27.09.26 Avyakt Bapdada Tamil Lanka Murli 15.12.2011 Om Shanti Madhuban
சதா உங்களின் ஆன்மீக போதையைப் பேணி, ஒரு கவலையற்ற சக்கரவர்த்தி ஆகுங்கள். தீவிர முயற்சி செய்வதன் மூலம் சம்பூரணமாகவும் சமமானவராகவும் ஆகி, தந்தையுடன் வீடு திரும்புவதற்கான ஆயத்தங்களைச் செய்யுங்கள்.
இன்று, பாப்தாதா கவலையற்ற சக்கரவர்த்திகளின் ஒன்றுகூடலைப் பார்க்கிறார். இந்த வேளையில் மட்டுமே, இந்த ஒன்றுகூடல் நிகழ்கிறது. ஏனென்றால் குழந்தைகள் அனைவரும் தமது கவலைகளைத் (ஃபிக்கர்) தந்தையிடம் ஒப்படைத்து, அவரிடம் இருந்து போதையைப் (ஃபக்கூர்) பெற்றுள்ளார்கள். இந்த ஒன்றுகூடல் இந்த வேளையில் மட்டுமே நடத்தப்படுகிறது. நீங்கள் ஒவ்வொருவரும் காலையில் எழுந்த கணத்தில் இருந்து செயல்களைச் செய்யும்போதும் நீங்கள் கவலையற்றவராக இருந்து, ஒரு சக்கரவர்த்தியாகச் செயல்படுகிறீர்கள், அல்லவா? இந்தக் கவலையற்ற வாழ்க்கை மிகவும் அழகானது! கவலையற்றவராக இருக்கும்போது புலப்படும் அடையாளங்கள் எவை? பிரகாசிக்கும் ஆத்மாவின் ஒளி, ஒவ்வொருவரின் நெற்றியிலும் புலப்படுகிறது. உங்களின் வாழ்க்கையை நீங்கள் எவ்வாறு கவலையற்றதாக ஆக்கினீர்கள்? தந்தை குழந்தைகளான உங்கள் அனைவரின் வாழ்க்கைகளில் இருந்தும் கவலைகளை எடுத்து, உங்களுக்குப் போதையை வழங்கி உள்ளார். தமது வாழ்க்கைகளில் போதை இல்லாமல் இருப்பவர்கள், அதாவது, கவலையுடன் இருப்பவர்களின் நெற்றிகளில் ஒளி பிரகாசிக்க மாட்டாது. அதற்குப் பதிலாக, சுமையின் கோடுகளே அவர்களின் நெற்றிகளில் புலப்படும். எனவே, கூறுங்கள், நீங்கள் எதை விரும்புகிறீர்கள்? இலேசாக இருப்பதையா அல்லது சுமையையா? ஏதாவது சுமை இருந்தாலும் - சுமை என்றால் கவலை என்று அர்த்தம் - நீங்கள் அந்தக் கவலையைத் தந்தையிடம் கொடுத்து விட்டு அவரிடம் இருந்து போதையைப் பெற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் அனைவருமே கவலையற்ற வாழ்க்கையை விரும்புகிறீர்கள்தானே? உங்களைப் பார்க்கும் அனைவரும்கூட கவலையற்ற வாழ்க்கையையே விரும்புகிறார்கள்.
எனவே இன்று, பாப்தாதா எங்கும் உள்ள குழந்தைகள் அனைவரினதும் அவர்கள் இங்கே முன்னால் அமர்ந்திருந்தாலும் அல்லது எங்கே அமர்ந்திருந்தாலும் நெற்றிகளில் பிரகாசிக்கும் ஒளிகளைப் பார்க்கிறார். எனவே, நீங்கள் சதா கவலையற்றவராக இருக்கிறீர்களா அல்லது சிலவேளைகளில் கவலைப்படுகிறீர்களா? உங்களுக்கு ஏதாவது கவலைகள் உள்ளதா? தந்தை உங்களை சடப்பொருளை வென்றவர்களாகவும் விகாரங்களை வென்றவர்களாகவும் ஆக்கியிருப்பதனால், எப்படி நீங்கள் கவலைப்பட முடியும்? எனவே, நீங்கள் கவலையற்றவர்கள் ஆகியிருந்தால் உங்களின் கைகளை உயர்த்துங்கள். நீங்கள் இப்படி என்றென்றும் ஆகிவிட்டீர்களா? என்றென்றும் இப்படி ஆகிவிட்டீர்களா அல்லது சிலவேளைகளில் மட்டும்தானா? சிலவேளைகளில் மட்டும் கவலையற்றவர்களாக இருப்பவர்கள் இன்னமும் இருக்கிறார்கள். நீங்கள் உங்களின் கைகளை உயர்த்துகிறீர்கள் இல்லை. இதற்காக பாப்தாதா கைகளை உயர்த்துவதைப் பார்க்க விரும்பவில்லை. ஒவ்வொரு குழந்தையையும் ஒரு கவலையற்ற சக்கரவர்த்தியாகவே பாப்தாதா பார்க்க விரும்புகிறார். நீங்கள் சிலவேளைகளில் கவலைப்பட்டால், ஒரு மிக இலகுவான வழிமுறை, சிறிதளவு கவலை இருந்தாலும் ‘எனது’ (மேரா) என்பதை ‘உங்களுடையது’ (தேரா) என்று மாற்றுங்கள். இந்த எல்லைக்கு உட்பட்ட ‘எனது’ என்பதை மாற்றுவது, ‘எனது’ என்பதை ‘உங்களுடையது’ என்று மாற்றுவது மிகவும் இலகுவான வழிமுறை ஆகும். ‘எனது பாபா’ என்று நீங்கள் சொல்கிறீர்கள். எனவே ‘எனது’ என்பது என்ன? ஆகவே, எல்லைக்கு உட்பட்ட ‘எனது’ முடிவடைந்து விட்டதல்லவா? இப்போது ‘எனது பாபா’ என்றே உள்ளது. நீங்கள் அனைவரும் உங்களின் இதயபூர்வமாக, ‘எனது பாபா, அன்பான பாபா, இனிமையான பாபா’ என்றே கூறுகிறீர்கள், அப்படித்தானே? எனவே, ‘எனது’ என்பதை ‘உங்களுடையது’ என்பதற்குள் அமிழ்த்துவது கடினமா? இதில் உள்ள வேறுபாடு என்ன? ‘ம’ என்பதும் ‘த’ என்பதுமே. இது சிறியதொரு வேறுபாடே. ‘அனைத்தும் உங்களுடையதே’ என்ற எண்ணம் உங்களிடம் உள்ளது, எனவே ‘எனது’ என்று என்ன எஞ்சியிருக்கும்? என்னுடையவர் பாபா. குழந்தைகளான உங்களில் பெரும்பாலானோர் எல்லைக்கு உட்பட்ட ‘எனது’ என்பதை ‘உங்களுடையது’ என்று ஆக்கியிருப்பதை பாப்தாதா பார்த்தார். அதனால் நீங்கள் என்னவாகி உள்ளீர்கள்? கவலையற்ற சக்கரவர்த்திகள்! எனவே இன்று, பாப்தாதா குழந்தைகளான உங்கள் அனைவரையும் கவலையற்ற சக்கரவர்த்திகளாகவே பார்க்கிறார். பாருங்கள், பக்தி மார்க்கத்தில், உங்களின் விக்கிரகங்களை அவர்கள் உருவாக்கும்போது, இரட்டைக் கிரீடத்துடனேயே அவர்கள் உருவாக்கி உள்ளார்கள். முதலில் ஒளிக்கிரீடம் உள்ளது. ஏனென்றால், கவலையற்ற ஆத்மாவின் அடையாளம், நெற்றியில் உள்ள பிரகாசிக்கும் ஒளியே ஆகும். இரண்டாவது கிரீடம் விகாரங்களை வென்றவர்கள் ஆகுவதற்காகக் காட்டப்படுகிறது. ஆகவே, பாப்தாதா உங்களின் கவலைகள் அனைத்தையும் எடுத்துவிட்டு, உங்களுக்குப் போதையை வழங்கி உள்ளதால், நீங்கள் என்னவாகி உள்ளீர்கள் என்பதில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் கவலையற்ற சக்கரவர்த்தி ஆகவேண்டும். நீங்கள் சக்கரவர்த்தி ஆகியிருப்பதனால், உங்களுக்கு ஒரு சிம்மாசனமும் தேவை. எனவே, பாப்தாதா உங்களை மூன்று சிம்மாசனங்களுக்கு அதிபதி ஆக்கியுள்ளார். அவை என்ன மூன்று சிம்மாசனங்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? ஒன்று, உங்களின் நெற்றியின் மத்தியில் உள்ள சிம்மாசனம், இது எல்லோரிடமும் உள்ளது. இரண்டாவது சிம்மாசனம், பாப்தாதாவின் இதய சிம்மாசனம். மூன்றாவது சிம்மாசனம், உலக சிம்மாசனம், இராச்சிய சிம்மாசனம். உங்கள் அனைவரிடமும் இந்த மூன்று சிம்மாசனங்களும் உள்ளன, அல்லவா? அதிமேன்மையான சிம்மாசனம், பாப்தாதாவின் இதய சிம்மாசனமே ஆகும். ஆகவே, நீங்கள் அந்தச் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறீர்களா என்பதைச் சோதித்துப் பாருங்கள். யாரால் பாப்தாதாவின் இதய சிம்மாசனத்தில் அமர முடியும்? பாப்தாதாவைத் தமது இதய சிம்மாசனத்தில் சதா இருத்திக் கொண்டவர்கள், சதா தமது மேன்மையான மாஸ்ரர் சர்வசக்திவான் என்ற ஸ்திதியில் இருப்பவர்கள். எனவே, நீங்கள் எப்போதும் இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறீர்களா அல்லது சிலவேளைகளில் சேற்றுக்குள் கால் பதிக்கிறீர்களா என்பதைச் சோதித்துப் பாருங்கள். இந்தச் சரீர உணர்வே சேறு ஆகும். நீண்ட காலமாக நீங்கள் சேற்றுக்குள் இருந்ததால், சிலவேளைகளில் நீங்கள் மீண்டும் அந்தச் சேற்றுக்குள் செல்வதில்லை, அல்லவா?
எனவே, பாப்தாதா குழந்தைகளான உங்கள் அனைவருக்கும் காலத்தின் சமிக்கை ஒன்றை வழங்குகிறார். அவர் உங்களை ‘சடுதியாக’ என்ற பாடத்தை மிகவும் உறுதியாக்கச் செய்கிறார். இதனாலேயே, நீங்கள் சங்கமயுக நேரத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஏனென்றால், இந்த ஒரு பிறவியிலேயே நீங்கள் பல பிறவிகளுக்கான வெகுமதியை உருவாக்க வேண்டும். இதனாலேயே, நீங்கள் சங்கமயுகத்தில் ஒவ்வொரு கணமும் இரண்டு விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்ற சமிக்கையை உங்களுக்கு வழங்கி உள்ளார். நீங்கள் இந்த இரண்டு விடயங்களை ஞாபகம் செய்தீர்களா? காலம் மற்றும் எண்ணங்கள். குழந்தைகளான நீங்கள் அனைவரும் உங்களின் மனங்களில் உள்ள வீணான எண்ணங்களை பாப்தாதாவிற்குக் கொடுப்பதற்கான தைரியத்தைக் கொண்டுள்ளீர்கள். எனவே, நீங்கள் அந்தத் தைரியத்தை என்றென்றும் வைத்திருக்கிறீர்களோ எனச் சோதித்துப் பாருங்கள். ஏனென்றால், குழந்தைகளான நீங்கள் ஒரு தடவை தைரியத்தைப் பேணினால், தந்தை ஆயிரம் மடங்கு உதவியை வழங்குவார். எனவே, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நீங்கள் தந்தையின் முன்னால் தைரியத்துடன் எந்தவிதமான வீணான எண்ணங்களையும் கொண்டிருக்க மாட்டீர்கள் என்று வைத்த திடசங்கற்பமான எண்ணம் என்றென்றும் இருக்குமா? இது ஏனென்றால், வீணான எண்ணங்களில் அதிகளவு நேரம் கழிந்து விடுகிறது. இப்போதுள்ள நேரத்திற்கேற்ப, உலகிலுள்ள ஆத்மாக்களுக்கு செய்தியைக் கொடுப்பதே உங்களின் பணியாகும். எனவே, நீங்கள் வீணான எண்ணங்கள் அனைத்தையும் முடிக்க வேண்டும். அப்போது மட்டுமே, உங்களால் சந்தோஷமற்ற ஆத்மாக்களுக்கு அமைதி மற்றும் சந்தோஷத்தின் அனுபவத்தைக் கொடுக்க முடியும். சந்தோஷமற்ற ஆத்மாக்களைப் பார்க்கும்போது, பாப்தாதா பரிவு கொள்கிறார். நீங்களும் உங்களின் சகோதர, சகோதரிகளைப் பார்க்கும்போது இரக்கம் கொள்கிறீர்கள்தானே?
தற்சமயம், அனைவரும் ஆர்வம் கொண்டிருப்பதுடன் திட்டங்களையும் செய்திருப்பதுடன் அதை நடைமுறையிலும் செய்திருப்பதை பாப்தாதா கண்டார். நீங்கள் செய்த நிகழ்ச்சிகள் அனைத்தும் மிகவும் நன்றாக இருந்தன. அதற்காக பாப்தாதா உங்களைப் பாராட்டுகிறார். எவ்வாறாயினும், இப்போது காலத்திற்கேற்ப, நீங்கள் அவர்களை விரைவாக வாரிசுகள் ஆக்க வேண்டும். அதனால் அவர்களாலும் குறைந்தபட்சம் ஏதாவது ஆஸ்திக்கான உரிமையைப் பெற்றுக் கொள்ள முடியும். இது மிகவும் நல்லது என்று அவர்களில் பலரும் கூறுகிறார்கள். குழந்தைகளான நீங்கள் செய்த சேவையில் இருந்து இந்தப் பெறுபேற்றை பாப்தாதா பார்த்தார். அத்துடன் குழந்தைகளான உங்களை இட்டுத் தந்தை களிப்படைகிறார். நீங்கள் அனைத்தையும் உங்களின் இதயபூர்வமாகச் செய்கிறீர்கள். இப்போது காலத்திற்கேற்ப, அனைவரும் நீங்கள் கூறுவதை ஆர்வத்துடன் செவிமடுக்கிறார்கள். குறைந்தபட்சம் இந்தளவு வேறுபாடு காணப்படுகிறது. அவர்கள் அனைத்தும் மிக நன்றாக இருப்பதைக் காண்கிறார்கள், ஆனால் நீங்கள் இப்போது அவர்களை நல்லவர்கள் ஆக்கி, சாத்தியப்படும் எந்த வழிமுறையிலாவது ஆஸ்திக்கான உரிமையைப் பெறச் செய்ய வேண்டும். பாப்தாதா ஏற்கனவே இதைப் பற்றி உங்களுக்கு சமிக்ஞை செய்துள்ளார்: இப்போது காலத்திற்கேற்ப, நீங்கள் தீவிர முயற்சியாளர் ஆகவேண்டியது அவசியம். தீவிர முயற்சியாளர் ஆகுவதற்கு, நீங்கள் செய்ய வேண்டிய பிரதானமான முயற்சி, ஒரு விநாடியில் முற்றுப்புள்ளி வைப்பதே ஆகும். ஒரு விநாடியும் முற்றுப்புள்ளி இடுவதும் இரண்டும் ஒரே வேளையில் இடம்பெற வேண்டும். எனவே, பாப்தாதா இப்போது குழந்தைகளான உங்களின் கவலையற்ற சக்கரவர்த்தி என்ற ரூபத்தைப் பார்க்கிறார். நீங்கள் இந்த ரூபத்தை எல்லா வேளையும் அனுபவம் செய்ய வேண்டும். ஏதாவது அல்லது யாராவது உங்களின் முன்னால் வரும்போது, எனது என்பதை உங்களுடையது என்பதற்குள் அமிழ்த்தி விடுங்கள்.
இன்று வியாழக்கிழமை என்பதையும் பல குழந்தைகள் பாப்தாதாவிடம் வந்திருப்பதையும் பாப்தாதா கண்டார். பாப்தாதா கூறினார்: வாரத்தில் இரண்டு நாட்கள் விசேடமானவை: வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை. வியாழக்கிழமை குருவிற்குரிய தினம். எனவே, நீங்கள் குருவிடம் இருந்து எதைப் பெறுகிறீர்கள்? ஆசீர்வாதங்கள்! எனவே, வியாழக்கிழமை ஆசீர்வாதங்களுக்கு உரிய விசேடமான தினம் ஆகும். இந்த முறையில் வியாழக்கிழமையைக் கொண்டாடுங்கள். அமிர்த வேளையில் இருந்து ஏதாவதொரு ஆசீர்வாதத்தை உங்களின் புத்திகளில் வெளிப்படுத்தி வைத்திருங்கள். ஆசீர்வாதங்கள் பல உள்ளன. ஆனால் உங்களின் புத்திகளில் ஒரு விசேடமான ஆசீர்வாதத்தை வைத்திருந்து, பின்னர் சோதித்துப் பாருங்கள். ஆசீர்வாதங்களுக்கு உரிய நாளில், அந்த ஆசீர்வாதத்தை மீண்டும் மீண்டும் கூறுவதற்குப் பதிலாக, அந்த ஆசீர்வாதத்தின் சொரூபம் ஆகுங்கள். அந்த ஆசீர்வாதத்தின் சொரூபமாகி, அந்த ஆசீர்வாதத்தின் சொரூபமாக நீங்கள் எவ்வளவு காலத்திற்கு இருந்தீர்கள் எனத் தொடர்ந்து சோதியுங்கள். உலகில், குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை ஒரு விடுமுறை தினமாகவே உள்ளது. எனவே, ஞாயிற்றுக்கிழமையைக் கொண்டாடுங்கள். உங்களின் வாழ்க்கையில் என்ன பலவீனங்கள் இருந்தாலும் - உங்களின் எண்ணங்களில் அல்லது உங்களின் கனவுகளிலேனும் - அவற்றுக்கு விடை கொடுங்கள். எப்படி மக்கள் இந்த இரண்டு நாட்களையும் மிக நன்றாகக் கழிக்கிறார்களோ, அதேபோல், நீங்களும் குறிப்பாக இந்த இரண்டு நாட்களிலும் இந்த இலட்சியத்தையும் அதற்கான தகைமைகளையும் வைத்திருக்க வேண்டும். உங்களின் இலட்சியத்தை மட்டுமின்றி, அதன் தகைமைகளையும் உங்களின் கவனத்தில் வைத்திருங்கள். குழந்தைகளான உங்கள் அனைவரையும் தன்னுடன் வீட்டுக்குத் திருப்பி அழைத்துச் செல்வார் என்று பாப்தாதா சத்தியம் செய்துள்ளார். எனவே, அவருடன் வீடு திரும்பிச் செல்வதற்காக நீங்கள் என்ன ஆயத்தங்களைச் செய்ய வேண்டும்? தந்தை ஒரு விநாடியில் சரீரமற்றவர் ஆகுவார். எவ்வாறாயினும், நீங்களும் சத்தியம் செய்துள்ளீர்கள், நீங்கள் ஒன்றுசேர்ந்து செல்வீர்கள் என்று தந்தையும் சத்தியம் செய்துள்ளார். ஆகவே, நீங்கள் அதற்கான ஆயத்தங்களைச் செய்துள்ளீர்களா எனச் சோதித்துப் பாருங்கள். ஒரு விநாடியில் முற்றுப்புள்ளி வைத்து, சம்பூரணமும் முழுமையும் ஆகி, கிளம்பிச் செல்லலாம்! நீங்கள் இத்தகைய ஆயத்தங்களைச் செய்துள்ளீர்களா? நீங்கள் அனைவரும் பாபாவுடன் திரும்பிச் செல்ல விரும்புகிறீர்கள்தானே? நீங்கள் பாபாவுடன் திரும்பிச் செல்ல விரும்பினால் தலையை அசையுங்கள். நீங்கள் திரும்பிச் செல்லவே விரும்புகிறீர்கள். அச்சா. உறுதியாகவா? உங்களின் கையை அவரின் கையில் வைப்பது என்றால் சமமானவர் ஆகுதல் என்று அர்த்தம். எனவே, சோதித்துப் பாருங்கள், ஏனென்றால் அந்த நேரம் சடுதியாக வரும். எனவே, பாபாவுடன் வீட்டுக்குத் திரும்பிச் செல்லும் வகையில் நீங்கள் ஆயத்தங்களைச் செய்து விட்டீர்களா?
தந்தை குழந்தைகளான உங்களை நேசிக்கிறார். எனவே, தந்தை உங்களில் எவரையும் பின்னால் விட்டுச் செல்ல விரும்பவில்லை. நாங்கள் ஒன்றாக இருக்கிறோம், நாங்கள் ஒன்றாகவே இருப்போம். நாங்கள் ஒன்றாகவே திரும்பிச் செல்வோம். பின்னர் இராச்சியத்தில் அரச குடும்பத்திற்குள் ஒன்றாகச் செல்வோம். நீங்கள் இதை ஏற்றுக் கொள்கிறீர்களா? ஏற்றுக் கொள்கிறீர்களா? நீங்கள் தயாரா? நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா என்று உங்களிடம் கேட்கும்போது, நீங்கள் உங்களின் கைகளை உயர்த்துகிறீர்கள். ஆனால் இதற்காக நீங்கள் உங்களின் கைகளை உயர்த்துகிறீர்கள் இல்லை. நீங்கள் ஆயத்தங்களைச் செய்திருந்தால் உங்களின் கைகளை உயர்த்துங்கள்! உங்களின் கைகளை உயரே உயர்த்துங்கள்! அச்சா. நாளையே விநாசம் நடக்குமாயின் நீங்கள் தயாரா? எவ்வாறாயினும் நீங்கள் உங்களின் சேவையைச் செய்து முடித்துவிட்டீர்களா? இன்னமும் செய்வதற்கு சேவை எஞ்சியுள்ளது. நீங்கள் உங்களின் சேவையைப் பூர்த்தி செய்து விட்டீர்களா? அனைவரும் செய்தியைப் பெற்று விட்டார்களா? உங்களின் சொந்தப் பிரதேசத்தில் சோதித்துப் பாருங்கள்: நீங்கள் அனைவருக்கும் தந்தை வந்துவிட்டார் என்றும் அவர்கள் தமது ஆஸ்தியைக் கோர வேண்டும் என்றும் செய்தியைக் கொடுத்து விட்டீர்களா? நீங்கள் இப்போது அதற்கான திட்டங்களைச் செய்கிறீர்கள். ஒவ்வொரு வீட்டுக்கும் செய்தியை வழங்குவதற்கான திட்டங்களை நீங்கள் இப்போது செய்வதாக பாப்தாதா அறிந்தார். அது நல்லது. நீங்கள் செய்தியை வழங்க வேண்டும், இல்லாவிட்டால் நீங்கள் முறைப்பாடுகளைப் பெறுவீர்கள். நீங்கள் நிகழ்ச்சிகளைச் செய்தீர்கள். எழுந்து நில்லுங்கள்! நீங்கள் தந்தையிடம் திட்டங்களைக் காட்டியுள்ளீர்கள், அல்லவா? எழுந்து நில்லுங்கள்! (பாபா மீடியாத் துறையினரை எழுந்து நிற்கச் செய்தார்) இது நல்லது. அவர்களின் முறைப்பாட்டை முடித்துவிடுங்கள். ஏனென்றால், அனைத்தும் சடுதியாக நடக்கப் போகிறது. எனவே, ஒன்றுகூடி இந்தத் திட்டத்தை நடைமுறையில் கொண்டு வாருங்கள். நீங்கள் விரைவாக ஒருவரோடு ஒருவர் ஆலோசியுங்கள். அதற்கு நேரம் எடுத்தால், உங்களின் உற்சாகம் சிறிதளவு குறைவடைகிறது. ஒவ்வொரு வீட்டில் இருந்தும் வருகின்ற இந்த முறைப்பாடு முடிவடைய வேண்டும் என்று பாப்தாதா விரும்புகிறார்: தந்தை வந்தார், தந்தை வந்துள்ளார் என்பதுகூட எங்களுக்குத் தெரியவில்லை, அவர் சென்றுவிட்டார், எங்களுக்குக் கிடைக்கவில்லை. உங்கள் அனைவருக்கும் உற்சாகம் உள்ளதல்லவா? உங்களுக்கு உற்சாகம் இருக்கிறதா? நீங்கள் இந்தச் சேவையைச் செய்து, அந்த முறைப்பாட்டை முடிக்க வேண்டும். உங்களுக்குள் உற்சாகம் இருக்கும்போது, நீங்கள் பாப்தாதாவின் உதவியையும் பெற்றுக் கொள்கிறீர்கள். அச்சா.
உங்கள் அனைவருக்கும் பாப்தாதா எதை விரும்புகிறார் என்பது தெரியும்: நீங்கள் சமமானவராகவும் முழுமையானவராகவும் ஆகவேண்டும். எப்போதும் இந்த வார்த்தைகளைச் சோதியுங்கள்: நான் தந்தையின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுகிறேனா? பாப்தாதா ஒவ்வொரு குழந்தையையும் தனது நம்பிக்கை நட்சத்திரமாகவே கருதுகிறார். ஒவ்வொரு குழந்தையும் தந்தையின் மீது அன்பு வைத்துள்ளார். பாப்தாதாவிற்கு இது தெரியும். உங்கள் அனைவரையும் மதுவனத்திற்கு அழைத்து வருவது எது? நீங்கள் அனைவரும் அன்பெனும் புகைவண்டியில் அல்லது அன்பெனும் விமானத்தில் ஏறியே வந்துள்ளீர்கள். அதனால், தந்தையின் மீது குழந்தைகளின் அன்பு என்ற பாடத்தில் குழந்தைகளான உங்களையிட்டு தந்தை மகிழ்ச்சி அடைகிறார். எவ்வாறாயினும், நீங்கள் பாபா விரும்பும் இரண்டு வார்த்தைகளில் சம்பூரணம் அடைய வேண்டும்: சமமானவர் மற்றும் முழுமை ஆகுதல். இதுவும் நிறைவேற்றப்பட வேண்டும். எனவே இன்று, எங்கும் உள்ள குழந்தைகளான உங்கள் அனைவரையும் பாப்தாதா தனது இதயபூர்வமான அன்புடன் பார்ப்பதுடன் தனது இதயபூர்வமான அன்புடன் ஒவ்வொரு குழந்தையையும் வாழ்த்துகிறார். அச்சா.
ஆசிரியர்கள் பலர் வந்துள்ளனர்: பாப்தாதா எப்போதும் ஆசிரியர்களை நினைவு செய்து அவர்களுக்கு அன்பை வழங்குகிறார். ஏனென்றால், ஒவ்வொரு சகோதரனும் சகோதரியும் முன்னேறச் செய்வதற்கு ஆசிரியர்கள் கருவிகள் ஆகியுள்ளார்கள். பாப்தாதா ஆசிரியர்களை குருபாய் (குருவிற்கு அடுத்து வரிசையில் இருப்பவர்) என்றே அழைக்கிறார். குருபாய் என்றால் சமமானவர் என்று அர்த்தம். ஏனென்றால், தந்தையின் கடமை சதா சேவை செய்வதில் மும்முரமாக இருப்பதைப் போல், தகுதியான ஆசிரியர்களும் தந்தையைப் போன்றே சேவையாளர்கள் ஆவார்கள். அத்துடன் மற்றவர்களை வெற்றி சொரூபம் ஆக்குகின்ற சதா வெற்றி சொரூபமாக இருக்கிறார்கள். பாப்தாதா எப்போதும் தனது இதயத்தில் ஆசிரியர்களுக்காக மிகுந்த அன்பு வைத்திருக்கிறார். ஏன்? ஓர் ஆசிரியர் என்றால் சதா சேவையாளர், எப்போதும் மற்றவர்களைத் தந்தைக்குச் சமமாக ஆக்குபவர், அத்துடன் புதியவர்களுக்குத் தந்தையின் அறிமுகத்தைக் கொடுப்பவர், அவர்களை அனுபவசாலிகளாகவும் தந்தையிடம் இருந்து ஆஸ்தியைப் பெறுவதற்குத் தகுதி வாய்ந்தவர்கள் ஆக்குபவரும் ஆவார். எனவே, பாப்தாதா ஆசிரியர்களை இட்டு களிப்படைகிறார். ஆசிரியர்கள், தந்தைக்காகத் தமது இதயங்களில் கொண்டுள்ள அன்பு – அவர்கள் அந்த அன்பால் மாணவர்களை நிரப்பி, அவர்களும் ஆஸ்திக்கான உரிமையைப் பெறச் செய்கிறார்கள். தந்தைக்கு ஆசிரியர்களான உங்கள் ஒவ்வொருவரின் மீதும் நீங்கள் தந்தை வைத்திருக்கும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவீர்கள் என்றும் தந்தை விரும்புவதை வெளிப்படுத்துவீர்கள் என்றும் நம்பிக்கை இருக்கிறது. இதனாலேயே, பாப்தாதா ஆசிரியர்களான உங்கள் ஒவ்வொருவருக்கும் பல்கோடிமடங்கு பாராட்டுக்களை வழங்குகிறார். அவர் உங்களுக்குப் பாராட்டுக்களை வழங்குகிறார். அச்சா.
இரட்டை வெளிநாட்டவர்களிடம்: இரட்டை வெளிநாட்டவர்களான நீங்கள் செய்யும் சேவை, பாரதத்தில் உள்ள ஆத்மாக்கள் செய்யும் சேவைக்கு சளைத்ததல்ல என்பதை பாப்தாதா பார்த்தார். நீங்கள் அனைவரும் உங்களின் சொந்த இடங்களில் சேவையை விரிவாக்குவதையும் அத்துடன் நீங்களாகவே ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் முன்னேறுவதையும் பார்த்து பாப்தாதா களிப்படைகிறார். இரட்டை வெளிநாட்டவர்களின் சம்ஸ்காரம், அவர்கள் எதைச் செய்தாலும் அதை ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் செய்வதுடன் அதைச் செய்து முடிக்கிறார்கள். அத்துடன் அவர்கள் தமது முயற்சிகளிலும் கவனம் செலுத்துகிறார்கள். நீங்கள் அனைவரும் தீவிர முயற்சியாளர்களாக இருப்பதற்காக உங்களின் கைகளை உயர்த்தினீர்கள். நீங்கள் தீவிர முயற்சியாளர்களா? அச்சா. அத்துடன் அனைவரின் சார்பாகவும் பற்பல பாராட்டுக்கள். ஏன்? தீவிர முயற்சியாளர் என்றால், நடைமுறையில் பாப்தாதாவின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுபவர் என்று அர்த்தம். எனவே, உங்களின் தீவிர முயற்சிகளுக்காகப் பாராட்டுக்கள். நீங்கள் தீவிர முயற்சியாளர்கள். அத்துடன் எப்போதும் தீவிர முயற்சியாளர்களாக இருந்து, மற்றவர்களையும் தீவிர முயற்சியாளர்கள் ஆக்குவீர்கள். அப்போது வெளிநாட்டில் உள்ள நாடுகள் அனைத்தும் தீவிர முயற்சியாளர்களின் பட்டியலில் இடம்பெறும். குறிப்பிட்ட அளவிற்கு உங்களிடம் இந்தப் பதிவுகள் உள்ளன. ஆனால் இன்னமும் நீங்கள் இதைக் காட்ட வேண்டும். எவ்வாறாயினும், உங்களின் முயற்சிகளுக்காக பாப்தாதா உங்களைப் பாராட்டுகிறார். நீங்கள் முரளியில் கவனம் செலுத்துகிறீர்கள். உங்களுக்கு முரளியின் மீது அன்பு இருப்பதை பாப்தாதா விரும்புகிறார். அத்துடன் உங்களுக்கு மதுவனத்தின் மீதும் அன்பு உள்ளது. உங்களுக்கு முரளியின் மீது அன்பு உள்ளது. உங்களுக்குக் குடும்பத்தின் மீது அன்பு உள்ளது. அத்துடன் நீங்கள் ‘எனது பாபா!’ இலும் அன்பு வைத்துள்ளீர்கள். நீங்கள் இப்போது சூட்சுமமான முயற்சி செய்வதற்கும் நல்ல கவனம் செலுத்துகிறீர்கள். குழந்தை ஜனக்கும் வெளிநாடுகளின் மீது அதிகளவு கவனம் செலுத்துவதை பாப்தாதா பார்த்தார். அவர் இங்கே வசித்தாலும் அவரின் ஒவ்வொரு வகுப்பும் முதலில் வெளிநாடுகளுக்கே செல்கிறது. எனவே, நீங்கள் மிக நல்ல பராமரிப்பைப் பெறுகிறீர்கள். இதுவும் உங்களின் அதிர்ஷ்டமே. நீங்கள் அதி அதிர்ஷ்டமானவரும் அதி இனிமையானவரும் ஆவீர்கள். அச்சா.
முதல் தடவை வந்திருப்பவர்களிடம்: உங்களில் பலர் இருக்கிறீர்கள். நீங்கள் கை அசைக்கலாம். நீங்கள் அனைவரும் உங்களின் சொந்த வீடான மதுவனத்தை வந்தடைந்துள்ளீர்கள். பாப்தாதா இதற்காகக் குழந்தைகளான உங்கள் ஒவ்வொருவரையும் பாராட்டுகிறார். ஏனென்றால், நீங்கள் இறுதிக் காலத்திற்கு முன்னர் இங்கே வந்தடைந்துள்ளீர்கள். நீங்கள் கடைசியாக வந்து, வேகமாகச் செல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ளீர்கள். பாப்தாதா குழந்தைகளான உங்களைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறார். உங்களுக்கு வரவேற்புகள். எனவே, இப்போது தீவிர முயற்சி செய்து, முன்னேறிச் சென்று, அனைவருக்கும் முன்னால் செல்லும் திடசங்கற்பமான எண்ணத்தைக் கொண்டிருங்கள். திடசங்கற்பமே வெற்றிக்கான சாவி ஆகும். இன்று இங்கே வந்துள்ள குழந்தைகளான உங்கள் அனைவருக்கும் பாப்தாதா திடசங்கற்பம் என்ற சாவியை விசேடமான பரிசாக வழங்குகிறார். உங்களின் திடசங்கற்பம் ஒருபோதும் குறைவடைய அனுமதிக்காதீர்கள். திடசங்கற்பம் சதா இலகுவாக உங்களை முன்னேறச் செய்யும். பாப்தாதா களிப்படைகிறார். வரவேற்புகள்; நீங்கள் உங்களின் ஆஸ்தியைப் பெற வந்துள்ளீர்கள். அதற்காகப் பற்பல பாராட்டுக்கள். அச்சா.
எங்கும் உள்ள பிராமணர்களான உங்களுக்கு பாப்தாதா தனது இதயபூர்வமான அன்பையும் நீங்கள் சதா முன்னேற வேண்டும் என்ற மேன்மையான எண்ணத்தையும் வழங்குகிறார். தந்தை குழந்தைகளான உங்கள் ஒவ்வொருவரையும் பார்க்கிறார், அத்துடன் உங்களைப் பார்க்கும்போது தனது இதயத்தில் அமிழ்த்துகிறார். நெருக்கமாக அமர்ந்திருப்பவர்கள், பாப்தாதாவைத் தங்களுக்கு முன்னால் பார்க்கிறார்கள். ஏனையோர் வசதிகளின் மூலம் தந்தையை உங்களின் முன்னால் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் எங்கே அமர்ந்திருந்தாலும் பாப்தாதாவும் உங்களைத் தனக்கு முன்னால் அமர்ந்திருப்பதைப் போன்றே பார்க்கிறார், அத்துடன் உங்கள் ஒவ்வொருவருக்கும் தனது இதயபூர்வமான அன்பை வழங்குகிறார். தொடர்ந்து முன்னேறுங்கள். தீவிர முயற்சி செய்து, அனைவருக்கும் முன்பாகத் தொடர்ந்து முன்னேறுங்கள். அச்சா. பாப்தாதாவின் முன்னால் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் அன்பும் நினைவுகளும் அத்துடன் சதா முன்னேறுவதற்காக வாழ்த்துக்களும் உரித்தாகுக. வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! அச்சா.
ஆசீர்வாதம்:
நீங்கள் கற்பித்தல்கள் அனைத்தையும் நடைமுறையில் கடைப்பிடிப்பதன் மூலம் அதற்கான அத்தாட்சியை வழங்கும், காட்சிகளை அருளுவதற்குத் தகுதிவாய்ந்த ரூபம் ஆகுவீர்களாக.இந்தக் கற்பித்தல்களைத் தமது புத்திகளில் கற்பித்தல்களின் வடிவில் வைத்திருப்பது மட்டுமன்றி, அவற்றை நடைமுறையில் கடைப்பிடிப்பவர்கள், இந்த ஞானத்தின் சொருபம், அன்பின் சொரூபம், ஆனந்தத்தின் சொரூபம் என்ற ஸ்திதியில் ஸ்திரமாக இருப்பார்கள். இந்த ஞானத்தின் ஒவ்வொரு கருத்தையும் நடைமுறையில் கடைப்பிடிப்பவர்களால் புள்ளி ரூபத்தில் ஸ்திரமாக இருக்க முடியும். ஒரு புள்ளியைப் பற்றிச் சிந்திப்பதும் பேசுவதும் இலகுவானது. ஆனால் அவ்வாறே ஆகி, அதன் அனுபவத்தை ஏனைய ஆத்மாக்களுக்கு வழங்குவது என்றால் அதை நிரூபித்தல் ஆகும். இதுவே காட்சிகளை அருளுவதற்குத் தகுதியான ரூபம் ஆகுதல் என்பதன் அர்த்தம் ஆகும்.
சுலோகம்:
உங்களின் ஒருமுகப்படுத்தும் சக்தியை அதிகரியுங்கள், உங்களின் மனம் மற்றும் புத்தி அலைபாய்வது நின்றுவிடும்.அவ்யக்த சமிக்ஞை: இப்போது உங்களின் அருள்கின்ற ரூபத்தை வெளிப்படுத்துங்கள்.
பலவீனமானதோர் ஆத்மா உங்களின் முன்னால் வரும்போது, அந்தப் பலவீனமான ஆத்மாவிற்கு சக்தி கொடுங்கள். நீங்கள் பெற்றுள்ள சகல சக்திகள் என்ற ஆஸ்தியை அந்த ஆத்மாவிற்கு வழங்குங்கள். ஓர் அருள்பவராகித் தந்தையின் பொக்கிஷங்களை ஆத்மாக்கள் அனைவருக்கும் வழங்குங்கள். உங்களின் சொந்த சக்திகளை தாகத்துடன் பரிதவிக்கும் ஆத்மாக்களுக்கு வாழ்க்கைத் தானத்தைக் கொடுக்கப் பயன்படுத்துங்கள். ஆசீர்வாதங்களை அருள்பவராகி, ஆசீர்வாதங்களால் அவர்களைத் தந்தைக்கு நெருக்கமான உறவுமுறைக்குள் கொண்டு வாருங்கள். இங்கே அருள்பவராக இருக்கும் உங்களின் சம்ஸ்காரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் உங்களால் எதிர்கால 21 பிறவிகளுக்கு உங்களை அரச அந்தஸ்தின், அதாவது, அருள்பவரின் சம்ஸ்காரங்களால் நிரப்ப முடியும்.