22.08.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, உங்களுக்குக் கற்பிக்க வந்துள்ளவர் யார் என்பதைப் பற்றிச் சிந்தியுங்கள், உங்களுக்குச் சந்தோஷத்தில் புல்லரிக்கும். அதிமேலான தந்தையே உங்களுக்குக் கற்பிக்கின்றார். அத்தகையதொரு கல்வியைக் கற்பதை என்றுமே நிறுத்தாதீர்கள்.
கேள்வி:
குழந்தைகளாகிய நீங்கள், இப்பொழுது எந்த நம்பிக்கையை வளர்த்துள்ளீர்கள்? நம்பிக்கையுடைய புத்திகளைக் கொண்டுள்ளவர்களின் அறிகுறி என்ன?பதில்:
நீங்கள் இரட்டைக் கிரீடமணிந்த, அரசர்களுக்கு எல்லாம் அரசர்கள் ஆகுவதற்கான கல்வியைக் கற்கின்றீர்கள் என்ற நம்பிக்கையை இப்பொழுது கொண்டிருக்கிறீர்கள். கடவுளே உங்களுக்குக் கற்பித்து, உங்களை உலக அதிபதிகள் ஆக்குகின்றார். இப்பொழுது நீங்கள் அவருடைய குழந்தைகள் ஆகியுள்ளீர்கள். ஆகவே, நீங்கள் இப்பொழுது இக்கல்வியைக் கற்பதில் மும்முரமாக ஈடுபட வேண்டும். சிறு குழந்தைகள் தங்கள் பெற்றோரைத் தவிர வேறு எவரிடமும் செல்வதில்லை, நீங்களும் எல்லையற்ற தந்தையைக் கண்டுகொண்டு விட்டதால் வேறு எவரிடமும் செல்வதற்கு விரும்பக்கூடாது. நீங்கள் அந்த ஒரேயொருவரின் நினைவை மாத்திரம் கொண்டிருக்க வேண்டும்.பாடல்:
அதிகாலை வேளையில் வந்துள்ளவர் யாரோ?ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய நீங்கள் பாடலைக் கேட்டீர்கள். யார் வந்துள்ளார், உங்களுக்குக் கற்பிப்பவர் யார்? இது புரிந்துகொள்ளப்பட வேண்டிய ஒரு விடயம். சிலர் மிகவும் திறமைசாலிகள், சிலர் சற்றுத் திறமை குறைந்தவர்கள். நன்றாகக் கற்றுத் தேர்ந்தவர்கள், மிகவும் திறமைசாலிகள் எனக் கூறப்படுகிறார்கள். சமயநூல்களைக் கற்றவர்கள் பிறரிடமிருந்து அதிகளவு மரியாதையைப் பெறுகின்றார்கள். குறைவாகக் கற்றவர்கள், குறைவாகவே மரியாதையைப் பெறுகின்றார்கள். உங்களுக்குக் கற்பிக்க வந்துள்ளவர் யார் என்ற பாடலின் வார்த்தைகளை நீங்கள் கேட்டீர்கள். ஆசிரியரே (கடவுள்) வந்துள்ளார். பாடசாலையில் கற்பவர்களுக்கு, தங்கள் ஆசிரியர் எப்பொழுது வருகின்றார் என்பது தெரியும். இங்கு வந்துள்ளவர் யார்? இதைப் பற்றிச் சிந்திக்கையில் உங்களுக்குப் புல்லரிக்க வேண்டும். அதிமேலான தந்தை உங்களுக்குக் கற்பிப்பதற்கு மீண்டும் ஒருமுறை வந்துள்ளார். இது புரிந்துகொள்ளப்பட வேண்டிய ஒரு விடயம். இதுவும் பாக்கியத்திற்கான கேள்வியாகும். உங்களுக்குக் கற்பிப்பவர் யார்? கடவுள்! அவர் வந்து உங்களுக்குக் கற்பிக்கின்றார். ஒருவர் எவ்வளவு மேன்மையானதொரு கல்வியைக் கற்றாலும், அவர் உடனடியாகவே அக்கல்வியை கைவிட்டு, கடவுளுடன் கற்பதற்காக வரவேண்டும் என மனச்சாட்சி கூறுகின்றது. அவர் ஒரு விநாடியில் அனைத்தையும் கைவிட்டு, கடவுளுடன் கற்பதற்கு வர வேண்டும். பாபா விளங்கப்படுத்தி உள்ளார்: இப்பொழுது நீங்கள் அதிமேன்மையான சங்கமயுகத்தவர் ஆகிவிட்டீர்கள். இலக்ஷ்மியும் நாராயணனும் அனைவரையும் விட அதிமேன்மையானவர்கள். அவர்கள் தங்கள் அந்தஸ்தைப் பெறுவதற்கு என்ன கல்வியைக் கற்றார்கள் என்பதை உலகிலுள்ள எவருமே அறிய மாட்டார்கள். அந்த அந்தஸ்தைப் பெறுவதற்காகவே நீங்கள் கற்கின்றீர்கள். உங்களுக்குக் கற்பிப்பவர் யார்? கடவுள்! ஆகவே, நீங்கள் உங்கள் ஏனைய கல்வி அனைத்தையும் கைவிட்டு, இக்கல்வியைக் கற்பதில் மும்முரமாக வேண்டும். ஏனெனில் ஒரு சக்கரத்தின் பின்னர் மாத்திரமே தந்தை மீண்டும் வருவார். தந்தை கூறுகின்றார்: நான் 5000 வருடங்களுக்கு ஒருமுறை உங்களுக்கு நேரடியாகக் கற்பிப்பதற்கு வருகின்றேன். இது ஓர் அற்புதமே! நீங்கள் ஓர் அந்தஸ்தைப் பெறும்படி செய்வதற்கே, கடவுள் உங்களுக்குக் கற்பிக்கின்றார் என நீங்கள் கூறுகின்றீர்கள். அப்படியிருந்தும், சிலர் கற்பதில்லை. அப்பொழுது தந்தை கூறுவார்: இவர் விவேகமற்றவர், அவர் தந்தையின் கல்வியில் முழுக்கவனமும் செலுத்துவதில்லை. அவர் தந்தையை மறந்து விடுகின்றார். நீங்கள் கூறுகின்றீர்கள்: “பாபா, நான் மறந்து விடுகின்றேன். நான் ஆசிரியரையும் மறந்து விடுகின்றேன்”. இவை மாயையின் புயல்கள். ஆனாலும், நீங்கள் இக் கல்வியைக் கற்க வேண்டும். கடவுளே இக்கல்வியைக் கற்பிப்பதால் நீங்கள் இதில் முற்றிலும் மும்முரமாக உங்களை ஈடுபடுத்த வேண்டுமென மனச்சாட்சி கூறுகின்றது. சிறு குழந்தைகளே கற்க வேண்டும். ஒவ்வொருவரும் ஓர் ஆத்மாவே. சரீரமே பெரியதாக அல்லது சிறியதாக உள்ளது. ஆத்மா கூறுகின்றார்: நான் உங்கள் இளைய குழந்தையாகி உள்ளேன். அச்சா, இப்பொழுது நீங்கள் எனக்கு உரியவர்கள், ஆகையால் நீங்கள் கற்கவேண்டும். நீங்கள் இன்னமும் பால் குடிக்கின்ற சிறு குழந்தைகள் அல்ல. கல்வியே முதலில் இருக்க வேண்டும். இதற்குப் பெருமளவு கவனம் செலுத்தப்பட வேண்டும். மாணவர்கள் இங்கு பரம ஆசிரியரிடம் வருகிறார்கள். உங்களுக்குக் கற்பிப்பதற்காக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். எனினும், இந்தப் பரம ஆசிரியரும் இங்கே இருக்கிறார். “ஒரு சூளையில் ஏழு நாட்கள்” என்பது நினைவு கூரப்பட்டுள்ளது. தந்தை கூறுகின்றார்: தூய்மையாக இருந்து, என்னை நினைவு செய்யுங்கள். நீங்கள் தெய்வீகக் குணங்களைக் கிரகித்தால், நீங்கள் இவ்வாறு ஆகுவீர்கள். நீங்கள் எல்லையற்ற தந்தையை நினைவுசெய்ய வேண்டும். பெற்றோரைத் தவிர, வேறு ஒருவர் சிறு குழந்தையைத் தூக்க முயற்சித்தால், அக்குழந்தை அவர்களிடம் செல்லமாட்டார். நீங்களும் இப்பொழுது எல்லையற்ற தந்தைக்கு உரியவர்கள். ஆகவே அவர் எவ்வாறானவராக இருந்தாலும், நீங்கள் வேறு எவரையும் பார்க்க விருப்பம் கொள்ளக்கூடாது. நீங்கள் அதிமேலான தந்தைக்கு உரியவர் என்பதை அறிவீர்கள். அவர் உங்களை இரட்டைக்கிரீடம் அணிந்த அரசர்களுக்கு எல்லாம் அரசர்கள் ஆக்குகின்றார். “மன்மனாபவ” என்பது ஒளிக்கீரிடமும், “மத்தியாஜிபவ” என்பது இரத்தினங்கள் பதிக்கப்பட்ட கிரீடமும் ஆகும். இக்கல்வியின் மூலம் நீங்கள் உலக அதிபதிகள் ஆகவுள்ளீர்கள் என்ற நம்பிக்கையை வளர்த்துள்ளீர்கள். 5000 வருடங்களுக்கு ஒருமுறை வரலாறு மீண்டும், மீண்டும் இடம்பெறும்: நீங்கள் ஓர் இராச்சியத்தைப் பெறவுள்ளீர்கள். ஏனைய ஆத்மாக்கள் அனைவரும் தங்கள் வீடான அமைதி தாமத்திற்குச் செல்வார்கள். ஆத்மாக்களாக, ஆதியில் நீங்கள் தந்தையுடன் வீட்டில் வாழ்கின்றீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கின்றீர்கள். இப்பொழுது தந்தைக்கு உரியவர் ஆகுவதால், நீங்கள் சுவர்க்க அதிபதிகள் ஆகுகின்றீர்கள். பின்னர் தந்தையை மறப்பதனால், நீங்கள் அனாதைகள் ஆகுகின்றீர்கள். இந்த நேரத்தில் பாரதமக்கள் அனைவரும் அனாதைகள். அனாதைகள் என்றால் பெற்றோர் இல்லாதவர்கள், அவர்கள் தொடர்ந்தும் தடுமாறித் திரிகிறார்கள். நீங்கள் இப்பொழுது தந்தையைக் கண்டுகொண்டீர்கள். இப்பொழுது உங்களுக்கு உலகச்சக்கரம் முழுவதும் தெரியும். ஆகவே உங்களுக்குச் சந்தோஷம் உள்ளாரப் பொங்கி எழவேண்டும். நாங்களே எல்லையற்ற தந்தையின் குழந்தைகள். பரமாத்மாவாகிய பரமதந்தை, பிரஜாபிதா பிரம்மா மூலம் பிராமணர்களின் புதிய உலகைப் படைக்கின்றார். இது மிகவும் இலகுவாகப் புரிந்து கொள்ளப்படக்கூடிய ஒன்றாகும். உங்கள் விக்கிரகங்களும் உள்ளன. பல்வகை ரூபமும் உருவாக்கப்பட்டுள்ளது. அது உங்கள் 84 பிறவிகளின் கதையைக் காட்டுகிறது. நாங்கள் தேவர்களாகி, பின்னர் சத்திரியர்கள், வைசியர்கள், அதன்பின்னர் சூத்திரர்கள் ஆகுகின்றோம். இது மனிதர்கள் எவருக்கும் தெரியாது. ஏனெனில், அவர்கள் பிராமணர்களினதும், பிராமணர்களுக்குக் கற்பிக்கின்ற தந்தையினதும் பெயர்கள், சுவடுகள் அனைத்தையும் மறையச் செய்துள்ளார்கள். உங்களால் இவ்விடயங்கள் அனைத்தையும் ஆங்கிலத்தில் மிக நன்றாக விளங்கப்படுத்த முடியும். ஆங்கிலத்தைப் புரிந்து கொள்பவர்கள், இவ்விடயங்களை மொழிபெயர்த்து, பிறருக்கு அவற்றை விளங்கப்படுத்த வேண்டும். தந்தை ஞானம் நிறைந்தவர். அவர் மாத்திரமே எவ்வாறு உலகச்சக்கரம் சுழல்கின்றது என்ற ஞானத்தைக் கொண்டுள்ளார். இது கல்வியாகும். யோகமானது தந்தையை நினைவுசெய்தல் எனவும் அழைக்கப்படுகின்றது. இது ஆங்கிலத்தில் இணைப்பு என அழைக்கப்படுகின்றது. இது தந்தையுடனான இணைப்பு, ஆசிரியருடனான இணைப்பு, குருவுடனான இணைப்பு ஆகும். இது தந்தையாகிய கடவுளுடனான இணைப்பு ஆகும். தந்தையே கூறுகின்றார்: என்னை நினைவு செய்யுங்கள். சரீரதாரிகளை நினைவு செய்யாதீர்கள். மனிதர்கள் குருமார்களை ஏற்றுக்கொண்டு, சமயநூல்களையும் கற்கின்றார்கள். அவர்களிடம் எந்த இலக்கோ அல்லது குறிக்கோளோ இல்லை. அதன்மூலம் அவர்கள் சற்கதி பெறுவதில்லை. தந்தை கூறுகின்றார்: நான் அனைவரையும் திரும்பவும் வீட்டிற்கு அழைத்துச் செல்லவே வந்துள்ளேன். இப்பொழுது நீங்கள் உங்கள் புத்தியின் யோகத்தைத் தந்தையுடன் இணைத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுது மாத்திரமே நீங்கள் அங்கு சென்றடைவீர்கள். அவரை (கடவுளை) நன்றாக நினைவு செய்வதன் மூலம் நீங்கள் உலக அதிபதிகள் ஆகுகின்றீர்கள். இலக்ஷ்மியும், நாராயணனும் வைகுந்தத்தின் அதிபதிகளாக இருந்தார்கள். இதனை விளங்கப்படுத்துவது யார்? தந்தை ஞானம் நிறைந்தவர் என அழைக்கப்படுகின்றார். மனிதர்கள் அவரை அந்தர்யாமி (எங்களுக்குள் இருக்கின்ற அனைத்தையும் அறிபவர்) எனக் கூறுகின்றார்கள். உண்மையில், அந்தர்யாமி என்ற வார்த்தையில் எந்தப் பொருளும் இல்லை. ஒவ்வொரு சரீரத்திற்குள்ளும் ஓர் ஆத்மா வசிக்கின்றார். ஆத்மா என்ன செய்கிறார் என அனைவரும் அறிவார்கள். மனிதர்கள் அனைவரும் அந்தர்யாமி. ஆத்மாவே கற்கின்றார். தந்தை குழந்தைகளாகிய உங்களை ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆக்குகின்றார். ஆத்மாக்களாகிய நீங்களே அசரீரி உலகவாசிகள் ஆவீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் மிகவும் சின்னஞ் சிறியவர்கள். நீங்கள் உங்கள் பாகங்களை நடிப்பதற்காகப் பல தடவைகள் இங்கே வந்துள்ளீர்கள். தந்தை கூறுகின்றார்: நான் ஒரு புள்ளி. என்னை வழிபட முடியாது. அவர்கள் ஏன் அதனைச் செய்கிறார்கள்? அதற்கான தேவை எதுவும் இல்லை. ஆத்மாக்களாகிய உங்களுக்குக் கற்பிப்பதற்காகவே நான் வருகிறேன். நான் உங்களுக்கு இராச்சியத்தைக் கொடுக்கிறேன். பின்னர், நீங்கள் இராவணனின் இராச்சியத்திற்குள் செல்லும்பொழுது, என்னை நீங்கள் முற்றாக மறந்து விடுகின்றீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் உங்கள் பாகங்களை நடிப்பதற்காக முதலில் கீழே வருகிறீர்கள். நாங்கள் 8.4 மில்லியன் பிறவிகளை எடுக்கின்றோம் என மனிதர்கள் கூறுகின்றார்கள். ஆனால் தந்தை கூறுகின்றார்: அதிகபட்சம் 84 பிறவிகளே உள்ளன. நீங்கள் வெளிநாடுகளுக்குச் சென்று இவ்விடயங்களைக் கூறினால், தங்கள் நாட்டிற்கு வந்து, இந்த ஞானத்தைத் தங்களுக்குக் கற்பிக்குமாறு அவர்கள் உங்களை கேட்பார்கள். அவர்கள் கூறுவார்கள்: அங்கு நீங்கள் 1000 ரூபாய்களையே பெறுகின்றீர்கள். ஆனால் நாங்கள் உங்களுக்கு 10 ஆயிரம் முதல் 20,000 ரூபாய்களைக் கொடுப்போம். எங்களுக்கும் இந்த ஞானத்தைக் கொடுங்கள். தந்தையாகிய கடவுளே ஆத்மாக்களாகிய எங்களுக்குக் கற்பிக்கின்றார். ஆத்மாவே நீதிபதி போன்றவர் ஆகுகின்றார். மனிதர்கள் அனைவரும் சரீர உணர்வு உடையவர்கள். அவர்களில் எவருக்குமே இந்த ஞானம் இல்லை. பல பெரும் தத்துவஞானிகள் இருந்த பொழுதிலும், அவர்களில் எவருக்குமே இந்த ஞானம் இல்லை. தந்தையாகிய அசரீரியான கடவுளே எங்களுக்குக் கற்பிப்பதற்கு வருகின்றார். நாங்கள் அவருடன் கற்கின்றோம். இவ்விடயங்களை அவர்கள் கேட்கும் பொழுது, வியப்படைவார்கள். இந்த விடயங்களைப் பற்றி எவருமே கேட்டதோ அல்லது வாசித்ததோ இல்லை. ஒரேயொரு தந்தை மாத்திரமே விடுதலை அளிப்பவரும், வழிகாட்டியும் ஆவார். அவர் விடுதலை அளிப்பவர் என்றால், நீங்கள் ஏன் கிறிஸ்துவை நினைவு செய்கின்றீர்கள்? இவ்விடயங்களை அவர்களுக்கு மிகத்தெளிவாக விளங்கப்படுத்துங்கள், அவர்கள் வியப்படைவார்கள். அவர்கள் கூறுவார்கள்: குறைந்தபட்சம் எங்களை இவ்விடயங்களைச் செவிமடுக்க அனுமதியுங்கள். வைகுந்தம் ஸ்தாபிக்கப்படுகின்றது. அதற்காகவே இந்த மகாபாரத யுத்தம் உள்ளது. தந்தை கூறுகின்றார்: நான் உங்களை இரட்டைக்கிரீடம் அணிந்த அரசர்களுக்கு எல்லாம் அரசர்கள் ஆக்குகின்றேன். அங்கு தூய்மை, அமைதி, செழிப்பு அனைத்தும் உள்ளன. அது எத்தனை வருடங்களுக்கு முன் இருந்தது என்பதைப் பற்றிச் சிந்தியுங்கள். கிறிஸ்துவிற்கு 3000 வருடங்களுக்கு முன்னர் அது அவர்கள் இராச்சியமாக இருந்தது. இது ஆன்மீக ஞானம் என நீங்கள் கூறுகின்றீர்கள். இவர் அந்தப் பரமதந்தையின் நேரடிக் குழந்தை ஆவார். நாங்கள் அவரிடம் இருந்தே இராஜயோகத்தைக் கற்கின்றோம். இந்த ஞானம் உலக வரலாறும், புவியியலும் எவ்வாறு மீண்டும், மீண்டும் இடம்பெறுகின்றது என்பதற்கு உரியது. ஆத்மாக்களாகிய எங்கள் ஒவ்வொருவரிலும் 84 பிறவிகளின் முழுப் பாகமும் பதியப்பட்டுள்ளது. இந்த யோகசக்தியின் மூலம் ஆத்மாக்கள் சதோபிரதானாகி, சத்தியயுகத்திற்குச் செல்கின்றார்கள். ஆகவே, அவர்களுக்கு ஓர் இராச்சியம் தேவைப்படுகின்றது. பழைய உலகின் விநாசமும் இடம்பெற உள்ளது. அது உங்கள் முன்னால் உள்ளது. பின்னர் அங்கு ஒரேயொரு தர்மத்தை உடைய உலகம் இருக்கும். இது பாவாத்மாக்களின் உலகம். நீங்கள் இப்பொழுது தூய்மையானவர்கள் ஆகுகின்றீர்கள். அவர்களிடம் கூறுங்கள்: நாங்கள் இந்த நினைவுச் சக்தியின் மூலம் தூய்மை ஆகுகின்றோம், அதன்பின்னர் ஏனைய அனைத்தும் அழிக்கப்பட்டுவிடும். இயற்கை அனர்த்தங்களும் இடம்பெறும். நாங்கள் இவை அனைத்தையும் தெளிவாக உணர்ந்து கொண்டதுடன், தெய்வீகக் காட்சிகளின் மூலம் அதனைக் கண்டும் உள்ளோம். இவை அனைத்தும் அழிக்கப்படவுள்ளன. தந்தை தேவர்களின் உலகை ஸ்தாபிப்பதற்கு வந்துள்ளார். அவர்கள் இதனைக் கேட்கும் பொழுது கூறுவார்கள்: ஓஹோ, இவர்கள் தந்தையாகிய கடவுளின் குழந்தைகளாக இருக்க வேண்டும். இந்த யுத்தம் இடம்பெறும் என்றும், இயற்கை அனர்த்தங்களும் இருக்கும் என்றும் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அப்பொழுது நிலைமை எவ்வாறாக இருக்கும்? பெரிய கட்டடங்கள் போன்றவை அனைத்தும் விழ ஆரம்பிக்கும். அவர்கள் அக்குண்டுகளை 5000 வருடங்களுக்கு முன்னரும் தங்களின் சொந்த விநாசத்திற்காக உருவாக்கினார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும். குண்டுகள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளன. உலகை வெல்வதற்கான உங்கள் யோக சக்தி எவ்வாறானது? எவருக்குமே இது தெரியாது. அவர்களிடம் கூறுங்கள்: விஞ்ஞானம் உங்களை அழிக்கின்றது. நாங்கள் தந்தையுடன் யோகம் செய்கின்றோம். மௌன சக்தியின் மூலம் நாங்கள் சதோபிரதானாகி, உலகை வெற்றி கொள்கின்றோம். தந்தை மாத்திரம் தூய்மையாக்குபவர். அவர் நிச்சயமாக தூய உலகை அவர் செல்வதற்கு முன்னர் ஸ்தாபிப்பார். இது நாடகத்தில் ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்டது. அவர்கள் அந்தக் குண்டுகளை உருவாக்கியதால், அவற்றை அவர்கள் விட்டுவிடப் போவதில்லை. இவ்வாறாக நீங்கள் விளங்கப்படுத்தும் பொழுது, நீங்கள் ஓர் அதிகாரி என்பதையும், கடவுள் வந்து உங்களுக்குள் பிரவேசித்துள்ளார் என்பதையும் அவர்கள் உணர்வார்கள். இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நீங்கள் அத்தகைய விடயங்களை அவர்களுக்குக் கூறும்பொழுது, அவர்கள் சந்தோஷம் அடைவார்கள். எவ்வாறு ஆத்மாக்களில் அவர்களின் பாகங்கள் பதியப்பட்டுள்ளன என்பது நாடகத்தில் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்து ஒரு சமயத்தை ஸ்தாபிப்பதற்காக அவருக்குரிய சொந்த நேரத்தில் கீழிறங்கி வருவார். அத்தகைய அதிகாரத்துடன் நீங்கள் விளங்கப்படுத்தும் பொழுது, தந்தை குழந்தைகள் அனைவருக்கும் விளங்கப்படுத்துகின்றார் என அவர்கள் புரிந்து கொள்வார்கள். ஆகவே குழந்தைகளாகிய நீங்கள் உங்களை இக்கல்வியில் ஈடுபடுத்த வேண்டும். தந்தை, ஆசிரியர், சற்குரு அனைவரும் ஒரேயொருவரே ஆவார். அவர் உங்களுக்கு எவ்வாறு இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார் என்பதை நீங்களும் புரிந்து கொள்கின்றீர்கள். அவர் அனைவரையும் தூய்மையாக்கி, திரும்பவும் வீட்டிற்கு அவர்களை அழைத்துச் செல்கின்றார். தேவ வம்சம் இருந்த பொழுது நீங்கள் தூய்மையாகவே இருந்தீர்கள். நீங்கள் இறைவர்களும் இறைவியர்களுமாக இருந்தீர்கள். நீங்கள் அவர்களுடன் பேசும் முறையில் மிகவும் திறமைசாலிகளாக இருப்பதுடன், விரைவாகவும் பேசவேண்டும். ஏனைய ஆத்மாக்கள் அனைவரும் இனிய வீட்டிலேயே வசிக்கின்றார்கள் என அவர்களிடம் கூறுங்கள். தந்தையால் மாத்திரம் உங்களைத் திரும்பவும் வீட்டிற்கு அழைத்துச் செல்ல முடியும். அந்தத் தந்தையே அனைவருக்கும் சற்கதியை அருள்பவர். பாரதமே அவரின் பிறப்பிடமாகும். இந்த யாத்திரை மிகவும் மகத்தானது. அனைவரும் தமோபிரதான் ஆகவேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். அனைவருமே மறுபிறவி எடுக்க வேண்டும். இன்னமும் எவராலும் வீடு திரும்ப முடியாதுள்ளது. அத்தகைய விடயங்களை நீங்கள் விளங்கப்படுத்தும் பொழுது, மக்கள் மிகவும் வியப்படைவார்கள். பாபா கூறுகின்றார்: அவர்களுடன் ஒரு தம்பதியினராக நீங்கள் பேசும்பொழுது அவர்களால் உங்களை மிக நன்றாகப் புரிந்து கொள்ள முடியும். முதலில் பாரதத்தில் தூய்மை இருந்தது. எனவே நீங்கள் எவ்வாறு தூய்மை அற்றவர்கள் ஆகினீர்கள்? இதனையும் நீங்கள் அவர்களிடம் கூற முடியும். பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள், பின்னர் பூஜிப்பவர்கள் ஆகுகின்றார்கள். அவர்கள் தூய்மை அற்றவர்கள் ஆகும்பொழுது, அவர்கள் தங்களையே வழிபட ஆரம்பிக்கின்றார்கள். அரசர்கள் தங்கள் வீட்டில் தேவர்களின் விக்கிரகங்களை வைத்திருக்கின்றார்கள். ஒளிக்கிரீடம் இல்லாத தூய்மையற்ற அரசர்கள், இரட்டைக் கிரீடமணிந்த தேவர்களின் விக்கிரகங்களைப் பூஜிக்கின்றார்கள். அந்த அரசர்கள் பூஜிப்பவர்கள். அவர்களை இறைவர், இறைவியர்கள் என அழைக்க முடியாது. ஏனெனில், அவர்கள் தேவர்களைப் பூஜிக்கின்றார்கள். அவர்கள் பூஜிக்கத்தகுதி வாய்ந்தவர்களாகி, பின்னர் பூஜிப்பவர்கள் ஆகுகின்றார்கள். இராவண இராச்சியம் ஆரம்பிக்கும் பொழுது, அவர்கள் தூய்மை அற்றவர்கள் ஆகுகின்றார்கள். இப்பொழுது இது இராவண இராச்சியம். நீங்கள் அவர்களுடன் அமர்ந்திருந்து இவ்விடயங்களை விளங்கப்படுத்தினால் அவர்கள் பெரும் மகிழ்ச்சியை அனுபவம் செய்வார்கள். ஒரு காரின் இரண்டு சில்லுகள், அதாவது ஒரு தம்பதியினர் சேர்ந்து விளங்கப்படுத்தும் பொழுது, அவர்களால் பல அற்புதங்களை நிகழ்த்த முடியும். தம்பதியினராகிய நாங்கள் பூஜிக்கத்தகுதி வாய்ந்தவர்களாக ஆகுகின்றோம். நாங்கள் எங்கள் ஆஸ்திகளான தூய்மை, அமைதி, செழிப்பு ஆகியவற்றைப் பெறுகின்றோம். உங்கள் படங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இது கடவுளின் குடும்பம் ஆகும். தந்தையின் குழந்தைகளும், அவரது பேரனும் பேத்திமார்களுமே உள்ளனர். அவ்வளவுதான். வேறு எந்த உறவுமுறையும் இல்லை. இது புதிய உலகம் என அழைக்கப்படுகின்றது. அதில் சிலரே தேவர்களாக ஆகுகின்றார்கள். பின்னர் விரிவாக்கம் படிப்படியாக இடம்பெறுகின்றது. இந்த ஞானம் புரிந்து கொள்ளப்பட வேண்டும். வியாபாரத்தில் இந்த பாபா ஒரு பெரிய வியாபாரியாக இருந்தார். அவர் எதிலும் அக்கறைப்படவில்லை. தந்தை கற்பித்ததையும், விநாசம் முன்னால் உள்ளதையும் பார்த்த பொழுது, அவர் உடனடியாகவே அனைத்தையும் துறந்தார். தான் ஓர் இராச்சியத்தைப் பெறப் போவதை அவர் தெளிவாகப் புரிந்து கொண்டார். எனவே, இந்தக் “கழுதைத்தனத்தினால்” என்ன பயன் உள்ளது? கடவுள் உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். ஆகவே, நீங்கள் மிக நன்றாகக் கற்க வேண்டும். அவருடைய வழிகாட்டல்களைப் பின்பற்றுங்கள். தந்தை கூறுகின்றார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவுசெய்யுங்கள். தந்தையை நீங்கள் மறந்து விடுகின்றீர்கள் என்பதையிட்டு நீங்கள் வெட்கப்படவில்லையா? அந்தப் போதை உங்களிடம் இல்லையா? சிலர் புத்துணர்ச்சி ஊட்டப்பட்டு இங்கிருந்து செல்கின்றார்கள். பின்னர் அவர்கள் சோடாநீர் போன்று ஆகுகின்றார்கள். இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் சகல கிராமங்களுக்கும் சேவை செய்வதற்காக முயற்சி செய்கிறீர்கள். பாபா கூறுகின்றார்: அனைத்திற்கும் முதலில், ஆத்மாக்களின் தந்தை யார் என அவர்களிடம் கூறுங்கள். கடவுள் அசரீரியானவர். அவர் மாத்திரமே இந்தத் தூய்மையற்ற உலகை, தூய்மையாக்குவார். அச்சா.இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும் ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. கடவுளே, பரம ஆசிரியராகி, எங்களுக்குக் கற்பிக்கின்றார். ஆகவே மிக நன்றாகக் கற்று, அவரின் வழிகாட்டல்களைப் பின்பற்றுங்கள்.2. நீங்கள் மௌன சக்தியைச் சேமித்துக் கொள்ளும் அளவிற்குத் தந்தையுடன் அத்தகைய யோகத்தைக் கொண்டிருங்கள். மௌனச் சக்தி மூலம் உலகை வெற்றி கொள்ளுங்கள். தூய்மை அற்றவர்களில் இருந்து தூய்மையானவர்கள் ஆகுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் மாஸ்ரர் அருள்பவராகவும் ஆசீர்வாதங்களை அருள்பவர்களாகவும் ஆகி, உங்களின் நேரத்தையும் எண்ணங்களையும் சேவைக்காக அர்ப்பணிப்பீர்களாக.இப்போது, உங்களின் நேரத்தை உங்களுக்கான அற்ப விடயங்களிலும் உங்களின் சரீரத்திற்காகவும் உங்களின் மனதிற்காகவும் உங்களின் ஆன்மீக முயற்சிக்காகவும் அல்லது உறவுமுறைகளின் பொறுப்புக்களை நிறைவேற்றுவதிலும் பயன்படுத்துவதற்குப் பதிலாக, இந்தச் சேவை செய்வதில் அதை அர்ப்பணியுங்கள். இப்போது இந்த அர்ப்பணிக்கும் விழாவைக் கொண்டாடுங்கள். ஒவ்வொரு மூச்சிலும் சேவை செய்வதற்கான அன்பு இருக்க வேண்டும். அத்துடன் சேவை செய்வதில் மூழ்கி இருங்கள். சேவை செய்வதில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வதன் மூலம், நீங்கள் இயல்பாகவே சுய முன்னேற்றத்திற்கான பரிசைப் பெறுவீர்கள். உலக நன்மையில் சுய நன்மை அடங்கியுள்ளது. ஆகவே, ஒரு சதா மகாதானியாகவும் மாஸ்ரர் அருள்பவராகவும் ஆசீர்வாதங்களை அருள்பவராகவும் ஆகுங்கள்.
சுலோகம்:
உங்களின் ஆசைகளைக் குறையுங்கள். அப்போது உங்களின் பிரச்சனைகள் குறைந்துவிடும்.அவ்யக்த சமிக்கை: ஓர் இலகு யோகியாக இருப்பதற்கு, இறை அன்பை அனுபவிப்பவராக இருங்கள்.
உலகரீதியாக, இரண்டு நபர்கள் ஒருவரை ஒருவர் நேசிக்கும்போது, அவர்களின் முகம், கண்கள் மற்றும் வார்த்தைகளில் இருந்து அவர்கள் அன்பிலே தங்களை மறந்திருப்பதை, அவர்கள் காதலர்கள் என்பதை உங்களால் சொல்ல முடியும். அதேபோல், நீங்கள் மேடையில் செல்லும்போது, எந்தளவிற்குத் தந்தையின் அன்பு உங்களிடம் இருந்து வெளிப்படுகிறதோ, அந்தளவிற்கு, அன்பின் அம்புகள் ஆத்மாக்களைத் தாக்கி, அவர்களை அன்பால் காயப்படுத்தும்.