01.09.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
இனிய குழந்தைகளே, தர்மம் வீட்டிலேயே ஆரம்பம் ஆகுகிறது. இந்த ஞானத்தை உங்கள் குடும்ப அங்கத்தவர்களுக்குக் கொடுங்கள். உங்களுக்குச் சமமமானவர்களுக்கு நன்மையளியுங்கள்.
கேள்வி:
எந்த ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதனால், குழந்தைகளாகிய உங்களின் ஸ்திதியை நிலையானதாகவும், ஸ்திரமாகவும் ஆக்க முடியும்?பதில்:
உங்கள் ஸ்திதியை நிலையானதாகவும், ஸ்திரமானதாகவும் ஆக்குவதற்கான தந்தையின் ஸ்ரீமத்: குழந்தைகளே, தினமும் அதிகாலையில் எழுந்திருந்து, தந்தையைப் மிகவும் அன்புடன் நினைவு செய்யுங்கள். உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, பாபா உங்களுக்குக் கூறுகின்ற அனைத்தையும் செவிமடுங்கள். நீங்கள் நினைவு செய்யாதுவிடின், உங்களுக்குப் பயனற்ற, வீணான எண்ணங்களே ஏற்படும். இதனாலேயே பாபாவின் அறிவுரையாவது: குழந்தைகளே, நடந்தும், உலாவியும், உணவு தயாரிக்கும் போதும், உண்ணும் பொழுதும், ஒரேயொரு பாபாவை மாத்திரமே நினைவு செய்வீர்கள் எனத் தினமும் அதிகாலையில் எழுந்திருந்து, உங்களுக்குள் சத்தியம் செய்யுங்கள்.ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தையே ஆத்மாக்கள் அனைவரினதும் தந்தை என்பதையும், அவரே அதிமேலானவர் என்பதையும் இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். அவருக்கே மக்கள் கூறுகிறார்கள்: ஓம் நமசிவாய. அவர்கள் அவரை “தந்தை” எனவும் அழைக்கிறார்கள். அந்தத் தந்தையே சுவர்க்கத்தைப் படைப்பவர் ஆவார். அவர் தூய்மையாக்குபவர் எனவும், ஞானக்கடல் எனவும் அழைக்கப்படுகிறார். நீங்கள் இப்பொழுது அவருடன் அமர்ந்திருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்கிறீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் இதனை விளங்கப்படுத்த வேண்டும். ஒரு கீதைப் பாடசாலையில் அவர்கள் ஆறு அடி உயரமான ஸ்ரீகிருஷ்ணரின் படத்தை வைத்திருக்கிறார்கள். உண்மையில், ஸ்ரீகிருஷ்ணர் ஒரு சிறு குழந்தையாகக் காட்டப்பட்ட போதிலும், அவரே கீதையின் கடவுள் என்றும் கூறுகிறார்கள். அவ்வாறாயின், அவர் எப்பொழுது கீதையைக் கூறினார்? அவருடைய குழந்தைப் பருவத்திலா அல்லது அவர் ஆறு அடி உயரமாக இருந்த பொழுதா? இராதையும், ஸ்ரீகிருஷ்ணரும் ஒரு ஜோடி ஆவார்கள். இராதை, கிருஷ்ணருக்கு என்ன உறவுமுறை? அவர்கள் இராதையை இறைவி எனவும், ஸ்ரீகிருஷ்ணரை இறைவன் எனவும் அழைக்கிறார்கள். அவர்களுக்கு இடையிலுள்ள உறவுமுறை என்ன? இதனை எவரும் அறியார். ஸ்ரீகிருஷ்ணர் கீதையின் செய்தியைக் கொடுத்திருப்பின், அவர் அதனை எப்பொழுது கொடுத்தார்? நீங்கள் அத்தகைய வினாக்களை வினவும்பொழுது, பிரம்மாகுமார்களையும் குமாரிகளையும் தவிர, வேறு எவராலும் அவர்களை வினவ முடியாது என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள். மகாராஜாக்கள் அனைவரும் சந்நியாசிகளைக் காணும்போது நிச்சயமாக வணங்குகிறார்கள். இந்தக் கேள்விகளைக் கேட்கின்ற தைரியம் அவர்களில் எவருக்கும் இல்லை. உங்களுக்குத் தைரியம் உள்ளது. பிரம்மாகுமார்களிடம் அதிகளவு ஞானம் உள்ளது என்றும், அவர்களால் படைப்பவரினதும், படைப்பினதும் ஞானத்தைக் கொடுக்க முடியும் அவர்கள் அவருடைய வாழ்க்கைச் சரிதத்தைக் கூறுகிறார்கள் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். உங்களால் அவர்களிடம் கேட்க முடியும்: அவர் எப்போது வந்தார்? அவர்கள் சிவனின் பிறந்ததினத்தைக் கொண்டாடி, அவரை வழிபடுவதனால், அவர் வந்திருக்க வேண்டும். இதனாலேயே சிவனின் பிறந்ததினம் கொண்டாடப்படுகிறது. சிவபாபா அசரீரியானவர், அவருக்கெனச் சொந்தமாக ஒரு சரீரம் இல்லை. மக்கள் சிவனின் பிறந்ததினத்தைக் கொண்டாடுகிறார்கள், ஆகவே அவர் நிச்சயமாக ஒரு சரீரத்தில் பிரவேசித்திருக்க வேண்டும். அசரீரியானவருக்கு எவ்வாறு ஒரு பிறந்ததினம் இருக்க முடியும்? ஆத்மாக்கள் அமரத்துவமானவர்கள். பிறப்பு, இறப்பு உள்ளபொழுதே, ஒரு பிறந்ததினம் கொண்டாடப்படுகிறது. ஆனால் ஆத்மாக்கள் அழிவற்றவர்கள் என்னும் காரணத்தினால், ஓர் ஆத்மாவுக்குப் பிறந்ததினம் இருக்க முடியாது. அது ஆத்மாவின் பிறந்ததினம் என உங்களால் கூற முடியாது. சிவன் அசரீரியானவர், அவரைக் காட்டுவதற்கு, மக்கள் ஒரு நீள்கோள உருவத்தை வைத்திருக்கிறார்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு இந்த எண்ணங்கள் இருக்க வேண்டும். நீங்கள் இங்கிருந்து உங்கள் வீட்டுக்குச் சென்று, நீங்கள் உங்களின் வேலையிலோ அல்லது வியாபாரத்திலோ ஈடுபடும்பொழுது, இவ்விடயங்கள் அனைத்தும் உங்கள் புத்தியிலிருந்து நீங்கி விடுகின்றன. நீங்கள் இவ்விடயங்களைக் கடைவதில்லை. பலர் தங்களுடைய குருமார்களின் சங்கிலியில் சிக்கியுள்ளார்கள், கேட்கவும் வேண்டாம்! அப்பாவி, உதவியற்ற தாய்மார்கள் கள்ளங்கபடம் அற்றவர்கள் ஆவார்கள். அவர்களிடம் நீங்கள் வினவலாம்: மக்கள் சிவனின் பிறந்ததினத்தைக் கொண்டாடுகிறார்கள், ஆனால் அவர் யார்? அவர் எப்பொழுது வந்தார்? அவர் என்ன செய்தார்? ஜெயந்தி என்றால் ஒரு பிறப்பு என்பதாகும். அவர்கள் அசரீரியான சிவனின் பிறப்பைக் கொண்டாடுகிறார்கள். அவர் அசரீரியானவர் என்பதால், அவரது பிறந்ததினத்தை எவ்வாறு கொண்டாட முடியும்? அவர் யாரில் பிரவேசிக்கிறார்? ஓர் ஆத்மா சரீரம் ஒன்றில் பிரவேசிப்பதே, ஒரு பிறப்பு என்று கூறப்படுகிறது. ஆத்மா என்றால் ஆத்மாவே. ஓர் ஆத்மா சரீரத்தில் பிரவேசிக்கும் பொழுது, அந்த ஆத்மா ஒரு பாகத்தை நடிப்பதற்காக, ஒரு சரீரத்தை எடுத்துள்ளார் எனக் கூறப்படுகிறது. அவர் அசரீரியானவர், ஆகவே, அவர் எவ்வாறு பிறப்பு எடுத்தார்? அவர் யாரில் பிரவேசிக்கிறார்? அவர் பரமாத்மா என அழைக்கப்படுகிறார். இதனை எவரும் அறியார். அவர்கள் பல சமயநூல்களைக் கற்றிருந்தாலும், அவர்கள் எதனையும் அறியாதுள்ளார்கள். நீங்கள் இப்பொழுது இந்த ஞானம் அனைத்தும் நிறைந்தவர்கள் ஆகுகிறீர்கள். நீங்கள் இப்பொழுது இந்த ஞானத்தை மாத்திரமே கூற வேண்டும். சிலர் இரண்டு முதல் மூன்று வருடங்களுக்கு வந்த பின்னர் அறியாமையின் ஆதிக்கத்துக்கு உட்படுகிறார்கள். பாபா இப்பொழுது அறியாமையை அகற்றி, உங்களை இந்த ஞானத்தைக் கிரகிக்கத் தூண்டுகிறார். குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது இந்த ஞானம் கொடுக்கப்படுகிறது. எவ்வாறாயினும், கணவன் இந்த ஞான மார்க்கத்தில் இருந்து, மனைவி அறியாமைப் பாதையில் இருந்தால், அது அன்னமும், நாரையும் சேர்ந்திருப்பது போன்றதாகும். இதனாலேயே முதலில் மனைவிக்கு இந்த ஞானம் கொடுக்கப்பட வேண்டும். ஒரு மனைவி தனது கணவனே தனது கணவனும், தனது குருவும் என்று நம்புகிறார், ஆகவே மனைவி தனது குருவின் வழிகாட்டல்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும். இது இங்கே இவ்வுலகத்துக்குப் பொருந்துகிறது. அங்கே அனைவரும் அன்புடன் பழகுவதனால், வழிகாட்டல்களுக்குக் கீழ்ப்படிதல் அல்லது கீழ்ப்படியாதிருத்தல் என்ற கேள்வியே கிடையாது. அங்கே அவ்வாறு எதுவுமில்லை. இதனாலேயே “தர்மம் வீட்டிலேயே ஆரம்பம் ஆகுகிறது” எனக் கூறப்பட்டுள்ளது. மனைவி இந்த ஞான மார்க்கத்தில் இருந்து, கணவன் இல்லாதுவிடின், அவளால் என்ன செய்ய முடியும்? அவள் இந்த ஞானத்தை ரீங்காரமிட வேண்டும். குழந்தைகளான நீங்களும் இந்த ஞானத்தை ரீங்காரமிட வேண்டும். நீங்கள் உங்களுக்குச் சமமானவர்களுக்கு நன்மையளிக்க வேண்டும். தந்தையை நினைவு செய்யுமாறு நீங்கள் அவர்களுக்குக் கூற வேண்டும். யுத்தம் நேர்முன்னிலையில் உள்ளது, பாபா வந்துள்ளார். மக்கள் அழைக்கிறார்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! தூய்மையற்ற உலகம் அழிக்கப்பட வேண்டும். ஆகவே, நீங்கள் மீண்டும் ஏன் தூய்மை அற்றவர்கள் ஆகுகிறீர்கள்? ஒரு பெண் இந்த ஞானத்தில் இருந்தால், அவளுக்குச் சமமானவர்களுக்கு நன்மை அளிப்பது அவளுடைய கடமையாகும். நீங்கள் இப்பொழுது 21 பிறவிகளுக்கான உங்கள் முழு இராச்சியத்தையும் தந்தையிடமிருந்து கோருகிறீர்கள். எவராலும் உங்களைத் தொட முடியாது. நீங்கள் முழு உலகினதும் அதிபதிகள் ஆகுகிறீர்கள். எவ்வளவு வித்தியாசம் உள்ளதெனப் பாருங்கள்! உங்களுக்கு அத்தகையதோர் ஆஸ்தியைக் கொடுப்பவரின் நினைவு உங்களுக்குள் அதிகளவில் இருக்க வேண்டும். இங்கே, நாள் முழுவதும் சிவபாபாவை நினைவு செய்யாத பலர் உள்ளார்கள். அவர்கள் சதா தங்களின் குடும்பத்தினதும் வியாபாரத்தினதும் குழப்பங்களில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில், அவர்கள் அதிகாலையில் எழுந்திருந்து, தந்தையை மிகவும் அன்புடன் நினைவு செய்ய வேண்டும். பாபா, நான் நிச்சயமாக உங்களிடம் இருந்து என்னுடைய ஆஸ்தியைக் கோருவேன் எனச் சத்தியம் செய்கிறேன். பாபா, நீங்கள் மிகவும் இனிமையானவர்! உங்களை நினைவு செய்வதனால், எங்கள் பாவங்கள் அழிக்கப்படும். உங்களுக்குள்ளே பேசுங்கள். இதுவே இந்த ஞானக்கடலைக் கடைதல் என்று அழைக்கப்படுகிறது. ‘பாபா, நான் நிச்சயமாக உங்களிடம் இருந்து என்னுடைய முழு ஆஸ்தியையும் கோருவேன்’. இப்பொழுது நாங்கள் நிச்சயமாகத் தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆகவேண்டும். அப்பொழுதே நாங்கள் எங்களின் சத்தியயுகத்து இராச்சியத்தைக் கோருவோம். ‘பாபா, நான் சதா உங்களை நினைவு செய்வேன். 63 பிறவிகளில், நாங்கள் பல பாவங்களைச் செய்துள்ளோம். எங்கள் தலைகளின் மீது பெரும் சுமை உள்ளது. இதனாலேயே பாபா, நாங்கள் உங்களை மிகவும் அதிகளவு நினைவு செய்கிறோம்’. பாபா, நாங்கள் உணவு சமைக்கும் பொழுது அல்லது உலா போன்றவற்றுக்குச் செல்லும் பொழுது, உங்களின் நினைவில் நிச்சயமாக நிலைத்திருப்போம். இவ்வாறு பாபாவுடன் பேசும்பொழுது, நீங்கள் சத்தியம் செய்தால், உங்கள் பாவங்கள் தொடர்ந்தும் அழிக்கப்படும். பாபா, நான் உங்கள் நினைவில் உணவு தயாரிப்பேன். நான் நிச்சயமாகச் சதோபிரதான் ஆகவேண்டும். நான் நாளை எனது சரீரத்தை விட்டு நீங்கினால், யாருக்குத் தெரியும், நான் சதோபிரதானாக ஆக முடியாதிருக்கலாம். மரணத்தையிட்டு அச்சம் உள்ளது! பாபா, நான் நிச்சயமாக உயிருடன் இருக்கும் பொழுதே, உங்களிடம் இருந்து என்னுடைய ஆஸ்தியைக் கோருவேன். பின்னர், நாள் முழுவதும் நீங்கள் பாபாவை எவ்வளவு நேரம் நினைவு செய்தீர்கள் எனச் சோதிக்க வேண்டும். எல்லாச் சந்தர்ப்பங்களிலும் நீங்கள் நிச்சயமாக நினைவு யாத்திரையில் நிலைத்திருக்க வேண்டும். நீங்கள் உங்களுடைய இல்லறத்திலும் வசித்து, அனைவருடனும் சாதுரியமாகப் பழக வேண்டும். தீவிர முயற்சி செய்வதில் மும்முரமாக இருந்தால், உங்களால் நினைவில் நிலைத்திருக்க முடிவதுடன், உங்கள் ஆயுட்காலமும் அதிகரிக்கும். எதிர்காலத்தில் உங்கள் ஆயுட்காலம் அதிகரிக்கும். நீங்கள் நினைவில் நிலைத்து இருக்காது விட்டால், உங்கள் அந்தஸ்து குறைவாக இருக்கும். நீங்கள் முயற்சி செய்து, தந்தையிடம் இருந்து உங்கள் ஆஸ்தியைக் கோருவதுடன், சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுபவர்களாகவும் ஆகவேண்டும். பல கன்னியாஸ்திரிகள் இந்துக்களைக் கிறிஸ்துவர்களாக ஆக்குவதற்கு அலைந்து திரிகிறார்கள். அவர்கள் மக்களின் கடைகளுக்கும், வீடுகளுக்கும் சென்று, தங்கள் கிறிஸ்துவத்தில் பெருமளவு சந்தோஷம் உள்ளது என்று கூறி, அவர்கள் அனைவரையும் ஒரு பைபிளை வாங்குமாறு வேண்டுகிறார்கள். அவர்களுக்கு ஒரு மிஷன் உள்ளது, பௌத்தர்களுக்கும் ஒரு மிஷன் உள்ளது, அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை இந்துக்கள் புரிந்து கொள்வதில்லை. எங்கள் இந்து சமயத்தினரை அவர்கள் கிறிஸ்துவர்களாக மாற்றுகிறார்கள். நீங்கள் கண்காட்சிகளில் அதிகளவுக்கு விளங்கப்படுத்துகிறீர்கள். சிலர் தங்களின் அபிப்பிராயங்களை உங்களிடம் எழுத்தில் எழுதிக் கொடுத்தாலும், அவர்கள் வீட்டுக்குச் சென்றவுடன், அனைத்தும் முடிவடைகிறது. இதனையிட்டே, இரத்தினங்களைக் குரங்குகளின் முன்னிலையில் வைத்த பொழுது, கற்கள் என்று எண்ணி அவற்றை எறிந்தன என்று நினைவு கூரப்படுகிறது. இங்கேயும், அவர்கள் அழிவற்ற இந்த ஞான இரத்தினங்களைக் கற்கள் எனக் கருதி அவற்றை அப்பால் வீசுகிறார்கள். அவர்கள் எதனையும் புரிந்து கொள்வதில்லை. ஆம், இந்தத் தர்மத்துக்கு உரியவர்களை மாத்திரமே அவை தொடும். இது மிகவும் இலகுவானதாகும். தந்தையே சுவர்க்கத்தைப் படைப்பவர் ஆவார். அவர் ஒருமுறை மாத்திரமே பாரதத்தில் வருகிறார். தந்தை கூறுகிறார்: நீங்கள் தூய்மையாக்குபவராகிய தந்தையான என்னை வருமாறு அழைத்;தீர்கள். இப்பொழுது நான் உங்களைச் சுவர்க்க அதிபதிகள் ஆக்குவதற்கு வந்துள்ளேன். நீங்கள் நிச்சயமாக இந்தச் சீரழிந்த உலகை ஒரு மேன்மையான உலகமாக ஆக்குவீர்கள் எனவும் கூறுகிறீர்கள். நீங்கள் அனைவரும் இப்பொழுது நரகவாசிகளாக இருக்கிறீர்கள். நீங்கள் அனைவரும் சிவபாபாவின் ஸ்ரீமத்தைப் பின்பற்றுகிறீர்கள். கடவுள் சிவன் பேசுகிறார்: நான் உங்களை அரசர்க்கு எல்லாம் அரசர்களாக, சுவர்க்க அதிபதிகளாக ஆக்குகிறேன். இது கீதையில் மிகவும் தெளிவாக எழுதப்பட்டுள்ளது: அவர் கூறுகிறார்: நான் சாதுக்களையும், புனிதர்களையும் கூட ஈடேற்றுகிறேன். நீங்கள் இதனை அவர்களுக்குக் கூற வேண்டும். அவர்கள் அழைக்கிறார்கள்: சீதைக்கு உரியவரான இராமரே, தூய்மையாக்குபவர் ஆவார். அவர்கள் அதன் அர்த்தத்தைக் கூடப் புரிந்து கொள்வதில்லை. அனைவரும் பக்தர்களே, அதாவது, சீதைகள் ஆவர். அவர்கள் அழைக்கிறார்கள்: ஓ இராமா, வந்து சீதைகளாகிய எங்களை ஈடேற்றுங்கள்! பின்னர் அவர்கள் இராகவ குலத்துக்கு (மேன்மையான குலம்) உரியவராகிய அரசர் இராமரின் பெயரைச் செபிக்கிறார்கள். உண்மையில், அது அரசர் இராமருக்குரிய விடயமல்ல. அவர்கள் சிவனின் பெயருக்குப் பதிலாக, ஸ்ரீகிருஷ்ணரின் பெயரை இட்டுவிட்டதே, பிரதானமான தவறாகும். அவர்கள் ஏன் ஸ்ரீஇராமரையும், ஸ்ரீகிருஷ்ணரையும் நீலநிறமாகச் சித்தரிக்கிறார்கள் என நீங்கள் அவர்களை வினவ வேண்டும். அவர்கள் சத்திய, திரேதா யுகங்களில் அழகாக இருந்து, பின்னர் அவலட்சணம் ஆகுகிறார்கள். முதலில் சத்தியயுகமும், பின்னர் திரேதாயுகமும் அதன்பின்னர் துவாபரயுகமும் பின்னர் கலியுகமும் உள்ளன. இப்பொழுது கலியுகம் உள்ளது. சத்தியயுகமாக இருந்தபொழுது, நீங்கள் அதிகளவு மரியாதையைப் பெற்றீர்கள். நீங்கள் சென்று, அவர்களுக்குச் சாதுரியமாக விளங்கப்படுத்த வேண்டும். அவர்கள் அத்தனை விரைவாகத் தங்கள் பிடிவாதத்தைக் கைவிட மாட்டார்கள். ஒரு மரம் வளர்ந்து பழையதாகும் பொழுது, அது முற்றிலும் உக்கிய நிலையை அடைகிறது. இவ்வுலகத்துக்கும் ஓர் ஆயுட்காலம் உள்ளது. புதிய உலகமும், பழைய உலகமும் உள்ளன. பழையது என்றால் தமோபிரதான் உலகமாகிய, கலியுகம் என்று அர்த்தம். இவ்வுலகத்தில் ஒரு நபர் கூட சதோபிரதானாக இருக்க முடியாது. இப்பொழுது அனைத்தும் தமோபிரதானாக உள்ளன, அவை முடிவடைய வேண்டும். புதிய உலகத்தை ஸ்தாபிப்பவர் யார்? அதே தந்தையே ஆவார். பிரளயம் நடைபெறுகிறது என்பதல்ல. மக்கள் தூய்மை அற்றவர்கள் ஆகும்பொழுது, தந்தையை அழைக்கிறார்கள். அவர்கள் கூறுகிறார்கள்: வந்து எங்களைத் தூய்மையாக்குங்கள்! அவர் நிச்சயமாகப் பழைய உலகத்தில் வருவார். அவர் தூய்மையாக்குபவர் என்று அழைக்கப்படுவதனால், அவர் நிச்சயமாக இறுதியில் வருவார். அவரே கூறுகிறார்: நான் உலகத்தைத் தூய்மை ஆக்;குவதற்காக, ஒவ்வொரு கல்பத்திலும் சங்கமயுகத்தில் வருகிறேன். இப்பொழுது சங்கமயுகம் ஆகும். இப்பொழுது தந்தை அனைவரையும் சத்கதிக்குள் அழைத்துச் செல்கிறார். ஆகவே, நீங்கள் அத்தகையதொரு தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும். நீங்கள் உங்களுடைய சொந்த ஸ்திதியை உருவாக்க வேண்டும். அதிகாலையில் எழுந்திருந்து தந்தையை நினைவு செய்யுங்கள். உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள். இவையே சரீரத்தின் அங்கங்கள் ஆகும். தந்தை கூறுகிறார்: ஓ குழந்தைகளே, நான் உங்களுக்குக் கூறுவதைச் செவிமடுங்கள். முக்தியை அல்லது ஜீவன்முக்தியைப் பற்றி வேறு எவரும் கூறுகின்ற எதனையும் செவிமடுக்க வேண்டாம். தந்தை உங்களைத் தூய்மை ஆக்குவதற்குப் பரந்தாமத்திலிருந்து வந்துள்ளார். ஆகவே, நீங்கள் ஏன் பழைய சமயநூல்களை நினைவு செய்கிறீர்கள்? மக்கள் கடவுளை அடைவதற்காகப் பக்தி செய்கிறார்கள். அவரே தந்தையும், அனைவருக்கும் சத்கதியை அருள்பவரும் ஆவார். தந்தையைத் தவிர, எவராலும் உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்க முடியாது. எவ்வாறு இலக்ஷ்மியும் நாராயணனும் தங்கள் இராச்சியத்தைப் பெற்றார்கள்? ஆத்மா ஒரு புள்ளி எனவும், அது ஓர் அற்புதமான பிரகாசிக்கும் நட்சத்திரம் எனவும் அவர்கள் கூறுகிறார்கள். தந்தை விளங்கப்படுத்துகிறார்: நீங்கள் என்னை “பரமாத்மா” என்று அழைக்கிறீர்கள். உங்கள் லௌகீகத் தந்தையை நீங்கள் “பரமாத்மா” என்று அழைப்பீர்களா? பரந்தாமத்தில் வசிப்பவராகிய கடவுளே, “பரமாத்மா” என்று அழைக்கப்படுகிறார். அவர் உங்களுடைய தந்தை ஆவார். அவர் வந்து இவரில் பிரவேசிக்கிறார். ஒரு குரு தனது சீடருக்கு அடுத்ததாக அமர்கிறார். இவ்விடயங்கள் சமயநூல்களில் குறிப்பிடப்படவில்லை. அவர் உங்களுடைய தந்தை என்பதை நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். 5000 வருடங்களுக்கு முன்னரும் தந்தை உங்களுக்கு யோகத்தைக் கற்பித்தார். அவர் கூறினார்: என்னையும், விஷ்ணு தாமத்தையும் நினைவு செய்யுங்கள். ஆகவே, அவர் நிச்சயமாக உங்களுக்கு இந்தச் சங்கமயுகத்திலேயே கூறுவார். சத்தியயுகத்தில் ஒரு தர்மமே இருந்தது. ஆகவே, அங்கு நிச்சயமாக ஒரு தர்மமே மீண்டும் இருக்கும். அந்தச் சமயங்கள் அனைத்தும் அழிக்கப்படும். இது அந்த அதே நேரமே ஆகும். தந்தை கூறுகிறார்: என்னை நினைவு செய்யுங்கள், நான் உங்களை உலக அதிபதிகள் ஆக்குவேன். தந்தையின் நினைவில் இருப்பதனால் மாத்திரமே, நீங்கள் தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆகுவீர்கள். தந்தை கூறுகிறார்: நான் மிகவும் நன்றாகச் சேவை செய்கின்ற குழந்தைகளை நினைவு செய்கிறேன், ஏனெனில் அவர்கள் என்னுடைய உதவியாளர்கள் ஆவார்கள். ஏனைய பலருக்கும் நன்மை அளிப்பவர்களை நான் நேசிக்கிறேன். உங்களுக்கு ஆஸ்தியைக் கொடுக்கின்ற ஒரேயொரு தந்தையையே நீங்கள் நேசிக்கிறீர்கள். இதனாலேயே குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் நன்றாக முயற்சி செய்ய வேண்டும். நினைவு யாத்திரையில் நிலைத்திருங்கள். பல பயனற்ற எண்ணங்களும் வரும். பக்தி மார்க்கத்தில் அவர்கள் சிவனின் காட்சியொன்றைக் காண்பதற்குத் தம்மைத் தாமே துன்புறுத்திக் கொள்கிறார்கள். அவர்கள் காட்சிகளுக்காக, அதிகளவு முயற்சி செய்கிறார்கள். இங்கே, தந்தையை நினைவு செய்வதனால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும் எனவும், பின்னர் நீங்கள் 21 பிறவிகளுக்கான ஓர் ஆஸ்தியைப் பெறுவீர்கள் எனவும் நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். காட்சிகளைக் காண்பதனால், உங்கள் பாவங்கள் அழிக்கப்பட மாட்டாது. உங்களை உலக அதிபதிகள் ஆக்குகின்ற தந்தையை நீங்கள் மிகவும் அன்புடன் நினைவுசெய்ய வேண்டும். நீங்கள் என்னவாக ஆகுகிறீர்கள் என்பது இப்பொழுது உங்கள் புத்தியில் உள்ளது. உங்கள் மறுபிறவியில் நீங்கள் இவ்வாறே ஆகுவீர்கள். இதுவே சத்தியயுகத்தின் இளவரசர்களும் இளவரசிகளும் ஆகுவதற்கான கல்லூரி ஆகும். தந்தை ஒரு தர்மத்தை ஸ்தாபிப்பதுடன், தேவ இராச்சியத்தையும் ஸ்தாபிக்கிறார். அச்சா.
இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும் ஆன்மீகத்தந்தை ஆன்மீகக்குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தை உங்களுக்குக் கூறுகின்ற முக்தியையும், ஜீவன்முக்தியையும் பற்றிய இந்த ஞான விடயங்களைச் செவிமடுத்துக் கிரகியுங்கள். ஏனைய அனைத்தையும் மறந்து விடுங்கள். உங்களுக்கும், உங்கள் லௌகீகக் குடும்பத்துக்கும் நன்மை அளியுங்கள்.2. வீணான எண்ணங்கள் அனைத்தையும் முடித்து விடுவதற்கு, அதிகாலையில் எழுந்திருந்து இந்த ஞானத்தைக் கடையுங்கள். நினைவு யாத்திரையில் மூழ்கியிருங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் இந்த ஞானத்தின் மாஸ்ரர் சூரியனாகி, இந்த ஞானத்தினதும் யோகத்தினதும் சக்திவாய்ந்த கதிர்களால் உங்களின் பழைய சம்ஸ்காரங்கள் என்ற கிருமிகள் அனைத்தையும் எரிப்பீர்களாக.எந்தவொரு தூய்மையற்ற சூழலை மாற்றுவதற்கும் பழைய சம்ஸ்காரங்கள் என்ற கிருமிகளை எரிப்பதற்கும் சதா இந்த விழிப்புணர்வைக் கொண்டிருங்கள்: நான் மாஸ்ரர் ஞான சூரியன். சூரியனின் கடமை, ஒளியைக் கொடுப்பதும் குப்பையை எரிப்பதும் ஆகும். எனவே, இந்த ஞானம், யோகம், உங்களின் மேன்மையான செயல்பாடுகளின் சக்தியால் இந்தப் பணியைத் தொடர்ந்து செய்யுங்கள். உங்களின் சக்தி குறையுமாயின், உங்களின் ஞானம் ஒளியை மட்டுமே கொடுக்கும், ஆனால் பழைய சம்ஸ்காரங்கள் என்ற கிருமிகள் அழிக்கப்பட மாட்டாது. ஆகவே, அனைத்திற்கும் முதலில், யோகா தபஸ்யாவினால் சக்திசாலி ஆகுங்கள்.
சுலோகம்:
நல்லாசிகளினதும் தூய உணர்வுகளினதும் மேன்மையான எண்ணங்கள், உங்களின் சேமிப்புக் கணக்கை அதிகரிக்கச் செய்யும்.அவ்யக்த சமிக்ஞை: இப்போது உங்களின் அருள்கின்ற ரூபத்தை வெளிப்படுத்துங்கள்.
தற்சமயம், குழந்தைகளான நீங்கள் உங்களின் கருணைநிறைந்த ரூபத்தையும் அருள்கின்ற ரூபத்தையும் வெளிப்படுத்த வேண்டும். உங்களின் பொக்கிஷக் களஞ்சியங்கள் அனைத்தும் சதா திறந்திருக்க வேண்டும். எப்போதும் உங்களின் வாழ்க்கையில் உங்களின் அருள்பவரின் ஆதியான, அநாதியான சம்ஸ்காரங்களை வெளிப்படுத்தி வைத்திருங்கள். உலகம் முழுவதும் இறை செய்தியைக் கொண்டு சென்று, தந்தையின் வெளிப்படுத்தல் என்ற செய்தியைப் பரப்பும் ஒரு தூதுவர் ஆகுங்கள். பூகோளத்தின் மீது நின்றுகொண்டு, அதிர்வலைகளைப் பரப்புவதுடன் இந்த எல்லையற்ற சேவையைச் செய்யும் ஓர் எல்லையற்ற அருள்பவர் ஆகுங்கள். நீங்கள் மகா அருள்பவர் ஆகுவீர்கள்.