28.07.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, உலகில் மீண்டும் ஒருமுறை அமைதி ஸ்தாபிக்கப்படுகின்றது என்ற நற்செய்தியை அனைவருக்கும் கொடுங்கள். ஒரேயொரு ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்தை ஸ்தாபிப்பதற்குத் தந்தை வந்துவிட்டார்.

கேள்வி:
நினைவில் நிலைத்திருப்பதற்கான சமிக்ஞை மீண்டும் மீண்டும் குழந்தைகளாகிய உங்களுக்குக் கொடுக்கப்படுவது ஏன்?

பதில்:
நினைவு செய்வதனால் மாத்திரமே நீங்கள் என்றென்றும் ஆரோக்கியமாகவும், என்றென்றும் தூய்மையாகவும் ஆகுகிறீர்கள் என்பதால் ஆகும். இதனாலேயே, உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம், நினைவில் நிலைத்திருங்கள். அதிகாலையில், குளித்த பின்னர், உலாவச் செல்லுங்கள் அல்லது ஏகாந்தமாக அமர்ந்திருங்கள். இங்கே, வருமானத்தைத் தவிர, வேறு எதுவுமே இல்லை. நினைவின் மூலமே, நீங்கள் உலக அதிபதிகள் ஆகுவீர்கள்.

ஓம் சாந்தி.
இந்த நேரத்தில், உலகில் உள்ள அனைவரும் அமைதியையே விரும்புகிறார்கள் என்பதை இனிய குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். உலகில் எவ்வாறு அமைதி நிலவ முடியும் என வினவும் மக்களின் குரலையே நீங்கள் தொடர்ந்தும் கேட்கிறீர்கள். எவ்வாறாயினும், இப்பொழுது அவர்கள் விரும்புகின்ற அமைதி, உலகில் எப்பொழுது நிலவியது என்பது எவருக்கும் தெரியாது. இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியம் இருந்த பொழுதே, உலகில் அமைதி நிலவியது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரம் அறிவீர்கள். இப்பொழுதும் மக்கள் தொடர்ந்தும் இலக்ஷ்மி நாராயணனுக்கு ஆலயங்களைக் கட்டுகிறார்கள். 5000 வருடங்களுக்கு முன்னர் உலகில் அமைதி நிலவியது என்றும், அது இப்பொழுது மீண்டும் ஒருமுறை ஸ்தாபிக்கப்படுகின்றது என்றும் நீங்கள் எவரிடமும் கூறமுடியும். யார் அதை ஸ்தாபிக்கிறார்கள்? மனிதர்களுக்கு இது தெரியாது. தந்தை அனைத்தையும் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தி உள்ளார். ஆகவே, இதனை நீங்கள் எவருக்கும் விளங்கப்படுத்த முடியும். நீங்கள் அவர்களுக்கு எழுதலாம். எவ்வாறாயினும், எவருக்கும் எழுதுவதற்குரிய தைரியம் இன்னமும் எவருக்கும் இல்லை. உலகில் அனைவரும் அமைதியை விரும்புகிறார்கள் என்பதை நீங்கள் செய்தித்தாள்களின் மூலம் அறிகிறீர்கள். ஒரு யுத்தம் நடைபெறும் பொழுது, உலக அமைதிக்காக மக்கள் ஒரு யாகத்தை வளர்க்கிறார்கள். என்ன யாகத்தை? அவர்கள் உருத்திர யாகத்தை உருவாக்குகிறார்கள். உருத்திர சிவன் என அழைக்கப்படுகின்ற, தந்தையே, இந்த ஞான யாகத்தை உருவாக்கி உள்ளார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். இப்பொழுது உலகில் அமைதி ஸ்தாபிக்கப்படுகிறது. அமைதி நிலவிய சத்தியயுகத்துப் புதிய உலகில் நிச்சயமாக ஆட்சி செய்பவர்கள் இருந்திருக்க வேண்டும். அசரீரி உலகில் அமைதி நிலவ வேண்டும் என நீங்கள் கூற மாட்டீர்கள்; எப்படியாயினும், அங்கு அமைதி இருக்கும். மனிதர்கள் வசிக்கும் இடமே, உலகம் ஆகும். அசரீரி உலகை, உலகம் என அழைக்க முடியாது. அது அமைதி தாமம் ஆகும். பாபா இதை மீண்டும் மீண்டும் விளங்கப்படுத்துகிறார். எவ்வாறாயினும், சில குழந்தைகள் மறந்து விடுகிறார்கள். சிலரால் இதைத் தங்கள் புத்தியில் வைத்திருக்க முடிவதால், மற்றவர்களுக்கு விளங்கப்படுத்த முடிகிறது. எவ்வாறு உலகில் அமைதி நிலவியது எனவும், அது எவ்வாறு இப்பொழுது மீண்டும் ஒருமுறை ஸ்தாபிக்கப்படுகிறது எனவும் எவருக்கும் விளங்கப்படுத்துவது மிகவும் இலகுவானது. பாரதத்தில் தேவர்களின் ஆதிசனாதன தர்மத்தின் இராச்சியம் இருந்தபொழுது, அந்த ஒரு தர்மம் மாத்திரம் இருந்தது. அங்கு உலகில் அமைதி நிலவியது. இது விளங்கப்படுத்துவதற்கும், எழுதுவதற்கும் மிகவும் இலகுவான விடயம். பெரிய ஆலயங்களைக் கட்டுபவர்களுக்கும் நீங்கள் எழுத முடியும்: நீங்கள் யாருக்காக ஆலயங்களைக் கட்டுகிறீர்களோ, அவர்களின் இராச்சியம் 5000 வருடங்களுக்கு முன்னர் இருந்தபொழுது, உலகில் அமைதி நிலவியது. பாரதத்தில் அவர்களின் இராச்சியம் இருந்தது. அப்பொழுது வேறெந்தச் சமயங்களும் இருக்கவில்லை. இது மிகவும் இலகுவானதும், பொது அறிவுக்குரிய கேள்வியுமாகும். நாடகத்துக்கேற்ப, நீங்கள் மேலும் முன்னேறுகையில், அனைத்தும் புரிந்து கொள்ளப்படும். நீங்கள் அனைவருக்கும் இந்த நல்ல செய்தியைக் கொடுக்க முடியும். இதை அழகான அட்டைகளிலும் அச்சிடுங்கள். 5000 வருடங்களுக்கு முன்னர் உலகில் அமைதி நிலவியது. அது புதிய உலகமாகவும், புதிய பாரதமாகவும் இருந்தபொழுது, அது இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியமாக இருந்தது. உலகில் மீண்டும் ஒருமுறை அமைதி ஸ்தாபிக்கப்படுகிறது. குழந்தைகளாகிய நீங்கள் இவ்விடயங்களை நினைவு செய்வதால், மிகவும் சந்தோஷமாக இருக்க வேண்டும். நீங்கள் தந்தையை நினைவு செய்வதால் மாத்திரம் உங்களால் உலக அதிபதிகளாக ஆகமுடியும் என்பதை அறிவீர்கள். அனைத்தும் குழந்தைகளாகிய நீங்கள் செய்யும் முயற்சியில் தங்கியுள்ளது. உங்களுக்கு நேரம் இருக்கும் பொழுதெல்லாம், பாபாவின் நினைவில் நிலைத்திருக்க வேண்டும் என பாபா விளங்கப்படுத்தி உள்ளார். அதிகாலையில், குளித்த பின்னர், ஏகாந்தமாக உலாவச் செல்லுங்கள் அல்லது எங்காவது அமர்ந்திருங்கள். இங்கு, நீங்கள் ஒரு வருமானத்தைச் சம்பாதிக்க வேண்டும். இந்நினைவு சதா தூய்மையாகவும், சதா ஆரோக்கியமாகவும் ஆகுவதற்கே ஆகும். இங்கு சந்நியாசிகள் தூய்மையாக இருந்தாலும், நிச்சயமாகச் சிலர் நோயில் வீழ்கிறார்கள். இது நோய்களின் உலகமாகும். அது நோயிலிருந்து விடுபட்ட உலகம். இதை நீங்கள் மாத்திரம் அறிவீர்கள். சுவர்க்கத்தில் அனைவரும் நோயில் இருந்து விடுபட்டிருக்கிறார்கள் என்பதை எவ்வாறு உலகில் எவராவது அறிய முடியும்? சுவர்க்கம் என்றால் என்ன என்பது எவருக்கும் தெரியாது. இப்பொழுது நீங்கள் அதை அறிவீர்கள். பாபா கூறுகிறார்: உங்களைச் சந்திக்கின்ற எவருக்கும் உங்களால் விளங்கப்படுத்த முடியும். உதாரணமாக, இங்கு ஒருவர் ஓர் அரசர் அல்லது அரசி என அழைக்கப்படலாம். ஆனால் உண்மையில் இங்கு எவரும் ஓர் அரசரோ அல்லது அரசியோ இல்லை. அவர்களுக்குக் கூறுங்கள்: இப்பொழுது நீங்கள் ஓர் அரசரோ அல்லது அரசியோ இல்லை. இது அவர்கள் புத்தியிலிருந்து அகற்றப்பட வேண்டும். சக்கரவர்த்தி ஸ்ரீ நாராயணனினதும், சக்கரவர்த்தினி ஸ்ரீ இலக்ஷ்மியினதும் இராச்சியம் இப்பொழுது ஸ்தாபிக்கப்படுகிறது. ஆகவே, இங்கு நிச்சயமாக அரசர்களோ அல்லது அரசிகளோ இல்லை. தாங்கள் அரசர்கள், அரசிகளாக இருந்தார்கள் என்பதை மறந்து விடும்படியும், அவர்கள் தொடர்ந்தும் சாதாரண மனிதர்களைப் போன்று செயற்பட வேண்டும் எனவும் அவர்களுக்குக் கூறப்பட்டது. அவர்களிடமும் தங்கம், பணம் போன்றன உள்ளன. அவர்களிடம் இருந்து அனைத்தும் பெறப்பட வேண்டும் என்ற சட்டங்களும் இப்பொழுது நிறைவேற்றப்பட்டுள்ளன. பின்னர் அவர்கள் சாதாரண மனிதர்கள் போன்று ஆகுவார்கள். இந்த யுக்திகள் உருவாக்கப்பட்டுள்ளன. நினைவு கூரப்பட்டுள்ளது: சிலரின் செல்வம் மண்ணில் புதைந்துபோனது, சிலரின் செல்வம் அரசர்களால் கொள்ளை அடிக்கப்பட்டது. இப்பொழுது அரசர்கள் எவரிடமிருந்தும் கொள்ளை அடிப்பதில்லை. எவ்வாறாயினும், இப்பொழுது அரசர்கள் இல்லை. மக்களே ஏனைய மக்களிடம் இருந்து கொள்ளை அடிக்கிறார்கள். இன்றைய இராச்சியம் மிகவும் அற்புதமானது. அரசர்களின் பெயர்கள் முழுமையாகவே மறைந்து விடும்பொழுது, அந்த இராச்சியம் மீள -ஸ்தாபிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் அமைதி நிலவும் இடத்துக்கு நீங்கள் செல்கிறீர்கள் என்பதை இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். அதுவே சதோபிரதான் உலகமாகிய, சந்தோஷதாமம் ஆகும். நாங்கள் அங்கே செல்ல முயற்சி செய்கிறோம். குழந்தைகளாகிய நீங்கள் இங்கே அமர்ந்திருந்து கோலாகலமாக விளங்கப்படுத்த வேண்டும். செயற்கையான வெளிப்பகட்டு இருக்கக்கூடாது. இன்றைய நாட்களில், போலியான பலர் உள்ளார்கள். இங்கு, நீங்கள் உண்மையான, உறுதியான பிரம்மாகுமார்களும், குமாரிகளும் ஆகவேண்டும். தந்தை பிரம்மாவுடன் உலகில் அமைதியை ஸ்தாபிக்கும் பணியைப் பிராமணர்களாகிய நீங்கள் மேற்கொள்கிறீர்கள். மிகவும் அமைதி நிறைந்த, மிகவும் இனிமையான குழந்தைகள் அத்தகைய அமைதியை ஸ்தாபிப்பதற்குத் தேவைப்படுகிறார்கள். ஏனெனில் நீங்கள் உலகில் அமைதியை ஸ்தாபிப்பதற்குக் கருவிகள் ஆகியுள்ளீர்கள் என்பதை அறிவீர்கள். ஆகவே, அனைத்துக்கும் முதலில், நாங்கள் பெருமளவுக்கு அமைதியைக் கொண்டிருப்பது அவசியம். நீங்கள் மிகவும் மென்மையாகவும், பெரும் இராஜரீகத்துடனும் பேச வேண்டும். நீங்கள் முற்றிலும் மறைமுகமானவர்கள். உங்கள் புத்தி அழிவற்ற இந்த ஞான இரத்தினம் எனும் பொக்கிஷங்களால் நிரப்பப்பட்டுள்ளது. நீங்களே தந்தையின் வாரிசுகள். தந்தையிடம் உள்ள அத்தனை பொக்கிஷங்களாலும் நீங்கள் உங்களை நிரப்ப வேண்டும். அவருடைய சொத்து அனைத்தும் உங்களுடையதே. எவ்வாறாயினும், உங்களிடம் போதுமானளவு தைரியம் இல்லாத பொழுது, உங்களால் அதைப் பெற முடியாதுள்ளது. இதைப் பெறுபவர்கள் மாத்திரம் ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோருவார்கள். நீங்கள் ஏனையோருக்கு விளங்கப்படுத்துவதற்கு மிகவும் ஆர்வமாக இருக்க வேண்டும். நாங்கள் பாரதத்தை மீண்டும் ஒருமுறை சுவர்க்கமாக்க வேண்டும். உங்கள் வியாபாரம் போன்றவற்றை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, இந்தச் சேவையையும் செய்ய வேண்டும். இதனாலேயே பாபா எங்களைத் துரிதப்படுத்தும்படி கூறுகிறார். அதற்குப் பதிலாக, அனைத்தும் நாடகத்துக்கு ஏற்பவே நடைபெறுகிறது. ஒவ்வொருவரும் தனது சொந்த நேரத்துக்கு ஏற்பவே, அனைத்தையும் செய்கிறார்கள். குழந்தைகளாகிய நீங்கள் முயற்சி செய்வதற்குத் தூண்டப்படுகிறீர்கள். இப்பொழுது மிகச்சொற்ப நேரமே எஞ்சியுள்ளது என்னும் நம்பிக்கை குழந்தைகளாகிய உங்களுக்கு உள்ளது. இது எங்கள் இறுதிப் பிறவி, பின்னர் நாங்கள் சுவர்க்கத்தில் இருப்போம். இது துன்ப தாமம், அது பின்னர் சந்தோஷ தாமம் ஆகும். நிச்சயமாக, அவ்வாறு ஆகுவதற்குக் காலம் எடுக்கும். இவ்விநாசம் சிறியதொன்றல்ல. ஒரு புதிய வீடு கட்டப்பட்டு வரும்பொழுது, ஒருவர் புதிய வீட்டை மாத்திரம் நினைவுசெய்கிறார். அது ஓர் எல்லைக்கு உட்பட்ட விடயம். அதில் உறவுமுறைகள் போன்றவை மாற்றம் அடைவதில்லை. இங்கு, பழைய உலகம் மாற்றமடைய வேண்டும். பின்னர், நன்கு கற்றுள்ளவர்கள் அரச குடும்பத்தினுள் செல்வார்கள். இல்லாவிட்டால், அவர்கள் பிரஜைகள் ஆகுவார்கள். குழந்தைகளாகிய உங்களுக்குப் பெரும் சந்தோஷம் இருக்க வேண்டும். நீங்கள் 50 முதல் 60 பிறவிகளுக்குச் சந்தோஷத்தை அனுபவம் செய்கிறீர்கள் என பாபா விளங்கப்படுத்தி உள்ளார். நீங்கள் துவாபர யுகத்திலும் பெருமளவு செல்வத்தைக் கொண்டிருக்கிறீர்கள். பின்னரே துன்பம் வருகிறது. அரசர்கள் தங்கள் மத்தியில் சண்டையிட்டுப் பிளவுபட ஆரம்பிக்கும் பொழுதே, துன்பம் ஆரம்பிக்கிறது. முதலில், தானியம்; கூட மிகவும் மலிவாக இருக்கின்றது; பின்னரே பஞ்சம் வருகிறது. உங்களிடம் பெருமளவு செல்வம் உள்ளது. சதோபிரதானாக இருப்பதிலிருந்து நீங்கள் படிப்படியாகத் தமோபிரதான் ஆகுகிறீர்கள். ஆகவே, குழந்தைகளாகிய உங்களுக்குப் பெருமளவு உள்ளார்ந்த சந்தோஷம் இருக்க வேண்டும். உங்களிடமே அமைதியும், சந்தோஷமும் இல்லாத பொழுது, நீங்கள் எவ்வாறு உலகில் அமைதியை ஸ்தாபிக்கப் போகிறீர்கள்? பலரின் புத்திகள் அமைதி அற்றுள்ளன. தந்தை அமைதியின் ஆசீர்வாதத்தைக் கொடுப்பதற்கு வருகிறார். அவர் கூறுகிறார்: என்னை நினைவு செய்யுங்கள். பின்னர், தமோபிரதான் ஆகுவதால், அமைதியற்றுள்ள ஆத்மாக்கள் இந்நினைவுச் சக்தியின் மூலம் சதோபிரதானாகவும், அமைதி நிறைந்தவர்களாகவும் ஆகுவார்கள். எவ்வாறாயினும், சில குழந்தைகளால் நினைவு செய்வதற்கு முயற்சி செய்ய இயலாதுள்ளது. அவர்கள் நினைவில் நிலைத்திருக்காமல் இருப்பதால், மாயை பல புயல்களைக் கொண்டு வருகிறாள். நீங்கள் நினைவில் நிலைத்திருந்து முழுமையாகத் தூய்மை ஆகாது விட்டால், தண்டனை கிடைப்பதுடன், அந்தஸ்தும் அழிக்கப்படும். எவ்வாறாயினும், நீங்கள் சுவர்க்கத்துக்குச் செல்வீர்கள் என எண்ணாதீர்கள். ஓ! அடித்ததன் பின்னர், சில சதப் பெறுமதி வாய்ந்த சந்தோஷத்தை அனுபவம் செய்வது சிறந்ததா? ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோருவதற்கு மக்கள் அதிகளவு முயற்சி செய்கிறார்கள். நீங்கள் எதைப் பெற்றாலும், அதன் மூலம் திருப்தியாக இருப்பீர்கள் என எண்ணக்கூடாது. ஏதாவது முயற்சிகளைச் செய்யாத எவராவது இருப்பார்கள் என்பதல்ல. பக்கிரிகள் கூட, (சமயப் பிச்சைக்காரர்கள்) பணத்தைச் சேகரிப்பதற்கு யாசகம் செய்கிறார்கள். அனைவரும் பணத்துக்கான பசியுடன் இருக்கிறார்கள். பணத்தின் மூலம், நீங்கள் அனைத்து வகையான சந்தோஷத்தையும் கொண்டிருக்க முடியும். நீங்கள் பாபாவிடமிருந்து எல்லையற்ற செல்வத்தைப் பெறுகிறீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நீங்கள் குறைவான முயற்சி செய்தால், குறைந்த செல்வத்தைப் பெறுகிறீர்கள். தந்தை உங்களுக்குச் செல்வத்தைக் கொடுக்கிறார். மக்கள் சொல்கிறார்கள்: என்னிடம் செல்வம் இருந்திருந்தால், நான் அமெரிக்கா போன்றவற்றுக்குப் பயணிப்பேன். நீங்கள் அதிகளவுக்குத் தந்தையை நினைவுசெய்து, சேவை செய்தால், அதிகச் சந்தோஷத்தைப் பெறுவீர்கள். ஒரு தந்தை தனது குழந்தைகளை ஒவ்வொரு விடயத்திலும் முயற்சி செய்து மேன்மை ஆகுமாறு தூண்டுகிறார். தனது குழந்தைகள் தனது குடும்பத்தின் பெயரைப் புகழடையச் செய்வார்கள் என அவர் நம்புகிறார். குழந்தைகளாகிய நீங்கள் இறை குடும்பத்தின் பெயரையும், தந்தையின் பெயரையும் புகழடையச் செய்ய வேண்டும். அந்த ஒரேயொருவரே உண்மையான தந்தையும், உண்மையான ஆசிரியரும், உண்மையான சற்குருவும் ஆவார். தந்தையே அதிமேன்மையானவரும், உண்மையான சற்குருவும் ஆவார். வேறு எவருமன்றி, ஒரேயொரு குருவே உள்ளார் என உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. ஒரேயொருவரே அனைவருக்கும் சற்கதியை அருள்பவர். இதை நீங்கள் மாத்திரம் அறிவீர்கள். இப்பொழுது நீங்கள் தெய்வீகப் புத்திகள் உடையவர்களாக ஆகுகிறீர்கள். நீங்கள் தெய்வீக தாமத்தின் தெய்வீக அரசர்களாகவும், அரசிகளாகவும் ஆகுகிறீர்கள். பாரதம் சத்தியயுகமாக இருந்தது என விளங்கப்படுத்துவது அத்தகையதோர் இலகுவான விடயமாகும். அங்கு எவ்வாறு உலகில் அமைதி நிலவியது என இலக்ஷ்மி நாராயணனின் படத்தைப் பயன்படுத்தி, உங்களால் விளங்கப்படுத்த முடியும். சுவர்க்கத்தில் அமைதி நிலவியது. அது இப்பொழுது நரகமாக உள்ளது. அமைதியின்மையே உள்ளது. இந்த இலக்ஷ்மி நாராயணன் சுவர்க்கத்தில் வசிக்கிறார்கள். ஸ்ரீகிருஷ்ணர், கிருஷ்ணப் பிரபு என அழைக்கப்படுகிறார். அவர் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் எனவும் அழைக்கப்படுகிறார். பல பிரபுக்கள் உள்ளார்கள். பெருமளவு நிலத்துக்கு உரிமையானவர்களும் நிலப் பிரபுக்கள் என அழைக்கப்படுகிறார்கள். ஸ்ரீகிருஷ்ணர் அமைதி நிலவிய உலகின் இளவரசராக இருந்தார். இராதையும் கிருஷ்ணரும் இலக்ஷ்மியும் நாராயணனும் ஆகினார்கள் என்பது எவருக்கும் தெரியாது. உங்களைப் பற்றிப் பல்வேறு கதைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவர்கள் அதிகளவு குழப்பத்தை விளைவிக்கிறார்கள். நீங்கள் அனைவரையும் சகோதர, சகோதரிகளாக ஆக்குகிறீர்கள் என அவர்கள் கூறுகிறார்கள். பிராமணர்களாகிய நீங்கள், பிரஜாபிதா பிரம்மாவின் வாய்வழித் தோன்றல்களாகிய குழந்தைகள் என்பது விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. உங்களையிட்டுக் கூறப்பட்டுள்ளது: தேவர்களாக ஆகவுள்ள, பிராமணர்களுக்கு வந்தனங்கள். பௌதீகப் பிராமணர்கள் உங்களுக்கு நமஸ்தே கூறுகிறார்கள். ஏனெனில் நீங்கள் உண்மையான சகோதரர்களும், சகோதரிகளும் ஆவீர்கள்; நீங்கள் தூய்மையாக இருக்கிறீர்கள். ஆகவே, அவர்கள் ஏன் தூய்மையாக இருப்பவர்களுக்கு மதிப்பளிக்க மாட்டார்கள்? ஒரு குமாரி தூய்மையாக இருக்கும் பொழுது, அனைவரும் அவளை வணங்குகிறார்கள். வெளியிலிருந்து வரும் விருந்தாளி கூட, ஒரு குமாரிக்குத் தலைவணங்குவார். ஏன் இவ்வேளையில் குமாரிகளுக்கு அதிகளவு புகழ் உள்ளது? நீங்கள் பிரம்மாகுமார்களும், குமாரிகளுமாக இருப்பதுடன், உங்களிற் பெரும்பான்மையினர் குமாரிகளாக இருப்பதனாலும் ஆகும். சிவசக்தி பாண்டவசேனை நினைவுகூரப்பட்டு வருகிறது. இச்சேனையில், ஆண்களும் உள்ளார்கள். ஆனால் உங்களிற் பெரும்பான்மையோர் பெண்கள் என்பதால், நீங்கள் நினைவு கூரப்படுகிறீர்கள். நன்கு கற்பவர்கள் மேன்மையானவர்கள் ஆகுகிறார்கள். முழு உலகினதும் வரலாற்றையும், புவியியலையும் இப்பொழுது நீங்கள் அறிவீர்கள். சக்கரத்தை விளங்கப்படுத்துவது மிகவும் இலகுவானது. பாரதம் தெய்வீக தேசமாக இருந்தது, அது இப்பொழுது கற்தேசம் ஆகியுள்ளது. ஆகவே, அனைவரும் கற்களின் பிரபுக்கள். குழந்தைகளாகிய நீங்கள் 84 பிறவிகளின் சக்கரத்தை அறிவீர்கள். இப்பொழுது நீங்கள் வீடு திரும்ப வேண்டும். ஆகவே, நீங்கள் தந்தையை நினைவு செய்தால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். எவ்வாறாயினும், தங்களின் கவனயீனம் காரணமாகச் சில குழந்தைகளால் போதுமானளவு முயற்சி செய்ய முடியாமல் உள்ளது. அவர்கள் அதிகாலையில் விழித்தெழுவதில்லை. அவர்கள் விழித்தெழுந்தாலும், அதனால் களிப்படைவதில்லை. அவர்கள் தூங்கி வழிந்து, திரும்பவும் உறங்கச் செல்கிறார்கள். அவர்கள் நம்பிக்கை அற்றவர்கள் ஆகுகிறார்கள். பாபா கூறுகிறார்: குழந்தைகளே, இது ஒரு யுத்தகளம். நீங்கள் இதில் நம்பிக்கை இழக்கக்கூடாது. நினைவுச்சக்தியின் மூலம் நீங்கள் மாயையை வெற்றிகொள்ள வேண்டும். நீங்கள் இதற்காக முயற்சி செய்ய வேண்டும். தந்தையை மிகச்சரியாக நினைவுசெய்யாத பல சிறந்த குழந்தைகள் உள்ளார்கள். ஓர் அட்டவணையை வைத்திருப்பதால், உங்களுக்கு எவ்வளவு இலாபமும் நட்டமும் ஏற்பட்டன என்பதை நீங்கள் கூறமுடியும். சிலர் கூறுகிறார்கள்: உண்மையில் அட்டவணை, எனது ஸ்திதியில் அற்புதங்களை ஏற்படுத்திள்ளது. அத்தகையதோர் அட்டவணையை அரிதாகச் சிலரே எழுதுகிறார்கள். இதற்குப் பெரும் முயற்சி தேவைப்படுகிறது. பல நிலையங்களில், சில போலியானவர்களும் சென்று அமர்ந்து விடுகிறார்கள். அவர்கள் தொடர்ந்தும் பாவச்செயல்களைப் புரிகிறார்கள். அவர்கள் தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்றாத பொழுது, பெருமளவு சேதம் விளைவிக்கப்படுகிறது. அசரீரியானவர் பேசுகிறாரா அல்லது பௌதீகமானவர் பேசுகிறாரா என்பதைக் குழந்தைகளான உங்களால் கூறமுடியாது. சிவபாபாவே உங்களுக்கு வழிகாட்டல்களைக் கொடுப்பவர் என எப்பொழுதும் உங்களைக் கருதுமாறு குழந்தைகளாகிய உங்களுக்குப் பல தடவைகள் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. அப்பொழுது உங்கள் புத்திகள் மேலே தொடர்புபட்டு இருக்கும். இன்றைய நாட்களில், நிச்சயதார்த்தம் செய்வதற்கு, அவர்கள் ஒரு புகைப்படத்தைக் காட்டுகிறார்கள். “இன்ன, இன்னாருக்கு நல்ல குடும்பத்தில் இருந்து ஒருவர் தேவை” என்னும் வார்த்தைகளுடன் ஒரு புகைப்படத்தை அச்சிட்டு, அவர்கள் ஒரு துணைக்காக விளம்பரமும் கொடுக்கிறார்கள். உலகின் நிலை என்னவாகி உள்ளது எனவும், அது என்னவாகப் போகின்றது எனவும் பாருங்கள்! பல கருத்துக்களும், அபிப்பிராயங்களும் உள்ளன என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். பிராமணர்களாகிய உங்களுக்கு ஒரு வழிகாட்டல் மாத்திரம் உள்ளது: அது உலகில் அமைதியை ஸ்தாபிப்பதற்கான வழிகாட்டல். ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதால், நீங்கள் உலகில் அமைதியை ஸ்தாபிக்கிறீர்கள். ஆகவே, குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் அமைதியாக இருக்க வேண்டும். எதையாவது செய்பவர்கள், அதன் வெகுமதியைப் பெறுகிறார்கள். இல்லாவிட்டால், பெரும் இழப்பு இருக்கும். பிறவிபிறவியாக அந்த இழப்பு இருக்கும். உங்கள் இலாப, நட்டக் கணக்கைப் பார்க்குமாறு குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறப்பட்டு வருகிறது. நீங்கள் எவருக்காவது துன்பத்தை விளைவித்தீர்களா என உங்கள் அட்டவணையைச் சோதித்துப் பாருங்கள். தந்தை கூறுகிறார்: இவ்வேளையில், உங்களுடைய ஒவ்வொரு கணமும் அதிகப் பெறுமதி வாய்ந்தது. தண்டனையை அனுபவம் செய்த பின்னர் ஒரு சிறிதளவைப் பெறுவது ஒரு பெரிய விடயமல்ல. மிகவும் செல்வந்தர்கள் ஆகுவதே, உங்கள் விருப்பமாகும். முதலில், பூஜிக்கத் தக்கவர்களாக இருந்தவர்கள், பூஜிப்பவர்களாகி விட்டார்கள். அவர்களிடம் அதிகளவு செல்வம் இருக்கும் பொழுது மாத்திரம் அவர்களால் சோமநாதருக்கு ஆலயத்தைக் கட்டி அவரை வழிபட முடியும். இதுவும் ஒரு கணக்காகும். எப்படியிருப்பினும், குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது: நீங்கள் ஓர் அட்டவணையை வைத்திருக்கும் பொழுது, நன்மை ஏற்படுகிறது. அனைத்தையும் குறித்துக் கொள்ளுங்கள். தொடர்ந்தும் அனைவருக்கும் செய்தியைக் கொடுங்கள். வெறுமனே மௌனமாக அமர வேண்டாம். உங்களால் புகையிரதங்களிலும் விளங்கப்படுத்தி அவர்களுக்குச் சில புத்தகங்களையும் கொடுக்க முடியும். அவர்களுக்குக் கூறுங்கள்: இது மில்லியன்கள் பெறுமதியானது. பாரதத்தில் இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியம் இருந்தபொழுது, உலகில் அமைதி நிலவியது. அந்த இராச்சியத்தை ஸ்தாபிப்பதற்கு இப்பொழுது மீண்டும் ஒருமுறை தந்தை வந்து விட்டார். தந்தையை நினைவு செய்தால், உங்கள் பாவங்களை நீங்கள் அழிப்பதுடன், உலகில் அமைதியும் இருக்கும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. பிராமணர்களாகிய நாங்களே உலகில் அமைதியை ஸ்தாபிப்பதற்கான கருவிகள். ஆதலால், நாங்கள் மிக மிக அமைதி நிறைந்தவர்களாக இருக்க வேண்டும். நாங்கள் மிகவும் மென்மையாகவும், மிகவும் இராஜரீகத்துடனும் பேச வேண்டும்.

2. கவனயீனமாக இருப்பதைத் துறந்து, நினைவிற்காக முயற்சி செய்யுங்கள். என்றுமே நம்பிக்கையை இழந்தவர்கள் ஆகவேண்டாம்.

ஆசீர்வாதம்:
நீங்கள் எந்தவொரு பரீட்சைத்தாளுக்கும் பயப்படுவதால் அன்றி, முற்றுப்புள்ளி வைத்து முழுமையாகச் சித்தி அடைவதன் மூலம் வெற்றி ரூபம் ஆகுவீர்களாக.

எந்தவொரு பரீட்சையும் உங்களுக்கும் முன்னால் வரும்போது, அதையிட்டுப் பயப்படாதீர்கள். ‘இது ஏன் வந்தது?’ என்ற கேள்விகள் எதையும் கொண்டிராதீர்கள். அதைப் பற்றிச் சிந்திப்பதில் உங்களின் நேரத்தை வீணாக்காதீர்கள். கேள்விக்குறிகளை முடித்து ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள். அப்போது மட்டுமே உங்களால் வேறு வகுப்பிற்கு மாற முடியும். அதாவது, அந்தப் பரீட்சையில் சித்தி அடைய முடியும். முற்றுப்புள்ளி வைப்பவர்கள், முழுமையாகச் சித்தி அடைவார்கள். ஏனென்றால், ஒரு முற்றுப்புள்ளியே ஒரு புள்ளியின் ஸ்திதி ஆகும். பார்த்தும் பார்க்காதிருங்கள். கேட்டும் கேட்காதிருங்கள். தந்தை உங்களுக்குச் சொல்வதை மட்டும் கேளுங்கள். தந்தை உங்களுக்கு எதைக் கொடுத்துள்ளார் எனப் பாருங்கள். அப்போது நீங்கள் முழுமையாகச் சித்தி அடைவீர்கள். சித்தி அடைவதன் அடையாளம், சதா ஏறுகின்ற ஸ்திதியை அனுபவம் செய்து வெற்றி நட்சத்திரம் ஆகுவதாகும்.

சுலோகம்:
சுய முன்னேற்றத்தைக் கொண்டிருப்பதற்கு, கேள்விகள், திருத்தங்கள், மேற்கோள்கள் எல்லாவற்றையும் துறந்து, உங்களின் இணைப்பைச் சிறப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.

அவ்யக்த சமிக்கை: எண்ணங்களின் சக்தியை சேமித்து மேன்மையான சேவைக்கு கருவியாகுங்கள்.

இறுதியில், உங்களின் மனதின் சக்தி மட்டுமே உங்களின் சொந்தப் பாதுகாப்பிற்கான வழிமுறை ஆகிவிடும். உங்களின் மனதின் சக்தியால் மட்டுமே உங்களின் இறுதிக் கணங்களை அழகானவை ஆக்குவதற்கு உங்களால் ஒரு கருவி ஆகமுடியும். அந்த வேளையில், உங்களிடம் மேன்மையான எண்ணங்களின் சக்தியும் ஒரேயொருவருடன் தெளிவான இணைப்பும் இருக்க வேண்டும். எல்லையற்ற சேவை செய்வதற்கும் உங்களின் சொந்தப் பாதுகாப்பிற்கும் மனதின் சக்தியையும் பயமற்ற தன்மையின் சக்தியையும் சேமியுங்கள்.