25.09.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, மனிதர்கள் அனைவரும், பஞ்சபூதங்களும் மாற்றம் அடைவதற்கு ஒரேயொரு பல்கலைக்கழகமே உள்ளது. இங்கேயே அனைவரும் சற்கதியைப் பெறுகின்றனர்.
கேள்வி:
தந்தையின் மீது நம்பிக்கை ஏற்பட்டவுடன், நீங்கள் எந்த அறிவுரையை உடனடியாகப் பயிற்சியில் இட வேண்டும்?பதில்:
தந்தை வந்து விட்டார் என்ற நம்பிக்கை ஏற்பட்டதும், தந்தை உங்களுக்குக் கொடுக்கின்ற முதலாவது அறிவுரையை உடனடியாகவே நீங்கள் பயிற்சியில் இட வேண்டும். 1. உங்கள் கண்களினால் பார்க்கின்ற அனைத்தையும் மறந்து விடுங்கள். எனது வழிகாட்டல்களை மாத்திரம் பின்பற்றுங்கள். இந்த அறிவுரையை நடைமுறைப்படுத்துங்கள். 2. நீங்கள் தந்தைக்கு உரியவர் ஆகும்பொழுது, உங்கள் கொடுக்கல், வாங்கல்கள் தூய்மை அற்றவர்களுடன் இருக்கக்கூடாது. தங்கள் புத்தியில் நம்பிக்கை கொண்டுள்ள குழந்தைகளுக்கு என்றுமே எதைப் பற்றிய சந்தேகமும் இருக்க முடியாது.ஓம் சாந்தி.
இது ஒரு வீடும், ஒரு பல்கலைக்கழகமும் ஆகும். இது இறை தந்தையின் உலகப் பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படுகின்றது, ஏனெனில் முழு உலகிலும் உள்ள மனிதர்கள் அனைவரும் இங்கேயே சற்கதியைப் பெறுகின்றனர். அப்பொழுது இது உண்மையான உலகப் பல்கலைக்கழகமும் அத்துடன் வீடும் ஆகும். நீங்கள் தாய், தந்தையின் முன்னிலையில் அமர்ந்திருப்பதுடன், இது ஒரு பல்கலைக்கழகமும் ஆகும். ஆன்மீகத் தந்தை இங்கே அமர்ந்திருக்கின்றார். இதுவே நீங்கள் ஆன்மீகத் தந்தையிடம் இருந்து பெறுகின்ற ஆன்மீக ஞானமாகும். வேறு எந்த மனிதரும் அன்றி, ஆன்மீகத் தந்தை மாத்திரமே இந்த ஆன்மீக ஞானத்தைக் கொடுக்கின்றார். அவர் மாத்திரமே ஞானக்கடல் என்று அழைக்கப்படுகின்றார், இந்த ஞானத்தினூடாகவே நீங்கள் சற்கதியைப் பெறுகின்றீர்கள். ஆகையாலேயே ஒரேயொரு தந்தை மாத்திரமே ஞானக்கடலும், அனைவருக்கும் சற்கதி அருள்பவரும் ஆவார். பிரபஞ்சத்தில் உள்ள மனிதர்கள் மாத்திரமல்ல, பஞ்ச தத்துவங்கள் உட்பட, அனைத்தும் தந்தையினூடாகவே சதோபிரதான் ஆகுகின்றன் அனைவருமே சற்கதியைப் பெறுகின்றார்கள். இவ்விடயங்கள் மிக நன்றாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டியவை. இப்பொழுது அனைவருமே சற்கதியைப் பெற உள்ளார்கள். பழைய உலகமும், இவ்வுலகில் வாழும் மக்கள் அனைவரும் மாறுவார்கள். நீங்கள் பார்க்கின்றவை அனைத்தும் மாறிப் புதியதாக ஆகுகின்றன. ‘இங்கு நீங்கள் பொய்யான மாயையையும், பொய்யான சரீரத்தையும் கொண்டுள்ளீர்கள்’ என்று பாடப்பட்டுள்ளது. இது பொய்யான உலகம் ஆகியுள்ளது. பாரதம், சத்திய பூமியாக இருந்தது, அது இப்பொழுது பொய்யான பூமி ஆகும். படைப்பவரையும், படைப்பையும் பற்றி மக்கள் கூறுவது அனைத்தும் பொய்யாகும். இப்பொழுது நீங்கள் தந்தையிடம் இருந்து அனைத்தையும் அறிந்து கொண்டுள்ளீர்கள். கடவுள் பேசுகின்றார்: ஒரேயொரு தந்தையே கடவுள். அவர் அசரீரியானவர். உண்மையில், ஆத்மாக்கள் அனைவரும் அசரீரியானவர்களே, ஆனால் அவர்கள் இங்கு வரும்பொழுது பௌதீக ரூபங்களை ஏற்;கின்றார்கள். அங்கே எந்த ரூபமும் இருப்பதில்லை. ஆத்மாக்கள் பிரம்ம தத்துவமான, அசரீரி உலகில் வசிக்கின்றார்கள். அதுவே ஆத்மாக்களாகிய எங்கள் வீடான, மகா பிரம்ம தத்துவமாகும். இது பஞ்சபூதங்களில் ஒன்றான ஆகாயம் என்ற வெளியாகும். இதற்குக் கீழேயே பௌதீகமான பாகங்கள் நடிக்கப்படுகின்றன. உலக வரலாறும், புவியியலும் மீண்டும் மீண்டும் இடம்பெறுகின்றன. அவர்களுக்கு அதன் அர்த்தம் புரியாது. அது மீண்டும் மீண்டும் இடம்பெறுகின்றது என அவர்கள் கூறுகிறார்கள், சத்தியயுகம், திரேதாயுகம் போன்றவை…… அதன் பின்னர் வருவது என்ன? சத்தியயுகம் பின்னர் நிச்சயமாக வருகின்றது. ஒரேயொரு சங்கமயுகமே உள்ளது. சத்திய, திரேதா யுகங்களுக்கு இடையேயும், திரேதா, துவாபர யுகங்களுக்கு இடையேயும் உள்ள சங்கமங்கள் சங்கமம் அல்ல் அது தவறு. தந்தை கூறுகின்றார்: நான் ஒவ்வொரு கல்பத்தின் சங்கம யுகத்திலேயே வருகின்றேன். நீங்கள் தூய்மை அற்றவர்கள் ஆகும்பொழுது மாத்திரமே என்னை அழைக்கின்றீர்கள். நீங்கள் கூறுகின்றீர்கள்: ‘வந்து எங்களைத் தூய்மை ஆக்குங்கள்!’ சத்தியயுகத்தில் மாத்திரமே நீங்கள் தூய்மையாக இருக்கின்றீர்கள். இது இப்பொழுது சங்கமம் ஆகும். இது நன்மை பயக்கும் சங்கமயுகம் என்று அழைக்கப்படுகின்றது. இது பரமாத்மாவுடனான ஆத்மாக்களின் சந்திப்பு உள்ள சங்கமம் ஆகும். இது கும்பம் (சந்திப்பு) என்றும் அழைக்கப்படுகின்றது. பின்னர், அவர்கள் நதிகளின் சந்திப்பையும் காட்டுகின்றார்கள். இரு நதிகள் உள்ளன, மூன்றாவது நதி மறைமுகமானது என்று அவர்கள் கூறுகின்றார்கள். அதுவும் உண்மையல்ல. மறைமுகமானதொரு நதி எவ்வாறு இருக்க முடியும்? மறைமுகமானதொரு நதி இருக்கலாம் என்று விஞ்ஞானிகளும் நம்புவதில்லை. அம்பு ஒன்றை எய்தபொழுது கங்கை வெளிப்பட்டதென்று அவர்கள் கூறுகின்றார்கள், ஆனால் அவை அனைத்தும் பொய்யாகும். ஞானம், பக்தி, விருப்பமின்மை இருந்தன என நினைவுகூரப்படுகின்றது. அவ்வார்த்தைகளை அவர்கள் பற்றிக் கொண்ட பொழுதிலும் அவற்றின் அர்த்தத்தை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. அனைத்திற்கும் முதலில், சந்தோஷமான, பகலான ஞானமும், அதன்பின்னர் துன்பமான, இரவான பக்தியும் உள்ளன. பிரம்மாவின் பகலும், பிரம்மாவின் இரவும் உள்ளன. இது ஒருவரைப் பற்றியது மட்டுமல்ல் அவர்களில் பலரும் இருக்க வேண்டும். அரைக்கல்பத்திற்குப் பகலும், அரைக்கல்பத்திற்கு இரவும் உள்ளன, அதன்பின்னர் பழைய உலகம் முழுவதிலும் விருப்பமின்மை ஏற்படுகின்றது. தந்தை கூறுகின்றார்: உங்கள் சரீரங்கள் உட்பட, உங்கள் கண்களால் பார்ப்பவை அனைத்தும், இந்த ஞானத்தினூடாக மறக்கப்பட வேண்டும். உங்கள் வியாபாரம் போன்றவற்றை நீங்கள் செய்வதுடன், உங்கள் குழந்தைகளையும் பராமரிக்க வேண்டும், ஆனால் உங்கள் புத்தியின் யோகம் ஒரேயொருவருடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். அரைக்கல்பமாக நீங்கள் இராவணனின் கட்டளைகளைப் பின்பற்றினீர்கள். நீங்கள் இப்பொழுது தந்தைக்கு உரியவர்கள் ஆகியுள்ளதால், எதனைச் செய்வதாயினும், தந்தையின் ஆலோசனையுடனேயே செய்ய வேண்டும். இதுவரை காலமும் தூய்மையற்ற மனிதர்களுடனேயே உங்கள் கொடுக்கல், வாங்கல்கள் இருந்தன. அதன் விளைவு என்ன? பக்தி மார்க்கம் கீழிறங்குவதற்கான பாதை என்பதால், நாளுக்கு நாள் நீங்கள் தொடர்ந்தும் தூய்மையற்றவர்கள் ஆகினீர்கள். சதோபிரதான், சதோ, இரஜோ, தமோ ஸ்திதிகளை நீங்கள் கடந்து செல்ல வேண்டும். நீங்கள் நிச்சயமாகக் கீழிறங்க வேண்டும்; அதிலிருந்து எவராலும் உங்களை விடுவிக்க முடியாது. இலக்ஷ்மி நாராயணனின் 84 பிறவிகள் காட்டப்பட்டிருக்கின்றன. ஆங்கில வார்த்தைகள் மிகவும் சிறந்தவை. கோல்டன் ஏஜ் போன்றவை…. அதன் பின்னர் அதில் கலப்படம் கலக்கப்படுகின்றது. இப்பொழுது நீங்கள் கலியுகத்தவர் ஆகியுள்ளீர்கள். சத்தியயுகத்தில், புதிய பாரதமான, புதிய உலகம் இருந்தது. அங்கே இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியம் இருந்தது; இது நேற்றைக்கான விடயமே. சமயநூல்களில் இது நூறாயிரம் ஆண்டுகளுக்கான விடயம் என்று அவர்கள் எழுதியுள்ளார்கள். தந்தை இப்பொழுது கூறுகின்றார்: உங்கள் சமயநூல்களா அல்லது நான் கூறுவதா சரி? தந்தை உலக சர்வசக்திவான் என்று அழைக்கப்படுகின்றார். பல வேதங்களையும், சமயநூல்களையும் கற்பவர்கள் அதிகாரிகள் என்று அழைக்கப்படுகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: அவர்கள் அனைவரும் பக்தி மார்க்கத்தின் அதிகாரிகளே. இந்த ஞானத்தைப் பொறுத்தவரையில் எனது புகழ், ‘நீங்களே ஞானக்கடல்’ என்பதாகும். நாங்கள் அவ்வாறானவர்கள் அல்ல. மனிதர்கள்; அனைவரும் பக்திக் கடலில் மூழ்கிக் கொண்டிருக்கின்றார்கள். சத்தியயுகத்தில் உள்ள எவரும் விகாரத்தில் ஈடுபடுவதில்லை. கலியுகத்தில் மனிதர்கள் அதன் ஆரம்பம், மத்தி, இறுதிவரை துன்பத்தில் உள்ளார்கள். தந்தை முன்னைய கல்பத்திலும் இவ்வாறே விளங்கப்படுத்தினார். அவர் இப்பொழுது மீண்டும் ஒருமுறை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் முன்னைய கல்பத்திலும் எல்லையற்ற தந்தையிடம் இருந்து உங்கள் ஆஸ்தியைப் பெற்றீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். நீங்கள் இப்பொழுது கற்று, அதனை மீண்டும் ஒருமுறை பெறுகின்றீர்கள். இன்னமும் சொற்ப காலமே எஞ்சியுள்ளது. இவ்வுலகம் அழிவடைய உள்ளது. இதனாலேயே உங்கள் முழு ஆஸ்தியையும் எல்லையற்ற தந்தையிடம் இருந்து நீங்கள் பெற வேண்டும். அத்தந்தையே ஆசிரியரும், குருவும் ஆவார். அவரே பரமதந்தையும், பரம ஆசிரியரும் ஆவார். உலகின் வரலாறும், புவியியலும் எவ்வாறு மீண்டும் மீண்டும் இடம்பெறுகின்றன என்ற இந்த ஞானம் முழுவதையும் அவரே கொடுக்கின்றார். வேறு எவராலும் இதனை விளங்கப்படுத்த முடியாது. 5000 வருடங்களின் முன்னர் வந்த கீதையின் அந்தக் கடவுள் இவரே என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கின்றீர்கள். அவர் ஸ்ரீ கிருஷ்ணர் அல்ல. மனிதர்களைக் கடவுள் என்றழைக்க முடியாது. கடவுள் மறுபிறவிகளுக்கு அப்பாற்பட்டவர். அவரின் பிறப்பு தெய்வீகமானது என்று கூறப்படுகின்றது. அசரீரியானவரான என்னால் வேறு எவ்வாறு பேச முடியும்? நான் நிச்சயமாக வந்து உங்களைத் தூய்மையாக்கி, உங்களுக்குப் பாதையைக் காட்ட வேண்டும். நீங்கள் அமரத்துவமானவர்கள் என்பதை ஆத்மாக்களாகிய நீங்கள் அறிவீர்கள். இராவண இராச்சியத்தில் நீங்கள் அனைவருமே சரீர உணர்வு உடையவர்களாகி விட்டீர்கள். சத்தியயுகத்தில் நீங்கள் ஆத்ம உணர்வுடன் இருக்கின்றீர்கள். அங்கும் படைப்பவரான பரமதந்தையையோ அல்லது அவரது படைப்பையோ எவரும் அறிந்திருப்பதில்லை. மீண்டும் தாங்கள் கீழிறங்க வேண்டும் என்று அவர்கள் அறிந்திருந்தால், அந்த இராச்சியத்தின் சந்தோஷத்தை அவர்களால் அனுபவம் செய்ய முடியாதிருக்கும். இதனால், தந்தை கூறுகின்றார்: நீங்கள் அங்கிருக்கும் பொழுது, இந்த ஞானம் மறைந்திருக்கும். ஏனெனில், அங்கு நீங்கள் சற்கதி அடைந்திருப்பதால் இந்த ஞானம் எதற்குமான அவசியம் இல்லை. நீங்கள் சீரழிந்திருக்கும் பொழுதே, இந்த ஞானம் தேவைப்படுகின்றது. இந்த நேரத்தில் அனைவருமே சீரழிந்துள்ளார்கள். காமச்சிதையில் அமர்ந்ததால், அனைவருமே எரிந்து விட்டனர். தந்தை கூறுகின்றார்: எனது குழந்தைகளே, தங்களின் சரீரங்களினூடாக, பாகங்களை நடிப்பதற்காக வருகின்ற ஆத்மாக்கள் காமச்சிதையில் அமர்ந்ததால், தமோபிரதானாகி விட்டார்கள். நீங்கள் அழைக்கின்றீர்கள்: நாங்கள் தூய்மை அற்றவர்களாகி விட்டோம். காமச்சிதையினாலேயே நீங்கள் தூய்மை அற்றவர்கள் ஆகுகின்றீர்கள். கோபத்தாலோ அல்லது பேராசையினாலோ நீங்கள் தூய்மை அற்றவர்கள் ஆகுவதில்லை. சாதுக்கள், புனிதர்கள் போன்றோர் தூய்மையானவர்கள். தேவர்கள் தூய்மையானவர்கள் என்பதாலேயே தூய்மையற்ற மனிதர்கள் சென்று, அவர்களின் விக்கிரகங்களை வணங்குகின்றார்கள். அவர்கள் பாடுகின்றார்கள்: நீங்கள் விகாரம் அற்றவர்கள், நாங்களோ விகாரம் நிறைந்தவர்கள். விகாரமற்ற உலகமும், விகாரம் நிறைந்த உலகமும் நினைவுகூரப்பட்டுள்ளன. பாரதம் விகாரமற்ற உலகமாக இருந்தது, ஆனால் இப்பொழுது அது விகாரங்கள் நிறைந்ததாக ஆகியுள்ளது. முழு உலகமும், பாரதமும் விகாரம் நிறைந்தவையாக ஆகியுள்ளன. 5000 வருடங்களின் முன்னர் விகாரமற்ற உலகில் ஒரேயொரு தர்மமே இருந்தது. அங்கு தூய்மை இருந்ததால், அமைதியும் செழிப்பும் இருந்தன் மூன்றுமே அங்கு இருந்தன. தூய்மையே முதன்மையானது. இப்பொழுது தூய்மை இல்லை என்பதால் அமைதியோ, செழிப்போ இல்லாதுள்ளது. ஒரேயொரு தந்தையே ஞானக்கடலும் சந்தோஷக்கடலும் அன்புக்கடலும் ஆவார். அவர் உங்களையும் இனிமையானவர் ஆக்குகின்றார். இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியத்தில் அனைவருமே இனிமையானவர்கள். மனிதர்கள் அனைவரும், மிருகங்களும் இனிமையானவை. சிங்கங்களும் ஆட்டுக் குட்டிகளும் ஒரே ஆற்றில் ஒன்றாக நீர் அருந்துகின்றன. அது ஓர் உதாரணம் மாத்திரமே. மாசடையச் செய்யும் எதுவும் அங்கிருக்க மாட்டாது. இங்கே பல நோய்களும், நுளம்பு போன்றவையும் உள்ளன. அத்தகையவை அங்கே இருக்க மாட்டாது. செல்வந்தர்கள் முதற்தரமான தளபாடங்களை வைத்திருக்கின்றனர், ஆனால் ஏழைகளின் தளபாடங்கள் சாதாரணமானவை. இப்பொழுது பாரதம் மிகவும் ஏழ்மையில் உள்ளது; அங்கு அதிகளவு குப்பைகள் உள்ளன. சத்தியயுகத்தில் அதிகளவு சுத்தம் உள்ளது. அங்கு முதற்தரமான தங்க மாளிகைகள் இருக்கும். வைகுந்தத்தில் பசுக்கள் எவ்வளவு முதற்தரமானவையாக உள்ளன என்று பாருங்கள். அவர்கள் ஸ்ரீகிருஷ்ணரை அத்தகைய அழகான பசுக்களுடன் காட்டுகின்றார்கள். கிருஷ்ண தாமத்தில் பசுக்கள் இருக்கும். அங்கே அனைத்தும் முதற்தரமானவையாக உள்ளன. நினைத்துப் பாருங்கள், அது சுவர்க்கம் என்பதால், அங்கு எதற்கும் குறைவிருக்காது. இந்த அழுக்கான, பழைய உலகில் பெருமளவு குப்பைகள் இருக்கின்றன. அவை அனைத்துமே இந்த ஞான யாகத்தில் அர்ப்பணிக்கப்படும். அவர்கள் பல்வேறு வகையான குண்டுகளைத் தொடர்ந்தும் தயாரிக்கின்றார்கள். வீசியதும் வெடித்துச் சுவாலையாகி விடுகின்ற குண்டுகளே அவர்களிடம் உள்ளன. இந்நாட்களில், எல்லையற்ற வகையில் அனைத்தையுமே அழித்து விடக்கூடிய அந்தக் குண்டுகளுக்குள் அணுப் பொருட்களை இடுகிறார்கள். எவரும் சிகிச்சை போன்றவற்றைப் பெறுவதற்கு வைத்தியசாலைகள் போன்றனவும் இருக்க மாட்டாது. தந்தை கூறுகின்றார்: குழந்தைகளான நீங்கள் எந்தச் சிரமத்தையும் அனுபவம் செய்ய மாட்டீர்கள். இதனாலேயே இயற்கை அனர்த்தங்களும், அடைமழையும் ஏற்பட்டன என நினைவு கூரப்பட்டுள்ளது. விநாசத்தின் காட்சிகளையும் சில குழந்தைகள் கண்டிருந்தார்கள். விநாசம் நிச்சயமாக இடம்பெற வேண்டும் என்று உங்கள் புத்தியும் கூறுகின்றது. விநாசக் காட்சியைக் காணும் பொழுது மாத்திரமே அதனைத் தாங்கள் நம்புவார்கள்; என்று சிலர் கூறுகின்றார்கள். சரி, நீங்கள் அதனை நம்பாமல் விட்டால், அது உங்களைப் பொறுத்தது. ஆத்மாவின் காட்சி கிடைத்தாலே அதனை நாங்கள் நம்புவோம் என்று சிலர் கூறுகின்றார்கள். சரி, ஆத்மா ஒரு புள்ளி ஆவார், அதனைக் கண்டு விட்டால் அதன்பின்னர் என்ன? அதன் மூலம் நீங்கள் சற்கதி அடைவீர்களா? பரமாத்மா அநாதியான ஒளியென்றும், ஆயிரம் சூரியன்களை விடவும் பிரகாசமானவர் என்றும் அவர்கள் கூறுகின்றார்கள். எவ்வாறாயினும், அது அவ்வாறு இல்லை. ‘இதனை நிறுத்துங்கள்! என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை!’ என்று அர்ஜுனன் கூறியதாகக் கீதையில் எழுதப்பட்டுள்ளது. அது அவ்வாறல்ல. ஒரு குழந்தை தனது தந்தையைப் பார்த்து, தன்னால் அவரைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று கூறுகின்றார் - அவ்வாறு எதுவும் இருக்க முடியாது. ஆத்மா எவ்வாறோ, அவ்வாறே பரமாத்மாவாகிய பரமதந்தையான தந்தையும் ஆவார். ஆனால் அவர் ஞானக்கடல். உங்களிடமும் இந்த ஞானம் உள்ளது. தந்தை வந்து உங்களுக்குக் கற்பிக்கின்றார்; வேறு எதுவும் இல்லை. பக்தி உணர்வுகளுடன் நீங்கள் யாரை நினைவு செய்தாலும் அந்தப் பக்தி உணர்வுகளை நானே நிறைவேற்றுகின்றேன். அதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், எவராலும் கடவுளை அடைய முடியாது. ஒரு காட்சியைக் கண்டபொழுது, மீரா மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அவர் தனது அடுத்த பிறவியிலும் ஒரு பக்தையாகவே ஆகியிருப்பார்; அவரால் வைகுந்தத்திற்குச் சென்றிருக்க முடியாது. குழந்தைகளான நீங்கள் இப்பொழுது வைகுந்தத்திற்குச் செல்வதற்கு ஆயத்தங்கள் செய்கின்றீர்கள். நீங்கள் கிருஷ்ண தாமமான, வைகுந்தத்தின் அதிபதிகள் ஆகுகின்றீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இங்கே, அனைவரும் நரகத்தின் அதிபதிகள். வரலாறும் புவியியலும் மீண்டும் இடம்பெறும். நீங்கள் மீண்டும் ஒருமுறை உங்கள் இராச்சிய பாக்கியத்தைப் பெறுகின்றீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். இதுவே இராஜயோகத்தின் சக்தியாகும். பௌதீகச் சக்தியினூடாகப் பல பிறவிகளில் பல தடவைகள் யுத்தங்கள் இடம்பெற்றுள்ளன. யோக சக்தியினூடாக மேலேறும் ஸ்திதியில் நீங்கள் இருக்கின்றீர்கள். சுவர்க்க இராச்சியம் ஸ்தாபிக்கப்படுவதை நீங்கள் அறிவீர்கள். முன்னைய கல்பத்தில் முயற்சி செய்தவர்கள் மீண்டும் முயற்சி செய்வார்கள். உங்களுக்கு இதய வழுவல் வரக்கூடாது. உறுதியான நம்பிக்கை கொண்ட புத்தி உடையவர்களுக்கு என்றுமே சந்தேகம் இருக்க முடியாது. நிச்சயமாக சந்தேகப் புத்தியை உடையவர்கள் இருக்கின்றார்கள். பாபா உங்களுக்குக் கூறியுள்ளார்: இந்த ஞானத்தைச் செவிமடுக்கும் பொழுது, வியப்படைந்து, பின்னர் ஓடியவர்களும் இருக்கின்றார்கள். ஓ மாயையே! நீ அவர்களை வெற்றி கொண்டு விட்டாய்! மாயை மிகவும் சக்திவாய்ந்தவள். முதற்தரமான சேவை செய்து, நிலையங்களை நடத்திய மிகவும் சிறந்தவர்களையும் மாயை அறைந்து விடுகின்றாள். சிலர் எழுதுகின்றார்கள்: பாபா, நான் திருமணம் செய்து எனது முகத்தை அழுக்காக்கிக் கொண்டேன். நான் காமவாளினால் தோற்கடிக்கப்பட்டு விட்டேன். பாபா, இப்பொழுது உங்கள் முன்னால் வரும் தகுதியை நான் இழந்து விட்டேன். பின்னர் அவர்கள் எழுதுகின்றார்கள்: பாபா, நான் இப்பொழுது உங்கள் முன்னால் வரலாமா? பாபா அதற்குப் பதிலளிப்பார்: நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே முயற்சி செய்யுங்கள், நீங்கள் ஒருமுறை விழுந்தால், விழுந்ததுதான். உங்களால் ஓர் இராஜ அந்தஸ்தைக் கோர முடியாது என்றில்லை. கூறப்பட்டுள்ளது: ஏறுபவர்கள் சுவர்க்கத்தின் இனிமையைச் சுவைக்கின்றார்கள், ஆனால் விழுபவர்கள் சுடலையாண்டிகள் ஆகுகிறார்கள். அவர்கள் ஐந்தாம் மாடியில் இருந்து விழும்பொழுது, அவர்களின் எலும்புகள் அனைத்தும் முறிந்து விடுகின்றன. அதன்பின்னர் சிலர் உண்மையை பாபாவிற்கு எழுதுகின்றார்கள், ஆனால் ஏனையோரோ பாபாவிடம் கூறுவதும் இல்லை. இந்திரசபையில் இருந்த ஒரு தேவதையின் கதை இதற்கு உதாரணமாக உள்ளது. இவை அனைத்தும் ஞான விடயமாகும். இந்த ஒன்றுகூடலில் தூய்மையற்ற மனிதருக்கு அமர்வதற்கான உரிமை இல்லை. ஆனால் சில சந்தர்ப்பங்களில் அவர்கள் இங்கே அமர அனுமதிக்கப்படுகின்றார்கள். எவ்வாறாயினும், தூய்மை அற்றவர்களே இங்கே வருவார்கள். ‘பாபா, துகில் உரியப்படுவதில் இருந்து எங்களைக் காப்பாற்றுங்கள்!’ என்று எத்தனை திரௌபதிகள் இப்பொழுது அழைக்கின்றார்கள் என்று பாருங்கள். பந்தனத்தில் உள்ளவர்களுக்கும் பாகங்கள் இருக்கும். இன்னமும் காமமும், கோபமும் உடையவர்களும் உள்ளார்கள்; பெருமளவு முரண்பாடுகள் உள்ளன. பாபா சகல செய்திகளையும் பெறுகின்றார். எல்லையற்ற தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, இதனை வெற்றி கொள்ளுங்கள்! இப்பொழுது தூய்மை ஆகுங்கள்! என்னை நினைவு செய்தால், நீங்கள் உலக அதிபதிகள் ஆகுவீர்கள் என்ற உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. அவர்களே (குண்டுகள் தயாரிப்பவர்கள்) பத்திரிகைகளில் பிரசுரிக்கின்றார்கள்: இவற்றை நாங்கள் தயாரிப்பதற்கு எங்களை யாரோ தூண்டுகின்றார். அவற்றின் மூலம் அவர்கள் தங்கள் சொந்தக் குலத்தையே அழிப்பார்கள். எவ்வாறாயினும் அது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டிருந்தால் உங்களால் என்ன செய்ய முடியும்? நாளுக்கு நாள், அவர்கள் தொடர்ந்தும் அவற்றைத் தயாரிப்பார்கள். இன்னமும் பெருமளவு காலம் இல்லை. அச்சா.இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. இனிமையான சத்தியயுக இராச்சியத்திற்குச் செல்வதற்கு, மிக மிக இனிமையானவர்கள் ஆகுங்கள். ஓர் இராஜ அந்தஸ்தை அடைவதற்கு, நீங்கள் நிச்சயமாகத் தூய்மையாக வேண்டும். தூய்மையே முதன்மையானது, இதனாலேயே நீங்கள் கொடிய எதிரியான காமத்தை வெற்றிகொள்ள வேண்டும்.2. இந்தப் பழைய உலகில் எல்லையற்ற விருப்பமின்மையைக் கொண்டிருப்பதற்கு, உங்கள் சரீரம் உட்பட, உங்கள் கண்களால் பார்ப்பவை அனைத்தையும் பார்த்தும் பார்க்காதிருங்கள். ஒவ்வோர் அடியிலும் தந்தையிடம் இருந்து ஆலோசனை பெறுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின் விழிப்புணர்வில் முழு மரத்தின் ஞானத்தை வைத்திருப்பதன் மூலம் ஓர் உண்மையான தபஸ்வியாகவும் சேவையாளராகவும் தபஸ்யா செய்வீர்களாக.பக்தி மார்க்கத்தில் அவர்கள் ஒரு தபஸ்வி ஒரு மரத்தின் கீழ் அமர்ந்திருந்து தவம் செய்வதாகக் காட்டி இருப்பார்கள். இதில் ஓர் அர்த்தம் உள்ளது. குழந்தைகளான நீங்கள் உலகின் கல்ப விருட்சத்தின் வேர்களில் அமர்ந்திருக்கிறீர்கள். மரத்தின் கீழே அமர்ந்திருப்பதன் மூலம் நீங்கள் இயல்பாகவே முழு மரத்தின் ஞானத்தையும் உங்களின் புத்திகளில் வைத்திருப்பீர்கள். எனவே, முழு மரத்தின் ஞானத்தையும் உங்களின் விழிப்புணர்வில் வைத்திருந்து, ஒரு பற்றற்ற பார்வையாளராக மரத்தைப் பாருங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் உங்களிடம் போதையும் சந்தோஷமும் காணப்படும். அத்துடன் உங்களின் பற்றரியும் சக்தியூட்டப்படும். அதன்பின்னர், நீங்கள் சேவை செய்யும்போது, அதேவேளை நீங்கள் தபஸ்யாவும் செய்வீர்கள்.
சுலோகம்:
சரீரத்தின் எந்தவொரு நோயும் பெரிய விடயம் அல்ல. ஆனால் ஒருபோதும் உங்களின் மனதை நோய்வாய்ப்பட அனுமதிக்காதீர்கள்.அவ்யக்த சமிக்ஞை: இப்போது உங்களின் அருள்கின்ற ரூபத்தை வெளிப்படுத்துங்கள்.
அருள்பவரின் குழந்தைகள், சதா சகல வகையான செழிப்பாலும் நிரம்பி இருப்பார்கள். ஒரு பக்தரின் அல்லது பிச்சைக்காரரின் சம்ஸ்காரங்கள் ஒருபோதும் வெளிப்படக்கூடாது. பாபா உங்களுக்கு உதவி செய்ய வேண்டும் அல்லது உங்களுக்கு ஆசீர்வாதங்கள் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஒருபோதும் கொண்டிராதீர்கள். பாபா, எனக்கு ஒத்துழைப்புத் தேவை, எனக்கு சக்தி தேவை. எனக்கு வேண்டும் என்ற இந்த வார்த்தைகள், அருள்பவர்கள், பாக்கியத்தை அருள்பவர்கள், ஆசீர்வாதங்களை அருள்பவர்களாக இருக்கும் குழந்தைகளுக்குப் பொருந்தாது. அருள்பவரின் குழந்தைகளான நீங்கள் சகல சக்திகளாலும் நிரம்பியவர்கள். இந்த முழுமை ஸ்திதியானது முழுமை ஸ்திதியை நெருக்கமாகக் கொண்டு வரும்.