26.12.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே உங்களுடைய பாக்கியத்தை மேன்மையானது ஆக்குவதற்கு நீங்கள் எவருடனாவது பேசும்போதும் அல்லது எவரையாவது பார்க்கும் போதும் உங்களுடைய புத்தியின் யோகத்தை ஒரேயொரு தந்தையுடன் இணையுங்கள்.
கேள்வி:
புதிய உலகை ஸ்தாபிப்பதற்குக் கருவிகளாக இருக்கும் குழந்தைகள் தந்தையிடம் இருந்து என்ன வழிகாட்டல்களைப் பெறுகிறார்கள்?பதில்:
குழந்தைகளே இப் பழைய உலகுடன் உங்களுக்கு எந்தவிதத் தொடர்பும் கிடையாது. உங்களுடைய இதயத்தில் இப் பழைய உலகின் மீது பற்றுக் கொள்ளாதீர்கள். நீங்கள் எந்தச் செயல்களையும் ஸ்ரீமத்திற்கு எதிராகச் செய்யாதிருப்பதையும் ஆன்மீகச் சேவைக்கு நீங்கள் கருவிகளாக இருக்கிறீர்களா என்பதையும் சோதித்துப் பாருங்கள்.பாடல்:
கள்ளங்கபடமற்ற பிரபுவைப் போன்று தனித்துவமானவர் எவருமில்லை!ஓம் சாந்தி.
இப்பொழுது பாடல்களைச் செவிமடுக்க வேண்டிய அவசியமில்லை. பொதுவாக பக்தர்கள் பாடல்களைப் பாடுவதுடன் அவற்றைச் செவிமடுக்கின்றார்கள். நீங்கள் ஒரு கல்வியைக் கற்கிறீர்கள். இப் பாடல்கள் குறிப்பாகக் குழந்தைகளாகிய உங்களுக்காக இயற்றப்பட்டுள்ளன. தந்தை உங்களுடைய பாக்கியத்தை மேன்மையானதாக ஆக்குகிறார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இப்போது நாங்கள் தந்தையை நினைவு செய்வதுடன் தெய்வீகக் குணங்களையும் கிரகிக்க வேண்டும். நீங்கள் இலாபத்தையா அல்லது இழப்பையா ஏற்படுத்துகின்றீர்கள் என உங்களுடைய அட்டவணையைச் சோதித்துப் பாருங்கள். என்னிடம் ஏதாவது பலவீனங்கள் உள்ளனவா? உங்களுடைய பாக்கியத்தில் இழப்பை ஏற்படுத்தக்கூடிய பலவீனம் ஏதாவது இருந்தால் நீங்கள் அந்தப் பலவீனத்தை அகற்ற வேண்டும். இவ்வேளையில் நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுடைய பாக்கியத்தை மேன்மையானதாக ஆக்கிக் கொள்ள வேண்டும். ஒரேயொரு தந்தையையன்றி வேறு எவரையும் நீங்கள் நினைவு செய்யாதிருந்தால் மட்டுமே உங்களால் இலக்ஷ்மி அல்லது நாராயணனாக முடியும் என நீங்கள் விளங்கப்படுத்துகின்றீர்கள். எவருடனாவது பேசும்போது அல்லது எவரையாவது பார்க்கும்போது உங்களுடைய புத்தியின் யோகம் ஒரேயொருவருடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆத்மாக்களாகிய நாங்கள் தந்தையை மட்டுமே நினைவுசெய்ய வேண்டும். நாங்கள் தந்தையின் கட்டளைகளைப் பெற்றிருக்கிறோம்: என்னைத் தவிர வேறு எவர் மீதும் உங்களுடைய இதயத்தில் பற்று வைக்காமல் தெய்வீகக் குணங்களைக் கிரகியுங்கள். தந்தை விளங்கப்படுத்துகிறார்: உங்களுடைய 84 பிறவிகள் இப்போது பூர்த்தியாகி உள்ளன. நீங்கள் இப்போது சென்று அந்த இராச்சியத்தில் முதல் இலக்க அந்தஸ்தைக் கோர வேண்டும். நீங்கள் இராச்சியத்தின் ஆட்சியாளர் என்ற அந்தஸ்தில் இருந்து வீழ்ச்சி அடைந்து பிரஜைகளில் ஒருவராகவோ அல்லது அந்தப் பிரஜைகளின் மத்தியிலும் தாழ்ந்த பிரஜைகளில் ஒருவராக ஆகுவதாக இருக்கக்கூடாது. இல்லை. தொடர்ந்தும் உங்களைச் சோதித்துப் பாருங்கள். தந்தையைத் தவிர வேறு எவராலும் இந்த விளக்கத்தை வழங்க முடியாது. தந்தையையும் ஆசிரியரையும் நினைவு செய்வதனால் தண்டனை பெறத்தக்க எதனையும் நீங்கள் செய்வதற்குப் பயப்படுவீர்கள். பக்தி மார்க்கத்திலும் பாவம் செய்வதனால் தங்களுக்கான தண்டனையைச் சேர்த்துக் கொள்கிறார்கள் என்பதை அவர்கள் புரிந்து கொள்கின்றனர். இப்பொழுது மட்டுமே நீங்கள் மூத்த பாபாவிடம் இருந்து வழிகாட்டல்களைப் பெற்றுக் கொள்கிறீர்கள், இவை ஸ்ரீமத் என்று அழைக்கப்படுகின்றன. ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதனால் நீங்கள் மேன்மையானவர்கள் ஆகுகிறீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நீங்கள் ஸ்ரீமத்திற்கு எதிராக எதனையும் செய்கிறீர்களா என உங்களையே சோதித்துப் பாருங்கள். நீங்கள் விரும்பாத எதனையும் நீங்கள் செய்யக்கூடாது. நல்லது, தீயது என்பவற்றுக்கு இடையிலான வேறுபாட்டை நீங்கள் இப்போது புரிந்து கொள்கிறீர்கள். முன்னர் நீங்கள் இதனைப் புரிந்து கொள்ளவில்லை. பல பிறவிகளுக்கு நீங்கள் நடுநிலையான செயல்களைச் செய்வதற்கு நீங்கள் இப்போது கற்கிறீர்கள். இந்த நேரத்தில் ஐந்து விகாரங்களும் அனைவரிலும் இருக்கின்றன. நீங்கள் இப்போது மிக நல்ல முயற்சி செய்து கர்மாதீத் ஆகவேண்டும். அத்துடன் தெய்வீகக் குணங்களையும் கிரகியுங்கள். காலம் மிக மிகச் சிக்கல் ஆகுவதுடன் உலகமும் மோசம் அடைகிறது. நாளுக்கு நாள் விடயங்கள் மேலும் மோசமான நிலையை மாத்திரம் அடையும். உங்களுக்கு இந்த உலகத்துடன் தொடர்பு அற்றிருப்பது போன்றுள்ளது. இப்போது ஸ்தாபிக்கப்படுகின்ற புதிய உலகுத்துடனேயே உங்களுடைய தொடர்பு உள்ளது. புதிய உலகை ஸ்தாபிப்பதில் நாங்கள் கருவிகள் ஆகுகிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே உங்கள் இலக்கும் குறிக்கோளும் உங்கள் முன்னால் உள்ளன: நான் அவர்களைப் போன்று ஆகவேண்டும். உங்களுக்குள் எந்தவித அசுர குணங்களும் இல்லாதிருக்க வேண்டும். ஆன்மீகச் சேவையில் ஈடுபடுவதன் மூலம் பெருமளவு முன்னேற்றம் ஏற்பட முடியும். நீங்கள் கண்காட்சிகளையும் அருங்காட்சியகங்களையும் திறந்து வைக்கும்போது பலர் வருவார்கள் என்றும் அதனால் அவர்கள் தந்தையை நினைவுசெய்ய ஆரம்பிக்கும் வகையில் நீங்கள் தந்தையின் அறிமுகத்தை அவர்களுக்கு வழங்க முடியும் என்றும் நீங்கள் நம்புகிறீர்கள். நாள் முழுவதும் நீங்கள் இந்த எண்ணங்களையே கொண்டிருக்க வேண்டும். நிலையம் ஒன்றைத் திறந்து சேவையை அதிகரியுங்கள். உங்களிடம் சகல இரத்தினங்களும் உள்ளன. நீங்கள் தெய்வீகக் குணங்களைக் கிரகிப்பதற்குத் தந்தை தூண்டுவதுடன் உங்களுக்குப் பொக்கிஷங்களையும் வழங்குகிறார். இங்கு அமர்ந்திருக்கும்போது உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியை நீங்கள் அறிவீர்கள் என்பது உங்களுடைய புத்தியில் உள்ளது. நீங்கள் தூய்மையாகவும் இருக்கிறீர்கள். உங்களுடைய எண்ணங்கள், வார்த்தைகள் அல்லது செயல்களினூடாக எந்தவிதத் தீய செயல்களையும் செய்யக் கூடாது. இந்த விடயத்தில் நீங்கள் உங்களை மிகக் கவனமாகச் சோதித்துப் பார்க்க வேண்டும். தந்தை தூய்மை அற்றவர்களைத் தூய்மையாக்குவதற்கு வந்துள்ளார். அவர் தொடர்ந்தும் இதற்கான வழிமுறைகளை உங்களுக்குக் காட்டுகிறார். நீங்கள் தொடர்ந்தும் இந்த வழிமுறைகளைப் பற்றிச் சிந்தித்து அவற்றினால் உங்களைக் களிப்பூட்ட வேண்டும். நிலையம் ஒன்றைத் திறந்து பலரையும் வரவழைத்து, அங்கு அமர்ந்திருந்து அவர்களுக்கு மிகுந்த அன்புடன் விளங்கப்படுத்துங்கள்: இப்பழைய உலகம் அழிக்கப்படப் போகிறது. அனைத்திற்கும் முதலில் புதிய உலக ஸ்தாபனை மிகவும் அத்தியாவசியமானது. சங்கம யுகத்திலேயே ஸ்தாபனை இடம்பெறுகிறது. இப்போது சங்கமயுகம் என்பதையே மக்கள் அறிய மாட்டார்கள். இப்போது புதிய உலகின் ஸ்தாபனைக்கும் பழைய உலகின் விநாசத்திற்குமான சங்கமம் என்பதை நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம் புதிய உலகம் ஸ்தாபிக்கப்படுகிறது. புதிய உலக ஸ்தாபனைக்கான வழிகாட்டல்களைத் தந்தையைத் தவிர வேறு எவராலும் வழங்க முடியாது. தந்தை மட்டுமே வந்து புதிய உலகினை அங்குரார்ப்பணம் செய்யுமாறு குழந்தைகளாகிய உங்களைத் தூண்டுகிறார். அவர் இதனைத் தனித்துச் செய்ய மாட்டார்; அவர் தனது குழந்தைகள் அனைவரினதும் உதவியைப் பெறுகின்றார். அவர்கள் எதனையாவது அங்குரார்ப்பணம் செய்வதற்கு எவரின் உதவியையும் பெற மாட்டார்கள், ஆனால் அவர்கள் சென்று கத்திரிக்கோலால் ரிப்பனை வெட்டுவார்கள். இங்கு அவ்வாறில்லை. இங்கு பிராமணக் குலத்தின் அலங்காரங்களான நீங்கள் உதவியாளர்கள் ஆகுகிறீர்கள். மனிதர்கள் அனைவரும் தங்கள் பாதையை முற்றிலும் மறந்து விட்டார்கள். தூய்மையற்ற உலகைத் தூய்மை ஆக்குவது தந்தை ஒருவரின் பணி மாத்திரமே ஆகும். தந்தை மட்டுமே புதிய உலகை ஸ்தாபிக்கிறார், அதற்காகவே அவர் உங்களுக்கு ஆன்மீக ஞானத்தை வழங்குகிறார். புதிய உலகை ஸ்தாபிப்பதற்குத் தந்தையிடம் வழிமுறை உள்ளதென்பதை நீங்கள் அறிவீர்கள். பக்தி மார்க்கத்தில் மக்கள் அவரை அழைக்கின்றார்கள்: ஓ தூய்மையாக்குபவரே வாருங்கள்! மக்கள் தொடர்ந்து சிவனை வழிபட்டாலும் தூய்மையாக்குபவர் யார் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள். அவர்கள் சந்தோஷம் அற்றிருக்கும்போது அவரை நினைவுசெய்து 'ஓ கடவுளே! ஓ இராமா!" என்று கூறுகிறார்கள். அசரீரியானவரும் இராமர் என்றழைக்கப்படுகிறார். அசரீரியானவர், அதிமேலான கடவுள் என்று அழைக்கப்படுகிறார். எவ்வாறாயினும் மக்கள் மிகவும் குழப்பம் அடைந்துள்ளார்கள். அவர்கள் பனிமூட்டத்திற்குள் தொலைந்து போயுள்ளதாகக் தோன்றுகிறது! தந்தை வந்து உங்களுடைய குழப்பத்தை நீக்கியுள்ளார். இது ஓர் எல்லையற்ற விடயம். அவர்கள் பாரியதொரு காட்டில் அகப்பட்டுள்ளார்கள். நீங்கள் எந்தக் காட்டில் இருந்தீர்கள் என்பதை நீங்கள் உணரும்படி தந்தை செய்துள்ளார். இந்த உலகம் பழையது என்றும் அது இப்போது அதன் இறுதியில் உள்ளது என்பதையும் நீங்கள் இப்போது அறிவீர்கள். மக்கள் பாதையை அறியவே மாட்டார்கள்! அவர்கள் தொடர்ந்தும் தந்தையை அழைக்கிறார்கள். நீங்கள் இப்போது அழைப்பதில்லை. குழந்தைகளாகிய நீங்கள் இப்போது நாடகத்தின் ஆரம்பம், மத்தி, இறுதியை அறிவீர்கள். அதுவும் வரிசைக்கிரமமானதே ஆகும். இதனை அறிந்தவர்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கிறார்கள். அவர்கள் மற்றவர்களுக்குப் பாதையைக் காட்டுவதில் எப்பொழுதுமே மும்முரமாக இருக்கிறார்கள். தந்தை தொடர்ந்தும் கூறுகிறார்: பெரிய நிலையங்களைத் திறவுங்கள். உங்களிடம் பெரிய படங்கள் இருந்தால் மக்களால் இலகுவாகப் புரிந்து கொள்ள முடியும். வரைபடங்கள் (போஸ்டர்கள்) நிச்சயமாகக் குழந்தைகளுக்குத் தேவைப்படுகின்றன. இதுவும் ஒரு பாடசாலை என்பதை நீங்கள் காட்ட வேண்டும். இங்குள்ள இந்த வரைபடங்கள் அற்புதமானவை. பாடசாலைகளில் உள்ள வரைபடங்களில் அவர்கள் எல்லைக்கு உட்பட்ட விடயங்களையே காட்டுகிறார்கள். இவை எல்லையற்ற விடயங்களாகும். இதுவும் ஒரு பல்கலைக்கழகமே ஆகும். இதில் உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியின் இரகசியங்களைத் தந்தை எங்களுக்கு விளங்கப்படுத்தி எங்களைத் தகுதிவாய்ந்தவர்கள் ஆக்குகிறார். மனிதர்களைத் தேவர்களாக மாற்றும் இறை பல்கலைக்கழகம் இதுவேயாகும். ‘உலக ஆன்மீகப் பல்கலைக்கழகம்’ என்று எழுதப்படுகிறது. இது ஓர் ஆன்மீகப் பல்கலைக்கழகம் ஆகும். ‘விஷ்வ வித்தியாலயம்’ (இறை பல்கலைக்கழகம்) என்று வெறுமனே எழுதுவதன் மூலம் மக்களால் புரிந்துகொள்ள முடியாது. ‘பல்கலைக்கழகம்’ என்ற வார்த்தையை நீங்கள் எழுத வேண்டும். இதைப் போன்ற இறை பல்கலைக்கழகம் வேறு எதுவும் இல்லை. சில அழைப்பிதழ்களில் சில வார்த்தைகள் தவறியிருப்பதை பாபா பார்த்துள்ளார். நிச்சயமாக ‘பிரஜாபிதா’ என்ற வார்த்தையையும் எழுத வேண்டும் என பாபா உங்களுக்குப் பல தடவைகள் கூறியுள்ளார். அவ்வாறிருந்தும் குழந்தைகள் அதனைச் செய்ய மறக்கிறார்கள். இது பெரியதொரு இறை கல்லூரி என்பதை மக்கள் அறியும் வகையில் விடயங்கள் மிகச்சரியாக எழுதப்பட வேண்டும். சேவையில் ஈடுபட்டுள்ள மிக நல்ல சேவாதாரிக் குழந்தைகள் தங்கள் இதயங்களில் குறிப்பிட்ட நிலையங்களுக்குச் சென்று, அவற்றை ஈடேற்றுவதற்கான விருப்பத்தைக் கொண்டுள்ளதால் அந்த நிலையங்கள் பின்தங்கி இருப்பதனால், அவர்கள் அங்கே சென்று அவர்களை விழிப்படையச் செய்ய விரும்புகிறார்கள். ஏனெனில் மாயை எத்தகையவள் எனில் அவள் அவர்களை மீண்டும் மீண்டும் உறங்கச் செய்யக் கூடியவள். தாம் சுயதரிசனச் சக்கரதாரிகள் என்பதையும் அவர்கள் மறந்து விடுகிறார்கள். மாயை அதிகளவு எதிர்ப்பினை உருவாக்குகிறாள். நீங்கள் ஒரு யுத்தகளத்தில் இருக்கிறீர்கள். மாயை உங்களுடைய தலையைத் திருப்பி உங்களைத் தவறானதொரு வழிகாட்டலில் இட்டுச் செல்லாதிருப்பதில் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பலர் மாயையின் புயல்களால் பாதிக்கப்படுகிறார்கள். இளைஞரோ முதியவர்களோ அனைவரும் யுத்தகளத்தில் இருக்கிறார்கள். மாயையின் புயல்களால் பலசாலிகளைத் தடுமாறச் செயய முடியாது. அந்த ஸ்திதியும் வரவுள்ளது. தந்தை விளங்கப்படுத்துகிறார்: காலம் மிகத் தீமையானதாகவும் நிலைமைகள் மிகத் தீமையானவையாகவும் உள்ளன. இராச்சியங்கள் அனைத்தும் அழியப் போகின்றன. அவர்கள் அனைவரையும் சிம்மாசனத்தில் இருந்து கீழிறக்குவார்கள். அதன்பின்னர் உலகம் முழுவதிலும் மக்களாட்சியே நிலவும். நீங்கள் உங்களுடைய புதிய இராச்சியத்தை ஸ்தாபிப்பதால் இங்குள்ள இராச்சியங்களின் சுவடுகள் அனைத்தும் முடிவிற்கு வந்துவிடும். அதன்பின்னர் மக்களாட்சியே தொடரும். மக்களாட்சியின் போதே அவர்களுக்கு இடையே சண்டை சச்சரவுகள் ஏற்படும். உண்மையில் சுய இராச்சியமோ அல்லது இராம இராச்சியமோ கிடையாது. இதனாலேயே உலகம் முழுவதும் சண்டை நடக்கிறது. தற்காலத்தில் எங்கும் பெருமளவில் குழப்பம் நிலவுகிறது. நீங்கள் உங்களுடைய சொந்த இராச்சியத்தை ஸ்தாபிக்கிறீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் அனைவருக்கும் பாதையைக் காட்டுகிறீர்கள். தந்தை கூறுகிறார்: சதா என்னை மட்டும் நினைவு செய்யுங்கள். தந்தையின் நினைவில் நிலைத்திருந்து மற்றவர்களுக்கு ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகும்படி கூறுங்கள். சரீர உணர்வினைத் துறவுங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகியுள்ளீர்கள் என்பதல்ல. இல்லை, நீங்கள் இன்னமும் இவ்வாறு ஆகவேண்டும். நீங்கள் முயற்சி செய்வதுடன் மற்றவர்களையும் அவ்வாறு செய்யத் தூண்டுகிறீர்கள். நீங்கள் நினைவில் நிலைத்திருப்பதற்கு முயற்சி செய்கிறீர்கள், பின்னர் நீங்கள் மறந்து விடுகிறீர்கள். இந்த முயற்சியையே நீங்கள் செய்ய வேண்டும். தந்தையை நினைவு செய்வதே பிரதான விடயமாகும். அவர் குழந்தைகளுக்கு அதிகளவில் விளங்கப்படுத்துகிறார். நீங்கள் மிக நல்ல ஞானத்தைப் பெறுகிறீர்கள். தூய்மையாக இருப்பதே பிரதானமான விடயம். தந்தை உங்களைத் தூய்மை ஆக்குவதற்காக வந்துள்ளார், எனவே நீங்கள் தூய்மையற்றவர்கள் ஆகக்கூடாது. நீங்கள் நினைவினூடாக மட்டுமே சதோபிரதான் ஆகுவீர்கள் என்பதை மறக்காதீர்கள். இதிலேயே மாயை தடைகளை உருவாக்கி உங்களை மறக்கச் செய்கிறாள். இரவுபகலாகத் தந்தையை நினைவுசெய்து சதோபிரதான் ஆகுவதற்கான அக்கறையை நீங்கள் கொண்டிருக்க வேண்டும். இறுதியில், வேறு எவரையுமன்றி ஒரேயொரு தந்தையை மட்டும் நினைவு செய்யும் வகையில் உங்களுடைய நினைவு மிக உறுதியானதாக இருக்க வேண்டும். கண்காட்சிகளிலும் அனைத்திற்கும் முதலில் அந்த ஒரேயொருவரே அதிமேலான கடவுளாகிய அனைவருடைய தந்தையும் என்பதை விளங்கப்படுத்துங்கள். அந்த ஒரேயொருவரே அனைவருக்கும் தந்தையாகவும் தூய்மை ஆக்குபவராகவும் அனைவருக்கும் சற்கதியை அருள்பவராகவும் இருக்கிறார். அவர் மாத்திரமே சுவர்க்கத்தை உருவாக்குபவர். தந்தை சங்கமயுகத்தில் மட்டுமே வருகிறார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்போது அறிவீர்கள். தந்தை மட்டுமே உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கிறார். அந்த ஒரேயொருவரைத் தவிர வேறு எவராலும் தூய்மையாக்குபவராக இருக்க முடியாது. அனைத்திற்கும் முதலில் நீங்கள் தந்தையின் அறிமுகத்தை வழங்க வேண்டும். இப்போது நீங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஒவ்வொரு படத்தையும் விளங்கப்படுத்தினால் எவ்வாறு உங்களால் அத்தகைய பெரியதொரு கூட்டத்திற்கு விளங்கப்படுத்த முடியும்? எவ்வாறாயினும் தந்தையின் படத்தை விளங்கப்படுத்துவதே முதலாவதும் முதன்மையானதுமான விடயமாகும். பலரின் வழிபாடு உள்ளது, இருந்தாலும் ஞானம் ஒரேயொருவருடையது என்பதை நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குப் பல்வேறு வழிமுறைகளைக் காட்டுகிறார். ஒரேயொரு தந்தை மட்டுமே தூய்மையாக்குபவர். அவர் உங்களுக்குப் பாதையையும் காட்டுகிறார். எப்போது கீதை கூறப்பட்டது என்பது எவருக்கும் தெரியாது. துவாபர யுகத்தைச் சங்கம யுகம் என்று அழைக்க முடியாது. தந்தை ஒவ்வொரு யுகத்திலும் வருவதில்லை. மனிதர்கள் முற்றிலும் குழப்பம் அடைந்துள்ளார்கள். நாள் முழுவதும் மற்றவர்களுக்கு எவ்வாறு விளங்கப்படுவது என்று மட்டுமே நீங்கள் சிந்திக்கிறீர்கள். தந்தை உங்களுக்கு வழிகாட்டல்களை வழங்க வேண்டியுள்ளது. உங்களால் முழு முரளியையும் ஒலிப்பதிவு நாடாவில் செவிமடுக்க முடியும். சிலர் தாங்கள் ஒலிப்பதிவு நாடாவில் செவிமடுப்பதாகக் கூறுகிறார்கள், ஆனால் ஏன் தாங்கள் பாபா கூறுவதை நேரடியாகவே செவிமடுக்கக் கூடாது என்று எண்ணுவதனால், அவர்கள் இங்கு நேரடியாக வருவதாகக் கூறுகிறார்கள். குழந்தைகளாகிய நீங்கள் பெருமளவு சேவை செய்து மற்றவர்களுக்குப் பாதையைக் காட்ட வேண்டும். மக்கள் கண்காட்சிகளுக்கு வரும்போது அது மிக நல்லது எனக் கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் வெளியே மாயையின் சூழலிற்குள் சென்றதும் அனைத்தும் பறந்து விடுகின்றன. அவர்கள் இந்த ஞானத்தைக் கடைவதில்லை. அப்போது நீங்கள் அவர்களுடன் தொடர்ந்தும் தொடர்பினை ஏற்படுத்த வேண்டும். அவர்கள் வெளியே செல்லும்போது மாயை அவர்களை இழுத்து விடுகிறாள். அவர்கள் நாளாந்த விடயங்களில் ஈடுபடுகிறார்கள். இதனாலேயே மதுவனம் நினைவு கூரப்படுகிறது. நீங்கள் இப்போது புரிந்துணர்வினைப் பெற்றுள்ளீர்கள். கீதையின் கடவுள் யார் என்பதை உங்களால் எங்கு சென்றும் விளங்கப்படுத்த முடியும். இப்போது அவர்கள் செய்வதைப் போன்று முன்னர் நீங்களும் சென்று தலைவணங்கியது உண்டு. நீங்கள் இப்போது முற்றிலும் மாறிவிட்டீர்கள். நீங்கள் பக்தி செய்வதை நிறுத்தி விட்டீர்கள். நீங்கள் இப்போது மனிதர்களில் இருந்து தேவர்களாக மாறுகிறீர்கள். நீங்கள் உங்களுடைய புத்திகளில் சகல ஞானத்தையும் கொண்டிருக்கிறீர்கள். பிரஜாபிதா பிரம்மா குமார்கள், குமாரிகளைப் பற்றி மற்றவர்கள் என்ன அறிவார்கள்? உண்மையில் அவர்களும் பிரஜாபிதா பிரம்மாகுமார்கள், குமாரிகளே என நீங்கள் விளங்கப்படுத்துகிறீர்கள். இந்த வேளையிலேயே பிரம்மாவினூடாக ஸ்தாபனை இடம்பெறுகிறது. நிச்சயமாகப் பிராமணக் குலமும் இருக்க வேண்டும். பிராமணக் குலம் சங்கம யுகத்திலேயே உள்ளது. ஆரம்ப நாட்களில் பிராமணர்களின் உச்சிக்குடுமி மிகவும் பிரபல்யமாக இருந்தது. அவர்களுடைய உச்சிக்குடுமியை அல்லது சால்வைகளை வைத்தே அவர்கள் இந்துக்கள் என இனங்காணப்பட்டார்கள். இப்போது அந்தச் சின்னங்களும் மறைந்து விட்டன. நீங்கள் பிராமணர்கள் என்பதை இப்போது நீங்கள் அறிவீர்கள். பிராமணர்கள் ஆகிய பின்னர் நீங்கள் தேவர்கள் ஆக முடியும். பிராமணர்களே புதிய உலகை ஸ்தாபித்தவர்கள். யோக சக்தியால் நீங்கள் சதோபிரதான் ஆகுகிறீர்கள். நீங்கள் உங்களையே சோதித்துப் பார்க்க வேண்டும். எந்தவிதமான அசுர குணங்களும் இருக்கக்கூடாது. உவர்நீர் போன்று ஆகாதீர்கள். இது ஒரு யாகம். எங்கு யாகம் நடந்தாலும் அங்கு அனைவரும் பராமரிக்கப்படுகின்றார்கள். யாகங்களைப் பராமரிப்பதற்கு நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் உள்ளார்கள். சிவபாபாவே யாகத்தின் அதிபதி ஆவார். இந்தப் பிரம்மா ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளரே. யாகம் பராமரிக்கப்பட வேண்டும். குழந்தைகளாகிய உங்களுக்கு எது தேவைப்பட்டாலும் நீங்கள் அதனை யக்ஞத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். நீங்கள் மற்றவர்களிடம் இருந்து எதனையாவது ஏற்றுக் கொண்டு அதனை அணிந்தால் தொடர்ந்தும் நீங்கள் அவர்களை நினைவு செய்வீர்கள். உங்களுடைய புத்தியின் இரேகை இதையிட்டு மிகத்தெளிவாக இருக்க வேண்டும். நீங்கள் இப்போது வீடு திரும்ப வேண்டும். மிகச்சிறிதளவு காலமே எஞ்சியுள்ளது. எனவே மிக உறுதியாக நினைவு யாத்திரையில் இருங்கள். இந்த ஒரேயொரு முயற்சியை மாத்திரமே நீங்கள் செய்ய வேண்டும். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. முன்னேறுவதற்கு ஆன்மீகச் சேவையில் ஈடுபடுங்கள். நீங்கள் பெற்றுள்ள ஞான இரத்தினங்கள் அனைத்தையும் கிரகித்து மற்றவர்களும் அதனையே செய்யத் தூண்டுங்கள்.2. உங்களில் ஏதாவது அசுர குணங்கள் இல்லாதிருப்பதைச் சோதியுங்கள். நான் ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளராக வாழ்கிறேனா? நான் எப்போதாவது உப்புநீர் போன்று ஆகுகிறேனா? எனது புத்தியின் ரேகை தெளிவாக உள்ளதா?
ஆசீர்வாதம்:
முயற்சி செய்தல் என்று வரும்போது எந்தவொரு சூட்சுமமான சோம்பேறித் தனத்தையும் துறந்து விடுவதன் மூலம் சகலதுறை வல்லுனராகி, உஷாராகவும் எப்பொழுதும் ஆயத்தமாகவும் இருப்பீர்களாக.முயற்சி செய்வதில் களைப்படைதல் சோம்பேறித்தனத்தின் அடையாளமாகும். சோம்பேறிகள் விரைவில் களைப்படைகிறார்கள். ஆனால் உற்சாகமாக இருப்பவர்கள், களைப்பற்றவர்கள். தமது முயற்சியில் விரக்தி அடைபவர்கள் சோம்பேறித்தனம் அடைந்து, நான் என்ன செய்வது? இவ்வளவுதான் என்னால் செய்ய முடியும்? என்னால் மேலும் எதுவும் செய்ய முடியாது. எனக்கு எந்தத் தைரியமும் இல்லை, நான் முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறேன், நான் அனைத்தையும் செய்கிறேன் என்று நினைக்கிறார்கள். இப்பொழுது இந்த சூட்சும சோம்பேறித்தனத்தின் பெயர் அல்லது சுவடோ இருக்க அனுமதிக்காதீர்கள். இதற்கு நீங்கள் சதா உஷாராகவும் எப்பொழுதும் ஆயத்தமாகவும் சகலகலா வல்லவராகவும் இருக்க வேண்டும்.
சுலோகம்:
இந்த நேரத்தின் முக்கியத்துவத்தை உங்கள் முன்னால் வைத்திருப்பதன் மூலம் சகல பேறுகளையும் உங்கள் கணக்கில் முழுமையாகச் சேமித்துக் கொள்வீர்கள்.அவ்யக்த சமிக்ஞை: இப்பொழுது முழுமையாகவும் கர்மாதீத்தாகவும் ஆகுகின்ற ஆழமான அக்கறையைக் கொண்டிருங்கள்.
சப்தத்திற்கு அப்பால் உங்கள் மேன்மையான ஸ்திதியில் ஸ்திரமாக இருங்கள். உங்கள் ஸ்திதி அனைத்து சாதாரண கவர்ச்சிகளுக்கும் அப்பால் சென்று, சக்திவாய்ந்ததாகவும் அன்பாகவும் பற்றற்றதாகவும் இருக்கும். இந்த மேன்மையான ஸ்திதியில் நீங்கள் ஒரு நிமிடமேனும் நிலைத்திருந்தால் அதன் தாக்கம் நாள் முழுவதும் நீங்கள் செயல்களைச் செய்கின்ற வேளையில், குறிப்பாக நீங்கள் உங்களுக்குள் மௌனசக்தியை அனுபவம் செய்வீர்கள். இந்த ஸ்திதியே தந்தைக்குச் சமமான கர்மாதீத் ஸ்திதி, சம்பூர்ணமான ஸ்திதி எனப்படுகிறது.