21.08.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, அசுர கட்டளைகளைப் பின்பற்றுவதனால், நீங்கள் வீடற்றவர்கள் ஆகினீர்கள். இப்பொழுது, கடவுளின் வழிகாட்டல்களைப் பின்பற்றுவதனால், நீங்கள் சந்தோஷ தாமத்திற்குச் செல்வீர்கள்.
கேள்வி:
குழந்தைகளாகிய நீங்கள் தந்தையிடம் எந்த எதிர்பார்ப்புக்களைக் கொண்டிருக்க முடியும்? தந்தையிடம் எந்த எதிர்பார்ப்புக்களைக் கொண்டிருக்க முடியாது?பதில்:
தந்தையினால் தூய்மை ஆக்கப்பட்டு, திரும்பவும் உங்கள் வீட்டிற்கும், இராச்சியத்திற்கும் செல்வீர்கள் என்ற ஓர் எதிர்பார்ப்பை மாத்திரமே நீங்கள் தந்தையிடம் கொண்டிருக்க வேண்டும். பாபா கூறுகிறார்: குழந்தைகளே, நோய் வந்த ஒருவருக்கு நான் ஆசீர்வாதங்களைக் கொடுப்பேன் என்ற எதிர்பார்ப்பைக் கொண்டிருக்காதீர்கள். இங்கு கருணை அல்லது ஆசீர்வாதங்கள் எனும் கேள்வியே இல்லை. நான் குழந்தைகளாகிய உங்களைத் தூய்மை அற்றவர்களில் இருந்து தூய்மையானவர்கள் ஆக்குவதற்கே வந்துள்ளேன். இனிமேலும் நீங்கள் பாவச் செயல்களைச் செய்யாதிருக்கும் வகையில், எவ்வாறு அத்தகைய செயல்களைச் செய்வது என நான் உங்களுக்கு இப்பொழுது கற்பிக்கிறேன்.பாடல்:
இன்று இல்லாவிடின், நாளை இம்மேகங்கள் கலைந்துவிடும்.ஓம் சாந்தி.
ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் பாடலைக் கேட்டீர்கள். நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும் எனவும், உங்களைத் திரும்பவும் அழைத்துச் செல்வதற்குத் தந்தை வந்துள்ளார் எனவும் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நீங்கள் ஆத்ம உணர்வு உடையவர்களாக இருக்கும் பொழுதே உங்களால் இதை நினைவுசெய்ய முடியும். நீங்கள் சரீர உணர்வு உடையவர்களாக இருந்தால், உங்களால் இதை நினைவுசெய்ய முடியாது. பாபா பயணியாக வந்துள்ளார் எனக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நீங்களும் இங்கே பயணிகளாகவே வந்தீர்கள்; நீங்கள் உங்கள் வீட்டை மறந்து விட்டீர்கள். இப்பொழுது தந்தை உங்களுக்கு உங்கள் வீட்டைப் பற்றி நினைவூட்டுவதுடன், நீங்கள் சதோபிரதான் ஆகும்வரை உங்களால் வீடு திரும்ப முடியாது எனவும் தினமும் உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். பாபா கூறுவது சரியென்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு ஸ்ரீமத்தைக் கொடுக்கும் பொழுது, கீழ்ப்படிவானவர்கள் அவ்வழிகாட்டல்களை உடனடியாகவே பின்பற்றுகிறார்கள். இந்த வேளையில், சரியான வழிகாட்டலைக் கொடுக்கும் வேறெந்தத் தந்தையும் இல்லை. இதனாலேயே நீங்கள் வீடற்றவர்கள் ஆகியுள்ளீர்கள். ஒரேயொரு தந்தையே உங்களுக்கு ஸ்ரீமத்தைக் கொடுக்கிறார். சில குழந்தைகள் அவருடைய வழிகாட்டல்களையும் பின்பற்றுவதில்லை; இது ஓர் அற்புதமே! தங்கள் லௌகீகத் தந்தையின் வழிகாட்டல்களை அவர்கள் இலகுவாகப் பின்பற்றுகிறார்கள்; அவை அசுர வழிகாட்டல்கள் ஆகும். இதுவும் நாடகத்தில் உள்ளது. எவ்வாறாயினும், அவர் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தி உள்ளார்: அசுர கட்டளைகளைப் பின்பற்றுவதனால், நீங்கள் அந்த நிலையை அடைந்துள்ளீர்கள். இப்பொழுது, கடவுளின் வழிகாட்டல்களைப் பின்பற்றுவதனால், நீங்கள் சந்தோஷ தாமத்திற்குச் செல்வீர்கள். அது உங்களுடைய எல்லையற்ற ஆஸ்தியாகும். அவர் உங்களுக்குத் தினமும் விளங்கப்படுத்துகிறார். ஆகவே, குழந்தைகளாகிய நீங்கள் மிக்க முகமலர்ச்சியுடன் இருக்க வேண்டும். அனைவரும் இங்கே தங்குவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. வீட்டில் வசிக்கும் பொழுதும், நீங்கள் அவரை நினைவுசெய்ய வேண்டும். இந்தப் பாகம் இப்பொழுது முடிவடைய உள்ளது. நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். மனிதர்கள் இதை முற்றாகவே மறந்து விட்டார்கள். சிலரைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது: அவர் தனது வீட்டையும், நாட்டையும் முழுமையாகவே மறந்து விட்டார். இப்பொழுது தந்தை கூறுகிறார்: உங்கள் வீட்டையும், உங்கள் இராச்சியத்தையும் நினைவு செய்யுங்கள். இப்பொழுது எங்கள் பாகங்கள் முடிவடைகின்றன. நாங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். நீங்கள் இதை மறந்து விட்டீர்களா? குழந்தைகளாகிய நீங்கள் கூற முடியும்: பாபா, நாடகத்திற்கேற்ப எங்கள் பாகங்கள் எத்தகையவை என்றால் நாங்கள் எங்கள் வீட்டை மறந்து அலைந்து திரிவதாகும். பாரதவாசிகள் மாத்திரமே தங்கள் மேன்மையான தர்மத்தையும், செயலையும் (கர்மா) மறந்து, தங்கள் தெய்வீகத் தர்மத்திலும், தெய்வீகச் செயலிலும் சீரழிந்து விட்டார்கள். தந்தை இப்பொழுது உங்களை எச்சரித்துள்ளார்: உங்கள் தர்மமும், கர்மமும் இவ்வாறு இருந்தன. நீங்கள் அங்கே செய்த செயல்கள் அனைத்தும் நடுநிலையானவை. தந்தை மாத்திரமே செயல்கள், நடுநிலைச் செயல்கள், பாவச் செயல்களின் தத்துவத்தைக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். சத்தியயுகத்தில் செயல்கள் நடுநிலையானவை. இராவண இராச்சியத்தில் செயல்கள், பாவச்செயல்கள். உங்கள் தர்மத்தையும், கர்மத்தையும் மேன்மை ஆக்குவதற்குத் தந்தை இப்பொழுது வந்துள்ளார். ஆகவே, இப்பொழுது ஸ்ரீமத்தைப் பின்பற்றி, மேன்மையான செயல்களைச் செய்யுங்கள். சீரழிந்த செயல்களைச் செய்வதன் மூலம் எவருக்கும் துன்பம் விளைவிக்காதீர்கள். அது கடவுளின் குழந்தைகளின் செயல் அல்ல. நீங்கள் பெறும் வழிகாட்டல்களைப் பின்பற்றித் தெய்வீகக் குணங்களைக் கிரகியுங்கள். உங்கள் உணவு தூய்மையாக இருக்க வேண்டும். இக்கட்டான சந்தர்ப்பங்களில், நீங்கள் உணவைப் பெற முடியாது விட்டால், அப்பொழுது ஆலோசனை பெறுங்கள். சில சமயங்களில், உங்கள் வேலைத் தலத்தில், நீங்கள் எதையாவது உண்ண வேண்டி நேரிடும் என்பதை பாபா புரிந்து கொள்கிறார். நீங்கள் யோகசக்தி மூலம் ஓர் இராச்சியத்தை ஸ்தாபித்து, தூய்மையற்ற உலகைத் தூய்மை ஆக்குவதால், உங்கள் உணவைத் தூய்மை ஆக்குவது ஒரு பெரிய விடயமல்ல. நீங்கள் வேலைக்குச் செல்ல வேண்டும். நீங்கள் இப்பொழுது தந்தைக்கு உரியவர் ஆதலால், நீங்கள் அனைத்தையும் விட்டு வந்து இங்கே தங்க வேண்டும் என்பதல்ல. பல குழந்தைகள் உள்ளார்கள்! அவர்கள் அனைவரும் இங்கே தங்க முடியும் என்பதல்ல. அனைவரும் தங்கள் குடும்பத்துடன் வசிக்க வேண்டும். புரிந்து கொள்ளுங்கள்: நான் ஓர் ஆத்மா. எங்களைத் தூய்மை ஆக்கவும், எங்களைத் திரும்பவும் வீட்டுக்கு அழைத்துச் செல்லவும் பாபா வந்துள்ளார். பின்னர் நாங்கள் எங்கள் இராச்சியத்துக்குச் செல்வோம். இதுவோ இராவணனின் அந்நிய, அழுக்கான இராச்சியமாகும். நாடகத் திட்டத்துக்கேற்ப, நீங்கள் முற்றாகவே தூய்மை அற்றவர்கள் ஆகியுள்ளீர்கள். தந்தை கூறுகிறார்: நான் இப்பொழுது உங்களை விழித்தெழச் செய்வதற்கே வந்துள்ளேன். ஆகவே, ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள்! நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றும் அளவுக்கேற்ப, மேன்மையானவர்கள் ஆகுவீர்கள். உங்களைச் சுவர்க்க அதிபதிகள் ஆக்குகின்ற தந்தையை நீங்கள் மறந்து விட்டீர்கள் என நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். உங்களைச் சீர்திருத்துவதற்கே பாபா இப்பொழுது வந்துள்ளார். ஆகவே, நீங்கள் உங்களை மிகவும் நன்றாகச் சீர்திருத்த வேண்டும். நீங்கள் எல்லையற்ற தந்தையைக் கண்டு விட்டீர்கள் என நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும். ஆத்மாக்களாகிய நீங்கள் உங்கள் மத்தியில் பேசுவதைப் போலவே, அவர் குழந்தைகளாகிய உங்களுடன் பேசுகிறார். அவரும் ஓர் ஆத்மாவே. அவர் பரமாத்மர் அவருக்கும் நடிப்பதற்கு ஒரு பாகம் உண்டு. ஆத்மாக்களாகிய நீங்கள் நடிகர்கள். அனைத்திலும் அதிமேன்மையானதில் இருந்து அனைத்திலும் அதிதாழ்ந்த பாகங்கள் வரை உள்ளன. பக்தி மார்க்கத்தில், கடவுளே அனைத்தையும் செய்கிறார் என மனிதர்கள் பாடுகிறார்கள். தந்தை கூறுகிறார்: எனது பாகம் நோயுற்றவர்களைக் குணமாக்குவது அல்ல. நீங்கள் தூய்மை ஆகுவதற்கான வழியைக் காண்பிப்பதே, எனது பாகம். தூய்மை ஆகுவதால், உங்களால் வீட்டுக்கும், பின்னர் உங்கள் இராச்சியத்திற்கும் செல்ல இயலும். “இன்ன இன்னாருக்கு நோய் ஏற்பட்டுள்ளது, ஆகவே அவர் ஆசீர்வாதங்களைப் பெற வேண்டும்” போன்ற வேறெந்த எதிர்பார்ப்பையும் தந்தையிடம் கொண்டிருக்காதீர்கள். இல்லை; என்னைப் பொறுத்தவரை கருணை அல்லது ஆசீர்வாதங்களுக்கான கேள்விக்கே இடமில்லை. அதற்கு, நீங்கள் சாதுக்களிடமும், புனிதர்களிடமும் செல்ல முடியும். நீங்கள் என்னை அழைத்து வருகின்றீர்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! வந்து எங்களைத் தூய்மை ஆக்குங்கள்! எங்களைத் தூய உலகிற்கு அழைத்துச் செல்லுங்கள்! ஆகவே, தந்தை உங்களிடம் வினவுகிறார்: நான் உங்களை நச்சுக்கடலில் இருந்து அகற்றி, அக்கரைக்கு எடுத்துச் செல்கிறேன். ஆகவே, பின்னர், நீங்கள் ஏன் நச்சுக்கடலில் சிக்கிக் கொள்கிறீர்கள்? அதுவே பக்தி மார்க்கத்தில் உங்கள் நிலைமை ஆகியது. இந்த ஞானமும், பக்தியும் உங்களுக்கே உரியதாகும். சந்நியாசிகளும் ஞானம், பக்தி, விருப்பமின்மை பற்றிப் பேசுகிறார்கள். ஆனால் அவர்கள் அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. உங்கள் புத்திகளில் இப்பொழுது இந்த ஞானமும், பக்தியும் உள்ளன. பின்னர், விருப்பமின்மை இருக்கும். ஆகவே, உங்களுக்கு எல்லையற்ற விருப்பமின்மையைக் கற்பிக்கும் ஒருவர் இருக்க வேண்டும். இது ஒரு மயானபூமி எனத் தந்தை உங்களுக்குக் கூறியுள்ளார். பின்னர் அது தேவதைகளின் பூமி ஆகும். அங்கே செயல்கள் அனைத்தும் நடுநிலையானவை. நீங்கள் எந்தப் பாவச் செயலையும் செய்யாமல் இருக்கும் வகையில் அத்தகைய செயலைப் புரிவதற்கு இப்பொழுது தந்தை உங்களுக்குக் கற்பிக்கிறார். எவருக்கும் துன்பம் விளைவிக்காதீர்கள். தூய்மை அற்றவர்களால் தயாரிக்கப்பட்ட உணவை உண்ணாதீர்கள். விகாரத்தில் ஈடுபடாதீர்கள். இந்த விகாரத்தினாலேயே அப்பாவிகள் அடிக்கப்படுகிறார்கள். எவ்வாறு மாயையால் தடைகள் உருவாக்கப்படுகின்றன என்பதை நீங்கள் தொடர்ந்தும் பார்க்கிறீர்கள். இவை அனைத்தும் மறைமுகமானவை. அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் இடையில் ஒரு யுத்தம் நடந்தது எனக் கூறப்பட்டுள்ளது. பின்னர், பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையில் ஒரு யுத்தம் நடந்தது எனவும் கூறப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், ஒரேயொரு யுத்தமே உள்ளது. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: உங்கள் எதிர்கால 21 பிறவிகளுக்காக, நான் உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கிறேன். இது மரண பூமி. சத்திய நாராயணன் ஆகுகின்ற கதையை மனிதர்கள் செவிமடுத்து வருகிறார்கள். ஆனால் அவர்கள் அதிலிருந்து நன்மையைப் பெறவில்லை. நீங்கள் இப்பொழுது உண்மையான கீதையைக் கூறுகிறீர்கள். நீங்கள் உண்மையான இராமாயணத்தையும் கூறுகிறீர்கள். ஒரு இராமர், சீதையைப் பற்றிய கேள்வி இல்லை. இவ்வேளையில், முழு உலகமும் இலங்கையாகும் (ஒரு தீவு) சுற்றிலும் நீர் சூழ்ந்துள்ளது. இது இராவண இராச்சியம் நிலவுகின்ற, எல்லையற்ற இலங்கை. ஒரேயொரு தந்தையே மணவாளனும், ஏனைய அனைவரும் மணவாட்டிகளும் ஆவர். இப்பொழுது தந்தை உங்களை இராவண இராச்சியத்தில் இருந்து விடுதலை செய்கிறார். இது துன்பக் குடில் (சோக்) ஆகும். சத்தியயுகம் துன்பமற்ற குடில் (அசோகா) ஆகும். அங்கு துன்பம் இல்லை. இந்நேரத்தில், எங்கும் துன்பம், துன்பம் மாத்திரம் உள்ளது. துன்பமற்ற ஓர் ஆத்மாவும் இல்லை. “அசோகா ஹோட்டல்” (துன்பமற்ற ஹோட்டல்) என்னும் பெயர்கள் உள்ளன. தந்தை கூறுகிறார்: இந்நேரத்தில், முழு உலகையும் எல்லையற்ற ஹோட்டலாகக் கருதுங்கள். இதுவே துன்ப ஹோட்டல் ஆகும். மனிதர்களின் உணவும், பானமும் மிருகங்களுடையதைப் போன்றுள்ளன. தந்தை உங்களை எங்கே அழைத்துச் செல்கிறார் எனப் பாருங்கள்! துன்பமற்ற உண்மையான குடில் சத்தியயுகத்தில் உள்ளது. எல்லைக்கு உட்பட்டதிற்கும், எல்லையற்றதிற்கும் இடையிலான வேறுபாட்டைத் தந்தை மாத்திரமே உங்களுக்குக் காண்பிக்கிறார். குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்க வேண்டும். பாபா உங்களுக்குக் கற்பிக்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். உங்கள் கடமையும் அவரைப் போன்றதே: அனைவருக்கும் பாதையைக் காண்பிப்பதும், குருடருக்கு ஒரு கைத்தடி ஆகுவதும் ஆகும். உங்களிடம் படங்களும் உள்ளன. பாடசாலையில் ஓர் ஆசிரியர் இன்ன இன்ன நாட்டை ஒரு வரைபடத்தைப் பயன்படுத்திக் குறிப்பிடுகிறார். நீங்களும் குறிப்பிட முடியும்: நீங்கள் ஓர் ஆத்மா, சரீரமல்ல. ஆத்மாக்கள் அனைவரும் சகோதரர்கள். அத்தகையதோர் இலகுவான விடயத்தை நீங்கள் அவர்களுக்குக் கூறுகிறீர்கள். அவர்கள் கூறுகிறார்கள்: நாங்கள் அனைவரும் சகோதரர்களே. தந்தை கூறுகிறார்: ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் சகோதரர்கள். நீங்கள் தந்தையாகிய, கடவுளைப் பற்றிப் பேசுகிறீர்கள். ஆகவே, நீங்கள் ஒருபொழுதும் உங்கள் மத்தியில் சண்டை, சச்சரவில் ஈடுபடக்கூடாது. நீங்கள் சரீரதாரிகள் ஆகும் பொழுது, சகோதர, சகோதரிகள் ஆகுகிறீர்கள். சிவபாபாவின் குழந்தைகளாகிய நீங்கள் அனைவரும் சகோதரர்கள். பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகளாக, நீங்கள் சகோதரர்களும், சகோதரிகளும் ஆவீர்கள். நீங்கள் பாட்டனாரிடம் இருந்து உங்கள் ஆஸ்தியைக் கோர வேண்டும். இதனாலேயே நீங்கள் பாட்டனாரை நினைவு செய்கிறீர்கள். நான் இக்குழந்தையை (பிரம்மா) எனக்குரியவர் ஆக்கினேன். அதாவது, நான் அவரில் பிரவேசித்துள்ளேன். நீங்கள் இப்பொழுது இவ்விடயங்கள் அனைத்தையும் புரிந்து கொள்கிறீர்கள். தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, புதிய தெய்வீக இல்லறப் பாதை இப்பொழுது ஸ்தாபிக்கப்படுகின்றது. பிரம்மாகுமார்களும், குமாரிகளுமாகிய நீங்கள் அனைவரும் சிவபாபாவின் வழிகாட்டல்களைப் பின்பற்றுகிறீர்கள். பிரம்மாவும் அவருடைய வழிகாட்டல்களைப் பின்பற்றுகிறார். தந்தை கூறுகிறார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவு செய்து, ஏனைய அனைத்து உறவுமுறைகளையும் தொடர்ந்தும் குறைத்துக் கொள்ளுங்கள். எட்டு மணித்தியாலம் நினைவுசெய்ய வேண்டும். பின்னர் நீங்கள் ஓய்வெடுக்கவோ அல்லது வியாபாரம் போன்றவற்றைச் செய்யவோ முடியும். எஞ்சியுள்ள 16 மணித்தியாலங்களில் உங்களுக்கு வேண்டியதை எல்லாம் செய்ய முடியும். நீங்கள் தந்தையின் ஒரு குழந்தை என்பதை மறந்துவிட வேண்டாம். நீங்கள் இங்கு வந்து ஒரு விடுதியில் தங்க முடியும் என எண்ணாதீர்கள். இல்லை, நீங்கள் உங்கள் இல்லறத்தில் உங்கள் குழந்தைகளுடன் வசிக்க வேண்டும். நீங்கள் புத்துணர்ச்சி பெறுவதற்கே தந்தையிடம் வருகிறீர்கள். மதுவனத்தின் ஒரு கண தரிசனத்தைப் பெறுவதற்கு, மக்கள் மதுராவிற்கும், பிருந்தாவனத்துக்கும் (கிருஷ்ணருடன் தொடர்புள்ள இடங்கள்) செல்கிறார்கள். அவர்கள் (பக்தி மார்க்கத்தில்) அதன் சிறிய மாதிரி உரு ஒன்றை உருவாக்கி உள்ளார்கள். இந்த எல்லையற்ற விடயங்கள் புரிந்து கொள்ளப்பட வேண்டும். சிவபாபா பிரம்மாவினூடாகப் புதிய உலகைப் படைக்கிறார். பிரம்மாகுமார்களும், குமாரிகளுமாகிய நாங்கள் பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள். இங்கு விகாரம் என்ற கேள்வியே இல்லை. ஒருவர் ஒரு சந்நியாசியின் சிஷ்யராகும் பொழுது, அவர் தனது ஆடைகளை மாற்றி, சந்நியாசி ஆடைகளை அணிகிறார். அவரின் பெயரும் மாற்றப்படுகிறது. இங்கும், நீங்கள் வந்து பாபாவுக்கு உரியவராகிய பொழுது, பாபா உங்கள் பெயர்களை மாற்றினார். பலரும் அந்தப் பத்தியில் இருந்தார்கள். அந்தப் பத்தியைப் பற்றி எவரும் அறியார். சமயநூல்களில் அத்தகைய கதைகள் எழுதப்பட்டுள்ளன. இவை அனைத்தும் மீண்டும் இடம்பெறும். இப்பொழுது உங்கள் புத்தியில் உலகச் சக்கரம் சுழல்கிறது. தந்தையும் சுயதரிசன சக்கரதாரி. அவர் உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியை அறிவார். பாபாவுக்கெனச் சொந்தமாக ஒரு சரீரம் இல்லை. உங்களுக்குப் பௌதீகச் சரீரங்கள் உள்ளன. அவர் பரமாத்மா. ஆத்மாவே சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுபவர். ஓர் ஆத்மா எவ்வாறு அந்த அணிகலன்களுடன் காண்பிக்கப்பட முடியும்? இது புரிந்து கொள்ளப்பட வேண்டியதொரு விடயம். இவ்விடயங்கள் மிகவும் சூட்சுமமானவை. தந்தை கூறுகிறார்: உண்மையில், நான் சுயதரிசனச் சக்கரதாரி. ஆத்மாக்களாகிய நீங்கள் முழு உலகச் சக்கரத்தின் ஞானத்தையும் பெறுகிறீர்கள் என்பதை அறிவீர்கள். பாபாவும், நாங்கள் அனைவரும் பரந்தாமவாசிகள் ஆவோம். தந்தை வந்து தனது அறிமுகத்தைக் கொடுக்கின்றார்: குழந்தைகளே, நானும் சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுபவர். தூய்மை ஆக்குபவராகிய நான் உங்களிடம் வந்துள்ளேன். நீங்கள் வந்து உங்களைத் தூய்மை ஆக்குமாறும், உங்களை விடுதலை செய்யுமாறும் என்னை அழைத்தீர்கள். அவர் தனக்கெனச் சொந்தமாக ஒரு சரீரத்தைக் கொண்டிருப்பதில்லை. அவர் பிறவி, மறுபிறவிக்கு அப்பாற்பட்டவர். அவர் ஒரு பிறவியை எடுத்தாலும், அது ஒரு தெய்வீகப் பிறவி ஆகும். மக்கள் சிவனின் பிறந்த நாளை அல்லது சிவனின் இராத்திரியை கொண்டாடுகிறார்கள். தந்தை கூறுகிறார்: இரவு முடிவுக்கு வரும்பொழுது, நான் வருகிறேன். ஆகவே, நான் அதனைப் பகலாக ஆக்குவதற்கு வருகிறேன். நீங்கள் பகலில் 21 பிறவிகளையும், இரவில் 63 பிறவிகளையும் எடுக்கிறீர்கள்; ஆத்மாக்களான நீங்களே வேறுபட்ட பிறவிகளை எடுக்கிறீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் பகலில் இருந்து இரவுக்குள் வந்தீர்கள். நீங்கள் இப்பொழுது மீண்டும் பகலுக்குள் செல்ல வேண்டும். நீங்கள் சுயதரிசனச் சக்கரதாரிகள் ஆக்கப்பட்டுள்ளீர்கள். எனது பாகம் இப்பொழுது நடிக்கப்படுகிறது. நான் உங்களையும் சுயதரிசனச் சக்கரதாரிகள் ஆக்குகிறேன். பின்னர் நீங்கள் ஏனையோரையும் இவ்வாறு ஆக்க வேண்டும். நீங்கள் எவ்வாறு 84 பிறவிகளை எடுக்கிறீர்கள் என்ற சக்கரம் உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. முன்னர் உங்களுக்கு இந்த ஞானம் இருந்ததா? முற்றிலும் இல்லை! நீங்கள் முற்றிலும் அறியாமையில் இருந்தீர்கள். பாபா பிரதான விடயத்தை விளங்கப்படுத்துகிறார்: அவரே சுயதரிசனச் சக்கரதாரி. அவர் ஞானக்கடல் எனவும் அழைக்கப்படுகிறார். அவரே சத்தியமும், உயிர்வாழ்பவரும் ஆவார். அவர் குழந்தைகளாகிய உங்களுக்கு உங்கள் ஆஸ்தியைக் கொடுக்கிறார். பாபா குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகிறார்: உங்கள் மத்தியில் சண்டை சச்சரவு செய்ய வேண்டாம். உப்புநீர் போன்று ஆகாதீர்கள். சதா முகமலர்ச்சியுடன் இருந்து, அனைவருக்கும் தந்தையின் அறிமுகத்தைக் கொடுங்கள். அனைவரும் தந்தையை மறந்து விட்டார்கள். தந்தை இப்பொழுது கூறுகிறார்: சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள்! அசரீரியான கடவுள் அசரீரியான ஆத்மாக்களுடன் பேசுகிறார். நீங்கள் ஆதியில் அசரீரியானவர்கள். பின்னர் நீங்கள் பௌதீகமானவர்கள் ஆகுகிறீர்கள். ஒரு பௌதீகச் சரீரம் இன்றி, ஓர் ஆத்மாவால் எதையும் செய்ய முடியாது. ஓர் ஆத்மா தனது சரீரத்தை விட்டு நீங்கும் பொழுது, அங்கு எந்த அசைவும் இருக்க முடியாது. அந்த ஆத்மா உடனடியாகச் சென்று இன்னுமொரு சரீரத்தில் தனது பாகத்தை நடிக்கிறார். இவ்விடயங்கள் அனைத்தையும் மிகவும் நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். தொடர்ந்தும் அவற்றை உங்களுக்குள் கடையுங்கள். இந்த ஆத்மாவாகிய நான், பாபாவிடம் இருந்து எனது ஆஸ்தியைப் பெறுகிறேன். உங்கள் சத்தியயுகத்து ஆஸ்தி உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. பாரத மக்களுக்கு அவர்களுடைய ஆஸ்தியைக் கொடுத்தவர் நிச்சயமாக தந்தையாகவே இருக்க வேண்டும். அவர் எப்பொழுது இந்த ஆஸ்தியைக் கொடுத்தார்? பின்னர் என்ன நடைபெற்றது? மனிதர்கள் இதை முற்றிலும் அறியார்கள். தந்தை இப்பொழுது உங்களுக்கு அனைத்தையும் கூறுகிறார். குழந்தைகளாகிய நீங்கள் சுயதரிசனச் சக்கரதாரிகள் ஆக்கப்பட்டுள்ளீர்கள். நீங்கள் 84 பிறவிகளை எடுக்கிறீர்கள். நான் இப்பொழுது மீண்டும் ஒருமுறை வந்துள்ளேன். அத்தகையதோர் இலகு வழியில் நான் உங்களுக்கு விடயங்களை விளங்கப்படுத்துகிறேன். தந்தையை நினைவுசெய்து இனிமையானவர் ஆகுங்கள். உங்கள் இலக்கும் குறிக்கோளும் உங்கள் முன்னிலையில் உள்ளன. தந்தையே சட்டத்தரணிகளுக்கு எல்லாம் சட்டத்தரணி. அவர் உங்களை அனைத்து வாதங்களில் இருந்தும் விடுவிக்கிறார். நீங்கள் பாபாவின் குழந்தைகள் ஆகிவிட்டீர்கள் என்னும் உள்ளார்ந்த சந்தோஷம் குழந்தைகளாகிய உங்களுக்குப் பெருமளவில் இருக்க வேண்டும். எங்கள் ஆஸ்தியை எங்களுக்குக் கொடுப்பதற்குத் தந்தை எங்களைத் தத்தெடுத்துள்ளார். நீங்கள் இங்கு உங்கள் ஆஸ்தியைக் கோருவதற்கு வருகிறீர்கள். தந்தை கூறுகிறார்: உங்கள் குழந்தைகள் போன்றோரைப் பராமரிக்கும் பொழுதும், உங்கள் புத்தி எல்லையற்ற தந்தையுடனும், உங்கள் இராச்சியத்துடனும் இருக்க வேண்டும். கல்வி மிகவும் இலகுவானது! உங்களை உலக அதிபதிகள் ஆக்கும் தந்தையை நீங்கள் எவ்வாறு மறக்க முடியும்? எல்லாவற்றுக்கும் முதலில், நிச்சயமாக உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள். சங்கம யுகத்திலேயே தந்தை உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கிறார். ஏனெனில் சங்கமயுகத்திலேயே நீங்கள் தூய்மை அற்றவரிலிருந்து தூய்மையானவர் ஆக வேண்டும். அச்சா.இனிமையிலும் இனிமையான, ஆன்மீக, பிரம்மாவின் வாய்வழித் தோன்றலாகிய, பிராமண குல அலங்காரங்களே தேவ குலத்தை விடவும் மிக மேன்மையானவர்கள். பாரதத்தின் மிகவும் மேன்மையான சேவையை நீங்கள் செய்கிறீர்கள். நீங்கள் இப்பொழுது பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகுகிறீர்கள். பாபா இப்பொழுது சிப்பிகள் போன்ற, பூஜிப்பவர்களாகிய உங்களைப் பூஜிக்கத் தகுதிவாய்ந்த வைரங்கள் ஆக்குகிறார். அத்தகைய ஆன்மீகக் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் காலை வந்தனங்களும், அன்பும், நினைவுகளும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. ஸ்ரீமத்திற்கேற்ப ஒவ்வொரு செயலும் மேன்மையானதாக இருக்க வேண்டும். எவருக்கும் துன்பம் விளைவிக்காதீர்கள். தெய்வீகக் குணங்களைக் கிரகியுங்கள். தந்தையின் வழிகாட்டல்களை மாத்திரம் பின்பற்றுங்கள்.2. சதா முகமலர்ச்சியுடன் இருப்பதற்கு, சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுங்கள். என்றுமே உப்புநீர் போல் ஆகாதீர்கள். அனைவருக்கும் தந்தையின் அறிமுகத்தைக் கொடுங்கள். மிக, மிக இனிமையானவர்கள் ஆகுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் சதா தன்னலமற்ற யோகியாகி, மரியாதையை வேண்டுவதற்குப் பதிலாக, எல்லோருக்கும் மரியாதையை வழங்குவீர்களாக.ஒருவர் உங்களுக்கு மரியாதை கொடுக்கிறாரோ அல்லது உங்களை ஏற்றுக் கொள்கிறாரோ இல்லையோ, நீங்கள் அவரை உங்களின் இனிய சகோதரனாக அல்லது இனிய சகோதரியாகக் கருத வேண்டும். நீங்கள் உங்களின் சொந்த சுய மரியாதையைப் பேண வேண்டும். அத்துடன் அன்பான திருஷ்டி, அன்பான மனோபாவத்துடன் தொடர்ந்து ஆத்ம உணர்வு மரியாதையை வழங்குங்கள். அவர் மரியாதை கொடுத்தால் நான் மரியாதை கொடுப்பேன் எனச் சிந்திப்பது, இராஜரீக ரூபத்தில் யாசிப்பதாகும். இதில் தன்னலமற்ற யோகி ஆகுங்கள். ஆன்மீக அன்பை அவர் மீது பொழிவதன் மூலம் ஓர் எதிரியை நண்பராக மாற்றுங்கள். யாராவது உங்களின் மீது கல்லை எறிந்தாலும், நீங்கள் அதற்குப் பிரதிபலனாக அந்த ஓர் இரத்தினத்தை வழங்குங்கள். ஏனென்றால், நீங்கள் இரத்தின வியாபாரியின் குழந்தைகள் ஆவீர்கள்.
சுலோகம்:
உலகைப் புதுப்பிப்பதற்கு, இரண்டு வார்த்தைகளை நினையுங்கள்: கருவி மற்றும் பணிவு.அவ்யக்த சமிக்கை: ஓர் இலகு யோகியாக இருப்பதற்கு, இறை அன்பை அனுபவிப்பவராக இருங்கள்.
சேவையில் வெற்றி பெறுவதற்கான பிரதானமான அடிப்படை, துறவறமும் தபஸ்யாவும் ஆகும். இத்தகைய துறவிகளும் தபஸ்விகளும், அதாவது, சதா தந்தையின் அன்பிலே தங்களை மறந்திருப்பவர்களும் அன்பு, ஞானம், ஆனந்தம், சந்தோஷம், அமைதிக் கடல்களில் அமிழ்ந்து இருப்பவர்களும் தபஸ்விகள் என்று அழைக்கப்படுகிறார்கள். இத்தகைய துறவறத்தையும் தபஸ்யாவையும் கொண்டிருப்பவர்களே, உண்மையான சேவையாளர்கள் ஆவார்கள்.