27.07.26        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, இந்த முழு உலகிலும் உங்களைப் போன்று பாக்கியசாலிகள் வேறு எவரும் இல்லை. நீங்கள் இராஜரிஷிகள். நீங்கள் இராச்சியத்திற்காக இராஜயோகம் கற்கின்றீர்கள்.

கேள்வி:
சங்கமயுகத்தில் குழந்தைகளாகிய நீங்களும் கிரகிக்கின்ற அசரீரியான தந்தையிடம் உள்ள அந்தச் சம்ஸ்காரம் எது?

பதில்:
அசரீரியான தந்தை ஞான சம்ஸ்காரத்தைக் கொண்டுள்ளார். அவர் உங்களுடன் இந்த ஞானத்தைப் பேசி உங்களைத் தூய்மை அற்றவர்களில் இருந்து தூய்மையானவர் ஆக்குகின்றார். ஆகையாலேயே அவர் தூய்மையாக்குபவரான ஞானக்கடல் என்று அழைக்கப்படுகின்றார். இந்த நேரத்தில் குழந்தைகளாகிய நீங்களும் இந்தச் சம்ஸ்காரத்தைக் கிரகிக்கின்றீர்கள். கடவுளே எங்களுக்குக் கற்பிக்கின்றார் என்று நீங்கள் போதையுடன் கூறுகின்றீர்கள். நாங்கள் அவர் கூறுவதைச் செவிமடுத்து, பின்னர், அவர் எங்களுக்குக் கூறுவதை ஏனைய அனைவருக்கும் கூறுகின்றோம்.

பாடல்:
இறுதியில், நாங்கள் காத்திருந்த அந்த நாள் வந்து விட்டது…..

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகள் இந்தப் பாடலைச் செவிமடுத்தார்கள். இது யாருக்கான புகழ்? ஒரேயொரு தந்தைக்கான புகழாகும். ஓம் நமசிவாய. கடவுளே அதிமேலானவர். அவர் எங்கள் தந்தை என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நாங்கள் அனைவரும் தந்தை என்பதல்ல. முழு உலகமும் சகோதரத்துவம் என்று நினைவுகூரப்பட்டுள்ளது. சந்நியாசிகளும் கல்விமான்களும் கடவுள் சர்வவியாபி என்கின்றார்கள் என்பதால் அது தந்தைத்துவம் ஆகுகின்றது. நீங்கள் சகோதரர்கள் ஆயின், உங்களுக்கு ஆஸ்தியை வழங்குகின்ற அவர் தந்தை என்பது நிரூபிக்கப்படுகின்றது. அது தந்தைத்துவம் ஆயின், ஆஸ்தி என்ற கேள்விக்கே இடமில்லை. ஆத்மாக்களாகிய எங்கள் அனைவரதும் தந்தை ஒருவரே என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அவர் உலக ஞானத்தந்தை என்று அழைக்கப்படுகின்றார். உலகில் இருப்பவர் யார்? சகோதரர்கள் அனைவருமே உள்ளனர். அனைவருமே ஆத்மாக்கள். அனைவரதும் ஞானத்தந்தை ஒரேயொருவரே. அந்த ஒரு தந்தையிடமே அனைவரும் பிரார்த்திக்கின்றார்கள். ஒரேயொருவரின் புகழும் வழிபாடுமே இருக்க வேண்டும். அதுவே சதோபிரதான் வழிபாடாகும். இந்த ஞானம், அதன்பின்னர் பக்தி, ஆர்வமின்மை என்பதும் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. தந்தை சற்கதி அடைவதற்கே உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார். அந்த ஜீவன்முக்தி தாமம் சற்கதி என்று கூறப்படுகின்றது. இவை யாவற்றையும் ஆத்மாக்களாகிய நீங்கள் புத்திகளைப் பயன்படுத்திக் கிரகிக்க வேண்டும். எங்கள் வீடு அமைதிதாமம் ஆகும். அது முக்திதாமம் என்றும் நிர்வாணா என்றும் அழைக்கப்படுகின்றது. அமைதிதாமம் என்பதே சிறந்த பெயராகும். இங்கே, உங்களுக்கு புலன்கள் இருப்பதால், ஆத்மாக்கள் ‘சப்தத்திற்குள்’ வருகின்றார்கள் என்பதால் அவர்கள் பேச வேண்டும். சூட்சும உலகில் ‘அசைவு’ மாத்திரமே உள்ளதால் சமிக்ஞைகளின் மூலமே அவர்கள் தொடர்பு கொள்கின்றார்கள். சப்தம் இருக்க மாட்டாது. உங்களுக்கு இப்பொழுது மூவுலகையும் தெரியும்: அசரீரியான உலகம், சூட்சும உலகம், பௌதீக உலகம். இது இப்பொழுது உங்கள் புத்திகளில் தெளிவாக உள்ளது. மனித உலகைப் பற்றிக் கூறப்படுகின்றது: இந்த உலகம் ஒரு சக்கரம் போன்று சுற்றுகின்றது. இதுவே உலகின் வரலாறும் புவியியலும் எனப்படுகிறது. இதனை மனிதர்கள் அறிவார்கள். அவர்களே வரலாறையும் புவியியலையும் கூறுகிறார்கள். தந்தையே அதிமேலானவர் ஆவார். எவ்வாறு உலக வரலாறும் புவியியலும் மீண்டும் சுழல்கின்றது என்பதை அவர் மாத்திரமே அறிவார். இச்சக்கரத்தை அறிவதாலேயே நீங்கள் பூகோள ஆட்சியாளர்கள் எனப்படுகின்றீர்கள். பாடப்பட்டுள்ளது: தேவர்கள் முற்றிலும் விகாரம் அற்றவர்கள். இலக்ஷ்மி நாராயணனின் உருவங்கள் உள்ளன. அவர்கள் முற்றிலும் விகாரம் அற்றவர்கள் என்றும் தாங்கள் முற்றிலும் விகாரம் நிறைந்தவர்கள் என்றும் மக்கள் கூறுகின்றார்கள். சத்தியயுகத்தில் அவர்கள் விகாரம் அற்றவர்களாகவே உள்ளார்கள். அதாவது முற்றிலும் தூய்மையாக உள்ளார்கள். கலியுகத்தில் அவர்கள் முற்றிலும் விகாரமானவர்களாகவும் முற்றிலும் தூய்மை அற்றவர்களாகவும் உள்ளார்கள். இது பாரதத்தை மாத்திரமே குறிக்கின்றது. தந்தை வந்து இவை அனைத்தையும் உங்கள் புத்தியில் நிலைத்திருக்கச் செய்கின்றார். வேறு எவருக்கும் இது தெரியாது. அவர்கள் சத்தியயுகத்திற்கு நீண்டகால எல்லையைக் கொடுத்துள்ளார்கள். சத்தியயுகம் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததாக அவர்கள் நினைக்கின்றார்கள். ஆகையால், இவ்விடயங்கள் எவரது புத்தியிலும் நிலைத்திருக்க மாட்டாது. நாங்கள் அனைவரும் முற்றிலும் விகாரம் நிறைந்தவரில் இருந்து விகாரம் அற்றவர்கள் ஆகுகின்றோம் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். முற்றிலும் தூய்மை அற்றவர்களில் இருந்து முற்றிலும் தூய்மையானவர்கள் ஆக வேண்டும். ஆத்மாக்களில் மாசு கலந்துள்ளது என்று தந்தை விளங்கப்படுத்துகின்றார். சத்தியயுகம் இப்பொழுது கலியுகம் ஆகியுள்ளது. இந்த ஒப்பிட்டுப் பார்த்தல் ஆத்மாக்களுக்கே ஆகும். இதனை நீங்கள் மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் பாக்கியசாலிகள். வேறு எவருமே உங்களைப் போன்று பாக்கியசாலிகள் அல்ல. பாபா கூறுகின்றார்: நீங்கள் இப்பொழுது இராஜயோகத்தில் அமர்ந்திருக்கின்றீர்கள், நீங்கள் இராஜரிஷிகள். ஓர் இராச்சியத்திற்காக ஒரு கல்வி எப்பொழுதாவது இருந்ததுண்டா? பிறர் உங்களைச் சட்டத்தரணிகள் ஆக்கலாம். ஆனால் உங்களை உலகிற்குச் சக்கரவர்த்தியாக யாரால் ஆக்க முடியும்? தந்தையே அன்றி வேறு எவராலும் உங்களை அவ்வாறு ஆக்க முடியாது. இங்கே சக்கரவர்த்திகள் எவரும் இல்லை. அவர்கள் நிச்சயமாகச் சத்தியயுகத்திற்குத் தேவை. யாரோ ஒருவர் நிச்சயமாக வர வேண்டும். தந்தை கூறுகின்றார்: பக்தி முடியவேண்டிய நேரத்தில் நான் வருவேன். பக்தி இப்பொழுது முடிவிற்கு வந்துள்ளது. இதற்கு மேல் அதற்குக் கொடுப்பதற்கு எதுவும் இல்லை. தந்தை இங்கே அமர்ந்திருந்து உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்ற போதை உங்களுக்கு இருக்க வேண்டும். அசரீரித் தந்தையான, பரமாத்மாவான பரமதந்தை சிவனே ஆத்மாக்களாகிய எங்களுக்குக் கற்பிக்கிறார். எவருக்கும் சிவபாபாவைத் தெரியாது. அந்த பாபா மீண்டும் ஒருமுறை சுவர்க்க இராச்சியத்தை ஸ்தாபிக்கிறார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நாங்கள் அவர்களைச் சக்கரவர்த்தினி ஸ்ரீ இலக்ஷ்மி, சக்கரவர்த்தி ஸ்ரீ நாராயணன் என்று அழைக்கிறோம். பக்தி மார்க்கத்தில் அவர்கள் சத்திய நாராயணனின் கதையைக் கூறுகிறார்கள். அமரத்துவக் கதையும், மூன்றாவது கண்ணின் கதையும் உள்ளன. தந்தை உங்களுக்கு மூன்றாவது கண்ணையும் கொடுக்கின்றார். ஒரு சாதாரண மனிதனிலிருந்து நாராயணன் ஆகுகின்ற கதை உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. கடந்த காலமாகி விட்ட விடயங்கள் பின்னர் பக்தி மார்க்கத்தில் பயனுள்ளதாக ஆகுகின்றன. பாபா உங்களைச் சுவர்க்க அதிபதிகள் ஆக்குகிறார் எனவும், உங்களுக்கு அதற்கான ஓர் உரிமை உள்ளது எனவும் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். கடவுளே சுவர்க்கத்தைப் படைப்பவர் ஆவார். நாங்களே கடவுளின் குழந்தைகள், ஆகவே நாங்கள் ஏன் சுவர்க்கத்தில் இல்லை? இன்னமும் ஏன் நாங்கள் கலியுகத்தில் இருக்கிறோம்? பரமாத்மாவாகிய பரமதந்தை ஒரு புதிய உலகைப் படைக்கிறார். கடவுள் ஒரு பழைய உலகைப் படைக்க மாட்டார்! முதலில் அவர் ஒரு புதிய உலகைப் படைக்கிறார், பின்னர் பழையதை அழிக்கிறார். நீங்கள் சத்தியயுகத்தில் உங்கள் இராச்சியத்தைக் கோருகிறீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். சத்தியயுகத்தில் யார் இருப்பார்கள்? இலக்ஷ்மி நாராயணனின் வம்சமே இருக்கும். ஏனைய அரசர்களும் இருப்பார்கள், அதன் அடையாளமே வெற்றிமாலை ஆகும். வெற்றிமாலையில் கோர்க்கப்படுவதற்கே நாங்கள் இப்பொழுது முயற்சி செய்கிறோம் என்பதைக் குழந்தைகளான நீங்கள் அறிவீர்கள். மாலையின் அர்த்தத்தையோ அல்லது அது ஏன் பூஜிக்கப்படுகின்றது என்பதையோ உலகில் எவரும் அறிய மாட்டார்கள். உச்சியிலுள்ள குஞ்சம் யாரைக் குறிக்கிறது? அவர்கள் தொடர்ந்தும் மாலையின் மணிகளை உருட்டி, குஞ்சத்தைப் பூஜித்து, பின்னர் தொடர்ந்தும் அம்மாலையின் மணிகளை மீண்டும் உருட்டுகிறார்கள். அவர்கள் அமர்ந்து ஒரு மாலையின் மணிகளை உருட்டி, உள்ளே இராம நாமத்தைச் செபிப்பதன் மூலம், தங்கள் எண்ணங்கள் வெளியே எங்கும் அலையவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்கிறார்கள். அவர்களின் உள்ளே ஒரு ஹார்மோனியம் இசைப்பதைப் போன்றே அது உள்ளது. அவர்கள் இதனைப் பெருமளவுக்குப் பயிற்சி செய்கிறார்கள். அவ்விடயங்கள் அனைத்தும் பக்தி மார்க்கத்துக்கு உரியவை. ஆம், பெருமளவு பக்தி செய்துள்ளவர்கள் பாவச் செயல்களைச் செய்ய மாட்டார்கள். பெருமளவு பக்தி செய்பவர்கள் மிகவும் நேர்மையானவர்கள், நீதியானவர்கள் என்று கருதப்படுகிறார்கள். அவர்கள் ஆலயங்களில் ஒரு மாலையை வைத்திருந்து அதனை உருட்டி, தொடர்ந்தும் இராம நாமத்தைச் செபிப்பார்கள். பக்தி செய்யும்போது பாவம் இல்லை என்பதைப் பலர் புரிந்து கொள்கிறார்கள். தீவிர பக்தி செய்வதனால் மக்களால் முக்தியடைய முடியும் என அவர்கள் கூறுகிறார்கள். எவ்வாறாயினும், எதுவும் நடைபெறுவதில்லை. இது அனைவரும் சதோபிரதான், சதோ, ரஜோ, தமோ ஆகவேண்டிய ஒரு நாடகமாகும். ஒருவர் கூட வீடு திரும்ப முடியாதுள்ளது. மேலே வெறுமை ஆகுவது போன்று, அவ்விதமாகவே இங்கும் பெருமளவு வெற்றிடங்கள் எஞ்சியிருக்கும். டெல்கியின் இனிமையான ஆற்றங்கரைகளில் உங்கள் இராச்சியம் அமைந்திருக்கும். அது கடற்கரையில் அமைந்திருப்பதில்லை. பம்பாய் போன்றவை கூட இருக்க மாட்டாது. முன்னர், அது மீனவர் வசித்த, ஒரு மீன்பிடிக் குடாவாக இருந்தது. அவர்கள் கடலிலிருந்து பெருமளவு நிலங்களை மீளப் பெற்றுள்ளார்கள். அங்கு மீண்டும் மீன்பிடிக் குடா இருக்கும். பம்பாய் சத்தியயுகத்தில் இருக்க மாட்டாது. அங்கு மலைகள் போன்ற எதுவும் இருக்க மாட்டாது. எங்கேயும் செல்ல வேண்டிய தேவை எதுவும் இருக்காது. இங்கு, மக்கள் களைப்படையும் பொழுது, அவர்கள் எங்கேயாவது ஓய்வெடுக்கச் செல்கிறார்கள். எதைப் பற்றியும் களைப்பு அடைவதற்கான சௌகரியமின்மை சத்தியயுகத்தில் இருக்காது. நீங்கள் சுவர்க்கவாசிகள் ஆகுகிறீர்கள்! சிறிதளவு சௌகரியமி;ன்மை கூட இருக்காது. ஆகவே, இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும். தந்தை கூறுகிறார்: இனிமையிலும் இனிமையான அன்பிற்கினிய குழந்தைகளே, நீங்கள் உங்கள் சரீரத்தைப் பராமரிப்பதுடன், உங்கள் வியாபாரம் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். மாணவர்கள் ஒரு பாடசாலையில் கற்கிறார்கள், பின்னர் வீட்டுக்குச் சென்று மேலும் கற்கிறார்கள். அவர்கள் வீட்டுவேலையிலும் உதவுகிறார்கள். அவ்வாறே இங்கேயும் உள்ளது. உங்களுக்கு இக்கல்வியில் எந்தச் சிரமமும் இருப்பதில்லை. அந்தக் கல்வியில் பல்வேறு பாடங்கள் உள்ளன. இங்கே, ஒரேயொரு கல்வியும், ஒரேயொரு கருத்துமே உள்ளன: மன்மனாபவ! உங்கள் பாவங்கள் இதன் மூலம் அழிக்கப்படும். கடவுள் பேசுகிறார்! கடவுள் துவாபர யுகத்தில் கீதையைப் பேசினார் என மக்கள் எண்ணுகிறார்கள், ஆனால் அவர் ஏன் கீதையைத் துவாபர யுகத்தில் பேசுவார்? ஸ்ரீகிருஷ்ணரின் படத்தில் மிகச் சிறந்த விளக்கம் உள்ளது. இந்த யுத்தம் வெறும் கருவியே ஆகும். அனைவரும் மரணிக்க வேண்டும், அப்பொழுதே அவர்களால் முக்தி தாமத்துக்கும் ஜீவன்முக்தி தாமத்துக்கும் திரும்பிச் செல்ல முடியும். மக்கள் யுத்தத்தினால் மாத்திரமே மரணிக்க மாட்டார்கள். பலவிதமான அனர்த்தங்களும் இருக்கும். குழந்தைகளாகிய நீங்கள் எந்தத் துன்பத்தையும் அனுபவம் செய்யக் கூடாது. ஒரு நபருக்கு இதயம் செயல் இழந்து போகும் பொழுது, அவர் துன்பத்தை அனுபவம் செய்வதில்லை. அவ்வாறுதான் மரணம் இருக்க வேண்டும்: காரணமின்றித் திடீரென இதயம் செயலிழந்து போவதனால், வைத்தியர்கள் வரும் நேரத்தில் ஆத்மா ஏற்கெனவே சரீரத்தை விட்டு நீங்கிச் சென்றிருப்பார். இப்பொழுது, அனைவரும் மரணிக்க வேண்டும். இறுதியில், வைத்தியசாலைகள், வைத்தியர்கள் அல்லது வேறு எவருமே இறுதிக்கிரியைகளை மேற்கொள்வதற்கு இருக்க மாட்டார்கள். அவற்றில் எதுவும் எஞ்சியிருக்க மாட்டாது. அனைவருடைய ஆத்மாக்களும் சரீரங்களை விட்டு நீங்குவார்கள். பெரும் மழைவீழ்ச்சி இருக்கும். மரணத்துக்குக் காலம் எடுப்பதில்லை! மக்களை உடனடியாகவே கொல்லக் கூடியதான குண்டுகளை அவர்கள் உற்பத்தி செய்கிறார்கள். அவர்கள் தொடர்ந்தும் அத்தகைய குண்டுகளை உற்பத்தி செய்து, அவற்றைத் தொடர்ந்தும் பழுது பார்க்கிறார்கள். இது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவ்விளையாட்டு நாடகத்தில் ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கல்பமும் விநாசம் நடைபெறுகிறது. சத்தியயுகத்தில், உங்களுக்கு இந்த ஞானம் இருக்க மாட்டாது. உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுப்பதற்குத் தந்தை வர வேண்டும். ஒருமுறை ஸ்தாபனை நடைபெற்றதும் இந்த ஞானத்துக்கான கேள்வியே இருக்காது. பின்னர், இராவண இராச்சியம் ஆரம்பிக்கும் பொழுது, பக்தியும் ஆரம்பிக்கிறது. பக்தி இப்பொழுது முடிவுக்கு வந்துள்ளது. நீங்கள் இப்பொழுது தூய்மை ஆகுவதற்கு யோகசக்தியைப் பயன்படுத்த வேண்டும். தூய்மை ஆகுவதனால் மாத்திரமே உங்களால் அமைதி தாமத்துக்கும் சந்தோஷ தாமத்துக்கும் செல்ல இயலும். நீங்கள் ஓர் அட்டவணையை வைத்திருக்க வேண்டும். நீங்கள் இங்கு தந்தையை நினைவுசெய்து தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆகவேண்டும் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். இது எந்தச் சமயநூல்களிலும் எழுதப்படவில்லை. குழந்தைகள் பாடலைக் கேட்டார்கள்: இறுதியில் நாங்கள் காத்திருந்த, பாரத மக்கள் அரசருக்கு எல்லாம் அரசர்கள் ஆகுகின்ற அந்த நாளும் வந்துவிட்டது. அவர்கள் அரசருக்கு எல்லாம் அரசர்கள் ஆகுகிறார்கள், அதாவது, அவர்கள் சக்கரவர்த்திகள் ஆகுகிறார்கள். பின்னர், திரேதாயுகத்தில், அரசர்களும் அரசிகளும் இருக்கிறார்கள். பின்னர், அவர்கள் துவாபரயுகத்தினுள் பாவப் பாதையில் செல்லும்பொழுது, பூஜிக்கத் தகுதிவாய்ந்த சக்கரவர்த்திகளும், சக்கரவர்த்தினிகளுமாக இருந்தவர்கள் பூஜிப்பவர்களாக ஆகுகிறார்கள். அவர்களே பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாக இருந்து பின்னர் பூஜிப்பவர்கள் ஆகுகிறார்கள். தந்தை கூறுகிறார்: நான் பூஜிப்பவர் ஆகுவதில்லை. தேவர்கள் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள், ஆனால் நான் அவ்வாறு ஆகுவதில்லை. நான் பூஜிப்பவராகவும் ஆகுவதில்லை. பாரத மக்கள் தேவர்களுக்கு ஆலயங்களை உருவாக்கி அவற்றைப் பூஜிக்கிறார்கள். ஆரம்பத்தில், இலக்ஷ்மியும் நாராயணனும் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள், பின்னர், பக்தி மார்க்கத்தில், அவர்கள் சிவனை வழிபடுபவர்கள் ஆகுகிறார்கள். இலக்ஷ்மியையும் நாராயணனையும் சக்கரவர்த்தினி, சக்கரவர்த்தியாக ஆக்கிய சிவபாபாவுக்கு மக்கள் ஆலயங்களைக் கட்டுகிறார்கள். அவர்களும் அவரைப் பூஜிக்கிறார்கள். எவரும் உடனடியாக விகாரமுடையவர் ஆகுவதில்லை. அவர்கள் படிப்படியாகவே அவ்வாறு ஆகுகிறார்கள். அவர்கள் தேவர்களின் அடையாளங்களை பாவப்பாதையில் சென்றவர்களுக்குக் காண்பித்துள்ளார்கள். பூஜிக்கத் தகுதிவாய்ந்த இலக்ஷ்மியும் நாராயணனும் பின்னர் பூஜிப்பவர்கள் ஆகுகிறார்கள். முதலில் அவர்கள் சிவனுக்கு ஓர் ஆலயத்தைக் கட்டுகிறார்கள். அந்த நேரத்தில் அவர்கள் வழிபடுவதற்காக ஒரு வைரத்தை வெட்டி, அதிலிருந்து ஒரு சிவலிங்கத்தை உருவாக்குகிறார்கள். கடவுள் ஒரு சின்னஞ்சிறிய புள்ளி என்பது எவருக்கும் தெரியாது. அவர் ஒரு பெரிய நீள்கோள உருவமல்ல என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். மக்கள் பல ஆலயங்களைக் கட்டுவார்கள். அரசர்கள் அதனைச் செய்வதைப் பார்க்கும் மக்களும் அதையே செய்கிறார்கள். முதலில் சிவபாபா மாத்திரமே பூஜிக்கப்பட்டார், அது கலப்படமற்ற சதோபிரதான் பூஜித்தல் என்று அழைக்கப்படுகிறது, பின்னர் நீங்கள் சதோ, ரஜோ, தமோ ஸ்திதிகளினூடாகச் செல்கிறீர்கள். நீங்கள் ரஜோ, தமோ ஸ்திதிகளுக்குள் வந்தபோது, நீங்கள் உங்களை இந்துக்கள் என்று அழைத்தீர்கள். ஆனால் ஆதியில், நீங்கள் தேவர்களாக இருந்தீர்கள். தந்தை கூறுகிறார்: ஆதியில், நீங்கள் தேவ தர்மத்துக்கு உரியவர்கள். எவ்வாறாயினும், நீங்கள் மிகவும் தூய்மை அற்றவர்களாக ஆகிவிட்டீர்கள், ஏனெனில் நீங்கள் தூய்மை அற்றவர்களாக இருப்பதனால், நீங்கள் இனிமேலும் உங்களைத் தேவர்கள் என்று அழைக்க முடியாது. ‘இந்து’ எனும் பெயர் நீண்ட காலத்தின் பின்னரே வந்தது. நீங்கள் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாக இருந்தீர்கள் என்பதை நீங்கள் இப்போது புரிந்து கொள்கிறீர்கள். ஆனால் இப்பொழுது, சங்கமயுகத்தில், நீங்கள் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களோ அல்லது பூஜிப்பவர்களோ அல்லர். நீங்கள் என்ன செய்கிறீர்கள்? நீங்கள் ஸ்ரீமத்துக்கேற்ப, பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகுகிறீர்கள். நீங்கள் ஏனையோரையும் அதேபோன்று ஆக்குகிறீர்கள். நீங்கள் பிராமணர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் தொடர்ந்தும் தூய்மை ஆகுகிறீர்கள். நீங்கள் முழுமையாகத் தூய்மை ஆகும்பொழுது, நீங்கள் உங்கள் பழைய சரீரத்தை விட்டு நீங்க வேண்டும். தந்தை கூறுகிறார்: இது மிகவும் இலகுவானது. வயோதிபத் தாய்மார்களாகிய உங்களால் இதனைக் கிரகிக்க இயலாதுள்ளது. ஆகவே, தந்தை வினவுகிறார்: குறைந்த பட்சம் நீங்கள் ஆத்மாக்கள் என்பதையாவது புரிந்து கொள்கிறீர்களா? ஆத்மாவுக்கே நல்ல அல்லது தீய சம்ஸ்காரங்கள் உள்ளன. ஆத்மாக்கள் இப்பொழுது செய்கின்ற செயல்களுக்காகத் தங்கள் மறுபிறவியில் துன்பப்படுகிறார்கள். தந்தை ஆத்மாக்களுடனேயே பேசுகிறார். அவர் கூறுகிறார்: குழந்தைகளே, ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுங்கள்! அசரீரியான சிவபாபா அசரீரியான ஆத்மாக்களுக்குக் கற்பிக்கிறார். அசரீரியான பாபாவிடம் ஞானத்தின் சம்ஸ்காரங்கள் உள்ளன. அவருக்கென ஒரு சரீரம் கிடையாது. அவரே ஞானக்கடலும், தூய்மையாக்குபவரும் ஆவார். அவருக்குத் தெய்வீகக் குணங்கள் அனைத்தும் உள்ளன. தந்தை கூறுகிறார்: நான் வந்து குழந்தைகளாகிய உங்களைத் தூய்மை ஆக்குகிறேன். இவ்வழிமுறை மிகவும் இலகுவானது! ஒரு வார்த்தையே உள்ளது: மன்மனாபவ! ‘சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள்’ என்பதே அதன் அர்த்தம். நினைவின் மூலம் மாத்திரமே உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நீங்கள் இப்பொழுது பிராமணர்கள் எனவும், நீங்கள் பின்னர் சூரிய, சந்திர, வைசிய, சூத்திர வம்சங்களில் ஒருவர் ஆகுவீர்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். நாங்கள் 84 பிறவிகளின் சக்கரத்தைச் சுற்றி வருவோம். நாங்கள் மேலிருந்து கீழே வருவோம், பின்னர் பாபா வருவார். உண்மையிலேயே இவ்வுலகச் சக்கரம் தொடர்ந்தும் சுழல்கிறது. இவ்வுலகம் பழையதாகும் பொழுது, அதனைப் புதிதாக்குவதற்கு, பாபா வருகிறார். இது உங்கள் புத்திகளில் உள்ளது, இல்லையா? இச்சக்கரம் உங்கள் புத்தியில் சுழல வேண்டும். நீங்கள் இப்பொழுது சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுபவர்கள் ஆகுகிறீர்கள், அதன்பின்னர் நீங்கள் பூகோளத்தை ஆட்சி செய்பவர்கள் ஆகுவீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதனால் பூஜிக்கத்தகுதி வாய்ந்தவர் ஆகுங்கள். ஆத்மாவான உங்களில் உள்ள தீய சம்ஸ்காரங்களை இந்த ஞானத்தினாலும் யோகத்தினாலும் முடித்து விடுங்கள். முற்றிலும் விகாரமற்றவர் ஆகுங்கள்.

2. உங்கள் ஜீவனோபாயத்திற்காக அனைத்தையும் செய்யும் போது, கற்பதுடன் பிறருக்கும் கற்பியுங்கள். யோகசக்தியினால் தூய்மையாகி இராஜரீக அந்தஸ்தைக் கோருங்கள்.

ஆசீர்வாதம்:
மாயையைத் தலைவணங்கச் செய்வதற்கு உங்களின் மேன்மையான ஸ்திதியைப் பயன்படுத்தி, அதியுயர்ந்த ஸ்திதிக்கான உரிமையைக் கோருவீர்களாக.

மகாத்மாக்கள் எவரின் முன்னாலும் தலைவணங்குவது இல்லை. ஆனால் அனைவரும் அவர்களுக்குத் தலை வணங்குகிறார்கள். அதேபோல், தந்தையால் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள அதிமேன்மையான ஆத்மாக்களான நீங்கள் எவருமே எங்கேயும், எந்தச் சூழ்நிலைக்கும் மாயையின் பல்வகையான கவர்ச்சியான வடிவங்கள் எதற்கும் தலைவணங்கக் கூடாது. இப்போது நீங்கள் மற்றவர்களைத் தலைவணங்கச் செய்யும் ஸ்திதியில் ஸ்திரமாக இருந்தால், பின்னர் நீங்கள் அதியுயர்ந்த அந்தஸ்திற்கான உரிமையைப் பெற்றுக் கொள்வீர்கள். சத்திய யுகத்தில், இத்தகைய ஆத்மாக்களின் முன்னால் பிரஜைகள் மரியாதையுடன் தலைவணங்குவார்கள். துவாபர யுகத்தில், உங்களின் ஞாபகார்த்தங்களுக்குப் பக்தர்கள் தலைவணங்குவார்கள்.

சுலோகம்:
கர்மத்திற்கும் யோகத்திற்கும் இடையில் மிகச்சரியான சமநிலை இருக்கும்போது, நீங்கள் கர்மயோகி என்று அழைக்கப்படுவீர்கள்.

அவ்யக்த சமிக்கை: எரிமலை ஸ்திதியில் இருந்தவண்ணம் சக்திவாய்ந்த நினைவை அனுபவம் செய்யுங்கள்.

தாம் நினைவில் அமர்ந்திருக்கும்போது ஆத்ம உணர்வு உடையவர் ஆகுவதற்குப் பதிலாக, சேவையைப் பற்றி நினைப்பதாகப் பல குழந்தைகள் சொல்கிறார்கள். இது நடக்கக்கூடாது. ஏனென்றால், இறுதிக் கணங்களில் சரீரமற்றவர் ஆகுவதற்குப் பதிலாக, நீங்கள் சேவையைப் பற்றி நினைத்தால், ஒரு விநாடியில் பரீட்சையில் தோல்வி அடைந்து விடுவீர்கள். அந்த வேளையில், நீங்கள் தந்தையையும் உங்களின் அசரீரி, விகாரமற்ற, அகங்காரம் அற்ற ஸ்திதியையும் மட்டுமே நினைவு செய்ய வேண்டும். வேறு எதையும் நினைக்கக்கூடாது. சேவையைப் பற்றிச் சிந்திப்பதன் மூலம், நீங்கள் உங்களின் பௌதீக ரூபத்தில் இருப்பீர்கள். நீங்கள் விரும்பியபோது விரும்பிய ஸ்திதியை உங்களால் கொண்டிருக்க முடியாவிட்டால், நீங்கள் ஏமாற்றப்படுவீர்கள்.