26.07.26 Avyakt Bapdada Tamil Lanka Murli 02.02.2011 Om Shanti Madhuban
உங்களின் பாக்கியத்தையும் பேறுகளையும் உணர்ந்தவராக இருப்பதன் மூலம் சதா மலர்ச்சியானவர்களாகவும் திருப்தியாகவும் இருங்கள். உங்களின் பார்வை, உங்களின் மனோபாவம், உங்களின் இல்லறத்தினூடாகத் திருப்தியின் அனுபவத்தை மற்றவர்களுக்குக் கொடுங்கள்.
இன்று, பாப்தாதா குழந்தைகள் அனைவரையும் பார்த்து மகிழ்ச்சி அடைகிறார். ஒவ்வொரு குழந்தையும் இறையன்பின் மூலம் இங்கே வந்துள்ளார்கள். இன்று, பாப்தாதா ஒவ்வொரு குழந்தையின் நெற்றியிலும் பாக்கிய ரேகைகளைப் பார்க்கிறார். வேறு எவரும் கல்பம் முழுவதிலும் இத்தகைய பாக்கியத்தை, இத்தகைய மகத்தான பாக்கியத்தைப் பெற்றதில்லை. இது ஏனென்றால் பாக்கியத்தை அருள்பவரே உங்களின் மீது பாக்கியத்தை அருளி உள்ளார். முதலில், ஒவ்வொருவரின் நெற்றியிலும் பாக்கிய நட்சத்திரம் பிரகாசிக்கிறது. இனிய பேச்சின் ரேகை, உங்களின் வாய்களில் பிரகாசிக்கின்றது. இனிய புன்னகையின் ரேகை, உங்களின் உதடுகளில் பிரகாசிக்கின்றது. இதயங்களுக்கு சௌகரியம் அளிக்கும் தந்தையின் அன்பிலே திளைத்திருக்கும் ரேகை, உங்களின் இதயங்களில் பிரகாசிக்கிறது. சகல பொக்கிஷங்களை அடையும் மகத்துவத்தின் ரேகை, உங்களின் கைகளில் பிரகாசிக்கிறது. ஒவ்வோர் அடியிலும் பலமில்லியன்களை அடையும் ரேகை, உங்களின் பாதங்களில் பிரகாசிக்கிறது. இப்போது சிந்தித்துப் பாருங்கள்: யாராவது இத்தகைய பாக்கியத்தைப் பெற்றுள்ளீர்களா? இதனாலேயே, உங்களின் பாக்கியம் உங்களின் ஞாபகார்த்தங்களில் ரூபங்களில் காட்டப்பட்டுள்ளன. பாக்கியத்தை அருள்பவரே இந்தப் பாக்கியத்தை ஒவ்வொரு குழந்தைக்கும் வழங்கினார்.
ஒவ்வொரு குழந்தையின் பாக்கியத்தையும் பார்க்கும்போது, பாப்தாதா ஒவ்வொருவரையும் பாராட்டுகிறார்: ஆஹா குழந்தையே! ஆஹா! நீங்கள் இந்தப் பாக்கியத்தை சங்கமயுகத்தில் மட்டுமே பெறுகிறீர்கள். அது இந்த வேளையில் மட்டுமே செயல்படுகிறது. சங்கமயுகத்தின் சந்தோஷம், ஏனைய யுகங்களின் சந்தோஷத்தை விட அதிமேலானது. சத்திய யுகத்தின் பாக்கியம், சங்கமயுகத்தில் செய்த முயற்சிகளின் வெகுமதி ஆகும். இதனாலேயே, சங்கமயுகத்தின் பேறானது, சத்தியயுகத்தின் வெகுமதியை விட மகத்தானது. உங்களின் சொந்தப் பாக்கியத்தில் மூழ்குங்கள்! என்ன நடந்தாலும் பரவாயில்லை, ஆனால் உங்களின் பாக்கியத்தை நீங்கள் உங்களின் விழிப்புணர்வில் வைத்திருக்கும்போது உங்களிடம் இருந்து என்ன வார்த்தைகள் வெளிப்படுகின்றன? ஆஹா! எனது பாக்கியமே! பாக்கியத்தை அருள்வரே உங்களின் தந்தை ஆவார். நீங்கள் ஒவ்வொருவரும் பாக்கியத்தை அருள்பவரிடம் இருந்து உங்களின் பாக்கியத்தைப் பெற்றுள்ளீர்கள். நீங்கள் எத்தனை பாக்கியசாலிகள் என்பதை உணர்ந்திருக்கிறீர்களா? அல்லது, அதைச் சிலவேளைகளில் மட்டும் உணர்கிறீர்களா? உங்களுக்குள் சதா இந்த போதை இருக்கிறதா? நீங்கள் எதைப் பெற்றுள்ளீர்கள் என்று உலக மக்கள் பார்த்து உங்களைக் கேட்கும்போது, நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள்? நாங்கள் விரும்பிய அனைத்தையும் நாம் பெற்றுள்ளோம். நீங்கள் அதைப் பெற்றுள்ளீர்களா? அப்படி என்றால் உங்களின் கைகளை உயர்த்துங்கள்! நீங்கள் அதை அடைந்துள்ளீர்களா? அச்சா. நீங்கள் அதை அடைந்துள்ளீர்களா? உங்களிடம் எந்தக் குறைவும் இல்லை என்று நீங்கள் ஆன்மீக போதையுடன் சொல்கிறீர்கள். உங்களுக்குள் இந்த போதை உள்ளதல்லவா? எனவே, நீங்கள் எப்படி அதைப் பெறுவீர்கள்? நீங்கள் தந்தையை அறிந்து கொண்டீர்கள், நீங்கள் அவரை ஏற்றுக் கொண்டீர்கள், நீங்கள் அவரை உங்களுக்குச் சொந்தமாக ஆக்கினீர்கள், அத்துடன் உங்களின் பாக்கியத்தையும் பெற்றீர்கள். எந்தளவிற்கு அதிகமாக உங்களுக்குள் இந்தப் பாக்கியத்தை உணர்கிறீர்களோ, அந்தளவிற்கு நீங்கள் அதிக மலர்ச்சி நிறைந்தவர்களாக இருப்பீர்கள். ஒரு பாக்கியசாலி ஆத்மாவின் முகம் சதா மலர்ச்சி நிறைந்ததாகவே இருக்கும். அது அப்படி இருக்கும் என்பதல்ல, ஆனால் அது எப்போதும் அப்படியே இருக்கும். இத்தகைய ஆத்மாக்களின் பார்வை, மனோபாவம் மற்றும் செயல்கள் சதா திருப்தியாகவே இருக்கும். அத்துடன் அவர்கள் மற்றவர்களையும் திருப்தியாக இருப்பதற்குத் தூண்டுவார்கள். நீங்கள் அனைவரும் உங்களின் திருப்தியின் போதையுடன் இருக்கிறீர்களா? சகல பேறுகளையும் கொண்டிருப்பதே திருப்தியின் அடிப்படை ஆகும். பேறுகளில் குறைவு ஏற்படும்போதே அதிருப்தி ஏற்படுகிறது. நீங்கள் எதை அனுபவம் செய்கிறீர்கள்? ஏதாவது குறைகிறதா அல்லது நீங்கள் அனைத்தையும் அடைந்துள்ளீர்களா? நீங்கள் உங்களின் பேறுகளின் போதையுடன் இருக்கிறீர்களா? இருக்கிறீர்களா? இவ்வாறு நீங்கள் எல்லா வேளையும் இருக்கிறீர்களா அல்லது சிலவேளைகளில் மட்டுமா? உண்மையில், நீங்கள் விரும்பியதை நீங்கள் அடைந்துள்ளீர்கள் என்று சொல்கிறீர்கள். எங்கு சகல பேறுகளும் இருக்கிறதோ, அங்கே அதிருப்தி என்பதே இருக்காது.
இந்தத் தேசத்தையும் வெளிநாடுகளையும் சேர்ந்த குழந்தைகளான உங்களை பாப்தாதா பார்க்கிறார். குழந்தைகளான நீங்கள் அனைவரும் எத்தனை நாடுகளில் இருந்து வந்து ஒன்றுகூடியுள்ளீர்கள்? வெகு தொலைவில் இருந்து வந்திருப்பது யார்? அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் மிகத் தொலைவில் இருந்து பயணம் செய்துள்ளார்களா? அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள், மிகவும் தொலைவில் உள்ள இடத்தில் இருந்து வந்துள்ளீர்கள், அப்படித்தானே? எவ்வாறாயினும், தந்தை எங்கிருந்து வந்துள்ளார்? அமெரிக்கா இந்த உலகிலேயே இருக்கிறது. ஆனால் பாப்தாதா எங்கிருந்து வந்துள்ளார்? அவர் பரந்தாமத்தில் இருந்து வந்துள்ளார், பிரம்மாபாபா சூட்சும வதனத்தில் இருந்து வந்துள்ளார். எனவே, வெகு தொலைவில் இருந்து வந்திருப்பது யார்? யார் மிகத் தொலைவில் இருந்து வந்திருக்கிறார்? இது தந்தைக்கும் குழந்தைகளுக்குமான அன்பானதொரு காட்சி ஆகும். ‘எனது பாபா’ என்று நீங்கள் சொன்னீர்கள். தந்தையும் ‘எனது குழந்தையே’ எனக் கூறினார். ஒரேயொருவரை அறிந்து கொண்டதனால் நீங்கள் இலகுவாக மகத்தான பாக்கியத்தைப் பெற்றுக் கொண்டீர்கள். உலகிலுள்ள மக்கள் அமைதி மற்றும் சந்தோஷத்தைத் தேடுகிறார்கள். எங்கே தங்களால் அமைதி மற்றும் சந்தோஷத்தைப் பெற முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் உங்களின் வாழ்க்கைகளோ அமைதி மற்றும் சந்தோஷத்தால் நிரம்பி உள்ளன. இப்போது பாப்தாதாவிற்கு என்ன வேண்டும்? ஒவ்வொரு குழந்தையும் ஒரு சுய இராச்சிய அதிகாரியாக, சுயத்திற்கே அதிபதியாக இருக்க வேண்டும் என்பதே. இது சிலவேளைகளில் மட்டும் அன்றி, எப்போதும் இருக்க வேண்டும். இது ஏனென்றால், தந்தை உங்களுக்கு சங்கமயுகத்தில் சுய இராச்சிய அதிகாரி என்ற முழுமையான ஆசீர்வாதத்தை வழங்கி உள்ளார். இது சிறிதளவோ அல்லது சிறிது காலத்திற்கோ அல்ல, ஆனால் எல்லா வேளைக்கும் உரியது. நீங்கள் எல்லா வேளையும் உங்களுக்கே அதிபதிகளாக இருக்கிறீர்களா? நீங்கள் உங்களின் பௌதீகப் புலன்கள், உங்களின் மனங்கள், புத்திகள், சம்ஸ்காரங்கள் அனைத்திற்கும் அதிபதிகள் என்று பாப்தாதா உங்களுக்குக் கூறியுள்ளார். இந்த விடயங்களைப் பொறுத்தவரை ‘எனது’ என்றே நீங்கள் சொல்கிறீர்கள். இந்த விடயங்களுக்கு ‘நான்’ என்று நீங்கள் சொல்வதில்லை, ஆனால் ‘எனது’ என்றே சொல்கிறீர்கள். மனம், புத்தி, சம்ஸ்காரங்கள் என்பவை ‘எனது’ என்று இருக்கும்போது, ‘எனது’ என்பதற்கு நான் சதா உரிமையைக் கொண்டிருக்கிறேன். அதேபோல், உங்களின் மனங்கள், புத்திகள், சம்ஸ்காரங்களின் மீது நீங்கள் முழுமையான உரிமைகளைக் கொண்டிருக்க வேண்டும். இதுவே சுயத்தின் அதிபதி ஆகுதல் என்பதன் அர்த்தம் ஆகும். நீங்கள் அவற்றுக்கு என்ன கட்டளைகளை இட்டாலும், அந்தக் கட்டளைகளை நிறைவேற்றுவதற்கு அவை கருவிகள் ஆகுகின்றன. எவ்வாறாயினும், இதை நிறைவேற்றுவதற்கு, நடக்கும்போதும் அசையும்போதும் அவற்றின் அதிபதி என்ற போதையை, நம்பிக்கையையும் போதையையும் நீங்கள் பேண வேண்டும்.
இப்போது, இது உங்களின் மனங்களால் ஆத்மாக்களுக்குச் சேவை செய்வதற்கான நேரம் ஆகும். அவர்கள் கதறி அழைக்கிறார்கள்: ஓ மூதாதையர்களே, சந்தோஷம் மற்றும் அமைதியின் ஒரு சில கதிர்களை எங்களுக்கு வழங்குங்கள்! ஓ மூதாதையர்களே, சந்தோஷம் அற்று இருப்பவர்களின் அழைப்பை உங்களால் கேட்க முடிகிறதல்லவா? எந்தவொரு அனர்த்தமும் சடுதியாக இடம்பெறலாம் என்று பாப்தாதா உங்களுக்கு சமிக்கை கொடுத்துள்ளார். இதற்கு, ஒரு விநாடியில் ஒரு முற்றுப்புள்ளியை வையுங்கள். நீங்கள் இப்போது இதைப் பயிற்சி செய்கிறீர்கள். ஏனென்றால், அந்த வேளையில் உங்களுக்கு முயற்சி செய்வதற்கு நேரம் இருக்காது. நீங்கள் முற்றுப்புள்ளி இடுவதற்கு முயற்சி செய்வீர்கள். ஆனால் அதற்குப் பதிலாக நீங்கள் ஒரு வியப்புக்குறியையே போடுவீர்கள். இதனாலேயே, இப்போது முயற்சி செய்வதற்காக உங்களுக்கு நேரம் கொடுக்கப்பட்டுள்ளது. பின்னர், எதையாவது நடைமுறையில் செய்வதற்கான நேரமாக இருக்கும். நீங்கள் இப்போது இதைப் பயிற்சி செய்கிறீர்கள். பாப்தாதா உங்களின் பெறுபேற்றைப் பார்க்கிறார்: நீங்கள் அதைச் செய்வதில் கவனம் செலுத்துகிறீர்கள். ஆனால், நீங்கள் அதிகளவு கவனம் செலுத்துவதுடன் அதைக் கீழ்க்கோடிடவும் வேண்டும். இந்த முயற்சி எவ்வளவு இலகுவானது என்று பாருங்கள்: நான் ஒரு புள்ளி, நான் ஒரு முற்றுப்புள்ளி இடவேண்டும். நான் இதில் கவனம் செலுத்த வேண்டும், அவ்வளவுதான்.
பாப்தாதா குறிப்பாகக் குழந்தைகளான உங்களுக்கு ஒரு பரிசை வழங்குகிறார்: குழந்தைகளே, நான் எப்போதும் உங்களுடனேயே இருக்கிறேன். ‘பாபா’ என்று நீங்கள் சொன்ன உடனேயே, தந்தை உங்களின் முன்னால் பிரசன்னம் ஆகுகிறார். பிரபு என்றும் பிரசன்னமாக இருக்கிறார் என்று கூறப்படுகிறது. அவர் சர்வவியாபி அல்ல, ஆனால் குழந்தைகளான உங்களின் முன்னால் பிரபு என்றும் பிரசன்னமாகவே இருக்கிறார். சதா வெற்றியாளர் ஆகுங்கள்! இறைவன் உங்களுடன் இருக்கும்போது, வெற்றியாளர் ஆகுவது எப்படிக் கடினமாக இருக்க முடியும்? வெற்றி உங்களின் பிறப்புரிமை. ‘எனது பாபா’ என்று கூறுவதன் மூலம் நீங்கள் நிச்சயமாக வெற்றியாளர் ஆகுகிறீர்கள். ஆகவே, சதா வெற்றியாளர் ஆகுங்கள். நினைவில் இருப்பவர்களுக்கு இது முற்றிலும் இலகுவானது. இதில் கஷ்டமே இல்லை. எங்கே கடவுள் இருக்கிறாரோ, அங்கே வெற்றி நிச்சயம். இன்று, பாப்தாதா குழந்தைகளான உங்கள் அனைவரையும் பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறார். நீங்கள் மிகுந்த அன்புடன் இங்கே வந்துள்ளீர்கள். எவ்வாறு நீங்கள் இங்கே வந்தடைந்தீர்கள்? பௌதீகமாக, நீங்கள் புகைவண்டி அல்லது விமானத்தின் மூலம் வந்துள்ளீர்கள். ஆனால் உங்களின் இதயங்களில் உள்ள அன்பே உங்களை இங்கே கொண்டு வந்துள்ளது. இது உங்களின் தைரியம், அத்துடன் தந்தையின் உத்தரவாதம் மிக்க உதவியும் ஆகும். இப்போது, ஒவ்வொரு குழந்தையும் சுய இராச்சிய அதிகாரி என்ற ஆசனத்தில் அமர்ந்த வண்ணம் ஒவ்வொரு செயலைச் செய்வதிலும் ஸ்திரமாக இருக்க வேண்டும் என்றே பாப்தாதா விரும்புகிறார். அச்சா.
இன்று முதல் தடவையாக வந்திருப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! எழுந்து நில்லுங்கள்! பலர் இருக்கிறார்கள். அச்சா. நீங்கள் முதல் தடவையாக வந்திருப்பதைப் போன்றே, நீங்கள் முதல் இலக்கத்தையும் பெற வேண்டும். நீங்கள் இந்த இலக்கத்தைப் பெற விரும்புகிறீர்களா? தைரியத்தைக் கொண்டிருப்பவர்கள் நிச்சயமாகத் தந்தையின் உதவியைப் பெறுவார்கள் என்பது பாபாவின் ஆசீர்வாதம் ஆகும். தைரியத்தைக் கொண்டிருப்பதன் மூலம், நீங்கள் விரும்பிய அளவு முன்னேற்றத்தை அடைவதற்கான வாய்ப்பு உங்களுக்கு இருக்கிறது. ஏனென்றால், மிகவும் தாமதமாகி விட்டது என்று கூறும் அறிவிப்புப் பலகை இன்னமும் போடப்படவில்லை. நினைவில் இருந்தவண்ணம் உங்களின் பேறுகளால் மற்றவர்களுக்குச் சேவை செய்யுங்கள். நீங்கள் எவ்வளவு சேவை செய்கிறீர்களோ அந்தளவிற்கேற்ப ஆசீர்வாதங்களைச் சேமித்துக் கொள்வீர்கள். அந்த ஆசீர்வாதங்கள் உங்களை முன்னேறச் செய்யும். தொடர்ந்து செய்தியை வழங்குங்கள், பின்னர் அது ஒவ்வொருவரின் பாக்கியத்தைப் பொறுத்ததே. எவ்வாறாயினும், நீங்கள் செய்தியை வழங்கிக் கொண்டே இருக்க வேண்டும். உங்களின் புண்ணியத்தைத் தொடர்ந்து சேமியுங்கள். உங்களின் புண்ணியம் உங்களை முன்னேறச் செய்யும். அச்சா.
பாப்தாதா அமிர்த வேளையில் எங்கும் சுற்றுலா செல்கிறார். எங்கும் செல்வது அவருக்குப் பெரிய விடயம் இல்லை. அதிகாலை 4 மணிக்குச் சந்திப்பதன் சிறப்பியல்பு, குழந்தைகள் அனைவருக்கும் இலகுவாக பாப்தாதா ஆசீர்வாதங்களை வழங்கும் நேரமே என்று பாப்தாதா ஏற்கனவே உங்களுக்குக் கூறியுள்ளார். ஆசீர்வாதங்களை அருள்கின்ற பாகம் குறிப்பாக அமிர்த வேளைக்கு உரியது. நீங்கள் விரும்புகின்ற ஆசீர்வாதங்கள் எவையாக இருந்தாலும் பாப்தாதா அவற்றை உங்களுக்கு வழங்குகிறார். அதை முயற்சி செய்து பாருங்கள்! எவ்வாறாயினும், ஓர் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கு, நீங்கள் அனைவரும் விழிப்பாக இருக்க வேண்டும். நீங்கள் விழிப்பாக இல்லாவிட்டால், பாப்தாதா உங்களிடம் வந்து விட்டுச் சென்று விடுவார். நீங்கள் அதைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டே இருப்பீர்கள். நீங்கள் அமிர்த வேளைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள், ஆனால் இப்போது அதிக கவனம் செலுத்துங்கள்! காலத்திற்கேற்ப, சேவை வளருவதை பாப்தாதா பார்த்துள்ளார். சேவையினால், உங்களின் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காக உங்களால் தந்தையிடம் இருந்து அப்பால் விலகி இருக்க முடியாது. இரட்டை வெளிநாட்டவர்களான உங்களில் பெரும்பாலானோர், முயற்சி செய்கிறீர்கள். ஆனால் நீங்கள் கவனம் செலுத்துங்கள் என்பதைக் கீழ்க்கோடிட வேண்டும். எப்படியாவது மதுவனத்தை வந்து அடைந்ததற்காகக் குழந்தைகளான உங்கள் அனைவரையும் பாப்தாதா பாராட்டுகிறார். சம்ஸ்காரங்களைப் பொறுத்தவரை பாப்தாதா குழந்தைகளுக்குக் கொடுத்த சமிக்கையை நிச்சயமாகத் தாம் பின்பற்ற வேண்டும் என்பதைக் குழந்தைகள் புரிந்து கொண்டுள்ளதைப் பற்றி பாப்தாதா அறிந்தார். அதை நிறைவேற்றுவதற்கு, அமிர்த வேளையில் நீங்கள் சுயமரியாதைக் கருத்தைப் பயன்படுத்துவதைப் போன்று, அதேபோல், ஒரு குறிப்பிட்ட சம்ஸ்காரத்திற்கும் குறிப்பிட்ட முறையில் கவனம் செலுத்துங்கள்: இன்று நான் இந்த சம்ஸ்காரத்தில் விசேடமாகக் கவனம் செலுத்தப் போகிறேன். பின்னர் இரவில், நீங்கள் பாப்தாதாவிற்கு நாள் முழுவதற்குமான அட்டவணையைக் கொடுக்கும்போது, நீங்கள் குறிப்பாகக் கவனம் செலுத்திய அந்த சம்ஸ்காரத்திற்கான பெறுபேற்றையும் பாபாவிற்குக் கூறுங்கள். நீங்கள் ஏதாவதொரு சம்ஸ்காரத்தில் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் நினைவில் கவனம் செலுத்துவதைப் போல், அதேவேளை, அத்துடன் கூடவே இந்தப் பெறுபேற்றையும் பாப்தாதாவிடம் கொடுங்கள். நீங்கள் ஒரு சம்;ஸ்காரத்தை முடிக்க விரும்பியும் அந்த நாளில் அதை முடிப்பதில் வெற்றி பெறவில்லை என்றால், அப்போது பாப்தாதாவின் வாழ்த்துக்களை உங்களுக்கு வழங்கிக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் அந்தக் குறிப்பிட்ட சம்ஸ்காரத்திற்குத் தந்தையிடம் இருந்து வாழ்த்துக்களைத் தொடர்ந்து வழங்குங்கள். அந்த சம்ஸ்காரத்தின் பயன்பாடு குறைவடைவதை நீங்கள் காண்பீர்கள். யோகத்தைப் பொறுத்தவரை நீங்கள் உங்களையே சோதிக்கிறீர்கள். ஆனால் உங்களின் சம்ஸ்காரங்களை ஒவ்வொரு நாளும் அதேபோல் நீங்கள் சோதிப்பதில்லை, சிலவேளைகளில் மட்டுமே சோதிக்கிறீர்கள். முயற்சியாளர்கள் ஏதாவதொரு வேளையிலேயே இந்தப் பரீட்சையைப் பெறுகிறார்கள், ஒவ்வொரு நாளும் பெறுவதில்லை. எவ்வாறாயினும், ஒவ்வொரு நாளும் இதைச் சோதிக்கும்போது, இவ்வாறு கவனம் செலுத்துவது சகல பதட்டங்களையும் முடிவிற்குக் கொண்டு வந்துவிடும். வெளிநாட்டில் உள்ள குழந்தைகள் ஏதாவதொரு பணியை ஆரம்பிக்கும்போது, அவர்கள் நிச்சயமாக அதில் கவனம் செலுத்துவதை பாப்தாதா கண்டார். கவனம் செலுத்துபவர்களால் மட்டுமே முக்தியை அடைய முடியும். உங்களுக்கு பாப்தாதாவின் ஆசீர்வாதமும் உள்ளது. உங்களுக்குப் புரிகிறதா? நீங்கள் அனைவரும் உங்களை இதில் முழுமையாக ஈடுபடுத்தி, நாளாந்தம் உங்களைச் சோதிக்கும்போது, அந்த சம்ஸ்காரம் குறைவடைகின்ற பெறுபேறே ஏற்படும். சம்ஸ்காரங்களின் பாடத்தில் நீங்கள் முதல் இலக்கத்தைப் பெற வேண்டும் என்றே பாப்தாதா விரும்புகிறார். அப்போது நீங்கள் பயன்படுத்த வேண்டிய சம்ஸ்காரங்களை மட்டுமே நீங்கள் பயன்படுத்துவீர்கள். இது நடக்கும். உங்களின் கவனம் அதை நோக்கி ஈர்க்கப்பட்டதும் அது நடக்கும். அவ்வாறே அது நிகழும் என்பதல்ல, நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். ஏன் இந்த சம்ஸ்காரங்கள் ஒன்றுகூடலில் மட்டுமே வெளிப்படுகின்றன? உங்களின் ரூபங்களைப் பூஜிப்பவர்கள் உங்களின் சம்ஸ்காரங்களைப் பற்றிய அற்புதமான புகழைப் பாடுகிறார்கள். இது ஏனென்றால், அவர்கள் எதைப் பற்றிப் பேசுகிறார்களோ அதன் நடைமுறையாக நீங்கள் ஆகுகிறீர்கள். உங்களின் தேவ ரூபங்களை வெளிப்படச் செய்யுங்கள். மக்கள் என்ன பாடுகிறார்கள்? நீங்கள் அத்தகைய தேவதேவியர்கள் ஆகவேண்டும், அல்லவா? அச்சா.
இரட்டை வெளிநாட்டவர்களான நீங்கள் அனைவரும் தொடர்ந்து உங்களின் முயற்சிகளில் வெற்றியை அனுபவம் செய்கிறீர்கள், அல்லவா? செய்கிறீர்களா? வெற்றியை அனுபவம் செய்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! ஆஹா! நீங்கள் அனைவருமே மிக நன்றாக உங்களின் கைகளை உயர்த்துகிறீர்கள். எனவே, நீங்கள் நிச்சயமாக இதில் கவனம் செலுத்த வேண்டும் என்ற இலக்கை வைத்திருப்பீர்கள். நீங்கள் நிச்சயமாக இதில் ஓர் இலக்கத்தைக் கோர வேண்டும். மற்றவர்கள் உங்களைப் பார்க்கும்போது, அவர்களும் உற்சாகம் அடைவார்கள். ஏனென்றால், நீங்களே கருவிகள் ஆவீர்கள். கருவிகள் பாப்தாதாவிடம் இருந்து விசேட உதவியைப் பெற்றுக் கொள்வார்கள். நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை இட்டு பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். நீங்கள் முயற்சி செய்வதில் கவனம் செலுத்துகிறீர்கள். ஆனால், இப்போது மாற்றத்தை ஏற்படுத்துவதற்குக் கருவிகள் ஆகுங்கள். மற்றவர்கள் உங்களைப் பார்க்கும்போது, மாற்றத்திற்கான சக்தியைக் கொண்டிருக்கும் உற்சாகத்தை அவர்களும் கொண்டிருப்பார்கள். முயற்சி செய்வது என்று வரும்போது வரிசைக்கிரமம் என்பதைப் புரிந்து கொண்டாலும் நீங்கள் முயற்சி செய்வதில் கவனம் செலுத்துகிறீர்கள் என்பதை இட்டு பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். எனவே, இப்போது நீங்கள் அதை அதிகரிக்க வேண்டும். நீங்கள் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து பாப்தாதாவின் அன்பையும் நினைவுகளையும் பெறுகிறீர்கள். பாருங்கள், வீட்டில் இருந்தவண்ணம், ஒவ்வொரு நாளும் நீங்கள் ஒழுங்குமுறையாக முரளியை வாசிப்பீர்கள் என்றால், ஒரு நாளேனும் பாப்தாதாவிடம் இருந்து அன்பையும் நினைவுகளையும் பெறுவதை நீங்கள் தவறவிடுவதில்லை. ஒரு நாளேனும் அவர் உங்களுக்கு அன்பையும் நினைவுகளையும் கொடுப்பதை நிறுத்துவதில்லை. நீங்கள் அதைப் பெறுகிறீர்கள், அல்லவா? பெறுகிறீர்களா? நீங்கள் ஒவ்வொரு நாளும் அன்பையும் நினைவுகளையும் பெறுகிறீர்கள். நீங்கள் அனைவரும் அதைப் பெறுகிறீர்கள், அல்லவா? இது பாப்தாதாவின் அன்பின் ஓர் அடையாளம் ஆகும். நீங்கள் முரளியைத் தவறவிட்டால், அவரின் அன்பையும் நினைவுகளையும் நீங்கள் தவறவிட்டு விடுவீர்கள். நீங்கள் அந்த முரளியை மட்டும் தவறவிடுவதில்லை, நீங்கள் பாப்தாதாவின் அன்பையும் நினைவுகளையும் மற்றும் அவரின் ஆசீர்வாதங்களையும் தவறவிடுகிறீர்கள். உங்களால் முரளியைப் பின்னரும் வாசிக்கலாம், ஆனால் பாப்தாதாவிடம் இருந்து அன்பையும் நினைவுகளையும் பெறுவதற்காக நிச்சயிக்கப்பட்ட நேரம் தவறிவிடும், அப்படியல்லவா? நீங்கள் இதைப் பற்றி உற்சாகமாக இருப்பதையிட்டு பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். அச்சா. இங்கே முரளியைத் தவறவிடுபவர்கள் யாராவது இருக்கிறீர்களா? இரட்டை வெளிநாட்டவர்களான உங்களுக்கு இடையே, முரளியைத் தவறவிடுபவர்கள் யாராவது இருக்கிறீர்களா? ஏதாவது காரணத்திற்காக? எவரும் இல்லை. இல்லை, அவர்கள் அதைத் தவறவிடுவதில்லை. ஒருவர் தனது கையை உயர்த்;தினார். இப்போது, அதைத் தவறவிடாதீர்கள்! எந்தவொரு முரளியையும் தவறவிடாதீர்கள்! உங்களால் அதைத் தொலைபேசியிலும் கேட்க முடியும். உங்களால் அதை வாசிக்க முடியாவிட்டால், அதை நிச்சயமாகச் செவிமடுங்கள். நிச்சயமாக உங்களின் வருகையைப் பதிவு செய்யுங்கள். அச்சா. இந்த ஒன்றுகூடலுக்கு வந்துள்ள நீங்கள் அனைவரும், புதியவர்களும் பழையவர்களும் நீங்கள் முரளியைத் தவறவிடக் கூடாது என்று மிக, மிக, மிக நன்றாகக் குறித்துக் கொள்ளுங்கள். தந்தை ஒவ்வொரு நாளும் பரந்தாமத்தில் இருந்து வருகிறார். அவர் வெகு தொலைவில் இருந்து வருகிறார். அவர் குழந்தைகளான உங்களுக்காக வருகிறார். தந்தை எவ்வாறு முரளியைத் தவற விடுவதில்லையோ, அவ்வாறே, குழந்தைகளான நீங்களும் முரளியைத் தவறவிடக் கூடாது. அச்சா.
இப்போது, மதுவனத்திற்கு வருபவர்களிடம் ஒரு படிவத்தை நிரப்பும்படி கேட்கப்படுவதைப் போல், அவர்கள் ஒவ்வொரு நாளும் முரளியைக் கேட்கிறார்களா அல்லது எத்தனை நாட்கள் அவர்கள் கேட்பதில்லை என்பதற்கும் ஒன்றை நிரப்புங்கள். நீங்கள் இதை ஏற்றுக் கொள்கிறீர்களா? இதை ஏற்றுக் கொள்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! மதுவனத்தைச் சேர்ந்தவர்களும் உங்களின் கைகளை உயர்த்துங்கள்! எந்தவொரு காரணத்தாலும் நீங்கள் ஒரு முரளியையேனும் தவறவிடக்கூடாது. உங்களின் உணவை நீங்கள் ஒருபோதும் தவறாமல் உண்பதைப் போல், இதுவும் உணவு, அல்லவா? அது உங்களின் சரீரங்களுக்கான உணவு, இது ஆத்மாக்களான உங்களின் உணவு. உங்களுக்கு இது பிடித்திருக்கிறதா? புதியவர்களான நீங்கள் அனைவரும் வருவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளீர்கள். நீங்களும் இந்த ஒழுங்குமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும். ஏனைய ஒழுங்குமுறைகள் இருப்பதைப் போல், இதுவும் ஓர் ஒழுங்குமுறையே ஆகும். பிராமணர் என்றால் முரளிகளைக் கேட்பவர், சேவை செய்பவர் என்று அர்த்தம். அச்சா.
உங்களின் அன்பையும் நினைவுகளையும் கொடுப்பதுடன் கூடவே, பாப்தாதா எங்கும் இருந்து வந்திருக்கும் குழந்தைகளான உங்கள் எல்லோரையும் பாராட்டுகிறார். நீங்கள் சதா ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் முன்னேறுகிறீர்கள். தொடர்ந்தும் அவ்வாறே செய்வீர்கள். எந்தவொரு காரணத்திற்காகவும் எந்தவொரு சூழ்நிலையிலும் உங்களின் ஊக்கமும் உற்சாகமும் ஒருபோதும் குறைய அனுமதிக்காதீர்கள். சூழ்நிலைகள் வரும், ஆனால் உங்களின் முயற்சிகளும் தந்தையின் அன்பும் உங்களுக்கே உரியவை. ஆகவே, தந்தையைத் தவிர வேறு எதிலும் உங்களின் புத்திகள் மும்முரம் ஆகுவதற்கு ஒருபோதும் அனுமதிக்காதீர்கள். தந்தை, தந்தையின் முரளி, தந்தையிடம் இருந்து நீங்கள் பெற்ற சேவை – தொடர்ந்து அதையே செய்யுங்கள். அச்சா. இப்போது பாபா என்ன சொல்வார்? நாங்கள் எப்படியும் ஒன்றாகவே இருப்போம். பாபா விடை பெறுகிறார் என்று அவரால் சொல்ல முடியாது. நாங்கள் ஒன்றாகவே இருப்போம், ஒன்றாகவே திரும்பிச் செல்வோம், ஒன்றாகவே திரும்பி வருவோம். அச்சா. இப்போது, முடியுங்கள்!
ஆசீர்வாதம்:
நீங்கள் காளி ரூபமாகி, உங்களின் சக்தி ரூபத்தின் விழிப்புணர்வால் உங்களின் தூய்மையற்ற சம்ஸ்காரங்களை அழிப்பீர்களாக.சதா உங்களின் இந்த ரூபத்தை உங்களின் விழிப்புணர்வில் வைத்திருங்கள்: நான் எனது ஆயுதங்களைத் தரித்திருக்கும் ஒரு சக்தி ஆவேன். தூய்மையாக்குபராகிய என்மீது தூய்மையற்ற ஆத்மாக்கள் எவரின் நிழலின் பார்வையேனும் பட முடியாது. தூய்மை அற்ற ஆத்மா எவராலும் என்னைப் பற்றிய தூய்மை அற்ற எண்ணத்தைக் கொண்டிருக்க முடியாது. நான் இத்தகைய சக்திவாய்ந்த பிரேக் ஆகவேண்டும். தூய்மையற்ற ஆத்மா எவராயினும் என்மீது ஒரு விளைவை ஏற்படுத்தினால், நான் அந்தளவிற்கு ஆதிக்கம் செலுத்துபவனாக இல்லை என்பதே அதன் அர்த்தம். தூய்மையற்ற எதையும் அழிப்பவர்களால் எவருக்கும் இரையாக முடியாது. எனவே, இத்தகைய எண்ணத்தைக் கொண்ட ஒருவர் உங்களின் முன்னால் வந்தாலும் அவர் தனது மனதில் மயக்கம் அடையும் வகையில் காளி ரூபத்தைக் கொண்டிருங்கள்.
சுலோகம்:
பெயர், புகழ், கௌரவம் என்பவையே இராஜரீகமான ஆசையின் வடிவங்கள் ஆகும்.அவ்யக்த சமிக்கை: எரிமலை ஸ்திதியில் இருந்தவண்ணம், சக்திவாய்ந்த நினைவை அனுபவம் செய்யுங்கள்.
ஆத்மாவான நீங்கள் தேரோட்;டி ஆவீர்கள். தேரோட்டியாக இருப்பதென்றால் ஆத்ம உணர்வில் இருப்பதாகும். தந்தை பிரம்மா இதனைப் பயிற்சி செய்து, முதன்மையான ஆத்மா ஆனார். ஆகையால், தந்தையைப் பின்பற்றுங்கள்! தந்தை ஒரு சரீரத்தினுள் பிரவேசித்து அதனைக் கட்டுப்படுத்துகிறார். அதாவது அவர் தேரோட்டி ஆகுகின்றார். அவர் அச் சரீரத்தில் தங்கியிருப்பதில்லை, ஆகையாலேயே அவர் அன்பாகவும் பற்றற்றவராகவும் இருக்கிறார். அவ்வாறாகவே பிராமண ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவருமே தந்தையைப் போன்று ஒரு தேரோட்டியின் ஸ்திதியைப் பேண வேண்டும். உங்கள் சரீரத்தின் தேரோட்டியாக நீங்கள் இருக்கின்ற போது, நீங்கள் இயல்பாகவே பற்றற்ற பார்வையாளர் ஆகி, நீங்கள் செய்கின்ற எந்தவொரு செயலிலும், பார்ப்பதிலும், கேட்பதிலும் மாயையின் எந்தவொரு தாக்கத்திற்கும் உட்படாதிருப்பீர்கள்.