30.07.26        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, தந்தையைப் போன்று ஆணவமற்ற அல்லது தன்னலமற்ற சேவையாளர் எவருமில்லை. அவர் குழந்தைகளாகிய உங்களுக்கு முழு உலகினதும் இராச்சியத்தைக் கொடுத்த பின்னர், ஓய்வுக்குச் சென்று விடுகின்றார்.

கேள்வி:
குழந்தைகளான நீங்கள், தந்தையின் எந்தச் செய்தியை முழு உலகிற்கும் கொடுக்க வேண்டும்?

பதில்:
அனைவருக்கும் கூறுங்கள்: நீங்கள் துன்பத்தை நீக்கி, சந்தோஷத்தை அருள்பவரின் குழந்தைகள். எனவே, எவருக்கும் ஒருபொழுதும் துன்பம் விளைவிக்காதீர்கள். சந்தோஷத்தை அருள்பவரான, தந்தையை நினைவுசெய்து, அவரைப் பின்பற்றுங்கள், நீங்கள் அரைக்கல்பத்திற்குச் சந்தோஷ உலகிற்குச் செல்வீர்கள். அனைவருக்கும் இந்தச் செய்தியைக் கொடுங்கள். தங்கள் வாழ்வுகளில் இந்தச் செய்தியைக் கிரகிப்பவர்கள், 21 பிறவிகளுக்கு மாயையினால் உணர்வற்றுப் போவதில் இருந்து விடுவிக்கப்படுவார்கள்.

பாடல்:
எங்கள் யாத்திரை தனித்துவமானது.

ஓம் சாந்தி.
இனிமையிலும், இனிமையான, ஆன்மீகக் குழந்தைகளே, நீங்கள் இந்தப் பாடலின் அர்த்தத்தைப் புரிந்து கொள்கின்றீர்கள். அவர் ஆத்மாக்களாகிய எங்களின் தந்தை ஆவார். ஆத்மா என்பதே பிரதான விடயம் ஆகும். நீங்கள் ஆத்மாக்கள் என்பதையும், பரமாத்மா பரமதந்தையின் முன்னால் நேரடியாக அமர்ந்திருக்கின்றீர்கள் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள், பரமாத்மாவின் முன்னால் அமர்ந்திருக்கின்றீர்கள். நீங்கள் உங்களுடைய சொந்தச் சரீரங்களைக் கொண்டிருக்கின்றீர்கள். அந்த ஒரேயொருவர் கடனாக எடுத்துள்ள, ஒரு சரீரத்தையே கொண்டிருக்கிறார். குருமார்கள் மனிதர்களை யாத்திரைகளுக்கு அழைத்துச் செல்கின்றார்கள். பக்தி மார்க்கத்தில் பல குருமார்கள் உள்ளனர். பாரதத்தில், ஒரு பெண் அவளது கணவனைத் தனது கடவுளாகவும், தனது குருவாகவும் கருதுகின்றாள். தந்தை குழந்தைகளாகிய உங்களுடன் பேசுகின்றார்: நீங்கள் குழந்தைகள், இல்லையா? நீங்கள் எல்லையற்ற தந்தையின் குழந்தைகள் என்பதை உணர்கிறீர்களா? நீங்கள் உங்களின் எல்லையற்ற ஆஸ்தியை மீண்டும் ஒருமுறை கோருவதற்கு வந்துள்ளீர்கள். நீங்கள் இப்பொழுது சற்கதி அடைய இருக்கின்றீர்கள். உங்களுக்கு இந்த நம்பிக்கை உள்ளது. முழு உலகமும் சீரழிந்தும், தூய்மையற்றும் உள்ளது. நீங்கள் தூய்மை ஆகுவதற்கே அவரை அழைக்கின்றீர்கள். பாரதத்தில் பல்வேறு குருமார்கள் உள்ளனர். சிலர் நூறு சீடர்களையும், சிலர் ஐநூறு சீடர்களையும் கொண்டிருக்கின்றனர், சிலர் ஐம்பது சீடர்களை மாத்திரம் கொண்டிருக்கின்றனர். இஸ்லாமிய மரபினரின் குருவான அஹாகான் போன்று சிலர் நூறாயிரக்கணக்கான அல்லது மில்லியன் கணக்கான சீடர்களையும் கொண்டுள்ளனர். அவருக்குப் (அஹாகான்) பல சீடர்கள் உள்ளனர், அவர்கள் அனைவரும் அவருக்கு அதிகளவு மதிப்பு கொடுக்கின்றனர்! அவர் என்ன செய்தாலும், அவர்கள் இன்னமும் மதிப்பு கொடுக்கின்றார்கள். பக்தி மார்க்கத்தில் பல குருமார்கள் உள்ளனர், அவர்களும் வரிசைக்கிரமமானவர்கள். சிலர் கோடிக்கணக்கான வருமானத்தைக் கொண்டுள்ளனர். அஹாகானுக்குப் பெருமளவு வருமானம் உள்ளது. அவருடைய சீடர்கள் அவரை வைரங்களுடன் எடைபோட்டு, பின்னர் அவை அனைத்தும் அவருக்குத் தானமாகக் கொடுக்கப்பட்டது. ஒருபக்கத்தில் வைரங்களும், மறுபக்கத்தில் அவர்களுடைய குருவும் இருந்தார். வைரங்கள் பின்னர் தானம் செய்யப்பட்டன. பல வைரங்கள் இருந்திருக்க வேண்டும்! இந்நாட்களில், பலர் தங்கத்திற்குச் சமமாக எடை போடப்படுகின்றனர். அவர்கள் பயன்படுத்தும் மற்றைய உலோகம் பிளாற்றினம் ஆகும்; அது தங்கத்தையும் விட அதிகம் பெறுமதி வாய்ந்தது. அவர்கள் மக்களை அதற்குச் சமமாகவும் எடை போடுகின்றனர். ஒரு குருவினுடைய தராதரம் எவ்வளவு உயர்ந்தது எனப் பாருங்கள்! அவ்வாறான பல குருமார்கள் உள்ளனர். இப்பொழுது, இந்தச் சற்குருவிற்கு நீங்கள் எதனைக் கொடுப்பீர்கள்? நீங்கள் அவரை எடைபோடுவீர்களா? நீங்கள் அவரை வைரங்களிற்;கு ஈடாக எடைபோடுவீர்களா? அவரை எடைபோட முடியுமா? அவர் எந்த எடையும் அற்றவர். சிவன் ஒரு புள்ளியாவர். நீங்கள் எவ்வாறு அவரை எடைபோட முடியும்? உங்களுடைய இந்தக் குரு எவ்வளவு அற்புதமானவர் எனப் பாருங்கள்! அவரே அனைவரிலும் இலேசானவர். அவரே அதி சூட்சுமமானவர். உங்களுக்கு ஒரேயொரு குரு மாத்திரமே இருக்கின்றார். சிவபாபாவே அருள்பவர் என்பதை நீங்கள் அறிவீர்கள். கடவுள் ஒருபொழுதும் எவரிடம் இருந்தும் எதையும் எடுக்க முடியாது. அவரே அருள்பவர். தங்களுடைய அடுத்த பிறவியில் பிரதிபலனைத் தாங்கள் பெறுவோம் என்று நம்பி, கடவுளின் பெயரால் அனைவரும் தானம் செய்கின்றார்கள், அவர்களுக்கு அந்த ஆசை உள்ளது. அவர் எல்லையற்ற தந்தை ஆவார். அவரைப் போன்று தன்னலமற்ற சேவையை எவராலும் செய்ய முடியாது. அவர் செய்கின்ற தன்னலமற்ற சேவையைப் பாருங்கள்! அவர் குழந்தைகளாகிய உங்களைச் சந்தோஷ தாமமான, உலகின் அதிபதிகளாக ஆக்குகின்றார். பாபா தான் உலகின் அதிபதியாக ஆகுவதில்லை. அவரே சந்தோஷக்கடலும் அமைதிக்கடலும் தூய்மைக்கடலும் என்று அழைக்கப்படுகின்றார். குழந்தைகளாகிய உங்களுக்கு அனைத்தும் மிகத்தெளிவாக விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் ஒரேயொரு தந்தையிடம் இருந்து ஜீவன்முக்தியைப் பெறுகின்றீர்கள். நீங்கள் தந்தையிடம் இருந்து சுவர்க்கம் எனும் உங்கள் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். உங்களுக்கு நம்பிக்கை உள்ளது, அவ்வளவுதான். பாபாவையும் உங்களின் ஆஸ்தியையும் நினைவு செய்யுங்கள்! அவரே ஞானக்கடல் என்று அழைக்கப்படுகின்றார். நீங்கள் கடல் முழுவதையும் மையாகவும், காடு முழுவதையும் கடதாசியாகவும் ஆக்கினாலும், இந்த ஞானத்திற்கு முடிவு இருக்க முடியாது. ஆரம்பத்தில் இருந்து நீங்கள் இதை எழுதி இருந்தீர்களாயின், இப்பொழுது உங்களிடம் பல புத்தகங்கள் இருந்திருக்கும். இந்த ஞானம் மிகவும் பெறுமதி வாய்ந்தது, அது கிரகிக்கப்பட வேண்டும். இது அநாதியாகத் தொடர்வதில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் இப்பொழுது அதன் சாராம்சத்தைப் பெறுகின்றீர்கள். தந்தை வந்து, தனது அறிமுகத்தைக் குழந்தைகளாகிய உங்களுக்குக் கொடுக்கின்றார், அது போதுமானது. தந்தையின் அறிமுகத்தைப் பெறுவதன் மூலமும், படைப்பவரை அறிந்து கொள்வதன் மூலமும், படைப்பைப் பற்றிய ஞானத்தையும் நீங்கள் கொண்டுள்ளீர்கள். சத்தியயுகத்திற்குச் செல்பவர்களே அதிகபட்ச மறுபிறவிகள் எடுப்பார்கள் என்று உங்களின் புத்தி கூறுகின்றது. சக்கரத்தின் ஆரம்பத்தில் வந்தவர்களே, மீண்டும் முதலில் வருவார்கள். இந்தச் சக்கரத்தை மிக நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். எங்கள் யாத்திரை தனித்துவமானது என்ற பாடலையும் நீங்கள் கேட்டீர்கள். அந்த மக்கள் பிறவிபிறவியாக தீர்த்தயாத்திரை செல்கின்றார்கள். உங்களுடைய இந்த யாத்திரை ஒரு பிறவிக்கு உரியது. இந்த ஆன்மீக யாத்திரையில் சிறிதளவு சிரமமும் இல்லை. ஒரேயொரு சற்குருவே உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார். ஏனைய குருமார்களிடம் இருந்து எவருமே சற்கதியைப் பெற முடியாது. அவர் பரம ஞானக்கடல் ஆவார். அனைவரும் சற்கதி அடைகின்றனர், எனவே மேலதிகமாக என்ன தேவைப்படுகின்றது? பஞ்சதத்துவங்களும் கூட சதோபிரதான் ஆகுகின்றன. இங்கு, அனைவரும் தமோபிரதானாக உள்ளதால், காற்றும் பஞ்சபூதங்களும் தமோபிரதானாக உள்ளன. பல விதமான பூமியதிர்வுகள் போன்றவையும் ஏற்படுகின்றன. சத்தியயுகத்தில் துன்பம் கொடுக்கின்ற எவையுமே இருக்க மாட்டாது. தந்தையே துன்பத்தை நீக்கி, சந்தோஷத்தை அருள்பவர். நீங்கள் அவரது குழந்தைகள், எனவே நீங்கள் எவருக்கும் துன்பம் கொடுக்கக்கூடாது. சந்தோஷ ஆஸ்தியைப் பெறுவதற்கான இந்தப் பாதையை அனைவருக்கும் காட்டுங்கள். தந்தை கூறுகின்றார்: நீங்கள் இப்பொழுது சந்தோஷத்தையே கொடுக்க வேண்டும். அங்கே அரைக் கல்பத்திற்குத் துன்பத்தின் குறிப்பே இல்லாதளவுக்கு பாபா அவ்வாறான சந்தோஷத்தை உங்களுக்குக் கொடுக்கின்றார். நீங்கள் தந்தையிடம் இருந்து 21 பிறவிகளுக்கு உங்கள் ஆஸ்தியைக் கோருவதற்காக வந்துள்ளீர்கள் என்பதை அறிவீர்கள். நீங்கள் மாணவர்கள். நீங்கள் சிவபாபாவிடம் இருந்து சுவர்க்க சந்தோஷத்தைப் பெறுகின்றீர்கள் என்பது உங்கள் இதயத்தில் உள்ளது. எனவே, உங்களுடைய துன்பங்கள் அனைத்தும் அகற்றப்படும். பாபா நாங்கள் 21 பிறவிகளுக்கு உணர்வற்றவர்கள் ஆகாத வகையில், எங்களுக்குப் புத்துயிர் அளிப்பதற்காக, உயிர் கொடுக்கும் சஞ்சீவி மூலிகையைக் கொடுக்கின்றார். “மன்மனாபவ” என்பதே உயிர் கொடுக்கும் மூலிகையாகும். ஒரேயொரு தந்தை மாத்திரமே அனைவருக்கும் சற்கதியை அருள்பவர். அவர் அசரீரியானவரும், ஆணவமற்றவரும் என்று அழைக்கப்படுகின்றார். அவர் பிரவேசிக்கும் சரீரம் சாதாரணமானது. தந்தை கூறுகின்றார்: அன்பான குழந்தைகளே, நான் உங்களுடைய கீழ்ப்படிவான தந்தை. பிரபல்யமான மக்கள் எப்பொழுதும் ‘நான் உங்களுடைய கீழ்ப்படிவான சேவகன்’ என்றே எழுதுகின்றார்கள். அவர்கள் என்றுமே ஸ்ரீ என்ற பட்டத்தைத் தங்களுக்காக எழுத மாட்டார்கள். இந்நாட்களில் கற்கும் சீடர்கள் “ஸ்ரீ, ஸ்ரீ இன்னார், இன்னார்” என்று எழுதுகின்றார்கள்; அவர்கள் தங்களுக்கே “ஸ்ரீ, ஸ்ரீ” என்று எழுதுகின்றனர். அந்தத் தந்தை அசரீரியானவரும், ஆணவமற்றவரும் ஆவார். நீங்கள் இப்பொழுது அவரின் முன்னால் நேரடியாக அமர்ந்திருக்கின்றீர்கள். அவர் உங்களின் தந்தையும், ஆசிரியரும், சற்குருவும் என்பதை நீங்கள் அறிவீர்கள். மீதி அனைவரும் பக்தி மார்க்கத்தின் எண்ணிக்கையற்ற குருமார்கள் ஆவர். இருப்பினும், குருமார்கள் அனைவருக்கும் குருவானவர் இருக்கின்றார். அவருக்கு எந்தக் குருவுமில்லை. அவரே உண்மையான பாபாவும் உண்மையான ஆசிரியரும் சற்குருவும் ஆவார் (உண்மையான குரு). ஆத்மாக்களே சம்ஸ்காரங்களைக் கிரகிக்கின்றனர் என்பதை நீங்கள் அறிவீர்கள். பாபாவும் ஓர் ஆத்மாவே. அவரிடம் தெய்வீகக் குணங்களும் உள்ளன. உங்களுடைய நற்குணங்கள் அவரிலிருந்து வேறுபட்டவை. இந்நேரத்தில் நீங்கள் கொண்டிருக்கும் நற்குணங்கள் தந்தையினுடைய நற்குணங்கள் ஆகும். பின்னர் சத்தியயுகத்தில் நீங்கள் தெய்வீகக் குணங்களைக் கொண்டிருப்பீர்கள். தந்தையே ஞானக்கடலும், அன்புக்கடலும் ஆவார். ஸ்ரீகிருஷ்ணருடைய புகழ் வேறுபட்டதாகும். சிவபாபா 16 சுவர்க்கக் கலைகள் நிறைந்தவர் எனக் கூறப்படுவதில்லை. அவர் நிலையானவர். தந்தை கூறுகின்றார்: நீங்கள் எனக்கு அந்தப் பட்டத்தைக் கொடுக்க முடியாது. நான் தெய்வீகக் குணங்கள் நிறைந்தவர் ஆகுவதற்கு, நான் விகாரமானவர் ஆகுவதில்லை. நீங்கள் அவரைப் புகழ்வது போன்று, என்னைப் புகழ மாட்டீர்கள். முன்னைய கல்பத்தில் வந்து இந்த ஞானத்தைச் செவிமடுத்தவர்கள், வந்து தந்தையைச் செவிமடுப்பதுடன், அவரை நினைவும் செய்வார்கள். இறுதியில் விரக்திக் கூக்குரல் இருக்கும், பின்னர் வெற்றி முழக்கம் இருக்கும். நீங்கள் இப்பொழுது இந்த யாத்திரையின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்கிறீர்கள். இந்த யாத்திரையில் செல்வதன் மூலம் நீங்கள் மரண உலகிற்குத் திரும்ப மாட்டீர்கள். மற்றைய தீர்த்தயாத்திரைகள் முடிந்த பின்னர் நீங்கள் வீட்டுக்குத் திரும்புகின்றீர்கள். அதிகளவு மக்கள் கங்கையில் நீராடச் செல்கின்றார்கள். பக்தியில் எவ்வளவு விரிவாக்கம் ஏற்பட்டுள்ளது எனப் பாருங்கள்! மரம் எவ்வளவு பெரியதாக வளர்ந்தாலும், அதன் விதை சின்னஞ்சிறியதாக உள்ளதைப் போல், பக்தியில் அதிகளவு விரிவாக்கம் உள்ளது. ஒருமுறை இந்த ஞானத்தில் மூழ்கினாலும் உங்களால் சற்கதியை அடைய முடியும். பக்திமார்க்கத்தில் நீங்கள் கீழிறங்குவதற்கு அரைக்கல்பம் எடுக்கின்றது. இங்கே ஏணியில் ஏறுவதற்கு உங்களுக்கு ஒரு விநாடியே எடுக்கின்றது. இந்த உயர்த்தி மிக நல்லது! இது உங்களை அடிமட்டத்தில் இருந்து நேரே உச்சிக்கு, உங்களுடைய வீட்டுக்குக் கொண்டு செல்கின்றது. மேலேறுகின்ற ஸ்திதி மூலம் அனைவருக்கும் நன்மை உள்ளது என இதனால் அறியப்பட்டுள்ளது. ஒரேயொரு தந்தையே அனைவருக்கும் சற்கதியை அருள்பவர். இந்த ஞானத்திற்கும் பக்திக்கும் இடையிலுள்ள வித்தியாசத்தைப் பாருங்கள். ஞானம், பக்தி, விருப்பமின்மை உள்ளது. சந்நியாசிகளின் விருப்பமின்மை எல்லைக்கு உட்பட்டது. இரண்டு வகையான விருப்பமின்மை உள்ளது எனத் தந்தை விளங்கப்படுத்தி உள்ளார். ஒன்று எவருமே சற்கதி பெற முடியாத, எல்லைக்கு உட்பட்ட விருப்பமின்மையும், மற்றையது நீங்கள் சற்கதி அடைகின்ற எல்லையற்ற விருப்பமின்மையும் ஆகும். நீங்கள் சற்கதி அடைவதற்கும், அனைவரிலும் அதிமேன்மையானவர்கள் ஆகுவதற்குமான ஸ்ரீமத், குழந்தைகளான உங்களுக்கு இப்பொழுது கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீமத்திற்கேற்ப, இப்பொழுது மேன்மையான உலகம் ஸ்தாபிக்கப்படுகின்றது. இராவணனின் கட்டளைகள் பின்பற்றப்பட்டதால், இவ்வுலகம் சீரழிந்ததாகி விட்டது. நீங்கள் மேன்மையானவர்கள் ஆகுகின்றீர்கள் என்பதை, நீங்கள் மாத்திரமே அறிவீர்கள். இந்த உலகம் முற்றாகவே இது பற்றி அறியாது. நீங்கள் விநாசத்தைக் கொண்டு வரப் போகின்றீர்கள் என்று பிரம்மாகுமாரிகளான உங்களையிட்டுக் கூறப்பட்டுள்ளது. விநாசம் உண்மையில் இடம்பெற வேண்டும். இதன் மூலமே நன்மை இருக்கும். உபகாரியான தந்தை வருகின்ற பொழுது, மகா யுத்தம் இடம்பெறுகின்றது. மக்கள் பின்னர் கூறுவார்கள்: பிரம்மாகுமாரிகள் விநாசத்தைக் கொண்டு வருவார்கள் என்று நாங்கள் கூறினோம், இல்லையா? உண்மையில் விநாசம் இடம்பெற்றாக வேண்டும். இந்தப் பழைய உலகம் அழிக்கப்படும். நாங்கள் புதிய உலகை ஸ்தாபிக்கின்றோம். இந்தப் பழைய உலகின் பின்னர் நிச்சயமாகப் புதிய உலகம் இருக்கும். விநாசம் ஒவ்வொரு கல்பத்திலும் இடம்பெறுகின்றது, அப்பொழுதே பாரதத்தில் சுவர்க்க வாயில்கள் திறக்கப்படும். எவ்வாறாயினும், எவ்வாறு அந்த மக்களால் இதைப் புரிந்து கொள்ள முடியும்;? நீங்கள் முன்னேறிச் செல்லும் பொழுது, பலரும் புரிந்துகொள்வார்கள். தந்தை வருகின்ற பொழுது, பழைய உலகம் முழுவதும் அர்ப்பணிக்கப்படுகின்றது. அனைத்தும் அர்ப்பணிக்கப்படுகின்ற, உங்களுடைய இந்த யாகம் அற்புதமானது. நீங்கள் மாத்திரமே இதை அறிவீர்கள், வேறு எவருமே இதனை அறிய மாட்டார்கள். பாண்டவர்களே வெற்றியடைய உள்ளார்கள். அனைவரும் அழிக்கப்பட்டு, பாண்டவர்களாகிய நீங்களே மீதமிருப்பீர்கள், பின்னர் நீங்கள் புதிய உலகை ஆட்சிசெய்வீர்கள். இந்த ஞானம் மிகவும் அற்புதமானது. ஒரேயொரு தந்தையே துன்பத்தை நீக்கி, சந்தோஷத்தை அருள்பவரும், அனைவருக்கும் சற்கதி அருள்பவரும் ஆவார். அவர் இனிமையான, அன்பிற்கினிய தந்தை ஆவார்! நீங்கள் கூறினீர்கள்: இனிமையான பாபா, நீங்கள் வருகின்ற பொழுது, நான் என்னை உங்களுக்கு அர்ப்பணிப்பேன். வேறு எவருமன்றி, நீங்கள் மாத்திரமே என்னுடையவர். இதற்கு நீங்கள் உங்களுடைய இல்லறத்தை நீக்கி, இங்கே வந்து தங்குவதென்று அர்த்தமல்ல, இல்லை! நீங்கள் வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வாழ்ந்து கொண்டு, ஏழு நாள் பாடநெறியை கற்க முடியும். பின்னர் நீங்கள் எங்கு சென்றாலும், “மன்மனாபவ”வாக இருங்கள். தந்தையை நினைவு செய்து, உங்கள் ஆஸ்தியைக் கோரிக் கொள்ளுங்கள். நினைவு யாத்திரையில் நிலைத்திருங்கள். இதன் மூலமாகவே உங்கள் படகு அக்கரையைச் சென்றடையும். நீங்கள் தூய்மையாக இருக்க வேண்டும் எனவும், தூய்மையற்ற உணவை உண்ணக்கூடாது என்பதையும் அறிவீர்கள். நீங்கள் முரளிகளையும் பெறுகின்றீர்கள். ஒரு காலகட்டத்தில் உங்களால் முரளியைப் பெறவும் முடியாதிருக்கும். சிரமங்களும், குழப்பங்களும் இருக்கும். உங்களால் முரளியையும் பெற முடியாதிருக்கும். இந்தக் கண்களால் நீங்கள் பார்ப்பவை எதுவும் இருக்க மாட்டாது. அனைத்தும் அழிக்கப்படும். முழுமையான பிரளயம் என்றுமே இடம்பெறுவதில்லை. ஓர் உலகம் மாத்திரமே உள்ளது, அது புதியதில் இருந்து, பழையதாக மாறுகின்றது. கூறப்பட்டுள்ளது: புதிய உலகமும், பழைய உலகமும். இது பழைய உலகம் என்று இப்பொழுது கூறப்பட்டும். இப்பொழுது சிறிதளவு நேரம் மாத்திரம் எஞ்சியுள்ளது. அந்த மக்கள் சக்கரத்தின் காலஎல்லை நூறாயிரக்கணக்கான ஆண்டுகள் எனக் கூறுகின்றனர். கலியுகம் இன்னமும் 40,000 வருடங்களுக்குத் தொடரவுள்ளது என்று அவர்கள் கூறுகின்றார்கள். உண்மையில் சக்கரம் 5000 வருடங்கள் மாத்திரமே உடையது. உங்கள் புத்தியில் இந்த முழு ஞானமும் உள்ளது. மக்கள் முற்றிலும் கல்லுப் புத்தியைக் கொண்டுள்ளனர். அவர்கள் நாடகத்தின் நடிகர்களாக இருந்த பொழுதிலும், நாடகத்தின் படைப்பவரையோ, இயக்குநரையோ அறியாதுள்ளனர், எனவே அவர்களை என்னவென்று நீங்கள் அழைப்பீர்கள்? எவ்வாறு உலகின் வரலாறும், புவியியலும் மீண்டும் இடம்பெறுகின்றன என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதை மிகத் தெளிவாகப் புரிந்து கொண்டவர்களே, தங்கள் புத்தியில் இதைக் கிரகிப்பதுடன், மற்றவர்களையும் கிரகிக்கத் தூண்டுவார்கள். அவர்கள் அனைத்திலும் அதியுயர்ந்த அந்தஸ்தைக் கோருகிறார்கள். தந்தை கூறுகின்றார்: நான் இப்பொழுது என்னிடமுள்ள ஞானத்தை உங்களுக்குக் கொடுக்கின்றேன். நாடகத் திட்டத்திற்கேற்ப, நான் அதை மறுபடியும் செய்கின்றேன். எனக்கும் நாடகத்தில் ஒரு பாகம் உள்ளது. நான் பக்தி மார்க்கத்திலும் எனது பாகத்தை நடிக்கின்றேன். நான் இப்பொழுது வந்து, எனது சொந்த அறிமுகத்தையும் படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியின் அறிமுகத்தையும் உங்களுக்குக் கொடுக்கின்றேன். நானும் நாடகப் பந்தனத்தில் கட்டுப்பட்டுள்ளேன். நான் எனது அறிமுகத்தை உங்களுக்குக் கொடுப்பதற்கும், படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானத்தைக் கொடுப்பதற்கும் ஒருமுறை மாத்திரமே வருகின்றேன். அச்சா.

இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தையைப் போல் கீழ்ப்படிவானவர் ஆகுங்கள். எந்தச் சூழ்நிலையிலும் அகங்காரம் எதனையும் காட்டாதீர்கள். அசரீரியானவராகவும் ஆணவம் அற்றவராகவும் இருங்கள்.

2. தந்தை, ஆசிரியர், சற்குருவின் மத்தியிலுள்ள வித்தியாசத்தையும் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் புத்தியில் நம்பிக்கையைக் கொண்டிருந்து, ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும். நினைவு யாத்திரையில் நிலைத்திருங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் முயற்சி என்ற வார்த்தையை மிகச்சரியான முறையில் பயன்படுத்தி சதா முன்னேறுகின்ற மேன்மையான முயற்சியாளர் ஆகுவீர்களாக.

சிலவேளைகளில், முயற்சி என்ற வார்த்தை நீங்கள் தோற்கடிக்கப்படும்போது அல்லது சித்தி அடையாமல் விடும்போது மிக நல்லதொரு நியாயப்படுத்தலாக இருக்கும். ஏதாவது தவறு ஏற்படும்போது, நான் இன்னமும் ஒரு முயற்சியாளனே என்று நீங்கள் கூறுகிறீர்கள். எவ்வாறாயினும், மிகச்சரியான முயற்சியாளரால் ஒருபோதும் தோல்வி அடைய முடியாது. ஏனென்றால், முயற்சி என்ற வார்த்தையின் உண்மையான அர்த்தம், உங்களை ஓர் ஆத்மா என்று கருதியவண்ணம் செயல்படுவதே ஆகும். ஆத்ம உணர்வுடன் இருக்கும் முயற்சியாளர்கள், தமது இலட்சியத்தையும் இலக்கையும் சதா தங்களின் முன்னால் வைத்த வண்ணமே தொடர்ந்து செயல்படுவார்கள். அவர்கள் ஒருபோதும் நின்றுவிடுவதில்லை அல்லது தமது தைரியம் அல்லது உற்சாகத்தைக் கைவிடுவதில்லை.

சுலோகம்:
ஒரு மாஸ்ரர் சர்வசக்திவானாக இருக்கும் உணர்வுடன் இருங்கள். இது நீங்கள் ஓர் அதிபதியாக இருப்பதை உணரச் செய்யும்.

அவ்யக்த சமிக்கை: எரிமலை ஸ்திதியில் இருந்தவண்ணம், சக்திவாய்ந்த நினைவை அனுபவம் செய்யுங்கள்.

எந்தவொரு பணியையும் மேற்கொள்கின்ற போதோ அல்லது பேசுகின்ற போதோ, உங்கள் எண்ணங்களின் போக்குவரத்தை அவ்வப்பொழுது நிறுத்துங்கள். உங்கள் மனதின் எண்ணங்களை ஒரு நிமிடத்திற்கு நிறுத்துங்கள். அத்துடன், பௌதீகமாக எதனையும் செய்யும் போதும், ஒரு நிமிடத்திற்கு அதனை நிறுத்தி அந்தப் பயிற்சியைச் செய்யுங்கள். அப்பொழுதே உங்களால் புள்ளி வடிவத்தின் சக்திமிக்க நினைவில் உங்களை நிலை நிறுத்திக் கொள்ள முடியும். அவ்யக்த ஸ்திதியில் ஒரு பணியைச் செய்வது இலகுவாக இருப்பதைப் போன்றே, புள்ளி வடிவ ஸ்திதியும் அவ்வாறு இலகுவாக இருக்க வேண்டும். இதுவே எரிமலை யோக ஸ்திதியாகும்.