28.07.26        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, ஒரேயொரு தந்தை மாத்திரமே தவறாகிப் போனவை அனைத்தையும் உங்களுக்காகச் சரிப்படுத்துகின்றார். அதாவது, ஒரேயொரு தந்தை மாத்திரமே உங்கள் பாக்கியத்தை உருவாக்குகின்றார். அவர் உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுத்து, உங்களைப் பாக்கியசாலிகள் ஆக்குகின்றார்.

கேள்வி:
இந்த ஆன்மீக சூளையில் (பத்தி) குழந்தைகளாகிய நீங்கள் என்ன ஒழுங்குமுறையைக் கொண்டிருக்கின்றீர்கள்?

பதில்:
இந்த ஆன்மீக சூளையில் (பத்தி) அமர்ந்திருப்பவர்கள், அதாவது நினைவு யாத்திரையில் இருப்பவர்கள், தமது எண்ணங்களை ஒருபோதும் இங்கும் அங்கும் அலைபாய அனுமதிக்கக் கூடாது. ஒரேயொரு தந்தை மாத்திரமே நினைவு செய்யப்பட வேண்டும். உங்கள் எண்ணங்கள் இங்கும் அங்கும் அலைபாயுமாயின், நீங்கள் தொடர்ந்தும் கொட்டாவி விட்டு, தூங்கி விழுவதுடன், சூழலும் பாழாகி விடுகின்றது. பின்னர் நீங்களே உங்களுக்கு ஓர் இழப்பை ஏற்படுத்துகின்றீர்கள்.

பாடல்:
இதயத்தின் ஆதாரம் துண்டிக்கப்படவும் கூடாது, உங்கள் பாக்கியம் உருவாக்கப்பட்ட பின்னர் துண்டிக்கப்படவும் கூடாது…

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான, ஆன்மீகக் குழந்தைகள் பாடலின் இரு வரிகளைக் கேட்டீர்கள். பிராமணர்களாகிய உங்களைத் தவிர ஏனையவர்களின் பாக்கியம் இந்நேரத்தில் சீரழிந்து போவதால், குழந்தைகளாகிய நீங்கள் எச்சரிக்கப்படுகின்றீர்கள். தவறாகிப் போனவை அனைத்தும் உங்களுக்காக இப்பொழுது சரிசெய்யப்படுகின்றன. தந்தை உங்கள் பாக்கியத்தை உருவாக்குபவர் என்று அழைக்கப்படுகின்றார். சிவபாபா எவ்வளவு இனிமையானவர் என்பதை நீங்கள் அறிவீர்கள். “பாபா” என்ற வார்த்தை மிக இனிமையானது. சகல ஆத்மாக்களும் தந்தையிடம் இருந்தே ஓர் ஆஸ்தியைப் பெறுகின்றனர். உலகில், புதல்விகள் அன்றி, புதல்வர்களே தமது தந்தையிடம் இருந்து ஓர் ஆஸ்தியைப் பெறுகின்றனர். இங்கே, புதல்வர்களும், புதல்விகளும் ஆஸ்திக்கான உரிமையைக் கொண்டுள்ளனர். தந்தை தனது குழந்தைகளான ஆத்மாக்களுக்கே கற்பிக்கின்றார். நாங்கள் அனைவரும் சகோதரர்கள் என்பதை ஆத்மாக்களாகிய நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். இது உண்மையில் சகோதரத்துவம் எனப்படுகின்றது. அனைவரும் ஒரே கடவுளின் குழந்தைகள். அவ்வாறாயின், அவர்கள் அனைவரும் ஏன் அதிகளவில் சண்டை சச்சரவுகளில் ஈடுபடுகின்றனர்? அவர்கள் அனைவரும் தொடர்ந்தும் தங்கள் மத்தியில் சண்டையிடுகின்றனர். எண்ணற்ற சமயங்களும், எண்ணற்ற வழிகாட்டல்களும் உள்ளன. விகாரங்களின் பிரசன்னத்தால் இராவண இராச்சியத்தில் எப்பொழுதும் சண்டைகள் இடம்பெறுவதே பிரதான விடயமாகும். காம விகாரம் காரணமாகவே அதிக சண்டை இடம்பெறுகின்றது! பல அரசர்கள் இவ்வாறாகவே சண்டை பிடித்தனர். காமத்தின் காரணமாகவே அவர்கள் அதிகளவில் சண்டை பிடிக்கின்றனர். அவர்கள் மிகவும் சந்தோஷம் அடைகின்றனர், ஆனால் ஒருவரின் இதயம் வேறொருவருடன் இணைக்கப்பட்டால், அவளுக்காக அவன் கொலை செய்யவும் கூடும். காமமே மிகக் கொடிய எதிரியாகும். கோபத்தைக் கொண்டவர்கள் கோபக்காரர் எனவும், பேராசை கொண்டவர்கள் பேராசைக்காரர் எனவும் அழைக்கப்படுகின்றனர். ஆனால், காமம் நிறைந்தவர்களுக்கு பல்வேறு பெயர்கள் வழங்கப்படுகின்றன. இதனாலேயே கேட்கப்படுகின்றது: நாங்கள் ஏன் அமிர்தத்தைத் துறந்து நஞ்சைப் பருக வேண்டும்? அமிர்தம் சமய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடல் கடையப்பட்டபோது அமிர்தம் தோன்றியதாகவும், இலக்ஷ்மிக்கு கலசம் வழங்கப்பட்டதாகவும் எழுதப்பட்டுள்ளது. பல கதைகள் உள்ளன! சர்வவியாபி என்ற கொள்கையே பிரதானமானது. கீதையின் கடவுள் யார்? தூய்மையாக்குபவர் யார்? இவையே படங்களிலுள்ள பிரதான விடயங்கள் ஆகும். இவை கண்காட்சிகளில் விளங்கப்படுத்தப்பட வேண்டும். ஞானக்கடலும், அவரிலிருந்து தோன்றுகின்ற ஞான நதிகளும் தூய்மையாக்குபவரா அல்லது தண்ணீரைக் கொண்ட நதி அல்லது கடல் தூய்மையாக்குபவரா? பல நல்ல விடயங்கள் உங்களுக்கு விளங்கப்படுத்தப்படுகின்றன. தந்தை இங்கிருந்து உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, உங்களைத் தூய்மையாக்குபவர் யார்? தவறாகிப் போனவற்றைச் சரிப்படுத்துபவர் யார்? தூய்மையாக்குபவர். அந்தத் தூய்மையாக்குபவர் எப்பொழுது வருகின்றார்? இந்நாடகம் எவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளது என்று எவருமே அறியமாட்டார்கள். தந்தை ஞானம் நிறைந்தவர், பேரானந்தம் நிறைந்தவர், அமைதி நிறைந்தவர் என்று அழைக்கப்படுகின்றார். ஒருவர் மாத்திரமே தவறாகிப் போனவற்றைச் சரிப்படுத்துகின்றார் என்று நினைவுகூரப்படுகின்றது. உண்மையில் இராவணனே உங்களுடைய அனைத்தையும் சீரழிக்கின்றான் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும். இது வெற்றி, தோல்வி பற்றிய நாடகமாகும். பாரத மக்கள் ஒவ்வொரு வருடமும் கொடும்பாவியாக எரிக்கின்ற இராவணனை நீங்கள் அறிவீர்கள். அவன் பாரதத்தின் எதிரி ஆவான். பாரதத்திலேயே அவர்கள் ஒவ்வொரு வருடமும் அவனை எரிக்கின்றனர். அவர்களிடம் கேளுங்கள்: நீங்கள் எப்பொழுது அவனை எரிக்க ஆரம்பித்தீர்கள்? உலகம் ஆரம்பித்த காலத்திலிருந்து அது அநாதியாகத் தொடர்வதாக அவர்கள் பதிலளிப்பார்கள். சமய நூல்களிலிருந்து கேள்விப்பட்டவற்றையே அவர்கள் உண்மையென நம்புகின்றனர். கடவுள் சர்வவியாபகர் எனக் கூறுவதே பிரதான தவறாகும். இது எவரோ ஒருவருடைய தவறு எனத் தந்தை கூறவில்லை. அது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இது வெற்றி தோல்வி பற்றிய நாடகமாகும். மாயையால் தோற்கடிக்கப்படுபவர்கள் அனைத்தாலும் தோற்கடிக்கப்படுகின்றனர். மாயையை வெற்றி கொள்பவர்கள் அனைத்தையும் வெற்றி கொள்கின்றனர். நீங்கள் எவ்வாறு மாயையால் தோற்கடிக்கப்படுகின்றீர்கள் என்பது உங்களுக்கு விளங்கப் படுத்தப்பட்டுள்ளது. இராவண இராச்சியம் அரைக் கல்பத்திற்குத் தொடர்கின்றது. ஒரு விநாடியில்கூட வேறுபாடு இருக்கமுடியாது. இராம இராச்சியத்தின் ஸ்தாபனையும், இராவண இராச்சியத்தின் விநாசமும் அவற்றிற்குரிய நேரத்தில் மிகச்சரியாக நிகழ்கின்றன. சத்திய யுகத்தில் இலங்கை இருப்பதில்லை. இலங்கை பௌத்த சமயத்திற்குரிய தேசமாகும். இலண்டன் எங்கேயுள்ளது, அமெரிக்கா எங்கேயுள்ளது என்பது கல்வியறிவு உடையவர்களின் புத்திகளில் உள்ளது. இந்த ஞானத்தைக் கற்பதனாலேயே உங்களின் புத்திகளின் பூட்டுக்கள் திறக்கின்றன, நீங்கள் ஒளியைப் பெறுகின்றீர்கள். இது மூன்றாவது ஞானக்கண் எனப்படுகின்றது. இவ்விடயங்களில் பலவற்றை வயதான தாய்மாரால் புரிந்துகொள்ள முடியாதிருக்கும். அவர்கள் பிரதான கருத்தொன்றை மாத்திரம் கிரகித்தால் போதும், அது இறுதியில் பயனுள்ளதாக இருக்கும். மக்கள் பல சமய நூல்களைக் கற்கின்றனர். ஆனால் இறுதியில், ஒரு கருத்து மாத்திரமே எஞ்சியுள்ளது: இராம நாமத்தை உச்சரியுங்கள்! அந்நபரிடம் அவர்கள் கூறுவதில்லை: சமய நூல்கள் அல்லது வேதங்களைப் படியுங்கள். இறுதியில் அவர்கள் கூறுகின்றனர்: இராமரை நினைவு செய்யுங்கள்! நீண்ட காலமாக நீங்கள் எதைப்பற்றிச் சிந்திக்கின்றீர்களோ, அதையே இறுதியிலும் நினைவு செய்வீர்கள். இப்பொழுது, அனைவரும் அழிக்கப்பட வேண்டும். அனைவரும் யாரை நினைவு செய்வார்கள் என நீங்கள் அறிவீர்கள். சிலர் ஸ்ரீகிருஷ்ணரை நினைவு செய்வார்கள், சிலர் தமது குருவை நினைவு செய்வார்கள். சிலர் தமது சரீர உறவினரை நினைவு செய்வார்கள். நீங்கள் சரீரத்தை நினைவு செய்யும்போது அனைத்துமே முடிவடைகின்றன. இங்கே, ஒரு விடயமே உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, தொடர்ந்தும் தந்தையை நினைவு செய்யுங்கள். நீங்கள் எந்தளவிற்குத் தந்தையை நினைவு செய்கின்றீர்கள் என ஓர் அட்டவணையை வைத்திருங்கள். நீங்கள் எந்தளவிற்கு அவரை நினைவு செய்கின்றீர்களோ, அந்தளவிற்குத் தூய்மை ஆகுவீர்கள். கங்கையில் நீராடுவதால் நீங்கள் தூய்மை ஆகுவீர்கள் என்றில்லை. இது ஆத்மா பற்றிய விடயமாகும். ஏனெனில், ஆத்மாவே தூய்மை அற்றவராகி விட்டார், ஆத்மாவே தூய்மையாக வேண்டும். ஒவ்வோர் ஆத்மாவும் ஒரு நட்சத்திரம், நெற்றியின் மத்தியில் வசிக்கின்ற ஒரு புள்ளி எனத் தந்தை விளங்கப்படுத்தி உள்ளார். நட்சத்திரமான ஆத்மா அதி சூட்சுமமானது என அவர்கள் கூறுகின்றனர். குழந்தைகளாகிய உங்களால் மாத்திரமே இவ்விடயங்களைப் புரிந்துகொள்ள முடியும். தந்தை கூறுகின்றார்: நான் சக்கரத்தின் சங்கம யுகத்திலேயே வருகின்றேன். அவர்கள் “சக்கரம்” என்ற வார்த்தையை நீக்கிவிட்டு, நான் ஒவ்வொரு யுகத்திலும் வருவதாகக் கூறியுள்ளனர். இதனாலேயே மக்கள் இதைத் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். நான் கூறினேன்: நான் பேரொளியினதும், காரிருளினதும் சங்கமத்தில், சங்கம யுகத்திலேயே வருகின்றேன். நான் ஒவ்வொரு யுகத்திலும் வரவேண்டிய அவசியமில்லை. ஏனெனில், நீங்கள் தொடர்ந்தும் ஏணியில் கீழிறங்குகின்றீர்கள். நீங்கள் 84 பிறவிகளின் ஏணியில் அடிமட்டத்திற்குக் கீழிறங்கும்போதே தந்தை வருகின்றார். இந்த ஞானம் முழு உலகிற்கும் உரியதாகும். எங்களுடைய படங்கள் அனைத்தும் வெறும் கற்பனையே எனச் சந்நியாசிகள் கூறுகின்றனர். எவ்வாறாயினும், இதில் கற்பனை என்ற கேள்விக்கே இடமில்லை. அனைவருக்கும் இது விளங்கப்படுத்தப்பட்டுள்ளது, இல்லாவிடில் மக்கள் எவ்வாறு அறிந்து கொள்வார்கள்? இதனாலேயே இப்படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பல நாடுகளில் தொடர்ந்தும் பல கண்காட்சிகள் இடம்பெறும். தந்தை கூறுகின்றார்: பாரதவாசிக் குழந்தைகள் பலர் உள்ளனர். அனைவரும் குழந்தைகளே. இது பல சமயங்களின் விருட்சமாகும். தந்தை இங்கிருந்து விளங்கப்படுத்துகின்றார்: அனைவரும் காமச் சிதையில் அமர்ந்து எரிக்கப்பட்டு விட்டனர். சத்திய யுகத்தின் ஆரம்பத்தில் வருபவர்களே துவாபர யுகத்தில் முதலாவதாகக் காமத்தீயால் எரிக்கப்படுகின்றனர். இதனாலேயே அவர்கள் அவலட்சணமாகி விட்டனர். அனைவரும் இப்பொழுது சற்கதியடைய வேண்டும். நீங்கள் கருவிகள் ஆகியுள்ளீர்கள், அனைவரும் உங்களால் சற்கதி அடைகின்றனர். தந்தை மிக இலகுவாக விளங்கப்படுத்துகின்றார்! அவர் கூறுகின்றார்: தந்தையை நினைவு செய்யுங்கள்! ஆத்மாக்களே சீரழிவை அடைந்துள்ளனர். ஓர் ஆத்மா தூய்மை அற்றவர் ஆகும்போது, தூய்மையற்ற சரீரத்தைப் பெறுகின்றார். தந்தை ஆத்மாவைத் தூய்மை ஆக்குவதற்கு மிக இலகுவான வழியை உங்களுக்குக் காண்பிக்கின்றார். திரிமூர்த்தி படத்தில் பிரம்மாவைப் பார்க்கும்போது, மக்கள் பெரும் குழப்பத்தை விளைவிக்கின்றனர். நீங்கள் ஏன் அவரை பிரம்மா என்று அழைக்கின்றீர்கள்? பிரம்மா ஒரு சூட்சுமலோக தேவர், எனவே எவ்வாறு அவர் இங்கிருக்க முடியும்? இந்த தாதா மிகவும் பிரபல்யமானவராக இருந்தார். ஒரு நகை வியாபாரி தன்னை ஸ்ரீ கிருஷ்ணர் எனக் கூறுவதாகவும், அவருக்கு 16,108 இராணிகள் தேவைப்படுவதாகவும் எங்கும் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டது. அவர் பெண்களைக் கடத்துவதாகக் குற்றஞ் சாட்டப்பட்டு, பெரும் குழப்பம் விளைவிக்கப்பட்டது. ஒவ்வொருவருடனும் யார் தங்கள் தலையை மோதிக் கொள்வார்கள்? பலர் உள்ளனர்! எவராவது இங்கே அபுவிற்கு வரவுள்ளபோது, அவரிடம் உடனடியாகவே கேட்கப்படுகின்றது: நீங்கள் பிரம்மா குமாரிகளிடம் செல்கின்றீர்களா? அவர்கள் மந்திர சக்தியால் கணவன் மனைவியை சகோதர, சகோதரியாக ஆக்குகின்றனர்! அவர்கள் அத்தகைய கட்டுக் கதைகளை உருவாக்கி, உங்கள் புத்திகளைச் சீரழிக்கின்றனர். தந்தை கூறுகின்றார்: நீங்கள் என்னை ஞானக்கடல், உலக சர்வசக்திவான் என்று அழைக்கின்றீர்கள். உலக சர்வசக்திவான் என்றால், சகல சக்திகளையும் கொண்டவர் என்று அர்த்தம். அவர் வேதங்கள், சமய நூல்கள் அனைத்தையும் அறிந்தவர். மகா பண்டிதர்கள்கூட அதிகாரிகள் என்று அழைக்கப்படுகின்றனர். ஏன்? ஏனெனில் அவர்கள் வேதங்கள், சமய நூல்கள் அனைத்தையும் கற்பதால் ஆகும். பின்னர் அவர்கள் பெனாரஸிற்குச் சென்று, ஒரு பட்டத்தைப் பெறுகின்றனர். அவர்கள் “ஸ்ரீ ஸ்ரீ 108 சரஸ்வதி” போன்ற பட்டங்களை அங்கு பெறுகின்றனர். மிகவும் திறமைசாலிகள் உயர்ந்த பட்டங்களைப் பெறுகின்றனர். ஒரு ஞானியிடம் இருந்து பிரம்மத்தின் உண்மையான ஞானத்தை அறிய ஜனகன் விரும்பியதாக சமய நூல்களில் எழுதப்பட்டுள்ளது. பிரம்ம தத்துவம் பற்றிய ஞானத்தைக் கொண்டுள்ள எவருமே இல்லை. அவ்விடயங்கள் அனைத்தும் இந்நேரத்தையே குறிக்கின்றன. அவர்கள் கட்டுக்கதைகளை உருவாக்கி உள்ளனர். அவர்கள் சங்கரர், பார்வதியைப் பற்றியும் ஒரு கதை எழுதியுள்ளனர். பல கதைகள் எழுதப்பட்டுள்ளன. சங்கரர் பார்வதிக்குக் கதை கூறியதாக அவர்கள் கூறுகின்றனர். உண்மையில், அது சிவனே ஆகும். ஆனால் அவர்கள் சங்கரரினதும், பார்வதியினதும் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளனர். இந்நேரத்திற்குரிய விடயங்கள் யாவும் பாகவதத்தில் எழுதப்பட்டுள்ளன. ஓர் அரசனுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் எவ்வாறு அஷ்டவக்கிரனுக்கு (எட்டு உருச்சிதைவைக் கொண்ட ஒருவர்) ஏற்பட்டது போன்ற கதைகளை அவர்கள் காண்பிக்கின்றனர். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நீங்களும் அரசர்களிடம் சென்று இந்த ஞானத்தைக் கொடுக்க வேண்டும். அவர்களிடம் கூறுங்கள்: நீங்கள் சூரிய வம்சத்திற்கு உரியவர்களாக இருந்தீர்கள், பின்னர் சந்திர வம்சத்தவர்களாகவும் வைசிய வம்சத்தவர்களாகவும் சூத்திர வம்சத்தவர்களாகவும் ஆகினீர்கள். உங்களின் இராச்சியம் முழுமையாக முடிவடைந்து விட்டது. நீங்கள் சூரிய வம்ச இராச்சியத்தை மீண்டும் கோர விரும்பினால், முயற்சி செய்யுங்கள்! இராஜ யோகம் கற்பிக்கின்ற பாபா வந்துவிட்டார். வந்து, மீண்டும் ஒரு தடவை எல்லையற்ற இராச்சியத்தைக் கோருங்கள். அரசர்களுக்குப் பல கடிதங்கள் அனுப்பப்படுகின்றன. எனினும், அவர்கள் அவற்றைப் பெறுவதில்லை. அவை அவர்களின் தனிப்பட்ட செயலாளர்களால் பிரித்துப் பார்க்கப்படுகின்றன. பல கடிதங்கள் வெளியே வீசப்படுகின்றன! கடிதத்தில் முக்கியமான விடயங்கள் ஏதாவது இருந்தால், அவர்கள் அதை அரசனிடம் கொடுக்கின்றனர். அஷ்டவக்கிரன் ஜனக மன்னனுக்கு ஒரு விநாடியில் ஜீவன் முக்தியின் காட்சியை வழங்கியதாகக் கூறப்படுகின்றது. அது இந்நேரத்தையே குறிக்கின்றது. தந்தை இப்பொழுது இங்கிருந்து உங்களுக்கு மிக நன்றாக விளங்கப்படுத்துகின்றார். புரிந்து கொள்ளாதவர்கள் தொடர்ந்தும் இங்கும் அங்கும் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவரது புத்தியில் எதுவுமே பதியவில்லை என்பதை பாபா உடனடியாகவே புரிந்து கொள்கின்றார். அனைவரும் தான் கூறுவதை மிக நன்றாகச் செவிமடுக்கின்றனரா அல்லது எவரது புத்தியாவது எங்காவது அலைபாய்கின்றதா என பாபா சுற்றிவர எங்கும் பார்க்கின்றார். சிலர் தொடர்ந்தும் கொட்டாவி விடுகின்றனர். இந்த ஞானம் அவர்களின் புத்திகளில் இல்லாதபோது அவர்கள் தொடர்ந்தும் தூங்கி வழிவதுடன் ஓர் இழப்பை ஏற்படுத்துகின்றனர். கராச்சியில் இந்தக் குழந்தைகளுக்கு பத்தி இடம்பெற்றது. தூங்கிவழிய ஆரம்பிப்பவர்கள் உடனடியாகவே வெளியில் அனுப்பப்பட்டனர். நாங்கள் மாத்திரமே அங்கு அமர்ந்திருப்பது வழக்கம், வெளியாட்கள் எவரும் அங்கு வரவில்லை. இதுவே ஆரம்பத்தில் பெரிய பாகமாக இருந்தது. ஒரு நீண்ட வரலாறு உள்ளது. ஆரம்பத்தில், புதல்விகள் அதிகமாக திரான்ஸில் செல்வது வழக்கம். இப்பொழுதும்கூட, இங்கு மந்திரசக்தி இருப்பதாக மக்கள் இன்னமும் கூறிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் பரமதந்தை, பரமாத்மாவை மந்திரவாதி என்று அழைக்கின்றனர். எவராவது அதிக அன்பைக் கொண்டிருந்தால், அதை சிவபாபாவால் பார்க்க முடியும். எனவே, அவர் அவளைப் பார்த்ததுமே அவள் திரான்ஸில் சென்றுவிடுவாள். பாரத மக்கள் வைகுந்தம் மீது அதிக அன்பு வைத்துள்ளனர். எவராவது மரணித்தால், அவர் வைகுந்த வாசியாக, அதாவது சுவர்க்கவாசியாக ஆகிவிட்டதாக அவர்கள் கூறுகின்றனர். இப்பொழுது இது நரகமாகும். அனைவரும் நரகவாசிகள். இதனாலேயே இன்னார் இன்னார் சுவர்க்கவாசி ஆகிவிட்டார் என அவர்கள் கூறுகின்றனர். எவ்வாறாயினும், எவருமே சுவர்க்கத்திற்குச் செல்வதில்லை. நீங்கள் மாத்திரமே இப்பொழுது இந்த ஞானத்தைக் கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் சுவர்க்கவாசிகளாக இருந்தீர்கள், 84 பிறவிகள் எடுக்கையில் நீங்கள் நரகவாசிகள் ஆகிவிட்டீர்கள். பாபா இப்பொழுது உங்களை மீண்டும் ஒரு தடவை சுவர்க்கவாசிகள் ஆக்குகின்றார். சுவர்க்கத்தில் இராச்சியம் உள்ளது. இராச்சியத்தில் அந்தஸ்தில் வெவ்வேறு மட்டங்கள் உள்ளன. ஒரு சாதாரண மனிதனிலிருந்து நாராயணன் ஆகுவதற்கு முயற்சி செய்யுங்கள். மம்மாவும், பாபாவும் எதிர்காலத்தில் இலக்ஷ்மி, நாராயணன் ஆகுவார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் இப்பொழுது முயற்சி செய்கின்றீர்கள். இதனாலேயே தாயையும், தந்தையையும் பின்பற்றுமாறு உங்களுக்குக் கூறப்படுகின்றது. அவர்கள் முயற்சி செய்வது போன்றே நீங்களும் முயற்சி செய்கின்றீர்கள். அவர்களும் நினைவில் இருந்து சுயதரிசனச் சக்கரதாரிகள் ஆகுகின்றனர். தந்தையையும், உங்கள் ஆஸ்தியையும் நினைவு செய்யுங்கள். முக்காலங்களையும் அறிந்தவர்கள் ஆகுங்கள். முழுச் சக்கரத்தினதும் ஞானம் உங்களிடம் உள்ளது. அதை விழிப்புணர்வில் வைத்திருப்பதுடன் தொடர்ந்தும் மற்றவர்களுக்கு விளங்கப்படுத்துங்கள். இச்சேவையில் நீங்கள் மும்முரமாக இருக்கும்போது, வேறு தொழில்கள் எதையும் நீங்கள் நினைவு செய்ய மாட்டீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. சத்திய யுகத்தில் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோருவதற்கு, தாயையும், தந்தையையும் முழுமையாகப் பின்பற்றுங்கள். அதேவிதமாக முயற்சி செய்யுங்கள். சேவையில் மும்முரமாக ஈடுபட்டிருங்கள். மன ஒருமைப்பாட்டுடன் கற்றிடுங்கள்.

2. உண்மையான நினைவு அட்டவணையை வைத்திருங்கள். உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவு செய்யுங்கள். உங்கள் சரீரத்தையோ, சரீரதாரிகளையோ நினைவு செய்யாதீர்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின் அதியுயர்ந்த பதவியில் ஸ்திரமாக இருந்தவண்ணம், உங்களின் ஒவ்வோர் எண்ணத்தையும் உருவாக்கி, ஒவ்வொரு வார்த்தையையும் பேசி, ஒவ்வொரு செயலையும் செய்து, சம்பூரணமாக விகாரமற்றவர் ஆகுவீர்களாக.

சம்பூரணமாக விகாரமற்றவர் ஆகுவது என்றால், நீங்கள் எந்தவொரு விகாரத்தின் எந்த சதவீதத்தின் கவர்ச்சிக்கும் உள்ளாகுவதில்லை மற்றும் அவற்றின் ஆதிக்கத்திற்கு உட்படுவதில்லை என்று அர்த்தம். அதியுயர்ந்த பதவியைக் கொண்டுள்ள ஆத்மாக்களால் எந்தவிதமான சாதாரணமான எண்ணங்களையும் கொண்டிருக்க முடியாது. எனவே, நீங்கள் எந்த எண்ணங்களையும் உருவாக்குவதற்கு அல்லது எந்தச் செயல்களையும் செய்வதற்கு முன்னர், சோதித்துப் பாருங்கள்: அந்தப் பணி உங்களின் பெயரைப் போல் மேன்மையாக இருக்கிறதா? உங்களின் பெயர் மேன்மையாகவும் உங்களின் பணி கீழானதாகவும் இருந்தால், நீங்கள் பெயரை அவமதிக்கிறீர்கள். ஆகவே, உங்களின் இலட்சியத்திற்கேற்ப தகுதிகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அதன்பின்னர் நீங்கள் சம்பூரணமாக விகாரமற்றவர், அதாவது, அதிபுனித ஆத்மா எனப்படுவீர்கள்.

சுலோகம்:
எதைச் செய்யும்போதும், கரன்கரவன்ஹார் தந்தையை உணர்ந்தவராக இருங்கள். அப்போது உங்களின் முயற்சிகளுக்கும் உங்களின் யோகத்திற்கும் இடையில் சரியான சமநிலை காணப்படும்.

அவ்யக்த சமிக்கை: எரிமலை ஸ்திதியில் இருந்தவண்ணம், சக்திவாய்ந்த நினைவை அனுபவம் செய்யுங்கள்.

கலியுகத்தின் சீரழிந்த, தமோபிரதான், உக்கிப் போன விருட்சத்தின் நிலைமையைப் பார்க்கையில், தந்தை பிரம்மாவிற்கு ஏற்படுகின்ற எண்ணம்: குழந்தைகளின் தபஸ்வி ரூபம், இப்போது அவர்களின் யோக சக்தியால் இந்தப் பழைய விருட்சத்தை எரிக்க வேண்டும். எவ்வாறாயினும், அது நடக்க வேண்டுமாயின், உங்களின் யோகம் எரிமலையாகி ஒருமித்து, முழு வீச்சுடன் எரிய வேண்டும். எனவே, இப்பொழுது, தந்தை பிரம்மாவின் இந்த எண்ணத்தை நடைமுறை வடிவம் ஆக்குங்கள்.