01.11.26    Avyakt Bapdada     Tamil Lanka Murli    05.03.2012     Om Shanti     Madhuban


உபகாரி ரூபத்தை வெளிப்படுத்துங்கள். உங்களின் மனதால் சேவை செய்வதை அதிகரியுங்கள். தந்தையின் சகவாசம் என்ற நிறத்தால் இரட்டைப் புனிதர் (தூய்மையானவர்) ஆகுங்கள்.


இன்று, பாப்தாதா ஒவ்வொரு குழந்தையினதும் பாக்கிய ரேகைகளைப் பார்க்கிறார். அவர் நெற்றியில் பிரகாசிக்கும் நட்சத்திரத்தின் ரேகையையும் கண்களில் அன்பு மற்றும் சக்தியின் ரேகையையும் உதடுகளில் புன்னகையின் ரேகையையும் பாதங்களில் ஒவ்வோர் அடியிலும் பல்கோடிகளின் ரேகையையும் பார்க்கிறார். நீங்கள் அனைவரும்கூட உங்களின் பாக்கிய ரேகைகளைப் பார்ப்பதில் சந்தோஷம் அடைகிறீர்கள்தானே? உங்களின் இதயத்தில், ‘ஆஹா எனது பாக்கியமே!’ என்ற பாடலைப் பாடுகிறீர்கள். ஒவ்வொருவரின் நெற்றியில் பிரகாசிக்கும் தெய்வீக நட்சத்திரத்தைப் பார்க்கும்போது பாப்தாதா மகிழ்ச்சி அடைந்து தனது இதயத்தில், ஆஹா குழந்தைகளே! ஆஹா! என்ற பாடலைப் பாடுகிறார். குழந்தைகளின் இதயங்களில் என்ன பாடலை அவர் கேட்கிறார்? ‘ஆஹா பாபா! ஆஹா!’ எனவே, குழந்தைகளும் ஆஹா, தந்தையும் ஆஹா! ஆகவே, இந்த முழு ஒன்றுகூடலும் என்னவாகின்றது? ஆஹா! ஆஹா! ஆஹா! எனவே, உங்களின் பாக்கியத்தைப் பார்க்கும்போது, இப்போது நீங்கள் இருப்பதைப் போல் சதா சந்தோஷமாக இருங்கள். இப்போது மட்டுமே இந்த சங்கமயுகத்தில், நீங்கள் இந்தப் பாக்கியத்தைப் பெறுகிறீர்கள். சங்கமயுகத்தின் ஒவ்வொரு கணமும் மகத்தான பெறுமதி வாய்ந்தது. சங்கமயுகத்தின் ஒவ்வொரு கணமும் அழியாதது. ஏனென்றால், ஒவ்வொரு கணமும் 21 பிறவிகளுடன் தொடர்புடையது. தற்சமயத்தின் ஒரு கணம் 21 பிறவிகளுடன் தொடர்புடையது. எனவே சோதித்துப் பாருங்கள்: ஒரு கணம் வீணாக்கப்பட்டாலும் அது ஒரு பிறவிக்குரிய விடயம் அல்ல. ஆனால் இது 21 பிறவிகளுக்குரிய விடயம். இதனாலேயே, இதற்காக அவ்வப்போது பாப்தாதா குழந்தைகளான உங்களின் கவனத்தை ஈர்க்கிறார்: சங்கமயுகத்தின் ஒரு கணத்தை அல்லது ஓர் எண்ணத்தையேனும் வீணாக்காதீர்கள். ஏனென்றால், நீங்கள் ஒரு பிறவியை வீணாக்குகிறீர்கள் என்பதல்ல, ஆனால் நீங்கள் 21 பிறவிகளை வீணாக்குகிறீர்கள். சங்கமயுகத்தின் முக்கியத்துவத்தை ஒவ்வொரு கணமும் நினைவில் வைத்திருங்கள்.

நேரத்தை அல்லது எண்ணங்களை வீணாக்கக்கூடாது என்ற வீட்டுவேலையை பாப்தாதா அனைவருக்கும் கொடுத்தார். எனவே, நீங்கள் அனைவரும் உங்களின் வீட்டுவேலையைச் செய்தீர்களா? நீங்கள் கவனம் செலுத்தி, அதிகளவு வெற்றி அடைந்தீர்கள், உங்களின் இலட்சியத்தின் தகைமைகளைப் பெற்றுள்ளீர்கள் என்று உணர்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! அச்சா. பாண்டவர்கள் தமது கைகளை உயர்த்துகிறீர்களா? உங்களின் கைகளை உயரே உயர்த்துங்கள். இப்போது, அனைவரும் இந்த வேலையைச் செய்யவில்லை. நீங்கள் சங்கமயுகத்தின் முக்கியத்துவத்தை சதா உங்களின் புத்தியில் வைத்திருந்தால், நீங்கள் இந்தப் பணியை அழியாத தந்தையிடம் இருந்து பெற்றுள்ளீர்கள், ஒவ்வொரு கணமும் அழியாதது ஆகப் போகிறது என்பதை உங்களின் புத்தியில் வைத்திருந்தால் அது இலகுவாக நடைபெறும். ஏனென்றால், அழியாத தந்தையே உங்களுக்கு இந்த ஆசீர்வாதத்தை வழங்கி உள்ளார்.

ஒவ்வொரு பிராமணரும் ஒவ்வோர் அடியிலும் பல்கோடிகளுக்கான ரேகையை வைத்திருக்கிறார் என்று தந்தை உங்களுக்குக் கூறியுள்ளார். சிந்தித்துப் பாருங்கள்: ஒவ்வோர் அடியிலும் உங்களிடம் பல்கோடிகளின் ரேகை இருந்தால், சங்கமயுகத்தில் எத்தனை பல்கோடிகளைப் பெறுவதற்கான பொன்னான வாய்ப்பை நீங்கள் பெற்றுள்ளீர்கள்? நீங்கள் ஒவ்வொருவரும் உங்களின் இந்தப் பாக்கியத்தை உங்களின் விழிப்புணர்வில் வைத்திருக்க வேண்டும். பாப்தாதாவிற்கு என்ன வேண்டும் என்று சில குழந்தைகள் நினைக்கிறார்கள். ஒவ்வொரு குழந்தையும் இரட்டை அரசர் ஆகவேண்டும் என்றே பாப்தாதா விரும்புகிறார்: தற்சமயம் சுயத்தின் அதிபதி, எதிர்கால உலகின் ஆட்சியாளர். இரட்டை அரசர் ஆகுவதில் ஒரு குழந்தையேனும் குறைந்தவர் ஆகக்கூடாது. குழந்தைகளான உங்கள் ஒவ்வொருவருக்கும் இரட்டை இராச்சிய உரிமை உள்ளதல்லவா? உங்கள் தலைகளால் ஆமோதியுங்கள்! ஒவ்வொரு குழந்தைக்கும் இரட்டை இராச்சிய உரிமை இருக்கிறதா? அப்படியாயின் தந்தை மிகவும் சந்தோஷப்படுகிறார்.

பாப்தாதா ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குழந்தையின் பதிவேட்டையும் பார்க்கிறார். அவர் எதைப் பார்த்தார்? நீங்கள் ஒவ்வொருவரும் இதை உங்களின் இதயத்தில் அறிந்திருக்க வேண்டும். நீங்கள் இராச்சிய அதிபதிகள் ஆகியுள்ளீர்கள். ஆனால் தற்சமயம், உங்களிடம் சுய இராச்சியம் மட்டுமே உள்ளது. சுய இராச்சியம் என்றால் உங்களின் மனம், புத்தி, சமஸ்காரங்களை உங்களின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கக் கூடியதாக இருத்தல் என்று அர்த்தம். நீங்கள் கூறியபடி, விரும்பியபடி அவை உங்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்க வேண்டும். உதாரணமாக, பௌதீக அவயவங்கள், கை கால்கள் உங்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன. அதேபோல், உங்களின் மனம், புத்தி, சம்ஸ்காரங்களின் மீது ஆளுகின்ற சக்தியையும் கட்டுப்பாட்டுச் சக்தியையும் கொண்டிருங்கள். தற்சமயம், பலர் இதில் வரிசைக்கிரமமாக இருப்பது தென்படுகிறது. இவையும் ‘எனது’ என்பதே ஆகும். நான் மனம் அல்ல, இது என்னுடையது. சம்ஸ்காரங்கள் என்னுடையவை. புத்தி என்னுடையது. ஆகவே, கட்டுப்படுத்தும் சக்தியும் ஆளும் சக்தியும் வரிசைக்கிரமமாக உள்ளன. காலத்திற்குக் காலம், பாப்தாதா தொடர்ந்து காலத்தைப் பற்றி எச்சரிக்கிறார். இந்த வேளைக்கேற்ப, உங்கள் ஒவ்வொருவரின் சுயமரியாதையும் உலக உபகாரி என்பதே ஆகும். இப்போது காலத்திற்கேற்ப, குழந்தைகளான நீங்கள் ஒவ்வொருவரும் உங்களின் உலக உபகாரி ரூபத்தை வெளிப்படுத்துவதற்கான நேரம் வந்துள்ளது. எங்கும் துன்பமும் அமைதி இன்மையும் அதிகரித்துள்ளன. உங்களின் சகோதரர்கள், உங்களின் சகோதரிகள், உங்களின் குடும்பம் அனைவரும் துன்பத்தை அனுபவம் செய்கிறார்கள். எனவே, உங்களின் குடும்பத்தின் மீது உங்களுக்குக் கருணை பிறக்கவில்லையா?

பாப்தாதா இப்போது இந்த சமிக்கையை வழங்குகிறார்: சுய சேவை செய்வதுடன் கூடவே, தற்சமயம் கோலாகலமாக மிக நன்றாக வார்த்தைகளால் நீங்கள் சேவை செய்வதைப் போல், உலக சேவையையும் செய்யுங்கள். பாப்தாதா களிப்படைகிறார். 75 ஆவது பிளாற்றினம் விழா, பெரும்பாலான உங்களின் மனங்களில் சேவை செய்வதற்கான அதிகளவு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதைப் பார்க்கும்போது, பாப்தாதா களிப்படைகிறார். ஆனால், இப்போது உங்களின் மனங்களால் செய்யும் சேவை தேவைப்படுகிறது. ஏனென்றால், எல்லா வழிமுறைகளிலும் நீங்கள் உலக உபகாரிகள் ஆகவேண்டும். எண்ணங்கள், வார்த்தைகள், செயல்களால், அதாவது, உங்களின் முகத்தாலும் நடவடிக்கைகளாலும் செய்யும் சேவை, மூன்று வகையான சேவையும் இப்போது தேவைப்படுகிறது. தினமும் சோதித்துப் பாருங்கள்: மூன்று வகையான சேவையாலும் எத்தனை சதவீதமான சேவையை நீங்கள் செய்தீர்கள்? வார்த்தைகளால் செய்யும் சேவைக்கான சான்றிதழை பாப்தாதா ஏற்கனவே உங்களுக்கு வழங்கிவிட்டார். ஆனால் இப்போது, உங்களின் மனங்களின் சூட்சுமமான அதிர்வலைகளால் நீங்கள் துன்பம் மற்றும் அமைதி இன்மையில் உள்ள ஆத்மாக்களின் ஆதாரம் ஆகவேண்டும். உங்களுக்கு கருணை பிறக்கவில்லையா? பாப்தாதா குழந்தைகளின் மீது கருணை கொள்கிறார். ஏனென்றால், அவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் அவர்கள் குழந்தைகளே. எனவே, ஒவ்வொரு குழந்தையும் இப்போது நிலையத்தின் உபகாரியாக அல்லது பிராந்தியத்தின் உபகாரியாக மட்டும் அன்றி, உலக உபகாரி ஆகவேண்டும். பாப்தாதா இப்போது உங்களின் கவனத்தை ஈர்க்கிறார்: உங்களின் பக்தர்களின் உபகாரி ஆகுங்கள். ஏனென்றால், இந்த சங்கமயுகம் மிகவும் முக்கியமானது. இப்போது, சங்கமயுகத்தில், உங்களால் தந்தையிடம் இருந்து நீங்கள் விரும்பிய அளவு ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ள முடியும். எனவே, இப்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டீர்களா? உங்களின் மனங்களின் மூலமான சேவையை அதிகரியுங்கள். உங்களின் சொந்தக் கடமைகளுக்கேற்ப, எண்ணக் கட்டுப்பாட்டு வேளைகளை நீங்கள் நிச்சயம் செய்திருப்பதைப் போல், நீங்கள் ஒவ்வொருவரும் உங்களின் மனதால் சேவை செய்வதற்கான நேரத்தை நிச்சயம் செய்து கொள்ள வேண்டும். துன்பம் அதிகரிக்கும்போது, அனைவரின் கவனமும் அந்த வேளையில் அந்தக் குழப்பத்தை நோக்கியே இருக்கும். ஆனால் இப்போது இது உங்களின் மனங்களால் சேவை செய்வதற்கான நேரம். இதனாலேயே, குழந்தைகளான நீங்கள் அனைவரும் உங்களின் உலக உபகாரி ரூபத்தை வெளிப்படுத்த வேண்டும். உலக நன்மை செய்வதில் சுயத்திற்கான நன்மை இயல்பாகவும் இலகுவாகவும் உள்ளடக்கப்படுகிறது. ஏனென்றால், உங்களின் மனம் சுதந்திரமாக இருந்தால் வீணானவை வரும். எவ்வாறாயினும் உங்களின் மனம் மும்முரமாக இருந்தால், அப்போது வீணானவை இலகுவாக முடிந்துவிடும். ஆகவே, பாப்தாதா இந்தத் தேசத்திலும் வெளிநாடுகளிலும் எங்கும் சுற்றி வந்து, இந்த ஞானம் இல்லாத குழந்தைகளைப் பார்க்கும்போது, அவர் கருணை கொள்கிறார். இதனாலேயே, நீங்கள் அனைவரும் இப்போது துன்பத்தை நீக்குபவர்களாகவும் சந்தோஷத்தை அருள்பவர்களாகவும் ஆகவேண்டும்.

பாருங்கள், உங்களின் ஹோலி உலக மக்களின் ஹோலியை விட வித்தியாசமானது. எவ்வாறாயினும், பாப்தாதா உங்களுக்கு முன்னரும் கூறியுள்ளார், நீங்கள் செய்யும் எதையும் பிரதி செய்வதில் உங்களின் பக்தர்கள் கெட்டிக்காரர்கள். ஏனென்றால், இந்தச் சடங்குகள் துவாபர யுகத்தில் இருந்து வந்த ஆத்மாக்களாலேயே உருவாக்கப்பட்டன. அது அவர்களின் முதல் பிறவி. அதனால் அவர்களின் புத்திகள் சதோபிரதானாக இருந்தன. அனைத்தும் முதலில் சதோபிரதானாக இருந்து, பின்னர் ரஜோ, தமோ என்ற ஸ்திதிகளுக்கூடாக செல்ல வேண்டும் என்பது நியதி. எனவே அந்த வேளையில், தங்களுக்கே உரிய முறையில் அவர்களின் புத்திகள் சதோவாக இருந்தன. அதனால் அவர்கள் உங்களின் ஒவ்வொரு சிறப்பியல்பையும் பிரதி செய்தார்கள். நீங்கள் சதா உற்சாகத்துடன் சந்தோஷமாக இருந்தீர்கள். அதனால் அவர்கள் அதை ஒரு பண்டிகையாகக் கொண்டாட ஆரம்பித்தார்கள். சிவராத்திரியின் போது எவ்வாறு அவர்கள் பிரதி செய்வதில் மிகவும் கெட்டிக்காரர்கள் என்பது உங்களுக்குக் கூறப்பட்டது. அதேபோல், இப்போது சங்கமயுகத்தில், உங்களிடம் எப்போதும் உற்சாகம் உள்ளது. அதனால் அவர்கள் உங்களின் உற்சாகத்தின் ஞாபகார்த்தத்தை உற்சாகமான பண்டிகையின் வடிவில் உருவாக்கி உள்ளார்கள். எனவே, அவர்கள் ஹோலியின்போது என்ன செய்கிறார்கள்? நீங்களும் உங்களின் வாழ்க்கைகளை நிறமூட்டி உள்ளீர்கள். ஆனால் உங்களின் நிறம் என்ன? உங்கள் எல்லோரிடமும் உள்ள நிறம், தந்தையின் சகவாசம். நீங்கள் எல்லா வேளையும் தந்தையின் சகவாசம் என்ற நிறத்துடன் இருக்கிறீர்கள்தானே? எனவே, அவர்களும் நிறத்தை உருவாக்கி உள்ளார்கள். ஆனால், அவர்கள் சரீர உணர்வுடன் இருப்பதனால், இந்த நிறத்தை பௌதீகமாக எடுத்துள்ளார்கள். எவ்வாறாயினும், நீங்கள் அனைவரும் இந்த நன்மை செய்யும் சங்கமயுகத்தில் சதா இந்த நிறத்துடன் இருங்கள். நீங்கள் சகவாசத்தால் நிறமூட்டப்பட்டீர்கள், அல்லவா? உங்களையே நிறமூட்டிக் கொண்டீர்கள்தானே? நீங்கள் சகவாசத்தின் நிறத்தால் நிறமூட்டப்பட்டுள்ளீர்கள். ஆங்கிலத்தில் ‘ஹோலி’ என்றால் தூய்மை எனப்படுகிறது. அதனால், ஹோலி, அதாவது, சகவாசத்தின் நிறத்தில் தூய்மை ஆகுங்கள். நீங்கள் தூய்மை ஆகியுள்ளீர்கள், அல்லவா? நீங்கள் அனைவரும் தூய்மையின் சத்தியத்தைக் கடைப்பிடிக்கிறீர்கள், அல்லவா? இது உறுதியாக உள்ளதா? நீங்கள் வரிசைக்கிரமமாக இருக்கக்கூடும். ஆனால் ஒரு பிராமணர் என்றால், தூய்மைக்கான சத்தியத்தைச் செய்பவர் என்று அர்த்தம். ஏனென்றால், தந்தை என்றென்றும் தூய்மையானவர். அவர் தூய்மையின் ரூபமாக விளங்குகிறார். அவர் அவ்வாறு ஆகவேண்டியதில்லை. அவரின் ரூபமே தூய்மைதான். எனவே, ஹோலியின் சிறப்பியல்பு என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் தூய்மை ஆகுகிறீர்கள். ஆனால், சகவாசத்தின் நிறத்தால் நீங்கள் இரட்டைத் தூய்மை அடைகிறீர்கள்.

மதத்தாபகர்களும் தர்மாத்மாக்களும் தூய்மை ஆகுகிறார்கள். ஆனால் அவர்கள் தமது ஆத்மாக்களை மட்டுமே தூய்மை ஆக்குகிறார்கள். நீங்கள் எதிர்காலத்தில் சரீரம் மற்றும் மனதிலும் தூய்மை ஆகுகிறீர்கள். ஆரம்பத்தில் இருந்து, துவாபர யுகத்தில் இருந்து வந்த அனைவராலும் தூய்மை ஆகுவதற்கான முயற்சியைச் செய்ய முடியும். ஆனால் எவராலும் இரட்டைத் தூய்மை - தூய சரீரம் மற்றும் தூய ஆத்மா-ஆகமுடியாது. எதிர்கால இராச்சியத்தின் உரிமையை நீங்கள் கொண்டிருக்கும்போது, ஆத்மாக்களான நீங்களும் உங்களின் சரீரங்களும் தூய்மை அடைகின்றன. கல்பம் முழுவதும் சுற்றி வாருங்கள். துவாபர யுகத்தில் இருந்து வந்தவர்கள், துவாபர யுகத்தில் இருந்து இன்றுவரை, யாராவது இரட்டைத் தூய்மை ஆகியவர்கள் இருக்கிறார்களா? எனவே, நீங்கள் எப்படி இரட்டைத் தூய்மையாகவும் மிக மேன்மையாகவும் ஆகுகிறீர்கள்? நீங்கள் எந்த நிறத்தால் நிறமூட்டப்படுகிறீர்கள்? நீங்கள் இறை சகவாசம் என்ற நிறத்தால் நிறமூட்டப்படுகிறீர்கள். எனவே, பரமாத்மா தூய்மையாக இருப்பதைப் போல், நீங்களும் 21 பிறவிகளுக்கு இரட்டைத் தூய்மையாக இருக்கிறீர்கள். மதத்தாபகர்கள்கூட இரட்டைத் தூய்மை ஆகவில்லை. இது உங்களின் பாக்கியம். ஏனென்றால், நீங்கள் இறை சகவாசத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் சகவாசத்தின் நிறத்துடன் மிகப் பலமாக இருப்பதனால் இரட்டைத் தூய்மை அடைகிறீர்கள். ஹோலி என்பதன் இன்னோர் அர்த்தம், ‘ஹோ லி’ (அது நடந்து முடிந்துவிட்டது) என்பதாகும். அது நடந்து விட்டது, கடந்தது கடந்து போய்விட்டது, அது கடந்தகாலம். கடந்ததைக் கடந்ததாக விட்டு விடுவது எப்படி என்று உங்களுக்குத் தெரியுமா? எது நடந்ததோ, அது நடந்து முடிந்துவிட்டது. ‘ஹோ லி’ என்ற வார்த்தைகளின் அர்த்தம் என்ன? கடந்தது கடந்து போய்விட்டது. அதனூடாக, நீங்கள் ஒரு பிறவிக்கு மட்டுமல்ல, ஆனால் 21 பிறவிகளுக்கு இரட்டை ஹோலியாக இருக்கிறீர்கள். ஏனென்றால், சங்கமயுகத்தின் ஒவ்வொரு விநாடியும் 21 பிறவிகளுடன் தொடர்பு உடையது. நீங்கள் இங்கே ஒரு விநாடி அல்லது ஒரு நிமிடத்தைத் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்தினால், உங்களின் 21 பிறவிகள் தகுதிவாய்ந்தவையாக இருக்கும். அதற்கு உத்தரவாதம் உள்ளது. எனவே, இத்தகைய ஹோலியை நீங்கள் கொண்டாடினீர்களா? கடந்ததைக் கடந்ததாக விட்டுவிடுவது எப்படி என்று உங்களுக்குத் தெரியுமா? கடந்த காலத்தில் என்ன நடந்ததோ, அது நடந்து முடிந்துவிட்டது. எனவே, அவர்கள் செய்யும் மூன்றாவது விடயம் என்ன? முதலில், அவர்கள் எதையாவது எரிக்கிறார்கள். பின்னர் கொண்டாடுகிறார்கள். எனவே, நீங்கள் என்ன செய்தீர்கள்? நீங்கள் பல பிறவிகளாக தவறான சம்ஸ்காரங்களாக இருந்த உங்களின் பலவீனங்களையும் சம்ஸ்காரங்களையும் யோக அக்கினியில் எரித்தீர்கள், அல்லவா? நீங்கள் ஏற்கனவே அவற்றை எரித்து விட்டீர்களா அல்லது இன்னமும் எரித்துக் கொண்டிருக்கிறீர்களா? நீங்கள் அவற்றை எரித்து விட்டீர்களா? உங்களின் சம்ஸ்காரங்களை யோக அக்கினியில் எரித்து விட்டோம், அவை இப்போது எரிந்து விட்டன என்று நினைப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! அவை எரிந்து விட்டனவா அல்லது இன்னமும் திரும்பி வருகின்றனவா? அவை சிறிதளவில் திரும்பி வருகின்றனவா? நீங்கள் உங்களின் அட்டவணையை பாப்தாதாவிற்கு அனுப்பும்போது, அவற்றில் பெரும்பாலானவை போய்விட்டன என்றே கூறுகிறீர்கள். இதைக் கூறுவதில் நீங்கள் கெட்டிக்காரர்கள். பெரும்பாலானவை முடிந்துவிட்டன, ஆனால் அவை சிலவேளைகளில் சிறிதளவில் வெளிப்படுகின்றன என்று நீங்கள் சொல்கிறீர்கள். எவ்வாறாயினும், எரிப்பது என்றால் எரித்தல் என்று அர்த்தம். எதையாவது எரித்த பின்னர், அதன் பெயரோ அல்லது சுவடோ எஞ்சி இருக்காது. ஏதாவது ஒன்றைக் கொன்ற பின்னர், சரீரம் புலப்படுகின்ற ஞாபகார்த்தம் இன்னமும் உள்ளது. ஆனால் அதை எரித்த பின்னர், அது முற்றிலும் முடிந்துவிடும். உதாரணமாக, இராவணனைப் பாருங்கள். அவன் கொல்லப்படுவது மட்டுமன்றி, எரிக்கப்படுகிறான். அப்போது பெயர், சுவடுகள் அனைத்தும் முற்றிலும் முடிவடைந்து விடுகின்றன. எனவே, நீங்கள் அனைவரும்கூட உங்களின் சம்ஸ்காரங்களை நீங்கள் கொன்றீர்களா அல்லது அவற்றை எரித்தீர்களா என்று குறித்துக் கொள்ள வேண்டும். நீங்கள் அவற்றை எரித்து விட்டீர்களா? நீங்கள் உங்களின் பழைய சம்ஸ்காரங்களை எரிக்காவிட்டால், அவை அவ்வப்போது வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். எவ்வாறாயினும், பக்தர்கள் அனைத்தையும் பிரதி செய்துள்ளார்கள். நீங்கள் அவற்றை எரித்தீர்கள், அதனால் அவர்களும் அனைத்தையும் எரித்துப் பின்னர் கொண்டாடுகிறார்கள். முதலில் அதை எரிக்காமல் அவர்கள் எதையும் கொண்டாடுவதில்லை. நீங்கள் உங்களின் சம்ஸ்காரங்களை எரிப்பதன் மூலம் ஹோலி ஆகியுள்ளீர்கள். சிலர் அவ்வாறு ஆகுகிறார்கள், சிலர் ஏற்கனவே அவ்வாறு ஆகிவிட்டார்கள். எனவே, நீங்கள் ஹோலியைக் கொண்டாடினீர்களா? தந்தையின் சகவாசம் என்ற நிறத்துடன் கொண்டாடினீர்களா? நீங்கள் இப்போது அவரின் சகவாசத்தில் இருக்கிறீர்கள். அதனால் நீங்கள் அவரின் சகவாசம் என்ற நிறத்துடன் ஹோலியைக் கொண்டாடினீர்கள்தானே? நீங்கள் அதைக் கொண்டாடினீர்களா? உங்களின் கைகளை உயர்த்துங்கள்! நீங்கள் அதைக் கொண்டாடினீர்கள். ஹோலியைக் கொண்டாடுதல் என்றால் புனிதம் ஆகுதல், தூய்மை ஆகுதல் என்று அர்த்தம். தந்தையைப் போன்றே குழந்தைகளும் இருப்பார்கள். உதாரணமாக, எரிக்கப்படாத ஒரு சம்ஸ்காரம் மீண்டும் வெளிப்பட்டால், நீங்கள் அதை விரும்புவீர்களா? நீங்கள் நிச்சயமாக அதைத் தீவிர முயற்சியுடன் எரிக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு ஏற்பட்டுள்ளது. நீங்கள் அதைக் கொல்ல மட்டும் கூடாது. சிலவேளைகளில், நீங்கள் அந்த சம்ஸ்காரத்தைக் கொல்கிறீர்கள். அவ்வாறு கொல்லப்பட்டது சிலவேளைகளில் புத்துயிர் பெறுகிறது. எவ்வாறாயினும், நீங்கள் அதை எரித்தால், அது ஒருபோதும் மீண்டும் வெளிப்பட மாட்டாது.

எனவே இன்று, நீங்கள் அவற்றை எரிக்கப் போகின்றீர்களா அல்லது அவற்றைக் கொன்றால் மட்டும் போதுமா? அவற்றை எரிப்பதற்கான சக்தி உங்களிடம் இருக்கிறதா? இந்த சக்தி உங்களிடம் உள்ளதா? இந்த எண்ணத்தை உங்களால் கொண்டிருக்க முடியுமா? தாம் பாப்தாதாவுடன் இதயபூர்வமாக உரையாடல்கள் செய்ததாக சிலர் கூறுகிறார்கள். அவர்கள் மிக இனிமையான இதயபூர்வமான உரையாடல்களைச் செய்கிறார்கள். அவர்கள் கூறுகிறார்கள்: பாபா, நான் மிகவும் முயற்சி செய்தேன். ஆனால் அவை மீண்டும் வெளிப்படுகின்றன. எனக்கு அவை விருப்பமில்லை, ஆனாலும் அவை மீண்டும் வெளிப்படுகின்றன. இதற்கான காரணம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் அவற்றை எரிக்கிறீர்கள், பாப்தாதாவும் இதைப் பார்க்கிறார். நீங்கள் அதிகளவு முயற்சி செய்கிறீர்கள். ஆனால் அந்த முயற்சியுடன்கூடவே, உங்களிடம் திடசங்கற்பமான எண்ணங்களும் இருக்க வேண்டும். திடசங்கற்பமே வெற்றிக்கான சாவி. உங்களிடம் என்ன திடசங்கற்பமான எண்ணம் இருக்கிறதோ, ‘திடசங்கற்பம்’ என்றால் அது மீண்டும் திரும்பி வரக்கூடாது என்று அர்த்தம். பின்னர், உங்களுக்கே தெரியும், நீங்கள் மிக இனிமையான விடயங்களைக் கூறுகிறீர்கள். அவை மீண்டும் வரும்போது நீங்கள் என்ன கூறுகிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் அனைவரும் இந்த இதயபூர்வமான உரையாடலைச் செய்கிறீர்கள்தானே? நீங்கள் மிக இனிமையான இதயபூர்வ உரையாடலைச் செய்கிறீர்கள். நீங்கள் கூறுகிறீர்கள்: ‘அது வருவது எனக்கு விருப்பமில்லை, ஆனால் அது வருகிறது’. எனவே, உங்களிடம் அந்தளவு சக்தியோ அல்லது திடசங்கற்பமோ இல்லை என்பதே இதன் அர்த்தம். திடசங்கற்பமான எண்ணங்களைக் கொண்டவர்கள் ஆகுங்கள்: ‘நான் இதைச் செய்யவே வேண்டும்’. பின்னர் நாளாந்தம் அந்தத் திடசங்கற்பமான எண்ணத்தைச் சோதித்து, அந்தத் திடசங்கற்பத்தில் உங்களின் பலவீனம் வருவதற்கான காரணம் என்ன என்பதைப் பாருங்கள். தொடர்ந்து அந்தச் சூழ்நிலையில் விசேட கவனம் செலுத்துங்கள். அதன் மூலம் அது மீண்டும் வெளிப்பட மாட்டாது. மாஸ்ரர் சர்வசக்திவான் என்ற ஆசனத்தில் அமர்ந்திருங்கள். அந்த சம்ஸ்காரத்தை முடிப்பதற்கான எண்ணத்தைக் கொண்டிருந்து, பின்னர் அதை முடியுங்கள்! சிலவேளைகளில் தாம் விரும்பிய நேரத்தில் குறிப்பிட்ட சக்தி வராதிருப்பதைத் தாம் அனுபவம் செய்வதாகச் சில குழந்தைகள் கூறுகிறார்கள். அவர்களிடம் சக்திகள் உள்ளன. ஆனால் சிலவேளைகளில் அவர்கள் குறிப்பிட்டதொரு சக்தியை குறிப்பிட்ட வேளையில் வெளிப்படுத்த விரும்பும்போது, அது வருவதில்லை. நீங்கள் மாஸ்ரர் சர்வசக்திவான்கள். உங்களின் பட்டம் என்ன? மாஸ்ரர் சர்வசக்திவான்கள். எவ்வாறாயினும், நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? அந்த சக்தி அந்த வேளையில் தோன்றவில்லை. அதற்கான காரணம் என்ன? நீங்கள் சகல சக்திகளும் கொண்ட மாஸ்ரர் சர்வசக்திவான் என்ற ஆசனத்தில் அமர்ந்திருக்கவில்லை. இப்போதும், நீங்கள் உங்களின் அலுவலகத்திற்குச் செல்லும்போது, அந்த அதிகாரி வழங்கும் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும், அல்லவா? வேறு யாராவது அந்தக் கட்டளைகளை உங்களுக்குக் கொடுத்தால் நீங்கள் அவற்றுக் கீழ்ப்படிவீர்களா? உங்களின் ஆசனம், மாஸ்ரர் சர்வசக்திவான் என்பதாகும். நீங்கள் அந்த ஆசனத்தில் அமர்ந்திராதபோது, நீங்கள் அந்த சக்தியை அழைத்தாலும் அந்த வேளையில் அது வரமாட்டாது. இதற்கு, உங்களின் மனதை மும்முரமாக வைத்திருக்கும்படி பாப்தாதா உங்களுக்கு மீண்டும் மீண்டும் கூறியுள்ளார். நாள் முழுவதும், ஒரு சக்தியை வெளிப்படுத்துங்கள். பின்னர் சிலவேளைகளில் இன்னொரு சக்தியை வெளிப்படச் செய்து அதன் பலம் என்னவென்று பாருங்கள். நீங்கள் இதைத் தொடர்ந்து அனுபவம் செய்து, உங்களின் ஆசனத்திலும் அமர்ந்திருந்தால், சக்திகள் சதா உங்களின் முன்னால் பிரசன்னமாக இருக்கும். அவை உங்களின் சக்திகள், அப்படித்தானே? எனவே, நீங்கள் ஹோலியைக் கொண்டாடினீர்களா? நீங்கள் எப்போதும் தொடர்ந்து ஹோலியைக் கொண்டாடிக் கொண்டே இருக்கிறீர்கள். நீங்கள் எப்போதும் தந்தையின் சகவாசம் என்ற நிறத்தால் உங்களை நிறமூட்டுகிறீர்கள். நீங்கள் அந்த நிறத்தால் நிறமூட்டப்பட்டுள்ளீர்கள், அல்லவா? அச்சா.

இன்று, பாப்தாதா குழந்தைகளான உங்கள் ஒவ்வொருவருக்கும் இந்த சுய மரியாதையை வழங்குகிறார்: ஒவ்வோர் ஆத்மாவும் இந்தத் திடசங்கற்பமான எண்ணத்துடன் விசேடமான ஆத்மா ஆகவேண்டும். உங்களுக்கு ஓர் எண்ணம் ஏற்பட்டது, அது நடந்தது: இதுவே திடசங்கற்பமான எண்ணம் எனப்படுகிறது. உங்களில் சிலர் உங்களுக்கு திடசங்கற்பமான எண்ணம் ஏற்பட்டதாகக் கூறுகிறீர்கள். எவ்வாறாயினும், திடசங்கற்பம் என்றால் வெற்றி என்று அர்த்தம். உங்களுக்கு வெற்றி ஏற்படாவிட்டால், அதைத் திடசங்கற்பம் என்று சொல்ல முடியாது. எனவே இப்போது, நீங்கள் திடசங்கற்பத்தைக் கொண்டிருப்பீர்களாக! இந்த விசேடமான சுயமரியாதையை ஒவ்வொரு நாளும் அமிர்த வேளையில் உங்களின் விழிப்புணர்வில் கொண்டிருந்து, தொடர்ந்து இந்த முறையில் முன்னேறுங்கள். சங்கமயுகத்தின் காலம் மிகவும் அழகானது. ஒரு விநாடி என்பது ஒரு விநாடி அல்ல, ஆனால் ஒரு விநாடியில் ஒரு வருடத்திற்கான பேறு உள்ளது. இதனாலேயே, ஒரு விநாடியேனும் வீணாக்கப்படக் கூடாது என்று பாப்தாதா தொடர்ந்து கூறுகிறார். ஓர் எண்ணமேனும் வீணாக்கப்படக் கூடாது. சக்திசாலியாகி, மற்றவர்களையும் சக்திசாலிகள் ஆக்குங்கள். இவை அனைத்தும் சரிதானே?

ஒவ்வோர் அடியிலும் ‘எனது பாபா, எனது பாபா’ என்று கூறுவதுடன் பறந்து கொண்டிருக்கும் அதிபுனிதமான குழந்தைகளுக்கு, தமது தீவிர முயற்சிகளால் தாமும் முன்னேறுவதுடன் மற்றவர்களையும் முன்னேறச் செய்பவர்களுக்கு, பாப்தாதாவின் இதயத்தில் அமிழ்ந்திருக்கும் ஒளி இரத்தினங்களுக்கு, பாபா தனது இதயபூர்வமாக அதிக, அதிக, அதிக, அதிகளவு அன்பை வழங்குகிறார். இத்துடன்கூடவே, பாபா ஹோலிக்காகவும் வாழ்த்துக்களை வழங்குகிறார். ஏனென்றால், நீங்களே புனிதமானவர்கள். உண்மையில் வேறு எவரும் இரட்டைப் புனிதம் அடைவதில்லை. நீங்கள் மட்டுமே இரட்டைப் புனிதமானவர்கள் ஆகுகிறீர்கள். அதனால், பல்கோடி மடங்கு வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் புத்தியில் நம்பிக்கை வைத்து, பாப்தாதாவை உங்களிடம் சரணடையச் செய்யும் துறவறத்தின் சொரூபம் ஆகுவீர்களாக.

தந்தையைக் கண்டு கொண்டதால் நான் அனைத்தையும் அடைந்து விட்டேன். இந்த போதையைக் கொண்டவர்கள் அனைத்தையும் துறக்கும்போது, புத்தியில் நம்பிக்கை உள்ள இத்தகைய குழந்தைகள் சுகம், அமைதி, சக்தி, சந்தோஷத்தைத் தந்தையிடம் இருந்து அனுபவம் செய்யும்போது, அவர்கள் மக்களின் அபிப்பிராயங்களைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். ஆனால் சதா தொடர்ந்து ஒவ்வோர் அடியிலும் முன்னேறுவார்கள். உலகிலுள்ள அனைத்தையும் அவர்கள் ருசியற்றதாகவும் சாரம் (பலம்) அற்றதாகவும் உணர்வார்கள். தியாகத்தின் சொரூபங்களாகவும் புத்தியில் நம்பிக்கையும் உடைய இத்தகைய குழந்தைகளிடம் பாப்தாதா தனது செல்வம் அனைத்துடனும் தன்னையே அர்ப்பணிக்கிறார். குழந்தைகளான உங்களுக்குள் ‘பாபா, நான் உங்களுடையவன்’ என்ற எண்ணம் இருப்பதைப் போல், பாபாவும் தந்தைக்குச் சொந்தமான எதுவும் உங்களுடையதே என்று கூறுகிறார்.

சுலோகம்:
ஓர் இலகு யோகி தனது ஒவ்வோர் எண்ணத்தாலும் செயலாலும் தந்தையின் அன்பின் அதிர்வலைகளைப் பரப்புபவர் ஆவார்.

அவ்யக்த சமிக்ஞை: தந்தை பிரம்மாவைப் போல், சம்பூரணமான, முழுமையான ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள்.

பிராமண ஆத்மாக்களான நீங்கள் அனைவரும் பிறப்பு எடுத்த வேளையில் தந்தை பிரம்மாவைப் போல் சம்பூரணமாகவும் முழுமையாகவும் ஆகுவீர்கள் என்று சத்தியம் செய்தீர்கள். ‘என்றும் தயார்’ என்ற வார்த்தையை நீங்கள் பயன்படுத்துவதைப் போல், இப்போது சம்பூரணம் மற்றும் முழுமை ஆகுவதில் என்றும் தயார் ஆகுங்கள். இதில் எந்தவிதமான கவனயீனமும் இருக்கக்கூடாது.