24.05.26    Avyakt Bapdada     Tamil Lanka Murli    28.02.2010     Om Shanti     Madhuban


சரீர உணர்வின் ‘நான், நான்’ என்ற ஹோலியை எரித்து, இறை சகவாசம் என்ற நிறத்தால் ஹோலியைக் கொண்டாடுங்கள்.


இன்று, அதிபுனிதமான தந்தை தனது புனிதமான குழந்தைகளுடன் ஹோலி கொண்டாடுவதற்காக வந்துள்ளார். வெகு தொலைவில் உள்ள, எங்கும் உள்ள குழந்தைகள் அன்புடன் அவரின் இதயத்தில் ஒன்றுகலந்துள்ளார்கள். குழந்தைகள் அனைவரின் நெற்றிகளிலும் பாக்கிய நட்சத்திரங்கள் பிரகாசிப்பதை பாப்தாதா பார்க்கிறார். கல்பம் முழுவதிலும் வேறு எவரும் இத்தகைய பாக்கியத்தைக் கொண்டிருக்க முடியாது. இந்த சங்கம யுகத்தின் பேறுகளின் அடிப்படையில், குழந்தைகளான நீங்கள் மட்டுமே அதி மேன்மையாகவும் தூய்மையாகவும் ஆகுகிறீர்கள். அதனால், எதிர்காலத்தில், நீங்கள் இரட்டைத் தூய்மை அடைகிறீர்கள்: ஆத்மா தூய்மையானவர், சரீரமும் தூய்மையானது. கல்பம் முழுவதிலும் சுற்றி வந்து பாருங்கள்: ஒரு தர்மாத்மாவேனும் இரட்டைத் தூய்மையைக் கொண்டிருக்கவில்லை. குழந்தைகளான நீங்கள் இரட்டைத் தூய்மை அடைகிறீர்கள். அந்த இரட்டைத் தூய்மையின் அடையாளம், நீங்கள் இரட்டைக் கிரீடாதாரி ஆகுவதாகும்.

இன்று, அனைவரும் ஹோலியைக் கொண்டாடுகிறார்கள். ஆயினும் இந்த வேளையில் நீங்கள் இரட்டைத் தூய்மை அடைவதன் ஞாபகார்த்தமே, ஹோலிப் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. உங்களின் வாழ்க்கையின் ஒவ்வோர் அடியின் முக்கியத்துவமும் ஒரு பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இந்தச் சங்கமயுகத்தில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் உங்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் காணப்படுகின்றன. அதனால், உங்களின் ஊக்கத்தினதும் உற்சாகத்தினதும் ஞாபகார்த்தம், இந்தப் பண்டிகையின் வடிவில் கொண்டாடப்படுகிறது. ஏன் உங்களிடம் ஊக்கமும் உற்சாகமும் காணப்படுகிறது? ஏனென்றால், நீங்கள் இறை சகவாசம் என்ற நிறத்துடன் ஹோலியைக் கொண்டாடுகிறீர்கள். எனவே, உங்களின் ஒவ்வோர் அடியும் பண்டிகையின் வடிவில் கொண்டாடப்படுகிறது. இப்போது, ஹோலியில் அவர்கள் முதலில் எதையாவது எரிக்கிறார்கள் (ஜலானா), பின்னர் கொண்டாடுகிறார்கள் (மனானா). இப்போது, இந்தச் சங்கமயுகத்தில், நீங்களும் யோக அக்கினியில் உங்களின் பழைய சம்ஸ்காரங்களையும் சுபாவங்களையும் எரிக்கிறீர்கள். ஏனென்றால், முதலில் உங்களின் பழைய சம்ஸ்காரங்களை எரிக்காமல் உங்களால் இறை சகவாசத்தின் நிறத்தால் நிறமூட்டப்பட முடியாது. இறைவனுடன் ஒரு சந்திப்பு நிகழ முடியாது. நீங்கள் யோக அக்கினியில் உங்களின் சம்ஸ்காரங்களை எரிக்கிறீர்கள். பின்னர் இறை சகவாசத்தின் நிறத்தால் உங்களை நிறமூட்டிக் கொள்கிறீர்கள். எனவே, தற்காலத்தில் அவர்கள் எதையாவது எரிக்கிறார்கள். பின்னர் நிறங்களைத் தெளிக்கிறார்கள். ஆனால் உங்களின் ஆன்மீக வடிவத்திற்கு அவர்கள் ஒரு பௌதீக வடிவத்தைக் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் பௌதீகமாக நெருப்பில் எரித்து, பௌதீகமாக நிறங்களைத் தெளிக்கிறார்கள். ஏனென்றால், அவர்களிடம் சரீர உணர்விற்கான மனோபாவமே காணப்படுகிறது. நீங்கள் ஹோலி ஆகுகிறீர்கள். ஆனால் அவர்களோ ஹோலியைக் கொண்டாடுகிறார்கள். கல்பம் முழுவதும், வேறு எவருமே இந்த ஆன்மீக ஹோலியைக் கொண்டாடி, இரட்டை ஹோலி ஆகியதில்லை. எனவே, நீங்கள் எங்கிருந்து வந்திருந்தாலும், இறைவனின் சகவாசத்தின் ஹோலிக்காக வந்துள்ளீர்கள். நீங்கள் இறை சகவாசத்தில் ஹோலி கொண்டாட வந்துள்ளீர்கள். ஹோலிக்காக, நீங்கள் ‘ஹோ லி’ (ஏற்கனவே நடந்துவிட்டது) எனக் கூறுகிறீர்கள். அதனால் அது இப்போது கடந்தகாலம் ஆகிவிட்டது. நாடகத்தின்படி, என்ன நடந்ததோ அது நடந்து முடிந்துவிட்டது (ஹோ லி), அதனால் கடந்தது கடந்து போய் விட்டது என்று நீங்கள் கூறுகிறீர்கள். நீங்கள் உங்களின் இதயத்தில் வீணானவை எதையும் எடுத்துக் கொள்வதில்லை. அது ஏற்கனவே நடந்து விட்டது. அதனால் நீங்கள் இந்த முறையில் ஹோலியைக் கொண்டாடுகிறீர்கள், அப்படித்தானே? நீங்கள் அனைவரும் ஹோலி ஆகுவதற்காக, அதாவது, தூய்மை ஆகுவதற்காக முழுமையான முயற்சி செய்துள்ளீர்கள். அத்துடன் தூய்மையைக் கடைப்பிடிக்கிறீர்கள். இதனாலேயே, உங்களின் எதிர்கால இரட்டைத் தூய்மையைக் குறிக்கும் முகமாக நீங்கள் இரட்டைக் கிரீடத்துடன் காட்டப்பட்டுள்ளீர்கள்.

எனவே, இந்தத் தினத்தில், குழந்தைகளான நீங்கள் ஒவ்வொருவரும் நீங்கள் செல்வதற்கு முன்னர் எதை எரிப்பீர்கள்? உங்களின் பிறந்தநாளின் போது தந்தை உங்களுக்கு வீட்டுவேலை கொடுத்துள்ளார்: உங்களின் பிறந்தநாளில் உங்களின் பிறந்தநாள் பரிசாக கோபத்தைக் கொடுத்து விடுங்கள். சில குழந்தைகளின் அந்தப் பெறுபேறு இன்று பாப்தாதாவை வந்தடைந்துள்ளது. சில வேளைகளில் குழந்தைகள் கவனம் செலுத்தி இருப்பதை பாப்தாதா கண்டார். நீங்கள் அனைவரும் உங்களின் பெறுபேறுகளைப் பார்த்திருப்பீர்கள். இங்கே அமர்ந்திருக்கும் நீங்கள் அனைவரும் உங்களின் பெறுபேற்றைப் பார்த்திருப்பீர்கள். கோபத்தை நிர்வகித்து வெற்றி பெற்றவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! நீங்கள் வெற்றி பெற்றீர்கள்! உங்களின் கைகளை உயரே உயர்த்துங்கள்! ஆசிரியர்களே, உங்களின் கைகளை உயர்த்துங்கள்! வெளிநாட்டவர்களே, உங்களின் கைகளை உயர்த்துங்கள்! (அனைவரும் தமது கைகளை உயர்த்தினார்கள்) அச்சா. பாராட்டுக்கள். இதற்காக நீங்கள் அனைவரும் உங்களில் தைரியத்தைக் கொண்டிருந்தீர்கள். அத்துடன் தைரியத்தின் பலனைப் பெறுவது எப்படி சாத்தியம் ஆகுகிறது என்பதையும் நீங்கள் அனுபவம் செய்தீர்கள். எனவே, நீங்கள் இந்த இலட்சியத்தை எதிர்காலத்தில் வைத்திருந்து, மீண்டும் மீண்டும் தொடர்ந்து உங்களைச் சோதித்து, இதில் முன்னேற விரும்பினால், இது சாத்தியம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இது சாத்தியமா? எதிர்காலத்தில் உங்களால் இதைச் செய்ய முடியுமா? இது முடியும் என்று நினைப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! இது சாத்தியமா? ஆசிரியர்களே, இது சாத்தியமா? பாண்டவர்களே, இது சாத்தியமா? அச்சா. அது சாத்தியம் என்பது மட்டுமல்ல, அது நடக்கவே வேண்டும். நீங்கள் இதற்காகக் கைதட்டலாம். அச்சா. பல நாட்கள் ஆகவில்லை, ஆனால் உங்களால் இன்றில் இருந்து மூன்று மாதங்களுக்குக் கவனம் செலுத்தி கோபம் என்ற பதற்றத்தை முடிக்க முடியுமா? உங்களால் அதைச் செய்ய முடியுமா? இவ்வாறு செய்ய முடியும் என்று நினைப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! அச்சா. இது மிக நல்லதொரு செய்தி. ஏன்? கோபத்திற்கான காரணம் என்ன? கோபத்தின் விதை என்ன? சதா உங்களின் எதிர்கால ரூபத்தை உங்களின் முன்னால் வைத்திருங்கள். உங்களின் எதிர்கால ரூபம் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளது, அத்துடன் மலர்ச்சியாக உள்ளது. பாப்தாதாவைப் பாருங்கள். அதிலும் தந்தை பிரம்மாவை உங்களின் முன்னால் கொண்டு வாருங்கள். ஏன்? சிவத்தந்தை எப்படியும் அசரீரியானவர். ஆனால் பிரம்மாபாபா உங்களின் முன்னால் பௌதீக ரூபத்தில் இருந்தார். உங்களைப் போலவே, அவருக்கும் பொறுப்புக் கிரீடம் இருந்தது. அப்படியிருந்தும், அவர் சதா புன்னகைத்த வண்ணமும் மலர்ந்த முகத்துடனுமே இருந்தார். ஏனென்றால், அவர் இந்த விகாரங்களை வெற்றி கொண்டதுடன், சரீரத்தில் இருந்தவண்ணம் அனைத்தையும் செய்யும்போதும் ஓர் உதாரணமாக விளங்கினார். உங்களின் பொறுப்பு, தந்தை பிரம்மாவின் பொறுப்பை விடப் பெரியதா? தந்தை பிரம்மாவின் பொறுப்புடன் ஒப்பிடும்போது, உங்களின் பொறுப்பு எதுவுமே இல்லை. நீங்கள் அவரைக் கண்டீர்கள்: இறுதிவரை, கர்மாதீத் ஸ்திதிக்குரிய அதிர்வலைகளுடன் அவர் அவ்யக்த தேவதை ஆகினார். எனவே, நீங்கள் பாப்தாதாவிற்குப் பரிசாகக் கொடுத்தவற்றைத் திருப்பி எடுத்துக் கொள்ள மாட்டீர்கள்தானே? நீங்கள் உங்களின் செயல்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டிருக்கும்போது, சில வேளைகளில் இத்தகைய சூழ்நிலைகள் வருவதை பாப்தாதா புரிந்து கொள்கிறார். சிலர் தமது பெறுபேறுகளில், தமது குரல் சிறிது உரத்து ஒலிப்பதாகவும் சிலவேளைகளில் தமது மனோநிலை சிறிது வலிமை மிக்கதாக ஆகுவதாகவும் எழுதி உள்ளார்கள். எவ்வாறாயினும், இத்தகைய சூழ்நிலைகள் உங்களின் முன்னால் வரும்போது மட்டுமே, உங்களுக்கு வெற்றியாளர் ஆகுகின்ற வாய்ப்புக் கிடைக்கும். சூழ்நிலைகளின் கடமை, வருவது. ஆனால் அந்தச் சூழ்நிலைகளை வென்று, வெற்றியாளர் ஆகுவதற்கான ஞானம் உங்களிடம் உள்ளது. எனவே, இது உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? நீங்கள் கோபத்திற்கு என்றென்றும் விடை கொடுப்பீர்களா அல்லது மூன்று மாதங்களுக்கு விடை கொடுப்பீர்களா? இதற்கு எவ்வளவு காலத்திற்கு உங்களிடம் தைரியம் இருக்கும்? என்றென்றும் கோபத்தில் இருந்து விடுபட்டு இருப்பது கஷ்டமானது இல்லை, நீங்கள் அப்படி ஆகவே வேண்டும் என்று நினைப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! அது நடக்கவே வேண்டும். அச்சா. பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். ஏன்? உங்களின் இறுதிப் பிறவியிலும், உங்களுக்காக என்ன புகழ் பாடப்படுகிறது? உங்களின் தேவ ரூபத்தின் முன்னால் பாடப்படும் உங்களின் புகழானது: சகல தெய்வீகக் குணங்களும் நிறைந்தவர்கள், சம்பூரணமாக விகாரம் அற்றவர்கள். மக்கள் இந்தப் பாடலைப் பாடுகிறார்கள். சங்கமயுகத்தில் நீங்கள் இவ்வாறு ஆகுகின்ற உங்களின் பாகத்திற்கே அந்தப் புகழ் உள்ளது. பாப்தாதாவின் இதயத்தில் என்ன விசேடமான எதிர்பார்ப்பை அவர் வைத்திருக்கிறார் என்று பாப்தாதா உங்களுக்குச் சொல்லட்டுமா? பாபா உங்களுக்குச் சொல்ல வேண்டும் என்றால் தலையை அசையுங்கள். ஒவ்வொரு குழந்தையும் இப்பொழுதில் இருந்தே எல்லா வேளைக்கும் ஒரு ரோஜாவைப் போல் மலர்ந்திருக்க வேண்டும் - பாக்கியசாலியாகவும் மலர்ச்சியாகவும் இருப்பதைப் பார்ப்பதற்கே பாப்தாதா விரும்புகிறார். சூழ்நிலைகள் வருவது அதன் கடமை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். சூழ்நிலைகள் வரும், ஆனால் நீங்கள் உங்களின் இலட்சியத்திற்கேற்ப தகைமைகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். பயப்படாதீர்கள். பிரம்மாகுமாரிகள் அதிகளவில் தூய்மைக்கான பாடத்தைத் தமக்குக் கற்றுத் தருவதாக மக்கள் இப்போது சொல்வதைப் போல், அனைவரையும் கோபத்தில் இருந்து விடுவிக்கும் பிரம்மாகுமாரிகள் என்று பிரபல்யம் அடையுங்கள். ஏனென்றால், அனைவரும் கோபத்தில் இருந்து விடுபடவே விரும்புகிறார்கள். மன அழுத்தம் இருக்கிறதல்லவா? மன அழுத்தம் இருப்பதனாலேயே, அனைவரும் அதில் இருந்து இருந்து விடுபட விரும்புகிறார்கள். ஆனால் அதைச் செய்வதற்கான வழிமுறை அவர்களுக்குத் தெரியாது. தூய்மை ஆகுவது முடியாத காரியம் என்றே அவர்கள் நினைத்து வந்தார்கள். ஆனால் இப்போது, உங்கள் அனைவரினதும் அனுபவத்தின் அடிப்படையில் அது சாத்தியம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அதேபோல், இந்த வருடம், கோபத்தை வென்றவர் ஆகுவது சாத்தியமே, அது கடினமானது அல்ல என்ற அலையைப் பரவச் செய்யுங்கள். இதன் நடைமுறை அனுபவத்தைக் கொண்டிருக்கும் இத்தகைய உதாரணங்களை மேடையில் கொண்டு வாருங்கள். குழந்தைகள் பலர் தமது செயல்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் போதே, கோபத்தை வென்றவர்கள் ஆகியிருப்பதை பாப்தாதா பார்த்துள்ளார். இத்தகைய உதாரணங்கள் உங்களின் குடும்பத்தில், உங்களின் பிராமணக் குடும்பத்தில் இருக்கிறார்கள். எனவே, இந்த வருடம் நீங்கள் என்ன செய்வீர்கள்? நீங்கள் ஹோலியைக் கொண்டாடவே வந்துள்ளீர்கள், அப்படித்தானே? எனவே, ஹோலியின் போது நீங்கள் என்ன செய்வீர்கள்? ஏதாவது எரிக்கப்படும், அப்படித்தானே? எனவே, இன்றைய ஹோலியின் போது நீங்கள் எதை எரிப்பீர்கள்? நீங்கள் ஏற்கனவே இதைக் கோபத்திற்காகச் செய்து விட்டீர்கள், நீங்கள் இப்போது அதை உறுதி ஆக்குவீர்கள். எவ்வாறாயினும், மன அழுத்தத்திற்கு உள்ளாகுவதற்கான காரணம், சரீர உணர்வில் உள்ள ‘நான்’ என்ற வார்த்தையே என்பதை பாப்தாதா பார்த்துள்ளார். அது சரீர உணர்வில் உள்ள ‘நான்’ என்பதாகும். ஒன்று, நான் ஓர் ஆத்மா என்பது. இதுவும் ஒரு ‘நான்’ என்பதே ஆகும். ஆனால், சரீர உணர்வில் கூறப்படும் ‘நான்’ என்ற வார்த்தை அகங்காரம் அல்லது அவமதிப்பினால் ஏற்படக்கூடும். மனவிரக்திக்குரிய ‘நான், நான்’ என்பதும் உங்களை விழச் செய்யும். எனவே இன்று, கோபத்தை வென்றவர் ஆகுவதில் முன்னேறுவதற்கு, யோக அக்கினியில் ‘நான்’ என்ற சரீர உணர்வை எரியுங்கள். ‘நான், நான்’ என்ற பல வடிவங்களை எரித்து, ‘நான் ஓர் ஆத்மா’ என்ற ஒரு ‘நான்’ என்பதை உறுதியாக்கிக் கொள்ளுங்கள். இன்று இங்கிருந்து நீங்கள் செல்வதற்கு முன்னர், யோக அக்கினியில் ‘நான்’ என்ற ஏனைய வடிவங்கள் அனைத்தையும் எரியுங்கள். பல்வகையான ‘நான்’ இருக்கிறதல்லவா? எனவே இன்று, நீங்கள் எதையாவது எரிக்கும் ஹோலியைக் கொண்டாடுவீர்கள். அதிகளவு மன அழுத்தம் இருப்பதே கோபத்திற்கான காரணம் ஆகும். இந்த ‘நான்’ என்பதை முடிப்பதற்கு, இன்றில் இருந்து உங்களுக்காக இந்தத் திடசங்கற்ப எண்ணத்தைக் கொண்டிருங்கள். நீங்கள் அதை எரிக்க வேண்டும். ஏனென்றால், அதுவும் ஒரு சுமை, அப்படித்தானே? நீங்கள் புகைவண்டி அல்லது விமானத்தில் திரும்பிச் சென்றாலும், இந்தச் சுமையை எரித்த பின்னர் இங்கிருந்து செல்லுங்கள். உங்களால் அதை எரிக்க முடியும், அல்லவா? நீங்கள் தைரியத்தைப் பேணினால், தந்தை உதவி செய்வார், அத்துடன் உங்களுடன் இருப்பார், அதனால் உங்களுடன் வெற்றியும் இருக்கும், நீங்கள் நிச்சயமாக வெற்றியாளர் ஆகவேண்டும் என்று நினைப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! நீங்கள் அப்படி ஆகவேண்டும். அச்சா. இன்று வந்துள்ள விஐபிகளும் தமது கரங்களை உயர்த்துகிறார்கள். இன்று வந்துள்ள விஐபிகள் எழுந்து நில்லுங்கள்! நீங்களும் உங்களின் கைகளை உயர்த்துகிறீர்கள். அவர்களுக்காக கைதட்டுங்கள். நீங்கள் வெற்றியாளர்கள் ஆகுவீர்களா? பாருங்கள்! பாப்தாதா உங்கள் ஒவ்வொருவருக்கும் வெற்றியாளர் ஆகுவதற்காக மாலை இடுகிறார். பாராட்டுக்கள். பாராட்டுக்கள். அச்சா. இப்போது வந்துள்ள விஐபிகள் அனைவரும் தைரியசாலிகள். இதனாலேயே, பாப்தாதா உங்களுக்கு இந்த ஆசீர்வாதத்தை வழங்குகிறார். இந்த வேளையில் உங்களின் பணி காரணமாக நீங்கள் விஐபிகள் ஆகியிருக்கலாம். நீங்கள் ஒரு பிறவிக்காக அப்படி ஆகியுள்ளீர்கள். எனவே, இப்போது பாப்தாதா தைரியசாலிக் குழந்தைகளான உங்களை விஐபிகள் என்று அழைக்கப் போவதில்லை. அவர் உங்களைக் குழந்தைகள் (பச்சே) என்றே அழைப்பார். நீங்கள் அனைவரும் 21 பிறவிகளுக்கு விஐபிகளாக இருப்பதற்கான உத்தரவாதத்தை ஆசீர்வாதமாக பாப்தாதா வழங்குகிறார். அங்கே இந்தத் தேர்தலும் தேர்ந்து எடுத்தலும் இருக்காது. எனவே, நீங்கள் அனைவரும் ஒரு விடயத்தைச் செய்வதை நிறுத்தாதீர்கள். எப்படி நீங்கள் இந்த உறவுமுறையிலும் தொடர்பிலும் இப்போது வந்துள்ளீர்களோ, அவ்வாறே, இந்தப் பிராமணக் குடும்பத்துடனான உங்களின் தொடர்பை ஒருபோதும் கைவிடாதீர்கள். எந்தளவிற்கு நீங்கள் தொடர்பில் இருக்கிறீர்களோ, அந்தளவிற்கு உங்களின் உறவுமுறை பலமானது ஆகும். நீங்கள் நிச்சயமாகத் தந்தையின் ஆசீர்வாதத்தைப் பெறுவீர்கள். எனவே, நீங்கள் இதை ஏற்றுக் கொள்கிறீர்களா? நீங்கள் தொடர்பைப் பேணுவதை ஏற்றுக் கொள்கிறீர்களா? உங்களின் கைகளை உயர்த்துங்கள். அச்சா. (பாப்தாதா போக்கின் மீது இருந்து மலர் மாலையை எடுத்து, அனைவரின் முன்னாலும் உயர்த்திக் காட்டினார்.) நீங்கள் அனைவரும் இந்த மாலையை அணிந்து கொள்ளுங்கள்.

புதிய குழந்தைகளான நீங்களும் உண்மையான தங்கக் குழந்தைகளான நீங்கள் அனைவரும் தந்தைக்குக் கீழ்ப்படிவாக இருக்கிறீர்கள்தானே? எனவே இன்று, நீங்கள் செல்வதற்கு முன்னர் இந்த ‘நான்’ என்பதை எரித்து விடுங்கள். முதல் தடவை வந்திருப்பவர்கள், எழுந்து நில்லுங்கள்! அச்சா. இங்கே முதல் தடவை வந்திருக்கும் குழந்தைகளுக்கு பாப்தாதா கோடானுகோடி வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார். நீங்கள் இங்கே முதல் தடவையாக வந்துள்ளீர்கள். முதல் இலக்கம் நிச்சயிக்கப்பட்டு இருந்தாலும் முதலில் உங்களின் இலக்கத்தை முதல் பிரிவில் நிச்சயம் செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு இந்தத் தைரியம் உள்ளதா? இந்தத் தைரியத்தைக் கொண்டிருப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! உங்களின் கைகளை உயர்த்துவதற்கு முன்னர் அதைக் கவனமாகக் கருத்தில் கொள்ளுங்கள். அச்சா. எனவே, இந்த இலட்சியத்தை வைத்திருங்கள்: நீங்கள் கடைசியாக வந்திருந்தாலும் நீங்கள் வேகமாகச் செல்வீர்கள். ஏனென்றால், காலத்திற்கு எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை. நீங்கள் எதைச் செய்ய விரும்பினாலும் ஒரு வேகமான முயற்சியாளர் ஆகி, அதை இப்போதே செய்யுங்கள். ஏனென்றால், நீங்கள் குறுகிய நேரத்தில் நீண்ட காலப்பகுதிக்கு முயற்சி செய்ய வேண்டும். எனவே, உங்களுக்கு இந்தத் தைரியம் இருக்கிறதா? உங்களுக்கு தைரியம் இருக்கிறதா? உங்களின் கைகளை உயர்த்துங்கள்! பாருங்கள், உங்களின் புகைப்படம் எடுக்கப்படுகிறது. தைரியத்தைக் கொண்டிருப்பவர்களை பாப்தாதா பாராட்டுகிறார். நீங்கள் தைரியத்தைப் பேணும்போது, தந்தை உதவி செய்கிறார். அதனால் ஒருபோதும் தைரியத்தை இழக்காதீர்கள். சதா உங்களின் பாக்கிய நட்சத்திரம் ஜொலிக்க வேண்டும். ஏனென்றால், இந்தப் பிறவியின் தீவிர முயற்சி - முயற்சி இல்லை, ஆனால் தீவிர முயற்சி - பல பிறவிகளுக்காக உங்களின் பாக்கியத்தை உருவாக்கும். ஆகவே, ஒருபோதும் தைரியத்தை இழக்காதீர்கள். சூழ்நிலைகள் வரும், ஆனால் சூழ்நிலை, மகாவீர் கிடையாது. நீங்கள் சர்வசக்திவானின் குழந்தைகள் ஆவீர்கள். உங்களுக்கு முன்னால் அந்தச் சூழ்நிலைகள் எம்மாத்திரம்? சூழ்நிலைகள் வரும், பின்னர் அவை போய்விடும். எப்படியும் போகப் போகின்ற எதன் பின்னாலும் துரத்திச் செல்வதன் மூலம் உங்களின் பாக்கியத்தை இழக்காதீர்கள். அச்சா. அமருங்கள்!

பாப்தாதா அனைவரையும் அன்புடன் பாராட்டுகிறார். எதற்காக? தைரியத்தைப் பேணியதற்காக. ஒவ்வொரு குழந்தையின் தைரியம் நிறைந்த எண்ணத்தை இட்டு பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். எனவே, நீங்கள் ஹோலியைக் கொண்டாடினீர்களா? நீங்கள் எதையாவது எரிக்கும் ஹோலியைக் கொண்டாடினீர்கள். அத்துடன் இறை சகவாசம் என்ற நிறத்தால் உங்களை நிறமூட்டும் ஹோலியையும் நீங்கள் கொண்டாடினீர்கள். நீங்கள் எதையோ எரித்தீர்கள், அத்துடன் நீங்கள் கொண்டாடினீர்கள்.

பாப்தாதா இப்போது குழந்தைகளான நீங்கள் அனவைரும் ஓர் அப்பியாசத்தைச் செய்ய வேண்டும் என்று விரும்புகிறார். அந்த அப்பியாசம்: எங்கும் இக்கட்டான சூழ்நிலைகள் காணப்படுகின்றன. ஓரிடத்தில் ஒரு சூழ்நிலை, இன்னோர் இடத்தில் வேறொரு சூழ்நிலை. எங்கும் உள்ள இக்கட்டான சூழ்நிலைகளின் மத்தியில் உங்களால் ஒரு விநாடியில் உங்களை ஸ்திரப்படுத்திக் கொள்ள முடிகிறதா? இத்தகைய பயிற்சியைக் கொண்டவர்களாக உங்களை நீங்கள் அனுபவம் செய்கிறீர்களா? உதாரணமாக, ஏதாவதொரு காரணத்தால் நீங்கள் வீணான எண்ணங்களின் புயலை அனுபவம் செய்யும் போதெல்லாம் உங்களால் அந்த வேளையில் உங்களின் மனதையும் புத்தியையும் ஸ்திரப்படுத்த முடிகிறதா? அத்தகைய வேளையில் ஒருமுகப்படுத்தும் சக்தியின் அப்பியாசத்தை நீங்கள் முயற்சி செய்து பார்த்துள்ளீர்களா? நீங்கள் அந்த வேளையில் ஒரு விநாடியில் ஒருமுகப்படுத்தும் சக்தியைப் பயன்படுத்த வேண்டும். ஏனென்றால், நீங்கள் மேற்கொண்டு முன்னேறும்போது இத்தகைய சூழ்நிலைகள் மீண்டும் மீண்டும் வரும். இன்று, பாப்தாதா ஒரு விநாடியில் முற்றுப்புள்ளி இடுவதில், அதாவது, ஒருமுகப்படுத்தும் ஸ்திதியைப் பயிற்சி செய்வதில் உங்களின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறார். ஏனென்றால், பஞ்சபூதங்களும் தமது வெவ்வேறு நிறங்களைக் காட்ட ஆரம்பித்துள்ளன. எங்கும் என்ன நடக்கிறது என்பதை நீங்கள் அனைவரும் நன்றாக அறிவீர்கள். உங்களின் மனதையும் புத்தியையும் அலைபாயச் செய்யும் இத்தகைய விடயங்கள் நிச்சயமாக வரும். அதனால் இதை இப்போதே பயிற்சி செய்யுங்கள். உங்களால் ஒரு வினாடியில் பரந்தாமத்தில் உங்களின் மனதையும் புத்தியையும் ஸ்திரமாக்க முடிகிறதா? இப்போது, உங்களின் தேவதை ரூபத்தில் ஸ்திரமாக இருங்கள். இப்போது, உங்களை ஒரு பிராமணராக, மாஸ்ரர் சர்வசக்திவானாக இருக்கும் ஸ்திதியில் ஸ்திரமாக்கிக் கொள்ளுங்கள். மாஸ்ரர் சர்வசக்திவானாக இருக்கும் ஸ்திதியில் உங்களை ஸ்திரப்படுத்திக் கொள்ளுங்கள். (பாப்தாதா அப்பியாசத்தைச் செய்வித்தார்) நாள் முழுவதும் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்தப் பயிற்சியைச் செய்யுங்கள். மீண்டும் மீண்டும் உங்களின் மனதை ஸ்திரப்படுத்துங்கள். நீங்கள் விரும்பும்போது, நீங்கள் விரும்பியவற்றில் உங்களின் மனதை ஸ்திரப்படுத்துங்கள். முயற்சி செய்வதற்கு உங்களுக்கு ஒரு நிமிடம் எடுக்கக்கூடும். ஆனால் ஒரு விநாடியில் முற்றுப்புள்ளி வையுங்கள். ஏனென்றால், இப்போது காலமும் குழப்பத்திற்கான ஆயத்தங்களைச் செய்கிறது. ஆகவே, மனதின் கட்டுப்பாடு இருக்க வேண்டும். இது எனது மனம். நான் மனம் அல்ல. எனக்கு மனம் சொந்தம், அதனால் என்னுடையதன் மீது எனக்குக் கட்டுப்பாடு இருக்கிறதா? இந்த அப்பியாசம் மிகவும் அவசியமானது.

வந்திருக்கும் அனைவரும், பாப்தாதா குழந்தைகளான உங்கள் ஒவ்வொருவரையும் நேசிக்கிறார். ஏன்? ஓர் ஆத்மா எத்தகையவராக இருந்தாலும் பாப்தாதா ஒவ்வொரு குழந்தையையும் ஒரு மில்லியனில் ஒருவராகவே பார்க்கிறார். நீங்கள் உங்களின் முயற்சிகளில் பலவீனமாக இருந்தாலும் நீங்கள் தந்தையால் நேசிக்கப்படுகிறீர்கள். நீங்கள் உங்களின் இதயபூர்வமாக, ‘எனது பாபா’ எனச் சொல்கிறீர்கள். இதனாலேயே, நீங்கள் தந்தையால் ஆழமாக நேசிக்கப்படுகிறீர்கள். பாப்தாதா மீண்டும் ஒருமுறை உங்களுக்கு ஒரு விடயத்தை நினைவூட்டுகிறார்: உங்களின் முகம் எப்போதும் மலர்ச்சியாகவும் சந்தோஷத்தால் ஜொலித்துக் கொண்டும் இருக்க வேண்டும். சூழ்நிலைகள் போகக்கூடும், ஆனால் உங்களின் சந்தோஷத்தைப் போக அனுமதிக்காதீர்கள். சங்கமயுகத்தின் சந்தோஷம், இறை பரிசு ஆகும். ஹோலி என்றால், எந்தவொரு சூழ்நிலை வந்தாலும் நீங்கள் ஹோலியை, கடந்து சென்றதைக் கடந்ததாக ஆக்கும் ஹோலியைக் கொண்டாடி விட்டுத் திரும்பி வந்துள்ளீர்கள் என்பதை நினைவில் வைத்திருங்கள். அதனால் ஒருபோதும் உங்களின் சந்தோஷம் மறைவதற்கு அனுமதிக்காதீர்கள். சந்தோஷம் உங்களின் இறை பரிசும் பொக்கிஷமும் ஆகும்.

பாப்தாதா எப்போதும் கூறுவார்: சதா இந்த சுலோகனை நினைவில் வைத்திருங்கள்: சந்தோஷமாக இருந்து, சந்தோஷத்தைப் பகிர்ந்து அளியுங்கள். எந்தளவிற்கு அதிகமாக நீங்கள் சந்தோஷத்தைப் பகிர்கிறீர்களோ, அந்தளவிற்கு அது அதிகரிக்கும். அத்துடன் நீங்கள் மேற்கொண்டு முன்னேறுகையில் ஒரு மலர்ச்சியான முகம் இயல்பாகவே தொடர்ந்து சேவை செய்யும். உங்களைப் பார்க்கும் எவரும், இவர் எதைப் பெற்றுள்ளார்? என்று நினைப்பார்கள். எனவே, ஹோலியில் இன்றைய தில்குஷ் தோளி, சந்தோஷம் ஆகும். நீங்கள் அனைவரும் அதை உண்டீர்களா? சதா இதைத் தொடர்ந்து உண்ணுங்கள். இதன் மூலம் எந்தவொரு நோயும் ஏற்படாது. அச்சா.

பாப்தாதா மீண்டும் உங்களில் முயற்சி செய்வதற்கான சமிக்கையை உங்களுக்கு வழங்குகிறார். தொடர்ந்தும் சுய முன்னேற்றத்திற்கும் சேவைக்கும் இரண்டிலும் கவனம் செலுத்துங்கள். தொடர்ந்து முன்னேறுங்கள், சதா பறப்பதுடன் மற்றவர்களையும் பறக்கச் செய்யுங்கள். அச்சா.

பாப்தாதாவின் அன்பிலே திளைத்திருக்கும் எங்கும் உள்ள குழந்தைகளான உங்கள் அனைவருக்கும் நினைவிலும் சேவையிலும் முன்னேறுவதுடன் மற்றவர்களையும் முன்னேறச் செய்பவர்களுக்கும் அமிர்த வேளையைச் சிறப்பானதாகவும் சக்திவாய்ந்ததாகவும் ஆக்குபவர்களுக்கும் கருணை நிறைந்தவராகவும் கனிவாகவும் இரக்கம் உடையவராகவும் ஆகுவதன் மூலம் தமது மனங்களால் சேவை செய்து, ஆத்மாக்களுக்கு ஏதாவதொன்றின் ஒரு துளியை வழங்குபவர்களுக்கும் தொடர்ந்து இந்த முறையில் சேவை செய்வதை அதிகரியுங்கள். ஒவ்வொரு குழந்தைக்கும் ஊக்கமும் உற்சாகமும் இருப்பதை பாப்தாதா பார்க்கிறார். ஆனால் நீங்கள் எதை மேலதிகமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்? ‘சதா’ என்ற வார்த்தையைச் சேர்த்துக் கொள்ளுங்கள். ‘சிலவேளைகளில்’ என்ற வார்த்தையை உங்களின் அகராதியில் இருந்து நீக்கி விடுங்கள். எனவே, எரிப்பதன் மூலமும் சகவாசத்தால் உங்களை நிறமூட்டிக் கொள்வதன் மூலமும் கடந்து சென்றதைக் கடந்ததாக விட்டு விடுவதன் மூலமும் எங்கும் உள்ள குழந்தைகளான நீங்கள் அனைவரும் ஹோலியைக் கொண்டாடினீர்கள். இதனாலேயே, எங்கும் உள்ள குழந்தைகளான உங்கள் அனைவரையும் பாப்தாதா தன் முன்னால் தனிப்பட்ட முறையில் தனது இதயத்தில் பார்க்கிறார். பாப்தாதாவிடம் இருந்து கோடானுகோடி மடங்கு அன்பும் நினைவும் நமஸ்தேயும்.

ஆசீர்வாதம்:
நீங்கள் எப்போதும் கட்டளைகளைப் பின்பற்றுகின்ற திலகத்தை அணிந்து கொண்டு, முதற் பரிசைப் பெறுகின்ற சதா கட்டளைகள் அனைத்தையும் பின்பற்றுபவர் ஆகுவீர்களாக.

தமது நெற்றிகளில் கட்டளைகளைப் பின்பற்றும் விழிப்புணர்விற்கான திலகத்தை அணிந்துள்ள குழந்தைகள், கட்டளை இல்லாமல் ஓர் எண்ணத்தையேனும் உருவாக்காதவர்கள், முதல் பரிசைப் பெறுவார்கள். உதாரணமாக, சீதை அவருக்காக வரையப்பட்ட கோட்டுக்குள் இருக்குமாறு கட்டளையைப் பெற்றார். அதேபோல், ஒவ்வோர் அடியை எடுத்து வைக்கும்போதும் அல்லது ஏதாவதொரு எண்ணத்தை உருவாக்கும் போதும் தந்தையின் கட்டளைகள் என்ற கோட்டுக்குள்ளே இருங்கள். நீங்கள் சதா பாதுகாப்பாக இருப்பீர்கள். இராவணனின் சம்ஸ்காரங்கள் எதுவும் உங்களைத் தாக்க மாட்டாது. உங்களின் நேரமும் வீணாகாது.

சுலோகம்:
உங்களுக்கு எவர் மீதாவது பற்று இருக்குமாயின், அது நிச்சயமாக உங்களின் முயற்சிகளில் கவனக்குறைவை ஏற்படுத்தும்.

அவ்யக்த சமிக்கை: சதா ஆட்ட, அசைக்க முடியாத மற்றும் நிலையான ஸ்திதியில் இருப்பதை அனுபவம் செய்யுங்கள்.

சதா ஒரேயொருவரின் நினைவில் இருந்து, உங்களின் ஸ்திதியை நிலையாகவும் ஸ்திரமாகவும் ஆக்குங்கள். நீங்கள் 1-1-1 என்ற காலப்பகுதியில் வருவீர்கள். வெளியில் வசித்தாலும் இந்தப் பாடத்தை உறுதியாக்கிக் கொள்ளுங்கள்: தந்தையைப் பார்த்து, தந்தையைப் பின்பற்ற வேண்டும். அப்போது, எந்தவொரு சூழ்நிலையிலும் நீங்கள் ஒருபோதும் தளம்பல் அடைய மாட்டீர்கள். தந்தை பிரம்மாவின் முன்னால் எத்தனை சூழ்நிலைகள் வந்தபோதும், அவர் அந்தச் சூழ்நிலைகளைப் பார்க்கவில்லை. ஆனால் ஒரேயொரு தந்தையை மட்டுமே பார்த்தார். அவ்வாறே அவர் முதல் இலக்கத்தவர் ஆகினார். எனவே, தந்தையைப் பின்பற்றுங்கள்.