25.05.26        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே நீங்கள் ஒவ்வொருவரும் உங்களிடமே வினவுங்கள்: நான் எனது புலன்களை வென்றவர் ஆகியுள்ளேனா? எனது எந்த புலனங்கமாவது என்னை ஏமாற்றுகின்றதா?

கேள்வி:
கர்மாதீத் அடைவதற்கு குழந்தைகளாகிய நீங்கள் ஒவ்வொருவரும் என்ன சத்தியம் செய்ய வேண்டும்?

பதில்:
உங்கள் எந்தவொரு புலனங்கமும் ஒருபோதும் விஷமம் செய்ய மாட்டாது என்ற சத்தியத்தை உங்களுக்குள் செய்யுங்கள். எனது புலனங்கங்களை நான் கட்டுப்படுத்த வேண்டும். பாபா கொடுத்திருக்கின்ற அனைத்து வழிகாட்டல்களையும் நிச்சயமாக நான் நடைமுறையில் இட வேண்டும். பாபா கூறுகின்றார்: இனிய குழந்தைகளே, நீங்கள் கர்மாதீத் ஆக வேண்டுமாயின் உங்கள் புலனங்கங்கள் எதனூடாகவும் பாவச் செயல்களைச் செய்யாதீர்கள். மாயை மிகவும் சக்திவாய்ந்தவள். கண்கள் மிகவும் ஏமாற்றுபவை என்பதாலேயே நீங்கள் உங்கள் மீது அதிகளவு கவனம் செலுத்த வேண்டும்.

ஓம் சாந்தி.
குழந்தைகளே நீங்கள் இங்கே ஆத்ம உணர்வில் அமர்ந்திருக்கின்றீர்களா? உங்களிடம் இதனை வினவுங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களிடம் அனைத்தையும் வினவவேண்டும். தந்தை உங்களுக்கு வழி காட்டுகின்றார்: இங்கு நீங்கள் ஆத்ம உணர்வில் அமர்ந்திருக்கின்றீர்களா என உங்களிடம் வினவுங்கள். நான் தந்தையை நினைவு செய்கின்றேனா? இது உங்களது ஆன்மீக சேனையாகும். ஏனைய சேனையில் இளைஞர்களே இணைத்துக் கொள்ளப்படுவார்கள். இந்த சேனையில் 14 அல்லது 15 வயதே ஆனவர்களும் 90 வயதை அடைந்த முதியவர்களும் அத்துடன் சிறுவர்களும் கூட உள்ளார்கள். இது மாயையை வெற்றி கொள்ளும் சேனையாகும். நீங்கள் ஒவ்வொருவரும் மாயையை வெற்றி கொண்டு தந்தையிடம் இருந்து உங்கள் எல்லையற்ற ஆஸ்தியைப் பெற வேண்டும். ஏனெனில் மாயை மிகவும் சக்திவாய்ந்தவள் ஆவாள். மாயை மிகவும் சக்திவாய்ந்தவள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். பௌதீகப் புலன்கள் ஒவ்வொன்றும் அதிகளவு ஏமாற்றக் கூடியவை. அதிகளவு ஏமாற்றக் கூடிய புலனங்கம் எது? கண்களே உங்களை அதிகளவு ஏமாற்றுகின்றன. ஒருவருக்குத் தனக்கென சொந்த மனைவி இருக்கும் போதும் வேறொரு அழகான பெண்ணைக் கண்டால் அவர் மிக விரைவில் அப்பெண்ணினால் கவரப்படுகிறார். இதயம் அவளைத் தொட விரும்பும் அளவிற்கு கண்கள் அவரை ஏமாற்றுகின்றன. பிரம்மா குமாரர்கள் குமாரிகளாகிய நீங்கள் சகோதர சகோதரிகள் என்பதை உங்கள் புத்திகள் எப்பொழுதும் புரிந்திருக்க வேண்டும் எனக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. மாயை மிகவும் மறைமுகமான முறையில் உங்களை பெருமளவு ஏமாற்றுகின்றாள். இதனாலேயே நாள் முழுவதும் உங்களை எந்தப் புலனங்கங்கள் ஏமாற்றின என்பதையும் உங்கள் அட்டவணையில் நீங்கள் எழுத வேண்டும். கண்களே மிக மோசமான எதிரியாகும். ஆகவே நீங்கள் இன்னாரைப் பார்த்த போது உங்கள் கண்கள் ஈர்க்கப்பட்டன என்பதையும் நீங்கள் எழுத வேண்டும். சூர்தாஸின் உதாரணமும் உள்ளது (தனது கண்கள் தன்னை ஏமாற்றியதால் தன்னைக் குருடாக்கியவர்). நீங்கள் உங்களை சோதித்துப் பார்த்தீர்களே ஆனால் உங்கள் கண்களே உங்களை அதிகளவில் ஏமாற்றி இருப்பதைத் தெரிந்து கொள்வீர்கள். சில வேளைகளில் ஒருவர் தனது சொந்த மனைவியை நீக்கிவிட்டு இன்னொரு அழகிய பெண்ணால் மதிமயங்குகிறார். யாராவது ஒருவர் சிறந்த பாடகராக இருந்து அழகிய முக ஒப்பனையும் செய்திருந்தாராயின் அவரின் கண்கள் மிக விரைவில் ஈர்க்கப்பட்டு குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. இதனாலேயே பாபா கூறுகிறார்: இந்தக் கண்களே உங்களை அதிகளவில் ஏமாற்றுகின்றன. நீங்கள் சேவையைச் செய்தாலும் கண்களே உங்களை அதிகளவில் ஏமாற்றுகின்றன. நீங்கள் இந்த எதிரியின் மீது மிகக் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிடின் நீங்கள் உங்கள் சொந்த அந்தஸ்தையே அழித்துக் கொள்கிறீர்கள் என்பது புரிந்து கொள்ளப்படுகிறது. விவேகமான குழந்தைகள் தங்கள் நாட்குறிப்பில் குறித்துக் கொள்ள வேண்டும்: நான் இன்னாரைப் பார்த்த போது எனது பார்வை அவரை நோக்கி ஈர்க்கப்பட்டது. அப்போது உங்களையே கண்டித்துக் கொள்ளுங்கள்! பக்தி மார்க்கத்திலும் அவர்கள் வணங்கும் போது அவர்களது புத்தி வேறு திசைகளில் சென்றால் அவர்கள் தங்களுக்குத் தாங்களே கிள்ளிக் கொள்வார்கள். அத்தகைய பெண் உங்கள் முன்னால் வந்தால் நீங்கள் அப்பால் சென்றுவிட வேண்டும். நீங்கள் அங்கு நின்று அவரைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. கண்கள் பெருமளவு ஏமாற்று வேலைகளைச் செய்கிறது. இதனாலேயே சந்நியாசிகள் தங்கள் கண்களை மூடியவாறு அமர்கின்றனர். ஆண்களை முன்னாலும் பெண்களை பின்னாலும் அமரச் செய்கின்றனர். சில சந்நியாசிகள் பெண்களைப் பார்ப்பதே இல்லை. குழந்தைகளாகிய நீங்கள் அதிகளவு முயற்சி செய்ய வேண்டும். உலக இராச்சிய பாக்கியத்தைக் கோரிக் கொள்வது என்பது ஒரு சிறிய விடயம் அல்ல! அம்மக்கள் 10, 12, 20 ஆயிரங்களை அல்லது நூறு அல்லது இரு நூறு ஆயிரங்களை அல்லது மில்லியன்களைச் சேர்ப்பார்கள். எவ்வாறாயினும் இப்போது அனைத்தும் அழிக்கப்பட உள்ளன. குழந்தைகளாகிய நீங்கள் அழிவற்ற ஆஸ்தியைப் பெற்றுக் கொள்கிறீர்கள். நீங்கள் அனைத்தையும் பெற்றுக் கொள்கிறீர்கள். நீங்கள் தலையைப் போட்டு உடைத்துக் கொண்டு பெறுவதற்கு வேறெதுவும் இல்லை. கலியுகத்தின் இறுதிக்கும் சத்தியயுகத்தின் ஆரம்பத்திற்கும் இடையில் இரவிற்கும் பகலிற்குமான வேறுபாடு காணப்படுகிறது. இங்கு எதுவும் இல்லை. இது இப்பொழுது உங்களது அதிமேன்மையான சங்கமயுகமாகும். “அதி மேன்மையான” என்ற வார்த்தையை நீங்கள் நிச்சயம் எழுத வேண்டும். மனிதர்களை தேவர்களாக மாற்றுவதற்கு கடவுளிற்கு அதிக நேரம் எடுக்கவில்லை. நீங்கள் இப்பொழுது பிராமணர்கள் ஆகியுள்ளீர்கள். மக்கள் முழுமையான இருளில் இருக்கின்றனர். சுவர்க்கத்தைப் பார்க்க முடியாத பலர் இருக்கின்றனர். தந்தை கூறுகிறார்: குழந்தைகளே அதிகளவு சந்தோஷத்தைக் கொடுக்க கூடியதே உங்களது சமயம் ஆகும். மக்கள் எவற்றையும் புரிந்து கொள்வதில்லை. பாரத மக்களுமே சுவர்க்கம் எவ்வாறானது என்பதை மறந்து விட்டனர். சுவர்க்கம் இருப்பதைப் பற்றி கிறிஸ்தவர்களே பேசுகின்றனர். இலக்ஷ்மியும் நாராயணனும் தேவியும் தேவனும் என்று அழைக்கப்படுகிறார்கள். எனவே நிச்சயமாக கடவுளால் மட்டுமே அவர்களை அவ்வாறு ஆக்க முடியும். தந்தை விளங்கப்படுத்துகிறார்: நீங்கள் அதிகளவு முயற்சி செய்ய வேண்டும். உங்களுடைய அட்டவணையை ஒவ்வொரு நாளும் பாருங்கள். எந்தப் பௌதீகப் புலன் என்னை இன்று ஏமாற்றியது? வாயும் உங்களை மிகவும் ஏமாற்றிவிடும். ஆரம்ப நாட்களில் பாபா ஒரு நீதிமன்றத்தைக் கூட்டிய பொழுது அதில் ஒவ்வொருவரும் தாங்கள் செய்த குற்றங்களை ஒப்புவித்தார்கள். 'நான் இரகசியமாகச் சிலவற்றை எடுத்துச் சாப்பிட்டேன்". சில நல்ல குடும்பத்தைச் சேர்ந்த பெண்பிள்ளைகளும் இதை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். மாயை இப்படியாக உங்களை ஏமாற்றுகிறாள். இரகசியமாக ஒன்றை எடுத்து உண்பதென்றால் அது களவுதான். அதுவும் சிவபாபாவின் யக்கியத்தில் இருந்து! இது மிகவும் தீய விடயம். ஒருவர் ஒரு துரும்பைக் களவெடுப்பதும் நூறு ஆயிரங்களை களவு எடுப்பதும் ஒன்றே ஆகும். மாயை உங்களை முழுமையாக உங்களது மூக்கில் பிடிக்கிறாள். இது மிகவும் தீய பழக்கம். உங்களுக்கு தீய பழக்கங்கள் இருந்தால் நீங்கள் என்னவாக ஆகுவீர்கள்? சுவர்க்கத்திற்குச் செல்வது பெரிய காரியமல்ல. எப்படியாயினும் அங்கு பலவிதமான அந்தஸ்துகள் உள்ளன. அங்கு அரசர்களுக்கும் பிரஜைகளுக்கும் இடையில் மிகப் பெரிய வித்தியாசம் உண்டு. பௌதீகப் புலன்கள் உங்களை மிகவும் ஏமாற்றுகின்றன. நீங்கள் அவற்றையிட்டு மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் உயர்ந்த அந்தஸ்தைப் பெற விரும்பினால் தந்தையின் வழிகாட்டல்களை முழுமையாகப் பின்பற்ற வேண்டும். தந்தை வழிகாட்டல்களைக் கொடுக்கின்றார். மாயை இடையில் வந்து தடைகளை உருவாக்குகிறாள். தந்தை கூறுகிறார்: மறக்காதீர்கள்! இல்லாவிட்டால் இறுதியில் மிகவும் வருந்த நேரிடும். நீங்கள் பின்பு தோல்வி அடையும் காட்சிகளையும் காண்பீர்கள். இப்பொழுது சாதாரண மனிதரில் இருந்து நாராயணன் ஆகுவீர்கள் என நீங்கள் கூறுகிறீர்கள். ஆனாலும் நீங்கள் உங்களையே சோதிப்பதுடன் அட்டவணையையும் எழுத வேண்டும். இதனை மிக அரிதாக புரிந்து கொள்பவர்களாகவும் பயிற்சியில் இடுபவர்களாகவும் பலர் இருக்கிறார்கள். எப்படியாயினும் பாபா கூறுகிறார்: இதனைச் செய்வதினால் நீங்கள் மிக முன்னேற்றம் அடைவீர்கள். நீங்கள் அட்டவணையை முழுநாளுக்குமாக எழுத வேண்டும். ஒருவரை அவரது கண்ணே மிகவும் ஏமாற்றுகிறது. ஒருவர் இன்னொருவரைப் பார்த்ததும் அவள் மிகவும் நல்லவள் என்று நினைப்பார். பின் அவளுடன் பேசுவார், பின்பு அவளுக்கு ஒரு பரிசையோ அல்லது ருசியான சாப்பாட்டையோ கொடுக்க வேண்டும் என்று இதயத்தில் ஆசை எழும். அவர் தொடர்ந்து அவளைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பார். இதற்கு அதிக முயற்சி தேவை என குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்குகிறது. இது இராவண இராச்சியம், ஆகையால் பௌதீகப் புலன்கள் உங்களை மிகவும் ஏமாற்றுகின்றன. தந்தை கூறுகிறார்: அங்கு இராவண இராச்சியம் இருப்பதில்லை. அதனால் அங்கு அவற்றைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. எதனைப் பற்றியும் அங்கு கவலைப்பட வேண்டியதில்லை. அங்கும் கவலைப்பட வேண்டும் என்றால் பின்பு சுவர்க்கத்திற்கும் நரகத்திற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? குழந்தைகளாகிய நீங்கள் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவதற்காகத் தந்தையுடன் கற்கிறீர்கள். தந்தை விளங்கப்படுத்துகிறார்: நீங்கள் என்னை அவதூறு செய்யும்படி மாயை செய்கிறாள். நீங்கள் என்னை அவதூறு செய்தீர்கள். நான் வந்து உங்களை ஈடேற்றுகின்றேன். குழந்தைகளே, நீங்கள் தீய பார்வையைக் கொண்டிருந்தால் உங்களுக்கு நீங்களே இழப்பை ஏற்படுத்துவீர்கள். உங்களது இலக்கு மிகவும் உயர்ந்தது. இதனாலேயே பாபா கூறுகிறார்: உங்களது அட்டவணையைப் பாருங்கள். நான் பாவச் செயல்கள் எதனையும் செய்தேனா? நான் யாரையாவது ஏமாற்றினேனா? நீங்கள் இப்பொழுது பாவச் செயல்களை வெற்றி கொள்பவர் ஆகவேண்டும். குழந்தைகளாகிய உங்களைத் தவிர வேறு எவருக்கும் பாவச் செயல்களை வெற்றி கொள்ளும் காலத்தைப் பற்றித் தெரியாது. பாவச் செயல்களை வெற்றி கொள்ளும் காலம் 5000 வருடங்களுக்கு முன் இருந்தது எனத் தந்தை விளங்கப்படுத்துகிறார். பின்பு அவர்கள் பாவச் செயல்களைச் செய்வதால் பாவப் பாதைக்குள் செல்கிறார்கள். செயல்கள், நடுநிலையான செயல்கள், பாவச் செயல்கள் எனும் வார்த்தைகள் உள்ளன. மாயையின் இராச்சியத்தில் மக்களால் செய்யப்படும் செயல்கள் பாவம் நிறைந்தவை ஆகும். சத்திய யுகத்தில் விகாரங்கள் இல்லை. அங்கு பாவங்கள் செய்யப்படுவதும் இல்லை. இவை யாவும் உங்களுக்கு மாத்திரமே தெரியும். ஏனெனில் நீங்கள் ஒவ்வொருவரும் மூன்றாவது கண்ணான இந்த ஞானத்தைப் பெறுகிறீர்கள். நீங்கள் மூன்றாவது கண்ணை உடையவர்கள் ஆகுகிறீர்கள். தந்தை உங்களைத் திரிகாலதரிசி, திரிநேத்ரி ஆக்குகிறார். நீங்கள் ஆஸ்திகர் ஆகிவிட்டபடியால் திரிகாலதரிசிகளாகவும் ஆகிவிட்டீர்கள். அசரீரியான உலகம், சூட்சும உலகம், சரீர உலகம், 84 பிறவிச் சக்கரம், அத்துடன் எவ்வாறு ஏனைய சமய ஸ்தாபகர்கள் வந்தார்கள் என்னும் நாடகத்தின் இரகசியங்கள் முழுவதும் உங்கள் புத்தியில் இருக்கின்றன. அவர்களால் உங்களுக்கு ஜீவன் முக்தியை அளிக்க முடியாது. அவர்கள் குருமார்கள் என்றுகூட அழைக்கப்பட முடியாது. தந்தை ஒருவரே சகலருக்கும் சத்கதியை அளிப்பவர். அனைவரும் இப்பொழுது சத்கதியை அடைய உள்ளார்கள். அவர்கள் சமய ஸ்தாபகர்களே அன்றி குருமார்கள் அல்லர். சமய ஸ்தாகர்கள் சமயம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கான கருவிகள் ஆவார்கள். அவர்கள் எவருக்கும் சத்கதியை அளிப்பதில்லை. எவரும் அவர்களிடம் இருந்து சத்கதியைப் பெறவோ அல்லது அவர்களை நினைவு செய்வதால் எவருடைய பாவங்களும் அழிக்கப்படவோ முடியாது. அவை யாவும் பக்தி ஆகும். தந்தை விளங்கப்படுத்துகிறார்: மாயை மிகவும் சக்தி வாய்ந்தவள். அவளுடன் சண்டை நடக்கிறது. நீங்கள் சிவசக்தி பாண்டவ சேனை ஆவீர்கள். நீங்கள் அனைவரும் பாண்டவர்களும் வழிகாட்டிகளும் ஆவீர்கள். நீங்கள் சகலருக்கும் சாந்தி தாமத்திற்கும் சந்தோஷ பூமிக்கும் வழி காட்டுகிறீர்கள். நீங்களே வழிகாட்டிகள் ஆவீர்கள். தந்தையை நினைவு செய்வதால் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும் என்று அனைவருக்கும் கூறவேண்டும். அதன் பின்பு எவரேனும் பாவச் செயல்களைச் செய்தால் அவர் நூறுமடங்கு தண்டனையை அனுபவிப்பார். இயலுமானவரை பாவச் செயல்கள் எதனையும் செய்யாதீர்கள். பௌதீகப் புலன்கள் உங்களை மிகவும் ஏமாற்றுகின்றன. ஒவ்வொருவரினதும் செயற்பாடுகளில் இருந்தும் தந்தை இதனை விளங்கிக் கொள்கிறார். குழந்தைகள் மாயையின் புயல்களை அனுபவிக்கிறார்கள். ஆண், பெண் என்ற உணர்வு இருக்கும் பொழுதே புயல்கள் ஏற்படுகின்றன. ஆகையால் உங்கள் கண்களின் மீது அத்தகைய கட்டுபாடு இருக்க வேண்டும். நான் சிவபாபாவின் குழந்தை. சில குழந்தைகள் தந்தைக்குச் சத்தியம் செய்து ராக்கியைக் கட்டுகிறார்கள். இருந்தும் மாயை அவர்களை வெகுவாக ஏமாற்றி விடுவதால் அவர்களால் தங்களை விடுவித்துக் கொள்ள முடியாமல் இருக்கிறது. நீங்கள் உங்கள் பௌதீகப் புலன்களைக் கட்டுப்படுத்தும் பொழுது மட்டுமே உங்களால் கர்மாதீத நிலையை அடைய முடியும். நாங்கள் இலக்ஷ்மி, நாராயணனாக ஆகுவோம் என்று இலகுவாகக் கூறிவிடலாம். ஆனால் அதில் புரிந்துணர்வும் இருக்க வேண்டும். தந்தை கூறுகிறார்: வழிகாட்டல்களைப் பயிற்சியில் இடுங்கள். தொடர்ந்தும் 'பாபா பாபா" எனக் கூறுங்கள். நாங்கள் முழு ஆஸ்தியையும் பாபாவிடம் இருந்து பெறுவோம். நாங்கள் என்றும் எங்கேயும் இப்படியான ஓர் ஆசிரியரைப் பெறமாட்டோம். இவ்விடயங்களைத் தேவர்களுமே அறியமாட்டார்கள். அவ்வாறாயின் பிற்காலத்தில் வந்த ஏனைய சமயங்களைச் சேர்ந்தவர்கள் எவ்வாறு எதையேனும் அறிந்திருக்க முடியும்? பாபா கூறுகிறார்: இவர் ஏதாவது கூறினாலும் சிவபாபாவே கூறுகிறார் என்று கருதுங்கள். தாதா கூறுகிறார் என்று கருத வேண்டாம். இவர் எனது இரதம் ஆவார். அவரால் என்ன செய்ய முடியும்? குழந்தைகளாகிய உங்களுக்கு நான் இராச்சியத்தைத் தருகிறேன். இந்த இரதம் அதைச் செய்வதில்லை. இவர் முழுமையான ஏழை ஆவார். இவரும் தனது ஆஸ்தியை பாபாவிடம் இருந்து பெறுகிறார். நீங்கள் முயற்சி செய்வது போலவே இவரும் செய்கிறார். இவரும் ஒரு மாணவ வாழ்க்கையை மேற்கொள்கிறார். நான் இந்த இரதத்தைக் கடனாகப் பெற்றுள்ளேன். இவர் இப்பொழுது தூய்மையற்றவர் ஆவார். நீங்கள் இப்பொழுது பூஜிக்கத் தகுதிவாய்ந்த தேவர்கள் ஆகுவதற்குக் கற்கிறீர்கள். அதாவது மனிதர்களில் இருந்து தேவர்கள் ஆகுகிறீர்கள். இது ஒருவரின் பாக்கியத்தில் இல்லை என்றால் எவ்வாறு சிவபாபா இவரில் வந்து கற்பிக்கிறார் எனும் விடயத்தில் தனக்கு சந்தேகங்கள் இருப்பதாகக் கூறி எதையுமே அவர் விளங்கிக் கொள்ள மாட்டார். தந்தையை நினைவு செய்யாமல் உங்கள் பாவங்கள் அழிக்கப்பட முடியாது. பின் முழுத் தண்டனையையும் அனுபவிக்க நேரிடும். ஓர் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகிறது. ஓர் அரசனுக்குப் பல பணிப்பெண்கள் இருக்கிறார்கள்! பாபாவிற்கு அரசர்களுடன் அதிக தொடர்பு இருந்தது. சீதனத்தின் ஒரு பாகமாக பணிப் பெண்களும் கொடுக்கப்படுகிறார்கள். இங்கேயே இவ்வளவு பணிப்பெண்கள் இருந்தால் சத்திய யுகத்தில் எவ்வளவு பணிப்பெண்கள் இருப்பார்கள் என்று நினைத்துப் பாருங்கள்! இதுவும் ஸ்தாபிக்கப்படுகின்ற ஓர் இராச்சியமே ஆகும். ஒவ்வொருவரும் என்ன செய்கிறார்கள் என்று பாபாவிற்குத் தெரியும். இப்பொழுது அவர்கள் மரணிக்க நேரிடின் அவர்கள் என்னவாக ஆகுவார்கள் என அவர்களின் அட்டவணையில் இருந்து பாபாவினால் கூறமுடியும். ஒவ்வொருவரும் வரிசைக்கிரமமாக முடிவில் கர்மாதீத நிலையை அடைவார்கள். இது ஒரு வருமானம் ஆகும். மக்கள் வருமானத்தைச் சம்பாதிப்பதற்கு எவ்வளவு மும்முரமாக உழைக்கிறார்கள். அவர்கள் சாப்பிடும் போது கூட தொலைபேசியுடன் இருப்பார்கள். அப்படியானவர்களால் இந்த ஞானத்தைப் பெறமுடியாது. ஏழைகளும் சாதாரண மக்களுமே இங்கு வருகிறார்கள். செல்வந்தர்கள் தங்களுக்கு நேரமில்லை எனக் கூறுகிறார்கள். ஓஹோ! நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் தந்தையை நினைவு செய்வதன் மூலம் உங்கள் பாவங்களை அழிக்கச் செய்வதே ஆகும். பாபா மீண்டும் மீண்டும் இனிமையான குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகிறார். நீங்கள் இதை அனைவருக்கும் கூறவேண்டும். அப்போது எவரும் சிவபாபா வந்தது எங்களுக்குத் தெரியாது என்று கூறமாட்டார்கள். நாள் முழுவதும் தொடர்ந்தும் 'பாபா பாபா" என்று கூறுங்கள். சில பெண் குழந்தைகள் பாபாவை அதிகளவு நினைவு செய்கிறார்கள். சில குழந்தைகளுக்கு சிவபாபாவின் பெயரைக் கூறிய உடனேயே கண்களில் அன்புக் கண்ணீர் பெருகுகிறது. அவர்கள் சிவபாபாவை வந்து சந்திப்பதற்கும் மிகுந்த ஆர்வம் உடையவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் ஒருநாளும் பாபாவைக் கண்டதில்லை. இருந்தும் அவரைச் சந்திப்பதற்கு மிகவும் ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள். ஆனால் அவரைச் சந்தித்தவர்கள் அவரை நம்பாதவர்களாக இருக்கிறார்கள்! அவர்களோ தூரத்தில் இருந்தாலும் அன்புக் கண்ணீர் வடிக்கிறார்கள். இது ஓர் அதிசயமே! பலர் பிரம்மாவின் காட்சிகளைக் காண்கிறார்கள். நீங்கள் மேலும் முன்னேறிச் செல்லும் போது பலர் காட்சிகளைக் காண்பார்கள். ஒருவர் மரணிக்கும் தருணத்தில் அவரிடம் பலர் வந்து கடவுளை நினைவு செய்யுமாறு கூறுகிறார்கள். நீங்களும் சிவபாபாவை நினைவு செய்ய வேண்டும். தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, தொடர்ந்து உங்கள் முயற்சிக்காக நேரத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்குச் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நீங்கள் நேரத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். வருமானம் மிகவும் பெரியது. சிலருக்கு எப்படி விளங்கப்படுத்தினாலும் அது அவர்களின் புத்தியில் பதிவதில்லை. தந்தை கூறுகிறார்: அப்படி ஆகாதீர்கள்! உங்களுக்கு நன்மையை ஏற்படுத்துங்கள். தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள். சகல மனிதர்களிலும் பார்க்க அதி மேன்மையானவர்களாகத் தந்தை உங்களை ஆக்குகிறார். இது உங்கள் இலட்சியமும் குறிக்கோளும் ஆகும். சேவை செய்வதற்குப் பல விதமான வழிகாட்டல்களை பாபா தொடர்ந்தும் காட்டுகிறார். நீங்கள் உண்மையையே கூறுகிறீர்கள் என்று அவர்கள் விளங்கும் அளவிற்கு நீங்கள் அனைவருக்கும் செய்தியைக் கொடுக்க வேண்டும். இந்த யுத்தத்தினாலேயே குறிப்பாக பாரதமும் பொதுவாக உலகமும் அமைதியையும் சந்தோஷத்தையும் அடையும். நீங்கள் அத்தகைய துண்டுப் பிரசுரங்களை சகல மொழிகளிலும் அச்சிட வேண்டும். பாரதம் மிகவும் பெரியது! தனக்கு இதைப் பற்றித் தெரிந்திருக்கவில்லை என்று எவரும் கூற முடியாத விதத்தில் ஒவ்வொருவரும் இதை அறிய வேண்டும். ஓ! நாங்கள் விமானத்தில் இருந்து துண்டுப்பிரசுரம் போட்டோம். பத்திரிகைகளில் பிரசுரித்தோம். நீங்கள் விழித்து எழவில்லை என்று நீங்கள் கூறுவீர்கள். இதுவும் காட்டப்பட்டுள்ளது. அச்சா.

இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய் தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்களிடம் உள்ள சகல தீய பழக்க வழக்கங்களைச் சோதித்து அவற்றை அகற்றுவதற்கு முயற்சி செய்யுங்கள். உங்கள் நேர்மையான அட்டவணையை வைத்திருங்கள். தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்றுங்கள்.

2. தந்தையின் பெயருக்கு அவதூறு ஏற்படுத்தக் கூடிய எந்தச் செயல்களையும்; செய்யாதீர்கள். உங்கள் முன்னேற்றத்தில் அக்கறை உள்ளவராக இருங்கள். மிகச் சிறிதளவிலேனும் தீய பார்வையைக் கொண்டிருக்காதீர்கள்;.

ஆசீர்வாதம்:
நீங்கள் பௌதீகமோ அல்லது சூட்சுமமானதோ ஒவ்வொரு கட்டளையையும் பின்பற்றி தந்தைக்கு முற்றிலும் கீழ்ப்படிவானவர் ஆகுவீர்களாக.

சூட்சுமமான கட்டளைகளைப் பின்பற்றுவதில் கீழ்ப்படிவாக இருக்கும் குழந்தைகள், பௌதீகமான கட்டளைகளைப் பின்பற்றும் சக்தியை விருத்தி செய்து கொள்கிறார்கள். சூட்சுமமானதும் பிரதானமானதுமான கட்டளை: சதா நினைவில் நிலைத்திருந்து உங்களின் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்களில் தூய்மை ஆகுங்கள். உங்களின் எண்ணங்களில் எந்தவிதமான தூய்மையின்மையோ அல்லது அசுத்தமோ இருக்கக்கூடாது. உங்களின் பழைய, தூய்மையற்ற சம்ஸ்காரங்கள் உங்களின் எண்ணங்களைத் தொடுமாயின் உங்களை முழுமையான வைஷ்ணவர்கள் என்றோ அல்லது சம்பூரணமாகத் தூய்மையானவர்கள் என்றோ அழைக்க முடியாது. எனவே கட்டளைகளைப் பின்பற்றாமல் ஓர் எண்ணமேனும் இருக்கக்கூடாது. அப்போதே நீங்கள் சம்பூரணமாகக் கீழ்ப்படிவானவர்கள் என்று அழைக்கப்படுவீர்கள்.

சுலோகம்:
தந்தையை அறிந்து உங்களின் இதயபூர்வமாக பாபா எனச் சொல்வதே மிகப் பெரிய சிறப்பியல்பு ஆகும்.

அவ்யக்த சமிக்கை: சதா ஆட்ட அசைக்க முடியாதவராகவும் நிலையான ஸ்திதியையும் அனுபவம் செய்யுங்கள்;.

உங்களின் ஸ்திதியை நிலையாக ஆக்குவதற்கு ஒரு கர்மயோகி ஆகுங்கள். ஒரு கர்மயோகியின் முன்னால் என்ன வகையான நபர் வந்தாலும் அவர் சதா அன்பாகவும் பற்றற்றவராகவும் இருப்பார். இந்த ஞானத்தினூடாக அவர் நடிக்கும் பாகம் அதுவே என்பதை அவர் உணர்ந்திருப்பார். நல்லவர்களை நல்லவர்களாகக் கருதி பற்றற்ற பார்வையாளராக இருப்பார். ஒரு பற்றற்ற பார்வையாளராக அவர் தீயவராக இருப்பவரையும் கருணைப் பார்வையுடன் அவதானிப்பார். கருணைநிறைந்தவராக இருந்த வண்ணம் அவர் உபகாரியாகவும் அவரை மாற்றுவதற்கான நல்லாசிகளைக் கொண்டவராகவும் ஆகுவார். உங்களின் ஸ்திதியை நிலையாக ஆக்குவதற்கான வழிமுறை இதுவே ஆகும்.