30.06.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, இந்த ஞானத்தின் மூலம் உங்களைத் தூய, நறுமணமுள்ள மலர்கள் ஆக்குவதற்கே தந்தை வந்துள்ளார். இந்த ஒன்றுகூடலில் நீங்களும் ஒரு முள்ளாக இருக்கக்கூடாது, நீங்கள் முட்களை அழைத்து வரவும் கூடாது.

கேள்வி:
நினைவு யாத்திரையில் நிலைத்திருப்பதற்கான முயற்சியைச் செய்கின்ற குழந்தைகளின் அறிகுறி என்ன?

பதில்:
நினைவில் நிலைத்து இருப்பதற்கு முயற்சி செய்கின்ற குழந்தைகள் மிகவும் சந்தோஷமாக இருக்கின்றார்கள். தாங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும் என்பதும், அதன்பின்னர் தாங்கள் நறுமணம் வீசும் பூந்தோட்டத்திற்குச் செல்ல வேண்டும் என்பதும் அவர்களின் புத்தியில் நிலைத்துள்ளது. நினைவு யாத்திரையில் நிலைத்திருப்பனால் அவர்கள் நறுமணம் உடையவர்கள் ஆகுவதுடன், ஏனையோரையும் அவ்வாறு ஆக்குகின்றார்கள்.

ஓம் சாந்தி.
பூந்தோட்டத்தின் அதிபதி இங்கே அமர்ந்துள்ளார்; பூந்தோட்டக்காரரும் இங்குள்ளார், மலர்களாகிய நீங்களும் இங்குள்ளீர்கள். இது புதியதொன்றாகும். இதனைப் புதிதாக வருகின்ற ஒருவர் செவிமடுத்தால், நாங்கள் எதனைப் பற்றிப் பேசுகின்றோம் என அதிசயிப்பார். பூந்தோட்டத்தின் அதிபதி, மலர்கள் போன்றன என்றால் என்ன? அவர்கள் இத்தகைய விடயங்களைப் பற்றிச் சமயநூல்களில் என்றுமே கேள்விப்பட்டதில்லை. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது பூந்தோட்டத்தின் அதிபதியையும், படகோட்டியையும் அறிந்துள்ளதுடன், நினைவும் செய்கிறீர்கள். உங்களை அக்கரைக்கு அழைத்துச் செல்வதற்காகவே அவர் இப்பொழுது இங்கே வந்துள்ளார். தந்தை கூறுகின்றார்: நினைவு யாத்திரையில் நிலைத்திருங்கள். நீங்கள் எவ்வளவுக்கு முன்னேறி உள்ளீர்கள் எனவும், எந்தளவிற்கு உங்கள் சதோபிரதான் ஸ்திதியை அடைந்துள்ளீர்கள் எனவும் உங்களைச் சோதித்துப் பாருங்கள். உங்கள் ஸ்திதி எந்தளவிற்கு அதிகமாகச் சதோபிரதானாக உள்ளதோ, அந்தளவிற்கு அதிகமாக நீங்கள் இப்பொழுது வீடு திரும்புகின்றீர்கள் என்ற அறிவும் இருக்கும். நீங்கள் எவ்வளவு முன்னேறி உள்ளீர்கள் என்பது அனைத்தும் நினைவு யாத்திரையிலேயே தங்கியுள்ளது. உங்கள் சந்தோஷமும் தொடர்ந்தும் உயர்ந்திருக்கும். நீங்கள் அதிகளவு முயற்சி செய்தால், பெருமளவு சந்தோஷத்தை அனுபவம் செய்வீர்கள். மாணவர்கள் தங்கள் பரீட்சை நாட்களின் பொழுது, தாங்கள் எத்தனை புள்ளிகளுடன் சித்தி அடையப் போகின்றார்கள் என்பதைப் புரிந்து கொள்கின்றார்கள். இங்கும் அவ்வாறே உள்ளது; இங்கேயும் குழந்தைகளாகிய நீங்கள் ஒவ்வொருவரும் எந்தளவிற்கு நறுமணம் வீசுபவர்களாகி உள்ளீர்கள் என்பதையும், ஏனையோரை எந்தளவிற்கு நறுமணம் உள்ளவர்கள் ஆக்குகின்றீர்கள் என்பதையும் நீங்களாகவே அறிந்து கொள்வீர்கள். இது முட்காடு என்றும், அது பூந்தோட்டம் என்றும் நினைவு கூரப்படுகின்றது. முஸ்லிம்களும் அல்லாவின் தோட்டத்தைப் பற்றிப் பேசுகின்றார்கள். அங்கு ஒரு பூந்தோட்டம் உள்ளது என்றும், எவர் அங்கே சென்றாலும், கடவுளிடம் இருந்து ஒரு மலரைப் பெறுகின்றார் என்றும் அவர்கள் நம்புகின்றார்கள். உங்கள் மனதிலுள்ள ஆசைகளை அவர் நிறைவேற்றுகின்றார். அவர் ஒரு மலரைப் பறித்துக் கொடுக்கின்றார் என்றில்லை. ஆனால், ஒருவருடைய புத்தியில் உள்ளதை அவர் ஒரு காட்சியாகக் காட்டுகின்றார். இங்கே எதுவுமே காட்சியின் அடிப்படையில் அமையவில்லை. பக்தி மார்க்கத்தில் ஒரு காட்சியைக் காண்பதற்காக அவர்கள் தங்கள் கழுத்துக்களையும் வெட்டுவார்கள். மீராவும் ஒரு காட்சியைக் கண்டார், அதனால் அவருக்கு அதிகளவு மரியாதை உள்ளது. அது பக்தி மார்க்கம். பக்தி அரைக்கல்பத்திற்குத் தொடர வேண்டும். அந்தக் காலகட்டத்தில் ஞானம் எதுவுமே இல்லை. வேதங்கள் போன்றவற்றிக்குப் பெரும் மரியாதை உள்ளது. வேதங்களே தங்கள் வாழ்க்கை என அவர்கள் கூறுகின்றார்கள். வேதங்கள், சமயநூல்கள் போன்றவை அனைத்தும் பக்தி மார்க்கத்திற்கு உரியவை என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். பக்தி அதிகளவில் விரிவடைந்துள்ளது. அந்த விருட்சம் மிகவும் பெரியது. இந்த ஞானமே விதையாகும். இப்பொழுது நீங்கள் இந்த ஞானத்தின் மூலம் தூய்மையாகவும் சுத்தமாகவும் ஆகுகின்றீர்கள். நீங்கள் நறுமணம் மிக்கவர்கள் ஆகுகின்றீர்கள். இது உங்கள் பூந்தோட்டம். இங்குள்ள எவரையும் முள் என்று அழைக்க முடியாது, ஏனெனில் இங்குள்ள எவரும் விகாரத்தில் ஈடுபடுவதில்லை. எனவே இந்தப் பூந்தோட்டத்தில் ஒரு முள் கூட இல்லை எனக் கூறப்படும். கலியுகத்திலேயே முட்கள் உள்ளன. இப்பொழுது இது அதிமங்களகரமான சங்கமயுகம். இங்கே எப்படி முட்கள் இருக்க முடியும்? இது இந்திர சபை என்பதால், இங்கே முட்கள் அமர்ந்திருந்தால், அவர்கள் தங்களுக்குத் தாங்களே ஓர் இழப்பை ஏற்படுத்துகின்றார்கள். இங்கே இந்த ஞான தேவதைகள் அமர்ந்துள்ளார்கள். அவர்களே இந்த ஞான நடனமாடும் தேவதைகள். பிரதான தேவதைகளின் பெயர்கள் (இரத்தினங்கள்) குறிப்பிடப்பட்டுள்ளன. அவர்களே நவ இரத்தினங்கள் என நினைவுகூரப்படுகின்றார்கள். எனினும், அவர்கள் யார் என எவருக்குமே தெரியாது. தந்தை கூறுகின்றார்: என்னை நினைவுசெய்யுங்கள்! இப்பொழுது குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் இப்புரிந்துணர்வு உள்ளது. 84 பிறவிகளின் சக்கரமும் உங்கள் புத்தியில் உள்ளது. சமயநூல்களில் அவர்கள் 8.4 மில்லியன் பிறவிகளைக் குறிப்பிட்டுள்ளார்கள். நீங்கள் 84 பிறவிகளை எடுத்துள்ளீர்கள் என்பதை இனிமையிலும் இனிமையான, அன்பிற்கினிய, எப்பொழுதோ தொலைந்து, இப்பொழுது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்குத் தந்தை விளங்கப்படுத்தி உள்ளார். இப்பொழுது தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆகுங்கள். இது மிகவும் இலகுவானது! குழந்தைகளாகிய உங்களுடன் கடவுள் பேசுகின்றார்: சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள்! குழந்தைகளாகிய நீங்கள் நறுமணமுள்ள மலர்களாக வேண்டுமாயின், உங்களை ஆத்மாக்களாகக் கருதி, தந்தையை நினைவு செய்யுங்கள். முட்களாக ஆகாதீர்கள். இங்கே, அனைவரும் மிக இனிய மலர்களே அன்றி, முட்கள் அல்லர். ஆம், மாயையின் புயல்கள் வரும். மாயை மிக விரைவில் உங்களைச் சிக்க வைக்கும் அளவுக்கு மிகவும் வலிமை உடையவள். பின்னர், நீங்கள் செய்தவற்றுக்காக வருந்த வேண்டி வரும். அப்பொழுது நீங்கள் சேமித்துள்ள அனைத்தும் இழக்கப்படும். இது ஒரு பூந்தோட்டம் ஆகும். ஒரு பூந்தோட்டத்தில் மிகச்சிறந்த மலர்கள் இருக்கின்றன. முகலாயப் பூந்தோட்டத்தில் மிகச்சிறந்த மலர்கள் இருப்பது போன்று, இந்தப் பூந்தோட்டத்திலும் சிலர் முதற்தரமான மலர்கள் ஆகுகின்றனர். அவற்றைப் பார்ப்பதற்கு அனைவரும் அங்கே செல்கின்றார்கள். உங்களைப் பார்ப்பதற்கு எவருமே இங்கே வர மாட்டார்கள். உங்கள் முகங்களை எப்படி நீங்கள் முட்களிடம் காட்டுவீர்கள்? கடவுள் அழுக்குத் துணிகளைச் சலவை செய்கின்றார் என நினைவுகூரப்பட்டுள்ளது. பாபா சீக்கிய சமயநூல்கள் போன்றவற்றை மனப்பாடம் செய்வது வழக்கம். அவர் சமயநூல்களையும் தொடர்ச்சியாக உரைப்பார். எட்டு வயதிலிருந்தே, அவர் தலைப்பாகையைத் தனது தலையில் அணிந்தவாறு சீக்கியரின் ஆலயத்தில் (குருத்துவார்) இருப்பார். ஆலயத்தைப் பராமரிக்கின்ற முழுப் பொறுப்பும் அவருக்கு இருந்தது. “அழுக்குத் துணிகளைச் சலவை செய்தல்” என்பதன் அர்த்தத்தை நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கின்றீர்கள். அனைத்துப் புகழும் பாபாவுக்கு மாத்திரமே உரியது. இப்பொழுது தந்தை இங்கே அமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். அவர் மிகச்சிறந்த மலர்களை இங்கே அழைத்து வர வேண்டும் எனக் குழந்தைகளாகிய உங்களிடம் கூறுகின்றார். மிகச்சிறந்த மலர்களை அழைத்து வருபவர்களே, சிறந்த மலர்கள் எனக் கருதப்படுவார்கள். நீங்கள் ஸ்ரீ இலக்ஷ்மி அல்லது நாராயணனாக ஆகுவீர்கள் என நீங்கள் அனைவரும் கூறுகின்றீர்கள். ஆகவே நீங்கள் ரோஜா மலர்கள் என்பதே அதன் அர்த்தமாகும். எனவே தந்தை கூறுகின்றார்: நல்லது, உங்கள் வாயில் ஒரு ரோஜா மலர் இருப்பதாக (அது உண்மை ஆகட்டும்)! ஆகவே இப்பொழுது ஒரு நிலையான ரோஜா மலர் ஆகுவதற்கான முயற்சியைச் செய்யுங்கள். பல குழந்தைகள் உள்ளார்கள்; பல பிரஜைகள் உருவாக்கப்படுகின்றனர். அங்கே அரசர், அரசி, பிரஜைகளும் உள்ளார்கள். சத்தியயுகத்தில் ஆலோசகர்கள் இல்லை. ஏனெனில் அரசர்களே அந்தச் சக்தியைக் கொண்டுள்ளார்கள். அவர்களுக்கு ஓர் ஆலோசகரிடம் இருந்து ஆலோசனை பெற வேண்டும் என்ற தேவை கிடையாது. இல்லாவிட்டால், ஆலோசகர்களே அரசரிலும் பார்க்க உயர்ந்தவர் எனக் கருதப்படுவார்கள். இறைவர்களும், இறைவிகளும் ஆலோசனை பெறத் தேவையில்லை. மக்கள் தூய்மை அற்றவர்கள் ஆகும்பொழுதே, ஆலோசகர்களும் இருக்கின்றார்கள். இது பாரதத்திற்கு மாத்திரமே பொருந்துகின்றது. வேறெந்தத் தேசத்திலும் அரசர்கள் அரசர்களுக்குத் தலை வணங்குவதில்லை. ஞான மார்க்கத்தில் உள்ளவர்கள் வழிபடுவதற்குத் தகுதிவாய்ந்தவர்கள் என்றும், அறியாமைப் பாதையில் உள்ளவர்கள் வழிபடுபவர்கள் என்றும் இங்கு காட்டப்பட்டுள்ளது. அவர்கள் இரட்டைக் கிரீடம் உடையவர்கள், ஆனால் இவர்களோ ஒற்றைக் கிரீடம் உடையவர்கள். பாரதத்தைப் போன்று வேறெந்தத் தேசமும் தூய்மையாக இருக்கவில்லை. அது சுவர்க்கமாகிய, வைகுந்தமாக இருந்தது. நீங்கள் அங்கே செல்வதற்கே கற்கின்றீர்கள். இப்பொழுது நீங்கள் மலர்களாக வேண்டும். பூந்தோட்டத்தின் அதிபதி வந்துவிட்டார். பூந்தோட்டக்காரர்களும் இங்குள்ளனர். பூந்தோட்டக்காரர்களும் வரிசைக்கிரமமானவர்களே. இதுவே முட்கள் எதுவுமே இல்லாத, பூந்தோட்டம் எனக் குழந்தைகளாகிய நீங்களும் புரிந்து கொள்கின்றீர்கள். முட்கள் உங்களுக்குத் துன்பத்தையே விளைவிக்கின்றன. தந்தை எவருக்கும் துன்பம் விளைவிக்க மாட்டார். அவர் துன்பத்தை அகற்றி, சந்தோஷத்தை அருள்பவர். பாபா மிகவும் இனிமையானவர்! குழந்தைகளாகிய நீங்கள் தந்தை மீது அன்பு கொண்டுள்ளீர்கள். தந்தையும் குழந்தைகளாகிய உங்கள் மீது அன்பு கொண்டுள்ளார், இல்லையா? இது ஒரு கல்வி. தந்தை கூறுகின்றார்: நான் உங்களுக்கு நடைமுறையில் கற்பிக்கின்றேன். இவரும் கற்கின்றார். ஏனையோரும் முட்களிலிருந்து மலர்களாக மாறும் வகையில் கற்று, பின்னர் ஏனையோருக்கும் கற்பியுங்கள். குழந்தைகளாகிய நீங்களே இக்கால கட்டத்தில் மகாதானிகள் ஆகியதால், பாரதம் ஒரு மகாதானியாக நினைவு கூரப்படுகின்றது. நீங்கள் அழிவற்ற இந்த ஞான இரத்தினங்களைத் தானம் செய்கின்றீர்கள். ஆத்மாக்களாகிய நீங்களே ரூப்பும், பசந்தும் (இந்த ஞான இரத்தினங்களைப் பொழிகின்ற யோக சொரூபம்) என பாபா விளங்கப்படுத்தி உள்ளார். பாபாவும் ரூப்பும் பசந்தும் ஆவார். அவரிடம் இந்த ஞானம் அனைத்தும் உள்ளது. பரமாத்மாவாகிய பரமதந்தையே, ஞானக்கடல், அவரே அதிகாரியும் ஆவார். ஒரேயொரு தந்தையே ஞானக்கடல் என்பதால், “நீங்கள் கடல்கள் அனைத்தையும் மையாக மாற்றினாலும், ஞானம் முழுவதையும் எழுதிவிட முடியாது” எனக் கூறப்பட்டுள்ளது. “ஒரு விநாடியில் ஜீவன்முக்தி” என்பதும் நினைவுகூரப்பட்டுள்ளது. உங்களிடம் சமயநூல்கள் போன்ற எதுவும் இல்லை. மக்கள் ஒரு பண்டிதரின் பேச்சைக் கேட்பதற்காகச் செல்லும் பொழுது, அவர் கல்வியில் மிகவும் தேர்ச்சி பெற்றவர் என நம்புகின்றார்கள். அவர் வேதங்கள், சமயநூல்கள் அனைத்தையும் கற்று மனப்பாடம் செய்திருப்பார். எனவே, அவர் அந்தச் சம்ஸ்காரங்களைத் தன்னுடனேயே கொண்டு செல்கிறார். பின்னர் அவர் அவற்றை இளம்வயதிலே கற்க ஆரம்பிக்கின்றார். நீங்கள் உங்களுடன் சம்ஸ்காரங்களைக் கொண்டு செல்வதில்லை; நீங்கள், உங்கள் கல்வியின் பெறுபேற்றையே கொண்டு செல்கிறீர்கள். உங்களின் கல்வி முடிவிற்கு வரும்பொழுது, பெறுபேறு அறிவிக்கப்பட்டு, உங்கள் அந்தஸ்தை நீங்கள் பெறுவீர்கள். அங்கு நீங்கள் இந்த ஞானத்தை எவருக்காவது எடுத்துரைப்பதற்கு இந்த ஞானத்தை உங்களுடன் கொண்டு செல்வதில்லை. இங்கே இது உங்கள் கல்வியாகும். நீங்கள் இதன் வெகுமதியைப் புதிய உலகில் பெறுகின்றீர்கள். மாயையும் சக்தியில் குறைந்தவள் அல்ல என்று தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தி உள்ளார். மாயையிடம் உங்களைச் சீரழிந்த நிலைக்குள் கொண்டு செல்லக்கூடிய சக்தி உள்ளதால், அவளை நீங்கள் புகழ மாட்டீர்கள். அவள் துன்பத்தை விளைவிப்பதில் சக்திவாய்ந்தவள், அல்லவா? தந்தை சந்தோஷத்தைக் கொடுப்பதில் சக்தி வாய்ந்தவர். இதனாலேயே அவர் போற்றப்படுகின்றார். இந்த நாடகம் ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்டது. நீங்கள் சந்தோஷத்தை அனுபவம் செய்வதுடன், துன்பத்தையும் அனுபவம் செய்கிறீர்கள். யார் வெற்றியாளர் ஆகுபவர்கள் என்பதையும் யார் தோல்வி அடைகின்றார் என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். தந்தை பாரதத்திற்கே வருகின்றார். அவரின் பிறந்த நாளும் பாரதத்திலேயே கொண்டாடப்படுகின்றது. சிவபாபா எப்பொழுது வந்தார் என்பதோ அல்லது அவர் வந்தபொழுது என்ன செய்தார் என்பதோ எவருக்கும் தெரியாது. அதன் பெயர், சுவடு அனைத்தும் மறைந்து விட்டது. குழந்தையான ஸ்ரீகிருஷ்ணரின் பெயர் புகுத்தப்பட்டது. உண்மையாகவே, அன்பிற்கினிய தந்தையின் புகழ், ஸ்ரீகிருஷ்ணரின் புகழிலிருந்து வேறுபட்டது. அந்த ஒரேயொருவர் அசரீரியானவர். ஆனால், இவரோ சரீரதாரி. ஸ்ரீகிருஷ்ணர் தெய்வீகக் குணங்கள் அனைத்தும் நிறைந்தவர் எனப் புகழப்படுகின்றார். அதேபோன்று நீங்கள் சிவபாபாவைப் புகழ மாட்டீர்கள். தெய்வீகக் குணங்கள் உடையவர்களிடம் குறைபாடுகளும் இருக்கும். இதனாலேயே தந்தையின் புகழ், ஏனைய அனைவரது புகழிலிருந்தும் வேறானது. தந்தை அமரத்துவ ரூபம் என அழைக்கப்படுகின்றார். நாங்களும் அமரத்துவ ரூபங்களே. ஆத்மாக்கள் மரணத்தை அனுபவம் செய்ய முடியாது. இதுவே, அமரத்துவ ஆத்மாவின் சிம்மாசனம். எங்கள் பாபாவே அமரத்துவ ரூபம் ஆவார். சரீரமே மரணிக்கின்றது. அமரத்துவ ரூபத்தை இங்கே வருமாறு வரவழைக்கின்றார்கள். அவர் சத்தியயுகத்தில் வரவழைக்கப்படுவது இல்லை. ஏனெனில், அங்கே சந்தோஷம், சந்தோஷத்தைத் தவிர வேறெதுவும் இல்லை. இதனாலேயே கடவுளை அனைவரும் துன்ப வேளையிலே நினைவு செய்கின்றார்களே அன்றி, சந்தோஷமான நேரத்தில் எவரும் அவரை நினைவு செய்வதில்லை என நினைவுகூரப்பட்டுள்ளது. இராவண இராச்சியத்தில் இப்பொழுது அதிகளவு துன்பம் உள்ளது. தந்தை உங்களைச் சுவர்க்க அதிபதிகள் ஆக்குகின்றார். பின்னர் அரைக்கல்பத்திற்கு எவருமே அழைக்க மாட்டார்கள். ஒரு லௌகீகத் தந்தை தனது குழந்தையை அலங்கரித்து, தனது ஆஸ்தியையும் அவருக்குக் கொடுத்து, ஓய்வுபெறுகின்றார். அவர் அனைத்தையும் தனது குழந்தைகளுக்குக் கொடுத்துக் கூறுகின்றார்: நாங்கள் இப்பொழுது சத்சங்கத்துக்குச் (ஆன்மீக ஒன்றுகூடல்) செல்கின்றோம். எங்களுக்குத் தொடர்ந்தும் ஏதாவது உண்பதற்கு அனுப்பி விடுங்கள். அந்த பாபா இப்படிக் கூறமாட்டார். அந்த ஒரேயொருவர் கூறுகின்றார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, நான் உங்களுக்கு உலக இராச்சியத்தைக் கொடுத்த பின் ஓய்வுபெறுவேன். ‘எனக்கு ஏதாவது உண்பதற்கு அனுப்புங்கள்!’ என நான் கூறமாட்டேன். தங்கள் லௌகீகப் பெற்றோர்களைப் பராமரிப்பது லௌகீகக் குழந்தைகளின் கடமையாகும். அவர்கள் உண்பதற்கு எதையாவது வேறு எங்கிருந்து பெற முடியும்? இந்தத் தந்தை கூறுகின்றார்: நானே தன்னலமற்ற சேவகர். மனிதர்கள் எவருமே தன்னலம் அற்றவர்கள் அல்ல. அவர்கள் பட்டினியால் மரணிக்கின்றார்கள். நான் பட்டினியால் மரணிப்பதில்லை. நான் எதன் பலனையும் அனுபவிப்பதில் இருந்து அப்பாற்பட்டவன். குழந்தைகளாகிய உங்களுக்கு உலக இராச்சியத்தைக் கொடுத்த பின்னர் நான் சென்று ஓய்வெடுக்கின்றேன். எனது பாகம் முடிவுக்கு வருகின்றது. அது பின்னர் மீண்டும் பக்தி மார்க்கத்தில் ஆரம்பிக்கின்றது. இந்த நாடகம் ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்டது. தந்தை இங்கே அமர்ந்திருந்து அதன் இரகசியங்களை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். உண்மையில் உங்கள் பாகங்கள் மிகவும் நீண்டவை. ஆகவே நீங்கள் ஒரு பரிசைப் பெற வேண்டும். நான் ஓய்வெடுக்கும் பொழுது, நீங்கள் பிரம்மாந்தத்தின் அதிபதிகளாகவும், உலகின் அதிபதிகளாகவும் ஆகுகின்றீர்கள். உங்கள் பெயர்கள் மகத்துவம் வாய்ந்தவையாக ஆகுகின்றன. நீங்கள் மாத்திரமே இந்த நாடகத்தின் இரகசியங்களை அறிவீர்கள். நீங்கள் இந்த ஞான மலர்கள். வெளியுலகத்தவர்கள் ஒருவரேனும் இவ்வாறில்லை. இரவுக்கும் பகலுக்குமான வேறுபாடு உள்ளது. அவர்கள் இரவில் உள்ளார்கள். நீங்கள் பகலுக்குச் செல்கின்றீர்கள். இந்த நாட்களில் அவர்கள் மரம் நாட்டும் விழாக்களை நடாத்துகின்றார்கள். இப்பொழுது கடவுள் மனித விருட்சத்தின் மரக்கன்றுகளை நாட்டுகின்றார். தந்தை புரியும் அதிசயங்களைப் பாருங்கள்: அவர் மனிதர்களைத் தேவர்களாக, பிச்சைக்காரர்களை இளவரசர்களாக மாற்றுகின்றார். இப்பொழுது நீங்கள் எல்லையற்ற தந்தையுடன் பேரம் பேசுவதற்காக வந்துள்ளீர்கள். நீங்கள் கூறுகின்றீர்கள்: பாபா என்னைப் பிச்சைக்காரரில் இருந்து ஓர் இளவரசராக மாற்றுங்கள். சிவபாபா கூறுகின்றார்: இவர் மிக நல்ல வாடிக்கையாளர். நீங்களும் அவரைத் துன்பத்தை அகற்றிச் சந்தோஷத்தை அருள்பவர் என்று அழைக்கின்றீர்கள். இதைப் போன்ற தானம் வேறு எதுவும் இல்லை. அவரே சந்தோஷத்தை அருள்பவர். தந்தை கூறுகின்றார்: பக்தி மார்க்கத்திலும் நான் உங்களுக்குச் சந்தோஷத்தைக் கொடுத்தேன். நாடகத்தில் காட்சிகள் போன்றன நிச்சயிக்கப்பட்டுள்ளன. இப்பொழுது தந்தை இங்கே அமர்ந்திருந்து, தான் செய்கின்ற அனைத்தையும் உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் மேலும் முன்னேறுகையில் அவர் தொடர்ந்தும் மேலும் விளங்கப்படுத்துவார். இறுதியில் நீங்கள் உங்கள் கர்மாதீத நிலையை வரிசைக்கிரமமாக அடைவீர்கள். இவை அனைத்தும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டிருந்த பொழுதிலும், முயற்சி செய்வதற்கு நீங்கள் தூண்டப்படுகின்றீர்கள்: தந்தையை நினைவு செய்யுங்கள்! இது உண்மையான மகாபாரத யுத்தமாக இருக்க வேண்டும். அனைவரும் மரணிப்பார்கள். பின்னர் பாரதவாசிகளாகிய நீங்கள் மாத்திரமே இங்கிருந்து உலகை ஆட்சிசெய்வீர்கள். தந்தை இப்பொழுது உங்களுக்குக் கற்பிப்பதற்கு வந்துள்ளார். அவர் மாத்திரமே ஞானக்கடல் ஆவார். இது ஒரு நாடகம். இதில் எந்தக் குழப்பமும் இருக்க முடியாது. மாயை புயல்களை ஏற்படுத்துவாள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: அவற்றுக்குப் பயப்படாதீர்கள். பல தீய எண்ணங்கள் தோன்றும். நீங்கள் தந்தையால் தத்தெடுக்கப்படும் பொழுதே, அவையும் வரும். நீங்கள் தத்தெடுக்கப்படும் வரை மாயை அந்தளவுக்கு உங்களுடன் யுத்தம் செய்வதில்லை. நீங்கள் தத்தெடுக்கப்பட்ட பின்னரே புயல்கள் வருகின்றன. இதனாலேயே, தந்தை கூறுகின்றார்: யார் உங்களைத் தத்தெடுத்துள்ளார் என்பதில் கவனமாக இருங்கள். எவராவது பலவீனமாக இருந்தால், அவர் பிரஜையாகி விடுவார். இராஜ அந்தஸ்தைப் பெறுவது நல்லது. அல்லது, நீங்கள் ஒரு பணிப்பெண்ணாக அல்லது வேலையாளாக ஆகவேண்டும். இப்பொழுது சூரிய வம்ச, சந்திர வம்ச இராச்சியங்கள் ஸ்தாபிக்கப்படுகின்றன. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. ரூப்பும், பசந்தும் ஆகுங்கள். இந்த அழிவற்ற ஞான இரத்தினங்களைத் தானம் செய்து, மகாதானி ஆகுங்கள். உங்களின் இந்தக் கல்வியை ஏனையோருக்கும் கற்பியுங்கள்.

2. எதனையிட்டும் பயமோ அல்லது குழப்பமோ அடையாதீர்கள். உங்களில் கவனம் செலுத்தி, நீங்கள் எவ்வகையான மலர் என உங்களையே கேளுங்கள். உங்களில் எந்தத் துர்நாற்றமும் இல்லையா எனச் சோதனை செய்யுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் சக்தி சொரூபமாகி, திடசங்கற்பத்துடன் பலவீனங்களின் கலியுக மலையை முடிப்பீர்களாக.

மனச்சோர்வு அடைதல், எந்தவொரு சம்ஸ்காரத்தின் அல்லது இக்கட்டான சூழ்நிலையின் ஆதிக்கத்திற்கு உட்படுதல், எந்தவொரு நபர் அல்லது பௌதீகமான சௌகரியத்தினால் கவரப்படுதல் - திடசங்கற்பத்துடன் சகல பலவீனங்கள் என்ற கலியுக மலையை எல்லா வேளைக்குமாக முடித்துவிடுங்கள். அதாவது, அவற்றின் மீது வெற்றி பெற்றவர் ஆகுங்கள். வெற்றி உங்களின் கழுத்து மாலை. இந்த விழிப்புணர்வைக் கொண்டிருந்து, அதனால் சதா சக்தி சொரூபம் ஆகுங்கள். இது உங்களின் அன்பின் பிரதிபலன் ஆகும். எப்படி சாகார் பாபா தனது ஸ்திதியால் ஒரு தூண் ஆகி இதை உங்களுக்குச் செய்து காட்டினாரோ, அப்படியே தந்தையைப் பின்பற்றி, சகல நற்குணங்களினதும் தூண் ஆகுங்கள்.

சுலோகம்:
வசதிகள் சேவைக்காகவே. நீங்கள் ஓய்வையும் சௌகரியத்தையும் விரும்புவர் ஆகுவதற்காக அல்ல.

அவ்யக்த சமிக்கை: ஆத்ம உணர்வு ஸ்திதியில் இருப்பதைப் பயிற்சி செய்யுங்கள், அகநோக்கில் இருங்கள். எங்கேயாவது ஓர் அணுகுண்டு வெடிக்கும்போது, அதன் கதிர்வீச்சு எங்கும் பரவுகிறது. அது ஓர் அணுகுண்டு. இது ஆத்ம உணர்வு குண்டு. அதன் ஆதிக்கம் பல ஆத்மாக்களைக் கவரும். அதனால் வருகின்ற மக்களின் எண்ணிக்கை இலகுவாக அதிகரிக்கும். ஆகவே, ஒன்றுகூடலில் ஆத்ம உணர்வுப் பயிற்சியை அதிகரியுங்கள். விழிப்புணர்வின் சொரூபம் ஆகுங்கள். சூழல் சக்திவாய்ந்தது ஆகிவிடும்.