23.12.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, கடவுளின் சேவைக்காக நீங்கள் கொண்டிருக்கும் எண்ணங்கள் தூய எண்ணங்கள் அல்லது ஏனைய எண்ணங்களிலிருந்து விடுபட்டிருத்தல் எனக் கூறப்படுகின்றன, அவை வீணானவை அல்ல.
கேள்வி:
பாவச் செயல்கள் செய்வதிலிருந்து பாதுகாக்கப்படுவதற்கு, உங்கள் கடமையை நிறைவேற்றுகின்ற பொழுதும் நீங்கள் எதனால் கவரப்படுவதில் இருந்து விடுபட்டிருக்க வேண்டும்?பதில்:
உங்களின் நண்பர்கள், உறவினர்களுக்கு நீங்கள் சேவை செய்யலாம், ஆனால் அதனை அலௌகீகமான, கடவுளின் பார்வையுடன் செய்யுங்கள். நீங்கள் அவர்கள் மீது பற்றின் இழைகளைக் கொண்டிருக்கக் கூடாது. உங்களுக்கு இருக்கின்ற, எந்த உறவுமுறையாவது விகாரத்தின் அடிப்படையிலான எண்ணங்களைக் கொண்டதாக இருக்குமாயின், அப்பொழுது நீங்கள் செய்யும் செயல்களும் பாவகரமானவையாகி விடுகின்றன. ஆகவே, எவ்விதமான கவர்ச்சிகளில் இருந்தும் விடுபட்டிருந்து, உங்கள் கடமையை நிறைவேற்றுங்கள். ஆத்ம உணர்வில் இருப்பதற்கு இயன்றவரை முயற்சி செய்யுங்கள்.ஓம் சாந்தி.
இன்று, எண்ணங்கள், பாவ எண்ணங்கள், சாதாரண எண்ணங்களில் இருந்து விடுபட்டிருப்பதன் தத்துவம், அதாவது, செயல், நடுநிலைச் செயல், பாவச் செயல் என்பவற்றின் தத்துவத்தைப் பற்றி உங்களுக்கு விளங்கப்படுத்தப்படுகிறது. இங்கு (இவ்வுலகில்) இருக்கும்வரை உங்களுக்கு நிச்சயமாக எண்ணங்கள் ஏற்படும். எந்தவொரு மனிதராலும் ஒரு கணத்திற்கேனும் எண்ணங்களைக் கொண்டிருக்காமல் இருக்க முடியாது. உங்களுக்கு இங்கும், சத்திய யுகத்திலும், பக்தி மார்க்கத்திலும் எண்ணங்கள் ஏற்படுகின்றன. ஆனால் நீங்கள் இந்த ஞான மார்க்கத்திற்கு வரும்பொழுது, எண்ணங்கள் சாதாரணமான எண்ணங்களாக இருக்கக்கூடாது. ஏனெனில் நீங்கள் கடவுளின் சேவைக்கான கருவிகள் ஆகியுள்ளீர்கள். ஆகவே, நீங்கள் யக்ஞத்திற்காகக் கொண்டிருக்கும் எண்ணங்கள் வெறுமனே எண்ணங்கள் அல்ல, அது “நிர்சங்கல்பம்” (எண்ணங்களில் இருந்து விடுபட்டிருத்தல்). எவ்வாறாயினும், உங்களுடைய பயனற்ற எண்ணங்கள், அதாவது, கலியுக உலகம், கலியுக உறவினர்கள், நண்பர்கள் பற்றிய எண்ணங்கள் பாவகரமானவை என்றே அழைக்கப்படுகின்றன. ஏனெனில் இந்த எண்ணங்கள் மூலம் பாவச் செயல்கள் இடம்பெறுகின்றன, அவற்றின் மூலம் நீங்கள் துன்பத்தையே பெறுகின்றீர்கள். எனினும் யக்ஞத்தைப் பற்றியும், கடவுளின் சேவை பற்றியும் எண்ணங்களைக் கொண்டிருக்கும் பொழுது, நீங்கள் “நிர்சங்கல்பம்” உடையவர்கள் (எண்ணங்களில் இருந்து விடுபட்டவர்கள்) எனப்படுகின்றீர்கள். நீங்கள் சேவையைப் பற்றிய தூய எண்ணங்களைக் கொணடிருக்கலாம். பாருங்கள், குழந்தைகளாகிய உங்களைப் பராமரிப்பதற்காகவே பாபா இங்கே அமர்ந்திருக்கின்றார். பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணங்களைக் கொண்டிருக்கின்றார்கள், ஆனால் அந்த எண்ணங்கள், பாவங்கள் செய்யப்படுகின்ற எண்ணங்கள் அல்ல. எவ்வாறாயினும், யாராவது ஒருவர் விகாரத்தின் அடிப்படையில் ஏதாவது ஓர் உறவுமுறை பற்றிய எண்ணங்களைக் கொண்டிருப்பாராயின், அப்பொழுது அவை நிச்சயமாகவே பாவத்தைச் சேமிக்கின்றன. பாபா குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகின்றார்: நீங்கள் உங்களின் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் சேவை செய்யலாம், ஆனால் அதனை அலௌகீக, இறை பார்வையுடனே செய்யுங்கள்; பற்றின் இழைகள் இல்லாதிருக்கட்டும். நீங்கள் எவ்விதமான கவர்ச்சிகளில் இருந்தும் விடுபட்டிருந்தவாறு உங்கள் கடமைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். எவ்வாறாயினும், இங்கிருக்கின்ற யாராவது கர்ம உறவுமுறைகளைத் துண்டிக்க முடியாதவராக இருப்பினும், அவர்கள் கடவுளை விட்டு விடக்கூடாது. நீங்கள் தொடர்ந்தும் அவரது கரத்தைப் பற்றியவாறே இருந்தீர்களாயின், ஏதோவோர் அந்தஸ்தைப் பெற்றுக் கொள்வீர்கள். உங்கள் ஒவ்வொருவருக்கும் உங்களுக்குள்ளே என்ன விகாரம் இருக்கின்றது என்பது தெரியும். எவராவது ஒரு விகாரத்தையேனும் கொண்டிருப்பாராயின், அப்பொழுது அவர் நிச்சயமாகச் சரீர உணர்வு உடையவராகவே இருக்கின்றார். எவ்விதமான விகாரங்களும் அற்றவர்களே ஆத்ம உணர்வு உடையவர்கள். யாராவது ஒருவர் ஏதாவது ஒரு விகாரத்தையேனும் கொண்டிருந்தால், நிச்சயமாகத் தண்டனை கிடைக்கும், விகாரத்திலிருந்து விடுபட்டவர்களே தண்டனையிலிருந்து விடுபட்டிருப்பார்கள். உதாரணமாக, சில குழந்தைகள் காமமோ, கோபமோ, பேராசையோ அல்லது பற்றோ அற்றவர்கள். அவர்களால் மிக நல்ல சேவை செய்ய முடிகின்றது. அவர்களின் ஸ்திதியானது பெருமளவுக்கு இந்த ஞானம் மற்றும் யோகம் நிறைந்ததாகவே இருக்கின்றது. நீங்கள் அனைவரும் கூட அவருக்கே வாக்களிப்பீர்கள். அனைவரும் சிறந்தவராக இருக்கின்ற ஒருவரைப் பற்றி “இவர் மிகச் சிறந்தவர்” என்றே கூறுவார்கள் என்று நான் அறிந்துள்ளதைப் போல், குழந்தைகளாகிய நீங்களும் அறிந்திருக்கின்றீர்கள். எவராவது குறைபாடுகளைக் கொண்டிருந்தால், அதற்கேற்பவே, பிறர் அவருக்கு வாக்களிப்பார்கள். இந்த உறுதியான நம்பிக்கையைக் கொண்டிருங்கள்: எந்தவொரு விகாரமாவது இருக்குமாயின், அவரால் சேவை செய்ய இயலாது. விகாரம் முற்றிலுமே ஏற்பட முடியாமல் (உட்புக) இருப்பவர்களாலேயே சேவை செய்து, மற்றவர்களையும் தமக்குச் சமனாக்க முடியும். இதனாலேயே நீங்கள் விகாரங்களுக்கு எதிராக முழுமையாக வெற்றி அடைய வேண்டும். பாவ எண்ணங்கள் முழுமையாக வெற்றி கொள்ளப்பட வேண்டும். நீங்கள் கடவுள் பற்றிய எண்ணங்களைக் கொண்டிருக்கும் பொழுது, சாதாரண எண்ணங்களில் இருந்து விடுபட்டவர்கள் என்றே கூறப்படுகிறீர்கள். உண்மையில், “நிர்சங்கல்பம்” எனும் ஸ்திதியானது, நீங்கள் முற்றிலும் எவ்விதமான எண்ணங்களும் அற்றிருப்பதுடன், சந்தோஷத்திற்கும், துன்பத்திற்கும் அப்பாற்பட்டிருக்கும் ஸ்திதி ஆகும். நீங்கள் உங்களுடைய கணக்குகளைத் தீர்த்த பின்னர் நீங்கிச் செல்லும் பொழுது, இறுதியில் அது நிகழும். அங்கே மேலே நீங்கள் சந்தோஷம், துன்பம் போன்ற அனைத்திற்கும் அப்பாற்பட்ட ஸ்திதியில் நிலைத்திருப்பீர்கள். அந்நேரத்தில் உங்களுக்கு எந்த எண்ணங்களும் ஏற்பட மாட்டாது. அந்நேரத்தில் நீங்கள் செயல்கள், நடுநிலைச் செயல்கள் இரண்டிற்கும் அப்பால் இருக்கின்ற ஸ்திதியைக் கொண்டிருப்பீர்கள். நீங்களே முழு உலகையும் தூய்மை ஆக்குவதற்கான கருவிகள் ஆகியிருப்பதனால் இங்கு, நீங்கள் நிச்சயமாகவே எண்ணங்களைக் கொண்டிருப்பீர்கள். ஆகவே, நீங்கள் நிச்சயமாக அதனைப் பற்றிய தூய எண்ணங்களைக் கொண்டிருப்பீர்கள். சத்திய யுகத்தில் நீங்கள் தூய எண்ணங்களைக் கொண்டிருப்பதனால், உங்கள் எண்ணங்கள் வெறும் எண்ணங்களாக இருப்பதில்லை; நீங்கள் எதனையும் செய்யும் பொழுதும், எந்தவொரு கர்ம பந்தனத்தையும் உருவாக்குவதில்லை. உங்களுக்குப் புரிகின்றதா? கடவுளால் மாத்திரமே செயல், நடுநிலைச் செயல், பாவச் செயலின் தத்துவத்தை உங்களுக்கு விளங்கப்படுத்த முடியும். அவரால் மாத்திரமே எங்களைப் பாவங்களில் இருந்து விடுவிக்க முடியும். ஆகவே, அவர் எங்களுக்குச் சங்கம யுகத்தில் கற்பிக்கின்றார். ஆகவே, குழந்தைகளே, உங்கள் மீது பெருமளவு கவனம் செலுத்துங்கள். தொடர்ந்தும் உங்கள் கர்மக் கணக்கினை அவதானியுங்கள். நீங்கள் இங்கு உங்கள் கணக்கினைத் தீர்ப்பதற்காகவே வந்திருக்கின்றீர்கள். நீங்கள் இங்கு வந்து, தொடர்ந்தும் மேலும் கர்மக் கணக்குகளை உருவாக்கி, தண்டனையை அனுபவிக்க நேரிடுவதாக இருக்கக்கூடாது. கருப்பைச் சிறையில் அனுபவம் செயகின்ற தண்டனை சிறிய விடயமல்ல. இதன் காரணமாகவே, நீங்கள் பெருமளவு முயற்சியைச் செய்ய வேண்டும். இலக்கு மிகவும் உயர்ந்தது. ஆகவே நீங்கள் எச்சரிக்கையுடன் முன்னேற வேண்டும். நீங்கள் நிச்சயமாகப் பாவ எண்ணங்களை வென்றவர்கள் ஆகவேண்டும். நீங்கள் எவ்வளவு தூரம் பாவ எண்ணங்களை வென்றவர்கள் ஆகிவிட்டீர்கள்? உங்களால் எண்ணங்களில் இருந்து விடுபட்ட ஸ்திதியில், அதாவது, இன்ப துன்பத்திற்கு அப்பாற்பட்ட ஸ்திதியில் எந்தளவிற்கு இருக்க முடிகின்றது? நீங்களே இதனை அறிய முடியும். இதனைத் தாங்களாகவே புரிந்து கொள்ள முடியாதவர்கள், மம்மாவிடமோ அல்லது பாபாவிடமோ இதனைக் கேட்கலாம், ஏனெனில் நீங்களே அவர்களின் வாரிசுகள் ஆதலால், அவர்களால் அதனை உங்களுக்குக் கூறமுடியும். சாதாரண எண்ணங்களில் இருந்து விடுபட்ட நிலையில் இருப்பதன் மூலம், உங்களால் உங்கள் சொந்தப் பாவங்களை மாத்திரமன்றி, இன்னொரு பாவாத்மாவின் பாவங்களையும் தடுக்க முடியும். இதனால் காம உணர்வுடன் உங்கள் முன்னால் வருகின்ற எவராலும் கூட விகாரமான எண்ணங்களைக் கொண்டிருக்க முடியாது. மக்கள் தேவர்களின் விக்கிரகங்களின் முன்னால் வரும்பொழுது, அமைதி அடைகின்றார்கள். அவ்வாறே, நீங்கள் மறைமுகமான வடிவில் இருக்கின்ற, தேவர்கள். விகார எண்ணங்கள் கொண்ட எவராலும் உங்கள் முன் வரவே முடியாது; நீங்கள் யோக யுக்த நிலையில் நின்றீர்களேயாயின், காமம் நிறைந்த மக்கள் உங்கள் முன்னால் அத்தகைய எண்ணங்களுடன் வந்தாலும், அவர்களால் உங்களைத் தாக்கமுடியாது. பாருங்கள், குழந்தைகளே! நீங்கள் இங்கே உங்கள் விகாரங்கள் என்ற யாக ஆகுதியைக் கடவுளிடம் கொடுப்பதற்காகவே வந்துள்ளீர்கள், ஆனால் உங்களில் சிலர் அந்த அர்ப்பணிப்பை மிகச்சரியாக இன்னமும் செய்யவில்லை. அவர்களின் யோகம் கடவுளுடன் தொடர்புபடவில்லை. நாள் முழுவதும் அவர்களின் புத்தியின் யோகம் தொடர்ந்தும் அலைந்து திரிகின்றது, அதாவது, அவர்கள் ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகவில்லை. சரீர உணர்வினைக் கொண்டிருப்பதனால், அவர்கள் மற்றவர்களின் சுபாவத்தின் ஆதிக்கத்திற்குள் வருகின்றார்கள், இதனால் அவர்களால் கடவுளின் அன்பிற்கான தங்கள் பொறுப்பினை நிறைவேற்ற முடியாதுள்ளது. அவர்களால் கடவுளின் சேவையைச் செய்வதற்கான உரிமையைப் பெற முடியாதுள்ளது என்று அதற்கு அர்த்தம். இறைவனிடம் இருந்து சேவையைப் பெற்று, மற்றவர்களுக்குச் சேவை செய்பவர்கள், அதாவது, தூய்மை அற்றவர்களைத் தூய்மையாக்குபவர்களே எனது உண்மையான, பக்கா குழந்தைகள். அவர்கள் மிக உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறுகின்றார்கள். இப்பொழுது கடவுளே வந்து, உங்கள் தந்தையாகி உள்ளார். நீங்கள் சாதாரண வடிவில் இருக்கின்ற அந்தத் தந்தையை இனங்கண்டு கொள்ளாமையினால், வேறு ஏதாவது எண்ணத்தை உருவாக்கினால், நீங்கள் அழிவிற்கு இட்டுச் செல்லப்படுகின்றீர்கள் என்றே அர்த்தம். இப்பொழுது 108 ஞான கங்கைகளும் தங்கள் சம்பூரணமான ஸ்திதியை அடைகின்ற அந்த நாளும் வரும், ஆனால் முற்றாகவே கற்காதவர்கள் தம்மைத் தாமே சீரழித்துக் கொள்வார்கள். இதனை உறுதியாகப் புரிந்து கொள்ளுங்கள்: ஜனிஜனன்கார் (ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கின்ற அனைத்தையும் அறிந்தவர்) பாபா, யக்ஞத்தில் இரகசியமாகத் தவறான செயல்களைச் செய்பவர்கள் புரிகின்ற அனைத்தையும் நிச்சயமாக அவதானித்துக் கொண்டிருக்கின்றார். பின்னர் அவர்களுக்கு எச்சரிக்கை செய்வதற்காக, அவர் தனது சரீர வடிவ பாபாவிற்குத் தொடுகையைக் கொடுக்கின்றார். ஆகவே, நீங்கள் எதனையும் மறைக்கக் கூடாது. தவறுகள் செய்யப்பட்டால் கூட, அவருக்கு அவற்றைப் பற்றிக் கூறுவதனால், நீங்கள் எதிர்காலத்தில் பாதுகாக்கப்படுகிறீர்கள். ஆகவே, குழந்தைகளே, எச்சரிக்கையாக இருங்கள்! குழந்தைகளே, அனைத்திற்கும் முதலில், நீங்கள் ஒவ்வொருவரும் உங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்: நான் யார்? நான் எவ்வாறாக உள்ளேன்? நீங்கள் “நான்” எனக் கூறும்பொழுது, அது சரீரத்தைக் குறிப்பிடுவதில்லை, ஆனால் அது ஆத்மாவையே குறிப்பிடுகின்றது. ஆத்மாவாகிய நான் எங்கிருந்து வந்தேன்? நான் யாருடைய குழந்தை? ஆத்மாவான நான், பரமாத்மாவாகிய பரமதந்தையின் குழந்தையே என்பதை ஆத்மா அறிந்து கொள்ளும் பொழுது, தந்தையை நினைவு செய்வதில் சந்தோஷம் இருக்கும். குழந்தைகள் தமது தந்தையின் தொழிலை அறிந்து கொள்ளும் பொழுது, சந்தோஷத்தை அனுபவம் செய்கின்றார்கள். ஒரு குழந்தை சிறியவராக இருந்து, தனது தந்தையின் தொழிலை அறியாதிருக்கும் பொழுது, அந்தளவு சந்தோஷம் இருப்பதில்லை. குழந்தை வளரும்பொழுது, தனது தந்தையின் தொழிலை அறிந்து கொள்வதால், அதன் போதை அல்லது சந்தோஷம் அதிகரிக்கின்றது. ஆகவே, அனைத்திற்கும் முதலில், அவர் யார் என்றும், அவர் எங்கே வாழ்கின்றார் என்றும் அவரது தொழிலை அறிந்து கொள்ளுங்கள். ஆத்மா அவருடன் இரண்டறக் கலந்துவிடுவார் என நீங்கள் கூறும்பொழுது, ஆத்மா அழியக்கூடியவர் ஆகுகின்றார். ஆகவே யாருக்கு அதைப் பற்றிய சந்தோஷம் இருக்கும்? உங்களிடம் வருகின்ற புதிய மாணவர்களை நீங்கள் கேட்க வேண்டும்: “நீங்கள் இங்கு என்ன கற்கின்றீர்கள்? அதன் மூலம் நீங்கள் என்ன அந்தஸ்தைப் பெற்றுக் கொள்வீர்கள்?” லௌகீகக் கல்லூரிகளில் கற்பவர்கள் தாம் ஒரு வைத்தியர் ஆகுவதற்கோ அல்லது ஒரு பொறியியலாளர் ஆகுவதற்கோ கற்பதாக உங்களுக்குக் கூறுகின்றார்கள். ஆகவே, அவர்கள் உண்மையில் அதற்காகவே கற்கின்றார்கள் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கும். இங்கும் கூட மாணவர்கள், இது நரகம் என்று அழைக்கப்படுகின்ற, துன்ப உலகம், அதாவது, அசுர உலகம் எனக் கூறுகின்றனர். இதற்கு எதிராக, சுவர்க்கமான தேவர்களின் உலகம் என அழைக்கப்படுகின்ற சுவர்க்கம் உள்ளது. அனைவருக்கும் இது தெரியும். இது சுவர்க்கம் அல்ல் இது நரகம், அதாவது, துன்ப உலகம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும். இது பாவாத்மாக்களின் உலகம், இதனாலேயே அவர்கள் அவரை “எங்களைப் புண்ணிய உலகிற்கு அழைத்துச் செல்லுங்கள்” என்று அழைக்கின்றார்கள். இங்கு கற்கின்ற குழந்தைகளுக்கு, பாபா தங்களை இப்பொழுது அந்த உலகிற்கு அழைத்துச் செல்கிறார் என்பது தெரியும். இங்கு வருகின்ற புதிய மாணவர்கள், குழந்தைகளை வினவ வேண்டும்: அவர்கள் குழந்தைகளிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். குழந்தைகளால் ஆசிரியரினதும், தந்தையினதும் தொழிலை அவர்களுக்குக் கூற முடியும். தந்தை அமர்ந்திருந்து, தன்னைப் புகழ மாட்டார். ஓர் ஆசிரியர் தன்னைத் தானே புகழ்வாரா? மாணவர்களே அந்த ஆசிரியர் இத்தகையவர் என்று கூறுவார்கள். இதனாலேயே “மாணவர்கள் தமது ஆசிரியரை வெளிக்காட்டுகிறார்கள்” எனக் கூறப்படுகின்றது. குழந்தைகளாகிய நீங்கள் இந்தப் பாடநெறியைக் கற்றிருப்பதால், இப்பொழுது இங்கே வருகின்ற புதியவர்களுக்கு விளங்கப்படுத்துவது உங்கள் கடமையாகும். பீ.ஏ. அல்லது எம்.ஏ. பாடநெறிகளை மாணவர்களுக்குக் கற்பிக்கின்ற ஓர் ஆசிரியர், தனது புதிய மாணவர்களுக்கு அரிச்சுவடியைக் கற்பிப்பாரா? சில மாணவர்கள் மிகவும் கெட்டிக்காரர்கள். அவர்கள் மற்றவர்களுக்கும் கற்பிக்கின்றார்கள். தாய் குரு இதற்காக நினைவு செய்யப்படுகின்றார். அவர் தேவ தர்மத்தின் முதலாவது தாய், அவர் ஜெகதாம்பாள் என அழைக்கப்படுகின்றார். தாயின் பெருமளவு புகழ் உள்ளது. வங்காளத்தில், காளி, துர்க்கை, சரஸ்வதி, மற்றும் இலக்ஷ்மி, இந்த நால்வரும் பெருமளவு வழிபடப்படுகின்றார்கள். இந்த நால்வரினதும் தொழிலை ஒருவர் அறிந்திருக்க வேண்டும். உதாரணத்திற்கு, இலக்ஷ்மியே செல்வத்தின் தேவி. அவர் இங்கே ஆட்சிசெய்து, சென்று விட்டார். எவ்வாறாயினும், காளி, துர்க்கை என்ற பெயர்கள் இவருக்கே கொடுக்கப்பட்டுள்ளன. நான்கு தாய்மார்கள் (தேவியர்) இருந்தால், அவர்களுக்கு நான்கு கணவன்மாரும் இருக்க வேண்டும். இலக்ஷ்மியின் நாராயணனே மிகப் பிரபல்யமானவர். காளியின் துணைவன் யார்? (சங்கரர்). எவ்வாறாயினும், சங்கரர் பார்வதியின் துணைவராகக் காட்டப்பட்டுள்ளார். பார்வதி தேவி, காளி அல்ல. காளியை வழிபாடு செய்பவர்கள் பலர் இருக்கின்றார்கள். அவர்கள் அந்தத் தேவியை நினைவு செய்தாலும், அவர்களுக்கு அவரது துணைவரைப் பற்றி எதுவுமே தெரியாது. காளிக்கு ஒரு தந்தை அல்லது துணை இருந்திருக்க வேண்டும், ஆனால் எவருக்குமே அது பற்றித் தெரியாது. இந்த உலகம் ஒன்றே உள்ளது, இதுவே ஒரு காலத்தில் நரகமாகிய, துன்ப பூமி ஆகுகின்றது என்றும், பின்னர் அதே உலகமே சத்திய யுகத்தில் வைகுந்தம் அல்லது சுவர்க்கம் ஆகுகின்றது என்றும் நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். இலக்ஷ்மியும் நாராயணனும் சத்தியயுகத்தில் இந்த உலகத்தை ஆட்சி செய்தார்கள். சூட்சும உலகில், இலக்ஷ்மி நாராயணனின் சூட்சும வடிவங்களைக் கொண்ட சுவர்க்கம் இல்லை. அவர்களின் உருவங்கள் இங்கேயே இருப்பதனால், அவர்கள் நிச்சயமாக இங்கேயே ஆட்சிசெய்து சென்றார்கள். நாடகம் முழுவதும் சரீர உலகிலேயே நடைபெறுகின்றது. வரலாறு மற்றும் புவியியல் அனைத்தும் கூட இந்தப் பௌதீக உலகிற்கு உரியது. சூட்சும உலகிற்கான வரலாறோ, புவியியலோ இல்லை. எவ்வாறாயினும், நீங்கள் அனைத்தையும் ஒருபுறம் விட்டுவிட்டு, அனைத்திற்கும் முதலில், புதிய மாணவர்களுக்கு அல்பா மற்றும் பீற்றாவைப் பற்றிக் கற்பிக்க வேண்டும். அல்பா, என்றால் கடவுள்; அவரே பரமாத்மா. அவர்கள் இதனை முழுமையாகப் புரிந்து கொள்ளும்வரை, அவர்களின் கடவுளுக்கான அன்பானது விழித்தெழப் போவதுமில்லை, அவர்கள் அந்தச் சந்தோஷத்தைக் கொண்டிருக்கப் போவதும் இல்லை. ஏனெனில் அனைத்திற்கும் முதலில், அவர்கள் கடவுளை அறியும்பொழுதே, அவரது தொழிலை அறிந்து கொள்ளவும், அந்தச் சந்தோஷத்தைக் கொண்டிருக்கவும் முடியும். ஆகவே, இந்த முதலாவது விடயத்தைப் புரிந்து கொள்வதிலேயே சந்தோஷம் இருக்கின்றது. கடவுளே என்றென்றும் சந்தோஷமாக இருப்பவரும், பேரானந்தம் நிறைந்தவரும் ஆவார். நாங்கள் அவரது குழந்தைகள். ஆகவே, நாங்கள் ஏன் அந்தச் சந்தோஷத்தைக் கொண்டிருக்கக் கூடாது? ஏன் சந்தோஷம் பொங்கி வழிகின்ற உணர்வுகள் இருப்பதில்லை? நான் கடவுளின் மகன், நான் மாஸ்டர் கடவுள், என்றென்றும் சந்தோஷமாக இருப்பவர். அந்தச் சந்தோஷம் இல்லாத பொழுது, நீங்கள் உங்களைக் கடவுளின் மகனாகக் கருதவில்லை என்பதையே அது நிரூபிக்கின்றது. கடவுள் என்றென்றும் சந்தோஷமாகவே இருக்கின்றார், ஆனால் நான் இன்னமும் சந்தோஷமாக இல்லை, ஏனெனில் எனக்குத் தந்தையைத் தெரியாது. இது மிகவும் எளிமையான விடயம். இந்த ஞானத்தைச் செவிமடுப்பதற்குப் பதிலாக, சிலர் அமைதியையே விரும்புகின்றார்கள். ஏனெனில் பலராலும் இந்த ஞானத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது. அந்தளவு காலம் இல்லை. அவர்கள் அல்பாவை மாத்திரம் புரிந்துகொண்டு மௌனமாக இருந்தார்களாயின், அதுவும் நல்லதே. உதாரணத்திற்கு, சந்நியாசிகளும் கூட மலைக்குச் சென்று, அங்கே குகைகளினுள் கடவுளின் நினைவில் அமர்ந்திருக்கின்றார்கள். அவ்வாறே, நீங்களும் பரமாத்மா, பரமதந்தையாகிய பரம ஒளியின் நினைவில் இருந்தீர்களாயின், அதுவும் நல்லதே. அவரின் நினைவில் இருப்பதன் மூலம் சந்நியாசிகளால் கூட விகாரம் அற்றவர்களாக இருக்க முடியும். எவ்வாறாயினும், அவர்கள் வீட்டில் இருந்திருந்தால், அவர்களால் அவரை நினைவுசெய்ய இயலாமல் இருந்திருக்கும். அவர்களுக்குத் தங்கள் குழந்தைகள் போன்றோரில் இருக்கின்ற பற்று அவர்களை ஈர்க்கும். இதனாலேயே அவர்கள் அனைத்தையும் துறக்கின்றார்கள். அவர்கள் புனிதமானவர்கள் ஆகுவதால், அதில் சந்தோஷம் இருக்கின்றது. சந்நியாசிகளே அனைவரிலும் அதிசிறந்தவர்கள். ஆதிதேவரும் ஒரு சந்நியாசி ஆகினார், அல்லவா? தில்வாலா ஆலயத்தின் முன்னால் ஆதிதேவரின் ஆலயம் இருக்கின்றது, அங்கே அவர் தபஸ்யா செய்வதாகக் காட்டப்படுகின்றது. கீதையும் “சரீர சமயங்கள் அனைத்தையும் துறவுங்கள்” என்றே கூறுகின்றது. அவர்கள் எங்காவது சென்று, துறவறத்தை மேற்கொண்டு, மகாத்மாக்கள் ஆகுகின்றார்கள். ஓர் இல்லறத்தவரை மகாத்மா என்று அழைப்பது தவறானது. கடவுளே வந்து, உங்களைத் துறவை மேற்கொள்வதற்குத் தூண்டி உள்ளார். ஒருவர் சந்தோஷத்திற்கே துறவினை மேற்கொள்கின்றார். மகாத்மாக்களால் ஒருபொழுதுமே சந்தோஷம் அற்றிருக்க முடியாது. சில அரசர்களும் அனைத்தையும் துறக்கிறார்கள், அதனால் தமது கிரீடம் போன்றவற்றை வீசி விடுகிறார்கள். உதாரணமாக, கோபிசந்த் மன்னன் அனைத்தையும் துறந்தார். ஆகவே, அதில் நிச்சயமாகவே சந்தோஷம் இருக்கின்றது. அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. இரகசியமாக எந்தத் தவறான செயலையும் செய்யாதீர்கள். பாப்தாதாவிடம் இருந்து எதனையும் மறைக்காதீர்கள். மிக, மிக எச்சரிக்கையாக இருங்கள்.2. மாணவன் ஆசிரியரை வெளிப்படுத்துகின்றான். நீங்கள் கற்றுள்ளவற்றைப் பிறருக்குக் கற்பியுங்கள். நீங்களே என்றென்றும் சந்தோஷமான கடவுளின் குழந்தைகள், இந்த விழிப்புணர்வுடன் எல்லையற்ற சந்தோஷத்தில் நிலைத்திருங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் விஷ்ணுவைப் போல் விகாரங்கள் எனும் பாம்பைப் படுக்கை (பாம்பு அணை) ஆக்குவதால், சதா வெற்றியாளராகவும், கவலையற்றவராகவும் இருப்பீர்களாக.வெற்றியாளர் குழந்தைகளாகிய உங்களின் இலகு யோகி வாழ்வின் ஞாபகார்த்தமே பாம்புப் படுக்கையில் சித்தரிக்கப்பட்டுள்ள, விஷ்ணு ஆவார். யோகத்தினால் விகாரம் எனும் பாம்பு கூட இலகுவில் கட்டுப்படுத்தப்படுகின்றது. விகாரங்கள்; எனும் பாம்பை வெற்றி கொண்டு, அதனை ஒரு சௌகரியமான படுக்கை ஆக்குகின்ற குழந்தைகள் விஷ்ணுவைப் போல் சதா சந்தோஷமாகவும், கவலையற்றவர்களாகவும் இருக்கின்றனர். ஆகவே, விகாரங்களைக் கட்டுப்படுத்துவதுடன், சகல உரிமைகளையும் உடைய ஆத்மாவான இந்த உருவத்தைச் சதா உங்கள் முன்னால் வைத்திருங்கள். ஆத்மாவாகிய நீங்கள், சதா ஓய்வாகவும், கவலை அற்றவராகவும் இருக்கின்ற நிலையில் இருக்கின்றீர்கள்.
சுலோகம்:
ஒரு குழந்தையாகவும், அதிபதியாகவும் இருக்கின்ற சமநிலை மூலம் உங்கள் திட்டங்களை நடைமுறை ரூபத்தில் இடுங்கள்.அவ்யக்த சமிக்ஞை: இப்பொழுது முழுமையாகவும் கர்மாதீத்தாகவும் ஆகுகின்ற ஆழமான அக்கறையைக் கொண்டிருங்கள்.
உங்கள் பௌதீக அங்கங்கள் ஒவ்வொன்றிற்கும் உங்கள் சக்தியால் சமிக்ஞை கொடுங்கள், அப்பொழுது அத்தகைய சமிக்ஞைகள் மூலம் அவற்றை நீங்கள் விரும்பியவாறு இயங்க வைக்க உங்களால் முடியும். இவ்விதமாக, பௌதீக அங்கங்களை வென்றவர் ஆகுங்கள். அப்பொழுது உங்களால் சடப்பொருளை வென்றவராகி, கர்மாதீத ஸ்திதியில் இருக்க முடிவதால், உலக இராச்சியத்தை ஆட்சிசெய்பவர்கள் ஆக முடியும். “ஆம், எனது பிரபுவே”, “பிரசன்னமாகி உள்ளேன், பிரபுவே” எனக் கூறி, உங்கள் பௌதீக அங்கங்கள் ஒவ்வொன்றும் தொடர்ந்தும் இயங்க வேண்டும். உங்கள் பௌதீக அங்கங்கள், சதா இராஜரீக ஆட்சியாளர்களான உங்களை வரவேற்கும் பொழுது, அதாவது, அவை தொடர்ந்தும் உங்களுக்கு வணக்கம் செலுத்தும் பொழுது, உங்களால் பின்னர் கர்மாதீதமாக இயலும்.