22.05.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் உங்களுடைய கண்களால் பார்ப்பவை அனைத்தும் பழைய உலகிற்குச் சொந்தமானவை. அது அழிக்கப்பட வேண்டும். ஆகையால், உங்களுடைய புத்திகளில் இருந்து இந்தத் துன்ப உலகை அகற்றி விடுங்கள்.
கேள்வி:
உண்மையில் எவருடைய தவறாக இல்லாத பொழுதிலும், தந்தையை எதற்காக, எப்பொழுது மனிதர்கள் குற்றம் சாட்டுகின்றார்கள்?பதில்:
மனிதர்கள் பெரும் விநாசம் கடவுளின் தூண்டுதலினாலேயே இடம்பெறுகின்றது என்றும், அவரே துன்பத்தை விளைவிப்பவரும் சந்தோஷத்தைக் கொடுப்பவரும் என்றும் நம்புகின்றார்கள். அவர்கள் தந்தை மீது அனைத்துப் பழிகளையும் சுமத்தி உள்ளனர். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, நான் எப்பொழுதும் சந்தோஷத்தை அருள்பவர். நான் எவருக்கும் துன்பம் கொடுக்க முடியாது. நான் விநாசம் இடம்பெறுவதைத் தூண்டினால், அப்பொழுது அனைத்துப் பாவங்களும் என் மீது வீழ்ந்து விடும். அனைத்தும் நாடகத்திற்கு ஏற்பவே நடக்கின்றது. நான் அதனைத் தூண்டுவதில்லை.பாடல்:
ஓ இரவுப் பயணியே, களைப்படையாதீர். விடியலின் இலக்கு வெகுதொலைவில் இல்லை.ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய, உங்களுக்குக் கற்பிப்பதற்கு மிகச்சிறந்த பல பாடல்கள் உள்ளன. அவ்வாறான பாடல்களின் அர்த்தங்களைப் பிரித்தெடுப்பதன் மூலம் உங்களால் இந்த ஞானத்தைப் பேசக்கூடியதாக இருக்கும். இரவின் யாத்திரைகள் முடிவிற்கு வந்து, நீங்கள் அனைவரும் பகலிற்கான யாத்திரையில் இருக்கின்றீர்கள் என்பது குழந்தைகளாகிய உங்கள் புத்திகளிலே உள்ளது. நீங்கள் இருட்டிலே அலைந்து தடுமாறித் திரிந்த இரவு யாத்திரைகள் பக்தி மார்க்கத்தில் உள்ளன. அரைக் கல்பமாக இரவு யாத்திரை சென்றதன் மூலம் நீங்கள் தொடர்ந்தும் கீழே இறங்கினீர்கள். நீங்கள் இப்பொழுது பகலுக்கான யாத்திரை செல்வதற்காக இங்கு வந்திருக்கின்றீர்கள். நீங்கள் ஒருமுறை மாத்திரமே இந்த யாத்திரை செல்கின்றீர்கள். நினைவு யாத்திரை செல்வதன் மூலம் நீங்கள் தமோபிரதானில் இருந்து சதோபிரதானாக மாறி, பின்னர் சதோபிரதான் சத்தியயுகத்தின் அதிபதிகள் ஆகுகின்றீர்கள் என்பதை அறிவீர்கள். சதோபிரதான் ஆகுவதன் மூலம் நீங்கள் சத்தியயுகத்தின் அதிபதிகள் ஆகுகின்றீர்கள். பின்னர் தமோபிரதான் ஆகுவதனால் நீங்கள் கலியுகத்தின் அதிபதிகள் ஆகுகின்றீர்கள். அது சுவர்க்கம் என்றும், இது நரகம் என்றும் அழைக்கப்படுகின்றது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது தந்தையை நினைவு செய்கின்றீர்கள். நீங்கள் தந்தையிடம் இருந்து சந்தோஷத்தை மாத்திரமே பெறுகின்றீர்கள். இந்த ஞானத்தைப் பேச முடியாதவர்கள், அமைதிதாமமே ஆத்மாக்களாகிய எங்களின் வீடு எனவும், சந்தோஷதாமம் சுவர்க்க இராச்சியம் எனவும், இப்பொழுது இது இராவண இராச்சியமாகிய, துன்ப உலகம் எனவும் நினைவு செய்ய வேண்டும். தந்தை கூறுகின்றார்: இப்பொழுது இந்தத் துன்ப உலகை மறந்து விடுங்கள். நீங்கள் இங்கே வசிக்கின்ற பொழுதிலும் உங்கள் கண்களால் பார்ப்பவை அனைத்தும் இராவண இராச்சியத்திற்கு உரியவை என்பதை உங்கள் புத்தி நினைவு செய்ய வேண்டும். நீங்கள் பார்க்கின்ற சரீரங்கள் அனைத்தும் பழைய உலகிற்கு உரியவை. அதற்கு உரிய அனைத்தும் இந்த யாகத்தில் அர்ப்பணிக்கப்பட வேண்டும். அந்தத் தூய்மையற்ற பிராமணர்கள் யாகத்தை உருவாக்குகின்ற பொழுது, அதற்குள் எள் போன்றவற்றை அர்ப்பணிக்கின்றார்கள். விநாசம் இங்கேயே இடம்பெற வேண்டும். தந்தையே அதிமேலானவர். பின்னர் பிரம்மா, விஷ்ணு இருக்கின்றனர். சங்கரருக்கு அவ்வளவு முக்கியமான பாகமில்லை. விநாசம் இடம்பெறவே வேண்டும். எவருமே அதற்கான பாவத்தைச் சேர்த்துக் கொள்ளாத வகையில் தந்தை விநாசம் இடம்பெறத் தூண்டுகிறார். கடவுள் விநாசம் இடம்பெறச் செய்கின்றார் என்று கூறினால், அதற்கான பழி அவர் மீதே விழும். இதனாலேயே இவை அனைத்தும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளன. இது எவருமே அறியாத, எல்லையற்ற நாடகமாகும். எவருமே படைப்பவரையோ அல்லது படைப்பையோ அறியமாட்டார்கள். அவரை அறிந்து கொள்ளாததால் அவர்கள் அநாதைகளாகி விட்டார்கள். அவர்களுக்குப் பிரபுவோ, அதிபதியோ இல்லை. ஒரு குடும்பத்தில் தந்தை இல்லாமல், குழந்தைகள் சண்டையிடும் பொழுது, ‘உங்களுக்கு ஒரு தலைவன் இல்லையா?’ என அவர்களிடம் கேட்கப்படுகின்றது. இப்பொழுது மில்லியன் கணக்கான மனிதர்கள் அதிபதி இல்லாமல் இருக்கின்றார்கள்; ஒவ்வொரு நாட்டிலும் சண்டை நடக்கின்றது. ஒரே வீட்டில் பிள்ளைகள் தமது அப்பாவுடன் சண்டை போடுகின்றார்கள், மனைவி தனது கணவனுடன் சண்டை போடுகின்றாள். துன்ப பூமியில் அமைதியின்மையே உள்ளது. தந்தையாகிய கடவுள் துன்பத்தை உருவாக்குவதில்லை. தந்தையே சந்தோஷத்தையும் துன்பத்தையும் கொடுக்கின்றார் என மக்கள் நினைக்கின்றார்கள். எவ்வாறாயினும் தந்தையால் ஒருபொழுதும் துன்பத்தைக் கொடுக்க முடியாது. அவர் சந்தோஷத்தை அருள்பவர் என அழைக்கப்படுகின்றார். எனவே அவர் எவ்வாறு துன்பத்தைக் கொடுக்க முடியும்? தந்தை கூறுகின்றார்: நான் உங்களை மிகவும் சந்தோஷமானவர்கள் ஆக்குகின்றேன். முதலில், உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள். ஆத்மாக்கள் அழிவற்றவர்கள், சரீரங்கள் அழியக்கூடியவை. ஆத்மாக்களாகிய எங்களது வசிப்பிடம் பரந்தாமம் ஆகும்.அது மௌனதாமம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த வார்த்தைகள் மிகச்சரியானவை. சுவர்க்கத்தைப் பரந்தாமம் என அழைக்க முடியாது. பரம் என்றால் அப்பாலுள்ள இடம். சுவர்க்கம் இங்கேயே உள்ளது. அசரீரி உலகம் ஆத்மாக்களாகிய நாங்கள் வசிக்கின்ற, அப்பாலுள்ள உலகமாகும். நீங்கள் உங்களுடைய சந்தோஷத்திற்கும் துன்பத்திற்குமான பாகங்களை இங்கேயே நடிக்கின்றீர்கள். இன்னார், இன்னார் சுவர்க்கத்திற்குச் சென்று விட்டார் என்று மக்கள் கூறுவது முற்றிலும் தவறானது. சுவர்க்கம் இப்பொழுது இல்லை, இப்பொழுது இது கலியுகம். இந்த நேரத்தில் நீங்கள் சங்கமயுகத்தில் இருக்கின்றீர்கள், ஆனால் ஏனையோர் கலியுகத்தில் இருக்கின்றார்கள். ஒரே வீட்டில் தந்தை கலியுகத்திலும் குழந்தை சங்கமயுகத்திலும் இருக்கின்றார்கள்; மனைவி சங்கமயுகத்திலும் கணவன் கலியுகத்திலும் இருக்கின்றார்கள். அவ்வாறான வித்தியாசம் இருக்கின்றது! மனைவி இந்த ஞானத்தை எடுத்து, கணவன் எடுக்காது விட்டால், அவர்கள் ஒருவரோடு ஒருவர் ஒத்துழைக்க மாட்டார்கள். பின்னர் அந்த வீட்டில் முரண்பாடு ஏற்படுகிறது. மனைவி மலராக ஆகுகிறார், கணவன் முள்ளாக இருக்கின்றார். ஒரே வீட்டில், சங்கமயுகத்தில் தான் ஒரு தூய மேன்மையான தேவர் ஆகுவதைப் பிள்ளை அறிவார், ஆனால் அவரது தந்தை அவரை நரகவாசி ஆகுவதற்காக, திருமணம் செய்து அவரை அழித்துக் கொள்ளுமாறு கூறுவார். ஆன்மீகத் தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, இப்பொழுது தூய்மை ஆகுங்கள். இந்த நேரத்தின் உங்களுடைய தூய்மை 21 பிறவிகளுக்கு உங்களுடன் நீடிக்கும். இந்த இராவண இராச்சியம் அழியப் போகின்றது. மக்கள் தங்களுடைய எதிரியாக உள்ளவரின் கொடும்பாவியை எரிக்கின்றார்கள். ஆகையினால் இராவணனின் கொடும்பாவி எரிக்கப்படுகின்றது. அந்த எதிரி மீது அந்தளவு வெறுப்பு இருக்க வேண்டும். ஆனால் இராவணன் யாரென்று யாருக்கும் தெரியாது. ஆனால் அவர்கள் அந்தக் கொடும்பாவியை எரிக்கப் பெருமளவு செலவு செய்கிறார்கள். அவர்கள் மனிதர்களை எரிக்க அந்தளவு செலவு செய்வதில்லை. இந்த விடயங்கள் சுவர்க்கத்தில் இருக்க மாட்டாது. அங்கே அவர்கள் மின்சாரத்தின் ஆளியைப் போட்டதும் எல்லாமே முடிந்துவிடும். அங்கே அந்தச் சாம்பல் எதற்காவது பயன்படும் என்ற எண்ணம் கூட அவர்களுக்கு இருக்க மாட்டாது. அங்கேயுள்ள நடைமுறைகளும் சம்பிரதாயங்களும் எந்த விதமான கஷ்டமோ அல்லது களைப்போ இல்லாததாகவே இருக்கும். அங்கே அதிகளவு சந்தோஷம் இருக்கின்றது. ஆகையினால் தந்தை விளங்கப்படுத்துகின்றார்: இப்பொழுது சதா என்னை மாத்திரம் நினைவுசெய்ய முயற்சி செய்யுங்கள். இது நினைவில் நிலைத்திருப்பதற்கான ஒரு போராட்டம். தந்தை தொடர்ந்தும் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார்: இனிய குழந்தைகளே, தொடர்ந்தும் அவதானமாக இருந்து, உங்களில் விசேட கவனம் செலுத்துங்கள். மாயை உங்களது மூக்கையோ, காதையோ வெட்டி விடாதபடி கவனமாக இருங்கள். ஏனெனில் அவள் உங்களுடைய எதிரி ஆவாள். நீங்கள் தந்தையை நினைவு செய்கிறீர்கள், ஆனால் மாயை அவளது புயல்களால் உங்களை அப்பால் ஊதிவிடுகிறாள். இதனாலேயே பாபா கூறுகின்றார்: நீங்கள் ஒவ்வொருவரும் முழுநாளும் எந்தளவிற்குத் தந்தையை நினைவு செய்தீர்கள் என்ற அட்டவணையை எழுத வேண்டும். உங்களுடைய மனம் எங்கே அலைபாய்ந்தது? எவ்வளவு நேரம் நீங்கள் தந்தையை நினைவு செய்தீர்கள் என நாட்குறிப்பேட்டில் குறித்து வையுங்கள். நீங்கள் மிகவும் தைரியசாலி என்றும் நீங்கள் உங்களில் மிக நன்றாகக் கவனம் செலுத்துகின்றீர்கள் என்றும் மாயை கண்டு கொள்ளும் வகையில், உங்களைச் சோதியுங்கள். முழுமையாக அவதானத்துடன் இருங்கள். தந்தை இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்குத் தனது அறிமுகத்தைக் கொடுக்க வருகின்றார். அவர் கூறுகின்றார்: நீங்கள் உங்கள் வீட்டையும் குடும்பத்தையும் கவனித்துக் கொள்ளலாம். எவ்வாறாயினும், தந்தையை நினைவு செய்யுங்கள். இவர் அந்தச் சந்நியாசிகள் போன்றவர் அல்ல. அவர்கள் யாசித்ததைக் கொண்டு வாழுகின்றார்கள். ஆனாலும் அவர்கள் செயல்களைச் செய்யவே வேண்டும். அவர்கள் ஹத்தயோகிகள் என நீங்கள் அவர்களுக்குக் கூறமுடியும். ஒரேயொரு கடவுளால் மாத்திரமே இராஜயோகம் கற்பிக்க முடியும். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது சங்கமயுகத்தில் இருக்கின்றீர்கள். நீங்கள் இந்தச் சங்கமயுகத்தை நினைவுசெய்ய வேண்டும். இந்தச் சங்கம யுகத்திலேயே நாங்கள் மேன்மையான தேவர்கள் ஆகுகின்றோம். நாங்கள் அதிமேன்மையான மனிதர்களாக இருந்தோம். அதாவது, பூஜிக்கத்தக்க தேவர்களாக இருந்தோம். இப்பொழுது நாங்கள் அதிகீழான மனிதர்களாகி விட்டோம். நாங்கள் பயனற்றவர்களாகி விட்டோம். நாங்கள் இப்பொழுது என்னவாக ஆகுகின்றோம்? மக்கள் சட்டத்தரணிகள் ஆகுவதற்குக் கற்கின்ற நேரத்தில் அந்த அந்தஸ்தை அடைவதில்லை. அவர்கள் பரீட்சையில் சித்தியடையும் பொழுதே, அந்த அந்தஸ்திற்கான கௌரவத்தைப் பெறுகிறார்கள். பின்னர் அவர்கள் அரசாங்க சேவையில் ஈடுபடுகின்றார்கள். அதிமேலான கடவுள், இப்பொழுது உங்களுக்குக் கற்பிக்கின்றார் என நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். ஆகவே அவர் நிச்சயமாக அதிமேலான அந்தஸ்தை உங்களுக்குக் கொடுப்பார். இதுவே உங்கள் இலக்கும் குறிக்கோளும் ஆகும். தந்தை கூறுகின்றார்: இப்பொழுது சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். நான் யார் என உங்களுக்கு விளங்கப்படுத்தி உள்ளேன். நான் புள்ளி வடிவமான ஆத்மாக்கள் அனைவரினதும் தந்தை. என்னிடம் இந்த முழு ஞானமும் உள்ளது. ஆத்மா புள்ளி வடிவானவர் என்பதை நீங்கள் முன்பு அறிந்திருக்கவில்லை. உங்களுடைய 84 பிறவிகளுக்கான அழியாத முழுப் பாகங்களும் ஆத்மாவிலே பதியப்பட்டுள்ளன. கிறிஸ்து தனது பாகத்தை நடித்து விட்டுச் சென்றார்; அவர் மீண்டும் ஒருமுறை நிச்சயமாக வருவார். கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் அனைவரும் திரும்ப வருவார்கள். கிறிஸ்துவின் ஆத்மாவும் இப்பொழுது தமோபிரதானாக இருக்க வேண்டும். அனைவரிலும் மேலாக இருந்த மத ஸ்தாபகர்கள் அனைவரும் இப்பொழுது தமோபிரதானாக உள்ளனர். இவரும் கூறுகின்றார்: நான் எனது பல பிறவிகளின் கடைசிப் பிறவியில் தமோபிரதானாகி உள்ளேன். நான் இப்பொழுது மீண்டும் சதோபிரதான் ஆகுகின்றேன். இது உங்களுக்கும் பொருந்துகிறது. நீங்கள் இப்பொழுது தேவர்கள் ஆகுவதற்குப் பிராமணர்கள் ஆகியுள்ளீர்கள் என அறிவீர்கள். எவருமே பல்ரூப வடிவத்தின் அர்த்தம் பற்றி அறிய மாட்டார்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் உங்களுடைய இனிய வீட்டில் இருக்கும் பொழுது, தூய்மையாக இருக்கின்றீர்கள் என்பதை அறிவீர்கள். நீங்கள் இங்கு வந்த பின்னரே தூய்மையற்றவர் ஆகினீர்கள். இதனாலேயே “தூய்மையாக்குபவரே, நாங்கள் முக்திதாமமாகிய வீட்டிற்குச் செல்லும் வகையில் வந்து எங்களைத் தூய்மை ஆக்குங்கள்” என அழைத்தீர்கள். இந்தக் கருத்தும் கிரகிக்கப்பட வேண்டும். மனிதர்கள் முக்திதாமம் என்றால் என்ன, அல்லது ஜீவன்முக்தி தாமம் என்றால் என்ன என்று புரிந்து கொள்வதில்லை. முக்திதாமம், அமைதிதாமம் என அழைக்கப்படுகின்றது. ஜீவன் முக்திதாமம் சந்தோஷ தாமம் என அழைக்கப்படுகின்றது. இங்கே இது பந்தனமுள்ள துன்ப தாமமாகும். ஜீவன்முக்தி வாழ்க்கை சந்தோஷ உறவுமுறைகள் என அழைக்கப்படுகின்றது. துன்ப பந்தனம் இப்பொழுது அகற்றப்பட உள்ளது. நாங்கள் உயர்ந்த அந்தஸ்தைக் கோர முயற்சி செய்கின்றோம். ஆகவே, நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதனால், உங்களுடைய இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றீர்கள் என்ற போதை இருக்கவேண்டும். ஜெகதாம்பா முதல் இலக்கத்தவராக ஆகுகின்றார். நாங்களும் அவரைப் பின்பற்ற வேண்டும். இப்பொழுது தாய், தந்தையின் இதய சிம்மாசனத்தில் இருப்பவர்கள் எதிர்காலத்தில் அவர்களின் இராச்சிய சிம்மாசனத்தைக் கோருகிறார்கள். இரவுபகலாகச் சேவையில் ஈடுபடுபவர்களாலேயே இதய சிம்மாசனத்தில் அமரமுடியும். தந்தையை நினைவுசெய்ய வேண்டும் என்ற செய்தியை அனைவருக்கும் கொடுங்கள். நீங்கள் ஒரு சதம் கூட எடுக்கக்கூடாது. நீங்கள் ராக்கி அணிவிக்கச் செல்கின்ற பொழுது, தாங்களும் உங்களுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என மக்கள் நினைக்கின்றார்கள். ஐந்து விகாரங்களை எங்களுக்குத் தானமாகக் கொடுங்கள்; வேறு எதுவும் எங்களுக்குத் தேவையில்லை என அவர்களிடம் கூறுங்கள். நாங்கள் இந்தத் தானத்தை உங்களிடம் இருந்து எடுக்கவே வந்துள்ளோம். இதனாலேயே தூய்மை எனும் ராக்கி உங்களின் மீது கட்டப்படுகின்றது. தந்தையை நினைவுசெய்து தூய்மை ஆகுங்கள், நீங்கள் தேவர்கள் ஆகுவீர்கள். நாங்கள் பணத்தை உங்களிடமிருந்து பெற முடியாது. நாங்கள் அந்தப் பிராமணர்கள் இல்லை. ஐந்து விகாரங்களையும் எங்களுக்குத் தானமாகக் கொடுங்கள். தீய சகுனங்கள் அகற்றப்படும். எந்த ஒரு சுவர்க்கக் கலையும் மீதமில்லை. அனைவர் மீதும் ஒரு கிரகணம் உள்ளது. நீங்கள் பிராமணர்கள், இல்லையா? நீங்கள் எங்கே சென்றாலும், அவர்களிடம் கூறுங்கள்: இந்தத் தானத்தைக் கொடுங்கள். கிரகணம் அகற்றப்படும். தூய்மை ஆகுங்கள். ஒருபொழுதும் விகாரத்தில் ஈடுபடாதீர்கள். தந்தையை நினைவுசெய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்பட்டு, மலர்களாக ஆகுவீர்கள். நீங்கள் மலர்களாக இருந்தீர்கள், ஆனால் இப்பொழுது முட்களாகி விட்டீர்கள். 84 பிறவிகள் எடுத்ததன் மூலம் நீங்கள் கீழிறங்கி வந்து விட்டீர்கள். நீங்கள் இப்பொழுது வீடு திரும்பவேண்டும். பாபா இவரின் மூலம் வழிகாட்டல்களைக் கொடுத்துள்ளார். அவர் அதிமேலான கடவுளாவார். அவருக்கெனச் சொந்தமாக ஒரு சரீரம் இல்லை. அச்சா. பிரம்மா, விஷ்ணு, சங்கரருக்குச் சரீரங்கள் உள்ளனவா? ஆம், அவர்களுக்குச் சூட்சுமமான சரீரங்கள் உள்ளன என நீங்கள் கூறுவீர்கள். எவ்வாறாயினும், அது மனித உலகம் இல்லை. முழு நாடகமும் இங்கேயே நடைபெறுகின்றது. சூட்சும உலகில் எவ்வாறு நாடகம் இருக்க முடியும்? உண்மையில் அசரீரி உலகில் சூரியனோ, சந்திரனோ இல்லை. எனவே எவ்வாறு அங்கே நாடகம் நடக்க முடியும்? இது ஒரு பெரிய மேடை (பெரிய கூடாரம்). மறுபிறவி இங்கேயே இடம்பெறுகின்றது; அது சூட்சும உலகில் இடம்பெறுவதில்லை. இந்த எல்லையற்ற நாடகம் முழுவதும் இப்பொழுது உங்கள் புத்தியில் உள்ளது. நீங்கள் தேவர்களாக இருந்தீர்கள், பின்னர் பாவப் பாதையில் வீழ்ந்து விட்டீர்கள் என்பதை இப்பொழுது நீங்கள் அறிந்து கொண்டிருக்கின்றீர்கள். பாவப் பாதை, விகாரங்களின் பாதை எனவும் அழைக்கப்படுகின்றது. நாங்கள் அரைக் கல்பத்துக்குத் தூய்மையாக இருந்தோம். இந்த வெற்றி தோல்விக்கான நாடகம் அனைத்தும் எங்களைப் பற்றியதாகும். பாரதம் அழியாத பூமி; அது அழிக்கப்பட முடியாதது. ஆதிசனாதன தேவி தேவதா தர்மம் இருந்தபொழுது, வேறு எந்த மதங்களும் இருக்கவில்லை. இந்த விடயங்களை ஒரு கல்பத்திற்கு முன்னர் ஏற்றுக் கொண்டவர்களே, மீண்டும் ஏற்றுக் கொள்வார்கள். 5000 வருடங்களுக்கு மேல் பழைமையானதாக எதுவும் இருக்க முடியாது. நீங்கள் முதலில் சத்தியயுகத்திற்குச் சென்று உங்களுடைய சொந்த மாளிகைகளைக் கட்டுவீர்கள். உங்களுடைய தங்கநகரமான துவாரகை கடலிலிருந்து வெளியாகும் என்றில்லை. தேவர்கள் கடலில் இருந்து வெளிப்பட்டு, தட்டு நிறைய இரத்தினங்களைக் கொடுத்ததாகச் சித்தரித்துள்ளார்கள். உண்மையில் ஞானக்கடலாகிய தந்தையே உங்களுக்குத் தட்டு நிறைய இந்த ஞான இரத்தினங்களைக் கொடுக்கின்றார். சங்கரர், பார்வதிக்கு அமரத்துவமான கதையைக் கூறி, அவரது மடியை ஞான இரத்தினங்களால் நிரப்பியதாகச் சித்திரித்துள்ளார்கள். அவர்கள் சங்கரர் போதை ஊட்டும் பானத்தை அருந்தும் வழக்கம் உடையவர் எனக் கூறுகின்றார்கள். மக்கள் அவரின் சிலைக்கு முன்னால் சென்று தமது மடியை நிரப்புமாறும், செல்வத்தைக் கொடுக்குமாறும் வேண்டுகின்றார்கள். ஆகவே அவர்கள் சங்கரரையும் எப்படி அவமதித்துள்ளார்கள் எனப் பாருங்கள். அவர்கள் என்னைத்தான் அதிகளவில் அவமதித்துள்ளார்கள். இதுவும் நாடகத்தின் ஒரு பாகமே ஆகும். இது மீண்டும் இடம்பெறும். எவரும் இந்த நாடகம் பற்றி அறிய மாட்டார்கள். நான் வந்து ஆரம்பத்தில் இருந்து இறுதிவரையான அனைத்து இரகசியங்களையும் உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றேன். தந்தையே அதிமேலானவர் எனவும் நீங்கள் அறிவீர்கள். எவ்வாறு விஷ்ணு, பிரம்மா ஆகுகின்றார் என்றோ, அல்லது எவ்வாறு பிரம்மா விஷ்ணு ஆகுகின்றார் என்றோ எவருமே புரிந்து கொள்வதில்லை. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது விஷ்ணுவின் குலத்தின் ஒருவர் ஆகுவதற்கு முயற்சி செய்கின்றீர்கள். நீங்கள் விஷ்ணு பூமியின் அதிபதிகள் ஆகுவதற்கு, பிராமணர்கள் ஆகியுள்ளீர்கள். நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம் உங்களுக்கான சூரிய, சந்திர வம்ச இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றீர்கள் என்பது பிராமணர்களாகிய உங்களது இதயத்தில் உள்ளது. இதில் சண்டையிடுதல் போன்றவற்றுக்கான கேள்வி எதுவும் இல்லை. தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் ஒருபொழுதும் எந்த யுத்தமும் இடம்பெறவில்லை. தேவர்கள் சத்தியயுகத்தில் இருக்கின்றார்கள். அங்கு எவ்வாறு சண்டை இடம்பெற முடியும்? பிராமணர்களாகிய நீங்கள் இப்பொழுது யோகசக்தியின் மூலம் உலகின் அதிபதிகள் ஆகுகின்றீர்கள். பௌதீகச் சக்தியைக் கொண்டவர்கள் விநாசத்தை அடைகின்றார்கள். உங்களின் மௌன சக்தியினால் நீங்கள் விஞ்ஞானத்தை வெற்றி கொள்கின்றீர்கள். நீங்கள் இப்பொழுது ஆத்ம உணர்வு உடையவராக வேண்டும். நான் ஓர் ஆத்மா, நான் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். ஆத்மாக்கள் மிகவும் வேகமானவர்கள். உங்களை ஓர் இடத்திலிருந்து தொலைவில் இன்னுமோர் இடத்திற்கு ஒரு மணித்தியாலத்தில் கொண்டு செல்லக்கூடிய, அவ்வாறான ஆகாய விமானங்கள் இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆத்மாக்கள் அதனிலும் பார்க்க வேகமானவர்கள். ஓர் ஆத்மா ஓரிடத்தை விட்டு வேறோர் இடத்திற்கு ஒரு நொடியில் சென்று பிறப்பு எடுக்கின்றார். சிலர் அந்நிய தேசத்திற்குச் சென்று அங்கே பிறப்பு எடுக்கின்றார்கள். ஆத்மாவே வேகமான ரொக்கெட் ஆவார். இதில் இயந்திரம் பற்றிய கேள்வி இல்லை. அவர்கள் தங்களுடைய சரீரங்களைத் துறந்து வேறு இடத்திற்குச் செல்கின்றார்கள். நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும் என்பது குழந்தைகளாகிய உங்களின் புத்தியில் இருக்கின்றது. தூய்மையற்ற ஆத்மாக்களால் வீடு திரும்ப முடியாது. நீங்கள் தூய்மையாகிய பின்னர் வீடு திரும்புவீர்கள்; மற்றைய அனைவரும் தண்டனையை அனுபவம் செய்த பின்னர் செல்வார்கள். பெருமளவு தண்டனை அனுபவம் செய்யப்படுகின்றது. அங்கே அவர்கள் நிறைந்த சௌகரியத்துடன் கர்ப்ப மாளிகையில் இருக்கின்றார்கள். எவ்வாறு கிருஷ்ணர் பிறப்பு எடுக்கின்றார் என்பதைச் சில குழந்தைகள் காட்சிகளாகக் கண்டார்கள். இதில் அசுத்தமானவை என்ற கேள்வியில்லை. சடுதியாக அதிகளவு ஒளியிருக்கும். நீங்கள் இப்பொழுது வைகுந்தத்தின் அதிபதிகள் ஆகுகின்றீர்கள். ஆகையினால் நீங்கள் அதற்கேற்ப முயற்சி செய்யவேண்டும். உங்களுடைய உணவும் பானமும் சுத்தமானதாகவும் தூய்மையாகவும் இருக்கவேண்டும். பருப்பும், சோறும் சிறந்தது. ரிஷிகேசத்தில் சந்நியாசிகள் யன்னலூடாக உணவை எடுத்து, பின்னர் சென்று விடுகிறார்கள். அவர்களில் பல் வகையினர் உள்ளனர். அச்சா.இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப் பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும் ஆன்மீகத்தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. உங்களில் கவனம் செலுத்துவதில் அவதானமாக இருங்கள். மாயை பற்றி எச்சரிக்கையாக இருங்கள். நேர்மையான நினைவு அட்டவணையை வைத்திருங்கள்.2. தாய், தந்தையைப் பின்பற்றி, இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவர் ஆகுங்கள். இரவு, பகலாக மும்மரமாகச் சேவையில் ஈடுபட்டிருங்கள். தந்தையை நினைவு செய்யுங்கள் என்ற செய்தியை அனைவருக்கும் கொடுங்கள். ஐந்து விகாரங்களையும் தானஞ் செய்யுங்கள், கிரகணம் அகற்றப்படும்.
ஆசீர்வாதம்:
நீங்கள் விவேகம் மற்றும் சாரத்திற்கு இடையில் ஒரு சமநிலையைப் பேணுவதன் மூலம் உங்களைப் பற்றிய உணர்வுகள் அனைத்தையும் தியாகம் செய்து, உலகை மாற்றுபவர் ஆகுவீர்களாக.விவேகம் என்றால் இந்த ஞானக் கருத்துக்களைப் புரிந்து கொள்ளுதல். சாரம்சம் என்றால் சக்தி சொரூபமாக, சகல சக்திகளின் சொரூபமாக இருக்கும் விழிப்புணர்வை வைத்திருத்தல். இவை இரண்டுக்கும் இடையே ஒரு சமநிலையை நீங்கள் பேணினால், உங்களினதும் மற்றும் உங்களுடைய பழைய விடயங்களினதும் உணர்வுகள் அனைத்தும் பலி கொடுக்கப்பட்டு விடும். ஒவ்வொரு விநாடி, ஒவ்வோர் எண்ணம், ஒவ்வொரு வார்த்தை, ஒவ்வொரு செயலையும் உலக மாற்றம் என்ற சேவையில் தியாகம் செய்வதன் மூலம் நீங்கள் இயல்பாகவே உலகை மாற்றுபவர் ஆகுவீர்கள். தமது சொந்தச் சரீரங்களின் விழிப்புணர்வுடன் கூடவே தங்களையும் தியாகம் செய்பவர்களால் இலகுவாகத் தமது மேன்மையான அதிர்வலைகளால் சூழலை மாற்ற முடியும்.
சுலோகம்:
உங்களின் பேறுகளை நினைவில் வைத்திருங்கள். துன்பம் அல்லது கவலைக்கான எதுவும் மறந்துபோகும்.அவ்யக்த சமிக்கை: ஆன்மீக இராஜரீகம் மற்றும் தூய்மையின் ஆளுமையைக் கடைப்பிடியுங்கள்.
மேன்மையான செயல்களின் அத்திவாரம் தூய்மையே. எவ்வாறாயினும், தூய்மை என்பது பிரம்மச்சரியம் மட்டுமல்ல. அது மேன்மையானது. ஆனால் ஏதாவதோர் ஆத்மாவிடம் ஏதாவது விசேடமான பற்று அல்லது அடிமைத்தனம் இருக்குமாயின், நீங்கள் யாராவது ஓர் ஆத்மாவின் சிறப்பியல்பால் கவரப்பட்டால், அல்லது யாராவதோர் ஆத்மாவின் மீது எதிர்மறையான எண்ணங்களைக் கொண்டிருந்தால், ஒழுங்கு முறைக் கோட்பாடுகளுக்கு உட்படாத வார்த்தைகளை அல்லது கெட்ட வார்த்தைகளைப் பேசினால், அதுவும் தூய்மை என்று அழைக்கப்பட மாட்டாது.