25.07.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நன்றாகக் கற்று, இராச்சியத் திலகத்தை உங்களுக்கு இட்டுக் கொள்ள வேண்டும் என்ற ஒரேயொரு அக்கறையை மாத்திரம் சதா கொண்டிருங்கள். இக்கல்வியின் மூலம் நீங்கள் ஓர் இராச்சியத்தைப் பெறுகிறீர்கள்.

கேள்வி:
எந்த ஒரு விடயத்தையிட்டுக் குழந்தைகளான நீங்கள் மனந்தளர்வு அடையாது, உற்சாகத்துடன் இருக்க வேண்டும்?

பதில்:
இலக்ஷ்மி நாராயணன் ஆகுவதையிட்டு, நீங்கள் சதா உற்சாகமாக இருக்க வேண்டும்; இதற்காக முயற்சி செய்ய வேண்டுமேயன்றி, என்றுமே மனம் தளர்வடையாதீர்கள். இதற்கான கல்வி மிகவும் இலகுவானது. நீங்கள் வீட்டில் வாழும்பொழுதும் இதனைக் கற்கலாம். இதற்காகக் கட்டணம் எதுவும் அறவிடப்பட மாட்டாது. ஆனால் உங்களுக்கு நிச்சயமாகத் தைரியம் தேவை.

பாடல்:
நீங்களே தாயும், நீங்களே தந்தையும்…..

ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள், உங்கள் தந்தையின் புகழைக் கேட்டீர்கள். ஒரேயொருவருக்கான புகழே உள்ளது. பிரம்மாவும் விஷ்ணுவும், சங்கரரும் போற்றப்படாத பொழுது, வேறு எவருக்கான புகழும் பாடப்பட முடியாது. படைப்பு பிரம்மாவின் மூலமும் விநாசம் சங்கரரின் மூலமும் பராமரிப்பு விஷ்ணூவின் மூலமும் மேற்கொள்ளப்படுகின்றன. சிவபாபாவே இலக்ஷ்மியையும், நாராயணனையும் அத் தகுதியைப் பெறுமாறு ஆக்கினார். அவர் மட்டுமே போற்றப்படுகின்றார். அவரையன்றி, வேறு யாரைப் புகழ முடியும்? அவர்களை அவ்வாறு ஆக்குவதற்கு ஓர் ஆசிரியர் இல்லாதிருந்தால், அவர்களால் அவ்வாறு ஆகியிருக்க முடியாது. அதன்பின்னர் இராச்சியத்தை ஆட்சிசெய்த சூரிய வம்சத்திற்குப் புகழ் உள்ளது. சங்கமயுகத்தில் தந்தை வந்திருக்காது விட்டால், அவர்களால் தமது இராச்சியத்தைப் பெற்றிருக்க முடியாது. வேறு எவருக்கான புகழும் இல்லை. வெளிநாட்டினர் போன்றோரையும் புகழ வேண்டிய அவசியம் இல்லை. ஒரேயொருவருக்கு அன்றி, வேறு எவருக்கான புகழும் இல்லை. சிவாபாபாவே அதிமேலானவர். அவரினூடாகவே நீங்கள் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோரிக் கொள்கின்றீர்கள். ஆகையால் அவர் மிகவும் நன்றாக நினைவுசெய்யப்பட வேண்டும். சட்டநிபுணர் ஆகுவதற்கு, ஒருவர் தானாகவே கற்க வேண்டியிருப்பதைப் போன்று, நீங்கள் ஓர் அரசராக வேண்டுமாயின், அதற்காக நீங்கள் கற்க வேண்டும். சிவபாபாவே உங்களுக்குக் கற்பிப்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நன்றாகக் கற்பவர்கள் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோருவார்கள். கற்காதவர்களால் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோர முடியாது. நீங்கள் கற்பதற்காகவே ஸ்ரீமத்தைப் பெறுகின்றீர்கள். தூய்மை ஆகுதலே பிரதான விடயம் என்பதாலேயே, நீங்கள் இதனைக் கற்க வேண்டும். இந்த நேரத்தில் அனைவரும் தமோபிரதானாகவும், தூய்மை அற்றவர்களாக இருப்பதும் உங்களுக்குத் தெரியும். நல்ல மனிதர்களும், தீய மனிதர்களும் உள்ளனர். தூய்மையாக இருப்பவர்கள் நல்லவர்கள் எனப்படுகின்றார்கள். ஒருவர் நன்றாகக் கற்று, ஒரு முக்கியஸ்தர் ஆகினால், அவர் புகழப்படுகின்றார். எவ்வாறாயினும் அனைவரும் தூய்மை அற்றவர்களே. தூய்மை அற்றவர்கள், தூய்மை அற்றவர்களைப் புகழ்கின்றார்கள். சத்திய யுகத்தில், அவர்கள் அனைவரும் தூய்மையானவர்கள். அங்கே எவரையும் எவரும் புகழ்வதில்லை. இங்கே தூய்மையான சந்நியாசிகளும், தூய்மையற்ற இல்லறத்தினரும் உள்ளனர். ஆகவே, தூய்மையானவர்கள் புகழப்படுகின்றார்கள். அங்கே, அரசரும் அரசியும் எவ்வாறோ அவ்வாறே பிரஜைகளும் இருக்கின்றார்கள். ‘தூய்மையானது’, ‘தூய்மையற்றது’ எனக் கூறுவதற்கு, அங்கே வேறு எந்தத் தர்மமும் இருக்க மாட்டாது. இங்கே இல்லறத்தினரையும் சிலர் தொடர்ந்தும் புகழ்ந்து பாடுகின்றார்கள். உலகில் காரிருள் சூழ்ந்துள்ளது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது இதனைப் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். ஆகையால், குழந்தைகளாகிய நீங்கள் கற்பதில் அக்கறை கொண்டு, உங்களை அரசர்கள் ஆக்க வேண்டும். நன்றாக முயற்சி செய்பவர்கள் சுயாட்சி என்ற திலகத்தை இட்டுக் கொள்கின்றார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இலக்ஷ்மி நாராயணன் ஆகுவதைப் பற்றி உற்சாகமாக இருக்க வேண்டும். இதனையிட்டுக் குழப்பம் அடைய வேண்டிய அவசியமில்லை. நீங்கள் முயற்சி செய்ய வேண்டுமே அன்றி, மனந்தளரக்கூடாது. இது படுக்கையில் படுத்தவாறே கற்கக்கூடிய ஒரு கல்வியாகும். வெளிநாட்டில் வாழ்ந்தாலும் உங்களால் இதனைக் கற்க முடியும். நீங்கள் வீட்டிலும் கற்கலாம். இது அத்தகையதொரு மிகவும் இலகுவான கல்வி. உங்கள் பாவங்களை அழிப்பதற்கு முயற்சி செய்வதுடன், பிறருக்கும் விளங்கப்படுத்துங்கள். ஏனைய சமயத்தினருக்கும் நீங்கள் விளங்கப்படுத்தலாம். ‘நீங்கள் ஓர் ஆத்மா’ என்பதை நீங்கள் எவரிடமும் கூறலாம். ஆத்மாக்கள் அனைவரதும் ஆதிதர்மம் ஒன்றேயாகும். அதில் எந்த வேறுபாடும் இருக்க மாட்டாது. சரீரங்களினாலேயே எண்ணற்ற சமயங்கள் உள்ளன, ஆனால் ஆத்மாக்கள் ஒன்றேயாகும். ஆத்மாக்கள் அனைவரும் தந்தையின் குழந்தைகள். பாபா ஆத்மாக்களாகிய உங்களைத் தத்தெடுத்துள்ளார். இதனாலேயே ‘பிரம்மாவின் வாய்வழித் தோன்றல்கள்’ நினைவு கூரப்பட்டுள்ளனர். ஆத்மாக்களின் தந்தை யார் என நீங்கள் எவருக்குமே விளங்கப்படுத்தலாம். நீங்கள் அவர்களிடம் நிரப்பக் கொடுக்கும் படிவம் மிகவும் அர்த்தம் நிறைந்தது. அனைவராலும் நினைவு செய்யப்படுகின்ற தந்தை ஒருவர் நிச்சயமாக உள்ளார். ஆத்மாக்கள் தமது தந்தையை நினைவு செய்கின்றார்கள். இக்காலத்தில், பாரதத்தில், அவர்கள் எவரையுமே ‘தந்தை’ என்று அழைக்கின்றார்கள். நகர பிதாவையும் (மேயர்) அவர்கள் ‘தந்தை’ என்றே அழைக்கின்றார்கள். எவ்வாறாயினும், ஆத்மாக்களின் தந்தை யார் என்பதை எவரும் அறியாமல் உள்ளார்கள். ‘நீங்களே தாயும் தந்தையும்’ என அவர்கள் பாடுகின்றார்கள். ஆனால், எவருக்குமே அவர் யார் என்பதோ, அவர் எவ்வாறானவர் என்பதோ தெரியாது. பாரதத்தில் மாத்திரமே நீங்கள் அவரைத் ‘தாயும், தந்தையும்’ என அழைக்கின்றீர்கள். தந்தையே இங்கு வந்து, வாய்வழித் தோன்றல்களாகிய உங்களைப் படைக்கின்றார். பாரதம் தாய்நாடு என்று அழைக்கப்படுகின்றது. ஏனெனில், இங்கேயே சிவபாபா தாயும், தந்தையும் என்ற தனது பாகத்தை நடிக்கின்றார். இங்கு மட்டுமே கடவுள் தாயும் தந்தையும் என நினைவுகூரப்படுகின்றார். வெளிநாட்டில், அவர்கள், தந்தையான கடவுள் என்று மட்டுமே அவரை அழைக்கின்றார்கள். ஆனால், அவர் குழந்தைகளைத் தத்தெடுப்பதற்கு ஒரு தாயும் இருக்க வேண்டும். ஒரு மனிதன் ஒரு மனைவியை ஏற்றுக்கொண்ட பின்னரே, அவளுடன் இணைந்து குழந்தைகளை உருவாக்குகின்றார். ஒரு படைப்பு உருவாக்கப்படுகின்றது. இங்கும், பரமதந்தை, பரமாத்மாவான தந்தை இவருக்குள் பிரவேசித்து, இவரைத் தத்தெடுக்கின்றார். குழந்தைகள் உருவாக்கப்படுகின்றார்கள். இதனாலேயே அவர் தாயும் தந்தையும் என்று அழைக்கப்படுகின்றார். அவர் ஆத்மாக்களின் தந்தை. அதன்பின்னர் அவர் இங்கே வந்து, படைப்பை உருவாக்குகின்றார். இங்கே நீங்கள் அவரின் குழந்தைகளாக ஆகுவதாலேயே, அவரைத் தாயும் தந்தையும் என அழைக்கின்றீர்கள். அது ஆத்மாக்கள் அனைவரும் வசிக்கின்ற, உங்கள் இனிய வீடாகும். தந்தையைத் தவிர, வேறு எவராலும் உங்களை அங்கே திரும்பவும் அழைத்துச் செல்ல முடியாது. நீங்கள் சந்திக்கின்ற எவரிடமும் ‘உங்கள் இனிய வீட்டிற்கு திரும்பிச் செல்ல விரும்புகின்றீர்களா?’ என வினவுங்கள். அவ்வாறாயின் நீங்கள் நிச்சயமாகத் தூய்மையாக வேண்டும். இப்பொழுது நீங்கள் தூய்மை அற்றவர்களாக இருக்கின்றீர்கள். இது தமோபிரதான் உலகமான, கலியுகமாகும். நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். கலியுக ஆத்மாக்களினால் வீடு திரும்ப முடியாது. ஆத்மாக்கள் இனிய வீட்டில் வாழும்பொழுது, தூய்மையாகவே இருக்கின்றார்கள். தந்தை இப்பொழுது விளங்கப்படுத்துகின்றார்: தந்தையை நினைவு செய்வதனால் மாத்திரமே உங்கள் பாவங்கள் அழிக்கப்பட முடியும். சரீரதாரிகளை நினைவு செய்யாதீர்கள். நீங்கள் எந்தளவிற்கு அதிகமாகத் தந்தையை நினைவு செய்கின்றீர்களோ, அந்தளவிற்கு அதிகமாக நீங்கள் தூய்மையாகி, வரிசைக்கிரமமாக, ஓர் அந்தஸ்தையும் கோருவீர்கள். இலக்ஷ்மி நாராயணனின் படத்தை எவருக்குமே மிகவும் இலகுவாக விளங்கப்படுத்தலாம். பாரதத்தில் அவர்களின் ஆட்சியே நிலவியது. அவர்கள் தங்களுடைய இராச்சியத்தை ஆட்சி செய்தபொழுது, உலகில் அமைதி நிலவியது. தந்தையால் மாத்திரமே உலகில் அமைதியை ஏற்படுத்த முடியும். அதனைச் செய்வதற்கான சக்தி வேறு எவரிடமும் இல்லை. தந்தை புதிய உலகிற்காக இப்பொழுது எங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றார். நாங்கள் எவ்வாறு அரசர்களுக்கு எல்லாம் அரசர்களாக முடியும் என அவர் உங்களுக்குக் கூறுகின்றார். தந்தை மாத்திரமே ஞானம் நிறைந்தவர். ஆனால் அவரிடம் என்ன ஞானம் உள்ளது என்பதை எவருமே அறியாதுள்ளார்கள். எல்லையற்ற தந்தை மாத்திரமே உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியின் வரலாற்றையும் புவியியலையும் உங்களுக்குக் கூறுகின்றார். கடவுளைச் சர்வவியாபி என மனிதர்கள் சிலவேளைகளில் கூறுகின்றனர், சிலவேளைகளில் அனைவருக்கு உள்ளும் என்ன உள்ளது என்பது அவருக்குத் தெரியும் என்றும் அவர்கள் கூறுகின்றார்கள். அவ்வாறாயின் அவர்கள் தம்மைக் கடவுள் என்று அழைக்கக்கூடாது! தந்தை இங்கே அமர்ந்திருந்து, இவ்விடயங்கள் அனைத்தையும் விளங்கப்படுத்துகின்றார். இவ்விடயங்கள் அனைத்தையும் மிகவும் நன்றாகக் கிரகித்து, முகமலர்ச்சியுடன் இருங்கள். இலக்ஷ்மி நாராயணனின் படங்கள் எப்பொழுதும் அவர்கள் முகமலர்ச்சியுடனேயே இருப்பதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. பாடசாலையிலும், உயர்ந்த வகுப்புகளுக்கு கற்கச் செல்லும் மாணவர்கள் மிகவும் முகமலர்ச்சியுடனே இருக்கின்றார்கள். ஏனையோரும் அவர்கள் மிகவும் பிரதானமான பரீட்சையில் சித்தியடைய உள்ளார்கள் என்பதைப் புரிந்து கொள்வார்கள். இதுவும் மிகவும் மேன்மையானதொரு கல்வியாகும். இங்கே கட்டணம் போன்ற எதற்கான அவசியமும் இல்லை. தைரியம் மாத்திரமே தேவை. உங்களை ஆத்மாவெனக் கருதித் தந்தையை நினைவு செய்யுங்கள். இதிலேயே மாயை தடைகளை ஏற்படுத்துகின்றாள். தந்தை கூறுகின்றார்: தூய்மை ஆகுங்கள்! சிலர் தந்தைக்கு இதற்கான சத்தியத்தைச் செய்த பொழுதிலும் பின்னர் தமது முகங்களை அவலட்சணம் ஆக்கிக் கொள்கின்றார்கள். மாயை மிகவும் சக்தி வாய்ந்தவள். அவர்கள் சித்தி அடையாத பொழுது, அவர்களின் பெயர்கள் நினைவுகூரப்படுவதில்லை. பிறரைப் பொறுத்தவரை ‘இன்ன இன்னார் ஆரம்பம் முதல் தொடர்ந்தும் மிகவும் நன்றாக முன்னேறுகின்றார்கள்’ என்று கூறப்படும். அவர்கள் போற்றப்படுகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: உங்களுக்காக நீங்கள் முயற்சி செய்து, ஓர் இராச்சியத்தைக் கோருங்கள். இக்கல்வியின் மூலம் நீங்கள் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோர வேண்டும். இது இராஜயோகமே அன்றி, பிரஜாயோகம் (பிரஜைகள் ஆகுகின்ற யோகம்) அல்ல. எவ்வாறாயினும், பிரஜைகளும் உருவாக்கப்பட வேண்டும். சிலரது முகங்களில் இருந்தும், அவர்கள் செய்கின்ற சேவையிலிருந்தும் அவர்கள் எதற்குத் தகுதியானவர்கள் என்பதை உங்களால் கூறமுடியும். ஒரு மாணவன் வீட்டில் நடந்து கொள்வதைக் கொண்டு, அவன் முதற்தரத்திலா அல்லது மூன்றாம் தரத்திலா சித்தி எய்துவான் என்று உங்களால் புரிந்துகொள்ள முடியும். இங்கும் அவ்வாறே நிகழ்கின்றது. இறுதியில் பரீட்சைகள் முடியும்பொழுது, நீங்கள் அனைத்திற்கான காட்சிகளையும் காண்பீர்கள். ஒரு காட்சி கிடைப்பதற்கு அதிகக் காலம் எடுக்க மாட்டாது. அப்பொழுது நீங்கள் சித்தியடையாமல் விட்டதையிட்டு வெட்கப்படுவீர்கள். சித்தி அடையாதவர்களை யார் விரும்புவார்கள்? மக்கள் திரைப்படங்கள் பார்க்கும்பொழுது, மிகவும் மகிழ்ச்சி அடைகின்றார்கள். ஆனால் தந்தை கூறுகின்றார்: திரைப்படங்களே உங்களை அழுக்கானவர்கள் ஆக்குவதில் முதல் இலக்கத்தைப் பெறுகின்றன. பொதுவாக திரைப்படங்கள் பார்க்கச் செல்பவர்கள் தோல்வி அடைந்து, வீழ்ந்து விடுகிறார்கள். ஒரு திரைப்படம் பார்க்காமல் உறக்கத்திற்குச் செல்ல முடியாத சில பெண்களும் உள்ளனர். திரைப்படம் பார்க்கின்றவர்கள் நிச்சயமாகத் தூய்மை அற்றவர்கள் ஆகுவதற்கான முயற்சியையே செய்வார்கள். இங்கு இப்பொழுது நடக்கின்ற அனைத்தும், தமது சந்தோஷத்திற்கென மக்கள் நினைக்கின்ற அனைத்தும் உண்மையில் அவர்களுக்குத் துன்பத்தை மட்டுமே கொடுக்கின்றன. அந்தச் சந்தோஷம் அழியக்கூடியது. அநாதியான தந்தையிடம் இருந்து மட்டுமே உங்களால் அழியாத சந்தோஷத்தைப் பெற முடியும். உங்களை இலக்ஷ்மி நாராயணனைப் போன்றவர்களாக பாபா ஆக்குவதை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். முன்னர் நீங்கள் 21 பிறவிகளைப் பற்றி எழுதுவதுண்டு. இப்பொழுது பாபா 50 முதல் 60 பிறவிகளைப் பற்றிப் பேசுகின்றார். ஏனெனில் துவாபர யுகத்தில் கூட நீங்கள் முதலில் மிகவும் செல்வந்தர்களாகவும் சந்தோஷமானவர்களாகவும் இருந்தீர்கள். நீங்கள் தூய்மை அற்றவர்கள் ஆகிய பொழுதிலும், உங்களிடம் இனனமும் பெருமளவு செல்வம் இருந்தது. நீங்கள் முற்றிலும் தமோபிரதான் ஆகும்பொழுதே உங்கள் துன்பம் ஆரம்பம் ஆகின்றது. முதலில் நீங்கள் சந்தோஷமாகவே இருக்கின்றீர்கள். நீங்கள் மிகவும் சந்தோஷம் அற்றவர்கள் ஆகும்பொழுதே, தந்தை வருகின்றார். அவர் மகாபாவிகளாகிய அஜாமில் போன்றவர்களையும் ஈடேற்றுகின்றார். தந்தை கூறுகின்றார்: நான் அனைவரையும் மீண்டும் முக்தி தாமத்திற்கு அழைத்துச் செல்வேன். அதன்பின்னர் நான் உங்களுக்குச் சத்திய யுக இராச்சியத்தைக் கொடுப்பேன். அனைவரும் நன்மை அடைகின்றனர். நான் அனைவரையும் அமைதி அல்லது சந்தோஷம் என்ற அவர்களின் இலக்கிற்கு அழைத்துச் செல்கின்றேன். சத்தியயுகத்தில் அனைவரும் சந்தோஷமாக இருக்கின்றார்கள். அமைதி தாமத்திலும் அனைவரும் சந்தோஷமாகவே இருக்கின்றார்கள். உலகில் அமைதி நிலவ வேண்டும் என மக்கள் வேண்டுகின்றார்கள். அவர்களிடம் கூறுங்கள்: “இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியம் நிலவிய பொழுது, உலகில் அமைதி நிலவியது. அங்கே துன்பம் இருக்க முடியாது: துன்பமோ அல்லது அமைதி இன்மையோ இருக்க முடியாது. இங்கே ஒவ்வொரு வீட்டிலும் அமைதி இன்மை உள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் அமைதி இன்மையே நிலவுகின்றது. முழு உலகிலும் அமைதியின்மை நிலவுகின்றது. அது பல துண்டுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பற்பல பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு 100 மைல்களுக்கு இடையே வேறு மொழி உள்ளது. சமஸ்கிருதமே பாரதத்தின் புராதன மொழி என அவர்கள் கூறுகின்றார்கள். ஆனால், எவருக்கும் ஆதிசனாதன தேவ தர்மத்தைப் பற்றிக் கூட தெரியாது. ஆகவே, அதுவே புராதன மொழியென அவர்களால் எவ்வாறு கூறமுடியும்? எப்பொழுது ஆதி சனாதன தேவ தர்மம் நிலவியது என்பதை நீங்கள் அவர்களிடம் கூறவேண்டும். உங்கள் மத்தியிலும் இது வரிசைக்கிரமமாகவே உள்ளது. சிலர் மந்த புத்தி உடையவர்களாக உள்ளார்கள். ஒருவருக்குக் கற்புத்தி உள்ளதைக் கண்டுவிட முடியும். அறியாமைப் பாதையில் அவர்கள் கூறுகின்றார்கள்: அன்புள்ள கடவுளே, இவரின் புத்தியின் பூட்டைத் திறந்து விடுங்கள்! தந்தை குழந்தைகளாகிய உங்கள் அனைவருக்கும் இந்த ஞானம் என்ற ஞானோதயத்தை கொடுப்பதனால், பூட்டு திறக்கின்றது. இருப்பினும், சிலரின் புத்தியோ சிறிதளவேனும் திறக்கப்படுவதில்லை. ‘பாபா, நீங்களே விவேகிகளின் புத்தி, தயவு செய்து எனது கணவரின் புத்தியைத் திறந்து விடுங்கள்’ என நீங்கள் கூறுகின்றீர்கள். தந்தை கூறுகிறார்: அதற்காக நான் இங்கே வரவில்லை. நான் இங்கே அமர்ந்திருந்து, ஒவ்வொருவரின் புத்தியின் பூட்டையும் திறப்பதில்லை. அவ்வாறாயின், அனைவரது புத்தியும் திறக்கப்பட்டு, அனைவருமே சக்கரவர்த்தியும் சக்கரவர்த்தினியும் ஆகுவார்கள். நான் எவ்வாறு அனைவரது புத்தியின் பூட்டையும் திறக்க முடியும்? அவர்கள் சத்தியயுகத்திற்குச் செல்லப் போவதில்லை எனில், என்னால் எவ்வாறு அவர்களின் பூட்டைத் திறக்க முடியும்? நாடகத்திற்கு ஏற்ப, அவரது புத்தி சரியான நேரத்தில் திறக்கப்படும். என்னால் எவ்வாறு அதனைத் திறக்க முடியும்? அதுவும் நாடகத்தில் தங்கியுள்ளது. அனைவராலும் முழுமையாகச் சித்தி எய்த முடியாது. ஒரு பாடசாலையிலும் அது வரிசைக்கிரமமாகவே உள்ளது. இதுவும் ஒரு கல்வியாகும். பிரஜைகளும் உருவாக்கப்பட வேண்டும். அனைவரது புத்தியும் திறக்கப்பட வேண்டுமாயின், பிரஜைகள் எங்கிருந்து வருவார்கள்? அது நியதி அல்ல. குழந்தைகளாகிய நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரின் முயற்சியில் இருந்தும் கூறிவிடலாம். நன்றாகக் கற்பவர்கள் எங்கும் அழைக்கப்படுகின்றார்கள். யார் நன்றாகச் சேவை செய்கின்றார்கள் என்பதை பாபா அறிவார். குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் நன்றாகக் கற்க வேண்டும். நீங்கள் நன்றாகக் கற்ற பின்னர், நான் உங்களை வீட்டிற்கு அழைத்துச் சென்று, உங்களைச் சுவர்க்கத்திற்கு அனுப்புகிறேன். இல்லாவிட்டால், தண்டனை கடுமையாக இருப்பதுடன், அந்தஸ்தும் அழிக்கப்பட்டு விடும். ஒரு மாணவர் தனது ஆசிரியரின் பெயரைப் பெருமைப்படுத்த வேண்டும். நீங்கள் சத்தியயுகத்தில் இருந்த பொழுது, தெய்வீகப் புத்தியைக் கொண்டிருந்தீர்கள். இப்பொழுது இது கலியுகம் என்பதால், எவ்வாறு எவரேனும் சத்தியயுகப் புத்தியைக் கொண்டிருக்க முடியும்? ஒரேயொரு இராச்சியமும், ஒரேயொரு தர்மமும் இருந்தபொழுது, உலகில் அமைதி நிலவியது. பாரதத்தில் அவர்களின் இராச்சியம் இருந்த பொழுது, உலகில் அமைதி நிலவியது என்று நீங்கள் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கலாம். இறுதியில், அனைவரும் நிச்சயமாக இதனைப் புரிந்து கொள்வார்கள். குழந்தைகளாகிய உங்கள் பெயர்கள் போற்றப்படும். மக்கள் ஏனைய கல்விகளில், பல புத்தகங்கள் போன்றவற்றைக் கற்கின்றார்கள். இங்கே உங்களுக்கு அது போன்ற எதுவும் இல்லை. இக்கல்வி மிக இலகுவானது. ஆனால், நல்ல மகாராத்திகளுமே நினைவுசெய்வதில் சித்தி எய்துவதில்லை. நினைவுச் சக்தி இல்லாத பொழுது, இந்த ஞான வாள் வேலை செய்ய மாட்டாது. நீங்கள் பெருமளவு நினைவு செய்தால் மட்டுமே அந்தச் சக்தி இருக்க முடியும். ஒருவர் பந்தனத்தில் இருந்தாலும், அவர் தொடர்ந்தும் பாபாவை நினைவு செய்தால், அதில் பெருமளவு நன்மை ஏற்படும். சிலர் பாபாவை என்றுமே சந்திக்காமல் இருந்த பொழுதிலும், பாபாவின் நினைவில் தங்கள் சரீரங்களை நீங்கிச் செல்கின்றார்கள். ஆகையால், அவர்கள் அதிகளவு பாபாவை நினைவுசெய்ததால், மிகவும் உயர்ந்த அந்தஸ்தைக் கோருகின்றார்கள். அவர்கள் தந்தையின் நினைவில் அன்புக் கண்ணீர் சிந்துகின்றார்கள். அக்கண்ணீர், முத்துக்கள் ஆகுகின்றன. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. நீங்கள் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோருவதற்கு, உங்களில் முயற்சியைச் செய்யுங்கள். இக் கல்வியைக் கற்று, இராச்சியத் திலகத்தை உங்களுக்கு இட வேண்டும். இந்த ஞானத்தை மிக நன்றாகக் கிரகித்து, சதா முகமலர்ச்சியாக இருங்கள்.

2. நினைவுச் சக்தியின் மூலம், இந்த ஞான வாளை நிரப்பிக் கொள்ளுங்கள். நினைவு மூலம், சகல பந்தனங்களையும் துண்டித்து விடுங்கள். என்றுமே தீய திரைப்படங்களைப் பார்க்கவோ அல்லது உங்கள் எண்ணங்களைத் தூய்மை அற்றதாகவோ ஆக்காதீர்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் லௌகீகத்தை அலௌகீகமாக மாற்றி, ஒரு மாஸ்டர் சர்வசக்திவானாக பலவீனங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டவர்கள் ஆகுவீர்களாக.

மாஸ்டர் சர்வசக்திவான்களாகவும், ஞானம் நிறைந்த ஆத்மாக்களாகவும் உள்ளவர்கள் என்றுமே எந்தப் பலவீனங்களினதும் அல்லது பிரச்சனைகளினதும் ஆதிக்கத்திற்கு உட்பட மாட்டார்கள். இது ஏனெனில், அவர்கள் அமிர்த வேளையில் இருந்து எதனைப் பார்த்து, கேட்டு, சிந்தித்து அல்லது செய்தாலும், அவர்கள் லௌகீகத்தை அலௌகீகமாக மாற்றி விடுகின்றார்கள். உங்கள் லௌகீகக் குடும்பத்திற்கான உங்களின் பொறுப்புக்களை நிறைவேற்றும் பொழுதும், அதன்பொருட்டு, உங்கள் விழிப்புணர்வில் உங்கள் அலௌகீகப் பணி எப்பொழுதும் இருந்தால், நீங்கள் மாயையின் எவ் வகையான விகாரத்தினாலோ அல்லது எந்நபருடனான தொடர்பில் இருப்பதாலோ அவற்றின் ஆதிக்கத்திற்கு உட்பட மாட்டீர்கள். தமோகுணி அதிர்வலைகளின் மத்தியில் இருக்கும் பொழுதும், நீங்கள் அதிலிருந்து விலகி இருப்பீர்கள்.

சுலோகம்:
அனைவரையும் திருப்தி ஆக்குங்கள், நீங்கள் இயல்பாகவே உங்;கள் முயற்சிகளில் உயரப் பாய்வீர்கள்.

அவ்யக்த சமிக்கை: எண்ணங்களின் சக்தியைச் சேமித்து மேன்மையான சேவைக்குக் கருவியாகுங்கள்.

எண்ணங்களின் சக்தியைச் சேமிக்கும் பொருட்டு, எதனையும் பார்ப்பதற்கு அல்லது செவிமடுப்பதற்கு ஒரு விநாடியில் முற்றுப்புள்ளி இடுவதைப் பயிற்சி செய்யுங்கள். உங்கள் எண்ணங்களில் “ஏன்?” அல்லது “என்ன?” என்ற ஒரு வரிசையை உருவாக்கினால், நீங்கள் வீணானவற்றின் ஒரு படைப்பைப் படைத்தால், அதனை நீங்கள் பராமரிக்கவும் வேண்டியிருக்கும். உங்களுடைய எண்ணங்கள், நேரம், சக்தியை நீங்கள் அதில் செலவழிப்பீர்கள். ஆகவே, வீணான படைப்பின் மீது ஒரு பிறப்புக் கட்டுப்பாட்டை ஏற்படுத்துங்கள், அப்பொழுது உங்களால் எல்லையற்ற சேவை செய்வதற்கான ஒரு கருவி ஆகுவதற்கு இயலும்.