24.07.26        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, இந்த மகாபாரத யுத்தத்தில் பழைய விருட்சம் அழிவடைய உள்ளது. ஆகவே, யுத்தம் இடம்பெறுவதற்கு முன்னர் தந்தையிடம் இருந்து உங்கள் முழு ஆஸ்தியையும் கோரிக் கொள்ளுங்கள்.

கேள்வி:
பாபாவிற்குத் தாய்மார்களின் ஒன்றுகூடல் தேவைப்படுகிறது. ஆனால் அந்தக்குழு கொண்டிருக்க வேண்டிய சிறப்பியல்பு என்ன?

பதில்:
ஆத்ம உணர்வில் இருப்பதற்கு முழுமையாக முயற்சி செய்கின்ற ஒன்றுகூடலாக இருத்தல் வேண்டும். தாங்களும் தூய்மையாகி, உலகையும் தூய்மையாக்க வேண்டும் என்ற உறுதியான நம்பிக்கை அவர்களுக்கு இருக்க வேண்டும். அவர்கள் தூய்மை அற்றவர்கள் ஆகக்கூடாது. அந்தக் குழு பற்றை வென்றவர்களாக இருக்கும்பொழுது மாத்திரமே, அவர்களால் அற்புதங்களைக் காட்ட முடியும். எவர் மீதும் பற்று இருக்கக்கூடாது. பற்றின் இழைகள் பெருமளவு இழப்பை ஏற்படுத்துகின்றன.

ஓம் சாந்தி.
இரட்டை
இனிய பாபா உங்களைச் சுவர்க்கவாசிகள் ஆக்குவதற்கே இங்கு வந்துள்ளார் என்பது இனிமையிலும் இனிமையான குழந்தைகளான உங்களுக்குத் தெரியும். இது குழந்தைகளாகிய உங்களது புத்திகளில் உள்ளது. ஆத்மாக்களாகிய நாங்கள் நினைவு யாத்திரையின் மூலம் தூய்மை ஆகுகின்றோம் என அனைவருக்கும் விளங்கப்படுத்துங்கள். தந்தையை நினைவுசெய்வது அத்தகையதோர் இலகுவான வழிமுறை! தந்தை முக்தியையும், ஜீவன்முக்தியையும் ஒரு விநாடியில் உங்களுக்குக் கொடுக்கிறார் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். அனைவரும் இப்பொழுது பந்தன வாழ்க்கையிலேயே உள்ளனர். அவர்கள் இராவண இராச்சியத்தின் பந்தனத்தில் உள்ளனர். இது வேறெவருக்கும் அன்றி, தந்தைக்கும், குழந்தைகளாகிய உங்களுக்கும் மாத்திரமே தெரியும். நீங்கள் உங்கள் எல்லையற்ற தந்தையை நினைவு செய்கின்றீர்கள் என்ற நம்பிக்கை குழந்தைகளாகிய உங்களுக்கு இருக்கிறது. ஆகவே அரைக் கல்பமாக நினைவுசெய்து வந்த தந்தையை நீங்கள் இப்பொழுது கண்டு கொண்டுள்ளீர்கள் என்ற பெருமளவு சந்தோஷத்தை உள்ளார, ஆத்மாக்களாகிய நீங்கள் கொண்டிருக்க வேண்டும். அவர்கள் துன்பத்தை அனுபவம் செய்யும் பொழுது, தொடர்ந்தும் தந்தையை நினைவு செய்கின்றனர். நீங்களும் அவ்வாறே தந்தையை நினைவு செய்தீர்கள், ஆனால் இப்பொழுது நீங்கள் துன்பத்தினால்; தந்தையை நினைவு செய்வதில்லை. முழு உலகும் நினைவு செய்கின்ற, தந்தை இப்பொழுது வந்து விட்டார் என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் இங்கிருக்கும் பொழுது உங்களை ஆத்மாக்களாகக் கருதுவதுடன், பாபா பரந்தாமத்தில் இருந்து வந்துள்ளார் என்பதையும் புரிந்து கொள்ளுமாறு பாபா மீண்டும் மீண்டும் உங்களுக்கு விளங்கப்படுத்தி உள்ளார். அவர் தான் செய்துள்ள சத்தியத்திற்கேற்ப, ஒவ்வொரு சக்கரத்திலும் வருகின்றார். நீங்கள் அவரை அழைக்கும் பொழுதும், அரைச் சக்கரம் முடிவடையும் பொழுதும், தான் வரவேண்டும் என பாபா சத்தியம் செய்துள்ளார். கலியுகத்தின் பின்னர் சத்தியயுகம் இருக்க வேண்டும், ஆகவே நான் வரவேண்டும். இப்பொழுது இது சங்கமயுகம் என்பதும், பாபா வந்துவிட்டார் என்பதும் குழந்தைகளாகிய உங்களுக்கு மாத்திரமே தெரியும். குழந்தைகளாகிய நீங்களும் சேவை செய்கிறீர்கள்; நாளுக்கு நாள், நீங்கள் தொடர்ந்தும் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்கிறீர்கள். அனைவரும் தந்தையின் அறிமுகத்தைத் தொடர்ந்தும் பெறுகின்றனர். எல்லையற்ற பாபாவாகிய, சிவபாபா உங்களுக்கு உங்களது எல்லையற்ற ஆஸ்தியைக் கொடுப்பதற்காக மீண்டும் ஒருமுறை வந்து விட்டார் என்று இங்கே அமர்ந்திருக்கின்ற, ஆத்மாக்களான நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். நீங்கள் “பாபா பாபா!” என்று கூறுகிறீர்கள். நாங்கள் சிவபாபாவிடம் வந்துள்ளோம். சிவபாபாவும் கூறுகிறார்: முன்னைய சக்கரத்தில் இடம்பெற்றது போலவே, மிகச்சரியாக, ஒரு சாதாரண சரீரத்தில் நான் பிரவேசித்துள்ளேன். நீங்கள் இதை மறந்து விடக்கூடாது. உங்களைத் தூய்மை அற்றவர்களில் இருந்து தூய்மையாக்குகின்ற பாபாவை மாயை மறந்துவிடச் செய்கிறாள். ஒரேயொரு சற்குருவே அனைவருக்கும் சற்கதியை அருள்பவர் என்பது உங்களுக்குத் தெரியும். சீக்கியர்கள் கூறுகின்றனர்: சத்ஸ்ரீஅகால் (சத்தியமானவரும், மேன்மையானவரும், அநாதியானவரும்). தூய்மையாக்குபவர் மாத்திரமே சற்குரு என்று அழைக்கப்படுகிறார். மக்கள் அழைக்கின்றனர்: ஓ தூய்மையாக்குபவரே! ஆத்மாக்களே அழைக்கின்றனர். தந்தையை நேரடியாகச் சந்திப்பதற்கே நீங்கள் வந்துள்ளீர்கள் என்பது உங்களுக்கு இப்பொழுது தெரியும். முக்கியஸ்தர்கள் ஒருவரையொருவர் சந்திக்கும் பொழுது, அங்கு அவர்களது புகழ் அதிகளவில் காணப்படுகின்றது! அவர்கள் ஒருவரையொருவர் பெருமளவு ஆடம்பரத்துடனும், சந்தோஷத்துடனும் வாத்திய இசையுடன் வரவேற்கிறார்கள். மறைமுகமான ரூபத்தில் யார் இங்கு வந்துள்ளார்? உங்களுக்கு மாத்திரமே இது தெரியும். அவர் தொலைதூர தாமவாசியான பயணி என அழைக்கப்படுகின்றார். நீங்கள் பரந்தாமவாசிகள் என்பது ஆத்மாக்களாகிய உங்களுக்குத் தெரியும். நீங்கள் உங்களுடைய பாகங்களை நடிப்பதற்கு, பயணிகளாக இங்கே வந்துள்ளீர்கள். தந்தை விளங்கப்படுத்துகின்ற வார்த்தைகள் எதனையும் உலகிலுள்ள எவரும் அறிய மாட்டார்கள். நீங்கள் தந்தை கூறுவதைச் செவிமடுக்கிறீர்கள், அவர் கூறுபவற்றை நீங்கள் மிக நன்றாகக் கிரகிக்க வேண்டும். தந்தை விளங்கப்படுத்துகிறார்: இந்தக் கர்ம ஷேத்திரத்தில் நீங்கள் அனைவரும் பயணிகள். நாங்கள் மௌன தாம வாசிகள். பின்னர் நாங்கள் இங்கு “பேசும்” உலகிற்கு வருகிறோம். நாங்கள் எங்களுடைய 84 பிறவிப் பாகங்களை இங்கே நடிக்கின்ற, மௌன தாமத்திலிருந்து வந்துள்ள பயணிகள். இறுதியாக, இவையே இறுதிக் கணங்கள். தந்தை பழைய உலகைப் புதியதாக ஆக்குவதற்கு வந்துள்ளார். உங்களுக்கு மாத்திரமே இது தெரியும். படங்களும் மிகவும் தெளிவாக உள்ளன் பிரம்மா மூலம் சிவபாபா புதிய உலகை ஸ்தாபிக்கின்றார். அவர் ஸ்ரீகிருஷ்ணர் மூலமாகவோ அல்லது விஷ்ணு மூலமாகவோ இந்த ஸ்தாபனையை மேற்கொள்கின்றார் என்றல்ல. பிரம்மா மூலம் சுவர்க்கத்தை உருவாக்குவதற்குத் தந்தை வருகின்றார். தந்தை ஒரு சாதாரண சரீரத்தில் பிரவேசித்துள்ளார். இது தூய்மையற்ற உலகம்; இவ்வுலகில் தூய்மையானவர் ஒருவரேனும் இல்லை. முதல் இலக்க இலக்ஷ்மியும், நாராயணனும் கூட தூய்மை அற்றவர்களாகி விட்டார்கள்; தூய்மையாக இருந்தவர்கள் தூய்மை அற்றவர்கள் ஆகியுள்ளார்கள். இது முழு வம்சத்தையும் உள்ளடக்குகின்றது. தேவ தர்மத்திற்கு உரியவர்களாகிய நீங்கள், சூத்திர சமயத்திற்கு உரியவர்கள் ஆகினீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். பல செல்வந்தர்கள் அமெரிக்காவில் வாழ்ந்த பொழுதிலும், சத்தியயுகத்துடன் ஒப்பிடும்பொழுது, அமெரிக்கா ஒன்றுமே இல்லை. அவை அனைத்தும் பின்னரே உருவாக்கப்பட்டது; அது தற்காலிகமான பகட்டாகும். விநாசம் இடம்பெற வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் நல்ல போதையைக் கொண்டிருக்க வேண்டும். உங்களைச் சுவர்க்க அதிபதிகள் ஆக்குகின்ற தந்தையைக் குழந்தைகளாகிய நீங்கள் நினைவு செய்யாதிருப்பது அத்தகையதோர் அற்புதமாகும். அவரை நினைவு செய்வதற்கு மாயை உங்களை அனுமதிப்பதில்லை. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது கூறுகிறீர்கள்: பாபா, உங்களை நினைவு செய்வதற்கு மாயை எங்களை அனுமதிப்பதில்லை. ஓ! உங்களை 21 பிறவிகளுக்குச் சுவர்க்க அதிபதிகள் ஆக்குகின்ற பாபாவை உங்களால் நினைவு செய்ய முடியவில்லையா? பிரஜைகளும் சுவர்க்க அதிபதிகள் ஆகுகின்றனர். அனைவரும் சந்தோஷமாக இருக்கின்றார்கள். இப்பொழுது அனைவரும் சந்தோஷமற்று இருக்கின்றனர். பிரதமமந்திரி, ஜனாதிபதி போன்றோரும் இரவுபகலாகக் கவலைப்படுகின்றனர். பலர் யுத்தம் போன்றவற்றில் மரணிக்கின்றனர். மகாபாரத யுத்தம் மிகப் பிரபல்யமானது என்பது உங்களுக்குத் தெரியும். எவ்வாறாயினும், அந்த யுத்தத்தில் என்ன இடம்பெற்றது என்பது எவரது புத்தியிலும் இல்லை. அனைவரும் மகாபாரத யுத்தத்தில் மரணித்தனர் என்பதைத் தந்தை உங்கள் புத்தியில் பதியச் செய்துள்ளார். இந்த மனித உலகச் சனத்தொகை மிகப் பெரியது! ஆத்மாக்களின் விருட்சமும் உள்ளது. முதலில் ஒரு மரம் புதிதாக இருக்கும் பொழுது, அது மிகவும் சிறியதாக இருக்கின்றது; பின்னர் அது தொடர்ந்தும் வளர்கிறது. முதலில் தேவ தர்மம் இருந்தபொழுது, விருட்சம் மிகவும் சிறியதாக இருந்தது என்பது உங்களுக்குத் தெரியும். ஆதி சனாதன தேவிதேவதா தர்மம் இருந்தது. இப்பொழுது பலவகையான சமயங்கள் உள்ளன. அவை அனைத்தும் மகாபாரத யுத்தத்தில் அழிக்கப்பட உள்ளன. எவ்வாறாயினும், எவரிடமும் இந்த ஞானம் இல்லை. இது அதே யுத்தம் எனக் கூறப்பட்ட பொழுதிலும், அதன் மூலம் என்ன நடைபெறப் போகின்றது என்பது எவருக்கும் தெரியாது. நீங்கள் இப்பொழுது ஞானோதயம் பெற்றுள்ளீர்கள். விநாசம் இடம்பெற வேண்டும் என்றும், இதனாலேயே நீங்கள் உங்கள் ஆஸ்தியை மகாபாரத யுத்தம் இடம்பெறுவதற்கு முன்னர் கோரிக் கோள்ள வேண்டும் என்றும் அறிவீர்கள். இது மிகவும் இலகுவான விடயம். தூய்மையாகி, தந்தையை நினைவு செய்யுங்கள்! பல குழந்தைகள் துன்புறுத்தப்பட்டுள்ளார்கள். ஒருவரையொருவர் பாதுகாப்பதற்கு, தாய்மார்களாகிய உங்களது குழு ஒன்றிருக்க வேண்டும். எவ்வாறாயினும், நீங்கள் நிச்சயமாக ஆத்ம உணர்வு உடையவர்களாக வேண்டும். நாங்கள் நிச்சயமாகத் தூய்மையாக வேண்டும்; மிகவும் உறுதியான இந்தப் போதை இருக்க வேண்டும். இந்தப் போதையில் இருப்பவர்களால் மாத்திரமே விளங்கப்படுத்த முடியும்: நாங்கள் தந்தையை நினைவுசெய்து, தூய்மையாக வேண்டும். நாங்கள் சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுபவர்கள் என்ற போதையும் இருக்க வேண்டும். படைப்பவராகிய தந்தையையும், படைப்புச் சக்கரத்தையும் நாங்கள் அறிந்துள்ளோம். இப்பொழுது நாங்கள் சத்தியயுகத்துப் புதிய உலகம் எனும் எங்கள் ஆஸ்தியைத் தந்தையிடம் இருந்து கோர வேண்டும். எவ்வாறு நீங்கள் 84 பிறவிகளை எடுக்கின்றீர்கள் என்பதைத் தொடர்ந்தும் விளங்கப்படுத்துங்கள். தந்தை கூறுகிறார்: என்னை நினைவு செய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும்! நீங்கள் நிச்சயமாகத் தூய்மையாக வேண்டும். தூய்மை என்றால் தூய்மையே! காமமே கொடிய எதிரி. நாங்கள் இப்பொழுது 84 பிறவிச் சக்கரத்தைப் பூர்த்தி செய்துள்ளோம். நாங்கள் இப்பொழுது தந்தையிடம் இருந்து எங்கள் ஆஸ்தியைக் கோரிக் கொள்ள வேண்டும். தந்தை கூறுகிறார்: என்னை நினைவு செய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நீங்கள் புத்துணர்ச்சி அடைவதற்கு இங்கே வருகிறீர்கள். உங்கள் தந்தையாகிய, என்னை நினைவுசெய்து, 21 பிறவிகளுக்கான உங்களது ஆஸ்தியைக் கோரிக் கொள்ளுங்கள். எவர் மீதும் எவ்விதமான பற்றின் இழைகளும் இருக்கக்கூடாது. பற்றை அழிப்பவர்கள் ஆகுங்கள்! உங்கள் சரீரங்கள் மீதான எந்தப் பற்றும் இருக்கக்கூடாது. அது பழைய தோல்கள், ஆனால் உங்களால் கற்க முடியும் வகையில், அதனை நீங்கள் பராமரிக்க வேண்டும். சிரமங்கள் (சரீரத்தில்) ஏற்படும் பொழுது, அது சீராக்கப்பட வேண்டும். அவை பழைய, உக்கிய சரீரங்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அவற்றிற்கு ஏதோவொன்று தொடர்ந்தும் இடம்பெறுகிறது. ஆத்மாவே வலியை உணர்கிறார். நீங்கள் உங்கள் சரீரங்களை நீக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் இப்பொழுது யோக சக்தி மூலம் அவற்றிற்கு ஆதாரமளிக்க வேண்டும். தொடர்ந்தும் தந்தையை நினைவு செய்யுங்கள். உங்களை ஆத்மாக்களாகக் கருதி, தந்தையை நினைவு செய்யுங்கள், அவ்வளவுதான்! உங்கள் லௌகீக உறவினர்கள் எவரையும் நினைவு செய்யக்கூடாது. நான் ஒரு சரீரமல்ல, ஆனால் ஓர் ஆத்மா. தந்தை கூறுகிறார்: ஆத்மாக்களான உங்களுக்கு ஆஸ்தியைக் கொடுப்பதற்கே நான் வந்துள்ளேன். ஆத்மாக்கள் தூய்மையாக உள்ளபொழுது, சிறந்த சரீரங்களைப் பெறுகிறார்கள். நீங்கள் இப்பொழுது தூய்மையாக வேண்டும் என்பது ஆத்மாக்களாகிய உங்களுக்குத் தெரியும். நீங்கள் தூய்மையாக இருந்தபொழுது, இலக்ஷ்மி நாராயணனைப் போல் இருந்தீர்கள். இலக்ஷ்மியும் நாராயணனும் 84 பிறவிகளை எடுத்துள்ளனர். சூரிய வம்சம் முழுவதுமே 84 பிறவிகளை எடுக்கின்றது. சந்திர வம்சத்தைச் சேர்ந்தவர்கள் 84 பிறவிகளை எடுப்பார்கள் என்று உங்களால் கூற முடியாது. ஆம், ஆரம்பத்தில் சூரிய வம்சத்தில் பணிப்பெண்களாகவும், வேலையாட்களாகவும் ஆகுபவர்கள் சந்திர வம்சத்தில் ஏதோவோர் அந்தஸ்தைப் பெற்றுக் கொள்வார்கள். அவர்கள் 84 பிறவிகளை எடுக்கின்றார்கள் என்று நீங்கள் கூறுவீர்கள். சூரிய வம்சத்தில் அரசர்கள், அரசிகள், பிரஜைகள், பணிப்பெண்கள், வேலையாட்கள் அனைவரும் 84 பிறவிகளை எடுக்கின்றார்கள். எவ்வாறு நீங்கள் 84 பிறவிகளை எடுக்கிறீர்கள் என இவ்விதமாக உங்களுடன் பேசுங்கள். நீங்கள் இந்த ஞானக்கடலைக் கடைய வேண்டும். உங்களால் முடிந்தளவிற்குத் தந்தையையும், உங்கள் ஆஸ்தியையும் தொடர்ந்தும் நினைவு செய்யுங்கள். நடந்தும், உலாவியும் திரியும் பொழுதும், உங்களை பாபாவின் குழந்தைகளாகக் கருதுங்கள். நீங்கள் சந்திக்கின்ற எவருக்கும் தந்தையின் அறிமுகத்தைக் கொடுங்கள். இந்த ஞானம் அனைத்தும் இந்தப் படங்களில் உள்ளன. அனைத்தையும் விளங்கப்படுத்துங்கள்: பிரம்மாவின் சரீரத்தில் பாபா வந்து விட்டார். நாங்கள் அனைவரும் பிரம்மாகுமாரர்களும், குமாரிகளும் ஆவோம். பாபா பிரம்மா குமாரிகளான எங்களைச் சுவர்க்க அதிபதிகள் ஆக்குவதற்கே வந்துள்ளார். ஒரேயொருவரே ஆத்மாக்கள் அனைவரினதும் தந்தை ஆவார். நாங்கள் பிரம்மாகுமாரர்களும், குமாரிகளும் ஆவோம். நீங்கள் உங்களது சொந்த அட்டைகளைக் (பிரம்மாகுமாரிகளின் அட்டைகள்) காண்பிக்கலாம். நீங்கள் அலுவலகத்திலுள்ள ஒருவருக்கு உங்கள் வியாபார அட்டையைக் கொடுக்கும்பொழுது, பிரம்மாகுமாரிகள் யார் என அவரால் புரிந்து கொள்ள முடியாதிருக்கும். பல வகையான தடைகள் உள்ளன. இது எங்களின் குடும்பம் என்பது அரசாங்கத்திற்கும் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. தாதாவும், பாபாவும் உள்ளனர். தாதாவின் மூலம் நாங்கள் எங்கள் ஆஸ்தியைத் பெற்றுக் கொள்கிறோம். இதை நினைவு செய்வதனால், அதிகளவு சந்தோஷம் இருக்க வேண்டும். சொத்து பாட்டனாருக்கு உரியது, ஆகவே பேரக் குழந்தைகள் அதன் மீது உரிமையைக் கொண்டுள்ளனர்; அவர்கள் அனைத்தையும் தங்கள் மத்தியில் பகிர்ந்து கொள்கின்றனர். நீங்கள் உங்கள் ஆஸ்தியைப் பிரம்மா மூலம் சிவபாபாவிடம் இருந்து பெற்றுக் கொள்கிறீர்கள் என்பதை நீங்களும் புரிந்து கொள்கிறீர்கள். நீங்கள் இதை நினைவிற் கொள்ள வேண்டும். நீங்கள் கற்று, பின்னர் பிறருக்கும் கற்பிக்க வேண்டும். குழந்தைகளைப் பராமரிப்பது தந்தையின் கடமையாகும். குமாரர்களும், குமாரிகளும் இன்னமும் தங்களது இளமைப் பருவத்தில் இருக்கும்பொழுது, பெற்றோர் அவர்களைப் பராமரிக்க வேண்டும். கற்க வேண்டியது குழந்தைகளின் கடமையாகும். உங்கள் சொந்தக் கால்களில் நிற்பதற்காகவே நீங்கள் கற்கிறீர்கள். பாபா எங்களுக்கு 21 பிறவிகளுக்காகக் கற்பிக்கின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள்; பின்னர் எங்களால் எங்களுடைய சொந்தக் கால்களில் நிற்க முடியும். எவ்வளவிற்கு அதிகமாக நாங்கள் கற்கின்றோமோ, அந்தளவிற்கு உயர்வான அந்தஸ்தை நாங்கள் கோருகிறோம். ஸ்ரீ இலக்ஷ்மியும், ஸ்ரீ நாராயணனும் ஆகுவதற்காகவே நீங்கள் இங்கு வருகின்றீர்கள் என நீங்களே கூறுகிறீர்கள். இதுவே சத்திய நாராயணனின் கதை ஆகும். இலக்ஷ்மியும், நாராயணனும் எவ்வாறு 84 பிறவிகளை எடுக்கின்றனர் என்பது எவருக்கும் தெரியாது. இராதையின் பக்தர்கள் இராதை எங்கும் இருப்பதாகக் கூறுகின்றனர், ஸ்ரீகிருஷ்ணரின் பக்தர்கள் ஸ்ரீகிருஷ்ணர் எங்கும் இருப்பதாகக் கூறுகின்றனர், சிவனின் பக்தர்கள் சிவன் எங்குமிருப்பதாகக் கூறுகின்றனர். அவர்கள் அனைத்தையும் முற்றாகவே ஒன்றுகலந்து விட்டனர். கடவுள், இராதை, ஸ்ரீகிருஷ்ணர் போன்றோர் சர்வவியாபி எனவும், அவர்கள் அனைவரும் கடவுளின் வடிவங்கள் எனவும், கடவுள் அந்த வடிவங்களை எடுக்கின்றார் எனவும் அவர்கள் கூறுகின்றனர். அவர்கள் கூறுகின்றனர்: “நான் எங்கே பார்த்தாலும், உங்களை மாத்திரமே பார்க்கிறேன்”. அவர்கள் முற்றிலும் விவேகம் அற்றவர்கள் ஆகியுள்ளனர்! இது ஒரு விகாரமான, தூய்மையற்ற உலகாகும். சத்தியயுகமே விகாரமற்ற, தூய உலகாகும். “விகாரமற்ற உலகம்” என்றால் சுவர்க்கம் ஆகும். மக்கள் கூறுகின்றனர்: அங்கும் குழந்தைகள் உள்ளனர், ஆகவே எவ்வாறு அவர்கள் பிறக்கின்றார்கள்? அவர்கள் இந்தக் கேள்வியை மாத்திரமே கேட்கின்றனர். அவர்கள் வினவுகின்றனர்: குழந்தைகள் பிறக்காது விட்டால் உலகம் எவ்வாறு தொடர முடியும்? சனத்தொகை எவ்வளவினால் அதிகரித்துள்ளது எனப் பார்ப்பதற்கு ஒவ்வொரு வருடமும் அவர்கள் சனத்தொகை மதிப்பீட்டை மேற்கொள்கின்றனர். எத்தனை பேர் மரணித்துள்ளனர் என்பதை அவர்கள் காட்ட மாட்டார்கள். ஆகவே குழந்தைகளாகிய நீங்கள் முதலில் உங்களுக்கு நன்மையளிக்க வேண்டும். நான் ஓர் ஆத்மா! அனைத்திற்கும் முதலில் இந்த நம்பிக்கையைக் கொண்டிருங்கள். பாபாவை நினைவு செய்யுங்கள்! “உங்கள் இறுதிக் கணங்களில் நாராயணனை நினைவுசெய்தால்…….” எனக் கூறப்பட்டுள்ளது. “உங்கள் இறுதிக் கணங்களில் நாராயணனை நினைவு செய்தால்” எனக் கூறப்படுவது தவறாகும். அது இவ்வாறிருக்க வேண்டும்: “சிவபாபாவைத் தங்கள் இறுதிக் கணங்களில் நினைவு செய்பவர்கள்”. இந்தக் கரிசனையுடன் மரணிப்பவர்கள் சுவர்க்கத்தில் நாராயணன் போல் ஆகுவார்கள். தங்கள் இறுதிக் கணங்களில் நாராயணனை நினைவு செய்வதைப் பற்றி அவர்கள் ஏன் பேசுகிறார்கள்? ஸ்ரீகிருஷ்ணரே ஞானத்தைக் கொடுத்ததாக அவர்கள் எண்ணுகின்றனர். ஆகவே தங்கள் இறுதிக் கணங்களில் அவர்கள் ஸ்ரீகிருஷ்ணரையே நினைவுசெய்ய வேண்டும். அவர்கள் ஸ்ரீகிருஷ்ணரை நினைவு செய்கின்றனர், ஆனால் நாராயணனைப் பற்றி எவருக்கும் தெரியாது. அவர்கள் ஸ்ரீகிருஷ்ணரின் பிறந்தநாளைக் கொண்டாடுகின்றனர், ஆனால் இராதையின் பிறந்தநாளிற்கு என்னவாயிற்று? அவர்கள் ஸ்ரீகிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடுகின்றனர், ஆனால் நாராயணனின் பிறப்பிற்கு என்னவாயிற்று? உலக அரசரும், அரசியுமான நாராயணனையும், இலக்ஷ்மியையும் பற்றி எவருக்கும் தெரியாது. அவர்கள் பிரஜாபிதா பிரம்மாவின் வாய்வழித் தோன்றல்களாக இருந்திருப்பார்கள். அவர்கள் எங்கு சென்றனர்? அவர்கள் கூறுகின்றனர்: தேவர்களாக உள்ள பிராமணர்களுக்கு வந்தனங்கள். அவர்கள் பிரம்மாவின் வாய்வழித் தோன்றல்களாக இருந்தார்கள். பிரம்மாவின் மூலம் சிவபாபா பிராமண தர்மத்தை ஸ்தாபிக்கிறார் என்பதைக் குழந்தைகளான நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். பிராமண தர்மத்தை பிரம்மா ஸ்தாபிக்கவில்லை, ஆனால் சிவபாபாவே அதனை ஸ்தாபிக்கிறார். இவர் இப்பொழுது மாத்திரமே பிரம்மாவாக ஆகியுள்ளார். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. அந்தப் பழைய சரீரத்தில் இருக்கும் பொழுதே, கற்று, 21 பிறவிகளுக்கான வருமானத்தைச் சம்பாதியுங்கள். அதனைப் பராமரியுங்கள், ஆனால் அதனையிட்டுப் பற்றின் இழைகள் எதுவும் இல்லாதிருக்கட்டும்.

2. இறுதியில் நீங்கள் சிவபாபாவை மாத்திரமே நினைவு செய்வதற்கான பயிற்சியைச் செய்யுங்கள். வேறு எதனையும் பற்றிச் சிந்திப்பதில் சிக்கிக் கொள்ளாதீர்கள். உங்களுக்கு நன்மையை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் மாஸ்ரர் ஞானம் நிறைந்தவர் ஆகுவதன் மூலம் அறியாமையை இல்லாமல் செய்து, இந்த ஞானத்தின் யோகியுக்த் சொரூபம் ஆகுவீர்களாக.

மாஸ்ரர் ஞானம் நிறைந்தவர்கள் எந்த வகையான அறியாமையையும் கொண்டிருக்க மாட்டார்கள். தமக்கு இதைப் பற்றித் தெரியாது என்று அவர்களால் சொல்ல முடியாது. தமக்கு இதைப் பற்றித் தெரியாது எனக் கூறுவதன் மூலம் தங்களை நிரூபிக்க முயற்சி செய்ய முடியாது. இந்த ஞானத்தின் சொரூபங்களாக இருக்கும் குழந்தைகள், எதைப் பற்றியும் அறியாதவர்கள் கிடையாது. யோகியுக்தாக இருப்பவர்கள், அனைத்தையும் முன்கூட்டியே அறிந்திருப்பதாகவே அனுபவம் செய்வார்கள். மாயையின் பிரகாசமும் பகட்டும் எதிலும் குறைந்ததல்ல என்பதை அவர்கள் அறிவார்கள். மாயை மிகவும் பகட்டு மிக்கவள். இதனாலேயே, நீங்கள் உங்களை அவளிடம் இருந்து பாதுகாக்க வேண்டும். ஒவ்வொரு வழிமுறையிலும் மாயையின் ஞானத்தைப் புரிந்து கொண்டவர்களுக்கு தோல்வி அடைவது என்பது சாத்தியம் இல்லை.

சுலோகம்:
சந்தோஷமான இதயத்தைக் கொண்டவர்களால் எந்தக் கேள்விகளையும் கொண்டிருக்க முடியாது.

அவ்யக்த சமிக்கை: எரிமலை ஸ்திதியில் இருந்தவண்ணம், சக்திவாய்ந்த நினைவை அனுபவம் செய்யுங்கள்.

உங்கள் யோகத்தில் சதா வெளிச்சவீடு - சக்திபீடத்தின் ஸ்திதியைக் கொண்டிருங்கள். இந்த ஞானம் ஒளியும், யோகம் சக்தியும் ஆகும். இந்த ஞானம் மற்றும் யோகம் ஆகிய இரு சக்திகளும் ஒளியாலும் சக்தியாலும் நிரம்பியிருக்க வேண்டும். அப்பொழுது உங்களை மாஸ்டர் சர்வசக்திவான் என்று அழைக்க முடியும். அத்தகைய சக்திமிக்க ஆத்மாவால் எத்தகையதொரு சூழ்நிலையையும் ஒரு விநாடியில் கடந்துவிட முடியும். அதற்கு அதிகநேரம் எடுக்க மாட்டாது.