26.07.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, இச்சங்கமயுகம் உங்கள் பாவங்களை அழிப்பதற்கான யுகமாகும். இந்த யுகத்தில் நீங்கள் நிச்சயமாகத் தூய்மையாக வேண்டும். அத்துடன் எந்தப் பாவங்களையும் செய்யக் கூடாது.

கேள்வி:
எந்தக் குழந்தைகளால் அதீந்திரிய சுகத்தை அனுபவம் செய்ய முடியும்?

பதில்:
அழியாத இந்த ஞான இரத்தினங்களால் நிறைந்திருப்பவர்கள் அதீந்திரிய சுகத்தை அனுபவம் செய்ய முடியும். உங்கள் வாழ்வில் நீங்கள் எந்தளவிற்கு அதிகமாக இந்த ஞானத்தைக் கிரகிக்கின்றீர்களோ, அந்தளவிற்கு நீங்கள் செல்வந்தர்கள் ஆகுகிறீர்கள். நீங்கள் இந்த ஞான இரத்தினங்கள் எதனையும் கிரகிக்காதிருந்தால் நீங்கள் ஏழையாகவே இருப்பீர்கள். தந்தை உங்களுக்குக் கடந்தகால, நிகழ்கால, எதிர்காலத்தின் ஞானத்தைக் கொடுத்து, உங்களைத் திரிகாலதரிசிகளாக ஆக்குகிறார்.

பாடல்:
ஓம் நமசிவாய….

ஓம் சாந்தி.
இப்பொழுது கடந்தகாலம் நிகழ்காலமாக ஆகுகிறது, பின்னர் இந்நிகழ்காலம் கடந்தகாலமாக ஆகும். மக்கள் கடந்த காலத்தை நினைவு செய்கிறார்கள். இப்பொழுது நீங்கள் அதிமங்களகரமான சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள். “மங்களம்” (புருஷோத்தம்) என்னும் வார்த்தை நிச்சயமாகப் பயன்படுத்தப்பட வேண்டும். உங்களால் நிகழ்காலத்தைப் பார்க்க முடியும். கடந்த காலத்தின் ஞாபகார்த்தம் இப்பொழுது நடைமுறை ரீதியில் இடம்பெறுகிறது. இதையிட்டு சந்தேகங்கள் எழக் கூடாது. இப்பொழுது இது சங்கமயுகம் என்பதும், கலியுக இறுதி என்பதும் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். 5000 வருடங்களுக்கு முன்னர் நிச்சயமாகச் சங்கமயுகம் கடந்தகாலமாக இருந்ததுடன், அது இப்பொழுது நிகழ்காலம் ஆகிவிட்டது. தந்தை இப்பொழுது வந்துவிட்டார். ஆகவே, கடந்தகாலமாக இருந்ததே, எதிர்காலம் ஆகியுள்ளது. சத்தியயுகத்தில் நீங்கள் உங்கள் இராச்சியத்தை அடைவதற்காகத் தந்தை இப்பொழுது உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கிறார். இப்பொழுது சங்கமயுகமாகும். குழந்தைகளாகிய உங்களைத் தவிர, எவரும் இவ்விடயங்களை அறிய மாட்டார்கள். நீங்கள் நடைமுறையில் இராஜயோகத்தைக் கற்கிறீர்கள். அது மிகவும் இலகுவானது. இளைஞர்களும், முதியவர்களுமாகிய குழந்தைகளாகிய நீங்கள் அனைவரும் நிச்சயமாக ஒரு பிரதான விடயத்தை விளங்கப்படுத்த வேண்டும்: தந்தையை நினைவுசெய்தால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். இது உங்கள் பாவங்களை அழிக்கும் காலம் என்பதால், யார் மேலும் பாவங்களைச் செய்வார்கள்? எவ்வாறாயினும், மாயை உங்களை பாவச்செயல்களைச் செய்ய வைக்கும் போது, நீங்கள் அறையப்பட்டு, கடுமையான தவறைச் செய்வதற்குத் தூண்டப்பட்டு விட்டீர்கள் என்பதை பின்னர் நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். நீங்கள் தந்தையை அழைத்துக் கொண்டிருந்தீர்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! இப்பொழுது தந்தை உங்களைத் தூய்மை ஆக்குவதற்கு வந்துவிட்டதால், நீங்கள் தூய்மையாக வேண்டும். கடவுளுக்கு உரியவராகிய பின்னர், நீங்கள் தூய்மை அற்றவர்கள் ஆகக்கூடாது. சத்தியயுகத்தில், அனைவரும் தூய்மையாக இருந்தார்கள். பாரதமே தூய்மையாக இருந்தது. ‘விகார உலகமும், விகாரமற்ற உலகமும்’ என்பது நினைவுகூரப்பட்டுள்ளது. அவர்கள் முற்றிலும் விகாரம் அற்றவர்கள், நாங்களோ விகாரத்தில் ஈடுபடுவதனால் நாங்கள் விகாரமானவர்கள் ஆவோம். “விகாரம்” எனும் வார்த்தை விகாரமானவர்கள் என்பதைக் குறிக்கின்றது. தூய்மை அற்றவர்களே தம்மைத் தூய்மையாக்க வருமாறு அவரை அழைக்கிறார்கள். கோபப்படுபவர்கள் அழைப்பதில்லை. நாடகத் திட்டத்துக்கேற்ப, தந்தையும் வருகிறார். இது சற்றேனும் மாற்றப்பட முடியாததாகும். கடந்த காலத்தில் இடம்பெற்றவை அனைத்தும் நிகழ்காலத்தில் இடம்பெறுகிறது. கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலத்தை அறிவது எனில், திரிகாலதரிசியாக இருத்தல் என அறியப்படுகிறது. இது நினைவுசெய்யப்பட வேண்டும். இவ்விடயங்களையிட்டு உங்களுக்குப் பெரும் முயற்சி தேவைப்படுகிறது. நீங்கள் மீண்டும் மீண்டும் மறக்கிறீர்கள். இல்லாவிட்டால், குழந்தைகளாகிய நீங்கள் அதிகளவு அதீந்திரிய சுகத்தை அனுபவம் செய்வீர்கள்! அழியாத இந்த ஞான இரத்தினங்கள் மூலம் நீங்கள் மாபெரும் செல்வந்தர்களாக ஆகுகிறீர்கள். நீங்கள் அதிகம் கிரகிக்கையில், நீங்கள் மேலும் செல்வந்தர்களாக ஆகுகிறீர்கள். எவ்வாறாயினும், அது புதிய உலகத்துக்கானது. நீங்கள் இப்பொழுது செய்வது அனைத்தும் எதிர்காலப் புதிய உலகத்துக்கே என்பதை நீங்கள் அறிவீர்கள். புதிய உலகத்தை ஸ்தாபிப்பதற்கும் பழைய உலகை அழிப்பதற்கும் தந்தை வந்துள்ளார். ஒரு கல்பத்தின் முன்னர் நடைபெற்றதைப் போன்று, அது மிகச்சரியாக இடம்பெறும். இதைக் குழந்தைகளாகிய நீங்கள் பார்ப்பீர்கள். இயற்கை அனர்த்தங்களும் இடம்பெறும். பூமியதிர்ச்சி இடம்பெறும்போது, அனைத்தும் அழிக்கப்படும். பாரதத்தில் பல பூமியதிர்ச்சிகள் இடம்பெறும். இவை அனைத்தும் நிச்சயமாக இடம்பெறும் என நாங்கள் கூறுகிறோம். அது முன்னைய கல்பத்திலும் இடம்பெற்றது. இதனாலேயே தங்க நகரமான துவாரகை கடலின் அடியில் மூழ்கியது எனக் கூறப்பட்டுள்ளது. நீங்கள் இந்த ஞானத்தை 5000 வருடங்களுக்கு முன்னரும் பெற்றீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் உங்கள் புத்தியில் மிகவும் தெளிவாக வைத்திருக்க வேண்டும். இதில் சிறிதளவேனும் வேறுபாடு இல்லை. பாபா, நாங்கள் எங்கள் ஆஸ்தியை 5000 வருடங்களுக்கு முன்னர் உங்களிடம் இருந்து கோரினோம். நாங்கள் எங்கள் ஆஸ்தியை உங்களிடம் இருந்து எண்ணற்ற தடவைகள் கோரியுள்ளோம், அது கணக்கிடப்பட முடியாதது. நீங்கள் பல தடவைகள் உலக அதிபதிகள் ஆகுகிறீர்கள், பின்னர் நீங்கள் யாசிப்பவர்கள் ஆகுகிறீர்கள். இவ்வேளையில், முழு பாரதமும் யாசிப்பவர்களால் நிறைந்துள்ளது. “நாடகத் திட்டத்துக்கேற்ப” என நீங்கள் எழுதுகிறீர்கள். அம்மக்கள் “நாடகம்” எனும் வார்த்தையைப் பயன்படுத்துவதில்லை. அவர்களுக்கு அவர்களுடைய சொந்தத் திட்டம் உள்ளது. நாடகத் திட்டத்துக்கேற்ப மிகச்சரியாக 5000 வருடங்களுக்கு முன்னர் நாங்கள் செய்ததைப் போன்று, நாங்கள் மீண்டும் ஒருமுறை ஸ்தாபனையை மேற்கொள்கிறோம் என நீங்கள் கூறுகிறீர்கள். நாங்கள் இப்பொழுது ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதுடன், மிகச் சரியாக முந்தைய கல்பத்தில் செய்ததைப் போன்று செய்கிறோம். ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதால், நாங்கள் சக்தியைப் பெறுகிறோம். “சிவசக்திகள்” என்னும் பெயர் உள்ளது. நீங்களே ஆலயங்களில் வழிபாடு செய்யப்படும் தேவிகளாகிய சிவசக்திகள் ஆவீர்கள். நீங்களே உலக இராச்சியத்தை அடையும், தேவிகள் ஆவீர்கள். ஜெகதாம்பாள் மிக அதிகளவாக வழிபாடு செய்யப்படுவதைப் பார்க்கின்றீர்கள்! அவருக்குப் பல பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், தந்தை ஒருவரே சிவன் என்பதைப் போன்று, அவரும் ஒரேயொருவரே ஆவார். நீங்கள் உலகைச் சுவர்க்கம் ஆக்குவதற்கு உதவுவதால், நீங்களும் வழிபாடு செய்யப்படுகின்றீர்கள். பல தேவிகள் உள்ளனர்! இலக்ஷ்மி அதிகளவு வழிபாடு செய்யப்படுகிறார். தீபமாலாவின் பொழுது, (தீபாவளி, தீப விழா) அவர்கள் மகா இலக்ஷ்மியை (நான்கு கரங்களுடனான இலக்ஷ்மி) வழிபடுகிறார்கள். அவரே தலைவி ஆவார், சக்கரவர்த்தியும் சக்கரவர்த்தினியும் ஒன்றிணைந்து மகாலக்ஷ்மி ஆகுகிறார்கள். இதில் இருவரும் உள்ளடக்கப்படுகின்றார்கள். நாங்களும் மகாலக்ஷ்மியை வழிபடுவது வழக்கம். எங்கள் செல்வம் அதிகரித்தால், அது மகாலக்ஷ்மியால் கொடுக்கப்பட்ட ஆசீர்வாதத்தினால் என நாங்கள் நம்பினோம். அவர்கள் அவரை ஒவ்வொரு வருடமும் வழிபடுகிறார்கள். நல்லது. மக்கள் அவரிடம் செல்வத்தை வேண்டுகிறார்கள். அவர்கள் தேவிகளிடம் என்ன கேட்கிறார்கள்? சங்கமயுகத்துத் தேவிகளாகிய நீங்கள் சுவர்க்கத்துக்கான ஆசீர்வாதத்தைக் கொடுக்கிறீர்கள். சுவர்க்கத்துக்கான தங்கள் விருப்பங்கள் அனைத்தையும் தேவிகளால் பூர்த்தி செய்ய முடியும் என்பது மக்களுக்குத் தெரியாது. நீங்கள் தேவிகள், அல்லவா? நீங்கள் மனிதர்களுக்கு இந்த ஞானத்தைத் தானம் அளிக்கிறீர்கள், அதனூடாக அவர்களின் விருப்பங்கள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படுகிறது. அவர்கள் நோய்வாய்ப்படும் பொழுது, அவர்கள் தேவிகளிடம் தங்களைக் குணமாக்கிக் காப்பாற்றுமாறு வேண்டுகிறார்கள். பல தேவியர் உள்ளனர். நீங்களே சங்கமயுகத்தின் சிவசக்தி தேவியர்கள் ஆவீர்கள். நீங்கள் அவர்களைச் சுவர்க்கத்தின் மூலம் ஆசீர்வதிக்கிறீர்கள். தந்தை இதைக் கொடுக்கிறார், குழந்தைகளாகிய நீங்களும் இதைக் கொடுக்கிறீர்கள். அவர்கள் மகாலக்ஷ்மியை கண்கூடாக வரவழைக்கின்ற அதேவேளை நாராயணனை மறைமுகமாக்கி உள்ளார்கள். தந்தை குழந்தைகளாகிய உங்களின் செல்வாக்கை அதிகரிக்கிறார். 21 பிறவிகளுக்கான சந்தோஷத்துக்கான விருப்பங்கள் அனைத்தையும் தேவிகள் பூர்த்தி செய்கிறார்கள். மக்கள் மகாலக்ஷ்மியிடம் செல்வத்தை வேண்டுகிறார்கள். அவர்கள் செல்வத்துக்காக நல்ல வியாபாரம் போன்றவற்றையும் செய்கிறார்கள். தந்தை வந்து உங்களை முழு உலகின் அதிபதிகளாக்கி உங்களுக்கு அளவற்ற செல்வத்தையும் கொடுக்கிறார். ஸ்ரீ இலக்ஷ்மியும் நாராயணனும் உலக அதிபதிகளாக இருந்தார்கள். இப்பொழுது அவர்கள் ஏழைகள் ஆகியுள்ளார்கள். அவர்கள் எவ்வாறு இராச்சியத்தை ஆட்சி செய்தார்கள் என்றம், பின்னர் எவ்வாறு அவர்களின் ஸ்திதி படிப்படியாகக் குறைவடைந்தது என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். மறுபிறவி எடுக்கையில் உங்கள் நிலை இப்பொழுது என்னவாகி உள்ளது என்பதையும், எவ்வாறு உங்கள் கலைகள் குறைவடைந்தது என்பதையும் பாருங்கள்! இது புதியதல்ல. ஒவ்வொரு 5000 வருடங்களும் சக்கரம் தொடர்ந்தும் சுழல்கிறது. இப்பொழுது பாரதம் ஏழ்மை ஆகியுள்ளது. இது இராவண இராச்சியமாகும். பாரதம் மிகவும் மேன்மையாக இருந்தது, அது முதல் இலக்கமாக இருந்தது. அது இப்பொழுது கடைசி இலக்கமாக உள்ளது. அது கடைசி இலக்கமாக ஆகாதிருந்தால், அது எவ்வாறு முதல் இலக்கமாக மாற முடியும்? சரியான கணக்கு இருக்க வேண்டும். நீங்கள் பொறுமையுடன் இந்த ஞானக்கடலைக் கடையும் பொழுது, அனைத்தும் இயல்பாகவே உங்கள் புத்தியில் பிரவேசிக்கின்றன. இவை அத்தகைய இனிமையான விடயங்கள்! முழு உலகச் சக்கரத்தையும் இப்பொழுது நீங்கள் அறிவீர்கள். கல்வி பாடசாலைகளில் மட்டும் கொடுக்கப்படுவதில்லை. ஆசிரியரும் உங்களுக்கு வீட்டில் கற்பதற்கு பாடங்களைக் கொடுப்பதுண்டு. அது வீட்டுவேலை என அழைக்கப்படுகிறது. தந்தையும் உங்களுக்கு வீட்டுவேலையைக் கொடுக்கிறார். நீங்கள் நாள் முழுவதும் உங்கள் வியாபாரம் போன்றவற்றை மேற்கொள்ள முடியும், ஏனெனில் நீங்கள் உங்கள் சரீரத்தின் வாழ்வாதாரத்துக்காக ஒரு வருமானத்தைச் சம்பாதிக்க வேண்டும். அனைவருக்கும் அமிர்த வேளையில் நேரம் இருக்கிறது. அதிகாலை இரண்டு அல்லது மூன்று மணி மிகவும் சிறந்த நேரமாகும். அந்த நேரத்தில் விழித்தெழுந்து பெருமளவு அன்புடன் தந்தையை நினைவு செய்யுங்கள். விகாரங்கள் ஆரம்பித்த காலம் முதல், மத்தியினூடாக இறுதிவரைக்கும் அவை உங்களுக்குத் துன்பத்தை விளைவிக்கின்றன. மக்கள் இராவணனின் கொடும்பாவியை எரிக்கிறார்கள், ஆனால் அவர்கள் அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. ஆரம்ப காலத்தில் இருந்து இராவணனின் கொடும்பாவியை எரிக்கும் சம்பிரதாயம் தொடர்ந்துள்ளது என அவர்கள் கூறுகிறார்கள். அதுவும் நாடகத்துக்கேற்ப நிச்சயிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தொடர்ந்தும் இராவணனைக் கொன்று வருகிறார்கள், இன்னமும் இராவணன் மரணிக்கவில்லை. எப்பொழுது இராவணனின் கொடும்பாவியை எரிப்பது முடிவடையும் எனக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். நீங்கள் இப்பொழுது சத்திய நாராயணனின் கதையைச் செவிமடுக்கிறீர்கள். நீங்கள் இப்பொழுது தந்தையிடம் இருந்து உங்கள் ஆஸ்தியைப் பெறுகிறீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். தந்தையை எவரும் அறியாத காரணத்தினால், அனைவரும் அனாதையாக இருக்கிறார்கள். பாரதத்தைச் சுவர்க்கமாக ஆக்குகின்ற தந்தையை அவர்கள் அறிய மாட்டார்கள். இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஏணியில் கீழே இறங்கி, தமோபிரதான் ஆகும் போதே தந்தை வருகிறார். எவ்வாறாயினும், அவர்கள் தங்களைத் தமோபிரதானாகக் கருதுவதில்லை. தந்தை கூறுகிறார்: இப்பொழுது முழு விருட்சமும் முற்றாக உக்கிய நிலையை அடைந்துள்ளது! ஓர் ஆத்மாவேனும் சதோபிரதான் அல்ல. சதோபிரதான் ஆத்மாக்கள் சாந்தி தாமத்திலும், சந்தோஷ தாமத்திலும் இருக்கிறார்கள். அவர்கள் இப்பொழுது தமோபிரதான் ஆகி விட்டார்கள். தந்தை மாத்திரம் வந்து உங்களை அறியாமை எனும் உறக்கத்தில் இருந்து விழித்தெழச் செய்கிறார். நீங்கள் தொடர்ந்தும் உங்களை விழித்தெழச் செய்து பின்னர் ஏனையோரையும் விழித்தெழச் செய்கிறீர்கள். ஒருவர் மரணம் அடையும் போது, அந்த ஆத்மாவிற்கு ஒளி கிடைப்பதற்காக மக்கள் விளக்கேற்றுகிறார்கள். இப்பொழுது எங்கும் காரிருளே சூழ்ந்துள்ளதால், ஆத்மாக்களால் வீடு திரும்ப முடியாது. அவர்கள் துன்பத்தில் இருந்து விடுதலை அடைய விரும்பினாலும், ஓர் ஆத்மாவேனும் விடுவிக்கப்பட முடியாது. இப்பொழுது அதிமங்களகரமான சங்கமயுகம் என்பதை அறிந்திருக்கும் குழந்தைகளால் இந்த ஞான இரத்தினங்களைத் தானம் செய்வதை நிறுத்த முடியாது. மங்களகரமான புண்ணிய மாதத்தில் தானங்கள் அளித்துப் பெரும் புண்ணியத்தை மக்கள் செய்வதைப் போன்றே, இந்த அதிமங்களகரமான சங்கமயுகத்தில் நீங்களும் இந்த ஞான இரத்தினங்களைத் தானம் அளிக்க வேண்டும். பரமாத்மாவாகிய பரமதந்தையே உங்களுக்குக் கற்பிக்கிறார் என்பதை நீங்களும் புரிந்து கொள்கிறீர்கள். ஸ்ரீகிருஷ்ணர் இதைச் செய்கின்றார் என்ற கேள்வியே கிடையாது. ஸ்ரீகிருஷ்ணர் சத்தியயுகத்தின் முதல் இளவரசர் ஆவார். பின்னர் அவர் தொடர்ந்தும் மறுபிறவி எடுக்கிறார். பாபா உங்களுக்குக் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலத்தின் இரகசியங்களை விளங்கப்படுத்தி உள்ளார். நீங்கள் திரிகாலதரிசி ஆகுகிறீர்கள். தந்தையைத் தவிர எவராலும் உங்களைத் திரிகாலதரிசி ஆக்க முடியாது. தந்தையிடம் மாத்திரம் உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானம் உள்ளது. அவர் மாத்திரம் ஞானக்கடல் என அழைக்கப்படுகிறார். கடவுள் மாத்திரம் அதிமேன்மையானவராக நினைவுகூரப்படுகிறார். அவரே படைப்பவர் ஆவார். “சுவர்க்கக் கடவுளாகிய தந்தை” என்னும் வார்த்தைகள் மிகவும் தெளிவானவை ஆகும். அவரே சுவர்க்கத்தை ஸ்தாபிப்பவர் ஆவார். சிவனின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது, ஆனால் அவர் எப்பொழுது வருகிறார் அல்லது அவர் வரும்பொழுது என்ன செய்தார் என்பதை எவரும் அறிய மாட்டார்கள். அவருடைய பிறந்தநாளின் அர்த்தத்தையேனும் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. ஆகவே, அவர்கள் எதைக் கொண்டாடுவார்கள்? அவை அனைத்தும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளன. வேறு எப்பொழுதும் அன்றி இப்பொழுது மாத்திரம் நாடகத்தின் ஆரம்பம், மத்தி, இறுதியைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். தந்தை மீண்டும் வரும்பொழுது, நீங்கள் மீண்டும் அதை அறிந்து கொள்வீர்கள். எவ்வாறு 84 பிறவிகளின் சக்கரம் சுழல்கிறது என்பதை இப்பொழுது நீங்கள் அறிந்து கொள்கிறீர்கள். பக்தி மார்க்கத்தில் என்ன உள்ளது? நீங்கள் அதனைப் பின்பற்றுவதனால் எதையும் பெறுவதில்லை. பக்தர்கள் சனக்கூட்டமுள்ள இடங்களுக்குச் சென்று நெரிசலுக்குள் சிக்கிக் கொள்கின்றார்கள். பாபா உங்களை அதிலிருந்து விடுவித்துள்ளார். நீங்கள் இப்பொழுது ஸ்ரீமத்தைப் பின்பற்றி, பாரதத்தை மீண்டும் ஒருமுறை மேன்மை ஆக்குகிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்கிறீர்கள். ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதால் மாத்திரமே உங்களால் மேன்மை அடைய முடியும். ஸ்ரீமத் சங்கமயுகத்தில் மாத்திரமே பெறப்படுகிறது. நீங்கள் யாராக இருந்தீர்கள் எனவும், எவ்வாறு நீங்கள் மீண்டும் ஒருமுறை அவ்வாறு ஆகுகிறீர்கள் என்பதையும் நீங்கள் மிகச்சரியாக அறிந்து கொள்கின்றீர்கள். நீங்கள் இப்பொழுது மீண்டும் ஒருமுறை அதை அடைவதற்கு முயற்சி செய்கிறீர்கள். குழந்தைகளே, முயற்சி செய்கையில், நீங்கள் சித்தியடையாது விட்டால், நீங்கள் அச்செய்தியைத் தந்தைக்குக் கொடுக்க வேண்டும். அதனால் அவர் உங்களை எச்சரித்து உங்களை மீண்டும் உஷார் ஆக்க முடியும். வெறுமனே அமர்ந்திருந்து உங்களைத் தோல்வி அடைந்தவராகக் கருத வேண்டாம். மீண்டும் ஒருமுறை எழுந்திருங்கள். சில மருந்துகளை எடுங்கள். சத்திரசிகிக்சை நிபுணர் இங்கே அமர்ந்திருக்கிறார். ஐந்தாம் மாடியிலிருந்து விழுவதற்கும், இரண்டாம் மாடியிலிருந்து விழுவதற்கும் இடையில் எவ்வளவு வேறுபாடு உள்ளது என பாபா விளங்கப்படுத்துகிறார். காமவிகாரமே ஐந்தாம் மாடியாகும். இதனாலேயே காமமே கொடிய எதிரி என பாபா கூறுகிறார். அது உங்களைத் தூய்மை அற்றவர்கள் ஆக்குகிறது. இப்பொழுது தூய்மை ஆகுங்கள்! தூய்மையாக்குபவராகிய தந்தை உங்களைத் தூய்மை ஆக்குவதற்கு வந்துவிட்டார். அவர் உங்களை நிச்சயமாகச் சங்கமயுகத்தில் தூய்மை ஆக்குவார். இதுவே கலியுக இறுதியும், சத்தியயுக ஆரம்பமுமாகிய சங்கமம் ஆகும். தந்தை இப்பொழுது நாற்று நடுகின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். பின்னர் முழு விருட்சமும் இங்கு வளரும். பிராமணர்களாகிய உங்கள் விருட்சம் விரிவடையும். பின்னர் நீங்கள் சூரிய, சந்திர வம்சங்களில் சந்தோஷத்தை அனுபவம் செய்வீர்கள். இது உங்களுக்கு மிகவும் இலகுவாக விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. அச்சா, நீங்கள் முரளியைப் பெறாத போது, தந்தையை நினைவுசெய்யுங்கள்! ‘என்னை நினைவு செய்தால் நீங்கள் விஷ்ணுவின் குலத்திற்குச் செல்வீர்கள்’ என பிரம்மாவின் சரீரத்தினூடாக சிவபாபா உங்களுக்குக் கூறுகிறார் என்பதை உங்களுக்குள் உறுதி ஆக்குங்கள். அனைத்தும் உங்கள் முயற்சியில் தங்கியுள்ளது. ஒவ்வொரு கல்பத்திலும் நீங்கள் செய்த முயற்சியை, மிகச்சரியாக அவ்வாறாகவே இப்பொழுதும் செய்வீர்கள். அரைக்கல்பமாக நீங்கள் சரீர உணர்வில் இருந்தீர்கள். ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுவதற்கு இப்பொழுது முழு முயற்சி செய்யுங்கள். இதற்கு முயற்சி தேவையாகும். கல்வி மிகவும் இலகுவானது, தூய்மை ஆகுவதே, பிரதான விடயமாகும். தந்தையை மறப்பது மிகப்பெரிய தவறு. சரீர உணர்வு உடையவர்கள் ஆகுவதால், நீங்கள் அவரை மறக்கிறீர்கள். உங்கள் சரீரத்தின் வாழ்வாதாரத்துக்காக, எட்டு மணித்தியாலங்களுக்கு, உங்கள் வியாபாரம் போன்றவற்றை மேற்கொள்ளுங்கள், ஆனால், மற்றைய எட்டு மணித்தியாலங்களுக்கு நினைவில் நிலைத்திருக்க முயற்சி செய்யுங்கள். அந்த ஸ்திதி மிகவும் விரைவில் உருவாக்கப்பட மாட்டாது. இறுதியில், நீங்கள் இந்த ஸ்திதியை அடையும் பொழுது, விநாசம் இடம்பெறும். நீங்கள் உங்கள் கர்மாதீத ஸ்திதியை அடையும் பொழுது, உங்கள் சரீரம் இருக்க மாட்டாது. நீங்கள் அதை விட்டு நீங்குவீர்கள், ஏனெனில் அப்பொழுது ஆத்மா தூய்மையாகி இருப்பார். நீங்கள் உங்கள் வரிசைக்கிரமமான கர்மாதீத ஸ்திதியை அடையும் பொழுது, யுத்தம் ஆரம்பமாகும். அது வரையில், தொடர்ந்தும் ஒத்திகைகள் இடம்பெறும். அச்சா

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. இந்த அதிமங்களகரமான புண்ணிய மாதத்தில், அழியாத இந்த ஞான இரத்தினங்களைத் தானம் செய்யுங்கள். அமிர்தவேளையில் விழித்தெழுந்து இந்த ஞானக்கடலைக் கடையுங்கள். ஸ்ரீமத்துக்கேற்ப, உங்கள் சரீரத்தின் வாழ்வாதாரத்துக்கான ஒரு வருமானத்தைச் சம்பாதிப்பதுடன், நீங்கள் நிச்சயமாகத் தந்தை உங்களுக்குக் கொடுக்கும் வீட்டுவேலையையும் செய்ய வேண்டும்.

2. உங்கள் முயற்சியில் நீங்கள் ஏதாவது தடைகளைக் கொண்டிருக்கும் பொழுது, அந்தச் செய்தியைத் தந்தையிடம் கூறி, அவரிடமிருந்து ஸ்ரீமத்தைப் பெறுங்கள். சத்திரசிகிக்சை நிபுணரிடம் அனைத்தையும் கூறுங்கள். இதுவே உங்கள் பாவங்கள் அழிக்கப்படுவதற்கான காலமாகும். ஆகையால், மேலும் எந்தப் பாவமும் செய்யாதீர்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் தொடர்ந்து யோகம் செய்வதன் மூலம் எல்லா வேளைக்கும் பூஜிக்கத்தகுதி வாய்ந்தவர் ஆகுகின்ற மேன்மையான மற்றும் மகாத்மா ஆகுவீர்களாக.

தற்காலத்தில் உள்ள மகாத்மாக்களுக்கு, ‘அகண்ட் ஆனந்த்’ போன்ற பெயர்கள் உள்ளன. ஆனால் நீங்களே எல்லாவற்றிலும் ‘அகண்ட்’ (எல்லா வேளையும், தொடர்ந்து) ஆவீர்கள். அதாவது ஆனந்தத்தில் அகண்ட், சந்தோஷத்தில் அகண்ட் ஆக இருப்பதாகும். எந்தவொரு சகவாசத்தின் ஆதிக்கத்திற்கும் உட்படாதீர்கள். மற்றவர்களின் குறைபாடுகள் எதையும் பார்க்கும்போது அல்லது கேட்கும்போது, அதைக் கவனத்தில் எடுக்காத மனோபாவத்தைக் கொண்டிருங்கள். இந்த விசேடமான முறையில் நீங்கள் அகண்ட் யோகி ஆகுவீர்கள். அகண்ட் யோகிகள் எல்லா வேளையும் பூஜிக்கத்தகுதி வாய்ந்தவர்கள் ஆகுவார்கள். நீங்கள் அரைக்கல்பத்திற்கு பூஜிக்கத்தகுதி வாய்ந்த ரூபத்திலும் அரைக்கல்பத்திற்கு, உங்களின் உயிரற்ற ரூபங்கள் பூஜிக்கப்படுகின்ற அத்தகைய மகாத்மாக்கள் ஆவீர்கள்.

சுலோகம்:
ஒரு தெய்வீகப் புத்தியே மௌன சக்திக்கான அடிப்படை ஆகும்.

அவ்யக்த சமிக்கை: எண்ணங்களின் சக்தியை சேமித்து மேன்மையான சேவைக்கு கருவியாகுங்கள்.

தமது சொந்த சூட்சும சக்திகளை அமிழ்த்தக் கூடியவர்களால், அவற்றை அமிழ்த்த பிறருக்கும் உதவ முடியும். உங்களின் மீது கட்டுப்படுத்தும் சக்தியையும் ஆளும் சக்தியையும் கொண்டிருக்கும்போது சேவை செய்வதில் எல்லோரையும் அமிழ்த்துவதற்கான சரியான சக்தியை நீங்கள் கொண்டிருப்பீர்கள். அறியாமையில் உள்ள ஆத்மாக்களுக்குச் சேவை செய்வதிலோ, அல்லது பிராமண ஆத்மாக்களுடன் அன்பாகவும் திருப்தியாகவும் பழகுவதிலோ, நீங்கள் இரண்டிலும் வெற்றி பெறுவீர்கள்.