21.12.25 Avyakt Bapdada Tamil Lanka Murli 05.03.2008 Om Shanti Madhuban
சங்கமயுகத்தில் உள்ள வங்கியில் மௌன சக்தியையும் மேன்மையான செயல்களையம் சேமியுங்கள். ‘நான்’ என்ற உணர்வை மாற்றுவதற்கு சிவமந்திரத்தைப் பயன்படுத்துங்கள்.
இன்று, பாப்தாதா எங்கும் உள்ள குழந்தைகள் எல்லோருடைய அன்பையும் பார்க்கிறார். நீங்கள் எல்லோரும் அன்பெனும் விமானத்தில் ஏறி இங்கே வந்துள்ளீர்கள். இந்த அன்பெனும் விமானம் மிக இலகுவாக நீங்கள் நேசிக்கும் அந்த ஒரேயொருவரை வந்தடையச் செய்கிறது. குறிப்பாக இன்று, அன்பிலே மூழ்கியிருக்கும் ஆத்மாக்கள் அனைவரும் இறையன்பு என்ற ஊஞ்சல்களில் ஆடிக் கொண்டிருப்பதை பாப்தாதா பார்க்கிறார். பாப்தாதாவும் எங்கும் உள்ள குழந்தைகளின் அன்பிலே திளைத்திருக்கிறார். இந்த இறையன்பானது இலகுவாக உங்களைத் தந்தையைப் போன்று சரீரமற்றவர்கள் ஆக்குகிறது. அது உங்களை புற உணர்வுகளுக்கு அப்பால் எடுத்துச் செல்வதுடன் அவ்யக்த ஸ்திதியிலும் உங்களின் அவ்யக்த ரூபத்திலும் ஸ்திரம் அடையச் செய்கிறது. ஒவ்வொரு குழந்தையும் பாப்தாதாவிற்குச் சமமான ஸ்திதியில் இருப்பதைப் பார்த்து பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார்.
இன்று, குழந்தைகள் எல்லோரும் இங்கே சிவராத்திரியை, சிவஜெயந்தியை, தந்தையின் பிறந்தநாளையும் அத்துடன் தமது சொந்தப் பிறந்த நாளையும் கொண்டாட வந்துள்ளீர்கள். பாபா மற்றும் தாதா இருவருமே தத்தமது சொந்த இடங்களில் இருந்து உங்கள் எல்லோருடனும் பிறந்த நாளைக் கொண்டாட வந்துள்ளார்கள். தந்தையினதும் உங்களினதும் இந்தப் பிறந்தநாள் முழுக் கல்பத்திலும் தனித்துவமானதும் அதிகபட்சம் அழகானதும் ஆகும்.
பக்தர்கள் இந்தப் பண்டிகையை மிகுந்த அன்புடனும் பக்திமயமான உணர்வுகளுடன் கொண்டாடுகிறார்கள். இந்தத் தெய்வீகப் பிறவியில் நீங்கள் எத்தகைய மேன்மையான மற்றும் அலௌகீகச் செயல்களைச் செய்தீர்களோ, இன்னமும் செய்து கொண்டிருக்கிறீர்களோ, அவை எல்லைக்கு உட்பட்ட நேரத்திற்கு, ஒரு தற்காலிகமான காலத்திற்கு ஒரு ஞாபகார்த்தத்தின் வடிவில் கொண்டாடப்படுகிறது. எவ்வாறாயினும், இது பக்தர்களின் அற்புதமும் ஆகும். ஞாபகார்த்தங்களை உருவாக்கியவர்களினதும் அந்த ஞாபகார்த்தங்களைக் கொண்டாடுபவர்களின் அற்புதம் எத்தகையது என்று பாருங்கள். குறைந்தபட்சம், அவர்கள் உங்களைப் பிரதி செய்வதில் கெட்டிக்காரர்கள். ஏனென்றால், அவர்கள் உங்களின் பக்தர்கள், அல்லவா? எனவே, ஞாபகத்தை உருவாக்கியவர்கள், உங்களின் மகத்துவத்தின் பலனை ஓர் ஆசீர்வாதமாகப் பெற்றுள்ளார்கள். நீங்கள் ஒரு தடவை மட்டும் ஒரு பிறவியில் சம்பூரணமான தூய்மைக்காக சத்தியம் செய்துள்ளீர்கள். அவர்கள் உங்களைப் பிரதி செய்துள்ளார்கள். அவர்கள் ஒரு நாளுக்கு தூய்மைக்கான சத்தியத்தைச் செய்கிறார்கள். நீங்கள் உங்களின் பிறப்பு முழுவதற்கும் தூய உணவை உண்பதற்கான சத்தியத்தைச் செய்துள்ளீர்கள். ஆனால் அவர்களோ ஒரு நாள் மட்டுமே விரதம் இருக்கிறார்கள். எனவே, இன்று அமிர்த வேளையில், உங்கள் அனைவருடைய பக்தர்களும் குறைந்தவர்களாக இல்லை என்பதை பாப்தாதா பார்த்தார். அவர்களின் சிறப்பியல்பும் மிகவும் நன்றாக உள்ளது. எனவே, இந்தப் பிறவி முழுவதற்கும் உங்களின் உணவும் பானத்திற்காகவும் உங்களின் மனத்தில் உள்ள எண்ணங்கள், உங்களின் வார்த்தைகள் மற்றும் செயல்களிலும், தொடர்புகள், உறவுமுறைகளைக் கொண்டிருக்கும் போது உங்களின் செயல்களிலும் தூய்மைக்காகவும் நீங்கள் அனைவரும் உறுதியான சத்தியத்தைச் செய்துள்ளீர்களா? நீங்கள் இந்த சத்தியத்தைச் செய்துள்ளீர்களா அல்லது சிறிதளவு மட்டுமே செய்துள்ளீர்களா? தூய்மையே பிராமண வாழ்க்கையின் அடிப்படை ஆகும். இதுவே பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர் ஆகுவதற்கான அடிப்படை ஆகும். இது மேன்மையான பேற்றிற்கான அடிப்படை. எனவே, இங்கே வந்திருக்கும் பாக்கியசாலி ஆத்மாக்களான நீங்கள் எல்லோரும் சோதித்துப் பாருங்கள்: நான் நான்கு வழிமுறைகளிலும் தூய்மை ஆகுவதற்கான உறுதியான சத்தியத்தை இந்தப் பிறவி எனும் பண்டிகைக்காகச் செய்துள்ளேனா? தூய்மை, வெறுமனே பிரம்மச்சரியம் மட்டுமல்ல, ஆனால் எனது எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள், உறவுமுறைகள் மற்றும் தொடர்புகளிலும் தூய்மை இருக்கிறதா? நீங்கள் இந்த உறுதியான சத்தியத்தைச் செய்துள்ளீர்களா? செய்துள்ளீர்களா? இந்த உறுதியான சத்தியத்தைச் செய்தவர்களும், சிறிதளவேனும் பலவீனமாக இல்லாதவர்களும் உங்களின் கைகளை உயர்த்துங்கள்! உறுதியா? அது உறுதியா? எவ்வளவிற்கு அது உறுதியாக உள்ளது? யாராவது உங்களை அசைத்தால், நீங்கள் அசைவீர்களா? நீங்கள் அசைவீர்களா? நீங்கள் அசைய மாட்டீர்களா? சிலவேளைகளில், மாயை வருகிறாள், இல்லையா? அல்லது, அவள் வரவில்லையா? நீங்கள் மாயைக்கு விடை கொடுத்து விட்டீர்களா? நீங்கள் மாயை வருவதற்குச் சிலவேளைகளில் அனுமதி கொடுப்பதனால் அவள் வருகிறாளா? சோதித்துப் பாருங்கள்: நான் உறுதியான சத்தியத்தைச் செய்துள்ளேனா? நான் எல்லா வேளைக்குமாக சத்தியத்தைச் செய்துள்ளேனா? அல்லது, இது சிலவேளைக்கு மட்டுமே உள்ளதா? சிலவேளைகளில் சிறிதளவும் சிலவேளைகளில் அதிகளவும் சிலவேளைகளில் உறுதியான சத்தியமும் சிலவேளைகளில் சிறிது பலவீனமாகவும் உள்ளதா? இது அப்படி இல்லைத்தானே? பாப்தாதாவிற்கான அன்பைப் பொறுத்தவரை, உங்களுக்கு பாப்தாதாவிடம் 100 சதவீதத்தை விட அதிகமான அன்பு இருப்பதாக நீங்கள் எல்லோரும் நம்புகிறீர்கள். பாப்தாதாவிடம் உங்களுக்கு எவ்வளவு அன்பு உள்ளது என பாப்தாதா கேட்டால், நீங்கள் எல்லோரும் ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் உங்களின் கைகளை உயர்த்துகிறீர்கள். ஒரு சிலர் மட்டுமே தமது அன்பைப் பொறுத்த வரையில் சதவீதத்தைக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலானோர் அன்பைக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் அன்பெனும் பாடத்தில் சித்தி அடைந்துள்ளீர்கள். அத்துடன் அன்பில் பெரும்பாலானோர் சித்தி அடைந்துள்ளீர்கள் என்பதை பாப்தாதாவும் ஏற்றுக் கொள்கிறார். எவ்வாறாயினும், தூய்மையின் சத்தியத்தைப் பொறுத்தவரை, நான்கிலும், அதாவது, உங்களின் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள், உறவுமுறைகள் மற்றும் தொடர்புகளில் சம்பூரணமான தூய்மைக்கான சத்தியத்தை நிறைவேற்றுவதைப் பொறுத்தவரை, சதவீதமே காணப்படுகிறது. இப்போது பாப்தாதா எதை விரும்புகிறார்? நீங்கள் சமமானவர் ஆகுவதற்கான சத்தியத்தை நீங்கள் நிறைவேற்ற வேண்டும் என்றே பாப்தாதா விரும்புகிறார்: தந்தையின் ரூபம், ஒவ்வொரு குழந்தையின் முகத்திலும் புலப்பட வேண்டும், உங்களின் ஒவ்வொரு வார்த்தையும் தந்தைக்குச் சமமாக இருக்க வேண்டும். பாப்தாதாவின் வார்த்தைகள் ஓர் ஆசீர்வாதம் ஆகுகின்றன. எனவே, நீங்கள் எல்லோரும் சோதித்துப் பார்க்க வேண்டும்: தந்தையின் ரூபம் எனது முகத்தில் புலப்படுகிறதா? தந்தையின் ரூபம் என்ன? சம்பூரணம். ஒவ்வொரு விடயத்திலும் நிரம்பி இருத்தல். இந்த முறையில், ஒவ்வொரு குழந்தையின் கண்களும் முகமும் தந்தையைப் போல் இருக்கின்றனவா? எனது முகம் சதா புன்னகை புரிகிறதா? அல்லது, அது சிலவேளைகளில் எண்ணங்களின் அடையாளங்களை, சிலவேளைகளில் வீணான எண்ணங்களின் நிழலை, சிலவேளைகளில் துக்கத்தை, சிலவேளைகளில் அதிகளவு சிரமத்தின் அடையாளங்களைக் காட்டுகின்றதா? இது அப்படிப்பட்ட முகம் இல்லையல்லவா? இது சதா ரோஜாவைப் போல் உள்ளது. அது சிலவேளைகளில், ரோஜாவைப் போல் மலர்ந்தும் சிலவேளைகளில் வேறு ஒன்றாகவும் இருக்கக்கூடாது. நீங்கள் பிறவி எடுத்தவுடனேயே, உங்களின் இந்த மேன்மையான வாழ்க்கையில் மாயை உங்களை எதிர்க்க வருவாள் என்று பாப்தாதா உங்களுக்குக் கூறியுள்ளார். எவ்வாறாயினும், வருவது மாயையின் கடமை, சதா தூய்மையாக இருக்க வேண்டும் என்ற சத்தியத்தைச் செய்துள்ள ஆத்மாக்களான உங்களின் கடமை, தொலைவில் இருந்தே மாயையைத் துரத்துவதே ஆகும்.
சில குழந்தைகள் தொலைவில் இருந்தே மாயையைத் துரத்துவதில்லை என்பதை பாப்தாதா பார்த்துள்ளார். மாயை வருகிறாள். அவள் வருவதற்கு நீங்கள் அனுமதிக்கிறீர்கள். அதாவது, நீங்கள் மாயையின் ஆதிக்கத்திற்கு உள்ளாகுகிறீர்கள். நீங்கள் அவளைத் தொலைவில் இருந்தே துரத்தாவிட்டால், மாயையும் அந்தப் பழக்கத்தை விருத்தி செய்து கொள்கிறாள். ஏனென்றால், அவளை அங்கே தங்கி இருப்பதற்கு நீங்கள் அனுமதிப்பீர்கள் என்பதை அவள் அறிவாள். மாயை தங்கியிருப்பதற்கு அனுமதிப்பதன் அடையாளம், மாயை வரும்போது, அது மாயை என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் அதன்பின்னர் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ‘நாங்கள் இன்னமும் சம்பூரணம் அடையவில்லை. வேறு யாரும் இன்னமும் சம்பூரணம் அடையவில்லை. நாங்கள் இன்னமும் அவ்வாறு ஆகிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் அப்படி ஆகுவோம்’. நீங்கள் ‘கே, கே’ (எதிர்காலத்தில் அது நடைபெறும்) என்று கூற ஆரம்பிக்கிறீர்கள். அதனால் மாயையும் அங்கே இருக்கின்ற பழக்கத்தை விருத்தி செய்து கொள்கிறாள். எனவே, இன்று, நீங்கள் இந்தப் பிறந்த நாளைக் கொண்டாடுகிறீர்கள். தந்தை உங்களுக்கு ஆசீர்வாதங்களையும் வாழ்த்துக்களையும் வழங்குகிறார். ஆனால், தந்தை ஒவ்வொரு குழந்தையையும், கடைசி இலக்கத்தில் உள்ள குழந்தையையும் எந்த ரூபத்தில் காண விரும்புகிறார்? கடைசி இலக்கக் குழந்தையும் தந்தையால் நேசிக்கப்படுகிறார். எனவே, தந்தை கடைசி இலக்கக் குழந்தையையும் சதா ஒரு ரோஜாவாக, மலர்ந்துள்ள ரோஜாவாகவே காண விரும்புகிறார். வாடிய ரோஜாவாக அல்ல. வாடிப் போவதற்கான காரணம், சிறிதளவு கவனயீனம் ஆகும்: ‘அது நடக்கும். நான் அதைப் பார்ப்பேன். நான் அதைச் செய்வேன். நான் அங்கே செல்வேன்.’ எனவே, ‘கே, கே’ என்ற இந்த மொழியானது, உங்களைக் கீழே விழ வைக்கிறது. எனவே சோதித்துப் பாருங்கள்: எவ்வளவு காலம் கடந்து சென்றுவிட்டது? இப்போது, காலம் நெருங்கி வருவதை இட்டும், ஏதாவது சடுதியாக இடம்பெறும் என்பதைப் பற்றியும் பாப்தாதா ஏற்கனவே சமிக்கை கொடுத்துள்ளார். இப்போது அவர் அந்த சமிக்கையைக் கொடுக்கிறார் என்பதல்ல. அவர் ஏற்கனவே அதை வழங்கி விட்டார். இத்தகைய வேளையில் என்றும் தயாராகவும் விழிப்பாகவும் இருப்பது அவசியமாகும். எச்சரிக்கையாக இருப்பதற்குச் சோதித்துப் பாருங்கள்: எனது மனமும் புத்தியும் எப்போதும் சுத்தமாகவும் தெளிவாகவும் இருக்கின்றனவா? அவை சுத்தமாக இருக்க வேண்டும். அவை தெளிவாக இருக்க வேண்டும். இதற்கு, அந்த வேளையில் வெற்றியாளர் ஆகுவதற்கு, உங்களின் மனதிலும் புத்தியிலும் பிடித்துக் கொள்ளும் சக்தியையும் தொடுகை சக்தியையும் கொண்டிருப்பது அத்தியாவசியமாகும். நீங்கள் தொலைவில் அமர்ந்திருந்தாலும், உங்களின் மனமும் புத்தியும் சுத்தமாகவும் தெளிவாகவும் இருந்தால், உங்களால் நீங்கள் பெற வேண்டிய தந்தையின் சமிக்கைகளையும் வழிகாட்டல்களையம் ஸ்ரீமத்தையும் பெறக்கூடிய சூழ்நிலைகளும் வரப் போகின்றன. உங்களுக்குத் தொடுகை கிடைக்கும்: ‘நான் இதையே செய்ய வேண்டும், நான் அதைச் செய்யக்கூடாது.’ ஆகவே, பாப்தாதா உங்களுக்கு முன்னரே கூறியுள்ளார்: நீங்கள் விரும்பிய அளவிற்கு மௌன சக்தியைச் சேமியுங்கள். நீங்கள் விரும்பிய போது, விரும்பியபடி உங்களின் மனதையும் புத்தியையும் உங்களால் கட்டுப்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும். உங்களின் கனவுகளையும் வீணான எண்ணங்கள் தொடுவதற்கு அனுமதிக்காதீர்கள். உங்களின் மனதின் மீது இத்தகைய கட்டுப்பாடு இருக்க வேண்டும். இதனாலேயே ஒரு கூற்று உள்ளது: ‘நீங்கள் உங்களின் மனதை வெல்லும்போது, உலகையே வென்றுவிடுவீர்கள்.’ உங்களின் கைகள் என்ற பௌதீக அங்கங்களின் உதாரணத்தை எடுத்துக் கொள்ளுங்கள் - உங்களால் நீங்கள் விரும்பியபடி, விரும்பியபோது உங்களின் கட்டளைகளுக்கு ஏற்ப உங்களால் செயல்பட வைக்க முடிகிறது. அதேபோல், உங்களின் மனதினதும் புத்தியினதும் கட்டுப்படுத்தும் சக்தியானது ஆத்மாவில் ஒவ்வொரு கணமும் வெளிப்பட்டிருக்க வேண்டும். யோகம் செய்யும் வேளையில் உங்களுக்கு அந்த அனுபவம் இருப்பதாகவும், ஆனால் நீங்கள் செயல்களைச் செய்யும்போது, மற்றவர்களுடன் பழகும்போது அல்லது ஏதாவது உறவுமுறையைக் கொண்டிருக்கும்போது, அதன் அனுபவம் குறைவாக இருப்பதாகவும் இருக்கக்கூடாது. பரீட்சைத்தாள்கள் சடுதியாகவே வரும். ஏனென்றால், இறுதிப் பரீட்சைக்கு முன்னர், நீங்கள் அவ்வப்போது பரீட்சைகளை எதிர்கொள்ள வேண்டும்.
எனவே, இந்தப் பிறந்த நாளில் நீங்கள் என்ன சிறப்பியல்பைக் கொண்டிருப்பீர்கள்? உங்களால் முடிந்த அளவிற்கு மௌன சக்தியைச் சேமியுங்கள். ஒரு விநாடியில், இனிமையான மௌனத்தின் அனுபவத்தில் மூழ்கி இருங்கள். ஏனென்றால், விஞ்ஞானம் மற்றும் மௌனம் என்று வரும்போது, விஞ்ஞானம் அதன் உச்சக்கட்டத்திற்குச் சென்று கொண்டிருக்கிறது. விஞ்ஞானத்தை மௌன சக்தி வெற்றி கொள்ளும்போது, அந்த வெற்றியானது மாற்றத்தை ஏற்படுத்தும். மௌன சக்தியால் உங்களால் தொலைவில் அமர்ந்திருக்கும் எந்தவோர் ஆத்மாவிற்கும் ஒத்துழைப்பை வழங்க முடியும். அலைபாயும் மனதை உங்களால் அமைதிப்படுத்த முடியும். நீங்கள் பிரம்மா பாபாவைக் கண்டீர்கள்: எந்தவொரு விசேடமான அன்புக்குரிய குழந்தையும் ஏதாவதொரு வகையான குழப்பத்திற்குள் இருந்தால் அல்லது ஏதாவது பௌதீகமான கர்மக்கணக்கைத் தீர்த்துக் கொண்டிருந்தால், பாபா அதிகாலையில் எழுந்திருந்து, மௌன சக்தியால் சகாஷ் வழங்குவார். அந்த ஆத்மாவும் அதை அனுபவம் செய்வார். எனவே, இறுதியில், நீங்கள் இந்த மௌனத்துடன் ஒத்துழைப்பை வழங்க வேண்டும். சூழ்நிலைகளுக்கேற்ப, நீங்கள் இதில் பெரிய அளவில் கவனம் செலுத்த வேண்டும். இந்த வேளையில் மட்டுமே நீங்கள் மௌன சக்தியையும் மேன்மையான செயல்களின் சக்தியையும் சேமிப்பதற்கான வங்கி திறந்துள்ளது. சேமிப்பதற்கான இந்த வங்கி வேறெந்தப் பிறவியிலும் இருக்காது. இவற்றை இப்போது நீங்கள் சேமிக்காவிட்டால், அந்த வங்கி இல்லாதபோது, நீங்கள் இவற்றை எங்கே சேமிப்பீர்கள்? ஆகவே, இந்த வேளையில் நீங்கள் விரும்பிய அளவு இலாபத்தை உங்களால் சேமிக்க முடியும். பொதுவாக, மக்களும் கூறுவார்கள்: நீங்கள் எதைச் செய்ய விரும்பினாலும் அதை இப்போதே செய்யுங்கள், நீங்கள் எதைச் சிந்திக்க விரும்பினாலும், அதை இப்போதே சிந்தியுங்கள். இப்போது நீங்கள் எதைப் பற்றிச் சிந்திக்கிறீர்களோ, அது எண்ணங்களின் வடிவில் இருக்கும். ஆனால் சிறிது காலத்தின் பின்னர், உங்களின் காலத்தின் எல்லை நெருங்கி வரும்போது, அந்த எண்ணம் வருந்துகையாக மாறிவிடும்: ‘நான் இதை மட்டும் செய்திருந்தால், நான் இதைச் செய்திருக்க வேண்டும்…..’ அந்த எண்ணம் அப்போது எண்ணத்தின் வடிவில் இருக்காது. அது வருந்துகையாக மாறிவிடும். இதனாலேயே, பாப்தாதா முன்கூட்டியே உங்களுக்கு ஒரு சமிக்கை வழங்குகிறார். என்னதான் நடந்தாலும், ஒரு விநாடியில் மௌன சக்தியில் மூழ்கியிருங்கள். ‘நான் அந்த முயற்சியைச் செய்கிறேன்’ எனச் சொல்லாதீர்கள். இந்த வேளையில் இவற்றைச் சேமிப்பதற்கு உங்களால் முயற்சி செய்ய முடியும்.
எனவே, பாப்தாதா குழந்தைகளான உங்களிடம் அன்பு வைத்துள்ளார். பாப்தாதா ஒவ்வொரு குழந்தையையும் தன்னுடன் திரும்பி அழைத்துச் செல்ல விரும்புகிறார். பாபா உங்களுடன் இருப்பார், பாபா உங்களுடன் திரும்பிச் செல்வார் என்பதே சத்தியம். அந்தச் சத்தியத்தை நிறைவேற்றுவதற்கு, சமமாக ஆகுபவர்களே அவருடன் திரும்பிச் செல்வார்கள். இரட்டை வெளிநாட்டவர்கள், கையோடு கைகோர்த்து நடப்பதை விரும்புகிறார்கள். எனவே, உங்களின் கை, ஸ்ரீமத்தின் கையில் இருக்க வேண்டும். தந்தையின் ஸ்ரீமத்தும் உங்களின் சொந்தக் கட்டளைகளும் (மன்மத்) கையோடு கைகோர்த்தல் எனப்படுகிறது. எனவே, இது சரிதானே? இன்று, நீங்கள் இந்தப் பிறந்த நாளைக் கொண்டாடவே வந்துள்ளீர்கள், அல்லவா? பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். தனது குழந்தைகள் எப்போதும் உற்சாகமாக இருப்பதுடன் சதா பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள் என்ற மகத்தான ஆன்மீக போதையும் அவருக்கு உள்ளது. நீங்கள் ஒவ்வொரு நாளும் பண்டிகையைக் கொண்டாடுகிறீர்களா அல்லது விசேடமான தினங்களில் மட்டும்தான் கொண்டாடுகிறீர்களா? சங்கமயுகமே ஒரு திருவிழாதான். இந்த யுகம் பண்டிகைக்கான யுகம் ஆகும். வேறெந்த யுகமும் சங்கம யுகத்தைப் போல் இருக்காது. எனவே, உங்கள் எல்லோருக்கும் நிச்சயமாகத் தந்தைக்குச் சமமாக ஆகவேண்டும் என்ற ஊக்கமும் உற்சாகமும் உள்ளதல்லவா? உங்களுக்கு அது இருக்கிறதா? நீங்கள் அப்படி ஆகவேண்டும். அல்லது, நீங்கள் பார்ப்பீர்கள், எதிர்காலத்தில் அப்படி ஆகுவீர்கள், அதை எதிர்காலத்தில் செய்வீர்கள் என்பதா? நீங்கள் ‘கே, கே’ (அது எதிர்காலத்தில் நடக்கும்) எனச் சொல்ல மாட்டீர்கள்தானே? நீங்கள் இப்படி ஆக வேண்டும் என்று நினைப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! நீங்கள் அப்படி ஆகவேண்டும். நீங்கள் எதையாவது துறக்க வேண்டி இருக்கும். நீங்கள் தபஸ்யா செய்ய வேண்டி இருக்கும். நீங்கள் துறக்க வேண்டிய எதையும் துறப்பதற்குத் தயாரா? மிகப்பெரிய துறவறம் என்ன? துறப்பதில், ஒரேயொரு வார்த்தையால் மிகப் பெரிய தடை ஏற்படுகிறது. உங்களின் தியாகம், தவம், விருப்பமின்மை, எல்லையற்ற விருப்பமின்மையில் ஒரேயொரு வார்த்தையே தடைகளை உருவாக்குகிறது. உங்களுக்கு அது ஏற்கனவே தெரியும். அந்த ஒரு வார்த்தை என்ன? நான். சரீர உணர்வில் உள்ள நான். இதனாலேயே, பாப்தாதா கூறினார்: ‘எனது’ என்று நீங்கள் கூறும் போதெல்லாம், முதலில் நீங்கள் எதை நினைவு செய்கிறீர்கள்? எனது பாபா (மேரா பாபா). அது ‘எனது பாபா’ என்பதல்லவா? நீங்கள் வேறு எதற்காவது எனது என்று கூறக்கூடும். ஆனால் ‘எனது’ என்று சொல்வதில், நீங்கள் முதலில் ‘எனது பாபா’ என்ற பழக்கத்தை விருத்தி செய்துள்ளீர்கள். அதேபோல், ‘நான்’ என்று நீங்கள் கூறும் போதெல்லாம், ‘எனது பாபா’ என்று கூறுவதை ஒருபோதும் மறக்காததைப் போல், எனது என்று நீங்கள் கூறும் போதெல்லாம், பாபா என்ற வார்த்தையும் பயன்படுத்தப்படுகிறது. ‘நான்’ என்ற வார்த்தையை நீங்கள் கூறும்போது, நீங்கள் எப்போதும் ஆத்மாவை நினைவு செய்ய வேண்டும்: நான் யார்? ஓர் ஆத்மா. ஆத்மாவான நான் இதைச் செய்கிறேன். நானும் எனதும்: எல்லைக்கு உட்பட்டது, எல்லை அற்றதாக மாறியுள்ளது. இது சாத்தியமா? சாத்தியமா? குறைந்தபட்சம் ஆமோதித்துத் தலை அசையுங்கள். இந்தப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். ‘நான்’ என்று நீங்கள் சொன்ன உடனேயே, ஆத்மாவை நினையுங்கள். பின்னர், ‘நான்’ என்ற உணர்வு ஏற்படும்போது, நீங்கள் உடனடியாக ஒரேயொரு வார்த்தையை நினைவு செய்வீர்கள்: கரவன்ஹார்(உங்களைச் செய்யத் தூண்டுபவர்) என்பவர் யார்? கரவன்ஹாரான தந்தையே என்னை அதை செய்யத் தூண்டுகிறார். எதையாவது செய்யும் வேளையில், எப்போதும் கரவன்ஹார் என்ற வார்த்தையை நினைவு செய்யுங்கள். அப்போது எனது என்ற உணர்வு இருக்காது: எனது அபிப்பிராயங்கள், எனது கடமைகள். சிலவேளைகளில், உங்களின் கடமையின் போதை அதிகளவில் காணப்படுகிறது. எனது கடமை - ஆனால் உங்களுக்கு அந்தக் கடமையை வழங்கிய அருள்பவர் யார்? இந்தக் கடமைகள் இறைவனின் பரிசு ஆகும். இறைவனின் பரிசைப் பற்றி ‘நான்’ என்று நினைப்பது சரியாகுமா?
பாப்தாதா ஒவ்வோர் இடத்தில் இருந்தும் பெறுபேற்றை விரும்புகிறார். இயல்பான சுபாவத்தை விரைவாக மாற்ற முடியாது என்பதனால், இந்த ஒரு மாதத்தில், உங்களின் இயல்பான சுபாவத்தை அத்தகையதாக ஆக்கிக் கொள்ளுங்கள். எனவே, பாபா கூறியபடி உங்களின் இயல்பான சுபாவத்தை ஆக்கிக் கொள்ளுங்கள்: தந்தையின் குணங்கள் சதா உங்களின் முகத்தில் புலப்பட வேண்டும். தந்தையின் ஸ்ரீமத் உங்களின் செயல்பாடுகளில் புலப்பட வேண்டும். உங்களின் முகம் சதா புன்னகைத்த வண்ணம் இருக்க வேண்டும். நீங்கள் எல்லாவற்றையும் செய்கின்ற முறை, திருப்தியாக இருப்பதுடன் எல்லோரையும் திருப்திப்படுத்துவதும் ஆகும். ஒவ்வொரு செயலிலும், கர்மத்திற்கும் யோகத்திற்கும் இடையில் சமநிலை இருக்க வேண்டும். சில குழந்தைகள் பாபாவிடம் மிக நல்ல விடயங்களைக் கூறுகிறார்கள். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என பாபா உங்களுக்குச் சொல்லட்டுமா? அவர்கள் கூறுகிறார்கள்: பாபா, இது எனது சுபாவம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இது வேறொன்றும் இல்லை, எனது சுபாவம் அப்படிப்பட்டது. பாப்தாதா இதற்கு என்ன சொல்லட்டும்? இது எனது சுபாவமா? சிலர் கூறுகிறார்கள்: நான் பேசுகின்ற முறை அப்படித்தான். எனக்குக் கோபம் வரவில்லை, ஆனால் நான் பேசுகின்ற விதம் சிறிது அப்படிப்பட்டது. நான் சிறிது உரத்துப் பேசினேன், ஆனால் நான் கோபப்படவில்லை. நான் சிறிது உரத்துப் பேசினேன். அவர்கள் சொல்கின்ற விடயங்கள் எத்தனை இனிமையானவை எனப் பாருங்கள்! பாப்தாதா கூறுகிறார்: ‘எனது சுபாவம்’ என நீங்கள் குறிப்பிடுவதை ‘எனது’ எனச் சொல்வது தவறு. ‘எனது சுபாவம்’ என்பது இராவணனின் சுபாவமா அல்லது உங்களின் சுபாவமா? உங்களின் சுபாவம், அநாதியான நேரத்திற்கு உரியது, ஆதி காலத்திற்கு உரியது, நீங்கள் பூஜிக்கத்தகுதி வாய்ந்தவர்களாக இருந்த காலத்திற்கு உரியது. அதுவே உங்களின் ஆதியான சுபாவம். இராவணனுக்குச் சொந்தமான ஒன்றை, ‘எனது, எனது’ என நீங்கள் சொல்வதனால், உங்களால் அதை விட முடியவில்லை. உங்களுக்குச் சொந்தம் இல்லாத ஒன்றை நீங்கள் உங்களுடையது என்று வைத்திருக்கிறீர்கள். யாராவது ஒருவர் தனக்குச் சொந்தம் இல்லாத ஒன்றைக் கவனமாக இரகசியமாக மறைத்து வைத்திருந்தால், அது நல்லது என்று கருதப்படுமா? எனவே, நீங்கள் ஏன் இராவணனின் சுபாவத்தை, வேறொருவரின் சுபாவத்தை உங்களுக்குச் சொந்தமானதாகக் கருதுகிறீர்கள்? சிலர் மிகுந்த போதையுடன் கூறுகிறார்கள்: இது எனது தவறில்லை, இது எனது சுபாவம். அவர்கள் பாப்தாதாவிற்கும் உறுதி அளிக்க முயற்சி செய்கிறார்கள். எனவே, நீங்கள் இப்போது இதற்கான நிறைவு விழாவைக் கொண்டாடுவீர்களா? செய்வீர்களா? பாருங்கள், உங்களின் இதயபூர்வமாக இதைக் கூறுங்கள். உங்களின் மனதால் அதைச் செய்யுங்கள். உங்களின் மனம் உவந்து செய்யும்போது, எதுவும் சாத்தியமானதே. உங்களின் மனதில் இதை ஏற்றுக் கொள்ளுங்கள்: இது எனது சுபாவம் இல்லை. இது யாரோ ஒருவருக்குச் சொந்தமானது, அதனால் நான் இதை வைத்துக் கொள்ளக்கூடாது. நீங்கள் மரணித்து வாழ்கிறீர்கள், அப்படித்தானே? உங்களின் சுபாவம் பிராமண சுபாவமா அல்லது உங்களின் பழைய சுபாவமா? எனவே, பாப்தாதாவிற்கு என்ன வேண்டும் என்பதை நீங்கள் புரிந்து கொண்டீர்களா? நீங்கள் களிப்படையலாம், நீங்கள் ஆடலாம், விளையாட்டுக்களை விளையாடலாம், ஆனால்.... அங்கே ஓர் ஆனால் வருகிறது. எல்லாவற்றையும் செய்யும்போதும், நீங்கள் சமமானவர் ஆகவேண்டும். சமமானவர் ஆகாமல் எப்படி உங்களால் தந்தையுடன் வீட்டுக்குத் திரும்பிச் செல்ல முடியும்? நீங்கள் சுங்கத்தில், தர்மராஜ்புரியில் காத்திருக்க வேண்டியிருக்கும். உங்களால் தந்தையுடன் ஒன்றாகத் திரும்பிச் செல்ல முடியாமல் போய்விடும். எனவே, நாம் ஒரு மாதத்தின் பின்னர் பெறுபேற்றைப் பார்ப்போமா? தாதிகளே, பேசுங்கள்! அப்போது நாம் அதைப் பார்ப்போமா? கூறுங்கள், அப்போது அதைப் பார்ப்போமா? நீங்கள் ஒரு மாதத்திற்குக் கவனம் செலுத்துவீர்களா? நீங்கள் ஒரு மாதத்திற்குக் கவனம் செலுத்தினால், அது இயல்பாகிவிடும். ஒரு மாதத்தில் ஒரு நாளையேனும் தவற விடாதீர்கள். அச்சா, தாதிகளான நீங்கள் இதற்கான பொறுப்பை எடுத்துக் கொள்ளப் போகிறீர்களா? நீங்கள் எல்லோரும் ஒருவருக்கு ஒருவர் நல்லாசிகளையும் தூய உணர்வுகளையும் கொண்டிருக்கும் கையை நீட்டுங்கள். யாராவது விழுந்தால், மிகுந்த அன்புடன் அவர் மீண்டும் எழுவதற்காக உங்களின் கையை நீட்டுங்கள். எனவே, நல்லாசிகள் மற்றும் தூய உணர்வுகளின் கையினால், ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைப்பை வழங்கிய வண்ணம் தொடர்ந்து அவர்களை முன்னேறச் செய்யுங்கள். இது சரிதானே? நீங்கள் சோதிக்க வேண்டிய அளவிற்கு உங்களைச் சோதிப்பதில்லை. நீங்கள் எதையாவது செய்கிறீர்கள், பின்னர் அதைச் சோதிக்கிறீர்கள். ஆனால் அப்போது அது நடந்து முடிந்துவிட்டது, இல்லையா? அதனால், முதலில் சிந்தித்து பின்னர் செயலாற்றுங்கள். முதலில் நீங்கள் எதையாவது செய்துவிட்டுப் பின்னர் அதைப் பற்றிச் சிந்திப்பதாக இருக்கக்கூடாது. நீங்கள் இதைச் செய்ய வேண்டும். அச்சா.
நீங்கள் என்ன அப்பியாசத்தைச் செய்ய வேண்டும் என்று பாப்தாதா விரும்புகிறார்? ஒரு விநாடியில், மௌன சக்தியின் சொரூபம் ஆகுங்கள். ஒருமுகப்பட்ட மனமும் ஒருமுகப்பட்ட புத்தியும். நாள் முழுவதும் அவ்வப்போது ஒரு விநாடியை எடுத்து இதைப் பயிற்சி செய்யுங்கள். உங்களுக்கு மௌன எண்ணம் தோன்றிய உடனேயே, நீங்கள் அதன் சொரூபம் ஆகுவீர்கள். இதற்கு உங்களுக்கு நேரம் தேவை. ஒரு விநாடிக்கு இந்தப் பயிற்சியைச் செய்யுங்கள் - மௌனம். அச்சா.
உங்களின் பிறந்த நாளைக் கொண்டாடும் எங்கும் உள்ள பாக்கியசாலி ஆத்மாக்களுக்கும் தமது உற்சாகத்தைப் பேணுவதுடன் சங்கமயுகத்தின் பண்டிகையைக் கொண்டாடுபவர்களுக்கும் ஊக்கம் மற்றும் உற்சாகத்தின் இறக்கைகளுடன் தொடர்ந்து பறக்கும் குழந்தைகள் எல்லோருக்கும் தமது மனங்களையும் புத்திகளையும் சதா ஸ்திரமாகவும் ஒருமுகப்பட்டும் வைத்திருக்கும் அனுபவத்தைப் பெறச் செய்யும் மகாவீர் குழந்தைகளுக்கும் தந்தையைப் பின்பற்றி, சமமானவர் ஆகுகின்ற தமது உற்சாகத்தை நடைமுறையில் போடுகின்ற குழந்தைகளுக்கும் ஒருவரோடு ஒருவர் சதா அன்பாக இருந்து ஒத்துழைப்பவர்களுக்கும் தைரியத்தை வழங்கி, தந்தையிடம் இருந்து உதவி என்ற ஆசீர்வாதத்தைப் பெற உதவி செய்பவர்களுக்கும் ஆசீர்வாதங்களை அருள்பவர்களாகவும் மகாதானிகளாகவும் உள்ள குழந்தைகளுக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் கோடானுகோடி மடங்கு வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்!
ஆசீர்வாதம்:
நீங்கள் எல்லையற்ற இளைப்பாறும் ஸ்திதியில் இருந்து, ஏகாந்தத்திலும் நினைவிலும் ஈடுபட்டிருப்பீர்களாக.தற்சமயத்திற்கேற்ப, நீங்கள் எல்லோரும் உங்களின் இளைப்பாறும் ஸ்திதிக்கு நெருக்கமாக இருக்கிறீர்கள். தமது இளைப்பாறும் ஸ்திதியில் இருப்பவர்கள், குழந்தைப் பருவ விளையாட்டுக்களை விளையாடுவதில்லை. அவர்கள் சதா ஏகாந்தமாகவும் நினைவிலும் இருக்கிறார்கள். உங்களின் எல்லையற்ற இளைப்பாறும் ஸ்திதியில் இருக்கும் நீங்கள் எல்லோரும் சதா ஒரேயொருவரின் ஆழத்திற்குள் மூழ்கி இருக்கிறீர்கள். அதாவது, நீங்கள் சதா ஏகாந்தத்தில் இருக்கிறீர்கள். அத்துடன்கூடவே, நீங்கள் ஒரேயொருவரை தொடர்ந்து நினைவு செய்து, நினைவின் சொரூபங்கள் ஆகவேண்டும். குழந்தைகளான உங்கள் எல்லோரின் மீதும் பாப்தாதாவின் தூய எதிர்பார்ப்பு என்னவென்றால், குழந்தைகளும் தந்தையும் இப்போது சமமானவர்கள் ஆகவேண்டும். சதா நினைவில் திளைத்திருங்கள். சமமானவர் ஆகுவது என்றால் திளைத்திருத்தல் என்று அர்த்தம்: இதுவே இளைப்பாறும் ஸ்திதியின் அடையாளம் ஆகும்.
சுலோகம்:
நீங்கள் தைரியமாக ஓரடி எடுத்து வைக்கும்போது, தந்தை ஆயிரம் மடங்கு உதவியை வழங்குவார்.அவ்யக்த சமிக்கை: இப்போது முழுமையாகவும் கர்மாதீத்தாகவும் ஆகுகின்ற ஆழமான அக்கறையைக் கொண்டிருங்கள்.
எப்படித் தந்தைக்காக ‘எனது பாபா’ என்ற ஒரே ஒலி எல்லோருடைய உதடுகளில் இருந்தும் வெளிப்படுகிறதோ, அதேபோல், மேன்மையான ஆத்மாக்களான உங்கள் ஒவ்வொருவருக்கும் இந்த பாவனாவும் (நல்ல உணர்வுகள்) புரிந்துணர்வும் இருக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் சொந்தமாக இருக்கும் உணர்வு இருக்க வேண்டும். எல்லோருமே உங்களைத் தங்களுக்காகத் தூய, சாதகமான எண்ணங்களைக் கொண்டவராகவும் தமது ஒத்துழைக்கும் சகபாடியாகவும் கருத வேண்டும். இதுவே தந்தைக்குச் சமமாக இருப்பதும் அத்துடன் இதயசிம்மாசனத்தில் கர்மாதீத ஸ்திதியில் அமர்ந்திருப்பதும் எனப்படுகிறது.
அறிவித்தல்: இன்று மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை, உலக தியான தினம். இதில் சகல இராஜயோகி தபஸ்வி சகோதர, சகோதரிகளும் மாலை 6.30 இலிருந்து 7.30 வரை ஒன்றுகூடி யோகம் செய்வார்கள். யோகம் செய்யும் வேளையில், உங்களின் ஒளி மற்றும் சக்தி ரூபத்தில் ஸ்திரமாக இருங்கள். உங்களின் நெற்றிப் புருவ மையத்தில் இருந்த வண்ணம் பாப்தாதாவை வரவழைத்து, ஒன்றிணைந்த ரூபத்தை அனுபவம் செய்து, எங்கும் ஒளி மற்றும் சக்திக் கதிர்களைப் பரப்பும் சேவையைச் செய்யுங்கள்.