23.07.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, உங்களுக்கு நேரம் இருக்கும் பொழுதெல்லாம், ஏகாந்தத்தில் அமர்ந்திருந்து இந்த ஞானக்கடலைக் கடையுங்கள். நீங்கள் கேட்ட கருத்துக்களை மீட்டல் செய்யுங்கள்.

கேள்வி:
உங்கள் நினைவு யாத்திரை எப்பொழுது முடிவுக்கு வரும்?

பதில்:
உங்கள் பௌதீக அங்கங்களில் எதுவும் உங்களை ஏமாற்றாத பொழுதே ஆகும். நீங்கள் உங்கள் கர்மாதீத ஸ்திதியை அடையும் பொழுது, உங்கள் நினைவு யாத்திரை முடிவுக்கு வரும். இப்பொழுது நீங்கள் முழு முயற்சி செய்ய வேண்டும், மனந்தளரக் கூடாது. எப்பொழுதும் சேவைக்குத் தயாராக இருங்கள்.

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய நீங்கள் இங்கே ஆத்ம உணர்வில் அமர்ந்திருக்கிறீர்களா? நீங்கள் அரைக்கல்பமாகச் சரீர உணர்வில் இருந்து வருகிறீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இப்பொழுது நீங்கள் ஆத்ம உணர்வில் இருப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். தந்தை வந்து விளங்கப்படுத்துகிறார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி அமரும்பொழுது, உங்களால் தந்தையை நினைவுசெய்ய இயலும். இல்லாவிட்டால், நீங்கள் அவரை மறந்து விடுவீPர்கள். அவரை நினைவு செய்யாவிட்டால், எவ்வாறு உங்களால் யாத்திரையில் நிலைத்திருக்க முடியும்? எவ்வாறு உங்கள் பாவங்கள் அழிக்கப்பட முடியும்? ஓர் இழப்பே இருக்கும். இதை மீண்டும் மீண்டும் நினைவு செய்யுங்கள். இதுவே பிரதான விடயமாகும். தந்தை உங்களுக்குப் பல்வேறு வழிமுறைகளைக் கூறுகிறார். எது சரி எனவும், எது பிழை எனவும் உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டு உள்ளது. தந்தை ஞானக்கடல் ஆவார். உங்களிடம் பக்தியின் ஞானமும் உள்ளது. குழந்தைகள் பக்தியில் பல்வேறு விடயங்களைச் செய்ய வேண்டியுள்ளது. அவர் விளங்கப்படுத்துகிறார்: யாகங்களை வளர்ப்பது, தபஸ்யா செய்வது போன்றன அனைத்தும் பக்தி மார்க்கத்துக்கு உரியதாகும். அவர்கள் தந்தையின் புகழைப் பாடல்களாகப் பாடுகிறார்கள், ஆனால் அப்புகழ்ச்சி பிழையானதாகும். உண்மையில், அவர்கள் ஸ்ரீகிருஷ்ணரின் முழுப் புகழைக்கூட அறிந்து கொள்வதில்லை. ஒவ்வொரு விடயமும் புரிந்து கொள்ளப்பட வேண்டும். உதாரணமாக, ஸ்ரீகிருஷ்ணர் வைகுந்தத்தின் பிரபு என அழைக்கப்படுகிறார். நல்லது, பாபா வினவுகிறார்: ஸ்ரீகிருஷ்ணரைத் திரிலோகநாதர் (மூவுலகங்களின் பிரபு) என அழைக்க முடியுமா? திரிலோகநாதர் நினைவுகூரப்படுகிறார். மூவுலகங்களின் பிரபு என்றால், அசரீரி உலகினதும், சூட்சும உலகினதும், பௌதீக உலகினதும் அதிபதி என்று அர்த்தம். நீங்களும் பிரமாந்தத்தின் அதிபதிகள் (ஒளித் தத்துவம்) எனக் குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. ஸ்ரீகிருஷ்ணர் தன்னைப் பிரமாந்தத்தின் அதிபதி எனக் கருதியிருப்பாரா? இல்லை. அவர் வைகுந்தத்தில் இருந்தார். புதிய உலகமாகிய சுவர்க்கம், வைகுந்தம் என அழைக்கப்படுகிறது. ஆகவே, உண்மையில், எவரும் மூவுலகங்களின் அதிபதி இல்லை. தந்தை உங்களுக்குச் சரியான விடயங்களைக் கூறுகிறார். மூவுலகங்கள் உள்ளன. சிவபாபாவைப் போன்றே, குழந்தைகளாகிய நீங்களும் பிரமாந்தத்தின் அதிபதிகள் ஆவீர்கள். சூட்சும லோகத்தின் கேள்வியே கிடையாது. சிவபாபா பௌதீக உலகின் அதிபதியும் இல்லை - சுவர்க்கத்தினதோ அல்லது நரகத்தினதோ அதிபதியும் இல்லை. ஸ்ரீகிருஷ்ணர் சுவர்க்கத்தின் அதிபதி ஆவார், இராவணன் நரகத்தின் அதிபதி ஆவான். இது இராவண இராச்சியமாகிய, அசுர இராச்சியம் என அழைக்கப்படுகிறது. மக்கள் இதைக் கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. தந்தை இங்கே அமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். இராவணன் பத்துத் தலைகளுடன் சித்தரிக்கப்பட்டுள்ளான்: அவை ஆணின் ஐந்து விகாரங்களும், பெண்ணின் ஐந்து விகாரங்களும் ஆகும். இப்பொழுது ஐந்து விகாரங்கள் அனைவருக்கும் பொருந்துகின்றன. அனைவரும் இராவண இராச்சியத்தில் இருக்கிறார்கள். நீங்கள் இப்பொழுது மேன்மையானவர்கள் ஆகுகிறீர்கள். தந்தை வந்து மேன்மையான உலகைப் படைக்கிறார். ஏகாந்தத்தில் அமர்ந்திருப்பதால், இவ்விதமாக உங்களால் இந்த ஞானக்கடலைக் கடைய முடியும். ஏனைய கல்விகளிலும், மாணவர்கள் சென்று தங்கள் புத்தகங்களை ஏகாந்தத்தில் கற்கிறார்கள். நீங்கள் எந்தப் புத்தகங்களையும் கற்கத் தேவையில்லை. ஆம், நீங்கள் கருத்துக்களை எழுதிக்கொள்ள வேண்டும். பின்னர் நீங்கள் அவற்றை மீட்டல் செய்ய வேண்டும். இவ்விடயங்கள் மிகவும் ஆழமானவையும், புரிந்து கொள்ளப்பட வேண்டியவையும் ஆகும். தந்தை கூறுகிறார்: இன்று, நான் உங்களுக்கு மிகவும் ஆழமான, மிகப் புதிய கருத்துக்களைக் கூறுகிறேன். இலக்ஷ்மியும் நாராயணனும் தெய்வீக தாமத்தின் அதிபதிகள். நீங்கள் விஷ்ணுவை அவ்வாறானவர் எனக் கூற மாட்டீர்கள். விஷ்ணுவே இலக்ஷ்மியும் நாராயணனும் என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. நீஙகள் இப்பொழுது சுருக்கமாக இலக்கையும் குறிக்கோளையும் விளங்கப்படுத்துகிறீர்கள். பிரம்மாவும், சரஸ்வதியும் (தம்பதிகளாக) ஓர் ஆணும் பெண்ணும் அல்லர். இவர் பிரஜாபிதா பிரம்மா ஆவார். ஆகவே பிரஜாபிதா பிரம்மாவை முப்பாட்டனார் என அழைக்க முடியும். சிவபாபா மாத்திரமே பாபா என்று அழைக்கப்படுவார். ஏனைய அனைவரும் சகோதரர்கள் ஆவர். பிரம்மாவுக்குப் பற்பல குழந்தைகள் உள்ளார்கள். தாங்கள் கடவுளின் குழந்தைகளாகிய, சகோதரர்கள் என அவர்கள் அனைவரும் அறிவார்கள். எவ்வாறாயினும், அது அசரீரி உலகிலேயே ஆகும். நீங்கள் இப்பொழுது பிராமணர்கள் ஆகிவிட்டீர்கள். சத்தியயுகம் புதிய உலகம் என அழைக்கப்படுகிறது. இந்த யுகம் அதிமேன்மையான சங்கமயுகம் என அழைக்கப்படுகிறது. சத்தியயுகத்தில், அனைவரும் அதிமேன்மையான மனிதர்கள் ஆவர். இவை மிகவும் அற்புதமான விடயங்களாகும். நீங்கள் புதிய உலகத்துக்காகத் தயார் செய்யப்பட்டு வருகிறீர்கள். இந்தச் சங்கமயுகத்தில் மாத்திரம் நீங்கள் அதிமேன்மையான மனிதர்கள் ஆகுகிறீர்கள். நீங்கள் கூறுகிறீர்கள்: நான் இலக்ஷ்மியாக அல்லது நாராயணனாக ஆகுவேன். அவர்கள் அனைவரிலும் அதிமேன்மையான மனிதர்கள்;, அவர்கள் தேவர்கள் என அழைக்கப்படுகிறார்கள். இலக்ஷ்மியும் நாராயணனும் அனைவரிலும் உயர்வானவர்கள்;. அவர்கள் முதற்தரமானவர்கள்;. பின்னர், குழந்தைகளாகிய நீங்கள் வரிசைக்கிரமமானவர்கள் ஆகுகிறீர்கள். சூரிய வம்சமே அதி உயர்வானது எனக் கூறப்படுகிறது. அது முதற்தரமானதாகும். கலைகள் படிப்படியாகக் குறைவடைகின்றன. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புதிய உலக திறப்புவிழாவை மேற்கொள்கிறீர்கள். தமது புதிய வீடு தயாராகியதும், கிரகப் பிரவேச விழாவை நடத்தும்பொழுது, அக்குழந்தைகள் மிகவும் சந்தோஷம் அடைவதைப் போன்றே, குழந்தைகளாகிய நீங்களும் புதிய உலகைப் பார்ப்பதில் சந்தோஷம் அடைகிறீர்கள். உங்களிடமும் உங்களின் திறப்பு விழா உள்ளது. எழுதப்பட்டும் உள்ளது: தங்க மலர்கள் பொழியப்பட்டன. குழந்தைகளாகிய உங்களின் சந்தோஷப் பாதரசம் மிக மிக உயர்வாக இருக்க வேண்டும். நீங்கள் அமைதி, சந்தோஷம் இரண்டையும் பெறுகிறீர்கள். வேறு எவராலும் அந்தளவு அமைதியையும் சந்தோஷத்தையும் பெற முடியாது. ஏனைய சமயத்தவர்கள் வரும்பொழுது, பிரிவினை ஏற்படுகிறது. ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோருவதற்கு முயற்சி செய்கிறீர்கள் என்பதில் குழந்தைகளாகிய உங்களுக்கு முடிவற்ற சந்தோஷம் இருக்கிறது. நீங்கள் சித்தியடைவதாக இருப்பின், நீங்கள் சித்தி அடைவீர்கள் என, அதாவது, உங்கள் பாக்கியத்தில் இருப்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள் என்பதாக இருக்கக்கூடாது. இல்லை. நிச்சயமாக அனைத்துக்கும் முயற்சி செய்யப்பட வேண்டும். முயற்சி செய்ய இயலாதவர்கள் “என்னுடைய பாக்கியத்தில் இருந்தால்…” எனக் கூறி, முயற்சி செய்வதையே நிறுத்துவார்கள்;. தந்தை கூறுகிறார்: நான் தாய்மார்களாகிய உங்களை மிகவும் மேன்மையானவர்கள் ஆக்குகிறேன். எங்கும் பெண்களுக்குப் பெரும் மரியாதை உள்ளது. வெளிநாடுகளிலும் அவர்களுக்கு மரியாதை கொடுக்கப்படுகின்றது. இங்கே, ஒரு மகள் பிறக்கும்பொழுது, அவர்கள் படுக்கையைத் தலைகீழாகப் போடுகிறார்கள். இவ்வுலகம் முழுமையாக அழுக்கானது. இந்த நேரத்தில், பாரதம் என்னவாக இருந்தது எனவும், அது இப்பொழுது என்னவாக இருக்கிறது எனவும் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். மக்கள் இதை மறந்துவிட்டு, அமைதியை வேண்டி வருகிறார்கள். அவர்கள் உலகில் அமைதியை விரும்புகிறார்கள். நீங்கள் அவர்களுக்கு இலக்ஷ்மி நாராயணனின் படத்தைக் காட்ட முடியும். அது அவர்களின் இராச்சியமாக இருந்தபொழுது, அங்கே தூய்மை, அமைதி, சந்தோஷம் இருந்தன. உங்களுக்கு அத்தகையதோர் இராச்சியம் வேண்டும். நீங்கள் அசரீரி உலகிற்கு, உலக அமைதியைப் பற்றிப் பேச மாட்டீர்கள், இல்லையா? இங்கே மாத்திரமே உலகில் அமைதி இருக்க முடியும். தேவர்களின் இராச்சியம் உலகம் முழுவதும் இருந்தது. அசரீரி உலகம் ஆத்மாக்களின் உலகமாகும். ஆத்மாக்களின் உலகம் உள்ளது என்பதைக் கூட மனிதர்கள் அறிந்து கொள்வதில்லை. தந்தை கூறுகிறார்: நான் உங்களை அத்தகைய மேன்மையான மனிதர்கள் ஆக்குகிறேன். இவ்விடயங்கள் அனைத்தும் விளங்கப்படுத்தப்பட வேண்டும். கடவுள் வந்துவிட்டார் என நீங்கள் அவர்களைப் பார்த்துச் சப்தம் இட்டாலும் மக்கள் நம்புவார்கள் என்பதில்லை. இல்லை, அவர்கள் உங்களை மேலும் அதிகம் அவதூறு செய்வார்கள். அவர்கள் கூறுவார்கள்: பிரம்மாகுமாரிகள் தங்கள் பாபாவைக் கடவுள் என அழைக்கிறார்கள். அவ்விதமாகச் சேவை செய்யப்பட முடியாது. பாபா உங்களுக்குத் தொடர்ந்தும் வழிமுறைகளைக் காட்டுகிறார். ஓர் அறையில் எட்டு தொடக்கம் பத்து படங்களை வையுங்கள். வெளிப்புறத்தில் எழுதுங்கள்: எல்லையற்ற தந்தையிடம் இருந்து உங்கள் எல்லையற்ற சந்தோஷ ஆஸ்தியைக் கோர விரும்பினால், நீங்கள் சாதாரண மனிதர்களில் இருந்து தேவர்களாக மாற விரும்பினால், அப்பொழுது உள்ளே வாருங்கள், எவ்வாறு என நாங்கள் உங்களுக்குக் கூறுவோம். பின்னர் பலர் உங்களிடம் வருவார்கள். அவர்கள் தாங்களாகவே தொடர்ந்தும் வருவார்கள். உலகில் அமைதி இருந்தது. இப்பொழுது பல்வேறு சமயங்கள் உள்ளன. எவ்வாறு இந்தத் தமோபிரதான் உலகில் அமைதி இருக்க முடியும்? கடவுளால் மாத்திரம் உலகில் அமைதியை ஏற்படுத்த முடியும். சிவபாபா வரும்பொழுது, அவர் நிச்சயமாகத் தன்னுடன் ஒரு வெகுமதியைக் கொண்டு வருகிறார். ஒரேயொரு தந்தை மாத்திரமே தொலை தேசத்திலிருந்து வருகிறார், அவர் ஒரேயொரு முறையே வருகிறார். ஒவ்வொரு 5000 வருடங்களுக்கு ஒருமுறை மாத்திரமே அத்தகைய மகத்தான பாபா வருகிறார். ஒருவர் வெளிநாட்டுக்குப் பயணித்து திரும்பும் பொழுது, தனது குழந்தைகளுக்குத் தன்னுடன் வெகுமதிகளைக் கொண்டு வருகிறார். ஓர் ஆண் தனது மனைவிக்குக் கணவனாகவும், தனது குழந்தைகளுக்குத் தந்தையாகவும், தனது பேரக் குழந்தைகளுக்குப் பாட்டனாராகவும், பின்னர் தனது கொள்ளுப் பேரர்களுக்குக் கொள்ளுப் பாட்டனார் போன்றோராகவும் ஆகுகிறார். நீங்கள் இவரை பாபா என அழைக்கிறீர்கள். பின்னர் அவர் பாட்டனாராகவும் ஆகுகிறார். அவர் கொள்ளுப் பாட்டனாராகவும் ஆகுகிறார். வேறுபட்ட வம்சாவழிகள் உள்ளன. ஆதாம், ஆதிதேவ் என்னும் பெயர்கள் உள்ளன. ஆனால் மக்கள் அவற்றின் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. தந்தை இங்கே அமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். தந்தையிடம் இருந்து உலகின் வரலாற்றையும் புவியியலையும் அறிந்து கொள்வதால், நீங்கள் இப்பொழுது பூகோள ஆட்சியாளர்கள் ஆகுகிறீர்கள். பாபா உங்களுக்கு அதிகளவு அன்புடனும், ஆர்வத்துடனும் கற்பிக்கிறார். ஆகவே, நீங்கள் எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்குக் கற்க வேண்டும். அனைவரும் அதிகாலையில் ஓய்வாக இருக்கிறார்கள். காலை வகுப்புக்கு வந்து, அரை மணித்தியாலம் தொடக்கம் முக்கால் மணித்தியாலம் வரை முரளியைச் செவிமடுத்துப் பின்னர் வீடு திரும்புங்;கள். நீங்கள் இருக்கும் இடத்திலேயே உங்களால் பாபாவை நினைவு செய்ய முடியும். ஞாயிற்றுக் கிழமைகள் விடுமுறை நாட்களாக உள்ளன. காலையில் இரண்டு தொடக்கம் மூன்று மணித்தியாலங்கள் அமர்ந்திருந்து நாள் முழுவதற்குமான உங்கள் வருமானத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். உங்கள் புத்தியை முழுமையாக நிரப்பிக் கொள்ளுங்கள். உங்களுக்கு நேரம் இருக்கிறது, இல்லையா? மாயையின் புயல்கள் வரும்பொழுது, உங்களால் பாபாவை நினைவுசெய்ய இயலாமல் இருக்கிறது. பாபா உங்களுக்குக் கூறும் விடயங்கள் அனைத்தும் மிகவும் இலகுவானவை. பக்தி மார்க்கத்தில், அவர்கள் பல்வேறு சத்சங்கங்கள் போன்றவற்றுக்குச் செல்கிறார்கள். அவர்கள் ஸ்ரீகிருஷ்ணரின் ஆலயத்துக்கும், ஸ்ரீ நாத் ஆலயத்துக்கும், பின்னர் வேறு ஓர் ஆலயத்துக்கும் செல்கிறார்கள். பலர் யாத்திரையிலும் கலப்படமானவர்களாக ஆகுகிறார்கள். அவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுக்கிறார்கள். அவர்கள் அதிலிருந்து நன்மை அடைவதில்லை. அதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது, அதுவும் மீண்டும் நடைபெறும். இந்தப் பாகம் ஆத்மாக்களாகிய உங்களில் பதியப்பட்டுள்ளது. நீங்கள் சத்திய, திரேதா யுகங்களில் நடித்த அதே பாகங்களையே நடிப்பீர்கள். நீங்கள் முன்னைய கல்பத்தில் நடித்த அதே பாகங்களையே நடிப்பீர்கள். மேலோட்டமான புத்தி உடையவர்களால் இதைப் புரிந்துகொள்ள இயலாது. நுணுக்கமான புத்தி உடையவர்களால் அனைத்தையும் மிக நன்றாகப் புரிந்துகொண்டு, ஏனையோருக்கு விளங்கப்படுத்த இயலும். இந்நாடகம் அநாதியானது என அவர்கள் உள்ளே உணர்கிறார்கள். இது ஓர் எல்லையற்ற நாடகம் என்பதை உலகில் எவரும் அறிய மாட்டார்கள். இதைப் புரிந்து கொள்வதற்குக் காலம் எடுக்கிறது. உங்களுக்கு அனைத்து விடயங்களும் விபரமாக விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. பின்னர் நினைவு யாத்திரையே பிரதான விடயம் எனவும் உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. “ஒரு விநாடியில் ஜீவன்முக்தி” என்பது நினைவுகூரப்பட்டுள்ளது. அவரே ஞானக்கடல், நீங்கள் கடல் முழுவதையும் மையாகவும், காடுகள் அனைத்தையும் எழுதுகோல்களாகவும், பூமியைக் கடதாசியாகவும் ஆக்கினாலும், அப்பொழுதும் இந்த ஞானத்துக்கு முடிவு கிடையாது எனும் புகழும் உள்ளது. ஆரம்பத்தில் இருந்து நீங்கள் அதிகளவு எழுதி வருகின்றீர்கள்;. நீங்கள் தொடர்ந்தும் எழுதினால், எவ்வளவு கடதாசி பயன்படுத்தப்படும்? நீங்கள் தடுமாறித் திரியத் தேவையில்லை. அல்பாவே பிரதான விடயமாகும். தந்தையை நினைவுசெய்யுங்கள். நீங்கள் இங்கே சிவபாபாவிடம் வருகிறீர்கள். சிவபாபா இவரில் பிரவேசித்து உங்களுக்கு அதிகளவு அன்புடன் கற்பிக்கிறார். அவரிடம் எந்த வெளிப்பகட்டும் இல்லை. தந்தை கூறுகிறார்: நான் ஒரு பழைய சரீரத்தில் பிரவேசிக்கிறேன். எவ்வாறு சிவபாபா வந்து எங்களுக்குக் கற்பிக்கிறார் எனப் பாருங்கள். அவரிடம் அகங்காரம் இல்லை. தந்தை கூறுகிறார்: தூய்மையற்ற உலகில், ஒரு தூய்மையற்ற சரீரத்தில் வந்து, உங்களுக்குக் கற்பித்தல்களைக் கொடுக்குமாறு நீங்கள் என்னை அழைக்கிறீர்கள். சத்திய யுகத்துக்கு வந்து, வைரங்களாலும், இரத்தினங்களாலும் பதிக்கப்பட்ட மாளிகைகளில் அமர்ந்து எனக்கு உணவு பரிமாறுவதற்கு நீங்கள் என்னை அழைப்பதில்லை. சிவபாபா எதையும் உண்பதில்லை. முன்னர், வந்து உணவு அருந்துமாறு நீங்கள் என்னை அழைப்பது வழக்கம். நீங்கள் அவருக்கு 36 வகையான உணவைப் படைப்பது வழக்கம். அதுவும் மீண்டும் நடைபெறும். இது தெய்வீகச் செயல்கள் என அழைக்கப்பட முடியும். ஸ்ரீகிருஷ்ணர் என்ன தெய்வீகச் செயற்பாடுகளைச் செய்ய முடியும்? அவர் சத்தியயுகத்தின் இளவரசராக இருக்கிறார். அவர் தூய்மையாக்குபவர் என அழைக்கப்பட மாட்டார். எவ்வாறு அவர் சத்தியயுக உலகின் அதிபதியாக ஆகினார் என்பதை நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். மனிதர்கள் காரிருளில் இருக்கிறார்கள். நீங்கள் இப்பொழுது பேரொளியில் இருக்கிறீர்கள். தந்தை வந்து இரவைப் பகலாக மாற்றுகிறார். நீங்கள் அரைக்கல்பத்துக்கு ஆட்சிசெய்கிறீர்கள். ஆகவே, நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்க வேண்டும். உங்கள் பௌதீக அங்கங்களில் எதுவும் உங்களை ஏமாற்றாத பொழுதே, உங்கள் நினைவு யாத்திரை முடிவுக்கு வரும். நீங்கள் உங்கள் கர்மாதீத ஸ்திதியை அடையும் பொழுது, உங்கள் நினைவு யாத்திரை முடிவுக்கு வரும். அது இன்னமும் உங்களுக்கு முழுமை ஆகவில்லை. நீங்கள் இப்பொழுது முழு முயற்சி செய்ய வேண்டும், மனந்தளரக் கூடாது. தொடர்ந்தும் சேவை செய்யுங்கள், சேவையைத் தவிர எதுவுமில்லை. தந்தை வந்துவிட்டதுடன், இப்பழைய சரீரத்தினூடாகச் சேவையும் செய்கிறார். தந்தையே கரன்கரவன்கார் ஆவார். குழந்தைகளையிட்டு, அவருக்குப் பல்வேறு அக்கறைகள் உள்ளன: நான் இதைச் செய்ய வேண்டும்;, நான் ஒரு வீட்டைக் கட்ட வேண்டும். ஒரு லௌகீகத் தந்தை எல்லைக்கு உட்பட்ட அனைத்தையும் பற்றி எண்ணங்களைக் கொண்டிருப்பதைப் போன்றே, அவ்விதமாகவே, இவ்வுலகுக்கு அப்பாலுள்ள தந்தை எல்லையற்ற அனைத்தையும் பற்றிய எண்ணங்களைக் கொண்டிருக்கிறார். குழந்தைகளாகிய நீங்கள் சேவை செய்ய வேண்டும். நாளுக்கு நாள், அனைத்தும் இலகுவாகுகின்றன. நீங்கள் விநாசத்துக்கு அண்மையில் வரும்பொழுது, தொடர்ந்தும் அதிகச் சக்தியைப் பெறுவீர்கள். இறுதியில் அம்புகள் பீஷ்ம பிதாமகரையும், ஏனைய அனைவரையும் தாக்கின என்பது நினைவுகூரப்பட்டுள்ளது. அவர்களை இப்பொழுது அம்புகள் தாக்கினால், அதிகளவு குழப்பங்கள் ஏற்படும். அத்தகைய பெரிய சனக்கூட்டம் இருக்கும், கேட்கவும் வேண்டாம்! நீங்;கள் உங்கள் தலையைச் சொறியவும் நேரமில்லாத அளவுக்குப் பலர் இருப்பார்கள். இப்பொழுது அது அவ்வாறில்லை. எவ்வாறாயினும், பெருங்கூட்டம் வரும்பொழுது, அப்பொழுது அது அவ்வாறே இருக்கும் எனக் கூறப்படும். அவர்களை அம்புகள் தாக்கும் பொழுது, உங்கள் தாக்கம் பரவும். நிச்சயமாகக் குழந்தைகள் அனைவரும் தந்தையின் அறிமுகத்தைப் பெற வேண்டும். இந்த அழிவற்ற வைத்தியசாலை இணைந்த பல்கலைக்கழகத்தை மூன்று சதுர அடி நிலத்தில் உங்களால் திறக்கவும் முடியும். உங்களிடம் பணம் இல்லாவிட்டால், அது பரவாயில்லை. உங்களுக்குப் படங்கள் கொடுக்கப்படும். நீங்கள் சேவை செய்யும்பொழுது, மரியாதையும் அவமரியாதையும், சந்தோஷமும் துன்பமும், வெப்பமும் குளிரும் இருக்கும். அவை அனைத்தும் சகித்துக் கொள்ளப்பட வேண்டும். எவரையாவது ஒரு வைரம் போன்று ஆக்குவது ஒரு சிறிய விடயமல்ல. தந்தை எப்பொழுதாவது களைப்படைகிறாரா? நீங்கள் ஏன் களைப்படைகிறீர்கள்? அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. அதிகாலையில் அரை மணித்தியாலம் அல்லது முக்கால் மணித்தியாலத்துக்கு அதிகளவு அன்புடனும், ஆர்வத்துடனும் கற்றிடுங்கள். தந்தையின் நினைவில் நிலைத்திருங்கள். உங்கள் பௌதீக அங்கங்கள் அனைத்தும் உங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படுமளவுக்கு நினைவுக்கான அத்தகைய முயற்சியைச் செய்யுங்கள்.

2. சேவையில் மரியாதையும் அவமரியாதையும், சந்தோஷமும் துன்பமும், வெப்பமும் குளிரும் போன்ற அனைத்தும் சகித்துக் கொள்ளப்பட வேண்டும். ஒருபொழுதும் சேவை செய்வதில் களைப்பு அடையாதீர்கள். மூன்று சதுர அடி நிலத்தில் வைத்தியசாலை இணைந்த பல்கலைக்கழகத்தைத் திறந்து, ஏனையோரை வைரங்கள் ஆக்கும் சேவையைச் செய்யுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் மாஸ்ரர் அன்புக்கடலாகி, உண்மையான, ஆன்மீக அன்பு அனுபவத்தை வழங்குவீர்களாக.

நீங்கள் கடற்கரைக்குச் செல்லும்போது, குளிர்மையை அனுபவம் செய்வீர்கள். அதேபோல், உங்களுக்கு முன்னால் வருகின்ற எந்தவோர் ஆத்மாவும் மாஸ்ரர் அன்புக் கடல்களான உங்களின் கரையில் இருப்பதை அனுபவம் செய்யும் வகையில் மாஸ்ரர் அன்புக்கடல்கள் ஆகுங்கள். ஏனென்றால், இன்றைய உலகில் உள்ள ஆத்மாக்கள் உண்மையான, ஆன்மீக அன்பிற்கான பசியுடன் இருக்கிறார்கள். சுயநலமான அன்பைப் பார்த்துப் பார்த்து, அவர்களின் இதயங்கள் உண்மையான அன்பில் இருந்து அப்பால் நகர்ந்து விட்டன. இதனாலேயே, அவர்கள் வெகு சில கணங்களேனும் பெறுகின்ற ஆன்மீக அன்பைத் தமது வாழ்க்கைகளின் ஆதாரமாகக் கருதுகிறார்கள்.

சுலோகம்:
இந்த ஞானத்தின் செல்வத்தால் நிறைந்திருங்கள். நீங்கள் இயல்பாகவே தொடர்ந்து பௌதீகச் செல்வத்தைப் பெறுவீர்கள்.

அவ்யக்த சமிக்கை: எண்ணங்களின் சக்தியைச் சேமித்து, மேன்மையான சேவைக்குக் கருவி ஆகுங்கள்.

சத்தியயுக இராச்சியத்திற்கு, ஒரேயொரு இராச்சியமும் ஒரேயொரு தர்மமும் இருக்கும் எனக் கூறப்படுவதைப் போல், சுய இராச்சிய அதிகாரத்திலும் இப்போது ஓர் அரசர் இருக்க வேண்டும். எல்லாமே உங்களின் வழிகாட்டல்களின்படி நடக்க வேண்டும். உங்களின் மனம் அதன் சொந்த வழிகாட்டல்களின்படி நடக்கக்கூடாது. உங்களின் புத்தியானது அதன் வேறுபிரித்தறியும் சக்தியில் தளம்பல் அடையக்கூடாது. ஆத்மாவான உங்களை உங்களின் சம்ஸ்காரங்கள் நடனம் ஆடச் செய்யக்கூடாது. உங்களிடம் ஒரு தர்மம், ஓர் இராச்சியம் உள்ளது எனக் கூறப்படும். இத்தகைய கட்டுப்படுத்தும் சக்தியைக் கிரகியுங்கள். இதுவே எல்லையற்ற சேவைக்கான வழிமுறை ஆகும்.