சந்நியாசிகள் பலர் தூய்மையாக இருக்கிறார்கள். இருப்பினும், உலகம் நின்று விடவில்லையே, நின்று விட்டதா? உலகச் சனத்தொகை இப்பொழுது அதிகளவு அதிகரித்து இருப்பதால் மக்களுக்கு உண்ணப் போதியளவு உணவு இல்லை. போதியளவு தானியம் இல்லை. எனவே உலக சனத்தொகையை மென்மேலும் அதிகரிப்பதில் என்ன பயன்? தந்தை உங்கள் முன்னிலையில் பிரசன்னமாகி உள்ளார் என்பதை இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். எவ்வாறாயினும், உங்கள் பௌதீகக் கண்கள் மூலம் உங்களால் அவரைக் காண முடியாது. பாபா சதா உங்கள் முன்னிலையில் பிரசன்னமாகி உங்களுக்குக் கற்பித்துக் கொண்டிருக்கிறார் என்பதை ஆத்மாக்களாகிய நீங்கள் உங்கள் புத்திகள் மூலம் புரிந்துகொள்கிறீர்கள். தந்தை இப்பொழுது உலகில் அமைதியை ஸ்தாபித்துக் கொண்டிருக்கிறார் என்பதை உலக அமைதியைப் பற்றிப் பேசுபவர்களிடம் கூறுங்கள். ஆகையால் பழைய உலகின் விநாசம் எங்கள் முன்னிலையில் உள்ளது. 5000 வருடங்களின் முன்னரும் விநாசம் நடந்தது. இப்பொழுதும், அனைவர் முன்னிலையிலும் விநாசம் உள்ளது. பின்னர், உலகில் அமைதி நிலவும். இந்த விடயங்கள் குழந்தைகளாகிய உங்களின் புத்திகளில் மட்டும் இருக்கின்றன. இந்த விடயங்களை உலகில் உள்ள வேறு எவரும் அறிய மாட்டார்கள். வேறு எவர் புத்தியும் இந்த விடயங்களை உணரவில்லை. சத்தியயுகத்தில் முழு உலகிலும் அமைதி நிலவியது என்பதை நீங்கள் அறிவீர்கள். அந்த நேரத்தில், பாரதத்தை விட, வேறு எந்தத் தேசமும் இருக்கவில்லை. பின்னரே ஏனைய தேசங்கள் அனைத்தும் வந்தன. இப்பொழுது பல்வேறு தேசங்கள் உள்ளன. இப்பொழுது இது இந்த நாடகத்தின் இறுதிக்கட்டம் ஆகும். நிச்சயமாகக் கடவுள் இருக்கிறார் என்று மக்கள் கூறுகிறார்கள். ஆனால் அவர் யார் என்றோ அல்லது அவர் எந்த ரூபத்தில் வருகிறார் என்பதோ அவர்களுக்குத் தெரியாது. அது ஸ்ரீகிருஷ்ணராக இருக்க முடியாது. எவராலும் தூண்டுதலின் ஊடாகவோ அல்லது தமது சொந்தச் சக்தியினூடாகவோ உங்களை எதுவும் செய்யத் தூண்ட முடியாது. தந்தையே அதி அன்பிற்கினியவர் ஆவார். நீங்கள் அவரிடமிருந்து உங்கள் ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். தந்தை சுவர்க்கத்தை உருவாக்குகிறார். ஆகவே, அவர் நிச்சயமாக பழைய உலகின் விநாசத்தைத் தூண்டுவார். இலக்ஷ்மியும் நாராயணனும் சத்தியயுகத்தில் இருந்தார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர்கள் இப்பொழுது தமது சொந்த முயற்சிகளினூடாக மீண்டும் அவ்வாறு ஆகிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் போதை இருக்க வேண்டும். அவர்கள் பாரதத்தை ஆட்சி செய்தார்கள். சிவபாபா உங்களுக்கு அந்த இராச்சியத்தைக் கொடுத்த பின்னர் விடைபெற்றுச் சென்றார். சிவபாபா அந்த இராச்சியத்தை ஆட்சி செய்தபின்னர் விடைபெற்றுச் சென்றார் என்று நீங்கள் கூற மாட்டீர்கள். இல்லை. பாரத மக்களுக்கு அந்த இராச்சியத்தைக் கொடுத்த பின்னரே அவர் விடைபெற்றுச் சென்றார். இலக்ஷ்மியும் நாராயணனும் அந்த இராச்சியத்தை ஆட்சிசெய்தார்கள். பாபா மீண்டும் ஒருமுறை எங்களுக்கு இராச்சியத்தைக் கொடுப்பதற்கு வந்துள்ளார். அவர் கூறுகிறார்: இனிமையான குழந்தைகளே, என்னை நினைவுசெய்து சக்கரத்தைச் சுழற்றுங்கள். நீங்கள் 84 பிறவிகளை எடுத்துள்ளீர்கள். ஒருவர் குறைந்தளவு முயற்சி செய்யும் பொழுது, அவர் குறைந்தளவு பக்தியே செய்துள்ளார் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும். அதிகளவு பக்தி செய்துள்ளவர்கள், அதிக முயற்சி செய்வார்கள். பாபா அனைத்தையும் மிகவும் தெளிவாக விளங்கப்படுத்துகிறார். எவ்வாறாயினும், அது உங்கள் புத்திகளில் பதிய வேண்டும். முயற்சி செய்வது உங்கள் கடமை. நீங்கள் குறைந்தளவு பக்தியே செய்திருந்தால், உங்களால் யோகம் செய்ய முடியாதிருக்கும். சிவபாபாவின் நினைவு உங்கள் புத்திகளில் நிலைத்திருக்காது. ஒருபொழுதும் முயற்சி செய்வதில் பின்னடைய வேண்டாம். மாயை எவ்வளவு சக்திவாய்ந்தவள் என்பதைப் பார்க்கும் பொழுது, இதய வழுவலைக் கொண்டிருக்க வேண்டாம். மாயையின் பல புயல்கள் வரும். ஆத்மாவே அனைத்தையும் செய்கிறார் என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டும் உள்ளது. சரீரம் அழிக்கப்பட்டு விடும். ஓர் ஆத்மா தனது சரீரத்தை விட்டு நீங்கும்பொழுது, சரீரம் மண்ணோடு மண்ணாகிப் போகிறது. அந்தச் சரீரம் மீண்டும் பெறப்பட முடியாது. ஆகவே, பின்னர், அதை நினைவுசெய்து அழுவதில் என்ன நன்மை உள்ளது? அந்தச் சரீரம் மீண்டும் பெறப்படுமா? அந்த ஆத்மா ஏற்கெனவே சரீரத்தை விட்டு நீங்கி, இன்னுமொரு சரீரத்தை எடுத்துள்ளார். நீங்கள் அத்தகையதொரு பெரும் வருமானத்தை இப்பொழுது உழைத்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் உங்கள் கணக்கில் வரவைப் பதிவு செய்கிறீர்கள், ஏனைய அனைவரும் தங்கள் கணக்கில் செலவைப் பதிவு செய்கிறார்கள். பாபாவே கள்ளங்கபடமற்ற வியாபாரி ஆவார். இதனாலேயே ஒரு கைப்பிடி அரிசிக்குப் பிரதிபலனாக அவர் உங்களுக்கு 21 பிறவிகளுக்கு மாளிகைகளைக் கொடுக்கிறார். அவர் அதிக வட்டி தருகிறார். உங்களுக்கு வேண்டிய அளவுக்கு எதிர்காலத்துக்கென உங்களால் சேகரிக்க முடியும். எவ்வாறாயினும், நீங்கள் அதை அவருக்கு இறுதியில் கொடுக்க முடியும் என்று நினைக்க வேண்டாம். இறுதி நேரத்தில் அதனை வைத்து அவரால் என்ன செய்ய முடியும்? அவர் ஒரு மூட வியாபாரி அல்லர். அவரால் அதைப் பயன்படுத்த முடியாமல் இருந்து, ஆனால் அதற்கான வட்டியைக் கொடுக்க வேண்டியிருந்தால், அதனால் என்ன பலன் உள்ளது? அத்தகைய மக்களிடம் இருந்து அவர் எதையும் பெற மாட்டார். நீங்கள் ஒரு கைப்பிடி அரிசிக்குப் பிரதிபலனாக 21 பிறவிகளுக்கு மாளிகைகளைப் பெறுகிறீர்கள். நீங்கள் அதிகளவான வட்டியைப் பெறுகிறீர்கள். பாபா கூறுகிறார்: நானே முதற்தரமான அப்பாவி ஆவேன். நான் உங்களுக்கு அந்த உலக இராச்சியத்தைக் கொடுக்கிறேன். எனக்கு உரியவராகி, சேவை செய்யுங்கள். அவர் கள்ளங்கபடம் அற்ற பிரபு என்னும் காரணத்தினால் அனைவரும் அவரை நினைவு செய்கிறார்கள். இப்பொழுது நீங்கள் இந்த ஞான மார்க்கத்தில் இருக்கிறீர்கள். இப்பொழுது தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றி உங்கள் இராச்சியத்தைக் கோருங்கள். நீங்கள் உங்கள் இராச்சியத்தை, அதிலும், சூரிய வம்சத்தைக் கோருவதற்கு வந்துள்ளீர்கள் என்று நீங்கள் பாபாவுக்குக் கூறுகிறீர்கள். அச்சா. உங்கள் வாய் இனிப்பானது ஆகுவதாக. (அது நடைமுறையில் இடம்பெறட்டும்). அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதால், இராச்சியத்தைக் கோருங்கள். ஒரு கைப்பிடி அரிசியைக் கொடுத்து 21 பிறவிகளுக்கு மாளிகைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள். எதிர்காலத்துக்காக ஒரு வருமானத்தைச் சேமியுங்கள்.2. வீட்டில் குடும்பத்துடன் வசிக்கும்பொழுது, பழைய உலகத்துடனான உங்கள் பற்று அனைத்தையும் முடித்து முழுமையாகவே தூய்மை ஆகுங்கள். அனைத்தையும் செய்யும்பொழுது, உங்கள் புத்தியைத் தந்தையின் மீது ஒருமுகப்படுத்துங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் ஓர் உலக உபகாரியாகி, மற்றவர்களுக்காக உங்களின் மனதில் உள்ள நல்லாசிகளால் அவர்களை முன்னேறச் செய்வீர்களாக.யாராவது ஒரு தவறைச் செய்யும்போது, அவர் ஓர் ஆதிக்கத்தின் கீழ் இருக்கிறார் எனக் கருதி, அவரை மாற்றுவதற்கு கருணையான திருஷ்டியை வழங்குங்கள். அதைப் பற்றிக் கலந்துரையாட வேண்டாம். ஒருவர் ஒரு பாறையின் முன்னால் வந்து நின்றுவிட்டால், உங்களின் கடமை அதைக் கடந்து செல்வதுடன் அவரையும் உங்களின் சகபாடியாகக் கருதி, கடந்து செல்வதற்கு உதவுவதே ஆகும். இதற்கு, ஒவ்வொருவரின் சிறப்பியல்பையும் பாருங்கள். தொடர்ந்து அவர்களின் பலவீனங்களைப் புறக்கணியுங்கள். இது இப்போது எவரையும் வார்த்தைகளால் எச்சரிக்கும் நேரம் அல்ல. ஆனால், அவர்களுக்காக உங்களின் மனதில் உள்ள நல்லாசிகளால் அவர்களுடன் ஒத்துழைப்பதன் மூலம் நீங்களும் முன்னேறி, மற்றவர்களையும் முன்னேறச் செய்வதற்குரிய நேரமாகும். அப்போது மட்டுமே நீங்கள் உலக உபகாரிகள் எனப்படுவீர்கள்.
சுலோகம்:
உங்களின் திடசங்கற்பம் என்ற இடுப்புப் பட்டியை இறுக்குங்கள். நீங்கள் உங்களின் ஆசனத்தில் குழப்பம் அடைய மாட்டீர்கள்.அவ்யக்த சமிக்கை: ஆன்மீக இராஜரீகம் மற்றும் தூய்மையின் ஆளுமையைக் கடைப்பிடியுங்கள்.
எங்கும் தூய்மையின் தீச்சுடர் எரியும்போது, வெளிப்படுத்தல் என்ற சூரியன் உதிக்கும். எப்படி அவர்கள் அந்தத் தீப்பந்தத்துடன் எங்கும் செல்கிறார்களோ, அவ்வாறே, தூய்மையின் தீப்பந்தம் எங்கும் பிரகாசிக்க வேண்டும். அப்போது எல்லோரும் தந்தையைக் காண்பதுடன் அவரை இனங்கண்டு கொள்வார்கள். தூய்மையின் தீப்பந்தம் எந்தளவிற்கு ஸ்திரமாக இருக்கிறதோ, அந்தளவிற்கு எல்லோரும் இலகுவாகத் தந்தையை இனங்கண்டு கொள்வார்கள். அத்துடன் தூய்மையின் வெற்றி முழக்கம் ஒலிக்கும்.