24.08.25 Avyakt Bapdada Tamil Lanka Murli 30.11.2006 Om Shanti Madhuban
தீவிர, எரிமலை தபஸ்யாவின் மூலம் ‘நான்’ என்ற உணர்வின் வாலை எரித்து, பாப்தாதாவிற்குச் சமமானவர் ஆகுங்கள். அப்போது மட்டுமே சம்பூரணம் நெருங்கி வரும்.
இன்று, முடிவற்ற, அழியாத பொக்கிஷங்களுக்கு அதிபதியான பாப்தாதா, எங்கும் உள்ள தனது முழுமையான குழந்தைகள் எல்லோருடைய சேமிப்புக் கணக்குகளைப் பார்க்கிறார். அவர் மூன்று வகையான கணக்குகளைப் பார்க்கிறார். 1. உங்களின் சொந்த முயற்சிகளின் ஊடாக நீங்கள் பெறும் மேன்மையான வெகுமதியின் சேமிப்புக் கணக்கு. 2. திருப்தியினூடாகப் பெறப்படும் ஆசீர்வாதங்களின் கணக்கு - சதா திருப்தியாக இருப்பதுடன் மற்றவர்களையும் திருப்திப்படுத்துதல். 3. உங்களின் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள், உறவுமுறைகள் மற்றும் தொடர்புகளால் நீங்கள் செய்யும் எல்லையற்ற, சுயநலமற்ற புண்ணியக் கணக்கு. நீங்கள் எல்லோரும்கூட உங்களின் இந்த மூன்று கணக்குகளையும் சோதிப்பீர்கள். இந்த மூன்று கணக்குகளிலும் நீங்கள் எந்தளவைச் சேமித்துள்ளீர்கள்? நீங்கள் எதையாவது சேமித்துள்ளீர்களோ இல்லையோ என்பதன் அடையாளம்: எல்லோருடனும் அத்துடன் உங்களுடனும் திருப்தி சொரூபமாக இருத்தல், எல்லோருக்கும் எப்போதும் நல்லாசிகளையும் தூய உணர்வுகளையும் கொண்டிருத்தல், எப்போதும் மலர்ச்சி நிறைந்த ஸ்திதியை அனுபவம் செய்தல், சந்தோஷப் பாக்கியத்தைக் கொண்டிருத்தல். எனவே, சோதித்துப் பாருங்கள்: நீங்கள் இந்த இரண்டு கணக்குகளின் அடையாளங்களையும் அனுபவம் செய்துள்ளீர்களா? இந்தப் பொக்கிஷங்கள் எல்லாவற்றையும் சேமிப்பதற்கான சாவி, கருவியாகவும் பணிவாகவும் சுயநலம் அற்றவராகவும் இருப்பதாகும். தொடர்ந்து சோதித்துப் பாருங்கள். அத்துடன், உங்களுக்குச் சாவியின் இலக்கம் என்னவென்று தெரியுமா? சாவியின் இலக்கம் மூன்று புள்ளிகள் ஆகும். மூன்று புள்ளிகள். 1. ஆத்மாவின் புள்ளி. 2. தந்தையின் புள்ளி. 3. நாடகத்திற்கு முற்றுப்புள்ளி என்ற புள்ளி. உங்கள் எல்லோரிடமும் இந்தச் சாவி உள்ளதல்லவா? நீங்கள் உங்களின் பொக்கிஷங்களைத் திறந்து, தொடர்ந்தும் அவற்றைப் பார்க்கிறீர்கள்தானே? இந்தப் பொக்கிஷங்கள் எல்லாவற்றையும் அதிகரிப்பதற்கான வழிமுறை, திடசங்கற்பத்தைக் கொண்டிருப்பதாகும். உங்களிடம் திடசங்கற்பம் இருக்கும்போது, எந்தவொரு பணியிலும், அது நடக்குமா இல்லையா என நீங்கள் நினைக்க மாட்டீர்கள். திடசங்கற்பம் என்ற ஸ்திதியானது, அது ஏற்கனவே பூர்த்தியாகி விட்டது என்பதாகும். அது ஏற்கனவே அவ்வாறு ஆகிவிட்டது. ‘அது அப்படி ஆகுமா? அது சேமிக்கப்படுமா இல்லையா?’ என்றில்லை. இல்லை. ‘நான் இதைச் செய்கிறேன், ஆனால்..... இது நடக்க வேண்டும்.... இது இப்படி இருக்க வேண்டும் அல்லது இது இப்படி நடக்க வேண்டும்’ என்றேனும் இல்லை. திடசங்கற்பம் உடைய ஒருவர், தனது புத்தியில் நம்பிக்கை இருப்பதையும் கவலையற்றவராக இருப்பதையும் அனுபவம் செய்வதுடன், அதற்கு உத்தரவாதம் உள்ளது என்றும் கருதிக் கொள்வார்.
நீங்கள் சகல பொக்கிஷங்களின் அதிகபட்ச கணக்கைச் சேமிக்க விரும்பினால், ‘மன்மனாபவ’ என்ற மந்திரத்தை உங்களின் ஆயுதம் (யந்திரா) ஆக்கிக் கொள்ளுங்கள் என பாப்தாதா உங்களுக்கு முன்னரும் கூறியுள்ளார். இதன் மூலம் நீங்கள் சதா தந்தையின் சகவாசத்தையும் அவரின் நெருக்கத்தையும் தானாகவே அனுபவம் செய்வீர்கள். நீங்கள் சித்தி அடைய வேண்டும். ‘பாஸ்’ என்ற வார்த்தைக்கு மூன்று அர்த்தங்கள் உள்ளன. முதலாவது பாஸ், நெருக்கமாக, அண்மையில் இருத்தல். இரண்டாவது பாஸ், எது நடந்ததோ அது கடந்து சென்றுவிட்டது. மூன்றாவது பாஸ், திறமைச் சித்தி அடைதல். உங்களிடம் மூன்று வகையான பாஸ்களும் இருந்தால், நீங்கள் எல்லோரும் இராச்சிய உரிமையைக் கோருவதில் முழுமையாகச் சித்தி அடைவீர்கள். எனவே, நீங்கள் உங்களின் முழுமையான பாஸ்களையும் கோரிவிட்டீர்களா அல்லது அதை இனித்தான் கோரப் போகின்றீர்களா? தமது முழுமையான பாஸ்களையும் கோரியுள்ளவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! நீங்கள் அதைக் கோர வேண்டும் என்றல்ல, ஆனால் நீங்கள் ஏற்கனவே அதைக் கோரிவிட்டீர்களா? முதல் வரிசையில் அமர்ந்திருப்பவர்கள், தமது கைகளை உயர்த்தவில்லை. நீங்கள் இனிமேல்தான் அதைக் கோர வேண்டுமா? நீங்கள் இன்னமும் சம்பூரணம் ஆகவில்லை என நீங்கள் நினைப்பதனாலா? எவ்வாறாயினும், நீங்கள் புத்திகளில் நம்பிக்கை உள்ள வெற்றியாளர்களா? அல்லது, நீங்கள் அப்படி ஆக வேண்டுமா? இப்போது, உங்களால் காலத்தின் அழைப்பை, பக்தர்களின் அழைப்பைக் கேட்க முடியும். உங்களின் மனங்களின் என்ன ஒலி உங்களிடம் வருகின்றது? ‘நான் நிச்சயமாக இப்போதே சம்பூரணமாகவும் சமமாகவும் ஆகவேண்டும்’. அல்லது, நீங்கள் அப்படி ஆகுவீர்கள், நீங்கள் அதைப் பற்றிச் சிந்திப்பீர்கள், நீங்கள் அதைச் செய்வீர்கள் என நினைக்கிறீர்களா? இப்போது, காலத்திற்கேற்ப, நீங்கள் ஒவ்வொரு கணமும் என்றும் தயாராக இருக்கும் பாடத்தை உறுதியாக்கிக் கொள்ள வேண்டும். ‘எனது பாபா’ என நீங்கள் கூறியிருப்பதனால், ‘அன்பான பாபா, இனிய பாபா’ என்பதை நீங்கள் ஏற்றுக் கொண்டுள்ளீர்கள். அப்போது நீங்கள் அன்பு வைத்திருக்கும் ஒருவருக்குச் சமமானவர் ஆகுவது கஷ்டமானதல்ல.
அவ்வப்போது, நீங்கள் சமமானவர் ஆகுவதில் உங்களுக்குத் தடையாக ஆகுவது ‘நான்’ என்பதே, ‘நான்’ என்ற உணர்வே என்பதை பாப்தாதா பார்த்துள்ளார். இது மிகப் பிரபல்யமான ஒரு வார்த்தை, உங்கள் எல்லோருக்கும் இது தெரியும். நீங்கள் எல்லோரும் இதை அறிந்திருப்பதுடன் அனுபவமும் செய்துள்ளீர்கள். இதனாலேயே, பாப்தாதா உங்களுக்கு முன்னரும் கூறியுள்ளார்: ‘நான்’ என்ற வார்த்தையை நீங்கள் சொல்லும் போதெல்லாம், ‘நான்’ என்று மட்டும் சொல்லாதீர்கள். ஆனால் ‘ஆத்மாவான நான்’ எனச் சொல்லுங்கள். இந்த வார்த்தைகளை ஒன்றாகக் கூறுங்கள். ‘நான்’ என்பது சிலவேளைகளில் அகங்காரத்தை ஏற்படுத்தக்கூடும்: ‘நான்’ என்ற சரீர உணர்வு. ஆத்மாவாகிய ‘நான்’ என்பதல்ல. அது சில வேளைகளில் அகங்காரத்தை ஏற்படுத்தும். சிலவேளைகளில் அவமதிக்கப்பட்ட உணர்வை ஏற்படுத்தும். சிலவேளைகளில் அது உங்களை முற்றிலும் மனச் சோர்வு அடையச் செய்யும். ஆகவே, ‘நான்’ என்ற சரீர உணர்வை உங்களின் கனவுகளிலேனும் பிரவேசிக்க அனுமதிக்காதீர்கள்.
உங்களில் பெரும்பாலானோர் அன்பெனும் பாடத்தில் சித்தி அடைந்திருப்பதை பாப்தாதா பார்க்கிறார். உங்கள் எல்லோரையும் இங்கே அழைத்து வந்தது என்ன? நீங்கள் எல்லோரும் இங்கே விமானத்திலோ, புகைவண்டியிலோ அல்லது பேரூந்திலோ வந்திருந்தாலென்ன, உண்மையில் நீங்கள் இங்கே பாப்தாதாவின் அன்பெனும் விமானத்தில் ஏறியே வந்துள்ளீர்கள். எனவே, எப்படி நீங்கள் அன்பெனும் பாடத்தில் சித்தி அடைந்துள்ளீர்களோ, அவ்வாறே இப்போது சமமானவர் ஆகுகின்ற பாடத்திலும் திறமைச்சித்தி அடையும் அற்புதத்தின் மூலம் இதை நடைமுறையில் செய்து காட்டுங்கள். உங்களுக்கு இது பிடித்திருக்கிறதா? நீங்கள் சமமானவர் ஆகுவதை விரும்புகிறீர்களா? நீங்கள் அதை விரும்புகிறீர்கள். ஆனால், சமமானவர் ஆகுவது சிறிது கஷ்டமா? சமமானவர் ஆகுங்கள். சம்பூரணம் உங்களின் முன்னால் வந்துவிடும். எவ்வாறாயினும், நீங்கள் நிச்சயமாக ஏதாவது ஒன்றாக ஆகுவீர்கள் என உங்களின் இதயபூர்வமாக நீங்கள் செய்த சத்தியம், சிலவேளைகளில் சிறிது பலவீனமாகி விடுகிறது. பரீட்சை பலம் வாய்ந்ததாகி விடுகிறது. எல்லோரும் இதை விரும்புகிறார்கள். ஆனால் எதையாவது விரும்புவது ஒரு விடயம். அது நடைமுறையில் நடப்பது இன்னொரு விடயம். இது ஏனென்றால், நீங்கள் ஒரு சத்தியத்தைச் செய்கிறீர்கள், ஆனால் அதில் திடசங்கற்பம் இருப்பதில்லை. சமமானவர் ஆகுவது தொலைவில் சென்றுவிடுகிறது. பிரச்சனை பெரிதாகி விடுகிறது. எனவே, இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?
பாப்தாதா ஒரு விடயத்தை இட்டு மிகவும் வியப்படைகிறார். எதைப் பற்றி? நீங்கள் மகாவீரர்கள். ஆனால் அது இதிகாசங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போன்றே உள்ளது: அனுமான் ஒரு மகாவீரராகக் காட்டப்பட்டுள்ளார். எனினும் அவருக்கு ஒரு வாலையும் அவர்கள் காட்டி உள்ளார்கள். இந்த வாலே ‘நான்’ என்ற உணர்வாகும். மகாவீரர்கள் இந்த வாலை எரிக்கும் வரையில், லங்கா, அதாவது, இந்தப் பழைய உலகம் முடிவடையப் போவதில்லை. எனவே, இப்போது ‘நான், நான்’ என்ற இந்த வாலை எரியுங்கள். அப்போது மட்டுமே சம்பூரணம் நெருங்கி வரும். அதை எரிப்பதற்கு, உங்களுக்குத் தீவிரமான, எரிமலை தபஸ்யா தேவை. சாதாரணமான நினைவு அல்ல. எரிமலை நினைவானது தேவைப்படுகிறது. இதனாலேயே, ஜ்வாலாமுகி (எரிமலை) தேவியின் ஞாபகார்த்தம் உள்ளது. சக்திவாய்ந்த நினைவு. எனவே, நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கேட்டீர்களா? இப்போது, உங்களின் மனங்களில் இந்த ஆழமான அக்கறை இருக்க வேண்டும்: ‘நான் சமமானவர் ஆகவேண்டும். நான் சம்பூரணத்தை நெருக்கமாகக் கொண்டு வரவேண்டும்.’ சங்கமயுகம் மிகவும் நல்லது என நீங்கள் சொல்லலாம், அப்படியாயின், நாங்கள் ஏன் அதை நிறைவு செய்ய வேண்டும்? எவ்வாறாயினும், நீங்கள் தந்தையைப் போல் கருணை நிறைந்தவர்கள், கனிவானவர்கள், இரக்கம் உள்ள ஆத்மாக்கள். ஆகவே, கருணை நிறைந்த ஆத்மாக்களே, இன்றைய நாட்களில் சந்தோஷம் இல்லாமல் உள்ள ஆத்மாக்களின் மீதும் பக்த ஆத்மாக்களின் மீதும் கருணை காட்டுங்கள். கருணை நிறைந்தவர்கள் ஆகுங்கள்! துன்பம் அதிகரித்து வருகிறது. துன்பத்தில் வேதனைப்படுபவர்களிடம் கருணை காட்டுங்கள். குறைந்தபட்சம் அவர்களை முக்தி தாமத்திற்கு அனுப்பி வையுங்கள். வார்த்தைகளால் மட்டும் சேவை செய்யாதீர்கள். ஏனென்றால், இப்போது உங்களின் மனங்களாலும் வார்த்தைகளாலும் ஒரே வேளையில் சேவை செய்வதற்கான தேவை ஏற்பட்டுள்ளது. ஒரே வேளையில் இரண்டு வகையான சேவையும் இடம்பெறட்டும். உங்களுக்குச் சேவை செய்வதற்காக ஒரு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என நினைக்காதீர்கள். நடக்கும் போதும் அசையும் போதும், தொடர்ந்து உங்களின் முகங்களாலும் உங்களின் நடவடிக்கைகளாலும் தந்தையின் அறிமுகத்தைக் கொடுங்கள். உங்களின் முகங்கள் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். உங்களின் நடவடிக்கைகள் தொடர்ந்தும் தந்தையை வெளிப்படுத்த வேண்டும். எனவே, நீங்கள் இத்தகைய சதா சேவையாளர்கள் ஆகுவீர்களாக. அச்சா.
நீங்கள் எல்லோரும் பௌதீகமாக பாப்தாதாவின் முன்னால் அமர்ந்துள்ளீர்கள். ஆனால், எங்கும் உள்ள குழந்தைகள் எல்லோரும் அவர்களின் சூட்சும ரூபங்களில் பாபாவின் இதயத்தில் உள்ளார்கள். அவர்கள் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருக்கிறார்கள். இந்தத் தேசத்திலும் வெளிநாடுகளிலும் உள்ள பல குழந்தைகள் தமது அன்பையும் நினைவுகளையும் ஈமெயில்கள், கடிதங்கள், செய்திகளின் மூலம் அனுப்பி வைத்துள்ளார்கள். பாப்தாதா எல்லோருடைய அன்பையும் தனிப்பட்ட முறையில் அவர்களின் பெயருக்கேற்பப் பெற்றுள்ளார். அத்துடன் தனக்கு முன்னால் குழந்தைகள் எல்லோரையும் பார்த்து, பாப்தாதா தனது இதயத்தில் இந்தப் பாடலைப் பாடுகிறார்: ஆஹா குழந்தைகளே! ஆஹா! இந்த வேளையில், ஒவ்வொருவரிலும் நினைவு வெளிப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் செய்தியாளரிடம் (தாதி குல்ஸார்) தனிப்பட்ட முறையில், ‘இன்னார் தனது நினைவை அனுப்பி வைத்துள்ளார், இன்னார் தனது நினைவை அனுப்பி உள்ளார்’ எனக் கூறுகிறார்கள். தந்தை கூறுகிறார்: உங்களுக்கு எண்ணம் தோன்றும்போதே, அந்தச் செய்தியானது பின்னர் கருவியினூடாகப் பெறப்பட்டாலும் அன்பான எண்ணமானது கருவியினூடாகச் செய்தி வருவதற்கு முன்னரே வந்துவிடுகிறது. இது சரிதானே? உங்களில் சிலர் உங்களின் நினைவைப் பெற்றுள்ளீர்கள்தானே? அச்சா.
அச்சா, முதல் தடவை வந்திருப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! நீங்கள் எல்லோரும் சேவையிலும் முதல் தடவையாக இங்கே வந்துள்ளீர்கள். அச்சா. பாப்தாதா கூறுகிறார்: நல்வரவுகள்! இது நீங்கள் வருவதற்கான பருவகாலம். ஓகே, இப்போது பேசுங்கள்!
இந்தத் தடவை, இந்தோர் பிராந்தியமே எல்லோருக்கும் சேவை செய்துள்ளார்கள். (ஒவ்வொருவரும் ஒரு கடதாசி இதயத்தில் ‘மேரா பாபா’ என எழுதி வைத்திருந்தார்கள்) நீங்கள் மிக நன்றாக உங்களின் கைகளை அசைக்கிறீர்கள். உங்களால் உங்களின் இதயங்களையும் அசைக்க முடியும். எப்போதும் நினைவில் வைத்திருங்கள், ஒருபோதும் ‘மேரா’ என்பதை மறக்காதீர்கள். நீங்கள் நல்லதொரு வாய்ப்பைப் பெற்றுள்ளீர்கள். பாப்தாதா எப்போதும் கூறுவார்: தைரியத்தைப் பேணுபவர்களுக்கு பாப்தாதா பலமில்லியன் மடங்கு உதவியை வழங்குவார். எனவே, நீங்கள் தைரியத்தைப் பேணினீர்கள், அப்படித்தானே? நீங்கள் மிக நன்றாகச் செய்துள்ளீர்கள். இது இந்தோர் பிராந்தியம். பாபா சாகார் பாபாவின் ரூபத்தில் இருந்தபோது, இந்தோர் பிராந்தியமே பாபா நினைத்த கடைசி இடமாகும். (1968 இல் நிலையம் ஒன்றைத் திறப்பதற்கான தூண்டுதலை சாகார் பாபா கொடுத்த கடைசி இடம் இந்தோர் ஆகும்). இது நல்லது. நீங்கள் எல்லோரும் மிக சந்தோஷமாக இருக்கிறீர்கள்தானே? நீங்கள் பொன்னான அதிர்ஷ்டலாபச் சீட்டை வென்றுள்ளீர்கள். சேவை செய்வதற்கான முறையை ஒரு பிராந்தியம் பெறும்போது, சேவாதாரிகள் எல்லோருக்கும் வருவதற்கான அனுமதி கிடைக்கிறது. இல்லாவிட்டால், அழைத்து வருவதற்கு உங்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கை ஒதுக்கீடே வழங்கப்படும். எவ்வாறாயினும், இப்போது எத்தனை பேர் உள்ளார்கள் எனப் பாருங்கள்! இதுவும் ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் நல்லதொரு வாய்ப்பே ஆகும். நீங்கள் விரும்பிய அளவினரை அழைத்து வாருங்கள். எனவே, நீங்கள் எல்லோரும் குறுகிய காலத்தில் உங்களின் புண்ணியக் கணக்கில் அதிகளவில் சேமித்துள்ளீர்கள். உங்களின் இதயபூர்வமாக யக்யத்திற்குச் சேவை செய்வது என்றால், துரித கதியில் உங்களின் புண்ணியக் கணக்கை அதிகரித்தல் என்று அர்த்தம். ஏனென்றால், உங்களின் எண்ணங்கள், நேரம், சரீரம் மூன்றையும் நீங்கள் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்துகிறீர்கள். உங்களுக்குள் எண்ணங்கள் ஏற்பட்டால், அவை யக்ய சேவையைப் பற்றியதாகவே இருக்கும். நீங்கள் உங்களின் நேரத்தை யக்ய சேவைக்காகப் பயன்படுத்துகிறீர்கள். அத்துடன் நீங்கள் உங்களின் சரீரத்தையும் யக்ய சேவைக்காக ஒப்படைத்துள்ளீர்கள். எனவே, இது சேவையா அல்லது அதன் பலனா? நடைமுறைப் பலன் என்னவென்றால், யக்யசேவை செய்யும்போது, யாருக்காவது எந்தவொரு வீணான எண்ணமும் ஏற்பட்டதா? யாருக்காவது இத்தகைய எண்ணங்கள் ஏற்பட்டனவா? நீங்கள் சந்தோஷமாக இருந்ததுடன் நீங்கள் எல்லோரும் சந்தோஷத்தைப் பகிர்ந்து அளித்தீர்கள். எனவே, நீங்கள் இங்கே பொன்னான அனுபவத்தைப் பெற்றீர்கள். இந்த அனுபவத்தைத் தொடர்ந்து வெளிப்படச் செய்து, நீங்கள் எங்கே இருந்தாலும் அதை அதிகரியுங்கள். மாயையின் எந்தவிதமான எண்ணங்கள் ஏற்பட்டாலும் உங்களின் மனம் என்ற விமானத்தால் சாந்திவானுக்கு வாருங்கள். உங்கள் ஒவ்வொருவரிடமும் உங்களின் மனம் என்ற விமானம் உள்ளதல்லவா? உங்கள் ஒவ்வொருவரிடமும் உங்களின் மனம் என்ற விமானம் உள்ளது. ஒவ்வொரு பிராமணருக்கும் பிறந்தநாள் பரிசாக, மேன்மையான மனம் என்ற விமானத்தை பாப்தாதா வழங்கி உள்ளார். இந்த விமானத்தில், நீங்கள் அதிகளவு முயற்சி செய்ய வேண்டியதில்லை. அதைப் பறக்கச் செய்வதற்கு, ‘எனது பாபா’ எனக் கூறுங்கள். அவ்வளவுதான். உங்களின் விமானத்தை எப்படிப் பறக்கச் செய்வது என உங்களுக்குத் தெரியும் அல்லவா? எனவே, எப்பொழுது என்ன நடந்தாலும் மதுவனத்திற்கு வாருங்கள். பக்தி மார்க்கத்தில், நான்கு இடங்களுக்கு யாத்திரை செல்பவர்கள், தங்களை மிகவும் பாக்கியசாலிகளாகக் கருதுகிறார்கள். ஆனால் உங்களுக்கோ மதுவனத்தில் நான்கு யாத்திரைத் தலங்களும் உள்ளன. எனவே, நீங்கள் இந்த நான்கு இடங்களுக்கும் நீங்கள் யாத்திரை செய்தீர்களா? நீங்கள் பாண்டவபவனில் நான்கு யாத்திரைத் தலங்களையும் பார்த்திருக்கிறீர்களா? யார் இங்கே வந்தாலும், அவர்கள் பாண்டவ பவனுக்குச் செல்கிறார்கள். 1. அமைதிக் கோபுரமே மகத்தான யாத்திரை. 2. பாப்தாதாவின் அறை: இதுவே அன்பு யாத்திரை. 3. குடில்: சிநே மிலனின் யாத்திரை (அன்பெனும் சிறிய ஒன்றுகூடல்). 4. சரித்திர மண்டபம். எனவே, நீங்கள் எல்லோரும் இந்த நான்கு இடங்களுக்கும் யாத்திரை செய்தீர்களா? எனவே, நீங்கள் ஏற்கனவே மகா பாக்கியசாலிகள் ஆகிவிட்டீர்கள். உங்களால் இப்போது எந்தவொரு யாத்திரைத் தலத்தையும் நினைக்க முடியும். நீங்கள் சிலவேளைகளில் சிறிதளவு சோகம் அடைந்தால், குடிலுக்கு வந்து, இதயபூர்வமாக உரையாடுங்கள். நீங்கள் சக்திசாலி ஆகவிரும்பினால், அமைதிக் கோபுரத்திற்கு வாருங்கள். உங்களிடம் துரித கதியில் வீணான எண்ணங்கள் வருமாக இருந்தால், சரித்திர மண்டபத்திற்கு வாருங்கள். சமமானவர் ஆகுவதற்கான திடசங்கற்பமான எண்ணம் தோன்றினால், பாப்தாதாவின் அறைக்கு வாருங்கள். இது நல்லது. எல்லோரும் இந்தப் பொன்னான வாய்ப்பைப் பெற்றுள்ளார்கள். ஆனால், அங்கே வாழும்போது (நீங்கள் வாழும் இடத்தில்), சதா இந்தப் பொன்னான வாய்ப்பைப் பெற்றுக் கொள்ளுங்கள். அச்சா. நீங்கள் மிகவும் தைரியசாலிகள்.
CAD - இதய நாடி நோய்: (அவர்கள் சாந்திவானில் மிக நல்லதொரு கருத்தரங்கு நடத்தினார்கள்.) நீங்கள் நன்றாகச் செய்தீர்கள். நீங்கள் உங்களுக்கு இடையே மீட்டிங் நடத்தினீர்கள். இந்தப் பணி நடக்க வேண்டும் என்பது ஜனாதிபதியின் ஆசை. அவரின் ஆசைக்கேற்ப, தொடர்ந்து அவருடன் பணிபுரியுங்கள். தொடர்ந்தும் முன்னேறுங்கள். அத்துடன் உங்களின் நிகழ்ச்சியின் செய்திகளை பிராமணக் கூட்டங்களின்போது பகிர்ந்து, அவர்களின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளுங்கள். பின்னர், சகல பிராமணர்களின் ஆலோசனையுடன், அது சக்தியால் நிரப்பப்படும். பணி நல்லது. தொடர்ந்து அதைச் செய்யுங்கள், தொடர்ந்து அதைப் பரப்புங்கள், தொடர்ந்து பாரதத்தின் சிறப்பியல்பை வெளிப்படுத்துங்கள். நீங்கள் கடினமான உழைக்கிறீர்கள். நீங்கள் நல்லதொரு நிகழ்ச்சியை நடத்தினீர்கள். CAD குழுவைச் சேர்ந்தவர்கள் பெரிய இதயத்துடன் இருந்தார்கள். அதற்காகப் பாராட்டுக்கள். அச்சா.
இரட்டை வெளிநாட்டு சகோதர, சகோதரிகளிடம்: ஒவ்வொரு முறையிலும் வருகின்ற இரட்டை வெளிநாட்டுக் குழந்தைகள் அந்த ஒன்றுகூடலைப் பிரகாசம் (சார் சந்த் லகானா) ஆக்குகிறார்கள். எல்லோரும் இரட்டை வெளிநாட்டவர்களைப் பார்க்கும்போது, அவர்களுக்கு உற்சாகம் ஏற்படுகிறது. இரட்டை வெளிநாட்டவர்கள் எல்லோரும் இரட்டை ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் முன்னேறுகிறார்கள். நீங்கள் நடக்கவில்லை, ஆனால் பறக்கிறீர்கள். இது அப்படித்தானே? நீங்கள் பறப்பவர்களா அல்லது நடப்பவர்களா? எப்போதும் பறப்பவர்கள், நடப்பவர்கள் அல்ல, ஆனால் பறப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! அச்சா. எப்படியாயினும், நீங்கள் இங்கே விமானத்தில் பறந்தே வரவேண்டும். எனவே, உங்களுக்குப் பறக்கின்ற பயிற்சி எப்படியும் உள்ளது. அது சரீரத்துடன் பறப்பது. இந்தப் பறத்தல் மனதால் செய்வது. நீங்கள் நல்ல தைரியத்தைப் பேணியுள்ளீர்கள். பாருங்கள், பாப்தாதா வெவ்வேறு மூலைகளில் இருந்தும் தனது குழந்தைகளைக் கண்டு எடுத்துள்ளார். இது மிகவும் நல்லது. நீங்கள் இரட்டை வெளிநாட்டவர்கள் என்றே அழைக்கப்படுகிறீர்கள். ஆனால், உண்மையில் நீங்கள் ஆதியில் பாரதத்தைச் சேர்ந்தவர்கள். எனவே, நீங்கள் எங்கே ஆளப் போகின்றீர்கள்? நீங்கள் பாரதத்திலேயே ஆளப் போகின்றீர்கள், அப்படித்தானே? எவ்வாறாயினும், நீங்கள் சேவை செய்வதற்காக ஐந்து கண்டங்களுக்கும் சென்றுள்ளீர்கள். ஐந்து கண்டங்களிலும் வெவ்வேறு இடங்களில், நீங்கள் அதிகளவு ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் மிக நன்றாக சேவை செய்கிறீர்கள். நீங்கள் தடைகளை அழிப்பவர்கள்தானே? ஏதாவது தடை வரும்போது, நீங்கள் பயப்படப் போவதில்லை, அல்லவா? ‘என்ன நடக்கிறது? ஏன் இது நடக்கிறது?’ இல்லை. ‘என்ன நடக்கிறதோ, அது எமது தைரியத்தை அதிகரிப்பதற்கான வழிமுறை ஆகும். அது எங்களைப் பயப்படுத்துவதற்கே அல்ல, ஆனால் எமது ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அதிகரிப்பதற்கான வழிமுறை’ ஆகும். நீங்கள் இதில் பலம்வாய்ந்தவர்கள்தானே? நீங்கள் பலமானவர்களா? அல்லது, நீங்கள் சிறிது பலவீனமாக இருக்கிறீர்களா? இல்லை. பலவீனம் என்ற வார்த்தையை நீங்கள் விரும்பவில்லை. நீங்கள் பலசாலிகள். நீங்கள் பலசாலிகளாக இருப்பீர்கள். பலசாலியாக இருப்பதன் மூலம் நீங்கள் தந்தையுடன் வீட்டுக்குத் திரும்பிச் செல்வீர்கள். அச்சா.
தாதி ஜான்கி அவரின் அவுஸ்திரேலியா சுற்றுப் பயணத்தை முடித்துத் திரும்பி வந்திருந்தார். அவர்கள் அதிகளவு நினைவை அனுப்பி உள்ளார்கள்: பாப்தாதா அவர்களின் செய்தியை ஈமெயில் மூலமும் பெற்றார். தற்காலத்தில், பெரிய நிகழ்ச்சிகள் ஏற்கனவே பூர்த்தியாகி விட்டதைப் போல் இருப்பதை பாப்தாதா பார்க்கிறார். நீங்கள் எல்லோரும் அவற்றை எப்படிச் செய்வது எனக் கற்றுள்ளீர்கள். சேவைக்காக வசதிகளைப் பயன்படுத்துகின்ற மிக நல்ல நடைமுறையை நீங்கள் இப்போது செய்கிறீர்கள். அவுஸ்திரேலியா முதல் இலக்கத்தில் இருப்பதை பாப்தாதா பார்க்கிறார். ஆனால் யுகே இப்போது சிறிது முன்னே செல்கிறது. எவ்வாறாயினும், அவுஸ்திரேலியா ஆரம்பத்தில் இருந்தே முதல் இலக்கத்தைப் பெற்றுள்ளது. இப்போது அவுஸ்திரேலியா முதல் இலக்கத்தில் வரவேண்டும். யுகே இரண்டாம் இலக்கத்தில் இருக்காது. அதுவும் முதல் இலக்கத்திலேயே இருக்கும். பாப்தாதா அவுஸ்திரேலியாவின் பழைய குழந்தைகளை நினைக்கிறார், அத்துடன் பாப்தாதாவின் அதியன்பிற்குரிய குழந்தையான நிர்மல் ஆசிரமத்தையும் நினைக்கிறார். நீங்கள் அவரை நிர்மலா தீதி என்று அழைக்கிறீர்கள். நீங்கள் அவரை தீதி என்று அழைக்கிறீர்கள்தானே? ஆரம்பத்தில் இருந்தே, பாப்தாதா அவருக்கு நிர்மல் ஆசிரமம் என்ற பட்டத்தை வழங்கி உள்ளார். ஆத்மாக்கள் பலரும் ஆதாரத்தைப் பெற்று தந்தைக்குச் சொந்தமாகும் ஆசிரமம். அவர்கள் இப்போது தந்தைக்குச் சொந்தமானவர்கள். அவர்கள் தொடர்ந்தும் அவருக்குச் சொந்தமாக இருப்பார்கள். எனவே, அவுஸ்திரேலியாவின் ஒவ்வொரு குழந்தைக்கும் விசேடமான நினைவுகள். அவர்கள் முன்னால் அமர்ந்திருக்கிறார்கள். நீங்கள் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்கள்தானே? அவுஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்கள், எழுந்து நில்லுங்கள்! மிகவும் நல்லது. அவர்களிடம் நல்ல உற்சாகம் உள்ளது. அவர்கள் உலகிற்குச் சேவை செய்வதற்காக அதிகளவு ஆயத்தங்களைச் செய்கிறார்கள். உங்களுக்கு பாப்தாதாவின் உதவி கிடைத்துள்ளது, அத்துடன் உங்களுக்கு வெற்றியும் உள்ளது. அச்சா.
இப்போது உங்களிடம் உள்ள திடசங்கற்பமான எண்ணம் என்ன? இப்போது, வெற்றி உங்களின் பிறப்புரிமை, வெற்றி உங்களின் கழுத்து மாலை என்ற எண்ணத்துடன் அமர்ந்திருங்கள். இந்த நம்பிக்கையுடனும் ஆன்மீக போதையடனும் இந்த அனுபவத்தின் சொரூபங்களாக அமர்ந்திருங்கள். அச்சா. (பாபா அப்பியாசத்தைச் செய்வித்தார்).
கவலையில் இருந்து விடுபட்டுள்ள எங்கும் உள்ள கவலையற்ற சக்கரவர்த்திகள் எல்லோருக்கும் துன்பம் அற்ற தேசத்தின் சக்கரவர்த்தியின் ரூபத்தில் சதா ஸ்திரமாக இருக்கும் குழந்தைகளுக்கும் சகல பொக்கிஷங்களால் நிறைந்திருப்பதுடன் உலகிலேயே அதி செல்வந்தர்களாக இருக்கும் குழந்தைகள் எல்லோருக்கும் ஊக்கம் உற்சாகம் என்ற இறக்கைகளுடன் சதா பறக்கும் ஸ்திதியில் உள்ள குழந்தைகளுக்கும் பாப்தாதாவிற்குச் சமமாக இருந்து சம்பூரணத்தை நெருக்கமாகக் கொண்டு வரும் குழந்தைகளுக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவும் இதயபூர்வமான நல்லாசிகளும் பாக்கியத்தை அருள்பவரின் ஆசீர்வாதங்களும் நமஸ்தேயும்.
ஆசீர்வாதம்:
நீங்கள் ஓர் அருள்பவராகவும் பாக்கியத்தை அருள்பவராகவும் ஆகி, உங்களின் பலவீனங்களைத் தானம் செய்வதன் மூலம் அவற்றை முடித்து விடுவீர்களாக.பக்தி மார்க்கத்தில், உங்களிடம் ஏதாவது குறைந்தால், அதைத் தானம் செய்யும்படி உங்களைக் கேட்பது ஒரு வழக்கமாக உள்ளது. அதை நீங்கள் தானம் செய்வதன் மூலம், அவ்வாறு கொடுப்பது, பெறுகின்ற ரூபம் ஆகிவிடும். எனவே, எந்தவொரு பலவீனத்தையும் முடிப்பதற்கு, அருள்பவராகவும் பாக்கியத்தை அருள்பவராகவும் ஆகுங்கள். நீங்கள் மற்றவர்களை ஆதரிப்பதற்குக் கருவியாகி, அவர்களுக்குத் தந்தையின் பொக்கிஷங்களைக் கொடுத்தால், பலவீனங்கள் தானாகவே அப்பால் சென்றுவிடும். உங்களின் அருள்பவரின் மற்றும் பாக்கியத்தை அருள்பவரின் சக்திவாய்ந்த சம்ஸ்காரங்கள் வெளிப்பட வேண்டும். அப்போது உங்களின் பலவீனமான சம்ஸ்காரங்கள் இயல்பாகவே முடிவடைந்துவிடும்.
சுலோகம்:
தொடர்ந்து உங்களின் மேன்மையான பாக்கியத்தின் புகழைப் பாடுங்கள், உங்களின் பலவீனங்களைப் பற்றி அல்ல.அவ்யக்த சமிக்கை: ஓர் இலகு யோகி ஆகுவதற்கு, இறையன்பை அனுபவிப்பவர் ஆகுங்கள்.
நீங்கள் எப்போதும் நீங்கள் நேசிப்பவர் விரும்புவதையே செய்வீர்கள். தந்தை தனது குழந்தைகள் குழப்பம் அடைவதை விரும்புவதில்லை. ஆகவே, ஒருபோதும், ‘நான் என்ன செய்வது? சூழ்நிலை அப்படி இருந்தது - இதனாலேயே நான் குழப்பம் அடைந்தேன்’ எனச் சொல்லாதீர்கள். ஏதாவது குழப்பமான சூழ்நிலை உங்களுக்கு முன்னால் வந்தாலும், நீங்கள் உங்களின் ஸ்திதி குழம்ப அனுமதிக்கக் கூடாது. உங்களின் இதயபூர்வமாக ‘பாபா’ எனக் கூறி, அந்த அன்பிலே திளைத்திருங்கள்.