27.08.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, உங்களது பாக்கியத்தைச் சதோபிரதானாக ஆக்க வேண்டுமாயின், நினைவில் நிலைத்திருப்பதற்குப் பெரும் முயற்சி செய்யுங்கள். எப்பொழுதும் நினைவு செய்யுங்கள்: நான் ஓர் ஆத்மா, நான் தந்தையிடம் இருந்து எனது முழு ஆஸ்தியையும் பெற வேண்டும்.
கேள்வி:
ஏன் சில குழந்தைகள் தங்கள் நினைவு அட்டவணையை வைத்திருப்பதைச் சிரமமாகக் காண்கின்றனர்?பதில்:
அவர்கள் நினைவுசெய்தலைச் சரியாகப் புரிந்து கொள்ளாததால் ஆகும். அவர்கள் நினைவு செய்ய அமரும்பொழுது, அவர்கள் புத்திகள் வெளியில் அலைபாய்கின்றன் அவர்கள் அமைதியானவர்கள் ஆகுவதில்லை. அப்பொழுது அவர்கள் சூழ்நிலையைப் பாழாக்குகின்றனர். அவர்கள் நினைவைக் கொண்டிருக்கவில்லை எனின், அவர்களால் எவ்வாறு தங்கள் அட்டவணையை எழுத முடியும்? எவராவது பொய்களை எழுதினால், பெருமளவு தண்டனையைப் பெறுகின்றார். நீங்கள் சத்தியமான தந்தைக்கு உண்மையைச் சொல்ல வேண்டும்.பாடல்:
எனது பாக்கியத்தை விழித்தெழச் செய்து, நான் வந்துள்ளேன்.ஓம் சாந்தி.
நீங்கள் இயன்றளவு ஆத்ம உணர்வு உடையவர் ஆக வேண்டுமென, ஒவ்வொரு நாளும் ஆன்மீகத் தந்தை, குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். நீங்கள் ஒவ்வொருவரும் ஓர் ஆத்மா என்ற நம்பிக்கையைக் கொண்டிருந்து தந்தையை நினைவு செய்யுங்கள். ஏனெனில் சந்தோஷம் என்ற உங்களது எல்லையற்ற பாக்கியத்தை உருவாக்குவதற்கு, இந்த எல்லையற்ற தந்தையிடம் நீங்கள் வர வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். ஆகவே நீங்கள் நிச்சயமாகத் தந்தையை நினைவுசெய்ய வேண்டும். தூய்மையாகவும், சதோபிரதானாகவும் ஆகாமல், எப்படி உங்களால் சதோபிரதான் பாக்கியத்தை உருவாக்க முடியும். இதனை மிக நன்றாக நினைவில் வைத்திருங்கள். ஒரேயொரு பிரதான விடயமே உள்ளது. இதனை எழுதி, உங்களுடன் வைத்திருங்கள். மக்கள் தங்கள் கைகளில் விடயங்களை எழுதுகின்றனர். நீங்கள் எழுதுங்கள்: நான் ஓர் ஆத்மா, நான் எனது ஆஸ்தியை எல்லையற்ற தந்தையிடம் இருந்து பெறுகின்றேன். மாயை உங்களை இதனை மறக்கச் செய்கின்றாள். நீங்கள் அதனை வேறெங்காவது எழுதினீர்களாயின், நீங்கள் அதனை மீண்டும் மீண்டும் நினைவு செய்யலாம். ஓம் அல்லது கிருஷ்ணர் போன்றவற்றை நினைவுசெய்யும் வகையில், மக்கள் அவற்றின் படங்களை வைத்திருக்கின்றனர். இது அனைத்திலும், அதி புதிய நினைவாகும். எல்லையற்ற தந்தை மட்டுமே இதனை உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். அதனைப் புரிந்து கொள்வதனால், நீங்கள் நூறுமடங்கு பாக்கியசாலிகளாக மட்டும் ஆகுவதில்லை, ஆனால் பலமில்லியன் மடங்கு பாக்கியசாலிகள் ஆகுகின்றீர்கள். தந்தையை அறிந்து கொள்ளாததனாலும் அவரை நினைவு செய்யாததனாலும் நீங்கள் வறுமையில் வாடுகிறீர்கள். ஒரேயொரு தந்தை மட்டுமே உங்கள் வாழ்க்கையைச் சதா என்றும் சந்தோஷம் உடையதாக ஆக்குவதற்கு வருகிறார். மக்கள் அவரை நினைவு செய்தாலும் அவர்களுக்கு அவரை முற்றாகத் தெரியாது. இறைவன் சர்வவியாபி எனக் கூறுவதை வெளிநாட்டவர் பாரத மக்களிடம் இருந்தே கற்றுள்ளனர். பாரதம் வீழ்கின்ற பொழுது அனைவரும் வீழ்கின்றனர். பாரதமே தனது வீழ்ச்சிக்கும், ஏனையோரது வீழ்ச்சிக்கும் பொறுப்பாக உள்ளது. தந்தை கூறுகின்றார்: நான் இங்கே வந்து, பாரதத்தைச் சத்திய பூமியான, சுவர்க்கம் ஆக்குகிறேன். அத்தகைய சுவர்க்கத்தை உருவாக்கியவரை அவர்கள் பெருமளவு அவதூறு செய்துள்ளனர்; அவர்கள் அவரை மறந்து விட்டனர். இதனாலேயே ‘அதர்மம் தலைதூக்கும் பொழுது நான் வருகிறேன்’ என எழுதப்பட்டுள்ளது. தந்தை வந்து இதன் அர்த்தத்தையும் விளங்கப்படுத்துகிறார். அது ஒரேயொரு தந்தையின் மகத்துவம் ஆகும். தந்தை நிச்சயமாக வருகின்றார் என்றும், அதனாலேயே மக்கள் சிவனின் பிறந்தநாளைக் கொண்டாடுகின்றனர் என்றும் உங்களுக்கு இப்பொழுது தெரியும். இருப்பினும் அவர்கள் சிவனின் பிறந்த நாளைப் பெறுமதி வாய்ந்ததாகவே கருதுவதில்லை. அது நிச்சயமாக உள்ளது, ஏனெனில் அவர் வந்து பின்னர் சென்றதாலேயே அவரது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். அவரே சத்தியயுகத்து ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்தை ஸ்தாபிப்பவர். ஏனைய அனைவரும் தங்கள் சமயம் இந்த நேரத்தில், இன்னாரால் ஸ்தாபிக்கப்பட்டது என்பதை அறிந்துள்ளனர். அவர்களுக்கு முன்னர் தேவ தர்மம் மட்டுமே இருந்தது. அந்தத் தர்மம் எங்கே மறைந்தது என்பது அவர்களுக்குத் தெரியாது. தந்தை இப்பொழுது வந்து உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். தந்தையே அனைவரிலும் அதியுயர்வானவர். வேறு எவருக்கும் புகழ் இல்லை. சமய ஸ்தாபகர்களின் புகழ் என்ன? தந்தை தூய உலகின் ஸ்தாபனையையும், தூய்மையற்ற உலகின் விநாசத்தையும் மேற்கொள்கின்றார். அவர் உங்களை மாயையை வெற்றிகொள்ளச் செய்கிறார். இது ஓர் எல்லையற்ற விடயம். இராவண இராச்சியம் எல்லையற்ற உலகம் முழுவதும் பரந்துள்ளது. அது எல்லைக்கு உட்பட்ட இலங்கைக்கான கேள்வி அல்ல. இந்த வெற்றி தோல்விக்கான கதை பாரதத்திற்கானது ஆகும். ஏனைய அனைத்தும் துணைக் கதைகள். பாரதத்திலேயே இரட்டைக் கிரீடமும், ஒற்றைக் கிரீடமும் கொண்ட அரசர்கள் உள்ளனர். ஆட்சிபுரிந்து சென்ற ஏனைய பெரும் சக்கரவர்த்திகள் எவரும் ஒளிக் கிரீடத்தைக் கொண்டிருக்கவில்லை; தேவர்கள் மட்டுமே இதனைக் கொண்டிருந்தனர். எவ்வாறாயினும் தேவர்களே சுவர்க்க அதிபதிகள். சிவபாபாவே தூய்மை ஆக்குபவராகிய, பரமதந்தை என அழைக்கப்படுகின்றார். அவருக்கு எவ்வாறு ஒளியைக் கொடுக்க முடியும்? தூய்மை அற்றவருக்கே, அதாவது, ஒளி இல்லாதவர்களுக்கே ஒளியைக் கொடுக்க முடியும். சிவபாபா ஒளி இல்லாதவராக ஒருபொழுதும் ஆகுவதில்லை. ஒரு புள்ளியில் எவ்வாறு உங்களால் ஒளியைக் காட்ட முடியும்? அது சாத்தியம் இல்லை. நாளுக்கு நாள் பாபா பல ஆழமான கருத்துக்களை விளங்கப்படுத்துகிறார். நீங்கள் அவற்றை உங்களால் முடிந்தளவு புத்தியில் கொண்டிருக்க வேண்டும். நினைவு யாத்திரையே பிரதான விடயம். இதிலேயே மாயையின் பல தடைகள் உள்ளன. சிலர் தங்கள் அட்டவணையில் தாம் 50 இலிருந்து 60 சதவீதம் வரை நினைவைக் கொண்டிருந்ததாகக் கூறி, எழுதிய பொழுதிலும் நினைவு யாத்திரை என்றால் என்ன என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. ‘இதனை நினைவு எனக் கூற முடியுமா?’ என அவர்கள் தொடர்ந்தும் வினவுகின்றனர். அது மிகக் கடினமானது. நீங்கள் இங்கு 10 அல்லது 15 நிமிடங்கள் அமர்ந்திருந்தாலும், நினைவில் மிகச்சரியாக அமர்ந்துள்ளீர்களா என்பதை சோதித்துப் பார்க்க வேண்டும். நினைவில் நிலைத்திருக்க முடியாத பலரும் உள்ளனர். ஆகவே, அவர்கள் சூழ்நிலையைப் பாழாக்குகின்றனர். தடைகளை உருவாக்கும் பலரும் உள்ளனர், ஏனெனில் அவர்கள் நினைவில் நிலைத்திருப்பதில்லை. முழு நாளும் அவர்களது புத்திகள் தொடர்ந்தும் வெளியிலேயே அலைபாய்கின்றன. ஆகவே அவர்கள் இங்கு வந்தபொழுதும், அவர்கள் அமைதி அடைவதில்லை. இதனாலேயே அவர்கள் தங்கள் அட்டவணைகளை எழுதுவதில்லை. பொய்கள் எழுதப்பட்டால், பெரும் தண்டனை உள்ளது. பல குழந்தைகள் தவறிழைத்துப் பின்னர் தந்தையிடம் இருந்து அவற்றை மறைக்கின்றனர்; அவர்கள் உண்மையைக் கூறுவதில்லை. நீங்கள் அவரைத் தந்தை என அழைத்து, அவரிடம் உண்மையைக் கூறாதிருந்தால், அதிகளவு பாவம் சேர்க்கப்படும். எவராவது உண்மையிலேயே மிகவும் தீங்கான எதையாவது செய்திருப்பாராயின், பொதுவாக அதனைப் பற்றிய உண்மையைக் கூறுவதற்கு மிகவும் வெட்கப்படுவதால், அநேகமாகப் பொய்யையே கூறுவார். மாயையும் பொய், சரீரமும் பொய், உலகமும் பொய் எனக் கூறப்பட்டுள்ளது. மக்கள் முற்றாகச் சரீர உணர்வு உள்ளவர்கள் ஆகியுள்ளனர். உண்மையைக் கூறுவது நல்லது. பின்னர் ஏனையோரும் உங்களிடம் இருந்து கற்றுக் கொள்வார்கள். இங்கே நீங்கள் உண்மையானவர்களாக இருக்க வேண்டும். இந்த ஞானத்துடன் நினைவு யாத்திரையும் அத்தியாவசியமானது. ஏனெனில் நினைவு யாத்திரையின் மூலம் மட்டுமே நீங்களும், உலகமும் நன்மை அடையப் போகின்றீர்கள். இந்த ஞானம் விளங்கப்படுத்துவதற்கு மிக இலகுவானது. நினைவிற்கே முயற்சி தேவையாகும். ஒரு விதையிலிருந்து எவ்வாறு ஒரு மரம் வளர்கின்றது என்பது அனைவருக்கும் தெரியும். உங்கள் புத்தியில் 84 பிறவிகளின் சக்கரத்தை நீங்கள் கொண்டுள்ளீர்கள்; விதையானவரினதும், விருட்சத்தினதும் ஞானமும் உள்ளது. தந்தையே சத்தியமானவரும், உயிர் வாழ்பவரும், ஞானக்கடலும் ஆவார். அவரிடம் இந்த ஞானம் உள்ளது, அதனையே அவர் உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். இது முற்றிலும் அசாதாரணமானது. இது மனித உலக விருட்சம். இதுவும் எவருக்கும் தெரியாது. அனைவரும் “நேற்றி நேற்றி” (இதுவுமல்ல அதுவுமல்ல) எனக் கூறுகின்றனர். கால எல்லையே அவர்களுக்குத் தெரியாதபோது, வேறெதனை அவர்களால் அறிய முடியும்? உங்களிலும் கூட வெகு சிலரே இதனை மிக நன்றாக அறிவீர்கள். அதனாலேயே அனைவரது அபிப்பிராயங்களையும் பெறுவதற்காக நீங்கள் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்கிறீர்கள். எவரும் ஆலோசனை வழங்கலாம். பெயர் குறிப்பிடப்பட்டவர்கள் மாத்திரமே ஆலோசனை வழங்கலாம் என்பதல்ல. உங்கள் பெயர் குறிப்பிடப்படவில்லை என்பதனால் நீங்கள் ஆலோசனை வழங்க முடியாது என்றில்லை; இல்லை. எவரேனும் சேவைக்கான ஆலோசனைகளைக் கொண்டிருப்பின், அதனை எழுத்தில் இடுங்கள். நீங்கள் எப்பொழுதெல்லாம் சேவைக்கான சில ஆலோசனைகளைக் கூற விரும்புகிறீர்களோ, அப்பொழுது பாபாவிற்கு எழுதுமாறு தந்தை கூறுகிறார். “பாபா, இந்த வழிமுறையின் மூலம் சேவை பெருமளவு அதிகரிக்க முடியும்”. எவரும் ஆலோசனை வழங்கலாம். பின்னர், பாபா வழங்கப்பட்ட பல்வேறு வகையான ஆலோசனைகளையும் பார்ப்பார். நீங்கள் ஒன்றுகூடி அனைவருக்கும் எவ்வாறு செய்தியைக் கொடுத்து, பாரதத்தை நன்மை அடையச் செய்வது என்பது பற்றிச் சிந்திக்க வேண்டும் என பாபா தொடர்ந்தும் உங்களுக்குக் கூறுகின்றார். பாபாவிற்கு எழுதி இவ்விடயங்களைக் கூறுங்கள். மாயை அனைவரையும் உறங்கச் செய்து விட்டாள். மரணம் உங்களுக்கு முன்னால் இருக்கும் பொழுது, தந்தை வருகின்றார். இப்பொழுது அனைவரினதும் ஓய்வுபெறும் ஸ்திதி எனத் தந்தை கூறுகிறார். நீங்கள் கற்கின்றீர்களோ இல்லையோ, அனைவரும் நிச்சயமாக மரணிக்க வேண்டும். நீங்கள் ஆயத்தங்களைச் செய்கின்றீர்களோ, இல்லையோ புதிய உலகம் நிச்சயமாக ஸ்தாபிக்கப்படப் போகின்றது. சிறந்த குழந்தைகள் அனைவரும் தங்கள் சொந்த ஆயத்தங்களைச் செய்கின்றார்கள். ஒரு கைப்பிடி அரிசியைக் கொண்டு வந்ததால், குசேலரின் உதாரணமும் நினைவுகூரப்படுகிறது. “பாபா நானும் ஒரு மாளிகையைப் பெற வேண்டும்”. அவரிடம் ஒரு கைப்பிடி அரிசியைத் தவிர வேறெதுவும் இல்லாத பொழுது, அவரால் என்ன செய்ய முடியும்? பாபா மம்மாவின் உதாரணத்தைக் கொடுக்கிறார். அவர் ஒரு கைப்பிடி அரிசியைக் கூட கொண்டு வரவில்லை, இருப்பினும் அவர் அத்தகைய உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோரினார்! இதில் பணம் என்ற கேள்விக்கே இடமில்லை. நீங்கள் நினைவில் நிலைத்திருந்து ஏனையோரையும் உங்களுக்குச் சமமாக்க வேண்டும். பாபா கட்டணம் போன்ற எவற்றையும் அறவிடுவதில்லை. சிலர் தங்களிடம் சிறிது பணம் இருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்வதனால் அதனைத் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்துவதற்கு யக்யத்திற்குக் கொடுக்க வேண்டும் என விரும்புகின்றனர். எவ்வாறாயினும் “விநாசம் இடம்பெற இருப்பதனால் அனைத்தும் வீணாகவுள்ளது. இதனைச் செய்வதனால் குறைந்தபட்சம் எதனையாவது நான் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்தலாம்”. ஒவ்வொரு மனிதரும் குறைந்தபட்சம் நிச்சயமாக ஏதாவது தான, தர்மங்களைச் செய்கின்றார்கள். அந்தத் தான, தர்மங்கள் பாவாத்மாக்கள் பாவாத்மாக்களுக்குக் கொடுப்பதாகும். இருந்த பொழுதும் அவர்கள் அதன் வெகுமதியைத் தற்காலிகமாகப் பெறுகின்றனர்; உதாரணமாக, பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியை ஒருவர் கட்டுகிறார். ஒருவரிடம் அதிகளவு செல்வம் இருந்து, தர்மசாலை ஒன்றைக் கட்டுவாராயின், அவர் நல்ல வீட்டைப் பெறுகின்றார். இருப்பினும் நோய்கள் போன்றவை இருக்கும். எவ்வாறாயினும், ஒருவர் வைத்தியசாலையைக் கட்டுவாராயின், அவர் சிறந்த ஆரோக்கியத்தைப் பெறுவார், ஆனால் அவரது அனைத்து ஆசைகளும் அதனூடாக நிறைவேற முடியாது. இங்கு எல்லையற்ற தந்தையினால் உங்கள் அனைத்து ஆசைகளும் பூர்த்தி செய்யப்படுகின்றன. நீங்கள் தூய்மை ஆகுகின்றீர்கள். ஆகவே உலகைத் தூய்மை ஆக்குவதற்கு உங்கள் செல்வம் எல்லாவற்றையும் பயன்படுத்துவது சிறந்தது. நீங்கள் முக்தியையும், ஜீவன்முக்தியையும் பெறுகின்றீர்கள், அதுவும் அரைக் கல்பத்திற்குப் பெறுகின்றீர்கள். அனைவரும் எவ்வாறு தாங்கள் அமைதியைப் பெறலாம் என வினவுகின்றனர். அதனை அமைதிதாமத்தில் மட்டுமே பெற முடியும். சத்திய யுகத்தில் அமைதியின்மை இல்லை. ஏனெனில் அங்கு ஒரேயொரு தர்மமே உள்ளது. இராவண இராச்சியத்தில் அமைதியின்மை உள்ளது. அரசரான இராமரைப் போலவே, இராமரின் பிரஜைகளும் இருப்பார்கள் என்பது நினைவு கூரப்படுகின்றது. அது அமரத்துவப் பூமியாகும். “மரணம்” என்ற வார்த்தை அமரத்துவப் பூமியில் இருக்க மாட்டாது. இங்கு மக்கள் ஒன்றும் செய்யாமல் அமர்ந்திருக்கும் பொழுதே திடீரென மரணித்து விடுகின்றனர். இது மரண பூமி என்றும், அது அமரத்துவப் பூமி என்றும் அழைக்கப்படுகின்றது. அங்கு மரணம் இல்லை. அவர்கள் தங்கள் பழைய சரீரங்களை நீக்கி, மீண்டும் குழந்தைகள் ஆகுகின்றனர். அங்கு நோய்கள் போன்ற எதுவும் இல்லை. அங்கு அதிகளவு நன்மைகள் உள்ளன. ஸ்ரீ ஸ்ரீ யின் வழிகாட்டல்களைப் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் என்றென்றும் ஆரோக்கியமானவர்கள் ஆகுகின்றீர்கள். ஆகவே இது போன்ற பல ஆன்மீக நிலையங்கள் திறக்கப்பட வேண்டும். வெகுசிலர் வந்தாலுமே பரவாயில்லை. இந்த நேரத்தில் எந்த மனிதர்களுக்கும் நாடகத்தின் கால எல்லை தெரியாது. யார் உங்களுக்கு இதைக் கற்பித்தார் என அவர்கள் உங்களிடம் வினவும் பொழுது, அவர்களிடம் கூறுங்கள்: தந்தையே இவை அனைத்தையும் எங்களுக்கு கூறுகின்றார். பல பிரம்மாகுமாரர்களும், குமாரிகளும் உள்ளனர். நீங்களும் சிவபாபாவின் குழந்தையாகிய, பிரம்மாகுமார் ஆவீர்கள். நீங்கள் பிரஜாபிதா பிரம்மாவினதும் குழந்தை ஆவீர்கள். இவர் மனித குலத்தின் முப்பாட்டனார். பிரம்மா குமாரர்களும், குமாரிகளுமாகிய நாங்கள் அவரிடம் இருந்தே வெளிப்பட்டுள்ளோம். வம்சாவளி விருட்சங்கள் உள்ளன. உங்களது தேவ குலம் அதிகளவு சந்தோஷத்தைக் கொடுக்கின்ற ஒன்றாகும். நீங்கள் இங்கு மேன்மை ஆனவர்களாகி, பின்னர் அங்கு சென்று இராச்சியத்தை ஆட்சிபுரிகிறீர்கள். இது எவரது புத்தியிலும் இருப்பதில்லை. இந்த தமோபிரதான் உலகில் தேவர்களால் பாதம் பதிக்க முடியாது எனக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களது உயிரற்ற சிலைகளின் சுவடுகள் இருந்த பொழுதிலும், அவர்களது உயிருள்ள வடிவங்கள் இல்லை. ஆகவே, தந்தை விளங்கப்படுத்துகின்றார்: குழந்தைகளே, நினைவு யாத்திரையில் நிலைத்திருங்கள். எந்தவொரு பாவச் செயல்களையும் செய்யாதீர்கள். ஆனால் சேவை செய்வதற்கான வழிகளை உருவாக்குங்கள். ‘பாபா, நான் இலக்ஷ்மி நாராயணன் போன்று ஆகுவேன்’ எனக் குழந்தைகள் கூறுகின்றனர். தந்தை கூறுகின்றார்: உங்கள் வாயில் ரோஜா இருக்கட்டும் (நீங்கள் உண்மையிலேயே அவ்வாறு ஆகுவீர்களாக)! எவ்வாறாயினும் அதைச் செய்வதற்கு நீங்கள் முயற்சியும் செய்ய வேண்டும். ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோருவதற்கு, ஏனையோரையும் உங்களுக்குச் சமமானவர்கள் ஆக்குவதற்கான சேவையைச் செய்யுங்கள். ஒவ்வொரு வழிகாட்டியும் 100 தொடக்கம் 200 யாத்திரிகர்களை அழைத்து வருவதை ஒருநாள் நீங்கள் காண்பீர்கள். நீங்கள் மேலும் முன்னேறிச் செல்லும் பொழுது, அனைத்தையும் காண்பீர்கள். உங்களுக்கு அனைத்தும் முன்கூட்டியே கூறப்பட முடியாது. எவையெல்லாம் இடம்பெறுகின்றனவோ, அவற்றை நீங்கள் தொடர்ந்தும் பார்ப்பீர்கள். இது ஓர் எல்லையற்ற நாடகம். நீங்கள் தந்தையுடன் பிரதான பாகங்களை நடிக்கின்றீர்கள்; நீங்கள் இந்தப் பழைய உலகைப் புதியதாக ஆக்குகிறீர்கள். இதுவே அதிமேன்மையான சங்கமயுகம். நீங்கள் இப்பொழுது அந்த சந்தோஷ பூமியின் அதிபதிகள் ஆகுகின்றீர்கள். அங்கு துன்பத்தின் பெயரோ, சுவடோ இருக்க மாட்டாது. தந்தையே துன்பத்தை நீக்குபவரும் சந்தோஷத்தை அருள்பவரும் ஆவார். அவர் வந்து உங்களைத் துன்பத்தில் இருந்து விடுதலை ஆக்குகிறார். பாரதத்தில் சிலர் தங்களிடம் அனைத்துச் செல்வமும், பெரிய மாளிகைகளும், மின்சாரமும் இருப்பதனால் தமக்கு இதுவே சுவர்க்;கம் என நினைக்கின்றனர். அவை அனைத்தும் மாயையின் பகட்டு. சந்தோஷத்திற்காக அவர்கள் பல வசதிகளைக் கண்டுபிடிக்கின்றனர். அவர்கள் பாரிய மாளிகைகளையும், கட்டடங்கள் போன்றவற்றையும் கட்டுகின்றனர். ஆனால் பின்னர் மரணம் திடீரென வந்துவிடுகிறது. அங்கு மரண பயம் இல்லை. இங்கு எவராவது திடீரென இறந்தால் அவரின் மரணத்தையிட்டு அவர்கள் அதிகளவு வருந்துகின்றனர். அவர்கள் சென்று, அந்த நபருக்காக அவரது சமாதியில் கண்ணீர் சிந்துகின்றனர். அவர்கள் அனைவரும் தமக்கெனச் சொந்த சம்பிரதாயங்களைக் கொண்டிருக்கின்றனர். பல அபிப்பிராயங்கள் உள்ளன. அத்தகைய விடயங்கள் சத்திய யுகத்தில் இருப்பதில்லை. அங்கு அவர்கள் ஒரு சரீரத்தை நீக்கி இன்னொன்றை எடுக்கின்றனர். நீங்கள் அதிகளவு சந்தோஷம் இருக்கும் இடத்திற்குச் செல்கின்றீர்கள். நீங்கள் அதற்கு அதிகளவு முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் ஒவ்வோர் அடியிலும் வழிகாட்டலைப் பெற வேண்டும். ஏனையோர் தங்கள் குருமாரிடம் இருந்தோ கணவரிடம் இருந்தோ வழிகாட்டல்களைப் பெறுகின்றனர் அல்லது தமது சொந்தக் கருத்துக்களுக்கேற்ப தொடர்ந்தும் முன்னேறுகின்றார்கள். அசுர வழிகாட்டல்கள் எவ்வளவிற்குப் பயனுள்ளவை? அவை உங்களை அசுரர்களாக்கவே முயற்சிக்கும். நீங்கள் இப்பொழுது அதிமேலான இறை வழிகாட்டல்களைப் பெறுகின்றீர்கள். இதனாலேயே அவை மேன்மையான இறை வாசகங்கள் எனக் கூறப்பட்டுள்ளன. குழந்தைகளாகிய நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதனால், முழு உலகையும் சுவர்க்கமாக ஆக்குகிறீர்கள். நீங்கள் அந்தச் சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆகுகின்றீர்கள். இதனாலேயே நீங்கள் ஒவ்வோர் அடியிலும் ஸ்ரீமத்தைப் பெற வேண்டும். எவ்வாறாயினும் ஒருவரின் பாக்கியத்தில் அது இல்லாதிருப்பின், அவர் தனது வழிகாட்டல்களைப் பின்பற்றுவதில்லை. நீங்கள் ஏதேனும் ஆலோசனைகளைக் கொண்டிருப்பின், அவற்றை பாபாவிற்கு அனுப்புமாறு பாபா கூறுகிறார். ஆலோசனை வழங்குவதற்குத் தகுதியானவர்கள் யாரென பாபாவிற்குத் தெரியும். பல புதிய குழந்தைகள் தொடர்ந்தும் வெளிப்படுகின்றனர். எந்தக் குழந்தைகள் சிறந்தவர்கள் என்பது பாபாவிற்குத் தெரியும். தந்தையின் அறிமுகத்தைக் கொடுப்பதற்கு எவ்வாறு வழிமுறைகளை உருவாக்குவது என்பதைப் பற்றிக் கடைகளை வைத்துள்ளவர்களுக்கும் ஆலோசனை கூற வேண்டும். கடையிலுள்ள அனைவருக்கும் தொடர்ந்தும் ஞாபகப்படுத்துங்கள். பாரதத்தில் சத்தியயுகம் இருந்தபொழுது ஒரேயொரு தர்மமே இருந்தது. இதில் குழப்பம் அடைவதற்கு எதுவும் இல்லை. ஒரேயொருவரே அனைவரதும் தந்தை. தந்தை கூறுகிறார்: சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள், அப்பொழுது உங்கள் பாவங்கள் அழிக்கப்பட்டு, நீங்கள் சுவர்க்க அதிபதிகள் ஆகுவீர்கள். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. ஸ்ரீமத்தைப் பின்பற்றி, முழு உலகையும் சுவர்க்கம் ஆக்குவதற்குச் சேவை செய்யுங்கள். ஏனைய பலரையும் உங்களுக்குச் சமமானவர் ஆக்குங்கள். அசுர வழிகாட்டல்களில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.2. நினைவைக் கொண்டிருப்பதற்கு முயற்சி செய்வதனால், ஆத்மாவைச் சதோபிரதான் ஆக்குங்கள். குசேலரைப் போல் உங்களிடமுள்ள கைப்பிடி அரிசியைத் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்தி, உங்கள் அனைத்து ஆசைகளையும் பூர்த்தி ஆக்குங்கள்.
ஆசீர்வாதம்:
வேறு எவருக்கும் அன்றி ஒரேயொரு தந்தைக்குச் சொந்தமாகும் திடசங்கற்பத்தைக் கொண்டிருப்பதன் மூலம் நீங்கள் அமரத்துவமாகவும் அழியாதவராகவும் ஆகுவீர்களாக.வேறு எவருக்கும் அன்றி, ஒரேயொரு தந்தைக்குச் சொந்தமாக இருக்கும் திடசங்கற்பத்தைக் கொண்டுள்ள ஒவ்வொரு குழந்தையின் ஸ்திதியும் தானாகவும் இலகுவாகவும் நிலையாகவும் ஸ்திரமாகவும் ஆகும். அவர்களிடம் இந்தத் திடசங்கற்பம் இருக்கும்போது, சகல உறவுமுறைகளின் அழியாத நூல் கட்டப்படுவதுடன் அவர்கள் சதா அமரராகவும் அழியாதவர்களாகவும் இருக்கும் ஆசீர்வாதத்தையும் பெறுகிறார்கள். இந்தத் திடசங்கற்பத்தைக் கொண்டிருப்பதன் மூலம் அவர்கள் தமது முயற்சிகளில் விசேடமான உயர்த்தியைப் பெறுகிறார்கள். ஒரேயொரு தந்தையுடன் சகல உறவுமுறைகளையும் கொண்டிருப்பவர்கள், தானாகவே சகல பேறுகளையும் பெறுகிறார்கள்.
சுலோகம்:
உங்களின் சிந்தனை, பேச்சு, செயல் எல்லாமே சமமாக இருக்க வேண்டும். அப்போது நீங்கள் அதிமேன்மையான முயற்சியாளர் என்று அழைக்கப்படுவீர்கள்.அவ்யக்த சமிக்கை: ஓர் இலகு யோகியாக இருப்பதற்கு, இறை அன்பை அனுபவிப்பவராக இருங்கள்.
எந்தவொரு வேளையிலும், உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட உறவுமுறை தேவைப்படும்போது, இறைவனை அந்த உறவுமுறையில் உங்களுக்குச் சொந்தம் ஆக்கிக் கொள்ளுங்கள். உங்களின் இதயபூர்வமாக, ‘எனது பாபா’ எனச் சொல்லுங்கள். பாபாவும் ‘எனது குழந்தையே’ எனச் சொல்வார். உங்களை இந்த அன்புக்கடலில் அமிழ்த்திக் கொள்ளுங்கள். இந்த அன்பானது ஒரு பாதுகாப்புக் குடை ஆகுகிறது. அப்போது மாயையாலும் இந்தக் குடையின் கீழ் வரமுடியாது. இதுவே இலகு யோகி ஆகுவதற்கான வழிமுறை ஆகும்.