28.08.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, உங்கள் குரல் இப்பொழுது செவிசாய்க்கப்பட்டுள்ளது. இறுதியில், நீங்கள் அதிமேன்மையான மனிதர்கள் ஆகுகின்ற, நாளாகிய, இந்த அதிமேன்மையான சங்கமயுகம் வந்துள்ளது.

கேள்வி:
வெற்றி, தோல்வியுடன் தொடர்புள்ள எந்தச் சீரழிந்த செயற்பாடு மனிதரைச் சந்தோஷம் இழக்கச் செய்கின்றது?

பதில்:
சூதாடுதலாகும். பலருக்கும் சூதாடும் பழக்கம் உள்ளது. இச் செயற்பாடு சீரழிவானது. ஏனெனில் ஒருவர் இழக்கும் பொழுது துன்பமும், வெற்றியீட்டும் பொழுது, சந்தோஷமும் உள்ளன. தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குக் கட்டளை இட்டுள்ளார்: குழந்தைகளே, தெய்வீகச் செயல்களையே செய்யுங்கள். உங்கள் நேரத்தை வீணாக்குகின்ற செயல்களில் ஈடுபடாதீர்கள். முடிவற்ற வெற்றியை ஈட்டுவதற்குச் சதா முயற்சி செய்யுங்கள்.

பாடல்:
இறுதியில் நாங்கள் காத்திருந்த அந்த நாளும் வந்து விட்டது.

ஓம் சாந்தி.
இரட்டை ஓம் சாந்தி. குழந்தைகளாகிய நீங்கள் ‘ஓம்சாந்தி’ எனக் கூற வேண்டும். இங்கோ இது இரட்டை ஓம்சாந்தி. பாபா என்று அழைக்கப்படுகின்ற பரமாத்மாவும் அதனைக் கூறுகின்றார். குழந்தைகளாகிய நீங்களும் அதைக் கூறுகின்றீர்கள். குழந்தைகளாகிய நீங்களும் கூறுகின்றீர்கள்: ஆத்மாக்களாகிய நாங்கள் அமைதி சொரூபங்கள். நாங்கள் அமைதிதாம வாசிகள். எங்கள் பாகங்களை நடிப்பதற்காக நாங்கள் இப் பௌதீக உலகிற்கு வந்துள்ளோம். ஆத்மாக்கள் இவ்விடயங்களை மறந்துள்ளார்கள். நீங்கள் கூறுவதைச் செவிசாய்க்கும் அந்த நாள் இறுதியில் வந்துள்ளது. எது செவிசாய்க்கப்பட்டுள்ளது? நீங்கள் கூறுகின்றீர்கள்: பாபா, எங்கள் துன்பத்தை அகற்றி, எங்களுக்குச் சந்தோஷத்தைக் கொடுங்கள்! மனிதர்கள் அனைவரும் அமைதியையும் சந்தோஷத்தையும் விரும்புகின்றார்கள். தந்தையே ஏழைகளின் பிரபு. இந்த நேரத்தில், பாரதம் முற்றிலும் ஏழ்மையில் உள்ளது. நீங்கள் மிகவும் செல்வந்தராக இருந்தீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். பிராமணக் குழந்தைகளாகிய உங்களுக்கு மாத்திரமே இது தெரியும். ஏனைய அனைவரும் காட்டில் உள்ளார்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு நீங்கள் செய்யும் முயற்சிகளுக்கு ஏற்ப, வரிசைக்கிரமமாக நம்பிக்கை உள்ளது. அவர் (சிவபாபா) ஸ்ரீ ஸ்ரீ என்பதும், அவரது வழிகாட்டல்கள் அனைத்திலும் அதிமேலானவை என்பதும் உங்களுக்குத் தெரியும். இவை கடவுளின் வாசகங்கள். மக்கள் ‘இராமா, இராமா’ என்ற பெயரை ஒரு ஹார்மோனியம் இசைப்பதைப் போன்று ஓதுகின்றார்கள். எவ்வாறாயினும், இராமர் திரேதாயுகத்தின் அரசர். அவர் அதிகளவு புகழப்பட்டார். அவருக்கு 14 சுவர்க்கக் கலைகள் மாத்திரமே உள்ளன் இரு சுவர்க்கக் கலைகள் குறைவாக உள்ளன. அவரையிட்டு ‘இராமர் எவ்வாறோ, இராமரின் பிரஜைகளும் அவ்வாறே’ என்றும் பாடப்படுகின்றது. நீங்களே செல்வந்தராக ஆகுகின்றவர்கள். இலக்ஷ்மியும் நாராயணனும் இராமரை விட செல்வந்தர்களாக இருப்பார்கள். அரசன் உணவை அருள்பவர் (போஷிப்பவர்) என்று கூறப்படுகின்றார். தந்தையும் அருள்பவர்; அவர் அனைத்தையும் உங்களுக்குக் கொடுக்கின்றார். அவர் குழந்தைகளாகிய உங்களை உலக அதிபதிகள் ஆக்குகின்றார். நீங்கள் பாவம் செய்ய வேண்டிய அளவிற்கு அங்கே எதிலும் குறைவு இருக்க மாட்டாது. அங்கே பாவம் என்ற குறிப்பே இல்லை. அரைக் கல்பத்திற்குத் தெய்வீக இராச்சியமும், ஏனைய அரைக்கல்பத்திற்கு அசுர இராச்சியமும் உள்ளன. சரீர உணர்வும் ஐந்து விகாரங்களும் நிறைந்தவர்களே அசுரர்கள். நீங்கள் இப்பொழுது படகோட்டியிடமும், பூந்தோட்ட அதிபதியிடமும் வந்துள்ளீர்கள். நீங்கள் நேரடியாக அவரின் முன்னிலையில் அமர்ந்திருப்பதை அறிவீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் இங்கு அமர்ந்திருக்கும் பொழுதும் இதனை மறந்து விடுகின்றீர்கள். கடவுள் என்ன கூறுகின்றார் என்பதை நீங்கள் செவிமடுக்க வேண்டும். முதலில், உங்களை அனைவரிலும் அதிமேன்மையான ஆத்மாக்களாக ஆக்குவதற்காக அவர் ஸ்ரீமத் கொடுக்கின்றார். ஆகையால் நீங்கள் அவரது வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும். அவர் கொடுக்கின்ற முதலாவதும், பிரதானமானதுமான வழிகாட்டல்: ஆத்ம உணர்வு உடையவர் ஆகுங்கள். பாபா ஆத்மாக்களாகிய எங்களுக்குக் கற்பிக்கின்றார். இதனை மிகவும் உறுதியாக நினைவு செய்யுங்கள். நீங்கள் இவ்வார்த்தைகளை நினைவு செய்தால், உங்கள் படகு அக்கரை செல்ல முடியும். நீங்கள் மாத்திரமே 84 பிறவிகள் எடுக்கின்றீர்கள் என்றும், நீங்கள் மாத்திரமே தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆகுகின்றீர்கள் என்றும் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. உலகம் தூய்மையற்றும், சந்தோஷம் இழந்தும் உள்ளது. சுவர்க்கம் சந்தோஷ பூமி என அழைக்கப்படுகின்றது. கடவுளான சிவபாபாவே எங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள்; நாங்கள் அவரின் மாணவர்கள். அவர் தந்தையும், ஆசிரியரும் ஆவார். ஆகையால், நீங்கள் நன்றாகக் கற்க வேண்டும். தெய்வீகச் செயல்களும் தேவையாகும். எந்தச் சீரழிவான செயல்களையும் செய்யாதீர்கள். சூதாடுதல் சீரழிவான செயல்களில் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதுவும் துன்பத்தை விளைவிக்கின்றது. ஒருவர் இழக்கும் பொழுது, துன்பத்தை அனுபவம் செய்கின்றார். அவர் வெற்றியீட்டும் பொழுது, சந்தோஷப்படுகின்றார். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது மாயையால் முற்றிலும் தோற்கடிக்கப்பட்டுள்ளீர்கள். இது வெற்றியும், தோல்வியும் நிறைந்த எல்லையற்ற விளையாட்டாகும். நீங்கள் முற்றாக ஐந்து விகாரங்களான, இராவணனால் தோற்கடிக்கப்பட்டுள்ளீர்கள். இப்பொழுது நீங்கள் அவற்றை வெற்றிகொள்ள வேண்டும். நீங்கள் மாயையினால் தோற்கடிக்கப்பட்டீர்கள். இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் அவளை வெற்றிகொள்ளப் போகின்றீர்கள். நீங்கள் இப்பொழுது சூதாடுதல் போன்றவற்றைக் கைவிட வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் அளவிடமுடியாத வெற்றியை ஈட்டுவதிலேயே கவனம் செலுத்த வேண்டும். அத்தகைய செயற்பாடுகள் எதனையும் செய்ய வேண்டாம். உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம். அளவிட முடியாத வெற்றியை ஈட்ட நீங்கள் முயற்சி செய்யுங்கள். நீங்கள் இவ்வாறு செய்வதற்குச் சக்திமிக்க தந்தையே உங்களைத் தூண்டுகின்றார். அவரே சர்வசக்திவான். தந்தை மாத்திரம் சர்வசக்திவான் அல்ல என்பதும் உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. இராவணனும் சர்வசக்திவான் ஆவான். அரைக்கல்பத்திற்கு இராம இராச்சியமும் அரைக்கல்பத்திற்கு இராவண இராச்சியமும் உள்ளன. நீங்கள் இப்பொழுது இராவணனை வெற்றி கொள்கின்றீர்கள். இப்பொழுது நீங்கள் எல்லைக்கு உட்பட்ட விடயங்கள் அனைத்தையும் துறந்து விட்டு, எல்லையற்றதில் ஈடுபட வேண்டும். படகோட்டி வந்துள்ளார். இறுதியில் அந்த நாள் வந்துள்ளது. உங்கள் அழைப்பு அதிமேலான தந்தைக்கு கேட்டுள்ளது. தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, அரைக்கல்பமாக நீங்கள் அதிகளவு தடுமாறினீர்கள்; இப்பொழுது நீங்கள் தூய்மையற்றவர் ஆகியுள்ளீர்கள். தூய பாரதம் சிவாலயமாகும். நீங்கள் முன்னர் சிவாலயத்தில் இருந்தீர்கள், இப்பொழுது விலைமாதர் இல்லத்தில் உள்ளீர்கள். நீங்கள் சிவாலயத்தில் வாழ்ந்தவர்களை வழிபட்டீர்கள். இங்கு எண்ணற்ற சமயங்கள் அனைத்தினாலும் பல குழப்பங்கள் விளைவிக்கப்படுகின்றன. தந்தை கூறுகின்றார்: நான் அவை அனைத்தையும் அழிக்கின்றேன். அவை ஒவ்வொன்றும் அழிக்கப்பட வேண்டும். ஏனைய சமய ஸ்தாபகர்கள் எவரும் எதனையும் அழிப்பதில்லை. அவர்கள் குருமார்களும் அல்ல. அவர்களால் சற்கதியை அருள முடியாது. இந்த ஞானத்தின் ஊடாகவே சற்கதி வழங்க முடியும். ஒரேயொரு தந்தையே அனைவருக்கும் சற்கதி அருள்பவரும், ஞானக்கடலும் ஆவார். இந்த வார்த்தைகளை மிகவும் கவனமாகக் குறித்துக் கொள்ளுங்கள். அனைத்தையும் செவிமடுக்கின்ற பலரும் உள்ளனர். ஆனால் அவர்கள் வெளியே சென்றவுடன், இங்கே அனைத்தையும் விட்டுச் செல்கின்றனர். கருப்பை என்ற சிறைச்சாலையில் உள்ள ஒரு குழந்தை கூறுவதைப் போன்று அவர்கள் கூறுகின்றார்கள்: நான் எப்பாவத்தையும் செய்ய மாட்டேன். எவ்வாறாயினும், வெளியில் வந்தவுடனேயே அக்குழந்தை தான் செய்த சத்தியத்தை மறந்து விடுகின்றார். அக்குழந்தை பின்னர் வளரும் பொழுது, பாவங்களைச் செய்ய ஆரம்பிக்கின்றார். அவர் காம வாளைப் பயன்படுத்துகின்றார். சத்தியயுகத்தில் கருப்பையும் ஒரு மாளிகை போன்றே இருக்கிறது. ஆகையால் தந்தை இங்கே அமர்ந்திருந்து விளங்கப்படுத்துகின்றார்: இறுதியில் அந்த நாள் வந்து விட்டது. எந்த நாள்? எவரும் அறியாதுள்ள, அந்த அதிமேன்மையான சங்கமயுகம் ஆகும். குழந்தைகளான நீங்கள் அதிமேன்மையான மனிதர்கள் ஆகுகின்றீர்கள் என்பதை உணர்கின்றீர்கள். அதிமேன்மையான தர்மம் நிலவிய பொழுது, நாங்கள் அதிமேலான மனிதர்களாக இருந்தோம். எங்கள் செயற்பாடுகளும் அனைத்திலும் மேன்மையானவையாக இருந்தன. அங்கே இராவண இராச்சியம் இருக்கவில்லை. இறுதியில் தந்தை எங்களுக்குக் கற்பிப்பதற்கு வருகின்ற, அந்த நாளும் வந்துள்ளது. அவரே தூய்மையாக்குபவர். ஆகவே, அத்தகைய தந்தையின் ஸ்ரீமத்தை நீங்கள் பின்பற்ற வேண்டும். இப்பொழுது இது கலியுக இறுதியாகும். தூய்மை ஆகுவதற்குச் சிறிது காலமே தேவைப்படுகின்றது. 60 வயதுக்கு மேற்பட்ட காலம் இளைப்பாறும் காலம் என்று கூறப்படுகின்றது. ஒருவர் 60 வயதை அடைந்ததுமே அவருக்குக் கைத்தடி தேவைப்படுகின்றது. இன்றைய மக்களைப் பாருங்கள்! அவர்கள் 80 வயதை அடைந்தாலும், விகாரங்களைக் கைவிடுவதில்லை! தந்தை கூறுகின்றார்: நான் இவரின் இளைப்பாறும் ஸ்திதியில் இவரின் சரீரத்தில் பிரவேசித்து இவருக்கு விளங்கப்படுத்துகின்றேன். ஆத்மாக்களே தூய்மையாகி அக்கரை செல்கின்றனர். ஆத்மாக்களே பறக்கின்றார்கள். ஆத்மாக்களின் இறக்கைகள் இப்பொழுது வெட்டப்பட்டுள்ளதால், அவர்களால் பறக்க முடிவதில்லை. இராவணன் இந்த இறக்கைகளை வெட்டி விட்டான். அவர்கள் தூய்மை அற்றவர்கள் ஆகியுள்ளார்கள். ஓர் ஆத்மாவினாலும் வீடு திரும்ப முடியாது. முதலில் பரம தந்தை திரும்பிச் செல்கின்றார். ‘சிவனின் ஊர்வலம்’ என்று கூறப்படுகின்றது. சங்கரருக்கு ஊர்வலம் இருப்பதில்லை. குழந்தைகளாகிய நாங்கள் அனைவரும் தந்தையைப் பின்பற்றுகின்றோம். பாபா எங்களை அழைத்துச் செல்வதற்கு வந்துள்ளார். அவர் எங்களைத் திரும்பவும் எங்கள் சரீரங்களுடன் அழைத்துச் செல்ல மாட்டார். ஆத்மாக்கள் அனைவரும் தூய்மை அற்றவர்கள், தூய்மையாகும் வரை அவர்களால் வீடு திரும்ப முடியாது. தூய்மை இருந்த பொழுது, அமைதியும், செழிப்பும் இருந்தன. ஆதி சனாதன தேவதேவியர் தர்மத்தைச் சேர்ந்த நீங்களே அங்கிருந்தீர்கள். இப்பொழுது ஏனைய சமயத்தைச் சேர்ந்த அனைவரும் உள்ளனர். தேவ தர்மம் இப்பொழுது இல்லை. இதுவே கல்ப விருட்சம் என அழைக்கப்படுகின்றது. இது ஓர் ஆலமரத்துடன் ஒப்பிடப்பட்டுள்ளது. அடிமரம் இல்லாத பொழுதும், மரத்தின் ஏனைய பகுதிகள் இன்னமும் நிற்பதைப் போன்றே, தேவ தர்மத்தின் அத்திவாரம் இல்லாத பொழுதும், விருட்சத்தின் ஏனைய பகுதிகள் இன்னமும் எஞ்சியுள்ளன. அது நிச்சயமாக இருந்தது, ஆனால் இப்பொழுது மறைந்துள்ளது. இது பின்னர் மீண்டும் இடம்பெறும். தந்தை கூறுகின்றார்: நான் மீண்டும் ஒருமுறை ஒரே தர்மத்தை ஸ்தாபித்து, ஏனைய சமயங்கள் அனைத்தையும் அழிப்பதற்கு வந்துள்ளேன். இல்லாவிட்டால், எவ்வாறு உலகச் சக்கரம் சுழலும்? ‘உலகின் வரலாறும், புவியியலும் மீண்டும் மீண்டும் சுழலுகின்றது’ என்று கூறப்படுகின்றது. இப்பொழுது இது பழைய உலகமாகும். புதிய உலகம் மீண்டும் வர வேண்டும். இப் பழைய உலகம் மாறி, புதிய உலகம் ஸ்தாபிக்கப்படும். இந்த பாரதமே புதியதாகவும், பழையதாகவும் ஆகுகின்றது. பரிஸ்தான் (தேவதைகளின் உலகம்) ஜமுனை நதிக்கரையில் இருந்தது என்று கூறப்படுகின்றது. பாபா கூறுகின்றார்: காமச்சிதையில் அமர்வதனால், நீங்கள் மயானவாசிகள் ஆகியுள்ளீர்கள். இப்பொழுது நீங்கள் பாரிஸ்தான் வாசிகள் ஆக்கப்படுகின்றீர்கள். ஸ்ரீகிருஷ்ணரே அவலட்சணமானவரும், அழகானவரும் என அழைக்கப்படுகின்றார். ஏன்? இது எவரது புத்தியிலும் புகுவதில்லை. இராதையும் கிருஷ்ணரும் என்ற அவர்களது பெயர்கள் மிகவும் சிறந்தவை. அவர்களே புதிய உலகின் இளவரசரும், இளவரசியும் ஆவார்கள். தந்தை கூறுகின்றார்: காமச்சிதையில் அமர்வதனால், உலகம் கலியுகமாகி உள்ளது. கடலின் குழந்தைகள் காமச்சிதையில் எரிக்கப்பட்டு விட்டார்கள் என்று நினைவுகூரப்படுகின்றது. இப்பொழுது தந்தை உங்கள் அனைவரின் மீதும் இந்த ஞானத்தைப் பொழிகின்றார். அதன்பின்னர் நீங்கள் அனைவரும் சத்தியயுகத்திற்குச் செல்வீர்கள். இப்பொழுது இது சங்கமயுகம். இப்பொழுது நீங்கள் அழியாத ஞான இரத்தினங்களைத் தானமாகப் பெறுகின்றீர்கள். அதன் மூலம் நீங்கள் செல்வந்தர்கள் ஆகுகின்றீர்கள். இந்த இரத்தினங்கள் ஒவ்வொன்றும் நூறாயிரம் ரூபாய்கள் பெறுமதியானவை. அம்மக்கள் சமயநூல்களின் வாசகங்கள் நூறாயிரம் ரூபாய்கள் பெறுமதியானவை என நம்புகின்றார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இக் கல்வி மூலம் பல்கோடீஸ்வரர்கள் ஆகுகின்றீர்கள். இதுவே உங்கள் வருமானத்திற்கான வழியாகும். நீங்கள் இந்த ஞான இரத்தினங்களைக் கிரகித்து, உங்கள் புத்தியையும் நிரப்பிக் கொள்கின்றீர்கள். அவர்கள் சங்கரரை நோக்கிக் கூறுகின்றார்கள்: ஓ மகாதேவரே! எங்கள் புத்தியை நிரப்புங்கள்! அவர்கள் பல விடயங்களுக்காகச் சங்கரர் மீது குற்றம் சுமத்துகின்றார்கள். பிரம்மாவும், விஷ்ணுவும் தமது பாகங்களை இங்கே நடிக்கின்றார்கள். விஷ்ணுவிற்கு 84 பிறவிகள் இருப்பதையும், இலக்ஷ்மி நாராயணனுக்கும் 84 பிறவிகள் உள்ளதையும் நீங்கள் அறிவீர்கள். பிரம்மாவையிட்டும் இதனைக் கூறுகின்றீர்கள். தந்தை இங்கே அமர்ந்திருந்து, எது சரி, எது பிழை என்பதையும், பிரம்மாவும், விஷ்ணுவும் எப்பாகத்தை நடிக்கிறார்கள் என்பதையும் விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் தேவர்களாக இருந்தீர்கள். சக்கரத்தைச் சுற்றி வந்த பின்னர் நீங்கள் பிராமணர்கள் ஆகியுள்ளீர்கள். நீங்கள் இப்பொழுது மீண்டும் தேவர்கள் ஆகுகின்றீர்கள். முழுப் பாகங்களும் இங்கேயே நடிக்கப்படுகின்றன. நீங்கள் வைகுந்தத்தின் கேளிக்கைகளையும், விளையாட்டுகளையும் பார்க்கின்றீர்கள். வைகுந்தம் இப்பொழுது இங்கில்லை. மீரா நடனம் ஆடுவதுண்டு. ஆனால் அவை அனைத்தும் காட்சிகள் என அழைக்கப்படுகின்றன. அவருக்கு அதிகளவு மதிப்பு அளிக்கப்படுகின்றது. தான் கிருஷ்ணருடன் நடனம் ஆடுவதைப் போன்ற காட்சியை அவர் கண்டார். அதனால் என்ன? அவரால் சுவர்க்கத்திற்குச் செல்ல முடியவில்லை. சங்கமயுகத்தில் மாத்திரமே முக்தியும் சற்கதியும் பெறப்பட முடியும். இதுவே அதிமேன்மையான சங்கமயுகம் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கின்றீர்கள். நாங்கள் இப்பொழுது பாபாவின் மூலம் மனிதர்களில் இருந்து தேவர்கள் ஆகுகின்றோம். பல்ரூப உருவத்தின் ஞானமும் இப்பொழுது உங்களுக்குத் தேவை. அவர்கள் அவர்களின் படங்களை வைத்திருக்கின்றார்கள், ஆனால் அவர்களுக்கு எதுவும் புரிவதில்லை. ‘அகாசூரன், பகாசூரன்’ (சமயநூல்களின் குறிப்பிடப்பட்டுள்ள அசுரர்களின் பெயர்கள்) போன்ற பெயர்கள் சங்கமயுகத்திற்கு உரியவை. ‘பஸ்மாசூரன்’ (தன்னையே எரித்துக் கொண்ட அசுரன்) என்ற பெயரும் உள்ளது. காமச்சிதையில் அமர்ந்ததால் அவன் எரிந்தான். தந்தை கூறுகின்றார்: நான் அனைவரையும் மீண்டும் ஒருமுறை இந்த ஞானச்;சிதையில் அமரச் செய்து, மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றேன். ஆத்மாக்கள் அனைவரும் சகோதரர்கள். அவர்கள் கூறுகின்றார்கள்: இந்துக்களும் சீனர்களும் சகோதரர்கள்; இந்துக்களும் இஸ்லாமியரும் சகோதரர்கள், இருப்பினும் சகோதரர்களும் தமக்குள் சண்டையிட்டுக் கொள்கின்றார்கள். ஆத்மாக்களே செயல்களைச் செய்கின்றனர். ஆத்மா சரீரத்தின் மூலம் சண்டையிடுகின்றார். ஆத்மாக்களினாலேயே பாவங்கள் சேமிக்கப்படுகின்றன. இதனாலேயே ‘பாவாத்மா’ என்று கூறப்படுகின்றது. தந்தை இங்கே அமர்ந்திருந்து அதிகளவு அன்புடன் விளங்கப்படுத்துகின்றார். சிவபாபா, பிரம்மபாபா இருவருக்கும் ‘குழந்தாய், குழந்தாய்’ என்று கூறுகின்ற உரிமை உள்ளது. தந்தை தாதாவினூடாகக் கூறுகின்றார்: ஓ குழந்தைகளே. ஆத்மாக்களாகிய நீங்கள் பாகங்களை நடிப்பதற்காக வருகின்றீர்கள் என்றும், இறுதியில் தந்தை அனைவரையும் தூய்மையாக்கி, தன்னுடன் திரும்பவும் அழைத்துச் செல்வதற்கு வருகின்றார் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். தந்தை வந்தே இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார். அவர் இங்கே வர வேண்டும். மக்கள் சிவனின் பிறந்தநாளையும் கொண்டாடுகின்றார்கள். சிவனின் பிறப்புக்குப் பின்னர், கிருஷ்ணரின் பிறப்பு இடம்பெறுகின்றது. ஸ்ரீ கிருஷ்ணர் பின்னர், ஸ்ரீ நாராயணன் ஆகுகின்றார். இப்பொழுது, இறுதியில், சக்கரத்தைச் சுற்றி வந்த பின்னர், அவர் அவலட்சணம் (தூய்மையற்றவர்) ஆகியுள்ளார். தந்தை மீண்டும் ஒருமுறை வந்து, அவரை அழகானவர் ஆக்குகின்றார். பிராமணர்களாகிய நீங்கள் இப்பொழுது தேவர்கள் ஆகுகின்றீர்கள். பின்னர் நீங்கள் ஏணியில் இறங்குகின்றீர்கள். இந்த 84 பிறவிகளின் கணக்கு வேறு எவரது புத்தியிலும் இல்லை. தந்தையால் மாத்திரமே குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்த முடியும். நீங்கள் பாடலிலும் கேட்டீர்கள்: இறுதியில் பக்தர்களின் அழைப்பிற்குச் செவிசாய்க்கப்படுகின்றது. அவர்கள் அழைக்கின்றார்கள்: ஓ கடவுளே, வந்து எங்கள் பக்திக்கான பலனைக் கொடுங்கள். பக்தி உங்களுக்கு எப்பலனையும் கொடுப்பதில்லை. கடவுளே பலனை வழங்குகிறார். அவர் பக்தர்களைத் தேவர்கள் ஆக்குகின்றார். நீங்களே பெருமளவு பக்தி செய்துள்ளவர்கள். நீங்களே முதலில் சிவனை வழிபட்டவர்கள். இவ்விடயங்களை மிகவும் நன்றாகப் புரிந்து கொள்பவர்கள், எங்கள் குலத்தைச் சேர்ந்தவர்கள் என்று நீங்கள் உணர்கிறீர்கள். ஒருவரின் புத்தியில் இது நிலைக்காது இருந்தால், அவர் தாமதமாக வருபவர் என்றும், அவர் அதிகளவு பக்தி செய்யவில்லை என்றும் புரிந்துகொள்ள முடியும். அவர் இங்கும் முன்னரே வரமாட்டார். இதுவே கணக்காகும். பெருமளவு பக்தி செய்துள்ளவர்கள், பெருமளவு பலனைப் பெறுவார்கள்; குறைந்தளவு பக்திக்குக் குறைந்தளவு பலனே உள்ளது. அவர்களால் சுவர்க்கத்தின் முழுப் பலனையும் அனுபவம் செய்ய முடியாது. ஏனெனில் அவர்கள் ஆரம்பம் முதல் சிவனை வழிபடவில்லை. உங்கள் புத்திகள் இப்பொழுது வேலை செய்கின்றன. பாபா பல வழிமுறைகளை உங்களுக்குத் தொடர்ந்தும் விளங்கப்படுத்துகின்றார். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. அழியாத இந்த ஞான இரத்தினங்களினால் உங்கள் புத்தியை நிரப்புங்கள். அவை ஒவ்வொன்றும் பலமில்லியன்கள் பெறுமதியானவை. உங்கள் புத்தி இந்த ஞானத்தைக் கிரகித்து, பின்னர் அதனைப் பிறருக்கும் தானம் செய்யட்டும்.

2. ஸ்ரீ ஸ்ரீ யின் மேன்மையான வழிகாட்டல்களை முழுமையாகப் பின்பற்றுங்கள். உங்களைச் சதோபிரதான் ஆக்கும் பொருட்டு, ஆத்ம உணர்வுடையவர் ஆகுவதற்கு முழு முயற்சி செய்யுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் தூய நோக்கங்களையும் சகல ஆத்மாக்களுக்கும் மேன்மையான ஆசிகளையும் கொண்டிருந்து, அன்னத்தின் புத்தியுடன் ஒரு புனித அன்னம் ஆகுவீர்களாக.

அன்னத்தின் புத்தியைக் கொண்டிருப்பது எனில், சதா ஆத்மாக்கள் எல்லோருக்காகவும் தூய, மேன்மையான எண்ணங்களைக் கொண்டிருப்பதாகும். எல்லாவற்றுக்கும் முதலில், ஆத்மாக்கள் எல்லோருடைய நோக்கங்களையும் வேறுபிரித்தறிந்து, அவற்றைப் புரிந்து கொள்ளுங்கள். எந்தவோர் ஆத்மாவிற்காகவும் உங்களின் புத்தியில் எந்தவொரு தூய்மையற்ற அல்லது சாதாரணமான நோக்கங்களைக் கொண்டிராதீர்கள். சதா தூய நோக்கங்களையும் தூய ஆசிகளையும் கொண்டிருப்பவர்களே புனித அன்னங்கள் ஆவார்கள். எந்தவோர் ஆத்மாவிற்காகவும் நன்மை செய்யாத எதையும் அவர்கள் பார்த்தால் அல்லது கேட்டால், தமது நன்மை செய்யும் மனோபாவத்தால் அந்த நன்மை அற்றதை மாற்றிவிடுவார்கள். ஒவ்வோர் ஆத்மாவிற்கும் அவர்களின் பார்வை, மேன்மையானதாகவும் தூயதாகவும் அன்பானதாகவும் இருக்கும்.

சுலோகம்:
அன்புக்கடலான தந்தை உங்களினூடாப் புலப்படும் வகையில் அன்பு கங்கைகள் ஆகுங்கள்.

அவ்யக்த சமிக்கை: ஓர் இலகு யோகியாக இருப்பதற்கு, இறை அன்பை அனுபவிப்பவராக இருங்கள்.

சில பக்த ஆத்மாக்கள் இறையன்பில் அமிழ்ந்திருக்க விரும்புகிறார்கள். சிலர் ஒளியில் இரண்டறக் கலக்க விரும்புகிறார்கள். இத்தகைய ஆத்மாக்களுக்கு ஒரு விநாடியில் தந்தையின் அறிமுகத்தையும் தந்தையின் புகழையும் நீங்கள் அவரிடம் இருந்து பெற்ற பேறுகளையும் வழங்குங்கள். அதன்பின்னர், ஆத்மாக்கள் அன்பிலே திளைத்திருக்கும் ஸ்திதியை அனுபவிக்கச் செய்யுங்கள். நீங்கள் அன்பிலே மூழ்கியிருக்கும்போது உங்களால் இலகுவாக அமிழ்ந்திருக்கும் இரகசியத்தைப் புரிந்து கொள்ள முடியும்.