25.01.26 Avyakt Bapdada Tamil Lanka Murli 02.04.2008 Om Shanti Madhuban
இந்த வருடம், நான்கு பாடங்களிலும் அனுபவ அதிகாரி ஆகுங்கள். உங்களின் இலட்சியத்தையும் அதற்கான உங்களின் தகைமைகளையும் சமமானவை ஆக்குங்கள்.
இன்று, பாப்தாதா எங்கும் உள்ள, திருப்தியாக இருக்கும் தனது திருப்தி இரத்தினங்களைப் பார்க்கிறார். திருப்தியின் பிரகாசம் ஒவ்வொருவரின் முகத்திலும் புலப்படுகிறது. நீங்கள் ஒவ்வொருவரும் திருப்தி இரத்தினங்களை நேசிக்கிறீர்கள். பாப்தாதாவும் அவர்களை நேசிக்கிறார். குடும்பமும் அவர்களை நேசிக்கிறது. ஏனென்றால், திருப்தி மகத்தான சக்தியாகும். நீங்கள் சகல பேறுகளையும் அடைந்திருந்தால் மட்டுமே திருப்தியைக் கிரகிக்க முடியும். சிறிது பேறுகள் இருக்குமாயின், சிறிதளவு திருப்தியே காணப்படும். திருப்தி ஏனைய சக்திகளையும் வரவழைக்கிறது. திருப்தியின் சூழலும் மற்றவர்களுக்கு அவர்களின் கொள்ளளவிற்கேற்ப திருப்தியின் அதிர்வலைகளைக் கொடுக்கும். ஒருவர் திருப்தியாக இருப்பதன் அடையாளம், அவர் எப்போதும் சந்தோஷ இதயத்தைக் கொண்டிருப்பார். அவரின் முகம் இயல்பாகவே எப்போதும் மலர்ச்சியாக இருக்கும். திருப்தியான ஆத்மாவின் முன்னால் வருகின்ற எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையும் அவரை அவரின் ஆதி ஸ்திதியில் இருந்து தளம்பல் அடையச் செய்யாது. சூழ்நிலை எத்தனை பெரியதாக இருந்தாலும், திருப்தியானதோர் ஆத்மாவிற்கு, அது ஒரு கார்ட்டூன் காட்சி போன்று களிப்பூட்டுவதாகவே இருக்கும். இதனாலேயே, அந்த ஆத்மா சூழ்நிலைகளால் துன்பப்பட மாட்டார். சூழ்நிலைகளால் அந்த ஆத்மாவைத் தாக்க முடியாது. சூழ்நிலைகள் தோல்வி அடைந்துவிடும். இதனாலேயே, ஆத்மா தனது வாழ்க்கையை அதீந்திரிய சுகம் நிறைந்த பொழுதுபோக்காக அனுபவம் செய்கிறார். அவர் சிரமப்பட வேண்டியதில்லை. ஆனால் அதை ஒரு பொழுதுபோக்காக அனுபவம் செய்கிறார். எனவே, நீங்கள் ஒவ்வொருவரும் உங்களையே சோதித்துப் பார்க்க வேண்டும். எப்படிச் சோதிப்பது என்று உங்களுக்குத் தெரியும் அல்லவா? உங்களுக்குத் தெரியுமா? உங்களை எப்படிச் சோதிப்பது என்பதை அறிந்தவர்கள், மற்றவர்களைச் சோதிப்பதல்ல, உங்களை எப்படிச் சோதிப்பது என்பது உங்களுக்குத் தெரிந்தால், உங்களின் கைகளை உயர்த்துங்கள். உங்களை எப்படிச் சோதிப்பது என்று உங்களுக்குத் தெரியுமா? அச்சா. பாராட்டுக்கள்.
தினமும் அமிர்த வேளையில், ஒவ்வொரு குழந்தையும் பாப்தாதாவிடம் இருந்து வெவ்வேறு ரூபங்களில் பெறுகின்ற ஆசீர்வாதமானது: சந்தோஷமாக இருங்கள், செழிப்புடன் இருங்கள் என்பதாகும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் ஓர் ஆசீர்வாதத்தைப் பெறுகிறார்கள். பாப்தாதா ஒவ்வொரு நாளும் அனைவருக்கும் ஒரே வேளையில் ஒரே ஆசீர்வாதத்தையே வழங்குகிறார், ஆனால் வேறுபாடு என்ன? நீங்கள் ஏன் வரிசைக்கிரமம் ஆகுகிறீர்கள்? அருள்பவர் ஒருவரே. அவர் வழங்கும் பரிசுகளும் ஒன்றே. அவர் சிலருக்குச் சிறிதளவையும் ஏனையோருக்கு அதிகமாகவும் கொடுப்பதில்லை. அவர் பெருந்தன்மையுடன் வழங்குகிறார், ஆனால் வேறுபாடு எப்படி உருவாகுகிறது? நீங்கள் அனைவரும் இதை அனுபவம் செய்துள்ளீர்கள். ஏனென்றால், இதுவரை, அதன் ஒலி பாப்தாதாவை வந்தடைந்துள்ளது. என்ன ஒலி என்று உங்களுக்குத் தெரியுமா? சிலவேளைகளில். (கபி கபி), சிறிதளவு (தோடா, தோடா). இந்த ஒலி இப்போதும் பாப்தாதாவை வந்தடைகிறது. பாப்தாதா கூறியுள்ளார்: பிராமண ஆத்மாக்களின் வாழ்க்கைகளின் அகராதியில் இருந்து இந்த வார்த்தைகள் இரண்டும் நீக்கப்பட வேண்டும். தந்தை அழியாதவர், பொக்கிஷங்கள் அழியாதவை. நீங்கள் அனைவரும் அழியாதவர்கள், மேன்மையான ஆத்மாக்கள். எனவே, நீங்கள் என்ன வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும்? ‘சிலவேளைகளில்’ என்பதா அல்லது ‘சதா’ என்பதா? சகல பொக்கிஷங்களின் முன்னால் சோதித்துப் பாருங்கள்: என்னிடம் சதா சகல சக்திகளும் உள்ளனவா? என்னிடம் சகல நற்குணங்களும் சதா உள்ளனவா? உங்கள் அனைவரினதும் பக்தர்கள் உங்களின் புகழைப் பாடும்போது, அவர்கள் என்ன கூறுகிறார்கள்? ‘சிலவேளைகளில் தெய்வீகக் குணங்களை அருள்பவர்கள்’ என்றா? இதையா அவர்கள் பாடுகிறார்கள்? ஒவ்வோர் ஆசீர்வாதத்திலும் பாப்தாதா ‘சதா’ என்ற வார்த்தையைக் கூறியுள்ளார். சகல சக்திகளையும் சதா கொண்டிருக்கும் ஒரு மாஸ்ரர். சிலவேளைகளில் உங்களிடம் சில சக்திகளும் ஏனைய வேளைகளில் உங்களிடம் சகல சக்திகளும் இருக்கும் என்பதல்ல. ஒவ்வொரு கணத்திலும், நீங்கள் இந்த இரண்டு வார்த்தைகளையும் பேசுகிறீர்கள். தந்தையும் அவற்றைப் பேசுகிறார். சமமானவர் ஆகுங்கள். சிறிதளவிற்குச் சமமானவர் ஆகுங்கள் என்று அவர் கூறுவதில்லை. அவர் கூறுகிறார்: முழுமையான அளவில் சம்பூரணமும் முழுமையும். எனவே, குழந்தைகள் சிலவேளைகளில் என்ன செய்கிறார்கள்? பாப்தாதா உங்களின் விளையாட்டுக்களையும் பார்க்கிறார், அப்படித்தானே? அவர் குழந்தைகளான உங்களின் விளையாட்டுக்களைத் தொடர்ந்தும் பார்க்கிறார். குழந்தைகளான உங்களில் சிலர் என்ன செய்கிறீர்கள்? உங்களில் சிலர், எல்லோரும் அல்ல, நீங்கள் பெற்ற ஆசீர்வாதத்தைப் பற்றி சிந்திக்கிறீர்கள். நீங்கள் அதைப் பற்றிப் பேசுகிறீர்கள், நீங்கள் உங்களின் குறிப்புப் புத்தகத்திலும் அதைக் குறித்துக் கொள்கிறீர்கள், நீங்கள் அதை நினைவும் செய்கிறீர்கள். ஆனால், நீங்கள் ஆசீர்வாதத்தின் விதை பலன் அளிக்க அனுமதிப்பதில்லை. உங்களால் அந்த விதையில் இருந்து பலனைப் பெற முடியாமல் உள்ளது. நீங்கள் அதைப் பற்றிப் பேசுவதில் மட்டும் மிகவும் மகிழ்ச்சி அடைகிறீர்கள்: ‘இது மிகவும் நல்லதோர் ஆசீர்வாதம்’. ஆசீர்வாதமே விதை ஆகும். எந்தளவிற்கு நீங்கள் அந்த விதையைப் பலன் நிறைந்ததாக ஆக்குகிறீர்களோ, அதற்கேற்ப அது அதிகரிக்கும். அந்த விதையைப் பலன் உள்ளது ஆக்குவதற்கான வழிமுறை என்ன? அதைச் சரியான நேரத்தில் பயன்படுத்துவதே. நீங்கள் அந்த வேளையில் அதைப் பயன்படுத்த மறந்து விடுகிறீர்கள். நீங்கள் அதை உங்களின் குறிப்புப் புத்தகத்தில் பார்த்து, அதைப் பற்றிப் பேசுகிறீர்கள்: ‘இது மிகவும் நல்லது, இது மிகவும் நல்லது. பாபா மிக நல்லதோர் ஆசீர்வாதத்தை வழங்கி உள்ளார்.’ எவ்வாறாயினும், அவர் ஏன் அதை வழங்கினார்? அவர் அதை உங்களுக்கு பலன் உள்ளதாக ஆக்குவதற்கே வழங்கி உள்ளார். பழம் ஒரு விதையில் இருந்தே தோன்றுகிறது. நீங்கள் ஆசீர்வாதத்தை நினைவு செய்கிறீர்கள், ஆனால் அந்த ஆசீர்வாதத்தின் சொரூபம் ஆகுவதில் நீங்கள் வரிசைக்கிரமம் ஆகுகிறீர்கள். ஒவ்வொருவரின் பாக்கியத்தையும் பார்க்கும்போது, பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். எவ்வாறாயினும், பாப்தாதா உங்களுக்குத் தனது இதயபூர்வமான எதிர்பார்ப்புகளைப் பற்றி முன்னரே கூறியுள்ளார். நீங்கள் அனைவரும் உங்களின் கைகளை உயர்த்தினீர்கள். நீங்கள் காரணங்கள் மற்றும் சாக்குப்போக்குகள் அனைத்தையும் முடித்து, தீர்வுகளின் சொரூபம் ஆகப் போகின்றீர்கள் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா? அந்த வீட்டுவேலை உங்களுக்கு நினைவிருக்கிறதா? சில குழந்தைகள் பாபாவுடனான இதயபூர்வமான உரையாடல்களில், தமது கடிதங்களிலும் ஈமெயில்களிலும் தமது பெறுபேற்றை எழுதி உள்ளார்கள். உங்களின் கவனம் ஈர்க்கப்பட்டது நல்லதே. எவ்வாறாயினும், பாப்தாதா விரும்புகின்ற அந்த வார்த்தையான ‘சதா’ என்பதைப் போல் நீங்கள் ஆகிவிட்டீர்களா? வந்திருக்கும் நீங்கள் அனைவரும், நீங்கள் அதைக் கேட்டிருந்தாலென்ன அல்லது அதை வாசித்தாலென்ன, ஒரு மாதத்திற்குரிய வீட்டு வேலையில் - அது ஒரு மாதத்திற்கு மட்டுமே, அதை விட நீண்ட காலத்திற்கு அல்ல - ஒரு மாதத்திற்கு உங்களுக்கு அந்த இலட்சியம் இருந்தது. நீங்கள் ஒருவரோடு ஒருவர் அதைப் பற்றிப் பேசினீர்கள். எவ்வாறாயினும், தமது ஒரு மாத வீட்டு வேலையில் நல்ல மதிப்பெண்களைப் பெற்றவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள். சித்தி அடைந்தவர்கள், திறமைச்சித்தி அடைந்தவர்கள், எழுந்து நில்லுங்கள். திறமைச்சித்தி எய்தியவர்கள்! திறமைச்சித்தி எய்தியவர்களின் தரிசனத்தை அனைவரும் பெற வேண்டும். தாய்மார்கள் இல்லை. சகோதரிகளில், ஆசிரியர்கள் தமது கைகளை உயர்த்தவில்லை. எவருமே இல்லையா? மதுவனத்தைச் சேர்ந்தவர்கள்? இந்தப் பெறுபேறும் மிகவும் குறைவாக உள்ளது. (வெகுசிலர் எழுந்து நின்றார்கள்). நிலையங்களிலும் இத்தகையவர்கள் இருப்பார்கள். பாராட்டுக்கள். நீங்கள் கைதட்டலாம். பாப்தாதா புன்னகை செய்கிறார். ஏனென்றால், ‘யாருக்கு பாப்தாதாவிடம் அன்பு உள்ளது, உங்களுக்கு எவ்வளவு அன்பு உள்ளது?’ என்று பாப்தாதா கேட்கும்போது, நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள்? பாபா, எங்களுக்கு உங்களின் மீது அதிகளவு அன்பு உள்ளது, எங்களால் அதைப் பற்றிப் பேசவும் முடியாது! நீங்கள் மிக நல்லதொரு பதில் அளிக்கிறீர்கள், பாப்தாதாவும் அதனால் மகிழ்ச்சி அடைகிறார். ஆனால், அன்பின் அத்தாட்சி என்ன? நீங்கள் யார்மீது அன்பு வைத்திருக்கிறீர்களோ - தற்காலத்தில் உலகில், அவர்களிடம் சரீர உணர்வு அன்பே உள்ளது, அதற்காக அவர்கள் தமது உயிரையும் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறார்கள். இறையன்பிற்காக, தந்தை எதையாவது கூறும்போது, குழந்தைகளான உங்களுக்கு ஏன் அதைச் செய்வது கடினமாக உள்ளது? நீங்கள் மிக நல்ல பாடல்களைப் பாடுகிறீர்கள்: ‘பாபா, நாங்கள் உங்களிடம் எங்களை அர்ப்பணிக்கும் விட்டில் பூச்சிகள் ஆவோம். நாங்களே தீச்சுவாலையிடம் எங்களை அர்ப்பணிப்பவர்கள்’. எனவே, உங்களால் இந்த ‘காரணம்’ என்ற ஒரு வார்த்தையைத் தியாகம் செய்ய முடியாதா?
இப்போது இந்தப் பருவகாலத்தின் கடைசி முறை வந்துவிட்டது. நீங்களும் தந்தையும் பார்க்கிறீர்கள், அத்துடன் அடுத்த பருவகாலத்தின் (வருடம்) போது என்ன நடக்கும் என்பதையும் பார்ப்பீர்கள். நீங்கள் காலத்தைப் பார்க்கும்போது, இது காலத்தின் அழைப்பு என அதைப் பற்றிப் பேசுகிறீர்கள். பக்தர்களின் அழைப்பு, காலத்தின் அழைப்பு, துன்பத்தை அனுபவிக்கும் ஆத்மாக்களின் அழைப்பு, உங்களுடன் அன்பாகவும் ஒத்துழைப்பாகவும் உள்ள ஆத்மாக்களின் அழைப்பு. நீங்கள் அதை நிறைவேற்றுவீர்கள்தானே? உங்களின் பட்டம் என்ன? உங்களின் கடமை என்ன? எந்தக் கடமைக்காக நீங்கள் பிராமணர்கள் ஆகியுள்ளார்கள்? ‘உலகை மாற்றுபவர்கள்’ என்பதே உங்களின் பட்டம் ஆகும். உலகை மாற்றுவது உங்களின் பணி, யார் உங்களின் சகபாடி? நீங்கள் பாப்தாதாவுடன் இந்தப் பணிக்காகக் கருவிகள் ஆகியுள்ளீர்கள். எனவே, நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள்? இப்போதும், பாபா உங்களின் கைகளை உயர்த்தச் செய்தால், நீங்கள் அனைவரும் உங்களின் கைகளை உயர்த்துவீர்கள். நீங்கள் அந்த இலட்சியத்தை வைத்திருக்கிறீர்கள். இந்தப் பருவகாலத்தில் முழுமையாக, உங்கள் அனைவருக்கும் எண்ணம் இருந்ததை பாப்தாதா பார்த்தார். ஆனால், வெற்றிக்கான சாவி, திடசங்கற்பமே ஆகும்: நான் நிச்சயமாக இதைச் செய்ய வேண்டும். இதற்குப் பதிலாக, நீங்கள் அதைச் சிலவேளைகளில் செய்துவிட்டுக் கூறுகிறீர்கள்: நான் முன்னேறுகிறேன், நான் அதைச் செய்வேன். இந்த எண்ணம் உங்களின் திடசங்கற்பத்தைச் சாதாரணம் ஆக்குகிறது. காரணம் என்ற வார்த்தை, திடசங்கற்பத்திற்குள் நுழையக் கூடாது. தீர்வு மட்டுமே இருக்க வேண்டும். காரணங்கள் வரக்கூடும். ஆனால், அப்படி இருந்தும், சோதிப்பதனால் காரணங்கள் தீர்வுகளாக மாறுகின்றன.
பாப்தாதா பெறுபேற்றைச் சோதித்துப் பார்த்தார், அவர் எதைக் கண்டார்? ஞானி, யோகி, தாரணையின் சொரூபங்கள், சேவையாளர்கள். நான்கு பாடங்களிலும், ஒவ்வொருவரும் ஞானி, யோகி, தாரணையைக் கொண்டிருப்பதுடன் உங்களின் கொள்ளளவிற்கேற்ப சேவையும் செய்கிறீர்கள். எவ்வாறாயினும், நான்கு பாடங்களிலும், நீங்கள் அனுபவ சொரூபமாக அல்லது அனுபவத்தின் அதிகாரியாக இருப்பதில் புலப்படும் விதத்தில் குறைவு காணப்பட்டது. இந்த ஞானத்தில் அனுபவத்தின் சொரூபமாக இருப்பது என்றால் - கியான் என்பது இந்த ஞானம் எனப்படுகிறது. அனுபவத்தின் சொரூபமாக இருக்கும் ஓர் ஆத்மாவிற்கு, எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்ற இந்த ஞானம், அதாவது புரிந்துணர்வு உள்ளது. அவரிடம் இந்த ஞானத்தின் ஒளியும் சக்தியும் இருக்கும். அனுபவத்தின் சொரூபமாக இருத்தல் என்பதன் அர்த்தம், ஒரு ஞானி ஆத்மாவின் ஒவ்வொரு செயலிலும் இயல்பான முறையில் ஒளியும் சக்தியும் இருக்கும். கியானி என்றால் இந்த ஞானத்தை அறிந்து கொள்ளுதல், அதைப் பற்றிப் பேசுதல். அத்துடன்கூடவே, ஒவ்வொரு செயலிலும் ஒளியையும் சக்தியையும் கொண்டிருத்தல். அனுபவத்தின் சொரூபமாக இருக்கும் உங்களின் ரூபத்தால், உங்களின் ஒவ்வொரு செயலும் இயல்பாகவே மேன்மையாகவும் வெற்றி நிறைந்ததாகவும் ஆகும். நீங்கள் சிரமப்பட வேண்டியதில்லை. ஏனென்றால், நீங்கள் ஞானத்தின் அனுபவ சொரூபங்கள் ஆகுகிறீர்கள். அனுபவத்தின் அதிகாரமே, அனைத்து அதிகாரங்களிலும் அதிமேன்மையான அதிகாரம் ஆகும். இந்த ஞானத்தைத் தெரிந்து கொள்வதிலும், இந்த ஞானத்தின் அனுபவ அதிகாரியாக இருந்து ஒவ்வொரு செயலையும் செய்வதிலும் ஒரு வேறுபாடு உள்ளது. எனவே, சோதித்துப் பாருங்கள்: நான்கு பாடங்களிலும், நான் அனுபவ சொரூபமாக இருக்கிறேனா? நான் ஓர் ஆத்மா, ஆனால் நான் ஒவ்வொரு செயலையும் அனுபவ சொரூபமாக இருந்து செய்கிறேனா? நீங்கள் அனுபவ அதிகாரி என்ற ஆசனத்தில் அமர்ந்திருந்தால், மேன்மையான செயல்களும் வெற்றி நிறைந்த செயல்களும் ஓர் அதிகாரியின் இயல்பான சுபாவமாகத் தோன்றும். நீங்கள் அதைப் பற்றிச் சிந்திக்கிறீர்கள். ஆனால் அனுபவத்தின் சொரூபம் உங்களின் இயல்பான சுபாவம் ஆகுவது, யோகியுக்தாகவும் ராசியுக்தாகவும் இருக்க வேண்டும். உங்களின் தாரணையிலும், இயல்பாகவே சகல நற்குணங்களும் உங்களின் ஒவ்வொரு செயலிலும் இயல்பாகவே புலப்பட வேண்டும். சதா அனுபவத்தின் சொரூபமாகி, அனுபவத்தின் ஆசனத்தில் அமர்ந்திருங்கள். இந்தத் தேவையில் கவனம் செலுத்துவது அத்தியாவசியம் ஆகும். அனுபவத்தின் அதிகாரி என்ற ஆசனம் மிகவும் மகத்தானது. மாயையால் கூட அனுபவசாலிகளை முடிக்க முடியாது. அனுபவத்தின் அதிகாரி, மாயையின் அதிகாரத்தை விடக் கோடானுகோடி மடங்கு உயர்வானது. அதைப் பற்றிச் சிந்திப்பது ஒரு விடயம். அதைக் கடைவது இன்னொரு விடயம். ஆனால், இப்போது நீங்கள் அனுபவத்தின் சொரூபமாக முன்னேறுவதே அத்தியாவசியம் ஆகும்.
எனவே, இப்போது, இந்த வருடம் நீங்கள் என்ன செய்வீர்கள்? ஒரு பாடத்தில் பெரும்பாலான நீங்கள் சித்தி அடைந்துள்ளீர்கள் என்பதை பாப்தாதா பார்த்துள்ளார். அது என்ன பாடம்? சேவை என்ற பாடம். பாப்தாதா எங்கும் இருந்து மிக நல்ல சேவைப் பதிவேடுகளைப் பெற்றுள்ளார். இந்த வருடம் சேவைச் செய்திகளைப் பொறுத்தவரை, சேவைக்கான ஊக்கமும் உற்சாகமும் மிக நல்லதாகக் காணப்படுகிறது. ஒவ்வொரு பிரிவும் ஒவ்வொரு பிராந்தியமும் வெவ்வேறு முறைகளில் சேவையில் வெற்றி பெற்றுள்ளன. பாப்தாதா இதற்காக ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் ஒவ்வொரு பிரிவிற்கும் கோடானுகோடி பாராட்டுக்களை வழங்குகிறார். நீங்களும் மிக நல்ல திட்டங்களைச் செய்தீர்கள். ஆனால் இப்போது, காலத்திற்கேற்ப, இது ‘சடுதியாக’ என்பதற்கான பருவகாலம் ஆகும். எப்படிப் பல பிராமணர்கள் சடுதியாக சரீரத்தை விட்டுள்ளார்கள் என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள், அத்துடன் கேட்டிருப்பீர்கள். ‘சடுதியாக’ என்ற மணி இப்போது தீவிரமாக அடிக்கிறது. அதற்கேற்ப, இப்போது, இந்த வருடம், நீங்கள் நான்கு பாடங்களிலும் எந்தளவிற்கு அனுபவத்தின் சொரூபம் ஆகியுள்ளீர்கள்? நீங்கள் நான்கு பாடங்களிலும் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டிய தேவை உள்ளது. நீங்கள் ஒரு பாடத்திலேனும் சித்திக்கான மதிப்பெண்களை விடக் குறைவாகப் பெற்றால், எப்படி உங்களால் திறமைச்சித்தி எய்திய மாலையின் மணியாகவும் பாப்தாதாவின் கழுத்து மாலையாகவும் ஆகமுடியும்? எந்த முறையிலாவது தோற்றுப் போனவர்களால் தந்தையின் கழுத்து மாலை ஆக முடியாது. பாபா உங்களின் கைகளை உயர்த்தும்படி கூறும்போது, நீங்கள் அனைவரும் என்ன கூறுகிறீர்கள்? நீங்கள் இலக்ஷ்மி அல்லது நாராயணன் ஆகுவீர்கள் என்றே கூறுகிறீர்கள். ஓகே, நீங்கள் இலக்ஷ்மி அல்லது நாராயணன் அல்லது அவர்களின் குடும்பத்தில் சகபாடிகள் ஆகினாலும், அவ்வாறு ஆகுவதும் மேன்மையானதோர் அந்தஸ்தே ஆகும். ஆகவே, பாப்தாதா எளிமையாக ஒரு விடயத்தைக் கூறுகிறார்: இப்போது, தொடர்ந்து துரித கதியில் பறக்கும் ஸ்திதியில், உங்களின் பறக்கும் ஸ்திதிக்கான அதிர்வலைகளுடன் சூழலில் ஒத்துழைப்பைப் பரப்பிய வண்ணம் பறவுங்கள். நீங்கள் நிச்சயமாக பஞ்ச பூதங்களை மாற்றுவீர்கள் என்று நீங்கள் அனைவரும் இயற்கைக்குச் சவால் விடுத்துள்ளீர்கள். நீங்கள் இந்த சத்தியத்தைச் செய்துள்ளீர்கள்தானே? நீங்கள் இதைச் சத்தியம் செய்துள்ளீர்களா? கையை அசைக்க வேண்டாம், தலையை அசையுங்கள். எனவே, துன்பத்திலும் அமைதி இன்றியும் உள்ள உங்களுக்குச் சமமான மனித ஆத்மாக்களை உங்களால் மாற்ற முடியாதா? முதலில், நீங்கள் அதற்குச் சவால் விடுத்துள்ளீர்கள். இரண்டாவதாக, நீங்கள் பாப்தாதாவிற்கும் சத்தியம் செய்துள்ளீர்கள்: நீங்கள் அனைவரும் இப்போது உங்களின் பணியில் சகபாடிகளாக இருக்கிறீர்கள். நீங்கள் பரந்தாமத்திலும் உங்களின் சகபாடிகள். இராச்சியத்திலும், நாங்கள் தந்தை பிரம்மாவின் சகபாடிகளாக இருப்போம். நீங்கள் இந்தச் சத்தியத்தைச் செய்துள்ளீர்கள், அப்படித்தானே? எனவே, நீங்கள் ஒன்றாகத் திரும்பிச் செல்வீர்கள், ஒன்றாக இருப்பீர்கள், இப்போதும் ஒன்றாகவே இருக்கிறீர்கள். அவ்வப்போது, நடைமுறையில் தந்தையிடம் இருந்து சமிக்கைகளைப் பெறுகிறீர்கள். சடுதியாக. என்றும் தயாராக இருத்தல். தாதி செல்வார் என நீங்கள் எப்போதாவது நினைத்ததுண்டா? நீங்கள் ‘சடுதியாக’ என்ற விளையாட்டைக் கண்டீர்கள்.
எனவே, இந்த வருடம், என்றும் தயாராக இருங்கள். நீங்கள் நம்பிக்கைத் தீபங்களாக, தந்தையின் இதயத்தின் நம்பிக்கைகளை நிறைவேற்றுபவர்கள் ஆகவேண்டும். உங்களுக்குத் தந்தையின் எதிர்பார்ப்புகள் என்னவென்று தெரியும். நீங்கள் அப்படி ஆகப் போகிறீர்களா அல்லது நான் எப்படியும் அப்படி ஆகுவேன், நான் அதைப் பார்ப்பேன் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? நீங்கள் அப்படி ஆகவேண்டும் என்று உணர்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள். பாருங்கள், இது கமெராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நீங்கள் மிக நன்றாக பாப்தாதாவிற்கு களிப்பூட்டுகிறீர்கள். பாப்தாதாவாலும் குழந்தைகள் இல்லாமல் தனியே வீடு திரும்பிச் செல்ல முடியாது. பாருங்கள், பிரம்மாபாபாவும் முக்திக்கான வாயில்களைத் திறப்பதற்காக குழந்தைகளான உங்களுக்காகக் காத்திருக்கிறார். முன்னோடிக் குழுவினரும் உங்களுக்காகக் காத்திருக்கிறார்கள். நீங்களே ஆயத்தங்களைச் செய்ய வேண்டும். நீங்கள் காத்திருப்பவர்கள் அல்ல, நீங்கள் ஆயத்தங்களைச் செய்பவர்கள். எனவே, இந்த வருடம், இந்த இலட்சியத்தை வைத்திருங்கள். எவ்வாறாயினும், நீங்கள் உங்களின் இலட்சியத்தையும் உங்களின் தகைமைகளையும் சமமாக்க வேண்டும். உங்களின் இலட்சியம் மிகவும் உயர்ந்ததாகவும் ஆனால் தகைமைகளில் நீங்கள் மிகவும் பலவீனமாகவும் இருப்பதாகவும் இருக்கக்கூடாது. இல்லை, உங்களின் இலட்சியமும் அதற்கான உங்களின் தகைமைகளும் சமமாக இருக்க வேண்டும். சமமாக ஆகவேண்டும் என்பதே உங்களின் இதயத்தின் ஆசை. உங்களின் இலட்சியமும் அதன் தகைமைகளும் சமமாக இருந்தால் மட்டுமே அது நிறைவேறும். இப்போது, உங்களின் இலட்சியத்திற்கும் அதன் தகைமைகளுக்கும் இடையில் சிறிது வேறுபாடு காணப்படுகிறது. நீங்கள் மிக நல்ல திட்டங்களைச் செய்கிறீர்கள். நீங்கள் உங்களுக்கு இடையேயும் மிக நல்ல இதயபூர்வமான உரையாடல்களைச் செய்கிறீர்கள். நீங்கள் ஒருவருக்கு ஒருவர் கவனம் செலுத்தும்படியும் நினைவூட்டுகிறீர்கள். ‘திடசங்கற்பம் எமது பிறப்புரிமை’ - இப்போது இந்த எண்ணத்தின் அனுபவ சொரூபம் ஆகுங்கள். சோதித்துப் பாருங்கள்: நான் சொல்வதை அனுபவமும் செய்கிறேனா? நான் ஓர் ஆத்மா என்ற முதல் கூற்றைச் சோதித்துப் பாருங்கள். நான் ஆத்மாவின் ரூபத்தின் அனுபவத்தின் அதிகாரியாக இருக்கிறேனா? இது ஏனென்றால், அனுபவத்தின் அதிகாரமே முதல் இலக்கத்திற்கு உரியதாகும். அச்சா. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உங்களால் உங்களின் ஆதி நிலையில் ஸ்திரமாக இருக்க முடிகிறதா?
மனதின் ஒருமுகப்படுத்தலுக்கான அப்பியாசம். இந்த மூன்று கருத்துக்களின் விழிப்புணர்வின் சொரூபமாக உங்களால் ஆக முடிகிறதா? ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள், அவ்வளவுதான்! அச்சா. (பாப்தாதா அப்பியாசத்தைச் செய்வித்தார்)
இப்போது, ஒரு விநாடியில், பாப்தாதாவின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் ஆன்மீகமான, மேன்மையான சுய மரியாதையில் ஸ்திரமாகுங்கள். இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் ஓர் ஆத்மாவின் அனுபவத்தில் திளைத்திருங்கள். அச்சா.
சதா தந்தையின் அன்பிலே திளைத்திருக்கும் அதிகபட்ச லவ்லீன் ஆத்மாக்களுக்கும் தமது சுயமரியாதையையும் சுய இராச்சிய அதிகாரத்திற்கான தமது உரிமையையும் எப்போதும் பேணும் விசேடமான ஆத்மாக்களுக்கும் தமது ஊக்கம் மற்றும் உற்சாகம் என்ற இறக்கைகளுடன் பறக்கும் எங்கும் உள்ளவர்களுக்கும் தமது மனங்களின் அதிர்வலைகளால் சூழலை அமைதிநிறைந்ததாகவும் மேன்மையானதாகவும் ஆக்குபவர்களுக்கும் அனைவருக்கும் தந்தையின் செய்தியை வழங்கி, அவர்களைத் துன்பத்தில் இருந்து விடுவித்து, அவர்களுக்கு முக்தியின் ஆஸ்தியை வழங்குபவர்களுக்கும் எப்போதும் திடசங்கற்பத்துடன் வெற்றியைப் பெறுபவர்களுக்கும் எங்கும் உள்ள இதயத்திற்கு நெருக்கமாக இருக்கும் குழந்தைகள் அனைவருக்கும் அத்துடன் இங்கே தனிப்பட்ட முறையில் நேரடியாக வந்திருக்கும் குழந்தைகளான உங்கள் எல்லோருக்கும் இதயபூர்வமான அன்பும் கனிவுடன் கூடவே இதயபூர்வமான ஆசீர்வாதங்களும் அன்பும் நினைவுகளும் நமஸ்தேயும்.
ஆசீர்வாதம்:
நீங்கள் தெய்வீகமான, மேன்மையான புத்தியைக் கொண்டிருந்து, உங்களின் தர்மத்திற்கும் உங்களின் கர்மத்திற்கும் இடையில் ஒரு சரியான சமநிலையைப் பேணுவீர்களாக.அனைத்தையும் செய்யும்போதே, முழுமையான தர்மம் இருக்க வேண்டும். அதாவது, உங்களின் தர்மத்திற்கும் உங்களின் கர்மத்திற்கும் இடையில் சரியான சமநிலையைப் பேணுவதன் மூலம் உங்களின் ஆதிக்கம் அதிகரிக்கும். உங்களின் செயல் முடிவடைந்ததும் அப்போது மட்டுமே உங்களின் தாரணையை உணர்ந்தவராக ஆகுவதாக இருக்கக்கூடாது. உங்களின் புத்தியில் இந்த இரண்டு விடயங்களுக்கும் இiடையில் சரியான சமநிலை இருக்க வேண்டும். அப்போது நீங்கள் மேன்மையான மற்றும் தெய்வீகப் புத்தியைக் கொண்டவர் எனப்படுவீர்கள். இல்லாவிட்டால், உங்களின் புத்தி சாதாரணமாக இருந்தால், செயல்களும் சாதாரணமாகவே இருக்கும். அப்போது உங்களின் தாரணையும் சாதாரணமானதாகவே இருக்கும். நீங்கள் சாதாரணமாக இருப்பதில் சமநிலை இருப்பதாக இருக்கக்கூடாது, ஆனால் மேன்மையாக இருப்பதில் சமநிலை இருக்க வேண்டும். உங்களின் செயல்கள் மேன்மையானவையாக இருப்பதைப் போல், உங்களின் தாரணையும் மேன்மையானது ஆகவேண்டும்.
சுலோகம்:
உங்களின் மனதையும் புத்தியையும் அனுபவத்தின் ஆசனத்தில் அமரச் செய்யுங்கள், நீங்கள் ஒருபோதும் குழப்பம் அடைய மாட்டீர்கள்.அவ்யக்த சமிக்கை: இந்த அவ்யக்த மாதத்தில், பந்தனத்தில் இருந்து விடுபட்டு, ஜீவன்முக்தி ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள்.
இந்த ஞானத்தின் சொரூபமாகவும் மாஸ்ரர் ஞானம் நிறைந்தவராகவும் மாஸ்ரர் சர்வசக்திவானாகவும் ஆகிய பின்னர், நீங்கள் யோகியுக்த் இல்லாத எந்தவொரு செயலைச் செய்தாலும் அந்தக் கர்மத்தின் பந்தனம், அறியாமைப் பாதையில் செய்யப்பட்ட எந்தவொரு செயலின் பந்தனத்தை விடக் கோடானுகோடி மடங்கு பெரியதாகவே இருக்கும். இந்தக் காரணத்தால், பந்தனத்தில் உள்ளதோர் ஆத்மா சுதந்திரமாக இல்லாதிருப்பதால், அவரால் தான் விரும்பியதைச் செய்ய முடியாதிருக்கும். ஆகவே, யுக்தியுக்த் செயல்களைச் செய்து, முக்தி அடையுங்கள்.