31.07.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, அதிகாலையில் விழித்தெழுந்து, மிகுந்த அன்புடன் கூறுங்கள்: பாபா, காலை வணக்கம். இந்த நினைவினூடாகவே நீங்கள் சதோபிரதான் ஆகுவீர்கள்.

கேள்வி:
மிகச்சரியான நினைவினால் தந்தையிடம் இருந்து மின்னோட்டத்தைப் பெறுவதற்கு, உங்களிடம் அவசியம் இருக்க வேண்டிய பிரதானமான நற்குணங்கள் என்ன?

பதில்:
மிகுந்த பொறுமையுடன் உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுவதுடன், புரிந்துணர்வையும் முதிர்ச்சியையும் கொண்டிருந்து, தந்தையை நினைவு செய்யுங்கள். நீங்கள் தந்தையிடம் இருந்து ஒரு மின்னோட்டத்தைப் பெறுவதுடன், ஆத்மா தொடர்ந்தும் சதோபிரதான் ஆகுவார். நீங்கள் முட்களில் இருந்து மலர்களாக மாறித் தொடர்ந்தும் தெய்வீகக் குணங்களை வளர்த்துக் கொள்வீர்கள்.

ஓம் சாந்தி.
தந்தை கூறுகிறார்: இனிய குழந்தைகளே, இது உங்களுக்கும் பொருந்தும். அதாவது, ஆத்மாக்களான நீங்களும் அமைதி சொரூபங்கள் ஆவீர்கள். ஆத்மாக்களான உங்கள் எல்லோருடைய ஆதி தர்மம் அமைதி ஆகும். நீங்கள் அமைதி தாமத்தில் இருந்து இங்கே இந்தப் பேசும் உலகிற்குள் வருகின்றீர்கள். உங்களின் பாகங்களை நடிப்பதற்கு நீங்கள் அந்தப் பௌதீக அங்கங்களைப் பெற்றுள்ளீர்கள். ஆத்மாக்கள் பெரிதாகவோ அல்லது சிறிதாகவோ ஆகுவதில்லை. சரீரங்களே பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ ஆகுகின்றன. தந்தை கூறுகிறார்: நான் ஒரு சரீரதாரி அல்ல. நான் குழந்தைகளான உங்களை நேருக்கு நேர் தனிப்பட்ட முறையில் சந்திப்பதற்காக வரவேண்டும். உதாரணமாக, ஒரு தந்தையால் உருவாக்கப்பட்ட குழந்தைகள், தாம் பரந்தாமத்தில் இருந்து வந்து பிறப்பு எடுத்து, தாயும் தந்தையையும் சந்திப்பதற்காக வந்துள்ளோம் எனச் சொல்ல மாட்டார்கள். புதியதோர் ஆத்மா வேறு ஒருவரின் சரீரத்தில் பிரவேசித்தாலும் அல்லது வயதான ஆத்மா இன்னொருவரின் சரீரத்தில் பிரவேசித்தாலும் அந்த ஆத்மா தாயையும் தந்தையையும் சந்திக்க வந்துள்ளார் எனக் கூற முடியாது. அந்த ஆத்மா இயல்பாகவே ஒரு தாயையும் தந்தையையும் பெறுகிறார். இங்கே, இது புதியதொரு விடயம் ஆகும். தந்தை கூறுகிறார்: நான் பரந்தாமத்தில் இருந்து இங்கே வந்துள்ளேன். இப்போது நான் குழந்தைகளான உங்களின் முன்னால் தனிப்பட்ட முறையில் இருக்கிறேன். குழந்தைகளான உங்களுக்கு நான் இந்த ஞானத்தை மீண்டும் ஒருமுறை வழங்குகிறேன். ஏனென்றால், நான் ஞானம் நிறைந்தவரும் ஞானக்கடலும் ஆவேன். நான் குழந்தைகளான உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்க வந்துள்ளேன். நீங்கள் இப்போது சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் உங்களின் வீட்டுக்குச் செல்லப் போகிறீர்கள். ஆகவே, நீங்கள் நிச்சயமாகத் தூய்மை ஆகவேண்டும். உள்ளார, அதிகளவு சந்தோஷம் இருக்க வேண்டும். ஓஹோ! எல்லையற்ற தந்தை கூறுகிறார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, என்னை நினைவு செய்யுங்கள், நீங்கள் உலகின் சதோபிரதான் அதிபதிகள் ஆகுவீர்கள். தந்தைக்குக் குழந்தைகளான உங்களின் மீது அதிகளவு அன்பு உள்ளது. அவர் உங்களுக்கு ஆசிரியர் என்ற ரூபத்தில் கற்பித்து விட்டுப் பின்னர் வீட்டுக்குத் திரும்பிச் செல்வதில்லை. அவரே தந்தையும், அத்துடன் ஆசிரியரும் ஆவார். அவர் உங்களுக்குக் கற்பிக்கிறார். அத்துடன் நினைவு யாத்திரையையும் உங்களுக்குக் கற்பிக்கிறார். உங்களைத் தூய்மை ஆக்கி, உலகின் அதிபதிகள் ஆக்குகின்ற தந்தையின் மீது அதிகளவு அன்பு இருக்க வேண்டும். நீங்கள் அதிகாலையில் விழித்து எழுந்தவுடனேயே, நீங்கள் எல்லாவற்றுக்கும் முதலில் சிவபாபாவிற்கு “காலை வணக்கம்” எனக் கூற வேண்டும். குழந்தைகளான நீங்கள் உங்களின் இதயங்களைக் கேட்க வேண்டும்: அதிகாலையில் விழித்து எழுந்த பின்னர் எந்தளவிற்கு நான் எல்லையற்ற தந்தையை நினைவு செய்கிறேன்? நீங்கள் அதிகாலையில் விழித்து எழுந்ததும் பாபாவிற்கு காலை வணக்கம் கூறிவிட்டு, இந்த ஞானத்தைக் கடையுங்கள். உங்களின் சந்தோஷப் பாதரசம் உயரும். பிரதானமான விடயம், நினைவே ஆகும். இதனூடாக, நீங்கள் எதிர்காலத்திற்காக மிக முக்கியமான வருமானத்தைச் சம்பாதிக்கிறீர்கள். இந்த வருமானம் கல்பம் கல்பமாக உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் அதிகளவு பொறுமையுடனும் முதிர்ச்சியாகவும் புரிந்துணர்வுடனும் நினைவைக் கொண்டிருக்க வேண்டும். பொதுவான வார்த்தைகளில், நீங்கள் பாபாவை அதிகளவில் நினைப்பதாகச் சொன்னாலும், மிகச்சரியான நினைவைக் கொண்டிருப்பதற்கு முயற்சி தேவை. அதிகளவில் தந்தையை நினைவு செய்பவர்கள், அதிகளவு மின்னோட்டத்தைப் பெறுகிறார்கள். ஏனென்றால், நினைவு, நினைவை ஏற்படுத்தும். இரண்டு விடயங்கள் உள்ளன: யோகமும் இந்த ஞானமும். யோகம் என்ற பாடம் மிகவும் முக்கியமானது. யோகத்தின் மூலமே ஆத்மாக்கள் சதோபிரதான் ஆகுகிறார்கள். நினைவு இல்லாமல் சதோபிரதான் ஆகுவது அசாத்தியம். நீங்கள் மிகுந்த அன்புடன் தந்தையை மிக நன்றாக நினைவு செய்தால், இயல்பாகவே ஒரு மின்னோட்டத்தைப் பெற்று ஆரோக்கியமானவர்கள் ஆகுகிறீர்கள். அந்த மின்னோட்டத்தால் உங்களின் ஆயுட்காலமும் அதிகரிக்கிறது. குழந்தைகளான நீங்கள் பாபாவை நினைவு செய்யும்போது, அவர் உங்களுக்கு ஒரு தேடும் விளக்கை வழங்குகிறார். இனிய குழந்தைகளே, இதை உறுதியாக நினைவு செய்யுங்கள்: சிவபாபா எங்களுக்குக் கற்பிக்கிறார். சிவபாபாவே தூய்மை ஆக்குபவரும் சத்கதியை அருள்பவரும் ஆவார். சத்கதி என்றால், அவர் உங்களுக்குச் சுவர்க்கத்தின் இராச்சியத்தை வழங்குகிறார். பாபா மிகவும் இனிமையானவர். அவர் மிகுந்த அன்புடன் குழந்தைகளான உங்களுக்கு இங்கிருந்து கற்பிக்கிறார். தந்தை தாதாவின் மூலம் எங்களுக்குக் கற்பிக்கிறார். பாபா எங்களுக்கு மிகுந்த அன்பை வழங்குகிறார். அவர் எங்களுக்கு எந்தவிதமான கஷ்டத்தையும் கொடுப்பதில்லை. அவர் கூறுகிறார்: என்னை நினைவு செய்யுங்கள், அத்துடன் சக்கரத்தையும் நினைவு செய்யுங்கள். தந்தையின் நினைவைக் கொண்டிருப்பதன் மூலம் உங்களின் இதயங்கள் குளிர்மை அடையட்டும். ஒரேயொரு தந்தையின் நினைவு, ஆத்மாவிற்குத் தொல்லை கொடுக்க வேண்டும். ஏனென்றால், நீங்கள் அவரிடம் இருந்து மிகப் பெரிய ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களையே சோதித்துப் பார்க்க வேண்டும்: தந்தையிடம் நான் எவ்வளவு அன்பை வைத்திருக்கிறேன்? எந்தளவிற்கு எனக்குள் தெய்வீகக் குணங்களைக் கொண்டிருக்கிறேன்? குழந்தைகளான நீங்கள் இப்போது முட்களில் இருந்து மலர்களாக மாறுகிறீர்கள். எந்தளவிற்கு நீங்கள் யோகத்தில் இருக்கிறீர்களோ, அந்தளவிற்கு நீங்கள் தொடர்ந்து முட்களில் இருந்து மலர்களாக மாறி, சதோபிரதான் ஆகுவீர்கள். பல முட்களை மலர்களாக மாற்றுபவர்கள், உண்மையான நறுமணம் மிக்க மலர்கள் எனப்படுகிறார்கள். அவர்கள் ஒருபோதும் எவரையும் குத்துவதில்லை. கோபம் பெரியதொரு முள் ஆகும். இது பலருக்கும் துன்பம் கொடுக்கிறது. முட்களின் உலகில் இருந்து, குழந்தைகளான நீங்கள் இப்போது கரையில் காலடி எடுத்து வைத்துள்ளீர்கள். நீங்கள் இப்போது சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள். எப்படி ஒரு பூந்தோட்டக்காரர் வெவ்வேறு பூச்சாடிகளில் பூங்கன்றுகளை நடுவதைப் போல், சங்கமயுகத்தின் மலர்களான நீங்களும் வெவ்வேறு சாடிகளில் வைக்கப்பட்டுள்ளீர்கள். மலர்களான நீங்கள் பின்னர் சுவர்க்கத்திற்குச் செல்வீர்கள். கலியுக முட்கள் எரிக்கப்பட்டு விடும். தந்தை கூறுகிறார்: இனிய குழந்தைகளே, எந்தளவிற்கு நீங்கள் பலருக்கும் நன்மை செய்கிறீர்களோ, அந்தளவிற்கு அதிக பலனை நீங்கள் பெறுவீர்கள். நீங்கள் பலருக்குப் பாதையைக் காட்டினால், பலரிடம் இருந்து ஆசீர்வாதங்களைப் பெறுவீர்கள். நீங்கள் உங்களின் மடிகளை ஞான இரத்தினங்களால் நிரப்பி, அவற்றைத் தானம் செய்ய வேண்டும். ஞானக்கடல் உங்களுக்கு இரத்தினங்கள் நிறைந்த தட்டுக்களை வழங்குகிறார். அந்த இரத்தினங்களைத் தானம் செய்பவர்கள், எல்லோராலும் நேசிக்கப்படுகிறார்கள். குழந்தைகளான உங்களுக்குள் அதிகளவு சந்தோஷம் இருக்க வேண்டும். புத்திசாலிக் குழந்தைகள் சொல்வார்கள்: நாங்கள் பாபாவிடம் இருந்து முழுமையான ஆஸ்தியைக் கோருவோம். அவர்கள் முழுமையாகத் தந்தையைப் பற்றிப் பிடித்துக் கொள்கிறார்கள். அவர்களுக்குத் தந்தையிடம் அதிகளவு அன்பு உள்ளது. ஏனென்றால், தமக்கு வாழ்க்கையைக் கொடுத்த தந்தையைத் தாம் கண்டு அடைந்து விட்டோம் என்பதை அவர்கள் அறிவார்கள். நீங்கள் முன்னர் எப்படி இருந்தீர்களோ, அதில் இருந்து முற்றாக மாறத்தக்க வகையில் அவர் இந்த ஞானம் என்ற ஆசீர்வாதத்தை உங்களுக்கு வழங்குகிறார். நீங்கள் கடனாளிகளில் இருந்து கடன்களைத் தீர்க்கக்கூடியவர்கள் ஆகுகிறீர்கள். அவர் இந்த அளவிற்கு உங்களின் பொக்கிஷக் களஞ்சியத்தை நிரப்புகிறார். எந்தளவிற்கு நீங்கள் தந்தையை நினைக்கிறீர்களோ, அந்தளவிற்கு, அன்பு இருப்பதுடன், ஈர்ப்பும் இருக்கும். ஓர் ஊசி சுத்தமாக இருக்கும்போது, அது காந்தத்தால் கவரப்படுகிறது. நீங்கள் தந்தையை நினைப்பதன் மூலம் துரு தொடர்ந்தும் அகற்றப்படும். ஒரேயொரு தந்தையைத் தவிர, வேறு எவரையும் நினைக்காதீர்கள். தந்தை விளங்கப்படுத்துகிறார்: இனிய குழந்தைகளே, கவனயீனமாகி, தவறுகளைச் செய்யாதீர்கள். சுயதரிசனச் சக்கரதாரியாகவும் வெளிச்ச வீடுகளாகவும் ஆகுங்கள். சுயதரிசனச் சக்கரதாரி ஆகுகின்ற மிக நல்ல பயிற்சி உங்களுக்கு இருக்கும்போது, நீங்கள் ஞானக்கடல்கள் ஆகியிருப்பதைப் போன்று இருக்கும். மாணவர்கள் கற்று ஆசிரியர்கள் ஆகுவதைப் போன்று அது இருக்கும். இதுவும் உங்களின் வியாபாரமே. எல்லோரையும் சுயதரிசனச் சக்கரதாரிகள் ஆக்குங்கள். அப்போது மட்டுமே, உங்களால் ஓர் அரசன் அல்லது அரசியாகி உலகை ஆள முடியும். தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, குழந்தைகளான நீங்கள் இல்லாமல் நானும் அமைதியற்றவர் ஆகுகிறேன். அதற்கான நேரம் வரும்போது, நான் அமைதியற்றவர் ஆகுகிறேன். நான் இப்போது போக வேண்டும். குழந்தைகள் அதிகளவில் அழைக்கிறார்கள், அவர்கள் மிகவும் கவலையுடன் இருக்கிறார்கள். பாபாவிற்குக் கருணை உள்ளது. இதனாலேயே, குழந்தைகளான உங்களைத் துன்பங்கள் எல்லாவற்றில் இருந்தும் விடுவிப்பதற்காக நான் வருகிறேன். குழந்தைகளான நீங்கள் இப்போது வீடு திரும்ப வேண்டும். பின்னர், அங்கிருந்து, நீங்களாகவே சந்தோஷ தாமத்திற்குச் செல்வீர்கள். நான் அங்கே உங்களின் சகபாடியாக இருக்க மாட்டேன். ஆத்மாக்களான நீங்கள் உங்களின் சொந்த ஸ்திதிக்கேற்ப திரும்பிச் செல்வீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தையிடம் இருந்து இயல்பாகவே மின்னோட்டத்தைப் பெறுவதற்கு, மிகுந்த அன்புடன் தந்தையை நினைவு செய்யுங்கள். இந்த நினைவு மட்டுமே உங்களை ஆரோக்கியமானவர்கள் ஆக்கும். மின்னோட்டத்தைப் பெறுவதன் மூலம் உங்களின் ஆயுட்காலம் அதிகரிக்கும். நினைவின் மூலம் மட்டுமே நீங்கள் தந்தையிடம் இருந்து தேடும் விளக்கைப் பெறுவீர்கள்.

2. தவறுகள் செய்வதையும் கவனயீனமாக இருப்பதையும் நிறுத்துங்கள். ஒரு சுயதரிசன சக்கரதாரியாகவும் வெளிச்சவீடாகவும் ஆகுங்கள். இதன் மூலம் மட்டுமே நீங்கள் ஞானக்கடலாகவும் ஓர் அரசன் அல்லது அரசியாக, உலகையே ஆள்பவராகவும் ஆகுவீர்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் சதா சந்தோஷப் பொக்கிஷக் களஞ்சியத்தால் நிரம்பியவராகி, சதா எல்லோருக்கும் நல்ல செய்தியை வழங்குவீர்களாக.

சந்தோஷப் பொக்கிஷங்களால் நிரம்பியிருக்கும் ஒரு பொக்கிஷக் களஞ்சியமாக நீங்கள் இருக்கும் ரூபத்தை உங்களின் முன்னால் சதா வைத்திருங்கள். நீங்கள் பெற்றுள்ள எண்ணற்ற, அழியாத பொக்கிஷங்களை உணர்ந்தவராக இருங்கள். இந்தப் பொக்கிஷங்களின் விழிப்புணர்வைப் பேணுவதன் மூலம் நீங்கள் சந்தோஷத்தை அனுபவம் செய்வீர்கள். எங்கே சந்தோஷம் உள்ளதோ, துன்பங்கள் எல்லாமே எல்லா வேளைக்குமாக அகற்றப்படுகின்றது. பொக்கிஷங்களின் விழிப்புணர்வைப் பேணுவதன் மூலம், ஓர் ஆத்மா சக்திசாலியாகி, வீணானவை அனைத்தையும் முடித்து விடுகிறார். நிரம்பி இருக்கும் ஓர் ஆத்மா ஒருபோதும் எந்தவிதமான தளம்பலையும் கொண்டிருக்க மாட்டார். இத்தகையதோர் ஆத்மா சந்தோஷமாக இருப்பதுடன், மற்றவர்களுக்கும் நல்ல செய்திகளையே கொடுப்பார்.

சுலோகம்:
தகுதியானவராகவும் திறமை உள்ளவராகவும் ஆகுவதற்கு, கர்மத்திற்கும் யோகத்திற்கும் இடையில் ஒரு சமநிலையைப் பேணுங்கள்.

அவ்யக்த சமிக்கை: எண்ணங்களின் சக்தியைச் சேமித்து, மேன்மையான சேவைக்குக் கருவி ஆகுங்கள்.

நீங்கள் வார்த்தைகளால் சேவை செய்யும்போது, உங்களின் நேரத்தையும் செல்வத்தையும் பயன்படுத்துகிறீர்கள். உங்களுக்குள் ஏதாவது குழப்பமும் இருக்கும். அத்துடன் நீங்கள் களைப்படைகிறீர்கள். எவ்வாறாயினும், உங்களின் மேன்மையான எண்ணங்களால் சேவை செய்யும்போது, அவை அனைத்தும் பாதுகாக்கப்படும். அதனால், உங்களின் எண்ணங்களின் சக்தியை அதிகரியுங்கள். திடசங்கற்பம் நிறைந்த எண்ணங்களைக் கொண்டிருங்கள். அப்போது வெளிப்படுத்தல் விரைவில் இடம்பெறும்.

நாடகத்தைப் பற்றிய ஆழமான அர்த்தம் நிறைந்த கருத்துக்கள்

(திரான்ஸ் செய்தியாளர்களின் ஊடாகப் பெற்றவை).

1. இந்த எல்லையற்ற திரைப்படத்தில் (நாடகத்தில்), ஒவ்வோர் மனித ஆத்மாவின் நிலைக்கும் ஏற்ப, வாழ்க்கை முழுவதற்குமான ஞானம் முழுவதும், அதாவது, ஒவ்வொரு செயலும் முன்கூட்டியே அமிழ்ந்து உள்ளது. வாழ்க்கை முழுவதற்குமான தகவல் ஒவ்வோர் ஆத்மாவிலும் அமிழ்ந்து இருப்பதனால், அது நேரத்திற்கேற்ப தொடர்ந்தும் வெளிப்படுகிறது. ஒவ்வொருவரிலும் அமிழ்ந்துள்ள தகவல், அதாவது, செயலுக்கு ஏற்ப, ஒவ்வொருவரின் முழுமை ஸ்திதியும் சரியான வேளையில் தொடர்ந்தும் வெளிப்படுகிறது. இதன் மூலமே நீங்கள் ஒவ்வொருவரும் எல்லாவற்றையும் அறிந்தவர்கள் (ஜனிஜனன்ஹார்) ஆகுகிறீர்கள்.

2. இந்த எல்லையற்ற திரைப்படத்தில் ஒவ்வொரு விநாடிக்குரிய செயலும் புதியதாக இருப்பதனால், நீங்கள் இப்போதுதான் இங்கே வந்திருப்பதாக உணர்வீர்கள். ஒவ்வொரு விநாடிக்குரிய செயலும் வேறுபட்டது. சென்ற கல்பத்தின் கணம், மீண்டும் நடக்கிறது. ஆனால், உங்களின் நடைமுறை வாழ்க்கையில் நீங்கள் தொடர்ந்து செயல்படும்போது, அது புதியது போன்று உணரப்படுகிறது. இந்தப் புரிந்துணர்வுடன் தொடர்ந்து முன்னேறுங்கள். எவராலுமே இந்த ஞானம் முழுவதையும் தாம் பெற்று விட்டோம், அதனால் இப்போது தம்மால் போக முடியும் எனச் சொல்ல முடியாது. இல்லை. விநாசம் இடம்பெறும்வரை, ஒவ்வொரு செயலும் இந்த ஞானம் முழுவதும் புதியவையே.

3. எல்லையற்ற நாடகத்தின் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட விதி, நம்பிக்கையுடன் உருவாக்கப்பட்டுள்ளது. சிலர் தமது விதியை அழித்துக் கொள்கிறார்கள். சிலர் தமது விதியை உருவாக்கிக் கொள்கிறார்கள். இவை அனைத்தும் அந்த நபரிலேயே தங்கியுள்ளது. நான் மட்டுமே எனது சொந்த எதிரியும், எனது நண்பனும் ஆவேன். நாங்கள் இப்போது மிகவும் களிப்பூட்டுபவர்களாகவும் இனிமையாகவும் இருந்து, மற்றவர்களையும் அவ்வாறே ஆக்க வேண்டும்.

4. இந்த எல்லையற்ற திரைப்படத்தில், நீங்கள் எதையாவது சகித்துக் கொள்வது என்பது, சென்ற கல்பத்தின் இனிய கனவு போன்றது. ஏனென்றால், உங்களுக்கு எதுவும் நடக்கவில்லை. உங்களுக்குத் தொல்லை கொடுக்கும் எவரும் சொல்வார்கள்: “நான் இவருக்கு அதிகளவில் தொல்லை கொடுக்க முயற்சி செய்தேன். நான் அவருக்கு அதிக துன்பம் கொடுத்தேன். ஆனால் அப்படி இருந்தும் அவர் தனது தெய்வீக ஒற்றுமை, பரம ஒற்றுமையுடன் இருந்ததுடன், வெற்றியாளர் பாண்டவராகவும் இருந்தார்”. நிச்சயிக்கப்பட்ட விதியை யாராலும் தடுக்க முடியாது.

5. இந்த எல்லையற்ற திரைப்படத்தின் அற்புதத்தைப் பாருங்கள். பாண்டவர்களான நீங்கள் இங்கே நடைமுறை வடிவில் இருக்கிறீர்கள். அத்துடன் உங்களின் பழைய ரூபங்களும் அடையாளங்களும் இன்றும் உள்ளன. பழைய பத்திரிகைகள், பழைய புராணங்கள், கீதை போன்றவை மிகக்கவனமாக வைக்கப்படுகின்றன. அவற்றுக்கு மிகுந்த மரியாதை உள்ளது. இத்தகைய பழைய விடயங்கள் எல்லா வேளையும் இருக்கின்றன. ஆனால், இப்போதும், புதிய கண்டுபிடிப்புக்கள் செய்யப்படுகின்றன. பழைய கீதை நடைமுறை வடிவில் இருந்தாலும் புதிய கீதை எழுதப்பட்டது (கண்டுபிடிக்கப்பட்டது). புதியது உருவாக்கப்படும்போது, பழையது முடிவிற்கு வருகிறது. உங்களின் வாழ்க்கையில் நடைமுறையில் இந்த ஞானத்தைக் கிரகிப்பதன் மூலம் நீங்கள் இப்போது துர்க்கை, காளி போன்றவர்கள் ஆகியுள்ளீர்கள். பழைய உயிரற்ற சித்திரங்கள் இப்போது அழிக்கப்படும். புதிய, உயிர்வாழும் ரூபங்கள் ஸ்தாபிக்கப்படும்.

6. இந்த எல்லையற்ற திரைப்படத்திற்கு ஏற்ப, சங்கமயுகம் என்ற இனிய வேளையில், விசேடமாக நேசிக்கப்படும் தேவ குழந்தைகளான நீங்கள் மட்டுமே விகாரங்களை வெற்றி கொண்டு, வைகுந்தம் என்ற இனிய அதிர்ஷ்ட இலாபத்தைப் பெறுகிறீர்கள். உங்களின் நெற்றிகள் எத்தனை அதிர்ஷ்டமானவை. இந்த வேளையில், ஆண்களும் பெண்களுமான நீங்கள், இந்த அழியாத ஞானத்தால் உங்களின் பூஜிக்கத்தகுதி வாய்ந்த தேவ அந்தஸ்தைப் பெறுகிறீர்கள். இதுவே, இந்த அற்புதமான பொன்னான வேளையான, சங்கமயுகத்தின் அற்புதமான நடைமுறை ஆகும்.

7. கடவுள் பற்றற்ற பார்வையாளராகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்: நான் பல இரத்தினங்களாலும் அணிகலன்களாலும் அலங்கரித்து, அவர்களின் நடனத்தை ஆடும்படி இந்த உலக மேடைக்குக் கீழே அனுப்பி வைத்தேன் - இப்போது அவர்கள் எப்படி நடக்கிறார்கள் எனப் பாருங்கள். எனது தெய்வீகக் குழந்தைகளுக்கு நான் தங்க, வெள்ளி நாணயங்களை வழங்கி அவர்களுக்குக் கூறினேன்: இந்த இரத்தினங்களையும் அணிகலன்களையும் அணிந்து கொள்ளுங்கள், சந்தோஷமாக இருந்து, பற்றற்ற பார்வையாளர்களாகச் செயல்படுங்கள். இந்த நாடகத்தையும் பற்றற்ற பார்வையாளர்களாக அவதானியுங்கள். அதில் அகப்பட்டுக் கொள்ளாதீர்கள். எவ்வாறாயினும், நீங்கள் அரைக்கல்பத்திற்கு இராச்சிய பாக்கியத்தை அனுபவம் செய்கிறீர்கள். பின்னர் அரைக்கல்பத்திற்கு நீங்களே உருவாக்கிய மாயையிடம் நீங்கள் அகப்பட்டுக் கொள்கிறீர்கள். நான் மீண்டும் ஒருமுறை இந்த மாயையைக் கைவிடுங்கள் என உங்களுக்குக் கூறுகிறேன். இந்த ஞானப் பாதையில், சகல விகாரமான செயல்களில் இருந்தும் விலகி, விகாரமற்றவர் ஆகுவதன் மூலம், நீங்கள் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை துன்பத்தில் இருந்து விடுவிக்கப்படுவதுடன் பிறவிபிறவியாக சந்தோஷத்தையும், அமைதியையும் பெறுவீர்கள்.

8. உங்களை விட உயர்ந்த ஸ்திதியில் உள்ள எவரிடம் இருந்தும் நீங்கள் அறிவுரை பெறும்போது, சகல இரகசியங்களையும் அறிந்திருந்த வண்ணம் அதை ஏற்றுக் கொள்வதில் நன்மை உள்ளது. அதற்குள் அடங்கியுள்ள இரகசியத்தை அறிந்து கொள்ளுங்கள். அதில் நிச்சயமாக ஏதாவது நன்மை இருக்கின்றது. இவரிடம் இருந்து நான் பெற்றுள்ள கருத்து முற்றிலும் சரியானது. நீங்கள் அதை மிகுந்த சந்தோஷத்துடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏனென்றால், ஏதொவொரு கட்டத்தில் நான் தவறு செய்திருந்தால், அந்தக் கட்டத்தை நினைக்கும்போது நான் என்னைத் திருத்திக் கொள்ள முடியும். இதனாலேயே, ஏதாவது எச்சரிக்கை வழங்கப்படும் போதெல்லாம், அதை எல்லையற்ற புத்தியுடன் ஏற்றுக் கொள்வதன் மூலம் உங்களால் முன்னேற முடியும்.

9. நீங்கள் இப்போது தினமும் அகநோக்கில் இருந்து, யோகத்தில் இருக்க வேண்டும். ஏனென்றால், அகநோக்கில் இருப்பதன் மூலம், உங்களால் உங்களையே பார்த்துக் கொள்ள முடியும். நீங்கள் உங்களைப் பார்ப்பது மட்டுமன்றி, உங்களால் உங்களை மாற்றிக் கொள்ளவும் முடியும். இதுவே அதியுயர்ந்த ஸ்திதி ஆகும். ஒவ்வொருவரும் அவரின் ஸ்திதிக்கேற்ப ஒரு முயற்சியாளராக இருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியும் என்பதனால், எவரையிட்டும் எந்தவிதமான விவாதமும் இருக்க முடியாது. ஏனென்றால், ஒவ்வொருவரும் அவரின் ஸ்திதிக்கேற்ப ஒரு முயற்சியாளரே ஆவார். ஒவ்வொருவரின் ஸ்திதியையும் பார்த்து, அவர்களிடம் இருந்து நற்குணங்களை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களால் அவர்களிடம் இருந்து நற்குணங்களை எடுக்க முடியாவிட்டால், அவர்களை விட்டுவிடுங்கள்.

10. சதா உங்களின் அதியுயர்ந்த இலட்சியத்தை உங்களின் முன்னால் பாருங்கள். அத்துடன் உங்களையும் பாருங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முயற்சியாளரே. உங்களின் மீது கவனம் செலுத்தி, தொடர்ந்தும் முன்னால் ஓடுங்கள். மற்றவர்கள் எதைச் செய்தாலும், நான் எனது ரூபத்தில் ஸ்திரமாக இருக்க வேண்டும். நான் மற்றவர்களைப் பார்க்கக்கூடாது. எனது புத்தியின் யோக சக்தியால் நான் அவர்களின் ஸ்திதியை வேறுபிரித்தறிய வேண்டும். அகநோக்கு ஸ்திதியால் மட்டுமே உங்களால் பல பரீட்சைகளில் சித்தி அடைய முடியும். அச்சா.