28.04.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, அழியக்கூடிய சரீரங்கள் மீது அன்பு கொள்ளாதீர்கள். சரீரமற்ற ஒரேயொருவர் மீது மாத்திரமே அன்பு கொண்டிருங்கள். எவரது சரீரத்தைப் பார்க்கும் போதும், அதனைப் பார்க்காதீர்கள்.
கேள்வி:
உங்கள் புத்தியைச் சுத்தம் ஆக்குவதற்கு என்ன முயற்சி தேவை? சுத்தமான புத்தியின் அடையாளங்கள் என்ன?பதில்:
ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுவதனால் மாத்திரமே உங்கள் புத்தி சுத்தம் ஆகுகின்றது. அத்தகைய ஆத்ம உணர்வுடைய குழந்தைகள், தம்மை ஆத்மாக்கள் எனக் கருதுவதுடன், ஒரேயொரு தந்தையின் மீது மாத்திரமே அன்பு கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் தந்தை சொல்வதை மாத்திரமே கேட்கிறார்கள். எவ்வாறாயினும், முட்டாள் புத்தி உள்ளவர்கள் சரீரங்களின் மீது அன்பு கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்தும் தமது சரீரங்களை அலங்கரிக்கிறார்கள்.ஓம் சாந்தி.
“ஓம்சாந்தி” எனக் கூறியவர் யார்? யார் அதைக் கேட்டார்கள்? ஏனைய சத்;சங்கங்களில், பின்பற்றுபவர்களே அதனைச் செவிமடுப்பார்கள். மகாத்மா அல்லது ஒரு குரு அதனைக் கூறினார் என அவர்கள் கூறுவார்கள். நீங்கள் அதனைப் பரமாத்மா கூறினார் என்றும், ஆத்மாக்கள் செவிமடுத்தார்கள் என்றும் கூறுவீர்கள். இது புதியதாகும். நீங்கள் ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆக வேண்டும். உங்களில் சிலர் இங்கே சரீர உணர்வில் அமர்ந்திருக்கிறீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் இங்கே ஆத்ம உணர்வில் அமர்ந்திருக்க வேண்டும். ஆத்மாவான நான் இந்தச் சரீரத்தில் பிரசன்னம் ஆகியிருக்கின்றேன். சிவபாபா எங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். உங்கள் புத்தி இதனை மிகத்தெளிவாக நினைவு செய்ய வேண்டும். ஆத்மாவான நான் பரமாத்மாவுடன் ஒரு தொடர்பைக் கொண்டிருக்கின்றேன். பரமாத்மா வந்து, இந்தச் சரீரத்தினூடாக எங்களுடன் பேசுகின்றார். ஆகையால், இவர் முகவர் ஆகியுள்ளார். அவரே உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். அவர் இவருக்கும் ஆஸ்தியைக் கொடுக்கின்றார். ஆகையால், உங்கள் புத்தி அவரிடம் செல்லட்டும். உதாரணமாக, ஒரு தந்தைக்கு ஐந்து முதல் ஏழு குழந்தைகள் இருந்தால், அவர்களுடைய புத்திகளின் யோகம் தமது தந்தையுடனேயே இருக்கும். அது ஏனெனில், அவரிடமிருந்தே அவர்களுக்கு ஆஸ்தி கிடைக்கிறது. ஓர் ஆஸ்தியானது ஒரு சகோதரனிடம் இருந்து கிடைப்பதில்லை. ஓர் ஆஸ்தி எப்பொழுதும் தந்தையிடம் இருந்தே பெறப்படுகின்றது. ஓர் ஆத்மாவிடம் இருந்து இன்னோர் ஆத்மா ஆஸ்தியைப் பெறுவதில்லை. ஆத்மாக்கள் என்ற ரீதியில் நாங்கள் அனைவரும் சகோதரர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆத்மாக்களாகிய எங்கள் அனைவரதும் தொடர்பு, பரமாத்மாவான பரமதந்தையுடன் மாத்திரமே ஆகும். அவர் கூறுகின்றார்: சதா என்னை மாத்திரமே நினைவு செய்யுங்கள். என் மீது மாத்திரமே அன்பு கொண்டிருங்கள். படைப்பின் மீது அன்பு கொண்டிருக்காதீர்கள். ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுங்கள்! என்னைத் தவிர நீங்கள் வேறு எந்தச் சரீரதாரிகளையும் நினைவு செய்யும்போது, அது சரீர உணர்வென்றே அழைக்கப்படுகின்றது. இந்தச் சரீரதாரி உங்கள் முன்னிலையில் இருந்தாலுமே இவரை நீங்கள் பார்க்கக்கூடாது. ஒரேயொருவரின் நினைவு மாத்திரமே உங்கள் புத்தியில் நிலைத்திருக்கட்டும். அம் மக்கள் கூறவேண்டும் என்பதற்காக, அனைவரும் சகோதரர்கள் எனக் கூறுகிறார்கள். நாங்கள் பரமாத்மா பரமதந்தையின் குழந்தைகளான, ஆத்மாக்கள் என்பதை நீங்கள் இப்பொழுது அறிந்திருக்கிறீர்கள். நீங்கள் பரமாத்மாவான தந்தையிடம் இருந்து ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். அந்தத் தந்தை கூறுகின்றார்: உங்கள் அன்பு என்னிடம் மாத்திரமே இருக்க வேண்டும். நானே வந்து ஆத்மாக்களாகிய உங்களை என்னோடு நிச்சயம் செய்து கொள்கிறேன். இந்த நிச்சயதார்த்தம் ஒரு சரீரதாரியுடன் அல்ல. இங்குள்ள ஏனைய அனைத்து உறவுமுறைகளும் சரீரதாரிகளுடனே ஆகும். இந்த நேரத்தில், நீங்கள் ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆக வேண்டும்: ஆத்மாவான நான், தந்தை கூறுவதைக் கேட்கின்றேன். ஆகையால், உங்கள் புத்தி அந்தத் தந்தையை நோக்கி இருக்க வேண்டும். தந்தை இவருக்கு அருகில் அமர்ந்திருந்து, எங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கின்றார். அவர் இந்தச் சரீரத்தைக் கடனாகப் பெற்றிருக்கின்றார். ஆத்மா வீட்டிற்குள், அதாவது, இந்தச் சரீரத்திற்குள் பிரவேசித்து, ஒரு பாகத்தை நடிக்கின்றார். இந்த ஆத்மா ஒரு பாகத்தை நடிப்பதற்காகத் தன்னை ஒரு வீட்டுக்காவலில் வைத்திருப்பதைப் போன்றதாகும். அவர் சுதந்திரமாக இருந்தாலும்;, அவர் ஒரு சரீரத்திற்குள் பிரவேசித்து, இந்த வீட்டிற்குள் தன்னைப் பூட்டிவைத்துக் கொண்டு தனது பாகத்தை நடிக்கின்றார். ஆத்மாவே தனது பாகத்தை நடிப்பதற்காக ஒரு சரீரத்தை நீக்கி, இன்னொன்றை எடுக்கின்றார். தற்போது, நீங்கள் எந்தளவிற்கு ஆத்ம உணர்வில் நிலைத்து இருக்கிறீர்களோ, அந்தளவிற்கு உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோருவீர்கள். பாபாவின் சரீரத்தின் மீது உங்களுக்குச் சற்றேனும் அன்பு இருக்கக்கூடாது. இந்தச் சரீரம் பயனற்றது. நான் உங்களுக்கு விளங்கப்படுத்துவதற்காக மாத்திரமே இந்தச் சரீரத்திற்குள் பிரவேசிக்கின்றேன். இந்த வெளிநாடு இராவணனுடைய இராச்சியம். மக்கள் இராவணனின் கொடும்பாவியை எரிக்கின்றார்கள். ஆனால், அதனைப் பற்றியோ அல்லது அவர்கள் உருவாக்குகின்ற உருவங்கள் எதனையும் பற்றியோ அவர்கள் எதனையும் புரிந்து கொள்வதில்லை. அவர்களுடைய புத்தி முற்றிலும் முட்டாள் தனமானது. இராவண இராச்சியத்தில் அனைவரது புத்தியும் முற்றிலும் முட்டாள்தனம் ஆகுகின்றது. சரீர உணர்வு உள்ளது. புத்திகள் சீரழிந்துள்ளன. தந்தை கூறுகின்றார்: முட்டாள் புத்தியை உடையவர்கள், தொடர்ந்தும் சரீரங்களை நினைவுசெய்து, சரீரதாரிகளின் மீதே அன்பு வைக்கின்றார்கள். சுத்தமான புத்தியை உடையவர்கள், தொடர்ந்தும் தம்மை ஆத்மாக்கள் எனக் கருதுகின்ற அதேவேளை, பரமாத்மாவை நினைவுசெய்து, அவர் கூறுவதைத் தொடர்ந்தும் செவிமடுப்பார்கள். இதற்கே முயற்சி தேவை. இந்தச் சரீரம் தந்தையின் இரதம். இந்தச் சரீரத்தின் மீது பலரும் அன்பு கொண்டிருக்கின்றார்கள். அதேபோன்றே, ஹுசைனின் குதிரை மிக அழகாக அலங்கரிக்கப்பட்ட போதிலும், புகழோ ஹுசைனுக்கே உள்ளது. அது குதிரையைப் பற்றியது அல்ல. ஹுசைனின் ஆத்மா நிச்சயமாக ஒரு மனித சரீரத்திற்குள் பிரவேசித்திருக்கும். அவர்கள் இந்த விடயங்களைப் புரிந்து கொள்வதில்லை. இதுவே உருத்திரனின் அழியாத ஞானயாகம் என அழைக்கப்படுகின்றது. இதற்குள்ளேயே, சுய இராச்சியத்தைக் அடைவதற்காகக் குதிரை அர்ப்பணிக்கப்படுகின்றது. “அஷ்வ” (குதிரை) என்ற பெயரைக் கேட்டதும், அவர்கள் அதனை ஒரு குதிரையாகவே புரிந்து கொண்டார்கள். அவர்கள் ஒரு குதிரையைப் பலி கொடுக்கிறார்கள். அக்கதைகள் அனைத்தும் பக்தி மார்க்கத்திற்கான கதைகள் ஆகும். உங்களை இப்பொழுது அழகாக ஆக்குபவர் இந்தப் பயணி ஆவார். நாங்கள் முன்னர் அழகாக இருந்தோம் என்பதும், இப்பொழுது நாங்கள் அவலட்சணம் ஆகிவிட்டோம் என்பதையும் நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். வருகின்ற ஆத்மா ஒவ்வொருவருமே முதலில் சதோபிரதானாக இருக்கிறார்கள், அதன்பின்னர் சதோ, ரஜோ, தமோ ஸ்திதிகளைக் கடந்து செல்கிறார்கள். தந்தை வந்து, அனைவரையும் அழகானவர் ஆக்குகின்றார். ஒரு சமயத்தை ஸ்தாபிப்பதற்காக வருகின்ற ஆத்மாக்கள் அனைவருமே முதலில் அழகாகவே இருக்கின்றார்கள். அதன்பின்னர், காமச்சிதையில் அமர்ந்த பின்னர் அவர்கள் அவலட்சணம் ஆகுகின்றார்கள். ஆத்மாக்கள் முதலில் அழகாக இருக்கின்றார்கள், பின்னர் அவலட்சணம் ஆகுகிறார்கள். இந்த ஆத்மா முதல் இலக்கத்தில் வருவதால், இவரே அதி அழகானவர் ஆவார். இலக்ஷ்மி நாராயணனைப் போன்று எவருமே அந்தளவிற்கு இயற்கை அழகு நிறைந்தவர்களாக இருக்க முடியாது. இது இந்த ஞானத்தின் விடயம். கிறிஸ்தவர்கள் பாரத மக்களை விட வெள்ளையாக இருக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் குளிர்மையான சுவாத்தியத்தில் வாழ்கிறார்கள். எவ்வாறாயினும், சத்தியயுகத்தில் இயற்கையான அழகுள்ளது. அங்கே ஆத்மா, சரீரம் இரண்டுமே அழகாக இருக்கின்றன. இந்த நேரத்தில், அனைவருமே தூய்மை அற்றவர்களும் அவலட்சணமானவர்களும் ஆவார்கள். தந்தை அனைவரையும் அழகானவர்கள் ஆக்குவதற்காக வருகின்றார். முதலில் அவர்கள் சதோபிரதானாகவும் தூய்மையாகவும் இருக்கிறார்கள். அதன்பின்னர் கீழே இறங்கும்போது, அவர்கள் நாளடைவில் காமச்சிதையில் அமர்வதால், அவலட்சணம் ஆகுகின்றார்கள். தந்தை இப்பொழுது ஆத்மாக்கள் அனைவரையும் தூய்மை ஆக்குவதற்காக வந்துள்ளார். தந்தையை நினைவு செய்வதனால் மாத்திரமே நீங்கள் தூய்மை ஆகுவீர்கள். ஆகையால், நீங்கள் ஒரேயொருவரை மாத்திரமே நினைவுசெய்ய வேண்டும். சரீரதாரிகளின் மீது அன்பு வைக்காதீர்கள். நீங்கள் ஒரேயொரு தந்தைக்கு மாத்திரமே உரியவர்கள் என்பதையும் அவரே உங்களுக்கு அனைத்தும் என்பதையும் உங்கள் புத்தியில் வைத்திருங்கள். உங்கள் கண்களால் பார்க்கின்ற அனைத்தும் அழிய உள்ளன. உங்கள் கண்களும் கூட இருக்க மாட்டாது. பரமாத்மாவான பரமதந்தையே திரிநேத்ரி (மூன்று கண்களைக் கொண்டவர்) எனப்படுகின்றார். அவர் இந்த ஞானம் என்ற மூன்றாவது கண்ணைக் கொண்டிருக்கின்றார். அவரே அனைத்து பட்டங்களையும் பெற்றிருக்கின்றார்: திரிநேத்ரி, திரிகாலதரிசி, திரிலோகிநாத். நீங்கள் இப்பொழுது மூன்று உலகங்களையும் பற்றிய ஞானத்தைக் கொண்டிருக்கின்றீர்கள். இது பின்னர் மறைந்து விடும். இந்த ஞானத்தைக் கொண்டிருப்பவரே, வந்து உங்களுக்கு அதனைக் கொடுக்கின்றார். தந்தை இங்கமர்ந்திருந்து உங்கள் 84 பிறவிகளின் ஞானத்தை உங்களுக்குக் கொடுக்கின்றார். தந்தை கூறுகின்றார்: உங்களை ஆத்மாக்கள் எனக் கருதுங்கள். உங்களைத் தூய்மை ஆக்குவதற்காகவே நான் வந்து, இந்தச் சரீரத்திற்குள் பிரவேசித்துள்ளேன். என்னை நினைவு செய்வதனால் மாத்திரமே நீங்கள் தூய்மை ஆகுவீர்கள். நீங்கள் வேறு எவரையும் நினைவுசெய்தால், உங்களால் சதோபிரதானாக ஆக முடியாது. பாவங்களை அழிக்காதவர்களைப் பற்றிக் கூறப்படுகின்றது: “விநாச காலத்தில் அன்பற்ற புத்தியை உடையவர்கள் அழிவிற்கு இட்டுச் செல்லப்படுகிறார்கள்”. மக்கள் அதிகளவு குருட்டு நம்பிக்கையைக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்குச் சரீரதாரிகளின் மீது பற்று உள்ளது. நீங்கள் இப்பொழுது ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆக வேண்டும். ஒரேயொருவரின் மீது மட்டும் பற்றைக் கொண்டிருங்கள். நீங்கள் வேறு எவர் மீதேனும் பற்றைக் கொண்டிருந்தால், தந்தையின் மீது அன்பற்ற புத்தியைக் கொண்டிருக்கின்றீர்கள் என்பதே அதன் அர்த்தம். தந்தை பல தடவைகள் கூறியுள்ளார்: உங்கள் தந்தையான என்னை மாத்திரமே நினைவு செய்யுங்கள்! இதிலேயே முயற்சிக்கான தேவை உள்ளது. நீங்கள் அழைத்தும் இருக்கிறீர்கள்: தூய்மையற்ற எங்களை வந்து தூய்மை ஆக்குங்கள்! தந்தை மாத்திரமே உங்களைத் தூய்மை ஆக்குகிறார். தந்தை மாத்திரமே 84 பிறவிகளின் வரலாற்றையும், புவியியலையும் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். இது இலகுவானது. நினைவு செய்தலே அதிசிரமமான பாடமாகும். தந்தையோடு யோகம் செய்வதில் எவருமே திறமைசாலிகள் இல்லை. நினைவுசெய்வதில் திறமையற்ற குழந்தைகள், பண்டிதர்களைப் போன்றவர்கள். ஒருவர் ஞானத்தில் எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும், அவர் நினைவில் நிலைத்திருக்காது விட்டால், ஒரு பண்டிதரே ஆவார். பாபா உங்களுக்குப் பண்டிதரை பற்றிய கதையைக் கூறியுள்ளார். பண்டிதர் கூறியதைக் கேட்டவர்களால் பரமாத்மாவின் நினைவுடன் கரைசேர முடிந்தது. பண்டிதரின் உதாரணம் உங்களுக்கும் பொருந்தும்: தந்தையை நினைவுசெய்தால் உங்களால் கரைசேர முடியும். முரளி கேட்பதில் மாத்திரம் சிறப்பாக இருந்தால், உங்களால் கரைசேர முடியாது. நினைவு செய்யாதிருந்தால், உங்கள் பாவங்கள் அழிய மாட்டாது. இந்த உதாரணங்கள் அனைத்தும் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றின் மிகச்சரியான அர்த்தங்களைத் தந்தை இங்கே அமர்ந்திருந்து உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். அவர்களுக்கு நம்பிக்கை இருந்தது: பரமாத்மாவை நினைவுசெய்தாலே தம்மால் கரைசேர முடியும் என்ற உண்மையை அவர்கள் இறுகப் பிடித்திருந்தார்கள். உங்களுக்கு இந்த ஞானம் இருந்தபோதிலும், யோகம் இல்லாதிருந்தால், உங்களால் உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெற முடியாது. நினைவில் நிலைத்திருக்காத பலரும் இருக்கிறார்கள். நினைவுசெய்வதே பிரதானமானது. மிக நன்றாகச் சேவை செய்கின்ற பலரும் இருக்கிறார்கள்.ஆனால் அவர்களின் புத்தியின் யோகம் மிகச்சரியாக இல்லாதபோது, சிக்கிக் கொள்கிறார்கள். யோகத்தைக் கொண்டிருக்கும் ஒருவர், சரீர உணர்வில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதுடன், தூய்மையற்ற எண்ணங்களையும் கொண்டிருக்க மாட்டார்கள். நினைவுசெய்வதில் பலவீனமாக இருப்பவர்களுக்கே புயல்கள் வரும். பௌதீகப் புலன்கள் யோகத்தின் ஊடாக முற்றாகக் கட்டுப்படுத்தப்படுகின்றன. தந்தை உங்கள் ஒவ்வொருவருக்கும் எது சரி, எது பிழை எனப் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு புத்தியையும் கொடுத்துள்ளார். உங்கள் புத்தி பிறரின் சரீரங்களை நோக்கிச் சென்றால், புத்தியில் தந்தையின் மீது அன்பு இல்லை என்பதுடன், அது அழிவை நோக்கி உங்களை இட்டுச் செல்கின்றது. ஞானம் யோகத்திலிருந்து வேறுபட்டது. யோகத்தினூடாக நீங்கள் ஆரோக்கியத்தையும், இந்த ஞானத்தினூடாக நீங்கள் செல்வத்தையும் பெறுகிறீர்கள். யோகம் செய்வதால், உங்கள் சரீரத்தின் ஆயுட்காலம் நீடிக்கின்றது. ஆத்மாக்கள் சிறிதாகவோ பெரிதாகவோ ஆகுவதில்லை. ஆத்மா தனது சரீரத்தின் ஆயுட்காலம் நீடிக்கின்றது எனக் கூறுகின்றார். இப்பொழுது ஆயுட்காலம் குறுகியதாக உள்ளது. பின்னர் அரைக் கல்பத்திற்கு, சரீரங்களின் ஆயுட்காலம் நீடிக்கின்றது. நாங்கள் தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆகுகின்றோம். ஆத்மாக்கள் தூய்மை ஆகுகின்றார்கள். அனைத்துமே ஆத்மாவைத் தூய்மை ஆக்குவதிலேயே தங்கியுள்ளது. நீங்கள் தூய்மை ஆகாது விட்டால், உங்களால் ஒர் அந்தஸ்தை அடைய முடியாது. அட்டவணை பேணுவதில் மாயை குழந்தைகளைச் சோம்பேறிகள் ஆக்குகிறாள். குழந்தைகளாகிய நீங்கள் நினைவு யாத்திரைக்கான அட்டவணையை வைத்திருப்பதில் மிகவும் ஆர்வம் கொண்டிருக்க வேண்டும். சோதியுங்கள்: நான் தந்தையை நினைவு செய்கிறேனா அல்லது எனது புத்தி எனது நண்பர்கள் உறவினர்களிடம் செல்கின்றதா? நாள் முழுவதும் நான் யாருடைய நினைவில் இருந்தேன்? நான் யாரிடம் அன்பு வைத்திருக்கின்றேன்? எவ்வளவு நேரத்தை நான் வீணடித்தேன்? உங்களைப் பற்றிய அட்டவணையைப் பேணுங்கள். எவ்வாறாயினும், எவருக்குமே நாளாந்த அட்டவணையைப் பேணுவதற்கான சக்தி கிடையாது. அரிதாக உங்களில் சிலரே அதனை வைத்திருக்கிறீர்கள். மாயை நீங்கள் அட்டவணையை முழுமையாகப் பேணுவதற்கு உங்களை அனுமதிப்பதில்லை. அவள் உங்களை முற்றாகச் சோம்பேறிகள் ஆக்கி, உஷாராக இருப்பதில் இருந்து உங்களை அழித்து விடுகின்றாள். தந்தை கூறுகின்றார்: சதா என்னை மாத்திரமே நினைவு செய்யுங்கள். நான் காதலர்களாகிய உங்கள் அனைவரினதும் அன்பிற்கினியவர். ஆகையால், காதலர்களாகிய நீங்கள் அனைவரும் என்னை மாத்திரமே நினைவுசெய்ய வேண்டும். அன்பிற்கினியவரான தந்தை கூறுகின்றார்: அரைக்கல்பமாக நீங்கள் என்னை நினைவுசெய்கிறீர்கள். இப்பொழுது என்னை நினைவுசெய்தால், உங்கள் பாவங்கள் அழியும் என நான் கூறுகின்றேன். உங்களுக்கு அதிகளவு சந்தோஷத்தைக் கொடுக்கின்ற அத்தகைய தந்தையை நீங்கள் அதிகளவு நினைவுசெய்ய வேண்டும். ஏனைய அனைவரும் துன்பத்தை விளைவிக்கிறார்கள். அவர்கள் எதற்கும் பயனற்றவர்கள் ஆகுகிறார்கள். இறுதியில், பரமாத்மாவான தந்தை மாத்திரமே பயனுடையவராக இருப்பார். எல்லைக்குட்பட்ட, எல்லையற்ற, இறுதி நேரங்கள் உள்ளன. தந்தை கூறுகின்றார்: என்னைத் தொடர்ந்தும் மிக நன்றாக நினைவுசெய்வதன் மூலம் உங்களுக்கு அகால மரணம் நிகழ மாட்டாது. நான் உங்களை அமரர்கள் ஆக்குகின்றேன். எவ்வாறாயினும், முதன் முதலில், உங்கள் புத்தியில் தந்தையின் மீது அன்பு நிறைந்திருக்க வேண்டும். உங்களுக்கு வேறு எவரது சரீரத்தின் மீதும் அன்பு இருக்குமாயின், நீங்கள் வீழ்ந்து தோல்வி அடைவீர்கள். நீங்கள் சந்திர வம்சத்தில் ஒருவர் ஆகுவீர்கள். சத்தியயுக சூரிய வம்சமே சுவர்க்கம் என்று அழைக்கப்படுகிறது. திரேதாயுகம், சுவர்க்கம் எனப்படுவதில்லை. அதேபோன்றே, துவாபர, கலியுகங்களும் உள்ளன. கலியுகம் அதி தமோபிரதானான நரகம் என அழைக்கப்படுகின்றது. துவாபரயுகம் அந்தளவிற்குத் தமோபிரதான் அல்ல. தமோபிரதானில் இருந்து சதோபிரதானாக ஆகுவதற்கு, நீங்கள் நினைவுசெய்ய வேண்டும். உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட மனிதரின் மீது அன்பு இருக்கும்போது, அவரது உதவி இல்லாமல், உங்களுக்கு நன்மை இருக்க முடியாது என நீங்கள் நினைத்தால், அந்த நிலையில் நீங்கள் சரீரத்தை நீக்கினால், என்ன நடக்கும் என உங்களாலேயே புரிந்து கொள்ள முடியும். விநாச காலத்தில் தமது புத்தியில் அன்பு இல்லாதவர்களுக்கு அனைத்தும் அழிந்து விடும். அவர்கள் தூசி பெறுமதியான அந்தஸ்தையே பெறுவார்கள். இக்காலத்தில், நவநாகரீகமாக இருப்பதாலும் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. மக்கள் பிறரைக் கவருவதற்காகத் தமது சரீரத்தை நேர்த்தியாக (டிப்டொப்பாக) வைத்திருக்கிறார்கள். தந்தை இப்பொழுது கூறுகின்றார்: குழந்தைகளே, எவருடைய பெயரிலும் வடிவத்திலும் சிக்கிக் கொள்ளாதீர்கள். இலக்ஷ்மி நாராயணனின் ஆடைகள் எவ்வளவு இராஜரீகமாக உள்ளதென பாருங்கள். அது சிவாலயம், இது விலைமாதர் இல்லம் என அழைக்கப்படுகின்றது. பக்தர்கள் தேவ விக்கிரகங்களின் முன்னால் சென்று கூறுகிறார்கள்: நாங்கள் இந்த விலைமாதர் இல்லத்து வாசிகள் ஆவோம். இந்தக்காலத்தில், நவநாகரீகமும் ஒரு பிரச்சினையாக உள்ளது, அனைவரின் கவனமும் நவநாகரீகம் ஆனவர்களை நோக்கியே உள்ளது. அதன்பின்னர் அவர்கள் கடத்தப்படுகிறார்கள். சத்தியயுகத்தில் அனைவரும் சட்டத்திற்கு ஏற்ப நடந்து கொள்வதுடன், செயல்களையும் செய்கின்றார்கள். அங்கே இயற்கையான அழகு உள்ளது. குருட்டு நம்பிக்கை என்ற கேள்விக்கே இடமில்லை. இங்கே, ஒருவரை ஒருவர் பார்ப்பதனால் மக்களின் இதயங்கள் ஈர்க்கப்படுகின்றன. அத்துடன் அவர்கள் வேறொரு மதத்தைச் சேர்ந்தவர்களையும் திருமணம் செய்கின்றார்கள். இப்பொழுது உங்களுக்கு இறை புத்தி உள்ளது. தந்தையைத் தவிர வேறு எவராலுமே உங்களைக் கற்புத்தியில் இருந்து தெய்வீகப் புத்தி உடையவராக மாற்ற முடியாது. அது இராவணனின் சமுதாயம். நீங்கள் இப்பொழுது இராம சமுதாயாத்திற்கு உரியவர்கள். பாண்டவர்களும் கௌரவர்களும் ஒரே சமுதாயத்தையே சேர்ந்தவர்கள். ஆனால் யாதவர்கள், ஐரோப்பியர்கள் ஆவார்கள். யாதவர்களே ஐரோப்பியர்கள் என்பதைக் கீதை மூலமாக எவராலுமே புரிந்துகொள்ள முடியாது. யாதவ சமுதாயமும் இங்கே உள்ளது என அவர்கள் கூறுகிறார்கள். தந்தை இங்கே அமர்ந்திருந்து விளங்கப்படுத்துகின்றார்: தமது சொந்த விநாசத்திற்காக அந்த அணுகுண்டுகள் போன்றவற்றைத் தயாரிக்கின்ற யாதவர்களே ஐரோப்பியர்கள் ஆவார்கள். பாண்டவர்கள் வெற்றி அடைகிறார்கள். அவர்கள் சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆகுகிறார்கள். பரமாத்மா மாத்திரமே வந்து சுவர்க்கத்தை ஸ்தாபிக்கின்றார். பாண்டவர்கள் உருகிப் போனார்கள் என இதிகாசங்களில் கூறப்படுகின்றது. அதன்பின்னர் என்ன நடந்தது? அவர்களுக்குப் புரிந்துணர்வு இல்லை. அவர்கள் கற்புத்தி உடையவர்கள். எவருமே நாடகத்தின் இரகசியத்தைச் சற்றேனும் புரிந்து கொண்டிருப்பதில்லை. குழந்தைகள் பாபாவைச் சந்திக்க வரும்போது, பாபா கூறுகிறார்: நீங்கள் நகைகள் போன்றவற்றை அணியலாம். குழந்தைகள் கூறுகிறார்கள்: பாபா, இங்கே நகைகள் அணிவது சரியாகப்படவில்லை. தூய்மையற்ற ஆத்மா வாழுகின்ற தூய்மையற்ற சரீரத்தில் நகைகள் அணிவது பார்ப்பதற்கு எவ்வாறு சரியாக இருக்க முடியும்? அங்கே, நீங்கள் நகைகள் போன்றவற்றினால் அலங்கரிக்கப்பட்டிருப்பீர்கள். அங்கே எல்லையற்ற செல்வம் இருக்கும். அனைவருக்கும் சந்தோஷம் அன்றி வேறு எதுவுமே இருக்க மாட்டாது. அவரே இராஜா என்றும், தாம் பிரஜைகளில் ஒருவர் என்றும் அவர்கள் அறிந்திருந்த போதிலும், துன்பத்திற்கு இடமே இருக்க மாட்டாது. இங்கே, மக்கள் உணவு போன்றவற்றைப் பெற்றுக் கொள்ள முடியாதபோது, துன்பத்தை அனுபவம் செய்கிறார்கள். அங்கே, நீங்கள் அனைத்தையும் பெறுகிறீர்கள். அங்கே “துன்பம்” என்ற வார்த்தை எவரது வாயிலிருந்தும் வெளிப்பட மாட்டாது. சுவர்க்கம் என்பதே அதன் பெயராகும். ஐரோப்பியர்கள் அதனை வைகுந்தம் (பரடைஸ்) என அழைக்கிறார்கள். இறைவர், இறைவிகள் அங்கே வாழ்கிறார்கள் என அவர்கள் நம்புகிறார்கள். ஆகையாலேயே அவர்கள் அவர்களின் விக்கிரகங்களை அதிகளவு கொள்வனவு செய்கிறார்கள். இருந்தபோதிலும், அந்தச் சுவர்க்கம் எங்கே சென்றது? எவருக்குமே இது தெரியாது. இந்தச் சக்கரம் எவ்வாறு சுழல்கிறது என்பதை நீங்கள் இப்பொழுது அறிந்திருக்கிறீர்கள். உலகம் பழையதில் இருந்து புதியதாகவும், புதியதில் இருந்து பழையதாகவும் ஆகுகின்றது. ஆத்ம உணர்வை அடைவதற்கு அதிகளவு முயற்சி தேவை. ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகும்போது, நீங்கள் இந்த எண்ணற்ற நோய்களில் இருந்து விடுதலை அடைவீர்கள். தந்தையை நினைவு செய்வதனால் நீங்கள் உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறுவீர்கள். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.தாரணைக்கான சாராம்சம்:
1. எந்தவொரு சரீரதாரியையும் உங்கள் ஆதாரம் ஆக்காதீர்கள். எவரது சரீரத்தின் மீதும் அன்பு கொள்ளாதீர்கள். ஒரேயொரு தந்தையின் மீது மாத்திரமே உங்களின் இதயத்தின் அன்பு இருக்க வேண்டும். எவரதும் பெயரிலும் வடிவத்திலும் சிக்கிக் கொள்ளாதீர்கள்.2. உங்கள் நினைவு அட்டவணையைப் பேணுவதில் ஆர்வம் கொண்டிருங்கள். இதனையிட்டுச் சோம்பல் கொள்ளாதீர்கள். உங்கள் அட்டவணையைச் சோதித்துப் பாருங்கள்: யாரை நோக்கி எனது புத்தி ஈர்க்கப்படுகின்றது? நான் எவ்வளவு நேரத்தை வீணாக்குகிறேன்? எனக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கின்ற தந்தையை நான் எவ்வளவு நேரம் நினைவு செய்கின்றேன்?
ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின் பௌதீக இல்லறத்தையும் தெய்வீகக் குடும்பத்தையும் சமமாகப் பராமரிப்பதன் மூலம் சதா இலேசாகவும் வெற்றியாளராகவும் இருப்பீர்களாக.குழந்தைகளான உங்கள் எல்லோருக்கும் இரட்டைச் சேவை கொடுக்கப்பட்டுள்ளது – உங்களின் சொந்த பௌதீக வாழ்க்கையையும் அத்துடன் உங்களின் ஆன்மீக வாழ்க்கையையும் பராமரிக்க வேண்டும்.எவ்வாறாயினும், இரண்டு வகையான சேவைகளுக்கும் சமமான நேரமும் கவனமும் வழங்கப்பட வேண்டும். ஸ்ரீமத்தின் ஊசி நன்றாகச் சமநிலையில் இருக்குமாயின், இரண்டு பக்கங்களும் சமமானவை ஆகும். எவ்வாறாயினும், உங்களின் இல்லறத்தைப் பற்றிப் பேசும்போது, நீங்கள் ஓர் இல்லறத்தவர் ஆகிவிடுகிறீர்கள்.அப்போது உங்களின் சாக்குப் போக்குகள் ஆரம்பம் ஆகுகின்றன. எனவே, ஓர் இல்லறத்தவராக அன்றி, நம்பிக்கைப் பொறுப்பாளராக இருக்கும் விழிப்புணர்வைக் கொண்டிருங்கள். உங்களின் இல்லறத்திற்கும் உங்களின் தெய்வீகக் குடும்பத்திற்கும் இடையில் சமநிலையைப் பேணுங்கள். அப்போது நீங்கள் சதா இலேசாகவும் வெற்றியாளராகவும் இருப்பீர்கள்.
சுலோகம்:
முதல் பிரிவில் வருவதற்கு, உங்களின் பௌதீகப் புலன்களை வென்றவராகவும் அத்துடன் மாயையை வென்றவராகவும் ஆகுங்கள்.அவ்யக்த சமிக்கை: ஒன்றிணைந்த ரூபத்தின் விழிப்புணர்வால் சதா வெற்றி பெறுபவர் ஆகுங்கள்.
சிவனும் சக்தியும் என்ற உங்களின் ஒன்றிணைந்த ரூபம் சதா வழிபடப்படுகிறது. சக்திகள் சிவனிடம் இருந்து பிரிந்திருப்பதில்லை. சிவனும் சக்திகளிடம் இருந்து பிரிந்திருப்பதில்லை. இந்த ஒன்றிணைந்த ரூபத்தில் இருங்கள். இந்த ரூபமே, இலகு யோகியின் ரூபம் என்று அழைக்கப்படுகிறது. நீங்கள் யோகத்திற்காக முயற்சி செய்ய வேண்டியதில்லை. ஆனால் சதா ஒன்றிணைந்து இருப்பவர்கள். நீங்கள் தந்தையுடன் சதா இருக்கிறீர்கள். நீங்கள் செய்த சத்தியத்தை மிகவும் உறுதியாக நினையுங்கள்: நான் சதா உங்களுடனேயே இருப்பேன், நான் உங்களுடனேயே வாழ்வேன், நான் உங்களுடனேயே வீட்டுக்குத் திரும்பி வருவேன்.