30.07.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, எதிரியாகிய மாயை உங்கள் முன்னால் நிற்கின்றாள். ஆகவே, உங்களையிட்டு, மிகவும் சிறந்த கவனம் எடுங்கள். முன்னேறிச் செல்கையில், நீங்கள் மாயையில் சிக்கிக் கொண்டால், உங்கள் பாக்கிய இரேகையை நீங்கள் இரத்துச் செய்து விடுவீர்கள்.
கேள்வி:
இராஜயோகிக் குழந்தைகளாகிய உங்களின் பிரதான பணி என்ன?பதில்:
கற்று, பிறருக்கும் கற்பிப்பதே உங்கள் பிரதான பணி. நீங்கள் இறை வழிகாட்டல்களின் கீழ் இருக்கின்றீர்கள். நீங்கள் காட்டிற்குச் செல்லத் தேவையில்லை. வீட்டில் உங்கள் குடும்பங்களுடன் வாழும்பொழுதும், மௌனமாக இருந்து, தந்தையை நினைவுசெய்யுங்கள். அல்பா, பீற்றா எனும் இரு வார்த்தைகளிலேயே உங்கள் முழுக் கல்வியும் அடங்கியுள்ளது.ஓம் சாந்தி.
தந்தையால் பிரம்மா மூலம் கூறவும் முடியும்: குழந்தைகளே, காலை வணக்கம். எவ்வாறாயினும், குழந்தைகளான நீங்கள் பதிலுக்கு வணக்கம் கூற வேண்டும். இங்கு, தந்தைக்கும் குழந்தைகளுக்குமான தொடர்பு உள்ளது. புதியவர்கள் உறுதியானவர்கள் ஆகும்வரையில், தொடர்ந்தும் அவர்கள் ஏதோவொன்றைப் பற்றி வினவுவார்கள். இது ஒரு கல்வி. “கடவுள் பேசுகின்றார்” என்று எழுதப்பட்டுள்ளது. கடவுள் அசரீரியானவர். இந்த பாபாவும் நீங்கள் பிறருக்கு விளங்கப்படுத்தும் பொருட்டு, உங்களுக்கு இதனை உறுதி ஆக்குகின்றார். ஏனெனில் வெளியே மாயையின் விசை உள்ளது. இங்கு, அது அவ்வாறில்லை. ஒரு கல்பத்தின் முன்னர் தங்கள் ஆஸ்தியைக் கோரியவர்கள் இயல்பாகவே வருவார்கள் என்பதைத் தந்தை புரிந்து கொள்கின்றார். இன்ன இன்னார் வெளியேறக்கூடாது அல்லது நீங்கள் குறிப்பிட்ட ஒருவரை வைத்திருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள் என்றில்லை. அவர் சென்றால், அவர் செல்கின்றார். இங்கு இது மரணித்து வாழ்வதற்கான விடயம். தந்தை உங்களைத் தத்தெடுக்கின்றார். ஓர் ஆஸ்தியைக் கொடுப்பதற்கே தத்தெடுத்தல் நிச்சயமாக நடைபெறுகின்றது. ஆஸ்திக்கான தங்கள் பேராசை காரணமாக, குழந்தைகளும் தங்கள் பெற்றோரிடம் வருகின்றார்கள். ஒரு செல்வந்தரின் குழந்தை ஏழை ஒருவரால் என்றாவது தத்தெடுக்கப்படுவாரா? அச்செல்வம், சொத்து போன்ற அனைத்தையும் அவர் நீங்கிச் செல்வது எவ்வாறு சாத்தியமாக முடியும்? செல்வந்தர்களே எவரையேனும் தத்தெடுக்கின்றனர். இப்பொழுது, பாபா எங்களுக்குச் சுவர்க்க இராச்சியத்தைக் கொடுப்பதை நீங்கள் அறிவீர்கள். நாங்கள் ஏன் அவருக்கு உரியவர்கள் ஆகக்கூடாது? அனைத்துக்குமான பேராசை உள்ளது. ஒருவர் எந்தளவிற்குக் கற்கின்றாரோ, அந்தளவிற்குப் பேராசை இருக்கும். உங்களுக்கு எல்லையற்ற ஆஸ்தியைக் கொடுப்பதற்கே தந்தை உங்களைத் தத்தெடுத்து விட்டதை நீங்கள் அறிவீர்கள். தந்தை கூறுகின்றார்: 5000 வருடங்களுக்கு முன்னர் செய்ததைப் போல், நான் மீண்டும் உங்கள் அனைவரையும் தத்தெடுக்கின்றேன். நீங்களும் கூறுகின்றீர்கள்: பாபா. நான் உங்களுக்கு உரியவர். ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னரும், நான் உங்களுக்கு உரியவர் ஆகினேன். நடைமுறை ரீதியில் உங்களில் பல பிரம்மாகுமாரிகளும் பிரம்மாகுமார்களும் இருக்கின்றீர்கள். பிரஜாபிதாவும் பிரபல்யமானவர். நீங்கள் பிராமணர்களில் இருந்து சூத்திரர்கள் ஆகும்வரையில், உங்களால் தேவர்கள் ஆக முடியாது. இச்சக்கரம் தொடர்ந்தும் குழந்தைகளான உங்கள் புத்தியில் சுழல்கின்றது. நாங்கள் சூத்திரர்களாக இருந்தோம், நாங்கள் இப்பொழுது பிராமணர்களாகி விட்டோம், நாங்கள் மீண்டும் தேவர்கள் ஆகுவோம். சத்திய யுகத்தில் நாங்கள் ஆட்சி செய்தோம். ஆகவே, இப்பழைய உலகமானது நிச்சயமாக அழிக்கப்பட உள்ளது. அவர்களுக்கு முழு நம்பிக்கை இல்லாது விட்டால், நீங்கிச் செல்கின்றார்கள். பல பலவீனமானவர்கள் வீழ்கின்றார்கள். இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. எதிரியான, மாயை உங்கள் முன்னால் உள்ளாள். அவள் உங்களைத் தன்னை நோக்கி இழுக்கின்றாள். தந்தை இதனை உங்களில் மீண்டும் மீண்டும் உறுதி ஆக்குகின்றார்: மாயையில் சிக்கிக் கொள்ளாதீர்கள். இல்லாது விட்டால், நீங்கள் உங்களுடைய பாக்கியத்தை அழித்து விடுவீர்கள். தந்தையால் மட்டுமே உங்களை வினவ முடியும்: நாங்கள் முன்னர் சந்தித்துள்ளோமா? வேறு எவரக்கும் இதனை வினவுவதற்கான விவேகம் கூட கிடையாது. தந்தை கூறுகின்றார்: நான் கீதையைக் கூறுவதற்கே மீண்டும் வர வேண்டும். நான் உங்களை இராவணனின் சிறையிலிருந்து விடுவிப்பதற்கும் வர வேண்டும். எல்லையற்ற தந்தை எல்லையற்ற விடயங்களை விளங்கப்படுத்துகின்றார். இது இப்பொழுது இராவண இராச்சியம். இது அரைக் கல்பத்திற்கு முன்னர் ஆரம்பித்த, தூய்மையற்ற இராச்சியம். இராவணன் பத்துத் தலைகளுடன் சித்தரிக்கப்பட்டுள்ளான், விஷ்ணு நான்கு கரங்களுடன் சித்தரிக்கப்பட்டுள்ளார். அவ்வாறு எந்த மனிதரும் இல்லை. அவ்வாறே (நான்கு கரங்கள்) இல்லறப் பாதை குறிக்கப்பட்டுள்ளது. இதுவே இலக்கும், குறிக்கோளும் ஆகும்: விஷ்ணுவின் மூலம் பராமரிப்பு. விஷ்ணுதாமம் கிருஷ்ணரின் தாமம் எனவும் அழைக்கப்படுகின்றது. ஸ்ரீ கிருஷ்ணரை இரு கரங்களுடன் மட்டும் காண்பிக்க முடியும். மனிதர்கள் எதனையும் புரிந்து கொள்வதில்லை. தந்தை ஒவ்வொரு விடயத்தையும் விளங்கப்படுத்துகின்றார். அவை அனைத்தும் பக்தி மார்க்கத்தில் உள்ளது. உங்களிடம் இப்பொழுது இந்த ஞானம் இருக்கின்றது. சாதாரண மனிதனிலிருந்து நாராயணன் போலாகுவதே உங்கள் இலக்கும், குறிக்கோளும் ஆகும். இந்தக் கீதா பாடசாலை நிச்சயமாக ஜீவன்முக்தி அடைவதற்கு உரியது. பிராமணர்கள் நிச்சயமாகத் தேவைப்படுகின்றார்கள். இந்த யாகம் இந்த உருத்திர ஞானத்திற்கு உரியது. உருத்திரர் எனவும் சிவன் அழைக்கப்படுகின்றார். இப்பொழுது, தந்தை வினவுகின்றார்: இந்த ஞான யாகம் கிருஷ்ணருடையதா அல்லது சிவனுக்கு உரியதா? சிவன் பரமாத்மா என்று அழைக்கப்படுகின்றார்; சங்கரர் ஒரு தேவர் என அழைக்கப்படுகின்றார். அவர்கள் சிவனையும் சங்கரரையும் ஒன்று கலந்து விட்டனர். தந்தை இப்பொழுது கூறுகின்றார்: நான் இவரில் பிரவேசித்துள்ளேன். குழந்தைகளான நீங்கள் கூறுகின்றீர்கள்: பாப்தாதா. அவர்கள் கூறுகின்றார்கள்: சிவசங்கரர். ஒரேயொருவரே ஞானக்கடல். இந்த ஞானத்தினால் பிரம்மா விஷ்ணு ஆகுவதை நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். படமும் மிகச்சரியாக உருவாக்கப்பட்டுள்ளது. விஷ்ணு பிரம்மாவின் தொப்புள் கொடியிலிருந்து வெளிப்பட்டார். இதன் அர்த்தத்தை வேறு எவரும் புரிந்து கொள்வதில்லை. பிரம்மா தனது கரத்தில் சில சமயநூல்களுடன் சித்தரிக்கப்பட்டுள்ளார். இப்பொழுது, யார் அமர்ந்திருந்து, சமயநூல்களின் சாராம்சத்தைக் கூறுகின்றார்? தந்தையா அல்லது பிரம்மாவா அதனைக் கூறுகின்றார்? இவரும் இந்த ஞானத்தின் மாஸ்டர் கடல் ஆகுகின்றார். எண்ணற்ற படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன, ஆனால் அவை மிகச்சரியானவை அல்ல, அவை அனைத்தும் பக்தி மார்க்கத்திற்கு உரியவை. எம்மனிதரும் எட்டு அல்லது பத்து கரங்களுடன் இருப்பதில்லை. அது இல்லறப் பாதையை அடையாளப்படுத்துகின்றது. இராவணனின் அர்த்தமும் காட்டப்பட்டுள்ளது. அரைக் கல்பமாக, அது இரவாகிய, இராவண இராச்சியமாக உள்ளது. அரைக் கல்பமாக, அது பகலாகிய, இராம இராச்சியமாக இருக்கின்றது. தந்தை ஒவ்வொரு விடயத்தையும் விளஙகப்படுத்துகின்றார். நீங்கள் அனைவரும் ஒரே தந்தையின் குழந்தைகள். தந்தை பிரம்மாவின் மூலம் விஷ்ணு தாமத்தை ஸ்தாபிக்கின்றார், அவர் உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கின்றார். நிச்சயமாக, சங்கம யுகத்தில் மட்டுமே அவர் இராஜயோகத்தைக் கற்பிப்பார். துவாபர யுகத்திலேயே கீதை உரைக்கப்பட்டது என்று கூறுவது தவறானது. தந்தை சத்தியத்தையே பேசுகின்றார். பலருக்கு பிரம்மாவின் அல்லது ஸ்ரீ கிருஷ்ணரின் காட்சிகள் கிடைக்கின்றன. அவர்கள் பிரம்மாவை வெண்ணிற ஆடையில் காண்கின்றார்கள். சிவபாபா ஒரு புள்ளியாவார். அவர்களுக்கு ஒரு புள்ளியின் காட்சி கிடைத்திருப்பின், அவர்களால் எதனையும் புரிந்துகொள்ள இயலாதிருக்கும். நீங்கள் கூறுகின்றீர்கள்: நான் ஓர் ஆத்மா. இப்பொழுது, யார் அந்த ஆத்மாவைப் பார்த்துள்ளார்? எவரும் இல்லை. அதுவும் ஒரு புள்ளியே. உங்களால் புரிந்துகொள்ள முடிகின்றது, இல்லையா? பக்தி உணர்வுகளுடன் எவரையேனும் எவர் வழிபட்டாலும், அவரின் காட்சியை மட்டுமே அவர்கள் காண்பார்கள். அவர்கள் வேறெந்த ரூபத்தையேனும் காண நேர்ந்தால், குழப்பம் அடைவார்கள். ஒருவர் அனுமனை வழிபட்டால், அவர் அனுமனை மட்டுமே காண்பார். கணேசரை வழிபடுபவர் கணேசரை மட்டுமே காண்பார். தந்தை கூறுகின்றார்: நான் உங்களை மிகுந்த செல்வந்தர்கள் ஆக்கினேன். வைரங்களினாலும், பெறுமதி மிக்க இரத்தினங்களினாலும் ஆன மாளிகைகள் இருந்தன. உங்களிடம் கணக்கிட முடியாத செல்வம் இருந்தது. அவை அனைத்தையும் நீங்கள் எங்கே தொலைத்தீர்கள்? இப்பொழுது நீங்கள் கடனாளியாகி விட்டதால், தானங்களுக்காக இரக்கின்றீர்கள். தந்தையால் இவை அனைத்தையும் உங்களுக்குக் கூறமுடியும். தந்தை இப்பொழுது வந்து விட்டதால், நாங்கள் மீண்டும் உலக அதிபதிகள் ஆகுவதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கின்றீரகள். இந்த அநாதியான நாடகம் ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்டது. ஒவ்வொருவரும் நாடகத்தில் தனது பாகத்தை நடிக்கின்றார். ஒருவர் தனது சரீரத்தை நீக்கி, இன்னுமொன்றை ஏற்றால், அதில் அழுவதற்கு என்ன அவசியம் உள்ளது? சத்திய யுகத்தில், நீங்கள் என்றுமே அழுவதில்லை. நீங்கள் இப்பொழுது பற்றை வெல்கின்றீர்கள். இலக்ஷ்மி, நாராயணன் போன்றோர் பற்றை வென்ற, சுய இராச்சிய அதிபதிகள். அங்கு, பற்று இருப்பதில்லை. தந்தை தொடர்ந்தும் பல்வேறு விடயங்களை விளங்கப்படுத்துகின்றார். தந்தை அசரீரியானவர். அவர் பெயருக்கும், ரூபத்திற்கும் அப்பாற்பட்டவர் என்ற மனிதர்கள் கூறுகின்றார்கள், ஆனால் பெயர், ரூபத்திற்கு அப்பாற்பட்ட எதுவும் இல்லை. “ஓ கடவுளே! ஓ தந்தையாகிய கடவுளே!” என்று அவர்கள் அழைக்கின்றார்கள். எனவே அவருக்கு ஒரு பெயரும், ரூபமும் உள்ளன. ஒரு லிங்கம் பரமாத்மாவாகிய சிவன் என்றும், சிவபாபா என்றும் அழழைக்கப்படுகின்றது. அவர் உண்மையிலேயே பாபா, இல்லையா? பாபாவிற்கு நிச்சயமாகக் குழந்தைகளும் இருப்பார்கள். அசரீரி ஆத்மாக்கள் மட்டுமே அசரீரியானவரை “பாபா” என அழைக்கின்றனர். அவருடைய ஆலயத்திற்கு அவர்கள் செல்லும் பொழுது, அவரை ”சிவபாபா” என்று அழைக்கின்றார்கள். பின்னர், அவர்கள் வீட்டுக்குச் செல்லும்பொழுது, தங்கள் (லௌகீக) தந்தையையும் “பாபா” என அழைக்கின்றார்கள். அவர்கள் ஏன் அவரை சிவபாபா என்று அழைக்கின்றார்கள் என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. தந்தை அல்பா, பீற்றா எனும் இரு வார்த்தைகளில் அதியுயர்ந்த கல்வியைக் கற்பிக்கின்றார். அல்பாவையும், பீற்றாவையும் நினைவு செய்வதனால், இராச்சியம் உங்களுக்கு உரியது ஆகுகின்றது. இது ஒரு மிகப்பெரிய பரீட்சை. மனிதர்கள் ஓர் உயர் பரீட்சையில் சித்தி எய்தும்பொழுது, தங்களின் முன்னைய கல்விகளை நினைவு செய்வதில்லை. அவர்கள் தொடர்ந்தும் கற்கின்றார்கள். இறுதியில் அவர்களின் புத்தியில் சாராம்சம் உள்ளது. இங்கும் இது அவ்வாறே உள்ளது. நீங்கள் தொடர்ந்தும் கற்கின்றீர்கள். இறுதியில் தந்தை கூறுகின்றார்: மன்மனாபவ! பின்னர் உங்கள் சரீர உணர்வு துண்டிக்கப்படுகின்றது. உங்களுக்கு “மன்மனாபவ” எனும் பழக்கம் பதிக்கப்பட்டிருந்தால், பின்னர், இறதியில், நீங்கள் தந்தையையும், ஆஸ்தியையும் நினைவுசெய்வீர்கள். இதுவே பிரதான விடயம். இது மிகவும் இலகுவானது! இந்நாட்களில், ஏனைய கல்விகளில் அவர்கள் எவ்வகையான விடயங்களைக் கற்கின்றார்கள் என்பதை யார் அறிவார்? அரசருக்கு ஏற்பவே, அவர் குறிப்பிடுகின்ற சம்பிரதாயங்களும் உள்ளன. முன்னர் நிறுக்கும் வழக்கம் தொன்களிலும் இராத்தல்களிலும் இருந்தது. இப்பொழுது, எவ்வாறாயினும், அது கிலோ போன்றவற்றில் நிறுக்கப்படுகின்றது. பல வேறுபட்ட மாநிலங்கள் உருவாகி உள்ளன. டெல்லியில் ஒரு ரூபாய் பெறுமதியான ஒன்று பம்பாயில் உங்களுக்கு இரண்டு ரூபாய்கள் பெறுமதி கொண்டதாக இருக்கும். ஏனெனில் அவை வேறு மாநிலங்கள். தங்கள் மாநிலங்கள் பட்டினி இருப்பதை அவர்கள் அனுமதிக்கப் போவதில்லை என்பதை அனைவரும் புரிந்து கொள்கின்றார்கள். அதிகளவு சண்டைகள் போன்றன உள்ளன. அதிகளவு குழப்பம் உள்ளது. பாரதத்தினர் மிகவும் செழிப்பானவர்களாக இருந்தார்கள். பின்னர், 84 பிறவிகளின் சக்கரத்தைச் சுற்றிச் செல்கையில், கடனாளிகளாகி விட்டார்கள். கூறப்பட்டுள்ளது: விலைமதிப்பிட முடியாத வைரம் போன்ற வாழ்வு பெறுமதியற்ற சிப்பிகளுக்காக இழக்கப்பட்டுள்ளது. தந்தை கூறுகின்றார்: ஏன் நீங்கள் உங்களைச் சிப்பிகளுக்காகக் கொல்கின்றீர்கள்? குறைந்தபட்சம் இப்பொழுது தூய்மையாகி, தந்தையிடமிருந்து உங்கள் ஆஸ்தியைக் கோருங்கள். அவர்களும் அழைக்கின்றார்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள், வந்து எங்களைத் தூய்மை ஆக்குங்கள். ஆகவே, நீங்கள் தூய்மையாக இருந்தீர்கள் என்பதையும், இப்பொழுது நீங்கள் தூய்மையாக இல்லை என்பதையும் இது நிரூபிக்கின்றது. இது இப்பொழுது நிச்சயமாகக் கலியுகம் ஆகும். தந்தை கூறுகின்றார்: நான் ஒரு தூய உலகை உருவாக்கினால், இந்தத் தூய்மையற்ற உலகம் நிச்சயமாக அழிக்கப்பட வேண்டும். இதனாலேயே இந்த உருத்திர ஞான யாகத்தினால் ஏற்றப்பட்,ட இந்த மகாபாரத யுத்தம் உள்ளது. இவ்விநாசமும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அனைத்திற்கும் முதலில், பாபா ஒரு காட்சியைக் கண்டார். அவர் அத்தகைய பெரும் இராச்சியத்தை பெறப் போவதால், மிகவும் சந்தோஷம் அடைய ஆரம்பித்தார். பின்னர், அவருக்கு விநாசத்தின் காட்சியும் கொடுக்கப்பட்டிருந்தது. “மன்மனாபவ, மத்தியாஜிபவ”. இவை கீதையிலிருந்து பெறப்பட்ட வார்த்தைகள். கீதையிலுள்ள சில வார்த்தைகள் சரியானவை. தந்தையும் கூறுகின்றார்: நான் உங்களுடன் இந்த ஞானத்தைப் பேசுகின்றேன். பின்னர், அது மறைந்து விடுகின்றது. இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியம் இருந்த பொழுது, வேறெந்தச் சமயங்களும் இருக்கவில்லை என்பதைக் கூட எவரும் அறியார். அந்த நேரத்தில் சனத்தொகை மிகச்சிறியதாகவே இருந்திருக்கும். இப்பொழுது அது (சனத்தொகை) மிகப்பெரிதாக உள்ளது. ஆகவே, இந்த மாற்றம் இடம்பெற வேண்டும். விநாசமும் தேவைப்படுகின்றது. அதற்காகவே மகாபாரத யுத்தம் நடைபெறுகின்றது. கடவுளும் அங்கே இருப்பார். அவர்கள் சிவனின் பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார்கள். சிவபாபா வந்து, என்ன செய்தார்? அதனையும் அவர்கள் அறியார்கள். தந்தை இப்பொழுது விளங்கப்படுத்துகின்றார்: கீதையின் மூலம் ஸ்ரீ கிருஷ்ணரின் ஆத்மா ஓர் இராச்சியத்தைப் பெற்றார். கீதையே உங்களைத் தேவர்கள் ஆக்குகின்ற, தாயும் தந்தையும் ஆகும். ஸ்ரீ கிருஷ்ணர் இந்தக் கீதா ஞானத்தின் மூலம் இராஜயோகத்தைக் கற்றார். அவர்கள் சிவபாபாவின் பெயரிற்குப் பதிலாக, ஸ்ரீகிருஷ்ணரின் பெயரைப் பயன்படுத்தினார்கள். ஆகவே, தந்தை விளங்கப்படுத்துகின்றார்: இதனை உங்களில் உறுதி ஆக்குங்கள். அப்பொழுது உங்களுக்குத் தவறான விடயங்களைக் கூறுவதனால், எவரும் உங்களை விழச் செய்ய மாட்டார்கள். அவர்கள் பல விடயங்களை வினவுகின்றார்கள்: விகாரமின்றி எவ்வாறு உலகம் தொடரும்? இது எவ்வாறு நடைபெறும்? ஆ, ஆனால் நீங்களே கூறுகின்றீர்கள்: அது விகாரமற்ற உலகமாக இருந்தது. நீங்கள் “முற்றிலும் விகாரமற்றது” என்று கூறுகின்றீர்கள், இல்லையா? அப்பொழுது, அது எவ்வாறு விகார உலகமாக இருக்க முடியும்? நீங்கள் எல்லையற்ற தந்தையிடம் இருந்து எல்லையற்ற இராச்சியத்தை பெற இருப்பதை இப்பொழுது அறிவீர்கள். ஆகவே, அத்தகைய தந்தையை நீங்கள் ஏன் நினைவு செய்யக்கூடாது? இது ஒரு தூய்மையற்ற உலகம். பல நூறாயிரக்கணக்கானவர்கள் கும்ப மேளாவிற்குச் செல்கின்றார்கள். பின்னர் அவர்கள் கூறுகின்றார்கள்: அங்கு, ஒரு நதி மறைமுகமாக உள்ளது. இப்பொழுது ஒரு நதி மறைந்திருக்க முடியுமா? இங்கும் கூட, அவர்கள் ஒரு கௌமுக்கை (பசுவின் வாய்) உருவாக்கி உள்ளனர். அவர்கள் கூறுகின்றார்கள்: இங்கு கங்கை பாய்கின்றது. எவ்வாறாயினும், கங்கை கடலிற்குச் செல்லும் வழியில் செல்லுமா அல்லது உங்களிடம் ஒரு மலைக்கு வருமா? பக்தி மார்க்கத்தில் அதிகளவு தடுமாறித் திரிதல் உள்ளது. ஞானம், பக்தி, விருப்பமின்மை உள்ளன. ஒன்று எல்லைக்கு உட்பட்ட விருப்பமின்மையும், மற்றையது எல்லையற்ற விருப்பமின்மையும் ஆகும். சந்நியாசிகள் தங்கள் வீடுகளை நீக்கி விட்டு, காட்டிற்குள் வாழ்வதற்குச் செல்கின்றார்கள். இங்கு அவ்வாறு இல்லை. உங்கள் புத்தியால் நீங்கள் முழு உலகையும் துறந்து விடுகின்றீர்கள். இராஜயோகிக் குழந்தைகளான உங்கள் பிரதான பணி கற்று, பிறருக்கும் கற்பிப்பதாகும். இப்பொழுது, இராஜயோகத்தைக் காட்டில் கற்பிக்க முடியாததைப் போலுள்ளது. இது ஒரு பாடசாலை. இதிலிருந்து கிளைகள் வெளிப்படுகின்றன. குழந்தைகளாகிய நீங்கள் இராஜயோகத்தைக் கற்கின்றீர்கள். சிவபாபாவுடன் கற்கின்ற பிரம்மாகுமார்களும், குமாரிகளும் அனைவருக்கும் கற்பிக்கின்றார்கள். ஒரு சிவபாபாவினால் அமர்ந்திருந்து, அனைவருக்கும் கற்பிக்க முடியாது. ஆகவே, இது பாண்டவ அரசாங்கம். நீங்கள் இறை வழிகாட்டல்களின் கீழ் இருக்கின்றீர்கள். இங்கு, அத்தகைய அமைதியுடன் நீங்கள் அமர்ந்திருக்கின்றீர்கள்; வெளியே அதிகளவு குழப்பங்களும் கொந்தளிப்புக்களும் உள்ளன. தந்தை கூறுகின்றார்: ஐந்து விகாரங்களையும் தானம் செய்தால், அந்தச் சகுனங்கள் சென்று விடும். எனக்கு உரியவர்கள் ஆகுங்கள், நான் உங்கள் விருப்பங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்வேன். நாங்கள் இப்பொழுது சந்தோஷ தாமத்திற்குச் செல்வதைக் குழந்தைகளான நீங்கள் அறிவீர்கள்; துன்ப பூமி எரியூட்டப்பட உள்ளது. சில குழந்தைகள் விநாசத்தின் காட்சிகளையும் கண்டிருந்தார்கள். இப்பொழுது சிறிது காலம் மட்டுமே எஞ்சியுள்ளது. ஆகவே, நீங்கள் நினைவு யாத்திரையில் மும்முரமாகினால், உங்கள் பாவங்கள் அழிக்கப்பட்டு, நீங்கள் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோருவீர்கள். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தையிடம் இருந்து உங்கள் முழு ஆஸ்தியையும் கோருவதற்கு, மரணித்து வாழுங்கள். தத்தெடுக்கப்பட்டவர் ஆகுங்கள். என்றுமே உங்கள் மேன்மையான பாக்கியத்தை அழித்து விடாதீர்கள்.2. தவறான விடயங்களைச் செவிமடுப்பதால், சந்தேகங்களை வளர்த்துக் கொள்ளாதீர்கள். உங்கள் நம்பிக்கை சிறிது கூட அசைவதற்கு அனுமதிக்காதீர்கள். இத்துன்ப பூமி எரியூட்டப்பட உள்ளது. ஆகவே, அதிலிருந்து உங்கள் புத்தியை அகற்றுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் சிறப்பியல்புகள் என்ற ரூபத்தில் சஞ்சீவனி மூலிகையைக் கொடுப்பதால், உணர்வு அற்றவர்களை உணர்வு உடையவர்கள் ஆக்குகின்ற, விசேட ஆத்மா ஆகுவீர்களாக.ஒவ்வோர் ஆத்மாவிற்கும் மேன்மையான விழிப்புணர்வும், சிறப்பியல்புகளும் எனும் சஞ்சீவனி மூலிகையைக் கொடுங்கள், அவர்கள் உணர்வு அற்றவர்களிலிருந்து உணர்வு உள்ளவர்கள் ஆகுவார்கள். அவர்களின் முன்னால் சிறப்பியல்புகளின் வடிவிலான கண்ணாடி ஒன்றினை வைத்திருங்கள். பிறருக்கு நினைவூட்டுவதனால், நீங்கள் ஒரு விசேட ஆத்மா ஆகுவீர்கள். நீங்கள் பிறருக்கு அவர்களின் பலவீனங்களைப் பற்றிக் கூறினால், அவர்கள் அதனை மறைப்பதற்கு முயற்சிப்பார்கள் அல்லது அதனைப் பூசி மறைக்க முயல்வார்கள். ஆனால் நீங்கள் அவர்களுக்கு அவர்களுடைய சிறப்பியல்புகளைக் கூறினால், அவர்கள் இயல்பாகவே தங்கள் சொந்தப் பலவீனங்களை அனுபவம் செய்வார்கள். உணர்வு அற்றவர்களை உணர்வு உள்ளவர்கள் ஆக்குவதற்கு, இந்தச் சஞ்சீவனி மூலிகையைப் பயன்படுத்துங்கள். நீங்களும் பறப்பதுடன், பிறரையும் பறக்குமாறு செய்யுங்கள்.
சுலோகம்:
உங்கள் எண்ணங்களில் கூட பெயர், மரியாதை, கௌரவம், வசதிகளைத் துறப்பதே, மகத்தான துறவறம் ஆகும்.அவ்யக்த சமிக்கை: எண்ணங்களின் சக்தியைச் சேமித்து, மேன்மையான சேவைக்குக் கருவி ஆகுங்கள்.
கருவிகள் ஆகியுள்ள குழந்தைகளான நீங்கள் உங்கள் எண்ணங்களில் விசேட கவனம் செலுத்த வேண்டும். பாவகரமான, வீணான எண்ணங்களில் இருந்து நீங்கள் விடுபட்டிருக்கும் பொழுது, உங்கள் புத்தியால் சிறந்த தீர்மானங்களை எடுக்க இயலுவதுடன், நீங்கள் ஒரு சிறந்த தீர்மானத்தை எடுக்கும்பொழுது, உங்களால் அனைத்தையும் இலகுவாகத் தீர்க்க முடியும். அனைத்தையும் தீர்ப்பதற்குப் பதிலாக, நீங்களே தொடர்ந்தும் சாக்குப்போக்கை உருவாக்கினால், உங்களைப் பின்பற்றுபவர்களும் ஒவ்வொரு சூழ்நிலைக்கும் சாக்குப் போக்குகளைத் தொடர்ந்தும் உருவாக்குவார்கள்.