23.08.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே தந்தை உங்களை இந்த ஞான இரத்தினங்களால் அலங்கரித்து உங்களைத் திரும்பவும் தன்னுடன் வீட்டிற்குத் அழைத்துச் செல்வதற்கு வந்துள்ளார். பின்னர் அவர் உங்களது இராச்சியத்திற்கு உங்களை அனுப்புவார். எனவே இந்த அளவற்ற சந்தோஷத்தில் இருங்கள். ஒரேயொரு தந்தை மீது மாத்திரமே அன்பு வைத்திருங்கள்.

கேள்வி:
உங்கள் தாரணையை உறுதியானது ஆக்குவதற்கான அடிப்படை என்ன?

பதில்:
உங்கள் தாரணையை உறுதியானது ஆக்குவதற்கு இன்று நிகழ்ந்தவை அனைத்தும் நல்லதே, அவை ஒரு கல்பத்தின் பின்னர் மீண்டும் நிகழும் என்பதை எப்பொழுதும் உங்களுக்குள் உறுதி ஆக்குங்கள். நிகழ்ந்துள்ள அனைத்தும் ஒரு கல்பத்திற்கு முன்னரும் நிகழ்ந்தன, எதுவுமே புதிதல்ல! இந்த யுத்தம் 5000 வருடங்களுக்கு முன்னரும் இடம்பெற்றது, அது நிச்சயமாக மீண்டும் இடம்பெறும். இந்த வைக்கோற்போர் அழிக்கப்பட வேண்டும். இவ்வாறாக சதா நாடகம் பற்றிய விழிப்புணர்வில் இருங்கள், அப்பொழுது உங்கள் தாரணை தொடர்ந்தும் உறுதியாகும்.

பாடல்:
தொலைதூர தேசவாசி அந்நிய நாட்டிற்கு வந்துள்ளார்.

ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்களும் முன்னர் தொலைதூர தேசத்தில் இருந்து இந்த அந்நிய தேசத்திற்கு வந்தீர்கள். நீங்கள் இப்பொழுது இந்த அந்நிய தேசத்தில் சந்தோஷம் அற்றிருக்கின்றீர்கள். இதனாலேயே உங்கள் வீடாகிய உங்கள் தேசத்திற்கு மீண்டும் அழைத்துச் செல்லுமாறு நீங்கள் அழைக்கின்றீர்கள். நீங்களே அழைத்தவர்கள். நீங்கள் அவரை நீண்டகாலமாக நினைவு செய்கிறீர்கள். எனவே தந்தையும் பெரும் சந்தோஷத்துடன் வருகின்றார். தான் தனது குழந்தைகளிடம் செல்வதை அவர் அறிவார். காமச்சிதையில் அமர்ந்ததால் எரிக்கப்பட்ட குழந்தைகளை நான் திரும்பவும் என்னுடன் வீட்டிற்கு அழைத்துச் சென்று பின்னர் அவர்களின் இராச்சியத்திற்கு அவர்களை அனுப்புவேன். அதற்காக நான் உங்களை இந்த ஞானத்தால் அலங்கரிக்கின்றேன். குழந்தைகளாகிய நீங்கள் தந்தையை விடவும் சந்தோஷமாக இருக்க வேண்டும். தந்தை வந்துவிட்டதால் நீங்கள் அவருக்குச் உரியவர்கள் ஆகவேண்டும். நீங்கள் அவரைப் பெருமளவில் நேசிக்க வேண்டும். பாபா உங்களுக்குத் தினமும் விளங்கப்படுத்துகின்றார். ஆத்மாவே பேசுகின்றார்: ‘பாபா நாடகத்தின்படி நீங்கள் 5000 வருடங்களுக்குப் பின்னர் வந்துள்ளீர்கள். நாங்கள் பெருமளவு சந்தோஷப் பொக்கிஷங்களைப் பெறுகின்றோம். பாபா நீங்கள் எங்களின் புத்திகளை நிரப்புகின்றீர்கள். நீங்கள் எங்களை எங்களது வீடாகிய அமைதிதாமத்திற்குத் திரும்பவும் அழைத்துச் சென்று பின்னர் எங்களது இராச்சியத்திற்கு எங்களை அனுப்புவீர்கள்.’ எனவே அத்தகைய அளவற்ற சந்தோஷம் இருக்க வேண்டும். தந்தை கூறுகின்றார்: நான் இந்த அந்நிய இராச்சியத்திற்கு வரவேண்டி உள்ளது. தந்தையின் பாகம் மிக இனிமையானதும் அற்புதமானதும் ஆகும். குறிப்பாக அவர் இந்த அந்நிய தேசத்திற்கு வரும்போது அவ்வாறாக உள்ளார். நீங்கள் மாத்திரமே இப்பொழுது இவ்விடயங்களைப் புரிந்து கொள்கின்றீர்கள். இந்த ஞானம் பின்னர் மறைந்துவிடும். அங்கு அதற்கான தேவை இருக்காது. பாபா கூறுகின்றார்: நீங்கள் மிகவும் விவேகம் அற்றவர்கள் ஆகிவிட்டீர்கள். நீங்கள் இந்நாடகத்தில் நடிகர்களாக இருந்தாலும் உங்களுக்குத் தந்தையைத் தெரியாது. நீங்கள் கரன்கரவன்காரான தந்தையை மறந்து விட்டீர்கள். அவர் என்ன செய்கின்றார் என்பதையும் அவர் உங்களை எதைச் செய்யத் தூண்டுகின்றார் என்பதையும் நீங்கள் மறந்து விட்டீர்கள். அவர் பழைய உலகம் முழுவதையும் சுவர்க்கம் ஆக்குவதற்கும் இந்த ஞானத்தைக் கொடுப்பதற்கும் வருகின்றார். அவரே ஞானக்கடல் ஆவார். எனவே அவர் நிச்சயமாக இந்த ஞானத்தைக் கொடுக்கின்ற பணியை மேற்கொள்கின்றார். அவர் உங்களையும் அவ்வாறு செய்யத் தூண்டுகின்றார்: தந்தை அனைவருக்கும் கூறும் செய்தியை அனைவருக்கும் கொடுங்கள்: சரீர உணர்வைத் துறந்து என்னை நினைவு செய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நான் உங்களுக்கு ஸ்ரீமத்தைக் கொடுக்கின்றேன். அனைவரும் பாவாத்மாக்கள். இந்நேரத்தில் முழு விருட்சமும் தமோபிரதானாக உள்ளது. அது முற்றாக உக்கிய நிலையை அடைந்துவிட்டது. மூங்கில் காட்டில் தீப்பற்றும்போது அனைத்தும் முற்றாக எரிந்து அழிந்து விடுகின்றது. தீயை அணைப்பதற்கு காட்டில் நீங்கள் எங்கே நீரைப் பெறுவீர்கள்? இப்பழைய உலகமும் தீயில் இடப்பட உள்ளது. தந்தை கூறுகின்றார்: எதுவும் புதிதல்ல! தந்தை தொடர்ந்தும் உங்களுக்குக் குறித்துக் கொள்வதற்கு மிகச்சிறந்த கருத்துக்களைக் கொடுக்கின்றார். ஏனைய சமய ஸ்தாபகர்கள் அனைவரும் தங்கள் சொந்தச் சமயத்தை ஸ்தாபிப்பதற்கே வருகின்றார்கள் என்பதைத் தந்தை விளங்கப்படுத்தி உள்ளார். அவர்களைத் தீர்க்கதரிசிகள் என்றோ அல்லது தூதுவர்கள் என்றோ அழைக்க முடியாது. இது அதிகளவு யுக்தியுடன் எழுதப்பட வேண்டும். சிவபாபா குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகின்றார்: அனைவரும் குழந்தைகள், அனைவரும் சகோதரர்கள். சிவபாபா இதனை விளங்கப்படுத்துகின்றார் என ஒவ்வொரு படத்திலும் மற்றும் எழுதக்கூடிய வேறு பொருட்களிலும் நீங்கள் நிச்சயமாக எழுதவேண்டும். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, நான் 100 சதவீதம் சந்தோஷமும் அமைதியும் தூய்மையும் நிறைந்த சத்தியயுகத்துத் தேவ தர்மத்தை ஸ்தாபிக்க வந்திருக்கின்றேன். இதனாலேயே அது சுவர்க்கம் என அழைக்கப்படுகின்றது. அங்கு துன்பத்தின் பெயரோ அல்லது சுவடோ கிடையாது. எவ்வாறாயினும் ஏனைய சமயங்கள் அனைத்தினதும் விநாசத்தைத் தூண்டுவதில் நான் கருவி ஆகுகின்றேன். சத்திய யுகத்தில் ஒரேயொரு தர்மம் மாத்திரமே உள்ளது. அது புதிய உலகமாகும். நான் பழைய உலகம் அழிக்கப்படுவதைத் தூண்டுகின்றேன். வேறு எவரும் இவ்வியாபாரத்தைச் செய்வதில்லை. சங்கரர் மூலம் விநாசம் இடம்பெறுவதாகக் கூறப்படுகின்றது. இலக்ஷ்மி-நாராயணனின் இணைந்த ரூபமே விஷ்ணு ஆவார். பிரஜாபிதா பிரம்மாவும் இங்கேயே இருக்கின்றார். அவர் தூய்மையற்ற மனிதனிலிருந்து தூய தேவதை ஆகுகின்றார். இதனாலேயே “தேவ தர்மம் யார் மூலமாக ஸ்தாபிக்கப்படுகின்றதோ அந்தத் தேவராகிய பிரம்மா” எனக் கூறப்படுகின்றது. இந்த பாபாவே தேவ தர்மத்தின் முதலாவது இளவரசர் ஆகுகின்றார். எனவே ஸ்தாபனை பிரம்மா மூலமும் விநாசம் சங்கரர் மூலமும் இடம்பெறுகின்றன. படங்கள் காட்டப்பட வேண்டும். இப்படங்கள் அவர்களுக்கு விளங்கப்படுத்துவதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றின் அர்த்தத்தை எவரும் அறிய மாட்டார்கள். உங்களுக்குச் சுயதரிசனச் சக்கரத்தின் அர்த்தமும் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. பரமாத்மாவாகிய பரமபிதா உலகின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிய ஞானத்தை அறிவார். அவரிடம் முழு ஞானமும் உள்ளது. எனவே அவர் சுயதரிசனச் சக்கரதாரி ஆவார். அவரால் மாத்திரமே உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்க முடியும் என்பதை அவர் அறிவார். தான் ஒரு தாமரை மலர் ஆகவேண்டும் என பாபா கூறமாட்டார். சத்தியயுகத்தில் நீங்கள் தாமரை மலர்கள் போன்று வாழ்கின்றீர்கள். சந்நியாசிகளையிட்டு இவ்வாறு கூறப்படுவதில்லை. அவர்கள் காடுகளுக்குச் செல்கின்றனர். அவர்கள் முதலில் தூய்மையானவர்களாகவும் சதோபிரதானாகவும் இருந்தனர் என்றும் தந்தை கூறுகின்றார். அவர்கள் தங்கள் தூய்மைச் சக்தியால் பாரதத்திற்கு ஆதாரமாக இருந்தனர். பாரதத்தைப் போன்று வேறேந்தத் தேசமும் தூய்மையாக இருக்கவில்லை. தந்தைக்குப் புகழ் இருப்பது போன்றே பாரதத்திற்கும் புகழ் உள்ளது. இலக்ஷ்மியும் நாராயணனும் பாரதத்தை ஆட்சிசெய்த போது அது சுவர்க்கமாக இருந்தது. பின்னர் அவர்கள் எங்கே சென்றனர்? நீங்கள் மாத்திரமே இதனை அறிவீர்கள். அத் தேவர்களே 84 பிறவிகளை எடுக்கும்போது பூஜிப்பவர்கள் ஆகினார்கள் என்பது வேறு எவரது புத்தியிலும் புகுவதில்லை. நீங்கள் பூஜிக்கத் தகுதிவாய்ந்த தேவர்கள் ஆகுகின்றீர்கள் என்பதையும் பின்னர் பூஜிக்கின்ற சாதாரண மனிதர்கள் ஆகுகிறீர்கள் என்பதையும் பற்றிய முழு ஞானமும் உங்களிடம் இப்பொழுது உள்ளது. மனிதர்கள் மனிதர்களே. அவர்கள் உருவாக்கியுள்ள படங்களில் உள்ளதைப் போன்று வெவ்வேறு வகையான மனிதர்கள் இல்லை. அப்படங்கள் அனைத்தும் பக்தி மார்க்கத்திற்கு உரியவை. உங்கள் ஞானம் மறைமுகமானது. அனைவரும் இந்த ஞானத்தைப் பெற மாட்டார்கள். இந்தத் தேவ விருட்சத்தின் இலைகளாக உள்ளவர்கள் மாத்திரமே இந்த ஞானத்தைப் பெறுவார்கள். ஏனையோரில் நம்பிக்கை கொண்டுள்ளவர்கள் இந்த ஞானத்தைச் செவிமடுக்க மாட்டார்கள். சிவனையும் தேவர்களையும் வழிபடுபவர்கள் மாத்திரமே இங்கு வருவார்கள். முதலில் அவர்கள் என்னை வழிபடுகின்றனர். பின்னர் அவர்கள் பூஜிப்பவர்கள் ஆகும்போது அவர்கள் தங்களையும் கூட வழிபடுகின்றனர். எனவே பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாக இருந்து பூஜிப்பவர்களாக ஆகியுள்ள நீங்கள் இப்பொழுது மீண்டும் ஒருமுறை பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகுகின்றீர்கள் என்ற சந்தோஷம் இப்பொழுது உங்களுக்கு உள்ளது. மக்கள் அதிகளவு சந்தோஷத்துடன் கொண்டாடுகின்றனர். மக்கள் இங்கு கொண்டாடுகின்ற சந்தோஷம் தற்காலிகமானது. அங்கு நீங்கள் சதா சந்தோஷமாக இருக்கிறீர்கள். தீபமாலை (தீபாவளி) உண்மையில் இலக்ஷ்மியை வரவழைப்பதற்கு உரியதல்ல. தீபமாலை முடிசூட்டலின் போதே இடம்பெறுகின்றது. இப்பொழுது கொண்டாடப்படுகின்ற பண்டிகைகள் எதுவும் அங்கே இருப்பதில்லை. அங்கு சந்தோஷம் - சந்தோஷம் மாத்திரமே இருக்கின்றது. இந்நேரத்தில் மாத்திரமே நீங்கள் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றி அறிகின்றீர்கள். இக்கருத்துக்கள் அனைத்தையும் எழுதிக் கொள்ளுங்கள். சந்நியாசிகள் ஹத்தயோகம் செய்கின்றனர், இது இராஜ யோகமாகும். தந்தை கூறுகின்றார்: ஒவ்வொரு பக்கத்திலும் ஏதோவொரு இடத்தில் நீங்கள் நிச்சயமாக சிவபாபாவின் பெயரை எழுத வேண்டும். சிவபாபா குழந்தைகளாகிய எங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். அசரீரி ஆத்மாக்கள் அனைவரும் இங்கு தங்கள் சரீரத்தில் அமர்ந்திருக்கின்றனர். எனவே தந்தையும் ஒரு சரீரத்தின் மூலமே விளங்கப்படுத்த வேண்டும். அவர் கூறுகின்றார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி என்னை நினைவுசெய்யுங்கள். கடவுள் சிவன் குழந்தைகளுடன் பேசுகின்றார். அவரே இங்கு பிரசன்னமாகி உள்ளார். வாசிக்கின்ற எவரும் இயல்பாகவே இந்த ஞானத்தைப் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் பிரதான கருத்துக்கள் ஒரு புத்தகத்தில் எழுதப்பட வேண்டும். இவை கடவுள் சிவனால் பேசப்பட்ட வாசகங்கள் என்பதால் அவற்றை வாசிப்பதில் அவர்கள் களிப்படைவார்கள். இது புத்திக்குரிய வேலையாகும். உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுப்பதற்காக பாபா ஒரு சரீரத்தைக் கடனாக எடுக்க வேண்டும். இந்த ஆத்மாவும் செவிமடுக்கின்றார். குழந்தைகளாகிய நீங்கள் பெருமளவு போதையைக் கொண்டிருக்க வேண்டும். தந்தைமீது பேரன்பு இருக்க வேண்டும். இது அவரின் இரதம். இது இவரது பல பிறவிகளின் இறுதிப் பிறவியாகும். அவர் இவரில் பிரவேசித்துள்ளார். நீங்கள் பிரம்மா மூலம் பிராமணர்களாகி பின்னர் சாதாரண மனிதரிலிருந்து தேவர்கள் ஆகுகின்றீர்கள். இப்படம் மிகத் தெளிவானது. உங்கள் (தற்போதைய) புகைப்படத்தையும் அதற்கு மேலே அல்லது அருகில் இரட்டைக்கிரீடம் அணிந்த உங்கள் புகைப்படத்தையும் வைத்திருங்கள். நாங்கள் யோகசக்தி மூலம் அவ்வாறு ஆகுகின்றோம். சிவபாபா மேலே உள்ளார். அவரை நினைவு செய்வதன் மூலம் நாங்கள் சாதாரண மனிதரிலிருந்து தேவர்கள் ஆகுகின்றோம். இது முற்றிலும் தெளிவானது. மக்கள் பார்க்கும்போது சந்தோஷம் அடையக்கூடியதாக வர்ணப்படங்கள் கொண்ட புத்தகம் ஒன்றை நீங்கள் வைத்திருக்க வேண்டும். ஏழைகளுக்காக குறைந்த விலையில் சில பிரதிகளை அச்சிட்டு வைத்திருங்கள். நீங்கள் படங்களின் அளவைப் பெரியதிலிருந்து சிறியதாக ஆக்குவதால் படங்களின் பருமனைக் குறைக்கலாம். அவற்றின் அர்த்தம் உள்ளடக்கப்பட்டதாக அவற்றை மேலும் சிறிதாக்கலாம். கீதையின் கடவுளின் படமே பிரதானமானது. கிருஷ்ணரின் படத்தை அவர்களின் கீதையிலும் திரிமூர்த்தி சிவனின் படத்தை எங்களின் கீதையிலும் வைத்திருங்கள். அப்பொழுது பிறருக்கு விளங்கப்படுத்துவது இலகுவாக இருக்கும். பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகளான பிராமணர்கள் இங்கேயே உள்ளனர். பிரஜாபிதா பிரம்மா சூட்சும வதனத்தில் இருக்க முடியாது. “பிரம்ம தேவருக்கு வந்தனங்கள், விஷ்ணு தேவருக்கு வந்தனங்கள்” என அவர்கள் கூறுகின்றனர். ஆனால் தேவர்கள் யார்? தேவர்கள் இங்கேயே ஆட்சி புரிந்தார்கள். அங்கு தேவ தர்மம் இருந்தது. நீங்கள் இவ்விடயங்கள் அனைத்தையும் மிகத் தெளிவாக விளங்கப்படுத்த வேண்டும். பிரம்மா, விஷ்ணு ஆகுகின்றார். விஷ்ணு, பிரம்மா ஆகுகின்றார். இருவரும் இங்கேயே உள்ளனர். உங்களிடம் படங்கள் உள்ளன. எனவே உங்களால் அவற்றை விளங்கப்படுத்த முடியும். முதலில் யார் அல்ஃபா என நிரூபியுங்கள், அப்பொழுது ஏனைய அனைத்தும் நிரூபிக்கப்படும். உங்களிடம் விளங்கப்படுத்துவதற்குப் பல கருத்துக்கள் உள்ளன. ஏனைய அனைவரும் தங்கள் சொந்தச் சமயங்களை ஸ்தாபிப்பதற்கே வருகின்றனர். தந்தை ஸ்தாபனை, விநாசம் இரண்டையும் தூண்டுகின்றார். நிச்சயமாக அனைத்தும் நாடகத்தின்படியே நிகழ்கின்றன. பிரம்மாவால் பேசமுடியும், ஆனால் விஷ்ணுவால் பேசமுடியுமா? சூட்சும வதனத்தில் அவரால் என்ன கூறமுடியும்? இவ்விடயங்கள் அனைத்தும் புரிந்து கொள்ளப்பட வேண்டும். நீங்கள் இவ்விடயங்கள் அனைத்தையும் இங்கு புரிந்து கொள்ளும் போது உயர்தர வகுப்பொன்றிற்கு மாற்றப்படுகின்றீர்கள். பின்னர் நீங்கள் வேறொரு வகுப்பறைக்குச் செல்கின்றீர்கள். நீங்கள் அசரீரி உலகிலேயே இருக்கப் போவதில்லை. நீங்கள் பின்னர் வரிசைக்கிரமமாகக் கீழிறங்கி வரவேண்டும். முதற்தரமான கருத்தொன்று வலியுறுத்திக் கூறப்பட வேண்டும்: ஒரு கல்பத்திற்கு முன்னரும் இது நிகழ்ந்தது. அத்தகைய கருத்தரங்குகள் போன்றவையும் ஒரு கல்பத்திற்கு முன்னர் இடம்பெற்றன. அத்தகைய கருத்துக்களும் அப்பொழுது வெளிப்பட்டன. இன்று நிகழ்வதெல்லாம் நல்லதே, அது ஒரு கல்பத்தின் பின்னர் மீண்டும் நிகழும். இவ்வாறாகத் தொடர்ந்தும் கிரகிப்பதன் மூலம் உறுதியானவர்கள் ஆகுங்கள். இவ்வாறு சஞ்சிகைகளில் அச்சிடுமாறு பாபா உங்களுக்குக் கூறியுள்ளார்: இடம்பெறப்போகின்ற யுத்தம் புதிதல்ல, அது 5000 வருடங்களுக்கு முன்னரும் இடம்பெற்றது. நீங்கள் மாத்திரமே இவ்விடயங்களைப் புரிந்து கொள்கின்றீர்கள். வெளியிலுள்ள மக்களால் இவற்றைப் புரிந்துகொள்ள முடியாது. அவர்கள் கூறுகின்றனர்: இவை அற்புதமான விடயங்களாகும். அச்சா, அவற்றைப் புரிந்து கொள்வதற்கு நாங்கள் வேறொரு சமயத்தில் திரும்பவும் வருவோம். “கடவுள் சிவன் குழந்தைகளுடன் பேசுகின்றார்.” அத்தகைய வாசகங்கள் அனைத்து இடங்களிலும் எழுதப்படும்போது அவர்கள் வந்து புரிந்து கொள்வார்கள். பிரஜாபிதா பிரம்மாகுமார்கள் குமாரிகள் என்ற பெயர் இங்கு எழுதப்பட்டுள்ளது. பிரஜாபிதா பிரம்மா மூலமே பிராமணர்கள் உருவாக்கப்படுகின்றனர். “தேவர்கள் ஆகவுள்ள பிராமணர்களுக்கு வந்தனங்கள்” எனக் கூறப்படுகின்றது. எந்தப் பிராமணர்கள்? உண்மையில் யார் பிரம்மாவின் குழந்தைகள் என்பதை நீங்கள் பிராமணப் புரோகிதர்களுக்கு விளங்கப்படுத்த முடியும். பிரஜாபிதா பிரம்மாவிற்குப் பல குழந்தைகள் உள்ளனர். எனவே அவர்கள் நிச்சயமாக இங்கேயே தத்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். உங்கள் குலத்திற்கு உரியவர்கள் இவ்விடயங்களை மிக நன்றாகப் புரிந்து கொள்வார்கள். நீங்கள் தந்தையின் குழந்தைகள் ஆகியுள்ளீர்கள். தந்தை, பிரம்மாவைக்கூட தத்தெடுக்கின்றார். இல்லாவிடில் எங்கிருந்து ஒருவர் சரீரத்துடன் தோன்ற முடியும்? பிராமணர்களாகிய நீங்கள் மாத்திரமே இவ்விடயங்களைப் புரிந்து கொள்வீர்கள். சந்நியாசிகள் புரிந்து கொள்ள மாட்டார்கள். அஜ்மீரில் பிராமணப் புரோகிதர்கள் உள்ளனர், ஹரித்துவாரிலோ எங்கும் சந்நியாசிகளே உள்ளனர். பிராமண வழிகாட்டிகள் உள்ளனர், ஆனால் அவர்கள் (பணத்திற்காக) பேராசை கொண்டவர்கள். அவர்களிடம் கூறுங்கள்: நீங்கள் பௌதீகமான வழிகாட்டிகளாக இருக்கிறீர்கள், இனிமேல் ஆன்மீக வழிகாட்டிகள் ஆகுங்கள். நீங்களும் வழிகாட்டிகள் என்றே அழைக்கப்படுகின்றீர்கள். “பாண்டவ சேனை” என்றால் என்ன என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. பாபாவே பாண்டவர்களின் தலைவர். அவர் கூறுகின்றார்: குழந்தைகளே சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். உங்கள் பாவங்கள் அழிக்கப்பட்டு நீங்கள் வீட்டிற்குச் செல்வீர்கள். பின்னர் அமரத்துவ பூமிக்கு மிகப்பெரிய யாத்திரை இருக்கும். அசரீரி உலகிற்கான யாத்திரை அத்தகைய மிகப்பெரியது ஒன்றாகும். சகல ஆத்மாக்களும் பூச்சிக் கூட்டத்தைப் போன்று அங்கு பறந்து செல்வார்கள். ஓர் இராணித் தேனீ எங்காவது செல்லும்போது ஏனைய அனைத்துத் தேனீக்களும் அதைப் பின்தொடரும். அது ஓர் அற்புதமாகும்! சகல ஆத்மாக்களும் நுளம்புக் கூட்டத்தைப் போன்று செல்வார்கள். சிவனின் ஊர்வலம் உள்ளது. நீங்கள் அனைவரும் மணவாட்டிகள் மணவாளனாகிய நான் உங்கள் அனைவரையும் திரும்பவும் வீட்டிற்குத் அழைத்துச் செல்ல வந்துள்ளேன். நீங்கள் அழுக்காகி விட்டீர்கள்! இதனாலேயே உங்களை என்னுடன் வீட்டிற்குத் திரும்ப அழைத்துச் செல்வதற்கு முன்னர் நான் உங்களை அலங்கரிக்கின்றேன். தங்களை அலங்கரிக்காதவர்கள் தண்டனையை அனுபவம் செய்வார்கள். அனைவரும் வீடு திரும்ப வேண்டும். மக்கள் தங்களைக் காசியில் அர்ப்பணிக்கும்போது ஒரே விநாடியில் மிகப் பெரிதளவு தண்டனையை அனுபவம் செய்கின்றார்கள். மனிதர்கள் தொடர்ந்தும் விரக்திக் கூக்குரலிடுகின்றனர். காசியிலும் அவ்வாறேயாகும். பல பிறவிகளின் துன்பத்தையும் தண்டனையையும் அனுபவிப்பது போன்று அவர்கள் உணர்வார்கள். பல பிறவிகளில் செய்த பாவங்களுக்கான தண்டனையைப் பெறுவதைப் போன்றே அத்துன்ப உணர்வு உள்ளது. நீங்கள் எந்தளவிற்கு அதிகமாகத் தண்டனையை அனுபவம் செய்கின்றீர்களோ அந்தளவிற்குத் தாழ்ந்த அந்தஸ்தைப் பெறுவீர்கள். இதனாலேயே பாபா கூறுகின்றார்: யோக சக்தியால் உங்கள் கணக்குகளைத் தீர்த்துக் கொள்ளுங்கள். தொடர்ந்தும் நினைவுச் சக்தியைச் சேமியுங்கள். இந்த ஞானம் மிக இலகுவானது. இப்பொழுது மிகச் சரியான இந்த ஞானத்துடன் ஒவ்வொரு செயலையும் செய்யுங்கள். தகுதியானவர்களுக்கு இந்த ஞானத்தைத் தானம் செய்யுங்கள். ஒரு பாவாத்மாவுக்குத் தானம் செய்யும்போது தானம் செய்தவர் பாதிக்கப்படுகின்றார். அவரும் ஒரு பாவாத்மா ஆகுகின்றார். கிடைக்கின்ற பணத்தைக் கொண்டு பாவங்கள் செய்பவர்களுக்கு நீங்கள் ஒருபோதும் பணத்தைத் தானம் செய்யக்கூடாது. உலகில் பாவாத்மாக்களுக்குக் கொடுப்பதற்கு பலர் தயாராக இருக்கின்றார்கள். எனவே நீங்கள் இனியும் அதைச் செய்யக்கூடாது. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய் தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. இப்பொழுது மிகச்சரியான இந்த ஞானத்துடன் ஒவ்வொரு செயலையும் செய்யுங்கள். தகுதியானவர்களுக்கு மாத்திரமே தானம் செய்யுங்கள். பாவாத்மாக்களுடன் பணக் கொடுக்கல், வாங்கல்கள் எதனையும் வைத்திருக்காதீர்கள். யோக சக்தியால் உங்கள் கடந்த காலக் கர்மக் கணக்குகளைத் தீர்த்துக் கொள்ளுங்கள்.

2. அளவற்ற சந்தோஷத்தைப் பேணுவதற்கு உங்களுடனேயே பேசுங்கள்: பாபா நீங்கள் அளவற்ற சந்தோஷப் பொக்கிஷங்களை எங்களுக்குக் கொடுப்பதற்கு வந்துள்ளீர்கள். நீங்கள் எங்களது புத்தியை நிரப்புகின்றீர்கள். நாங்கள் முதலில் உங்களுடன் அமைதி தாமத்திற்குச் சென்று பின்னர் எங்கள் இராச்சியத்திற்குச் செல்வோம்.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஓர் உலக உபகாரியாகி பிரச்சனைகளைத் தீர்வுகளாக மாற்றுவீர்களாக.

நான் ஓர் உலக உபகாரி. இந்த மேன்மையான உணர்வு அல்லது விருப்பத்தின் மேன்மையான சம்ஸ்காரம் இப்போது வெளிப்பட வேண்டும். இந்த மேன்மையான சம்ஸ்காரத்தின் முன்னால் எல்லைக்கு உட்பட்ட சம்ஸ்காரங்கள் தானாகவே முடிவடையும். பிரச்சனைகள் தீர்வுகளாக மாற்றம் அடையும். இப்போது உங்களின் நேரத்தைப் போராட்டத்தில் வீணாக்காதீர்கள். ஆனால் வெற்றியாளராக இருக்கும் சம்ஸ்காரங்கள் வெளிப்படட்டும். இப்போது எல்லாவற்றையும் சேவை செய்வதற்காகப் பயன்படுத்துங்கள். நீங்கள் சிரமப்படுவதில் இருந்து விடுவிக்கப்படுவீர்கள். பிரச்சனைகளுக்குள் செல்வதற்குப் பதிலாக தானங்களை வழங்குங்கள், ஆசீர்வாதங்களை வழங்குங்கள். உங்களின் தீய சகுனங்கள் இயல்பாகவே முடிவடைந்துவிடும்.

சுலோகம்:
யாராவது ஒருவரின் பலவீனங்களை அல்லது குறைபாடுகளைப் பற்றிப் பேசுவதற்குப் பதிலாக நற்குணங்களின் சொரூபம் ஆகி நற்குணங்களைப் பற்றி மட்டுமே பேசுங்கள்.

அவ்யக்த சமிக்கை: ஓர் இலகு யோகியாக இருப்பதற்கு இறை அன்பை அனுபவிப்பவராக இருங்கள்.

தந்தைக்குக் குழந்தைகளான உங்களின் மீது அதிகளவு அன்பு இருப்பதனால் அவர் உங்களை அமிர்த வேளையில் இருந்து அன்பால் பராமரிக்கிறார். நாளின் ஆரம்பம் மிக மேன்மையானது. அதனால் இறைவனே உங்களை அவருடன் ஒரு சந்திப்பைக் கொண்டாடுவதற்காகவும் இதயபூர்வமாக உங்களுடன் உரையாடுவதற்கும் உங்களை சக்தியால் நிரப்புவதற்கும் அழைக்கிறார். தந்தையின் அன்புப் பாடல்கள் உங்களை காலையில் விழித்தெழச் செய்கின்றன. அவர் உங்களை மிகுந்த அன்புடன் அழைத்து உங்களை விழித்தெழச் செய்கிறார்: இனிய குழந்தைகளே, அன்பான குழந்தைகளே, வாருங்கள்! இந்த அன்பின் பராமரிப்பிற்கான நடைமுறை ரூபம் இலகு யோகி வாழ்க்கை ஆகும்.