28.12.25    Avyakt Bapdada     Tamil Lanka Murli    18.03.2008     Om Shanti     Madhuban


‘காரணம்’ என்ற வார்த்தையைத் ‘தீர்வாக’ மாற்றி, மாஸ்ரர் முக்தியை அருள்பவர் ஆகுங்கள். அனைவரையும் தந்தையின் சகவாசம் என்ற நிறத்தால் நிறமூட்டுவதன் மூலம் தந்தைக்கு அவர்களைச் சமமானவர் ஆக்குகின்ற ஹோலியைக் கொண்டாடுங்கள்.


இன்று, சகல பொக்கிஷங்களுக்கும் அதிபதியான பாப்தாதா, எங்கும் உள்ள சகல பொக்கிஷங்களாலும் நிரம்பியுள்ள தனது குழந்தைகளைப் பார்க்கிறார். ஒவ்வொரு குழந்தையும் சகல பொக்கிஷங்களிலும் எவ்வளவைச் சேமித்துள்ளார் என்பதைப் பார்க்கும்போது அவர் மகிழ்ச்சி அடைகிறார். எல்லோரும் ஒரே வேளையில் ஒரே பொக்கிஷங்களைப் பெற்றுள்ளார்கள். அப்படி இருந்தும், ஒவ்வொரு குழந்தையின் சேமிப்புக் கணக்கும் வெவ்வேறானது. காலத்திற்கேற்ப, சகல குழந்தைகளும் சகல பொக்கிஷங்களாலும் நிரம்பி இருப்பதைக் காணவே பாப்தாதா விரும்புகிறார். ஏனென்றால், இந்தப் பொக்கிஷங்கள் இப்போது இந்த ஒரு பிறவிக்கு உரியது மட்டுமல்ல, இந்த அழியாத பொக்கிஷங்கள் பல பிறவிகளுக்கு உங்களுடன் இருக்கப் போகின்றன. குழந்தைகளான நீங்கள் எல்லோரும் இந்த நேரத்தின் பொக்கிஷங்களைப் பற்றி அறிவீர்கள். அவற்றைப் பற்றி நீங்கள் பேசிய உடனேயே, பாப்தாதா உங்களுக்குக் கொடுத்த பொக்கிஷங்கள் அனைத்தும் உங்களின் முன்னால் தோன்றுகின்றன. சகல பொக்கிஷங்களின் பட்டியலும் உங்கள் எல்லோரின் முன்னாலும் தோன்றின, அல்லவா? நீங்கள் பொக்கிஷங்களைப் பெற்றுள்ளதாக பாப்தாதா முன்னரும் உங்களுக்குக் கூறியுள்ளார். ஆனால் அவற்றைச் சேமிப்பதற்கு நீங்கள் என்ன வழிமுறையைப் பயன்படுத்துவீர்கள்? ஒருவர் எந்தளவிற்குக் கருவியாகவும் பணிவாகவும் இருக்கிறாரோ, அந்தளவிற்கு அவர் அந்தப் பொக்கிஷங்களைச் சேமிப்பார். எனவே, சோதித்துப் பாருங்கள்: ஒரு கருவியாகவும் பணிவாகவும் இருக்கும் வழிமுறையால், நான் எனது கணக்கில் எத்தனை பொக்கிஷங்களைச் சேமித்துள்ளேன்? நிரம்பியிருக்கும் ஆத்மாவாக இருப்பதன் ஆன்மீக போதை, இயல்பாகவே இந்தப் பொக்கிஷங்களைச் சேமித்து நிரம்பி இருக்கும் ஓர் ஆத்மாவின் நடத்தையிலும் முகத்திலும் புலப்படும். ஆன்மீகப் போதையும் பெருமையும் எப்போதும் அவர்களின் முகங்களில் ஜொலிக்கும். எந்தளவிற்கு ஆன்மீகப் பெருமை உள்ளதோ, அந்தளவிற்கு அவர்கள் கவலையற்ற சக்கரவர்த்திகளாக இருப்பார்கள். ஆன்மீகப் பெருமை, அதாவது, ஆன்மீகப் போதை, ஒரு கவலையற்ற சக்கரவர்த்தியாக இருப்பதன் அடையாளம் ஆகும். எனவே, உங்களையே சோதித்துப் பாருங்கள்: எனது நம்பிக்கையும் ஒரு கவலையற்ற சக்கரவர்த்தியாகவும் இருக்கும் போதையும் எனது முகத்திலும் எனது செயல்பாடுகளிலும் புலப்படுகிறதா? நீங்கள் எல்லோரும் ஒரு கண்ணாடியைப் பெற்றுள்ளீர்கள்தானே? எனவே, உங்களின் முகத்தை உங்களின் இதயக் கண்ணாடியில் சோதித்துப் பாருங்கள். உங்களுக்கு எந்த வகையான கவலையும் உள்ளதா? ‘என்ன நடக்கும்? அது எப்படி நடக்கும்? ஒருவேளை இது நடக்கக்கூடும்.....’ இந்த வகையான எண்ணங்கள் ஏதாவது உங்களுக்குள் எஞ்சி இருக்கவில்லை, அல்லவா? ஒரு கவலையற்ற சக்கரவர்த்திக்கு இந்த எண்ணம் மட்டுமே இருக்கும்: எது நடக்கிறதோ, அது மிகவும் நல்லது. என்ன நடக்க இருக்கிறதோ, அது அனைத்திலும் சிறப்பாக இருக்கும். இது ஆன்மீகப் பெருமை எனப்படுகிறது. ஆன்மீகப் பெருமை என்றால் சுயமரியாதை கொண்டதோர் ஆத்மா என்று அர்த்தம். எந்தளவிற்கு மக்கள் அழிகின்ற செல்வத்தைச் சம்பாதிக்கிறார்களோ, அதற்கேற்ப காலத்திற்கேற்ப அவர்களுக்கு அந்தளவு கவலையும் உள்ளது. உங்களின் இறை பொக்கிஷங்களைப் பற்றிய கவலை ஏதாவது உங்களுக்கு இருக்கிறதா? நீங்கள் கவலையற்றவர்கள், அப்படித்தானே? பொக்கிஷங்களின் அதிபதிகளாகவும் இறை குழந்தைகளாகவும் உள்ளவர்கள், தமது கனவுகளிலேனும் சதா கவலையற்ற சக்கரவர்த்திகள் ஆகவே இருப்பார்கள். ஏனென்றால், இந்தப் பிறவியில் மட்டுமல்ல, இந்த இறை பொக்கிஷங்கள் இந்தப் பிறவியிலும் அவர்களுடன் இருக்கும், அத்துடன் பல பிறவிகளுக்கும் அவர்களுடன் இருக்கும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது. இதனாலேயே, இத்தகைய நம்பிக்கையுள்ள புத்திகளைக் கொண்டவர்கள் கவலையற்றவர்களாக இருப்பார்கள்.

எனவே, இன்று, பாப்தாதா எங்கும் உள்ள குழந்தைகள் அனைவரினதும் சேமிப்புக் கணக்குகளைப் பார்க்கிறார். நீங்கள் சேமித்துள்ள, உங்களால் சேமிக்கக்கூடிய, குறிப்பிட்ட மூன்று வகையான கணக்குகள் உள்ளன என உங்களுக்கு முன்னரே கூறப்பட்டுள்ளது. 1. உங்களின் முயற்சிகளுக்கேற்ப பொக்கிஷங்களைச் சேமித்தல். 2. ஆசீர்வாதக் கணக்கு. உங்களின் ஆசீர்வாதக் கணக்கைச் சேமிப்பதற்கான வழிமுறை: சேவை செய்வதில் மும்முரமாக இருப்பதுடன், உங்களின் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள் என்ற மூன்றாலும் மற்றவர்களுடன் தொடர்புகளையும் உறவுமுறைகளையும் கொண்டிருக்கும்போது, உங்களுடனும் சதா திருப்தியாக இருங்கள், மற்றவர்களையும் சதா திருப்திப்படுத்துங்கள். திருப்தி, ஆசீர்வாதக் கணக்கை அதிகரிக்கும். 3. புண்ணியக் கணக்கு. புண்ணியக் கணக்கிற்கான வழிமுறை: நீங்கள் என்ன சேவையைச் செய்தாலும், உங்களின் மனம், வார்த்தைகள், செயல்கள் மற்றும் மற்றவர்களுடனான உறவுமுறைகள் மற்றும் தொடர்புகளைக் கொண்டிருப்பதன் மூலம், எப்போதும் தன்னலமற்ற மற்றும் எல்லையற்ற மனோபாவம், சுபாவம், நோக்கங்கள் மற்றும் உணர்வுகளால் சேவை செய்யுங்கள். உங்களின் சுபாவம், உங்களின் நல்ல நோக்கங்கள் மற்றும் நல்ல உணர்வுகளால் சேவை செய்யுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம், நீங்கள் இயல்பாகவே உங்களின் புண்ணியக் கணக்கில் சேமிப்பீர்கள். எனவே, சோதித்துப் பாருங்கள். எப்படிச் சோதிப்பது என்று உங்களுக்குத் தெரியுமா? உங்களுக்குத் தெரியுமா? இதை எப்படிச் செய்வது என்பதை அறியாதவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! இதை எப்படிச் செய்வது என்பதை அறியாதவர்கள் எவரும் கிடையாது. இதன் அர்த்தம் என்னவென்றால், எல்லோருக்கும் எப்படிச் சோதிப்பது என்பது தெரியும். எனவே, உங்களின் மூன்று கணக்குகளிலும், உங்களின் சொந்த முயற்சிகளின் கணக்கு, உங்களின் ஆசீர்வாதக் கணக்கு, உங்களின் புண்ணியக் கணக்கு என்பவற்றில் எத்தனை சதவீதத்தை நீங்கள் சேமித்துள்ளீர்கள் என நீங்கள் சோதித்துப் பார்த்தீர்களா? நீங்கள் இதைச் சோதித்தீர்களா? உங்களையே சோதிப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! உங்களை நீங்கள் சோதித்தீர்களா? முதல் வரிசையில் இருப்பவர்கள், சோதிக்கவில்லையா? நீங்கள் சோதிப்பதில்லையா? நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? நீங்கள் சோதிக்கிறீர்கள்தானே? இப்போது, காலம் நெருங்கி வருவது துரித கதியில் முன்னால் செல்கிறது என்று பாப்தாதா ஏற்கனவே உங்களுக்குக் கூறியுள்ளார், அத்துடன் உங்களுக்கு ஒரு சமிக்கையும் கொடுத்துள்ளார். இதனாலேயே, நீங்கள் உங்களை மீண்டும் மீண்டும் சோதிக்க வேண்டும். பாப்தாதா ஒவ்வொரு குழந்தையையும் ஓர் இராஜ குழந்தையாக - ஓர் இராஜ யோகியாகவும் இராஜ குழந்தையாகவும் பார்க்கவே விரும்புகிறார். தந்தையான இறைவனுக்கு ஒவ்வொரு குழந்தையும் ஓர் இராஜரீகமான குழந்தை என்ற ஆன்மீக போதை உள்ளது. ஒவ்வொருவரும் இறைவனின் குழந்தையே. அத்துடன் சுய இராச்சியத்தையும் உலக இராச்சியத்தையும் கொண்டிருக்கிறார்கள்.

நீங்கள் பாப்தாதாவிடம் இருந்து தொடர்ந்து பொக்கிஷங்களைப் பெறுகிறீர்கள். இந்தப் பொக்கிஷங்களைச் சேமிப்பதற்கான வழிமுறை மிகவும் இலகுவானது. இதை ஒரு வழிமுறை அல்லது ஒரு சாவி என்று நீங்கள் அழைக்கலாம், உங்களுக்கு அது தெரியும். சேமிப்பதற்கான சாவி என்ன? உங்களுக்குத் தெரியுமா? மூன்று புள்ளிகள். உங்கள் எல்லோரிடமும் இந்தச் சாவி உள்ளதல்லவா? மூன்று புள்ளிகளை இடுங்கள், பொக்கிஷங்கள் தொடர்ந்து சேமிக்கப்படும். எப்படி சாவியைப் பயன்படுத்துவது எனத் தாய்மார்களான உங்களுக்குத் தெரியுமா? சாவிகளைப் பார்த்துக் கொள்வதில் தாய்மார்களான நீங்கள் கெட்டிக்காரர்கள், இல்லையா? எனவே, தாய்மார்களான நீங்கள் எல்லோரும் மூன்று புள்ளிகள் என்ற இந்தச் சாவியைக் கவனமாக மறைத்து வைத்திருக்கிறீர்களா? அதை எப்படிப் பயன்படுத்துவது என்று உங்களுக்குத் தெரியுமா? தாய்மார்களே, கூறுங்கள்! உங்களிடம் அந்தச் சாவி உள்ளதா? அதை வைத்திருப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! அந்தச் சாவி களவாடப்பட இல்லையல்லவா? பொதுவாக, ஒரு வீட்டில் எல்லாவற்றுக்கும் பயன்படுத்தும் சாவிகளை எப்படிப் பார்த்துக் கொள்வது என்பதைத் தாய்மார்கள் மிக நன்றாக அறிவார்கள். அதேபோல், இந்தச் சாவியும் சதா உங்களுடன் இருக்கிறதல்லவா?

எனவே, தற்போது, காலம் நெருங்கி வருவதனால், குழந்தைகளான நீங்கள் எல்லோரும் உங்களின் எண்ணங்கள், வார்த்தைகள் மற்றும் நடைமுறைச் செயல்களில் ஒரு வார்த்தையை மாற்றுவதைக் காண பாப்தாதா விரும்புகிறார். இந்தத் தைரியம் உங்களுக்கு இருக்கிறதா? ஒரு வார்த்தை! ஒவ்வொரு குழந்தையிலும் இந்த மாற்றத்தையே பாப்தாதா கொண்டு வர விரும்புகிறார். இந்த ஒரு வார்த்தையே உங்களைக் கவனயீனமான முயற்சியாளரில் இருந்து ஒரு தீவிர முயற்சியாளராக ஆக்குகிறது. இப்போது, காலத்திற்கேற்ப, நீங்கள் என்ன முயற்சிகளைச் செய்ய வேண்டும்? தீவிர முயற்சிகள். எல்லோரும் தீவிர முயற்சியாளர்களின் வரிசையில் வரவே விரும்புகிறார்கள். ஆனால் ஒரு வார்த்தை உங்களைக் கவனயீனமாக மாற்றுகிறது. அந்த ஒரு வார்த்தை என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? அந்த வார்த்தையை நீங்கள் மாற்றத் தயாரா? நீங்கள் தயாரா? தயாரா? நீங்கள் தயார் என்றால் உங்களின் கைகளை உயர்த்துங்கள். பாருங்கள், உங்களின் புகைப்படம் தொலைக்காட்சியில் காட்டப்படுகிறது. நீங்கள் தயாரா? வாழ்த்துக்கள். நீங்கள் வேகமாக முயற்சி செய்து அதை மாற்றப் போகிறீர்களா? அல்லது, நான் ஏதோவொரு வேளை அதைச் செய்வேன், அது ஏதோவொரு வேளை நடக்கும் என நீங்கள் சொல்வீர்களா? அப்படி இல்லையல்லவா? நீங்கள் எல்லோரும் அந்த ஒரு வார்த்தையை அறிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், நீங்கள் எல்லோரும் புத்திசாலிகள். எனவே, காரணம் என்ற ஒரு வார்த்தையை மாற்றி, உங்களின் முன்னால் தீர்வு என்ற வார்த்தையைக் கொண்டு வாருங்கள். ஒரு காரணம் (சாக்குப்போக்கு) உங்களின் முன்னால் வரும்போது, அல்லது நீங்கள் அதைப் பற்றிச் சிந்திக்கும்போது, உங்களால் ஒரு தீர்வைக் கண்டு பிடிக்க முடியாதிருக்கும். எனவே, உங்களின் வார்த்தைகளில் மட்டுமல்ல, உங்களின் எண்ணங்களிலும், காரணம் என்ற வார்த்தையைத் தீர்வு என்ற வார்த்தையாக மாற்ற வேண்டும் என்று பாப்தாதா விரும்புகிறார். பல வகையான காரணங்கள் உள்ளன. இவை உங்களின் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்களில் பிரவேசிக்கும்போது, அவை உங்களின் தீவிர முயற்சிகளில் ஒரு பந்தனம் ஆகுகின்றன. நீங்கள் எல்லோரும் பாப்தாதாவிற்குச் சத்தியம் செய்துள்ளீர்கள்: நீங்கள் அனைவருமே தந்தைக்கு அவரின் உலக மாற்றம் என்ற பணியில் தந்தையின் சகபாடிகள் என அன்புடன் சத்தியம் செய்துள்ளீர்கள். நீங்கள் தந்தையின் சகபாடிகள். தந்தை இதைத் தனித்துச் செய்வதில்லை. அவர் குழந்தைகளைத் தன்னுடன் கொண்டு வருகிறார். எனவே, உலக மாற்றம் என்ற பணியில் உங்களின் பணி என்ன? ஆத்மாக்கள் எல்லோருக்கும் காரணங்களைத் தீர்வுகளாக மாற்றுதல். தற்காலத்தில், பெரும்பாலான ஆத்மாக்கள் சந்தோஷமற்றும் அமைதி இழந்தும் இருப்பதனால், அவர்கள் இப்போது முக்தியை விரும்புகிறார்கள். அவர்கள் தமது துன்பம், அமைதி இன்மை மற்றும் சகல பந்தனங்களில் இருந்தும் விடுபட விரும்புகிறார்கள். முக்தியை அருள்பவர்கள் யார்? தந்தையுடன் கூடவே, குழந்தைகளான நீங்களும் முக்தியை அருள்பவர்கள் ஆவீர்கள். இன்றும், உங்களின் உயிரற்ற விக்கிரகங்களிடம் இருந்து மக்கள் எதை வேண்டுகிறார்கள்? இப்போது, துன்பமும் அமைதியின்மையும் அதிகரிப்பதைப் பார்க்கும்போது, பெரும்பாலான ஆத்மாக்கள் முக்தியை அருள்பவர்களான ஆத்மாக்களான உங்களை நினைவு செய்கிறார்கள். அவர்கள் தமது மனங்களில் சந்தோஷம் இல்லாமல் அழுகிறார்கள்: ஓ முக்தியை அருள்பவர்களே, எங்களை விடுதலை செய்யுங்கள்! ஆத்மாக்களின் துன்பம் மற்றும் அமைதியின்மையின் அழைப்பை உங்களால் கேட்க முடியவில்லையா? முக்தியை அருள்பவர்கள் ஆகுங்கள். ஆனால், எல்லாவற்றுக்கும் முதலில், ‘காரணம்’ என்ற இந்த வார்த்தையில் இருந்து உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள். அப்போது முக்திக்கான ஒலி இயல்பாகவே உங்களின் காதுகளில் எதிரொலிக்கும். எல்லாவற்றுக்கும் முதலில், நீங்கள் அகத்தே உங்களுக்குள் இந்த வார்த்தையில் இருந்து விடுபடும்போது, உங்களால் மற்றவர்களையும் விடுவிக்க முடியும். இப்போது, நாளுக்கு நாள், ஆத்மாக்களான உங்களின் முன்னால், ‘ஓ முக்தியை அருள்பவரே, எங்களுக்கு முக்தி கொடுங்கள்’ என்று அழைத்த வண்ணம் ஒரு வரிசை ஏற்படப் போகிறது. எவ்வாறாயினும், இதுவரை, காரணங்கள் பலவற்றைக் கொடுக்கும் உங்களின் சாக்குப் போக்குகளால், முக்திக்கான வாயில்கள் மூடியுள்ளன. இதனாலேயே, பாப்தாதா இந்த ஒரு வார்த்தையைப் பற்றிப் பேசுகிறார். இதனுடன்கூடவே, வேறு பலவீனமான வார்த்தைகளும் உள்ளன. ஆனால் பிரதானமான வார்த்தை, ‘காரணம்’ என்பதாகும். அத்துடன்கூடவே, ஏனைய பலவீனங்களும் உள்ளன: எய்ஸே (இந்த முறையில்), வெய்ஸே (அந்த முறையில்), கெய்ஸே (எப்படி?). இந்த வார்த்தைகளும் அதனுடன் தொடர்பு உடையவை. வாயில்கள் இன்னமும் மூடி இருப்பதற்கான காரணம் இந்தக் காரணங்களே ஆகும்.

இன்று, நீங்கள் எல்லோரும் ஹோலியைக் கொண்டாட வந்துள்ளீர்கள். நீங்கள் அனைவருமே அன்பெனும் விமானத்தில் ஏறி, இங்கே ஓடோடி வந்துள்ளீர்கள். உங்களுக்குத் தந்தையிடம் அன்பு உள்ளது. இதனாலேயே, நீங்கள் தந்தையுடன் ஹோலி கொண்டாட வந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்! வரவேற்புகள். பாப்தாதா உங்களைப் பாராட்டுகிறார். ஆரோக்கியம் அவ்வளவு நன்றாக இல்லாததால் சக்கர நாற்காலிகளில் அமர்ந்து இங்கே தைரியத்துடன் சிலர் வந்திருப்பதை பாப்தாதா பார்க்கிறார். பாப்தாதா இந்தக் காட்சியைப் பார்க்கிறார். நீங்கள் வகுப்பிற்கும் நிகழ்ச்சிகளுக்கும் வரும்போது, சிலர் தமது வழிகாட்டிகளைப் பிடித்த வண்ணம் சக்கர நாற்காலிகளில் வருகிறார்கள். எனவே, இதை நீங்கள் என்னவென்ற அழைப்பீர்கள்? இறைவனிடம் உள்ள அன்பு. தமது இதயபூர்வமான அன்பைக் கொண்டுள்ள இத்தகைய தைரியசாலியான, அன்பான குழந்தைகளுக்கு பாப்தாதா குறிப்பாக மிகுந்த ஆசீர்வாதங்களையும் இதயபூர்வமான அன்பையும் வழங்குகிறார். நீங்கள் இங்கே தைரியத்துடன் வந்துள்ளீர்கள், நீங்கள் தந்தையிடம் இருந்தும் குடும்பத்திடம் இருந்தும் உதவியைப் பெற்றுள்ளீர்கள். உங்கள் எல்லோருக்கும் தங்குவதற்கு சௌகரியமான இடம் கிடைத்திருக்கிறதா? உங்களுக்குத் தங்குவதற்கு சௌகரியமான இடம் கிடைந்திருந்தால், உங்களின் கைகளை உயர்த்துங்கள். வெளிநாட்டவர்களுக்கு நல்ல இடம் கிடைத்துள்ளதா? இது ஒரு மேளா. அந்த மேளாக்களில், உங்களின் உணவை உண்ணும்போது, சுற்றியும் மண்ணும் தூசியும் காணப்படும். நீங்கள் நல்ல பிரம்மா போஜனத்தைப் பெற்றீர்களா? நீங்கள் அதைப் பெற்றீர்களா? ஆம், நீங்கள் உங்களின் கைகளை அசைக்கிறீர்கள். உங்களுக்கு நித்திரை செய்வதற்கு மூன்றடி நிலம் கிடைத்துள்ளதா? உங்களால் இத்தகைய சந்திப்பை மீண்டும் 5000 வருடங்களின் பின்னரே சங்கம யுகத்தில் மட்டுமே பெற முடியும். அதற்கு முன்னர் அது நடை பெறாது.

எனவே, இன்று, குழந்தைகள் எல்லோருடைய சேமிப்புக் கணக்குகளையும் பார்ப்பதற்கான எண்ணத்தை பாப்தாதா கொண்டிருந்தார். அவர் அவற்றைப் பார்த்திருக்கிறார், எதிர்காலத்திலும் அவற்றைப் பார்ப்பார். பாப்தாதா குழந்தைகளான உங்களுக்கு இதைப் பற்றிய எச்சரிக்கையை முன்னரும் வழங்கி உள்ளார். அதாவது, சேமிப்புக் கணக்கும் சேமிப்பதற்கான நேரமும் இப்போது சங்கமயுகத்தில் மட்டுமே இருக்கும். இந்தச் சங்கமயுகத்தில் நீங்கள் விரும்பிய அளவைச் சேமியுங்கள். கல்பம் முழுவதற்குமான கணக்கை இந்த வேளையில் மட்டுமே சேமிக்க முடியும். உங்களின் சேமிப்புக் கணக்குகளின் வங்கி, இதன் பின்னர் மூடிவிடும். அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? இதனாலேயே, பாப்தாதாவிற்குக் குழந்தைகளின் மீது அன்பு உள்ளது. அத்துடன், கவனயீனத்தால் சிலவேளைகளில் குழந்தைகள் மறந்து, ‘அது நடக்கும், நான் அதைப் பார்ப்பேன், நான் இதைச் செய்கிறேன், நான் முன்னேறுகிறேன்’ என நினைக்கிறார்கள் என்பதையும் அவர் அறிவார். நீங்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் கூறுகிறீர்கள்: நாங்கள் என்ன செய்கிறோம் என்பதை உங்களால் பார்க்க முடியவில்லையா? நாங்கள் முன்னேறுகிறோம், இதைவிட வேறு எங்களால் செய்ய முடியும்? எவ்வாறாயினும், நடப்பதற்கும் பறப்பதற்கும் இடையில் பெரியதொரு வேறுபாடு உள்ளது. நீங்கள் முன்னேறுகிறீர்கள். எனவே, அதற்காகப் பாராட்டுக்கள். ஆனால், இப்போது நடப்பதற்கான நேரம் முடிவிற்கு வந்துவிட்டது, இது இப்போது பறப்பதற்கான நேரம் ஆகும். அப்போது மட்டுமே உங்களால் உங்களின் இலக்கை அடைய முடியும். இறைவனின் குழந்தைகளாக நீங்கள் இருக்கும்போது, சாதாரண பிரஜைகளில் ஒருவர் ஆகுவதா! இறைவனின் குழந்தைக்கு ஒரு சாதாரண பிரஜை ஆகுவது சரியாகத் தென்படுகிறதா?

இன்று, நீங்கள் இங்கே ஹோலியைக் கொண்டாட வந்துள்ளீர்கள், அதனால் கடந்தது கடந்ததாக இருக்கட்டும். எனவே, இன்றில் இருந்து, நீங்கள் கடந்ததைக் கடந்ததாகக் கைவிட வேண்டும் என்றே பாப்தாதா விரும்புகிறார். எந்தக் காரணத்தினாலும் ஏதாவது பலவீனம் இன்னமும் எஞ்சியிருந்தால், இந்தக் கணத்தில் இருந்தே கடந்தது கடந்ததாகட்டும். உங்களின் சித்திரத்தை உங்களின் விழிப்புணர்வில் வைத்திருங்கள். உங்களுடைய சொந்த ஓவியராகி, உங்களின் சொந்தச் சித்திரத்தை ஓவியமாக வரையுங்கள். பாப்தாதா தனக்கு முன்னால் ஒவ்வொரு குழந்தையின் என்ன படத்தையும் பார்க்கிறார் என்று பாப்தாதா உங்களுக்குச் சொல்லட்டுமா? அவர் என்ன படத்தைப் பார்க்கிறார் என உங்களுக்குத் தெரியுமா? இப்போது, நீங்கள் எல்லோரும் உங்களின் ஒரு புகைப்படத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். உங்களின் புகைப்படத்தை எப்படி எடுப்பது என்று உங்களுக்குத் தெரியுமா? மேன்மையான எண்ணங்கள் என்ற பேனாவால், இப்போது உங்களின் சொந்தப் புகைப்படத்தை உங்களின் முன்னால் வைத்திருங்கள். அனைத்திற்கும் முதலில், அப்பியாசத்தைச் செய்யுங்கள், மனதின் அப்பியாசம். பௌதீக அங்கங்களின் அப்பியாசம் அல்ல, ஆனால் மனதின் அப்பியாசம். இந்த அப்பியாசத்தைச் செய்ய நீங்கள் தயாரா? தயார் என்றால் ‘ஆமாம்’ என்று தலையசையுங்கள். பாருங்கள், அனைத்திலும் அதிமேன்மையான படம், ஒருவர் கிரீடம், சிம்மாசனம், திலகத்துடன் இருப்பதேயாகும். எனவே, உங்களின் சொந்தப் படத்தை உங்களின் முன்னால் கொண்டு வாருங்கள். ஏனைய எண்ணங்கள் அனைத்தையும் ஒருபுறம் ஒதுக்கிவிட்டு, எப்படி நீங்கள் எல்லோரும் பாப்தாதாவின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறீர்கள் என்பதைப் பாருங்கள். உங்களிடம் இந்த சிம்மாசனம் உள்ளதல்லவா? இத்தகைய சிம்மாசனத்தை உங்களால் வேறு எங்கேயும் பெற முடியாது. எனவே, முதலில் இந்தப் படத்தை எடுங்கள்: விசேட ஆத்மாவான நான், சுய மரியாதையைக் கொண்ட ஆத்மாவும் பாப்தாதாவின் முதல் படைப்பும் மேன்மையான ஆத்மாவான நான், பாப்தாதாவின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறேன். நீங்கள் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறீர்களா? அத்துடன் கூடவே, இறைவனின் படைப்பான ஓர் ஆத்மாவாக, இந்த விருட்சத்தின் வேர்களில் அமர்ந்திருக்கும் ஆத்மாவாக, மூதாதையும் பூஜிக்கத்தகுதி வாய்ந்த ஆத்மாவாகவும் இருக்கும் விழிப்புணர்வின் திலகத்தை இட்டுக் கொள்ளுங்கள். நீங்கள் இந்த விழிப்புணர்வின் திலகத்தை இட்டுக் கொண்டீர்களா? அத்துடன் கூடவே, ஒரு கவலையற்ற சக்கரவர்த்தி ஆகுங்கள்: நான் எனது கவலைகள் என்ற சுமையை பாப்தாதாவிடம் அர்ப்பணித்து விட்டு, இலேசான மற்றும் ஒளியான கிரீடத்தை அணிந்திருக்கிறேன். எனவே, நானே கிரீடத்தையும் திலகத்தையும் சிம்மாசனத்தையும் கொண்டிருப்பவன். நான் தந்தையான இறைவனால் அதிகளவில் நேசிக்கப்படுகின்ற ஓர் ஆத்மா.

எனவே, நீங்கள் உங்களின் படத்தை எடுத்து விட்டீர்களா? நீங்கள் நடக்கும் போதும் அசையும் போதும் இலேசாகவும் ஒளியாகவும் இருக்கும் இந்தக் கிரீடத்தை உங்களால் அணிய முடியும். உங்களின் சுயமரியாதை நீங்கள் நினைக்கும் போலெல்லாம், நீங்கள் ஒரு கிரீடத்தையும் திலகத்தையும் கொண்டிருந்து இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் ஆத்மா என்பதை நினைவு செய்யுங்கள். இந்தப் படத்தைத் திடசங்கற்பத்துடன் உங்களின் முன்னால் கொண்டு வாருங்கள். ‘நான் யார்?’ என்ற ஒரேயொரு கூற்றின் விழிப்புணர்வைக் கொண்டிருப்பதன் பயிற்சியை நீங்கள் ஆரம்பத்தில் செய்தது உங்களுக்கு நினைவிருக்கிறதா? நான் யார்? மீண்டும் மீண்டும் உங்களின் விழிப்புணர்வில் ‘நான் யார்?’ என்பதைக் கொண்டு வந்து, இறைவனிடம் இருந்து நீங்கள் பெற்ற சுயமரியாதையின் பட்டங்களை நினைவு செய்யுங்கள். தற்காலத்தில், மனிதர்கள் மனிதர்களிடம் இருந்தே பட்டங்களைப் பெறுகிறார்கள். அப்படி இருந்தும் அவர்கள் அவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஆனால் குழந்தைகளான நீங்களோ தந்தையிடம் இருந்து பல பட்டங்களைப் பெற்றுள்ளீர்கள். நீங்கள் அதிகளவு மரியாதையைப் பெற்றுள்ளீர்கள். எப்போதும் உங்களின் புத்தியில் சுயமரியாதையின் பட்டியலைக் கடையுங்கள். நான் யார்? பட்டியலை உங்களின் முன்னால் கொண்டு வாருங்கள். இந்த போதையைப் பேணுங்கள், ‘காரணம்’ என்ற வார்த்தை அமிழ்ந்துவிடும். ஒவ்வொரு செயலுக்கும் நீங்கள் ஒரு தீர்வைக் கண்டுபிடிப்பீர்கள். நீங்கள் தீர்வுகளின் சொரூபம் ஆகும்போது, இலகுவாக உங்களால் நிர்வாணா தாமத்திற்கான, முக்தி தாமத்திற்கான பாதையை ஆத்மாக்கள் அனைவருக்கும் காட்டி, அவர்களை விடுவிக்க முடியும்.

திடசங்கற்பமான ஓர் எண்ணத்தைக் கொண்டிருங்கள். எப்படி திடசங்கற்பமான எண்ணத்தைக் கொண்டிருப்பது என்று உங்களுக்குத் தெரியுமா? திடசங்கற்பம் இருக்கும்போது, அந்தத் திடசங்கற்பமே வெற்றியின் திறவுகோல் ஆகும். உங்களின் திடசங்கற்பமான எண்ணங்களில் சிறிதளவேனும் பலவீனம் வருவதற்கு அனுமதிக்காதீர்கள். ஏனென்றால், உங்களைத் தோற்கடிப்பது மாயையின் கடமையாகும். எவ்வாறாயினும், உங்களின் கடமை என்ன? உங்களின் கடமை, தந்தையின் கழுத்தில் மாலை ஆகுவதே, மாயையால் தோற்கடிக்கப்படுவது அல்ல. எனவே, உங்கள் எல்லோருக்கும் இந்த எண்ணம் இருக்கிறது: நான் சதா தந்தையின் கழுத்தில் வெற்றி மாலையாக இருக்கிறேன். நான் பாபாவின் கழுத்தில் ஒரு மாலையாக இருக்கிறேன். நான் தந்தையின் கழுத்தில் ஒரு வெற்றி மாலை ஆவேன்.

எனவே, நீங்கள் என்னவாகுவீர்கள் என உங்களின் கைகளை உயர்த்தும்படி பாப்தாதா கேட்டால், நீங்கள் என்ன பதில் அளிப்பீர்கள்? நீங்கள் இலக்ஷ்மி, நாராயணன் ஆகுவேன் என்ற ஒரேயொரு பதிலையே கொடுப்பீர்கள். இராமர் சீதையாக அல்ல. எனவே, இலக்ஷ்மி, நாராயணன் ஆகப் போகின்றவர்களே, நீங்களே பாப்தாதாவின் கழுத்தின் வெற்றி மாலையின் மணிகள் ஆவீர்கள். நீங்கள் பூஜிக்கத் தகுதி வாய்ந்த ஆத்மாக்கள் ஆவீர்கள். உங்களின் மாலையின் மணிகளை உருட்டுவதன் மூலம் பக்தர்கள் தமது பிரச்சனைகளை முடிக்கிறார்கள். நீங்கள் அத்தகைய மேன்மையான மணிகள் ஆவீர்கள். எனவே, இன்று பாப்தாதாவிற்கு நீங்கள் எதைக் கொடுப்பீர்கள்? நீங்கள் ஹோலிக்குச் சில பரிசுகளைக் கொடுப்பீர்கள்தானே? இந்தக் ‘காரணம்’ என்ற வார்த்தையும் ‘த்தோ, த்தோ’ என்ற வார்த்தையும். (இதனால்தான், அதனால்தான்….) த்தோ, த்தோ எனக் கூறுவதன் மூலம் நீங்கள் கிளிகள் (தோத்தா) போன்று ஆகுகிறீர்கள். எனவே, ‘இப்படி, அப்படி’ என்ற காரணத்தைக் கொடுப்பதைத் தவிருங்கள். எந்த வகையான காரணத்தையும் கொடுக்க வேண்டாம், ஆனால் ஒரு தீர்வைக் கண்டுபிடியுங்கள். அச்சா.

பாப்தாதா ஒவ்வொரு குழந்தைக்கும் சமமானவர் ஆகுவதற்கும் மேன்மையான எண்ணங்களைக் கொண்டிருப்பதற்கும் கோடானுகோடி வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார். வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்! எங்களைப் போல் கோடானு கோடி பாக்கியசாலிகள் வேறு யார் இருக்கிறார்கள் என்ற போதை உங்களுக்கு இருக்கிறதல்லவா? இந்த போதையில் நிலைத்திருங்கள். அச்சா.

இப்போது, ஒரு விநாடியில், பிராமணர்களான நீங்கள் எல்லோரும், இராஜயோகத்தைப் பயிற்சி செய்யும் வேளையில், உங்களின் மனதை ஒருமுகப்படுத்தக் கூடிய ஓர் அதிபதி ஆகுங்கள். நீங்கள் விரும்பிய அளவு நேரத்திற்கு, நீங்கள் விரும்பியவாறு உங்களின் மனதை ஏதாவது ஒன்றில் ஒருமுகப்படுத்துங்கள். இப்போது உங்களின் மனதை ஒருமுகப்படுத்துங்கள். உங்களின் மனதை அங்கும் இங்கும் அலைபாய்ந்து, விஷமத்தனத்தை ஏற்படுத்த அனுமதிக்காதீர்கள். ‘எனது பாபா, இனிய பாபா, அன்பான பாபா.’ இந்த அன்புடனும் இந்த சகவாசத்தின் நிறத்துடனும் ஆன்மீக ஹோலியைக் கொண்டாடுங்கள். (பாபா இந்த அப்பியாசத்தைச் செய்வித்தார்). அச்சா.

எங்கும் உள்ள மேன்மையான, விசேடமான புனிதமான மற்றும் அதிமேலான குழந்தைகள் அனைவருக்கும் சதா தங்களைத் தந்தையை ஒத்த, சகல சக்திகளாலும் நிரம்பியுள்ள மாஸ்ரர் சர்வசக்திவான் ஆத்மாக்களாக அனுபவம் செய்பவர்களுக்கும் முக்தியை அருள்பவர்களாகி, தாங்களும் சகல பலவீனங்களில் இருந்தும் விடுபட்டு, ஏனைய ஆத்மாக்களையும் முக்தியைப் பெறச் செய்யும் முக்தியை அருள்பவர்களான குழந்தைகளுக்கும் சதா சுயமரியாதை என்ற ஆசனத்தில் அமர்ந்திருப்பவர்களுக்கும் எப்போதும் அமரராக இருக்கும் ஆசீர்வாதத்தை அனுபவம் செய்யும் சொரூபங்களாக இருப்பவர்களுக்கும் எங்கும் உள்ள இத்தகைய குழந்தைகளுக்கும் அவர்கள் பாபாவின் முன்னால் அமர்ந்திருந்தாலென்ன, அல்லது வெகு தொலைவில் அமர்ந்திருந்தாலும் அன்பிலே திளைத்திருப்பவர்களுக்கும் இத்தகைய குழந்தைகளுக்கு அன்பும் நினைவுகளும் உரித்தாகுக. தமது முயற்சிகளுக்காக ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொண்டிருப்பதற்கான செய்திகளை வழங்கிய குழந்தைகளுக்கும் பாப்தாதாவின் இதயபூர்வமாக அதிகளவு அன்பும் நினைவுகளும் அத்துடன் கோடானுகோடி அன்பும் இதயபூர்வமான நினைவுகளும் உரித்தாகுக. இராச்சியத்திற்கான சகல உரிமைகளையும் கொண்டுள்ள இராஜ யோகிக் குழந்தைகள் எல்லோருக்கும் நமஸ்தே.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஒரு புண்ணியாத்மாவாகி, சர்வசக்திவானின் ஆதாரத்துடன் ஆத்மாக்களைச் சகல பொக்கிஷங்களாலும் சம்பூரணமாக நிரப்புவீர்களாக.

அந்த அரசர்களிடம் (துவாபர யுகத்தின் பின்னர் வந்தவர்கள், ஆசைகளைக் கொண்டிருந்தவர்கள்) தானங்கள் கொடுப்பதற்கும் புண்ணியங்கள் செய்வதற்குமான முழுமையான அதிகாரம் இருந்தது. அவர்களின் அதிகாரத்தின் முழுமையான சக்தியால், அவர்களால் எவரையும் தாம் விரும்பியபடி ஆக்க முடிந்தது. அதேபோல், மகாதானிகளும் புண்ணியாத்மாக்களுமான நீங்கள், சடப்பொருளை வென்றவர்களாகவும் மாயையை வென்றவர்களாகவும் ஆகுவதற்கான விசேடமான அதிகாரத்தைத் தந்தையிடம் இருந்து நேரடியாகப் பெற்றுள்ளீர்கள். உங்களின் தூய எண்ணங்களின் அடிப்படையில், உங்களால் எந்தவோர் ஆத்மாவையும் தந்தையுடன் ஓர் உறவுமுறையை ஏற்படுத்தி, சகல பொக்கிஷங்களாலும் அவர்களை முழுமையாக நிரம்பச் செய்ய முடியும். இந்த அதிகாரத்தை மிகச்சரியான முறையில் பயன்படுத்துங்கள்.

சுலோகம்:
நீங்கள் சம்பூரணத்தையும் முழுமையையும் கொண்டாடும்போது, காலமும் சடப்பொருளும் மாயையும் உங்களிடம் இருந்து விடை பெற்றுச் செல்லும்.

அவ்யக்த சமிக்கை: இப்போது முழுமையாகவும் கர்மாதீத்தாகவும் ஆகுகின்ற ஆழமான அக்கறையைக் கொண்டிருங்கள்.

உங்களின் மனமும் புத்தியும் கர்மம் செய்வதில் மிகவும் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் வேளையில், ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் வழிகாட்டலை அவற்றுக்குக் கொடுங்கள். கர்மங்களைச் செய்யும் எண்ணங்கள் அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும். இதை ஒரு விநாடியேனும் பயிற்சி செய்யுங்கள். இதை அவ்வப்போது தொடர்ந்து செய்யுங்கள். ஏனென்றால், ஒரு விநாடியில் ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் இறுதிச் சான்றிதழை நீங்கள் பெறுவீர்கள். ஒரு விநாடியில், எந்தவொரு விரிவாக்கத்தையும் அதன் சாரத்திற்குள் அமிழ்த்தி, அந்தச் சாரத்தின் சொரூபம் ஆகுங்கள். இந்தப் பயிற்சியானது உங்களைக் கர்மாதீத் ஆக்கும்.