23.05.26        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே இராவணன் உங்களைப் அதிகளவு வேதனைப்பட வைத்துள்ளதால் பக்தர்களின் பாதுகாவலராகிய கடவுள் உங்களை வேதனையில் இருந்து அகற்றுவதற்கு வந்துள்ளார்.
கேள்வி:
தகுதிவாய்ந்த குழந்தைகளின் இரு பிரதானமான அறிகுறிகள் யாவை?

பதில்:
1)தகுதிவாய்ந்த குழந்தைகள் சதா தாயையும் தந்தையையும் பின்பற்றி தங்கள் சிம்மாசனத்தைக் கோருகிறார்கள். அவர்கள் முயற்சி செய்வதில் அதிகளவு ஈடுபட்டுள்ளார்கள். 2) அவர்கள் தந்தையுடன் மிகவும் நேர்மையாக இருக்கிறார்கள். நேர்மையான இதயம் உள்ளவர்கள் சதா ஸ்ரீமத்தைப் பின்பற்றுகிறார்கள். உள்ளார்ந்தமாக நேர்மை இல்லாவிட்டால் உங்களால் நினைவில் நிலைத்திருக்க முடியாது.

பாடல்:
அப்பாவிப் பிரபுவைப் போன்று தனித்துவமானவர் எவரும் இல்லை.

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய நீங்கள் பக்தி மார்க்கத்தின் இப்பாடலைக் கேட்டீர்கள். பக்தர்களுக்கு இப்பாடலின் அர்த்தம் புரியாது. நீங்கள் கடவுளின் குழந்தைகள் ஆகிவிட்டீர்கள். கடவுள் பக்தர்களின் பாதுகாவலர், நீங்களும் பக்தர்களின் பாதுகாவலர்களே, நீங்கள் பக்தர்களைப் பாதுகாக்கிறீர்கள். தம்மை வந்து பாதுகாக்குமாறு கடவுளை அவர்கள் அழைப்பதற்கு பக்தர்களுக்கு ஏற்பட்டுள்ள அனர்த்தங்கள் என்ன? பக்தர்கள் இராவணனிடம் இருந்து அதிகளவு துன்பத்தைப் பெறுகிறார்கள். இராவண சமுதாயம் தமது துன்பங்கள் அனைத்தாலும் அதிகளவு வேதனையை அனுபவம் செய்கிறது. ஆகவே அவர்கள் கள்ளங்கபடமற்ற பிரபுவை நினைவு செய்கிறார்கள். அது இராவண சமுதாயம், இது இராமரின் சமுதாயம் ஆகும். பக்தர்களுக்கு தமது பாதுகாவலர் யார் என்பது தெரியாது. போலாநாத்தே பாதுகாவலர் என அவர்கள் பாடினாலும் அவர் எவ்வாறு அவர்களைப் பாதுகாக்கிறார் என்பது அவர்களுக்குத் தெரியாது. கள்ளங்கபடமற்ற பிரபுவான சிவபாபா சீரழிந்தவற்றை சீராக்குகிறார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். கடவுள் யார் என்பதை உலகம் அறியாதிருக்கிறது. அவர்கள் கடவுளை அறிந்திருந்தால் அவரது படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியையும் அவர்கள் அறிந்திருப்பார்கள். அவர்களுக்குக் கடவுளையோ அல்லது அவருடைய படைப்பை பற்;றியோ எதுவும் தெரியாது. ஆகவே அத்தகைய மனித சமுதாயம் குருடர்கள் என்றே அழைக்கப்படுகிறார்கள். மறுபுறத்தில் தெய்வீகப் பார்வையைப் பெற்றுவிட்ட நீங்கள் அனைவரும் இருக்கிறீர்கள். உங்கள் பெயரே பிரம்மா குமாரர்களும் குமாரிகளும் ஆகும். பெயர்ப்பலகையில் எழுதப்பட்டுள்ள பெயரானது “பிரம்மா குமாரிகள் உலக ஆன்மீகப் பல்கலைக்கழகம்” என்பதாகும். அது வெறுமனே பிரம்மாகுமாரிகள் என்று இருக்க முடியாது. பிரம்மாவே மக்களின் தந்தையாவார். அவருக்கு மகன்கள், மகள்கள் இருசாராருமே இருக்கிறார்கள். பிரஜாபிதா பிரம்மாவுக்கு மாத்திரமே பல குழந்தைகள் இருக்க முடியும். ஆகவே அவர் ஓர் எல்லையற்ற தந்தை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். தந்தை மாத்திரமே பிரம்மா, விஷ்ணு, சங்கரரைப் படைப்பவர் என்பதையும் அவர் அசரீரியானவர் என அழைக்கப்படுகிறார் என்பதையும் நீங்களும் அறிவீர்கள். அவரே எல்லையற்ற தந்தை ஆவார். பரமாத்மாவாகிய பரமதந்தை பிரம்மாவின் மூலம் படைப்பைப் படைக்கிறார் என்பதை நீங்களும் அறிவீர்கள். உண்மையில் மனிதர்கள் அனைவரும் அவருடைய முழுப் படைப்பும் சிவனின் வம்சத்தினர் ஆவார்கள். நீங்கள் இப்பொழுது பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள் ஆவீர்கள். இது ஒரு புதிய படைப்பாகும். பரமாத்மாவாகிய பரமதந்தை பிரஜாபிதா பிரம்மாவின் மூலம் படைப்பைப் படைக்கிறார். ஆகவே நீங்கள் பிரம்மாகுமாரர்களும் குமாரிகளும் என அழைக்கப்படுகிறீர்கள். எல்லையற்ற குழந்தைகள் பலர் இருக்கிறார்கள். ஆகவே அவர்கள் நிச்சயமாக ஓர் எல்லையற்ற ஆஸ்தியைக் கோருகிறார்கள். பிரம்மாகுமார் குமாரிகளாகிய உங்களைச் சிவபாபா தத்தெடுத்துள்ளார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். சிவபாபா கூறுகிறார்: நீங்கள் என்னுடைய குழந்தைகள் ஆவீர்கள். ஆத்மாக்களாகிய நீங்களும் அசரீரியாகவே இருந்தீர்கள். எவ்வாறாயினும் பௌதீக ரூபத்தில் ஞானம் தேவைப்படுகிறது. நீங்கள் ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்துக்கு உரியவர்களாக இருந்தீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். பிரம்மாவின் மூலம் இங்கே படைப்பு இடம்பெறுகிறது. சிவனின் பிறந்த நாளும் இங்கேயே கொண்டாடப்படுகிறது. அவர் இத்தூய்மையற்ற உலகிலேயே பிறப்பெடுத்தார். தந்தை கூறுகிறார்: இவ்வுலகம் தூய சுவர்க்கமாக இருந்தது. அது இப்பொழுது தூய்மையற்ற, தீய உலகமான நரகம் என்று அழைக்கப்படுகிறது. அது மீண்டும் சுவர்க்கமாக ஆகவேண்டும். சிவபாபா உங்களுக்கு மீண்டும் ஒருமுறை இராஜயோகத்தைக் கற்பித்து உங்களைத் தூய்மை ஆக்குகிறார் என்பது குழந்தைகளாகிய உங்களின் புத்திகளில் உள்ளது. பக்தர்களைப் பாதுகாப்பவராகிய, தூய்மையாக்குபவரே கடவுள் என அவர்கள் பாடுகிறார்கள். பக்தர்கள் மாத்திரமே அழைக்கிறார்கள். அவர்கள் தூய்மை அற்றவர்களாக இருந்தாலும் அவர்கள் தங்களைத் தூய்மை அற்றவர்களாகக் கருதுவதில்லை. நீங்கள் அனைவரும் தூய்மை அற்றவர்கள் எனத் தந்தை விளங்கப்படுத்துகிறார். சத்தியயுகம் தூய உலகம் என அழைக்கப்படுகிறது, கலியுகம் தூய்மையற்ற உலகம் என்று அழைக்கப்படுகிறது. தந்தை உங்களுக்குக் கூறுகின்ற அனைத்து விடயங்களும் சரியானவையாகும். நூறாயிரக்கணக்கான வருடங்களுக்குரிய எதுவும் இருக்க முடியாது. மக்கள் காரிருளில் இருக்கிறார்கள். கலியுகம் தனது குழந்தைப் பருவத்திலேயே உள்ளது என அவர்கள் நினைக்கிறார்கள். மரணம் சற்று முன்னிலையில் உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். சங்கமயுகத்தில் மாத்திரமே நீங்கள் இருளையும் ஒளியையும் பற்றிப் பேசுகிறீர்கள். நீங்கள் இப்பொழுது முழுமையான ஒளிக்குள் வந்திருக்கிறீர்கள். சத்தியயுகத்தில் நீங்கள் இவ்விடயங்களைப் பற்றிப் பேச இயலாதிருக்கும். அங்கே இந்த ஞானம் இருக்கமாட்டாது. சத்தியயுகத்தில் நீங்கள் சூரிய-வம்ச குலத்துக்கு உரியவர்களாக இருந்தீர்கள் என்பதையும் இறுதியில் சூத்திர-வம்ச குலத்தினர் ஆகினீர்கள் என்பதையும் இந்நேரத்தில் தந்தை இங்கே அமர்ந்திருந்து விளங்கப்படுத்துகிறார். நீங்கள் இப்பொழுது மீண்டும் ஒருமுறை பிராமண குலத்தினர் ஆகியிருக்கிறீர்கள். நீங்கள் அதிமேன்மையான பிராமண குலத்துக்கு உரியவர்கள் ஆவீர்கள். நீங்களே அதிமேன்மையானவர்கள் ஆவீர்கள். இதுவே இறைகுலம் ஆகும். நீங்கள் தந்தையிடம் வரும்பொழுது அவர் உங்களிடம் வினவுகிறார்: நீங்கள் யாரிடம் வந்திருக்கிறீர்கள்? நீங்கள் பதில் அளிக்கிறீர்கள்: தந்தையிடம். இரு தந்தையர்கள் இருக்கிறார்கள்: லௌகீகத் தந்தையும் இவ்வுலகத்துக்கு அப்பால் உள்ளவரும். சிவன் மாத்திரமே சாலிகிராம்கள் அனைவரினதும் தந்தை ஆவார். இந்த ஞானம் தொடர்ந்தும் உங்கள் புத்திகளில் சொட்டு சொட்டாக ஏறுகிறது. நாங்கள் ஒரேயொரு தந்தையின் குழந்தைகள் ஆவோம். எங்களுடைய ஆஸ்தியை நாம் அவரிடமே பெறுகிறோம். அசரீரியானவர் ஆஸ்தியை பௌதீகமானவரின் மூலம் கொடுக்கிறார். தந்தை கூறுகிறார்: நான் வந்து ஒரு சாதாரண சரீரத்தில் பிரவேசிக்கிறேன். தந்தை இப்பொழுது கூறுகிறார்: குழந்தைகளே, ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுவீர்களாக! உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள். இச்சரீரம் அழியக்கூடியது, ஆனால் ஆத்மா அழிவற்றவர் ஆவார். சரீரமன்றி ஆத்மாவே 84 பிறவிகளை எடுக்க வேண்டும். சரீரம் தொடர்ந்தும் மாறுகிறது. அதற்கு வெவ்வேறு நண்பர்களும் உறவினர்களும் இருக்கிறார்கள். பரமாத்மா பரமதந்தையாகிய எல்லையற்ற தந்தையிடம் இருந்து ஆத்மாக்கள் இப்பொழுது தங்கள் ஆஸ்தியைப் பெற வேண்டும். நீங்கள் இதைனைச் செவிமடுத்துக் பின்னர் கிரகிக்கிறீர்கள். ஆத்மாக்களாகிய உங்களில் சம்ஸ்காரங்கள் உள்ளன. ஆத்மாவில் சம்ஸ்காரங்கள் எப்பொழுதுமே உள்ளன. அவை சரீரத்தின் சம்ஸ்காரங்கள் என நீங்கள் கூற மாட்டீர்கள். இல்லை, ஆத்மாவாகிய உங்களின் சம்ஸ்காரங்கள் தமோபிரதானவை. நீங்கள் இப்பொழுது அவற்றை மாற்ற வேண்டும். கூறப்பட்டுள்ளது: சரீரம் அநாதியானது. சரீரம் கல்ப விருட்சத்தைப் போன்று அநாதியானதாக ஆகுகிறது. அதற்கு ஒரு நீண்ட ஆயுட்காலம் உள்ளது என்பதே அதன் அர்த்தம். இங்கே ஆயுட்காலம் மிகவும் குறுகியதாக உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். எங்கேயாவது அமர்ந்திருக்கும் பொழுது சிலருக்கு இளம் வயதிலேயே அகால மரணம் ஏற்படுகிறது. நீங்கள் இப்பொழுது மரணத்தை வெல்கிறீர்கள். அங்கே ஒருபொழுதும் உங்களுக்கு மரணம் ஏற்படுவதில்லை. அங்கே எவரும் அகால வேளையில் தனது சரீரத்தை விட்டுச் செல்வதில்லை. இச்சரீரத்துக்கு இப்பொழுது வயதாகி விட்டது என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் அதைத் துறந்து விட்டு புதியதொன்றைப் பெற வேண்டும். அங்கே சரீரத்தை விட்டுச் செல்லும் பொழுதும் பிறப்பெடுக்கும் பொழுதும் ஹார்மோனியங்கள் இசைக்கப்படுகின்றன. அங்கே அழுவது என்ற கேள்வியே கிடையாது. உங்களுக்கு ரீங்காரமிடும் வண்டின் உதாரணம் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் பிராமணர்கள் ஆவீர்கள். “பிராமணர்கள்” “பிரம்மாரிஸ்” (ரீங்காரமிடும் வண்டு) ஆகிய வார்த்தைகளின் ஒலி ஒரேமாதிரியானவை ஆகும். ரீங்காரமிடும் வண்டு செய்யும் அதே வேலையை நீங்களும் செய்கிறீர்கள். அது ஓர் அற்புதம். ரீங்காரமிடும் வண்டு, ஆமை, பாம்பு அனைத்தினதும் இந்த உதாரணங்கள் சமயநூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. சந்நியாசிகளும் இவ்வுதாரணங்களைக் கொடுக்கிறார்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது தந்தையால் இப்புரிந்துணர்வு அனைத்தும் கொடுக்கப்படுகின்றது. அது பக்திமார்க்கம். அதில் அவர்கள் கடந்ததையே நினைவு செய்கிறார்கள். இங்கே இடம்பெறுகின்ற அனைத்தும் பின்னர் நினைவுகூரப்படுகிறது. இந்நேரத்தில் மாத்திரமே தந்தை இச்சரீரத்தில் பிரவேசிக்கிறார். இவர் (பிரம்மா) கடவுள் என அழைக்கப்படுவதில்லை. அது குருட்டு நம்பிக்கையாக இருக்கும். இராமரையும் கிருஷ்ணரையும் கடவுள் என்று அழைக்கின்ற மக்கள் இருக்கிறார்கள். இராமரும் கிருஷ்ணரும் சர்வவியாபி எனவும் அவர்கள் கூறுகிறார்கள். சிலர் இராதையின் பாதைக்கு உரியவர்கள், ஏனையோர் கிருஷ்ணரின் பாதைக்கு உரியவர்கள் ஆவார்கள். தாங்கள் பார்க்குமிடம் எல்லாம் இராதையை மாத்திரம் பார்ப்பதாக இராதையில் நம்பிக்கை கொண்டவர்கள் கூறுகிறார்கள். தாங்கள் பார்க்குமிடம் எல்லாம் கிருஷ்ணரை மாத்திரமே பார்ப்பதாக கிருஷ்ணரில் நம்பிக்கை கொண்டவர்கள் கூறுகிறார்கள். இராமரில் நம்பிக்கை கொண்டவர்கள் எங்கும் இராமரை மாத்திரமே பார்க்கிறார்கள். கிருஷ்ணரை விடவும் இராமர் உயர்ந்தவர் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஏனெனில் இராமர் திரேதாயுகத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளார், ஆனால் கிருஷ்ணரோ துவாபரயுகத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளார். அதிகளவு அறியாமை உள்ளது! தந்தை இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். பல பிரம்மாகுமாரர்களும் குமாரிகளும் இருப்பதனால் நிச்சயமாக ஓர் எல்லையற்ற தந்தை (பிரம்மா) இருக்க வேண்டும். பிரஜாபிதா பிரம்மாவின் பெயரை அவர் எப்பொழுதாவது கேள்விப்பட்டதுண்டா என நீங்கள் எவரையும் வினவ முடியும். தந்தை சுவர்க்கமாகிய புதிய படைப்பைப் படைத்தார். பிரம்மாவின் மூலம் பிராமணர்கள் படைக்கப்படுகிறார்கள் என நினைவு கூரப்படுகிறது. பிராமணர்களாகிய நீங்கள் பிரம்மாவின் வாய்வழித் தோன்றல்களாக ஆகும்வரையில் உங்களால் பாட்டனாரின் ஆஸ்தியைக் கோர முடியாது. தந்தையிடம் இருந்து மாத்திரமே எல்லையற்ற குழந்தைகள் எல்லையற்ற ஆஸ்தியைக் கோருகிறார்கள். நீங்கள் உண்மையிலேயே அதைப் பெற்றீர்கள். உண்மையிலேயே நீங்கள் சுவர்க்கவாசிகளாக இருந்தீர்கள். நீங்கள் இப்பொழுது நரகவாசிகளாகி விட்டீர்கள். பரமாத்மாவாகிய பரமதந்தை இப்பொழுது சுவர்க்கமாகிய விஷ்ணுபூமியை பிரஜாபிதா பிரம்மாவின் மூலம் படைக்கிறார். இது மிகவும் இலகுவானது! சிவபாபா வினவுகிறார்: முன்னர் உங்களிடம் இந்த ஞானம் இருந்ததா? அவருடைய ஆத்மா (பிரம்மா) கூறுகிறார்: என்னிடம் இந்த ஞானம் இருக்கவில்லை. நானும் விஷ்ணுவை வழிபடுபவராக இருந்தேன். வழிபடத் தகுதிவாய்ந்தவர்களாக இருந்த நாங்கள் இப்பொழுது வழிபடுபவர்கள் ஆகிவிட்டோம். இப்பொழுது பாபா வந்துவிட்டார், அவர் மீண்டும் ஒருமுறை வழிபடுபவர்களாகிய எங்களை வழிபடத் தகுதிவாய்ந்த தேவர்களாக ஆக்குகிறார். குழந்தைகளாகிய உங்களுக்கு உள்ளே இந்தச் சந்தோஷம் இருக்க வேண்டும். பரமாத்மாவாகிய பரமதந்தை வந்து உங்களைத் தத்து எடுத்திருக்கிறார். மனிதர்கள் மனிதர்களைத் தத்தெடுக்கிறார்கள். தங்களுக்குக் குழந்தைகள் இல்லாத பொழுது குழந்தைகளைத் தத்தெடுக்கின்ற பலர் இருக்கிறார்கள். அவருடைய குழந்தைகள் அனைவரும் இப்பொழுது இராவணனுக்கு உரியவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் இதனாலேயே அவர் மீண்டும் ஒருமுறை வந்து உங்களைத் தத்தெடுக்க வேண்டும் என்பதையும் தந்தை அறிவார். அவர் தனது குழந்தைகளைப் பிரம்மாவின் மூலம் தத்தெடுக்கிறார். இத்தத்தெடுத்தல் மிகவும் அற்புதமானது! சிவபாபா உங்களைப் பிரம்மாவின் மூலம் தத்து எடுத்துள்ளார் என்பதை நீங்கள் மாத்திரமே அறிவீர்கள். சிவபாபா கூறுகிறார்: உங்களுக்கு உங்களுடைய எல்லையற்ற சந்தோஷ ஆஸ்தியைக் கொடுப்பதற்காக நான் குழந்தைகளாகிய உங்களைத் தத்து எடுத்திருக்கிறேன். இந்த பிரம்மாவால் அதனை உங்களுக்குக் கொடுக்க முடியாது. பிரஜாபிதா பிரம்மாவும் ஒரு மனிதரே ஆவார். மனிதர்களால் இந்த ஞானத்தைக் கொடுக்க முடியாது. அசரீரியான பரமாத்மாவாகிய பரமதந்தையான ஞானக்கடல் மாத்திரமே இங்கே அமர்ந்திருந்து இந்த ஞானத்தைக் கொடுக்கிறார். பிரம்மாவோ அல்லது விஷ்ணுவோ ஞானக்கடல் என அழைக்கப்பட முடியாது. அவர்கள் மூவரினதும் புகழ் வேறுபட்டவை. ஒரு தந்தை மாத்திரமே ஞானக்கடலும் தூய்மையாக்குபவரும் ஆவார். முழு உலக மக்களும் அவரை அழைக்கிறார்கள். ஆங்கிலத்தில் அவரை விடுதலை ஆக்குபவர் என அவர்கள் கூறுகிறார்கள். உங்களுக்குத் துன்பத்தைக் கொடுப்பவரிடம் இருந்து ஒருவர் விடுதலை செய்யப்பட வேண்டும். தந்தை இங்கே வந்து உங்களை இராவணனிடம் இருந்து விடுவிக்கிறார். இராவண இராச்சியமும் இங்கேயே உள்ளது. இங்கேயே அவர்கள் இராவணனை எரிக்கிறார்கள். அவர்கள் அவனை எரித்துவிட்டு தங்க இலங்கையை கொள்ளையிடச் செல்கிறார்கள். யார் இராவணன் என்பதையோ அல்லது எப்பொழுதில் இருந்து அவன் உங்கள் எதிரி என்பதைப் பற்றியோ எதையுமே அவர்கள் அறியார்கள். இராமரின் சீதை அபகரிக்கப்பட்டாள் என அவர்கள் நம்புகிறார்கள். நாங்கள் அனைவருமே சீதைகள் என்பதையும் நாங்கள் இராவணனின் சிறையில் அகப்பட்டுள்ளோம் என்பதையும் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. பலர் அமர்ந்திருந்து சமயக் கதைகளைக் கூறுகிறார்கள். ஆனால் எவருக்கும் இந்த ஞானம் கிடையாது. சிவபாபா கூறுகிறார்: தொலைதூரவாசியான நான் இங்கே இந்த அந்நிய உலகிற்குள் வந்திருக்கின்றேன். இத்தூய்மையற்ற உலகம் பழையது. அது இராவணனின் உலகமாகும். மக்கள் அழைக்கிறார்கள்: ஓ பாபா, வாருங்கள் நாங்கள் தூய்மை அற்றவர்கள் ஆகிவிட்டோம்! தந்தை கூறுகிறார்: நான் உங்களைத் தூய்மை ஆக்குவதற்குத் தூய்மையற்ற உலகத்தில் வர வேண்டும். முதற்தர தூய்மையான சரீரமாக இருந்த சரீரத்திலேயே நான் பிரவேசிக்க வேண்டும். அழகாக இருந்தவர் இப்பொழுது அவலட்சணம் ஆகிவிட்டார். இவை அத்தகைய அற்புதமான விடயங்கள்! ஸ்ரீகிருஷ்ணர் அவலட்சணமானவரும் அழகானவரும் என்று ஏன் அழைக்கப்படுகிறார் என்பது எவருக்கும் தெரியாது. ஸ்ரீகிருஷ்ணர் மாத்திரமே ஒரு பாம்பினால் கடிக்கப்பட்டாரா? சத்தியயுகத்தில் பாம்புகள் கிடையாது. தந்தை கூறுகிறார்: எனக்காக இந்த இறுதிப்பிறவியில் தூய்மை ஆகுங்கள், நீங்கள் தூய உலகின் அதிபதிகள் ஆகுவீர்கள். என்னை நினைவு செய்து தூய்மை ஆகுங்கள்! அல்பாவை நினைவு செய்யுங்கள். பின்னர் இராச்சியமாகிய பீற்றா உங்களுடையதாகி விடும். இது இலகு இராஜயோகம் ஆகும். ஓர் இலகு இராச்சியம் ஆகும். ஒரு குழந்தை பிறந்தவுடன் அவர் ஓர் ஆஸ்திக்கான உரிமையைக் கோருகிறார். இங்கேயும் நீங்கள் தந்தைக்கு உரியவர்கள் ஆதலால் உங்களுக்குச் சுவர்க்க இராச்சியத்துக்கான ஓர் உரிமை உள்ளது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். தந்தை கூறுகிறார்: சதோபிரதானாக இருப்பதிலிருந்து நீங்கள் இப்பொழுது தமோபிரதான் ஆகியுள்ளீர்கள். நீங்கள் இப்பொழுது மீண்டும் சதோபிரதான் ஆகவேண்டும். யோகத்தையும் இந்த ஞானத்தையும் கற்பிப்பதற்கு ஒரு விநாடியே எடுக்கிறது. ஒரு குழந்தை பிறந்தவுடன் தான் ஒரு வாரிசு என்னும் நம்பிக்கை அவருக்கு இருக்கிறது. நீங்கள் இப்பொழுது தந்தைக்கு உரியவர்கள் ஆதலால் இராச்சிய ஆஸ்தி உங்களுடையதே ஆகும். எவ்வாறாயினும் அனைவருமே ஓர் அரசர் அல்லது அரசியாக ஆகுவார்கள் என்றில்லை. இது இராஜயோகம். அரசர், அரசி, பிரஜைகள், செல்வந்த, ஏழை மக்கள்-அனைவரும் தேவைப்படுகிறார்கள். இதனாலேயே பக்தி மார்க்கத்தில் மக்கள் தயாரிக்கப்பட்ட உருத்திர மாலையின் மணிகளை உருட்டுகிறார்கள். நீங்கள் இங்கே இராஜயோகத்தைக் கற்பதற்கு வந்துள்ளீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். தாயையும் தந்தையையும் பின்பற்றுவதனால் நீங்கள் முதலில், சூரிய, சந்திர வம்சத்தில் ஒருவர் ஆகுவீர்கள். தாயையும் தந்தையையும் பின்பற்றித் தங்கள் சிம்மாசனத்தைக் கோருபவர்களே, தகுதிவாய்ந்த குழந்தைகள் ஆவார்கள். நீங்கள் பெருமளவு முயற்சியைச் செய்ய வேண்டும். தந்தை கூறுகிறார்: என்னை நினைவு செய்யுங்கள்! எவ்வாறாயினும் நீங்கள் அதனைச் செய்வதில்லை. நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதில்லை. உங்களுக்குள் அந்த நேர்மை இருப்பதில்லை. உங்கள் இதயத்தில் நேர்மை இருந்திருந்தால் நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றி தந்தையை நினைவு செய்வீர்கள். ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதனால் மாத்திரமே நீங்கள் பாட்டனாரின் ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். பிரம்மாவால் உங்களுக்குச் சுவர்க்க ஆஸ்தியைக் கொடுக்க முடியாது. பேரக்குழந்தைகளுக்குத் தங்கள் பாட்டனாரின் செல்வத்தில் ஓர் உரிமை உள்ளது. குழந்தைகள் தங்களுடைய தந்தையின் வருமானத்தைப் பெறுவதால் அவர்களுக்கு அதற்கான ஓர் உரிமை உள்ளது. இங்கே நீங்கள் சிவபாபாவிடம் இருந்து ஓர் ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். தந்தையிடம் இருந்து மாத்திரமே நீங்கள் இந்த ஞான இரத்தினங்களைப் பெறுகிறீர்கள். நீங்கள் தேவர்கள் ஆகுவீர்கள் என்பதைப் பிராமணர்களாகிய நீங்கள் அறிவீர்கள். உலகத் தாயாகிய ஜெகதாம்பாள் யார்? அவரும் ஒரு பிராமணராக இருந்தார் எனத் தந்தை விளங்கப்படுத்துகிறார். அவர் இந்த ஞானத்தினால் நிறைந்திருந்தார். பின்னர் இளவரசி ஆகுகிறார், நீங்களும் அவ்வாறு ஆகுவீர்கள்.

இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய் தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. யோக சக்தியின் மூலம் ஆத்மாவில் உள்ள தமோபிரதான் சம்ஸ்காரங்களை மாற்றுங்கள். சதோபிரதான் ஆகுங்கள்.

2. தந்தையிடம் இருந்து உங்கள் இராச்சிய ஆஸ்தியைக் கோருவதற்கு சதா ஒரு தகுதிவாய்ந்த குழந்தையாகி தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள். உண்மையான தந்தையுடன் நேர்மையாக இருங்கள். தாயையும் தந்தையையும் முழுமையாகப் பின்பற்றுங்கள். தொடர்ந்தும் இந்த ஞான இரத்தினங்களைத் தானம் செய்யுங்கள்.

ஆசீர்வாதம்:
உங்களின் சொந்த மாற்றத்தால் சதா வெற்றியை அனுபவம் செய்து ஓர் உண்மையான சேவையாளர் ஆகுவீர்களாக.

எப்படி நீங்கள் சதா யோகிகள் ஆகுகிறீர்களோ அவ்வாறே, சதா வெற்றியாளர்கள் ஆகுங்கள். அப்போது நீங்கள் உண்மையான சேவையாளர் ஆகுவீர்கள். இது ஏனென்றால் வெற்றியாளர் ஆத்மாக்கள் ஒவ்வோர் எண்ணத்திலும் ஒவ்வோர் அடியிலும் வெற்றியை அனுபவம் செய்யும்போது அவர்களின் மாற்றத்தைப் பார்க்கும்போது பல ஆத்மாக்களுக்கான சேவை இயல்பாகவே இடம்பெறும். அவர்களின் கண்கள் ஆன்மீகத்தின் அனுபவத்தைக் கொடுக்கும். அவர்களின் நடத்தை தந்தையின் செயல்களின் காட்சியைக் கொடுக்கும். அவர்களின் நெற்றிகளில் உள்ள இரத்தினம் திருப்தி இரத்தினத்தைக் காட்டும். தமது அவ்யக்த ரூபத்தால் சேவை செய்யும் விசேடமான ஆத்மாக்கள், உண்மையான சேவையாளர்கள் என்று அழைக்கப்படுவார்கள்.

சுலோகம்:
சிறப்பியல்புகளும் தெய்வீகக் குணங்களும் இறைவனின் பரிசுகள் ஆகும். எனவே அருள்பவரைப் பாருங்கள், அந்த நபரை அல்ல.

அவ்யக்த சமிக்ஞை: சதா ஆட்ட அசைக்க முடியாத மற்றும் நிலையான ஸ்திதியை அனுபவியுங்கள்.

ஆத்ம உணர்வு ஸ்திதியின் பயிற்சியால் சூழலை ஆன்மீகமாக மாற்றுங்கள். அப்போது அனைத்தும் இயல்பாகவே நன்றாக நடைபெறும். அனைவரும் ஒரே வழிகாட்டலின் கீழ் ஒற்றுமையாக இருப்பதுடன் திருப்தியாகவும் இருப்பார்கள். அப்போது அந்தச் சூழல் சக்திவாய்ந்ததாக இருப்பதனால் மாயை வரமாட்டாள். சூழலைச் சக்திவாய்ந்தாக ஆக்குவதற்கு நினைவிற்காக ஒரு நிகழ்ச்சியையும் உங்களின் சொந்த முன்னேற்றத்திற்காக வகுப்புக்களையும் ஆன்மீக உரையாடல்களையும் செய்யுங்கள். அன்பான ஒன்றுகூடல்களையும் தாரணை வகுப்புக்களையும் நடத்துங்கள். நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.