26.09.26        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, ஓர் உண்மையான அட்டவணையை வைத்திருங்கள், உங்கள் ஸ்திதி நன்றாக இருக்கும். உங்கள் அட்டவணையை வைத்திருப்பதன் மூலம் நீங்கள் தொடர்ந்தும் நன்மை அடைவீர்கள்.

கேள்வி:
பழைய உலகில் இருந்து இலகுவாக விலகி இருப்பதற்கு என்ன விழிப்புணர்வு உங்களுக்கு உதவி புரிகின்றது?

பதில்:
நீங்கள் ஒவ்வொரு கல்பத்திலும் உங்களின் எல்லையற்ற ஆஸ்தியைத் தந்தையிடம் இருந்து கோருகின்றீர்கள், நீங்கள் இப்பொழுது உங்களின் ஆஸ்தியைக் கோருவதற்காக மீண்டும் ஒரு தடவை சிவபாபாவின் மடியைப் பெற்றுள்ளீர்கள் எனும் விழிப்புணர்வாகும். பாபாவே உங்களைத் தத்து எடுத்துள்ளதால், நீங்கள் உண்மையான பிராமணர்கள் ஆகுகின்றீர்கள், சிவபாபாவே உங்களுக்குக் கீதையைக் கூறுகின்றார்; இந்த விழிப்புணர்வுகள் பழைய உலகிலிருந்து நீங்கள் விலகியிருப்பதற்கு உதவி புரியும்.

ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் இங்கே சிவபாபாவின் நினைவில் அமர்ந்திருக்கின்றீர்கள், அவர் மீண்டும் ஒருமுறை உங்களைச் சந்தோஷ பூமியின் அதிபதிகள் ஆக்குகிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். இங்கே அமர்ந்திருக்கும் பொழுது, அத்தகைய பொக்கிஷங்களைப் பெறுவதையிட்டுக் குழந்தைகளான நீங்கள் அதிகளவு சந்தோஷத்தை உங்கள் புத்தியில் கொண்டிருக்க வேண்டும். இவ்விடயங்கள் வேறு கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் இருப்பவர்களின் புத்தியில் இருப்பதில்லை. பாபா எங்களைச் சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆக்குகிறார் என்பதை நீங்கள் மாத்திரமே அறிவீர்கள். நீங்கள் இந்தச் சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். இந்நேரத்தில், நீங்கள் ஏனைய எண்ணங்கள் அனைத்தையும் நீக்கி, ஒரேயொரு தந்தையை மாத்திரமே நினைவுசெய்ய வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் இங்கே அமர்ந்திருக்கும் பொழுது, இப்பொழுது சந்தோஷ பூமியின் அதிபதிகள் ஆகுகின்றீர்கள் என்ற போதையை உங்கள் புத்தி கொண்டிருக்க வேண்டும். நீங்கள் ஒவ்வொரு கல்பத்திலும் அமைதியும், சந்தோஷமும் என்ற ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். மக்களுக்கு எதுவுமே தெரியாது. முன்னைய கல்பத்திலும் கூட பல மனிதர்கள் அறியாமை இருளில், கும்பகர்ண உறக்கத்தில் உறங்கும் பொழுது, அழிக்கப்பட்டார்கள். அதே விடயம் மீண்டும் இடம்பெறும். ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்தை ஸ்தாபிக்கின்ற தந்தையே உங்களைத் தத்தெடுத்துள்ளார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். நாங்கள் இப்பொழுது பிராமணர்கள். நாங்கள் உண்மையான கீதையின் அத்தியாயத்தைச் செவிமடுக்கின்றோம். நாங்கள் இராஜயோகத்தின் மூலமும் இந்த ஞானத்தின் சக்தியாலும் மீண்டும் ஒருமுறை எங்கள் ஆஸ்தியை பாபாவிடம் இருந்து கோருகின்றோம். நீங்கள் அத்தகைய எண்ணங்களை உங்களுக்குள் கொண்டிருக்க வேண்டும். தந்தை வந்து, உங்களுக்குச் சந்தோஷத்திற்குரிய விடயங்களைக் கூறுகிறார். காமச்சிதையில் அமர்ந்ததால் குழந்தைகள் எரிந்து அவலட்சணம் ஆனவர்களாகி விட்டார்கள் என்பதை அவர் அறிவார். இதனாலேயே நான் அமரத்துவ பூமியிலிருந்து மரண பூமிக்கு வருகின்றேன். நீங்கள் மீண்டும் ஒருமுறை மரண பூமியிலிருந்து அமரத்துவ பூமிக்குச் செல்வதாகக் கூறுகின்றீர்கள். தந்தை கூறுகிறார்: அனைவரும் மரணித்துள்ள பொழுதே நான் மரண பூமிக்கு வருகின்றேன். நான் மீண்டும் ஒருமுறை அவர்களை அமரத்துவ பூமிக்கு அழைத்துச் செல்கிறேன். அவர்கள் சமயநூல்களில் என்ன எழுதி இருக்கின்றார்கள் எனப் பாருங்கள்! அவர் சகல சக்திகளையும் கொண்ட, சர்வசக்திவான். அவரால் தான் விரும்பிய எதையும் செய்ய முடியும். “ஓ தூய்மையாக்குபவரான பாபாவே, வந்து எங்களைத் தூய்மை ஆக்குங்கள். எங்கள் துன்பத்தை நீக்கி, எங்களுக்குச் சந்தோஷத்தைக் கொடுங்கள்!" என்று அவர்கள் அவரை அழைப்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இதில் வித்தை காட்டுதல் என்ற கேள்விக்கே இடமில்லை. தந்தை உங்களை முட்களிலிருந்து மலர்களாக மாற்றுவதற்கே வருகின்றார். நாங்கள் சந்தோஷ தாமத்தில் தேவர்களாக இருந்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்; நாங்கள் சதோபிரதானாக இருந்தோம். அனைவரும் சதோபிரதானில் இருந்து தமோபிரதான் ஆகவேண்டும். இங்கே அமர்ந்திருக்கும் பொழுது குழந்தைகளாகிய நீங்கள் அதிகளவு சந்தோஷத்துடன் இருக்கவேண்டும். நீங்கள் நினைவையும் கொண்டிருக்க வேண்டும். முழு உலகும் தந்தையை நினைவு செய்கின்றது. ஓ விடுதலையளிப்பவரே, ஓ வழிகாட்டியே, ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! அவர்கள் இராவண இராச்சியத்தில் இருக்கும் பொழுதே, அவரை அழைக்கின்றார்கள். சத்திய யுகத்தில் உள்ள எவருமே அவரை அழைக்க மாட்டார்கள். இவ்விடயங்கள் புரிந்து கொள்வதற்கு மிகவும் இலகுவானவை. உங்களுக்கு இவை அனைத்தையும் கூறியவர் யார்? அவர்கள் தந்தையினதும் ஆசிரியரினதும் சற்குருவினதும் புகழைப் பாடுகின்றார்கள். மூவரும் ஒருவரே. அவரே தந்தையும், ஆசிரியரும், சற்குருவும் என்பது உங்கள் புத்தியில் உள்ளது. தூய்மை அற்றவர்களைத் தூய்மை ஆக்குவதே சிவபாபாவின் தொழிலாகும். தூய்மை அற்றவர்கள் நிச்சயமாகத் துன்பத்தை அனுபவம் செய்கிறார்கள். சதோபிரதானாக இருப்பவர்கள் சந்தோஷமாக உள்ளனர், ஆனால் தமோபிரதானாக இருப்பவர்கள் சந்தோஷமற்று உள்ளனர். தேவர்கள் அத்தகைய சதோகுணி சுபாவத்தைக் கொண்டிருக்கிறார்கள்! இங்கோ மனிதர்கள் கலியுக தமோகுணி சுபாவத்தையே கொண்டிருக்கிறார்கள். எவ்வாறாயினும், மனிதர்கள் வரிசைக்கிரமமாக நல்லவர்களாக அல்லது தீயவர்களாக உள்ளனர். “இவர் தீயவர், இவர் இப்படிப்பட்டவர்” என்று சத்திய யுகத்தில் உள்ள எவருமே என்றுமே கூற மாட்டார்கள். அங்கு, எவருமே தீய குணாதிசயங்களைக் கொண்டிருப்பதில்லை. அவர்கள் தேவ சமுதாயத்தினர். ஆம், அவர்கள் செல்வந்தர்களாக அல்லது ஏழைகளாக இருக்கலாம். ஆயினும், நல்ல அல்லது தீய குணங்களைக் கொண்டிருக்கின்றனர் என்ற ஒப்பீடே கிடையாது. அனைவரும் சந்தோஷமாகவே இருக்கின்றார்கள், அங்கே துன்பம் என்ற கேள்விக்கே இடமில்லை. அதன் பெயரே சந்தோஷ தாமம் ஆகும். எனவே குழந்தைகளாகிய நீங்கள் தந்தையிடம் இருந்து உங்களின் முழு ஆஸ்தியையும் கோருவதற்கு முயற்சி செய்ய வேண்டும். உங்களால் உங்களின் சொந்தப் புகைப்படத்தையும் இலக்ஷ்மி நாராயணனின் படத்தையும் உங்களுடன் வைத்துக் கொள்ள முடியும். எவரோ ஒருவர் அவர்களுக்குக் கற்பித்திருக்க வேண்டும் என்று மக்கள் கூறுவார்கள். இவை கடவுளின் வாசகங்கள், இல்லையா? கடவுளுக்கெனச் சொந்தமாக ஒரு சரீரம் இல்லை. அவர் வந்து, இதனைக் (பிரம்மாவினுடைய சரீரம்) கடனாக எடுக்கின்றார். “பாக்கிய இரதம்” நினைவு கூரப்பட்டுள்ளது, எனவே, அவர் நிச்சயமாக ஓர் இரதத்தில் இருந்திருக்க வேண்டும். அவர் ஓர் எருதை ஓட்டுவதில்லை. அவர்கள் சிவனையும், சங்கரரையும் ஒருவராக்கி விட்டார்கள்; இதனாலேயே அவர்கள் ஓர் எருதைக் (அவரது வாகனமாக) காட்டி உள்ளார்கள். தந்தை கூறுகிறார்: நீங்கள் இப்பொழுது, நாங்கள் தந்தைக்கு உரியவர்கள் என்பதையிட்டு மிகவும் சந்தோஷமாக இருக்க வேண்டும். தந்தையும் கூறுகிறார்: நீங்கள் என்னுடையவர்கள். தந்தை ஓர் அந்தஸ்தைக் கோருவதற்கான சந்தோஷத்தைக் கொண்டிருப்பதில்லை. ஓர் ஆசிரியர் ஆசிரியரே, அவர் கற்பிக்க வேண்டியது மாத்திரமே. தந்தை கூறுகிறார்: ஓ குழந்தைகளே, நானே சந்தோஷக் கடல். நான் உங்களைத் தத்து எடுத்திருப்பதால், நீங்கள் இப்பொழுது அதீந்திரிய சுகத்தை அனுபவம் செய்ய வேண்டும். தத்தெடுப்பதில் பல வகைகள் உள்ளன. ஓர் ஆண் ஒரு பெண்ணைத் தனது மனைவியாக ஏற்றுக் கொள்கின்றான். அவனே தனது கணவன் என்பதை அவளும் புரிந்து கொள்கிறாள். சிவபாபா உங்களைத் தத்து எடுத்திருக்கின்றார் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். உலகிலுள்ள மக்கள் இவ்விடயங்களைப் புரிந்து கொள்வதில்லை. ஒருவர் மீது ஒருவர் காமவாளை உபயோகிப்பதற்கே அவர்களின் தத்தெடுத்தல் நிகழ்கின்றது. உதாரணமாக, ஓர் அரசர் குழந்தை ஒன்றைத் தத்தெடுக்கும் பொழுது, அதை அவர் சந்தோஷத்திற்காகவே செய்கின்றார். எவ்வாறாயினும் அது தற்காலிகச் சந்தோஷமே ஆகும். சந்நியாசிகளும் மற்றவர்களைத் தத்து எடுக்கின்றனர். “இவர் எங்களுடைய குரு” என மக்கள் கூறுவார்கள், “இவர்கள் எனது சீடர்கள்” என்று குரு கூறுவார். பல வகையான தத்தெடுத்தல்கள் உள்ளன. ஒரு தந்தை குழந்தைகளைத் தத்தெடுத்து, அவர்களுக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கின்றார். பின்னர் அவர்களுக்கு அவர் திருமணம் செய்து வைத்ததும், அது அவர் அவர்களுக்குத் துன்பம் என்ற ஆஸ்தியை வழங்குவது போலவே இருக்கிறது. குருவின் இந்தத் தத்தெடுப்பே முதற்தரமானது. கடவுளின் இந்தத் தத்தெடுத்தல் ஆத்மாக்களைத் தனக்கு உரியவர்கள் ஆக்குவதற்கான தத்தெடுத்தல் ஆகும். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது சகல விதமான தத்தெடுத்தல்களையும் பார்த்திருக்கின்றீர்கள். சந்நியாசிகள் இருந்தாலும், மக்கள் தொடர்ந்தும் பாடுகிறார்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! வந்து எங்களைத் தத்தெடுத்து, தூய்மை ஆக்குங்கள்! அனைவரும் சகோதரர்களே. எவ்வாறாயினும், அது அவர் வந்து, உங்களைத் தனக்கு உரியவர்கள் ஆக்கும்பொழுதே இடம்பெறுகின்றது. நீங்கள் கூறுகின்றீர்கள்: பாபா, நாங்கள் இப்பொழுது துன்பத்தை அனுபவம் செய்கின்றோம். அவர்கள் “இராவண இராச்சியம்” என்பதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் தொடர்ந்தும் இராவணனின் கொடும்பாவியைச் செய்து, அதனை எரிக்கின்றார்கள். ஒருவர் இன்னொருவரைத் துன்புறுத்தினால், அவருக்கெதிராகத் தாங்கள் ஒரு வழக்கைத் தொடர வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள். எவ்வாறாயினும், இராவணன் எப்பொழுது உங்கள் எதிரி ஆகினான்? இந்த எதிரி இறுதியில் மரணிப்பானா, இல்லையா? உங்களுக்கு மாத்திரமே இந்த எதிரியைத் தெரியும். அவனை வெல்வதற்காகவே நீங்கள் தத்து எடுக்கப்படுகிறீர்கள். விநாசம் இடம்பெற்றாக வேண்டும் என்பதைக் குழந்தைகளான நீங்கள் மாத்திரமே அறிவீர்கள். அணுக்குண்டுகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த ஞானயாகத்தில் இருந்தே விநாசத்தின் சுவாலைகள் வெளிப்பட்டன. நீங்கள் இராவணனை வென்று, பின்னர் புதிய உலகை ஆட்சிசெய்வீர்கள் என்பதை இப்பொழுது அறிவீர்கள். ஏனைய அனைத்தும் பொம்மை விளையாட்டே. இராவண பொம்மை உங்களுக்குப் பெரும் செலவை ஏற்படுத்துகின்றது. மக்கள் அநாவசியமாகப் பெருமளவு பணத்தை வீணாக்குகின்றார்கள். பகலுக்கும் இரவுக்கும் இடையிலான வேறுபாடு உள்ளது. அவர்கள் அலைந்து திரிந்து, சந்தோஷம் அற்றிருக்கின்றார்கள். அவர்கள் தொடர்ந்தும் எங்கும் தடுமாறித் திரிகின்றார்கள். நாங்களோ இப்பொழுது ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதால், எங்களின் மேன்மையான சத்தியயுகத்துச் சுய இராச்சியத்தைக் கோருகின்றோம். சத்திய யுகத்தை ஸ்தாபிக்கின்ற, அதிமேன்மையான சிவபாபா, எங்களை அதிமேன்மையான தேவர்களான, உலகின் அதிபதிகள் ஆக்குகின்றார். ஸ்ரீ ஸ்ரீ சிவபாபா எங்களை ஸ்ரீ (மேன்மையானவர்) ஆக்குகின்றார். ஒரேயொருவரே ஸ்ரீ ஸ்ரீ (இரட்டை மேன்மையானவர்) என்று அழைக்கப்படுகின்றார். தேவர்கள் மறுபிறவி எடுப்பதால், ஸ்ரீ என்றே அழைக்கப்படுகின்றார்கள். உண்மையில், விகாரத்தில் ஈடுபடும் அரசர்களையும் ஸ்ரீ என்று அழைக்க முடியாது. உங்களின் புத்தி இப்பொழுது மிகவும் எல்லையற்றதாக இருக்க வேண்டும். இக்கல்வியின் மூலம் நீங்கள் இரட்டைக் கிரீடதாரிகள் ஆகுவீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் இரட்டைக் கிரீடதாரிகளாக இருந்தீர்கள், இப்பொழுது உங்களிடம் ஒற்றைக் கிரீடமேனும் இல்லை; நீங்கள் தூய்மை அற்றவர்கள். இங்குள்ள எவருக்குமே ஒளிக்கிரீடத்தை வழங்க முடியாது. நீங்கள் தபஸ்யா செய்வது போன்று காட்டப்பட்டிருக்கும் இப்படங்களில் உங்களை ஒளிக்கிரீடத்துடன் காட்ட முடியாது. எதிர்காலத்தில் நீங்கள் இரட்டைக் கிரீடதாரிகளாக வேண்டும். இரட்டைக் கிரீடம் அணிந்த சக்கரவர்த்திகளாகவும், சக்கரவர்த்தினிகளாகவும் ஆகுவதற்கே பாபாவிடம் நீங்கள் வந்துள்ளீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நீங்கள் இந்தச் சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் சிவபாபாவை நினைவு செய்தால், தூய்மை அற்றவர்களில் இருந்து தூய்மையானவர்களாகி, சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆகமுடியும். இதில் சிரமம் என்ற கேள்விக்கே இடமில்லை. நீங்கள் இங்கே மாணவர்களாக அமர்ந்திருக்கின்றீர்கள். நீங்கள் வெளியே உங்கள் நண்பர்கள், உறவினர்களிடம் செல்லும் பொழுது, உங்கள் மாணவ வாழ்க்கையை மறந்து விடுகின்றீர்கள். நீங்கள் உங்களின் நண்பர்கள், உறவினர்களை நினைவு செய்வதால், மாயையின் தாக்கம் இருக்கின்றது. நீங்கள் ஒரு விடுதியில் தங்கியிருக்கும் பொழுது, உங்களால் நன்றாகக் கற்க முடிகிறது. நீங்கள் வருவதும் போவதுமாக இருக்கின்ற போது, சகவாசத்தின் ஆதிக்கத்தால் சீரழிந்து போகின்றீர்கள். நீங்கள் இங்கிருந்து வெளியில் சென்றதும், உங்கள் மாணவ வாழ்க்கையின் போதை மறைந்து விடுகின்றது. வெளியே கற்பிக்கும் ஆசிரியர்களும், அவர்கள் இங்கே கொண்டிருக்கின்ற அளவு போதையை வெளியே கொண்டிருப்பதில்லை. இது தலைமையகமாகிய, மதுவனம் ஆகும். ஆசிரியரின் முன்னால் மாணவர்கள் இருக்கின்றார்கள், நாளாந்த நடவடிக்கைகள் எதுவும் இல்லை. பகலுக்கும் இரவுக்கும் இடையிலான வேறுபாடு உள்ளது. சிலர் சிவபாபாவை நாள் முழுவதும் நினைவு செய்வதே இல்லை; அவர்கள் சிவபாபாவின் உதவியாளர்கள் ஆகுவதும் இல்லை. நீங்கள் சிவபாபாவின் குழந்தைகளாகி விட்டீர்கள். எனவே, சேவை செய்யுங்கள்! நீங்கள் சேவை செய்யாது விட்டால், நீங்கள் தகுதியற்றவர்கள் என்றே அர்த்தம். தந்தை இதைப் புரிந்து கொள்கிறார். எவ்வாறாயினும், தன்னை நினைவு செய்யுமாறு உங்களுக்குக் கூறவேண்டியது அவரது கடமை ஆகும். என்னைப் பின்பற்றுங்கள், இதனால் பெருமளவு நன்மை கிடைக்கும். விகாரத்தை அடிப்படையாகக் கொண்ட உறவுமுறைகள் சீர்கெட்டவை. ஆகவே தொடர்ந்தும் அவற்றைத் துறவுங்கள். அவர்களின் சகவாசத்தைக் கொண்டிராதீர்கள். தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார், ஆயினும் அது உங்கள் பாக்கியத்திலும் இருக்க வேண்டும். பாபா கூறுகின்றார்: உங்கள் அட்டவணையை வைத்திருங்கள். அதனால் நீங்கள் பெருமளவு நன்மை அடைவீர்கள். சிலர் ஒரு மணித்தியாலமேனும் நினைவில் இருப்பதில்லை. இறுதியில் எட்டு மணித்தியாலங்கள் நினைவில் இருக்கின்ற ஸ்திதியை நீங்கள் அடைய வேண்டும். நீங்கள் கர்ம யோகிகள். உங்களில் சிலர் சிலவேளைகளில் உற்சாகமாக இருப்பதால், அட்டவணையை வைத்துக் கொள்கிறீர்கள். அது நல்லது. நீங்கள் எந்தளவுக்கு அதிகமாகத் தந்தையை நினைவு செய்கிறீர்களோ, அந்தளவுக்கு அதிகமாக உங்களுக்கு நன்மை இருக்கின்றது. தங்கள் இறுதிக் கணங்களில் கடவுளை நினைவு செய்பவர்கள்; நல்ல பிறவி எடுப்பார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் என்ன? என்னை நினைவு செய்யாதவர்கள் இறுதியில் காட்சிகள் மூலம் தண்டனையைப் பெறுவார்கள்; அவர்களின் பல பிறவிகளின் பாவச்சுமை காரணமாக, அவர்கள் பல பிறவிகளை எடுக்குமாறு செய்யப்படுவதால், மீண்டும் மீண்டும் காட்சிகள் வழங்கப்படும். உதாரணமாக, அவர்கள் தங்களைக் காசியில் அர்ப்பணிக்கும் பொழுது, அவர்களுக்கு நேரடியாகவே அவர்களின் பாவங்கள் பற்றிய காட்சிகள் கிடைக்கின்றன. அவர்கள் தாங்கள் செய்துள்ள பாவங்களுக்கேற்ற தண்டனையைப் பெற்றுக் கொள்வதாக அனுபவம் செய்வார்கள். பெருமளவு தண்டனையை அனுபவம் செய்பவர்களும் இருக்கிறார்கள். பாபாவின் சேவையில் தடைகளை உருவாக்குபவர்கள் தண்டனை பெறுவார்கள். அவர்கள் தந்தையின் சேவைக்குப் பிரச்சனைகளை விளைவிக்கின்றார்கள். அவரது வலது கரமாக தர்மராஜ் இருக்கின்றார். தந்தை கூறுகின்றார்: உங்களுக்குள் ஒரு சத்தியத்தைச் செய்து கொள்ளுங்கள், ஏனெனில் தந்தையின் நினைவின் மூலமே நீங்கள் தூய்மை ஆகுவீர்கள். இல்லாவிட்டால் நீங்கள் தூய்மையாக மாட்டீர்கள். தந்தை உங்களை ஒரு சத்தியத்தைச் செய்யுமாறு தூண்டுகிறார். எவ்வாறாயினும், அதனைச் செய்வதும், செய்யாமல் விடுவதும் உங்களைப் பொறுத்தது. ஏதாவது ஒன்றைச் செய்பவர்கள், நிச்சயமாக அதன் பலனைப் பெற்றுக் கொள்வார்கள். சத்தியத்தைச் செய்து விட்டு, பின்னர் தொடர்ந்தும் தீய செயல்களையே செய்கின்ற பலர் உள்ளனர். மக்கள் பக்தி மார்க்கத்தில் தொடர்ந்தும் பாடுகின்றார்கள்: என்னுடையவர் ஒருவரேயன்றி, வேறெவரும் இல்லை. எவ்வாறாயினும், ஆத்மாக்கள் ஏன் இவ்வாறு பாடுகின்றனர் என்பது இப்பொழுது உங்கள் புத்தியில் உள்ளது. அவர்கள் நாள் முழுவதும் தொடர்ந்தும் பாடுகின்றார்கள்: என்னுடையவர் ஒரேயொரு கிரிதர் கோபாலனே (கிருஷ்ணருடைய மறுபெயர்). தந்தை சங்கம யுகத்தில் வரும்பொழுது மாத்திரமே, அவரால் உங்களைத் திரும்பவும் தன்னுடன் வீட்டிற்கு அழைத்துச் செல்ல முடியும். நீங்கள் கிருஷ்ண தாமத்திற்குச் செல்வதற்காகவே கற்கின்றீர்கள். இளவரசர்களும், இளவரசிகளும் கற்பதற்கான ஒரு கல்லூரியும் இருக்கின்றது. அது ஓர் எல்லைக்கு உட்பட்ட விடயமாகும். அவர்கள் (இளவரசர்கள் அல்லது இளவரசிகள்) நோய்வாய்ப்படலாம் அல்லது மரணிக்கவும் கூடும். இதுவே இளவரசர்கள், இளவரசிகள் ஆகுவதற்கான தந்தையின் இறை பல்கலைக்கழகம் ஆகும். இது இராஜயோகக் கல்வி. நீங்கள் ஒரு சாதாரண மனிதனிலிருந்து நாராயணன் ஆகுகின்றீர்கள். நீங்கள் தந்தையிடம் இருந்து உங்கள் ஆஸ்தியைப் பெற்று, சத்தியயுகத்து இளவரசர்களாகவும், இளவரசிகளாகவும் ஆகுகின்றீர்கள். தந்தையே இங்கிருந்து உங்களுக்குச் அத்தகைய சந்தோஷத்தைக் கொடுக்கின்ற விடயங்களைக் கூறுகின்றார். நீங்கள் அவற்றை நினைவுசெய்ய வேண்டும். சிலர் இங்கிருந்து சென்றவுடனேயே சிக்கிக் கொள்கிறார்கள். நீங்கள் வரிசைக்கிரமமாகவே தந்தையை நினைவுசெய்கிறீர்கள். அவரை அதிகமாக நினைவு செய்பவர்கள் மற்றவர்களையும் அவரை நினைவு செய்வதற்குத் தூண்டுவார்கள். எவ்வாறு நீங்கள் பலருக்கும் நன்மை செய்யலாம் என்பது உங்கள் புத்தியில் இருக்க வேண்டும். நீங்கள் மேலும் முன்னேறிச் செல்லும்பொழுது, அனைத்தினதும் காட்சிகளைக் கண்டு, உண்மையிலேயே நீங்கள் முழுமையான முயற்சியைச் செய்யவில்லை என்பதை உணர்வீர்கள். நீங்கள் பல அற்புதங்களைப் பார்ப்பீர்கள். நன்றாகக் கற்பவர்கள் பிரபுக்களாகவும், அதிபதிகளாகவும் ஆகுவார்கள். தந்தை உங்களுக்குத் தொடர்ந்தும் அதிகளவு கூறுகிறார். நான் ஒரு நிலையத்திற்குக் கண்காட்சிக்குத் தேவையான படங்களைக் கொடுக்கிறேன், இதனால் குழந்தைகள் கற்பிக்கப்பட்டு, புத்திசாலிகள் ஆக்கப்படுகிறார்கள். அப்பொழுது, எவ்வாறு சேவை செய்வதென்று பிரம்மாகுமாரர்களுக்கும், குமாரிகளுக்கும் தெரியும் என பாபா புரிந்து கொள்வார். நீங்கள் சேவை செய்தால் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவீர்கள். இதனாலேயே கண்காட்சிக்கான படங்களைத் தயாரிக்குமாறு பாபா வலியுறுத்துகிறார். இப்படங்களை உருவாக்குவது என்பது பொதுவான விடயமாகும். தைரியசாலிகளாக இருந்து, கண்காட்சிப் படத்தொகுதிகளை உருவாக்குவதற்கு உதவி செய்வீர்களாயின், விளங்கப்படுத்துவது குழந்தைகளுக்கு இலகுவாகுகின்றது. முகாமையாளர்களான ஆசிரியர்கள், சற்றுப் பின்னடைவாக இருப்பதை பாபா புரிந்து கொள்கிறார். சில ஆசிரியர்கள், முகாமையாளர்களாகி, பின்னர் சரீர உணர்வு உடையவர்கள் ஆகுகின்றார்கள். அவர்கள் தங்களை மிகவும் புத்திசாலிகளாகக் கருதுகிறார்கள்: 'நான் மிக நன்றாக முன்னேறிச் செல்கின்றேன்!” நீங்கள் அவரைப் பற்றிப் பிறரிடம் கேட்டால், அவர்கள் அந்த நபரைப் பற்றிப் பத்து விடயங்களைக் கூறுவார்கள். மாயை உங்களை அதிகளவு சுழற்சிக்குள் இடுகின்றாள். குழந்தைகளாகிய நீங்கள் சேவையில், மென்மேலும் அதிகளவு சேவையில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். தந்தை கருணை நிறைந்தவரும், துன்பத்தை அகற்றிச் சந்தோஷத்தை அருள்பவரும் ஆவார். எனவே, குழந்தைகளாகிய நீங்களும் அவ்வாறே ஆகவேண்டும். தந்தையின் அறிமுகத்தைக் கொடுங்கள். தந்தை கூறுகிறார்: சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள், இதனால் நீங்கள் நரகவாசிகளில் இருந்து சுவர்க்கவாசிகள் ஆகுவீர்கள். இது மிகவும் இலகுவானது! தந்தை கூறுகிறார்: என்னை நினைவு செய்யுங்கள், நீங்கள் தூய்மை அற்றவர்களில் இருந்து தூய்மையானவர்களாகி, அமைதி தாமத்திற்கும் சந்தோஷ தாமத்திற்கும் செல்வீர்கள். அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படும்பொழுது, நீங்கள் அவர்களை உடனடியாகவே இதனை எழுத வைக்க வேண்டும். உண்மையிலேயே பிரம்மாகுமாரர்களும், பிரம்மகுமாரிகளும் தங்கள் ஆஸ்தியைச் சிவபாபாவிடம் இருந்து பெறுகிறார்கள் எனச் சிலர் எழுதுகிறார்கள். எனவே, நிச்சயமாக அத்தகைய தந்தைக்குத் தாங்;கள் சொந்தமாக வேண்டும் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் அவரிடம் புகலிடம் பெற வேண்டும். நீங்கள் தந்தையிடம் புகலிடத்தைத் தேடியே இங்கு வந்திருக்கின்றீர்கள், அதாவது, நீங்கள் அவரின் மடிக்கு வந்துள்ளீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தையைப் போன்று கருணை நிறைந்தவராகவும், துன்பத்தை நீக்கி, சந்தோஷத்தை அருள்பவராகவும் ஆகுங்கள்.

2. தீய சகவாசத்தின் ஆதிக்கத்தையிட்டு மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். ஒரேயொரு தந்தையை மாத்திரம் பின்பற்றுங்கள். ஏனைய பலருக்கும் நன்மைபயக்கக் கூடிய சேவையைச் செய்யுங்கள். என்றுமே அகங்காரம் கொண்டிருந்து, உங்களை மிகவும் திறமைசாலியெனக் கருதாதீர்கள்.

ஆசீர்வாதம்:
அகநோக்குடையவர் ஆகுவதன் மூலம், உங்களுடைய நேரத்தையும் எண்ணங்களையும் சேமிப்பதனால் தடைகளை வென்றவர் ஆகுவீர்களாக.

சக்திமிக்க எந்தவொரு புதிய கண்டுபிடிப்பும் நிலத்தடியிலேயே இடம்பெறுகின்றது. நீங்கள் எந்தளவிற்கு அகநோக்குடையவராக இருக்கிறீர்களோ, அதாவது எந்தளவிற்கு நீங்கள் நிலத்தடியில் இருக்கிறீர்களோ, அந்தளவிற்கு நீங்கள் சூழலிருந்து பாதுகாக்கப்படுகிறீர்கள். அதன் பின்னர், உங்கள் கடைதல் சக்தி எந்தளவிற்கு அதிகரிக்கின்றதோ, அந்தளவிற்கு நீங்கள் மாயையின் தடைகளில் இருந்து பாதுகாக்கப்படுகிறீர்கள். புறநோக்கு அடைவதற்கு முன்னர் அகநோக்கு உடையவராகவும், முகமலர்ச்சியுடனும் கவரத்தக்க ரூபமாகவும் இருங்கள். செயல்களைச் செய்யும் போது இதனைப் பயிற்சி செய்தால் உங்கள் நேரம் பாதுகாக்கப்படுவதுடன், நீங்கள் அதிகளவு வெற்றியையும் அனுபவம் செய்வீர்கள்.

சுலோகம்:
உங்கள் நோய்களையிட்டு பயப்படாதீர்கள். ஆனால் சில பழங்கள், சில மருந்துகளை உட்கொண்டு அவற்றிற்கு விடைகொடுங்கள்.

அவ்யக்த சமிக்ஞை: இப்போது உங்களின் அருள்கின்ற ரூபத்தை வெளிப்படுத்துங்கள்.

குழந்தைகளான நீங்கள் ஆத்மாக்களிடம் இருந்து எதையும் பெற்றுக் கொள்ளக்கூடாது. ஒரேயொரு தந்தையிடம் இருந்து மட்டுமே பெற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் எதைப் பெற்றீர்களோ, அதை மற்றவர்களுக்கு நீங்கள் கொடுக்க வேண்டும். நீங்கள் மற்றவர்களுக்குக் கொடுக்கும்போது, எதையும் பெற்றுக் கொள்ளும் எந்தவிதமான ஆசையும் இருக்கக்கூடாது. ஓர் ஆத்மா எதையாவது ஏனைய ஆத்மாக்களிடம் இருந்து பெறும் ஆசையைக் கொண்டிருந்தால், அந்த ஆத்மா எல்லைக்கு உட்பட்ட ஆத்மாக்களிடம் இருந்து எல்லைக்கு உட்பட்ட, தற்காலிகமான பேறுகளை மட்டுமே பெறுவார். எல்லையற்ற தந்தையிடம் இருந்து மட்டுமே நீங்கள் எல்லையற்ற பேறுகளைப் பெறுவீர்கள். எவரிடம் இருந்தும் எதையாவது பெற்றுக் கொள்ளும் சிறிதளவு ஆசை ஏதாவது இருக்குமாயின், அது உங்களின் சுயமரியாதையில் இருந்து உங்களை விழச் செய்துவிடும்.