22.05.26        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, புண்ணியச் செயல் வீட்டிலேயே ஆரம்பிக்கிறது. அதாவது, முதலில் தேவ தர்மத்தைச் சார்ந்தவர்களுக்கும் சிவனையும் தேவர்களையும் வணங்குபவர்களுக்கும் இந்த ஞானத்தைக் கொடுங்கள்.

கேள்வி:
தந்தையின் எந்தச் செயற்பாட்டை வேறெந்த மனிதர்களாலும் செய்ய முடியாது? ஏன்?

பதில்:
முழு உலகிலும் அமைதியை ஸ்தாபிக்கின்ற செயற்பாடு தந்தையினுடையது மட்டுமே ஆகும். மனிதரினால் உலகில் அமைதியை ஸ்தாபிக்க முடியாது. ஏனெனில் அவர்கள் அனைவரும் விகாரமானவர்கள். அவர்கள் தந்தையை அறிந்து தூய்மையாகும் போதே அமைதியை உலகில் ஸ்தாபிக்க முடியும். தந்தையை அறிந்து கொள்ளாததனால் அவர்கள் அநாதைகள் ஆகியுள்ளனர்.

பாடல்:
உங்கள் பாதையில் வாழ்ந்து உங்கள் பாதையிலேயே மடிவேன்...

ஓம் சாந்தி.
நீங்கள் ஓம் சாந்தியின் அர்த்தத்தை மீண்டும் மீண்டும் விளங்கப்படுத்த வேண்டும். ஏனெனில் எவரும் ஓம் சாந்தியின் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. அதே போன்று நீங்கள் “மன்மனாபவ” என அதாவது, எல்லையற்ற தந்தையை நினைவு செய்யுங்கள் என்பதையும் மீண்டும் மீண்டும் கூற வேண்டும். ‘ஓம்’ என்பதன் அர்த்தம் கடவுள் என மக்கள் கூறுகின்றனர். தந்தை கூறுகிறார்: ‘ஓம்’ என்றால் நான் ஓர் ஆத்மா, இது எனது சரீரம் என்பதாகும். பரமாத்மாவாகிய பரமதந்தையும் கூறுகிறார்: ஓம். நானும் ஓர் ஆத்மாவே, நான் பரந்தாமத்துவாசி ஆவேன். ஆத்மாக்களாகிய நீங்கள் பிறப்பு இறப்புச் சக்கரத்தினுள் வருகிறீர்கள். நான் அவ்வாறில்லை. ஆம், நான் குழந்தைகளாகிய உங்களுக்கு உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியின் சாரத்தை விளங்கப்படுத்துவதற்காக நிச்சயமாக ஒரு பௌதீக ரூபத்தில் வருகிறேன். வேறு எவராலும் இதனை விளங்கப்படுத்த முடியாது. உங்களுக்கு இந்த நம்பிக்கை இல்லை என்றால், சென்று முழு உலகிலும் அலைந்து திரிந்து சுயத்தைப் பற்றியும் உலகின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிய இந்த ஞானத்தையும் கொடுக்கின்ற வேறு எவராவது இருக்கின்றனரா என கண்டு பிடியுங்கள். பரமாத்மாவாகிய பரமதந்தையைத் தவிர வேறு எவராலும் உங்களுக்கு உலகச் சக்கரத்தின் ஆரம்பம், மத்தி, இறுதியின் இரகசியங்களைக் கூறவோ அல்லது இராஜயோகத்தைக் கற்பிக்கவோ முடியாது. எவராலும் தூய்மை அற்றவர்களைத் தூய்மையாக்கவோ முடியாது. முதலில் தேவர்களை வணங்குபவர்களுக்கு விளங்கப்படுத்துவதற்கான முயற்சியைச் செய்யுங்கள். ஆதிசனாதன தேவி தேவதா தர்மத்திற்கு உரியவர்களே, முழுமையாக 84 பிறவிகளை எடுத்தவர்கள் ஆவார்கள். அவர்களாளேயே மிக நன்றாக விளங்கிக் கொள்ள முடியும். பின்னர் வருபவர்களால் 84 பிறவிகளை எடுக்க முடியாது. தேவர்களை வணங்குபவர்களும், கீதையைக் கற்பவர்களுமே இந்த ஞானத்தைச் செவிமடுப்பார்கள். கீதையில், கடவுளின் பெயருக்குப் பதிலாக ஸ்ரீகிருஷ்ணரின் பெயரைப் புகுத்தி அவர்கள் தவறிழைத்து விட்டனர். ஆகவே, நீங்கள் கீதையைக் கற்பவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். நீங்கள் அவர்களிடம் வினவ வேண்டும்: சிவனான பரமாத்மாவாகிய பரமதந்தையுடன் உங்களது தொடர்பு என்ன? அவர் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். ஸ்ரீகிருஷ்ணர் திவ்யகுணங்களை உடையவர். அவர் தெய்வீக இராச்சியத்தைக் கொண்டிருந்தார், அந்த இராச்சியத்தில் இருந்த மக்கள் அனைவரும் தெய்வீகக் குணங்களைக் கொண்டிருந்தனர். இப்பொழுது, அவர்கள் வணங்கத்தகுதி வாய்ந்தவர்களில் இருந்து வணங்குபவர்களாக ஆகியுள்ளனர். ஆகவே, அனைத்திற்கும் முதலில் நீங்கள் ஆதிசனாதன தேவி தேவதா தர்மத்தைச் சார்ந்தவர்களை ஈடேற்றுங்கள். புண்ணியம் வீட்டிலேயே ஆரம்பிக்கிறது! நீங்கள் சிவனை வணங்குபவர்களுக்கும் விளங்கப்படுத்த வேண்டும். சிவன் நிச்சயமாக வருகின்றார். ஏனெனில் அவர்கள் அவரது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றனர். அவரே பரமாத்மாவாகிய பரமதந்தை ஆவார். அவர் நிச்சயமாக வந்து உங்களுக்கு இராஜ யோகத்தைக் கற்பிக்க வேண்டும். மனிதர் எவராலும் உங்களுக்கு இதைக் கற்பிக்க முடியாது. ஸ்ரீகிருஷ்ணரோ அல்லது பிரம்மாவோ கடவுள் என்று அழைக்கப்பட முடியாது, ஏனெனில் அனைவருக்கும் சற்கதியை அருளுபவர் தந்தை ஒருவரே ஆவார். ஏனெனில் அவரே ஞானக் கடல், அத்துடன் அவர் அனைவருக்கும் ஆசிரியரும் ஆவார். வேறு எவரும் உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியின் வரலாறையும் புவியியலையும் அறியமாட்டார்கள். தந்தை கூறுகிறார்: நானும் உயிருள்ள விதையான ஞானக் கடல் என அழைக்கப்படுகின்றேன். தலைகீழ் விருட்சத்தின் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானத்தை இந்த விதை கொண்டிருக்கிறார். இதனாலேயே நான் ஞானக்கடலாகிய சர்வ சக்திவான் என அழைக்கப்படுகிறேன். அவர் என்ன அதிகாரத்தைக் கொண்டிருக்கிறார்? அவர் வேதங்கள் அனைத்தையும் சமய நூல்களையும், கிராந் போன்றவற்றையும் தெரிந்திருக்கிறார். அவர் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். சமய நூல்களைப் போதிக்கின்ற மக்கள் சக்கரத்தின் கால எல்லை நூறாயிரக்கணக்கான ஆண்டுகளைக் கொண்டது எனக் கூறுகின்றனர். ஆனால் அது அவ்வாறிருக்க முடியாது. இது பல்வேறு சமயங்களின் மனித உலக விருட்சம் ஆகும். பாகவதத்தில், அவர்கள் அதன் கால எல்லை மிக நீண்டது என்று எழுதியுள்ளனர். பாகவதம் ஒரு சமய நூல் அல்ல. கீதையே சமய நூலாகும். அதன் மூலமே தேவ சமயம் ஸ்தாபிக்கப்பட்டது. மகாபாரதத்தின் மூலமோ அல்லது பாகவதத்தின் மூலமோ எந்த சமயமும் ஸ்தாபிக்கப்படவில்லை. அவர்கள் ஸ்ரீ கிருஷ்ணரின் வரலாறையே எழுதியுள்ளனர். தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, தேவதர்மத்தைச் சார்ந்தவர்களுக்கு அவர்கள் 84 பிறவிகளை எடுத்துள்ளனர் என்பதை விளங்கப்படுத்துங்கள். சத்திய யுகத்தில் பாரதத்தைத் தவிர வேறெந்த சமயமும் இருக்கவில்லை. பாரதமே சுவர்க்கமாக இருந்தது. பாரதமே அதிமேன்மையானதாக நினைவு கூரப்படுகிறது. தூய்மை அற்றவர்களைத் தூய்மையாக்குகின்ற பரமதந்தையாகிய பரமாத்மா சிவனின் பிறந்த இடமும் அதுவே ஆகும். ஆகவே, சிவன் இங்கு வழிபடப்படுவதுடன் அவரது பிறந்த நாளும் இங்கு கொண்டாடப்படுகிறது. அவர் நிச்சயமாகத் தூய்மையற்ற உலகிலேயே வந்திருக்க வேண்டும். அனைவரும் அழைக்கின்றனர்: ஓ தூய்மையாக்குபவரே வாருங்கள்! பாரதம் தூய்மையாக இருந்தது, பாரதவாசிகள் பின்னர் 84 பிறவிச் சக்கரத்தினுள் சென்றனர். தூய சுவர்க்கவாசிகளாக இருந்தவர்கள், இப்பொழுது தூய்மையற்ற நரகவாசிகளாகி உள்ளனர். சிவபாபா அவர்களை தூய்மை ஆக்கினார், பின்னர் இராவணன் அவர்களைத் தூய்மை அற்றவர்கள் ஆக்கினான். இந்நேரத்தில், இது இராவணனது இராச்சியம் ஆகும். ஒவ்வொரு ஆணுக்குள்ளும் பெண்ணுக்குள்ளும் ஐந்து விகாரங்களும் உள்ளன. சத்தியயுகத்தில் விகாரங்கள் இல்லை. அனைவரும் விகாரம் அற்றவர்களாக இருந்தனர். இப்பொழுது அவர்கள் அனைவரும் தூய்மை அற்றவர்கள் இதனாலேயே அவர்கள் அழைக்கின்றனர்: மீண்டும் வந்து எங்களைத் தூய்மை ஆக்குங்கள்! சத்தியயுகத்தில், நாங்கள் தூய்மையாக இருந்தோம். நாங்கள் 21 பிறவிகள் இராம இராச்சியத்தில் இருந்தோம். இப்பொழுது இது இராவண இராச்சியம். ஆகையால் அனைவரும் விகாரம் நிறைந்தவர்களாக உள்ளனர். தந்தை கூறுகிறார்: காமமே கொடிய எதிரி. அது ஆரம்பமாகியது முதல் மத்தி, இறுதி வரை துன்பத்தையே விளைவிக்கிறது. இப்பொழுது அதனை வென்று தூய்மை ஆகுங்கள்! நீங்கள் பிறவி, பிறவியாக பாவங்களைச் செய்து வந்தீர்கள். நீங்கள் அனைவரிலும் பார்க்க தமோப்பிரதானாகி உள்ளீர்கள். ஆத்மாவினுள் கலப்படம் கலக்கப்பட்டு விட்டது. முதலில் நீங்கள் சத்திய யுகத்தவர்களாகவும் பின்னர் திரேதா யுகத்தவர்களாகவும் பின்பு துவாபர யுகத்தவர்களாகவும் கலியுகத்தவர்களாகவும் ஆகினீர்கள். உங்களுக்குள் கலப்படம் கலக்கப்படும் போது, நீங்கள் தொடர்ந்தும் ஏணியில் இறங்குகிறீர்கள். இது பாரதத்திற்கு மட்டுமே உரியது. நீங்கள் சத்தியயுகத்தில் 8 பிறவிகளையும், திரேதாயுகத்தில் 12 பிறவிகளையும் எடுக்கிறீர்கள். அதே பாரத மக்களே பின்னர் சந்திர வம்சத்தவர்களாகவும் பின்பு வைசிய வம்சத்தினராகவும் ஆகுகின்றனர். ஆத்மாக்கள் தூய்மை அற்றவர்கள் ஆகுகின்றனர். தந்தை கூறுகிறார்: நான் ஒவ்வொரு சக்கரத்திலும் வந்து பாரதத்தை சுவர்க்கம் ஆக்குகிறேன். பின்பு இராவணன் அதனை நரகமாக்குகிறான். இந்த நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது. தந்தை இப்பொழுது விளங்கப்படுத்துகிறார்: சிவபாபாவே ஞானக்கடல் ஆவார். சிவனே அதி மேன்மையானவரும் அனைவராலும் வணங்கப்படுவதற்கு தகுதிவாய்ந்தவரும் ஆவார். அவரே முதலில் வணங்கப்பட்டவரும் ஆவார். அவர் எல்லையற்ற தந்தை ஆவார். நீங்கள் நிச்சயமாக எல்லையற்ற ஆஸ்தியை அவரிடமிருந்து பெறுகின்றீர்கள். அசரீரியான ஒருவரே கடவுள் என்று அழைக்கப்படுகிறார் என்பதை பாரத மக்கள் மறந்து விட்டார்கள். மக்கள் அவரை நினைவும் செய்கிறார்கள். அனைவரும் கடவுள் என்பது இல்லை. ஒரு புறத்திலே அவர்கள் கடவுளை நினைவு செய்கிறார்கள், அதன் பின்னர் அவர்களே அவரை அவதூறு செய்கிறார்கள். ஒருபுறத்திலே அவர்கள் அவரை சர்வவியாபி என்று கூறுகிறார்கள். பின்னர், ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! என அழைக்கிறார்கள். தந்தை வந்து பிரம்மாவின் வாய் வழித் தோன்றல்களாகிய பிராமணர்களுக்கே பிரம்மாவின் சரீரத்தில் வந்து விளங்கப்படுத்துகிறார். பிராமணர்களாகிய நீங்களே இப்போது உச்சிக்குடுமிகள். பிராமணர்களுக்கு மேலே சிவன் இருக்கிறார். பல்வேறு வகைப்பட்ட ரூபத்தில் அவர்கள் தேவர்கள், சத்திரியர்கள், வைசிகர்கள், சூத்திரர்களைச் சித்தரித்துள்ளார்கள். அந்த பிராமணர்கள் விகாரம் நிறைந்தவர்களாக இருப்பதால் அவர்கள் பிராமணர்களைக் குறிப்பிடவில்லை. எனவே அவர்கள் தேவர்களை விட அதிமேன்மையானவர்கள் என்று எவ்வாறு அழைக்கப்பட முடியும்? ‘தேவர்களாக ஆகப்போகின்ற பிராமணர்களுக்கு வந்தனங்கள்’ எனவும் அவர்கள் பாடுவதாக தந்தை விளங்கப்படுத்துகிறார். எப்போது அவர்களுடைய இராச்சியம் இருந்தது என்பது எவருக்குமே மிகச்சரியாகத் தெரியாது. சுவர்க்கம் எங்கிருந்து வந்தது? பாபா வந்து பிரம்மாவின் மூலமாக சுவர்க்கத்தை ஸ்தாபிக்கிறார் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். அவர் சங்கரர் மூலம் நரகத்தின் விநாசத்தைத் தூண்டுகிறார். மகாபாரத யுத்தமும் இடம்பெற்றது. அதன் மூலம் சுவர்க்க வாசல்கள் திறக்கப்பட்டன. அவர்கள் இதைப் பாடுகிறார்கள், ஆனால் அவர்கள் எதையுமே புரிந்து கொள்வதில்லை. இந்த ஞான யாகத்தில் இருந்து விநாசத்திற்கான சுவாலைகள் எழுந்ததாகவும் அவர்கள் காட்டுகிறார்கள். அப்பாகம் உண்மையாக இப்போது நடிக்கப்படுகிறது. 5000 ஆண்டுகளுக்கு முன்னர் யுத்தம் இடம் பெற்றது, அப்போது தூய்மையற்ற உலகம் அழிக்கப்பட்டது. அவர்கள் கீதையின் ஞானத்தை உபதேசிக்கும் போது, முப்படையினர் இருந்ததாகக் கூறுகிறார்கள். விஞ்ஞானம் மூலம் பீரங்கிகள் போன்றவற்றைக் கண்டு பிடித்த ஐரோப்பிய வாசிகளே யாதவர்கள் ஆவார்கள். 5000 ஆண்டுகளுக்கு முன்னர் கீதை பேசப்பட்டது. இந்த முப்படையினரும் இப்போதும் இருக்கிறார்கள் எனத் தந்தை விளங்கப்படுத்துகிறார். விநாச காலத்திலே அன்பற்ற புத்தியை உடையவர்கள் இருக்கிறார்கள் எனப் பாடப்படுகிறது. அதாவது பரமதந்தை பரமாத்மாவின் மீது அன்பற்ற புத்தியை உடையவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எதையுமே புரிந்து கொள்வதில்லை! உங்களைத் தவிர வேறெவருக்கும் எந்தவிதமான அன்பும் இல்லை. விநாச காலத்திலே எல்லோரும் ஓர் அன்பற்ற புத்தியைக் கொண்டிருக்கிறார்கள். பாண்டவர்களாகிய நீங்கள் மாத்திரமே அன்புள்ள புத்தியைக் கொண்டுள்ளீர்கள். நீங்கள் சிவபாபாவை மாத்திரமே நினைவு செய்கிறீர்கள். சிவபாபா உங்களுக்கு 21 பிறவிகளுக்கான ஓர் ஆஸ்தியைக் கொடுக்க வந்துள்ளார் என்பது உங்களுக்குத் தெரியும். உங்கள் புத்திகள் சிவபாபாவின் மீது அன்பைக் கொண்டிருக்கின்றன. வேறெவருக்கும் தந்தையைத் தெரியவே தெரியாது. எனவே, முப்படையினரும் இருக்கிறார்கள். நீங்களே பாண்டவ சேனை. இதுவே விநாச காலம் ஆகும். மரணம் உங்கள் முன்னால் நிற்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். சிவபாபா கூறுகிறார்: நீங்கள் தூய்மையாகும் போது, நீங்கள் புதிய உலகின் அதிபதிகள் ஆகுவீர்கள். சத்திய யுகத்திலே, ஒரு தேவ தர்மமே இருந்தது. வேறெந்த சமயங்களும் அங்கே இருக்கவில்லை. இப்போது, மற்றைய சமயங்கள் அனைத்தும் இருக்கின்றன, ஆனால் ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் இல்லை. அவர்கள் தம்மைத் தேவர்கள் எனக் கருதுவதில்லை. அவர்கள் கூறுகிறார்கள்: நாங்கள் தூய்மை அற்றவர்கள். அவர்கள் தேவர்களின் விக்கிரகங்களுக்கு முன்னால் சென்று அவர்களுடைய புகழைப் பாடுகிறார்கள்: 'நீங்கள் சகல தெய்வீகக் குணங்களும் நிறைந்தவர்கள், பதினாறு சுவர்க்கக் கலைகளும் நிறைந்தவர்கள்". ஆனால் அவர்களே தம்மைப் பற்றிக் கூறுகிறார்கள்: 'நான் விகாரம் நிறைந்தவன். நான் தெய்வீகக் குணங்கள் அற்று இருக்கிறேன். என்னிடம் தெய்வீகக் குணங்களே இல்லை." அவர்கள் தந்தையை நினைவு செய்கிறார்கள். நீங்களும் தந்தை ஒருவரையே நினைவு செய்ய வேண்டும். தந்தையை நினைவு செய்யாது, உங்களால் தூய்மையாக முடியாது. அப்போது உங்களால் மேன்மையான ஓர் அந்தஸ்தைப் பெறவும் முடியாது. தூய்மையற்ற உலகம் அழிக்கப்படும் போதே உலகிலே அமைதி நிலவ முடியும். மக்கள் பாரதத்திலும், உலகிலும் அமைதியை நிலைநாட்ட முயற்சி செய்கிறார்கள். எவ்வாறாயினும், அது தந்தை ஒருவரின் பணியே ஆகும். மனிதர்கள் விகாரம் நிறைந்தவர்கள். எவ்வாறு அவர்களால் அமைதியை ஸ்தாபிக்க முடியும்? ஒவ்வொரு வீட்டிலும் சண்டைகள் இடம்பெறுகின்றன. தந்தையை அறியாததால் அவர்கள் முழுமையான அநாதைகள் ஆகிவிட்டார்கள். சத்திய யுகத்திலே, அவர்கள் முற்றிலும் தூய்மையாக இருந்தார்கள். அங்கே அமைதியும், சந்தோஷமும் இருந்தது. தந்தை மீண்டும் ஒருமுறை அந்தத் தூய்மையையும், அமைதியையும், சந்தோஷத்தையும் ஸ்தாபிக்கிறார். வேறு எவராலும் அதைச் செய்ய முடியாது. பாரத மக்கள் இப்போது நரகவாசிகளாக இருக்கிறார்கள். அவர்கள் சுவர்கத்திலே வாழ்ந்த போது, சுவர்க்கத்திலேயே அவர்கள் மறுபிறவிகளை எடுத்தார்கள். இப்போது அவர்கள் தூய்மையற்று இருக்கிறார்கள். இதனாலேயே அவர்கள் தூய்மையாக்குபவரான தந்தையை நினைவு செய்கிறார்கள். இவ்வுலகிற்கு அப்பாற்பட்ட தந்தையை நினைவு செய்வதன் மூலமே உங்கள் பாவங்கள் அழிக்கப்படும் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். லௌகீகத் தந்தையிடம் இருந்து ஓர் எல்லைக்கு உட்பட்ட ஆஸ்தியையே நீங்கள் பெறுகிறீர்கள், ஆனால் இப்போது நீங்கள் இவ்வுலகிற்கு அப்பாற்பட்ட எல்லையற்ற தந்தையிடம் இருந்து எல்லையற்ற ஓர் ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். இவ்விடயங்கள் புரிந்து கொள்ளப்பட வேண்டும். இது வேறெந்த ஆன்மீகக் கூட்டத்தையும் போன்றதல்ல. அது பக்தி மார்க்கம், இது இந்த ஞானத்தின் மார்க்கம். பாபா உங்களை சுவர்க்கவாசிகள் ஆக்குகிறார் என்ற சந்தோஷம் உங்களுக்கு இருக்கிறது. முன்னைய கல்பத்திலே சுவர்க்க வாசிகளாக ஆகியவர்கள், இப்போது மீண்டும் அவ்வாறு ஆகுவார்கள். பிராமணர்கள் ஆகாது உங்களால் தேவர்கள் ஆக முடியாது. இவ்விடயங்கள் புரிந்து கொள்ளப்பட வேண்டியவை. தற்போது, பாரதத்திலே எந்தக் (தூய்மையின்) கலைகளும் இல்லை. எவருக்கும் எதுவுமே தெரியாது. எல்லோரும் கும்பகர்ணனின் உறக்கத்திலே உறங்குகிறார்கள். தந்தை இப்போது உங்களை விழித்தெழச் செய்துள்ளார். இப்போது நீங்கள் சுவர்க்க வாசிகள் ஆகுவதற்காக வந்துள்ளீர்கள். தந்தையைத் தவிர வேறெவராலும் உங்களை அவ்வாறு ஆக்க முடியாது. சத்திய யுகம் சுவர்க்கம் எனவும், இந்த கலியுகம் நரகம் எனவும் அழைக்கப்படுகிறது. அரசனையும், அரசியையும் போலவே பிரஜைகளும் இருக்கிறார்கள். இப்போது எல்லோரும் விகாரத்தின் மூலமே பிறக்கிறார்கள். தேவர்கள் ஒருபோதும் விகாரத்தின் மூலம் மறுபிறவி எடுப்பதில்லை. நீங்கள் தூய்மையாகவே இருப்பீர்கள் எனக் குழந்தைகளாகிய நீங்கள் தந்தைக்கு வாக்குறுதி அளிக்கிறீர்கள். எவ்வாறாயினும், முன்னேறிச் செல்லும் போது, நீங்கள் தோற்கடிக்கப்படுவதால், அதன் பின்னர் ஏற்கனவே சம்பாதித்த வருமானம் முழுவதும் இழக்கப்படுகிறது. நீங்கள் மிக மோசமாக பாதிப்பிற்கு உள்ளாகிறீர்கள். இந்த ஞானத்தைக் கேட்டு வியப்பிற்கு உள்ளானவர்கள், மற்றவர்களுக்கும் அதைக் கூறிவிட்டு பின்னர் ஓடிப் போய்விட்டார்கள். அவர்கள் காட்சிகளைப் பெற்றாலும், அக்காட்சிகளிலே மாயையின் குறுக்கீடுகள் பெருமளவு இருக்கின்றன. வானொலி அலைகளிலே மக்கள் குறுக்கீடுகளை ஏற்படுத்துவதால் கேட்க முடியாது இருப்பதைப் போலவே இங்கும் நடைபெறுகிறது. மாயை யோகத்திலே தடைகளை உருவாக்குகிறாள். முழு முயற்சியும் யோகத்திலேயே தங்கியுள்ளது. பாரதத்தின் புராதன யோகம் நினைவு கூரப்படுகிறது. நல்லது.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தை ஒருவரின் மீது உண்மையான அன்பைக் கொண்டிருப்பதோடு உண்மையான பாண்டவர்களும் ஆகுங்கள். மரணம் உங்கள் முன்னால் நிற்கிறது. ஆகவே தூய்மையாகி, தூய உலகின் அதிபதிகள் ஆகுங்கள்.

2. ஆரம்பம் முதல் மத்தியினூடாக, இறுதிவரை உங்களுக்குத் துன்பத்தை விளைவித்த கொடிய எதிரியாகிய காமத்தை வென்று, தூய்மை ஆகுங்கள். நினைவினால் விகாரங்கள் எனும் கலப்படத்தை அகற்றி, ஆத்மாவைச் சத்தியயுகத்தவர் ஆக்குங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின் மரணித்து வாழுகின்ற பிறப்பை உணர்ந்தவராக இருந்து, கர்ம பந்தனங்களை உறவுமுறைகளாக மாற்றுவதன் மூலம் மற்றவர்களை ஈடேற்றுவீர்களாக.

இந்தப் பிறவியிலேயே நீங்கள் மரணித்து வாழ்வதனால், உங்களின் கர்ம பந்தனங்களுக்குரிய குடும்ப உறவுகள், இப்போது ஸ்ரீமத்தைப் பின்பற்றிய வண்ணம் நீங்கள் செய்யும் சேவைக்கான உறவுமுறைகளுக்கு அடிப்படை ஆகுகின்றன. இது ஒரு கர்ம பந்தனம் இல்லை. ஆனால் சேவைக்கான உறவுமுறை. பல்வகை ஆத்மாக்களைப் பற்றிய அறிவுடன் நீங்கள் சேவை செய்வீர்களாக இருந்தால், எந்தவிதமான பந்தனங்களின் துன்பத்திற்கும் நீங்கள் உள்ளாக மாட்டீர்கள். அத்துடன், மிகவும் பாவம் செய்யும் ஆத்மாக்களிலும் மற்றவர்களைத் துன்புறுத்தும் ஆத்மாக்களிலும் பெருவெறுப்பு அல்லது பிடிக்காமல் இருக்கும் உணர்வினைக் கொண்டிருப்பதற்குப் பதிலாக, கருணை நிறைந்தவராகி, அதை சேவைக்கான உறவுமுறையாகக் கருதிய வண்ணம் கருணை உணர்வுகளுடன் சேவை செய்யுங்கள். அப்போது நீங்கள் பிரபல்யமான உலக உபகாரியாகவும் மற்றவர்களை ஈடேற்றுபவராகவும் நினைவு செய்யப்படுவீர்கள்.

சுலோகம்:
உங்களின் விருப்பமின்மை, காலத்தில் அல்லது சூழ்நிலைகளில் தங்கி இருக்குமாயின், அது தற்காலிகமான விருப்பமின்மையே ஆகும். அதனால், எல்லா வேளைக்கும் விருப்பமின்மை உடையவர் ஆகுங்கள்.

அவ்யக்த சமிக்ஞை: சதா ஆட்ட அசைக்க முடியாத மற்றும் நிலையான ஸ்திதியை அனுபவயுங்கள்.

எந்தவகையான தடை, பிரச்சனை அல்லது மாயையின் தாக்குதலை உண்மையில் ஒரு தாக்குதலாகக் கருதாமல், ஒரு விளையாட்டாகக் கருதினால், உங்களால் சந்தோஷமாக அதை வெற்றி கொள்ள முடியும். அத்துடன் உங்களின் ஸ்திதியும் நிலையாக இருக்கும். எவ்வாறாயினும், நீங்கள் அதை ஒரு தாக்குதலாகக் கருதினால், நீங்கள் பயப்படுவதுடன் குழப்பத்திற்கும் உள்ளாகுவீர்கள். வருவது மாயையின் கடமை, வெற்றியாளர் ஆகுவது உங்களின் கடமை.