27.05.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, மகாகாலனான பாபா, உங்களை மரணத்தை வென்றவர் ஆக்குவதற்காக வந்துள்ளார். “மன்மனாபவ” என்னும் மந்திரத்தின் மூலமே உங்களால் மரணத்தை வெல்ல முடியும்.
கேள்வி:
ஆன்மீகத் தந்தை எந்த விசேடமான கற்பித்தலை ஆன்மீக யாத்திரீகர்களாகிய உங்களுக்குக் கொடுக்கிறார்?பதில்:
ஓ ஆன்மீக யாத்திரீகர்களே! சரீர உணர்வைத் துறந்து, ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுங்கள்! இராவணன் உங்களை அரைக் கல்பத்துக்குச் சரீர உணர்வு உடையவர்கள் ஆக்கினான். ஆகவே, இப்பொழுது ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுங்கள்! வேறு எவருமன்றி, பரமாத்மாவால் மாத்திரமே உங்களுக்கு இந்த ஆன்மீக ஞானத்தைக் கொடுக்க முடியும்.பாடல்:
சிவனுக்கு வந்தனங்கள்.ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் உங்கள் தந்தையின் புகழைக் கேட்டீர்கள். கடவுளே அதிமேன்மையானவர் என்பதும் நினைவு கூரப்படுகிறது. அவரே குழந்தைகள் அனைவரினதும் தந்தை ஆவார். ஏனைய அனைவரும் சகோதரர்கள். ஒரேயொருவரே அனைவரினதும் தந்தை, அவர் சிவபாபா ஆவார். தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்தி உள்ளார்: ஓ குழந்தைகளே, பக்தி மார்க்கத்தில், உங்களுக்கு இரு தந்தையர் உள்ளார்கள்: லௌகீகத் தந்தையும், இவ்வுலகத்துக்கு அப்பாற்பட்டவரும்;. படைப்பவரிடம் இருந்தே ஒரு படைப்பு ஆஸ்தியைப் பெறுகிறது. அது எல்லைக்கு உட்பட்ட ஆஸ்தியும், இந்த ஆஸ்தியோ எல்லையற்றதும் ஆகும். நீங்கள் ஓர் எல்லையற்ற ஆஸ்தியைப் பெறுகின்ற ஒரேயொரு எல்லையற்ற தந்தை மாத்திரமே உள்ளார். அவர் அசரீரியானவர், அவர் பெயர் பரமாத்மாவான பரமதந்தை சிவன். அவர்கள் கூறுகிறார்கள்: பரமாத்மாவாகிய சிவனுக்கு வந்தனங்கள். அவர் அதிமேன்மையானவர். உங்கள் புத்திகள் அசரீரியான தந்தையிடம் செல்கின்றன. ஆத்மாக்களாகிய நீங்கள் எங்கிருந்து வருகின்றீர்களோ, அந்தப் பரந்தாமத்திலேயே அவர் வசிக்கிறார். அங்கு, தந்தையும் உங்களுடன் வசிக்கிறார். அவரே அனைவருக்கும் சற்கதியை அருள்பவர். பாரதமே பரமாத்மாவாகிய பரமதந்தையின் பிறப்பிடம். இங்கு மக்கள் சிவனின் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்கள். அந்த ஆன்மீகத் தந்தையே ஞானக்கடலும், தூய்மையாக்குபவரும், விடுதலையளிப்பவரும், வழிகாட்டியும் என்று அழைக்கப்படுகிறார். அவர் மாத்திரமே துன்பத்தை அகற்றிச் சந்தோஷத்தை அருள்பவர் என்பதைப் பாரத மக்கள் அறிவார்கள். இது துன்ப பூமி, பாரதம் சந்தோஷ பூமியாக இருந்தது. தந்தை இங்கே அமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார்: ஓ பாரத மக்களே, அது உங்கள் ஆதி சனாதன தேவிதேவதா தர்மமாக இருந்த பொழுது, நீங்கள் உலக அதிபதிகளாக இருந்தீர்கள். தேவ தர்மத்துக்கு உரியவர்களாக இருந்தவர்களுக்கு ஒரு மேன்மையான தர்மம் இருந்ததுடன், அவர்கள் மேன்மையான செயல்களையும் புரிந்தார்கள். அவர்கள் இப்பொழுது தங்கள் தர்மத்திலும், தங்கள் செயல்களிலும் சீரழிந்து விட்டார்கள்; அவர்களால் இனிமேலும் தங்களைத் தூய தேவர்கள் என்று அழைக்க முடியாது. பக்தி மார்க்கம் கலியுக இறுதிவரை தொடர்கிறது. அப்பொழுது இந்த ஞானம் எதுவும் கிடையாது. இந்த ஞானத்தின் மூலமே சற்கதி பெறப்படுகிறது. அனைவருக்கும் சற்கதியை அருள்பவராகிய தந்தை வரும்வரையில், எவராலும் சற்கதியைப் பெற முடியாது. தந்தை கூறுகிறார்: நான் சக்கரத்தின் சங்கமயுகத்தில் வருகிறேன். இவ்வேளையில், உலகம் தூய்மையற்றதாக உள்ளது; ஒரு தூய நபரேனும் இல்லை. சந்நியாசிகள் தூய்மை ஆகினாலும், அவர்கள் இன்னமும் இங்கு மறுபிறவி எடுக்க வேண்டியுள்ளது. அவர்கள் நஞ்சின் மூலமே பிறக்க வேண்டும்; அவர்களால் வீடு திரும்ப முடியாது. சக்கரம் முடிவுக்கு வரும்பொழுது, தந்தை வந்து உங்களைத் திரும்பவும் அழைத்துச் செல்கிறார். இது ஆன்மீக ஞானம் என்று அழைக்கப்படுகிறது. பரமாத்மா உங்களுக்கு இந்த ஆன்மீக ஞானத்தைக் கொடுக்கிறார். பரமாத்மா மாத்திரமே ஞானக்கடலும், தூய்மையாக்குபவரும் ஆவார். சமயநூல்களில் உள்ள ஞானம் அனைத்தும் பக்தி மார்க்கத்துக்கு உரியவை. தந்தை கூறுகிறார்: யாகங்களை வளர்ப்பதனாலும், தபஸ்யா செய்வதனாலும், தீர்த்தயாத்திரைகள் போன்றவற்றுக்குச் செல்வதனாலும் நீங்கள் தொடர்ந்தும் கீழிறங்கி வந்தீர்கள். முதலில், நீங்கள் சதோபிரதானாக இருந்தீர்கள். பாரதத்தில் தூய்மை இருந்த பொழுது, அமைதியும், செழிப்பும் இருந்தன. அங்கு ஆரோக்கியம், செல்வம் இரண்டும் இருந்தன. பாரதம் சுவர்க்கமாக இருந்தமை 5000 வருடங்களுக்கு முன்னரான விடயமாகும். அவ்வேளையில், அங்கு வேறு சமயங்கள் இருக்கவில்லை. ஒரேயொரு ஆதிசனாதன தேவிதேவதா தர்மம் மாத்திரமே இருந்தது, அது பரமாத்மாவாகிய பரமதந்தையினால் ஸ்தாபிக்கப்பட்டது. அவர் மாத்திரமே சுவர்க்கத்தை ஸ்தாபிக்கின்றார். மனிதர்களால் இதனைச் செய்ய முடியாது. ஸ்ரீகிருஷ்ணரைப் படைப்பவர் எனக் கூற முடியாது; இல்லை. ஒரேயொரு அசரீரியான சிவன் மாத்திரமே படைப்பவர், ஏனைய அனைவரும் அவருடைய படைப்புக்கள். படைப்பவரிடம் இருந்து மாத்திரமே படைப்பு ஓர் ஆஸ்தியைப் பெறுகிறார். தந்தை விளங்கப்படுத்துகிறார்: நான் உங்களுடைய எல்லையற்ற தந்தை ஆவேன். நான் உங்களுக்கு 21 பிறவிகளுக்கான ஓர் எல்லையற்ற ஆஸ்தியைக் கொடுக்கிறேன். நான் சூரிய, சந்திர வம்சங்கள் எனும் தூய தர்மங்களை ஸ்தாபிக்கிறேன். பிராமண தர்மமே உச்சிக்குடுமி. ஆன்மீகத் தந்தை அனைவரிலும் உயர்வானவர். அவர் ஆத்மாக்கள் அனைவரையும் தனக்குச் சமமானவர்கள் ஆக்குகிறார். தந்தையே ஞானக்கடலும், சந்தோஷக்கடலும் ஆவார், அவர் உங்களையும் அவ்வாறு ஆக்குகிறார். பாரதம் சந்தோஷ பூமியாக இருந்தது, ஆனால் அது இப்பொழுது துன்ப பூமியாக உள்ளது. எவ்வாறு தந்தை வருகிறார் என்பதை எவரும் அறியார். சத்தியயுக ஆரம்பத்தில் இருந்து கலியுக இறுதிவரையான இந்த வரலாறு, புவியியல் அனைத்தும் பாரதத்தைப் பற்றியதே. இலக்ஷ்மியும் நாராயணனும் மிகவும் ஆரோக்கியமாகவும், செல்வந்தர்களாகவும் இருந்தார்கள்; அவர்கள் ஒருபொழுதும் நோய்வாய்ப்பட்டதில்லை. நீங்கள் இப்பொழுது மரணத்தை வெல்வதற்கான கற்பித்தல்களைப் பெறுகிறீர்கள். மரணங்களுக்கு எல்லாம் மரணமாகிய, மகாகாலன் என்று அழைக்கப்படுபவரே, உங்களை மரணத்தை வெல்லச் செய்கிறார். நீங்கள் புகழைக் கேட்டுள்ளீர்கள்: சிவனுக்கு வந்தனங்கள். பரமாத்மா, சர்வவியாபகர் என்றோ அல்லது அவர் பூனைகளிலும் நாய்களிலும் இருக்கிறார் என்றோ நீங்கள் கூற மாட்டீர்கள். அது தர்மத்தை அவதூறு செய்தல் என அழைக்கப்படுகிறது. அவர்கள் தந்தையை அவதூறு செய்கிறார்கள். இப்பொழுது சக்கரத்தின் சங்கமயுகமாகும். தங்கள் புத்தியில் கடவுளுக்கான அன்பில்லாதவர்கள் எனக் கூறப்படுவது, இவ்வேளையையே குறிக்கிறது. விநாசம் முன்னால் உள்ளது. கீதையில் எழுதப்பட்டுள்ளது: யாதவர்களும், கௌரவர்களும், பாண்டவர்களும் என்ன செய்தார்கள்? ஸ்ரீமத் பகவத்கீதையே சமயநூல்கள் அனைத்தினதும் இரத்தினம் ஆகும். இதிலிருந்தே ஏனைய சமயநூல்கள் அனைத்தும் வெளித்தோன்றின. கீதையே தேவ தர்மத்துக்கான சமயநூல் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். தந்தை கூறுகிறார்: நான் வந்து உங்களைச் சூத்திரர்களில் இருந்து பிராமணர்களாக மாற்றி, பின்னர் மீண்டும் ஒருமுறை உங்களைத் தேவர்கள் ஆக்குகிறேன். பின்னர் நீங்கள் சத்திரியர்களாகவும், வைசியர்களாகவும், சூத்திரர்களாகவும் ஆகுகிறீர்கள். எவ்வாறு நீங்கள் 84 பிறவிகளை எடுக்கிறீர்கள் எனத் தந்தை விளங்கப்படுத்துகிறார். சத்தியயுகத்துக்கு முதலில் செல்பவர்களே, நிச்சயமாக அதிகபட்ச எண்ணிக்கையான பிறவிகளை எடுப்பார்கள். பாரத மக்களாகிய நீங்களே அதிகபட்ச 84 பிறவிகளை எடுக்கிறீர்கள். ஒரு பிறவியே மிகக்குறைந்த எண்ணிக்கை ஆகும். தந்தை இங்கே அமர்ந்திருந்து இதையும் விளங்கப்படுத்துகிறார். தந்தையைத் தவிர எவரையும் ஞானக்கடல் என அழைக்க முடியாது. நீங்கள் ஞானக்கடலான, தூய்மையாக்குபவரைப் பற்றிப் பேசும்பொழுது, உங்கள் புத்திகள் மேலே செல்கின்றன. தந்தை அனைவரையும் விடுதலையாக்கித் திரும்பவும் அவர்களை வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். ஒரேயொரு தந்தையே அனைவருக்கும் சற்கதியை அருள்பவர். அச்சா, பின்னர் எவ்வாறு அனைவரும் சீரழிந்தவர்கள் ஆகுகிறார்கள்? யார் உங்களைச் சீரழிந்தவர்கள் ஆக்குகின்றார்? சத்தியயுகம் சற்கதி எனவும், கலியுகம் சீரழிவு எனவும் அழைக்கப்படுகின்றன. தந்தை கூறுகிறார்: நான் ஒவ்வொரு சக்கரத்திலும் வந்து, குழந்தைகளாகிய உங்களுக்குச் சற்கதியை அருள்கிறேன். குழந்தைகளாகிய நீங்கள் முழு உலகினதும் வரலாறையும், புவியியலையும் அறிவீர்கள். அவர்கள் பாடசாலைகளில் கற்பிக்கின்ற வரலாறும், புவியியலும் முழுமை அற்றவை. சத்திய, திரேதா யுகங்களில் யார் ஆட்சி செய்தார்கள் என்பதை எவரும் அறியார். இலக்ஷ்மியும், நாராயணனும் ஆட்சிசெய்தார்கள் என்பதைக் காண்பிக்கின்ற உருவங்கள் உள்ளன. எவ்வளவு காலத்துக்கு அந்த இராச்சியங்கள் தொடர்ந்துள்ளன என்பதை உங்களால் அனைவருக்கும் கூற முடியும். கிறிஸ்தவ வம்சம் 2000 வருடங்களுக்குத் தொடர்ந்துள்ளது, பௌத்த வம்சம் இவ்வளவு கால எல்லைக்குத் தொடர்ந்துள்ளது, இஸ்லாம் இவ்வளவு கால எல்லைக்குத் தொடர்ந்துள்ளது. அவர்களுக்கு முன்னர், 1250 வருடங்களுக்குத் தொடர்ந்தும் சந்திர வம்சம் இருந்தது. சத்திய, திரேதா யுகங்களில் சூரிய, சந்திர வம்சங்கள் மாத்திரமே இருந்தன் அவ்வேளையில் வேறெந்தச் சமயமும் இருக்கவில்லை. நீங்கள் மாத்திரமே சூரிய, சந்திர வம்சத்தினர் ஆகுகிறீர்கள். நீங்கள் இப்பொழுது பிராமண வம்சமாகி விட்டீர்கள். இம் முழு நாடகமும் பாரதத்தை அடிப்படையாகக் கொண்டது. பாரதம் நரகமாகவும், சுவர்க்கமாகவும் ஆகுகிறது. ஏனைய சமயத்தவர்களைப் பற்றி இவ்வாறு கூற முடியாது. அவர்கள் சுவர்க்கத்தில் இருப்பதில்லை. ஒருவர் மரணிக்கும் பொழுது, அவர் சுவர்க்கவாசியாகி விட்டார் என்று மக்கள் கூறுகிறார்கள். ஆனால் ஒரு நரகவாசி நரகத்திலேயே மறுபிறவி எடுக்க வேண்டும் என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. ஒரு சுவர்க்கவாசி சுவர்க்கத்திலேயே மறுபிறவி எடுப்பார். இலக்ஷ்மியும் நாராயணனும் சுவர்க்கவாசிகளாக இருந்தார்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். அவர்கள் எவ்வாறு தங்கள் இராச்சியத்தை அடைந்தார்கள்? நூறாயிரக்கணக்கான வருடங்களுக்குரிய எதையும் ஞாபகத்தில் வைத்திருக்க முடியாது. சத்திய யுகத்தில் அந்தச் சமயநூல்கள் போன்ற எவையும் இருப்பதில்லை. அவை அனைத்தும் பக்தி மார்க்கத்துக்கு உரியவை. நீங்கள் ஏணியில் கீழிறங்க வேண்டும். நீங்கள் சதோபிரதானில் இருந்து சதோ, ரஜோ, தமோ ஸ்திதிகளினூடாகச் செல்லும் பொழுது, ஏணியில் கீழிறங்குவதற்கு உங்களுக்கு 5000 வருடங்கள் எடுக்கின்றன. நீங்கள் சத்தியயுகத்தில் 16 சுவர்க்கக் கலைகள் நிறைந்தவர்களாக இருந்தீர்கள். பின்னர், திரேதா யுகத்தில், இரு கலைகள் குறைவாக இருந்தன் ஆத்மாக்களினுள் வெள்ளிக் கலப்படம் கலக்கப்பட்டது. நீங்கள் துவாபர யுகத்தினுள் வந்தீர்கள். ஆகவே, ஆத்மாவினுள் செப்பின் கலப்படம் கலக்கப்பட்டது. இவ்வேளையில், ஆத்மாக்கள் முழுமையாகத் தமோபிரதானாக உள்ளனர்; ஆத்மாக்களினுள் கலப்படம் கலக்கப்பட்டுள்ளது. நீங்கள் மாத்திரமே முழு 84 பிறவிகளையும் எடுக்கிறீர்கள். ஆன்மீகத் தந்தையாகிய சிவபாபா வந்து, ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். நீங்கள் இப்பொழுது ஆத்ம உணர்வு உடையவர்களாக வேண்டும். இராவணன் வரும்பொழுது, அனைவரும் சரீர உணர்வு உடையவர்கள் ஆகுகிறார்கள். நீங்கள் இப்பொழுது உங்களை ஆத்மாக்களாகக் கருத வேண்டும். நாங்களே 84 பிறவிகளை எடுத்துள்ளவர்களும், தொடர்ந்தும் வேறுபட்ட பாகங்களை நடித்தவர்களும் ஆவோம். 84 பிறவிகளின் சக்கரம் இப்பொழுது முடிவுக்கு வந்துள்ளது. சரீரங்களும் இப்பொழுது முற்றாக உக்கிய நிலையை அடைந்து விட்டன. துவாபர யுகத்தில் இராவண இராச்சியம் ஆரம்பிக்கிறது. சத்திய யுகத்தில் இராம இராச்சியம் இருக்கிறது. நீங்கள் சத்திய யுகத்தில் ஆத்ம உணர்வு உடையவர்களாக இருக்கிறீர்கள். பின்னர் நீங்கள் துவாபர, கலியுகங்களில் சரீர உணர்வு உடையவர்கள் ஆகுகிறீர்கள். உங்களுக்கு ஆத்மாக்களைப் பற்றியும் தெரிந்திருக்கவில்லை, பரமாத்மாவைப் பற்றியும் தெரிந்திருக்கவில்லை. ஒவ்வோர் ஆத்மாவும் ஒரு நட்சத்திரம் எனத் தந்தை விளங்கப்படுத்துகிறார். ஓர் அற்புதமான நட்சத்திரம் நெற்றியின் மத்தியில் பிரகாசிக்கிறது; அதைத் தெய்வீகப் பார்வையினால் அன்றிப் பார்க்க முடியாது; அது முழுமையாகவே சூட்சுமமானது. ஆத்மாவே ஒரு சரீரத்தை விட்டு நீங்கி, இன்னுமொன்றை எடுக்கிறார். ஆத்மாக்களாகிய நாங்கள் 84 பிறவிகளை எடுத்துள்ளோம். பரமாத்மாவாகிய பரமதந்தையும் ஒரு புள்ளியே; அவர் ஞானக்கடலும், தூய்மையாக்குபவரும், ஞானம்-நிறைந்தவரும் என்று அழைக்கப்படுகிறார். பரமாத்மாவாகிய பரமதந்தையிடம் உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானம் உள்ளது. அவர் விதையானவர் என்பதால், அவர் சத்தியமும், உணர்வுள்ளவரும், பேரானந்த சொரூபமும் என்று அழைக்கப்படுகிறார். தந்தை நிச்சயமாகத் தன்னிடமுள்ள ஞானத்தைப் பேச வேண்டும். இது ஆன்மீக ஞானமாகும். ஆத்மாக்கள் அனைவரினதும் தந்தையே வந்து, ஆத்மாக்களாகிய உங்களுக்குக் கற்பிக்கிறார். நீங்கள் ஆத்ம உணர்வு உடையவர்களாக வேண்டும். சிவபாபாவே எங்களுக்குக் கற்பிக்கிறார். அவர் மாத்திரமே ஞானம்-நிறைந்தவர். பாபா மாத்திரமே வந்து, சுவர்க்கமாகிய படைப்பைப் படைக்கிறார். அவர் உங்களைச் சுவர்க்கத்துக்குத் தகுதி வாய்ந்தவர்கள் ஆக்குகிறார். உலகச் சக்கரத்தின் இந்த இரகசியங்களை மனிதர்கள் எவரும் அறிய மாட்டார்கள். தந்தையை அறியாத காரணத்தினால், இதுவே பாரதத்தின் நிலைமையாகி விட்டது. பாரதத்தில் தூய்மை இருந்தபொழுது, அமைதியும், செழிப்பும் இருந்தன. இது இப்பொழுது நரகமாகும். ஆகவே, எவ்வாறு எவராலும் சுவர்க்கத்துக்குச் செல்ல முடியும்? அவர்களின் புத்திகள் முழுமையாகவே கல்லைப் போன்று ஆகிவிட்டன. தந்தை கூறுகிறார்: நான் குழந்தைகளுக்கு ஒரு வெகுமதியைக் கொண்டு வருவேன், இல்லையா? நான் உங்களைச் சுவர்க்க அதிபதிகள் ஆக்குகிறேன். முன்னைய கல்பத்தில் தங்கள் ஆஸ்தியைக் கோரியவர்கள், இப்பொழுதும் அதனைக் கோருவார்கள். அவர்கள் மனிதர்களில் இருந்து தேவர்களாக மாறுவார்கள். உண்மையில், அனைவரும் பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகளே. சிவபாபா இப்பொழுது பிரம்மாவினூடாகப் படைப்பைப் படைக்கிறார். அவர்கள் தொடர்ந்தும் பிரம்மாகுமார், பிரம்மாகுமாரிகள் ஆகுகிறார்கள். நீங்கள் சிவபாபாவிடம் இருந்து உங்கள் ஆஸ்தியைக் கோருவதற்கு முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் தமோபிரதானில் இருந்து சதோபிரதானாக மாற வேண்டும். தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, என்னை நினைவு செய்யுங்கள், உங்கள் பாவங்கள் அனைத்தும் அழிக்கப்படும். தந்தையைத் தவிர எவராலும் உங்களுக்கு இந்த ஆன்மீக ஞானத்தைக் கொடுக்க முடியாது. ஆன்மீகத் தந்தை மாத்திரமே ஆத்மாக்களான உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கிறார். நீங்கள் ஓர் ஆன்மீக யாத்திரை செல்கிறீர்கள். நீங்கள் சரீர உணர்வைத் துறந்து, ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுகிறீர்கள். ஆத்மாக்கள் அழிவற்றவர்கள், ஆத்மாவில் பாகங்கள் பதியப்பட்டுள்ளன. எவ்வாறு ஆத்மாக்களாகிய நீங்கள் உங்கள் 84 பிறவிகளின் பாகங்களை நடிக்கிறீர்கள் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். நாங்கள் சூரிய வம்சத்துக்கு உரியவர்களாக இருந்தோம், நாங்கள் பின்னர் சந்திர வம்சத்துக்கு உரியவர்கள் ஆகினோம், நாங்கள் இப்பொழுது மீண்டும் ஒருமுறை சூரிய வம்சத்தவர்கள் ஆகவேண்டும். தந்தை இப்பொழுது உங்களுக்குச் சதோபிரதான் ஆகுவதற்கான கற்பித்தல்களைக் கொடுக்கிறார்: சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள்! கடவுள் பேசுகிறார்: கீதையின் கடவுள் சிவபாபாவே அன்றி, ஸ்ரீ கிருஷ்ணர் அல்லர்! ஸ்ரீகிருஷ்ணரின் ஆத்மாவும் இப்பொழுது இதைக் கற்கிறார். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. இந்த ஆன்மீக யாத்திரையில் நிலைத்திருந்து ஏனையோரையும் அதைச் செய்யத் தூண்டுங்கள். உங்களைச் சதோபிரதான் ஆக்குவதற்கு, ஒரேயொரு தந்தையை நினைவு செய்யுங்கள். ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுவதற்கு முழு முயற்சி செய்யுங்கள்.2. மரணத்தை வெல்வதற்கு, தந்தையின் கற்பித்தல்களில் கவனம் செலுத்துங்கள். உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, ஆத்மாக்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் அதியுயர்ந்த ஒழுக்கக் கோட்பாடுகளைப் பின்பற்றுவதன் மூலமும் பாப்தாதாவின் பணியை உங்களின் இலட்சியமாகக் கொண்டிருப்பதன் மூலமும் மாஸ்ரர் மரியாதா புருஷோத்தம் (அதியுயர்ந்த ஒழுக்கக் கோட்பாடுகளைப் பின்பற்றுகின்ற மேன்மையானவர்) ஆகுவீர்களாக.கூறப்படுகிறது: உங்களின் சொந்தச் சரக்குகளை அரையுங்கள், உங்களுக்குள் போதை ஏற்படும். ஒருபோதும் உங்களின் பார்வை, வேறு எவரின் வருமானத்தின் மீதும் விழ அனுமதிக்காதீர்கள். யாராவது ஒருவரின் போதையை உங்களின் இலட்சியம் ஆக்குவதற்குப் பதிலாக, பாப்தாதாவின் தெய்வீகக் குணங்களையும் பணியையும் உங்களின் இலட்சியம் ஆக்குங்கள். அதர்மத்தை அழித்து, சத்திய தர்மத்தை ஸ்தாபிப்பதில் பாப்தாதாவின் உதவியாளர் ஆகுங்கள். அதர்மத்தை அழிப்பவர்களால் அதர்மமான எதையும் செய்ய முடியாது. அல்லது தெய்வீக ஒழுங்குமுறைகளை மீற முடியாது. இத்தகைய ஆத்மாக்கள் அதியுயர்ந்த ஒழுங்குமுறைகளைப் பின்பற்றும் மாஸ்ரர் மரியாதா புருஷோத்தம் ஆவார்கள்.
சுலோகம்:
ஞானம் நிறைந்தவராகி, வீணான கேள்விகள் அனைத்தையும் முடியுங்கள். அப்போது உங்களின் நேரம் சேமிக்கப்படும்.அவ்யக்த சமிக்ஞை: சதா ஆட்ட, அசைக்க முடியாத மற்றும் நிலையான ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள்.
உங்களுக்குள் ஏதாவது எண்ணம் இருக்குமாயின், அதை உங்களை விட மூத்தவரிடம் கொடுத்துவிட்டு, எண்ணங்களில் இருந்து விடுபட்டவராகத் தொடர்ந்து முன்னேறுங்கள். உங்களின் கருத்துக்களையும் அபிப்பிராயங்களையும் கொடுப்பது என்பது ஏதாவது குழப்பத்தைக் கொண்டிருப்பதை விட வேறுபட்ட விடயம் ஆகும். ஆகவே, எப்போதும் திருப்தியாக இருங்கள். உங்களின் எண்ணத்தைக் கூறிவிட்டு, எண்ணங்களில் இருந்து விடுபட்டு இருங்கள். உங்களின் பௌதீக அங்கங்களை வென்றவராக இருப்பதில் சதா கவனம் செலுத்துங்கள். உங்களின் பௌதீக அங்கங்களில் ஒன்றிலேனும் கவர்ச்சி இருக்குமாயின், அது உங்களைத் தந்தைக்கு உரியவராக அனுமதிக்காது. நிலையான, ஸ்திரமான ஸ்திதியில் ஸ்திரமாக இருப்பதற்கு உங்களை அது அனுமதிக்காது.
மாதேஷ்வரிஜியின் பெறுமதிமிக்க மேன்மையான வாசகங்கள்.
பாடல்: இடியுடன் கூடிய புயல்களால் கடவுளின் சகபாடிகளை என்ன செய்ய முடியும்?
இடியுடன் கூடிய புயல்களால் கடவுளின் சகபாடிகளை என்ன செய்ய முடியும்? ஆத்மாவும், பரமாத்மாவும் இரு விடயங்கள் என்பதை அந்தப் பாடல் நிரூபிக்கின்றது. கடவுள் சர்வவியாபகர் அல்ல, இல்லாவிட்டால், இந்த உலகில் கடவுளின் சகபாடிகளாக இருப்பவர்களுக்கு, அவர் பிரசன்னமாக இருக்கும்போது ஏன் அதிகளவு துன்பம் ஏற்பட வேண்டும்? மக்கள் ஏன் ஏழைகளாகவும், பிறரில் தங்கியிருப்பவர்களாகவும் உள்ளார்கள்? கடவுள் சந்தோஷமானவர், எனவே கடவுளைச் சர்வவியாபகர் என்று கூறுவது அவரை அவமரியாதை செய்வதாகும். கடவுள் பிரசன்னமாக இருக்கும் பொழுது, உலகம் சந்தோஷம் மிக்கதாக இருக்குமா அல்லது துன்பம் மிக்கதாக இருக்குமா? அப்பொழுது, கடவுளை அழைக்க வேண்டிய தேவை என்ன? இந்நேரத்தில், மாயையே சர்வவியாபியாக உள்ளாள், கடவுள் எங்கும் பிரசன்னமாக இருக்கிறார் என்றில்லை. கடவுள் சங்கமயுகத்தில் ஒருமுறை மாத்திரமே வருகின்றார், அப்பொழுதே அவர் எங்கும் பிரசன்னமாக இருக்கின்றார் என்று கூற முடியும். அவரின் நினைவு, நிச்சயமாக அனைவரது இதயத்திலும் உள்ளது. வெவ்வேறு சம்ஸ்காரங்களுடன் ஒரு சரீரத்தை இயங்கச் செய்கின்ற சக்தியானது, ஒவ்வொரு சரீரத்திலும் உள்ள ஓர் ஆத்மாவே அன்றி, கடவுள் அல்ல. நீங்கள் ஏன் கடவுளின் சகவாசத்தைப் பெற்றுள்ளீர்கள் என்பதைப் பற்றி நீங்கள் இப்பொழுது சிந்திக்க வேண்டும். மாயையின் இடியுடன் கூடிய புயல்களினூடாகச் செல்லும் பொருட்டு, நிச்சயமாக மாயையின் இடியுடன் கூடிய புயல்கள் உள்ளன, அவற்றினூடாகச் செல்வதற்கு, ஆத்மாக்களாகிய நாங்கள் கடவுளின் சகவாசத்தை வேண்டுகின்றோம். அவர் சர்வவியாபியாக இருந்திருந்தால், மாயையின் பிரச்சனைகளும் இருக்க மாட்டாது, நாங்களும் அவருடைய சகவாசத்தைப் பெறுவதற்கு அவரை நினைவுசெய்ய மாட்டோம். எனவே, ஆத்மாக்களாகிய நாங்கள், கடவுள் இருவருக்கும் இந்த நாடகத்தில் பாகங்கள் இருக்கின்றன. கடவுள் வரும்பொழுது, நாங்கள் அவருடைய முழு சகவாசத்தையும் பெற்று, முழுமையாக அவருக்கு உரியவராக வேண்டும். அப்பொழுது மாத்திரமே நாங்கள் மாயையின் இடியுடன் கூடிய புயல்களிலிருந்து விடுபட்டவர்கள் ஆகுவோம். அவர் அனைவருக்கும் சந்தோஷத்தை அருள்பவராக இருந்தாலும், அவருடைய ஆதாரத்தை நடைமுறை ரீதியில் எடுப்பவர்களே, அவருடைய சகவாசத்தைப் பெறுகிறார்கள். ஆகவே, அந்தக் குழந்தைகள் மேலதிகப் பேறுகளைக் கொண்டிருக்கின்றார்கள். அவர் உலகில் பிரசன்னமாகி இருக்கின்றார். ஆனால் உலகினர் அவரை அறியாததால், அவர்களால் அவருடைய சகவாசத்தைப் பெற முடியாமல் இருப்பது மிகவும் வியக்கத்தக்க விடயமாகும். அவர்கள் அவருடைய முழுமையான சகவாசத்தைப் பெறும்போது, தனது உதவியைக் கொடுப்பதில் அவர் மிகவும் பிரபல்யமாக இருக்கிறார். கூறப்பட்டுள்ளது: நீங்கள் ஓர் அடியை முன்னே எடுத்து வைக்கும் பொழுது, அவர் பத்து அடிகள் உங்களிடம் வருவார். எதிலுமே குறைவிலாத, முழு ஆஸ்தியையும் அவர் கொடுக்கின்றார். அச்சா.