29.07.26        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, உங்களுடைய ஆதி தர்மத்தில் உங்களை நிலைநிறுத்தி, ஒருவருக்கொருவர் அன்புடன் “ஓம் சாந்தி” கூறுங்கள். இதுவும்கூட ஒருவருக்கொருவர் மதிப்புக் கொடுப்பதே ஆகும்.

கேள்வி:
கடவுளுக்கு பிரசாதம் படைக்கும் வழக்கம், பக்திமார்க்கத்திலும், இங்கேயும் இருப்பது ஏன்?

பதில்:
ஏனெனில், இதுவும் அவருக்கு மதிப்புக் கொடுப்பதே ஆகும். சிவபாபா அசரீரியானவர், அனுபவங்களுக்கு அப்பாற்பட்டவர், எதையுமே உண்பதில்லை, நறுமணமே அவரைச் சென்றடையும் என்பதை நீங்கள் அறிவீர்கள். தந்தையே அனைவருக்கும் சற்கதி அருள்பவரும், தூய்மையாக்குபவரும் ஆவார். எனவே அவருக்கு பிரசாதம் நிச்சயமாகப் படைக்கப்பட வேண்டும்.

பாடல்:
எங்கள் யாத்திரை தனித்துவமானது….

ஓம் சாந்தி.
“ஓம் சாந்தி” என்ற வார்த்தை குழந்தைகளின் இதயத்திலே எழுகின்றது. நீங்கள் ஒருவருக்கு நமஸ்தே கூறும்போது, அவரும் பதிலுக்கு நமஸ்தே கூறுவது போன்று, இங்கே தந்தை “ஓம் சாந்தி” கூறும்போது, இந்த ஆத்மா உட்பட, அனைத்துக் குழந்தைகளின் இதயத்தில் இருந்தும் ஓம் சாந்தி வெளியாகின்றது. ஓம் சாந்தி என்றால், ஆத்மாவாகிய நான் அமைதி சொரூபம் என்பதாகும். நீங்கள் பதிலளிக்க வேண்டும். இதுவே பதிலாகும். வேறு எவருமே இதை அர்த்தத்துடன் கூறமுடியாது. ஞான சூரியனான தந்தையும் “ஓம் சாந்தி” என்று கூறுகின்றார், ஞானச் சந்திரனும் “ஓம் சாந்தி” என்று கூறுகின்றார், ஞான நட்சத்திரங்களும் “ஓம் சாந்தி” என்று கூறுகின்றனர். அனைத்துமே நட்சத்திரங்களுள் அடங்குகின்றது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது உங்களது ஆதி தர்மத்தையும், நீங்கள் அமைதி சொரூபமும், அமைதி உலகவாசிகள் என்பதையும் அறிவீர்கள். நீங்கள் ஆத்மாவை மிக நன்றாக அறிவீர்கள் என்ற நம்பிக்கையையும் கொண்டிருக்கின்றீர்கள். மகாத்மா, பாவாத்மா எனச் சரியாகவே கூறப்பட்டுள்ளது. ஓர் ஆத்மா அவரது சரீரத்தை விட்டு, வேறொன்றை எடுக்கின்றார். எவ்வாறாயினும் எவருக்கும் ஆத்மா பற்றிய சரியான புரிந்துணர்வு இல்லை. ஆத்மாவாகிய நான், சின்னஞ்சிறிய புள்ளி வடிவானவர்! ஆத்மா 84 பிறவிகளின் பாகங்களை நடிக்கின்றார். நீங்களும் இதை அறியமாட்டீர்கள். வேறு எவருமே இதை அறியமாட்டார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது தந்தைக்கு முன்னால் நேரடியாகவே அமர்ந்திருக்கின்றீர்கள். நீங்கள் தந்தையை உங்களுக்குச் சொந்தமாக்கி உள்ளீர்கள். குழந்தைகள் தங்களது ஆஸ்தியைக் கோரிக்கொள்வதற்காக, தந்தையைத் தங்களுக்குச் சொந்தமாக்கி உள்ளார்கள். ஆத்மாக்களாகிய உங்களின் எல்லையற்ற தந்தை, பிரம்மாவின் இந்த சரீரத்தினுள் பிரவேசித்துள்ளார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அவர் பிரம்மாவின் சரீரத்தில் பிரவேசித்து, ஆதிசனாதன தேவிதேவதா தர்மத்தை ஸ்தாபிக்கின்றார். ஆதிசனாதன தேவிதேவதா தர்மம், அதாவது சூரிய வம்ச இராச்சியம், முன்னைய கல்பத்திலும் ஸ்தாபிக்கப்பட்டது. தந்தை என்று அழைக்கப்படுகின்ற கடவுள் ஒவ்வொரு கல்பத்திலும் இந்த ஸ்தாபனையை மேற்கொள்கின்றார். அனைவரும் தங்களுடைய துன்பத்தை நீக்கி, சந்தோஷத்தை அருளுமாறு தந்தையாகிய கடவுளை வேண்டுகின்றனர். நீங்கள் சந்தோஷத்தைப் பெற்றதும், அதனைக் கேட்கவேண்டிய தேவையில்லை. இங்கே நீங்கள் அதைக் கேட்கின்றீர்கள். ஏனெனில் நீங்கள் சந்தோஷமற்று இருக்கின்றீர்கள். அங்கே எதையுமே கேட்கவேண்டிய தேவையில்லை. ஏனெனில் தந்தை உங்களுக்கு அனைத்தையும் கொடுத்துவிட்டே செல்கின்றார். இதனாலேயே சத்தியயுகத்தில் எவருமே தந்தையை நினைவு செய்வதில்லை. தந்தை குழந்தைகளாகிய உங்களை சந்தோஷ உலகின் அதிபதிகள் ஆக்குகின்றார் என விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் மீண்டும் ஒரு தடவை இந்த பாபாவிடம் இருந்து சந்தோஷ உலகமெனும் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நீங்கள் எல்லையற்ற தந்தையிடம் இருந்து எல்லையற்ற சந்தோஷத்தைப் பெறுகின்றீர்கள். எவ்வாறு பக்தி மார்க்கம் ஆரம்பிக்கின்றது என்றும், எவ்வாறு மனித உலக விருட்சத்தின் படைத்தல், காத்தல், அழித்தல் இடம்பெறுகின்றது என்றும், நாடகத்தின் ஆரம்பம், மத்தி, இறுதி என்ன என்றும் உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. இது சரீர உலகம், அது அசரீரி உலகம் ஆகும். நீங்கள் அரைக்கல்பம் முழுவதும் பக்தி செய்கின்றீர்கள் எனக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். இப்பொழுது இது கலியுக முடிவாகும். சங்கமயுகத்தில் மாத்திரமே, நீங்கள் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் இதை மிகத்தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் இப்பொழுது சங்கமயுகத்தில் இருக்கின்றீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே புரிந்து கொள்கின்றீர்கள். அறிமுகம் கொடுக்கப்படும் வரைக்கும் வேறு எவராலும் இதைப்புரிந்து கொள்ள முடியாது. பழைய உலகம் மாறிப் புதியதாக வேண்டிய நேரத்திலே சங்கம யுகம் நிச்சயமாக வருகின்றது. இந்த முழு உலகமும் பழையது. இது கலியுகம் எனப்படுகின்றது. ஆரம்பத்தில், முழு உலகிலும் ஒரு தர்மம் மாத்திரமே இருந்தது என்பதையும் நீங்கள் அறிவீர்கள். புதிய உலகில் பாரத தேசம் மாத்திரமே இருந்தது. அங்கு வெகு சில மனிதர்களே இருந்தனர். புதிய உலகமே சுவர்க்கம் எனப்படுகின்றது. புதிய உலகில் புதிய பாரதம் இருந்ததையே இது நிரூபிக்கின்றது. இப்பொழுது பழைய உலகில், பழைய பாரதமே இருக்கின்றது. காந்திஜியும், புதிய உலகில் புதிய பாரதமும், புதிய டெல்கியும் இருக்க வேண்டுமென்று கூறுவது வழக்கம். இப்பொழுது புதிய பாரதமோ, புதுடெல்கியோ இல்லை. புதிய பாரதத்தில் இலக்ஷ்மி, நாராயணனின் இராச்சியம் இருந்தது. இப்பொழுது அதே பாரதத்தில் இராவண இராச்சியம் நிலவுகின்றது. நீங்களும் புதிய உலகம், புதிய டெல்கி என்றே எழுதவேண்டும். இந்தக்காலத்தில் இருந்து இந்தக்காலம் வரை இன்னாரின் இராச்சியம் இருந்தது. புதிய உலகை உருவாக்குபவராலேயே இதனை விளங்கப்படுத்த முடியும். அவர் பிரம்மாவின் மூலம் புதிய உலகமாகிய சுவர்க்கத்தை ஸ்தாபிக்கின்றார். நீங்கள் இங்கே உங்களுடைய ஆஸ்தியாகிய அந்த சுவர்க்கத்தைப் பெற வந்துள்ளீர்கள். தந்தை உங்களுக்கு திறமையான வழிமுறைகளைக் காட்டுகின்றார். அதாவது அவர் உங்களை முயற்சி செய்யத் தூண்டுகிறார். நீங்கள் இங்கே அவரை நேரடியாகவே சந்திக்க வந்துள்ளீர்கள். அத்துடன் நீங்கள் இங்கிருக்கும்போது கற்கின்றீர்கள். உங்களுக்கு அவரை நேரடியாகச் சென்று சந்திக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. அங்கே மனிதர்களே ஏனைய மனிதர்களை நேரடியாக சந்திக்கின்றார்கள். நீங்கள் இங்கே சிவபாபாவைச் சந்திக்க வந்துள்ளதாகக் கூறுகின்றீர்கள். அவர் அசரீரியானவர் என்று நீங்கள் கூறுகின்றீர்கள். ஆத்மாக்களாகிய நாங்களும் அசரீரியானவர்கள். நாங்கள் எங்களுடைய பாகங்களை நடிக்கவே வந்துள்ளோம். ஒரு பெயரைக் கொண்டுள்ள எவருமே நிச்சயமாக ஒரு நடிகர் ஆவார். கடவுளுக்கும் ஒரு பெயருள்ளது. அசரீரியான சிவனே கடவுள் என்று அழைக்கப்படுகின்றார். வேறு எவரும் கடவுள் என்று அழைக்கப்பட முடியாது. அசரீரியான ஒருவரே கடவுளாக நினைவு செய்யப்படுகின்றார். அவர் பூஜிக்கப்படுகின்றார். ஆத்மாக்களும் பூஜிக்கப்படுகின்றார்கள். மக்கள் உருத்திர யாகத்தை உருவாக்கி களிமண்ணினால் சாலிகிராம்களையும் உருவாக்குகின்றார்கள். நீங்கள் அவற்றைக் கல்லினாலோ அல்லது களிமண்ணினாலோ செய்யமுடியும். அவை களிமண்ணினால் செய்யப்படும்போது, அவற்றை உடைத்து, திரும்பவும் செய்வது இலகுவாக இருக்கும். இந்த விடயங்களை உலகம் அறியமாட்டாது. உருத்திரனின் யாகத்தில் அதிகளவு ஆத்மாக்கள் பூஜிக்கப்பட முடியும்! அதிகளவு குழந்தைகளும் இருக்கின்றனர். பக்தர்கள் அனைவரும் கடவுளின் குழந்தைகள். அவர்கள் தந்தையை நினைவு செய்கிறார்கள். சிவபாபா பாரத்தில் மட்டுமே வருகின்றார் என பாபா உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். கடவுளின் உதவியாளர்களான உங்களில் சிலரையே பக்தர்கள் சாலிகிராம்களாகச் செய்து வழிபடுகின்றனர். சிறிய, பெரிய யாகங்கள் உள்ளன. பெரும் செல்வந்தர்கள் பெரிய யாகத்தை உருவாக்குகின்றார்கள். அவர்கள் நூறாயிரக்கணக்கான சாலிகிராம்களை உருவாக்குகின்றார்கள். ஒரு சிறிய யாகம் என்றால், அவர்கள் ஐந்திலிருந்து பத்தாயிரம் சாலிகிராம்களை உருவாக்குவார்கள். வியாபாரி எவ்வாறோ, யாகமும் அதற்கேற்பவே இருக்கும். அவர் அதிகளவு சாலிகிராம்களை உருவாக்குகின்றார். அவர்கள் ஒரு சிவனையும் மீதி சாலிகிராம்களையும் உருவாக்குகின்றார்கள். அப்பொழுது அந்தளவு பிராமணர்களும் தேவைப்படுகின்றார்கள். உங்களில் பலர் யாகங்களைப் பார்த்திருப்பீர்கள். பாபா குழந்தைகளுக்கு சேவை செய்கின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். பின்னர் நாங்கள் மற்றவர்களுக்குச் சேவை செய்கின்றோம். இதனாலேயே நாங்கள் பூஜிக்கப்படுகின்றோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் இப்பொழுது பூஜிக்கத்தக்கவர்களாக ஆகுகின்றீர்கள். ஆத்மா கூறுகின்றார்: பாபா, நீங்கள் என்றென்றும் பூஜிக்கத்தக்கவர். நீங்கள் எங்களையும் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள் ஆக்குகின்றீர்கள். பூஜிக்கத்தக்க ஆத்மாக்களாகிய நீங்கள் சரீரங்களை எடுக்கும்போது, பூஜிக்கத்தக்க தேவர்கள் என்று அழைக்கப்படுவீர்கள். ஆத்மாவே பூஜிக்கத் தக்கவராகவும், பூஜிப்பவராகவும் ஆகுகின்றார். தந்தை ஒரு தடவை மாத்திரமே வருகின்றார். பின்னர் மீண்டும் தந்தை குழந்தைகளுக்குக் கற்பிப்பதில்லை. ஆத்மாவே செவிமடுக்கின்றார். ஆத்மா எவ்வாறு அவரது சரீரத்தின் மூலமாகச் செவிமடுக்கின்றாரோ, அதேபோன்று பரமதந்தை, பரமாத்மா இந்த சரீரத்தை ஆதாரமாக எடுத்து, அவரின் மூலம் செவிமடுக்கின்றார். அவர் இவரின் மூலமாக எங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றார். அவருக்கென்று சொந்தமாக ஒரு சரீரமில்லை. பிரம்மா, விஷ்ணு, சங்கரருக்கு சூட்சும சரீரம் உள்ளது. இங்கே, ஒவ்வோர் ஆத்மாவும் தனது சொந்த சரீரத்தைக் கொண்டுள்ளார். இது சரீர உலகமாகும். சிவபாபா அசரீரியானவர். அவரே ஞானக்கடல், சந்தோஷக்கடல், அத்துடன் அன்புக்கடலும் ஆவார். அவர் வந்து அனைவரையும் தூய்மை அற்றவர்களில் இருந்து, தூய்மை ஆக்குகின்றார். இதில் தூண்டுதல் என்ற கேள்வியில்லை. நான் உங்களைத் தூண்டுதல் மூலம் தூய்மையாக்க முடியுமானால், நான் இங்கே வந்து ஒரு இரதத்தை ஏன் எடுக்க வேண்டும்? அவர்கள் சிவன் கோவிலில் முன்னால் ஒரு நந்தியை வைத்திருக்கின்றார்கள். மனிதர்களின் புத்திகள் முற்றிலும் கல்லாகி விட்டதனால், ஏன் சிவனிற்கு முன்னால் நந்தி வைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் மாட்டுத்தொழுவம் என்ற பெயரைக் கேள்விப்பட்டதால், ஒரு நந்தியை அங்கே வைத்துள்ளார்கள்! யார் நந்தியை ஓட்டியவர்? ஸ்ரீகிருஷ்ணருடைய ஆத்மா சத்தியயுகத்திலேயே இருக்கின்றார். அவருக்கு ஒரு மிருகத்தின் சரீரத்தில் அமரவேண்டிய தேவை என்ன இருக்கின்றது? அவர்கள் எதையுமே புரிந்து கொள்வதில்லை. ஒரு திரௌபதி மாத்திரமே இருக்கவில்லை. அழைக்கின்ற பலர் இருக்கின்றனர். ஸ்ரீகிருஷ்ணர் சேலைகளை வழங்கியதாக அவர்கள் ஒரு நாடகத்தை உருவாக்கி உள்ளார்கள். ஆனால், அவர்கள் அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளவில்லை. நீங்கள் 21 பிறிவிகளுக்கு துகிலுரியப்பட மாட்டீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். இந்நேரத்தில் நடைபெறுகின்ற விடயங்களுக்கு அவர்கள் காட்டியுள்ள நேரகாலத்தைப் பாருங்கள். பக்தி மார்க்கத்தில் பல கதைகள் உள்ளன. இந்தக்கதைகள் அநாதியானவை என்று அவர்கள் கூறுகின்றனர். அவர்கள் மறுபிறவி எடுக்கையில் அவற்றைச் செவிமடுக்கின்றார்கள். அது அநாதியாகவே தொடர்வதாக அவர்கள் கூறுகின்றனர். ஆனால் அது எப்பொழுது ஆரம்பித்தது என்பதை அவர்கள் அறியமாட்டார்கள். இராவண இராச்சியம் எப்போது ஆரம்பமாகியது என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள். இதுபற்றி ஒரு குறிப்பும் இல்லை. நீங்கள் அதிக சேவை செய்கின்றீர்கள்! சூரியன், சந்திரன், நட்சத்திரங்களும் இருக்கின்றன. அவை சத்தியயுகத்திலும் இருந்தன. அத்துடன் இந்நேரத்திலும் இருக்கின்றன. அவை மாறமுடியாது. பாரதத்தை மீண்டும் ஒருமுறை இருளிலிருந்து ஒளிக்கு எடுத்துச் செல்வதற்கு இப்பொழுது நீங்கள் கருவிகளாகி உள்ளீர்கள். பக்தி மார்க்கமே இருள் எனப்படுகின்றது. பூமியின் நட்சத்திரங்கள் என்று நீங்கள் புகழப்படுகின்றீர்கள். நட்சத்திரங்கள் உள்ளமையால் அங்கே சூரியனும் சந்திரனும் இருக்க வேண்டும். இது உங்கள் ஆன்மீக யாத்திரையாகும். நீங்கள் இந்த மரணபூமிக்குத் திரும்பாதவாறு ஒரு யாத்திரை ஸ்தலத்திற்குச் செல்கின்றீர்கள். இது இப்போது மரணபூமி, பின்னர் அமரத்துவ பூமியும் இங்கேயே இருக்கும். மரணபூமி துவாபர யுகத்துடன் ஆரம்பமாகின்றது. நீங்கள் அமரத்துவ பூமிக்குச் செல்வதற்காக, இப்பொழுது உண்மையான அமரத்துவக் கதையைச் செவிமடுக்கின்றீர்கள். ஆத்மாக்களாகிய உங்களது யாத்திரை தனித்துவமானது என்பதை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். நீங்கள் இங்கு அமர்ந்திருந்து யாத்திரை செல்ல முயற்சி செய்கின்றீர்கள். நினைவின் மூலமாகவே, உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். அந்த மக்கள் யாத்திரைகள் செல்லும்போது, அவர்களது பாவங்கள் அழிக்கப்படுவதில்லை. சிலருக்கு மதுபானம் அருந்தும் பழக்கம் தீவிரமாக உள்ளதால், அவர்கள் அவற்றை இரகசியமாகத் தங்களுடன் எடுத்துச் செல்கின்றார்கள். இந்நாட்களில், யாத்திரையில் அழுக்கான நடத்தையுள்ள பலரும் உள்ளனர். அவர்கள் அனைவரும் தூய்மை அற்றவர்கள்! பிராமணப் புரோகிதர் எவ்வாறு தூய்மையற்றவரோ, அவ்வாறே யாத்திரீகர்களும் தூய்மையற்றவர்கள். வழிகாட்டிகள் உங்களை யாத்திரைக்கு அழைத்துச் செல்கின்றார்கள். ஆனால் அவர்கள் தூய்மையானவர்கள் அல்லர். நீங்கள் தூய்மையாக இருக்கின்றீர்கள். நீங்களே உண்மையான பிராமணர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மையாக இருக்கின்றீர்கள். இந்த நினைவு யாத்திரை மூலமே நீங்கள் தூய்மை ஆகின்றீர்கள். நீங்கள் சதோபிரதான் ஆகவேண்டும். பாபா மீண்டும், மீண்டும் இனிமையான குழந்தைகளே என எழுதுகின்றார். இது சிவபாபா ஆத்மாக்களுக்கு எழுதுவதாகும். அவர் கூறுகின்றார்: என்னை நினைவு செய்யுங்கள், நீங்கள் தமோபிரதானில் இருந்து, சதோபிரதானாகி, அந்த சதோபிரதான் உலகின் அதிபதிகள் ஆகுவீர்கள். இந்த ஒரு வழிகாட்டலே பிரதானமானதாகும். இது மிக இலகுவானது! நினைவின் மூலமாகவே உங்களுடைய பாவங்கள் அழிக்கப்படுகின்றன. நீங்கள் நினைவில் நிலைத்திருக்காவிடின், உங்கள் பாவங்கள் அழிக்கப்பட முடியாததுடன், பின்னர் நீங்கள் தண்டனை அனுபவிக்க வேண்டிவரும். பாபா உங்களுக்குக் கூறுகின்றார்: நீங்கள் எங்கே சென்றாலும் ஒரு வருமானத்தை சம்பாதிக்கலாம். நீங்கள் உண்டாலும், நடந்தாலும், சுற்றித் திரிந்தாலும், என்ன செய்தாலும், தந்தையை நினைவு செய்யுங்கள். இது உங்களின் வருமானம். குழந்தைகளாகிய உங்களுக்கு இது இன்னமும் இலகுவானது! இதில் அவதானம் என்ற கேள்வி இல்லை. ஸ்ரீநாத் கோவிலிலே அவர்கள் ஸ்ரீநாத்தின் நினைவில் இருந்து, அவருக்கு பிரசாதம் படைக்கின்றார்கள். அது ஒரு கற்சிலை ஆகும். நீங்கள் யாருக்குப் பிரசாதம் படைக்கின்றீர்கள்? ஒரு சிவபாபாவுக்கு மாத்திரமே இந்த உரிமை உள்ளது. அவரே அனைவருக்கும் சற்கதி அருள்பவரும், தூய்மையாக்குபவரும் ஆவார். தந்தை கூறுகின்றார்: நான் அதை ஏற்றுக் கொள்வதில்லை. நீங்கள் தண்ணீர் கலந்த பாலையே எனக்குப் படைக்கின்றீர்கள். இந்தப் பிரசாதத்தை ஏன் எனக்குப் படைக்கின்றீர்கள்? நான் அசரீரியானவர். நான் எதையுமே அனுபவம் செய்வதில்லை. நீங்கள் ஏன் என்னைப் பூஜிக்கின்றீர்கள்? நீங்கள் எனக்கு முன்னால் பிரசாதத்தை வைக்கின்றீர்கள், ஆனால் பக்தர்கள் எனக்கு பிரசாதம் படைத்து, பின்னர் அவர்களுக்குள்ளே அதைப் பகிர்ந்து உண்கிறார்கள். நீங்கள் நிச்சயமாக சிவபாபாவிற்கு போக் படைக்க வேண்டும் என்பதை அறிவீர்கள். அதன் பின்னர், உங்களுக்குள் அதைப் பகிர்ந்து உண்ணலாம். இது அவருக்கு மதிப்புக் கொடுப்பது போன்றதாகும். இது சிவபாபாவின் பண்டாரா என்பதால், நாங்கள் சிவபாபாவுக்கு போக் படைக்கின்றோம். யாருடைய பண்டாரா இதுவோ, அவருக்கு நீங்கள் நிச்சயமாக போக் படைக்கவேண்டும். நீங்கள் போக் படைக்கின்ற போதும், குழந்தைகளாகிய நீங்களே அதை உண்கின்றீர்கள். இந்த பிரம்மா அதை உண்கின்றார். ஆனால் நான் அதை உண்பதில்லை. ஆயினும், நான் நிச்சயமாக நறுமணத்தை எடுக்கின்றேன். “நீங்கள் மிக நல்ல போக் செய்துள்ளீர்கள்.” இதைக் கூறுவதற்கு எனக்கு அங்கங்கள் உண்டு. இந்த பிரம்மாவால் அதை உண்ண முடியும். ஏனெனில் இந்த சரீரம் அவருடையதாகும். நான் இலகுவாக வந்து அவரினுள் பிரவேசிக்கின்றேன். நான் குழந்தைகளாகிய உங்களைத் தூய்மை அற்றவர்களில் இருந்து, தூய்மையாக்க, அவரது வாயைப் பயன்படுத்துகின்றேன். மக்கள் கௌமுக் (பசுவின் வாய்) பற்றிப் பேசுகின்றார்கள். உண்மையில் அது பசுவே ஆகும். நான் குழந்தைகளாகிய உங்களை இவரின் மூலம் தத்தெடுக்கின்றேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர் தாயும், தந்தையும் ஆவார். ஆயினும், யார் தாய்மாரைப் பார்த்துக் கொள்வார்கள்? எனவே நாடகத் திட்டத்திற்கேற்ப, சரஸ்வதி அதற்குக் கருவி ஆக்கப்பட்டார். குருவாக இருந்த தாயாரின் புகழ்ச்சியும் இருக்க வேண்டும். இவரே முதல் இலக்கக் குருவாக மிகவும் பிரபல்யமானவர். குரு பிரம்மா என்று கூறுவதே சரியானது. தந்தை எவ்வாறோ அவரது குழந்தைகளும் அவ்வாறே. பிராமணர்களாகிய நீங்களும் உண்மையான குருமார்கள் ஆகின்றீர்கள். நீங்கள் அனைவருக்கும் சுவர்க்கத்திற்கான உண்மையான பாதையைக் காட்டுகின்றீர்கள். ஆத்மா வாய் மூலமாக பாதையைக் காட்டுகின்றார்: நீங்கள் மன்மனாபவ, மதியாஜிபவ ஆக இருப்பீர்களாக! தந்தை, தாய், குழந்தைகள் அனைவரும் ஒரே பாதையையே காட்டுகின்றார்கள். நீங்கள் இங்கே நேரடியாக அமர்ந்திருக்கும் போது உங்களால் நினைவில் நிலைத்திருக்க முடிகின்றது. பின்னர் நீங்கள் இங்கிருந்து வீட்டுக்குச் சென்றவுடன் குழந்தைகளாகிய உங்களில் பலர் மறந்து விடுகின்றீர்கள். நீங்கள் இங்கே பேரானந்தத்தை அனுபவம் செய்கின்றீர்கள். ஏனெனில் நீங்கள் பாபாவிடம் வந்துள்ளீர்கள். பாபா கூறுகின்றார்: சுயதரிசனசக்கரதாரி ஆகுங்கள். இந்த வழிமுறையை மற்றவர்களுக்கும் காட்டுங்கள். முக்தி தாமத்தையும், தந்தையையும், ஆஸ்தியையும் நினைவு செய்யுங்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும் ஆன்மீகத்தந்தை ஆன்மீகக்குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. ஒருவருக்கொருவரும், தந்தைக்கும் உண்மையான மதிப்பை வழங்குங்கள். தந்தை அனுபவங்களுக்கு அப்பாற்பட்டவராக உள்ளபோதும், உங்களுக்குப் பராமரிப்பை வழங்குகின்ற பண்டாராவுக்கு உரியவருக்கு, நீங்கள் நிச்சயமாக முதலில் அனைத்தையும் படைக்க வேண்டும்.

2. பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர் ஆகுவதற்கு, கடவுளின் உதவியாளர் ஆகுங்கள். சேவையில் தந்தையின் உதவியாளர் ஆகுங்கள். ஆத்மா, சரீரம் இரண்டும் தூய்மை ஆகின்றபோது, நீங்கள் பூஜிக்கப்படுவீர்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களுக்கும் ஏனைய அனைவருக்கும் நீதி நிறைந்தவராகி, சட்டத்தை உருவாக்குபவரும் புதிய உலகை உருவாக்குபவரும் ஆகுவீர்களாக.

தங்களுக்கு நீதியாக இருப்பவர்களால் மற்றவர்களுக்கும் நீதிநிறைந்தவர்களாக இருக்க முடியும். தாங்களே சட்டத்தை மீறுபவர்களால் மற்றவர்களின் மீது சட்டத்தை நிலைநிறுத்த முடியாது. ஆகவே, உங்களையே சோதித்துப் பாருங்கள்: காலையில் இருந்து இரவுவரை, எனது எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள், தொடர்புகள், மற்றவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குதல் மற்றும் சேவை செய்வதில் எந்த முறையிலாவது நான் சட்டத்தை மீறுகிறேனா? சட்டத்தை உருவாக்குபவர்களால் சட்டத்தை மீற முடியாது. இந்த வேளையில் சட்டத்தை உருவாக்குபவர்கள், அமைதியை உருவாக்குபவர்கள், புதிய உலகை உருவாக்குபவர்கள் ஆகுகிறார்கள்.

சுலோகம்:
செயல்களைச் செய்யும்போது, அந்தச் செயல்களால் எந்த முறையிலும் நல்ல அல்லது தீய சகவாசத்திற்கு உட்படாமல் இருப்பதே கர்மாதீத் ஸ்திதி ஆகும்.

அவ்யக்த சமிக்கை: எரிமலை ஸ்திதியில் இருந்தவண்ணம், சக்திவாய்ந்த நினைவை அனுபவம் செய்யுங்கள்.

எரிமலை நினைவைக் கொண்டிருக்க வேண்டுமாயின், உங்கள் மனம், புத்தி இரண்டுமே சக்திமிக்க பிரேக்கை கொண்டிருக்க வேண்டும். அத்துடன் திசைதிருப்பும் (ஸ்டியர்) சக்தியும் வேண்டும். இவற்றைக் கொண்டிருப்பதனால், உங்கள் புத்தியின் சக்தியும் ஏனைய சக்திகள் எதுவும் வீணாக மாட்டாது. மாறாக சேமிக்கப்படும். இவற்றை எந்தளவிற்கு சேமிக்கிறீர்களோ, அதற்கேற்ப உங்களுடைய பிரித்தறியும் சக்தியும் தீர்மானிக்கின்ற சக்தியும் அதிகரிக்கும். இதற்கு, குறிப்பாக ஏனைய அனைத்து எண்ணங்களின் விரிவாக்கத்தையும் முடியுங்கள். அதாவது ஆயத்தமாகும் சக்தியைக் கிரகியுங்கள்.