25.07.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, உங்கள் சொந்தச் சரீரம் உட்பட, முழு உலகின் சரீரங்களையும் கல்ப விருட்சத்தைப் போல் அநாதியானவை ஆக்குவதற்கே நீங்கள் இங்கு வந்திருக்கிறீர்கள். நினைவைக் கொண்டிருப்பதனால் மாத்திரமே உங்கள் சரீரங்கள் அநாதியானவை ஆகின்றன. (நீங்கள் நீண்ட ஆயுளைக் கொண்டிருப்பீர்கள்)
கேள்வி:
நரகவாசிகளில் இருந்து சுவர்க்கவாசிகள் ஆகுவதற்கான வழி என்ன? இப்பொழுது எவ்வாறு குழந்தைகளாகிய நீங்கள் இந்த வாழ்க்கைத் தானத்தைப் பெறுகிறீர்கள்?பதில்:
நரகவாசியில் இருந்து சுவர்க்கவாசி ஆகுவதற்கு, நீங்கள் நிச்சயமாக மரணிக்க வேண்டும். பாபா கூறுகிறார்: நான் உங்கள் அனைவருக்கும் மரணத்தை ஏற்படுத்துவதற்கே வந்திருக்கிறேன். நான் சரீரங்கள் அனைத்தையும் அற்றுப் போகச் செய்து ஆத்மாக்கள் அனைவரையும் திரும்பவும் என்னுடன் அழைத்துச் செல்வேன். இதுவே உண்மையான வாழ்க்கைத் தானமாகும். இதற்காகவே, அனைவருமே அழிந்து விடுகின்ற மகாபாரத யுத்தம் இடம்பெறுகின்றது. இதனால் ஆத்மாக்கள் தூய்மையாகி, வீடு திரும்பி, பின்னர் சுவர்க்கத்துக்குச் செல்வார்கள்.பாடல்:
தாயே, ஓ தாயே, நீங்களே உலகிற்குப் பாக்கியத்தை அருள்பவர்!ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான, ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் பாடலின் ஒரு வரியைக் கேட்டீர்கள். நீங்கள் ஜெகதாம்பாளின் (உலகத் தாய்) புகழைக் கேட்டீர்கள். இங்கே பாரதத்தில் மாத்திரமே ஜெகதாம்பாள் நினைவு கூரப்படுகிறார். ஜெகதாம்பாள் இருப்பதனால், ஜெகத்பிதாவும் (உலகத் தந்தை) இருக்க வேண்டும். சரஸ்வதியே ஜெகதாம்பாள் என்று அழைக்கப்படுகிறார். உண்மையில் அவருக்கு ஒரு பெயர் மாத்திரமே இருக்க வேண்டும். உங்களுக்கும் ஒரு பெயர் மாத்திரமே உள்ளது; உங்களுக்கு இரண்டு அல்லது மூன்று பெயர்கள் இருப்பதில்லை. அவர்கள் ஜெகதாம்பாளைப் பௌதீக ரூபத்தில் சரீரதாரியாகக் காண்பிக்கிறார்கள். பிரஜாபிதா (மக்களின் தந்தை) என்று அழைக்கப்படுகின்ற ஜெகத்பிதாவும் இருக்கிறார். முழு உலகிற்கும் ஒரு தாய் இருப்பதைப் போன்று, முழு உலகிற்கான தந்தையும் இருக்க வேண்டும். நிச்சயமாக, அவர்கள் இருவரும் இங்கேயே இருக்க வேண்டும். அவர்கள் இருவரது பெயர்களும் உங்களுக்கு கூறப்பட்டுள்ளது. அவர்களே மக்களின் தாயும், தந்தையும் ஆவர். மற்றைய உலகத் தந்தை, அனைவரினதும் தந்தையான அசரீரியான சிவபாபா ஆவார். அவருடைய பெயர் பரமாத்மாவாகிய பரமதந்தை சிவன் ஆகும். நீங்கள் வெறுமனே கடவுள் அல்லது பரமாத்மா எனக் கூறக்கூடாது. அவருக்கென ஒரு பெயரும், ரூபமும் உள்ளன. அவர் தந்தையாகிய கடவுள் என்று அழைக்கப்படுகிறார். ஒருவர் ஆத்மாக்களின் தந்தையும், மற்றவர் பௌதீக மனிதர்களின் தந்தையும் ஆவார்கள். அத்துடன் மம்மாவும் உள்ளார். சிவன் ஆத்மாக்கள் அனைவரதும் தந்தை ஆவார். அவரே தங்களுடைய தந்தை என ஆத்மாக்கள் கூறுகிறார்கள். இந்த ஆத்மா இந்தப் பௌதீகச் சரீரத்தைப் பெறுவதனால், அவரை பிரம்மாபாபா எனக் கூறுகிறார்கள். ஆகவே இரு தந்தையர்கள் உள்ளார்கள். ஒருவர் சிவபாபாவும், மற்றவர் பிரஜாபிதா பிரம்மாவும் ஆவர். பிரம்மா சிவபாபாவின் குழந்தை. ஒருவர் அசரீரியான தந்தையும், மற்றவர் பௌதீகத் தந்தையும் ஆவார்கள். அசரீரியான தந்தை தூய்மையாக்குபவர் என்று அழைக்கப்படுகிறார். பிரம்மாவை அல்லது சரஸ்வதியை தூய்மையாக்குபவர் என்று அழைக்க முடியாது. அவர்கள் இருவராக இருக்கிறார்கள். ஒரேயொருவர் மாத்திரமே தூய்மையாக்குபவர். அனைவரும் அழைக்கிறார்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! ஆகவே, உங்களுக்கு இரு தந்தையர்கள் உள்ளார்கள். சிவபாபா படைப்பவர். அவர் புதிய உலகைப் படைக்கிறார். ஆகவே, அவர் நிச்சயமாக முதலில் பிரம்மாவை உருவாக்க வேண்டும். விஷ்ணுவையோ அல்லது சங்கரரையோ ஒருபொழுதும் பிரஜாபிதா என்று அழைக்க முடியாது. பிரம்மா மாத்திரமே பிரஜாபிதா என்று அழைக்கப்படுகிறார். சிவபாபா உங்களைப் பிரஜாபிதா பிரம்மாவினூடாகத் தத்தெடுக்கிறார். நீங்கள் கூறுகிறீர்கள்: நாங்கள் சிவபாபாவின் குழந்தைகள். சிவபாபா இவரில் பிரவேசித்து, எங்களைத் தத்தெடுத்துள்ளார். அவர் ஆத்மாக்களைத் தூய்மை ஆக்குகிறார். ஆத்மாக்களே தூய்மை அற்றவர்களாகி விட்டார்கள். இதனாலேயே நீங்கள் தூய்மையற்ற சரீரங்களைப் பெறுகிறீர்கள். தங்கத்தினுள் வெள்ளி, செம்பு, இரும்புக் கலப்படம் கலக்கப்பட்டுள்ளதைப் போன்றே, ஆத்மாக்களினுள் கலப்படம் கலக்கப்பட்டுள்ளது. ஆதியில், ஆத்மாக்கள் தூய்மையானவர்களாகவும், சிவபாபாவும் வசிக்கின்ற முக்திதாமத்தில் வசிப்பவர்களாகவும் இருந்தார்கள். இங்கே, சிவபாபாவும், பிரஜாபிதா பிரம்மாவும் உள்ளார்கள். ஒருவர் பாப் எனவும், மற்றவர் தாதா எனவும் அழைக்கப்படுகிறார்கள். மனிதர்கள் அனைவரும் சிவனின் குழந்தைகள் என்பதை நீங்கள் அறிவீர்கள். சிவனின் வம்சத்தவர்கள் பின்னர் பிரம்மாகுமார்களும், குமாரிகளும் ஆகுகிறார்கள். சிவபாபாவும், தாதாவும் இணைந்துள்ளார்கள். சிவபாபா இவரில் பிரசன்னமாகி உள்ளார். அவர் எங்களைப் பிராமணர்களாக்கி, மனிதர்களிலிருந்து தேவர்களாக மாற்றுவதற்காக எங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கிறார். தேவர்கள் சத்தியயுகத்தில் வசிக்கிறார்கள். தேவர்களை ஞானகடல்களாகிய, தூய்மையாக்குபவர்கள் என்று அழைக்க முடியாது. அவர்களை பாபா எனவும் அழைக்க முடியாது. நீங்கள் இப்பொழுது விஷ்ணுபூமியின் அதிபதிகள் ஆகுகிறீர்கள். விஷ்ணுவின் இரு ரூபங்களே இலக்ஷ்மியும் நாராயணனும் ஆவார்கள். மக்கள் இதனை அறியார்கள். பக்தி செய்பவர்களுக்கு நிச்சயமாக இரு தந்தையர்கள் உள்ளார்கள். சத்தியயுகத்தில், உங்களுக்கு ஒரு தந்தை மாத்திரமே உள்ளார். அங்கே, நீங்கள் கூற மாட்டீர்கள்: ஓ பரமாத்மாவாகிய பரமதந்தையே, துன்பத்தை அகற்றிச் சந்தோஷத்தை அருள்பவரே, வாருங்கள்! அங்கே, அது தேவர்களின் இராச்சியம். “ஓ தந்தையாகிய கடவுளே, விடுதலை அளிப்பவரே!” என அவர்கள் என்றுமே கூறுவதில்லை. அங்கே, அவர்கள் தூய்மையாக்குபவரை அழைக்க தேவை இருப்பதில்லை, ஏனெனில் அங்கே எவரும் தூய்மை அற்றவர்களாகவோ அல்லது சந்தோஷம் அற்றவர்களாகவோ இருப்பதில்லை. 5000 வருடங்களுக்கு முன்னர் பாரதத்தில் தேவர்களின் இராச்சியம் இருந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். பின்னர், 1250 வருடங்களுக்குப் பின்னர், அங்கே இராமர் சீதையின் இராச்சியம் இருந்தது. தந்தை உங்களுக்கு இவை அனைத்தையும் மிகவும் தெளிவாக விளங்கப்படுத்துகிறார். நீங்கள் சத்திய, திரேதா யுகங்களில் 21 பிறவிகளை எடுத்தீர்கள். பாரதத்திலேயே பிராமணர்கள், தேவர்கள், சத்திரியர்கள் போன்றோர் உள்ளார்கள். தந்தை வந்து, பழைய உலகைப் புதியதாக ஆக்குகிறார்; அவர் அதனைப் புத்தாக்கம் செய்கிறார். அவர் உங்கள் சரீரங்களை அநாதியானவை ஆக்குகிறார்; அவர் உங்களை அமரத்துவமானவர்கள் ஆக்குகிறார். தந்தை வந்து, குழந்தைகளாகிய உங்களை அமரத்துவ பூமியின் அதிபதிகள் ஆக்குகிறார். பாரதம் அமரத்துவ பூமியாக இருந்தபொழுது, தேவர்களின் இராச்சியமாக இருந்தது. ஏணியில் கீழிறங்கி விட்டதும், நீங்கள் இப்பொழுது மரண பூமியின் அதிபதிகள் ஆகியுள்ளீர்கள். அவர்கள் கூறுகிறார்கள்: “எங்கள் பாரதம்”. ஆகவே, மக்களும் அதிபதிகளே. நீங்களும் “எங்கள் பாரதம்” என்றே கூறுகிறீர்கள். நாங்கள் பாரதத்தின் அதிபதிகளாக இருந்தோம், ஆனால் நரகவாசிகளாக ஆகிவிட்டோம். தாங்கள் சுவர்க்கவாசிகள் எனத் தேவர்கள் கூறுவார்கள். நீங்களும் சுவர்க்கவாசிகளாக இருந்தீர்கள். 84 பிறவிகளை எடுத்த பின்னர் நீங்கள் நரகவாசிகள் ஆகியுள்ளீர்கள். இங்கே பாரதத்திலேயே சிவபாபா பிறப்பெடுக்கிறார். சிவனின் இரவும், சிவனின் பிறந்ததினமும் நினைவு கூரப்படுகின்றன. அவர்கள் ஸ்ரீகிருஷ்ணரின் பிறந்த தினத்தைக் கொண்டாடுகிறார்கள். அவர்கள் அது எப்பொழுது இடம்பெற்றது என்பதற்கான ஒரு நேரத்தையும் காட்டுகிறார்கள். இன்ன நேரத்தில் அவர் தனது தாயின் கருப்பையில் இருந்து பிறப்பெடுத்தார் என அவர்கள் கூறுகிறார்கள். அவர் நிச்சயமாகச் சத்தியயுகத்தில் தனது தாயின் கருப்பையில் இருந்தே பிறந்திருப்பார். புதிய உலகமான, சத்தியயுகத்தில் ஸ்ரீகிருஷ்ணரின் பிறப்பு இடம்பெறுகிறது. பின்னர் அவர் மறுபிறவி எடுக்க ஆரம்பித்தார். பாபா உங்களுக்கு ஒரு நபரைப் பற்றி மாத்திரமே கூறுவதில்லை. கிருஷ்ணரின் பூமியே விஷ்ணுவின் பூமியாகும். அரசர்கள் கீழிறங்கும் பொழுது, முழு வம்சமும் கீழிறங்குகிறது. அரசர், அரசி, பிரஜைகள் அனைவரும் அதில் உள்ளடங்குகிறார்கள். அது சந்திர-வம்ச இராச்சியமாகும் பொழுது, சூரிய-வம்ச இராச்சியம் ஏற்கனவே கடந்து சென்று விடுகின்றது. அது சந்திர வம்சத்துக்கு மாற்றம் செய்யப்படுகிறது. பின்னர் வைசிய வம்சம் அதனைப் பெறுகின்றது. பிராமண குலத்தினராகிய நீங்களே உச்சிக்குடுமிகள் என்பதையும், உச்சிக்குடுமிக்கு மேலே தந்தை உள்ளார் என்பதையும் இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். முதலில், நாங்கள் பிராமணர்களாக இருந்தோம், பின்னர் நாங்கள் பாதங்களாகிய, சூத்திரர்கள் ஆகினோம். பாதங்களில் இருந்து, நாங்கள் உச்சிக்குடுமிகள் ஆகுகிறோம். முதலில் சிவபாபாவும், பின்னர் உச்சிக்குடுமிகளும் உள்ளார்கள். பாபா எங்களைப் பிராமணர்கள் ஆக்கினார். நீங்கள் இப்பொழுது “பாபா, பாபா!” என சிவபாபாவுக்குக் கூறுகிறீர்கள். இவ்விதமாக, நீங்கள் பேரர்களும், பேத்திகளும் ஆவீர்கள். நீங்கள் அனைவரும் பிரம்மாவின் குழந்தைகளாகிய பிராமணர்கள் என்பதை அறிவீர்கள். நாங்கள் அனைவரும் ஒரேயொரு தந்தையின் குழந்தைகள். சகோதரர்களும், சகோதரிகளும் ஒருவரையொருவர் குற்றத் தாக்குதலுக்கு ஆளாக்கக்கூடாது. பல குழந்தைகள் உள்ளார்கள், அவர்கள் அனைவரும் “பாபா” எனக் கூறுவதனால், அவர்கள் அனைவரும் தவறானவர்களாக இருக்க முடியாது. அசரீரியான சிவபாபாவும், பௌதீக பிரஜாபிதா பிரம்மாவும் மாத்திரமே அனைவரினதும் பாபு (தந்தை) ஆவார்கள்; அவ்வளவுதான்! ஒரேயொரு தந்தையின் குழந்தைகள் சகோதர, சகோதரிகள் ஆவார்கள். நீங்கள் நிச்சயமாகத் தூய்மையாக வேண்டும். எவ்வாறு கணவனும், மனைவியும் தூய்மையாக முடியும்? இதனாலேயே நாடகத்தில் ஒரு நடைமுறை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இங்கே, பிரம்மாகுமார்களும், குமாரிகளுமே உள்ளார்கள். சூத்திரகுமார்களும், குமாரிகளும் இருப்பதில்லை. சீரழிந்த புத்தியை உடைய சூத்திரர்கள் தூய்மை அற்றவர்கள், ஏனெனில் அவர்கள் தந்தையை அறிய மாட்டார்கள். அவர்கள் கூறுகிறார்கள்: ஓ தந்தையாகிய கடவுளே! சரி, உங்களுக்கு அவருடைய பணி என்னவென்று தெரியுமா? அவருடைய பெயர், ரூபம், இடம், காலத்தை எங்களுக்குக் கூறுங்கள்! எங்களுக்கு அவருடைய வாழ்க்கைச் சரிதையைக் கூறுங்கள்! அவர்கள் இதனை அறியாது விட்டால், அவர்கள் நாஸ்திகர்கள் ஆவார்கள். அவர்கள் படைப்பவரையோ அல்லது படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியையோ அறியாதிருக்கிறார்கள். இதுவே தூய்மையற்ற உலகமாகும். சத்தியயுகம் தூய உலகமும், கலியுகம் தூய்மையற்ற உலகமும் ஆகும். இவ்வேளையில் அவர்கள் முழுமையாகவே தமோபிரதானாக உள்ளார்கள். இதுவே ஆழ்நரகம் என்று அழைக்கப்படுகிறது. இதிலும் ஸ்திதிகள் உள்ளன. துவாபர யுகத்திலிருந்து நரகம் ஆரம்பிக்கிறது, அது தொடர்ந்தும் அதிகரிக்கிறது. பக்தி முதலில் சதோபிரதானாகவும், கலப்படம் அற்றதாகவும் உள்ளது, பின்னர் அதுவும் சதோ, ரஜோ, தமோ ஸ்திதிகளினூடாகச் செல்கிறது. பக்தர்கள் முச்சந்தியில் (தீபத்தில்) எண்ணெய் போன்றவற்றை ஊற்றி, வழிபட்டு, விழுந்து வணங்குவதை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். சிவபாபாவை வழிபடுவதற்கும், ஒரு முச்சந்தியை வழிபடுவதற்கும் இடையில் அதிகளவு வேறுபாடு உள்ளது! அது தமோபிரதான் பக்தி என்று அழைக்கப்படுகிறது. அவர்கள் தண்ணீரையும் வழிபடுகிறார்கள். கங்கையே தூய்மையாக்குபவர் என அவர்கள் கூறுகிறார்கள். தூய்மையாக்குபவர் யார்? எவ்வாறு கங்கை நீர் தூய்மையாக்குபவராக இருக்க முடியும்? அது வெறும் தண்ணீரே ஆகும். தந்தையே தூய்மையாக்குபவர். பாரதத்தில் சிவனின் பிறந்ததினம் கொண்டாடப்படுவதனால், அவர் நிச்சயமாகத் தூய்மை அற்றவர்களைத் தூய்மையான தேவர்கள் ஆக்குவதற்கு, பாரதத்தில் வர வேண்டும். அவர் பிரம்மாவின் சரீரத்தில் பிரவேசித்து, மனிதர்களைத் தேவர்களாக மாற்றுகிறார். நீங்கள் இங்கே தூய்மை அற்றவர்களில் இருந்து தூய்மையானவர்கள் ஆகுவதற்கே வருகிறீர்கள். உங்களுக்கு இரு கரங்கள் இருப்பதைப் போன்றே, அவர்களுக்கும் இரு கரங்கள் உள்ளன. நான்கு அல்லது எட்டு கரங்கள் உடைய மனிதர்கள் எவரும் இருக்க முடியாது. அவர்கள் இல்லறப் பாதையைக் குறிப்பதற்கே அந்த அணிகலன்களையும், நான்கு கரங்கள் உடைய உருவத்தையும் காட்டியுள்ளார்கள். இலக்ஷ்மி நாராயணனின் பூமியே விஷ்ணு பூமி என அழைக்கப்படுகிறது. “வைஷ்ணவர்கள்” என்னும் வார்த்தை விஷ்ணு எனும் பெயரிலிருந்தே தோன்றியுள்ளது. தேவர்கள் வைஷ்ணவர்களாக இருந்தார்கள். வல்லபச்சாரி வைஷ்ணவர்கள் தாவர போசனம் உண்பவர்கள்; அவர்கள் விகாரம் அற்றவர்கள் கிடையாது. அவர்கள் பெரிய தோட்டத்தின் மத்தியில் பெரிய மாளிகைகளில், கூட்டுக்குடும்பங்கள் வாழ்வதற்கேற்ற மாளிகைகளைக் கொண்டிருக்கிறார்கள். வைஷ்ணவர்கள் என்பதன் அர்த்தம் அவர்களுக்குத் தெரியாது. விஷ்ணு பூமியில் வசிப்பவர்களே வைஷ்ணவர்கள் என அழைக்கப்படுகிறார்கள். தூய்மையானவர்களே வைஷ்ணவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இராதைக்கும் ஸ்ரீகிருஷ்ணருக்கும், இலக்ஷ்மிக்கும் நாராயணனுக்கும் வெவ்வேறான ஆலயங்கள் உள்ளன. அவர்களுக்கு இடையிலான வேறுபாடு என்ன என்பதைப் பாரத மக்கள் அறியார்கள். இராதையும் ஸ்ரீகிருஷ்ணருமே இலக்ஷ்மியும் நாராயணனும் ஆகுகிறார்கள் என்பது எவருக்கும் தெரியாது. ஒன்று அவர்களுடைய குழந்தைப் பருவ ரூபமும், மற்றையது அவர்களுடைய முதிர்ச்சிப் பருவ ரூபமும் ஆகும். இலக்ஷ்மி நாராயணனின் குழந்தைப் பருவத்தின் உருவங்கள் கிடையாது. அவர்கள் இலக்ஷ்மியையும் நாராயணனையும் சத்தியயுகத்திலும், இராதையையும் ஸ்ரீகிருஷ்ணரையும் துவாபர யுகத்திலும் காட்டியுள்ளார்கள். நீங்கள் இப்பொழுது படைப்பவராகிய, தந்தையையும், படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியையும் அறிவீர்கள். பாபா உங்களுக்கு விருட்சத்தினதும், நாடகத்தினதும் இரகசியங்களைக் கூறுகிறார். நீங்கள் விருட்சத்தைப் பார்க்கும்பொழுது, சங்கராச்சாரியார் கலியுகத்திலேயே வருகிறார் என்பதைப் புரிந்து கொள்கிறீர்கள். சத்தியயுகத்தில் சந்நியாசிகளின் வம்சம் இருக்க முடியாது. அனைவரும் கடவுளின் குழந்தைகளாக இருப்பின், அப்பொழுது அவர்கள் அனைவரும் சுவர்க்கவாசிகளாக இருக்க வேண்டும். எவ்வாறாயினும், அனைவருமே சுவர்க்கவாசி ஆகுகிறார்கள் என்றில்லை. தேவர்கள் மாத்திரமே அவ்வாறு ஆகுகிறார்கள். நீங்கள் இப்பொழுது பிராமண வம்சமாகி உள்ளீர்கள். பின்னர் நீங்கள் தேவ வம்சம் ஆகுவீர்கள். நீங்கள் நிச்சயமாகத் தூய்மையாக வேண்டும். இளைஞர்களும், முதியவர்களுமாகிய நீங்கள் அனைவரும் பிரம்மாகுமார்களும், குமாரிகளும் என்பதை நீங்கள் அறிவீர்கள். இருசாராரும் கூறுகின்றனர்: பாபா, நாங்கள் உங்களுடைய குழந்தைகள். நாங்கள் பிராமணர்கள். இவர்கள் பாப்தாதா - ஆதிதேவ் பிரம்மாவும், சிவபாபாவும். நீங்கள் பிரம்மாபாபாவுக்கும், சிவபாபாவுக்கும் முன்னிலையில் அமர்ந்திருக்கிறீர்கள் என்பதை அறிவீர்கள். தந்தை கூறுகிறார்: என்னை நினைவு செய்வதனால், நீங்கள் தூய்மை அற்றவர்களிலிருந்து தூய்மையானவர்கள் ஆகுவீர்கள். நாங்கள் சிவபாபாவிடம் இருந்து எங்கள் ஆஸ்தியைக் கோருகிறோம். சிவபாபாவே எங்களுடைய தந்தையும், தூய்மையாக்குபவரும் ஆவார். அவர் எங்களுடைய குருவும் ஆவார். இது இப்பொழுது சங்கமயுகம். இதுவே தூய்மை அற்றவர்களில் இருந்து தூய்மையானவர்கள் ஆகுவதற்கான சந்திப்பு (மேளா) ஆகும். தூய்மையாக்குபவரினூடாக, நாங்கள் தூய்மை ஆகுகிறோம். சங்கமயுகத்தில் கடலுடனான ஆறுகளின் சங்கமம் உள்ளது. ஆறுகளின் சந்திப்பு கிடையாது. இப்பொழுது ஞானக்கடலினதும், ஆத்மாக்களாகிய உங்களினதும் சந்திப்பு உள்ளது. நீங்கள் ஞானக்கடலிடம் வந்து விட்டீர்கள். ஞான கங்கைகளாகிய நீங்கள் ஞானக்கடலிடம் இருந்தே வெளித்தோன்றி உள்ளீர்கள். நீங்கள் அனைவரையும் இந்த ஞானத்தினால் நீராட்டி, அவர்களைத் தூய்மையாக்கி, அவர்களுக்கு யோகத்தைக் கற்பிக்கிறீர்கள். நீங்கள் அவர்களுக்குக் கடலின் அறிமுகத்தைக் கொடுத்து, அவர்களை இங்கே சந்திப்புக்கு அழைத்து வருகிறீர்கள். இவ்வேளையில், நீங்கள் பிராமணர்கள் ஆகும்பொழுது, உங்கள் ஒவ்வொருவருக்கும் மூன்று தந்தையர்கள் உள்ளார்கள்: உங்களுக்கு உங்களுடைய பௌதீகத் தந்தையும், பிரஜாபிதாவும், சிவபாபாவும் உள்ளார்கள். உங்களுக்குப் பக்தி மார்க்கத்தில் இரு தந்தையர்கள் உள்ளார்கள். சத்தியயுகத்தில் உங்களுக்கு ஒரு தந்தையே உள்ளார். இவ்விடயங்கள் புரிந்துகொள்ளப்பட வேண்டும். ஆத்மாக்களாகிய நீங்கள் இப்பொழுது கூறுகிறீர்கள்: என்னுடையவர் ஒரேயொரு சிவபாபாவே அன்றி, வேறு எவரும் அல்லர். உங்களுக்கு நண்பர்களும், உறவினர்களும் உள்ளபொழுதே நீங்கள், “என்னுடையவர் ஒரேயொரு சிவபாபாவே” எனக் கூறுகிறீர்கள். அவரின் நினைவினூடாக, நீங்கள் தூய்மை அற்றவர்களில் இருந்து தூய்மையானவர்கள் ஆகுகிறீர்கள். அவர் உங்களுடைய தந்தையும், ஆசிரியரும், சற்குருவும் என்பதை ஆத்மா அறிவார். ஆத்மாக்களாகிய எங்களைத் திரும்பவும் அழைத்துச் செல்வதற்குத் தந்தை வந்துள்ளார். அவர் பிரம்மாவின் சரீரத்தில் பிரவேசித்து, எங்களைத் தூய்மை ஆக்குகிறார். தந்தை உங்களைத் திரும்பவும் வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்கே வந்துள்ளார். உங்கள் அனைவருக்கும் மரணத்தை ஏற்படுத்தவே நான் வந்துள்ளேன். ஒரு நரகவாசியில் இருந்து சுவர்க்கவாசி ஆகுவதற்கு, நீங்கள் நிச்சயமாக மரணிக்க வேண்டும். நான் அச்சரீரங்களை அழித்து விட்டு, ஆத்மாக்களாகிய உங்களைத் திரும்பவும் வீட்டுக்கு அழைத்துச் செல்வேன். தந்தை கூறுகிறார்: நான் உங்களுக்கு வாழ்க்கைத் தானத்தைக் கொடுக்கிறேன். இதற்காகவே மகாபாரத யுத்தம் உள்ளது. அனைத்தும் அழிக்கப்பட்டு விடும். வேறு எவ்வாறு என்னால் அனைவரையும் திரும்பவும் வீட்டுக்கு அழைத்துச் செல்ல முடியும்;? நான் ஆத்மாக்களைத் தூய்மையாக்கி, அவர்களைத் திரும்பவும் வீட்டுக்கு அழைத்துச் செல்வேன். அதுவே அமைதி தாமம் ஆகும். சத்தியயுகம் வரும்பொழுது, கலியுகம் நிச்சயமாக அழிக்கப்பட்டு விடும். இதற்காகவே மகாபாரத யுத்தம் மிகவும் பிரபல்யமானது. நீங்கள் மனிதர்களில் இருந்து தேவர்களாக மாறுகின்ற பொழுது, சங்கமயுகத்திலேயே அது இடம்பெறுகிறது. அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. இந்த ஞானக்கடலில் நீராடி, உங்களைத் தூய்மை ஆக்குங்கள். நண்பர்கள், உறவினர்களுடன் வசிக்கும் பொழுதும், “என்னுடையவர் ஒரேயொரு சிவபாபாவே அன்றி, வேறு எவரும் அல்ல” என்பது உங்கள் புத்தியில் இருக்கட்டும்.2. விஷ்ணு பூமிக்குச் செல்வதற்கு, உண்மையான வைஷ்ணவர்கள் ஆகுங்கள், அதாவது, தூய்மை ஆகுங்கள். நரகத்திலிருந்து மரணித்து, உங்கள் புத்தியின் யோகத்தைச் சுவர்க்கத்துடன் இணையுங்கள்.
ஆசீர்வாதம்:
நிலையான, ஸ்திரமான ஸ்திதியைக் கொண்டிருப்பதனாலும், ஒரேயொருவரின் மீது அன்பையும் ஒரேயொருவரின் மீது நம்பிக்கையையும் கொண்டிருப்பதன் மூலமும் சதா தடைகளில் இருந்து விடுபட்டவராகி, தீர்வின் சொரூபம் ஆகுவீர்களாக.வேறு ஒரு நபரோ அல்லது வேறு எந்த ஓர் உடமையோ இவ்வுலகில் இல்லை என உணரும் வகையில் சதா ஒரேயொரு தந்தையின் மீதும் அவரின் பணியின் மீதான அன்பிலும் மூழ்கியிருங்கள். ஒரேயொருவரின் அன்பிலும், ஒரேயொருவரின் மீதும் நம்பிக்கையைக் கொண்டிருந்து, நிலையான ஸ்திரமான ஸ்திதியைக் கொண்டிருக்கின்ற குழந்தைகள் சதா தடைகளில் இருந்து விடுபட்டவர்களாகி, ஏறும் ஸ்திதியை அனுபவம் செய்கிறார்கள். அவர்கள் சாக்குப் போக்குகளை தீர்வாக மாற்றுகிறார்கள். அவர்கள் சாக்குப் போக்குக் கூறுவதன் மூலம் பலவீனமாக ஆகுவதில்லை, ஆனால் தீர்வின் சொரூபம் ஆகுகிறார்கள்.
சுலோகம்:
புகழ்ச்சியின் அடிப்படையில் ஏற்படும் சந்தோஷம் தற்காலிகமானது.அவ்யக்த சமிக்ஞை: எரிமலை ஸ்திதியில் இருந்து, சக்திவாய்ந்த நினைவை அனுபவம் செய்யுங்கள்.
உங்கள் ஸ்திதியை நெருப்பைப் போன்று சக்திமிக்கதாக ஆக்க வேண்டுமாயின், உங்கள் நினைவுத் தீயை சதா எரியச் செய்யுங்கள். இதற்கு இலகுவான வழி, உங்களை சதா ஒரு தேரோட்டி எனவும் ஒரு பற்றற்ற பார்வையாளர் எனவும் கருதுவதாகும். ஆத்மாவான நீங்கள் உங்கள் தேரை ஓட்டும் தேரோட்டி ஆவீர்கள். இந்த விழிப்புணர்வு உங்களை, உங்கள் சரீரத்தில் இருந்தும் எவ்வகையான சரீர உணர்விலிருந்தும் பற்றற்றவர் ஆக்குகிறது. உங்களை ஒரு தேரோட்டியெனக் கருதுவதால், உங்களால் உங்கள் சகல பௌதீக புலன்களையும் கட்டுப்படுத்த முடியும். உங்கள் மனம், புத்தி, சம்ஸ்காரங்கள் ஆகிய சூட்சும சக்திகள் ஒழுக்கத்துடன் நிலைத்திருக்கும்.