27.07.25 Avyakt Bapdada Tamil Lanka Murli 14.03.2006 Om Shanti Madhuban
கடவுளுடன் சந்திப்பதை அனுபவம் செய்வதற்கு, ‘நான்’ என்ற தவறான உணர்வை எரிக்கும் ஹோலியைக் கொண்டாடுங்கள். ஆத்மாக்கள் எல்லோருக்கும் சந்தோஷம், அமைதி, அன்பு, ஆனந்தம் என்ற நிறங்களைத் தெளிப்பதற்கும் உங்களின் திருஷ்டி என்ற தெளிகருவியைப் பயன்படுத்துங்கள்.
இன்று, அதிபுனிதமான தந்தை, தனது புனிதமான குழந்தைகளுடன் சந்திப்பைக் கொண்டாடுகிறார். எங்கும் அமர்ந்திருக்கும் புனித குழந்தைகளான நீங்கள் எல்லோரும் தொலைவில் இருந்தாலும் நெருக்கமாக இருக்கிறீர்கள். இத்தகைய மகத்தான தூய குழந்தைகளின் நெற்றியில் பாப்தாதா பிரகாசிக்கும் பாக்கிய நட்சத்திரத்தைப் பார்க்கிறார். கல்பம் முழுவதிலும் வேறு எவருமே மகத்தான அளவில் தூய்மை ஆகுவதில்லை. இந்தச் சங்கமயுகத்தில், பாக்கியசாலிக் குழந்தைகளான நீங்களே தூய்மைக்கான சத்தியத்தைச் செய்துள்ளீர்கள். எதிர்காலத்தில், நீங்கள் இரட்டைத் தூய்மையானவர்கள் ஆகுவீர்கள். சரீரம் தூய்மையாக இருக்கும். அத்துடன் ஆத்மாவும் தூய்மையாக இருப்பார். கல்பம் முழுவதும் சுற்றி வாருங்கள். எத்தனை மகாத்மாக்கள் வந்திருந்தாலும், வெகு சிலரே தூய்மையாக - ஆத்மாவும் சரீரமும் தூய்மையாக இருத்தல் - இருந்திருப்பார்கள். மதரீதியான ஆத்மாக்களோ அல்லது தர்மாத்மாக்களோ எவரும் இத்தனை தூய்மை ஆகுவதில்லை. மகாத்மாக்களும் இத்தனை தூய்மை ஆகுவதில்லை. பாப்தாதா குழந்தைகளான உங்களை இட்டுப் பெருமைப்படுகிறார்: ஆஹா எனது மகா தூய்மையான குழந்தைகளே! ஆஹா! வேறு எவரும் இரட்டைத் தூய்மையாகவும் இரட்டைக் கிரீடாதாரியாகவும் ஆகுவதில்லை. மேன்மையான ஆத்மாக்களான நீங்களே, இரட்டைக் கிரீடாதாரிகள் ஆகுகிறீர்கள். உங்களின் ரூபங்கள், அதாவது, உங்களின் இரட்டைத் தூய்மையான மற்றும் இரட்டைக் கிரீடாதாரியான ரூபங்கள் உங்களின் முன்னால் தோன்றுகின்றன, அல்லவா? இதனாலேயே, இந்தச் சங்கமயுகத்தில் உங்களின் வாழ்க்கைகளில் நீங்கள் நடைமுறையில் உருவாக்கிய ஒவ்வொரு சிறப்பியல்பின் ஞாபகார்த்தத்தையும் உலகிலுள்ள மக்கள் ஒரு பண்டிகையாகக் கொண்டாடுகிறார்கள்.
இன்றும், நீங்கள் எல்லோரும் ஹோலியைக் கொண்டாடுவதற்காக இங்கே அன்பெனும் விமானத்தில் ஏறி வந்துள்ளீர்கள். நீங்கள் இங்கே ஹோலியைக் கொண்டாடவே வந்துள்ளீர்கள், அப்படித்தானே? நீங்கள் எல்லோரும் உங்களின் வாழ்க்கைகளின் தூய்மை எனும் ஹோலியைக் கொண்டாட வந்துள்ளீர்கள். உலகிலுள்ள மக்கள் ஆன்மீக அர்த்தம் ஒவ்வொன்றிற்கும் ஒரு பௌதீக வடிவத்தைக் கொடுத்திருக்கிறார்கள். ஏனென்றால், அவர்கள் சரீர உணர்வில் இருக்கிறார்கள். நீங்கள் ஆத்ம உணர்வு உடையவர்கள், ஆன்மீக வாழ்க்கை வாழ்பவர்கள். ஆனால் அவர்களோ சரீர உணர்வுடன் இருக்கிறார்கள். அதனால் அவர்கள் எல்லாவற்றையும் பௌதீகமாகச் செய்கிறார்கள். நீங்கள் உங்களின் பழைய சம்ஸ்காரங்களை யோக அக்கினியில் எரித்துள்ளீர்கள். ஆனால் உலக மக்களோ எதையாவது பௌதீகமான நெருப்பில் எரிக்கிறார்கள். ஏன்? உங்களின் பழைய சம்ஸ்காரங்களை எரிக்காமல் உங்களால் இறை சகவாசத்தால் நிறமூட்டப்படவும் முடியாது. உங்களால் இறைவனைச் சந்திக்கும் அனுபவத்தைப் பெறவும் முடியாது. உங்களின் வாழ்க்கைகள் மிகவும் பெறுமதி வாய்ந்தவை. அதனால் உங்களின் ஒவ்வோர் அடியும் ஒரு பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. ஏன்? சங்கமயுகம் முழுவதிலும் நீங்கள் ஒவ்வொருவரும் ஊக்கமும் உற்சாகமும் உள்ள வாழ்க்கையை உருவாக்கி உள்ளீர்கள். மக்கள் உங்களின் வாழ்க்கையின் ஞாபகார்த்தத்தை ஒரு நாள் பண்டிகையாகக் கொண்டாடுகிறார்கள். உங்கள் எல்லோருடைய வாழ்க்கையும் ஊக்கமும் உற்சாகமும் சந்தோஷமும் நிறைந்துள்ளன, அல்லவா? அல்லது, இது சிலவேளைகளில் மட்டும்தானா? நீங்கள் சதா உற்சாகத்துடன் இருக்கிறீர்களா? அல்லது, சிலவேளைகளில் மட்டுமா? உங்களிடம் உற்சாகமும் சந்தோஷமும் உள்ளன, உங்களின் வாழ்க்கையில் உள்ள சந்தோஷம் இறைவனின் விசேடமான பரிசு, என்னதான் நடந்தாலும் உங்களின் பிராமண வாழ்க்கையின் ஊக்கம், உற்சாகம், சந்தோஷம் என்பவை ஒருபோதும் மறைய முடியாது என நினைப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! நீங்கள் இதை அனுபவம் செய்கிறீர்களா? பாப்தாதா ஒவ்வொரு குழந்தையின் முகமும் சதா சந்தோஷமாக இருப்பதைக் காண விரும்புகிறார். ஏனென்றால், உங்களிடம் உள்ள சந்தோஷ பாக்கியம் (குஷ்நசீப்) வேறு எவரிடமும் இல்லை, வேறு எவரிடமும் இந்தப் பாக்கியம் இருக்கவும் முடியாது. வெவ்வேறு பிரிவுகளைச் (தொழில் துறைகள்) சேர்ந்தவர்கள் இங்கே அமர்ந்திருக்கிறார்கள். எனவே, நீங்கள் ஓர் அனுபவ சொரூபம் ஆகுவதற்காகத் திட்டத்தைச் செய்தீர்களா?
பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். இன்று, இன்ன பிரிவினர் வந்துள்ளனர், இன்ன பிரிவினர் வந்துள்ளனர். வரவேற்புகள். வந்ததற்குப் பாராட்டுக்கள். சேவை செய்வதற்கான நல்ல ஊக்கமும் உற்சாகமும் உங்களுக்கு உள்ளது. எவ்வாறாயினும், அனைத்திற்கும் முதலில், உங்களுக்காக ஒரு திட்டத்தைச் செய்யுங்கள். தொழில் துறைகள் ஒவ்வொன்றினதும் திட்டங்கள் அடுத்ததை விடச் சிறப்பாக இருப்பதை பாப்தாதா பார்த்தார். அவர்கள் மிக நல்ல திட்டங்களைச் செய்கிறார். அத்துடன்கூடவே, சுய முன்னேற்றத்திற்கான திட்டத்தைச் செய்வதும் மிகவும் அவசியமானது. இதையே பாப்தாதா விரும்புகிறார். ஒவ்வொரு தொழில்துறையும் சுய முன்னேற்றத்திற்காகவும் ஓர் இலக்கத்தைப் பெறுவதற்கும் ஒரு நடைமுறைத் திட்டத்தைச் செய்ய வேண்டும். நீங்கள் இந்தத் தேசத்திலோ அல்லது வெளிநாடுகளிலோ குழுக்களில் ஒன்றுகூடுகிறீர்கள். நீங்கள் மீட்டிங்குகளை வைத்துத் திட்டங்களைச் செய்கிறீர்கள். பாப்தாதா அதையிட்டு மகிழ்ச்சி அடைகிறார். ஆனால், ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் நீங்கள் ஒரு குழுவாகச் சேவை செய்வதற்கான திட்டங்களைச் செய்வதைப் போல், அதே ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் அத்துடன் ஓர் இலக்கத்தைக் கோருவதற்கான அதேயளவு கவனத்தைச் செலுத்துவதன் மூலமும் சுய முன்னேற்றத்திற்கான திட்டங்களையும் செய்யுங்கள். இந்த மாதத்தில், ஒவ்வொரு தொழிலும் தமது சுய முன்னேற்றத்திற்கான திட்டத்தை நடைமுறை வடிவத்தில் போட்டுள்ளார்கள் என்பதை பாப்தாதா கேட்க விரும்புகிறார். வந்துள்ள வெவ்வேறு தொழில் துறைகளைச் சேர்ந்தவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! சகல தொழில் துறைகளைச் சேர்ந்தவர்களும். அச்சா, பலர் வந்துள்ளனர். பல பிரிவுகள் வந்துள்ளனர். ஐந்தோ அல்லது ஆறு தொழில் துறைகளைச் சேர்ந்த குழுவினர் வந்துள்ளார் என்பதை பாப்தாதா கேட்டார். மிகவும் நல்லது. வரவேற்புகள். இப்போது, மேலும் ஒரு கடைசிச் சந்திப்பு எஞ்சியுள்ளது. பாப்தாதா ஏற்கனவே வீட்டுவேலை கொடுத்துள்ளார். பாப்தாதா ஒவ்வொரு நாளும் பெறுபேறுகளைப் பார்க்கிறார். பாப்தாதா கடைசிச் சந்திப்பில் உங்களின் கணக்குவழக்குகளை எடுப்பார் என நீங்கள் நினைக்கலாம். ஆனால், பாப்தாதா ஒவ்வொரு நாளும் அவற்றைச் சோதிக்கிறார். உங்களுக்கு இன்னமும் 15 நாட்கள் உள்ளன. எஞ்சியுள்ள 15 நாட்களில், வந்துள்ள வெவ்வேறு தொழில் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் அத்துடன் இங்கே வராத தொழில்களுக்குக் கருவிகளாக இருக்கும் குழந்தைகளுக்கும் பாப்தாதா ஒரு சமிக்கை கொடுக்கிறார்: ஒவ்வொரு தொழிலைச் சேர்ந்தவர்களும் குறிப்பிட்ட சக்தியின் சொரூபம் ஆகுவதற்கு, ஒரு விசேட நற்குணத்தின் சொரூபம் ஆகுவதற்கு, உலக நன்மைக்காக ஏதாவதொரு ஒளி மற்றும் சக்தி ரூபத்தைக் கொடுப்பதற்கும் தமது சுய முன்னேற்றத்திற்காக ஒரு திட்டத்தைச் செய்யுங்கள். ஒவ்வொரு தொழில் துறைகளைச் சேர்ந்தவர்களும் இதைத் தங்களுக்கு இடையே தீர்மானித்து, அதன்பின்னர் சோதியுங்கள்: ஒவ்வொரு தொழில் பிரிவைச் சேர்ந்த உறுப்பினர்கள் எல்லோருக்கும், நீங்கள் ஓர் உறுப்பினர் ஆகியிருப்பது நல்லதே. ஆனால், ஒவ்வோர் உறுப்பினரும் முதலாம் இலக்கம் ஆகவேண்டும். உங்களின் பெயர், குறிப்பிட்டதொரு தொழில் பிரிவின் உறுப்பினர் எனக் குறிப்பிடப்பட்டு மட்டும் இருக்கக்கூடாது. நீங்கள் குறிப்பிட்ட தொழில் பிரிவின் சுய முன்னேற்றத்திற்கான ஓர் உறுப்பினர். இது சாத்தியமா? வெவ்வேறு பிரிவுகளுக்குக் கருவிகளாக இருப்பவர்கள், எழுந்து நில்லுங்கள்! வெளிநாடுகளில் உள்ள கருவிகள், எழுந்து நில்லுங்கள்! வெளிநாடுகளில் நான்கு அல்லது ஐந்து கருவிகளாக இருப்பவர்கள், எழுந்து நில்லுங்கள்! (வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள மூத்த சகோதரிகளுடன் பேசுகிறார்). உங்கள் எல்லோரையும் பாப்தாதா மிகவும் சக்திவாய்ந்த ரூபங்களாகக் காண்கிறார். நீங்கள் எல்லோரும் மிக நல்ல ரூபங்கள் ஆவீர்கள். உங்களால் நிச்சயமாக எதையாவது செய்து பாப்தாதாவிடம் 15 நாட்களுக்குள் காட்ட முடியும் என நீங்கள் எல்லோரும் உணர்கிறீர்களா? இது சாத்தியமா? பேசுங்கள். இது சாத்தியமா? (நாங்கள் முழுமையான முயற்சிகள் செய்வோம்) மேலும் கூறுங்கள். எது சாத்தியம்? (எவரும் கோபம் கொள்ள மாட்டார்கள் என்ற திட்டத்தை நிர்வாகப் பிரிவினர் செய்துள்ளார்கள்). நீங்களும் அதைப் பற்றி விசாரணை செய்கிறீர்களா? ஆசிரியர்களான சகோதரிகள் தைரியத்தைப் பேணுகிறீர்கள். விசாரணை செய்த பின்னர், உங்களால் 15 நாட்களில் பெறுபேற்றைக் கொடுக்க முடியுமா? வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள், ஆம் எனச் சொல்கிறார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இது சாத்தியமா? பாரதத்தைச் சேர்ந்தவர்களே, பேசுங்கள்! இது சாத்தியமா? உங்கள் எல்லோருடைய ரூபங்களையும் பார்க்கும்போது, பெறுபேறு நன்றாக இருக்கும் என பாப்தாதா உணர்கிறார். எவ்வாறாயினும், எஞ்சிய 15 நாட்களுக்குக் கவனம் செலுத்துகின்ற முயற்சியை நீங்கள் செய்தால், இந்தப் பயிற்சி எதிர்காலத்திலும் பயனுள்ளதாக இருக்கும். இப்போது, எந்தவொரு நற்குணத்தையோ அல்லது எந்தவொரு சக்தியையோ கொண்டிருக்கும் இலட்சியத்தை வைத்திருக்க விரும்புபவர்களுக்கு பாப்தாதா ஓர் இலக்கத்தைக் கொடுக்கும் வகையில் மீட்டிங் வையுங்கள். சுய சேவையில் யார் முதலாம் இலக்கப் பிரிவினர் என்பதை பாப்தாதா தொடர்ந்து பார்ப்பார். மிக நல்ல திட்டங்கள் செய்திருப்பதை பாப்தாதா பார்த்துள்ளார். ஆனால், சேவையும் சுய முன்னேற்றமும் ஒன்றாக நடக்கா விட்டால், சேவைத் திட்டங்களிலும் இருக்க வேண்டிய அளவு வெற்றி ஏற்படாது. ஆகவே, காலத்தின் நெருக்கம் முன்னால் இருப்பதைப் பார்க்கும்போது, சேவையையும் சுய முன்னேற்றத்தையும் ஒன்றிணைத்து வைத்திருங்கள். சுய முன்னேற்றம் மட்டும் இருக்கக்கூடாது. சேவையும் இருக்க வேண்டும். உங்களின் சுய முன்னேற்றத்தின் ஸ்திதியினூடாக நீங்கள் செய்யும் சேவையில் மகத்தான வெற்றி ஏற்படும். சேவையிலும் சுய முன்னேற்றத்திலும் வெற்றி பெறுவதன் அடையாளம், இவை இரண்டிலும் நீங்கள் உங்களுடன் திருப்தியாக இருப்பீர்கள். அந்தச் சேவையினூடாக நீங்கள் யாருக்குச் சேவை செய்கிறீர்களோ, அவர்கள் திருப்தியை அனுபவம் செய்வார்கள். நீங்களும் நீங்கள் யாருக்குச் சேவை செய்வதற்குக் கருவிகள் ஆகினீர்களோ அவர்கள் திருப்தி அடையா விட்டால், குறைவான வெற்றியே ஏற்படும். நீங்கள் அதிகளவு முயற்சியும் செய்ய வேண்டியிருக்கும்.
சேவையிலும் சுய முன்னேற்றத்திலும் இலகுவாக வெற்றி அடைவதற்கான தங்கச் சாவி என்னவென்று உங்கள் எல்லோருக்கும் தெரியுமா? நீங்கள் எல்லோரும் அதை அனுபவம் செய்துள்ளீர்கள். தங்கச் சாவி என்னவென்றால், தந்தை பிரம்மா மற்றும் ஜெகதாம்பா செய்ததை நீங்கள் பார்த்தீர்களே அதைப் போல், உங்களின் நடத்தை, முகம், உறவுமுறைகள் மற்றும் தொடர்புகளில் கருவியாக இருக்கும் உணர்வைக் கொண்டிருத்தல், பணிவாக இருந்து தூய வார்த்தைகளைப் பேசுதல் என்பதேயாகும். எவ்வாறாயினும், இப்போது சிலவற்றில், சேவையின் வெற்றியில் சதவீதம் காணப்படுகிறது. அதற்கான காரணம் என்ன? உங்களுக்கு என்ன வேண்டும், எவ்வளவு வேண்டும் என்பதற்கும் அதற்காக நீங்கள் செய்யும் திட்டங்களுக்கும் இடையில் ஏன் ஒரு சதவீதம் காணப்படுகிறது? பெரும்பாலானோரில் வெற்றி குறைவதற்கான காரணம் ஒரு வார்த்தையே என்பதை பாப்தாதா பார்த்திருக்கிறார். அந்த வார்த்தை என்ன? நான். ‘நான்’ என்ற வார்த்தை மூன்று வழிமுறைகளில் பயன்படுத்தப்படுகிறது. ஆத்ம உணர்வு ஆகுவதில், நான் ஓர் ஆத்மா என்பதில் நீங்கள் ‘நான்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறீர்கள். சரீர உணர்விலும், ‘நான் என்ன சொன்னாலும் நான் எதைச் செய்தாலும் அது சரியே, நான் விவேகி’ என நீங்கள் சொல்கிறீர்கள். அது எல்லைக்கு உட்பட்ட ‘நான்’ என்பதாகும். சரீர உணர்விலும் ‘நான்’ என்பது உள்ளது. ஒருவர் மனவிரக்தி அடையும்போது ‘நான்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதே மூன்றாவது ‘நான்’ என்பதாகும். ‘என்னால் இதைச் செய்ய முடியாது, எனக்குத் தைரியம் கிடையாது. என்னால் இதைக் கேட்க சகிக்க முடியவில்லை, என்னால் இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை’. எனவே, பாப்தாதா தொடர்ந்தும் மூன்று வகையான ‘நான்’ என்பதன் பல பாடல்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். தந்தை பிரம்மாவும் ஜெகதாம்பாவும் தமது இலக்கத்தைக் கோருவதில் அவர்களிடம் இருந்த சிறப்பியல்பானது, அவர்கள் முற்றிலும் ‘நான்’ என்ற தவறான உணர்வு அற்று இருந்ததே ஆகும். அவர்கள் முற்றிலும் அதை அறியாதவர்களாக இருந்தார்கள். தந்தை பிரம்மா ஒருபோதும், ‘நான் இந்த அறிவுரை சொல்கிறேன், நானே சரி’ எனக் கூறியதில்லை. அது எப்போதும், பாபா, பாபா. ‘பாபா என்னைச் செய்ய வைக்கிறார். நான் அதைச் செய்யவில்லை, நான் புத்திசாலி கிடையாது, குழந்தைகளே புத்திசாலிகள்’ என்பதாகவே இருந்தது. ஜெகதாம்பாவின் சுலோகம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? பழையவர்களுக்கு நினைவிருக்கும். ‘வழிகாட்டல்களைக் கொடுக்கும் ஒரேயொருவர் என்னை அசைய வைக்கிறார். நான் அசையவில்லை, ஆனால் கரன்கரவன்ஹாரான தந்தை என்னை அதைச் செய்ய வைக்கிறார்’. அதனால், எல்லாவற்றுக்கும் முதலில், நீங்கள் எல்லோரும் ‘நான்’ என்ற அகங்காரத்தையும் அவமதிக்கப்பட்ட உணர்வையும் முடித்து, முன்னேற வேண்டும். ஒவ்வொரு விடயத்திலும் இயல்பாகவே ‘பாபா, பாபா’ என்பது வெளிப்பட வேண்டும். அது இயல்பாகவே வெளிப்பட வேண்டும். ஏனென்றால், உங்கள் எல்லோருக்கும் தந்தைக்குச் சமமானவர் ஆகுகின்ற எண்ணம் உள்ளது. சமமானவர் ஆகுவதற்கு, இந்த இராஜரீகமான ‘நான்’ என்பதை எரியுங்கள். ஓகே, உங்களுக்குக் கோபம் வரமாட்டாது. ஏன் கோபம் ஏற்பட வேண்டும்? ஏனென்றால், ‘நான்’ என்ற உணர்வு உங்களிடம் உள்ளது.
நீங்கள் இங்கே ஹோலியைக் கொண்டாட வந்துள்ளீர்கள். எனவே, கொண்டாடப்பட்ட முதல் ஹோலி என்ன? எரிப்பதற்கானது. நீங்கள் மிகவும் நல்லவர்கள், மிகவும் தகுதியானவர்கள். நீங்கள் தந்தையின் நம்பிக்கைத் தீபங்கள். இந்தச் சிறிய ‘நான்’ என்பதை வெட்டி விடுங்கள். இரண்டு ‘நான்’ என்பவற்றை வெட்டி, ஒரு ‘நான்’ என்பதை வைத்திருங்கள். ஏன்? உங்களின் சகோதர சகோதரிகள் பலர் - பிராமணர்கள் அல்ல, ஆனால் ஞானம் அற்ற ஆத்மாக்கள் - தமது வாழ்க்கையில் மனவிரக்தியுடன் இருப்பதை பாப்தாதா பார்க்கிறார். நீங்கள் இப்போது அவர்களில் தைரியத்தின் இறக்கைகளை உருவாக்க வேண்டும். அவர்கள் முற்றிலும் ஆதாரம் இல்லாதவர்களாகவும் நம்பிக்கை எல்லாவற்றையும் இழந்தவர்களாகவும் இருக்கிறார்கள். எனவே, ஓ கருணை நிறைந்தவர்களே, கனிவானவர்களே, இரக்கம் மிக்கவர்களே, உலகின் விசேடமான இஷ்ட தெய்வ ஆத்மாக்களே, உங்களின் தூய ஆசிகள், கருணை உணர்வுகள் மற்றும் ஆத்ம உணர்வினால் அவர்களின் ஆசைகளைப் பூர்த்தி செய்யுங்கள்! நீங்கள் துன்பத்தினதும் அமைதி இன்மையினதும் அதிர்வலைகளைப் பெறவில்லையா? நீங்கள் கருவி ஆத்மாக்கள், மூதாதையர்கள், பூஜிக்கத்தகுதி வாய்ந்த ஆத்மாக்கள், விருட்சத்தின் அடிமரம் மற்றும் அத்திவாரம் ஆவீர்கள். எல்லோரும் உங்களைத் தேடுகிறார்கள்: எமது பாதுகாவலர்கள் எங்கே சென்றார்கள்? எமது விசேடமான இஷ்ட தெய்வங்கள் எங்கே போனார்கள்? தந்தையால் அதிகளவில் அழைப்பதைக் கேட்க முடிகிறது. இப்போது, சுய முன்னேற்றத்துடன் கூடவே, வெவ்வேறு சக்திகளின் சகாஷை (சக்தியின் மின்னோட்டம்) வழங்குங்கள். அவர்களுக்கு தைரியத்தின் இறக்கைகளை வழங்குங்கள். உங்களின் திருஷ்டியே ஒரு தெளிகருவி ஆகும். உங்களின் திருஷ்டியின் தெளிகருவியை, அவர்களுக்கு சந்தோஷம், அமைதி, அன்பு, ஆனந்தத்தின் நிறங்களை அவர்களுக்கு நிறமூட்டுவதற்குப் பயன்படுத்துங்கள். நீங்கள் இறை சகவாசத்தின் நிறத்தால் நிறமூட்டப்பட்டுள்ளீர்கள். ஏனைய ஆத்மாக்கள் எல்லோருக்கும் ஆன்மீக நிறத்தின் அனுபவம் சிறிதளவை வழங்குங்கள். இறைவனுடன் சந்திக்கும் புண்ணிய மேளாவின் அனுபவத்தை அவர்களுக்கு வழங்குங்கள். இத்தகைய அலைபாயும் ஆத்மாக்களுக்கு அவர்களின் இலக்கிற்கான வழியைக் காட்டுங்கள்.
சுய முன்னேற்றத்திற்கான திட்டங்களைச் செய்யுங்கள். அதில் நீங்கள் உங்களின் சொந்தச் சோதனையாளராகி, எந்தவொரு இராஜரீகமான ‘நான்’ என்பதும் வெளிப்படவில்லையே என்பதைச் சோதியுங்கள். இன்று, நீங்கள் ஹோலியைக் கொண்டாட வந்துள்ளீர்கள். அதனால் பாப்தாதா உங்களுக்கு இந்த எண்ணத்தை வழங்குகிறார்: இன்று, நீங்கள் செல்வதற்கு முன்னர், அகங்காரத்தினதும் அவமதிக்கப்பட்ட உணர்வினதும் மனச் சோர்வினதும் ‘நான்’ என்பதை எரித்து விடுவீர்கள். அதை நீங்கள் உங்களுடன் திரும்பவும் எடுத்துக் கொண்டு செல்ல மாட்டீர்கள். நீங்கள் எதையாவது எரிப்பீர்கள்தானே? நீங்கள் நெருப்பை எரிப்பீர்களா? யோக அக்கினியானது, எரிமலை போன்று தீவிரமாக இருக்க வேண்டும். அதில் அதை எரியுங்கள். அதை எப்படி எரிப்பது என உங்களுக்குத் தெரியுமா? இத்தகைய தீவிர, எரிமலை யோகத்தை எப்படிச் செய்வது என உங்களுக்குத் தெரியுமா? அல்லது, உங்களுக்கு சாதாரணமான யோகம் செய்வது எப்படி என்று மட்டும்தான் தெரியுமா? எரிமலை யோகம் செய்பவர்கள், ஒளி மற்றும் சக்தி வீடுகள் ஆகுங்கள். அது உங்களுக்கு விருப்பமா? தயவுசெய்து கவனம் செலுத்துங்கள்! நான் என்பதை எரியுங்கள்!
பாப்தாதா ‘நான், நான்’ என்ற பாடலைக் கேட்கும்போது, அதை நிற்பாட்டி விடுகிறார். ஆஹா! ஆஹா! என்ற பாடல்களைக் கேட்கும்போது, அவர் சத்தத்தைக் கூட்டி வைக்கிறார். ‘நான், நான்’ என்ற உணர்வில் அதிகளவு இழுவை (சிரமம்) காணப்படும். ‘இது இல்லை, அது இல்லை, இப்படி இல்லை, அப்படி இல்லை’ என எல்லாவற்றிலும் இழுவை காணப்படும். ஆகவே, இந்த இழுவையின் காரணத்தால், பதட்டம் உருவாக்கப்படுகிறது. பாப்தாதா பற்று, பதட்டம், சுபாவம் (தவறான சுபாவம்) போன்றவற்றை விரும்புவதில்லை. உண்மையில், சுவபாவ் (சுபாவம்) என்ற வார்த்தையின் அர்த்தம், ஒருவரின் உணர்வுகள் மிகவும் நல்லது. ஆனால் அது தவறாகக் கருதப்படுகிறது. நீங்கள் ஒரு சூழ்நிலையால் கவரப்படக்கூடாது. வேறு எவரையும் உங்களை நோக்கிக் கவராதீர்கள். அதுவும் அதிகளவு துயரத்தை ஏற்படுத்தும். ஒருவர் எவ்வளவுதான் உங்களுக்குச் சொன்னாலும், அவர்களை உங்களை நோக்கி இழுக்காதீர்கள். நீங்களும் ஒரு சூழ்நிலைக்குள் கவரப்படக்கூடாது. நீங்கள் எதையும் உங்களை நோக்கிக் கவரக்கூடாது. சகலவிதமான ஈர்ப்புக்களையும் முடித்துவிடுங்கள். ‘பாபா, பாபா, பாபா’ என்பது மட்டுமே இருக்க வேண்டும். உங்களுக்கு இது பிடித்திருக்கிறதா? எனவே, தவறான ‘நான்’ என்பதைக் கைவிடுங்கள். அவற்றை உங்களுடன் எடுத்துச் செல்லாதீர்கள். அவை புகைவண்டியில் ஒரு சுமையை உருவாக்கும். உங்களிடம் ஒரு பாடல் உள்ளது: நான் பாபாவிற்குச் சொந்தமானவன், பாபா எனக்குச் சொந்தமானவர். எனவே, ஒரேயொரு ‘நான்’ என்பதை மட்டும் வைத்திருங்கள். இரண்டு ‘நான்’ என்பவற்றை முடித்துவிடுங்கள். நீங்கள் ஹோலியைக் கொண்டாடினீர்கள். எண்ணங்களிலும் நீங்கள் எல்லாவற்றையும் எரித்துள்ளீர்கள். இப்போது, நீங்கள் எண்ணத்தை உருவாக்குவீர்கள். உங்களுக்கு எண்ணம் ஏற்பட்டதா? உங்களின் கைகளை உயர்த்துங்கள். நீங்கள் அதை எரித்தீர்களா? அல்லது, இன்னமும் சிறிதளவு கறை எஞ்சியுள்ளதா? சிறிதளவு எஞ்சியிருப்பதற்கு உங்களுக்கு அனுமதி கொடுக்க வேண்டுமா? சுதந்திரமாக இருப்பதற்கு உங்களுக்குச் சிறிதளவு இடம் கொடுக்க வேண்டுமா? சிறிதளவு இருப்பதற்கு உங்களுக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டுமா? சிறிதளவைக் கொண்டிருப்பதற்கு உங்களுக்கு சுதந்திரம் வேண்டும் என நினைப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! சிறிதளவு எஞ்சி இருக்கும், அப்படித்தானே? நீங்கள் மிகவும் தைரியசாலிகள். பாராட்டுக்கள்! பதட்டத்துடன் அன்றி, சந்தோஷமாக ஆடிப் பாடுங்கள். அச்சா.
இப்போது, ஒரு விநாடியில், உங்களின் மனங்களில் உள்ள சகல எண்ணங்களையும் முடித்துவிடுங்கள். ஒரு விநாடியில், அதிமேலான தந்தையுடன் பரந்தாமத்தில், அதிமேலான இடத்தில், அதிமேலான ஸ்திதியில் அமர்ந்திருங்கள். தந்தையைப் போல் மாஸ்ரர் சர்வசக்திவான் ஆகி, உலகிலுள்ள ஆத்மாக்களுக்கு சக்திகளின் கதிர்களை வழங்குங்கள். அச்சா.
விசேடமான உலக உபகாரி ஆத்மாக்களான, எங்கும் உள்ள அதிபுனிதமான, அதியுயர்ந்த குழந்தைகள் எல்லோருக்கும் மூதாதை மற்றும் பூஜிக்கத்தகுதி வாய்ந்த ஆத்மாக்களாக இருக்கும் எல்லோருக்கும் தந்தையின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் குழந்தைகள் எல்லோருக்கும் பாப்தாதாவின் இதயபூர்வமான ஆசீர்வாதங்களுடனும் அன்புடனும் கூடவே அன்பும் நினைவும் நமஸ்தேயும்.
பாப்தாதா வெகு தொலைவில் உள்ளவர்களான உங்களிடம் இருந்து கடிதங்கள், வாழ்த்து மடல்கள், ஈமெயில்கள் மூலமான செய்திகள், கணணிகளின் ஊடான செய்திகள் அனைத்தையும் பெற்றுள்ளார். குழந்தைகளைத் தனிப்பட்ட முறையில் தன் முன்னால் பார்க்கும்போது, பாப்தாதா உங்களுக்குப் பலமில்லியன் மடங்கு அன்பையும் நினைவுகளையும் வழங்குகிறார். அச்சா.
ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின் பூஜிக்கத்தகுதி வாய்ந்த ரூபத்தின் உணர்வில் இருப்பதன் மூலம் ஆதார மூர்த்தியாகவும் ஈடேற்றும் மூர்த்தியாகவும் ஆகி, ஆத்மாக்கள் எல்லோரையும் சக்திசாலிகள் ஆக்குவீர்களாக.தேவர்கள் ஆகப் போகின்ற பிராமணர்களான நீங்களே, இந்தக் கல்ப விருட்சத்தின் பிரதான அடிமரம் ஆவீர்கள். அத்துடன் எல்லோரினதும் மூதாதையர்கள் ஆவீர்கள். ஒவ்வொரு செயலின் அத்திவாரம், குலத்தின் ஒழுங்குமுறைக் கோட்பாடுகளின் அத்திவாரம், சம்பிரதாயங்கள், வழக்கங்களின் அத்திவாரம் அனைத்துமே ஆதார மூர்த்திகளாகவும் ஈடேற்றும் மூர்த்திகளாகவும் உள்ள மூதாதை ஆத்மாக்களான நீங்களே ஆவீர்கள். அடிமரமான உங்களின் மூலமே, ஆத்மாக்கள் எல்லோரும் மேன்மையான எண்ணங்களையும் சகல சக்திகளையும் கொண்டிருப்பதற்கான சக்தியைப் பெறுவார்கள். எல்லோரும் உங்களைப் பின்பற்றுகிறார்கள். இதனாலேயே, நீங்கள் உங்களை இத்தகைய பெரிய பொறுப்பைக் கொண்டவர்களாகக் கருதிய வண்ணமே ஒவ்வோர் எண்ணத்தையும் உருவாக்க வேண்டும், ஒவ்வொரு செயலையும் செய்ய வேண்டும். ஏனென்றால், காலமும் உலகின் நிலையும் மூதாதை ஆத்மாக்களான உங்களிலேயே தங்கியுள்ளது.
சுலோகம்:
சகல சக்திகளின் கதிர்களை எங்கும் பரப்புவர்களே, மாஸ்ரர் ஞான சூரியர்கள் ஆவார்கள்.அவ்யக்த சமிக்கை: எண்ணங்களின் சக்தியைச் சேமித்து, மேன்மையான சேவைக்குக் கருவி ஆகுங்கள்.
உங்களின் கட்டுப்படுத்தும் சக்தியும் ஆளுகின்ற சக்தியும் மூன்று வார்த்தைகளால் குறைகின்றன. 1) ஏன்? 2) என்ன? 3) வேண்டும். இந்த மூன்று வார்த்தைகளையும் முடித்து, ‘ஆஹா!’ என்ற ஒரு வார்த்தையைக் கூறுங்கள். நீங்கள் கட்டுப்படுத்தும் சக்தியை விருத்தி செய்வீர்கள். உங்களின் எண்ணங்களின் சக்தியால், உங்களால் எல்லையற்ற சேவைக்குக் கருவி ஆகமுடியும்.