01.05.26        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் இராவணனது வழிகாட்டல்களைப் பின்பற்றி, தந்தையை அவதூறு செய்தபொழுது, பாரதம் சிப்பியைப் போல் பெறுமதி அற்றதாகியது. இப்பொழுது தந்தையை இனங்கண்டு அவரை நினைவு செய்தால், நீங்கள் செல்வந்தர்கள் ஆகுவீர்கள்.

கேள்வி:
ஏணிப் படத்தில் மறைந்துள்ள அற்புதமான இரகசியம் என்ன?

பதில்:
அரைக் கல்பத்திற்குப் பக்தி நடனமும், அரைக் கல்பத்திற்கு இந்த ஞான நடனமும் உள்ளன என்பதாகும். பக்தி நடனம் இடம்பெறும் பொழுது, இந்த ஞான நடனம் இருப்பதில்லை, இந்த ஞான நடனம் இடம்பெறும் பொழுது, பக்தி நடனம் இருப்பதில்லை. இராவணனது வெகுமதி அரைக் கல்பத்திற்குத் தொடர்கிறது, குழந்தைகளாகிய நீங்களும் உங்களது வெகுமதியை அரைக் கல்பத்திற்கு அனுபவம் செய்கிறீர்கள். ஏணிப் படத்தில் இந்த ஆழமான இரகசியம் மறைந்துள்ளது.

பாடல்:
ஓம் நமசிவாய.

ஓம் சாந்தி.
பக்தி மார்க்கத்தில் நீங்கள் பெருமளவு பக்தி நடனங்களைப் புரிந்தீர்கள் எனத் தந்தை இங்கே அமர்ந்திருந்து விளங்கப்படுத்துகிறார். நீங்கள் இந்த ஞான நடனத்தைப் புரியவில்லை. பக்தி நடனம் இடம்பெறும் பொழுது, இந்த ஞான நடனம் இருப்பதில்லை. இந்த ஞான நடனம் இடம்பெறும் பொழுது, பக்தி நடனம் இருப்பதில்லை, ஏனெனில் பக்தி நடனம் உங்களைக் கீழிறங்கும் ஸ்திதிக்கே கொண்டு செல்கிறது. சத்திய, திரேதா யுகங்களில் பக்தி இருப்பதில்லை; துவாபர யுகத்திலேயே பக்தி ஆரம்பிக்கிறது. பக்தி ஆரம்பிக்கும் பொழுது, இந்த ஞானத்தின் வெகுமதி முடிவடைந்து, கீழிறங்கும் ஸ்திதியே உள்ளது. தந்தை இங்கே அமர்ந்திருந்து, நீங்கள் எவ்வாறு கீழிறங்குகிறீர்கள் என்பதை விளங்கப்படுத்துகிறார். நான் ஒவ்வொரு சக்கரத்திலும் வந்து குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகிறேன்: குழந்தைகளாகிய நீங்கள் என்னைப் பெருமளவு அவதூறு செய்துள்ளீர்கள். பாரதத்தில் ஆதிசனாதன தேவிதேவதா தர்மத்தின் பெருமளவு அவதூறு இடம்பெறும் பொழுதே, நான் வருகிறேன். அவதூறு என்றால் என்ன என்பதையும் தந்தை விளங்கப்படுத்துகிறார். தந்தை கூறுகிறார்: நான் ஒவ்வொரு சக்கரத்திலும் வந்து, பாரதத்தின் விகாரம் நிறைந்த நரகவாசிகளைச் சுவர்க்கவாசிகள் ஆக்குகின்றேன். அசுர கட்டளைகளைப் பின்பற்றி என்னை நீங்கள் அவதூறு செய்தமையினால், மிகவும் ஏழைகள் ஆகினீர்கள். அது இராம இராச்சியமாக இருந்தது, இப்பொழுது அது இராவண இராச்சியம் ஆகும். இதுவே வெற்றி தோல்வியினதும், பகல் மற்றும் இரவினதும் நாடகம் என அழைக்கப்படுகிறது. இப்பொழுது, நான் எப்பொழுது வருவேன் என்பதைப் பற்றிச் சிந்தியுங்கள். நான் யாரிடம் இராச்சியத்தைக் கொடுத்தேனோ, அவர்கள் இப்பொழுது அந்த இராச்சியத்தைத் தொலைத்து விட்டனர். உங்களுக்குக் கர்மக் கணக்குகள் அனைத்தும் விளங்கப்படுத்தப்பட்டுள்ளன. நான் வந்து உங்களுக்கு உங்களது ஆஸ்தியைக் கொடுக்கிறேன். பின்னர், இராவணன் வந்து உங்களைச் சபிக்கின்றான். இது குறிப்பாகப் பாரதத்திற்கும், பொதுவாக முழு உலகிற்கும் பொருந்துகின்றது. வேறு எவரும் பாரதத்தின் புகழை அறியார். முதலில் பாரதம் மாத்திரமே இருந்தது. அது எப்பொழுது தோன்றியது, அது எவ்வாறு இருந்தது அல்லது அங்கு யார் ஆட்சிபுரிந்தார்கள் என்பது எவருக்கும் தெரியாது; அவர்கள் எதனையும் புரிந்து கொள்வதில்லை. தேவர்களாக இருந்தவர்கள் மனித ரூபங்களைக் கொண்டிருந்தார்கள். ஆனாலும் அவர்கள் தேவர்களின் குணாதிசயங்களைக் கொண்டிருந்தனர். இப்பொழுது அவர்கள் மனித ரூபங்களில் இருந்தாலும், அவர்களது குணாதிசயங்கள் அசுரத்தனமாக உள்ளன. நீங்கள் விளங்கப்படுத்துகின்ற எவருமே புரிந்து கொள்வதில்லை. ஏனெனில் இவ்வுலகிற்கு அப்பாலுள்ள தந்தையை அவர்களுக்குத் தெரியாது. அதற்குப் பதிலாக, அவர்கள் அவரை அவதூறு செய்கின்றனர்! தந்தையை அவதூறு செய்வதன் மூலம் அவர்கள் சிப்பிகளைப் போன்று முழுமையாகப் பெறுமதி அற்றவர்கள் ஆகியுள்ளார்கள். பாரதத்தின் வீழ்ச்சியும் இருக்கிறது. தந்தை கூறுகிறார்: அதன் நிலைமை இவ்வாறு ஆகும்பொழுதே, நான் வருகிறேன். நான் இப்பொழுது உங்களுக்கு நேரடியாகவே விளங்கப்படுத்துகிறேன். நான் முன்னைய சக்கரத்திலும் உங்களுக்கு இவ்வாறு விளங்கப்படுத்தினேன். தேவ சமுதாயம் ஸ்தாபிக்கப்படுவதுடன், நீங்கள் மனிதர்களில் இருந்து தேவர்களாகவும் மாறுகிறீர்கள். தந்தை எப்பொழுது வருகின்றார் என்பது மக்களுக்குத் தெரியாது. நீங்கள் சத்திய, திரேதா யுகங்களில் மிகுந்த சந்தோஷத்துடன் உங்கள் வெகுமதியை அனுபவம் செய்கிறீர்கள். பின்னர், துவாபர யுகத்தில் நீங்கள் இராவணனால் சபிக்கப்படும் பொழுது, அனைத்தும் முடிவடைந்து விடுகின்றன. அதேபோன்று, தங்கள் வெகுமதியை அனுபவம் செய்ததும், தேவர்கள் திரேதா யுக இறுதியின் பின்னர் இருப்பதில்லை. பின்னர் இராவணனது அசுர வெகுமதி ஆரம்பிக்கிறது. முதலில் பக்தி கலப்படம் அற்றதாக இருந்து, பின்னர் கலப்படமானதாக ஆகுகின்றது. ஏணிப் படம் மிகச்சரியானது. அனைத்தும் சதோபிரதான், பின்னர், சதோ, ரஜோ, தமோ ஆகுகின்றன. அதனுள் கலப்படம் தொடர்ந்தும் கலக்கப்படுகிறது. அனைத்தும் குழந்தைகளான உங்களுக்கு மிகத்தெளிவாக விளங்கப்படுத்தப்பட்டுள்ளது, ஆனாலும் அது அந்தளவிற்குக் கிரகிக்கப்படவில்லை. ஏனையோருக்கு விளங்கப்படுத்தும் அளவிற்கு அத்தகைய விவேகம் சிலருக்கு முற்றாகவே இருப்பதில்லை. சிலர் மிக நல்ல அனுபவசாலிகளாக உள்ளார்கள், அவர்களது தாரணையும் மிகவும் சிறப்பாக உள்ளது; அது வரிசைக்கிரமமானது. மாணவர்கள் அனைவரும் ஒரேமாதிரி இருப்பதில்லை; நிச்சயமாக ஒவ்வொருவருக்கும் ஓர் இலக்கம் கொடுக்கப்படும். எவருக்கும் விளங்கப்படுத்துவது மிகவும் இலகுவானது. தந்தை கூறுகிறார்: என்னை நினைவு செய்யுங்கள்! நான் உலகைப் படைப்பவராகிய, உங்களது எல்லையற்ற தந்தை ஆவேன். என்னை நினைவு செய்வதன் மூலம், நீங்கள் உங்கள் எல்லையற்ற ஆஸ்தியைப் பெறுவீர்கள். நினைவைக் கொண்டிருப்பதால் மாத்திரமே கலப்படம் அகற்றப்படும். அவர்களுக்கு விளங்கப்படுத்துங்கள்: பாரத மக்களாகிய நீங்கள் சத்திய யுகத்தில் சதோபிரதானாக இருந்தீர்கள், இப்பொழுது கலியுகத்தில் நீங்கள் தமோபிரதான் ஆகியுள்ளீர்கள். ஆத்மாக்களில் கலப்படம் கலந்துள்ளது. எவராலும் தூய்மை ஆகாமல் அங்கு செல்ல முடியாது. புதிய உலகில் அனைவரும் சதோபிரதானாக இருக்கின்றார்கள். ஆடைகள் புதியதாக உள்ளபொழுது, அவை சதோபிரதான் என்று கூறப்படுகின்றன. பின்னர் அவை பழையதாகும் பொழுது, அவை தமோபிரதான் ஆகுகின்றன. அனைவரது ஆடைகளும் கிழிந்து போகும் நிலையில் உள்ளன் அனைவரும் முற்றிலும் சீரழிந்த நிலையை அடைந்துள்ளனர். உலக அதிபதிகளாக இருந்தவர்கள் முற்றிலும் ஏழைகள் ஆகியுள்ளனர். அவர்களே இப்பொழுது செல்வந்தர்களாக வேண்டும். மக்களுக்கு இந்த விடயங்கள் தெரியாது. பாரதம் சுவர்க்கமாக இருந்த பொழுது, அது இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியமாக இருந்தது. ஏனைய சமயங்களைச் சேர்ந்தவர்கள் பின்னரே வந்தார்கள். தந்தை இங்கே அமர்ந்திருந்து உங்களுக்கு உண்மையான விடயங்களை விளங்கப்படுத்துகின்றார். கீதைக்கு எவ்வளவு மரியாதை இருக்கிறது எனப் பாருங்கள்! மக்கள் அதைக் கற்கும்பொழுது, முழுமையாக வீழ்ச்சி அடைந்து விட்டார்கள், அதனாலேயே அவர்கள் அழைக்கிறார்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! நாங்கள் சீரழிந்தவர்களாகி விட்டோம்! கடவுளால் மாத்திரமே சற்கதியை அருள முடியும். சமயநூல்களில் இருக்கின்ற அனைத்தும் பக்தி மார்க்கத்திற்கே உரியவை. பாபாவிடம் இருந்து இந்த ஞானத்தைப் பெறுவதனால், நீங்கள் தேவர்கள் ஆகுகின்றீர்கள் என்பதை உங்கள் புத்தி புரிந்து கொள்கிறது. முழு உலகிலுமே உங்களுக்கு இப்பொழுது விருப்பமின்மை இருக்கிறது. கங்கையில் நீராடுவது போன்ற பக்தியையே சந்நியாசிகள் செய்கிறார்கள். பக்தியும் முதலில் சதோபிரதானாக உள்ளது. பின்னர் அது ரஜோவாகவும், அதன்பின்னர் தமோவாகவும் ஆகுகிறது. இதுவும் அவ்வாறே. அரைக் கல்பத்துக்கு இரவும், அரைக் கல்பத்துக்குப் பகலும் உள்ளன என நினைவு கூரப்படுகிறது. பிரம்மாவின் பகலும், பிரம்மாவின் இரவும் இருக்கின்றன, அத்துடன் அதுவே பிராமணர்களின் பகலும், இரவுமாக உள்ளது. நீங்கள் இப்பொழுது பகலுக்குள் செல்கின்றீர்கள், பக்தியின் இரவு முடிவடைகிறது. பக்தியில் பெருமளவு துன்பமே இருக்கின்றது. அது இரவு என அழைக்கப்படுகிறது. கடவுளைத் தேடிக் கொண்டு மக்கள் இருளில் தொடர்ந்தும் தடுமாறுகிறார்கள். பக்தி மார்க்கத்தில் சற்கதி அருளக்கூடிய எவருமே இல்லை. கடவுளை மிகச்சரியாகத் தெரிந்தவர்கள், உங்களைத் தவிர வேறெவரும் இல்லை. ஆத்மா ஒரு புள்ளி என்பதையும், பரமாத்மாவும் ஒரு புள்ளியே என்பதையும் எவராலும் புரிந்துகொள்ள முடியாது. கடவுளே வந்து, பிரம்மாவின் சரீரத்தினூடாக உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். பின்னர் அவர்கள் எருதின் வடிவில் 'பாக்கிய இரதத்தைச்" சித்தரித்து இருக்கிறார்கள். எருது என்ற கேள்விக்கே இடமில்லை. தந்தை அனைத்தையும் மிக நன்றாக விளங்கப்படுத்துகின்றார், ஆனால் அது எவரின் புத்தியிலும் மிகச்சரியாகப் பதிவதில்லை. தந்தை இங்கே அமர்ந்திருந்து விளங்கப்படுத்துகிறார்: குழந்தைகளே! நானே ஆத்மாக்களான உங்கள் தந்தை ஆவேன். என்னை நினைவு செய்வதுடன், உங்கள் ஆஸ்தியையும் நினைவு செய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். அதற்குப் பதிலாக, நீங்கள் அவரை மறந்து விடுவதாகக் கூறுகிறீர்கள்! அற்புதம்! நீங்கள் அப்படிப்பட்ட ஒரு மணவாளனை அல்லது தந்தையை மறந்துவிட முடியுமா? ஒரு மனைவி தனது கணவனை எப்பொழுதாவது மறக்கிறாளா? அல்லது ஒரு குழந்தை தனது தந்தையை எப்பொழுதாவது மறக்கின்றாரா? ஆகவே, ஏன் நீங்கள் அவரை இங்கே மறந்து விடுகின்றீர்கள்? நீங்களும் கூறுகின்றீர்கள்: பாபா, நீங்கள் எங்களைச் சுவர்க்க அதிபதிகள் ஆக்குகின்றீர்கள், இருப்பினும், நாங்கள் உங்களை மறந்து விடுகின்றோம். தந்தை கூறுகிறார்: என்னை நினைவு செய்யாது விடின், ஆத்மாக்களான உங்களில் உள்ள துரு எவ்வாறு அகற்றப்படும்? நினைவு செய்தலே முக்கியமான விடயம். எங்களுக்கு வேறு எந்தச் சமயத்துடனும் தொடர்பு இல்லை. அவர்கள் பாடசாலைகளில் வரலாறையும், புவியியலையும் கற்பிக்கின்றார்கள். சிலர் இதைப் புரிந்துகொள்வதே இல்லை. தந்தையே உங்களுக்குக் கற்பிக்கிறார் என்பது அவர்களுடைய புத்தியில் இருப்பதில்லை. அச்சா, குறைந்தபட்சம் தந்தையையும் ஆஸ்தியையும் நினைவு செய்யுங்கள்! அல்லது அதனையும் மறந்து விடுகின்றீர்களா? நீங்கள் எந்த பாபாவை நினைத்து அரைக் கல்பமாகப் பக்தி செய்து வந்தீர்களோ, அந்த பாபாவை நீங்கள் நினைவு செய்வதில்லை. நீங்கள் உங்களுடைய சரீரங்களை நீக்கி, உங்கள் இராச்சியத்திற்குச் செல்வீர்கள் என்பது குழந்தைகளான உங்கள் புத்தியில் இருக்கிறது. இது உங்கள் இறுதிப் பிறவி. நீங்கள் அவர்களைச் சூட்சும உலகில் அந்த முகச்சாயல்களுடன் பார்க்கிறீர்கள்; நீங்கள் அவர்களைச் சுவர்க்கத்திலும் பார்க்கிறீர்கள். மம்மாவும், பாபாவும் இலக்ஷ்மியும், நாராயணனும் ஆகுவார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் சத்திய யுகத்தில் வசிக்கும் பொழுது, ஒரு சரீரத்தை நீக்கி இன்னொன்றை எடுப்பீர்கள் என்பதைப் புரிந்து கொள்கின்றீர்கள். சத்திய யுகத்தைத் தொடர்ந்து, திரேதா யுகமும், அதனைத் தொடர்ந்து துவாபர யுகமும் இருக்கும், நீங்கள் தொடர்ந்தும் கீழிறங்குவீர்கள் என்ற ஞானம் உங்களுக்கு அங்கிருப்பதில்லை. அங்கே இந்த ஞானம் இருப்பதில்லை. நீங்கள் தொடர்ந்தும் மறுபிறவி எடுக்கிறீர்கள். அங்கே நீங்கள் ஆத்ம உணர்வு உடையவர்களாக இருக்கின்றீர்கள். பின்னர், ஆத்ம உணர்வு உடையவர்களாக இருப்பதிலிருந்து, நீங்கள் சரீர உணர்வு உடையவர்கள் ஆகுகிறீர்கள். பிராமணர்களாகிய நீங்கள் மாத்திரமே இந்த ஞானத்தைக் கொண்டிருக்கின்றீர்கள். இது வேறு எவரிடமும் இருப்பதில்லை. ஞானக்கடலும், ஞானப் பிரபுவுமாகிய தந்தை மாத்திரமே உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கிறார். நிச்சயமாக அவர் பிரம்மாவின் குழந்தைகளான, பிராமணர்களாகிய உங்களுக்கு மாத்திரமே இந்த ஞானத்தைக் கூறுவார். பிரம்மாவின் குழந்தைகளே பிராமண சமுதாயத்தினர். பகலுக்கும், இரவுக்கும் இடையிலான வித்தியாசம் உள்ளது. நீங்கள் முயற்சி செய்து, முழுமையாகத் தெய்வீகக் குணங்கள் நிறைந்தவர்கள் ஆகுகிறீர்கள்; நீங்கள் முழுமையாக விகாரம் அற்றவர்கள் ஆகுகிறீர்கள். குடும்பத்துடன், வீட்டில் வசிக்கும் பொழுதும் தந்தையை நினைவு செய்யுங்கள். நிச்சயமாக நீங்கள் செயல்களைச் செய்யவே வேண்டும். உங்கள் புத்தியின் யோகம் தந்தையுடன் இணைந்திருக்க வேண்டும். நீங்கள் செயல்களைச் செய்யலாம்; நீங்கள் ஒரு மரவேலை செய்பவராகவோ அல்லது ஓர் இராச்சியத்தை ஆள்பவராகவோ இருக்கலாம். ஜனக மகாராஜாவின் ஞாபகார்த்தமும் உள்ளது. தொடர்ந்தும் இராச்சியத்தை ஆட்சிசெய்யுங்கள். ஆனால் உங்கள் புத்தியின் யோகம் தந்தையுடன் இணைந்திருக்க வேண்டும், அப்பொழுது உங்கள் ஆஸ்தியை நீங்கள் பெறுவீர்கள். தந்தை கூறுகிறார்: மன்மனாபவ! சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். சிவபாபா கூறுகிறார்: நீங்கள் சிவன் என்று கூறும்பொழுது, சிவலிங்கத்தையே நினைக்கிறீர்கள். அனைவரும் தங்கள் சரீரங்களின் மூலம் தங்கள் பாகங்களை நடிப்பதனால், அனைவரினதும் சரீரங்களின் பெயர்களே குறிப்பிடப்படுகின்றன. நீங்கள் இப்பொழுது ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆக்கப்படுகிறீர்கள், நீங்கள் அவ்வாறு அரைக் கல்பத்திற்கு இருப்பீர்கள். இந்நேரத்தில் அனைவரும் சரீர உணர்வு உடையவர்கள். அங்கே, அரசர், அரசி, பிரஜைகள் யாவருமே ஆத்ம உணர்வு உடையவர்கள். அங்கே அனைவரினதும் ஆயுட்காலம் நீண்டதாக இருக்கிறது. இங்கே அனைவரினதும் ஆயுட்காலம் குறுகியதாக இருக்கிறது. தந்தை நேரடியாக உங்கள் முன்னிலையில் அமர்ந்திருந்து, மிக நன்றாக உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். அவர் கூறுகிறார்: ஓ ஆத்மாக்களே! ஏனெனில் ஆத்மாக்களான நீங்களே இந்த ஞானத்தைப் பெறுகின்றீர்கள். ஆத்மாக்களான உங்களிலேயே தாரணையும் இடம்பெறுகிறது. பாபாவிற்குச் சரீரம் இல்லை. இந்த ஞானம் முழுவதும் ஆத்மாவிலேயே உள்ளது. ஆத்மா ஒரு நட்சத்திரம், பாபாவும் ஒரு நட்சத்திரமே. அவர் ஆத்மாக்களைப் போன்று மறுபிறவி எடுப்பதில்லை. இதனாலேயே பாபா உங்களுக்குச் செய்வதற்கு ஒரு பணியைக் கொடுத்தார். பரமாத்மாவின் புகழையும், குழந்தைகளின் புகழையும் எழுதுமாறு அவர் உங்களுக்குக் கூறினார்; இரண்டுமே வெவ்வேறானவை. ஸ்ரீ கிருஷ்ணரின் புகழ் வேறானது. ஸ்ரீ கிருஷ்ணர் சரீரமுடையவர். ஆனால் அந்த ஒரேயொருவரோ அசரீரியானவர். அவரைத் (கிருஷ்ணர்) தெய்வீகக் குணங்கள் நிரம்பியவராக ஆக்கியவர் யார்? நிச்சயமாக, பரமாத்மாவே அவரை அவ்வாறு ஆக்கினார் எனக் கூறப்படுகிறது. இந்நேரத்தில் நீங்கள் கடவுளின் சமுதாயத்தினர். தந்தை உங்களுக்குக் கற்பிக்கிறார். பின்னர் நீங்கள் வெகுமதியை அனுபவம் செய்கிறீர்கள். உங்களுக்குச் சத்திய யுகத்தில் இதை எவருமே கற்பிக்க மாட்டார்கள். பக்தி மார்க்கத்தின் சம்பிரதாயங்கள் முடிவடைந்திருக்கும். இவ்வுலகில் விருப்பமின்மையும் இருக்க வேண்டும். அதாவது, உங்கள் சரீரங்களையும், சரீர உறவினர்கள் அனைவரையும் துறந்து, உங்களைச் சரீரமற்ற ஆத்மாக்களாகக் கருத வேண்டும். நீங்கள் சரீரமற்றவர்களாகவே வந்தீர்கள், சரீரமற்றவர்களாகவே திரும்பிச் செல்ல வேண்டும். இந்தப் பழைய உலகம் அழிக்கப்பட உள்ளது. நாங்கள் அனைவரும் புதிய உலகத்திற்குச் செல்வோம். நினைவு செய்வதற்கான இம் முயற்சியைத் தொடர்ந்தும் செய்யுங்கள். இதிலேயே பலர் தோல்வி அடைகின்றார்கள்; அவர்கள் தந்தையை நினைவு செய்வதே இல்லை. இங்கே வரும் எவருக்கும் விளங்கப்படுத்துங்கள்: சிவபாபா, பிரம்மாவின் மூலம் கூறுகிறார்: என்னை நினைவு செய்யுங்கள், உங்கள் கலப்படம் அகற்றப்பட்டு, நீங்கள் விஷ்ணுவின் பூமிக்கு அதிபதிகள் ஆகுவீர்கள். விஷ்ணுவின் பூமியே சுவர்க்க பூமியாகும். இயலுமானவரை தந்தையை நினைவு செய்யுங்கள்! நீங்கள் அரைக் கல்பமாக நினைவுசெய்த, அந்தத் தந்தை இப்பொழுது நேரடியாக உங்கள் முன் வந்திருக்கிறார். அவர் கூறுகிறார்: என்னை நினைவு செய்யுங்கள்! அவரை எவருக்கும் தெரியாது. அவரே வந்து தனது சொந்த அறிமுகத்தைக் கொடுக்கிறார். நான் யார் என்றோ, நான் என்ன செய்கிறேன் என்பதோ எவருக்கும் தெரியாது, அல்லது அந்த நம்பிக்கையைக் கொண்டவர்களும் அரிதாகவே உள்ளனர். அவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டு இருந்திருந்தால், அவர்கள் முயற்சி செய்து தமது ஆஸ்தியைப் பெறுவார்கள். சிவபாபா கூறுகிறார்: என்னை நினைவு செய்வதனால், உங்கள் பாவங்கள் அழிக்கப்பட்டு, நீங்கள் தூய்மையாகி, தூய உலகின் அதிபதிகள் ஆகுவீர்கள். எந்தப் பாவச் செயல்களையும் நீங்கள் செய்யக்கூடாது. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. முயற்சி செய்து முழுமையாகத் தெய்வீகக் குணங்கள் நிறைந்தவர்கள் ஆகுங்கள். நீங்கள் எந்தச் செயல்களைச் செய்தாலும், அவற்றைத் தந்தையின் நினைவில் செய்யுங்கள். பாவச் செயல்கள் எதனையும் செய்யாதீர்கள்.

2. உங்கள் பழைய ஆடை (சரீரம்) முழுமையாக உக்கிவிட்டது. ஆகவே அதிலிருந்து உங்கள் பற்றை அகற்றுங்கள். ஆத்மாவைச் சதோபிரதான் ஆக்குவதற்கு முழு முயற்சி செய்யுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் சதா அதீந்திரிய சுகத்தை அனுபவம் செய்யும், உறுதியான, அசைக்க முடியாத, சுய இராச்சிய அதிகாரி ஆகுவீர்களாக.

சங்கம யுகத்தில் எல்லா வேளைக்குமாக அதீந்திரிய சுகத்தின் ஆஸ்தியைப் பெறுகின்ற குழந்தைகள், அதாவது, தந்தையின் உயிலுக்கான முழு உரிமைகளைப் பெற்றுள்ளவர்களே, உள்ளக சக்தியைக் கொண்டிருப்பார்கள். அவர்கள் சதா அசைக்க முடியாத அதீந்திரிய சுகத்தை அனுபவம் செய்வார்கள். இத்தகைய வாரிசுகள், அதாவது, ஆஸ்திக்கான முழுமையான உரிமையைக் கொண்டிருப்பவர்கள், நிலையான, அசைக்க முடியாத சுய இராச்சிய அதிகாரத்தைப் பெறுகிறார்கள்.

சுலோகம்:
‘எனது’ என்ற உணர்வு இருக்கும்போது, புத்தியானது முற்றிலும் திரும்பி விடுகிறது.

அவ்யக்த சமிக்ஞை: சதா ஆட்ட, அசைக்க முடியாத மற்றும் நிலையான ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள்.

இந்த நேரத்திற்கு ஏற்ப, இப்போது நீங்கள் சதா ஆட்ட, அசைக்க முடியாதவராகவும் சகல பொக்கிஷங்களாலும் நிரம்பியும் இருக்க வேண்டும். சிறிதளவு தளம்பல் இருந்தாலும், உங்களால் சகல பொக்கிஷங்களையும் அனுபவம் செய்ய முடியாது. நீங்கள் தந்தையிடம் இருந்து பெற்ற பொக்கிஷங்களைச் சதா உங்களுடன் வைத்திருப்பதற்கான வழிமுறை, சதா ஆட்ட, அசைக்க முடியாமல் இருப்பதே ஆகும். அசைக்க முடியாதவராக இருப்பதன் மூலம், நீங்கள் சதா தொடர்ந்தும் சந்தோஷத்தை அனுபவம் செய்வீர்கள். உங்களிடம் அழிகின்ற செல்வம் அல்லது தலைவர் என்ற பதவியின் அழியும் கதிரையின் சந்தோஷம் இருக்கக்கூடும். அத்துடன் உங்களுக்குப் பெயரும் புகழும் கிடைக்கும்போது நீங்கள் அதிகளவு சந்தோஷமாக இருக்கக்கூடும். ஆனால், இந்த சந்தோஷம் அழியாதது. ஆட்ட, அசைக்க முடியாதவர்களால் இந்த சந்தோஷத்தைக் கொண்டிருக்க முடியும்.

மாதேஷ்வரியின் பெறுமதிமிக்க வாசகங்கள்
மேலேறும் ஸ்திதியினதும், கீழிறங்கும் ஸ்திதியினதும் பிரதான காரணங்கள் எவை?

பலர் பின்வரும் கேள்வியைக் கேட்கின்றார்கள்: ஜீவன்முக்தி எனும் அந்தஸ்தைப் பெறுவதற்கு நாங்கள் அதிகளவு முயற்சியைச் செய்யும் பொழுது, நாங்கள் கீழே வருவதற்கான காரணம் என்ன? இது வெற்றி, தோல்வியைப் பற்றிய ஒரு நாடகம் என்று நாங்கள் கூறினாலும், மேலேறும், கீழிறங்கும் ஸ்திதிகளுக்கு நிச்சயமாக ஒரு காரணம் இருக்க வேண்டும். எதன் அடிப்படையில் இந்த நாடகம் நடிக்கப்படுகின்றது? முயற்சி செய்வதால், எங்களால் மேலேற முடிவதைப் போன்று, வீழ்வதற்கும் எங்களுக்கு ஒரு காரணம் இருக்க வேண்டும். அந்தக் காரணம் ஒரு பெரிய விடயமல்ல. ஒரு சிறிய தவறு மாத்திரமே ஆகும். உதாரணமாக, கடவுள் கூறுகின்றார்: என்னை நினைவு செய்யுங்கள், நான் உங்களுக்கு முக்தியும், ஜீவன்முக்தியும் எனும் அந்தஸ்தை அருள்வேன். அதேபோன்று, நாங்கள் சரீர உணர்வு உடையவராகி, கடவுளை மறக்கும் பொழுது, வீழ்ந்து விடுகின்றோம். பின்னர் நாங்கள் பாவப் பாதையில் செல்லும் பொழுது, ஐந்து விகாரங்களில் சிக்கிக் கொள்கின்றோம்; நாங்கள் துன்பத்தைப் பெறுகின்றோம். ஆகவே, இது எங்களுடைய சொந்தத் தவறேயாகும், படைப்பவரின் தவறல்ல. கடவுளே சந்தோஷத்தையும், துன்பத்தையும் கொடுக்கின்றார் என மக்கள் கூறுவது, முற்றிலும் தவறானது. பாபா சந்தோஷத்தையே அருள்பவர், துன்பத்தை அருள்பவர் அல்ல. நாங்கள் எங்களுடைய மேன்மையான செயல்களின் மூலம் சந்தோஷத்தையும், சீரழிந்த செயல்களின் மூலம் துன்பத்தையும் பெறுகின்றோம். கடவுளிடமிருந்து நாங்கள் நிச்சயமாக நல்ல செயல்களுக்கான பலனையும், தீய செயல்களுக்கான தண்டனையையும் பெறுகின்றோம். எவ்வாறாயினும், கடவுளே சந்தோஷம், துன்பம் இரண்டையும் கொடுக்கின்றார் என்று எங்களால் கூற முடியாது; இல்லை. எங்கள் மேலேறும் ஸ்திதியில் கடவுள் எங்களுடன் இருக்கின்றார், ஆனால் மாயையே எங்களை விழச் செய்கின்றாள். பொதுவாக, நாங்கள் சந்தோஷத்;திற்காக, எவராவது ஒருவரின் சகவாசத்தை அல்லது உதவியைப் பெறுகின்றோம், ஆனால் எவருமே துன்பத்தைப் பெறுவதற்காகத் தங்கள் சகவாசத்தைக் கொடுப்பதில்லை. நாங்கள் செய்கின்ற செயல்களின் பேறாகவே, நாங்கள் பெறுகின்ற பலனும் உள்ளது. இந்த நாடகத்தினுள் உங்கள் செயல்களின் அடிப்படையிலேயே சந்தோஷத்தையும், துன்பத்தையும் பற்றிய விளையாட்டு அமைந்துள்ளது, ஆனால் சீரழிந்த புத்தியை உடைய மக்கள் இந்த இரகசியத்தை அறிய மாட்டார்கள். அச்சா.