24.01.26        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே தந்தை உங்களுக்குக் கற்பிக்கின்ற கல்வியை உங்கள் புத்தியில் வைத்திருந்து அதனை அனைவருக்கும் கற்பியுங்கள். தந்தையினதும் உலகச் சக்கரத்தினதும் அறிமுகத்தை அனைவருக்கும் கொடுங்கள்.

கேள்வி:
ஆத்மாக்கள் தங்களது பாகத்தைச் சத்தியயுகத்திலும் நடித்து கலியுகத்திலும் நடிக்கின்றார்கள், ஆனால் வித்தியாசம் என்ன?

பதில்:
ஆத்மாக்கள் சத்தியயுகத்தில் தங்களது பாகத்தை நடிக்கும் பொழுது பாவச்செயல்கள் எதையும் செய்வதில்லை. அங்கே செயல்கள் அனைத்தும் நடுநிலையானவை. ஏனெனில் இராவணன் அங்கே இருப்பதில்லை. பின்னர் ஆத்மாக்கள் கலியுகத்தில் தங்களது பாகங்களை நடிக்கும்போது ஒவ்வொரு செயலும் பாவம் ஆகின்றது. ஏனெனில் இங்கே விகாரங்கள் உள்ளன. நீங்கள் இப்பொழுது சங்கமயுகத்தில் இருக்கின்றீர்கள், உங்களிடம் இந்த ஞானம் அனைத்தும் உள்ளது.

ஓம் சாந்தி.
நீங்கள் பாபாவின் முன்னால் அமர்ந்திருக்கின்றீர்கள் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் அவரின் முன்னால் அமர்ந்திருக்கின்றீர்கள் என்பதை பாபாவும் அறிவார். தந்தை உங்களுக்குக் கற்பித்தல்களைக் கொடுக்கின்றார். பின்னர் அதனை நீங்கள் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். முதலில் தந்தையின் அறிமுகத்தைக் கொடுங்கள். ஏனெனில் அனைவரும் தந்தையையும் அவரது கற்பித்தல்களையும் மறந்து விட்டார்கள். தந்தை இப்பொழுது உங்களுக்குக் கொடுக்கின்ற கற்பித்தல்கள் 5000 வருடங்களுக்குப் பின்னரும் கொடுக்கப்படும். வேறு எவரிடமும் இந்த ஞானம் இல்லை. தந்தையின் அறிமுகமே பிரதான விடயமாகும். பின்னர் நாங்கள் அனைவரும் சகோதரர்கள் என்பதை நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். முழு உலகிலுள்ள ஆத்மாக்கள் அனைவரும் சகோதரர்களே. ஒவ்வொருவரும் அவர் பெற்ற பாகத்தை அவரது சரீரத்தின் மூலம் நடிக்கின்றனர். தந்தை இப்பொழுது உங்களைச் சுவர்க்கம் என்று அழைக்கின்ற புதிய உலகிற்கு அழைத்துச் செல்ல வந்துள்ளார். எவ்வாறாயினும் சகோதரர்களாகிய நாங்கள் அனைவரும் துய்மை அற்றவர்களே. எவருமே தூய்மையானவர் இல்லை. ஒரு தந்தை மாத்திரமே தூய்மையற்ற அனைவரையும் தூய்மை ஆக்குபவர் ஆவார். இது தூய்மையற்ற விகாரமான பண்பற்ற இராவணனின் உலகமாகும். இராவணன் என்றால் பெண்களின் ஐந்து விகாரங்களும் ஆண்களின் ஐந்து விகாரங்களும் ஆகும். பாபா மிக இலகுவான முறையில் விளங்கப்படுத்துகின்றார். நீங்களும் அதே போன்று விளங்கப்படுத்தலாம். எனவே முதலில் அவர் ஆத்மாக்களாகிய எங்களின் தந்தை என்பதை விளங்கப்படுத்துங்கள். நாங்கள் அனைவரும் சகோதரர்கள். இது சரியா என அவர்களிடம் வினவுங்கள். நாங்கள் அனைவரும் சகோதரர்கள் எங்களது தந்தை ஒருவர் என எழுதுமாறு அவர்களிடம் கூறுங்கள். அவர் ஆத்மாக்களாகிய எங்களின் தந்தை பரமாத்மா ஆவார். அவர் தந்தை என அழைக்கப்படுகின்றார். இதை அவர்களது புத்தியில் உறுதியாகப் பதிய வைக்கும் போது தற்பொழுது அவர்களிடம் உள்ள சர்வவியாபி என்ற கருத்து அகற்றப்படும். முதன் முதலில் அவர்களுக்கு அல்பா பற்றிக் கற்பியுங்கள். முன்னர் நான் அவர் சர்வவியாபி எனக் கூறிவந்தேன், ஆனால் இப்பொழுது அவர் சர்வவியாபி அல்ல என்றும் நாங்கள் அனைவரும் சகோதரர்கள் என்றும் தெளிவாக இதனை எழுதுமாறு அவர்களிடம் கூறுங்கள். ஆத்மாக்கள் அனைவரும் பரமாத்மாவும் தந்தையுமான கடவுளையிட்டே பேசுகிறார்கள். முதன்முதலில் அவர்கள் அனைவரும் ஆத்மாக்கள் என்றும் பரமாத்மா அல்ல என்றும் கடவுள் எங்களினுள் இருப்பதில்லை என்ற நம்பிக்கையை உறுதியாக்குங்கள். ஒவ்வொரு சரீரத்திலும் ஓர் ஆத்மா இருக்கின்றார். ஆத்மாக்கள் அவர்களுடைய சரீரங்களின் ஆதாரத்துடனே தங்களுடைய பாகத்தை நடிக்கின்றார்கள். இதை மிகவும் உறுதி ஆக்குங்கள்! அச்சா தந்தை பின்னர் உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானத்தை எங்களுக்குக் கொடுக்கின்றார். இந்த உலகச் சக்கரத்தின் ஆயுள் என்ன என்பது பற்றி வேறு எவருமே அறியமாட்டார்கள். ஆசிரியர் என்ற ரூபத்தில் இருக்கும் போது தந்தை இதனை எங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். இதில் நூறாயிரக்கணக்கான வருடங்கள் பற்றிய கேள்வி இல்லை. இந்தச் சக்கரம் சரியானதும் நிச்சயிக்கப்பட்டதும் ஆகும். நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். சத்திய, திரேதா யுகங்கள் இப்பொழுது கடந்த காலமாகி விட்டது எனக் குறிப்பிடுங்கள். இராச்சியம் இருந்தபோது அவை சுவர்க்கம் எனவும் அரைச்சுவர்க்கம் எனவும் அழைக்கப்பட்டன. ஒன்று பதினாறு சுவர்க்க கலைகள் நிறைந்ததாகவும் மற்றையது பதினான்கு கலைகள் நிறைந்ததாகவும் இருந்தது. கலைகள் தொடர்ந்தும் படிப்படியாகக் குறைவடைகின்றன. உலகம் நிச்சயமாகப் பழையதாக ஆகின்றது. சத்தியயுகத்தின் தாக்கம் அதி உயர்ந்தது. மிக நல்ல பெயர் சுவர்க்கம், புதிய உலகமாகும். நீங்கள் அதைப் புகழவேண்டும். புதிய உலகில் ஒரேயொரு ஆதிசனாதன தேவி தேவதா தர்மம் மாத்திரமே இருக்கின்றது. முதலில் தந்தையின் அறிமுகத்தையும் பின்னர் உலகச்சக்கரத்தின் அறிமுகத்தையும் கொடுங்கள். அவர்களை நம்பிக்கை கொள்ளச் செய்கின்ற படங்களையும் நீங்கள் வைத்திருக்க வேண்டும். இந்த உலகச் சக்கரம் தொடர்ந்து சுழலும். சத்தியயுகத்தில் இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியமும் திரேதாயுகத்தில் இராமர் சீதையின் இராச்சியமும் இருந்தன. அது அரைக்கல்பமாகும். அந்த இரண்டு யுகங்களும் கடந்த பின்னர் துவாபர, கலியுகங்கள் வருகின்றன. இராவண இராச்சியம் துவாபரயுகத்தில் ஆரம்பம் ஆகின்றது. தேவர்கள் பாவப்பாதையில் சென்ற போதே விகாரங்களுக்கான வழக்கம் உருவாகியது. சத்திய, திரேதா யுகங்களில் அனைவரும் விகாரம் அற்றவர்கள். அங்கே ஆதிசனாதன தேவி தேவதா தர்மமே இருக்கின்றது. இந்தப் படங்களை அனைவருக்கும் காட்டி எவ்வாறு தந்தை எங்களது ஆசிரியராக வந்து இந்த முறையில் கற்பிக்கின்றார் என வாய்மொழியில் அவர்களுக்கு விளங்கப்படுத்துங்கள். தந்தை தானே வந்து அவரது சொந்த அறிமுகத்தைக் கொடுக்கின்றார். அவர் கூறுகின்றார்: நான் தூய்மை அற்றவர்களைத் தூய்மையாக்க வருகின்றேன். ஆகையினால் நிச்சயமாக எனக்கு ஒரு சரீரம் தேவையாகும். இல்லையெனில் நான் எவ்வாறு பேசமுடியும்? நானே உயிர் வாழ்பவர், சத்தியமானவர், அமரத்துவமானவர் ஆவேன். ஆத்மாக்கள் சதோ, ரஜோ, தமோ நிலைகளுக்கூடாகச் செல்கின்றனர். ஆத்மாக்களே தூய்மையாகவும் தூய்மை அற்றவர்களாகவும் ஆகுகின்றனர். இதனாலேயே தூய ஆத்மா, தூய்மையற்ற ஆத்மா எனக் கூறப்பட்டுள்ளது. சமஸ்காரங்கள் அனைத்தும் ஆத்மாவிலேயே உள்ளன. கடந்தகால சமஸ்காரங்களும் பாவச்செயல்களும் ஆத்மாவினாலேயே கொண்டு செல்லப்படுகின்றது. சத்தியயுகத்தில் பாவச்செயல்கள் எதுவும் இருப்பதில்லை. நீங்கள் செயல்கள் செய்வதன் மூலம் உங்கள் பாகத்தை நடிப்பீர்கள், ஆனால் அந்த செயல்கள் நடுநிலையானவை. இவ் வார்த்தைகள் கீதையிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. இப்பொழுது நீங்கள் அவற்றை நடைமுறையில் புரிந்து கொள்கின்றீர்கள். பாபா பழைய உலகை மாற்றிப் புதியதாக்க வந்துள்ளார் என்பதை நீங்கள் அறிவீர்கள். அனைத்துச் செயல்களும் நடுநிலையாக இருப்பதே சத்தியயுகம் எனப்படுகின்றது. செயல்கள் அனைத்தும் பாவச் செயல்கள் ஆகின்றபோது அது கலியுகம் என்று அழைக்கப்படுகின்றது. நீங்கள் இப்பொழுது சங்கமயுகத்தில் இருக்கின்றீர்கள். பாபா உங்களுக்கு இரண்டு பக்கத்திலும் உள்ள அனைத்தையும் கூறுகின்றார். சத்திய, திரேதா யுகங்கள் பாவம் எதுவுமற்ற தூய உலகம் ஆகும். இராவண இராச்சியம் ஆரம்பிக்கின்ற போதே பாவமும் ஆரம்பிக்கின்றது. அங்கே விகாரங்கள் பற்றிய குறிப்பே இருப்பதில்லை. இராம இராச்சியத்தினதும் இராவண இராச்சியத்தினதும் படங்கள் உங்களின் முன்னே உள்ளன. இது ஒரு கல்வி எனத் தந்தை விளங்கப்படுத்துகின்றார். வேறு எவருமன்றித் தந்தையே இதை அறிவார். இந்தக் கல்வி உங்கள் புத்தியிலே நிலைத்திருக்க வேண்டும். நீங்கள் தந்தையை நினைவு செய்கின்றபோது சக்கரமும் உங்கள் புத்தியில் பிரவேசிக்கின்றது. நீங்கள் ஒரு விநாடியில் அனைத்தையும் நினைவு செய்கின்றீர்கள். இதைப்பற்றிப் பேசுவதற்கு நீண்ட நேரம் எடுக்கும். விருட்சமும் இதைப் போன்றதே அதிலிருந்து மூன்று நீரூற்றுக்கள் வெளியாகின்றன. நீங்கள் ஒரு விருட்சத்தையும் அதன் விதையையும் ஒரு விநாடியில் நினைவு செய்ய முடியும். இன்ன, இன்ன மரத்தின் விதை எவ்வாறு இருக்கின்றது எனவும் அதனுடைய பழம் அதில் வளர்வது போன்று இது எப்படி எல்லையற்ற மனிதகுல விருட்சம் என்ற முக்கியத்துவத்தை நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். அரைக்கல்பத்துக்கு எவ்வாறு வம்சம் தொடர்கின்றது எனவும் பின்னர் எவ்வாறு இராவண இராச்சியம் இருக்கின்றது எனவும் குழந்தைகளாகிய உங்களுக்கு அனைத்தும் விளங்கப்படுத்தப்படுகின்றது. சத்திய, திரேதாயுக வாசிகளாக இருந்தவர்கள், பின்னர் துவாபரயுக வாசிகளாக ஆகின்றனர். மரம் தொடர்ந்து வளர்கின்றது. அரைக்கல்பத்தின் பின்னர், அனைவரும் விகாரம் உடையவர்கள் ஆகும் போது இராவண இராச்சியம் ஆரம்பம் ஆகின்றது. தந்தையிடமிருந்து நீங்கள் பெறுகின்ற ஆஸ்தி, அரைக் கல்பத்துக்கு நீடிக்கின்றது. அவர் உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுத்து பின்னர் உங்களது ஆஸ்தியையும் கொடுத்தார். அதாவது நீங்கள் உங்கள் வெகுமதியை அனுபவம் செய்தீர்கள். நீங்கள் சத்திய, திரேதாயுகங்களில் சந்தோஷத்தை அனுபவம் செய்கின்றீர்கள். அதுவே சந்தோஷமான சத்தியயுகம் என்று அழைக்கப்படுகின்றது. அங்கே துன்பம் எதுவுமே இல்லை. உங்களுக்கு இலகுவான முறையில் அனைத்தும் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் ஒருவருக்கோ அல்லது பலருக்கோ விளங்கப்படுத்தினாலும் நீங்களும் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் விளங்கப்படுத்தும்போது அவர்கள் ஏற்றுக் கொள்வதாகத் தலையசைத்தாலும் அவர்களைக் குறிப்பெடுத்துக் கொள்ளுமாறு கூறவேண்டும். அதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் அவர்கள் அதுபற்றிக் கேட்கலாம். வேறு எவரும் அறியாத விடயங்களையே நாங்கள் உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றோம். அவர்கள் எதையும் அறிய மாட்டார்கள், எனவே என்னதான் கேட்பார்கள்? பாபா எல்லையற்ற விருட்சத்தின் முக்கியத்துவத்தை உங்களுக்குக் கூறியுள்ளார். நீங்கள் இந்த நேரத்தில் இந்த ஞானத்தைப் புரிந்து கொண்டுள்ளீர்கள். நீங்கள் எவ்வாறு 84 பிறவிகளின் சக்கரத்தில் சுற்றி வந்துள்ளீர்கள் எனத் தந்தை உங்களுக்குக் கூறியுள்ளார். இதை மிகக் கவனமாகக் குறித்து வைத்து பின்னர் அதைப் பற்றிச் சிந்தியுங்கள். ஓர் ஆசிரியர் ஒரு கட்டுரையை வீட்டில் மீண்டும் பார்க்குமாறு கொடுப்பது போன்று இந்த ஞானத்தை மற்றவர்களுக்கும் கொடுங்கள். பின்னர் என்ன நடக்கின்றது எனப் பாருங்கள். தொடர்ந்தும் அவர்களிடம் கேள்விகளைக் கேளுங்கள். அவர்களுக்கு ஒவ்வொரு விடயங்களையும் மிகத் தெளிவாக விளங்கப்படுத்துங்கள். தந்தையினதும் ஆசிரியரினதும் பின்னர் குருமாரினதும் கடமைகளை விளங்கப்படுத்துங்கள். வந்து தூய்மையற்ற எங்களைத் தூய்மை ஆக்குமாறு அவரை நீங்கள் அழைத்தீர்கள். ஆத்மாக்கள் தூய்மை ஆகும்போது அவர்கள் தூய சரீரங்களையே பெறுகின்றார்கள். தங்கம் எவ்வாறோ, அவ்வாறே அதில் செய்த ஆபரணங்களும் இருக்கும். நீங்கள் 24 கரட் தங்கத்தை எடுத்து அதில் கலப்படம் கலக்காது விட்டால் அதில் செய்த ஆபரணங்களும் சதோபிரதானாகவே இருக்கும். உங்களில் கலப்படம் கலந்ததனாலேயே நீங்கள் தமோபிரதான் ஆகியுள்ளீர்கள். ஆரம்பத்தில் பாரதம் 24 கரட் தங்கச் சிட்டுக்குருவியாக இருந்தது. அதாவது, அது சதோபிரதான் புதிய உலகமாக இருந்தது. பின்னர் அது தமோபிரதான் ஆகியது. தந்தையே இதனை விளங்கப்படுத்துகின்றார். எந்த ஒரு மனிதரோ அல்லது குருவோ இதை அறிய மாட்டார்கள். வந்து எங்களைத் தூய்மை ஆக்குங்கள் என அவரை நீங்கள் அழைத்தீர்கள். எவ்வாறாயினும் அது ஒரு குருவினுடைய பணியாகும். மக்கள் தங்களது ஓய்வு ஸ்திதியை அடைகின்றபோது அவர்கள் குருமாரை ஏற்றுக் கொள்வார்கள். சத்தத்துக்கு அப்பால் உள்ள இடம், ஆத்மாக்கள் வசிக்கும் அசரீரி உலகமாகும். இது சரீர உலகம். இது இரண்டும் சந்திக்கும் இடமாகும். அங்கே சரீரம் எதுவும் இல்லை. அங்கே செயல்கள் எதுவும் செய்யப்படுவதில்லை. தந்தையிடம் அனைத்து ஞானமும் உள்ளது. நாடகத் திட்டத்துக்கு ஏற்ப அவர் ஞானம்-நிறைந்தவர் என்று அழைக்கப்படுகின்றார். ஏனெனில் அவரே உயிர்வாழ்பவர், சத்தியம், பேரானந்தமானவர். அத்துடன் அவர் ஞானம்-நிறைந்தவர் எனவும் அழைக்கப்படுகின்றார். நீங்கள் அவரைத் தூய்மையாக்குபவர் எனவும் ஞானம் நிறைந்த சிவபாபா எனவும் அழைக்கின்றீர்கள். அவருடைய பெயர் எப்போதும் சிவன் என்பதே ஆகும். அனைத்து ஆத்மாக்களும் கீழே வந்து தங்களது பாகங்களை நடிப்பதற்காக வெவ்வேறு பெயர்களைக் கொண்டிருகின்றார்கள். அவர்கள் தந்தையை அழைக்கின்றார்கள். ஆனால் அவர்கள் எதையுமே புரிந்து கொள்வதில்லை. தந்தை வந்து உங்களைத் தூய உலகிற்கு அழைத்துச் செல்வதற்கு நிச்சயமாக ஒரு பாக்கியரதம் இருக்க வேண்டும். எனவே தந்தை விளங்கப்படுத்துகின்றார்: இனிமையான குழந்தைகளே இப்பொழுது அவரது பல பிறவிகளின் கடைசிப் பிறவியிலுள்ள சரீரத்திலேயே நான் வருகின்றேன். அவர் 84 பிறவிகள் முழுமையாக எடுத்தவர் ஆவார். நான் இந்தப் பாக்கியரதத்தில் வரவேண்டி உள்ளது. ஸ்ரீகிருஷ்ணரே முதல் இலக்கத்துக்கு உரியவர், அவரே புதிய உலகின் அதிபதி ஆவார். அவர் பின்னர் கீழே வருகின்றார். சத்தியயுகத்தின் பின்னர் அவர் திரேதா, துவாபர, கலியுகங்களினுடாகச் செல்கின்றார். நீங்கள் இப்பொழுது இரும்பில் இருந்து தங்கம் ஆகின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: உங்களுடைய தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள்! நான் பிரவேசித்த சரீரதாரியின் ஆத்மாவில் இந்த ஞானம் எதுவும் இருக்கவில்லை. நான் அவரினுள் பிரவேசித்ததால் அவர் பாக்கியரதம் என்று அழைக்கப்படுகின்றார். இல்லை எனில் இலக்ஷ்மி நாராயணனே அனைவரிலும் அதிமேன்மையானவர்கள் ஆவர். ஆகையினால் நான் அவர்களில் ஒருவரிலேயே பிரவேசிக்க வேண்டும். எவ்வாறாயினும் கடவுள் அவர்களினுள் பிரவேசிப்பதில்லை. இதனாலேயே அவர்களில் ஒருவரேனும் பாக்கியரதம் என்று அழைக்கப்படுவதில்லை. அவர் இந்த இரதத்தில் பிரவேசிப்பதன் மூலம் தூய்மை அற்றவர்களைத் தூய்மையாக்க வேண்டும். ஆகையினால் இவர் நிச்சயமாகக் கலியுகத்தில் தமோபிரதானாக இருக்க வேண்டும். அவர் கூறுகின்றார்: நான் இவரது பல பிறவிகளின் கடைசிப் பிறவியில் வருகின்றேன். இந்த வார்த்தைகள் கீதையிலே சரியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கீதையே அனைத்து சமயநூல்களினதும் மேன்மையான இரத்தினம் என்று அழைக்கப்படுகின்றது. தந்தை இந்த சங்கமயுகத்திலேயே வந்து பிராமண, தேவ குலங்களை ஸ்தாபிக்கின்றார். தந்தை பல பிறவிகளின் கடைசிப் பிறவியில் அதாவது சங்கமயுகத்தில் வருகின்றார். அவர் கூறுகின்றார்: நானே விதை ஆவேன். ஸ்ரீகிருஷ்ணர் சத்தியயுகத்து வாசி ஆவார். அவரை வேறு எங்கும் காணமுடியாது. மறுபிறவி எடுத்ததால் பெயர், ரூபம், இடம், நேரம் அனைத்தும் மாற்றம் அடைகின்றன. முகச்சாயலும் மாறுகின்றது. முதலில் ஒரு சிறு குழந்தை அழகானவர், பின்னர் அவர் வளர்கின்றார். அவர் பின்னர் அந்த சரீரத்தை நீக்கி மீண்டும் ஒரு சிறிய சரீரத்தை எடுக்கின்றார். இந்தப் பாகம் முன்னரே தீர்மானிக்கப்பட்டதும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டதும் ஆகும். அவர் அடுத்த சரீரத்தை எடுக்கின்றபோது அவரை மேலும் ஸ்ரீகிருஷ்ணர் என்று அழைக்க முடியாது. அடுத்த சரீரத்துக்கு வேறு பெயர் கொடுக்கப்படுகின்றது. நேரம், முகச்சாயல், திகதி, கணம் போன்றவை அனைத்தும் மாறுகின்றன. உலக வரலாறும் புவியியலும் மறுபடியும் அதேபோன்று இடம்பெறுகின்றது. எனவே இந்த நாடகம் மறுபடியும் தொடர்ந்து இடம்பெறும். நீங்கள் சதோ, ரஜோ, தமோ நிலைகளுக்கூடாகச் செல்லவேண்டும். உலகின் பெயரும் யுகத்தின் பெயரும் தொடர்ந்து மாற்றம் அடையும். இப்பொழுது இது சங்கமயுகம் ஆகும். நான் சங்கமயுகத்திலேயே வருகின்றேன். நான் உங்களுக்கு முழு உலகினதும் வரலாற்றையும் புவியியலையும் கூறுகின்றேன். ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை உள்ள அனைத்தையும் எவருமே அறியமாட்டார்கள். சத்தியயுகத்தின் கால எல்லையை அறியாததால் அவர்கள் நூறாயிரக்கணக்கான வருடங்கள் பற்றிப் பேசுகின்றார்கள். இப்பொழுது இந்த விடயங்கள் அனைத்தும் உங்கள் புத்தியிலேயே உள்ளது. இதை உங்களுக்கு உள்ளே உறுதியாக்கிக் கொள்ளுங்கள்: தந்தையே, தந்தையும் ஆசிரியரும் சற்குருவும் ஆவார். அவர் எங்களுக்கு மீண்டும் ஒருமுறை சதோபிரதான் ஆகுவதற்கான மிக நல்ல வழிமுறைகளைக் கொடுக்கின்றார். கீதையிலும் இது கூறப்பட்டுள்ளது: உங்கள் சரீரம் உட்பட சரீர சமயங்கள் அனைத்தையும் துறந்து உங்களை ஒரு ஆத்மாவாகக் கருதுங்கள்! நீங்கள் நிச்சயமாக வீடு திரும்ப வேண்டும். பக்திமார்க்கத்திலே அவர்கள் கடவுளை அடைவதற்கு முயற்சி செய்கின்றார்கள். அது அவர்கள் செயல்களில் இருந்து விடுபட்டிருக்கின்ற முத்திதாமம் ஆகும். நாங்கள் சென்று அசரீரி உலகில் இருப்போம். ஒரு நடிகர் வீட்டுக்குச் செல்கின்றபோது அவர் தனது பாகத்தில் இருந்து விடுதலை அடைகின்றார். அனைவரும் முக்தி அடையவே விரும்புகின்றனர். எவருமே அநாதியான முத்தியடைய முடியாது. இந்த நாடகம் அநாதியானதும் அழிக்க முடியாததும் ஆகும். சிலர் தாம் வந்து போகின்ற பாகத்தை விரும்பவில்லை எனக் கூறுகின்றனர். எவ்வாறாயினும் அதுபற்றி எவரும் எதுவும் செய்யமுடியாது. இந்த அநாதியான நாடகம் நிச்சயிக்கப்பட்டது. ஒரு தனிநபரும் அநாதியான முத்தியை அடைய முடியாது. அந்த விடயங்கள் அனைத்தும் வித்தியாசமான முறையான மனித வழிகாட்டல்கள் ஆகும். இவை உங்களை அதிமேன்மையானவர் ஆகுவதற்கான மேன்மையான வழிகாட்டல்கள் ஆகும். மனிதர்களை மேன்மையானவர்கள் (ஸ்ரீ) என அழைக்க முடியாது. தேவர்கள் மேன்மையானவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அனைவரும் அவர்களை (சிலையை) வணங்குகின்றனர், ஏனெனில் அவர்கள் மேன்மையானவர்கள் என்பதாலாயே ஆகும். ஸ்ரீகிருஷ்ணர் ஒரு தேவர், சுவர்க்கத்தின் இளவரசர் ஆவார். அவர் எவ்வாறு இங்கு வரமுடியும்? அவர் கீதையை உரைக்கவில்லை. மக்கள் சிவனின் முன்னால் சென்று அவரிடம் முக்தி கேட்கின்றார்கள். அவர் ஜீவன்முக்திக்கோ அல்லது பந்தன வாழ்க்கைக்கோ செல்வதில்லை. ஆகையினால் மக்கள் அவரை முக்திக்காக அழைக்கின்றார்கள். அவர் ஜீவன்முக்தியையும் கொடுக்கின்றார். அச்சா.

இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய் தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும் ஆன்மீகத்தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. ஆத்மாக்களாகிய நாங்கள் அனைவரும் சகோதரர்கள். இந்தப் பாடத்தை உறுதியாக்கி மற்றவர்களையும் அவ்வாறு செய்யத் தூண்டுங்கள். நினைவின் மூலம் உங்களுடைய சமஸ்காரங்களை சம்பூரணமாகத் தூய்மை ஆக்குங்கள்.

2. 24 கரட் தூய தங்கம் (சதோபிரதான்) ஆகுவதற்கு, செயல்கள், நடுநிலையான செயல்கள், பாவச்செயல்களின் ஆழமான கர்மதத்துவத்தை உங்கள் புத்தியில் வைத்திருந்து மேலும் பாவச் செயல்கள் எதையும் செய்யாதீர்கள்.

ஆசீர்வாதம்:
மாஸ்டர் ஞானம் நிறைந்தவர் ஆகி பயத்துடன் நடனம் ஆடுவதற்குப் பதிலாக, சதா சந்தோஷ நடனம் ஆடுவீர்களாக.

மாஸ்டர் ஞானம் நிறைந்த குழந்தைகள் பயத்துடன் நடனமாட மாட்டார்கள். இப்பொழுது அந்த ஏணியில் ஒரு கணம் ஏறுவதும் மறுகணம் இறங்குகின்ற சம்ஸ்காரத்தை மாற்றுங்கள், அப்போது நீங்கள் மிக விரைவாகச் செல்வீர்கள். உங்கள் அதிகாரத்தையும் ஞானத்தையும் குடும்பத்தின் ஒத்துழைப்பையும் பயன்படுத்தி தொடர்ந்தும் உங்கள் கரத்தைத் தந்தையின் கரத்துடன் வைத்திருங்கள். அப்பொழுது நீங்கள் தொடர்ந்தும் நடனம் ஆடுவீர்கள்: பயத்துடன் ஆடும் நடனம் எதுவும் இருக்க முடியாது. எவ்வாறாயினும் நீங்கள் மாயையின் கரங்களை பிடித்துக் கொண்டிருந்தாலேதான் அந்த நடனம் இடம்பெறும்.

சுலோகம்:
மகத்துவமான எண்ணங்களையும் செயல்களையும் கொண்டிருப்பவர்களே மாஸ்டர் சர்வசக்திவான்கள் ஆவார்கள்.

அவ்யக்த சமிக்ஞை: இந்த அவ்யக்த மாதத்தில் பந்தனத்திலிருந்து விடுபட்டிருந்து ஜீவன் முக்தி ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள்.

ஒரு மாஸ்டர் திரிகாலதரிசியாக இருந்து ஒவ்வொரு செயலையும் செய்யுங்கள், ஒவ்வோர் எண்ணத்தையும் உருவாக்குங்கள், ஒவ்வொரு வார்த்தையையும் பேசுங்கள். அப்பொழுது எந்தவொரு செயலும் வீணானதாகவோ அல்லது அர்த்தம் அற்றதாகவோ ஆக மாட்டாது. திரிகாலதரிசியாக இருப்பது என்றால் உங்கள் பௌதீகப் புலன்களால் வேலை செய்கின்ற போது ஒரு பற்றற்ற பார்வையாளர் ஸ்திதியில் ஸ்திரமாக இருப்பதாகும். அப்பொழுது நீங்கள் அந்தச் செயல்களின் ஆதிக்கத்திற்கு உட்பட மாட்டீர்கள். சதா உங்கள் வேலையில் பற்றற்று இருங்கள், அத்துடன் உங்கள் செயல்களின் பந்தனத்தைக் கொண்டிருக்காதீர்கள். அப்பொழுது உங்களின் அதியுயர்ந்த ஸ்திதியை நீங்கள் அடைவீர்கள்.