26.05.26        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, கடவுளே உங்கள் ஆசிரியராகி, உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்ற சந்தோஷத்தைச் சதா பேணுங்கள். நீங்கள் அவரிடமிருந்து பிரஜா யோகத்தை (பிரஜைகளாக ஆகுகின்ற யோகம்) அல்ல, இராஜ யோகத்தையே கற்கின்றீர்கள்.
கேள்வி:
இக்கல்வியின் அற்புதம் என்ன? இந்த முயற்சியை நீங்கள் எவ்வளவு காலத்திற்குத் தொடர்ந்தும் செய்ய வேண்டும்?

பதில்:
நீங்கள் நீண்ட காலமாகக் கற்கும் இக்கல்வியில், புதிய குழந்தைகள் மிக வேகமாக முன்னேறுகிறார்கள். அவர்களுடைய புத்தி மிகவும் கூர்மையாக இருப்பதனால், மூன்று மாதக் குழந்தைகள் கூட பழைய குழந்தைகளை முந்திச் செல்வது ஓர் அற்புதமாகும். நீங்கள் முழுமையாகச் சித்தியெய்தி, உங்கள் கர்மாதீத ஸ்திதியை அடைந்து, சகல கர்மக் கணக்குகளில் இருந்தும் விடுபடும்வரை, தொடர்ந்தும் முயற்சி செய்ய வேண்டும்.

ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் எங்கே அமர்ந்திருக்கின்றீர்கள்? எல்லையற்ற தந்தையின் பாடசாலையில் ஆகும். குழந்தைகளான உங்களுக்கு மிகவும் மேன்மையான போதை இருக்க வேண்டும். யாருடைய குழந்தைகளுக்கு இந்தப் போதை இருக்க வேண்டும்? இந்தப் போதை எல்லையற்ற தந்தையின் குழந்தைகளான, ஆன்மீகக் குழந்தைகளுக்கே இருக்க வேண்டும். ஆத்மாக்களுக்கு மாத்திரமே தந்தை கற்பிக்கின்றார். தந்தை குஜராத்திகளுக்கு அல்லது மராத்திகளுக்குக் கற்பிப்பதில்லை. அது பெயரும் வடிவமுமே ஆகும். ஆத்மாக்களாகிய உங்களுக்கு மாத்திரமே தந்தை கற்பிக்கின்றார். உங்கள் எல்லையற்ற தந்தையே, கடவுள் என்று அழைக்கப்படுகின்ற, அதே அவர் என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு மாத்திரமே புரிகிறது. கடவுளின் வாசகங்கள் நிச்சயமாக உள்ளன, ஆனாலும் கடவுள் யார் என்பதை மக்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் கூறுகிறார்கள்: பரமாத்மா சிவனுக்கு வந்தனங்கள். ஒரேயொரு பரமாத்மாவே உள்ளார். அவரே அதிமேலானவரும், அசரீரியானவரும் ஆவார். கடவுள் ஸ்ரீகிருஷ்ணர் உங்களுக்குக் கற்பிக்கவும் இல்லை, அவர் உங்களுக்கு முன்னர் எப்பொழுதும் கற்பித்ததும் இல்லை. ஆத்மாக்களாகிய எங்களின் தந்தையே எங்களுக்குக் கற்பிக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியும். கடவுள் அசரீரியானவர். இருப்பினும், மக்கள் அவரை வழிபடுவதற்குச் சிவனின் ஆலயங்களுக்குச் செல்கின்றார்கள், எனவே அவர் நிச்சயமாக ஏதோவொன்றாக இருக்க வேண்டும். எதுவுமே பெயருக்கும், வடிவத்திற்கும் அப்பாற்பட்டதாக இருக்க முடியாது. இந்நேரத்தில் மாத்திரமே நீங்கள் இதனைப் புரிந்து கொள்கிறீர்கள். முழு உலகிலுமுள்ள எவரும் இதனைப் புரிந்து கொள்வதில்லை. இப்பொழுது மாத்திரமே நீங்கள் இதனைப் புரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறீர்கள். நீங்கள் நீண்டகாலமாக இதனைக் கற்கின்றீர்கள். இப்பொழுது வந்துள்ளவர்கள், நீண்டகாலமாக இருப்பவர்களை முந்திச் செல்ல முடியாது என்பதல்ல. மூன்று மாதக் குழந்தைகள் கூட அதி வேகமாக முந்திச் செல்ல முடியும் என்பதும் ஓர் அற்புதமே. சிலர் கூறுகிறார்கள்: பாபா, இந்த ஆத்மாவின் புத்தி மிகவும் கூர்மையானது. புதியவர்கள் இந்த ஞானத்தைச் செவிமடுக்கும் பொழுது, அவர்களின் சந்தோஷம் உள்ளே பொங்கி எழுகின்றது. நீங்கள் அனைவரும் இறை மாணவர்கள். ஞானக்கடலான, அசரீரியான தந்தையே உங்களுக்குக் கற்பிக்கின்றார். 'கடவுள் பேசுகிறார்" என்பது நினைவு கூரப்படுகின்றது, ஆனால் எப்பொழுது? அவர்கள் இதனை மறந்து விட்டார்கள். சில குழந்தைகளின் தந்தையே அவர்களுடைய ஆசிரியருமாக இருக்கிறார் என்பதைக் குழந்தைகளான நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கின்றீர்கள். எவ்வாறாயினும், அவர் ஒரு பாடத்தை மாத்திரமே கற்பிப்பார், அவர்களுக்கு வெவ்வேறு பாடங்களைக் கற்பிப்பதற்காக வேறு ஆசிரியர்கள் இருப்பார்கள். இங்கு தந்தையே குழந்தைகளாகிய உங்கள் அனைவரினதும் ஆசிரியர் ஆவார். இது ஓர் அற்புதமான விடயம். சிவபாபாவே தங்களுக்குக் கற்பிக்கின்றார் என்ற நம்பிக்கை பல குழந்தைகளுக்கு உள்ளது. ஸ்ரீ கிருஷ்ணரை பாபா என அழைக்க முடியாது. ஸ்ரீகிருஷ்ணரை ஆசிரியராகவோ அல்லது குருவாகவோ அவர்கள் கருதுவதில்லை. இந்த ஒரேயொருவர் உங்களுக்கு நடைமுறைரீதியாகக் கற்பிக்கின்றார். இங்கே அமர்ந்திருக்கும் நீங்கள் அனைவரும் வெவ்வேறு மாணவர்கள். நீங்கள் சித்தியடைந்து, உங்கள் கர்மாதீத ஸ்திதியை அடையும் வரை ஆசிரியரான பாபா உங்களுக்குக் கற்பிப்பார். அதுவரை நீங்கள் தொடர்ந்தும் முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் கர்மக் கணக்குகளில் இருந்து விடுபட வேண்டும். அவ்வாறான ஓர் உலகிற்கு பாபா உங்களை அழைத்துச் செல்கிறார் என்ற பெரும் சந்தோஷம் உங்களுக்கு உள்ளார இருக்க வேண்டும். பரந்தாமவாசியான தந்தை தங்களுக்குக் கற்பிப்பதற்கு வருவார் என்ற விழிப்புணர்வுடன் குழந்தைகள் அமர்ந்திருக்கின்ற, இதைப் போன்ற வேறெந்தப் பாடசாலையும் இல்லை. நீங்கள் இப்பொழுது இங்கே அமர்ந்திருக்கின்றீர்கள், உங்களுடைய எல்லையற்ற பாபா உங்களுக்குக் கற்பிப்பதற்கு வருகின்றார் என்பதை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். உங்களுக்குள் பெரும் சந்தோஷம் இருக்க வேண்டும். பாபா எங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கிறார். இது பிரஜா யோகத்தை (பிரஜைகள் ஆகுவதற்கான யோகம்) அல்ல, ஆனால் இது இராஜயோகம்! இந்த நினைவின் மூலம் மாத்திரமே குழந்தைகளாகிய உங்களின் சந்தோஷப் பாதரசம் உயர முடியும். இது ஒரு முக்கியமான பரீட்சை. இருந்தும் நீங்கள் இங்கே மிகச் சாதாரணமாக அமர்ந்திருக்கிறீர்கள். முஸ்லீம் மாணவர்கள் நிலத்தில் கம்பளத்தின் மேல் அமரச் செய்யப்பட்டே கற்பிக்கப்படுகிறார்கள். நீங்கள் இப்பொழுது இந்த நம்பிக்கையுடன் இங்கே வருகிறீர்கள். நீங்கள் இப்பொழுது தந்தைக்கு முன்னால் நேரடியாக அமர்ந்திருக்கிறீர்கள். பாபா கூறுகிறார்: நான் ஞானக்கடல். நான் கல்பம் கல்பமாக உங்களுக்கு இராஜயோகம் கற்பிப்பதற்காக வருகிறேன். நீங்கள் ஸ்ரீகிருஷ்ணரின் 84 பிறவிகள் பற்றிப் பேசினாலும் அல்லது பிரம்மாவின் 84 பிறவிகள் பற்றிப் பேசினாலும் அது ஒரே விடயமே. பிரம்மாவே ஸ்ரீ கிருஷ்ணர் ஆகுகிறார். இதை உங்கள் புத்திகள் நன்றாகக் கிரகிக்க வேண்டும். தந்தை மீது பெரும் அன்பு இருக்க வேண்டும். ஆத்மாக்களாகிய நாங்கள், வந்து எங்களுக்குக் கற்பிக்கின்ற, பரமாத்மா பரமதந்தையான, தந்தையின் குழந்தைகள் ஆவோம். இதனைச் செய்வது ஸ்ரீகிருஷ்ணராக இருக்க முடியாது. ஸ்ரீகிருஷ்ணர் இவ்வாறு உங்களுக்குக் கற்பித்திருக்க மாட்டார். அவர் தனது கிரீடம் போன்றவற்றை அகற்றி விட்டு இங்கு வருவாரா? உங்களுக்குக் கற்பிப்பவர் ஒரு முதிர்ச்சியான நபராக இருக்க வேண்டும். தந்தை கூறுகிறார்: நான் ஒரு முதிர்ச்சியான சரீரத்தை எடுத்துள்ளேன், இது நிச்சயிக்கப்பட்டுள்ளது. பிரம்மாவின் மூலம் மாத்திரமே சிவபாபா உங்களுக்குக் கற்பிக்கிறார். உண்மையாகவே, பிரம்மா மூலம், பரமாத்மாவாகிய பரமதந்தை ஸ்தாபனையை மேற்கொள்கிறார் எனக் கூறப்படுகிறது. பிரம்மா எங்கிருந்து வருகிறார் என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. தந்தை இங்கே அமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களை மீண்டும் மீண்டும் விழித்தெழச் செய்கிறார், பின்னர் மாயை உங்களை மீண்டும் உறங்கச் செய்கிறாள். இப்பொழுது நீங்கள் நேரடியாக என் முன்னால் அமர்ந்திருக்கிறீர்கள், நான் உங்கள் ஆன்மீகத் தந்தை என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். உங்களுக்கு என்னைத் தெரியும், இல்லையா? பரமாத்மாவான பரமதந்தையே ஞானக்கடலும், தூய்மையாக்குபவரும், துன்பத்தை நீக்கிச் சந்தோஷத்தை அருள்பவரும் என இங்கு பாடப்படுகிறது. ஸ்ரீகிருஷ்ணரையிட்டு, என்றும் அவர்கள் இதனைக் கூறுவதில்லை; அவரால் அனைவருக்கும் ஒரேநேரத்தில் கற்பிக்க முடியாது. முரளி மதுவனத்திலேயே கூறப்படுகிறது. அது பின்னர் அனைத்து நிலையங்களுக்கும் அனுப்பப்படுகிறது. இப்பொழுது நீங்கள் தந்தைக்கு முன்னால் நேரடியாக அமர்ந்திருக்கின்றீர்கள். முன்னைய கல்பத்திலும் பாபா இதேபோல் உங்களுக்குக் கற்பித்தார் என்று உங்களுக்குத் தெரியும். அது இந்த நேரமே, அது இப்பொழுது கடந்த காலம் ஆகிவிட்டதுடன், இப்பொழுது நிகழ்காலம் ஆகுகிறது. பக்தி மார்க்கத்து விடயங்கள் இப்பொழுது துறக்கப்பட வேண்டும். இப்பொழுது உங்களுக்கு இந்த ஞானத்திலும், உங்களுக்குக் கற்பிப்பவரிலும் அன்பு இருக்கிறது. சிலர் ஆசிரியரிடம் கற்கும்பொழுது, அவருக்கு ஒரு பரிசைக் கொடுக்கின்றார்கள். இங்கே இந்த பாபாவே உங்களுக்கு ஒரு பரிசைக் கொடுக்கிறார். அவர் இங்கு வந்து, உங்களை உங்களுடைய சரீர வடிவத்தில் பார்க்கும் பொழுது, ‘இவர்கள் எனது குழந்தைகள்’ என உணர்கின்றார். அனைவருமே 84 பிறவிகளை எடுப்பதில்லை என்று குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். ஒரேயொரு பிறவியை எடுப்பவரும் சந்தோஷத்தினூடாகவும், துன்பத்தினூடாகவும் செல்வார். இந்த விடயங்கள் அனைத்தையும் இப்பொழுது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். இதுவே மனித உலகின் வம்சாவழி விருட்சம். ஆதிதேவரும், ஆதிதேவியுமாகிய, பிரம்மாவும் சரஸ்வதியுமே முதல் இலக்கத்தினர். பின்னர் எண்ணற்ற சமயங்களின் வளர்ச்சி தொடர்கின்றது. அவரே ஆத்மாக்கள் அனைவரினதும் விதையானவர்; ஏனைய அனைவரும் இலைகள் ஆவர். பிரஜாபிதா பிரம்மாவே மக்கள் அனைவரினதும் தந்தை. இப்பொழுது இந்நேரத்தில் பிரஜாபிதா இங்கு பிரசன்னமாகி இருக்கிறார். பாபா அவருக்குள் அமர்ந்திருந்து சூத்திரர்களைப் பிராமணர்களாக மாற்றுகிறார்; வேறு எவராலும் இதனைச் செய்ய முடியாது. தந்தை மாத்திரமே உங்களைச் சூத்திரர்களில் இருந்து பிராமணர்களாக மாற்றி, பின்னர் நீங்கள் தேவர்கள் ஆகுவதற்காகக் கற்பிக்கின்றார். இதுவே இலகு இராஜயோகக் கல்வி. ஜனக மகாராஜா ஒரு விநாடியில் ஜீவன்முக்தியைப் பெற்றார். அதாவது, அவர் ஒரு சுவர்க்கவாசி ஆகினார். மக்கள் தொடர்ந்தும் இதைப் பாடுகிறார்கள், ஆனால் அவர்களால் அதனை விளங்கப்படுத்த முடியாதுள்ளது. தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, இப்பொழுது ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுங்கள்! நீங்கள் இங்கே சரீரமற்றவர்களாக வந்து, பின்னர் சரீரங்களை ஏற்று, உங்கள் பாகங்களை நடித்தீர்கள். நாங்கள் உண்மையிலேயே 84 பிறவிகளை எடுத்திருக்கிறோம். சத்தியமானவரான தந்தை சத்தியத்தை மாத்திரமே உங்களுக்குக் கூறுகின்றார். ஓர் இராச்சியம் இருக்கும், எனவே, ஒருவர் மாத்திரமே இராஜயோகத்தைக் கற்பவராக இருக்க முடியாது. நீங்கள் அனைவரும் இப்பொழுது முட்களிலிருந்து மலர்களாக மாறுகின்றீர்கள். எவரை முட்கள் என அழைப்பது எனவும், எவரை மலர்கள் என அழைப்பது எனவும் இப்பொழுது நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். இது அழுக்கான முட்களின் உலகம். நாங்கள் 84 பிறவிச் சக்கரத்தில் சுற்றி வந்து, இப்பொழுது நரகவாசிகள் ஆகிவிட்டோம். நாங்கள் உலக வரலாற்றையும், புவியியலையும் மீண்டும் தொடருவோம். நாங்கள் மீண்டும் நிச்சயமாகச் சுவர்க்கவாசிகள் ஆகுவோம். நாங்கள் கல்பம் கல்பமாக இவ்வாறு ஆகுகிறோம். மீண்டும், மீண்டும் இதனை நினைவுசெய்து, இந்த ஞானத்தை ஏனையோருக்கும் விளங்கப்படுத்துங்கள். இலக்ஷ்மியும் நாராயணனும் சூரிய வம்சத்தைச் சேர்ந்தவர்கள். கிறிஸ்து வந்தார், அவருக்கு முன் ஒரு சிலரே இருந்தார்கள்; அங்கே இராச்சியம் இருக்கவில்லை. இப்பொழுது தந்தை வந்து, சத்திய யுகத்து இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றார். சங்கம யுகத்தில் ஸ்தாபனை நடைபெறுகிறது. இதுவே உண்மையான கும்ப மேலா என்பது இப்பொழுது உங்கள் புத்திகளில் இருக்கிறது. எண்ணற்ற ஆத்மாக்கள் இருக்கிறார்கள், ஒரேயொரு பரமாத்மாவே இருக்கிறார். குழந்தைகளாகிய உங்களைத் தூய்மை ஆக்குவதற்குப் பரமாத்மாவான தந்தை உங்களிடம் வருகிறார். இது சங்கமயுகத்தின் கும்பமேலா என அழைக்கப்படுகிறது. ஞானமாகிய மூன்றாவது கண்ணை இப்பொழுது நீங்கள் ஒவ்வொருவரும் பெற்றிருக்கிறீர்கள். தந்தை வந்து, உங்களைச் சுவர்க்கவாசிகள் ஆக்குகிறார். பின்னர், நரகமாகிய, பழைய உலகின் விநாசம் நிச்சயமாக நடைபெற வேண்டும். ஒவ்வொரு கல்பத்திலும் விநாசம் நடைபெறுகிறது. புதிய உலகம் பழைய உலகமாகவும், பழைய உலகம் புதிய உலகமாகவும் ஆகுகின்றது. இது நிச்சயமாக நடைபெறும். புதிய உலகம் சுவர்க்கம் என்றும், இந்தப் பழைய உலகம் நரகம் என்றும் அழைக்கப்படுகின்றன. மனிதர்களின் சனத்தொகை அதிகளவு வளர்ந்து விட்டது! அவர்களால் தானியங்களைப் பெற முடியாத பொழுது, மேலும் பெருமளவு தானியங்களைப் பயிரிட வேண்டும் என்பதை அறிவார்கள். எவ்வாறாயினும் பல குழந்தைகள் தொடர்ந்தும் பிறப்பு எடுக்கின்றார்கள். அவர்கள் எங்கிருந்து தானியத்தைப் பெறுவார்கள்? இந்தப் பழைய உலகம் அழிக்கப்பட உள்ளது எனும் உத்தரவாதம் குழந்தைகளாகிய உங்களுக்கு உள்ளது. மனிதர்கள் இந்த ஞானத்தை விரும்புகிறார்கள், ஆனால், அதில் எதுவுமே அவர்களின் புத்தியில் பதிவதில்லை. நரகத்தின் பின்னர் சுவர்க்கம் வரும் என்பது உங்கள் புத்திகளில் இருக்கிறது. சத்திய யுகத்துத் தேவர்கள் வாழ்ந்து, பின்னர் சென்று விட்டார்கள். இலக்ஷ்மியும், நாராயணனும் உலக அதிபதிகளாக இருந்தார்கள், அவர்களின் வடிவங்கள் இருக்கின்றன. சத்திய யுகத்தில் ஆதி சனாதன தேவிதேவதா தர்மம் இருக்கிறது. இந்நேரத்தில் மக்கள் தங்களைத் தேவ தர்மத்தைச் சேர்ந்தவர்கள் என்று அழைப்பதில்லை. அதற்குப் பதிலாக, அவர்கள் தங்களை இந்துக்கள் எனக் கூறுகிறார்கள். நீங்கள், தேவர்கள் ஆகுகிறீர்கள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெளிவாகப் புரிகிறது. இந்த அங்கங்களினூடாக பாபா உங்களுக்குக் கற்பிக்கின்றார். பாபா கூறுகிறார்: வேறு எவ்வாறு நான் உங்களுக்குக் கற்பிக்க முடியும்? அவர் ஆத்மாக்களுக்கு மாத்திரம் கற்பிக்கின்றார், ஏனெனில் ஆத்மாக்களில் கலப்படம் கலந்திருக்கிறது. இப்பொழுது நீங்கள் உண்மையான தங்கமாக வேண்டும். நீங்கள் சத்திய யுகத்திலிருந்து திரேதா யுகத்திற்குள் வந்தீர்கள். அதாவது, ஆத்மாவில் வெள்ளிக் கலப்படம் கலக்கப்பட்ட பொழுது, நீங்கள் சந்திர வம்சத்தவர்கள் ஆகினீர்கள். நீங்கள் சத்திய யுகத்திற்குச் சென்று, பின்னர் கீழிறங்கினீர்கள். மனித சனத்தொகை தொடர்ந்தும் அதிகரித்தது. நீங்கள் சத்தியயுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் ஊடாக, 84 பிறவிகளின் சக்கரத்தில் சுற்றி வந்தீர்கள் என்பது இப்பொழுது உங்கள் புத்திகளில் இருக்கிறது. நீங்கள் இந்தப் பாகங்களைப்; பல தடவைகள் நடித்திருக்கிறீர்கள். எவராலும் தனது பாகத்திலிருந்து விடுபட முடியாது. தங்களுக்கு அநாதியான முக்தி வேண்டும் எனச் சிலர் கூறுகிறார்கள். ஆனால் உண்மையில், நீங்களே விரக்தி அடைந்தவர்களாக இருக்க வேண்டும். ஏனெனில், நீங்கள்தான் 84 பிறவிச் சக்கரத்தைச் சுற்றி வந்துள்ளீர்கள். வருவதும் போவதும் தொடர்ந்தும் நடைபெறுகிறது என மக்கள் எண்ணுவதால், தாங்கள் ஏன் அதிலிருந்து விடுவிக்கப்பட முடியாது என்று அவர்கள் வினவுகிறார்கள். எவ்வாறாயினும், அது சாத்தியமல்ல. குருமார்களும் கூறுகிறார்கள்: நீங்கள் முக்தி அடைவீர்கள். பிரம்ம தத்துவத்தை நினைவு செய்யுங்கள், நீங்கள் அதற்குள் இரண்டறக் கலப்பீர்கள்! பாரதத்தில் பலவிதமான கருத்துக்களும், அபிப்பிராயங்களும் இருக்கின்றன. வேறெந்த நாடுகளிலும் அத்தனை அபிப்பிராயங்கள் இல்லை. இங்கேயே பல அபிப்பிராயங்கள் இருக்கின்றன, அனைத்துமே ஒன்றுக்கொன்று வேறுபட்டவை. மக்கள் பெருமளவு மாயாஜால வித்தைகளையும் கற்கிறார்கள். சிலர் குங்குமத்தை வெளிவரச் செய்கிறார்கள், ஏனையோர் வேறு சிலவற்றைச் செய்கிறார்கள். இதையிட்டு மக்கள் மிகவும் சந்தோஷம் அடைகிறார்கள். எவ்வாறாயினும், இது ஆன்மீக ஞானம். ஆன்மீகத் தந்தையே ஆத்மாக்களாகிய எங்கள் தந்தை என்பது உங்களுக்குப் புரியும். ஆன்மீக பாபா ஆத்மாக்களாகிய எங்களுடன் பேசுகிறார். அவர் வந்து, சத்திய நாராயணனின் கதையையும், அமரத்துவக் கதையையும் உங்களுக்குக் கூறுகிறார். இதன் மூலம் நீங்கள் அமரத்துவ பூமியின் அதிபதிகளாகவும், சாதாரண மனிதரிலிருந்து நாராயணனாகவும் ஆகுகிறீர்கள். பின்னர் நீங்கள் சிப்பிகளைப் போன்றவர்கள் ஆகுகின்றீர்கள். இப்பொழுது நீங்கள் வைரத்தைப் போல் பெறுமதி வாய்ந்த ஒரு பிறவியைப் பெற்றுள்ளீர்கள். ஆகவே அதனை நீங்கள் சிப்பிகளுக்குப் பின்னால் துரத்திச் செல்வதால், ஏன் வீணாக்குகிறீர்கள்? இன்னும் எத்தனை வருடங்கள் இந்த உலகம் இருக்கும்? தொடர்ந்தும் பெருமளவு சண்டை சச்சரவுகள் நிலவப் போகின்றன. அனைத்துமே அழிக்கப்படவுள்ளது. மரணம் உங்கள் முன்னால் நிற்கிறது. எனவே நீங்கள் சேர்த்து வைத்த நூறாயிரம் அல்லது மில்லியன்களை யார் அனுபவிப்பார்கள்? பதிலாக, அவை அனைத்தையும் ஏன் ஒரு தகுதிவாய்ந்த வழியில் உபயோகிக்கக் கூடாது? இந்த ஆன்மீகக் கல்லூரியைத் திறப்பதன் மூலம் மக்கள் என்றென்றும் ஆரோக்கியமாகவும், செல்வந்தர்களாகவும், சந்தோஷமாகவும் ஆகுகிறார்கள். இது வைத்தியசாலையும், பல்கலைக்கழகமும் இணைந்ததாக உள்ளது: இங்கே ஆரோக்கியம், செல்வம், சந்தோஷம் உள்ளன. உண்மையாகவே யோக சக்தியின் மூலம் நீங்கள் நீண்ட ஆயுளைப் பெறுகிறீர்கள். நீங்கள் மிகவும் ஆரோக்கியம் மிக்கவர்கள் ஆகுகின்றீர்கள்! நீங்கள் எல்லையற்ற பொக்கிஷங்களைப் பெறுகிறீர்கள். முதலாவது தர்மத்தை ஸ்தாபித்த, ஒரேயொருவரான 'அல்லா"வைப் பற்றிய ஒரு நாடகத்தை அவர்கள் காட்டுகிறார்கள். அல்லாவினால் ஸ்தாபிக்கப்பட்ட ஆதி சனாதன தேவிதேவதா தர்மமே பெருமளவு சந்தோஷத்தைக் கொடுக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள்: அதன் பெயரே சுவர்க்கம் என்பதாகும். நீங்கள் அமைதி தாமவாசிகளாக இருந்தீர்கள், பின்னர் நீங்கள் சந்தோஷ தாமத்திற்குச் சென்று, 84 பிறவிகளை எடுக்கும் பொழுது, தொடர்ந்தும் கீழிறங்கி வந்தீர்கள். நான் இங்கே அமர்ந்திருந்து இவ்விதமாக, குழந்தைகளான உங்களுக்கு ஒவ்வொரு கல்பத்திலும் விளங்கப்படுத்துகிறேன். உங்கள் சொந்தப் பிறவிகளைக் கூட உங்களுக்குத் தெரியாது. நான் அவற்றை உங்களுக்கு விளங்கப்படுத்துகிறேன். நீங்கள் 84 பிறவிகளை எடுத்துள்ளீர்கள், இப்பொழுது இந்த ஆடைகள் தூய்மை அற்றதாகி விட்டன. ஆத்மாக்களான நீங்களும் தமோபிரதான் ஆகிவிட்டீர்கள். பாபா உங்களுக்குக் கூறும் அனைத்துமே சரியானவை. பாபா என்றுமே உங்களுக்குத் தவறான எதையும் கூற மாட்டார். அவரே சத்தியமானவர். சத்தியயுகம் நீதியான உலகமும், விகாரமற்ற உலகமும் ஆகும். பின்னர் இராவணன் உங்களை அதர்மவான்கள் ஆக்குகிறான். இது பொய்யான உலகம். பாடப்படுகிறது: மாயையும் பொய், சரீரமும் பொய், இந்த உலகமும் பொய்! எந்த உலகம்? பழைய உலகம் முழுவதுமே பொய்யானது. சத்திய யுகத்தில் உண்மையான உலகம் இருந்தது. ஒரேயொரு உலகமே இருக்கின்றது; இரு உலகங்கள் இருப்பதில்லை. புதிய உலகம் பின்னர் பழையதாக ஆகுகின்றது. பழைய வீட்டிற்கும் புதிய வீட்டிற்கும் இடையில் வித்தியாசம் உள்ளது. ஒரு புதிய வீடு கட்டப்படும் பொழுது, நீங்கள் சென்று புதிய வீட்டில் வசிப்பீர்கள் என்பதைப் புரிந்து கொள்கிறீர்கள். இங்கேயும், குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் வளர்வதால், குழந்தைகளுக்காகப் புதிய வீடுகள் கட்டப்படுகின்றன. குழந்தைகளாகிய உங்களுக்குப் பெருமளவு சந்தோஷம் இருக்க வேண்டும். தந்தை கூறுகிறார்: ஞானக்கடலான, எனது ஏழை, உதவியற்ற குழந்தைகள் காமச் சிதையில் அமர்ந்ததால், முழுமையாக எரிந்து விட்டார்கள். இப்பொழுது நான் அவர்களை இந்த ஞானச் சிதையில் அமரச் செய்கிறேன். நான் அவர்களை இந்த ஞானச் சிதையில் அமர்த்தி, அவர்களைச் சுவர்க்க அதிபதிகள் ஆக்குகிறேன். காமச் சிதையில் அமர்வதனால், அவர்கள் முழுமையாக அவலட்சணமானவர்கள் ஆகிவிட்டார்கள். ஸ்ரீகிருஷ்ணர் அவலட்சணமானவர் என்றும், அழகானவர் என்றும் அழைக்கப்படுகிறார், ஆனால் எவராலும் அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. நீங்கள் முன்னர் இருந்ததில் இருந்து, இப்பொழுது என்னவாகுகிறீர்கள் என்று பாருங்கள்! தந்தை உங்களைச் சிப்பிகளில் இருந்து வைரங்களாக மாற்றுகிறார். ஆதலால் நீங்கள் அந்தளவு கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் தந்தையை நினைவுசெய்ய வேண்டும்! நினைவைக் கொண்டிருப்பதால் மாத்திரமே, நீங்கள் சுவர்க்க அதிபதிகள் ஆகுவீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. சிப்பிகளைத் துரத்திச் செல்வதால், வைரத்தைப் போல் பெறுமதி வாய்ந்த இவ் வாழ்வை வீணாக்காதீர்கள். மரணம் முன்னால் நிற்கிறது. ஆகவே, உங்களிடமுள்ள அனைத்தையும் ஒரு தகுதியான வழியில் ஆன்மீகச் சேவைக்கு உபயோகியுங்கள்.

2. இந்தக் கல்வியிலும், உங்களுக்குக் கற்பிக்கும் ஒரேயொருவரிடமும் உண்மையான அன்பை வைத்திருங்கள். கடவுளே உங்களுக்குக் கற்பிப்பதற்கு வருகின்றார் என்ற சந்தோஷத்தைப் பேணுங்கள்.

ஆசீர்வாதம்:
உங்களின் ஆதியான சம்ஸ்காரங்களைப் பிடித்துக் கொள்வதற்காக உங்களின் பிடித்துக் கொள்ளும் சக்தியைப் பயன்படுத்தி, சக்திசாலியாகவும் அவற்றின் சொரூபமாகவும் ஆகுவீர்களாக.

முயற்சி செய்வதற்கான பிரதானமான அடிப்படை, பிடித்துக் கொள்ளும் சக்தியே ஆகும். விஞ்ஞானத்தால் வெகு தொலைவில் உள்ள சத்தத்தையும் பிடித்துக் கொள்ள முடிகிறது. அதேபோல், உங்களின் ஆதியான, தெய்வீக சம்ஸ்காரங்களைப் பிடித்துக் கொள்வதற்கு உங்களின் மௌன சக்தியைப் பயன்படுத்துங்கள். இதற்கு, சதா இந்த விழிப்புணர்வைப் பேணுங்கள்: நான் அப்படி இருந்தேன், நான் அப்படி ஆகிக் கொண்டிருக்கிறேன். எந்தளவிற்கு அதிகமாக நீங்கள் அந்த சம்ஸ்காரங்களைப் பிடித்துக் கொள்கிறீர்களோ, அந்தளவிற்கு அதிகமாக உங்களால் அவற்றின் சொரூபம் ஆக முடியும். 5000 வருடங்களுக்கு முந்திய விடயங்களும் மிகத் தெளிவாக அனுபவம் செய்யப்படும். அது நேற்றைய விடயம் போன்றே இருக்கும். உங்களின் விழிப்புணர்வை நீங்கள் மிக மேன்மையாகவும் தெளிவாகவும் ஆக்கினால் மட்டுமே, நீங்கள் சக்திசாலி ஆகுவீர்கள்.

சுலோகம்:
பிராமண வாழ்க்கையின் மூச்சு, சந்தோஷம் ஆகும். நீங்கள் உங்களின் சரீரத்தை விட நேரிட்டாலும் உங்களின் சந்தோஷத்தைக் கைவிடாதீர்கள்.

அவ்யக்த சமிக்ஞை: சதா ஆட்ட அசைக்க முடியாத மற்றும் நிலையான ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள்.

ஒரேயொருவருக்குச் சொந்தம் ஆகுவதன் மூலம், ஓரடியில் ஒரு பேரத்தைச் செய்பவர்கள், திருப்தியாக இருப்பார்கள். எவ்வாறாயினும், ஒரு வேளையில் சிறிதளவை மட்டும் பேரம் செய்பவர்கள், தமது பாதங்களை ஒரு படகில் வைப்பதற்குப் பதிலாக இரண்டு படகுகளில் வைத்திருப்பார்கள். அதனால் அவர்கள் எப்போதும் ஏதாவதொரு மனக்குழப்பத்தில் அல்லது கிளர்ச்சியுடன் இருப்பார்கள். அவர்கள் நிலையாக இருக்க மாட்டார்கள். அதனால், நீங்கள் ஒரு பேரத்தைச் செய்ய விரும்பினால், அதை ஒரு விநாடியில் செய்யுங்கள். உங்களின் இதயத்தைத் துண்டுகளாக நொறுக்கிக் கொள்ளாதீர்கள்.