24.02.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் வாழ்க்கை எனும் நூலை ஒரேயொரு தந்தையுடன் இணைத்துள்ளீர்கள். உங்கள் தொடர்பு ஒரேயொருவருடனே உள்ளது. ஒரேயொருவருக்கான உங்களது பொறுப்பை நிறைவேற்றுங்கள்.
கேள்வி:
சங்கமயுகத்தில் ஆத்மாக்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் வாழ்க்கைகள் எனும் நூலைப் பரமாத்மாவுடன் இணைக்கிறீர்கள். அறியாமைப் பாதையில் இது எம் முறையில் ஒரு வழக்கமாகத் தொடர்கின்றது?பதில்:
மணமகளின் சேலைத் தலைப்பின் நுனியும், மணமகனின் சால்வையின் தலைப்பும் அவர்களின் திருமணத்தின் பொழுது, முடிச்சுப் போடப்படுகின்றது. வாழ்க்கையில் தான் அவனது சகபாடியாக இருக்க வேண்டுமென மனைவி அப்பொழுது புரிந்து கொள்கின்றாள். நீங்கள் இப்பொழுது உங்களின் சேலைத் தலைப்பைத் தந்தையுடன் இணைத்துள்ளீர்கள். நீங்கள் அரைக் கல்பத்துக்குத் தந்தையால் பராமரிக்கப்படுவீர்கள் என்பதைப் புரிந்து கொள்கிறீர்கள்.பாடல்:
நான் எனது வாழ்க்கை எனும் நூலை உங்களுடன் இணைத்துள்ளேன்.ஓம் சாந்தி.
பாருங்கள், இந்தப் பாடலில் கூறப்பட்டுள்ளது: ‘நான் எனது வாழ்க்கை எனும் நூலை உங்களுடன் இணைத்துள்ளேன்’. ஒரு பெண் அவளது வாழ்க்கை எனும் நூலை அவளது கணவனுடன் முடிச்சிட்டு, அவனது சகபாடியாக அவளது வாழ்க்கையைக் கழிக்க வேண்டும் எனவும், அவன் அவளைப் பராமரிக்க வேண்டும் எனவும் புரிந்து கொள்கின்றாள். மனைவி அவனைப் பராமரிக்க வேண்டும் என்றில்லை; இல்லை, அவனே, அவளை வாழ்க்கையில் பராமரிக்க வேண்டும். குழந்தைகளாகிய நீங்களும் உங்கள் வாழ்க்கை எனும் நூலை இணைத்துள்ளீர்கள். நீங்கள் அவரை எல்லையற்ற தந்தை என்றோ, ஆசிரியர் அல்லது குரு என்றோ அழைத்தாலும், ஆத்மாக்களின் வாழ்க்கை எனும் நூல் பரமாத்மாவுடனேயே இணைக்கப்பட வேண்டும். அவர்களுடையது, எல்லைக்கு உட்பட்ட, பௌதீகமான விடயம், ஆனால் இதுவோ சூட்சுமமான விடயமாகும். ஒரு மணவாட்டி அவளது வாழ்க்கை எனும் நூலைக் கணவருடன் இணைத்த பின்னர், அவனுடைய வீட்டிற்குச் செல்கின்றாள். உங்களுக்கு அனைத்தையும் புரிந்து கொள்ள ஒரு புத்தி தேவையாகும். கலியுகத்தில், அனைத்து விடயங்களும் அசுர கட்டளைகள். நீங்கள் உங்களுடைய வாழ்க்கை எனும் நூலை ஒரேயொருவருடன் இணைத்துள்ளதை அறிவீர்கள். உங்களுடைய தொடர்பு ஒரேயொருவருடனேயே உள்ளது. நீங்கள் ஒரேயொருவருக்கான உங்களது பொறுப்பை நிறைவேற்ற வேண்டும், ஏனெனில் நீங்கள் அவரிடமிருந்து பெருஞ் சந்தோஷத்தைப் பெறுகின்றீர்கள். அவர் எங்களைச் சுவர்க்க அதிபதிகள் ஆக்குகின்றார். எனவே நீங்கள் அவ்வாறான தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும். இது ஓர் ஆன்மீக நூலாகும். ஆத்மாக்களே ஸ்ரீமத்தைப் பெறுகின்றார்கள். அசுர கட்டளைகளைப் பின்பற்றியதால், நீங்கள் கீழே வீழ்ந்து விட்டீர்கள். நீங்கள் இப்பொழுது ஆன்மீகத் தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும். நீங்கள் உங்களுடைய வாழ்வுகள் எனும் நூல்களைப் பரமாத்மாவுடன் இணைப்பதை ஆத்மாக்களான நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். நாங்கள் 21 பிறவிகளுக்கான சதா சந்தோஷம் எனும் ஆஸ்தியை அவரிடம் இருந்து பெறுகின்றோம். அந்த தற்காலிகமான வாழ்க்கை எனும் நூலைக் கட்டுவதனால், நீங்கள் தொடர்ந்தும் கீழே வந்தீர்கள், ஆனால் இதுவோ 21 பிறவிகளுக்கான உத்தரவாதம். உங்களுடைய வருமானம் மிகவும் மகத்தானது. நீங்கள் இது பற்றிக் கவனயீனமாக இருக்கக்கூடாது. மாயை உங்களை மிகவும் கவனயீனம் அடையச் செய்கின்றாள். இலக்ஷ்மியும், நாராயணனும் நிச்சயமாகத் தமது வாழ்வுகள் எனும் நூல்களை ஒரேயொருவருடன் இணைத்ததால், 21 பிறவிகளுக்கு அந்த ஆஸ்தியைப் பெற்றார்கள். ஒவ்வொரு கல்பத்திலும் எண்ணற்ற தடவைகள் ஆத்மாக்களான உங்கள் ஒவ்வொருவரினதும் இவ் வாழ்க்கை எனும் நூல், பரமாத்மாவுடன் கட்டப்பட்டுள்ளது. நீங்கள் இப்பொழுது சிவபாபாவுக்குச் சொந்தமாக இருப்பதும், உங்களுடைய வாழ்க்கை எனும் நூலை அவருடன் இணைத்துள்ளதும் உங்கள் புத்திகளில் உள்ளன. தந்தை இங்கே அமர்ந்திருந்து, அனைத்தையும் உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் முன்னைய கல்பத்திலும் அவருடன் அதை இணைத்தீர்கள் என்பதைப் புரிந்து கொள்கின்றீர்கள். மக்கள் சிவஐயந்தியைக் கொண்டாடுகின்றார்கள், ஆனால் தாங்கள் யாருடைய பிறந்ததினத்தைக் கொண்டாடுகின்றார்கள் என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. தூய்மையாக்குபவரான, சிவபாபா நிச்சயமாகச் சங்கமயுகத்தில் வருவார். நீங்கள் மாத்திரமே இதைப் புரிந்து கொள்கின்றீர்கள்; உலகம் இதைப் புரிந்து கொள்வதில்லை. இதனாலேயே பல மில்லியன் கணக்கானவர்களுள் ஒரு கைப்பிடியளவினர் என்பது நினைவு கூரப்படுகின்றது. ஆதிசனாதன தேவிதேவதா தர்மம் மறைந்து விட்டது, ஏனைய சமயநூல்களும், கதைகளும் உள்ளன. இந்தத் தர்மம் இல்லாததால், அவர்களால் எவ்வாறு அதைப் பற்றி அறிந்துகொள்ள முடியும்? நீங்கள் இப்பொழுது உங்கள் வாழ்க்கை எனும் நூலை இணைக்கின்றீர்கள். ஆத்மாக்களின் நூல்கள் பரமாத்மாவுடன் இணைக்கப்படுகின்றன. உங்கள் சரீரங்களினால் எதனையும் செய்வதென்ற கேள்வி இல்லை. நீங்கள் வீட்டில் வாழலாம், ஆனால் உங்கள் புத்தியினால் அவரை நினைவு செய்யுங்கள். ஆத்மாக்களாகிய உங்களின் நூல்கள் அவருடன் இணைக்கப்பட்டுள்ளன. அவர்கள் மணமகளின் சேலைத் தலைப்பை முடிச்சிடுகின்றார்கள். அது பௌதீகமானது. இங்கே ஆத்மாக்களாகிய நீங்கள் பரமாத்மாவுடன் யோகம் செய்கின்றீர்கள். மக்கள் பாரதத்தில் சிவனின் பிறந்ததினத்தைக் கொண்டாடுகின்றார்கள், ஆனால் அவர் எப்பொழுது வந்தார் என எவரும் அறியார். ஸ்ரீ கிருஷ்ணரின் பிறந்ததினம் எப்பொழுது இருந்தது அல்லது இராமரின் பிறந்ததினம் எப்பொழுது இருந்தது என்றும் அவர்கள் அறிய மாட்டார்கள். குழந்தைகளான நீங்கள் “திரிமூர்த்தி சிவஐயந்தி” என்ற வார்த்தைகளை எழுதுகின்றீர்கள். எவ்வாறாயினும், இந்நேரத்தில் திரிமூர்த்தி இருப்பதில்லை. சிவபாபா உலகைப் பிரம்மாவின் மூலம் படைப்பதாக நீங்கள் கூறுகின்றீர்கள். எனவே பிரம்மா நிச்சயமாகச் சரீர ரூபத்தில் இருக்க வேண்டும். நீங்கள் திரிமூர்த்தி பற்றிப் பேசுகின்றீர்கள், ஆனால் இந்நேரத்தில் விஷ்ணுவும், சங்கரரும் எங்கே உள்ளனர்? இந்த விடயங்கள் மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும். திரிமூர்த்தி என்றால் பிரம்மா, விஷ்ணு, சங்கரர் என்று அர்த்தம். இந்நேரத்திலேயே பிரம்மாவின் மூலம் ஸ்தாபனை இடம்பெறுகின்றது. சத்தியயுகத்தில் விஷ்ணுவின் மூலம் பராமரிப்பு இடம்பெறும். விநாசத்திற்கான பணி இறுதியில் இடம்பெறும். பாரதத்தின் ஒரே தர்மமாகிய ஆதிசனாதன தேவிதேவதா தர்மமே இருக்கின்றது. ஏனைய அனைவரும் தங்களுடைய சமயங்களை ஸ்தாபிக்க வருகின்றார்கள். குறிப்பிட்ட சமயங்கள் எப்பொழுது ஸ்தாபிக்கப்பட்டன, அந்தச் சமயங்களின் கால எல்லைகள் என்ன என்பதை அனைவரும் அறிவார்கள். இன்ன-இன்ன சமயம் இன்ன-இன்ன நேரத்தில் ஸ்தாபிக்கப்பட்டது. பாரதத்தைப் பற்றிய எதையும் எவரும் புரிந்து கொள்வதில்லை. கீதையின் பிறந்ததினம் அல்லது சிவனின் பிறந்ததினம் எப்பொழுது இருந்தன என்பதை எவரும் அறிந்திருப்பதில்லை. ஸ்ரீ கிருஷ்ணரினதும் இராதையினதும் வயதுகளுக்கு இடையே இரண்டு அல்லது மூன்று வருடங்கள் வித்தியாசம் இருந்திருக்கும். சத்தியயுகத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் முதலில் பிறப்பெடுப்பார், இராதை பின்னரே வந்தார். எவ்வாறாயினும், சத்தியயுகம் எப்பொழுது இருந்தது என்பதை எவருமே புரிந்து கொள்வதில்லை. உங்;களுக்கும் இதைப் புரிந்து கொள்ளப் பல வருடங்கள் எடுத்து விட்டது. இரண்டு அல்லது மூன்று நாட்களில் ஒருவர் எவ்வளவைப் புரிந்துகொள்வார்;? தந்தை உங்களுக்கு அனைத்தையும் மிக இலகுவாக விளங்கப்படுத்துகின்றார். அவரே எல்லையற்ற தந்தை. அனைவரும் அவரிடம் இருந்து நிச்சயமாக ஆஸ்தியைப் பெற வேண்டும். மக்கள் “ஓ தந்தையாகிய கடவுளே!” எனக் கூறி, அவரை நினைவு செய்கின்றார்கள். இலக்ஷ்மி, நாராயணனுக்கு ஓர் ஆலயம் உள்ளது. அவர்கள் சுவர்க்கத்தை ஆட்சிசெய்தார்கள், ஆனால் அவர்களுக்கு அவர்களுடைய ஆஸ்தியைக் கொடுத்தவர் யார்? சுவர்க்கத்தைப் படைப்பவரே நிச்சயமாக அவர்களுக்கு அதைக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் எப்பொழுது அல்லது எவ்வாறு அவர் அதைக் கொடுத்தார் என எவருமே புரிந்து கொள்வதில்லை. சத்தியயுகம் இருந்தபொழுது, அங்கே வேறு எந்தச் சமயங்களும் இருக்கவில்லை என நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். நாங்கள் சத்தியயுகத்தில் இருக்கின்ற பொழுது, தூய்மையாக இருக்கின்றோம். கலியுகத்தில் நாங்கள் தூய்மை அற்றவர்கள். எனவே, அவர் சங்கம யுகத்திலேயே இந்த ஞானத்தைக் கொடுத்திருக்க வேண்டும், சத்தியயுகத்தில் அல்ல. அங்கே அது வெகுமதி மட்டுமே. எனவே அவர் அவர்களின் முன்னைய பிறவியிலேயே அவர்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுத்திருக்க வேண்டும். நீங்களும் இதை இப்பொழுது பெறுகின்றீர்கள். தந்தையே ஆதிசனாதன தேவிதேவதா தர்மத்தை ஸ்தாபிக்கின்றார் என நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். ஸ்ரீ கிருஷ்ணர் சத்தியயுகத்தில் இருந்தார். அவர் எங்கிருந்து அவரது வெகுமதியைப் பெற்றார்? இலக்ஷ்மி, நாராயணனே இராதையும், கிருஷ்ணருமாக இருந்தார்கள் என எவருமே அறியார். தந்தை கூறுகின்றார்: முன்னைய கல்பத்தில் இதைப் புரிந்து கொண்டவர்களே, இப்பொழுது இதைப் புரிந்து கொள்வார்கள். மரக்கன்று நாட்டப்படுகின்றது. நாங்கள் அதி இனிமையிலும் இனிமையான விருட்சத்தின் மரக்கன்றை நாட்டுகின்றோம். தந்தை 5000 வருடங்களுக்கு முன்னரும் வந்து, மனிதர்களைத் தேவர்களாக ஆக்கியதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் இப்பொழுது மாற்றப்படுகின்றீர்கள். நீங்கள் முதலில் பிராமணர்கள் ஆகவேண்டும். அவர்கள் குத்துக்கரணம் அடிக்கின்ற பொழுது, உச்சிக்குடுமி மீண்டும் நிச்சயமாகத் தோன்றுகின்றது. நாங்கள் இப்பொழுது பிராமணர்கள் ஆகியுள்ளோம். ஒரு யாகத்திற்குப் பிராமணர்கள் நிச்சயமாகத் தேவைப்படுகின்றனர். இது சிவனுடைய அல்லது உருத்திரருடைய யாகமாகும். உருத்திர ஞான யாகம் எனக் கூறப்பட்டுள்ளது. ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு யாகத்தை உருவாக்கவில்லை. விநாசத்துக்கான சுவாலைகள் இந்த உருத்திர ஞான யாகத்தில் இருந்தே வெளிப்படுகின்றன. சிவபாபாவின் இந்த யாகம் தூய்மை அற்றவர்களைத் தூய்மை ஆக்குவதற்கானது. உருத்திர சிவபாபா அசரீரியானவர். எனவே அவர் ஒரு மனித சரீரத்தில் பிரவேசிக்கும்வரை, எவ்வாறு ஒரு யாகத்தை உருவாக்க முடியும்? மனிதர்களே யாகத்தை உருவாக்குகின்றார்கள். இந்த விடயங்கள் சூட்சும உலகிலோ அல்லது அசரீரி உலகிலோ இருப்பதில்லை. இதுவே சங்கமயுகம் எனத் தந்தை விளங்கப்படுத்துகின்றார்: இலக்ஷ்மி, நாராயணனின் இராச்சியம் இருந்தபொழுது, அது சத்தியயுகமாக இருந்தது. நீங்கள் இப்பொழுது மீண்டும் ஒருமுறை அவ்வாறு ஆகுகின்றீர்கள். ஆத்மாக்களாகிய உங்கள் ஒவ்வொருவரினதும் வாழ்வு எனும் நூல் பரமாத்மாவுடன் இணைக்கப்படுகின்றது. ஏன் இந்த நூல் இணைக்கப்படுகின்றது? சதா சந்தோஷம் எனும் ஆஸ்தியைக் கோருவதற்கே ஆகும். நீங்கள் எல்லையற்ற தந்தையினால் இலக்ஷ்மி, நாராயணன் போல் ஆக்கப்படுவதைப் புரிந்து கொள்கின்றீர்கள். நீங்கள் தேவ தர்மத்துக்குச் சொந்தமானவர்களாக இருந்ததைத் தந்தை விளங்கப்படுத்தி உள்ளார். அது உங்கள் இராச்சியமாக இருந்தது. பின்னர் நீங்கள் மறுபிறவி எடுத்து, சத்திரிய தர்மத்துக்குள் வந்தீர்கள்; சூரிய வம்சம் மறைந்து, சந்திர வம்சம் வந்தது. நீங்கள் எவ்வாறு சக்கரத்தில் சுற்றி வந்தீர்கள் எனவும், எத்தனை பிறவிகள் எடுத்துள்ளீர்கள் எனவும் புரிந்து கொள்கின்றீர்கள். கடவுள் பேசுகிறார்: ஓ குழந்தைகளே, உங்களுடைய சொந்தப் பிறவிகள் பற்றி நீங்கள் அறிய மாட்டீர்கள். நான் அவற்றை அறிவேன். இச்சரீரத்தில் இப்பொழுது இந்நேரத்தில் இரண்டு (ஆத்ம) ரூபங்கள் மாத்திரமே இருக்கின்றன. பிரம்மாவின் ஆத்மாவும், பரமாத்மா சிவனுமே இருக்கின்றார்கள். பிரம்மாவும், சிவனுமாகிய இந்த இரண்டு ரூபங்களும் இணைந்துள்ளனர். சங்கரர் ஒருபொழுதும் ஒரு பாகத்தை நடிக்க வருவதில்லை, விஷ்ணு சத்தியயுகத்தில் இருக்கின்றார். நீங்கள் இப்பொழுது பிராமணர்கள், பின்னர் நீங்கள் தேவர்கள் ஆகுகின்றீர்கள். உண்மையில் இதுவே “ஹம்சோ, சோஹம்” என்பதன் அர்த்தமாகும். அவர்கள் ஒவ்வோர் ஆத்மாவும் பரமாத்மா என்றும், பரமாத்மாவே ஆத்மா எனவும் கூறியுள்ளார்கள். அதிகளவு வேறுபாடு உள்ளது! இராவணனின் கட்டளைகள், அவன் வந்தவுடனேயே ஆரம்பமாகின. சத்தியயுகம் இருக்கின்ற பொழுது, இந்த ஞானம் மறைந்து விடும். இவை அனைத்தும் நாடகத்தில் நடக்க வேண்டுமென நிச்சயிக்கப்பட்டுள்ளது. அப்பொழுதே தந்தையால் வந்து, ஸ்தாபனையை நடாத்த முடியும். இப்பொழுது இது சங்கமயுகமாகும். தந்தை கூறுகின்றார்: நான் ஒவ்வொரு கல்பத்திலும் சங்கமயுகத்தில் உங்களை மனிதரிலிருந்து, தேவர்களாக மாற்ற வருகின்றேன். நான் ஞான யாகத்தை உருவாக்குகின்றேன். அனைத்துமே இந்த யாகத்தில் அர்ப்பணிக்கப்பட வேண்டும். விநாசச் சுவாலைகள் இந்த யாகத்தில் இருந்தே வெளிப்பட வேண்டும். இந்தத் தூய்மையற்ற உலகம் அழிக்கப்பட உள்ளது. வேறு எவ்வாறு புதிய உலகம் உருவாக்கப்படும்? நீங்கள் “ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்!” எனவும் கூறுகின்றீர்கள். எனவே, இந்தத் தூய்மையற்ற உலகமும், அந்தத் தூய உலகமும் ஒரேநேரத்தில் இருக்குமா? இந்தத் தூய்மையற்ற உலகம் அழிக்கப்படும். நீங்கள் இது பற்றிச் சந்தோஷமடைய வேண்டும். மகாபாரத யுத்தத்தின் மூலமே சுவர்க்கத்திற்கான வாயில்கள் திறக்கப்பட்டன. இது அதே மகாபாரத யுத்தம் என்றே கூறப்படுகின்றது. இது நல்லது, ஏனெனில், இந்தத் தூய்மையற்ற உலகம் அழிக்கப்படும். அமைதிக்காக அவர்கள் பெரும் பிரயத்தனம் செய்ய வேண்டிய தேவை என்ன உள்ளது? நீங்கள் ஒவ்வொருவரும் பெற்றுள்ள மூன்றாவது கண், வேறு எவரிடமும் இல்லை. குழந்தைகளாகிய நீங்கள் எல்லையற்ற தந்தையிடம் இருந்து, மீண்டும் ஒருமுறை உங்கள் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள் என்று சந்தோஷமாக இருக்க வேண்டும். பாபா, நான் உங்களிடம் இருந்து பல தடவைகள் எனது ஆஸ்தியைக் கோரியுள்ளேன். இராவணன் பின்னர் உங்களைச் சபித்தான். இந்த விடயங்களை நினைவு செய்வது இலகுவானது. மீதி அனைத்தும் கட்டுக் கதைகள். நீங்கள் அதி செல்வந்தர்களாக ஆக்கப்பட்டீர்கள். எனவே, நீங்கள் எவ்வாறு ஏழைகள் ஆகினீர்கள்? இவை அனைத்தும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. கூறப்பட்டுள்ளது. ஞானம், பக்தி, விருப்பமின்மை. நீங்கள் இந்த ஞானத்தைப் பெறுகின்ற பொழுதே, பக்தியில் விருப்பமின்மை இருக்க முடியும். நீங்கள் இந்த ஞானத்தைப் பெற்றுள்ளீர்கள், இதனாலேயே நீங்கள் பக்தியில் விருப்பமின்மை கொண்டுள்ளீர்கள். நீங்கள் இப் பழைய உலகம் முழுவதிலும் விருப்பமின்மை கொண்டுள்ளீர்கள். இது இடுகாடாகும். நீங்கள் 84 பிறவிகளின் சக்கரத்தில் சுற்றி வந்தீர்கள், இப்பொழுது நீங்கள் வீடு திரும்ப வேண்டும். என்னை நினைவு செய்யுங்கள், நீங்கள் என்னிடம் வருவீர்கள், உங்கள் பாவங்களும் அழிக்கப்படும்; வேறெந்த வழிமுறையும் இல்லை. கங்கையின் நீராடுவதனால் அன்றி, யோகத்தீயிலேயே பாவங்கள் எரிக்கப்படும், தந்தை கூறுகின்றார்: மாயை உங்களை முட்டாள்கள் ஆக்கிவிட்டாள். அவர்கள் ஏப்ரல் முட்டாள்கள் பற்றிப் பேசுகின்றார்கள். நான் இப்பொழுது உங்களை இலக்ஷ்மி, நாராயணன் போன்று ஆக்குவதற்காக வந்துள்ளேன். நாங்கள் இன்று என்னவாக இருக்கின்றோம், நாளை என்னவாக ஆகுவோம் என்ற படம் மிக நல்லது. மாயையும் குறைந்தவள் அல்ல! மாயை உங்களுடைய நூலை இணைப்பதற்கு உங்களை அனுமதிப்பதில்லை, ஒரு கயிறு இழுத்தல் போட்டி நடைபெறுகின்றது. நாங்கள் பாபாவை நினைவுசெய்ய முயற்சி செய்கின்றோம். ஆனால் பின்னர் என்ன நடக்கின்றது என நாம் அறிவதில்லை; நாங்கள் மறந்து விடுகின்றோம். இதற்கு முயற்சி தேவை. இதனாலேயே பாரதத்தின் புராதன யோகம் மிகவும் பிரபல்யமானது. அவர்களது ஆஸ்தியை அவர்களுக்குக் கொடுத்தவர் யார்? எவரும் இதைப் புரிந்து கொள்வதில்லை. தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, நான் மீண்டும் ஒருமுறை உங்களுடைய ஆஸ்தியை உங்களுக்குக் கொடுப்பதற்கு வந்துள்ளேன். இது தந்தையின் பணியாகும். இந்நேரத்தில் அனைவருமே நரகவாசிகள். நீங்கள் சந்தோஷமானவர்கள் ஆகுகின்றீர்கள். ஒருவர் இங்கே வந்து இதைப் புரிந்து கொள்ளும் பொழுது, சந்தோஷம் அடைகின்றார். இது சரியென்று அவர் உணர்கின்றார். 84 பிறவிகளின் கணக்கு இருக்கின்றது. நீங்கள் உங்களுடைய ஆஸ்தியைத் தந்தையிடம் இருந்து கோர வேண்டும். நீங்கள் அரைக்கல்பமாகப் பக்தி செய்வதால், களைப்படைந்து விட்டதைத் தந்தையும் புரிந்து கொள்கின்றார். இனிமையான குழந்தைகளே, தந்தை உங்களது அனைத்துக் களைப்பையும் நீக்கி விடுவார். இப்பொழுது இருளான பாதையான பக்தி, முடிவுக்கு வருகின்றது. இந்தத் துன்ப உலகத்திற்கும், அந்தச் சந்தோஷ உலகத்திற்கும் இடையில் அத்தகைய வேறுபாடு உள்ளது. நான் சக்கரத்தின் சங்கமயுகத்தில் இத்துன்ப உலகை அச் சந்தோஷ உலகாக மாற்றுவதற்கு வருகின்றேன். நீங்கள் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். தந்தை உங்களுடைய எல்லையற்ற ஆஸ்தியை உங்களுக்குக் கொடுப்பார். ஒரேயொருவருக்கு மாத்திரமே இப்புகழ் சொந்தமாகும். சிவபாபா இல்லை என்றால், யார் உங்களைத் தூய்மை ஆக்குவார்? இவை அனைத்தும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஒவ்வொரு கல்பத்திலும் என்னை “ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்!” என்று அழைக்கிறீர்கள். மக்கள் சிவஜெயந்தியைக் கொண்டாடுகிறார்கள். அவர்கள் பிரம்மா சுவர்க்கத்தைப் படைத்தார் எனக் கூறுகின்றார்கள். பின்னர் மக்கள் சிவஜெயந்தியைக் கொண்டாடும் வகையில், சிவபாபா என்ன செய்தார்? அவர்கள் முற்றிலும் எதையுமே புரிந்து கொள்வதில்லை. இந்த ஞானம் உங்கள் புத்தியில் உறுதியாக இருக்க வேண்டும். நீங்கள் உங்களின் நூல்களை ஒரேயொருவருடன் இணைத்துள்ளீர்கள். எனவே, வேறு எவருடனும் அதை இணைக்காதீர்கள்; இல்லை என்றால் நீங்கள் வீழ்வீர்கள். அப்பாலுள்ள தந்தை மிகவும் எளிமையானவர்; அவர் எவ் விதமான வெளிப்பகட்டையும் கொண்டிருப்பதில்லை. ஏனைய தந்தையர்கள் மோட்டார் கார்களிலும், ஆகாய விமானங்களிலும் சுற்றி வருகின்றார்கள். அந்த எல்லையற்ற தந்தை கூறுகின்றார்: நான் தூய்மையற்ற உலகில், ஒரு தூய்மையற்ற சரீரத்தில் குழந்தைகளான உங்களுக்குச் சேவை செய்வதற்கு வந்து விட்டேன். நீங்கள் அழைத்தீர்கள்: “ஓ அநாதியான சத்திரசிகிச்சை நிபுணரே, வாருங்கள்! வந்து, எங்களுக்கு ஓர் ஊசி போடுங்கள்!” உங்களுக்கு இப்பொழுது ஓர் ஊசி போடப்பட்டுள்ளது. தந்தை கூறுகின்றார்: யோகம் செய்யுங்கள், உங்கள் பாவங்கள் எரிந்து விடும். தந்தையே 63 பிறவிகளின் துன்பத்தை அகற்றி, 21 பிறவிகளுக்கான சந்தோஷத்தை அருள்கின்றார். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு, உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் புத்தியின் ஆன்மீக நூலை ஒரேயொரு தந்தையுடன் இணையுங்கள். ஒரேயொருவரின் ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள்.2. நாங்கள் இனிமையிலும் அதி இனிமையான விருட்சக்கன்றை நாட்டுகின்றோம். எனவே, நாங்கள் முதலில் எங்களை மிக இனிமையானவர்கள் ஆக்க வேண்டும். நினைவு யாத்திரையில் ஈடுபட்டு, உங்கள் பாவங்களை அழித்துக் கொள்ளுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின் கடையும் சக்தியினால் இந்த ஞானத்தின் ஒவ்வொரு கருத்தையும் அனுபவம் செய்வதன் மூலம், சதா சக்திநிறைந்தவராகவும், மாயை நுழைய முடியாதவரும், தடைகள் வர முடியாதவரும் ஆகுவீர்களாக.பௌதீகச் சக்திக்கு, ஜீரணிக்கும் சக்தி அவசியமாக இருப்பதைப் போல், அதேவிதமாக, உங்கள் ஆத்மாவைச் சக்திநிறைந்தவர் ஆக்கும் பொருட்டு, கடையும் சக்தி உங்களுக்குத் தேவை. கடையும் சக்தியைக் கொண்டிருப்பதால், ஓர் அனுபவ சொரூபம் ஆகுவதே, அனைத்திலும் அதிமகத்துவமான சக்தி ஆகும். இதில் அனுபவசாலிகளாக இருப்பவர்களாலேயே, வதந்திகளைக் கேட்கையில் என்றுமே ஏமாற்றப்படவோ அல்லது தொந்தரவு அடையவோ முடியாது. அனுபவசாலிகள் எப்பொழுதும் சம்பூரணமாக இருக்கின்றனர். அவர்கள் சதா சக்திநிறைந்தவர்களாகவும், மாயை நுழைய முடியாதவர்களாகவும், தடைகள் வர முடியாதவர்களாகவும் இருக்கின்றனர்.
சுலோகம்:
உங்களுடன் சதா சந்தோஷப் பொக்கிஷத்தை வைத்திருந்தால், ஏனைய பொக்கிஷங்கள் அனைத்தும் இயல்பாகவே வரும்.அவ்யக்த சமிக்ஞை: ஒற்றுமை மற்றும் நம்பிக்கை என்ற சிறப்பியல்புடன், வெற்றி நிறைந்தவர் ஆகுங்கள்.
வெற்றியால் நிறைந்திருப்பதற்கு, சாதாரணமான அனைத்தையும் செய்யும் பொழுதும், உங்கள் செயற்பாடும், உங்கள் நடையும் தேவதையினுடையதாக இருக்க வேண்டும். சூழ்நிலைகள் அவ்வாறு இருந்தன, வேலை அவ்வாறு இருந்தது, சந்தர்ப்பங்கள் அவ்வாறு இருந்தன, பிரச்சனைகள் அவ்வாறு இருந்தன, இதனாலேயே சாதாரணத்தன்மை இருந்தது என்று கூறாதீர்கள். அனைத்து நேரமும், எச்சூழ்நிலையிலும் அனைவரும் உங்கள் ஆன்மீக ரூபத்தை அனுபவம் செய்ய வேண்டும். நீங்கள் இருக்கின்ற சூழ்நிலைக்கு ஏற்ப, உங்கள் ரூபம் இல்லாதிருக்க வேண்டும். சூழ்நிலையால் உங்களை மாற்ற முடியாத பொழுதே, நீங்கள் அனைவருக்கும் நெருக்கமாக வருவதுடன், ஒன்றுகூடலின் ஒற்றுமையும் உறுதியாகும்.