24.07.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே இந்தக் கல்வியின் மூலம் நீங்கள் அமைதி தாமத்தினூடாக உங்களுடைய சந்தோஷ தாமத்திற்குச் செல்கின்றீர்கள். இதுவே உங்களுடைய இலக்கும் குறிக்கோளும் ஆகும். நீங்கள் இதை ஒருபோதும் மறக்கக்கூடாது.
கேள்வி:
இந்த நேரத்தில் குழந்தைகளாகிய நீங்கள் நாடகத்தின் எந்தக் காட்சியை பற்றற்ற பார்வையாளராக அவதானிக்கிறீர்கள்?பதில்:
இந்த நேரத்தில் நாடகத்தில் முற்றிலும் துன்பகரமான காட்சிகளே உள்ளன. ஒருவர் சிறிதளவு சந்தோஷத்தைக் கொண்டிருந்தாலும் அதுவும் காக்கையின் எச்சம் போன்று தற்காலிகமானதே ஆகும். ஏனையவை அனைத்தும் துன்பத்தைத் தவிர வேறெதுவும் இல்லை. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது வெளிச்சத்திற்குள் வந்துள்ளீர்கள். எல்லையற்ற உலகச் சக்கரம் வினாடிக்கு வினாடி எவ்வாறு சுழல்கின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஒரு நாள் போன்று அடுத்த நாள் இருக்க முடியாது. புதுக் காட்சிகள் தொடர்வதால் முழு உலகினதும் செயற்பாடுகள் தொடர்ந்தும் மாற்றம் அடையும்;.பாடல்:
ஞான மழை அதியன்பிற்கினியவருடன் இருப்பவர்களுக்கே…இரட்டை ஓம் சாந்தி.
தந்தை தனது ஆதி தர்மத்தில் நிலைத்திருந்து குழந்தைகளாகிய உங்களையும் சுயத்தின் ஆதிதர்மத்தில் நிலைத்திருந்து தந்தையை நினைவு செய்யுமாறு கூறுகின்றார். ‘உங்கள் ஆதி தர்மத்தில் நிலைத்திருங்கள்’ என வேறு எவராலும் கூற முடியாது. குழந்தைகளாகிய உங்களுக்கு புத்தியில் நம்பிக்கை உள்ளது. புத்தியில் நம்பிக்கை கொண்டவர்கள் வெற்றியாளர்கள் ஆகுகின்றார்கள். அவர்களே வெற்றி அடைகின்றார்கள். அவர்கள் எதில் வெற்றி அடைகின்றார்கள்? தந்தையின் ஆஸ்தியைப் பெறுவதிலாகும். சுவர்க்கத்திற்குச் செல்வது என்றால் தந்தையின் ஆஸ்தியைப் பெறுவதில் வெற்றியடைவதாகும். நீங்கள் செய்யும் மற்றைய முயற்சி அந்தஸ்தைப் பெறுவதற்காகும். நீங்கள் நிச்சயமாக சுவர்க்கத்திற்குச் செல்லவேண்டும். இது அழுக்கான உலகம் எனக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இன்னமும் பெருமளவு துன்பம் வரவுள்ளது. நாடகச் சக்கரத்தையும் நீங்கள் அறிவீர்கள். ஆத்மாக்களைத் தூய்மையாக்கி நுளம்புக்கூட்டம் போன்று வீட்டுக்கு திரும்பி அழைத்துச் செல்வதற்கு பாபா பல தடவைகள் வந்துள்ளார். பின்னர் அவர் அமைதி தாமத்துக்குச் சென்று இருந்து விடுவார். குழந்தைகளும் அங்கேயே செல்வார்கள். இந்தக் கல்வியின் மூலம் நீங்கள் அமைதி தாமத்தினூடாக சந்தோஷ தாமத்திற்குச் செல்வீர்கள் என்ற சந்தோஷம் குழந்தைகளாகிய உங்களுக்கு இருக்க வேண்டும். இதுவே உங்களது இலக்கும் குறிக்கோளும் ஆகும். நீங்கள் இதை மறக்கக்கூடாது. நீங்கள் இதை ஒவ்வொரு நாளும் கேட்கின்றீர்கள். தந்தை உங்களைத் தூய்மை ஆக்குவதற்காகக் கற்பிக்கின்றார் என்பதை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். நீங்கள் தூய்மை ஆகுவதற்காக நினைவு எனும் இலகுவான வழிமுறையை அவர் காட்டுகின்றார். இது ஒன்றும் புதிய விடயமல்ல. கடவுள் இராஜயோகம் கற்பித்தார் என எழுதப்பட்டுள்ளது. அவர்கள் செய்த ஒரு தவறு கீதையில் ஸ்ரீகிருஷ்ணரின் பெயரைப் புகுத்தியதாகும். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது பெறுகின்ற இந்த ஞானம் கீதையைத் தவிர வேறு எந்தச் சமயநூல்களிலும் இல்லை. தந்தையின் புகழ் போன்று எந்த மனிதரின் புகழும் இருக்க முடியாது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். தந்தை வரவில்லையெனில் உலகச் சக்கரம் சுழலமாட்டாது. எவ்வாறு துன்ப தாமம், சந்தோஷ தாமமாக முடியும்? உலகச் சக்கரம் சுழல வேண்டும். ஆகையினால் தந்தை நிச்சயமாக வரவேண்டும். தந்தை அனைவரையும் வீட்டுக்குத் திரும்ப அழைத்துச் செல்ல வருகின்றார். பின்னர் சக்கரம் மீண்டும் ஆரம்பிக்கின்றது. தந்தை வந்திராவிடின் எவ்வாறு கலியுகம் சத்தியயுகமாக மாறியிருக்க முடியும்? இவ்விடயங்கள் சமயநூல்;களிலே குறிப்பிடப்படவில்லை. கீதையில் மாத்திரமே இராஜயோகம் குறிப்பிடப்பட்டுள்ளது. கடவுள் அபுவிற்கு வருகின்றார் என்று மக்களுக்குத் தெரிந்திருந்தால் அவர்கள் அனைவரும் அவரைச் சந்திக்க இங்கே ஓடோடி வந்திருப்பார்கள். சந்நியாசிகளும் கடவுளைச் சந்திக்க விரும்புகிறார்கள். மக்கள் வீட்டுக்குத் திரும்புவதற்காக தூய்மையாக்குபவரை நினைவு செய்கின்றார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது பல மில்லியன் மடங்கு பாக்கியசாலிகள் ஆகுகின்றீர்கள். அங்கே எல்லையற்ற சந்தோஷம் உள்ளது. புதிய உலகில் இருந்த தேவதர்மம் இப்பொழுது இல்லை. தந்தை, பிரம்மாவின் மூலம் தேவ இராச்சிய ஸ்தாபனையை மேற்கொள்கின்றார். இது மிகத் தெளிவாக உள்ளது. இதுவே உங்கள் இலக்கும் இலட்சியமும் ஆகும். இதுபற்றி எந்த சந்தேகமான கேள்விகளும் இல்லை. நீங்கள் மேலும் முன்னேறிச் செல்லும் பொழுது இராச்சியம் நிச்சயமாக ஸ்தாபனை ஆகின்றது என்றும் அங்கே ஆதிசனாதன தேவி தேவதா தர்மம் இருக்கும் எனவும் புரிந்து கொள்ளப்படும். நீங்கள் சுவர்க்கத்தில் வாழும்போது இந்த பூமி பாரதம் என அழைக்கப்படுகிறது. பின்னர் நீங்கள் நரகத்துக்கு வந்ததும் அது ஹிந்துஸ்தான் என அழைக்கப்படுகிறது. இங்கே துன்பம் மாத்திரமே உள்ளது. பின்னர் இந்த உலகம் சுவர்க்கமாக மாறுகின்றது, அந்தச் சந்தோஷ தாமம் மாத்திரமே இருக்கும். குழந்தைகளாகிய நீங்கள் இந்த ஞானத்தைக் கொண்டுள்ளீர்கள். உலகிலுள்ள மக்கள் எதையுமே அறிய மாட்டார்கள். தந்தை கூறுகின்றார்: இப்பொழுது காரிருளான இரவாகும். மனிதர்கள் தொடர்ந்தும் இரவில் தடுமாறுகின்றனர். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது வெளிச்சத்தில் இருக்கின்றீர்கள். பற்றற்ற பார்வையாளராகி உங்களுடைய புத்தியில் இதைக் கிரகியுங்கள். எல்லையற்ற உலகச்சக்கரம் விநாடிக்கு விநாடி தொடர்ந்தும் சுழல்கின்றது. ஒரு நாள் மற்றைய நாள் போன்று இருக்க முடியாது. முழு உலகினதும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் மாறி புதிய காட்சிகள் தொடர்கின்றன. இந்த நேரத்தில் முற்றிலும் துன்பமான காட்சிகளே இருக்கின்றன. சந்தோஷம் இருந்தால் அது காக்கையின் எச்சம் போன்றதே. மீதி துன்பம் தவிர வேறெதுவும் இல்லை. ஒருவேளை சிலருக்கு இந்தப் பிறவியில் சந்தோஷம் இருக்கலாம், ஆனால் பின்னர் அவர்களது அடுத்த பிறவியில் துன்பமே இருக்கும். நீங்கள் இப்பொழுது வீடு செல்ல இருக்கின்றீர்கள் என்பது குழந்தைகளாகிய உங்களது புத்தியிலுள்ளது. இதற்கு நீங்கள் தூய்மை ஆகுவதற்கான முயற்சியைச் செய்ய வேண்டும். நீங்கள் ஸ்ரீ இலக்ஷ்மி ஸ்ரீ நாராயணன் ஆகுவதற்கான ஸ்ரீமத்தை ஸ்ரீ ஸ்ரீ உங்களுக்குக் கொடுத்துள்ளார். நீங்கள் ஒரு சட்டத்தரணி ஆகுவதற்கான அறிவுறுத்தல்களை ஒரு சட்டத்தரணி கொடுப்பார். தந்தை இப்பொழுது கூறுகின்றார்: ஸ்ரீமத்தைப் பின்பற்றி இவ்வாறு ஆகுங்கள். உங்களையே கேளுங்கள்: என்னில் ஏதாவது குறைபாடு உள்ளதா? ‘நான் நற்குணங்கள் அற்றவன்! என்னிடம் நற்குணங்கள் இல்லை! என் மீது இரக்கம் காட்டுங்கள்!’ என மக்கள் இப்பொழுது பாடுகின்றனர். இரக்கம் என்றால் கருணையாகும். பாபா கூறுகின்றார்: குழந்தைகளே நான் எவர் மீதும் கருணை கொள்வதில்லை. நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள்மீது கருணை கொள்ள வேண்டும். இந்த நாடகம் நிச்சயிக்கப்பட்டது. கருணையற்ற இராவணன் உங்களை துன்பத்திற்குள் கொண்டு செல்கின்றான். இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இராவணனும் இதற்காக குற்றஞ் சாட்டப்பட முடியாது. தந்தை வந்து உங்களுக்கு ஆலோசனை வழங்குகின்றார். இதுவே அவரது கருணையாகும். எவ்வாறாயினும் இந்த இராவண இராச்சியம் இன்னமும் தொடரும். நாடகம் அநாதியானது. இராவணனும் குற்றஞ் சாட்டப்பட முடியாது, மனிதர்களும் குற்றஞ்சாட்டப்பட முடியாது. சக்கரம் சுழலவேண்டும். தந்தை உங்களை இராவணனிடம் இருந்து விடுதலை ஆக்குவதற்கான வழிமுறைகளைத் தொடர்ந்தும் காட்டுகின்றார். இராவணனின் வழிகாட்டல்களைப் பின்பற்றியதால் நீங்கள் பாவாத்மாக்கள் ஆகிவிட்டீர்கள். இப்பொழுது இது பழைய உலகமாகும். புதிய உலகம் நிச்சயமாக வரும். சக்கரம் சுழலவேண்டும். சத்தியயுகம் நிச்சயமாக மீண்டும் ஒருமுறை வரவேண்டும். இப்பொழுது இது சங்கமயுகமாகும். மகாபாரத யுத்தம் இந்த நேரத்திற்கானது. விநாச காலத்தில் அன்பற்ற புத்தியைக் கொண்டவர்கள் அழிவுக்கு இட்டுச் செல்லப்படுவார்கள். இது நடைபெறும், நாங்கள் வெற்றியடைந்து சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆகுவோம். மீதியாக எவரும் அங்கே இருக்க மாட்டார்கள். தூய்மை ஆகாது தேவர்கள் ஆகுவது கடினமானது என்று நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். உங்களை மேன்மையான தேவர்கள் ஆக்குவதற்காக தந்தை இப்பொழுது உங்களுக்கு ஸ்ரீமத்தைக் கொடுக்கின்றார். நீங்கள் இவ்வாறான வழிகாட்டல்களை வேறு எந்த நேத்திலும் பெறமுடியாது. அவர் உங்களுக்கு ஸ்ரீமத் கொடுக்கும் அவரது பாகத்தை சங்கம யுகத்திலேயே நடிக்கின்றார். வேறு எவரிடமும் இந்த ஞானம் இல்லை. பக்தி என்றால் பக்தி. அதை இந்த ஞானம் என அழைக்க முடியாது. ஞானக்கடலாகிய பரமாத்மாவே இந்த ஆன்மீக ஞானத்தைக் கொடுக்கின்றார். ஞானக்கடல், சந்தோஷக்கடல் என்பது அவரது புகழ் மாத்திரமேயாகும். தந்தை உங்களுக்கு முயற்சி செய்வதற்கான வழிமுறைகளைக் காட்டுகின்றார். நீங்கள் இப்பொழுது தோல்வி அடைந்தால் கல்பம் கல்பமாகத் தோல்வி அடைந்து பெருமளவில் பாதிக்கப்படுவீர்கள் என்ற விழிப்புணர்வைக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றாதபோதே பாதிக்கப்படுகின்றீர்கள். பிராமணர்களுடைய விருட்சம் நிச்சயமாக வளர வேண்டும். தேவர்களின் விருட்சம் வளர்கின்ற அளவுக்கே இந்த விருட்சமும் வளரும். நீங்களும் முயற்சி செய்து மற்றவர்களையும் அவ்வாறு செய்யத் தூண்ட வேண்டும். நாற்று தொடர்ந்தும் நாட்டப்பட்டு விருட்சம் பெரியதாகும். நீங்கள் இப்பொழுது நன்மை அடைந்துள்ளீர்கள் என நீங்கள் அறிவீர்கள். தூய்மையற்ற உலகிலிருந்து தூய்மையான உலகிற்குச் செல்வதே நீங்கள் அனுபவிக்கும் நன்மையாகும். குழந்தைகளாகிய உங்களது புத்தியின் பூட்டு இப்பொழுது திறந்துள்ளது. தந்தை விவேகிகளின் புத்தியாவார். நீங்கள் இப்பொழுது அனைத்தையும் விளங்கிக் கொள்கின்றீர்கள். நீங்கள் முன்னேறிச் செல்லும்பொழுது யாருடைய புத்தியின் பூட்டு திறக்கப்படுகிறது என்பதைக் காண்பீர்கள். இதுவும் நாடகத்திற்கு ஏற்பவே தொடர்கின்றது. பின்னர் அது சத்தியயுகத்தில் இருந்து ஆரம்பமாகும். இலக்ஷ்மி நாராயணனின் முடிசூட்டு விழாவிலிருந்து அடுத்த சகாப்தம் ஆரம்பமாகும். 1 தொடக்கம் 1250ம் ஆண்டுவரை சுவர்க்கம் இருக்குமென நீங்கள் மிகத் தெளிவாக எழுதுகின்றீர்கள். சத்திய நாராயணனின் கதையும் இருக்கின்றது. அமரத்துவப் பிரபுவின் பக்திக் கதையும் உள்ளது. நீங்கள் இப்பொழுது அமரத்துவப் பிரபுவின் உண்மையான கதையைச் செவிமடுக்கின்றீர்கள். பின்னர் பக்தி மார்க்கத்தில் இந்த நேரத்து ஞாபகார்த்தங்கள் தொடரும். சகல பண்டிகைகள் போன்றவை இந்த நேரத்தையே குறிக்கின்றன. சிவபாபாவின் வருகையே முதல் தரமான பண்டிகையாகும். தந்தை இந்த உலகை மாற்றுவதற்காக கலியுக முடிவில் நிச்சயமாக வரவேண்டும். மிக நெருக்கமாக இந்தப் படங்களைப் பார்ப்பவர்கள் கணக்கு எவ்வளவு சரியானது என்பதைப் பார்க்க முடியும். நீங்கள் முன்னைய கல்பத்தில் செய்த அதே முயற்சியையே நிச்சயமாகச் செய்வீர்கள் என உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. நீங்கள் பற்றற்ற பார்வையாளராகி, மற்றவர்கள் செய்கின்ற முயற்சியைப் பார்க்கின்றீர்கள். அவர்களுடைய சொந்த முயற்சி பற்றி அவர்கள் அறிவார்கள். நீங்களும் அறிவீர்கள். எந்தளவிற்கு தான் கற்கின்றார் என ஒரு மாணவர் அறியமாட்டாரா? அவர் ஒரு பிரத்தியேகமான பாடத்தில் பலவீனமானவராக இருந்தால் அவரது மனச்சாட்சி அவரை உள்ளார உறுத்தும். பின்னர் அவர் தோல்வியடைவார். பரீட்சை நேரத்தில் தங்களுடைய கல்வியில் பலவீனமானவர்களின் இதயங்கள் மிக வேகமாக அடித்துக் கொள்ளும். குழந்தைகள் காட்சிகளைக் காண்பார்கள், ஆனால் அவர்கள் ஏற்கனவே தோல்வியடைந்து இருப்பார்கள். ஆகையினால் அந்த நேரத்தில் என்ன செய்யமுடியும்? பாடசாலையில் சிலர் தோல்வி அடைகின்றபோது உறவினர்களும் ஆசிரியரும் குழப்பம் அடைவார்கள். அவர்களுடைய பாடசாலையில் இருந்து மிகச்சில மாணவர்களே சித்தி அடைந்திருந்தால் ஆசிரியர் நல்லவரில்லை எனக் கூறுவார்கள். நிலையங்களில் உள்ளவர்களில் யார் நல்ல ஆசிரியர்கள் எனவும் எவ்வாறு அவர்கள் கற்பிக்கின்றார்கள் எனவும் பாபா அறிவார். யார் மிக நன்றாகக் கற்பித்து அவர்களை இங்கு கொண்டு வருவார்கள் என்பதையும் அவர் அறிவார். அவர் அனைத்தையும் அறிவார். பாபா கூறுகிறார்: முகில்களை இங்கே கொண்டு வாருங்கள். உங்களுடைய சிறிய குழந்தைகளை இங்கு கொண்டுவந்தால் உங்களுக்கு அவர்களில் பற்று இருக்கும். நீங்கள் தனியாக வரவேண்டும், அப்பொழுதே உங்களுடைய புத்தியை இங்கே ஒருமுகப்படுத்த முடியும். நீங்கள் உங்களுடைய குழந்தைகளை வீட்டிலே எந்தநேரமும் பார்க்கின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: இந்தப் பழைய உலகம் இடுகாடாகப் போகின்றது. ஒரு புதிய வீடு கட்டப்படும்போது உங்களுடைய புதிய வீடு கட்டப்படுகின்றது என்பது உங்கள் புத்தியில் இருக்கும். உங்களுடைய வியாபாரத்தைத் தொடர்கின்ற போதிலும் உங்களுடைய புதிய வீட்டின்பால் புத்தி ஈர்க்கப்படும். நீங்கள் எங்கேயாவது அமைதியாக அமர்ந்திருப்பதில்லை. அது எல்லைக்கு உட்பட்ட விடயம். ஆனால் இதுவோ எல்லையற்ற விடயமாகும். ஒவ்வொரு செயலையும் செய்கின்ற போதும் நீங்கள் இப்பொழுது வீட்டுக்குத் திரும்புகின்றீர்கள் எனவும் பின்னர் உங்களது இராச்சியத்திற்குச் சென்று எல்லையற்ற சந்தோஷத்தை அனுபவிப்பீர்கள் என்ற விழிப்புணர்விலும் இருங்கள். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளேஇ நீங்கள் உங்கள் குழந்தைகளைப் பராமரிக்க வேண்டும். ஆனால் புத்தி மேலே இணைக்கப்பட வேண்டும். நீங்கள் நினைவில் நிலைத்திருக்கா விட்டால் தூய்மையாக முடியாது. நினைவில் இருப்பதன் மூலம் நீங்கள் தூய்மை ஆகின்றீர்கள். இந்த ஞானத்தைக் கொண்டிருப்பதன் மூலம் வருமானத்தைச் சம்பாதிக்கின்றீர்கள். இங்கு அனைவரும் தூய்மை அற்றவர்கள். இரண்டு கரைகள் உள்ளன. பாபா படகோட்டி என அழைக்கப்படுகின்றார். ஆனால் எவருமே அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. தந்தை உங்களை அக்கரைக்கு அழைத்துச் செல்கின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். தந்தையை நினைவு செய்வதன் மூலம் நீங்கள் மிக நெருக்கம் ஆகின்றீர்கள் என்பதை ஆத்மாக்களாகிய நீங்கள் அறிவீர்கள். படகோட்டி என்ற பெயர் கொடுக்கப்பட்டதிலும் அர்த்தம் இருக்கிறது. எனது படகை அக்கரைக்கு எடுத்துச் செல்லுங்கள் என அனைவரும் புகழ் பாடுகின்றனர். சத்தியயுகத்தில் நீங்கள் இதைப் பாடுவீர்களா? கலியுகத்திலேயே மக்கள் அழைக்கின்றார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இந்த விடயங்களைப் புரிந்து கொள்கின்றீர்கள். விவேகம் அற்றவர்கள் இங்கே வரமுடியாது. பாபா மிகக் கடுமையாக இதைத் தடுக்கின்றார். சிலருக்கு நம்பிக்கை இல்லையெனில் நீங்கள் அவரை இங்கே அழைத்து வரக்கூடாது. அவர் எதையுமே புரிந்து கொள்ளமாட்டார். முதலில் அவருக்கு 7 நாள் பாடத்தைக் கொடுங்கள். சிலரை இரண்டு நாட்களிலேயே அம்பு தைக்கமுடியும். அவருக்கு அது பிடித்திருந்தால் இதை விட்டுவிட மாட்டார். நான் இதை மேலும் ஏழு நாட்களுக்குக் கற்கப்போகின்றேன் என அவர் கூறுவார். அந்த ஆத்மா இந்தக் குலத்திற்குச் சொந்தமானவர் என நீங்கள் உடனடியாகப் புரிந்துகொள்ளலாம். கூர்மையான புத்தி உள்ளவர்கள் மற்றைய விடயங்களைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். ஓ.கே நான் எனது வேலையை விட்டு நீக்கப்பட்டால் நான் வேறொரு வேலையைத் தேடுவேன். நேர்மையான இதயம் கொண்ட குழந்தைகள் ஒருபோதும் அவர்களுடைய வேலையில் இருந்து நீக்கப்பட மாட்டார்கள். அவர்கள் தாங்களே ஆச்சரியம் அடைவார்கள்! சில புதல்விகள் பாபா, எனது கணவரின் புத்தியை மாற்றுங்கள்! எனக் கூறுகின்றார்கள். பாபா கூறுகின்றார்: என்னிடம் அதைச் செய்யுமாறு கூறாதீர்கள்! நீங்கள் நினைவில் நிலைத்திருந்து யோக சக்தியுடன் அவருடன் இருந்து இந்த ஞானத்தை விளங்கப்படுத்துங்கள். பாபா எவரது புத்தியையும் மாற்றுவதில்லை. இல்லையெனில் அனைவரும் ஒரேமாதிரியே செய்வார்கள். ஒருவர் என்ன வழக்கத்தைச் செய்ய ஆரம்பிக்கின்றாரோ மக்கள் அதை மிக விரைவாகப் பின்பற்றுவார்கள். ஒருவர் ஒரு குருவிடம் இருந்து நன்மையைப் பெறுகின்றார் என ஏனையோர் கேள்விப்படும்போது அவர்களும் அந்த ஒருவரைப் பின்பற்றத் தொடங்குவார்கள். நிச்சயமாக மேலிருந்து வந்த புதிய ஆத்மாவுக்கு புகழ்ச்சி இருக்கும். பின்னர் அவர் பல சீடர்களைக் கொண்டிருப்பார். இதனாலேயே நீங்கள் அந்த விடயங்கள் எதையும் பார்க்கக்கூடாது. நீங்கள் உங்களை மாத்திரமே பார்த்து எந்தளவிற்கு நீங்கள் கற்கின்றீர்கள் எனவும் பாருங்கள். பாபா உங்களுடன் விரிவாக உரையாடுவார். தந்தையை நினைவு செய்யுங்கள் என நீங்கள் அவர்களுக்குக் கூறினால் அதை வீட்டில் இருந்தவாறே செய்யமுடியும். எவ்வாறாயினும் ஞானக்கடல் நிச்சயமாக இந்த ஞானத்தைக் கொடுப்பார், இல்லையா? பிரதான விடயம் “மன்மனாபவ” ஆகும். அத்துடன் அவர் உலகின் ஆரம்பம் மத்தி இறுதி பற்றிய இரகசியங்களையும் விளங்கப்படுத்துகின்றார். பல மிக நல்ல படங்களும் இப்பொழுது உருவாக்கப்பட்டுள்ளன. தந்தை அவற்றின் அர்த்தத்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். பிரம்மா, விஷ்ணுவின் தொப்புள் கொடியின் முடிவில் சித்தரிக்கப்பட்டுள்ளார். திரிமூர்த்திகளும் சித்தரிக்கப்பட்டுள்ளனர். எனவே எவ்வாறு பிரம்மா அவர்கள் காட்டியவாறு விஷ்ணுவின் தொப்புளில் இருந்து வெளியாகி இருக்கமுடியும்? எது சரி, எது பிழை எனத் தந்தை இங்கிருந்து விளங்கப்படுத்துகின்றார். மக்கள் பல படங்களைத் தங்களது சொந்தக் கற்பனையில் உருவாக்கி உள்ளர்கள். சில சமயநூல்களில் சக்கரமும் காட்டப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் அதன் காலவரையறை ஒன்றிலே ஒரு மாதிரியும் மற்றொன்றிலே வேறு மாதிரியும் எழுதப்பட்டுள்ளது. பல்வேறு கருத்துக்ககள் உள்ளன. பல எல்லைக்கு உட்பட்ட விடயங்கள் சமயநூல்களிலே எழுதப்பட்டுள்ளன. எவ்வாறு முழு உலகமும் இராவணனின் இராச்சியம் என்ற எல்லையற்ற விடயங்களைத் தந்தை விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் எவ்வாறு தூய்மை அற்றவர்கள் ஆகினீர்கள், மீண்டும் ஒருமுறை எவ்வாறு தூய்மை ஆகலாம் போன்ற ஞானம் உங்கள் புத்தியில் உள்ளது. ஏனைய அனைத்து மதங்களும் பின்னரே வந்தன. பல வகைகள் உள்ளன. ஒன்று போல மற்றையது இருக்க முடியாது. எந்த இரண்டு மனிதரும் ஒரே மாதிரியான முகச்சாயலைக் கொண்டிருக்க முடியாது. இந்த நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது. அது தொடர்ந்தும் மறுபடியும் நடைபெறும். தந்தை இங்கிருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். மிகக் குறைந்தளவு நேரமே இப்பொழுது உள்ளது. உங்களைச் சோதியுங்கள்: எந்தளவுக்கு நான் சந்தோஷமாக இருக்கின்றேன்? நான் எந்த ஒரு பாவச் செயல்களும் செய்யக்கூடாது. புயல்கள் நிச்சயமாக வரும். தந்தை விளங்கப்படுத்துகிறார்: குழந்தைகளே, அகநோக்கு உள்ளவர்களாகி உங்களுடைய அட்டவணையைப் பேணுங்கள், நீங்கள் செய்த தவறுக்காக உங்களால் வருந்தக் கூடியதாக இருக்கும். இது யோகசக்தியின் மூலம் உங்களை மன்னிப்பது போன்றதாகும். பாபா மன்னிப்பு போன்றவற்றை அளிப்பதில்லை. மன்னிப்பு என்ற வார்த்தை நாடகத்தில் இல்லை, நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்காக முயற்சி செய்யவேண்டும். மனிதர்கள் தாங்கள் செய்த பாவத்திற்கான பரிகாரத்தைத் தாங்களே தீர்க்கவேண்டும்; இதில் மன்னித்தல் என்ற கேள்வியில்லை. தந்தை கூறுகின்றார்: ஒவ்வொரு விடயத்திலும் முயற்சி செய்யுங்கள். தந்தை இங்கே அமர்ந்திருந்து ஆத்மாக்களாகிய உங்களுக்கு இதைச் செய்வதற்கான வழிமுறைகளைக் கொடுக்கின்றார். ‘வந்து தூய்மையற்ற எங்களைத் தூய்மை ஆக்குங்கள்!’ என இந்த இராவணனின் பழைய உலகிற்கு வருமாறு தந்தையை அழைத்தீர்கள். எவ்வாறாயினும் மனிதர்கள் எதையும் புரிந்து கொள்வதில்லை. அது அசுர சமுதாயம். நீங்கள் தேவ சமுதாயத்தினர் ஆகப்போகின்ற பிராமண சமுதாயத்தினர் ஆவீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் வரிசைக்கிரமமாக முயற்சி செய்கின்றீர்கள். உங்கள் பாக்கியத்தில் அந்தளவே உள்ளது எனக் கூறப்பட்டுள்ளது. உங்களுடைய நேரத்தை நீங்கள் வீணாக்குகின்றீர்கள். பிறவி பிறவியாக கல்பம் கல்பமாக உங்களால் உயர்ந்த அந்தஸ்தைக் கோரமுடியாது. நீங்கள் உங்களுக்கே இழப்பை ஏற்படுத்தக்கூடாது. ஏனெனில் இப்பொழுது சேமிப்பதற்கான நேரமாகும். பின்னர் நீங்கள் இழப்புக்கு உள்ளாகுவீர்கள். இராவண இராச்சியத்தில் பெருமளவு இழப்பு உள்ளது. அச்சா.இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய் தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத்தந்தை ஆன்மீகக்குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. அகநோக்கு உடையவராகி உங்களைச் சோதியுங்கள். நீங்கள் செய்த தவறுக்காக உங்கள் இதயத்தில் ஆழமாக வருந்தி யோக சக்தியின் மூலம் உங்களை மன்னியுங்கள். உங்களுக்காக முயற்சி செய்யுங்கள்.2. தந்தையின் ஆலோசனைகளை முழுமையாகப் பின்பற்றி உங்கள்மீது கருணை கொள்ளுங்கள். உங்களுடைய சொந்த முயற்சியையும் மற்றவர்களின் முயற்சிகளையும் ஒரு பற்றற்ற பார்வையாளராகப் பாருங்கள். ஒருபோதும் உங்களுக்கு இழப்பை ஏற்படுத்தாதீர்கள்.
ஆசீர்வாதம்:
உலகிற்கு நன்மை ஏற்படுத்தும் உணர்வுகளைக் கொண்டிருப்பதன் மூலம் நீங்கள் உண்மையான கருணை நிறைந்தவராகி ஒவ்வோர் ஆத்மாவிற்கும் பாதுகாப்பிற்கான திட்டங்களைச் செய்வீர்களாக.தற்சமயம் ஆத்மாக்கள் பலர் தமக்கே தீங்கு விளைவிப்பதற்குக் கருவிகள் ஆகுகிறார்கள். அவர்களை இட்டுக் கருணை நிறைந்தவர்களாகி சில திட்டங்களைச் செய்யுங்கள். சில ஆத்மாக்களின் பாகத்தைப் பார்க்கும்போது குழப்பம் அடையாதீர்கள். ஆனால் அவர்களின் பாதுகாப்பிற்கான வழிமுறையைப் பற்றிச் சிந்தியுங்கள். ‘இது எல்லா வேளையும் நடக்கிறது அல்லது மரம் அசைக்கப்பட வேண்டும்’ என நினைக்காதீர்கள். இல்லை. வந்திருக்கும் தடைகளை முடித்துவிடுங்கள். உலக உபகாரி மற்றும் தடைகளை அழிப்பவர் என்ற உங்களின் பட்டங்களுக்கு ஏற்ப உங்களின் எண்ணங்கள் வார்த்தைகள் செயல்களில் கருணைநிறைந்தவராகி சூழலை மாற்றுவதில் ஒத்துழையுங்கள்.
சுலோகம்:
தமது புத்திகளில் கவனம் செலுத்தும் பாதுகாப்பை வைத்திருப்பவர்களால் மட்டுமே கர்ம யோகிகள் ஆகமுடியும்.அவ்யக்த சமிக்கை: எண்ணங்களின் சக்தியைச் சேமித்து மேன்மையான சேவை செய்வதற்கான கருவி ஆகுங்கள்.
இறுதியில் உங்களின் இறுதிப் பரீட்சையில் ஒரு கேள்வி இருக்கும்: ஒரு விநாடியில் முற்றுப்புள்ளி இடுங்கள். இதன் அடிப்படையில் ஓர் இலக்கம் வழங்கப்படும். ஒரு விநாடியை விட அதற்கு நேரம் எடுக்குமாயின் நீங்கள் தோல்வி அடைந்து விடுவீர்கள். ஒரேயொரு தந்தையும் நீங்களும் மட்டுமே இருக்க வேண்டும். இடையில் இன்னொரு மூன்றாம் நபர் இருக்கக்கூடாது. ‘நான் இதைச் செய்ய வேண்டும். நான் இதைப் பார்க்க வேண்டும். இது ஏன் நடக்கிறது? என்ன நடந்தது?’ என்று இருக்கக்கூடாது. இத்தகைய எண்ணங்கள் இருக்கும்போது நீங்கள் இறுதிப் பரீட்சையில் சித்தி அடைய மாட்டீர்கள்.