01.07.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, முழு உலகிற்கும் அமைதியைக் கொடுப்பது ஒரேயொரு தந்தையின் பணி மாத்திரமே ஆகும். இதனாலேயே ‘ஓ அமைதியை அருள்பவரே!’ என மக்கள் கூறுகின்றனர். எனவே தந்தையே பரிசைப் பெற வேண்டும்.
கேள்வி:
எந்தக் குழந்தைகளால் தந்தையை முழுமையாகப் பின்பற்ற முடியும்?பதில்:
தந்தையைப் போன்று தூய்மை ஆகுகின்ற குழந்தைகளாலேயே அவரை முழுமையாகப் பின்பற்ற முடியும். உண்மையான காதலிகள் ஆகுபவர்களாலேயே அன்பிற்கினியவராகிய என்னைப் பின்பற்ற முடியும். அத்தகைய காதலிகளை மாத்திரமே நான் என்னுடன் திரும்பவும் அழைத்துச் செல்கிறேன். பசுவின் வாலைப் பிடிப்பதன் மூலம் உங்களால் அக்கரை செல்ல முடியும் என்று சமயநூல்களில் சித்தரிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இங்கு ஒரு பசு அல்லது பசுவின் வால் என்ற கேள்விக்கே இடமில்லை.பாடல்:
நீங்களே அன்புக் கடல். நாங்கள் ஒரு துளிக்கான தாகத்தில் உள்ளோம்.ஓம் சாந்தி.
இங்கு பாபா, தாதா ஆகிய இருவரும் உள்ளனர். சிவபாபாவே ஆத்மாக்களின் தந்தை என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது தெரியும். அவர் தூய்மையாக்குபவர் எனவும், அசரீரியானவர் எனவும் உங்களுக்குத் தெரியும். நீங்களும் அசரீரியான, அமைதி சொரூபங்கள். அசரீரியான தந்தை அமைதி சொரூபமும், ஆத்மாக்களும் அமைதி சொரூபங்களும் ஆவார்கள். ஆத்மாக்களின் ஆதி தர்மம் அமைதி ஆகும். நீங்கள் அமைதிதாம வாசிகள். அவர்கள் ஒரு யாகம் வளர்க்கும் பொழுது, அமைதியை அருள்பவரை அழைக்கின்றனர், ஏனெனில் கடவுளே அமைதிக் கடல் ஆவார். தந்தையே முழு உலகிற்கும் அமைதியை வழங்குகின்றார். அமைதிப் பரிசுகளைப் பெறும் பலர் உள்ளனர். ஒருவர் பரிசைப் பெறும்பொழுது, அவர் அமைதியை ஸ்தாபிப்பதில் கருவியாகியுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். அவர்கள் மகாத்மாக்களின் பெயர்களைக் குறிப்பிடுகின்றனர். எவ்வாறாயினும் உலகம் முழுவதற்கும் அமைதி தேவைப்படுகிறது. இல்லாவிடின் அமைதி அற்றிருப்பவர்கள், ஏனையோரையும் அமைதியற்றவர்கள் ஆக்கி விடுகின்றனர். இது இராவண இராச்சியம். இராவணன் எதிரியாவான், ஆனால் இராமர் எதிரி என அழைக்கப்படுவதில்லை. மக்கள் இராமரின் கொடும்பாவியை என்றுமே எரிப்பதில்லை, அதாவது, திரேதாயுக இராமரினதோ அல்லது பரமாத்மாவாகிய பரமதந்தையினதோ கொடும்பாவியை என்றுமே எரிப்பதில்லை. அனைவரும் இராம இராச்சியம் இருக்க வேண்டும் என்றே விரும்புகின்றனர், ஆனால் எவருக்கும் இராம இராச்சியம் என்றால் என்ன என்பது தெரியாது. புதிய உலகம் வேண்டும் என்றும், புது டெல்கியில் இராம இராச்சியம் இருக்க வேண்டும் எனவும் அவர்கள் கூறுகின்றனர். அவர்கள் புது டெல்கியைப் பற்றிப் பேசுகிறார்கள்; அதற்குப் பல பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. டெல்கியே தலைநகரம். அது தேவதைகளின் பூமியாக இருந்தது. இராதையும் கிருஷ்ணரும் கூட அங்கு இருப்பதாகக் காட்டப்பட்டுள்ளது. அவர்கள் இருவருமே பிரதான இளவரசரும், இளவரசியும் ஆவர். அங்கு அவர்கள் இருவரும் மட்டும் இருக்கவில்லை, ஏனையோரும் நிச்சயமாக இருக்க வேண்டும். எட்டு பேரின் வம்சம் நினைவுகூரப்படுகிறது. நீங்கள் அனைத்திற்கும் புத்தியைப் பயன்படுத்த வேண்டும். சத்தியயுகத்தில் ஏனைய வம்சங்களும் இருக்க வேண்டும். இங்கு எத்தனை வம்சங்கள் உள்ளன எனப் பாருங்கள்! இந்த வம்சங்களில் பல உருவாகும்வரை, அவை தொடர்ந்தும் வளர்ந்து கொண்டிருக்கும். இன்ன இன்ன கிராமத்து மகாராஜாவைப் பற்றியும் ஒருவர் அறிந்து கொள்கிறார். பல்வேறு சிறிய கிராமங்கள் உள்ளன. சத்தியயுகத்தில் அத்தனை இருப்பதில்லை. அங்கு இலக்ஷ்மி நாராயணனின் பெயர்கள் மிகவும் பிரபல்யமானவை. அவர்களது இராச்சியம் 2500 வருடங்களுக்குத் தொடர்கிறது. நூறாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னர் அது இருந்ததாக மக்கள் கூறுகின்றனர். இது சிந்திப்பதற்குரிய ஒன்றாகும். இதுவே ஆத்மாக்களிற்கான உணவு. தந்தை ஆன்மீக உணவை உங்களது புத்திக்கும், ஆத்மாக்களாகிய உங்களுக்கும் கொடுக்கிறார். உங்கள் புத்தியின் பூட்டு இப்பொழுது திறக்கப்பட்டுள்ளது. ரிஷிகள், முனிவர்கள் போன்றோர் அனைவரும் தங்களுக்குப் படைப்பவரையோ அல்லது படைப்பையோ தெரியாது எனக் கூறுகின்றனர். குழந்தைகளாகிய நீங்கள் இவ்வாறு இப்பொழுது கூறுவதில்லை. படைப்பவரையும், படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியையும் உங்களுக்குத் தெரியும். இப்பொழுது உங்களது 84 பிறவிச் சக்கரத்தை நீங்கள் அறிவீர்கள். ஆரம்பத்தில் நீங்கள் தேவர்களாக இருந்தீர்கள், பின்னர் மத்தியில் இராவணன் வந்தபொழுது, நீங்கள் விகாரம் நிறைந்தவர்கள் ஆகினீர்கள். இப்பொழுது இது இறுதியாகும். இந்தப் பழைய உலகின் விநாசம் இருக்கும் என்றும், அதன்பின்னர் ஆரம்பம் இருக்கும் என்றும் உங்களுக்குத் தெரியும். ஆரம்பத்தில் இராம இராச்சியம் இருக்கும். பின்னர் மத்தியில் இராவணனின் இராச்சியம் ஆரம்பம் ஆகுகின்றது. இப்பொழுது இராவண இராச்சியம் முடிவடைய உள்ளது, பின்னர் இராம இராச்சியம் ஆரம்பமாகும். நீங்கள் இப்பொழுது சாதாரண மனிதனிலிருந்து நாராயணனாக மாற வேண்டும். இதுவே சத்திய நாராயணனின் கதை ஆகும். அனைத்துச் சமயநூல்களினதும் பிரதான இரத்தினமாக இருப்பது ஸ்ரீமத் கீதையே என்பது உங்களுக்குத் தெரியும். மேன்மையானவர்கள் ஆகுவதற்காக நீங்கள் ஸ்ரீமத்தைப் பெறுகிறீர்கள். மேன்மையானவர்களே, ஸ்ரீ என்று அழைக்கப்படுகிறார்கள். சமயநூலாகிய கீதை மாத்திரமே தேவ தர்மத்தின் சமயநூலென அழைக்கப்படுகின்றது என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். இதன் மூலமே சங்கமயுகத்தில் தேவ தர்மம் ஸ்தாபிக்கப்பட்டது. சத்தியயுகத்தில் உள்ள எவரும் தூய்மை அற்றவர்கள் அல்ல என்பதனால் எவரும் வந்து, அவர்களைத் தூய்மையாக்க வேண்டியதில்லை. தந்தை இப்பொழுது உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார்: கீதையைத் தூய்மையாக்குபவர் என்று அழைக்க முடியாது. கீதையின் மூலம் உங்களால் தூய்மையாக முடியாது. கீதையின் கடவுளே தூய்மையாக்குபவர் என அழைக்கப்படுகிறார். இதனை நன்றாக நினைவிற்கொண்டிருங்கள். கீதையே, ஆதிசனாதன தேவிதேவதா தர்மத்தின் சமயநூலாகும். எண்ணற்ற சமயங்கள் அழிக்கப்பட்டு, ஒரே தர்மம் ஸ்தாபிக்கப்பட்ட, மகாபாரத யுத்தம் கீதையின் அத்தியாயத்தின் கால கட்டத்திலேயே இடம்பெற்றது. கீதையே தேவ தர்மத்தின் சமயநூல் என அவர்கள் கூறுகின்றனர். அது பிராமணர்களின் சமயநூல் என அழைக்கப்படுவதில்லை. கீதையில் பிராமணர்களைப் பற்றிய குறிப்பே இல்லை. பரமாத்மாவாகிய பரமதந்தை வந்து, பிரம்மா மூலம் வேதங்களினதும், சமயநூல்களினதும் சாராம்சத்தை உங்களுக்குக் கூறுகிறார். சத்தியயுகத்தில் பிராமணர்கள் இல்லை என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். இலக்ஷ்மியும், நாராயணனும், தேவர்களும் அங்கு உள்ளனர். பிரம்மாவிற்குப் பின்னர் விஷ்ணு உள்ளார். பிரம்மா மூலம் விஷ்ணு பூமி ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகப் படங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளது. பிரம்மாவும், விஷ்ணுவும் ஒரேநேரத்தில் இருப்பதில்லை. பிரம்மாவின் மூலம் தேவதர்மம் ஸ்தாபிக்கப்படுகிறது. இவ்விடயங்கள் விபரமாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் உங்கள் சுவர்க்க ஆஸ்தியைச் சிவபாபாவிடம் இருந்து பெறுகிறீர்கள். நீங்களே அதற்கான உரிமையைக் கொண்டவர்கள். நான்கு பிரதான சமயநூல்கள் உள்ளன. முதற்தரமான தர்மம் ஸ்தாபிக்கப்படுகின்ற, ஸ்ரீமத் பகவத் கீதையே முதல் இலக்கச் சமயநூல் ஆகும். பின்னர் இஸ்லாமியர்களும், பௌத்தர்களும் உள்ளனர். கீதையில் மாத்திரமே “ஸ்ரீமத் பகவத் கீதை” என்று எழுதப்பட்டுள்ளது. ஏனைய சமயநூல்கள் எதுவும் ஸ்ரீமத் எனக் குறிப்பிடவில்லை. “ஸ்ரீமத் இஸ்லாம்”, “ஸ்ரீமத் பௌத்தம்” என எந்தச் சமயநூல்களும் நினைவு கூரப்படுவதில்லை. ஒரேயொரு ஸ்ரீமத் பகவத் கீதை மாத்திரமே உள்ளது. அதன் மூலம் எந்தத் தர்மம் ஸ்தாபிக்கப்பட்டது? ஆதிசனாதன தேவிதேவதா தர்மமே ஸ்தாபிக்கப்பட்டது. இறுதியிலேயே ஸ்தாபனை இடம்பெறுகிறது. இது புரிந்து கொள்ளப்பட வேண்டிய விடயமாகும். பாபா இப்பொழுது எங்களுக்கு ஆசிரியராக இருந்து கற்பிக்கிறார். இது உங்கள் புத்தியில் இருக்க வேண்டும். பாபா எங்கள் தந்தையும், எங்கள் ஆசிரியரும் ஆவார். பாபா அனைவருக்கும் கல்வி மூலம் சற்கதியைக் கொடுப்பதனால், அவர் சற்குருவும் ஆவார். அனைவரும் தந்தையை நினைவு செய்கின்றனர். அவர்கள் கீதையில் ஸ்ரீகிருஷ்ணரின் பெயரை இட்டுள்ளனர்; அவர் ஞானக்கடல் அல்ல. ஞானக்கடலாகிய தந்தையே அவரை அவ்வாறு ஆக்கினார், ஆகவே அவர் ஆசிரியரும் ஆவார். நீங்கள் இங்கே புதிய விடயங்களைச் செவிமடுக்கிறீர்கள். நீங்கள் பல சமயநூல்கள் போன்றவற்றைச் செவிமடுத்தும், வாசித்தும் உள்ளீர்கள். இப்பொழுது நீங்கள் தந்தையை நேரடியாகச் செவிமடுக்கிறீர்கள். முன்னர் நீங்கள் சரீரதாரிகளையே செவிமடுத்தீர்கள். நீங்கள் ஆதியில் சரீரமற்றவர்களாக இருந்து, பின்னர் சரீரங்களை ஏற்றீர்கள் என ஆத்மாக்களாகிய நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். பாபாவும் சரீரமற்றவர். மக்கள் ஒரு சிவலிங்கத்தை உருவாக்குகிறார்கள். ஆத்மாக்கள் தங்கள் சரீரங்களினூடாக அவரை வணங்குகிறார்கள். நீங்கள் அழைக்கிறீர்கள்: ஓ பரமாத்மாவாகிய பரமதந்தையே, வந்து, தூய்மையற்ற எங்களைத் தூய்மை ஆக்குங்கள்! அவர்கள் லிங்கத்தை வழிபடுகிறார்கள். ஆனால் அவரே தாம் அழைத்துக் கொண்டிருக்கின்ற, தந்தையாகிய தூய்மையாக்குபவர் என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. சிவனே கடவுள், அவரே ஈஸ்வர் (கடவுள்) ஆவார். அவர்கள் இவ்வாறு அவரைத் தொடர்ந்தும் நினைவு செய்கின்றனர். நீங்கள் அவரை பாபா என அழைக்கும் பொழுது, தந்தையிடம் இருந்து ஓர் ஆஸ்தியைப் பெறுவீர்கள் என்பது உங்கள் புத்திகளில் பிரவேசிக்கிறது. நாங்கள் ஆஸ்தியைப் பெற்றிருந்தோம், இதனாலேயே நாங்கள் அவரை வணங்குகின்றோம். பாரத மக்கள் நிச்சயமாக ஆஸ்தியைப் பெற்றார்கள். தாங்கள் எப்பொழுது அதனைப் பெற்றார்கள் என்பதை அவர்கள் மறந்து விட்டார்கள்! குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது இதைப் புரிந்து கொள்கிறீர்கள். நீங்கள் அவரிடம் வந்துள்ளீர்கள் எனக் குழந்தைகளான நீங்கள் பாபாவிடம் கூறுகிறீர்கள். பிரம்மாவின் சரீரத்தில் சிவபாபா பிரவேசித்து, உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். “திரிமூர்த்தி” என்ற பெயர் மிகவும் பிரபல்யமானது. “திரிமூர்த்தி வீதி” என்ற பெயரையும் அவர்கள் கொண்டுள்ளனர். தந்தையின் புகழ் பெருமளவில் உள்ளது. அவர் அன்புக் கடல் என்றும், அனைவருக்கும் சற்கதியை அருள்பவர் என்றும் பாடலில் நீங்கள் செவிமடுத்தீர்கள். அவர் மாத்திரமே அனைவருக்கும் அமைதியையும், சந்தோஷத்தையும் கொடுப்பவர். அவரே துன்பத்தை அகற்றி, அனைவருக்கும் சந்தோஷத்தை அருள்பவரும் ஆவார். அவர் மிகவும் அன்பானவர். அவரைப் போல் அன்பானவர்கள் வேறெவரும் இல்லை. உங்களைச் சுவர்க்க அதிபதிகள் ஆக்குகின்ற தந்தை நிச்சயமாக அன்பானவராகவே இருப்பார். அவர் எல்லையற்ற தந்தை ஆவார். அவர் கூறுகிறார்: குழந்தைகளே, நீங்கள் என்னிடம் இருந்தே சுவர்க்க இராச்சியத்தைப் பெறுகின்றீர்கள். ஆத்மாக்களான நீங்கள் சகோதரர்கள். நீங்கள் இப்பொழுது தந்தையைச் செவிமடுக்கிறீர்கள். ஆத்மாக்கள் அனைவரும் தந்தையை நினைவு செய்கின்றனர்: பாபா, வந்து எங்களைத் தூய்மை ஆக்குங்கள்! ஆத்மாக்கள் கூறுகின்றனர்: எங்களைத் தூய்மை ஆக்குவதற்கு பாபா வந்துவிட்டார். அவர் கூறுகிறார்: குழந்தைகளே, 5000 வருடங்களுக்கு முன்பும் நான் உங்களைத் தூய்மை ஆக்குவதற்கு வந்தேன். இப்பொழுது உங்கள் தந்தையாகிய, என்னை நினைவு செய்யுங்கள், உங்கள் பாவங்கள் அனைத்தும் அழிக்கப்படுவதுடன், உங்கள் துன்பங்கள் அனைத்தும் அகற்றப்படும். மக்கள் அழைக்கின்றனர்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! அவர்கள் தொடர்ந்தும் கைகளைத் தட்டிச் சத்தமாகப் பாடுகின்றனர்: சீதைக்குச் சொந்தமான தூய்மையாக்குபவராகிய இராமா! ஆகவே இதன் அர்த்தம் அவர்கள் தூய்மை அற்றவர்கள் என்பதாகும். இது நரகமாகும். இது ஆழ் நரகம் என அழைக்கப்படுகிறது. நீங்கள் இன்ன இன்ன செயல்களைப் புரிந்தால் என்னவாக ஆகுவீர்கள் எனக் கருட புராணத்தில் அவர்கள் பல பயங்கரமான கதைகளை எழுதியுள்ளனர். பசுவின் வாலைப் பிடிப்பதால், உங்களால் சுவர்க்கத்திற்குச் செல்ல முடியும் எனவும் அவர்கள் பின்னர் கூறுகின்றனர். இதைப் போன்ற சில அதில் எழுதப்பட்டுள்ளன. மிருகங்கள் என்ற கேள்விக்கே இடமில்லை; தாய்மார்களாகிய நீங்களே அந்தப் பசுக்கள். எவரேனும் உங்களது வாலை, அதாவது, உங்களைப் பற்றிப் பிடித்துக் கொள்ளும்வரை, அவர்களால் பாதையைக் கண்டறிய முடியாது. உங்களிடம் வால் இல்லை. அவர்கள் கூறுகின்றனர்: உங்களது வாலைப் பிடிப்பதால், நாங்கள் அக்கரை சேருவோம். நீங்கள் எவரது வாலையும் இங்கு பிடிப்பதில்லை, ஆனால் நீங்கள் பின்பற்ற வேண்டும். சந்நியாசிகள் பல சீடர்களைக் கொண்டுள்ளனர், ஆனால் பின்பற்றுவது என்றால் தூய்மை ஆகுவதாகும். நீங்களே உண்மையான பின்பற்றுபவர்கள். சிவபாபா கூறுகிறார்: நான் உங்கள் அனைவரையும் திரும்பவும் வீட்டிற்கு அழைத்துச் செல்லவே வந்துள்ளேன். என்னை நினைவு செய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும்! தூய்மை ஆகாமல் உங்களால் பின்பற்ற முடியாது. சிவபாபாவை முழுமையாகப் பின்பற்றுங்கள்! அவரைப் பின்பற்றுவதற்கே நீங்கள் இங்கே அமர்ந்துள்ளீர்கள். பக்தி மார்க்கத்திலும் நீங்கள் என்னை நினைவு செய்தீர்கள். ஆத்மாக்கள் அன்பிற்கினியவரான, பரமாத்மாவின் காதலிகள் என்பதும் உங்களுக்குத் தெரியும். ஆத்மாக்கள் அனைவரும் அவரை நினைவு செய்கின்றனர், உங்களை திரும்பவும் அழைத்துச் செல்ல அவர் வந்துள்ளார். அவர் கூறுகிறார்: என்னைப் பின்பற்றுங்கள், நான் உங்களைத் திரும்பவும் என்னுடன் அழைத்துச் செல்வேன். எவ்வாறு அவரைப் பின்பற்றுவது எனவும் அவர் விளங்கப்படுத்துகின்றார்: நான் தூய்மையானவர், நீங்கள் தூய்மை அற்றவர்கள் என்பதுடன், நீங்கள் நிச்சயமாகத் தூய்மையாகவும் வேண்டும். நீங்கள் நிச்சயமாக அவரைப் பின்பற்ற வேண்டும். விகாரமானவர்களால் அவரைப் பின்பற்ற முடியாது. என்னைப் பின்பற்றுவதற்கு நீங்கள் என்னைப் போன்று தூய்மையாக வேண்டும். தூய்மை அற்றவர்களை நான் என்னுடன் அமைதிதாமத்திற்குத் திரும்பவும் அழைத்துச் செல்வேனா? முக்தியைப் பெறுவதற்காகப் பல மனிதர்கள் பக்தி, தபஸ்யா, தானதர்மங்கள் செய்கின்றனர். ஏனெனில் இங்கு அவர்கள் துன்பத்தை அனுபவம் செய்வதனால் வீட்டிற்குச் செல்ல விரும்புகின்றனர். தந்தை கூறுகிறார்: நீங்கள் நிச்சயமாகத் தூய்மையாக வேண்டும். நான் தூய்மையானவர், அதனாலேயே நான் உங்களைத் தூய்மை ஆக்குகிறேன். நான் பிரம்மாவின் சரீரத்தில் பிரவேசிக்கிறேன். நானே படைப்பவர், நான் இந்தப் பிரம்மாவின் சரீரத்தில் பிரவேசிக்கிறேன். பிரம்மாவின் மூலம் தந்தை தேவ தர்மத்தை ஸ்தாபிப்பதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. நீங்கள் பிரம்மாகுமாரர்களும், குமாரிகளும் ஆவீர்கள். நீங்கள் சிவபாபாவைப் பின்பற்ற வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். தந்தை கூறுகிறார்: என்னை நினைவு செய்யுங்கள், அப்பொழுது நான் உங்களைத் தூய உலகிற்கு அழைத்துச் செல்வேன் என உங்களுக்கு நான் சத்தியம் செய்கிறேன். வேறெந்த வழியும் இல்லை. “ஓ தூய்மையாக்குபவரே!” என அவர்கள் கூறும்பொழுது, அவர்களது பார்வை, மேல் நோக்கி அல்லது நீரை நோக்கிச் செல்கிறது. கங்கை தூய்மையாக்குபவர் அல்ல. அது கடலிலிருந்து உருவாகியுள்ள நதியே. உங்களது வாலையே அவர்கள் பற்றிப் பிடிக்க வேண்டும். தந்தை கூறுகிறார்: நீங்கள் தூய்மையாகி, என்னைப் பின்பற்ற வேண்டும், அப்பொழுதே உங்களால் என்னுடன் வீட்டிற்குத் திரும்பிச் செல்ல முடியும். தந்தை கூறுகிறார்: நீங்கள் என்னுடனேயே வசித்தீர்கள், பின்னர் நீங்கள் 84 பிறவிச் சக்கரத்தைச் சுற்றி வந்து, இப்பொழுது தூய்மை அற்றவர்கள் ஆகியுள்ளீர்கள். இப்பொழுது மீண்டும் ஒருமுறை என்னை நினைவுசெய்யுங்கள், நீங்கள் தூய்மை ஆகுவீர்கள்! சந்நியாசிகளும் இல்லறத்தவர்களுக்குக் கூறுகின்றனர்: என்னைப் பின்பற்ற வேண்டுமானால், உங்களது வீட்டையும் குடும்பத்தையும் துறவுங்கள். தந்தை கூறுகிறார்: நான் பரந்தாமத்திலேயே வசிக்கின்றேன். நீங்களும் என்னுடன் அங்கு செல்ல விரும்புவீர்களா அல்லது இங்கு நச்சுக்கடலில் இருக்க விரும்புகிறீர்களா? நீங்கள் அழைத்தீர்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! தந்தை இப்பொழுது வந்து விட்டார், அவர் உங்களைத் திரும்பவும் தன்னுடன் அழைத்துச் செல்ல உள்ளார். நான் ஒவ்வொரு சக்கரத்திலும் வந்து உங்களைத் திரும்பவும் என்னுடன் அழைத்துச் செல்கிறேன். பின்னர் சத்தியயுகத்தில் நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கின்றீர்கள். இந்த இலக்ஷ்மியும் நாராயணனும் சுவர்க்க அதிபதிகளாக இருந்தனர். யார் அவர்களுக்கு அதிகளவு சந்தோஷத்தைக் கொடுத்தவர்? தந்தையாகிய சுவர்க்கக் கடவுளே ஆவார். தந்தை உங்களுக்கு நினைவூட்டுகிறார்: நீங்கள் எனது பிறந்த தினத்தைக் கொண்டாடுகிறீர்கள். பாரத மக்கள் அனைவரும் பரமாத்மாவாகிய பரமதந்தையின் பிறந்த தினத்தைக் கொண்டாடுகின்றனர். இது எனது பிறப்பிடம். கிறிஸ்தவர்கள் இதனை ஏற்றுக் கொள்வதில்லை. அவர்கள் கிறிஸ்துவை மாத்திரமே நம்புகின்றனர். பாரத மக்கள் சிவனின் பிறந்ததினத்தைக் கொண்டாடுகின்றனர். இதுவே அனைவரையும் தூய்மையாக்குபவராகிய தந்தையின் பிறப்பிடம் ஆகும். தந்தை அனைவருக்கும் சந்தோஷத்தை அருள்கிறார். அவரே அனைவருக்கும் விடுதலை அளிக்கின்றார். ஆகவே பாரதம் மிக மேன்மையானது. நாடகத்திற்கேற்ப, எனது குழந்தைகள் அனைவரும் சந்தோஷம் அற்றிருக்கும் பொழுது, நான் வந்து, அவர்களுக்கு அவர்களின் ஆஸ்தியை வழங்குகிறேன் என்பது தந்தைக்குத் தெரியும். தந்தையே ஞானக்கடலும், சந்தோஷக்கடலும் ஆவார். அவர் குழந்தைகளான உங்களுக்கு உங்களது ஆஸ்தியைக் கொடுக்கிறார். அவர் கூறுகிறார்: என்னைப் பின்பற்றுங்கள்! நீங்கள் விகாரமானவர்கள் என்றும், அதனாலேயே உங்கள் சரீரங்களும் விகாரம் நிறைந்தவையாக இருக்கின்றன என்றும் ஆத்மாக்களாகிய உங்களுக்குத் தெரியும். ஆத்மாக்களாகிய நீங்கள் சத்தியயுகத்தில் தூய்மையாக இருப்பதால், தூய சரீரங்களையும் பெறுகின்றீர்கள். தந்தை இப்பொழுது கூறுகின்றார்: குழந்தைகளே, தூய்மை ஆகுங்கள்! நினைவின் மூலம் மாத்திரமே, நீங்கள் தமோபிரதானில் இருந்து சதோபிரதானாக ஆகுவீர்கள். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தையிடம் இருந்து சுவர்க்க ஆஸ்தியைக் கோருவதற்கு, ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் சகோதரர்கள் என்பதை உறுதியாக்கிக் கொள்ளுங்கள். ஒருவரோடு ஒருவர் பெருமளவு அன்புடன் வாழுங்கள். அனைவரை விடவும் தந்தை அன்பானவராக இருப்பதைப் போன்று, நீங்களும் அவ்வாறே அன்பானவர்கள் ஆகுங்கள்.2. தந்தையைப் போல் தூய்மையானவர்களாகி, அவரை முழுமையாகப் பின்பற்றுங்கள். வீடாகிய, அமைதி தாமத்திற்குத் தந்தையுடன் திரும்பிச் செல்வதற்கு, நீங்கள் நிச்சயமாகத் தூய்மையாக வேண்டும்.
ஆசீர்வாதம்:
நீங்கள் இந்த ஞானத்தை அருள்பவராகவும் ஆசீர்வாதங்களை அருள்பவராகவும் ஆகி, பலவீனமான ஆத்மாக்களை சக்திகளின் வலிமையால் நிரப்புவீர்களாக.தற்சமயம், பலவீனமான ஆத்மாக்களுக்கு உயரப் பாய்வதற்காகப் போதுமானளவு பலம் இருப்பதில்லை. அவர்களுக்கு ஏதாவது மேலதிக வலிமை தேவைப்படுகிறது. எனவே, விசேடமான ஆத்மாக்களான நீங்கள் அவர்களை உயரப் பாயச் செய்வதற்காக விசேடமான சக்தியால் உங்களை நிரப்பிக் கொள்ள வேண்டும். இதற்கு, இந்த ஞானத்தை அருள்பவராக இருப்பதுடன்கூடவே, நீங்கள் சக்திகளின் ஆசீர்வாதங்களை அருள்பவராகவும் ஆகவேண்டும். படைப்பவர் ஒருவர் தனது படைப்பின் மீது ஆதிக்கம் செலுத்துவார். ஆதனால் ஆசீர்வாதங்களை அருள்பவராகி, உங்களின் படைப்பிற்கு சகல சக்திகளின் ஆசீர்வாதங்களை வழங்குங்கள். இப்போது இந்தச் சேவை இடம்பெறுவதற்கான தேவை உள்ளது.
சுலோகம்:
ஒவ்வொரு விளையாட்டையும் ஒரு பற்றற்ற பார்வையாளராக இருந்து அவதானியுங்கள். நீங்கள் பாதுகாப்பாக இருப்பதுடன் உங்களையும் இரசிப்பீர்கள்.அவ்யக்த சமிக்கை: எரிமலை ஸ்திதியில் இருந்தவண்ணம் சக்திவாய்ந்த நினைவை அனுபவம் செய்யுங்கள்.
மகாதபஸ்வி ஆத்மாக்களான நீங்கள் உங்களின் சக்திவாய்ந்த, எரிமலை நினைவினூடாக பேறுகளின் கதிர்களை அனுபவம் செய்வதுடன் மற்றவர்களுக்கும் அந்த அனுபவத்தை வழங்க வேண்டும். உங்களின் தபஸ்வி ரூபம், மற்றவர்களுக்கு வழங்கும் ரூபம் ஆகும். எவ்வாறு சூரியன் உலகிற்கே ஒளியையும் ஏனைய அழியக்கூடிய பேறுகளின் அனுபவத்தையும் வழங்குகிறதோ, அவ்வாறே, உங்களின் தபஸ்வி ரூபத்தால் தொடர்ந்து அமைதி மற்றும் சக்தியின் கதிர்களை வழங்குங்கள்.