26.08.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, ஞானக்கடலான தந்தை இந்த ஞானத்தைப் பொழிந்து மீண்டும் இந்த பூமியைப் பசுமையாக்க வந்துள்ளார். சுவர்க்கம் இப்பொழுது ஸ்தாபிக்கப்படுகிறது. நீங்கள் அங்கே செல்வதற்கு, தேவ சமுதாயத்திற்குச் சொந்தமானவர்கள் ஆகுவது அவசியம்.
கேள்வி:
அதிமேன்மையான குலத்திற்குச் சொந்தமான குழந்தைகளாகிய உங்களின் பிரதான கடமை என்ன?பதில்:
மேன்மையான ஆன்மீகச் சேவை செய்வதே உங்கள் தொடர்ச்சியான கடமையாகும். இங்கே அமர்ந்திருக்கும் பொழுதும், உலாவித் திரிகின்ற பொழுதும் குறிப்பாகப் பாரதத்தையும், பொதுவாக முழு உலகையும் தூய்மையாக்குவதும், ஸ்ரீமத்தைப் பின்பற்றித் தந்தையின் உதவியாளர் ஆகுவதுமே அதிமேன்மையான பிராமணர்களின் கடமையாகும்.பாடல்:
அன்பிற்கினியவருடன் இருப்பவர்கள் மீதே, ஞான மழை பொழிகின்றது.ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தையே ஞானக்கடல் ஆவார். ஆகையால், ஆன்மீகத் தந்தை, அவருடன் இருக்கின்ற இனிமையிலும், இனிமையான ஆன்மீகக் குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகின்றார். அவர் எந்தத் தந்தை? சிவபாபா ஆவார். பிரம்மாபாபா ஞானக்கடல் என அழைக்கப்படுவதில்லை. சிவபாபா ஒருவரே பரமாத்மாவாகிய பரமதந்தை என அழைக்கப்படுகின்றார். ஒருவர் பௌதீகத் தந்தையும், மற்றவர் இந்த உலகிற்கு அப்பாலுள்ள ஆன்மீகத் தந்தையும் ஆவார். ஒருவர் சரீரத்துக்கான தந்தை, மற்றவர் ஆத்மாக்களின் தந்தையாவார். இந்த விடயங்கள் மிக நன்றாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும். அந்த ஒரேயொருவரே இந்த ஞானத்தைப் பேசுகின்ற, ஞானக்கடல் ஆவார். அனைவருக்கும் ஒரு கடவுளே இருக்கின்றார். அதேபோன்று, அவரால் மாத்திரமே இந்த ஞானத்தைக் கொடுக்க முடியும். எவ்வாறாயினும், சமயநூல்கள், கீதை போன்றவற்றில் மக்கள் வாசிக்கின்ற விடயங்களும், அவர்கள் செய்கின்ற பக்தியும் இந்த ஞானமல்ல. அந்த விடயங்கள் மூலம் இந்த ஞானம் பொழியப்படுவதில்லை. இதனாலேயே பாரதம் முற்றிலும் வரண்டு விட்டது; அது ஏழ்மையாகி விட்டது. மழை இல்லாத பொழுது, அனைத்து நிலங்களும் முற்றாக வரண்டு விடுகின்றன. அது பக்தி மார்க்கம். அதை ஞான மார்க்கம் என அழைக்க முடியாது. இந்த ஞானத்தின் மூலமே சுவர்க்கம் ஸ்தாபிக்கப்படுகின்றது. அங்கே பூமி எப்பொழுதும் பசுமையாகவே இருக்கின்றது; அது ஒருபொழுதும் வரண்டு போகமாட்டாது. இந்தக் கல்வியும் ஞானம் பற்றியது; தந்தையாகிய கடவுள் உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுத்து, உங்களைத் தேவ சமுதாயத்தினர் ஆக்குகின்றார். அவரே ஆத்மாக்கள் அனைவரதும் தந்தை என்று தந்தை உங்களுக்குக் கூறியுள்ளார். எவ்வாறாயினும் என்னையோ அல்லது எனது கடமைகளையோ அறியாததால் மனிதர்கள் தூய்மை அற்றவர்களாகவும், சந்தோஷம் அற்ற அநாதைகளாகவும் ஆகிவிட்டார்கள்; அவர்கள் தொடர்ந்தும் தங்களுக்குள்ளே சண்டை போடுகின்றார்கள். ஒரு குடும்பத்தில் தந்தை இல்லாத பொழுது, குழந்தைகள் தங்களுக்குள் சண்டை போடுகிறார்கள். அப்பொழுது, உங்களுக்கு ஒரு தந்தை இல்லையா என அவர்களிடம் கேட்கப்படுகின்றது. இந்த நேரத்திலும் உலகிலுள்ள எவருமே தந்தையை அறியமாட்டார்கள். அவரை அறிந்து கொள்ளாததால் அதிக சீரழிவு நடக்கின்றது. அவரை அறிந்து கொள்வதால் சற்கதி கிடைக்கும். ஒரேயொருவரே அனைவருக்கும் சற்கதி அருள்பவர். அவர் பாபா என அழைக்கப்படுகின்றார். அவரது பெயர் எப்பொழுதும் சிவன் ஆகும். அவருடைய பெயர் ஒருபொழுதும் மாற்றம் அடைய முடியாது. மக்கள் துறவறத்தை மேற்கொள்கின்ற பொழுது, தங்;கள் பெயரை மாற்றுகின்றார்கள். ஒரு பெண் திருமணம் செய்யும் பொழுது அவளுடைய பெயர் மாற்றப்படுகின்றது. இது, இங்கே பாரதத்திலுள்ள ஒரு வழக்கமாகும். வேறு எந்த இடங்களிலும் இவ்வாறில்லை. இந்த சிவபாபாவே அனைவரினதும் தாயும், தந்தையும் ஆவார். நீங்களே தாயும், தந்தையும் எனவும் அவர்கள் பாடுகின்றார்கள். பாரதத்தில் மாத்திரமே அவர்கள் அழைத்துக் கூறுகின்றார்கள்: உங்கள் கருணையினாலேயே பெருமளவு சந்தோஷம் இருக்கின்றது. பக்தி மார்க்கத்திலே கடவுள் கருணை கொண்டுள்ளார் என்றில்லை; இல்லை. பக்தி மார்க்கத்திலே அதிகளவு சந்தோஷம் இருப்பதில்லை. சுவர்க்கத்திலே அதிகளவு சந்தோஷம் இருக்கும் எனக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அது புதிய உலகம். பழைய உலகில் துன்பம் மாத்திரமே உள்ளது. மிக நன்றாக மரணித்து வாழ்பவர்களின் பெயர்கள் மாற்றப்பட முடியும். எவ்வாறாயினும் மாயை அவர்களைத் தோற்கடிக்கும் பொழுது, அவர்கள் பிராமணர்களில் இருந்து சூத்திரர்கள் ஆகுகின்றார்கள், இதனாலேயே பாபா இப்பொழுது பெயர்களை மாற்றுவதில்லை. பிராமணர்களின் மாலை என ஒன்று இல்லை. குழந்தைகளாகிய நீங்கள் அதிமேன்மையான குலத்திற்குச் சொந்தமானவர்கள். நீங்கள் மேன்மையான ஆன்மீகச் சேவை செய்கின்றீர்கள். நீங்கள் இங்கே அமர்ந்திருக்கும் பொழுதும், நடந்தும் உலாவியும் திரிகின்ற பொழுதும் குறிப்பாகப் பாரதத்திற்கும், பொதுவாக உலகிற்கும் சேவை செய்கின்றீர்கள். நீங்கள் உலகைத் தூய்மை ஆக்குகிறீர்கள். நீங்களே தந்தையின் உதவியாளர்கள். தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் உதவி செய்கின்றீர்கள். இந்தப் பாரதம் மாத்திரமே தூய தேசமாகும். நாங்கள் ஒவ்வொரு கல்பத்திலும் இந்தப் பாரதத்தைத் தூய்மையாக்கி, தூய பாரதத்தில் ஆட்சிசெய்வோம் என நீங்கள் கூறுகின்றீர்கள். நாங்கள் பிராமணர்களில் இருந்து எதிர்கால தேவர்களாக மாறுகின்றோம். பல்ரூப உருவமும் உள்ளது. பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகளே பிராமணர்கள் ஆவர். பிரஜாபிதா பிரம்மா அவர்களின் முன்னால் இருக்கும் பொழுதே பிராமணர்களும் இருக்க முடியும். நீங்கள் இப்பொழுது நேரடியாக இவர் முன்னே இருக்கின்றீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களைப் பிரஜாபிதா பிரம்மாவின் ஒரு குழந்தையாகக் கருதுகின்றீர்கள். இது ஒரு யுக்தி: இவருடைய குழந்தைகளாக உங்களைக் கருதுவதன் மூலம் நீங்கள் சகோதர, சகோதரிகள் ஆகுகின்றீர்கள். சகோதர, சகோதரிகள் ஒருபொழுதும் குற்றப் பார்வையைக் கொண்டிருக்கக் கூடாது. தந்தை இப்பொழுது ஒரு கட்டளை பிறப்பிக்கின்றார்: நீங்கள் 63 பிறவிகளாகத் தூய்மையற்று இருந்தீர்கள். இப்பொழுது புதிய உலகமாகிய சுவர்க்கத்திற்குச் செல்ல வேண்டுமானால், தூய்மை ஆகுங்கள்! தூய்மையற்ற ஆத்மாக்களால் அங்கே செல்ல முடியாது. இதனாலேயே எல்லையற்ற தந்தையாகிய என்னை வருமாறு அழைக்கிறீர்கள். ஆத்மாக்கள் தங்களது சரீரத்தின் மூலம் பேசுகின்றார்கள். சிவபாபா கூறுகின்றார்: நானும் இந்தச் சரீரத்தின் மூலமே பேசுகின்றேன். வேறு எவ்வாறு நான் வரமுடியும்? எனது பிறப்பு தெய்வீகமானது. சத்தியயுகத்தில் தெய்வீகக் குணங்களுடைய தேவர்கள் இருக்கிறார்கள். இந்த நேரத்தில் அசுர குணங்களுடைய மனிதர்கள் இருக்கின்றார்கள். இங்கே மனிதர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தேவர்கள் என அழைக்கப்பட மாட்டார்கள். அவர்கள் தங்களுக்கே பெரிய பட்டங்களைக் கொடுக்கிறார்கள். சாதுக்கள் தங்களை ஸ்ரீ, ஸ்ரீ என்றும், மனிதர்களை ஸ்ரீ என்றும் அழைக்கின்றார்கள். அவர்கள் தூய்மையாக இருப்பதால், தங்களை ஸ்ரீ, ஸ்ரீ என அழைக்கின்றார்கள், உண்மையில் அவர்களும் மனிதர்களே. அவர்கள் விகாரத்தில் ஈடுபடாது விட்டாலும் விகார உலகிலேயே வாழ்கின்றார்கள். எதிர்காலத்தில் நீங்கள் விகாரமற்ற தேவர்களின் உலகில் ஆட்சிசெய்வீர்கள். அங்கே, அவர்களும் மனிதர்களே, ஆனால் அவர்கள் தெய்வீகக் குணங்கள் நிறைந்தவர்கள். இந்நேரத்தில், மனிதர்கள் தூய்மையற்றும், அசுர குணங்கள் உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். கடவுள் எப்படி அழுக்கான, தூய்மையற்ற ஆடைகளை கழுவுகின்றார் எனக் குருநானக் பேசியுள்ளார். குருநானக்கும் தந்தையையே புகழ்ந்தார். தந்தை இப்பொழுது ஸ்தாபனையையும், விநாசத்தையும் நடத்த வந்துள்ளார். ஏனைய மத ஸ்தாபகர்கள் அனைவரும் ஒரு மதத்தையே ஸ்தாபிக்கின்றார்கள்; அவர்கள் மற்றைய மதங்களை அழிக்கவில்லை. மற்றைய மதங்கள் தொடர்ந்தும் விரிவடைகின்றன. தந்தை இப்பொழுது அந்த வளர்ச்சியை நிறுத்தி விட்டார். அவர் ஒரு தர்மத்தை ஸ்தாபித்து, ஏனைய எண்ணற்ற சமயங்களின் விநாசத்தைத் தூண்டுகின்றார். நாடகத்திற்கேற்ப, இது நடைபெற வேண்டும். தந்தை கூறுகின்றார்: நான் ஆதிசனாதன தேவிதேவதா தர்மத்தின் ஸ்தாபனையைத் தூண்டுகின்றேன். நான் அதற்கான கற்பித்தல்களைக் கொடுக்கின்றேன். சத்தியயுகத்தில், எண்ணற்ற மதங்களில் ஒன்றேனும் இருக்க மாட்டாது. அந்த ஆத்மாக்கள் அனைவரும் வீடு திரும்ப வேண்டும் என்பது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. யாருமே விநாசத்தைத் தடுக்க முடியாது, விநாசம் இடம்பெற்ற பின்னரே உலகில் அமைதி நிலவ முடியும். சுவர்க்கத்திற்கான வாயில்கள் இந்த யுத்தத்தின் மூலம் திறக்கப்படும். இந்த மகா யுத்தம் (மகாபாரத யுத்தம்) முன்னைய கல்பத்திலும் இடம்பெற்றது என நீங்கள் எழுதலாம். நீங்கள் ஒரு கண்காட்சியைத் திறக்கின்ற பொழுது, இதை எழுத வேண்டும்: தந்தை பரந்தாமத்தில் இருந்து சுவர்க்கத்தை அங்குரார்ப்பணம் செய்வதற்காக வந்துள்ளார். தந்தை கூறுகின்றார்: தந்தையாகிய சுவர்க்கக் கடவுளாகிய நான், அங்குரார்ப்பணம் செய்வதற்கு வந்துள்ளேன். எவ்வாறாயினும், நான் அவர்களைச் சுவர்க்கவாசிகள் ஆக்குவதற்காக குழந்தைகளின் உதவியை எடுத்துக் கொள்கின்றேன். இந்த ஆத்மாக்கள் அனைவரையும் வேறு யார் தூய்மை ஆக்குவார்? ஆத்மாக்கள் பலர் இருக்கின்றார்கள். இதை ஒவ்வொரு வீட்டிற்கும் விளங்கப்படுத்துங்கள்: பாரத மக்களாகிய நீங்கள் சதோபிரதானாக இருந்தீர்கள். பின்னர் 84 பிறவிகள் எடுத்து, நீங்கள் தமோபிரதான் ஆகினீர்கள். இப்பொழுது மீண்டும் ஒருமுறை சதோபிரதான் ஆகுங்கள். மன்மனாபவ! நீங்கள் சமயநூல்களை நம்புவதில்லை எனக் கூறாதீர்கள். நாங்கள் சமயநூல்களையும் பக்தி மார்க்கத்தையும் நம்பினோம், ஆனால் இப்பொழுது இரவாகிய பக்திமார்க்கம் முடிவடைகின்றது என அவர்களிடம் கூறுங்கள். இந்த ஞானத்தின் மூலம் பகல் ஆரம்பிக்கின்றது. தந்தை சற்கதி அருள்வதற்காக வந்துள்ளார். நீங்கள் மற்றவர்களுக்கு விளங்கப்படுத்துவதற்குப் பெருமளவு யுக்தி தேவை. சிலரால் இதை மிக நன்றாகக் கிரகிக்க முடியும், மற்றவர்களால், சிறிது குறைவாகவே கிரகிக்க முடியும். மிக நல்ல குழந்தைகளால் கண்காட்சிகளில் நன்றாக விளங்கப்படுத்த முடியும். தந்தை எவ்வாறு ஆசிரியராகி உள்ளாரோ, அவ்வாறே அவருடைய குழந்தைகளும் ஆசிரியர்களாக வேண்டும். சற்குரு உங்களை அக்கரைக்கு அழைத்துச் செல்கிறார் எனக் கூறப்பட்டுள்ளது. தந்தை சத்திய பூமியை ஸ்தாபிக்கின்ற உண்மையான பாபா என அழைக்கப்படுகின்றார். இராவணனே பொய்மை பூமியை ஸ்தாபிக்கின்றான். இப்பொழுது நாங்கள் சற்கதி அருள்கின்ற ஒரேயொருவரைக் கண்டுகொண்டோம், எனவே நாங்கள் ஏன் பக்தி செய்ய வேண்டும்? பக்தியைக் கற்பிக்கின்ற பல குருமார்கள் உள்ளார்கள். ஒரு சற்குரு மாத்திரமே இருக்கின்றார். சற்குரு அமரத்துவமானவர் எனக் கூறப்பட்டுள்ளது, இருந்தும் பலர் தொடர்ந்தும் குருமார் ஆகுகின்றார்கள். பலவிதமான குருமார்களும், சந்நியாசி போன்றோரும் இருக்கின்றார்கள். சீக்கியர்கள், அமரத்துவமான சற்குரு பற்றிப் பேசுகின்றார்கள். அதன் அர்த்தம் ஒருபொழுதும் மரணத்தை அனுபவம் செய்யாதவர் என்பதேயாகும். மனிதர்கள் மரணத்தை அனுபவம் செய்கின்றனர். தந்தை கூறுகின்றார்: மன்மனாபவ! அந்த மக்கள் (சீக்கியர்கள்) கூறுகின்றார்கள்: பிரபுவின் பெயரை உச்சரியுங்கள், நீங்கள் சந்தோஷத்தைப் பெறுவீர்கள். இரண்டு பிரதான கூற்றுக்கள் உள்ளன. தந்தை கூறுகின்றார்: பிரபுவாகிய என்னை நினைவு செய்யுங்கள்! பிரபுவின் பெயரை உச்சரியுங்கள். ஒரேயொரு பிரபுவே இருக்கின்றார். குருநானக்கும், அந்த ஒரேயொருவரின் பெயரை உச்சரியுங்கள் எனக் கூறும்பொழுது, அந்த ஒரேயொருவரையே குறிப்பிடுகின்றார். உண்மையில், நீங்கள் எதையும் உச்சரிக்கத் தேவையில்லை. சரியாக அவரை நினைவு செய்யுங்கள்! இதுவே உச்சரிக்க முடியாத மந்திரமாகும். உங்கள் வாயினால் எதனையும் கூறாதீர்கள். “சிவா, சிவா!” எனவும் நீங்கள் கூறத் தேவையில்லை. நீங்கள் மௌன தாமத்துக்குச் செல்ல வேண்டும். இப்பொழுது தந்தையை நினைவு செய்யுங்கள். உச்சரிக்க முடியாத ஒரேயொரு மந்திரமே உள்ளது, இதைத் தந்தையே உங்களுக்குக் கற்பிக்கின்றார். மக்கள் பல மணிகளை அடித்து, அதிகளவு சத்தம் செய்து, புகழ்ந்து பாடல்களைப் பாடுகின்றார்கள். அவர்கள் பல பாடல்களைப் பாடுகின்றார்கள், ஆனால் அதில் ஒரு பாடலின் அர்த்தத்தைக் கூட அவர்கள் புரிந்து கொள்வதில்லை. ஒரேயொரு தந்தை மாத்திரமே சந்தோஷத்தைக் கொடுக்கின்றார். அவர் வியாசர் எனவும் அழைக்கப்படுகின்றார். அவர் தன்னிடம் உள்ள ஞானத்தை உங்களுக்குக் கொடுக்கின்றார். அவரே சந்தோஷத்தையும் கொடுப்பவர். உங்களுடைய ஸ்திதியானது இப்பொழுது உயரவேண்டும் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். ஏணிப்படத்தில் வேறுபட்ட கலைகள் சித்திரிக்கப்பட்டுள்ளன. தற்பொழுது எந்தக் கலைகளும் மீதமில்லை. “நான் தெய்வீகக் குணங்கள் அற்றவர், என்னிடம் தெய்வீகக் குணங்கள் எதுவுமில்லை” என்று கூறப்பட்டுள்ளது. நிர்குண் பாலக் (தெய்வீக குணங்கள் அற்ற குழந்தைகள்) என்று அழைக்கப்படுகின்ற ஒரு நிறுவனம் உள்ளது. தந்தை கூறுகின்றார்: குழந்தைகள் மகாத்மாக்கள் போன்றவர்கள்; அவர்களிடம் எந்தக் குறைபாடுகளும் இல்லை. மக்கள் பின்னர் அந்த நிறுவனத்திற்கு அந்தப் பெயரைக் (நிர்குண் பாலக்) கொடுத்தனர். குழந்தைகளிடம் தெய்வீகக் குணங்கள் இல்லையாயின், அவர்களின் தந்தையிடமும் அவை இருக்க மாட்டாது; அனைவரும் குறைபாடுகளைக் கொண்டுள்ளனர். தேவர்கள் மாத்திரமே தெய்வீகக் குணங்கள் உடையவர்கள். தந்தையை அறிந்து கொள்ளாததே முதற்தரமான குறைபாடாகும். நச்சுக்கடலில் தத்தளிப்பது இரண்டாவது குறைபாடாகும். தந்தை கூறுகின்றார்: நீங்கள் அரைக்கல்பமாகத் தத்தளித்து வந்தீர்கள். இப்பொழுது ஞானக்கடலாகிய நான் உங்களைப் பாற்கடலுக்கு அழைத்துச் செல்கின்றேன். நான் உங்களுக்குக் கற்பித்தல்களைக் கொடுக்கின்றேன், அதன் மூலம் நீங்கள் பாற்கடலுக்கு அழைத்துச் செல்லப்பட முடியும். நான் இந்த ஆத்மா இருக்கும் இடத்திற்கு அருகில் வந்து அமர்கின்றேன். நான் விடுபட்டுள்ளேன், எனவே நான் எந்த நேரத்திலும் வந்து போகமுடியும். நீங்கள் உடலில் இருந்து பிரிந்து சென்ற ஓர் ஆத்மாவிற்கு உணவு படைக்கும் பொழுது, ஓர் ஆத்மாவிற்கே உணவு படைக்கின்றீர்கள். அந்தச் சரீரம் ஏற்கனவே எரிக்கப்பட்டு விட்டது; அதைப் பார்க்கவும் முடியாது. அந்த உணவை, குறித்த அந்த ஆத்மாவிற்கென விசேடமாக படைக்கப்பட்ட உணவாகவே நீங்கள் கருதுகின்றீர்கள். அப்பொழுது அந்த ஆத்மா வரவழைக்கப்படுகின்றார். இதுவும் நாடகத்தில் ஒரு பாகமாகும். சிலநேரத்தில் அந்த ஆத்மா வருகின்றார். சிலநேரத்தில் அவர் வருவதில்லை. சிலர் வந்து தாங்கள் எவ்வாறுள்ளனர் எனக் கூறுகின்றார்கள். சிலர் வருவதில்லை. இங்கும் கூட ஓர் ஆத்மா அழைக்கப்படும் பொழுது, வந்து பேசுகின்றார். ஆனால் அவர் இன்ன, இன்ன இடத்தில் பிறவி எடுத்திருப்பதாக உங்களுக்குக் கூறுவதில்லை. நான் சந்தோஷமாக இருக்கிறேன், நான் ஒரு நல்ல வீட்டில் பிறவி எடுத்துள்ளேன் என்று மாத்திரமே அவர் கூறுகின்றார். இந்த ஞானத்தை நன்றாக எடுத்த குழந்தைகள் நல்ல குடும்பத்திற்குச் செல்வார்கள். குறைவாக ஞானம் எடுத்தவர்கள் குறைந்த அந்தஸ்தைப் பெறுவார்கள். எவ்வாறாயினும் அவர்களும் சந்தோஷமாக இருக்கின்றனர். ஓர் அரசனாக ஆகுவதா அல்லது ஒரு வேலைக்காரனாக ஆகுவதா சிறந்தது? ஓர் அரசனாக ஆகுவதற்கு, இந்தக் கல்வியில் மும்முரமாக ஈடுபடுங்கள். இந்த உலகம் மிகவும் அழுக்கானது. உலகின் சகவாசம் தீய சகவாசம் என அழைக்கப்படுகின்றது. ஒரேயொருவரின் சகவாசம் மாத்திரமே உங்களை அக்கரைக்கு எடுத்துச் செல்கின்றது; ஏனைய அனைவரும் உங்களை மூழ்கடிக்கின்றனர். தந்தை ஒவ்வொருவரின் ஜாதகத்தையும் அறிவார். இது பாவ உலகம், இதனாலேயே மக்கள் அழைக்கின்றார்கள்: இந்த உலகிலிருந்து அப்பால் வேறு எங்காவது எங்களை அழைத்துச் செல்லுங்கள். தந்தை கூறுகின்றார்: இனிமையிலும், இனிமையான குழந்தைகளே, எனக்குச் சொந்தம் ஆகுங்கள், பின்னர் எனது வழிகாட்டல்களைப் பின்பற்றுங்கள். இது மிக அழுக்கான உலகம். இங்கே ஊழல் காணப்படுகிறது. நூறாயிரக்கணக்கான ரூபாய்களின் மோசடி நடக்கிறது. தந்தை இப்பொழுது குழந்தைகளாகிய உங்களைச் சுவர்க்க அதிபதிகள் ஆக்குவதற்காக வந்துள்ளார். ஆகையினால், உங்களுக்கு அளவற்ற சந்தோஷம் இருக்க வேண்டும். உண்மையில், இதுவே உண்மையான கீதையாகும். இந்த ஞானம் பின்னர் மறைந்து விடும். இப்பொழுது உங்களிடம் இந்த ஞானமுள்ளது. ஆனால் நீங்கள் அடுத்த பிறவி எடுக்கும் பொழுது, அது மறைந்துவிடும். அந்த நேரத்தில் வெகுமதியே இருக்கின்றது. உங்களை அதிமேன்மையான மனிதர்கள் ஆக்குவதற்கு, தந்தை உங்களுக்குக் கற்பிக்கின்றார். நீங்கள் இப்பொழுது தந்தையை அறிவீர்கள். அமர்நாத்துக்கு (அமரத்துவப் பிரபு) யாத்திரை செல்பவர்களிடம் ‘சூட்சும உலகில் காட்டப்பட்டுள்ளவர், இந்தச் சரீர உலகில் எவ்வாறு இருக்க முடியும்?’ எனக் கேளுங்கள். மலைகள் போன்றவை இங்கேயே உள்ளன. தூய்மையற்ற எவரும் எவ்வாறு அங்கே (சூட்சும உலகில்) இருந்து பார்வதிக்கு ஞானத்தைக் கொடுக்க முடியும்? அவர்கள் அமர்ந்திருந்து, அந்தப் பனிக்கட்டி லிங்கத்தைத் தங்களது கைகளினாலேயே உருவாக்குகின்றார்கள். அவர்கள் அதை எங்கேயும் உருவாக்க முடியும். மனிதர்கள் பெருமளவில் தடுமாறித் திரிகின்றார்கள். சங்கரர் மூலம் தன்னைத் தூய்மை ஆக்குவதற்கு பார்வதி எங்கிருந்து சங்கரரிடம் வந்தார் என அவர்கள் புரிந்து கொள்வதில்லை. சங்கரர் கடவுளல்ல் அவர் ஒரு தேவராவார். மனிதர்களுக்கு அதிகளவு விளங்கப்படுத்திய பொழுதிலும் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்களால் தெய்வீகப் புத்தி உடையவர்கள் ஆகமுடியாது. அதிகளவு மக்கள் கண்காட்சிகளுக்கு வருகின்றார்கள். ‘இந்த ஞானம் மிகவும் நல்லது; அனைவரும் இதைப் பெற வேண்டும்’ என அவர்கள் கூறுகின்றார்கள். ‘ஓ! குறைந்தபட்சம் நீங்கள் முதலில் இதைப் பெற வேண்டும்’ என அவர்களிடம் கூறுங்கள்! அப்பொழுது அவர்கள் தங்களுக்கு நேரமில்லை எனக் கூறுகின்றார்கள். யுத்தம் இடம்பெற முன்னர் தந்தை சுவர்க்கத்தை திறந்து வைக்கின்றார் எனவும் கண்காட்சிகளில் எழுதி வையுங்கள். விநாசத்தின் பின்னர் சுவர்க்கத்திற்கான வாயில்கள் திறக்கப்படும். பாபா கூறுகின்றார்: ஒவ்வொரு படத்திலும் பரலோக பரமாத்மா, பரமதந்தை, திரிமூர்த்தி சிவன் பேசுகின்றார் என எழுதுங்கள். நீங்கள் “திரிமூர்த்தி” என எழுதாவிட்டால் சிவன் அசரீரியானவர் என அவர்கள் கூறுகிறார்கள். அவர் எவ்வாறு ஞானத்தைக் கொடுக்க முடியும்? பின்னர் விளங்கப்படுத்தப்படுகின்றது: இவர் முதலில் அழகானவராக இருந்தார்; அவர் ஸ்ரீகிருஷ்ணராக இருந்தார். அவர் இப்பொழுது அவலட்சணமான மனிதராகி விட்டார். நீங்கள் இப்பொழுது மனிதர்களிலிருந்து தேவர்கள் ஆக்கப்படுகின்றீர்கள். பின்னர் வரலாறு மறுபடியும் இடம்பெற வேண்டும். கடவுளுக்கு மனிதர்களைத் தேவர்களாக மாற்றுவதற்கு நீண்ட காலம் எடுக்காது என்று கூறப்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் ஏணியில் கீழிறங்கி மனிதர்கள் ஆகுகின்றார்கள். பின்னர் தந்தை வந்து அவர்களைத் தேவர்கள் ஆக்குகின்றார். தந்தை கூறுகின்றார்: நான் வர வேண்டும். நான் ஒவ்வொரு கல்பத்தின் சங்கமத்திலும் வருகின்றேன். நான் ஒவ்வொரு யுகத்திலும் வருகின்றேன் என்று கூறுவது தவறாகும். நான் சங்கமயுகத்தில் வந்து உங்களைப் புண்ணியாத்மாக்கள் ஆக்குகின்றேன். பின்னர் இராவணன் உங்களைப் பாவாத்மாக்களாக ஆக்குகின்றான். தந்தையால் மாத்திரமே பழைய உலகை மாற்றிப் புதியதாக்க முடியும். இந்த விடயங்கள் புரிந்துகொள்ளப்பட வேண்டும். அச்சா.இனிமையிலும், இனிமையான அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு, உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத்தந்தை, ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தையைப் போன்று ஓர் ஆசிரியர் ஆகுங்கள். இந்தப் பொய்மையான தேசத்திலிருந்து அனைவரையும் மிகுந்த யுக்தியுடன் அகற்றி, அவர்களைச் சத்திய பூமிக்குச் செல்வதற்குத் தகுதியானவர்கள் ஆக்குங்கள்.2. உலகின் சகவாசம் தீய சகவாசம். ஆகையினால் தீய சகவாசத்திலிருந்து விலகி, சத்தியமான ஒரேயொருவரின் சகவாசத்தில் நிலைத்திருங்கள். உயர்ந்த அந்தஸ்தைக் கோருவதற்கு, உங்களை இக்கல்வியில் மும்முரமாக ஈடுபடுத்துங்கள். ஒரேயொரு தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்றுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களிடம் உள்ள எல்லாவற்றையும் ஒரு மறைமுகமான தானியாகவும் புண்ணியாத்மா ஆகவும் சேவைக்காக ஒப்படைப்பீர்களாக.நீங்கள் என்ன சேவை செய்தாலும், தொடர்;ந்து அதை உலக நன்மைக்காக ஒப்படையுங்கள். பக்தி மார்க்கத்தில், மறைமுகமான புண்ணியாத்மாக்கள் தாம் எல்லாவற்றையும் எல்லோருடைய நன்மைக்காகவும் தானம் செய்ய வேண்டும் என நினைப்பார்கள். அதேபோல், உங்களுக்குத் தோன்றும் ஒவ்வோர் எண்ணமும் சேவைக்காக ஒப்படைக்கப்பட வேண்டும். உங்களுக்காக எதையும் செய்யும் எந்தவிதமான ஆசையையும் ஒருபோதும் கொண்டிராதீர்கள். எல்லோருக்கும் சேவை செய்யுங்கள். தடையாக ஆகுகின்ற எந்தவொரு சேவையையும் உண்மையான சேவை எனக் கூற முடியாது. ஆகவே, உங்களுக்காக எதையும் செய்வதைக் கைவிட்டு, உண்மையான மறைமுகமான சேவையாளராகச் சேவை செய்யுங்கள். அதன்மூலம் தொடர்ந்து உலகிற்கு நன்மை செய்யுங்கள்.
சுலோகம்:
அனைத்தையும் இறைவனிடம் ஒப்படையுங்கள். அப்போது வருகின்ற எந்தவொரு கஷ்டமும் இலகுவாக இருப்பதை நீங்கள் அனுபவம் செய்வீர்கள்.அவ்யக்த சமிக்கை: ஓர் இலகு யோகியாக இருப்பதற்கு, இறை அன்பை அனுபவிப்பவராக இருங்கள்.
நாளின் ஆரம்பத்தில், அமிர்த வேளையில் இருந்து, உங்களின் இதயத்தில் இறையன்பை முழுமையாகக் கிரகியுங்கள். உங்களின் இதயம் இறையன்பாலும் இறைசக்திகளாலும் இறை ஞானத்தாலும் நிரம்பும்போது, உங்களின் பற்றும் அன்பும் வேறு எவரின் மீதும் செல்லாது. தந்தையின் மீது நீங்கள் உண்மையான அன்பைக் கொண்டிருக்கும்போது, உண்மையான அன்பின் அடையாளம், சமமாகவும் கர்மாதீத் ஆகவும் இருப்பதாகும். கரவன்ஹார் (எல்லாவற்றையும் நடக்கச் செய்பவர்) ஆக இருந்தவண்ணம் எல்லாவற்றையும் செய்யுங்கள். உங்களின் மனம், புத்தி, சம்ஸ்காரங்களின் ஆதிக்கத்தின் கீழ் எதையும் ஒருபோதும் செய்யாதீர்கள்.