28.05.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, உங்கள் பாக்கியத்தை மேன்மையாக்கிக் கொள்வதற்கே நீங்கள் தந்தையிடம் வந்துள்ளீர்கள். ஸ்ரீமத்தைப் பின்பற்றும் அளவிற்கு ஏற்பவே, நீங்கள் உங்கள் பாக்கியத்தை மேன்மை ஆக்குவீர்கள்.
கேள்வி:
பக்தி மார்க்கத்திலுள்ள எப்பழக்கத்தை குழந்தைகளான நீங்கள் இப்பொழுது கொண்டிருப்பதில்லை?பதில்:
பக்தி மார்க்கத்தில் அவர்கள் சிறிதளவு துன்பத்தை அனுபவிக்கும் பொழுதோ அல்லது நோய்வாய்ப்படும் பொழுதோ, கூறுகின்றார்கள்: ஓ இராமா! ஓ கடவுளே! பக்தி மார்க்கத்தில் துன்பத்தினால் கூக்குரலிடும் பழக்கம் உள்ளது. நீங்கள் இப்பொழுது அத்தகைய வார்த்தைகள் உங்கள் வாய்களில் இருந்து வெளிவருவதை அனுமதிக்கக் கூடாது. நீங்கள் உங்களுக்குள் இனிய பாபாவைப் பெருமளவு அன்புடன் நினைவு செய்ய வேண்டும்.பாடல்:
நான் எனது பாக்கியத்தை விழித்தெழச் செய்து வந்துள்ளேன்.ஓம் சாந்தி.
ஒவ்வொரு மனிதரும் சந்தோஷம் அல்லது அமைதி என்ற பாக்கியத்தை உருவாக்கிக் கொள்வதற்கே முயற்சி செய்கின்றார்கள். சாதுக்கள், புனிதர்கள் மற்றும் சந்நியாசிகளும் கூறுகின்றார்கள்: எங்களுக்கு அமைதி வேண்டும்! எங்கள் துன்பத்தை அகற்றிச் சந்தோஷத்தை அருளுங்கள்! கடவுள் மாத்திரமே மனிதர்களின் துன்பத்தை அகற்றிச் சந்தோஷத்தை அருள்பவர் என்றே அவர்கள் நம்புகின்றார்கள். எனினும் மனிதர்களுக்குக் கடவுளைத் தெரியாது. நீங்கள் 'சிவபாபா!" என்று கூறுகின்றீர்கள். பிரம்மா, விஷ்ணு, சங்கரரையும்கூட “பாபா” என்று அழைக்க முடியாது; அவர்கள் தேவர்கள். கடவுள் மாத்திரமே பாபா என அழைக்கப்படுகின்றார். அவர் அசரீரியானவர்; அவர் வழிபடப்படுகிறார். சிவபாபாவே அனைவருக்கும் பாபா என்பதை நீங்கள் அறிவீர்கள். எவ்வாறாயினும், அவரை ஏன் பாபா என அழைக்கின்றார்கள் என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்கு லௌகீகத் தந்தையும் உள்ளார். அவ்வாறாயின், இந்தத் தந்தை யார்? ஆத்மாக்கள் கூறுகின்றார்கள்: அந்த ஒரேயொருவர் அசரீரியான தந்தை. அவர் அசரீரியானவர், ஆத்மாக்களாகிய நாங்களும் அசரீரியானவர்களே. மக்களுக்கு லௌகீகத் தந்தையர் இருந்தாலும், ஆத்மாக்கள் அந்தத் தந்தையை மறப்பதில்லை. கடவுளே தந்தை, நாங்கள் அவரின் குழந்தைகள். இங்கே, அவர் பரமதந்தை என்று அழைக்கப்படுகின்றார். ஆங்கிலத்தில் கூறப்படுகின்றது: தந்தையான கடவுளே, அதிமேலான பரமாத்மாவே. லௌகீகத் தந்தை சரீரங்களைப் படைப்பவர். ஆனால் அவரோ இவ்வுலகிற்கு அப்பாலுள்ள தந்தை ஆவார். தந்தை மாத்திரமே இங்கே அமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் தந்தையிடம் இருந்து ஆஸ்தியைப் பெறுவதால், அவரை நினைவு செய்கின்றீர்கள். நீங்கள் தந்தையிடம் இருந்து உங்கள் ஆஸ்தியைப் பெறுவதற்கே வந்திருக்கின்றீர்கள். துன்பத்தை அகற்றிச் சந்தோஷத்தை அருள்கின்ற தந்தை மாத்திரமே உங்களுக்குச் சந்தோஷத்திற்கான வழியைக் காட்டுவதற்கு வருகின்றார். அங்கே துன்பத்தின் பெயரோ, சுவடோ இருக்க மாட்டாது. இங்கே, பெருமளவு துன்பம் உள்ளது. அனைவரும் அழைக்கின்றார்கள். இப்பொழுது உலகில் பெருமளவு துன்பம் வரவுள்ளது. ஒருவர் மரணிக்கும் பொழுது, மக்கள் மிகவும் சந்தோஷம் அற்றவர்கள் ஆகுகின்றார்கள்! “ஓ கடவுளே!” என்று அவர்கள் கூறி அழுகின்றார்கள்: அவர் மாத்திரமே உபகாரியான தந்தை ஆவார். நீங்கள் இவ்வாறு பாடுவதால் அவர் நிச்சயமாக உங்கள் துன்பத்தை அகற்றி உங்களுக்குச் சந்தோஷத்தைக் கொடுத்திருக்க வேண்டும். தந்தை வந்து விளங்கப்படுத்துகின்றார்: குழந்தைகளே, ஒவ்வொரு கல்பத்திலும் நீங்கள் மிகவும் சந்தோஷம் அற்றவர்களாகவும், தூய்மை அற்றவர்களாகவும் ஆகும்பொழுது, அழைக்கின்றீர்கள்: ஓ பாபா, வாருங்கள்! நான் கல்பம் கல்பமாக, சங்கமயுகத்தில் வருகின்றேன். தூய்மையற்ற உலகின் இறுதியும், தூய உலகின் ஆரம்பமுமே சங்கமயுகம் என்று அழைக்கப்படுகின்றது. இது மாத்திரமே நினைவுகூரப்படுகின்ற, ஒரேயொரு சங்கமயுகமாகும். தந்தை அனைவரது ஒளியையும் ஏற்றவும், அவர்களின் துன்பத்தை அகற்றிச் சந்தோஷத்தை அருளவும் வருகின்றார். இவருக்குள் பிரவேசித்துள்ள, அப்பாலுள்ள தந்தையிடமே நீங்கள் வந்துள்ளீர்கள் என்பதைப் புரிந்து கொள்கின்றீர்கள். அவரே கூறுகின்றார்: நான் இவருக்குள் பிரவேசித்து, இவருக்கு பிரம்மா என்று பெயரிடுகின்றேன். நீங்கள் அனைவரும் பிரம்மாகுமார், பிரம்மாகுமாரிகள் ஆவீர்கள். தந்தையிடம் இருந்து உங்கள் சந்தோஷ ஆஸ்தியைப் பெறுவதற்கே நீங்கள் பிரம்மாவின் குழந்தைகளாகி உள்ளீர்கள் என்ற நம்பிக்கை குழந்தைகளாகிய உங்களுக்கு உள்ளது. இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியத்தின் பொழுது, குழந்தைகளான நீங்கள் சந்தோஷமாக இருந்தீர்கள். இப்பொழுது இது துன்பபூமியான, கலியுகமாகும். இதன்பின்னர், சத்திய யுகம் இருக்கும். உலகின் வரலாறும், புவியியலும் மீண்டும் மீண்டும் நடைபெற வேண்டும். சத்தியயுகத்தில் இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியம் இருக்க வேண்டும். இச்சக்கரம் தொடர்ந்தும் சுழல்கின்றது. நீங்கள் நரகவாசிகளாகி விட்டீர்கள் என்றும், இப்பொழுது சுவர்க்கவாசிகளாக வேண்டும் என்றும் பாபா உங்களுக்குக் கூறியுள்ளார். முதலில்; தேவர்களாகிய உங்களது விருட்சம் மிகவும் சிறிதாகவே இருந்தது. நீங்கள் 84 பிறவிகளை எடுத்துள்ளீர்கள் என்பதை நீங்கள் இப்பொழுது நினைவு செய்கின்றீர்கள். நீங்களே முழு உலகிற்கும் அதிபதிகளாக இருந்தீர்கள், அதன்பின்னர் நீங்கள் தொடர்ந்தும் மறுபிறவிகள் எடுத்தீர்கள். இப்பொழுது இது உங்கள் இறுதி 84 ஆவது பிறவியாகும். உலகம் நிச்சயமாகப் பழையதில் இருந்து புதியதாகும். அந்தப் புதிய உலகம் தூய்மையாக இருந்தது, இப்பொழுது இது பழைய, தூய்மையற்ற உலகமாகும். மக்கள் மிகவும் சந்தோஷம் இழந்தும், ஏழைகளாகவும் இருக்கின்றார்கள். பாரதம் மிகுந்த செல்வம் உடையதாக இருந்தது. அப்பொழுது தூய இல்லற தர்மம் நிலவியது. தூய இல்லறப் பாதை நிலவியபொழுது, அனைவரும் முற்றிலும் விகாரம் அற்றவர்களாகவும், பதினாறு சுவர்க்கக் கலைகள் நிறைந்தவர்களாகவும் இருந்தனர். இவ்விடயங்கள் சமயநூல்களில் குறிப்பிடப்படவில்லை. சமயநூல்கள் பக்தி மார்க்கத்திற்கு உரியவை. அவற்றில் பக்தி மார்க்கத்தின் நடைமுறை, சம்பிரதாயங்கள் மாத்திரமே இருக்கின்றன. சமயநூல்களில் கடவுளைக் காண்பதற்கான வழியைக்; கண்டடைய முடியாது. கடவுள் இங்கே வரவேண்டும் என்றே அவர்களும் உணர்கின்றார்கள். ஆகையால் அங்கே செல்வதற்கான முயற்சி என்ற கேள்விக்கு இடமில்லை. யாகம் வளர்த்தல் மற்றும் தபஸ்யா செய்தல் போன்றன அவரைக் காண்பதற்கான வழியல்ல. மக்கள் கடவுளை அழைக்கின்றார்கள்: வந்து எங்களுக்கு வழிகாட்டுங்கள்! ஆத்மாவான நான் தமோபிரதான் ஆகியுள்ளேன், என்னால் பறக்க முடியவில்லை; அதாவது, அவரால் தந்தையிடம் செல்ல முடியாது. உண்மையில், ஓர் ஆத்மா தனது சரீரத்தை நீக்கி இன்னொன்றை எடுக்கின்றார். இங்கிருந்து அவரால் எங்கும் செல்ல முடியும்; ஓர் ஆத்மாவினால் அமெரிக்காவிற்கும் செல்ல முடியும். ஓர் ஆத்மா ஒருவருடன் உறவுமுறையைக் கொண்டிருக்கும் பொழுது, அவரால் நேரடியாக ஒரு விநாடியில் அங்கு செல்ல முடியும். ஓர் ஆத்மாவால் வீட்டிற்குத் திரும்பவும் பறந்து செல்வது என்பது அசாத்தியம். தூய்மையற்ற ஆத்மாக்களினால் அங்கே செல்ல முடியாது, ஆகையாலேயே ஆத்மாக்கள் அழைக்கின்றார்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! தந்தை வரும்பொழுது, விளங்கப்படுத்துகின்றார்: முழு உலகமும் தூய்மை அற்றதாகும் பொழுது மாத்திரமே நான் வருகின்றேன். இந்தத் தூய்மையற்ற உலகில் தூய்மையான ஒருவர் கூட இருக்க முடியாது. கங்கையே தூய்மையாக்குபவர் என்று மக்கள் நம்புவதாலேயே, அதில் நீராடச் செல்கின்றார்கள். எவ்வாறாயினும் தண்ணீரினால் எவராலும் தூய்மையாக முடியாது. பழைய உலகம் தூய்மையற்றதும், புதிய உலகம் தூய்மையானதும் ஆகும். நீங்கள் இப்பொழுது உங்கள் ஆஸ்தியைப் பெறுவதற்கு எல்லையற்ற தந்தையிடம் வந்திருக்கின்றீர்கள். நீங்கள் புண்ணியாத்மாக்கள் ஆக வேண்டும். ஆத்மாக்களாகிய நீங்கள் சதோபிரதானாக இருந்தீர்கள், இப்பொழுது தமோபிரதானாக உள்ளீர்கள். கங்கையில் நீராடுவதனால் உங்களால் சதோபிரதானாக முடியாது. தூய்மை அற்றவர்களைத் தூய்மையாக்குவது தந்தையின் பணி மாத்திரமே ஆகும். நீர் நிறைந்த ஆறுகள் எங்கும் உள்ளன. மேகங்களில் இருந்து மழை பெய்கின்றது, அதனை அனைவருமே அனுபவம் செய்கின்றார்கள். ஆற்று நீரினால் தூய்மையாக்க முடியுமானால், அவை அனைவரையும் தூய்மையாக்கும். தந்தை மாத்திரமே வந்து, இவரினூடாகத் தூய்மை ஆகுவதற்கான வழியை உங்களுக்குக் காட்டுகின்றார். இவருடைய ஆத்மா இவருக்குரியது. தந்தை கூறுகின்றார்: எனக்கெனச் சொந்தமாக ஒரு சரீரம் இல்லை. நான் உங்களுக்கு விளங்கப்படுத்துவதற்காக ஒவ்வொரு கல்பத்திலும் இவருக்குள் பிரவேசிக்கின்றேன். உங்கள் சொந்தப் பிறவிகளைப் பற்றியே உங்களுக்குத் தெரியாது. ஒவ்வொரு சக்கரமும் நூறாயிரம் ஆண்டுகள் கால எல்லையைக் கொண்டது என்று அவர்கள் கூறுகின்றார். தந்தை கூறுகின்றார்: இந்தச் சக்கரம் 84 பிறவிகளைக் கொண்டது. 5000 வருடங்களில் எவராலும் 8.4 மில்லியன் பிறவிகளை எடுக்க முடியாது. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் சத்தியயுகத்தில் பதினாறு சுவர்க்கக் கலைகளும் நிறைந்திருந்தீர்கள், பின்னர் இரண்டு கலைகள் குறைவடைந்தன. அதன்பின்னர் படிப்படியாகக் கலைகள் தொடர்ந்தும் குறைவடைந்தன் புதிய உலகம் பழையதாக ஆகுகின்றது. துவாபர யுகமும், கலியுகமும் தூய்மையற்ற உலகம் என்று அழைக்கப்படுகின்றன. இவ்விடயங்கள் சமயநூல்களில் குறிப்பிடப்படவில்லை. நான் மாத்திரமே ஞானக்கடல் என்று அழைக்கப்படுகின்றேன். நான் சமயநூல்கள் ஏதேனும் கற்கிறேனா? இவ்வுலகின் ஆரம்பம், மத்தி, இறுதியை நான் அறிவேன். பக்தி மார்க்கத்தில் உள்ளவர்களிடம் இந்த ஞானம் இருக்க முடியாது. அவை அனைத்தும் பக்தி மார்க்கத்திற்கான ஞானமாகும். மக்கள் பாடுகின்றார்கள்: நாங்கள் சீரழிந்த பாவிகள்! எங்களிடம் தெய்வீகக் குணங்கள் இல்லை! எங்கள் மீது கருணை காட்டுங்கள்! அவர்கள் (இலக்ஷ்மி நாராயணன்) மீது கருணை இருந்ததாலேயே அவர்கள் மனிதர்களில் இருந்து தேவர்களாக மாறினார்கள். இதுவே அதிமேலான பாக்கியம் எனப்படுகின்றது. தமது பாக்கியத்தை உருவாக்கிக் கொள்வதற்கே மக்கள் பாடசாலைகளுக்குச் செல்கின்றார்கள்; ஒருவர் நீதிபதி ஆகுகின்றார், இன்னொருவர் பொறியியலாளர் ஆகுகின்றார். அந்த பாக்கியம் விகாரமானது, ஆனால் உங்கள் பாக்கியமோ கடவுளினால் உருவாக்கப்படுகின்றது. அதனாலேயே நீங்கள் துன்பத்தை அகற்றிச் சந்தோஷத்தை அருள்பவரை வாருங்கள் என்று அழைக்கின்றீர்கள். வேறு எவராலும் அன்றி, தந்தையால் மாத்திரமே உங்களுக்குக் கற்பித்து, உங்களைத் தேவர்களாக்க முடியும். தந்தை இங்கே அமர்ந்திருந்து ஆத்மாக்களுடன் உரையாடுகின்றார். ஆத்மா கூறுகின்றார்: இது எனது சரீரம். ‘இது எனது ஆத்மா’ என்று சரீரம் கூறுவதில்லை. ஆத்மா சரீரத்தில் உள்ளார்; அவர் கூறுகின்றார்: இது எனது சரீரம். மக்கள் கூறுகின்றார்கள்: எனது ஆத்மாவை வேதனைப்படுத்தாதீர்கள். அந்தச் சரீரத்தில் ஆத்மா இல்லையெனில், அவரால் பேச முடியாது. ஆத்மா கூறுகின்றார்: நான் எனது சரீரத்தை நீக்கி இன்னொன்றை எடுக்க வேண்டும். நான் நிச்சயமாக 84 பிறவிகளை அனுபவம் செய்த பின்னர், நரகவாசி ஆகியுள்ளேன். நீங்கள் இப்பொழுது மீண்டும் ஒருமுறை சுவர்க்கவாசிகள் ஆகுவதற்கு முயற்சி செய்கின்றீர்கள். தந்தை மாத்திரமே உங்களைச் சுவர்க்கவாசிகள் ஆக்குகின்றார். சத்தியயுகம், சுவர்க்கம் என்று அழைக்கப்படுகின்றது. இன்னார் சுவர்க்கவாசி ஆகினார் என அவர்கள் கூறும்பொழுது, அவர்கள் பொய்யே கூறுகின்றார்கள். இது நரகமாகும். ஒருவர் மரணிக்கும் பொழுது, அவர் சுவர்க்கத்திற்குச் சென்றுள்ளார் என்று மக்கள் கூறுகின்றார்கள். எனவே, அவர்கள் ஏன் அவரைக் கலியுகத்தின் உணவை உண்பதற்கு மீண்டும் நரகத்திற்கு அழைக்கிறார்கள்? அவர் பல சௌகரியத்திற்கான வசதிகளைச் சுவர்க்கத்தில் பெறுவார், ஆகவே நீங்கள் ஏன் அவரைத் திரும்பவும் நரகத்திற்கு அழைக்கிறீர்கள்? மக்களிடம் இந்தளவு புரிந்துணர்வேனும் இல்லை! தந்தை இங்கே அமர்ந்திருந்து விளங்கப்படுத்துகின்றார்: இந்தக் கலியுகம் இப்பொழுது அழிவடைய உள்ளது; அது எரியூட்டப்பட உள்ளது. அனைத்தும் அழிக்கப்பட உள்ளன. தந்தையிடம் இருந்து ஆஸ்தியைப் பெறுகின்ற, குழந்தைகளாகிய நீங்கள் சத்திய யுகத்திற்குச் சென்று அங்கு ஆட்சி செய்வீர்கள். இலக்ஷ்மி நாராயணனுக்கு இந்த ஆஸ்தியைக் கொடுத்தவர் யார்? தந்தையே. நீங்கள் இப்பொழுது தந்தையினால் தகுதியானவர் ஆக்கப்படுகின்றீர்கள். நீங்கள் இப்பொழுது நரகவாசிகளில் இருந்து மாறிச் சுவர்க்கவாசிகள் ஆகுகின்றீர்கள் என்று கூறுகின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: நான் சுவர்க்கவாசி ஆகுவதில்லை. நான் பரந்தாமத்தில் மாத்திரமே வசிக்கின்றேன். நீங்கள் நரகவாசிகளாகவும், சுவர்க்கவாசிகளாகவும் ஆகுகின்றீர்கள். அமைதி தாமமே ஆத்மாக்களின் வசிப்பிடம் ஆகும்; அங்கிருந்து நீங்கள் சந்தோஷ உலகிற்குச் செல்கின்றீர்கள். இது துன்ப உலகமாகும், இப்பொழுது இது அழிக்கப்பட உள்ளது. பிரம்மாவின் சரீரத்திற்குள் கடவுள் பிரவேசித்து, இராஜயோகம் கற்பிக்கின்றார் என்பது எவருக்கும் தெரியாது. அவர்கள் ஸ்ரீகிருஷ்ணர் வந்தார் என்று நினைக்கின்றார்கள்: ஸ்ரீகிருஷ்ணரின் சரீரத்தில் கடவுள் வந்தார் என்று கூட அவர்கள் கூறுவதில்லை. ஸ்ரீகிருஷ்ணர் கடவுளாக இருக்க முடியாது. அவர் உலக அதிபதி. ஒரேயொருவரே அனைவரையும் விடுதலை ஆக்குபவர். அவரே பரமாத்மா. தந்தையிடம் இருந்து தாங்கள் ஆஸ்தியைப் பெறுவதைப் புரிந்து கொண்டிருக்கின்ற, வேறெந்த ஆன்மீக ஒன்றுகூடலும் உலகில் இல்லை. ஒரேயொரு தந்தை மாத்திரமே உங்களைத் தூய்மை அற்றவரில் இருந்து தூய்மையானவர் ஆக்குகின்றார். தந்தை கூறுகின்றார்: நானே உங்களது உண்மையான குரு, நான் உங்களைத் தூய்மை ஆக்குகின்றேன். கங்கை நீரினால் உங்களைத் தூய்மையாக்க முடியாது. இது பாவாத்மாக்களின் உலகம். மக்கள் எதனைச் செய்தாலும், அவர்கள் ஏணியில் கீழிறங்கவே வேண்டும், அவர்கள் சதோபிரதானில் இருந்து தமோபிரதானாக வேண்டும். நீங்கள் இப்பொழுது பக்தி செய்வதில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். ‘ஓ இராமா!’ என்றேனும் நீங்கள் கூறுவதில்லை. அவர் உங்கள் தந்தை, அவர் உங்களுக்குக் கற்பிக்கின்றார். நீங்கள் ‘ஓ கடவுளே, வாருங்கள்! ஓ இராமா!’ என்றேனும் கூறக்கூடாது. எவ்வாறாயினும் பலரும் இந்தப் பழக்கத்தைக் கொண்டிருப்பதால், இவ்வார்த்தைகள் வெளிப்படுகின்றன. தந்தை உங்களிடம் கூறுகின்றார்: என்னை நினைவு செய்தால், உங்கள் பாவங்கள் அழிக்கப்பட்டு, நீங்கள் என்னிடம் வருவீர்கள். நீங்கள் ஒரேயொருவரை மாத்திரமே நினைவுசெய்ய வேண்டும். தந்தை கூறுகின்றார்: இது உங்கள் இறுதிப் பிறவி. இந்நேரத்தில் மாத்திரமே நீங்கள் விரும்பிய ஆஸ்தியைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெறுகின்றீர்கள். அதனை மீண்டும் நீங்கள் பெற முடியாது. தந்தை விளங்கப்படுத்தி உள்ளார்: இந்துக்கள் எனத் தம்மை அழைப்பவர்கள் ஆதியில் தேவ தர்மத்தைச் சேர்ந்தவர்கள். கிறிஸ்தவ சமயத்தைச் சேர்ந்தவர்கள் என்றுமே தமது சமயத்தின் பெயரை மாற்றுவதில்லை. அவர்கள் தமோபிரதானாக இருந்த பொழுதிலும், எப்பொழுதும் கிறிஸ்தவ சமயத்தினராகவே உள்ளார்கள். நீங்கள் தேவர்கள். ஆனால், நீங்கள் தூய்மையற்றவர்கள் என்பதால், உங்களை இந்துக்கள் என அழைக்கின்றீர்கள். உங்களைத் தேவர்கள் என்று உங்களால் அழைக்க முடியாது. ஆதியில் நீங்கள் தேவர்களாக இருந்தீர்கள் என்பதை நீங்கள் மறந்து விட்டீர்கள். உங்களில் எவருமே உங்களைத் தேவர்கள் என்று அழைப்பதில்லை. ஏனெனில், நீங்கள் விகாரம் உடையவர்கள் ஆகியுள்ளீர்கள். இது சரீர உணர்வாகும். குழந்தைகளான உங்களுக்கு அனைத்தும் மிகவும் தெளிவாக விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. இங்கே சாதுக்களோ அல்லது புனிதர்களோ இருப்பதில்லை. ‘நான் ஒரு வியாபாரி’ அல்லது ‘நான் இன்ன இன்னார்’ எனக் கூறுதல் சரீர உணர்வாகும். நீங்கள் இப்பொழுது ஆத்ம உணர்வு உடையவர்களாக வேண்டும். ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுவதற்கு முயற்சி தேவை. நீங்கள் உங்கள் ஆஸ்தியை பாபாவிடம் இருந்து பெற வேண்டும். ஆகவே தந்தையை நினைவு செய்யுங்கள்! உங்கள் இதயம் தந்தையுடன் இருந்த வண்ணம், உங்கள் கரங்கள் வேலைகளைச் செய்ய வேண்டும். நீங்கள் ஒரேயொரு அன்பிற்கினியவரின் காதலிகள். அந்த ஒரேயொரு அன்பிற்கினியவரே அனைவருக்கும் சற்கதியை அருள்பவர். அனைவரும் சற்கதியைப் பெற்று, சுவர்க்கம் ஸ்தாபிக்கப்பட வேண்டியுள்ள பொழுதே, அவர் வருகின்றார். துன்பத்தின் சகல பெயரும், சுவடுகளும் மறைந்து விடும். 21 பிறவிகளுக்கு எல்லையற்ற தந்தையிடம் இருந்து நிலையான சுவர்க்க சந்தோஷம் எனும் உங்கள் ஆஸ்தியைப் பெறுவதற்கே குழந்தைகளாகிய நீங்கள் இங்கே வந்துள்ளீர்கள். எந்த ஒரு மனிதராலும் எவரையும் சுவர்க்கத்தின் அதிபதியாக்க முடியாது. சிவபாபா பாரதத்திற்கு வந்து அதனைச் சுவர்க்கம் ஆக்குகின்றார். மக்கள் சிவனின் பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார்கள். ஆனால், அவரிடமிருந்தே தங்கள் சுவர்க்க ஆஸ்தியைத் தாங்கள் பெறுகின்றார்கள் என்பதை அவர்கள் மறந்து விட்டார்கள். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. இந்தக் கல்வியின் அடிப்படையில் உங்கள் பாக்கியத்தை மேன்மை ஆக்குங்கள். நீங்கள் மனிதர்களிலிருந்து தேவர்களாக வேண்டும். நீங்கள் தூய்மையாகி வீடு திரும்ப அதன்பின்னர் புதிய உலகிற்குச் செல்கின்றீர்கள்.2. உங்கள் கரங்களினால் வேலையைச் செய்கையில், ஒரேயொரு தந்தையின் நினைவில் நிலைத்திருங்கள். பிழையான விடயங்களைச் செவிமடுக்கவோ அல்லது கூறவோ வேண்டாம்.
ஆசீர்வாதம்:
நீங்கள் சதா உங்களின் தூய ரூபத்தில் ஸ்திரமாக இருந்து, ஒரு புனித அன்னமாக நற்குணங்களின் முத்துக்களை மட்டும் எடுத்துக் கொள்வீர்களாக.புனித அன்னங்களான உங்களிடம் தூய ரூபம் உள்ளது. சதா நற்குணங்களின் முத்துக்களை எடுத்துக் கொள்வதே உங்களின் பணி ஆகும். ஒருபோதும் உங்களின் புத்தியில் குறைபாடுகள் என்ற கூழாங்கற்களை எடுத்துக் கொள்ளாதீர்கள். எவ்வாறாயினும், இந்தக் கடமையை நிறைவேற்றுவதற்கு, எப்போதும் ஒரு கட்டளையை நினைவில் வைத்திருங்கள்: தீயதை நினைக்காதீர்கள், தீயதைக் கேட்காதீர்கள், தீயதைப் பார்க்காதீர்கள், தீயதைப் பேசாதீர்கள். இந்தக் கட்டளையை எப்போதும் தமது விழிப்புணர்வில் வைத்திருப்பவர்கள், எப்போதும் கடலானவரின் கரையிலேயே இருப்பார்கள். அன்னங்களான உங்களின் வசிப்பிடம் கடலானவரே ஆகும்.
சுலோகம்:
நடக்கும்போதும் அசையும் போதும் உங்களின் தேவதை ரூபத்தில் இருப்பது, தந்தை பிரம்மாவின் இதயத்தை மகிழ்விக்கும் ஒரு பரிசு ஆகும்.அவ்யக்த சமிக்ஞை: சதா ஆட்ட அசைக்க முடியாத மற்றும் நிலையான ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள்.
சுய முன்னேற்றத்தைச் செய்வதிலும் சேவையில் முன்னேறுவதிலும் சதா மும்முரமாக ஈடுபட்டு, அனைவருக்காகவும் நல்லாசிகளைக் கொண்டிருங்கள். உங்களின் பாகத்தை ஏதாவது உறவுமுறையின் அடிப்படையில் நடிக்காதீர்கள். ஆனால், அதை சேவைக்கான உறவுமுறையுடன் நடியுங்கள். இரண்டாவதாக, எந்தவிதமான அழியும் வசதிகளையும் உங்களின் ஆதாரமாக அல்லது அடிப்படையாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். அவை அனைத்தும் பெயரளவிலேயே உள்ளன. அவை சேவைக்கானது. அவற்றைச் சேவைக்காகப் பயன்படுத்திப் பின்னர் பற்றற்றவர் ஆகுங்கள். வசதிகளின் கவர்ச்சியால் உங்களின் மனம் கவரப்பட அனுமதிக்காதீர்கள்.