02.07.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, உங்களின் விகாரங்களைத் தானம் செய்தால், ராகு கிரகணத்தின் சகுனம் அகற்றப்படும். தானம் ஒன்றைச் செய்யுங்கள், கிரகணம் அகற்றப்படும்.
கேள்வி:
விருட்சத்தின் பிரபுவான தந்தை வியாழதிசையை ஏற்படுத்துவதற்காக பாரதக் குழந்தைகளாகிய உங்களுக்கு என்ன விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றார்?பதில்:
ஓ பாரதக் குழந்தைகளே, உங்களது ஆதிசனாதன தேவிதேவதா தர்மம் மிகவும் மேன்மையானது. நீங்கள் சகல தெய்வீகக் குணங்கள் நிறைந்தவர்களாகவும், பதினாறு கலைகள் நிறைந்தவர்களாகவும் இருந்தீர்கள். கடலான என்னுடைய குழந்தைகளாகிய நீங்கள் காமச் சிதையில் அமர்ந்ததால் அவலட்சணம் ஆகிக் கிரகணத்தால் பீடிக்கப்பட்டுள்ளீர்கள். நான் மீண்டும் உங்களை அழகானவர்கள் ஆக்குவதற்காக வந்துள்ளேன். இந்த விழிப்புணர்வைக் கொண்டிருப்பதன் மூலம்பாடல்:
ஓம் நமசிவாய….ஓம் சாந்தி.
நீங்கள் யாருடைய புகழைச் செவிமடுத்தீர்கள்? எல்லையற்ற தந்தையினது புகழையாகும். பரமாத்மாவான பரமதந்தையே அதிமேலான தந்தை ஆவார். எவரும் தமது லௌகீகத் தந்தையை இவ்வாறு குறிப்பிட மாட்டார்கள். ஆத்மாக்கள் அனைவரதும் தந்தையான, இந்த உலகிற்கு அப்பால் உள்ள தந்தையே அதிமேலானவர் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அவரது பெயர் சிவனாகும். ஒரு பெயரும் வடிவமும் இல்லாது இவ் உலகில் எதுவும் இருக்க முடியாது. இந்நேரத்தில் அனைவரும் இராகு திசையின் கிரகணத்தினால் பீடிக்கப்பட்டுள்ளார்கள். ஆகையாலேயே இது கலியுக உலகம் என்று அழைக்கப்படுகின்றது. வியாழதிசை, வெள்ளிதிசை போன்ற சகுனங்களும் உள்ளன. இப்பொழுது உங்கள் மீது வியாழதிசை நிலவுகிறது. அதிமேலான சிவபாபாவான கடவுளின் புகழை நீங்கள் செவிமடுத்தீர்கள். அவரது உண்மையான பெயர் சிவன் ஆகும். எனினும் அவர்கள் அவருக்குப் பல பெயர்களைக் கொடுத்துள்ளார்கள். அவரது உண்மையான பெயர் சிவபாபா ஆகும். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நானே விதையும் உணர்வுள்ளவரும் ஆவேன். அவர் சத்தியம், உணர்வுள்ளவர் என்று அழைக்கப்படுகின்றார். அவர் சந்தோஷக்கடல், பேரானந்தக்கடல், அமைதிக்கடல் எனவும் அழைக்கப்படுகிறார். அனைத்துப் புகழும் அவர் ஒருவருக்கே உரியதாகும். பாரதமக்கள் அவரின் புகழைப் பாடியபோதிலும், அவர்கள் எதனையும் புரிந்து கொள்ளாமல் இருக்கின்றார்கள். அவர்களது புத்திகள் முற்றிலும் கல்லாகி விட்டன. அவர்களது புத்தியைக் கல்லாக்கியது யார்? இராவணன். சத்தியயுகத்தில் பாரதமக்கள் தெய்வீகப் புத்தியைக் கொண்டிருந்தனர். 5000 வருடங்களின் முன்னர் இப்பாரதம் தேவர்கள் வாழ்ந்த தெய்வீக உலகமாக இருந்தது. பாரதம் அழியாத உலகம் என்று நினைவு கூரப்பட்டுள்ளது. தெய்வீகப் புத்தியுடைய தேவர்கள் பாரதத்தில் வாழ்ந்தார்கள். இந்த நேரத்தில், அங்கே கற்புத்தியுடைய தூய்மை அற்றவர்களே வாழ்கின்றார்கள். அவர்கள் எவ்வாறு தூய்மை அற்றவர்கள் ஆகினார்கள் என்று தந்தை விளங்கப்படுத்தி உள்ளார். துவாபர யுகத்தில் காமச் சிதையில் அமர ஆரம்பித்த பின்னர், அவர்கள் அவலட்சணம் ஆகினார்கள். அனைவரும் காமத் தீயினால் எரிந்து விட்டார்கள். அதுவும் விசேடமாக பாரதத்தையே குறிக்கின்றது. பாரதத்தில் தெய்வீகப் புத்தியை உடைய தேவர்களின் இராச்சியம் இருந்தது. அது இராம இராச்சியமான விஷ்ணு தாமம் என்று அழைக்கப்பட்டது. தந்தை வந்து உங்களுக்குக் கூறுகிறார்: இனிமையிலும் இனிமையான அன்பிற்கினிய குழந்தைகளே, நீங்கள் சத்தியயுகத்தில் இருந்தபோது, நீங்கள் தெய்வீகக் குணங்கள் நிறைந்தவர்களாக இருந்தீர்கள். இதுவே உங்களது புகழாகும். அங்கே விகாரங்கள் எதுவும் இருக்கவில்லை. ஐந்து விகாரங்களான இராவண இராச்சியம் துவாபரயுகத்திலேயே ஆரம்பம் ஆகுகின்றது. ஆகையாலேயே இராம இராச்சியம், இராவண இராச்சியமாக மாறியது. இப்பொழுது அது கிரகணத்தினால் பீடிக்கப்பட்டுள்ளது. பாரதம் முற்றிலும் அவலட்சணம் ஆகியுள்ளது. வியாழ திசையே அனைத்திலும் சிறந்த சகுனமாகும். சத்தியயுகத்தில் பாரதத்தின் மீது வியாழ சகுனமே நிலவியது. அதன் பின்னர், திரேதாயுகத்தில் சுக்கிரதிசை உள்ளது. ஆகையால் அது இரண்டு கலைகளினால் குறைவடைகின்றது. அதுவே திரேதாயுகம் என அழைக்கப்படுகின்றது. அதன் பின்னர் துவாபரயுகமும் கலியுகமும் வருகின்றன. நீங்கள் ஏணியில் தொடர்ந்தும் கீழிறங்கும் போது, சகுனங்களும் தொடர்ந்து மாற்றம் அடைகின்றன. இந்நேரத்தில் அனைவர் மீதும் இராகுகிரகணம் உள்ளது. சூரியகிரகணம் ஏற்படும் போது, ‘தானம் செய்தால் கிரகணம் மறைந்து விடும்’ என்று அவர்கள் கூறுகின்றார்கள். ஆன்மீகத் தந்தை இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார்: இது ஆன்மீக ஞானமாகும். இது எந்தச் சமயநூல்களினதும் ஞானம் அல்ல. சமயநூல்களில் உள்ள ஞானம், பக்தி மார்க்கம் என்று அழைக்கப்படுகிறது. சத்தியயுகத்திலும் திரேதாயுகத்திலும் பக்தி இருப்பதில்லை. ஞானம், பக்தி, அதன் பின்னர் விருப்பமின்மை ஏற்படுகின்றது. அதாவது இந்தப் பழைய உலகம் துறக்கப்பட வேண்டும். இதுவே சூத்திர குலமாகும். அவர்கள் பிராமணர்கள், தேவர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் அடங்கிய பல்ரூப உருவத்தைக் காட்டுகின்றார்கள். இது பாரதத்தின் கதையாகும். அவர்கள் பல்ரூப உருவத்தை உருவாக்குகின்றார்கள். ஆனால், கற்புத்தியை உடையவர்களால் எதனையும் புரிந்து கொள்ள முடியாது. அவர்கள் ஏன் கற்புத்தியைக் கொண்டிருக்கின்றார்கள்? ஏனெனில் அவர்கள் தூய்மையற்றவர்கள் என்பதாலாகும். பாரதமக்கள் தெய்வீகப் புத்தியைக் கொண்டிருந்தனர். அவர்கள் முற்றிலும் விகாரம் அற்றவர்கள். 5000 வருடங்களின் முன்னர் பாரதம் சுவர்க்கமாக இருந்தது. வேறு எந்த தேசங்களும் இருக்கவில்லை. இவை அனைத்தையும் தந்தையே விளங்கப்படுத்துகின்றார். உங்களுக்கு இராஜயோகம் கற்பிப்பவர் யார்? ஆசிரியரான சிவன் ஆவார். அவரே ஞானக்கடல் ஆவார். அனைவரையும் தூய்மையாக்கும் ஞானக்கடல் என எந்த ஒரு மனிதரையும் அழைக்க முடியாது. ஒரேயொரு தந்தையே அனைவருக்கும் விடுதலை அளிப்பவர். துன்பத்தின்போது தந்தை வந்து இராவணனிடம் இருந்து உங்களுக்கு விடுதலை கொடுத்து, உங்கள் வழிகாட்டியாகி உங்களை வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றார். அவர் ஆன்மீக வழிகாட்டி என்று அழைக்கப்படுகின்றார். தந்தை கூறுகின்றார்: ஆத்மாக்களாகிய உங்கள் அனைவருக்கும் நான் வழிகாட்டி ஆவேன். என்னைப் போன்றதோர் வழிகாட்டி வேறு எவரும் இல்லை. மக்கள் கூறுகின்றார்கள்: தந்தையான கடவுளே விடுதலையளிப்பவரும், வழிகாட்டியும், பேரானந்தம் மிக்கவரும் ஆவார். கடலின் குழந்தைகள் அனைவரும் காமச்சிதையில் அமர்ந்து எரிந்து விட்டதால், அவர் அனைவர் மீதும் கருணை கொண்டுள்ளார். இது குறிப்பாக பாரதத்தைக் குறிக்கின்றது. தந்தை கூறுகின்றார்: நீங்கள் பதினாறு கலைகள் நிறைந்தவர்களும், முற்றிலும் விகாரமற்றவர்களும் ஆவீர்கள். காமச்சிதையில் அமர்ந்ததால், எவ்வாறிருந்த நீங்கள் எவ்வாறாகி விட்டீர்கள் எனப் பாருங்கள்! தந்தை இப்பொழுது மீண்டும் வந்துள்ளார். விருட்சத்தின் பிரபுவான தந்தை வந்து, மனிதர்கள் அனைவருக்கும் வியாழ சகுனத்தை ஏற்படுத்துகின்றார். இந்நேரத்தில், குறிப்பாகப் பாரதமும் பொதுவாக உலகமும் இராகு கிரகணத்தால் பீடிக்கப்பட்டுள்ளது. தந்தை கூறுகின்றார்: நான் மாத்திரமே வந்து, குறிப்பாகப் பாரதத்திற்கும் பொதுவாக உலகிற்கும் முக்தியையும் ஜீவன்முக்தியையும் வழங்குகின்றேன். நீங்கள் இங்கே தெய்வீகப் புத்தி உடையவர்கள் ஆகுவதற்கே இங்கே வந்திருக்கின்றீர்கள். அதியன்பிற்கினியவர் தந்தை ஆவார். காதலர்கள் அனைவரதும் அன்பிற்கினியவர் ஒரேயொருவரே. அவர் அனைவரதும் தந்தை என்பதாலேயே சகல தேசத்தைச் சேர்ந்தவர்களும் ஒரு நீள்கோள வடிவத்தை உருவாக்குகின்றார்கள். பாரதத்தில் பல சிவனின் ஆலயங்கள் உள்ளன. அவற்றை அவர்கள் சிவாலயம், அதாவது வசிப்பிடம் என்று அழைக்கின்றார்கள். சத்தியயுகத்தவர்கள் தேவதர்மத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் அவர்களின் தர்மமோ அல்லது இராச்சியமோ எப்போதிருந்தது என்பதை எவரும் அறியமாட்டார்கள். சத்தியயுகத்தின் கால எல்லை மிகவும் நீண்டது என அவர்கள் எழுதியுள்ளார்கள். தந்தை இங்கே அமர்ந்திருந்து விளங்கப்படுத்துகின்றார்: இப்பொழுது குழந்தைகளாகிய உங்கள் மீது 21 பிறவிகளுக்கு வியாழதிசை உள்ளது. தூய்மையாக்குபவரான விருட்சத்தின் பிரபுவே ஞானக்கடல் ஆவார். அவரையே அனைவரும் அழைக்கின்றார்கள்: நீங்களே தாயும் தந்தையும். நாங்களே உங்கள் குழந்தைகள் ஆவோம். அனைவரும் அவரைப் புகழ்கின்றார்கள். உண்மையிலேயே சத்தியயுகத்திலும் திரேதாயுகத்திலும் அதிகளவு சந்தோஷம் இருந்தது. தந்தையே சுவர்க்கத்தைப் படைப்பவராகிய தந்தையுமான சுவர்க்கக் கடவுள் என்பதால் நாங்களும் நிச்சயமாக சுவர்க்கத்தில் இருந்திருக்க வேண்டும். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் அனைவரும் சுவர்க்கவாசிகளாக இருந்தீர்கள். இப்பொழுது நரகவாசிகள் ஆகியுள்ளீர்கள். ஆதிசனாதன தேவதேவியரின் தர்மம் பாரதத்தைச் சேர்ந்ததாகும். கிறிஸ்தவ சமயத்தைச் சேர்ந்தவர்கள் தமது கிறிஸ்தவ சமயத்தையே தொடர்ந்தும் பின்பற்றுகின்றார்கள். எனவே தந்தை வினவுகின்றார்: குழந்தைகளாகிய நீங்கள் தேவதர்மத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் நீங்கள் ஏன் உங்கள் தர்மத்தை மறந்து விட்டீர்கள்? உங்கள் தர்மமும் செயலும் அனைத்திலும் பார்க்க அதிமேன்மையானதாக இருந்தது எனத் தந்தை உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றார். நீங்கள் இப்பொழுது சீரழிந்தவர்களாகவும் பாவம் நிறைந்தவர்களாகவும், ஏழ்மையிலும் இருக்கின்றீர்கள். நீங்கள் தேவர்களை வழிபடுபவர்களாயின் நீங்கள் ஏன் உங்களை இந்துக்கள் என அழைக்கின்றீர்கள்? பாரதத்தின் நிலைமை என்னவாகி உள்ளது? தேவதர்மத்தைச் சேர்ந்தவர்கள் விகாரம் நிறைந்தவர்கள் ஆகியதால், அவர்கள் தம்மைத் தேவர்கள் என்று அழைப்பதில்லை. தந்தை கூறுகின்றார்: இப்பொழுது இது தூய்மையற்ற உலகின் இறுதி நேரமாகும். மகாபாரதயுத்தம் சற்று முன்னிலையிலேயே உள்ளது. கடவுள் பேசுகின்றார்: நான் சத்தியயுகத்திற்காக உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றேன். ஒரேயொரு கடவுள் மாத்திரமே உள்ளார். நாம் அனைவரும் சாலிகிராம்களான அவரது குழந்தைகள் ஆவோம். தந்தை கூறுகின்றார்: பூஜிக்கத்தகுதி வாய்ந்தவர்களாகிய நீங்கள் பூஜிக்கின்ற பக்தர்கள் ஆகியுள்ளீர்கள். நீங்கள் மீண்டும் ஒருமுறை பூஜிக்கத் தகுதிவாய்ந்த தேவர்கள் ஆகுவதற்காக இப்பொழுது இந்த ஞானத்தைப் பெற்றுக் கொள்கின்றீர்கள். அதன்பின்னர், துவாபரயுகத்தில், பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களான நீங்கள் பூஜிப்பவர்கள் ஆகுகின்றீர்கள். நீங்கள் 84 பிறவிகளை முழுமையாக எடுக்கின்றீர்கள். 84 பிறவிகளை எடுத்தவர்கள் வந்து பிரம்மாகுமார், பிரம்மாகுமாரிகள் ஆகுவார்கள். பிரம்மாவின் மூலம் ஆதிசனாதன தேவதேவியரின் தர்மம் ஸ்தாபிக்கப்பட்டது என்று நினைவுகூரப்பட்டுள்ளது. பிரஜாபிதா பிரம்மா இருப்பதால், பல குழந்தைகளும் இருக்க வேண்டும். அவர் நிச்சயமாகத் தேவைப்படுகின்றார். பல பிரஜைகளும் உள்ளார்கள். இப்பிராமணர்கள் பின்னர் தேவர்கள் ஆக வேண்டும். தந்தை வந்து சூத்திரர்களை பிராமணர்கள் ஆக்குவதன் மூலம் பிராமண தர்மத்தை ஸ்தாபிக்கின்றார். ஆதிசனாதன தேவதேவியரின் தர்மம் இந்தச் சங்கமயுகத்திலேயே ஸ்தாபிக்கபடுகின்றது. இதுவே உபகாரமிக்க சங்கமயுகமாகும். இந்த யுத்தம் நன்மை செய்யும் யுத்தம் என்று அழைக்கப்படுகின்றது. இந்த விநாசத்தின் பின்னர் சுவர்க்க வாசல் திறக்கும். நீங்கள் சுவர்க்கவாசிகளாகி விஷ்ணுவின் உலகிற்குச் செல்லவே இப்பொழுது இங்கே வந்திருக்கின்றீர்கள். இப்பொழுது குழந்தைகளாகிய உங்கள் மீது அழியாத வியாழதிசை நிலவுகின்றது. ‘பதினாறு கலைகளும் நிறைந்திருத்தல்’ என்று கூறப்பட்டுள்ளது. அதன் பின்னர் உங்களின் இரண்டு கலைகள் குறைவடைவதால், ‘வெள்ளி திசை’ என்று கூறப்படுகின்றது. சத்தியயுகத்தில் வியாழதிசையும் திரேதாயுகத்தில் வெள்ளி திசையும் உள்ளது. நாங்கள் தொடர்ந்து கீழே இறங்குவதால் சகுனமும் தொடர்ந்தும் மாறுகின்றது. பிறவிபிறவியாக தொடர்ந்தும் தீயசகுனமே இருந்தது. இப்பொழுது தந்தையினால் வியாழசகுனம் உள்ளது. அவர் எல்லையற்ற தந்தையும், ஞானக்கடலும், தூய்மையாக்குபவரும் ஆவார். அவர் உங்கள் தந்தையும், ஆசிரியரும், சற்குருவும் ஆவார். ஏனைய அனைவரும் பொய்யானவர்கள். அவர்கள் எவராலும் எவருக்கும் சற்கதியை அருள முடியாது. இது விகாரமான உலகம் என்று அழைக்கப்படுகின்றது. ஆனால் அதுவோ விகாரமற்ற உலகம் ஆகும். இப்பொழுது இந்த விகாரமான உலகில் அனைவரும் அதிகளவு சந்தோஷம் இழந்து உள்ளார்கள். இப்பொழுது என்ன நடக்கின்றது எனப் பாருங்கள்! யுத்தமும் வன்முறையும் இடம்பெறுகின்றன. இதுவே காரணமில்லாத இரத்தக்களறி எனப்படுகின்றது. எவரது தவறும் இல்லாமலே அவர்கள் தொடர்ந்து என்ன செய்கின்றார்கள் எனப் பாருங்கள்! அவர்கள் ஒரேயொரு குண்டை வீசுகிறார்கள், அது உடனடியாகவே அனைவரையும் அழிக்கிறது. இது அதே சங்கமயுக நேரமாகும். தேவர்களாகிய உங்களுக்கு ஒரு புதிய உலகம் தேவையாகும். தந்தை கூறுகின்றார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, மன்மனாபவ ஆகுங்கள்! இதனை எத்தந்தை கூறினார்? சிவபாபா. அவர் அசரீரியானவர். உண்மையில் நீங்களும் அசரீரியானவர்களே. ஆனால் நீங்கள் மறுபிறவி எடுக்கின்றீர்கள், ஆனால் நான் எடுப்பதில்லை. இந்நேரத்தில் அனைவரும் தூய்மை அற்றவர்களாகவே உள்ளார்கள். ஒருவர் கூடத் தூய்மையாக இல்லை. நீங்கள் தூய்மை அற்றவர்களாகவே ஆகவேண்டும். சதோ, ரஜோ, தமோ நிலைகளுக்கூடாக நீங்கள் செல்ல வேண்டும். இந்த நேரத்தில் முழு விருட்சமும் முழுமையாக உக்கிய நிலையை அடைந்துள்ளது. இந்த உலகம் முற்றிலும் பழையதாகி விட்டது. இப்பொழுது அது மீண்டும் புதியதாக்கப்பட வேண்டும். தூய்மையற்ற உலகிலுள்ள மக்களின் எண்ணிக்கையைப் பாருங்கள்! மிகவும் சிறியளவினரே தூய உலகில் ஆட்சி செய்வார்கள். அங்கு ஒரேயொரு தர்மம் மாத்திரமே இருந்தது. வேறு எந்தச் சமயங்களும் இருக்கவில்லை. பாரதம் சுவர்க்கம் என்று அழைக்கப்பட்டது. ஒவ்வொருவரிலும் ஒரு சூரியன், ஒரு சந்திரன், முழு உலகமும் உள்ளதாக நினைவு கூரப்பட்டுள்ளது. சத்தியயுகத்தில் 900,000 உள்ளார்கள். அதன் பின்னர் அவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிக்கும். முதலில், பூமரம் மிகவும் சிறியதாகவே இருக்கும். முட்காடு மிகவும் பெரிதாக இருக்கும். டெல்கியிலுள்ள முகல் தோட்டங்கள் எவ்வளவு அழகானவை எனப் பாருங்கள்! அதனைப் போன்ற பெரிய தோட்டம் வேறு எதுவும் இல்லை. காடு எவ்வளவு பெரிதாக உள்ளது எனப் பாருங்கள்! சத்தியயுகப் பூந்தோட்டம் மிகவும் சிறியதாக இருக்கும். பின்னர் அது வளர்ந்து பெரிதாகுகின்றது. அது இப்பொழுது முட்காடாகி உள்ளது. இராவணன் வரும்போது, அது முட்காடாக ஆகுகின்றது. இது முட்காடாகும். அவர்கள் தங்கள் மத்தியில் சண்டையிடும் போது, அவர்கள் ஒருவரையொருவர் கொலை செய்கின்றார்கள். அவர்களிடம் அதிகளவு கோபம் உள்ளது. அவர்கள் குரங்குகளை விட மோசமாக உள்ளார்கள் எனக் கூறப்படுகின்றது. தந்தை கூறுகின்றார்: எனது அன்பிற்கினிய குழந்தைகளே, விருட்சத்தின் பிரபுவின் சகுனம் இப்பொழுது உங்கள் மீது உள்ளது. தானம் ஒன்றைச் செய்தால் கிரகணம் அகன்றுவிடும். இங்கேயே நீங்கள் முற்றிலும் விகாரம் அற்றவர்கள் ஆக வேண்டும். அதன் பின்னர் நீங்கள் சரீரங்களை நீக்கி விட்டுச் சிவாலயத்திற்குச் செல்வீர்கள். சிவாலயத்தில் அதிகளவு சந்தோஷம் உள்ளது. அது தேவர்களின் இராச்சியமாகும். சத்தியயுகம் சிவாலயம் என்றும் கலியுகம் விலைமாதர் இல்லம் என்றும் அழைக்கப்படுகின்றது. இராவணனே விலைமாதர் இல்லத்தை ஸ்தாபித்தான். தந்தை கூறுகின்றார்: தூய்மை அற்றவர்களில் இருந்து தூய்மையானவர் ஆகுங்கள். உங்களால் எவ்வாறு அவ்வாறு ஆக முடியும்? கங்கையில் நீராடுவதால் உங்களால் தூய்மையாக முடியுமா அல்லது மூன்று நதிகளின் சங்கமத்தில் நீராடுவதால் தூய்மையாக முடியுமா? அதனை நீங்கள் பிறவிபிறவியாகச் செய்தீர்கள். அங்கே மில்லியன்கணக்கான மக்கள் நீராடச் செல்கின்றார்கள். பல நதிகள், வாவிகள், குளங்கள் போன்றனவும் உள்ளன. அவர்கள் தம்மை தூய்மை அற்றவர்கள் எனக் கருதுவதால், எங்கு தண்ணீரைக் கண்டாலும் அங்கெல்லாம் நீராடுகின்றார்கள். தெய்வீகப்பிரபு உங்கள் புத்திகளை இப்பொழுது தெய்வீகமாக ஆக்குகின்றார். ஆகையால், தெய்வீகப் பிரபுவான அத்தகைய தந்தை அதிகளவு அன்புடன் நினைவுகூரப்பட வேண்டும்! அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. இந்த முட்காட்டில் இருந்து பூந்தோட்டத்திற்குச் செல்வதற்குச் சகல முட்களையும் (விகாரங்கள்) அகற்றிவிடுங்கள். உங்களை தெய்வீகம் ஆக்குகின்ற அந்தத் தந்தையை அதிகளவு அன்புடன் நினைவு செய்யுங்கள்.2. இந்த நன்மை மிக்க சங்கமயுகத்தில் சூத்திரர்களில் இருந்து பிராமணர்கள் ஆகிப் பின்னர் தேவர்கள் ஆகுவதற்கு முயற்சி செய்யுங்கள். இராகு கிரகணத்தின் சகுனத்தை அகற்றுவதற்கு விகாரங்களைத் தானம் செய்யுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் இந்தச் சங்கம யுகத்தில் ஒவ்வொரு செயலையும் ஒரு விசேடமான செயலாகச் செய்து, பதினாறு சுவர்க்கக் கலைகள் நிரம்பியவர்கள் ஆகுவீர்களாக.இந்தச் சங்கமயுகம் உங்களின் விசேடமான திறமைகளை வெளிப்படுத்துவதற்கான யுகம் ஆகும். ஒவ்வொரு செயலுமே ஒரு திறமைபோன்று இருப்பவர்களின் ஒவ்வொரு செயலும் ஒவ்வொரு நற்குணமும் புகழப்படும். பதினாறு சுவர்க்கக் கலைகள் நிரம்பியவர் என்றால் உங்களின் ஒவ்வொரு செயல்பாடும் ஒரு விசேடமான திறமையாக புலப்பட வேண்டும்: இதுவே முழுமை நிலையின் அடையாளம் ஆகும். சாகார் பாபாவின் சிறப்பியல்பை, நீங்கள் அவரின் பேசுகின்ற மற்றும் நடக்கும் முறை போன்றவற்றில் கண்டீர்கள். எனவே, அதுவும் ஒரு கலையே ஆகும். அமர்ந்திருக்கும் எழுந்திருக்கும் கலை, பார்க்கும் கலை, நடக்கும் கலை: அனைத்திலும் தனித்துவமும் சிறப்பியல்பும் காணப்பட்டன. எனவே, அதைப் போன்று தந்தையைப் பின்பற்றி, பதினாறு கலைகளும் நிரம்பியவர்கள் ஆகுங்கள்.
சுலோகம்:
ஒரு சக்திசாலி நபர் என்பவர் உடனடியாக எதையும் வேறுபிரித்தறிந்து, உடனடியாகவே ஒரு தீர்மானத்தை எடுக்கக்கூடியவர் ஆவார்.அவ்யக்த சமிக்கை: எரிமலை ஸ்திதியில் இருந்தவண்ணம் சக்திவாய்ந்த நினைவை அனுபவம் செய்யுங்கள்.
குழந்தைகளான உங்களின் யோகம் எரிமலையாகவும் சக்திவாய்ந்ததாகவும் ஆகும்போது, தூய்மை அக்கினியால் ஒரு விநாடியில் உலகின் குப்பையை எரிக்கக் கூடியதாக இருக்கும். இந்தத் தூய்மையின் சக்தியே மகத்தான சக்தி ஆகும். இறுதியில், நீங்கள் சம்பூரணமாகத் தூய்மை ஆகும்போது, உங்களின் மேன்மையான எண்ணங்களின் நெருப்பு, குப்பைகள் அனைத்தையும் எரித்துவிடும்.